கோஷா முறை!
எந்த மனித சமுதாயம் பழைமையிலுள்ள தீமைகளைக் களைந்து புதுமையிலுள்ள நன்மைகளை ஏற்றுக்கொள்கிறதோ, அந்தச் சமுதாயந்தான் வாழ்க்கை ஏணியில் ஏறிச் செல்ல முடியும். மதம், மத ஆதாரம் என்பவையாவும் மனிதனுக்காக, மனிதனால் வகுக்கப்பட்டவை என்ற உண்மையை உணராத மக்கட்பிரிவு அறிவுத் துறையில் முன்னேறவே முடியாது. மனிதனால் வகுக்கப்பட்டவை என்ற உண்மையை உணராத மக்கட்பிரிவு அறிவுத் துறையில் முன்னேறவே முடியாது. மனிதன் மதத்திற்கு அடிமையாக இருத்தல் கூடாது. அது மனிதத் தன்மைக்கே இழுக்கு. சமயம் என்பது சமயத்திற்கேற்றபடி வளைந்து கொடுக்கக் கூடியதாயிருக்க வேண்டும். வளைந்து கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது. ஆனால், இது போதாது.
உச்சிக் குடுமிதான் மதக்கட்டளை; தாடியும், மொட்டைத் தலையுந்தான் மதக்கட்டளை என்று இருந்தது. இன்று மாறிவிடவில்லையா? 100-க்கு 99- கிராப் தலைகள் ஆகிவிடவில்லையா? அதுபோல, அவசியத்திற்கும், தேவைக்கும், வசதிக்கும், அறிவுக்கும், விஞ்ஞானத்திற்கும் தக்கபடி மதக்கட்டுப்பாடுகள் நீண்டு கொடுக்க வேண்டும். மதத்தின் தத்துவம் வேறு, அதன் புறக்கட்டுப்பாடுகள் வேறு; இத்துறையில் இஸ்லாம் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள மதச்சடங்குகள், அர்த்தமற்ற கட்டுப்பாடுகள் மிகக் கொஞ்சம் என்றே கூறலாம். முஸ்லிம் இளைஞர் உலகம் இச்சிறு கட்டுப்பாடுகளைக்கூட உடைத்து வருவது மகிழ்ச்சிக்குரியது.
உதாரணமாக மொஹரம் பண்டிகை என்ற பெயரால் புலிவேஷம் போட்டு ஆடுவதும், பஞ்சா தூக்கி ஆடுவதும் வரவரக் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், இஸ்லாம் மதத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத இந்த அநாகரிக முறைகளை முஸ்லிம் இளைஞர்கள் அடியோடு ஒழித்துவிடப் பாடுபட வேண்டும். சென்னையில் மாரடி என்ற பெயரால் ஆண்டுதோறும் நடைப்பெற்று வரும் ஆபாச முறையை முஸ்லிம்கள் கிளர்ச்சி செய்து நிறுத்திவிட வேண்டும். பக்கிரிகள் மயில் தோகை கொண்டு மந்திரிப்பது, ஹிந்துக்கள் நாகூரில் சென்று மொட்டையடித்துக் கொள்வது ஆகிய அறிவீனமான செயல்களை முஸ்லிம் அறிஞர்கள் தாம் நிறுத்த வேண்டும். முஸ்லிம் பத்திரிக்கை உலகம் இவைகளைத் தான் தன் முதற்கடமையாகக் கருத வேண்டும்.
அடுத்தபடி முக்கியமானது முஸ்லிம் பெண்களிடையே திணிக்கப்பட்டிருக்கும் கோஷா முறை. இதனால் எத்தனை அமீருதீன்கள், பேகம்ஷா, நாவஸ்கள், அருணா, அஸல், அலிகள் ஆகியோர் குடத்திலிட்ட விளக்குகளைப் போலக்கிடக்கிறார்கள் என்பதை ஒரு நிமிஷமாவது நினைத்துப்பார்த்தால் முஸ்லிம் அறிஞர்கள் இந்தத் தீய முறையை ஒழிப்பதற்குத் தாமதிக்கவே தொடங்கியிருக்கின்றனர். ஒரு சிலர் உயர்தரக் கல்விக்கூடம் பயின்று வருகின்றனர். முஸ்லிம் பெண்களிடையே ஆயிரக்கணக்கான பெண் டாக்டர்கள், ஆசிரியைகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள் தோன்ற வேண்டும். அப்படியானால், பெண்களை முகமூடியிட்டு அடக்கி வைத்திருப்பது நிறுத்தப்பட வேண்டும்.
சேலம் நகர சபையினர் இத்துறையில் சென்னை நகர சபையினனரைக் காட்டிலும் முற்போக்குடன் நடந்து கொண்டிருப்பது பற்றிப் பாராட்டுகிறோம். முஸ்லிம் பெண் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவிகளுக்காகவும், ஆசிரியைகளுக்காகவும் இதுகாறும் இருந்துவந்த கோஷா வண்டிகளைப் புதிய நகர சபையார் நிறுத்திவிட்டார்களாம். முஸ்லிம் பெண்ணுலகத்துக்குச் சேலம் நகர சபையார் செய்துள்ள நன்றியை அவ்வூரில் பெண்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். சென்னை நகரசபையானது மற்ற ஊர்களுக்கு வழிகாட்டத் தவறி விட்டாலும், சேலத்தைப் பின்பற்றியாவது நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஈரானின் முஸ்லிம் பெண்கள் முகமூடியில்லாமல் கடைகளுக்குச் செல்வதாகவும், அப்பேர்ப்பட்டவர்களுக்கு எந்தச் சாமானையும் கொடுக்கக்கூடாது என்று முஸ்லிம் வைதிகர்கள் கிளர்ச்சி செய்வதாகவும், சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தியைப் படித்தோம். பழைமை விரும்பிகளும், பாசி படர்ந்த மதியினரும், எந்த நாட்டிலும் எந்த மதத்திலும் உண்டு. கிருஸ்து மதத்திலும், கத்தோலிக்கக் குருமாரும், ஹிந்து மதத்தில் ஆரியரும், புத்த மதத்தில் பிட்சுகளும் இல்லையா?
பழைமை விரும்பிகளின் திருப்திக்காக மனித சமுதாயத்தைப் பலியிடுவது என்பது மதியீனம்.
கோஷா முறையினால் சூரிய வெளிச்சமும், நல்ல காற்று இல்லாமல் காசம் போன்ற நோய்கள் எளிதில் பரவுவதாக எல்லா டாக்டர்களும் கூறிவிட்டனர். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய வெளிச்சத்தையும், காற்றையும் மனித சமுதாயத்தின் சிறந்த பகுதியாகிய தாய்க் குலத்திற்கு மட்டும் கிடைக்காமல் தடுப்பது எவ்வளவு பெரிய அக்கிரமம் என்பதை ஆண்கள் ஆலோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். வட நாட்டு ஹிந்துக்களிடையே கூட இந்தக் கோஷா முறை இருந்து வருகிறது. இதுவும் விரைவில் ஒழிந்துவிடும் என்பதே நம் நம்பிக்கை.
துருக்கி புரட்சி வீரரான கமால்பாட்சாவும், ஆப்கானிஸ்தான் புரட்சி வீரரான அமானுல்லாவும் முஸ்லிம் பெண்களை விடுவித்த மாவீரர்கள். கமால் பாஷா கோஷாவை ஒழித்தது மட்டுமல்ல. பெண்கள் கையில் துப்பாக்கியைத் தந்தவர். பெண் இராணுவத்தை முதன் முதல் நிறுத்திக்காட்டிய ஒப்பற்ற சீர்திருத்த வீரர்.
திராவிட நாடு முஸ்லிம் சமுதாயத்திடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமானுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் பெண்கள் காலில் இடப்பட்டிருக்கும் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். பிற மதங்களிலுள்ள ஊழல்களைப் பழிப்பதுடன் மட்டும் திருப்திபடக்கூடாது. தங்கள் சமுதாயத்திலுள்ள தீமைகளையும் களைந்தெறிய வேண்டும்.
கோஷா முறையை ஆதரிக்கும் கற்றறிந்த முஸ்லிம் ஆண்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி எவரேனும் இரண்டொருவர் இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் கூற வேண்டியது இதுதான். "தயவு செய்து நீங்கள் ஓராண்டுக்காவது முகமூடி போட்ட வீட்டிற்குள் இருந்து பாருங்கள்" என்பதே.
-------------------------------29.11.1947- "விடுதலை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
49 comments:
லீக்வான்யூ மறைவு, உலகிற்கே பேரிழப்பு!
பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரை நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சிகளில்
சிங்கப்பூரை உயர்த்திய முன்னாள் பிரதமர் லீக்வான்யூ மறைவு, உலகிற்கே பேரிழப்பு!
என்றும் மக்களிடையே வாழும் அவருக்கு நமது வீர வணக்கம்
தமிழர் தலைவர் முக்கிய அறிக்கை
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக்வான்யூ சிங்கப்பூர் நாட்டைப் பல வகைகளிலும் உயர்த்திய பெருமைக் குரியவர்; அவரின் மறைவு சிங்கப் பூருக்கு மட்டுமல்ல; உலகத்திற்கே பேரிழப்பு என்று திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உலகின் தலைசிறந்த நிர்வாக மேதையும், சிறந்த அரசியல் ஞானியும், நவீன சிங்கப்பூரின் ஆற்றல் மிகு தந்தையுமான பேரறிஞர் லீக்வான்யூ அவர்கள் தனது 91ஆவது வயதில் இன்று (23.3.2015) காலை காலமானார் என்ற செய்தி சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; உலகின் அறிவு சார் மனித குலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
91 ஆண்டு வாழ்ந்தவர்
அவரது 91 ஆண்டு வாழ்க்கையில் அவர் ஒரு தீவு போன்ற குட்டி நாடான சிங்கப்பூரின் அதிபராகி, மக்கள் செயல் கட்சி PAP) என்ற அரசியல் கட்சியை வழி நடத்தி, சிங்கப்பூரின் நிர்வாகத் திறமை, லஞ்ச லாவண்யம் இல்லாது எதிலும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிலவும் மனப்பான்மையை அந்நாட்டுக் குடி மக்களுக்கு அளித்து, உலக வரைபடத்தில் அந்த நாட்டை உலகம் முழுவதும் பார்த்து வியக்கத்தக்க நாடாக ஆக்கியவர்! நாளும் அங்கே புத்தாக்கங்கள்!!
பல்வேறு இயற்கை வளங்கள் இல்லாத நாட்டை, அதனைத் தாண்டி உயர்ந்து தனித் தன்மையோடு, உறுதியான அரசு, வலிமை யான பொருளாதாரம் என்பதை அடிக்கட்டு மானமாக்கி உயரச் செய்த அருஞ்சாதனை புரிந்த ஆற்றலாளர் அவர்!
பல இனங்கள் வாழும் நாட்டில் நல்லிணக்கம் மலரச் செய்தவர்
பெரும்பான்மையினர் சீனர்கள்தான் என்றா லும், தமிழர் திராவிடர் அடங்கிய இந்தியர், மலாய்காரர்கள், யூரேசியர்கள் வெகு குறைவான எண்ணிக்கையினர்தான் என்றாலும், பெரும் பான்மை சிறுபான்மை என்ற பிளவுபடுத்திப் பார்க்க முடியாத வண்ணம், இந்த முப்பெரும் இனத்தவர்களும் கைகோர்த்து, சமூக நல்லிணக் கத்தோடு வாழ, அவரவர்தம் மொழி, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவைகளை மதித்ததோடு, தமது அரசில் சமவாய்ப்பினையும் கொடுத்து,
திறமை, ஆற்றல் இவைகளுக்குத் தான் முதலி டம் என்றே ஆட்சி நடத்தி வரலாறு படைத்தவர்.
நான்கு மொழிகளிலும் காலை வணக்கம்
காலை அங்குள்ள தொலைக்காட்சியைத் திறந்தால், ஆங்கிலம், சீனம், தமிழ், மலாய் மொழி ஆகிய நான்கு மொழிகளிலும் வணக்கம் ஒலிக்கும். ஆட்சி மொழி ஆங்கிலம் அதன் மூலம் அனைவருக்கும் சம வாய்ப்பு ஏற்படும் என்று கூறியவர் அவர்!
மொழி உணர்வு மிகவும் முக்கியமானது; அதனை மதிக்காவிட்டால், மக்களிடையே மிகப் பெரிய அவநம்பிக்கையும் அதிருப்தியும் அரசின் மீது ஏற்படுத்தும். ஆகவே சம வாய்ப்பு அளித் தால் தான், குடி மக்கள் தாங்கள் புறக்கணிக் கப்படவில்லை என்ற மன நிறைவும் அதன் காரணமாக நல்லிணக்கமும், நல்லுறவும் ஏற்படும் என்று சிந்தித்த திரு லீக்வான்யூ அதற்கேற்ப அரசு கொள்கைகளை வகுத்தவர்.
இளைய தலைமுறைக்கு வழி விட்டவர்!
ஒரு குறிப்பிட்ட வயது வரை பிரதமராக இருந் தவர், அடுத்த தலைமுறையை தலைமைத்துவத் திற்கு தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதிகாட்ட, அவர் பதவி விலகி அமைச்சகத்தின் மதி உரைஞராக (Mentor Minister) என்ற நிலை யில் இருந்து, அதன்பின் அதிலிருந்து விலகி, தனித்ததோர் சிந்தனைச் சிகரமானார்;
அவர்தம் சிந்தனைகள் பற்பல நூல்களாக வெளி வந்துள்ளன. சீரிய வெளிச்சங்களாகும் அந்நூல்கள்.
உலகத்தின் சில நாடுகள்பற்றிய எனது கருத்து என்று அவர் இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு நூலை எழுதியுள்ளார்.
தலை சிறந்த பத்திரிகையாளர்கள் கல்வி யாளர்கள் குழு அக்கருத்துகள்பற்றி இவரிடம் கேள்விகளைக் கேட்டு, அதற்கு பதிலும் அளித்த சிறந்த நூல் அது.
இந்தியாவைப் பற்றிய கணிப்பு
அதில் இந்தியாவைப்பற்றிக் கூறும்போது இந்திய நாடு முன்னேற பெரும் தடையாக இருப்பவை இரண்டு அம்சங்கள். ஒன்று அங்கு நிலவும் ஜாதி (Caste) மற்றொன்று அங்கு சரியான அடிக்கட்டுப் போதாமை (lack of infrastructure) என்று கூறி அதில் பார்ப்பனர் எப்படி ஆட்சியாளர் - அதிகாரிகளைவிட இந்தியாவில் மிகுந்த செல்வாக்குடன் திகழுகின்றனர் என்பதை அனுபவ பூர்வமாய்க் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுக்குள் உள்ள ஜனநாயகம்
கட்டுக்குள் உள்ள ஒரு ஜனநாயகம் (Controlled Democracy) என்ற நிலையில், வறுமையும், வேலையின்மையும் குடி மக்களிடம் இல்லாத நிலை; தேவையான அளவுக்கு வெளி நாட்டி லிருந்து வரவழைப்பதிலும் மிகவும் சாதுர்யமான அணுகுமுறையை அந்நாட்டு அரசு கையாளு கிறது. அமைச்சர், லஞ்சம் வாங்கக் கூடாது என்பதற்காக அவர்களைப் பொறுக்கி எடுத்து மிக அதிக சம்பளம் கொடுத்து, கடமையாற்றச் செய்வதில் அவர்கள் கண்ணுங் கருத்துமாய் உள்ள நிலைமையை உருவாக்கினார்!
அவருடைய மகன் பிரிகேடியர்லீ அவர்கள் இப்போது பிரதமர் என்றாலும், படிப்படியான அனுபவங்களைப் பெற்ற பிறகே அவர் அந் நிலையைப் பெற்றார்!
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் கூட, தன் மனதில் பட்ட கருத்தை எடுத்துச் சொல்லி, இலங்கையில் தமிழர் இன அழிப்பு (Genocide) என்பதை தயங்காமல் கண்டித்தவர் அவர்.
சிங்கப்பூருக்கு மட்டும் இழப்பல்ல!
அவரது இழப்பு சிங்கப்பூர்க்கு மட்டுமல்ல உலகத்திற்கே பெரும் இழப்பு! பொன் விழா - 50 ஆண்டு (ஆகஸ்டு 8 - 2015) கொண்டாடப்படும் நிலையில் மறைந்து விட்டாரே! அவர் அதுவரை வாழ்ந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்தி ருக்கும். எப்படியோ வாய்ப்பில்லை என்றாலும் அவர் என்றும் வாழுவார். சிங்கப்பூரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் வாழுகிறார்; அவர் தொடர்ந்து வாழ்வார்.
வீர வணக்கம்!
அவரது மறைவால் வாடும் சிங்கப்பூர் பிரதமர் அவர்களுக்கும், அரசுக்கும், மக்களுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை, 23.3.2015
Read more: http://viduthalai.in/e-paper/98357.html#ixzz3VD1Ox34h
பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு எனக் கூறியவர் பெரியார்
உயர்நீதிமன்ற நீதிபதி உரை
தஞ்சாவூர், மார்ச்.23 தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உலக மகளிர் நாள் கருத்தரங்கு நடந் தது. கருத்தரங்கிற்கு தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் அங்கயற் கண்ணி தலைமை தாங் கினார். பல்கலைக் கழக இசைத்துறை உதவி பேரா சிரியை மாதவி வரவேற்றார்.
கருத்தரங்கில் பெண் ணிய மஞ்சரி என்ற நூலை வெளியிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி து.அரி பரந்தாமன் பேசும்போது கூறியதாவது:
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக மகளிர் நாள் பெண் விடுதலைக்காக அனுசரிக் கப்படுகிறது.
பண்டைய காலத்தில் பெண்கள் சரி சமமாக நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். விவசாயத் தொழில் வளர்ச்சியடைந்து சொத்துக்கு வாரிசு என்ற நிலை உருவானபோது, பெண்கள் பொருளாகவும், பின்னாளில் வெறும் இயந்திரமாகவும் கருதப் பட்டு அடிமைப்படுத்தப் பட்டனர்.
இந்த அடிமைத்தனம் நம்முடைய நில உடைமை சமூகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த அடி மைத் தனத்துக்கு எதி ராகக் குரல் கொடுக்கப் படுகிறது. இந்த அடிமை முறையைப் பெண்களும் அக்காலத்தில் ஏற்றனர். இதனால், பெண்கள் பொருளாகப் பார்க்கப்பட் டதுடன், பாலியல் இயந் திரமாகவும், கருவியாகவும் பயன்படுத்தப்பட்டனர். மன்னர்கள் காலத்தில் உடன் கட்டை ஏறுதல், இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்தனர்.
உறுதியாகக் குரல் கொடுத்தவர் பெரியார்
கடந்த நூற்றாண்டில் தொழில், விஞ்ஞான, சமூக வளர்ச்சி அடைந்த நிலை யில் பெண் விடுதலைக்கும் குரல் எழுப்பப்பட்டது. பெண் விடுதலைக்காகப் பல பேர் குரல் கொடுத் தாலும், உறுதியாகக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். மற்ற அடிமைத் தனங்களை விட பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு செயல் எனக் கூறினார் பெரியார்.
இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளை எதிர்த்து 1940 ஆம் ஆண்டு முதல் மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது. என்றாலும், பெண்களுக்கு இன்னும் சம அளவு உரிமை கிடைக்கவில்லை. எல்லா துறைகளிலும் பெண்கள் கால் பதித்துள்ளனர் என்றாலும், ஆட்சி முறையில் சம அளவு பங்கு பெறவில்லை. உதா ரணமாக உச்சநீதிமன் றத்தில் உள்ள 31 நீதிபதி களில் ஒரு பெண் மட் டுமே உள்ளார். உயர் நீதி மன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 3 பேர் மட் டுமே பெண்கள்.
இந்த நிலைமை மாற இதுபோன்ற கருத்தரங்கங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், மாற்று சிந்தனை உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Read more: http://viduthalai.in/e-paper/98373.html#ixzz3VD1x7Tyy
முயற்சிக்க வேண்டும்
தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)
Read more: http://viduthalai.in/page-2/98378.html#ixzz3VD2IBv25
மீத்தேன் என்னும் அழிப்பான்!
மீத்தேன் வாயு எடுக்கப்படுவது தொடர்பான சர்ச்சை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் காலத்தில் இந்த முறை மேற் கொள்ளப்பட்டது.
இப்பொழுது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆன நிலையிலும் இதுபற்றிய தெளிவான முடிவினை அறிவிக்கவில்லை.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்டுள்ள வினாவுக்கு மன்னார்குடிப் பகுதியில் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்காக கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் என்ற நிறுவனம் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்துக்காக அதனோடு ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்தானது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித் துள்ளார்.
மீத்தேன் திட்டத்தை அரசு அறவே கை விட்டது என்று சொல்லவில்லை; ஒரு நிறுவனத்துடன் செய்யப்பட்டு இருந்த ஒப்பந்தம் நிறுவனத்தின் தவறு காரணமாக ரத்து செய்யப்பட்டது - அவ்வளவுதான்.
இதுகுறித்து சென்னையில் 21.3.2015 அன்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்) கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கவும் பட்டது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாக இருந்தாலும் சரி, பிஜேபி தலைமையிலான அரசாக இருந்தாலும் சரி - அவை மேற்கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கைதான் இத்தகைய திட்டங்களை அனுமதிப்பதற்குக் காரணம்! மூலத்தைவிட்டு விட்டு நிழலோடு விவாதம் பிரதிவாதங்களை மேற்கொள்வதில் பொருள் இருக்க முடியாது.
பரம்பரை பரம்பரையாக தங்கள் வாழ்வின் மூலாதாரமாக, அடிநாதமாக இருந்த விவசாய நிலங்களைப் பகற் கொள்ளைப் போல் பறித்து மக்களை வெளியே தூக்கி எறியும் அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை அவர்களை முட்டித் தள்ளுகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இந்த வினையாற்றலின் மூலக்கருவை எளிதில் அடையாளம் காணலாம்.
நிலக்கரிப் படிவ மீத்தேன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, போலந்து, அயர்லாந்து, பிரித்தானியா முதலிய நாடுகளில் எடுக்கப்பட்டாலும் மக்கள் நெருக்கம் குறைவான, விவசாயம் செய்யாத, மேய்ச்சல் நிலங்களிலும், காடு, மலைப் பகுதிகளிலும் தான் எடுக்கிறார்கள்.
பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆசியா அய்ரோப்பிய நாடுகளில் இத்திட்டம் தடை செய்யப்பட்டு விட்டது. செக்குடியரசு, ருமேனியா, ஜெர்மன் ஆகிய நாடுகளில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
பன்னாட்டு முதலாளிகள் கொள்ளை லாபம் கிடைப்பதால், இத்தொழிலில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். நாட்டில் மின் தேவையை இத்திட்டத்தின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற கருத்தும் இருக்கிறது.
பூமிக்குள் 500 முதல் 1500 அடி வரை செங்குத்தாகத் துளையிட்டு, அதில் உலோகக் குழாய் செருகி, இத்துளையிலிருந்து பக்கவாட்டில் எல்லா திசைகளிலும் சுமார் 2 கி.மீ. தொலைவிற்கு, பல துளைகள் போடப்பட்டு, அவற்றில் சிறு, சிறு துளைகள் கொண்ட குழாய்கள் செருகப்படும். கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீருடன் பல டன் எடையுள்ள மணல், மற்றும் 600-க்கு மேற்பட்ட ஈயம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், பார்மால்டிஹைட், பென்சீன், டொலூயீன், ஈதைல் பென்சீல், க்சைலீன், யுரேனியம், ரேடியம், மெத்தனால் போன்ற வேதிப் பொருட்களைக் கலந்து, நிலக்கரிப் படிவத்தில் உடைப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட கரைசல் தயாரிக்கப்படும்.
பூமிக்குள் செருகப்பட்டுள்ள குழாய்களின் வழியாக இக்கரைசல் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படும். இக்கரைசல் பக்கவாட்டுக் குழாய்களின் துளைகள் வழியாக வெளியேறி, நிலக்கரிப் பாறைகளில் நுழைந்து உடைப்புகளை உருவாக்கும். நிலக்கரியோடு பிணைந்திருந்த மீத்தேன் இவ்வெடிப்புகள் வழியாக வெளியேறும். மீத்தேன், நீர், கரைசல் ஆகியவை குழாய்களின் மூலம் உறிஞ்சப்பட்டு நிலப்பரப்பிற்கு கொண்டு வரப்படும். மீத்தேன் பிரிக்கப்பட்டு, மீதி கழிவு நீர் அருகில் அமைக்கப்படும் குட்டைகளிலும், வாய்க்கால்கள், ஆறுகளிலும் விடப்படும். ஒரு கிணறு அமையும் இடத்தைச் சுத்தப்படுத்த 5 நாட்களும், அந்த இடத்தில் துளையிட்டு கிணறு அமைக்க 50லிருந்து 100 நாட்களும் ஆகும். இந்த கிணற்றிலிருந்து சுமார் 20 முதல் 40 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுக்கலாம்.
ஒரு கிணற்றிற்கு நீர் எடுத்து வருவதற்கும், கழிவு நீர் எடுத்து செல்வதற்கும் குறைந்தபட்சம் 400 டேங்கர் லாரிகள் தேவைப்படும்.
ஒரு கிணற்றுக்கு நீரியல் விரிசல் செய்வதற்கான கரைசல் தயாரிக்க 1.51 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படும். குறைந்தபட்சம் 34 டன், அதிகபட்சம் 144 டன் மணல் தேவைப்படும்.
பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் 0.5% முதல் 2% என்று நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால், பல மில்லியன் லிட்டர் நீர் பயன்படுத்தப்படும் போது 80 முதல் 300 டன் வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படும்.
இக்கரைசலில் பயன்படுத்தப்படும் பல வேதிப் பொருட்கள் குடிநீரையும் காற்றையும் மாசுபடுத்தி நோய்களை உருவாக்கி விடும்.
டீசல் திரவம், இதில் உள்ள பென்சீன், ஈதைல் பென்சீன், டொலூ யின் ஆகியவை புற்றுநோயை உண்டாக்கக் கூடியவையாகும்.
பல கோடிக்கணக்கான கனஅடி நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு, நிலத்தடி நீர் சார்ந்த விவசாயம் அழியும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் காவிரியில் கர்நாடகம் நீர் தர மறுப்பதால் மூன்று போக சாகுபடி ஒரு போகம் ஆகிவிட்டது. சாகுபடி நிலம் ஐந்து இலட்சம் ஹெக்டேரில் 17% நிலத்தடி நீரை நம்பியே நடைபெறுகிறது. இது தடைப்படும்.
வெளியேற்றப்படும் கழிவு நீர் கடல் நீரைப்போல் ஐந்து மடங்கு உப்புத் தன்மை கொண்டது. குட்டைகளிலும், வாய்க்கால்களிலும் விடப்படும் இந்த உப்புநீர் நிலத்தில் சேர்ந்து நிலத்தின் உப்புத்தன்மை அதிகரிக்கும். நிலத்தடிநீர் பெருமளவில் வெளியேற்றப்படுவதால் கடல் நீர் உட்புகுவதாலும் நிலத்தின் உப்புத்தன்மை அதிகரித்து செடி கொடிகள் வளர முடியாத நிலை ஏற்படும். மீத்தேனை எடுத்துச் செல்ல குழாய்கள் பதிக்க பெருமளவு நிலம் கையகப்படுத்தப்படும்.
நிலத்தடி நீர் வெளியேற்றத்தால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்.
விவசாய வருவாயும், விவசாய வருவாய் சார்ந்த தொழில்களின் வருவாயும் இல்லாமல் போவதால் மக்கள் வறுமையில் தள்ளப் படுவார்கள். அரசு வழங்கப்போகும் நிவாரணம் நீண்ட காலத்திற்கு உதவாது.
இத்திட்டத்தால் சுமார் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கலாம். ஆனால் இலட்சக்கணக்கான மக்களின் விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்பு பறிக்கப்படும். கிடைக்கப் போகும் சிறு அளவு வேலை வாய்ப்பும் இத்துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களுக்கே வழங்கப்படும். எனவே உள்ளூர் மக்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவே.
வறுமை, சொந்த மண்ணில் வேலையின்மை காரணமாக மண்ணின் மக்கள், சொந்த நாட்டிலேயே அகதிகள் நிலைக்கு ஆளாக்கப்படுவார்கள்.
கழிவுநீரில் கலந்துள்ள பென்சீன், டொலுயீன், ஈதைல்பென்சீன், சைலீன் போன்ற வேதிப்பொருட்கள் குழாய்களின் கசிவுகளாலும், குழாய்களைச் சுற்றி உள்ள இடைவெளி வழியாகவும் வெளியேறி குடிநீருடன் கலந்து புற்றுநோய், தோல், கண், நரம்பு, சுவாச, இதய நோய்கள் மக்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இதே முறையில் மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைட் வாயுக்கள் வெளியேறி காற்றுடன் கலந்து தீ விபத்துகள் ஏற்படலாம்.
பெருமழை, வெள்ளத்தின்போது கழிவுநீர் குட்டைகளிலிருந்து வெளியேறி மண்ணை மாசாக்கும்.
நிலத்தினடியே குறுக்கும் நெடுக்குமாக தோண்டி வெடிப்புகளை உருவாக்குவதால் நிலநடுக்கம், பூகம்பங்கள் நிகழலாம். பலநூற்றக்கணக்கான டன் மணல் தேவைப்படும். இப்போதே மணல் கொள்ளையர்கள் ஆற்று மணலையெல்லாம் எடுத்து விட்டார்கள். மீதி கொஞ்ச நஞ்சம் மணல் வளமும் கொள்ளையடிக்கப்படும்.
விளை நிலங்களைக் குடைந்து நிலத்தடி நீரை ஏப்பமிட்டு விவசாயிகளை மட்டுமல்ல - ஒட்டு மொத்த மக்களை உறிஞ்சி ஊதித் தள்ளிட உருவாகும் திட்டத்தை - மக்கள் எழுச்சி மூலம் தான் ஊதித் தள்ள முடியும்.
Read more: http://viduthalai.in/page-2/98379.html#ixzz3VD2VedKy
தஞ்சை இளைஞரணி கலந்தாய்வின் கருத்துக் கேட்பு: பொறுக்கு மணிகளும்.... புத்தாக்கச் செயல்திட்ட வியூகங்களும்...
- முனைவர் த.செயக்குமார்
மாநில இளைஞரணி, மாணவரணி ஒருங்கிணைப்பாளர்
கழக இளைஞரணி, மாணவரணி அமைப்புகளை மேலும் விரிவாக்கமும் வலுவும் சேர்க்கும் நோக்கில் கடந்த 6.3.2015 அன்று திருச்சியில் மாநிலந் தழுவிய கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்களது தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி மாவட்ட அளவில் செயலாக்கிட வழக்கம்போல் வழிகாட்டி முந்திக்கொண்டது தஞ்சை மாவட்ட இளைஞரணி.
15.3.2015 தஞ்சையில் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டமாக (இளைஞரணி - மாணவரணி) தொடங்கியது. தொடக் கத்தில் அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டனர். துருதுரு இளை ஞர்களை சுறுசுறுப்பான இளைஞரணி பொறுப்பாளர்கள் திட்டமிட்டு குழு குழுவாக இருசக்கர வாகனங்களில் நேரில் சென்று மூன்று முழு நாட்களை செலவிட்டு மணிவிழா அழைப்பு கொடுப்பது போல கலந்துரையாடல் கூட்ட அழைப்பினை 300-இளை ஞர்களிடம் வீட்டிற்கே சென்று கொடுத்து வந்தனர் செயல் வீரர் களான நீலகண்டன், அள்ளூர் அக்ரி பாலு, உதவிப் பேராசிரியர் ராஜவேல், ஆசிரியர் வெற்றிக்குமார் உள்ளிட்ட ஏனைய பொறுப்பாளர்கள். அதன் பலனைக் கண்கூடாக கலந்துரை யாடல் உணர்த்தியது.
கலந்துரையாடல் வழக்கத்திற்குச் சற்று வித்தியாசமான முறையில் கலந்தாய்வாக நடத்தப்பட்டு, இளை ஞரணி, மாணவரணி பொறுப்பாளர் களிடம் கருத்துக்கேட்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட புதிய உறவுகளான கழக இளம்போத்துக்களின் கருத்துச் செறிவுகள் இளைஞரணியின் புத்தாக் கச் செயல்திட்டத்திற்கான வியூகங் களாக அமைந்தன அவையாவன:
பகுத்தறிவு நூல் வாசிப்பு இயக்கம் நோக்கி ஈர்த்தது, கல்லூரியில் படிக்கும் காலத்து நண்பர்கள் பேசிய கொள் கைச் சாரல் கவர்ந்தது, கிராமங்கள் தோறும் முளைக்கும் ஜாதி சங்கங் களுக்கு மாற்றுசக்தியாக இயக்கத்தை முன்னெடுத்த, கருப்புச் சட்டை அணிந்து சென்றதனால் ஏற்பட்ட மதிப்பு மரியாதை, இணையதள இணைப்புகளில் பெரியாரின் சிந் தனைப் பொன்மொழிகள் பரப்பிடுவது, பரிச்சார்த்தமாக சந்தா சேர்ப்புக்குச் சென்றபோது கண்ட வெற்றியும் கொடுத்த ஊக்கமும், சில பகுதிகளில் அடிக்கடி நடந்த கழகப் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றது பயன் விளைவித்தது, இயக்கப் பொறுப் பாளர்களாக உள்ளவர்களின் பிள்ளை களும் இளைஞரணிக்கு ஊக்கம் கொடுத்து வலுசேர்ப்பது, கொள்கைக் கருத்துப்போருக்கு இளைஞர்கள் எப்போதும் தயாராக இருக்க பயிற்சி எடுப்பது, தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் வேகமான செயல்பாட்டு உழைப்புக்கு ஈடு கொடுக்க இளைஞர்கள் மேலும் தயாராக இருப்பது, இயக்கத்தில் சேர்ந்த தால் மதிக்கப்படுவதாகவும் - தனி முகவரி முத்திரை கிடைக்கும் பெருமை, வெளி யூர் நிகழ்ச்சிகளுக்கு தனி வாகனத்தில் சென்று கலந்து கொள்ளவும், மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடத்திடவும் இளைஞரணி ஊக்குவிப்புப் புரவலர் களான கொடையாளர்களின் நிதி உதவி பெரிதும் துணை நின்றது, அதன் வரவு செலவு கணக்கு வெளிப்படையாக ஒப்பு விப்பது (இது பின்பற்றத்தக்க வசூல் யுக்தி).
இந்த இயக்கத்தில்தான் மனிதனை மதிப்பதைக் கண்ணுற்றது, ஆன் மீகத்தில் ஊறிப்போன ஒரு பிச்சைக்காரர் நாத்திகக் கருத்துக்கு ஒப்புகை அளித்தது, கொள்கை மீது இருந்த மதிப்பு வியக்க வைத்து இயக்கத்தில் இணைந்தது, சைக்கிளில் செல்லக்கூட வசதி வாய்ப்பு இல்லாத காலம் போய் வளர்ச்சியும் - மாறுதலும் கண்டுள்ள காலத்திலும் இன்னும் வேகம் தேவையிருப்பது, மாணவர் பருவத்தில் கழகத்தில் சேரு வதே தனி மகத்துவம், கல்வி பெருக்கிட பட்டம் பல பெற வேலை வாய்ப்பு பெற இயக்கம் பயன்பட்டதாகவும், இயக்கத்தில் பணி யாற்றுவது - நன்றி பாராத தொண்டு, மானமும் - அறிவும்தான் கிடைக்கும்!, மாணவர் பருவம் கிளர்ந்தெழ வேண்டிய அவசியம் ஏன்? இந்த இயக்கம் எந்தக் கொம்பனாலும் உரசிப் பார்க்க முடியாத உன்னதமான கொள்கைகள் கொண்ட தாகயிருப்பது, ஒருங்கிணைந்த குழுவாக - கிராமங்கள் நோக்கி பயணித்து பயன் விளைவிப்பது, உள்வாங்கிய கருத்துகளை புதிய மாணவர் - இளைஞர்களிடம் எடுத் துக்கூறுவது, இளைஞரணி வலுவானதால் கழகக்கூட்டம் நடத்த எளிதாக உள்ளது; தகவல் தொடர்பு பரிமாற்றம் குறைந்து இடைவெளி அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது, பக்தர்கள் சிந்தனைக்கு கேள்விக்கணைகளை துண்டறிக்கை வாயிலாக பரப்பிடுவது நல்ல பலன் விளைவிப்பது போன்ற எழுச்சியான ஆக்க திட்டங்களை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இக்கலந்துறவாடல் மண்டல மாண வரணி பொறுப்பாளர் தர்மசீலன் வரவேற் புரையுடன் தொடங்கியது.
மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் பொறியாளர் தமிழ்செல்வன் நிகழ்ச்சிகளை தொகுத் தளித்தார். மாணவரணி பொறுப்பாளர்கள் பொறியாளர் அழகிரி, பட்டயப் பொறியாளர் மதன்ராஜ் உள்ளிட்ட வர்களும் நிகழ்ச்சிக்கு உரம் சேர்த்தனர். முன்னிலையேற்ற கழக மண்டலச் செயலாளர் அய்யனார். மாவட்டத் தலைவர் அமர்சிங், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, மாவட்ட அமைப்பாளர் தேசிங்கு, மாநிலக் கலைத் துறை பொறுப்பாளர்கள் சித்தார்த்தன், பெரியார் நேசன், சடையார் கோவில் நாராயணனாமி, ப.க. பொறுப்பாளர்கள் பேராசிரியர் அழகிரிசாமி, ஆசிரியர் கோபு.பழனிவேல் ஆகியோரின் வழி காட்டுதல் உரைதனைத் தொடர்ந்து மாநில மாணவரணி இணைச் செயலாளர் இளந்திரையன், கழகப் பொதுச் செயலாளர்கள் தஞ்சை இரா.ஜெயக் குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் மாநில இளைஞரணி - மாண வரணி ஒருங்கிணைப்பாளராகிய எனது உரையும் இளைஞர்களுக்கு கருத்துச் சாரலாக அமைந்தது.
தஞ்சை மண்ணின் பெருமையை கழக இளைஞரணியின் பாடி வீடு என்றும் பெரியார் நாடு என்றும் தமிழர் தலைவரால் பாராட்டப்பட்டதையும் நினைவு கூர்ந்து, 1943-முதன் முதலில் மாணவர் கழகம் தொடங்கிட்ட குடந்தையும் தஞ்சை மண்தான் என்றும் அதிக கல்வி நிறுவனங்கள் உள்ளதும் குறிப்பாக பெரியாரின் சுயமரியாதைக் கல்விச் சோலையும் பல்கலையாக விருட்சமுற்றுள்ளதும், ஊர்தோறும் சுயமரியாதை - பொது உடைமைக் கருத்து மேலோட்டமுள்ள மாவட்டமும் தஞ் சையே என்றும் எந்நிகழ்ச்சியானாலும் சோடைபோகாத மாவட்டமும் வசூல் பணிக்கு கிஞ்சிற்றும் சளைக்காத மாவட் டம், எந்தத் திட்டமானலும் வழிகாட்டும் - முந்தும் மாவட்டமும் பிறருக்கு எடுத் துக்காட்டான முன்மாதிரி மாவட்டமும் தஞ்சை மாவட்டம் தான். தந்தை பெரியாரின் தளகர்த்தாக்கள் சர் ஏ.டி.பன்னீர்செல்வம், பட்டுக்கோட்டை அழகிரி, தந்தை க.மா.குப்புசாமி ஆகி யோரைத் தந்த மாவட்டத்தில் இன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உற்ற தளபதிகளாக வலம் வந்து கொண்டுள்ள செயல்தீரர்கள் உரத்தநாடு குணசேகரன் மற்றும் தஞ்சை ஜெயக் குமார் ஆகியோரும் நமது தஞ்சை மாவட்டம் என்பதால் நமக்கு என்றொரு தனிப்பெருமை உள்ளது. அதோடு நமக்குள்ள 3 பெருமைகள், நல்ல இயக் கத்தைத் தேர்ந்தெடுத்தது, உன்னதமான கொள்கைகள், தந்தை பெரியாரை தோற்றுநராகக் கொண்டு சரியான வழிகாட்டும் தலைமை தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா என்பதால், அவரது எண்ணங்களை திட்டங்களை செயல் படுத்தும் உண்மையான களப்போராளிகள் - தூதுவர்கள் இளைஞர்களாகிய நீங்கள் தான் என்று அவர்களை சுட்டிக்காட்டிப் பேசியது நெகிழச் செய்தது.
புதிது புதிதாக இயக்கத்திற்கு கிடைத்த இளைஞரணித் தோழர்களின் கருத்துக்கேட்பு பொறுக்கு மணிகளிலிருந்தும், இளைஞரணி, மாணவரணி அமைப்புக் குழுவினரின் கருத்து ஆலோசனைகளிலிருந்தும் இளைஞரணியின் புத்தாக்கச் செயல்திட்ட வியூகங்கள் கீழ்கண்ட வாறு வகுத்தளிக்கப்பட்டது.
இளைஞரணிக்கான வேலை களைத் திட்டமிடுவது - வரிசைப் படுத்துவது. கால நிர்ணயம் வகுத்துக் கொள்வது - குழுவாக சென்று அணுகுவது தொடர்ந்து தொடர்பு கொள்வது. இணையத்திலும் இணைப்பது - மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களின் வழிகாட்டுதல் ஆலோசனைகள் பெற்று செயல் படுவது என்றும் அந்த வகையில் முதல் மாத வேலைத் திட்டமாக மாவட்டத்திலுள்ள ஒன்றியங்கள் கிளைகள் தோறும் சந்திப்பு, மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களை சுழற்சி முறையில் ஒவ்வொரு ஒன்றி யப் பகுதிகளிலும் மாதம் ஒரு முறை நடத்திடுவது, பயிற்சி முகாமில் பங்கேற்க இளைஞர்களை தயார் படுத்துவது, பொறுப்பாளர்கள் புதுப் பித்து, முகவரி - தொடர்பு எண் பட்டியல் சேகரிப்பது, கல்லூரி - பள்ளி மாணவர் சந்திப்புகளை ஏற்படுத்து வது. முக்கியமாக புதிய இளைஞர் களை இயக்கக் கொள்கை ஏடுகள் படிக்கத் தூண்டுதலும், இயக்கப் பிரச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்யும் வேலையும் செய்து விட்டால் அவை அவர்களை நன்கு பக்குவப்படுத்தி தயார் செய்துவிடும் என்பது கண்கூடு.
மாதந்தோறும் மாவட்ட தகவல் அறிக்கை தயாரித்து தலைமைக்கு அளிப்பது, புதிய பொறுப்பாளர்கள் தொடர்பு முகவரி அனுப்பிக் கொண்டே இருப்பது, முழுநேர களப்பணியாளர்களையும், பயிற்சி முகாமுக்கு 60-பேர் கொண்ட குழு அடையாளங்காணுதல், ஒன்றியத் திற்கு 100 ஆர்வமிகு இளைஞர்கள் சேர்ப்பது, ஒன்றியத்திற்கு 100 உண்மை சந்தா சேர்ப்பது (தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றி யமும் ஒவ்வொரு மாவட்டத் திற்கு சமம்). ஆகஸ்ட் கோவையில் 1 லட்சம் இளைஞர்கள் ஒன்று கூடும் இளை ஞர் எழுச்சி மாநாட்டில் 1000 இளைஞர்கள் சீருடை அணி வகுப்பில் பங்கேற்பது. இதனை 5 மாதத்தில் இலக்கை எட்டி வெற்றி காண்பது என புத்துணர்ச்சி பெற்று உறுதி கொள்ளச் செய்தது. மற்ற மற்ற மாவட்ட இளைஞரணி பொறுப் பாளர்களும் முன்மாதிரி மாவட் டமான தஞ்சையை பின்பற்றலாமே! இந்த யுக்திதனை நீங்களும் செயல் படுத்தலாமே!!
அனைத்து மாவட் டங்களிலும் பின்பற்றி தமிழ்நாட்டில் தன்னிகரில்லா எழுச்சி பெறுவோம்!!!
Read more: http://viduthalai.in/page-2/98383.html#ixzz3VD2yEYIp
மார்ச் 23: இன்று உலக வானிலை தினம்
சென்னை, மார்ச் 23- வானிலை மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகள். இவற்றை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம். இந்நிலை தொடர்ந்தால், 'மூன்றாம் உலகப்போர்' தண்ணீருக்காக இருக்கும்' என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக வானிலை தினம், மார்ச் 23 இல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தினத்தில் மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்து வலியுறுத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இவ்வாண்டு, வானிலையை அறிவோம், செயல்படுவோம்! எனும் கருத்தை மய்யமாக வைத்து கொண்டாடப்படுகிறது.அதாவது, கடந்த கால வானிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வோம்.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிகழ்காலத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம். வருங்கால சந்ததியினரை பாதுகாப்போம் என்பதே இதன் சாராம்சம். விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியால், உடனுக்குடன் செய்திகள் பரிமாறுவதில் வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளோம்.
வானிலை பற்றிய செய்திகளில் குறிப்பாக, வெப்பமயமாதல், பனி உருகுதல், கடல்மட்டம் உயர்தல், ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசுபடுதல், இயற்கை பேரிடர்கள், மழை பற்றிய நிகழ்வுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம்.
இவை, தற்போதைய வானிலையை அறிந்துகொள்ளவும், அதன் தற்காலிக தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் மட்டுமே பயன்படுகின்றன. மாறாக இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனில், வானிலை குறித்த அடிப்படையை மக்கள் உணர வேண்டும். குறிப்பாக, நாம் வாழும் மாநிலத்தின் வானிலை மாற்றங்களை அறிந்திருக்க வேண்டும் என, இந்திய வானிலைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வானிலையாளர் சுகுமார், அறிவுறுத்துகிறார்.
அவர் கூறியதாவது:
இந்தியா சுதந்திரம் பெற்று, 67 ஆண்டுகளில் மக்கள்தொகை நான்கு மடங்காகப் பெருகியுள்ளது. ஆனால் நம் தேவைக்கேற்ப மழையின் அளவு பெருகியுள்ளதா என்றால் யாருக்கும் பதில் தெரியாது. பொதுவாக, வானிலை குறித்த அறிவு இதுவாகவே உள்ளது.
வாழும் பகுதியின் தட்பவெப்ப நிலைபற்றி அறிவது அவசியம்.தமிழகத்தை பொறுத்தவரை, எந்த மாதங்களில் பருவமழை பொழியும், எந்தெந்த பகுதிகளுக்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்திய, வானிலை மாற்றங்களுக்கான காரணத்தையும், அதற்கான வழிமுறைகளையும் அரசு உணர வேண்டும்; மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.நிலத்தடி நீர் சேகரிப்பு, மரம் நடுதல் அதிகரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி,
சோலார் வாயிலாக பசுமை வீடுகள், கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி தயாரித்தல் உள்ளிட்ட வழிமுறைகளால், இயற்கை பாதுகாக்கப்பட அனைவரும் முனைய வேண்டும். இதற்கு, அரசும், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Read more: http://viduthalai.in/page-4/98363.html#ixzz3VD3pEx9y
மணத்தக்காளி கீரையின் உடல்நலப் பயன்கள்
மணத்தக்காளிக்கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும் குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்துவரலாம். வாரம் இருமுறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளு றுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கலாம்.
இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தை கொடுக்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.
வயிற்று நோய், வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணத்தக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும். கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும். மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.
கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத் தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மணத் தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும்.
பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.
மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும்.
உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது. நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. எல்லா வகையான காய்ச்சல் களையும் இக்கீரை தணிக்கும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
தாம் பருப்பின் மருத்துவப் பயன்கள்
அதிகமான சத்துக்களை உள்ளடக்கிய பருப்பு வகை களில் பாதாம் பருப்பும் ஒன்று. பாதாம் பருப்பு உடலில் கொழுப்பை அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. பாதாம் இனிப்புகளில் சேர்க்கப்படும் சீனியும், கொழுப்பும்தான் உடல் கொழுப்புக்கும் வேறு பல நோய்களுக்கும் இட்டுச் செல்கிறது.
இவை இரண்டையும் நீக்கிவிட்டால் பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. இதன் மகத்துவத்தை அறியாத பலர் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.
பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் நாட வேண்டிய பருப்பு வகைகளில் இதுவும் ஒன்று. புரதம், நார்ப்பொருள்களோடு சேர்த்து உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 இதில் உள்ளது.
இதனைத் தவிர்த்து வைட்டமின் ஈ, துத்தநாகம் சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், தாமிரம் பொட்டேஸியம் செலேனியம், நியாஸின் மற்றும் மெக்னீஸியமும் இதில் உள்ளன. பாதாமில் உள்ள கொழுப்பு இருதயத்தின் ஆரோக்கியத்தை அதி கரிக்கும் கொழுப்பாகும்.
25 கிராம் பாதாமில் ஒரு நாளைக்குத் தேவையான 70 சதவிகித வைட்டமின் ஈ உள்ளது. மற்ற பருப்புகளை விட பாதாமில் கால்சியம் நிரம்ப இருக்கிறது. இதனோடு சேர்த்து புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி17 என்ற சத்தும் இதில் உள்ளது.
மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரிழிவு நோய், சருமக் கோளாறுகள், கேச பிரச்சினைகள், சொரைஸிஸ், பல் பாதுகாப்பு, இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினை களைக் களைவதில் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர் களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது. பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பொட்டேஸியம் இருதயத்திற்கு நல்லது. வைட்டமின் ஈ என்டிஒக்சிடண்டாக செயல்பட்டு இருதய நோய் வரும் ஆபத்துக்களைக் குறைக்கிறது.
பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள பொட்டசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
பாதாமில் உள்ள சத்துகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இரத்தத்தில் சீனி மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம். பாதாமில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
மங்கனீஸ், தாமிரம் மற்றும் ரிபோபிளாவின் சக்தியை உற்பத்திக்கு உதவுவதால் பாதாம் உட்கொள்பவர்கள் புத்துணர்வோடு இருப்பர்.
முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை, பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம் தடுக்க முடியும்.
பாதாம் ஒருவருடைய முகப் பொலிவைக் கூட்டுகிறது. நோய் எதிர்ப்புச் சக்திய அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட பாதாமை உணவாகக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.
Read more: http://viduthalai.in/page-4/98386.html#ixzz3VD4Gqk6b
இருமலை குணமாக்கும் மாதுளம் பூக்கள்
மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.
தொண்டை ரணம்: மாதுளம் பூக்களை மசிய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண் டைக்குள் மெதுவாக விழுங்கவேண்டும். இதனால் தொண்டை கரகரப்பு, தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.
தாதுபலம்: தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்த மடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.
ரத்த மூலம்: மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக் கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
Read more: http://viduthalai.in/page-4/98386.html#ixzz3VD4Nr0ua
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
திருப்பதி கோவிலில் பக்தர்களிடம் பண மோசடி
நகரி, மார்ச் 23_ திருப் பதி ஏழுமலையான் கோவி லில் யுகாதி நாளை முன் னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டனவாம்.
நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 43,227 பக்தர்கள் ஏழு மலையானை தரிசனம் செய்தனராம். அதன்பிற கும் தர்ம தரிசனத்துக்கு 21 கம்பார்ட் மெண்டு களில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனராம். இவர் களுக்கு தரிசனத்துக்கு 11 மணி நேரம் ஆனதாம். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் தரிசனத் துக்கு 6 மணி நேரம் காத்து இருந்தனராம்.
கூட்டத்தைப் பயன் படுத்தி பக்தர்களிடம் பணம் மோசடி செய்த இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் பிரம்மபுத்ராவைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ்வர ராவ் தனது 2 நண்பர் களுடன் கோவிலுக்கு வந்தார்.
அப்போது அவர்களி டம் ஒருவர் அறிமுகமாகி தான் தேவஸ்தான ஊழி யர் என்றும், நபருக்கு ரூ.500 கொடுத்தால் ஏழு மலையானை உடனடி யாக தரிசிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதை நம்பிய கல்லூரி மாணவர்கள் 3 பேரும் ஆளுக்கு ரூ.500 வீதம் ரூ.1500 கொடுத்தனர்.
உடனே அவர் வைகுண் டம் வரிசையில் அனுப்பி உள்ளே ரமணா என்ப வர் இருப்பார் அவர் உங் களை மூலவர் அருகே அழைத்துச் செல்வார் எனக் கூறி நழுவினார்.
ஆனால் அனுமதிச் சீட்டு இல்லாததால் அவர் களை தரிசனத்துக்கு ஊழி யர்கள் அனுமதிக்க வில்லை. ரமணாவை தேடியபோது அப்படி ஒருவர் அங்கு இல்லை என்பதும் தாங்கள் ஏமாற் றப்பட்டோம் என்பதை யும் அவர்கள் உணர்ந் தனர். பின்னர் தர்மதரி சன வரிசையில் நின்று ஏழுமலையானை தரி சித்து திரும்பினார்.
வெளியே வந்தபோது பாஸ்போர்ட் சென்டரில் தங்களை ஏமாற்றிய இடைத்தரகர் நிற்பதை கண்டனர். உடனடியாக 3 பேரும் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப் படைத்தனர்.
விசாரணையில் அவ ரது பெயர் பனிக்குமார் (32) என்பதும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பனிக் குமாரை காவல்துறையி னர் கைது செய்தனர்.
Read more: http://viduthalai.in/page-8/98394.html#ixzz3VD58PX5S
இலங்கைமீது பன்னாட்டு விசாரணை: 15 மொழிகளில் கையொப்ப இயக்கம்! அமெரிக்காவில் தொடங்கப்பட்டது!
நியூயார்க், மார்ச் 23_ இலங்கை தமிழினப் படு கொலை குறித்து பன் னாட்டு நீதிமன்றம் விசா ரணை நடத்தக்கோரி அமெரிக்காவில், 15 மொழி களில் கையொப்ப இயக் கம் தொடங்கப்பட்டது.
இலங்கையில் தமிழர் களுக்கு எதிராக அந் நாட்டு அரசாங்கம் செய்த போர்க் குற்றங்கள், இனப் படுகொலை, மனிதாபிமா னத்துக்கு எதிரான குற் றங்கள் ஆகியவற்றுக்காக இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசா ரணைக்கு உட்படுத்த அய்.நா. சபையை வலி யுறுத்தும் வகையில் அமெ ரிக்காவில் கையொப்பப் பிரச்சாரம் தொடங்கப் பட்டுள்ளது.
15 மொழி களில் 10 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற வகை செய்யும் இந்த மாபெரும் பிரச்சாரத்தை அமெரிக் காவின் முன்னாள் அட் டர்னி ஜெனரல் ராம் கிளார்க், நியூயார்க் நகரில் உள்ள அய்.நா.சபை தலைமை அலுவலகத் துக்கு வெளியே தொடங்கி வைத்தார். தமிழர்களின் துயரம் முடிவுக்கு வரவேண்டும்.
தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று குறிப்பிட்டு தனது கையொப் பத்தை பதிவு செய்து அவர் முறைப்படி பிரச் சாரத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழ் தேசிய கீதத்துடன் இந்த பிரச்சார நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நிவேதா ஜெய குமார், சவுமியா கருணா கரன் ஆகியார் பிரச்சார மனுவை தமிழிலும், ஆங் கிலத்திலும் வாசித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன், இனப்படு கொலை, போர்க்குற்றங் கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், இன வெறி ஆகியவற்றிலிருந்து தனது குடிமக்களை பாது காப்பதில் ஒரு நாடு வெளிப்படையாக தோல் வியடையும்போது அந்த மக்களை பாதுகாப்பதற் காக அதில் தலையிடுவது உலக சமுதாயத்தின் கடமை.
இந்த கையொப் பப் பிரச்சாரம் அய்.நா. சபைக்கு எதிரானது அல்ல. இது மக்கள் நலன் சார்ந்த பிரச்சாரம் ஆகும் என்று குறிப்பிட்டார் 15 மொழிகளில் கையொப்பப் பிரச்சார மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, உருது, அரபு, மலாய் உள்பட 15 மொழி களில் கையொப்பம் பெறு வதற்காக தனி இணைய தளமும் (www.tgte-ice) உரு வாக்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழ் ஈழம் அமைப்பு தெரிவித்துள் ளது.
Read more: http://viduthalai.in/page-8/98395.html#ixzz3VD5I4Tzn
கனவு வியாபாரியின் மாயாஜால திட்டம்
இந்தியா போன்ற ஏழை நாடுகளில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனக்கென்று சொந்தமாக வீடு ஒன்று இருக்கவேண்டும் என்பது நியாயமான ஒன்றுதான். மோடி ஆட்சிக்கு வருவதற்கு மக்களை ஏமாற்ற பல்வேறு மாயாஜால திட்டங்களை அறிவித்தார். முக்கியமாக நாட்டில் உள்ள 89 விழுக்காடு நடுத்தர குடிமக்களை எப்படி மடக்குவது என்ற திட்டத்தில் ஒன்று தான் கனவு இல்லத்திட்டம்.
தான் பிரதமர் ஆனதும் இந்த திட்டத்தை அறிவித்தார். மேடைகளில் பேசும் போது கைதேர்ந்த இந்தி திரைப்பட நடிகர் போல் கைகளை வீசி குரலை உயர்த்தி தாழ்த்தி நான் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன், எனக்குத்தெரியும் ஏழை ஒருவனின் வீட்டுக் கனவுபற்றி ஆகவே நான் அனைவருக்கும் வீடு என்ற கனவை நான் நிறைவுசெய்வேன் என்றெல்லாம் கூறியிருந்தார்.
என்னவோ மக்கள் அனைவரும் அவர் கனவில் தோன்றி இந்தியாவில் இருக்கும் அனைவருக்கு நீயே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தொனியில் ஆவேசம் வந்து ஊர்த் திரு விழாவில் அறிவிப்பாளன் தமுக்கடித்து அறிவிப்பது போலபேசுவார். தொலைக் காட்சியில் அவ்ர் பேசும் போது கேட்ப வர்களுக்கு எழுந்து நின்று கைதட்ட வேண்டும் போலிருக்கும்.
இந்தியாவில் இந்தியர் அனைவருக்கும் வீடு.. கனவு இல்லம் என்பது மோடியின் கனவு என்று நம் தொலைக்காட்சிகளும் பத்திரி கைகளும் சொல்லிக்கொண்டே இருந்தன. இதில் வேறு, 2022க்குள் இத்திட்டம் நிறைவேறி விடும். 2022 இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுவிழாவைக் கொண்டாடும் போது இந்த சாதனை களும் சேர்ந்து மாபெரும் சாதனையாக கொண்டாடப்படும் என்று காலம் நேரம் நாள் குறித்துவிட்டார்கள்.
இதுவும் கேட்பதற்கு காதுகளில் பாலாறும் தேனாறும் ஓடுவது போல் வேண்டு மென்று தெரியும் இத்திட்டம் சாத்தியப் படும் என்று அவர்களின் கையாள் களான பிரபலபொருளாதார நிபு ணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரை பேசவைத்தனர்HOUSING AND URBAN INFRASTRUCTURE CORPN.
தலைவர் சுரேஷ் இத்திட்டத்தின் சாத்தியக் கூறுகளைப் பற்றி விளக்கமாக பேசினார். எழுதினார். எப்படி? போக்குவரத்து, சாலைவசதி. நிலம் கையகப்படுத்துவதில் இருக்கும் சட்டங்களை எளிமைப்படுத் துதல், கட்டடம் கட்டுவதற்கான கச்சாப்பொருட்கள் குறைந்த விலையில் எளிதாக கிடைக்க ஏற்பாடு செய்தல்.. இத்துடன் கட்டிய வீடுகளை வாங்குவ தற்கு எளிதில் கடன் வசதி செய்து கொடுக்கும் திட்டங்கள்.இன்னபிற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டால் "கனவு இல்லம்"சாத்தியப்படும் என்று எழுதினார்.
இத்திட்டத்திற்கு நம் பட்ஜெட்டில் அருண்ஜெட்லி ஒதுக்கி இருக்கும் தொகை ரூபாய் 22,407 கோடி. இதில் அவர்கள் 60 மில்லியன் வீடுகளை 2020க்குள் கட்டியாக வேண்டும்.அதில் 40 மில்லியன் வீடுகள் கிராமப்புறங் களிலும் 20 மில்லியன் வீடுகள் நகரப்புறங்களிலும் கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
அகமதாபாத் மறுசீரமைப்பு திட்டத் தில் அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரூ 45,000 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ 30,000 கோடி சாலை வசதி, தண்ணீர் வசதி என்ற அடிப்படை வசதிகளுக்கே தேவைப்பட்ட்து என்று சொல்கிறது குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் நகர சீரமைப்பு திட்டத்திற்கு இவ்வளவு தொகை ஒதுக்கப்ப்ட்டதை அந்த மாநிலத்தில் அப்போது முதல்வராக இருந்த மோடி அவர்கள் நன்றாக அறிவார்.
அப்படியானல் பட்ஜெட் ஒதுக்கி இருக்கும் இந்த 22,407 கோடி போதுமா? சரி.. அப்படியே போதும் என்று கற்பனை செய்து கொண்டாலும் இத்திட்டங்களை நிறைவேற்ற,வீடு கட்ட முதலில் தேவை நிலம். எங்கே, எவ்வளவு நிலம் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக் கிறது? தனியார் நிலங்களா, அரசு நிலங்களா?
இத்திட்டத்தை இந்தியா முழுமைக் கும் செயல்படுத்த வேண்டும் என்றால் இத்திட்டத்தில் மாநிலங்களின் பங்கு என்ன? இன்னும் 5 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றால் வருகின்ற நிதியாண்டில் இத்திட்டம் தொடங்கப்பட வேண்டும்., இத்திட்டத் திற்கான வரைபடம் எங்கே? ஏற்கனவே இதேமாதிரி திட்டங்கள் வெவ்வேறு பெயர்க்ளில் இந்தியா நடுவண் அரசால் அறிவிக்கப்பட்டன.
Jawaharlal Nehru National Urban Renewal Mission: Basic Services to the Urban Poor (BSUP) & Integrated Housing & Slum Development Programme
(IHSDP)
• Swarna Jayanti Shahari Rozgar Yojana (SJSRY)
• Affordable Housing in Partnership (AHIP)
• Interest Subsidy Scheme for Housing the Urban Poor (ISHUP)
• Integrated Low Cost Sanitation Scheme (ILCS)
• Projects/ Schemes for the Development of North Eastern States, including Sikkim Vision of Slum Free India: Launch
இவை எல்லாம் என்னவானது? மோடியின் கனவு இல்லம், கூரைகளுடன் செங்கல் சிமிண்டால் கட்டப்படும் என்பது எந்தளவுக்கு சாத்தியப்படும்?
முன்பெல்லாம் தனி நபர்கள் மட்டும் தான் கனவு கண்டார்கள். இப்போதெல் லாம் இந்திய அரசும் கனவு காண ஆரம் பித்துவிட்டது. தனி நபர் கனவு அந்தக் கனவு கண்ட நபரை மட்டும் தான் பாதிக்கும்.
ஆனால் ஓர் அரசே கனவு கண்டால்..?
Read more: http://viduthalai.in/page8/98244.html#ixzz3VD5c8sdF
பலே பலே - பிழைக்கத் தெரிந்த பார்ப்பனர்கள்!
பார்ப்பனப் புரோகிதனை இணையத்தின் மூலம் வீட்டிற்கு வரவழைக்கும் புதுவித பித்தலாட்டம்
திருமணம், கிரகப்பிரவேஷம் மற்றும் திதி போன்ற பல்வேறு காரியங் களுக்கு இனிமேல் இணையத்தின் மூலமே பார்ப்பனப் புரோகிதனைப் பதிவு செய்து விட்டிற்கு வரவழைக்க லாம். அறிவியல் உபகரணங்களை எந்த அளவிற்கு ஏளனம் செய்யவேண்டு மென்பதற்கு இந்திய பார்ப்பனர்களைப் போல் வேறு யாரும் கிடையாது.
அயல்நாடுகளில் வாழும் பார்ப்பனர்கள் தங்களின் திருமணத்திற்கு இந்தியாவில் இருந்து பார்ப்பனப் புரோகிதர்களை வரவழைத்து மந்திரம் ஓதுவதற்கு செலவு அதிகமாவதால் காணொளி இணையதளம் மூலம் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மூலையில் கணினி முன்பு அமர்ந்து புரியாத மொழியில் மந்திரம் ஓத அங்கே பார்ப்பனர்கள் மட்டுமல்லாது படித்து அயல்நாடு சென்று வேலைபார்க்கும் பார்ப்பன அடிமைகளும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கியது.
இதற்கு ஆங்காங்கே வரவேற்பு கிடைத்தாலும் பார்ப்பனர்களின் பேராசை யாரைவிட்டது? கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த பார்ப்பன புரோகிதர் மாநாட்டில் ஆன்லைனில் மந்திரம் ஓதுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சாஸ்திரப்படி பார்ப்பனப் புரோகிதர்கள் நேரடியாக இருந்து மந்திரம் ஓதினால் தான் எந்த ஒரு காரியமும் முழுமைபெறும் என்று யாரோ ஒரு பேராசைப் பார்ப்பான் கிளப்பிவிட்டான்.
இந்த அய்டியாவில் உதித்தது தான் பார்ப்பனப் புரோகிதர் டாட் காம்.
எதிலும் காசுபார்க்கும் பிரபல பலசரக்கு இணையதளம் ஒன்று இந்த பார்ப்பனபுரோகிதர் இணையதளத்தை வாங்கிவிட்டது.
இப்போது பூசைக்குரிய சாமான்கள் வாங்கும் போதே பார்ப்பனப் புரோகிதரையும் பதிவு செய்யலாம். ஒவ்வோரு பார்ப்பனப் புரோகிதர் புகைப்படத்துடன் அவரது கல்வி மற்றும் அவர் செய்து வைத்த பல்வேறு திருமணங்கள் கிரகப்பிரவேஷ நிகழ்ச்சிகள் இணைத்திருக்கும் இதைப் பார்ப்பவர்கள் தங்களுக்குத் தேவை யான பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமாம்.
சமீபத்தில் ஆன்லைனில் பூசைப் பொருள் விற்கும் இணையதளம் ஒன்றின் மீது பழனிக் கோவில், திருப்பதி மற்றும் மதுரை மீனாட்சி கோவில் நிர்வாகம் பிரசாதம் மற்றும் பூசை சாமான்கள் என்ற பெயரில் போலியான பொருட்களைத் தயாரித்து இந்தியாவில் மட்டுமல்லாது அயல் நாட்டிலுள்ள இந்துபக்தர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்று கூறி வழக்கு தொடர்ந்தது.
தற்போது திடீரென பார்ப்பனப் புரோகிதனை இணையத் தில் தேடி வீட்டிற்கு வரவழைக்கும் புதுவித பித்தலாட்டம் துவங்கியுள்ளது.
Read more: http://viduthalai.in/page7/98233.html#ixzz3VD5osAu2
சிங்கப்பூர் மேனாள் அதிபர்
லீக்வான்யூ மறைவிலும் பாடம் போதிக்கப்படுகிறது!
சிங்கப்பூர் என்ற மிகச் சிறிய நாட்டின், பணியாற்றும் - பண் பாடு (கலாச்சாரம்) எப்படிப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுவோம்.
அந்நாட்டின் உயர்வுக்கும் - வளர்ச்சிக்கும் புத்தாக்கத்திற்கும் காரணமாக அமைந்த அந்நாட் டின் தந்தை என்று அனைவ ராலும் மதிக்கப்படும் லீக்வான்யூ அவர்கள் நேற்று மறைந்துவிட்ட நிலையில், சிங்கை அரசு சார்பாக ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
அவரது உடல் வரும் 29.3.2015 ஞாயிறுதான் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.
ஒருநாள்கூட அரசு விடுமுறையோ, நிறுவனங்கள் மூடுதலோ இல்லை.
தலைவர்கள் மறைந்தால் துக்கம் அனுசரிக்க வழக்கமான வேலையை நிறுத்தாமல், பணியாற்றுவதே அவர்களது லட்சியங்களுக்கு ஏற்ப நடந்து காட்டும் முறை என்று உலகுக்குக் காட்டுகிறது சிங்கப்பூர். (ஏற்கெனவே ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலும் சில நடைமுறைகள் நிகழ்ந்துள்ளன)
மாறாக நமது ஞான பூமியின் இம்மாதம் அடுத்த மாதம் துவக்கத்தில் உள்ள அரசு விடுமுறைப் பட்டி யலைப் பாரீர்!
மார்ச் 28 - ராமநவமி விடுமுறை
மார்ச் 29 - ஞாயிறு (வார) விடுமுறை
மார்ச் 30&31 - (வங்கிகள் திறந்திருக்கும்)
ஏப்ரல் 1 - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு விடுமுறை
ஏப்ரல் 2 - மகாவீர் ஜெயந்தி விடுமுறை
ஏப்ரல் 3 - புனித வெள்ளிக்கிழமை விடுமுறை
ஏப்ரல் 4 - சனி (அரைநாள்) விடுமுறை
ஏப்ரல் 5 - வார (முழு நாள்) விடுமுறை
ஆறு நாள்களுக்கு தொடர் விடுமுறை; இந்த நாடும் பொருளாதாரமும் எப்படி வளரும்?
அந்தந்த மதத்தவர் அவரவர் தனியே விருப்ப விடுமுறை எடுத்துக் கொள்ளலாமே!
உலகிலேயே அதிகமான அரசு விடுமுறை நாள்கள் இந்தியத் திரு நாட்டில்தான்! லீக்யூவான் மறைவை பணி செய்தே துக்கம் அனுசரிக்கும் எடுத்துக்காட்டு எவ்வளவு பின்பற்றத் தக்கது என்று நாம் உணர வேண்டும்.
லீக்வான்யூ அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி - கடவுள் பற்றிக் கவலைப்படாத (Agnostic) அவர் ஆத்மாவில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று ஓங்கி அடித்துச் சொன்னவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: http://viduthalai.in/e-paper/98445.html#ixzz3VIqUYOiM
எனது கருத்து
மனிதன் தன் வாழ் நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து.
(விடுதலை, 3.2.1969)
Read more: http://viduthalai.in/page-2/98419.html#ixzz3VIsF1FCd
காடுகள் பாதுகாப்பும் - வீடுகளின் பாதுகாப்பும்!
உலகில் நாடுகளும் மக்களும் நீண்ட நாள் நலவாழ்வு வாழ வேண்டுமானால் காடுகள் பாதுகாக் கப்பட்டாக வேண்டும். எந்த நாட்டில் காடுகள் அழிக்கப்படாமல் மிகவும் கவனத்துடன் பாதுகாக்கப்படுகின் றனவோ அந்நாட்டில்தான், பொருளா தார வளம் மட்டுமல்ல, நீண்ட ஆயுளைக் கொண்ட மக்களையும்கூடக் காண முடியும்.
வறட்சி ஏற்படாமல் விரட்டிட, மழை மிக முக்கியமல்லவா?
வானம் பொய்த்து விட்டது; மக்களுக்கு, மழை இல்லாததால் பயிர்கள் வளரவில்லை; நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் - காணாமலேயே போய் விட்டது, என்றெல்லாம் கூறுவ தற்கு அடிப்படைக் காரணம் காடுகளை அழித்து, மரங்களை வெட்டி, சூறை யாடி மனிதர்கள் பண அதிபர்கள் ஆகத் துடித்ததின் விளைவுதான்!
பயிர்கள் வளருவதுகூட பிறகு; உயிர்களுக்குக் குடிக்கவும்கூட குடிநீர் கிட்டவில்லையே!
ஒரு காலத்தில் வற்றாத ஜீவ நதியாக ஆறுகள் ஓடின. சிற்றோடை களும், மற்ற நீர் நிலைகளும் திரும்பும் பக்கமெல்லாம் வளமையை வாரித் தெளித்த வண்ணம் இருந்தன!
இன்றோ ஒரு போத்தல் தண்ணீர் ரூபாய் 16 முதல் 20 வரை வாங்கிக் குடிக்கும் அவலம் மலிந்து விட்டதே!
பற்பல ஊர்களில், நேரங்களில் ஒரு லிட்டர் பாலின் விலையைவிட அதிகமாக ஒரு லிட்டர் தண்ணீர் விலை உள்ளது என்பது மிகவும் வேடிக்கையும் வேதனை யும் தரவில்லையா?
இதற்கு மூல காரணம் என்ன? காடுகள்அழிக்கப்படுவதால், மரங்கள் வெட்டிக் கொள்ளையடிக்கப்படுவதால் தான்!
மழை வேண்டி யாகம் செய்யும் சில புத்திசாலிகள் - யாகத்திற்கென மரத்தை வெட்டிக் கொண்டு வந்து போட்டு யாகம் செய்யும் வேடிக்கையும் விசித்திரமும் மலிவு இங்கே!
காடுகள் ஒரு நாட்டின் இயற்கைச் செல்வம், அவை பற்பல காரணங்களால் சூறையாடப்பட்டதன் விளைவுதான் நவீன உலகில் புவி வெப்பம் (Global Warming) உயர்ந்து, பருவ மழை பொய்த்து, மக்களுக்கு நோய்கள் ஏராளம் பரவும் அபாயமும் ஓங்கி வருகின்றது!
காடுகளை அழித்து பலர் வீடுகள் கட்டுகின்றனர்! அமெரிக்கா போன்ற நாடுகளில் காடுகள் போன்ற மரங்கள் சூழ்ந்த மண்ணின் நடுவில் வீடுகளை கட்டி, ஏராளமான உயிர்க் காற்றினை (Oxygen) சுவாசித்து ஆயுள் பெருக்கி வாழுகின்ற முறை உண்டு.
காடுகளை அழித்து வருவதால், காட்டு மிருகங்கள் யானை, புலி, சிறுத்தைகள், ஊர்களுக்குள் வந்து மக்களை அடித்துக் கொல்லும் அவலம் தமிழ்நாட்டிலேயே பற்பல ஊர்களில் அன்றாட அவலங் களாக நிகழ்கின்றனவே! காடுகளை அழிப்பதின் தீய விளைவே இது! இன்று ஒரு நாளேட்டில் ஒரு வாசகர் எழுதியுள்ளார்.
ஒரு மனிதனுக்கு தினசரி மூன்று சிலிண்டர் ஆக்சிஜன் (Oxygen) உயிர் காற்று தேவை; ஒரு சிலிண்டர் 700 ரூபாய்; மூன்று சிலிண்டர் விலை ரூ.2100 ஆகும்.
இப்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதைப் போலவே இனி காற்றையும் காசு கொடுத்து வாங்கும் கொடுமை (இப்போதே சில வணிக நிறுவனங்கள் நுழைந்து விட் டன) விரைவில் வந்துவிடக் கூடும்.
மூங்கில் காடுகளை வளர்க்க வாய்ப்பு இருக்கும் இடங்களில், அவை சிறிய இடங்களாக இருப் பினும் வளருங்கள். ஏராளம் பிராண வாயு இதன் மூலம் கிடைக்கும்.
எனவே காடுகளை பாதுகாப்போம் அதன் மூலம் நம் வீடுகளை - வீட்டில் வாழும் உயிர்களையும் பாது காப்போம்!
ஏதோ காடுதானே என்று அழிக்காதீர்கள்! மேழிச் செல்வம் போலவே, காடுகளும் நாம் பாதுகாக்க வேண்டிய நிரந்தரச் செல்வம் ஆகும். உயிர் காக்கும் தோழர்கள் நம் மரங்களும், காடுகளும் என்பதை மறவாதீர்!
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
Read more: http://viduthalai.in/page-2/98423.html#ixzz3VIsPUpTk
தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே!
பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உடல் மற்றும் மனநலம் குறித்த பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 13 வயதில் பெண்கள், சுய சுகாதாரம், ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி (விளையாட்டு) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 13 வயது முதல் 18வயது வரையுள்ள பெண் குழந்தைகளை மிகவும் பக்குவமாக கையாள வேண்டும்.
இந்த வயதில் மிகக்குறைந்த அல்லது அதிக உடல்எடை, பிறப்புறுப்பு பிரச்சினைகள், சிறுநீரக பாதை கோளாறுகள், பூப்படைதலில் கோளாறுகள் என பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த வயதில் சமூகத்தில் பெண்ணுக்குள்ள முக்கியத்துவத்தை உணர்த்தி ஆணுக்கு பெண், நிகரானவள் என்பதை உணர்த்த வேண்டும்.
மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் காலம் என்பதால் பெற்றோர் குழப்பத்தில் இருப்பார்கள். பூப்படைந்தது முதல் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மாதவிடாய் சுழற்சி இருக்காது என்பதை நாம் உணரவேண்டும். 19 வயது முதல் 39 வயது வரை திருமணம் மற்றும் குழந்தை பேறு உட்பட வாழ்வின் முக்கிய திருப்பங்கள் நடக்கும் காலகட்டமாகும்.
இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரிக்க திட்டமிட்ட 3மாதங்களுக்கு முன்பாகவே விட்டமின் மருந்தை, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உண்ண வேண்டும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியம். மகப்பேறு காலத்தில் உரிய பயிற்சி பெற்ற மருத்துவரிடம் காண்பித்து, பிரச்சினைகளை ஆரம்பநிலையில் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.
40 முதல் 65 வயதுக்குட்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள், மாதவிடாய் சுழற்சி நிற்கும் தறுவாயில் இருப்பதால் உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். அதை உணர்ந்து உணவு கட்டுப்பாடு, அதிக சர்க்கரை தவிர்ப்பு, உணவில் சோயா மற்றும் கால்சியம், உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். 65 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு குடும்பத்தினரின் துணை மிகவும் அவசியம்.
புற்று நோய்க்கான அபாயம் அதிகம் இருக்கும் காலம் இது. எனவே கருப்பை சம்பந்தமான சிறிய சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டு, பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தன்வாழ்வின்பெரும் பகுதியை குடும்பத்திற்காக செலவிடும் பெண்ணின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது.
எந்த குடும்பத்தில் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைத் திருக்கும் என்பது மட்டும் உண்மை.
Read more: http://viduthalai.in/page-7/98443.html#ixzz3VIu8doNJ
பெண்களுக்கான உடற்பயிற்சிகள் என்னென்ன?
பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம்.
1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.
2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.
3) யோகாசன பயிற்சிகள்.
4) ஸ்கிப்பிங் பயிற்சி
இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க இவற்றை செய்யலாம். ஆனோரோபிக் வகை உடற்பயிற்சி என்பது விளையாட்டுத் தனமாகவே இருக்கும். இதனை உடற்பயிற்சி செய்கிறோம் என்கிற உணர் வில்லாமல் விளையாட்டாக செய்யலாம்.
கைகள் வலுபெற: சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
இடுப்பு வனப்பு பெற: இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக்ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.
தோள்பட்டை...: பெண்களின் தோள்பட்டை அவரவர் களின் தலை அமைப்பு, உடல்வாகு, இடுப்பின் அளவு போன்றவற்றை பொறுத்து அமைந்திருக்க வேண்டும். தோள்பட்டை அகலமாக இருந்து தலை சிறுத்திருந்தால் நன்றாக இருக்காது. தலையும், இடுப்பும் வனப்பாக இருந்து, தோள்பட்டை வனப்பாக இல்லை என்றால் அழகு வராது.
பாதம் உறுதி பெற: குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெட் மில் பயிற்சியினையும், மெல்லிய நடைப் பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்.
Read more: http://viduthalai.in/page-7/98446.html#ixzz3VIuJK2OU
முல்லைவேந்தன் உரை
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் உரையாற்றும்பொழுது, கல்விக் கூடத்திலே தந்தை பெரியார் பெயரில் அரங்கம் அமைத்த நமது முனைவர் இராஜேந்திரன் அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அந்த அரங்கத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திறந்து வைப்பது என்பது பொருத்தமான ஒன்றாகும்.
தந்தை பெரியாருக்குக்கூட சிலை வைக்கக்கூடாது என சிறுமதி கூட்டத்தினரும் இன்று இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களை நான் கேட்கிறேன், அரசுக்குச் சொந்தமான இடத்தில், நெடுஞ் சாலையோரங்களில் எல்லாம் பூசணிக்காய் போன்ற கண்ணை வைத்து,கத்தியைக் கொடுத்து விழிபிதுங்க காளி என்றும், மாயி என்றும்,
முனியப்பன் என்றும் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சிலையை வைத்திருக்கிறார்களே, இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது; அவ்வளவு ஏன், ஓமந்தூரார் தோட்டத்திலேயே இன்றைய ஆட்சியாளர் கள் கோவிலைக் கட்டி வைத்துக்கொண்டு, கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட சட்டமன்றத்தையே இடிக்கிறார் களே இவற்றை யார் கேட்பது?
அரசு இடத்தில் கோவில் கட்டலாம்; ஆனால், சொந்த இடத்தில்கூட பெரியாருக்கோ, தீரன் சின்னமலை போன்ற வர்களுக்கோ இந்த நாட்டில் சிலை வைக்க முடியவில்லை. வெங்கடசமுத்திரத்தில் பெரியாரோடு வாழ்ந்த வி.ஆர்.வேங் கன் அவர்களுடைய சொந்த இடத்தில் சிலை வைக்கத் தடை போடுகிறார்கள்.
இங்கே பெரியார் அரங்கு என்று மட்டும் ஏற் படுத்திவிட்டால், போதாது. அது பகுத்தறிவுப் பாடங் களைச் சொல்லிக் கொடுக் கும் அரங்கமாகவும் இருக்க வேண்டும்; மாணவர் களுக்கு அறிவு வெளிச்சத் தைக் காட்டவேண்டும். மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்க ஆசிரி யர்கள் நல்ல சிந்தனையா ளர்களாக பகுத்தறிவாளர் களாக இருக்கவேண்டும்.
வீடு கட்டும்போது பூஜை அறை கட்டுவதை விட்டு விட்டு, படிப்பகம் கட்ட வேண்டும்; ஒரு பெண் நினைத்தால் தன் குழந்தை களை நல்ல பகுத்தறிவாளர் களாக ஆக்க முடியும். பகுத்தறிவு பரவ அகிலா எழிலரசனைப்போல வீட் டுக்கு ஒரு வீராங்கனை இருக்கவேண்டும்.
ஆசிரியர்கள் பெரி யாரை கற்கவேண்டும். அண்ணாவைப்பற்றி படிக்கவேண்டும். மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியை மட்டும் சொல்லிக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், பகுத்தறிவுப் பாடங்களைப் புகட்டுங்கள். மாணவர்கள் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்கும் நிலைக்கு மாறவேண்டும்.
பெரியாரின் கொள்கையை 100-க்கு 25 பேர் புரிந்து கொண்டு செயல்பட்டால்கூட, தமிழகத்தில் பெரிய மாற்றம் நிகழும். மாதாமாதம் பகுத்தறிவுப் பாசறை கற்கும் இடமாக இந்த அரங்கம் இருக்கவேண்டும்.
பட்டங்கள், பதவிகள், ஆட்சி அதிகாரங்கள் இருந் தாலும், இல்லாவிட்டாலும் கருப்புச் சட்டைக்குச் சொந்தக் காரனாக என்றைக்கும் இருப்பேன் என்று உரையாற்றினார்.
Read more: http://viduthalai.in/page-8/98458.html#ixzz3VIuzrccG
24-03-2015
நேருவும்- பசுவும்!
இந்தக் கோமாதாவை வைத்துக்கொண்டு இந்த இந்துத்துவாவாதிகள் மார டிப்பது, அரசியலாக்குவது என்பது - நேரு அவர்கள் காலத்திலேயே தொடங்கப் பட்டு விட்டது.
1952 முதல் பொதுத் தேர்தலில் பண்டிட் ஜவகர் லால் நேரு அலகாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் ராம ராஜ்ய பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஷம்பூ நாராயண் என்பவர்.
தம்மை எதிர்த்துக் காங் கிரஸ் சார்பில் போட்டியிட்ட நேருவிடம், அவர் ஒரு கேள்வியைக் கேட்டார். உங்களுக்குப் பசுவின்மீது நேசம் இல்லையா? என்று நேருக்கு நேர் நேருவிடமே கேட்டார்.
கேள்வி வந்த அடுத்த நொடியே பொட்டில் அடித் ததுபோல நேரு பதில் சொன் னார், பசுவை மட்டுமல்ல; குதிரைகளையும் கூட நான் நேசிக்கிறேன்! என்று போட் டாரே ஒரு போடு! அவ் வளவுதான் ஆசாமி வாய டைத்து நின்றார்.
உயிர்களை நேசிப்பது என்கிற காரணத்துக்காக மனிதன் மாமிச உணவைச் சாப்பிடக்கூடாதா? காய்கறி களைக்கூடத்தான் வளர்க் கிறார்கள்; (கவனிக்கவேண் டும் வளர்க்கிறார்கள்) அவை யும் பிராண வாயுவை உட் கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகின்றன. அவற் றிற்கும் உயிர் இருக்கத்தான் செய்கிறது. அதனால் காய் கறிகளைச் சாப்பிட மறுப்பார் உண்டா?
உயிர்களை வதை செய் யக்கூடாது என்று சொல்லு வதைக்கூடப் புரிந்துகொள் ளலாம்; உயிர்களில் பசுவைத் தவிர மற்றவற்றைக் கொல் லலாம் என்பது எந்தவூர் ஜீவகாரூண்யம்?
ஒரு காலகட்டத்தில் இந்தப் பார்ப்பனர்கள் பசுக் களை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி பசு மாமிசம் தின்று கொழுத்தவர்கள்தான். இடைக்காலத்தில்தான் இவர் களிடம் மாற்றம் ஏற்பட்டது. இதனை வரலாற்று ஆசிரிய ரான இராகுல சாங்கிருத்தி யாயன் எழுதியுள்ளார்.
பிராமணர்கள் பவுத்தர் களைத் தங்களது பலமான விரோதிகள் என்று கருது கிறார்கள். எல்லா நாட்டிலும் உள்ள பவுத்தர்கள் பசு மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்துக்காகவே பசு மாமிசம் தடை செய் யப்பட்டது என்றும், பசு வையும், பிராமணர்களையும் காப்பாற்றுவது தர்மம் என்றும் பிராமணர்கள் பிரச் சாரம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிறார். (நூல்: வால்கா முதல் கங்கை வரை, பக்கம் 76).
இந்த வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், கோமா தாவுக்குள் ஒளிந்திருக்கும் ஆரியப் பார்ப்பனர்களின் அரசியல் உள்நோக்கம் என்னவென்று எளிதில் விளங்கிவிடும் அல்லவா! - மயிலாடன் 25-3-2015
இன்றைய ஆன்மிகம்?
என்ன ஆனந்தம்?
ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்!
- காஞ்சி சங்கராச்சாரியார் (மறைந்த) சந்திரசேகரேந்திர சரஸ்வதி
அப்படியா?
ராமன் சரயு நதியில் விழுந்து தற்கொலை யல்லவா செய்துகொண் டான் - ஆகா, என்ன ஆனந்தம்!
Read more: http://viduthalai.in/e-paper/98503.html#ixzz3VOduT5Va
அனுமதியோம்!
செய்தி: பயங்கரவாதம் இல் லாத சூழலை பாகிஸ்தான் உருவாக்கவேண்டும்.
-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
சிந்தனை: ஆமாம், இந்தி யாவுக்குள் அத்தகைய வாதங்களை நடத்த எங் களுக்கு மட்டுமே பிரத்தி யேக உரிமை உண்டு - அதை யாரும் தட்டிப் பறிக்க அனுமதியோம்!
Read more: http://viduthalai.in/e-paper/98506.html#ixzz3VOe4ZXbd
சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்துப் பதிவுக்கு கைது செய்யும் சட்டப் பிரிவு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
புதுடில்லி, மார்ச் 25_ சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்து களைப் பதிவு செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66-அ பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிர டித் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2012-ஆம் ஆண்டு, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே காலமான போது, மகாராஷ்டிரத்தில் கடையடைப்பு நடத்தப்பட் டதை விமர்சித்து முகநூல் பக்கத்தில் கருத்து வெளி யிட்ட இளம்பெண்ணை அந்த மாநில காவல்துறை யினர் கைது செய்தனர். அந்த கருத்தை முகநூல் பக்கத்தில் ஆதரித்த (லைக்) மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். அதேபோல, சமாஜ் வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கானை விமர்சித்து முகநூலில் கருத்து வெளியிட்டதாகக் கூறி பள்ளி மாணவர் ஒருவரைக் கடந்த 18-ஆம் தேதி உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கை களுக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இத்தகைய கைது நடவடிக் கைகளுக்கு எதிராக, ஷ்ரேயா சிங்கால் என்ற சட்டக் கல்லூரி மாணவி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடுத்தார்.
சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் ஆட் சேபகரமான விமர்சனங் கள், கருத்துகளை அடிப் படையாகக் கொண்டு, ஒருவரைக் கைது செய்ய வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66-அ பிரிவில் திருத் தம் கொண்டு வரவேண்டும் என்று அவரது மனு வில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. மேலும், இந்தச் சட்டப் பிரிவானது தவறான வகை யில் பயன்படுத்தப்படுவ தாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. சமூக வலை தளப் பக்கங்களில் ஆட் சேபகரமான கருத்துகளை பதிவு செய்யும் நபர்களை, காவல்துறைத் தலைவர் அல்லது அய்.ஜி-யிடம் உரிய அனுமதி பெறாமல் கைது செய்யக் கூடாது என்று அப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனா லும்கூட, உச்சநீதிமன்றத் தின் உத்தரவை மீறி, அரசியல் தலைவர்களை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந் தது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பக் குற்றவியல் சட்டத்தின் 66-அ பிரிவை நீக்கக் கோரும் பொதுநல வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வரர், நாரிமன் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை வெளி யிட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கருத்துச் சுதந்திரம் என்பது மிகவும் அவசிய மான ஒன்று. தகவல்
தொழில்நுட்பக் குற்றங்களுக்கான சட்டத்தின் 66-அ பிரிவு மக்களின் கருத்து உரிமையை நேரடியாகப் பாதிக்கச் செய்கிறது. அரசமைப்புக்கு எதிரானது: இந்தச் சட்டப் பிரிவின் மூலம் பேச்சு, கருத்துச் சுதந்திரம் தொடர்பான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. 66-அ பிரிவின்கீழ் ஒருவரைக் கைது செய்வதற்குப் போதுமான ஷரத்துகள் அந்தச் சட்டப் பிரிவில் இடம் பெறவில்லை. இந்தச் சட்டப் பிரிவானது அரசமைப்புக்கு முரணான ஒன்று. சமூக வலைதளங்களில் ஆட்சேப கரமான கருத்து வெளியிட்டதாகக் கூறி பிரிட்டன் நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கில் நீதிபதிகளுக்கு இருவேறு நிலைப்பாடுகள் இருந்தன. ஒரே வழக்கில் நீதிபதிகளுக்கு இருவேறு நிலைப்பாடு இருக்கும்போது, அதை எவ்வாறு சட்டப்பூர்வமாக அமல்படுத்த முடியும்? சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள் ஒருவருக்கு ஆட்சேபகரமாகத் தோன்றலாம். அதுவே மற்றொருவருக்கு வேறு மாதிரியாகத் தோன்றலாம். மத்தியில் ஆட்சியமைப்பவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இதுபோன்ற சட்டப் பிரிவுகளானது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். மத்தியில் அடுத்து ஆட்சியமைப்பவர் கள் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவைத் தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு தற்போதுள்ள அரசு உறுதியளிக்க முடியாது. எனவே, இந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு கோரிக்கை முன்னதாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-அ பிரிவு மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டைக் குறிக்கும் பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 66-அ பிரிவைத் தவறாகப் பயன்படுத்தாத வகையில், முக்கியத் திருத்தங்களையும் வழி முறைகளையும் உருவாக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.
Read more: http://viduthalai.in/e-paper/98502.html#ixzz3VOeEcrSj
இணைய தளங்களில் கூறப்படும் கருத்துரிமைகளைப் பறிக்கும்
சட்டம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே!
தவறு இருந்தால் தண்டிக்க வேறு சட்டங்கள் உள்ளனவே!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைக்காதது ஏன்?
இணையதளங்களில் கூறப்படும் கருத்து களின் குரலை நெரிக்கும் மத்திய அரசின் 66ஏ பிரிவு சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை வரவேற்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இது தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி - அதையொட் டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!
அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!
இந்த விளைச்சலில் சில களைகளும் முளைப்பது தவிர்க்க இயலாததே!
ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங் களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.
அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.
தவறான பிரயோகங்கள்
ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.
இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை யான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள், தாங்கள் நேற்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!
உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை
இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்சநீதிமன்றம்.
இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதி ராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடா ளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.
தவறு இருந்தால் தண்டிக்க வேறு சட்டங்கள் உள்ளனவே!
தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.
எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக் கட்டுமானம் குலைக்கப்படாமல் - கருத்துச் சுதந்திரமே அது - காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
25.3.2015
Read more: http://viduthalai.in/e-paper/98500.html#ixzz3VOeYJjod
பரிகார முயற்சி
எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டில் ஒன்று காணவுமான காரியங்கள் நடைபெறும். - (குடிஅரசு, 4.10.1931)
மதுரையில் மகளிரணி சிறப்பு வழக்காடு மன்றம்
மதுரை, மார்ச் 25_ 15.03.2015 மாலை 6.00 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தன் சார் பாக 27_ஆவது நகழ்ச்சி யாக மகளிர் தன சறபபு வழக்காடு மன்றம் மாட் டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள செய்தயாளர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னர் கல்லுரி பேராசிரி யர் அ. ஜோதி தலைமை தாங்கினார். ந.சரோசா (மதுரை புறநகர் மாவட்ட தராவிடர் கழக மகளி ரணி தலைவர்), வே.சுசிலா (மதுரை புறநகர் மாவட்ட தராவிடர் கழக மகளி ரண செயலாளர்) மற்றும் மோ.புஷ்பலதா (மதுரை மாநகர தராவிடர் கழக மகளிரணி அமைப்பாளர்) ஆகியோ முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் சியமளா வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரி யர் க.அகலாகுமாரி (இராசா பொறயயல் கல்லூரி இணைப்புரை வழங்கனார். ''பெணகள் பாதுகாபபுச் சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது.'' என்ற வழக்கனைத் தொடுத்து மகேஸ்வரி (அக்ரி) (இணை ஆணையர் வணிகவரித் துறை) வழக்காடினார். அவரது வழககினை மறுத்து வழக்கறிஞர் இன்னிசை (சென்னை உயர்நீதிமன்றம்) எதிர் வழக்காடினார். இருதரப்பு வாதுரையைக் கேட்டு பெண்கள் பாதுகாபபுச் சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது என்று பேராசிரியர் ரேணுகா தேவி விரிவான விளளக் கத்தோடு தர்ப்பினை வழங்கனார். நகழ்ச்சியின் இடையே ''மம்மீ.......... எனககு ஒரு டவுட்டு'' என்ற நகழ்ச்சியை பெரியார் பிஞ்சு த.ஓவியா மற்றும் பா.வேல்விழி நடத்திக் காட்டினர். அந்நிகழ்ச்சி யில், 1) ''தருபபுகழைப்பாடப் பாட வாய்மணக்கும்'' என்று பாடுகிறார்களே அவர்கள் பல்துலக்க மாட்டார்களா? 2) ''தருநீறில் மருந்து இருக்கு தெரியுமா?'' என்கிறார் களே மருநது கடையில் அது விற்குமா? 3) ''சரஸ் வதியைக் கும்பட்டால் தான் படிபபு வரும்'' என்கிறீர்களே எங்கள் வகுப்பில் ராபர்ட் முதல் இடத்திலும், இஸ்மாயில் இரண்டாவது இடத்தி லும் இருக்கிறார்களே அவர்கள் சரஸ்வதியை கும்பிட்டார்களா?'' 4) ''பூஜைக்கு முன் கொழுக் கட்டையை தின்றால் சாமி கண்ணை குத்தி விடும் என்கிறீர்களே அந்த சாமியையே தருடிச் செல் கிறார்களே சாமி ஏன் அவர்கள் கண்ணை குத்த வில்லை?'' என்ற பகுத்தறிவு வினாக்களை பெரியார் பிஞ்சு த.ஓவியா சுவைபட எழுப்பிய போது அரங் கமே சிரிபபொலியால் அதிர்ந்தது. பார்வையா ளர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்தது. நகழ்ச்சியின் இறுதியில் பா.வேல்விழி நன்றியுரை ஆற்றனார்.
Read more: http://viduthalai.in/page-4/98484.html#ixzz3VOh1sBjK
மனிதத் தன்மை
மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)
மாற்றுத் திறனாளிகள் மீது
மனிதநேய அணுகுமுறை தேவை
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சென்னை விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 24ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கிறார்கள்.
மாற்றுத் திறனாளிகளைப் போராட வைப்பது என்பதே கருணையற்ற - மனித நேயமற்ற ஒன்று என்று எடுத்த எடுப்பிலேயே கூறிட வேண்டும். அவர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை - பார்வையற்றவர்கள் பிரச் சினையை அரசு திறந்த பார்வையுடன் பார்க்க வேண்டும்.
காது கேளாதோர் பிரச்சினையை அரசாங்கம் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பது இயற்கையின் பாற்பட்ட மனித நியதியாகும். அவர்களின் கோரிக்கைதான் என்ன?
மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற அரசு கடைப்பிடிக்கும் சட்ட விரோத விதிகளை ரத்து செய்க!
மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே அனைவருக்கும் உதவி தொகை வழங்கிடுக!
40 சதம் ஊனம் உள்ள அனைவருக்கும் உதவித் தொகை வழங்கிடுக!
காது கேளாதோர் உதவித் தொகை பெற 80 சதம் என்கிற பாரபட்சத்தை ரத்து செய்க!
உதவித் தொகை நிறுத்தப்பட்ட அனைவருக்கும் நிலுவை தொகையுடன் உடனே வழங்குக!
உத்தரவு பெற்று காத்திருக்கும் அனைவருக்கும் காலதாமதமின்றி உதவித் தொகை வழங்கிடுக!
2014 மார்ச் அரசாணை எண்.10-ன் படி ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிக்குரிய 1107 பின்னடைவு காலிப் பணியிடங்களில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் 900-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியர்களை பணி நியமனம் செய்க!
அரசாணைப்படி ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாளச் சான்று வழங்கிடுக!
அரசு காலிப் பணியிடத்தில் 3 சதவிதத்தை மாற்றுத் திறனாளிகளை கொண்டு நிரப்பிடுக!
மேற்கண்ட ஒன்பது கோரிக்கைகளில் அடங்கி யுள்ள நியாயத்தை விளக்கிட வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு தாய்க்கு நான்கு குழந்தைகள் இருந்தால் அதில் ஒன்று பிறப்பிலேயே மாற்றுத் திறனாளியாக இருந்தால் அத்தாயின் கடமை என்பது அந்தக் குழந்தையின்மீது கூடுதல் கவனம் செலுத்துவ தாகும்.
அரசு என்பதும் அந்தத் தாயின் இடத்தி லிருந்து மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினையைப் பார்க்க வேண்டாமா? காது கேட்பதில் என்ன 80 சதவிதம்? விசித்திர மான கேலிக் கூத்து!
இவை எல்லாம் ஒரு பிரச்சினையைத் தட்டிக் கழிக்க வைக்கப்படும் நிபந்தனைகளாகவே தெரிகிறது.
இவர்கள் எல்லாம் என்ன மிட்டா மிராசு தார்களா? செல்வந்தர்களா?
அரசு கொடுக்கும் உதவித் தொகையில் வாழ வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாக்கப்படுபவர்களாயிற்றே! அவர்கள் விஷயத்தில் தேவையற்ற நிபந்தனைகளைத் திணிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் அய்யமில்லை.
இவர்களில் படித்தவர்களுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய வேலை வாய்ப்பை அளித்திட என்ன தயக்கம்? அப்படி என்ன இவர்களுக்குப் பெரிய தொகை செலவாகப் போகிறது?
அரசு கீழே சிந்தும் பணத்துக்கு ஈடாகுமா இது? அரசு இவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற் றிட முன்வர வேண்டும்.
தந்தை பெரியார் அவர்களால் உண்டாக்கப்பட்ட திராவிடர் கழகம் மனிதாபிமான இயக்கமாகும் - மனித உரிமைகளுக்காகப் போராடும் இயக்கமும் ஆகும்.
அந்த முறையில்தான் மாற்றுத் திறனாளிகளை அவர்கள் போராடும் இடத்திற்குச் சென்று நேற்று சந்தித்தோம். அவர்கள் நியாயமான கோரிக்கை களுக்காக திராவிடர் கழகம் உரத்த முறையில் குரல் கொடுக்கத் தயாராகவே இருக்கிறது.
நீதிமன்றம் சென்றுதான் ஆக வேண்டும் என்றாலும், அந்த வகையிலும் உதவிட திராவிடர் கழகம் தயாராகவே இருக்கிறது.
அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் தமிழ்நாடு அரசு கருணையோடும், மனிதநேய உணர்வுடனும் அணுக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்து கிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
26.3.2015
Read more: http://viduthalai.in/page-2/98557.html#ixzz3VV2Av9w5
பெரியார் பாதையில் லீக்வான்யூ
சிங்கப்பூரின் சிற்பி லீயின் 'இறுதி அஞ்சலி நாளன்று அவரவர் இருக்கும் இடங்களில் , கறுப்பு உடை அணிந்து பெருமை மிகு லீ அவர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்' என்ற வேண்டுகோள், எதிர்பாராத அளவுக்கு மக்கள் மனங்களைத் தொட்டிருக்கிறது. ஆயிரமாயிரம் அன்பர்கள் அந்தச் செய்தியை பெரிய அளவில் பகிர்ந்து கொண்டு, அன்னாரின் புகழை உலகெங்கும் பரப்பியுள்ளனர்.
எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புடை தரித்த அனுதாபக் கூட்டம் உருவாகி வருகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை லீ அவர்கள் மறைமுகமாக ஏற்றவர். உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்ற பெரியாரின் அரிய கருத்தின் முழு சொந்தக்காரர் லீ.
அதே நேரத்தில் லீயின் தெய்வ நம்பிக்கை, இதுவரை யாருக்கும் வெளிப்படையாகத் தெரியாத ஒன்று. செயலாக்கமே நாட்டை முன்னுக் குக் கொண்டு வரும் எனத் திடமாக நம்பிய அவர், தெய்வம் சார்ந்த கொள்கைகளுக்கு நேரம் ஒதுக் காததையும் நம்மால் காண முடிகிறது. ஆனாலும், தன் மக்களின் தெய்வ நம்பிக் கைகளில் என்றைக்குமே அவர் குறுக்கே நின்ற தில்லை. முப்பதுக்கு மேற்பட்ட இந்து கோயில்களை கட்ட அனுமதித்தவர். தைப்பூசத் திருவிழாவுக்கு முக்கியத்துவம் தந்தவர்.
இந்து அறக் கட்டளை வாரியத்தின் வழி, கோயில்கள் ஒழுங்காக நிர்வ கிப்பதை உறுதிப் படுத்திஇருப்பவர். இன்றைய நம் கோயில்கள் பல, சமய ஆராதனைகளுடன், பாலர் பள்ளி போன்ற போதனைக் கூடங்களையும் நடத்தி வருகின்றன. லீயின் மறைவை ஒட்டி ,தந்தை பெரியாரின் கருஞ் சட்டைக் கொள்கையை மக்கள் இங்கே பின்பற்ற நினைப்பது மிகப் பொருத்தமே! நவ நாகரீக சிங்கப் பூக்கு, பெரியார் பார்வை தந்த பெருமையும் லீ அவர்களுக்கே உரியது.
- சிங்கப்பூர் ஏ.பி. இராமன் -
Read more: http://viduthalai.in/e-paper/98593.html#ixzz3VaHtEvB1
கடவுளின் கிருபையோ!
சூடத்தால் ஏற்பட்ட விபரீதம்
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே கன்னக்கட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், அவரது மகள் விமலாதேவி (வயது 7). கடந்த 7ஆம் தேதி குடும்பத்தோடு கன்னிதேவி கோயிலுக்குச் சென்றனர். சிறுமி விமலாதேவியும் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டார். தவறுதலாக அந்தச் சூடம் ஆடையில் பட்டு காயம் அடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்றும் மரணம் அடைந்தார். கடவுளைக் கும்பிடுவோர் சிந்திக்க வேண்டாமா?
Read more: http://viduthalai.in/e-paper/98594.html#ixzz3VaI8Cqqq
இன்றைய ஆன்மிகம்?
எதிர்காலம்
எதிர்காலத்தைப்பற்றி ஏன் கவலைப்படுகிறாய்? அனைத்தையும் திட்ட மிட்டு ஆட்டுவிப்பவன் அதைப் பார்த்துக் கொள்வான் - ரமணரிஷி
உண்மைதானே - ரமணரிஷி புற்றுநோய் வந்து பரிதாபகரமான முறையில் மரணம் அடைந்தது எல்லாம்கூட ஆண்டவன் திட்டமிட் டது தானே!
Read more: http://viduthalai.in/e-paper/98595.html#ixzz3VaIIRpvg
அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய கோமியமா?
மத்திய அமைச்சர் கருத்துக்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு
சென்னை, மார்ச் 27_ அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய கோமியம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்திருப்பது சாத்திய மற்றது என அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும்போது, பினாயில் பயன்படுத் துவதைவிட கோமியத்தால் தயாரிக் கப்படும் திரவத்தை பயன்படுத் தினால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, மற்ற துறைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
அமைச்சர் கூறியது நடைமுறைச் சாத்தியமில்லை என்றும், இது பாஜகவின் அரசியல் தந்திரம் என்றும் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகி கள் கூறுகின்றனர். அவர்கள் கூறிய தாவது:
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம். துரைபாண்டியன்: இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால், மத்திய அமைச்சரே கூறுகிறார் என்றால் ஒட்டுமொத்த அமைச்சகமே ஆர். எஸ்.எஸ். கருத்தியலை அமல்படுத் ததான் முயல்கிறது என்பது தெளிவாகிறது. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் ஜே.கணேசன்: அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினந்தோறும் கோமியம் பயன்படுத் துவது என்பது நடைமுறைச் சாத்திய மற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர். தமிழ்ச்செல்வி: தமிழகத் தில் சுமார் ஆயிரம் அரசு அலுவலக வளாகங்கள், 10 ஆயிரம் அலுவலக கட்டிடங்கள் உள்ளன. பல அலுவ லகங்கள் பராமரிப்பின்றி கிடக்கின் றன. குறைந்தபட்சம் பினாயில் பயன்படுத்திதான் சுத்தம் செய்து வருகின்றனர்.
திடீரென்று அனைத்து அலுவலகங்களிலும் கோமியம் பயன்படுத்துவது சாத்தியமில்லாதது. மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சங்க அகில இந்திய தலைவர் கே.கணேசன்: சுற்றுச்சூழ லுக்கு நல்லது என்றால் இத்தனை ஆண்டுகள் இதுபற்றி ஏன் கூற வில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தைரியமாக இதுபோன்ற கருத்துகளை பேசி வருகின்றனர். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Read more: http://viduthalai.in/page-2/98601.html#ixzz3VaJN9b80
மதத்தினால்.....
யாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும்.
(குடிஅரசு, 15.4.1928)
Read more: http://viduthalai.in/page-2/98597.html#ixzz3VaK5J7gP
சின்ன சின்ன மலர்கள்
அனைத்தையும் படைத்தவன் ஆண்டவன்தான் என்கிறான் மனிதன்! இந்த மனிதன் படைத்ததுதான் என்ன? இது தெரியாதா? மனிதனின் படைப்புத்தான் ஆண்டவன்!
********************
உலகில் ஓரிருவர் சரித்திரமாகிறார்கள். ஒருசிலர் சரித்திரத்தை உருவாக்குகிறார்கள்.... பலர் சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள். மிகப்பலரோ இவை எதுவுமற்ற தரித்திரங்களாகவே மறைந்து போகிறார்கள்.
********************
வீரன், ஒருமுறைதான் சாவான்; கோழை பலமுறை சாவான் என்பார்கள் - ஒரு திருத்தம்; வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை.
- கலைஞர் (சிறையில் பூத்த சின்ன மலர்கள் என்ற நூலிலிருந்து)
Read more: http://viduthalai.in/page-4/98634.html#ixzz3VaMZy722
குன்னமிர்தல் கூறுகிறார்!
மக்களிடையே இருப்பது சமுதாய, பொருளாதாரப் பிளவுகளும், அவற்றுடன் சமுதாய நலன்கள், வேலை வருவாய் வாய்ப்புகள் இவற்றில் கொடிய சமமின்மையும் ஆகும்.
சமமற்ற ஏற்றத்தாழ்வுள்ள சமுதாய அமைப்பு இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அகற்றமுடியாத பெரும் பகையாக உள்ளது. (ஆசியன் டிராமா - பக்கம் 258)
இந்திய சமுதாய பழக்க வழக்கங்களில் சாதிப் பாகுபாடு ஊடுருவிப் பாய்ந்துள்ளது கடுமையான அறுவை சிகிச்சையாலன்றி, வேறு முறையால் அதனை வீழ்த்திட முடியாது
(பக்கம் 278 - அதே நூல்)
(குன்னமிர்தல் எழுதிய ஆசியன் டிராமா என்ற இந்நூல் நோபல் பரிசு பெற்றது)
Read more: http://viduthalai.in/page-4/98634.html#ixzz3VaNiZI3r
கீதைப் பற்றி விவேகானந்தர்
கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?
இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா? நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா?
என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரத்தில் புகுத் தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டாரா என்ற பிரச்சினை எழுகிறது.
அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திரயுத்தம் செய்தனர் என்பதோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. - விவேகானந்தர், கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில்
ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)
Read more: http://viduthalai.in/page-4/98635.html#ixzz3VaO064Af
தந்தை பெரியார் பொன்மொழிகள்
மனிதனிடம்தான் உயர்ந்த ஜீவன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு தனிப்பட்ட குறிப்பும் அடையாளமும் இல்லை என்றே சொல்லுவேன்.
மனிதனால் - எண்ணப்படும், பேசப்படும், செய்யப்படும் காரியங்களில் - எதிலாவது மற்ற ஜீவன்களைவிட உயர்ந்த தன்மை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், அவற்றில் மற்ற ஜீவன்களை விடத் தாழ்ந்த தன்மைகள் பல இருப்பதாகச் சொல்லலாமே தவிர, உயர்ந்த தன்மையைக் குறிக்க ஒன்றினாலும் காண முடியவில்லை.
பொதுஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு பொது ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்கக் கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.
Read more: http://viduthalai.in/page-4/98635.html#ixzz3VaOFIKrM
இந்துமதம் பற்றி தாகூர்!
டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:
இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.
இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியு டையவர்களாக இல்லை.
இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை.
நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.
நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத் தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.
- இரவீந்திரநாத் தாகூர்
Read more: http://viduthalai.in/page-4/98636.html#ixzz3VaOQ1tFa
திராவிடர் கழகம் என்று சொல்லப் படுவது இந்துக்களில் 100-க்குத் 97 பேராக இருக்கிற பார்ப்பன ரல்லாத மக்கள் அனைவருக்குமான கழக மாகும். அதன் கொள்கை திராவிட மக்களை முன்னேறச் செய்வதும் அவர்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கி உலக மக்களைப் போல வாழச் செய்வதுமாகும்.
Read more: http://viduthalai.in/page-4/98636.html#ixzz3VaOhFjkz
திராவிடர் கழகம் என்று சொல்லப் படுவது இந்துக்களில் 100-க்குத் 97 பேராக இருக்கிற பார்ப்பன ரல்லாத மக்கள் அனைவருக்குமான கழக மாகும். அதன் கொள்கை திராவிட மக்களை முன்னேறச் செய்வதும் அவர்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கி உலக மக்களைப் போல வாழச் செய்வதுமாகும்.
Read more: http://viduthalai.in/page-4/98636.html#ixzz3VaOhFjkz
நாட்டையே அழிக்கும் ஆபத்து: மிகப்பெரிய விண்கல் நாளை பூமியை கடக்கிறது
லண்டன், மார்ச் 27_ சுமார் 1000 மீட்டர் அக லம் கொண்ட மிகப்பெரிய விண்கல் ஒன்று நாளை (27 ஆம் தேதி) பூமிக்கு மிக அருகில் கடக்க உள் ளது.
அந்த விண்கல்லுக்கு 2014 ஒய்.பி.35 என்று விண்வெளி ஆய்வாளர் கள் பெயர் சூட்டியுள் ளனர். இந்தக்கல் பூமியின் 28 லட்சம் மைல்களை கடந்து பயணிக்கும்.
இந்த மிகப்பெரிய கல் முதல் முறையாக கடந்த ஆண்டு இறுதியில் கேட் டலினா ஸ்கை சர்வே மூலம் அடையாளம் காணப்பட்டது. இந்த அளவு பெரிய விண்கல் பூமியை கடப்பது 5 ஆயி ரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசய மாகும். இந்த மிகப்பெரிய விண்கல் மணிக்கு 37 ஆயிரம் கி.மீ. வேகத்தில் வருகிறது.
இந்த விண்கல் மோதினால் ஒரு பெரிய நாட்டையே அழித்து விடும். மேலும் இதனால் பருவநிலை மாற்றம், நில நடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
1908 ஆம் ஆண்டு சைபீரியாவில் டுங்குஸ்கா பகுதியில் விழுந்த விண் கல்லால் ஏற்பட்ட பாதிப் புகளை விட இந்த புதிய விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இதுதொடர்பாக பக் கிங்காம் ஷைர் பல்கலைக் கழகத்தின் வானியல் பேராசிரியர் பில் நேப்பி யர் கூறுகையில், 2014 ஒய்.பி.35 போன்ற விண்கற்கள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. விண்கற்கள் பூமியில் மோதுவது அரிய நிகழ்வுதான் என்றாலும் அவை ஏற்படுத்தும் ஆபத் துகளை நாம் சாதாரண மாக எடை போட்டு விட முடியாது என்றார்.
Read more: http://viduthalai.in/page-4/98642.html#ixzz3VaPOMTIn
Post a Comment