Search This Blog

10.3.15

அன்னை மணியம்மையார் பிறந்த நாளான இன்று உரத்த முறையில் சிந்திப்பார்களாக!


75 நாட்களில் வெற்றிகரமான 102 திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள்
நம் அரும்பணி விடியலை அழைத்து வரும் என்பது உறுதி
அணி வகுப்போம் வாரீர்!

அன்னை மணியம்மையார் 95ஆம் ஆண்டு பிறந்த நாளில் தமிழர் தலைவர் அறிக்கை
கடந்த 75 நாள்களில் 102 திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் கழகத் தோழர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. நம் அரும் பெரும் பணி விடியலை அழைத்து வருவது உறுதி - மேலும் நம் பணி தொடரட்டும் என்று அன்னை மணியம்மையார் பிறந்த நாள் செய்தியாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:


கழகத்தின் சேலம் பொதுக் குழுவில் (7.12.2014) முடிவு எடுத்தபடி, தமிழ்நாடு முழுவதும் 2000 திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை - வட்டார மாநாடுகளாக - ஆங்காங்கே ஒவ்வொரு ஒன்றியப் பகுதிகளிலும்கூட நடத்த வேண்டும் என்ற திட்டத்தை நமது இயக்கப் பொறுப்பாளர்கள், தலையாய கடமையாகக் கருதி கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் தொடங் கினார்கள்.


வெற்றிகரமாக நடைபெறும் வட்டார மாநாடுகள்

தொடர்ச்சியாக இயக்க சொற்பொழிவாளர்கள் மிக அருமையாக உரையாற்றி, ஒத்த கருத்துள்ள முற்போக் காளர்கள் அனைவரையும், இணைத்துக் கொண்டு மதவெறி, ஜாதி வெறி, மூடநம்பிக்கை, பெண்ணடிமை இவைகளுக்கு எதிரான ஒரு கொள்கைப் பிரச்சாரப் போர் முழக்கமாக ஆங்காங்கே மக்களை விழிப்புறச் செய்யும் அறிவுப் பணி செய்வதில் அருமையான ஆர்வத்துடன் கழகப் பொறுப்பாளர்களின் ஏற்பாட்டில் மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.


இது வரை  தமிழ்நாடு முழுவதும் 102 வட்டார மாநாடுகள் 75 நாட்களுக்குள் நடைபெற்று முடிந்துள்ளன!

நேற்றைய முன்தினம் (8.3.2015) விழுப்புரம் நகரில் நான் கலந்துகொண்டு பேசிய மாநாடு 98ஆவது  மாநாடாகும்! 6 குழுக்களாக பங்கேற்று இந்த விழிப் புணர்வு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. (பட்டியல் தனியே காண்க).  ஒரே நாளில் மாநிலத்தின் பல பகுதிகளில் 6,7 மாநாடுகளில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்கின்றனர்! மக்களின் மிகப் பெரிய வரவேற்பை நமது பிரச்சாரம் பெற்றுள்ளது - மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும்!


இயக்கப் புத்தகங்களை ஏராளம் வாங்குகின்றனர் - பொது மக்களும்  - கட்சி சாராதவர்களும்!


மாநாடுகளின் வெற்றிக்கு இது ஓர் அளவுகோல்.

வழக்கம் போல ஊடகங்களின் தொடர் இருட்டடிப்புக் கிடையில் முகிலைக் கிழித்து முழு மதியென ஒளிருகிறது நம் பிரச்சாரம்!

கலந்து கொண்டு பேசும் அத்துணைத் தோழமைக் கொள்கையாளர்கள் - அரசியல் கட்சி நண்பர்கள் இது சரியான தருணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேவை யான பணி - தொண்டு என்று கூறி நமது இயக்கத்தினைப் பாராட்டி ஊக்குவிக்கிறார்கள்.

அய்யா மறைந்து 42 ஆண்டுகளுக்குப் பிறகும்...

உருவத்தால் அய்யா மறைந்து 42 ஆண்டுகள் ஓடி விட்டன! அன்னையார் மறைந்து 37 ஆண்டுகள் ஆகி விட்டன.

சோதனை மிக்க கால கட்டத்தில் கழகம் சிலிர்த்தெழுந்த சிங்கமாய் களத்தில் நின்று கர்ச்சனை செய்கிறது!

துள்ளி வருகுதுவேல்

தள்ளி நில் பகையே என்று முழக்கம் இடுகிறது!

எளிய முறையில் நம் இளைஞர்கள் - மாணவர்கள், தோழர்கள், தோழியர்கள், கடைவீதி, ஊர் வசூல் மூலமே இவ்வளவு வெற்றிகரமாக மாநாடுகளை நடத்தி - மக் களைத் திரட்டி - வெற்றிகளை வரலாறாகப் படைக் கின்றனர்!

திட்டமிடுதலும், சுயநலமில்லாத தொண்டறப் பணியும், தூய பொது வாழ்க்கையின் இலக்கணங்களாகத் திகழும் நமது கழகத் தோழர்களுக்குத் திட்டமிட்டு வழி நடத்திடும் பணியை - ஏற்பாட்டுக் குழுவாக பொதுச் செயலாளர்கள் வீ. அன்புராஜ், தஞ்சை இரா. ஜெயக்குமார், இரா. குண சேகரன் ஆகியோர் ஆங்காங்கே சென்றும், தொடர்பு கொண்டும்,  எவ்வித குழப்பத்திற்கும் இடமின்றி, எல்லாம் சிறப்பாக நிறைவேறுகிறது என்பதை 75 நாட்களில் 102 மாநாடுகள் என்ற சாதனை, முரசு கொட்டி முழங்குகிறது!
நாளும் சுமை ஏறுகிறது

என்னால் ஓரளவுதான் அலைய முடிகிறது; காரணம் உற்சாகத்திற்குக் குறைவில்லை எனினும், பல்வகை பணிச்சுமைகளும், பொறுப்புகளும் அழுத்திக் கொண்டே, நாளும் பாரத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, ஏற்றிக் கொண்டிருக்கிறது. உடல் சிற்சில நேரங்களில் ஒத்துழைக்க மறுக்கிறது!
மற்றவர்கள் இறக்கி வைத்தாலும் எனது ஆர்வக் கோளாறு ஏனோ சுமைகளை ஏற்றிக் கொண்டே போகிறேன்  - இயந்திர உடல் எவ்வளவு தாங்குமோ! -
கழகக் குடும்பத்தவர்களின் அயராத ஒத்துழைப்புக் காரணமாக கடும் உழைப்பு எனது பாரத்தை லேசாக்கி விடுகிறது! விழுப்புரம் மாநாட்டில் நமது பெரும் இலட்சியத் திட்டமான பெரியார் உலகத்திற்கு நிதி சேர்க்க தோழர்கள் - ஒளிப்படம் எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் ரூபாய் 100 (நூறு) கொடுத்ததோடு, படம் எடுப்போரிடமும் பெரியார் உலகத்திற்கு நிதி வாங்குங்கள்; வாய்ப்பு உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு தருகிறோம் என்று கூறி துவக்கி வைத்து விட்டனர்!

அணி வகுப்போம்!

நம் பணி அரும்பணி - பெரும் பணி - ஆக்கப் பணி - விடியலை அழைத்து வரப் போகும் வெற்றிப் பணியே

அணி வகுப்போம்! பணி முடிப்போம் - வாரீர்! வாரீர்!
நன்றி! தோழர்களே நன்றி!!

 கி.வீரமணி, உங்கள் தொண்டன் தோழன் சென்னை 10.3.2015

குறிப்பு: நம் அன்னையாரின் பிறந்த நாளில் அகமகிழும் செய்தி இது!
**************************************************************************************
அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் மகளிர் சிந்தனைக்கு இன்று அன்னை மணியம்மையார் அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் - உலக மகளிர் நாளையொட்டி (மார்ச் 8)  வருவது - ஒரு வகையில் பொருத்தமாகும்.


உலக வரலாற்றில் ஒரு சமூகப் புரட்சிக்கு - நாத்திகக் கொள்கையைக் கொண்ட வரலாற்றுப் புகழ் பெற்ற மக்கள் இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் அவர்களே!


தந்தை பெரியார் வெளியிட்டதும், அன்னை மணியம்மையார் நடந்து காட்டியதுமான கொள்கை களும், கோட்பாடுகளும் நாட்டுக்கு மிகவும் அவசியம் தேவை. பெண்களின் உண்மையான விடுதலை - உரிமை என்பது அந்த நிலையில்தான் முழுமை பெற முடியும்.


இன்னும் சொல்லப் போனால் இந்தக் கொள்கைகள் உலகம் முழுமையும் பெண் குலத்துக்குக்கூட தேவை யானவைதான். ஆடை உடை அணிகளில் மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை யெனினும், அதனையும் கடந்து உண்மையான உரிமைகள் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்குக் கிடைத்திருக்கின்றனவா என்பதுதான் கேள்விக்குறி! பல நாடுகளிலும் ஆண்கள் எண்ணிக்கை யோடு ஒப்பிடும்போது பெண்களின் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்து வருவது ஏன் என்பது முக்கியமான கேள்வியாகும்.


பெண்ணிற்கு என்னென்ன உரிமைகள் தேவை என்ற கேள்வியைத் தந்தை பெரியார் அவர்களின் முன் வைத்தபோது அதற்காகப் பெரிய அளவில் நேரத்தை எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக சொன்ன பதில், ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் தேவை என்று பதில் அளித்தாரே - அறிவுலக ஆசான்! அந்த பதிலில் அனேகமாக அனைத்தும் அடங்கி விட்டன என்றே சொல்ல வேண்டும்.


இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள்மீது சுமத்தப்பட்டுள்ள பிற்போக்குத்தன்மை என்பது அளவிடற்கரியது. குறிப்பாகத் திருமணம் ஆன பெண் என்பதை அடையாளப்படுத்துவதற்காக தாலி அணிவது, மிஞ்சி அணிவது, நெற்றியின் உச்சியில் குங்குமத் திலகம் இடுவது என்பது எல்லாம் திருமணம் ஆனது என்பதற்கு அடையாளங்கள் - கண்டிப்பாகத் தேவை என்பது அசல் பிற்போக்குத்தனமும், பெண் களைப் பட்டி மாடுகளாகக் கருதும் ஆணவப் போக் குமாகும்.


தாலி கட்டுவது இதற்காகத்தான் என்று பலரும் வாதிட்டபோது - ஒரு பெண் திருமணம் ஆனவரா இல்லையா என்பது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட உரிமையியல் சம்பந்தமும்பட்டதாகும். அதை இன் னொருவர் அறிய வேண்டும் என்று எண்ணுவதேகூட கெட்ட நோக்கத்தைக் கொண்டது என்றார் அந்த உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார்.


அதே கேள்வியை ஆண்களை நோக்கி ஏன் கேட்கவில்லை என்ற வினாவையும் தொடுத்தார் அந்தச் சிந்தனைத் தலைவர்.  ஓர் ஆண் திருமணம் ஆனவரா இல்லையா என்பதற்கு என்ன அடையாளம் நிபந்தனையாக வைக்கப்பட்டுள்ளது? என்று அய்யா அவர்கள் விடுத்த வினா என்னும் வேட்டுக்கு இதுவரை நாணயமான முறையில் விடை அளிக்கப்பட்ட துண்டா?
பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர் மானிக்கும் உரிமையை ஆண்களுக்கு அளித்தவர்கள் யார்? என்ற அடுக்கடுக்கான அறிவார்ந்த கேள்விகள் உண்டே!
 

திராவிடர் கழகத்  தோழர்கள் பெரும்பான்மையான அளவுக்குத் தாலியைத் தவிர்ப்பதும், ஏதோ ஒரு சூழ் நிலையில் திருமணத்தின்போது தாலி கட்ட நேர்ந் திருந்தால், அதனை திராவிடர் கழகப் பொதுக் கூட்டங் களிலோ மாநாடுகளிலோ பகிரங்கமாக தாலியை அகற்றும் நிகழ்ச்சிகள் நடப்பதும் சர்வ சாதாரண மாயிற்றே!


இப்பொழுது என்னடா வென்றால் ஒரு தொலைக்காட்சியில் தாலியைப் பற்றிய கருத்தை முன் வைத்து விவாதம் நடத்துவதைக்கூட அனுமதிக்க முடியாது என்று இந்துத்துவா அடிப்படைவாத பிற் போக்குச் சக்திகள், அந்தத் தொலைக்காட்சி நிறுவனத் திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் தொடுத்திருப்பது, பெண் ஊடகவியலாளரைக் காயப்படுத்தியது எல்லாம் எப்படி அனுமதிக்க முடியும்?


இந்தப் பாசிசக் கூட்டத்தின் நடவடிக்கைகளை தமிழ்நாட்டின் தலைவர்களும், ஊடகத் துறையினரும் கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்திருப்பது ஓரளவு ஆறுதலைத் தருகிறது.


அதே நேரத்தில் இந்த ஊடகங்கள் உணர வேண்டிய முக்கியமான கருத்தொன்றுண்டு. இந்த மதவாத சக்திகளுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை பரப்புவது எவ்வளவு முக்கியமானது என்பதையும் ஊடகங்கள் காலந் தாழ்ந்தாவது இப்பொழுதாவது உணர்ந்து, உருப்படியாக நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்பிட முன்வர வேண்டும்.


இன்னொன்றும் கூடுதலாக உண்டு, தந்தை பெரியார் அவர்களின் சித்தாந்தங்களின் அருமை எத்தகையது என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண் டாமா!?


நாள் முழுவதும் அறிவியலுக்கு விரோதமான வற்றை ஒளிபரப்புவது ஆபத்தானது என்பது இப்பொ ழுதாவது உணர்வார்களா? உணர்ந்து திருந்துவார்களா என்பது தான் இப்பொழுது எழுந்து நிற்கும் அறிவார்ந்த வினாவாகும். பெண்ணுலகின் முன் மாதிரியான அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளான இன்று உரத்த முறையில் சிந்திப்பார்களாக!

          -------------------"விடுதலை” தலையங்கம் 10-03-2015
**********************************************************************************

24 comments:

தமிழ் ஓவியா said...

பிற்படுத்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம் - தனியார்த் துறைகளிலும் - இட ஒதுக்கீடு! அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுத் தீர்மானங்கள்


பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தேவை
இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அதிகாரம் அவசியம்

பிற்படுத்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம் - தனியார்த் துறைகளிலும் - இட ஒதுக்கீடு!

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுத் தீர்மானங்கள்


புதுடில்லி, மார்ச் 11_ பிற்படுத்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக் கீடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் புதுடில்லியில் நேற்று (10.3.2015) சிறப்புடன் நடைபெற்ற அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் 4 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் கூட்ட மைப்பின் 4 ஆவது மாநாடு புதுடில்லியில் கான்ஸ் டிடியூசன் கிளப்பில் உள்ள துணை சபாநாயகர் அரங்கில் நடைபெற்றது.

10.3.2015 பிற்பகல் 3 மணியளவில் மாநாடு தொடங்கியது. அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் கூட்டமைப்பின் செயல் தலைவர் ஜெ.பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்றார்.

தீர்மானங்கள்

அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் கூட்ட மைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி தலைமை வகித்தார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அதிகாரங்கள் வழங் கப்படவேண்டும்; இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். இதர பிற்படுத்தப்பட்டவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் மற்றும் தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றப் பட்டன. மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையிலுள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்கள் நாட்டின் கட்டமைப் பில் முக்கியப் பங்காற்ற வேண்டிய தேவை உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், இந்த நான்கு திட்டங்களையும் விளக்கும் வகையில் துண்டறிக்கை கள் மாநாட்டு பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங் கப்பட்டன.

தமிழ் ஓவியா said...

நீதிபதி ஈசுவரய்யா

தேசிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஆணையத் தின் தலைவர் நீதிபதி வி.ஈசுவரய்யா மாநாட்டுத் தொடக்க உரை ஆற்றினார். தேசிய பிற்படுத்தப்பட்ட வர்கள் ஆணையம் அரசமைப்பு அதிகாரங்களைப் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு தீர்மானங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை அடைவதில் அனைத்து மாநிலங்களில் உள்ள இதர பிற்படுத்தப் பட்டவர்களையும் ஒருங்கிணைக்கின்ற கூட்டமைப் பின் பங்களிப்பை நீதிபதி ஈசுவரய்யா வெகுவாகப் பாராட்டினார்.

நாடாளுமன்றத்தின் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் குழுவின் தலைவர் ராஜென் கோகெயின்

நாடாளுமன்றத்தின் இதர பிற்படுத்தப்பட்ட வர்கள் குழுவின் தலைவரும், சிறப்பு விருந்தினரு மாகிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜென் கோகெயின் கூறுகையில், கூட்டமைப்பின் சரியான அணுகுமுறைமூலம் நாடாளுமன்றக் குழுவின் உறுதியைப் பெற்றுள்ளது. கூட்டமைப்பின் கோரிக்கைகளை இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கான நாடாளுமன்றக்குழு நாடாளு மன்றத்தில் எழுப்பும் என்றும் கூறினார்.

தேசிய பிற்படுத்தப்பட்டவர்கள் ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.கார்வேந்தன், மத்தியஅரசின்கீழ் இயங்கக்கூடிய பல்வேறு மத்தியப் பல்கலைக் கழகங் களில் பணி வாய்ப்புகளில் ஆசிரியர் அல்லாத பணி யிடங்களில்கூட இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்கிற புள்ளிவிவரங்களை அளித்தார். கூட்டமைப்பின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.தேவேந்தர் கவுட் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முழு ஆதரவை அளிப்பதாகக் கூறினார். மும்பை மேலவை உறுப்பினர் மகாதேவ் ஜாங்கர் கூட்டமைப்பின் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளில் நன்கு பணியாற்றி உள்ளதாகவும், கூட்டமைப்பின் கோரிக்கைகளை பிரதமரிடம் கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்ப தாகவும் உறுதியளித்தார்.
கூட்டமைப்பின் துணைத்தலைவர் அசோக் கேஆர் சர்கார் நன்றி கூறினார்.

மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா

நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங் களவையில் இரண்டு முக்கிய மசோதாக்கள் குறித்த விவாதம் மற்றும் வாக்களிப்பதில் பலரும் முழுமையாக கவனம் செலுத்தியதால், மாநாட்டு நிறைவு விழாவில் பங்கேற்க வேண்டியவர்கள் கலந்துகொள்ள முடி யாமல் போனது. இருந்தபோதிலும், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, நாடாளுமன்ற உறுப்பினர் ஹூக் கும்தேவ் நாராயண் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டமைப்பு முன்வைத்துள்ள நான்கு திட்டங்கள் குறித்தும் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். தனியார்த் துறையில் இடஒதுக்கீடு குறித்து மக்களிடையே கொண்டு செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

பங்கேற்பாளர்களை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பாராட்டினர்.

கூட்டமைப்பின் நான்காவது மாநாடு மற்றும் கருத்தரங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பங்கேற் பாளர்களால் விரிவாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அசாம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராட் டிரம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சார்பிலும் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்று கூட்டமைப்பின் ஒற்றுமையை வெளிப் படுத்தினார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/97673.html#ixzz3U4s69aY8

தமிழ் ஓவியா said...

பூஜை, ஹோமத்துடன் அரசியலா?
முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு

பெங்களூரு, மார்ச் 11- உச்சநீதிமன்ற உத் தரவுப்படி, பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்த ம.ஜ.த., அலுவலகம் காலி செய்யப்பட்டு, காங்கிரஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஏராளமான எலுமிச்சை பழங்களும், மந்திரிக்கப்பட்ட பொருள் களும் இருந்ததாக, காங்கிரஸ் தொண்டர்கள் கூறினர்.

இதுகுறித்து சித்தராமையா கூறியதாவது:

இதற்காக, காங்கிரஸ் அலுவலகத்தில் பூஜை, ஹோமம் நடத்த வேண்டும் என, மாநிலத் தலைவர் பரமேஸ்வர் உள்பட, பல மூத்த காங் கிரஸ் தலைவர்கள் ஏற்பாடு செய்திருப்பதாக அறிகிறேன். இது மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தலாம். பல ஆண்டுகளாக, கேரளாவில் உள்ள கோவிலுக்குச் சென்று, தேவகவுடா பூஜை செய்வது வழக்கம். அவரது மகன் ரேவண்ணா, கையில் எலுமிச்சை பழம் இல்லாமல், சட்டசபைக்குள் வரமாட்டார்.

நான், ஜனதா தளத்தில் இருந்தபோதே, இவைகளை எதிர்த்ததுண்டு. பரமேஸ்வர் பூஜை, ஹோமம் நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், அவரது செய்கையைத் தடுக்கமாட்டேன். புதிய அலுவலகத்தில் நடக்கும் பூஜைகளில் பங்கேற்க மாட்டேன். - இவ்வாறு அவர் கூறினார்

Read more: http://viduthalai.in/e-paper/97675.html#ixzz3U4sL0s5e

தமிழ் ஓவியா said...

செய்தியும்
சிந்தனையும்

சாலம்மா

செய்தி: மதுரையில் நடைபெற்ற விழா ஒன் றில் கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராமதாஸ் பேசியபோது, இங்கே வந்திருக்கும் ஒரு பெண் ணின் பெயர் ஆசு பர்த்தி என்பதாகும். இதன் பொருள் போதும் பொண்ணு என்பதாகும். (வரிசையாக மூன்று பெண் குழந்தை பிறந் தால் பாட்டி இப்படிப் பெயர் வைத்தாராம்).

சிந்தனை: நிறைய குழந் தைகளைப் பெற்றுள்ள ஒருவர் தன் குழந் தைக்குப் பெயர் வைக் குமாறு தந்தை பெரி யாரிடம் கேட்டுக் கொண் டார். அந்தக் குழந் தைக்குத் தந்தை பெரியார் வைத்த பெயர் சாலம்மா (போதும் அம்மா) என்பதாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/97677.html#ixzz3U4sa05fi

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்கு தீர்வு அளிக்க மறுக்கும் பாம்பே உயர்நீதிமன்றம்


மும்பை, மார்ச் 11_ 9.3.2015 அன்று பாம்பே உயர்நீதிமன்றத்தில் மும்பை புறநகர் மாட் டிறைச்சி விற்பனையாளர் கள் நலச்சங்கத்தின் சார் பில் மாட்டிறைச்சித் தடை யால் பாதிப்புக்குள்ளாகும் வணிகர்கள் நலனைக் கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள் ளனர். ஆனால், பாம்பே உயர்நீதிமனறம் மாட்டி றைச்சி விவகாரம் மத ரீதியிலான அல்லது கவு ரவ ரீதியிலான பிரச்சி னையாக உள்ளதாகக் கருதவேண்டாம் என்று நீதிமன்றம் கூறி வணிகர் கள் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி வி.எம்.கானடே கூறும்போது, மாட்டிறைச்சிக்குத் தடைச் சட்டம் நடை முறைக்குக் கொண்டுவரப் பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் கடமையாற்றும் நிலையில் உள்ளனர். ஆகவே, இப்பிரச்சி னையை மத ரீதியாகவோ, கவுரவப் பிரச்சினையா கவோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார்.

அரசிதழில் வெளி யிடாமல், மகாராட்டிர விலங்குகள் காப்பு (திருத்த) புதிய சட்டத் தின்படி மாடுகளைக் கொல்வதற்கு தடை விதிக்க முடியாது என்று மும்பை புறநகர் மாட் டிறைச்சி விற்பனையாளர் கள் நலச்சங்கத்தின் சார் பில் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நீதிமன்ற அறிவிக்கையின்மூலமாக ஏற்கெனவே அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது என்று கூறிய அரசு வழக் குரைஞர் அரசிதழின் நகலையும் உயர்நீதிமன் றத்தில் ஒப்படைத்தார். அதன்பிறகு, பாம்பே உயர்நீதிமன்றம் அவ் விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டதோடு, புதிய சட்டத்தை நடை முறைப்படுத்த அதிகாரி கள் கடமைப்பட்டுள்ளனர் என்றும் கூறிவிட்டது.

பாரதீய கவ்வான்ஷ் ரக்ஷன் சன்வர்த்தன் பரிஷத் என்கிற அமைப் பின் சார்பில் புதிய சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோரி அளிக்கப் பட்ட மனுவில் தலையிட வேண்டுமாய் மாட்டி றைச்சி வணிகர்கள் கோரி யிருந்தனர்.

மகாராட்டிர மாநிலம் முழுமையாக இறைச்சி வெட்டுமிடங்களில் மாட் டிறைச்சிக்குத் தடைவிதிக் கும் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த உத் தரவிடக் கோரி பாம்பே உயர்நீதிமன்றத்தில் பார தீய கவ்வான்ஷ் ரக்ஷன் சன்வர்த்தன் பரிஷத் என்கிற அமைப்பின் சார் பில் மனு அளிக்கப்பட் டிருந்தது.

இதுதொடர்பான விசாரணையின்போது, பாம்பே உயர்நீதிமன்றம் மும்பை காவல் ஆணை யர் மற்றும் மும்பை மாநகர ஆணையர் ஆகி யோருக்கு பாம்பே உயர் நீதிமன்றத்தின் சார்பில் அளிக்கப்பட்ட உத்தரவில் எருதுகள், வண்டி மாடு கள் ஆகியவைகளைக் கொல்வதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று புதிய சட்டத்தை நடை முறைப்படுத்த வலியுறுத் தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாட்டிறைச்சி வணிகர் கள் கோரிக்கையான மாட் டிறைச்சித் தடைச்சட்டத் தில் தலையிடக்கோரிய மனுவின்மீது பாம்பே உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/97676.html#ixzz3U4shzhzy

தமிழ் ஓவியா said...

உயிர் ஒன்று - உடல் மூன்றுஆட்சி, பிரபுத்துவம், ஜாதி உயர்வு இவை மூன்றும், உயிர் ஒன்றும், உடல் மூன்றுமாயிருக்கின்றன.
_ (குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...

அய்ந்து பெண் அமைச்சர்கள் போர்க்கொடி!


மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை எதிர்த்து மத்திய பெண் அமைச்சர்கள் அய்வர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அருண்ஜெட்லிமீது பிரதமர் நரேந்திர மோடியிடம் இதுகுறித்துப் புகாரும் கூறியுள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ருதிராணி இதுபற்றிக் கூறியதாவது:

பள்ளிக் கல்விக்கு கேட்கப்பட்ட நிதியோ 12 ஆயிரத்து 896 கோடி ரூபாய்; நிதியமைச்சரோ கேட்கப்பட்ட தொகை யிலிருந்து ஓராயிரம் கோடி ரூபாயை வெட்டியுள்ளார் என்று கூறியுள்ளார்.

மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளதாவது:

பிரதமரின் கனவுத் திட்டமான பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு வெறும் 97 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, ஒருங் கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குக் கேட்கப்பட்டுள்ள தொகையைவிட 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் மட்டுமே ரூபாய் 11 கோடி நிதி வெட்டப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குமுறியுள்ளார்.

நீர்வளத் துறையில் 9 ஆயிரத்து 64 கோடியை நிதியமைச்சர் வெட்டித் தள்ளியுள்ளார் என்று மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.

சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா இந்தத் துறைக்கான தொகை நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, உணவுப் பதப்படுத்துதல் துறையிலும் நிதி வெட்டப்பட்டுள்ளதாக வேதயைத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர்.

இந்த அய்ந்து பெண் அமைச்சர்களும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் புகார் செய்துள்ள நிலையில், பிரதமர் தெரிவித்த கருத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

என்னிடம் சொல்வதைவிட, நிதியமைச்சரிடமே உங்கள் குறைபாடுகளைச் சொல்லி நிவாரணம் தேடுங்கள் என்று கூறி, தம் பொறுப்பைத் தட்டிக் கழித்து வழக்கம்போல, தமது வெளிநாட்டுப் பயணத்தில் கவனம் செலுத்தினார்.

பரிதாபத்திற்குரிய இந்த அய்ந்து பெண் அமைச்சர் களும் உள்ளுக்குள் குமுறுவதைத் தவிர வேறு மார்க்கம் அறியாதவர்களாகத் திகைத்து நிற்கின்றனர்.

இதில் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன? பாதிப்புக்கு ஆளானவர்கள் அய்வரும் பெண்கள். பாரதீய ஜனதாவில் பெண்களுக்குரிய இடம் இதுதான்; இந்துத்துவா கொள்கைப்படி பெண்கள் உயிருள்ள ஒரு ஜீவனே கிடையாதே! எந்த வயதிலும் ஆணுக்குக் கட்டுப்பட்டு அடங்கிக் கிடக்கவேண்டியவர்கள் பெண்கள் என்பதுதானே மனுதர்மம்.

பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லுவது தானே பகவத் கீதை. அந்தப் பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போகிறோம் என்று சொல்லுகிற ஆட்சிதானே மத்தியில் இருக்கிறது!

கல்வியிலும், குழந்தைகள் நலத்துறையிலும் கைவைக் கிறார்கள் என்றால், இந்த ஆட்சியைப்பற்றி எடை போட்டுப் பார்க்கவேண்டும். அதேநேரத்தில், சமஸ்கிரு தத்தைப் பரப்புவதிலும், கங்கை நீரைச் சுத்தப்படுத்துவதிலும் காட்டும் ஆர்வத்தை, அவற்றைவிட அதிமுக்கியமான துறைகளின்மீது காட்ட மறுப்பது ஏன்? அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள இந்துத்துவா எண்ணம்தான் இப்படிச் செயல்பட வைக்கிறது.

மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கிறது என்றால், பல்லாயிரம் கோடி ரூபாயை அந்நியச் செலாவணியாக ஈட்டித் தருகிற மாட்டிறைச்சியை முடக்கும் வேலையில் ஈடுபடுவார்களா?

பசு மாட்டையும், காளை மாட்டையும் உணவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்கிற அவர்களின் இந்துத்துவா உணர்வுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களே தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தோ, பசுவதைத் தடை சட்டத்தால் பாதிக்கப்படுகிற மக்களைப்பற்றியோ, கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை பறி கொடுப் பவர்களைப்பற்றியோ கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை.

இந்துத்துவாவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கும் இந்தப் பெண் அமைச்சர்கள் இந்த சந்தர்ப்பத்திலாவது அவர்கள் தங்களைப் பிணைத்துக் கொண்டிருக்கும் கட்சியின் இந்துத்துவா கொள்கை பெண்களுக்கும், நாட்டு மக்கள் வளர்ச்சிக்கும் எந்தளவு முட்டுக்கட்டையானது என்பதை உணர முன்வர வேண்டும்; சிந்தித்தும் பார்க்கவேண்டும்.

தங்களுக்கு என்று வந்தால்தான் தலை வலியும், வயிற்று வலியும் என்று நினைக்கலாமா? அப்படி வந்த நேரத்திலாவது உண்மை நிலையை உணர்ந்து பார்க்கவேண்டாமா?

நிதியமைச்சரும் கைவிரித்துவிட்டார்; பிரதமரும் கைவிரித்துவிட்டார்! அடுத்து இந்த அய்ந்து பெண் அமைச்சர்களும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தைச் சந்திக்கவேண்டியதுதான் பாக்கி; அவர் எப்படிப்பட்டவர்?

கணவனைவிட அதிகம் படித்த பெண்கள், அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் கணவன்மார்கள் சொல்லுவதற்குக் கட்டுப்படுவதில்லை. அந்த நிலையில், கணவர்கள், மனைவிகளை விவாகரத்துச் செய்யவேண்டும் என்று சொன்னாரே - அவரிடம் நியாயம் எங்கிருந்து கிடைக்கப் போகிறது?

இந்திய நாட்டுப் பெண்களும் சிந்திக்கவேண்டிய தருணம் இது.

Read more: http://viduthalai.in/page-2/97683.html#ixzz3U4tB1JS1

தமிழ் ஓவியா said...

முதுமையே போ...! போ...! முதிர்ச்சியே வா...! வா...!

முதுமை என்பது வயதின் வளர்ச்சி என்றாலும், நமக்கு உழைக்கச் சக்தி அளிக்கும் உடல் உறுப்புகளின் தளர்ச்சி யல்லவா!

வாழ்க்கை நீளவேண்டுமென்று விரும்புவோரும் சரி,

வாழ்க நீங்கள் பல்லாண்டு என்று வாழ்த்துவோரும் சரி,

ஒரு முக்கிய கருத்தை மறந்து விடக்கூடாது.

ஆயுள் நீளுவது நல்லது; மிகப் பெரும்பாலோர் விரும்புவது, வேண்டு வது, அதற்காகவே!

ஆனால், உடல்நலம் - உடற்கட்டு - செயல்படும் வகையில் அமைவது அதைவிட முக்கியமானது - அடிப் படையானது!

அறிஞர் அண்ணா கூறினார்: தமிழின் முதுபெரும் வரலாறு மட்டும் பெருமைப்படத்தக்கது அல்ல; அதன் சீரிளமை மிகவும் முக்கியம். அதில் படிந்த பழைமை ஒட்டடைகளையும், பாசிக் குப்பைகளையும் நீக்கி, புதிய இளமைப் பொலிவுடன் தமிழ் என்றும் திகழவேண்டும்; பகுத்தறிவு அடிப்படை யில் பட்டதாரி இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா வில் ஆற்றிய ஆங்கிலப் பேருரையில் குறிப்பிட்டார். அதற்குப் பழைய கிரேக்கத்து மாஜி கடவுள்களின் கதை களையும் ஒப்பிட்டிருந்தார்!

கிரேக்கக் காதல் கடவுளான பெண் கடவுள், தன் காதலனான மற்றொரு கடவுளின் வாழ்வு எப்போதும் அழி யாததாக - மறையாததான வாழ்வாக இருக்க வரம் கேட்டு வாங்கியதாம்!

Immortality எப்போதும் இருப்பது - சாவு அண்டாத வாழ்க்கையைக் கேட்டுப் பெற்றார், மகிழ்ந்தார்.

ஆனால், காலம் ஏற ஏற, முதுமை அவரைத் தாக்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

இளமையைத் துறந்து, முதுமையை அடைந்து, வாழும் தொல்லை அப்போதுதான் புரிந்தது! முதுமை அண்டா இளமையை அல்லவா நாம் யாசகமாய் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும் என்று தவறுக்காக மிகவும் வருந்தினாளாம்!

இப்படி ஒரு கதை கிரேக்கப் புராணங்களில்!

மேலும் மேலும் ஆயுள் நீள வேண்டும் என்று விரும்பும் நாம், பலருக்குப் பயன்படும் இளமைத் துடிப் புடன் அந்த வாழ்க்கை அமைந்தால் தானே அது விரும்பத்தக்கது?

இன்றேல் உறவுக்கும், ஊருக்கும், உலகத்திற்கும் கூடுதல் சுமைதானே!

முதுமை ஒருபுறம் இருந்தாலும், முதிர்ச்சி - வயது, பல்வேறு கசப்பான - இனிப்பான - துவர்ப்பான - பல்சுவை அனுபவங்கள் காரணமாக கற்ற பாடங்களால் நாம் பெறுகிறோம்.

அதனை பாடப் புத்தகமாக்கி, ஒரு நல்லாசிரியனாகி போதிக்கவேண்டும்; அதன்மூலம் கொடுத்தலின் காரண மாகப் பெறும் மகிழ்ச்சியை பெரு ஊதியமாகக் கருதிப் பெருமிதம் கொள்ளவேண்டும் என்று நினைக் கிறோம்!

தமிழ்ப் பெரியார் திரு.வி.க. பார்வை இழந்த நிலையிலும், முதிர்ச்சி தந்த பாடங்களை டாக்டர் மு.வ. என்று அழைக்கப் பெற்ற மு.வரதராசனார் அவர்களிடம் கூறி, அவர் கேட்டு எழுதிட, இரண்டு நூல்கள் கவிதை வடிவத்தில் வந்தன.

முதுமை உளறல்
படுக்கைப் பிதற்றல்
சிறந்த அறவுரைகள் அவை.

மிகுந்த தன்னடக்கத்தினால் திரு.வி.க. அத்தகைய தலைக்கனமில் லாத் தலைப்புகளை தந்து உயர்ந்தார் - சிந்தனை வள்ளலாக!

அவை, உளறலும் அல்ல; பிதற்றலும் அல்ல!

தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டுவரை - கடுமையாக உழைத்தார் - பயணித்தார் - பல மணிநேரம் சிங்கமென கர்ஜித்தார்!

சிந்தனை, உரையில், எழுத்தில் எவ்வித தடுமாற்றமும் இன்றி - மறதி நோயே தாக்காமல் - கணினிபோல் செய லாற்றி அதிசய சாதனை படைத்தார்!

அவரது ஆரம்ப கால சிந்தனைகள் அறிவியல் சாதனைகளாகிய செய்தி களை நாங்கள் மேலைநாட்டு ஏடுகளி லிருந்து படித்துக் காட்டியபோது - 1973, டிசம்பர் 19 (இறுதிப் பேருரை ஆற்றிடப் போகுமுன்) வேனில் பயணித்த நிலை யில் என்ன சொல்லி வருந்தினார் தெரியுமா?

நாளை எழுதுகிறேன்.


- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/97687.html#ixzz3U4tL0HnS

தமிழ் ஓவியா said...

பன்றி இறைச்சியை முஸ்லிம்கள் வெறுத்தாலும்
இஸ்லாமிய நாடுகளில் பன்றி இறைச்சிக்குத் தடையில்லைஇது இந்தியா போன்ற ஜனநாயக நாடல்ல, மன் னராட்சி நடக்கும் நாடு.

இது இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடும் அல்ல. மதச்சார்புடைய நாடு. ஒரு இஸ்லாமிய நாடு.

இஸ்லாமியர்கள் பன்றிக் கறியை 'ஹராம்' என சொல்லி விலக்கி விடுவார்கள். பெரும்பா லும், பன்றிக் கறியைக் கண்ணால் பார்ப்பதைக் கூட தவிர்த்துவிடுவார்கள். ஆனால், அத்தகைய கட்டுப்பாடுகள் உடைய ஒரு இஸ்லாமிய நாடான UAE ல் பெரும்பாலான 'ஹைப்பர் மார்க்கெட் டுகளில்' பன்றி இறைச்சி தாராளமாக கிடைக்கும்.'For Non Muslims' என பெரிதாக அறிவிப்பு பலகை வைத்து விடுவார்கள்.

ஒரு மதச்சார்புள்ள நாட்டில் அவர்கள் மார்க் கத்திற்கு எதிரான ஒரு இறைச்சி விற்பனையா கிறது. பன்றி இறைச்சியை விருப்ப உணவாக சாப் பிடுபவர்களை இங்கு யாரும் தடுப்பது கிடை யாது. அடுத்தவன் தட்டில் என்ன இருக்க வேண்டும்? அவன் என்ன சாப்பிட வேண்டும்? என இங்கு யாரும் சட்டம் போட்டுத் தடுக்கவில்லை.

ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என சொல்லிக்

கொள்ளும் இந்தியாவில் ஒரு மாநிலத் தில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்து தங்கள் மதச் சார்பின்மையை(?!) உல கிற்கு பறைசாற்றுகின்றார்கள்.

அடுத்தவன் என்ன சாப்பிட வேண் டும் என சொல்வது அரசாங்கத்தின் வேலையா?

ஒரு உணவுப் பொருளை மக்களின் ஆரோக்கியம் கருதி அரசாங்கம் தடை செய்தால் அது வரவேற்கத்தக்கது. மற்றக் காரணங்களுக்காக தடை செய்வதாக இருந்தால் அது தனி மனித உரிமை மீறல்.

எனக்கு மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் இல்லை. அதனால் நான் நல்லவன் என்றும் மாட்டிறைச்சி சாப்பிடும் என் நண்பன் கெட்டவன் என்றும் அர்த்தம் இல்லை.

அவன் சாப்பிடும் உணவு அவன் விருப்பம் சார்ந்த விஷயம். அதில் யார் தலையிட முடியும்?

சாதி, மதம் இதை தூக்கி ஓரம் வைத்து விட்டு இதை படியுங்கள் புரியும். புரியாவிட்டால் மேலுள்ள படத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள்!

- நம்பிக்கை ராஜ் முகநூல் பக்கத்திலிருந்து

தகவல்: ந.விவேகானந்தன், செஞ்சி.

Read more: http://viduthalai.in/page1/97643.html#ixzz3U4uZbQdo

தமிழ் ஓவியா said...

ஆதரிப்பது...


எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

தமிழ் ஓவியா said...

எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்களை பிற்போக்குச் சக்திகள் அச்சுறுத்திய நிலை

இப்பொழுது புதிய தலைமுறைப் பணியாளர்களை
தாக்கிய இந்துத்துவ அடிப்படைவாதிகள்

காவல்துறை துணை போகலாமா? மீண்டும் நெருக்கடி காலமா?
முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டி முறியடிப்போம்

எழுத்தாளர்களையும், ஊடகத் துறையினரை யும் தாக்கும் அடிப்படைவாதிகளை முற்போக்கு சக்திகள் ஒன்று திரட்டி முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் நாடு ஜனநாயக நாடு என்று இந்திய அரசியல் சட்டத்தின் படி அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 மாதங்களுக்குமுன் அமைந்த பா.ஜ.க. ஆட்சி என்னும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின் ஆட்சியின் கீழ் அத்தன்மை வேகவேகமாக மாற்றப்பட்டு நவீன ஹிட்லரிச பாசீச ஆட்சியாக அவ்வாட்சி மாறி வரு கிறதோ என்ற அய்யம், பரவலாக எங்கும் எழுந்துள்ளது!

கருத்துரிமையைப் புறக்கணிப்பதா?

அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மதச் சுதந்திர உரிமை - எல்லாம் மெல்ல மெல்லக்கூட அல்ல - வெகு வேகமாக காணாமற் போகிறதோ என்ற நிலை, தீ பரவுவது போல பரவி வருகிறது!

மோடி அரசுக்குத் தாளம் போட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு முதலியவை மத்திய அரசின் இரயில்வே, மற்றும் பொது பட்ஜெட் மூலம் பறிக்கப்பட்டாலும் வாய் மூடி மவுனியாக தமிழக அரசும், தமிழ்நாட்டின் பெரும்பான்மை எம்.பி.க்களான 37 பேர்களும் (மாநிலங்கள் அவை 10 ஆக கூடுதல் உறுப்பினர்களும்) ஆளுங் கட்சி பலத்துடன் மத்திய அரசிடமிருந்து நிதி ஆதாரம் உட்பட பலவற்றைப் பெறும் சூழ்நிலை இருந்தும், வேறு சில காரணங்கள் காரணமாக மவுனத்தையும் தலையாட்டுதலையும், நடத்திடும் போக்கு நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ்.

இந்துத்துவா ஆட்கள் எண்ணிக்கையில் வெகு குறைவாக இருந்தாலும் தமிழ்நாட்டில், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிராக வன்முறைக் களத்தில் இறங்கி, எழுத்தாளர்களை மிரட் டியும், அடித்தும், உதைத்தும், ஆட்சி இயந்திரமும் அத் தகைய வன்முறையாளர்கள் பக்கம் சாயும் நிலையும்கூட இருக்கிறது என்பது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்!

திருச்செங்கோடு எழுத்தாளர் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோர் அப்படிப்பட்ட கொடு மைக்கு ஆளாகும் நிலையிலும் ஆட்சி, காவல்துறை குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறி யுள்ளனர்!
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகளே எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டது மிகவும் வெட்கக் கேடானது.

ஜாதி அரசியலால் லாபம் பெறலாம் என்ற அற்பத்தன ஆசையோ என்னவோ இதற்குக் காரணம் போலும்!

புதிய தலைமுறைப் பணியாளர்கள் தாக்கப்பட்ட கொடுமை


புதிய தலைமுறை என்ற ஒரு தனியார் தொலைக் காட்சியில் மகளிரை அழைத்து தாலிபற்றிய கருத்துக்கள் பற்றி ஒரு விவாதம் நடத்திட முனைந்தால் அவர்களை மிரட்டுவது, கேமிரா மேன்களை அடிப்பது, உடைப்பது, இதற்குக் காவல் துறை அதிகாரிகள் சிலரும் தாறுமாறாகப் பேசி - வசவுகளைப் பொழிவது எவ்வகையில் நியாய மாகும்?

புதிய தலைமுறை என்ற ஒரு தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று இதைஒதுக்கிவிட முடியாது.

இந்தப் போக்கு ஜனநாயக விரோத பாசிசத்தின் பச்சையான படமெடுத்தாடும் அவலம்!
இதனை திராவிடர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

முன்பு தீபாவளி பற்றிய ஒரு கருத்துரைக்கும்கூட எதிர்ப்புக் குரல். நமது கூட்டங்கள் நடத்த முயன்றால், அதற்கு எதிராக ஒரு தயார் மனு வழமையாக காவல் நிலையங்களில் கொடுப்பது, அந்த அனாமதேயங்களின் மனுக்களை பெற்று ஏதோ பிரளயமே உருவாக இருப்பதைப் போல சில மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கருத்துச் சுதந்திர உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது!

கிருஷ்ணகிரியில் காவல்துறை ஒரு பெண் அதிகாரி தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு எதிராக இப்படி ஒரு தடை முயற்சிகளைச் செய்து வரும் நிலை உண்டு.
விரைவில் நீதிமன்றத்திற்கேகூட அத்தகையவர்களை அழைக்கும் நிலையை திராவிடர் கழக சட்டத்துறை செய்யவிருக்கிறது!

இந்தக் கருத்துச் சுதந்திர பறிப்பு பற்றி முற்போக்கு சிந்தனையாளர்கள், ஒத்த கருத்து உள்ளவர்களை ஒன்று திரட்டி பல்முனைப் போராட்டங்களை அறிவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள திராவிடர் கழகம் தயங்காது! நெருக்கடி காலம் திரும்புகிறதோ? நெருக்கடி காலத்தின் முடிவை ஆட்சியாளர்கள் மறந்து விடக் கூடாது.

சென்னை கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம்
9.3.2015

Read more: http://viduthalai.in/page1/97527.html#ixzz3U4wXVXuP

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


உயிர்கள்தானே
சாப்பாட்டு விஷயத் தில்கூட காய்கறியில் புட லங்காய்தான் பிடிக்கும். உருளைக்கிழங்குதான் பிடிக்கும் என்று சொல் கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண்டைக்குள் செல்லும் வரைக்கும்தான்; அப்புறம் எந்த உணவாக இருந்தா லும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவதுபோல, உயிர்கள் பிறவி எடுத் திருப்பதே கடவுளை அறிவதற்குத்தான் என்று ஓர் ஆன்மிக மலர் கதை அளக்கிறது.

இதன்படி எந்த உயிர் கடவுளை அறிந்ததாம்? கண்டவர் விண்டிலர், விண்டலர் கண்டிலர் என்று தானே சொல்லப் பட்டுள்ளது? உயிர் என் றால் மனித உயிர் மட்டும் தானா! விலங்குகளும், பறவைகளும்கூட உயிர் தானே அவை சாப்பிடு வதும் கடவுளை அறிவ தற்காகத்தானா? காய் கறிகள்கூட சுவாசிக்கின் றனவே, அவைகளும் உயிர்கள்தானே! அப்படி என்றால் அவற்றிற்கு எரு போடுவது, தண்ணீர் ஊற்றுவது (அவையும் அவைகளுக்கு உணவு தானே) எல்லாம் கட வுளை அறிவதற்குத்தானா?

Read more: http://viduthalai.in/page1/97529.html#ixzz3U4wp8400

தமிழ் ஓவியா said...

தாலி குறித்து விவாதம் நடத்தவே கூடாதா?


இந்து மத வெறி கும்பலுக்கு மாதர் சங்கம் கண்டனம்

சென்னை, மார்ச் 9_ தாலி குறித்து விவாதம் நடத்தக்கூடாது என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது இந்து மதவெறிகும்பல் தாக்குதல் தொடுத்துள்ளதை அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின்மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிப்பரப் பப்பட விருந்த தாலி குறித்த விவாதநிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் சில மதவெறி சக்திகள் தடுத்து நிறுத்தி உள்ளன. அந்த நிகழ்ச்சிஒளிபரப்பப்படாது என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் அந்த சமூக விரோதிகள் புதிய தலை முறை தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்பு கூடி அங்கிருந்த ஒளிப்பதிவா ளர் ஒருவரை தாக்கி விலை உயர்ந்த கேம ராவை உடைத்துள்ளனர். அத்துடன் பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு பெண் பத்திரிகையாள ரையும் தாக்கியுள்ளது அதிர்ச்சியை தருகின்றது.

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மதவெறி சக்தி களின் தாக்குதலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.தாலி என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷய மல்ல. சங்ககால இலக்கி யங்கள் முதல் இன்று வரை தாலி குறித்த பல்வேறு கருத்துக்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. தமிழகத் தில் ம.பொ.சி,பெரியார் போன்ற தலைவர்கள் தாலி குறித்த பல்வேறு விவாதங்களை நடத்தி கட்டுரைகளும் வெளி யிட்டு உள்ளனர். பெரியார் பெண்ணே உன்னை அடிமைப்படுத்தும் இந்தக் கயிறை அறுத்தெறி என்று பெண்ணடிமைத் தனத்தை சாடியுள்ளார்.

எனவே, தாலி குறித்து பேசவே கூடாது என்ற இந்த கலாச்சார காவலர் களின் கருத்து சுதந்திர பறிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் இந்த தாக் குதல் நடைபெறும் போது காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததும் கண்டிக்கத்தக்கது. தமிழ கத்தில் ஜாதிய ஆதிக்க செயல்களை தமிழக காவல்துறை எப்படி கை கட்டி வேடிக்கை பார்க் கின்றதோ அப்படியே மதவெறி சக்திகளின் சமூக விரோத செயல்களையும் கை கட்டி வேடிக்கை பார்த்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அந்த விவா தத்தினை ஒளிபரப்புவதற் கான ஏற்பாட்டினையும் செய்யவும் தமிழக அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத் துகின்றது.

Read more: http://viduthalai.in/page1/97530.html#ixzz3U4x2CvsK

தமிழ் ஓவியா said...

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அவசியமே!


மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க சட்டம் செய்யப்பட்டது.

இப்பொழுது அம்மாநிலத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி. சிவசேனைக் கூட்டாட்சி முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டைக் காலாவதி ஆகச் செய்துவிட்டது.
சிறுபான்மை மக்கள் என்றாலே பி.ஜே.பி. சிவசேனா, சங்பரிவார்க் கும்பலுக்குக் கடுமையான வெறுப்பும், வன்மமும் தான் மேலோங்கி நிற்கின்றன.

சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் குடியுரிமையின்றியும் வாழ முன் வர வேண்டும் என்று எழுதி வைத்தவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தங்களின் குருநாதர் என்று போற்றித் துதிக்கும் எம்.எஸ். கோல்வால்கர்.

அப்படிப்பட்ட கொள்கையைக் கொண்டவர்கள் ஆளும் ஒரு மாநிலத்தில் இத்தகு நடவடிக்கைகள் என்பவை ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால்கூட மேற்கு வங்கத்தில் 10 சதவீதம், கேரளாவில் 12 சதவீதம். கருநாடகத்தில் 4 சதவீதம், தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் முஸ்லிம் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையிலும்கூட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என்றே கூறப்பட்டு விட்ட நிலையில் மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய அரசின் முடிவை ரத்து செய்கிறது என்றால் இதன் பொருளென்ன?

உலகில் அதிக முஸ்லிம்கள் வாழக் கூடிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அத்தகைய ஒரு நாட்டில் அவர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவது சரியானதுதானா?
நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா குழு தனது பரிந்துரை யில் கல்வி, வேலை வாய்ப்பில் முசுலிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதே!
வேலை வாய்ப்பில் 5 சதவீதம் அளவுக்குத்தான் முசுலிம்கள் இடம் பெற்றுள்ளனர் என்று விசாரணை அறிக்கைகளே கூறுகின்றன. இந்த நிலையில் அவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வளர்ச்சி அடைய சட்டரீதியாக இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்!

16ஆவது மக்களவையில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில், முசுலிம்கள் வெறும் 24 பேர் மட் டுமே! இது 4.4 சதவீதமேயாகும். அவர்களின் மக்கள் தொகையோ 14 சதவீதமாற்றே.
பிஜேபி சார்பில் ஒரே ஒரு முசுலிம் கூட வெற்றி பெற முடியவில்லையே! 9 மாநிலங்களில் பிஜேபி ஆட்சி இருக்கிறது. அவற்றில் 155 அமைச்சர்கள் இருக் கிறார்கள் என்றால் அதில் இடம் பெற்றுள்ள முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? ஒன்றே ஒன்றுதான்.
சிறுபான்மை மக்களுக்கு இந்தியாவில் உரிய பாதுகாப்பு இல்லை; உரிய உரிமைகள் இல்லை என்பது அப்பட்டமான உண்மையாகும்.

இது ஏதோ முஸ்லிம் மக்களைச் சார்ந்த பிரச்சினையாகக் கருதி விடக் கூடாது - முடியாது. ஒட்டு மொத்தமான சமுதாயப் பிரச்சினையாகும். நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிற சக மனிதனின் நல வாழ்வும், உரிமை வாழ்வும் கிடைக்க வழி செய்யா விட்டால் ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற வினாவை எழுப்பாதா?

பொதுவாகவே மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இடஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லாத ஆட்சி என்பதைவிட அது கூடவே கூடாது என்று கருதுகிற கோட்பாட்டைக் கொண்டதாகும்.

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பில் வழங்கினார் என்ப தற்காக சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் தானே பிஜேபியினர் என்பதை மறந்து விடக் கூடாது. இதனை எல்.கே. அத்வானி அவர்கள் தமது சுயசரிதை நூலில் தெளிவாகவே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே.

சிறுபான்மையினருக்கு ஏதோ ஒரு மாநிலத்தில் நடந்தது தானே என்று மற்றவர்கள் பாராமுகமாக இருக்கக் கூடாது.

சமூக நீதியில் அக்கறை உள்ளவர் அத்தனைப் பேரும் ஒன்று சேர்ந்து அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் வீதிக்கு வந்து போராட வும் தயங்கக் கூடாது. சமூக நீதி என்பது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று; யாரோ கருணையின் அடிப்படையில் கொடுக்கிற பிச்சையல்ல.

Read more: http://viduthalai.in/page1/97543.html#ixzz3U4xCuyp6

தமிழ் ஓவியா said...

மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page1/97541.html#ixzz3U4xLGvum

தமிழ் ஓவியா said...

தாளமுத்து


இந்தி எதிர்ப்பு வரலாற்றில் நடராசன் - தாளமுத்து என்ற பெயர்கள் என்றென்றும் எதி ரொலிக்கும் இலட்சியப் பெயர் கள் ஆகும்.

1938 ஜனவரி 15 இல் நட ராசன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரன் மரணத்தைத் தழுவினார். அது போர்க் குரலாக சென்னை சட்டசபையில் வெடித்தபோது ஆணவக்காரரான பிரதமர் ஆச்சாரியார் (ராஜாஜி) என்ன சொன்னார் தெரியுமா?

நடராசன் என்பவர் படிப்பு வாசனை அறியாத ஒரு அரி ஜன்; தன் தாய் மொழியிலும் கூட நடராசனுக்கு எழுதத் தெரியாது என்று பதிலளித்தார்.

படிப்பு வாசனையற்ற கார ணத்தால்தான் நடராசனுக்கு மர ணம் நேர்ந்தது என்று அமைச் சர் கருதுகிறாரா? என்று அப்துல் அமீர்கான் சுடச்சுடக் கேட்டார்.

படிப்பில்லாததால்தான் அந்தக் கைதி மறியல் செய்ய நேர்ந்தது. சிறையில் அவர் இறந்து போனார் என்று ராஜாஜி மமதை அடங்காமல் மறுமொழி கூறினார். அதே சென்னைச் சிறைச் சாலையில் அடுத்து இரு மாதங்கள் கழித்து தாளமுத்து என்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த வீரர் மரணத்தைத் தழுவினார் (12.3.1939).

இறுதி ஊர்வலம் கண் ணீரும் கம்பலையுமாகப் புறப் பட்டது. மயானத்தில் தோழர் சி.பாசுதேவ் தலைமையில் இரங்கற்கூட்டம் நடைபெற்றது.

இந்தி எதிர்ப்பு எட்டாவது சர்வாதிகாரி எஸ்.சம்பந்தமும், தளபதி அண்ணா அவர்களும் இரங்கல் உரை ஆற்றினார்கள்.

அண்ணா அவர்கள் அப் போது பேசினார்: நடராசன் அடக்கமான காலத்து மீண்டும் இத்தகைய நிகழ்ச்சி தமிழ் நாட்டில் ஏற்படாதென நினைத் தேன். ஆனால், நாடார் குல திலகம் தாளமுத்து இறந்தது காண மனம் கலங்குகிறது. தோழர்கள் நடராசன் தாளமுத்து மரணத்தை என்னுடைய அண்ணன், தம்பி மரணம் என்றே கருதுகின்றேன். முன்பு நான் சாக்கோட்டை சுய மரி யாதை மாநாட்டில் பேசும் போது, நாடார் சகோதரர்களைத் தமிழர் அறப்போருக்கு வருமாறு வருந்தி அழைத்தேன். ஆனால், அவர்களைத் திருப்பிக் கொடுப் பதாக உறுதி கூற முடியாதெனத் தெரிவித்துத்தான் அழைத் தேன்.... நடராசனை - தாள முத்தை நாம் இழந்தோம். கண்ணீர் விட்டோம், கலங்கி னோம். நெஞ்சு துடித்தோம், நிலை தடுமாறினோம். ஆனால், இதே சமயத்தில் ஆச்சாரியார் மார்தட்டி, கருப்புக் கண்ணாடி யைத் துடைத்த வண்ணம் கலகலவெனப் பேசுவார். ஏன் பேசமாட்டார்? தமிழன் ஆச்சா ரியார் காலின்கீழ் இருக்கிறான்.

இரண்டு மணிகளை இழந் தோம். தமிழர் ஆட்சி ஏற்படும் போது இவ்விரு வீரர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டே அது எழுப்பப்படும். வருங்காலத்தில் விடுதலை பெற்ற தமிழகத்தில் தலைவர் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்பவேண்டும். ஏன் பெரியார் சற்றுத் தளர்ச்சி அடைந்த காலத்திலெல்லாம் இந்த இரு சமூகங்கள்தான் அவருக்கு உதவி செய்து வந் திருக்கின்றன என்று அண்ணா பேசியதை தாள முத்து மறைந்த இந்த நாளில் நினைவு கூர்வோம்.

- மயிலாடன்

குறிப்பு: மானமிகு கலைஞர் அவர் கள் சென்னையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டடத்திற்கு (எம்.எம்.டி.ஏ.) தாளமுத்து- நடராசன் பெயர் சூட்டி வரலாற்றில் பதிவு செய்துள்ளார்).

Read more: http://viduthalai.in/e-paper/97720.html#ixzz3UCCU0n8C

தமிழ் ஓவியா said...

இதுதான் இந்துத்துவா ஆட்சி

பாலியல் குற்றங்களைவிட மாட்டிறைச்சி தடைக்கு அபராதம் அதிகமாம்

மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு அய்ந்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது


புதுடில்லி, மார்ச் 12_ ஏழைகளின் புரதச் சத்து மிக்க உணவாக திகழும் மாட்டிறைச்சிக்கு மகா ராஷ்டிரத்தில் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரி ணாமுல் எம்.பி., இந்தத் தடையை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தைவிட, பாலியல் வன் முறை வழக்குகளுக்கு விதிக்கப்படும் தொகை குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநி லத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி வைத்திருப் போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டு கள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அப ராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திரிணாமுல் எம்.பி. தெரீக் ஓப்ரியன், மகா ராஷ்டிரத்தில் மாட்டி றைச்சி விற்பனைக்குத் தடை விதித்திருப்பது குறித்து பேசும்போது, மாட்டிறைச்சி விவ காரத்தை நாம் மதம் சார்ந்த கோணத்தில் பார்க்கக்கூடாது. இந்தத் தடையால் சிறுபான்மை யினர், தலித் மக்கள் என தாழ்த்தப்பட்டச் சமூகத் தைச் சார்ந்த பலர் பாதிக் கப்படுவார்கள். வடகிழக்கு மாநில மக்கள் அனை வரும் மாட்டிறைச்சியை தங்களது முக்கிய உண வாக கொண்டிருக்கின் றனர். ஏழைகளின் புரதச் சத்துமிக்க உணவாக திக ழும் மாட் டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்கக் கூடியதாக இல்லை.

பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு விதிக் கப்படும் தண்டனையை விட இந்தத் தடை உத் தரவு பயங்கரமானதாக உள்ளது. அதில், வழங்கப் படும் அபராதத் தொகை யைக் காட்டிலும் மாட்டி றைச்சி தடைக்கு அபரா தம் அதிகமாக உள்ளது.

இந்த தடையால் மற்ற இறைச்சிகளின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கோழிக்கறி, மீன் உள்ளிட்டவைகளின் விலை ஏற்கெனவே அந்த மாநிலத்தில் உயர்ந்து விட்ட நிலையில் இந்தத் தடை பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். மகாராஷ்டிராவில் ஏற் கெனவே 55 சதவீத அள வுக்கு தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தச் சட் டத்தால் வயது முதிர்ந்த மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும். விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் வேறொரு விலங்குக்கு தடை உள் ளது. ஆனால், குறிப் பிட்ட கடைகளில் விற் பனை செய்ய அவர்கள் அனுமதித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

ஓப்ரியன்னின் கருத் துக்கு பாஜக எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர்களுக்கு எந்த விவகாரத்தையும் எழுப்பும் உரிமை உள்ளது. ஆனால் அதனை முறையாக எழுப்ப வேண்டும். இந்த விஷயத் தில் விவாதத்துக்கு அனு மதிக்கக் கூடாது என்று மாநிலங்களவை அரசி யல் விவகாரங்களுக்கான அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/97726.html#ixzz3UCCx0ZEB

தமிழ் ஓவியா said...

பிள்ளையால் வரும் தொல்லை


ஒரு மனிதன் தான் பிள்ளை குட்டிகாரானாய் இருப்பதனாலேயே யோக்கியமாகவும், சுதந்திரமாகவும் நடந்துகொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாயிருக்கின்றான். அன்றியும், அவனுக்கு அனாவசியமான கவலையும், பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றன. - (குடிஅரசு, 12.8.1928)

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

முதுமையே போ...! போ...! முதிர்ச்சியே வா...! வா...! (2)

19 டிசம்பர் 1973 அன்று தியாகராயர் நகரில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவாற்றப் புறப்படுகிறார் தனது வேனில்!

புலவர் கோ.இமயவரம்பனும், நானும் வேனில் உடன் செல்லுகிறோம்;

அந்த வாரத்தில் வெளிவந்த பிரபல இங்கிலீஷ் வார ஏடான தி இல்லஸ்ட் டிரேடட் வீக்லி ஆஃப் இண்டியா (The Illustrated Weekly of India) இதழில், ஆணின் விந்து வங்கி (Semen Bank) என்ற ஒன்றை, ரத்த வங்கி போல - சேமித்து வைக்க ஆய்வாளர்கள் ஆய் வில் வெற்றி கண்டுவிட்டனர்; இதன்படி ஒரு மனிதனுக்குப் பிள்ளை பேறு, அவன் திடீர் விபத்தினாலோ அல்லது எப்படி மறைந்துபோன பின்புகூட அவ் விந்தைச் செலுத்தி, பிள்ளைப் பேறுக்கு வழிவகை செய்யலாம் (அவனது மகள் அல்லது மகன்) என்று இருந்த அறிவி யல் - மருத்துவவியல் முன்னேற்றம் வளர்ச்சிபற்றிப் படித்துக் காட்டினேன்!

அதுபோலவே, mprint என்ற ஆங் கில மாத இதழ் ஒன்றில், வழக்கமான ஆண் - பெண் சேர்க்கையில்லாம லேயே, பரிசோதனைக் குழாய் (Test Tube Baby) குழந்தை முயற்சி வெற்றி பெற்றது என்பதையெல்லாம் அக் கட்டுரையில் (இத்தாலியில் முதல் குழந்தை பிறந்தது) குறிப்பிட்டிருந் ததைக் கேட்டு, மிகவும் பூரிப்புடன் கைதட்டி, மகிழ்ச்சி பொங்க, நம் சிந்தனைகளின் செயலாக்கத்தை நாமே பார்க்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்தோங்கி விட்டதே! இன்னமும் எங்கெங்கே, என்னவென்னமோ வெல் லாம்கூட நடக்கும்!

இப்போது நான் யோசிக்கிறேன் - நமக்கு வயதாகிவிட்டதே - ஒரு 10, 20 ஆண்டு கம்மியாக இருந்தால், எவ் வளவு அதிகமாக இன்னமும் பிரச்சாரம் செய்து பகுத்தறிவின் வெற்றிபற்றி மக்களிடம் எடுத்துக் கூறலாமே! வீணாக இந்த முதுமை நமக்கு குறுக்கே வந்து விட்டதே என்று உளப்பூர்வமாக வருந்தினார்!

90 வயதில் உடல்நலம் தளர்ந்து, கழிக்கும் சிறுநீரை ஒரு போத்தலில் பிடித்து, (இணைக்கப்பட்ட இரப்பர் குழாய் வழிவந்த நிலையில்) அந்த கண்ணாடி போத்தலை, ஒரு பிளாஸ்டிக் வாளியில் வைத்து, தன் கையிலே தூக்கிக்கொண்டு, இருபுறமும் இரண்டு பேர்களின் தோள்களைப் பிடித்து எழுந்து நிற்கவும் ஆன நிலையிலும்கூட பயணம் செய்து மணிக்கணக்கில் பேசி அறிவுறுத்திடவும் அய்யா தவறவில் லையே!

முதுமை வாட்டியும், முதிர்ச்சி பீறிட்டுக் கிளம்பிய வண்ணம் இருந்தது!

அப்படி 19.12.1973 அன்று மாலை பயணம் சென்ற வாகனத்தில் குறிப் பிட்டபோது, அய்யா தந்தை பெரியாரின் உணர்வுகள் எப்படி என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், இயற்கையின் கோணல் புத்தி அந்த உரைதான் அவரது இறுதிப் பேருரையாக - மரண சாசனமாக ஆகிவிட்டது!

மேலே எழுதிய பல அறிவியல் கண்டுபிடிப்புகளைப்பற்றி சிலாகித்துப் பேசியது அவ்வுரையில் இடம்பெற்றுள் ளதை அய்யாவின் குரலிலேயே எவரும் ஒலிநாடாவில் இன்றும் கேட்கலாம்!

வயது ஏற ஏற, முதிர்ச்சி நமக்கு ஏற்படவே செய்கிறது. இளமைத் துடிப் புடன் எவரும் எடுத்தேன் - கவிழ்த் தேன் என்று பேசுவது தவிர்க்கப்படக் கூடும்!
முதுமை முத்திரை - தெரிந்தோ தெரியாமலோ முதிர்ச்சி முத்திரையைப் பதிப்பிக்கவே செய்கிறது.

என்னைப் பொறுத்தவரை எனக்கு ஏற்பட்ட அனுபவம்கூட, பல்வேறு சோதனைகள் வந்தபோது முன்பு இருந்த பதற்றம் - துடிதுடிப்பு இப்போது இருப்ப தில்லையே!

இமயமே இடிந்து நம்மீது விழுந்து விடுவதுபோல பிரச்சினைகள் வந்து விழுந்தாலும், அதை உணர்ச்சிவயப் படாமல், அறிவுப்பூர்வமாக, அணுகி சிந்திக்கவேண்டியவற்றைச் சிந்தித்தும், அறிவுரை கேட்கவேண்டியவர்களிடம் கேட்டும், எதையும் வெல்லும் பகுத் தறிவு அணுகுமுறையை முதிர்ச்சி - முதுமையின் தொடர்ச்சியாக வருகிறது என்பதை (பெரியார் தந்த புத்தி கார ணமாக) உணர்ந்து வருவதால், முதுமை கண்டு அஞ்சாதீர்! முதிர்ச்சியை வர வேற்க ஆயத்தமாயிருங்கள்!

எனவே,

முதுமையே போ! போ!

முதிர்ச்சியே வா! வா! என்று கூவிக் கூத்தாடி குதுகலமாகி வாழ்க்கையை அணுகுங்கள்!

(தொடருகிறது)

Read more: http://viduthalai.in/page-2/97735.html#ixzz3UCDcEQPH

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் சிறுபான்மையினர் யாரும் கிடையாதாம்!

அனைவரும் இந்துக்களாம்! ஆர்.எஸ்.எஸின் அடாவடித்தனம்!


நாக்பூர், மார்ச் 14_ இந்தியாவில் சிறுபான் மையினர் என்று யாரும் கிடையாது, அனைவரும் இந்துக்களே என்று ஆர். எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் தத் தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். கூட் டம் மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழுவான அகில பாரதீய பிரதிநிதி சபாவின் (ஏ.பி.பி.எஸ்) மூன்று நாள் கூட்டம் நேற்று தொடங் கியது. நாடு முழுவதும் இருந்து 1,600க்கும் மேற் பட்ட உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தின் இடையே ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைவரும் இந்துக் களே இந்தியாவில் சிறு பான்மையினர் என்று யாருமே கிடையாது. இங்கு கலாச்சார அடிப் படையிலும், தேசிய ரீதி யிலும், டி.என்.ஏ. அடிப் படையிலும் அனைவரும் இந்துக்களே. நாங்கள் யாரையும் சிறுபான்மை யினராக கருதவில்லை. இந்தியாவில் சிறுபான்மை கருத்து இருக்கக்கூடாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்களே என்று மோகன் பகவத் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) 20 தடவை சொல்லி இருக் கிறார். இதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, இல்லையோ, ஆனால் கலாச்சார, தேசிய மற்றும் டி.என்.ஏ. அடிப்படையில் அனைவரும் சமமான வர்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து கூறியதாவது:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தபின்னர், அந்த மசோதா மோச மானதாக இல்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந் தஸ்து அளிக்கும் ஷரத்து 370 மீதான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாட் டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.

எச்சரிக்கை

இந்தியாவில் நாள் தோறும் 5000 குழந் தைகள் புகையி லைக்கு அடிமையா கின்றனராம்.

பெற் றோர்களே, ஆசிரியர்களே, கவனியுங்கள்! கவனியுங்கள்!!

Read more: http://viduthalai.in/e-paper/97847.html#ixzz3UMjpdrFG

தமிழ் ஓவியா said...

போலீஸ் யோக்கியதை

உப்புசத்தியாக்கிரக சட்டமறுப்பு காலங்களில் இருந்து போலீசாருக்கு ஒரு புதிய யோக்கியதை ஏற்பட்டுவிட்டது. அதாவது போலீசு எவ்வளவு அக்கிரம மாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்டாலும் அதற்கு எவ்வித கேள்வியும், கேட் பாடும் கிடையாது என்பதாகும்.

போலீசு இலாகாத் தலைமை அதிகாரிகளுக்கும் நிர்வாக தலைவர்களுக் கும் சட்டசபை அங்கத் தினர்கள் கேட்ட கேள்வி களாலும், தேசியப் பத்திரிகைகள் வைத வசவுகளாலும், பொது ஜனங்கள் மண்ணை வாரித்தூற்றி சாபம் கொடுத்து சபித்ததாலும், புத்தியும் நாணயமும், யோக்கியப் பொறுப்பும் காப்புக்காச்சி மறத்துப் போய் விட்டதுடன் அவர்களது தோல் காண்டாமிருகத் தோலுக்கு சமமாய் போய்விட்டது.

இனி, எந்தக் காரணத்தை முன்னிட்டும் போலீசு இலாகாவை திருத்தவோ, அவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்யவோ யாராலும் முடியாது என்கின்ற பதவியை அது அடைந்து வருவதாகத் தெரிய வருகின்றது.

இது அந்த இலாகாவுக்கு ஒரு கவுரவம் தான் என்றாலும் நம்மைப் பொறுத்தவரை இனி நம்மால் போலீசு இலாகாவைத் திருத்த முடியாவிட்டாலும் போலீசு இலாகாவினால் நாமாவது திருத்துபாடடைந்து இனிமேல் இப்படிப்பட்ட விஷயங்கள் நம் கண்ணில் தென்படாமலும், காதில் கேட்கப் படாமலும் உள்ள நிலையை அடைய வேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம். ஏனெனில். சமீப காலத்துக்குள் இரண்டு இடங்களில் போலீசு அட்டூழியம் ஏற்பட்டு விட்டது.

ஒன்று காரைக்குடியில் ஒரு நாட்டுக் கோட்டை நகரத்து வாலிபரையும் மற்றும் இரு தோழர்களையும் தெருவில் நடக்கும் போது அடித்து துன்புறுத்தி அரஸ்ட் செய்தது. இரண்டு நீடாமங்கலத்தில் தோழர் கே. ராமையாவையும் மற்ற இரு நண்பர்களையும் தெருவில் நடக்கும் போது ஒரு நண்பரை யார் அடிக்கிறார் என்று ஒருவர் தலை நிமிர்ந்து பார்த்ததற்காக அடித்து துன்புறுத்தி அரஸ்ட் செய்து மூன்று நாள் தண்டித்து கொடுமைப்படுத்தியது ஆகிய காரியங்களுக்கும் மற்றும் அவர்கள் குடிகாரன்,

வெறிகாரன் போலும் கீழ் மக்கள் என்பவர்கள் போலும் வைவதும் நடந்து கொள்ளுவது மான காரியங்களைப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.

சுயமரியாதைக்காரர்கள் எந்த இடத்திலாவது இதுவரை போலீசு அல்லது நீதி நிர்வாக இலாகா உத்தரவுகளை மீறியோ அல்லது சட்டம் என்பதற்கு விரோதமான காரியங்களைச் செய்தோ இருந்தால் இவ்வித காரியங் களைப்பற்றி பேசவோ, எழுதவோ ஒருநாளும் வெளிவர மாட்டோம்.

அனாவசியமாய் பார்ப்பனர்கள் இடம் கூலி பெறவும் அகஸ்மாத்தாய் தங்கள் அயோக்கியத்தனமான நடவடிக்கைகளும் முட்டாள்தனமான நடவடிக்கைகளும் பிரசங்கத்தில் வெளியாய் விட்டதாகக் கருதிக் கொண்டும் இந்தப்படி நடந்து கொண்டால், அதன் எல்லை முழுவதையும் பார்த்து விடவேண்டும் என்றும் அந்த இலாகா வின் யோக்கியதையை வெளிப்படுத்திவிட வேண்டும் என்பது தான் நமது கருத்து.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 16.04.1933

Read more: http://viduthalai.in/page-7/97887.html#ixzz3UMmKQNK9

தமிழ் ஓவியா said...

உண்மைத் தோழர் மறைந்தார்

சுயமரியாதை இயக்கத்தின் உண்மைத் தோழர் எஸ். ராமச்சந்திரன் அவர்கள் 26-02-1933ந் தேதி மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் நாம் திடுக்கிட்டுப் போய் விட்டோம். நாம் மாத்திரமல்ல, சுயமரியாதை இயக்கத்தில் கடுகளவு ஆர்வமுள்ள எவரும் இச்சேதி கேட்டவுடன் திடுக்கிட்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

தோழர் ராமசந்திரனை இழந்தது சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரு நஷ்டமேயாகும். தோழர் ராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும் மனதில் உள்ளதை சிறிதும் எவ்வித தாட்சண்யத்திக்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது என்பது மிக மிக அரிதேயாகும்.

பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக என்ற கிளர்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் வீறு கொண்டிருந்த காலத்தில் தோழர் ராமச்சந்திரன் அவர்கள் தாலுகா போர்டு முதலிய பல ஸ்தாபனங்களில் தலைவராய் இருந்த சமயம் ஒருபொதுக் கூட்டத்தில் பேசும்போது இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுப்பதில்லை என்று ஒரு உறுதிமொழி கூறி அதை ஒரு விரதமாய் கொண்டிருப்பதாக விளம்பரப் படுத்தினார்.

மற்றும் அவரது திருநெல்வேலி சு.ம. மகாநாட்டின் தலைமை உரையில் (1929-ஆம் வருடத்தில்) வருங்காலத்தில் சுயமரியாதை இயக்கத் தால் ஏற்படும் பலன் இன்னின்னவை என்று குறிப்பிட்ட சமயத்தில், உலகம் எல்லாம் வழங்கப்படும் ஒரு பாஷை ஏற்படும்.

உலகம் எல்லாம் ஒப்புக்கொள்ளும் ஒரு கொள்கை ஏற்படும். உலகம் எல்லாம் ஒரு அய்க்கிய ஆட்சி நாடாகும். உலகத்திலுள்ள சொத்துக்கள் பூமிகள் எல்லாம் உலகத்திலுள்ள மக்களுக்குச் சொந்தமாகும். வேலை செய்யாத சோம்பேறிகள் ஒருவர்கூட இருக்க மாட்டார்கள். குற்றங்கள் குறைந்து விடும் நோய்கள் அகன்றுவிடும்.

மனிதன் ஆயுள் இரட்டித்துவிடும். மக்கள் வாழ்வில் உள்ள கவலைகள், பொறாமைகள் நீங்கி ஒருவருக்கொருவர் அன்பும் நட்பும் கூட்டுறவு முயற்சிகளும் தாண்டவ மாடுவதுடன், மக்கள் சதா சந்தோஷத்துடன் இருப்பார்கள் என்று கர்ஜித்ததுடன், தீண்டாமை என்பது மதக்கொள் கையைச் சேர்ந்தது என்பது முழுப்புரட் டென்றும் அது முழுதும் பொருளாதார சூழ்ச்சியின் அடிப்படையைக் கொண்டது என்றும் பேசி இருக்கிறார்.

இந்த தத்தவங்களில் ஒரு சிறிதும் மாற்றமில்லாமல் இன்று சு.ம. இயக்கம் வேலை செய்து வருவதைப் பார்ப்பவர்கள் இவ்வியக்கம் யாதொரு புதிய வழிகளிலும் செல்லவில்லை என்பதை உணர்வார்கள். தோழர் ராமச்சந்திரன் நல்ல வாக்கு விசாலமுள்ள வக்கீலாகவும் தகுந்த வரும்படியும் மேலும்மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடிய நிலையும் சவுகரியமும் இருந்தும் அவைகளை லட்சியம் செய்யாமல் இயக்கத்திலேயே கவலை கொண்டு மற்றவைகளை அலட்சியம் செய்து வந்த உண்மை சுயமரியாதை வீரரேயாவர்.

இவரது வயது 48, அதாவது 1884ல் பிறந்தவர் இவ்விளம் வயதில் இப்படிப்பட்ட உற்ற தோழரை இழக்க நேர்ந்தமைக்கு யார் வருந்தாமல் இருக்க முடியும்? இவருக்கு 4 ஆண் மக்களும், 3 பெண்மக்களும் உண்டு. இவரது வாழ்க்கைத் துணைவியார் ராமனாதபுரம் ஜில்லா போர்டு அங்கத்த வராகவும் சிவகங்ககை தாலூகா போர்டு அங்கத்த வராகவும் தகுந்த கல்வி ஞானமுள்ளவராகவும் இருக்கின்றார்கள்.

எனவே இவ்வம்மையார் இயற்கையை மதித்து, துணைவரின் பிரிவை சடுதியில் மறந்து அவரது சுயமரியாதை இயக்கத்தில் அவரது கொள்கைகளையே கொண்டு உலக விடுதலைக்கும் உலக இன்பத்துக்கும் உழைக்க முன்வருவார்கள் என்றே ஆசைப்படுகின்றோம்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 05.03.1933

Read more: http://viduthalai.in/page-7/97888.html#ixzz3UMmUIol1

தமிழ் ஓவியா said...

தீபாவளி முட்டாள்தனம்

தோழர்களே! தீபாவளி கொண்டாடப்போகிறீர்களா? அதன் கதை தெரியுமா? பகுத்தறிவுள்ள மனிதனுக்குப் பிறந்தவர்களாய் இருந்தால் இம்மாதிரி இழிவும், பழிப்பும் முட்டாள் தனமுமான காரியத்தைச் செய்வீர்களா? தீபாவளியை விளம்பரம் செய்கின்றவர்கள் யார்? சோம்பேறியும், துரோகியும், அயோக்கியர்களுமான கழுகுக்கூட்டமல்லவா?

கதர் கட்டினால் தான் சரியான தீபாவளி என்று பல சுயநல சூழ்ச்சிக்காரர்கள் சொல்லுகிறார்கள். இது மகா மகா பித்தலாட்டமாகும். இதற்கும் பார்ப்பன அயோக்கியர் களுடன் அரசியல் அயோக்கியர்களும் சேர்ந்து அனு கூலமாயிருந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். சொன்னதை எல்லாம் கேட்பதுதானா பார்ப்பனரல்லாத மக்களின் நிலை?

மலம் சாப்பிட்டால் மோட்சம் வரும் சுயராஜ்யம் வரும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவதுதான் மத தர்மமா? தேசிய தர்மமா? மதத்துக்காக மாட்டு மலம் சாப்பிடுவது போல் அரசியலுக்காக பணத்தை வீணாக்குவதா? சென்னையில் தீபாவளிக்கும், கதருக்கும் செய்யப்பட்டிருக்கும் விளம்பரம் குச்சிக்கார தாசி விளம்பரத்தையும் தோற்கடித்து விடும்போல் காணப்படுகின்றன.

இந்த செலவுகள் யார் தலையில் விடியும் தெரியுமா? புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள். கோபிப்பதால் பயனில்லை.

குறிப்பு:- ஒவ்வொரு சுயமரியாதைச் சங்கத்திலும் நாளையே தீபாவளியைப் பற்றிப் பொதுக்கூட்டம் கூட்டி மக்களுக்கு தீபாவளிப் புரட்டையும் கதர் புரட்டையும் எடுத்துச் சொல்லக்கோருகிறோம்.

குடிஅரசு - செய்தி - 15.10.1933

Read more: http://viduthalai.in/page-7/97888.html#ixzz3UMmduRtL

தமிழ் ஓவியா said...

தோழர் ஈ.வெ.ரா.நாகம்மாள்

குடிஅரசு பத்திரிகையின் பதிப்பாளராகிய தோழர் ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் சென்ற ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாது ஈரோடு லண்டன் மிஷன் ஆஸ்பத்திரி யில் டாக்டர் போலார்ட் அவர்களால் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இது சமயம் சற்று சவுக்கியமாகவிருக்கிறது விரைவில் குணமடைந்து விடலாமென டாக்டர் கூறுகிறார். தோழர் நாகம்மாள் அவர்களைப் பார்ப்பதற்கு தோழர்கள் ஆர். கே. ஷண்முகம் பி. ஏ. பி. எல். எம். எல். ஏ., சி. எஸ். இரத்தன சபாபதி எம். எல். சி. வி. எஸ். செங்கோட்டையா, முருகேச முதலியார், ஈரோடு முனிசிபால் சேர்மன் கே. ஏ. ஷேக்தாவுது சாயபு முதலிய ஆயிரக்கணக்கான பேர்கள் வந்து போனார்கள். இரண்டு மூன்று நாளாய் யாரையும் பார்க்க அனுமதிப்பதில்லை.

மாயவரத்திலிருந்து தோழர்கள் சி. நடராஜன் எஸ். சம்மந்தம், இரத்தினம், டி. சின்னையா, எஸ்.வி. லிங்கம் ஆகியவர்களும், சேலம் நடேசன், பாலுசாமி, அம்புலு, பவானிசிங், ஆகியவர்களும், திருச்செங்கோடு வரதராஜலு, ஜலாண்டாபுரம் அர்த்தனாரி, சிவலிங்கம், திருச்சி எஸ். நீலாவதி ராமசுப்பிரமணியம் ஆகியவர்களும், பாபநாசம் சாமி. சிதம்பரனார் சிவகாமி அவர்களும்,

சென்னை எஸ். குருசாமி - குஞ்சிதம் ஆகியவர்களும், தஞ்சை அய். குமாரசாமி பிள்ளை அவர்களும் மற்றும் பலரும் வந்திருக் கிறார்கள். தமிழ் நாடு ஆசிரியர் தோழர் வரதராஜலு, தோழர்கள் எம். சிங்காரவேலு, தூத்துக்குடி பெரியசாமி, முதலியவர்களிடமிருந்து தந்தியும் அநேகர்களிடமிருந்து கடிதங்களும் வந்திருக்கின்றன. ஆஸ்பத்திரியில் ஜனங் களை தாராளமாய் விடுவதில்லை.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.05.1933

Read more: http://viduthalai.in/page-7/97889.html#ixzz3UMmoGOPl