Search This Blog

5.3.15

பழ.நெடுமாறன் அவர்கள் மீள்வது எப்போது?
மீள்வது எப்போது?


வட நாட்டில் தலைவர்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு  அன்புடன் பழகுகிறார்கள் - ஒருவருக்கொருவர் வாழ்த்து களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்; ஆனால், தமிழ்நாட்டில் அந்த நிலை காணப்படவில்லையே;


குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் திராவிடர் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடத்தில் அந்தத் தன்மை காணப்படவில்லையே என்ற ஆதங்கத்தை ஓர் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியவர் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.


தாய்க்கழகத்தின் தலைவர் என்ற முறையில் அப்படிச் சுட்டிக்காட்டும் கடமையும், பொறுப்பும் அவருக்கு உண்டு.


பிரிந்து கிடக்கும் திராவிடர் அரசியல் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் என்பதற்கான முயற்சிகளைக்கூட மேற்கொண்டவர் அவர் என்பது வரலாறு.


அ.இ.அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களை அதற்காகச் சந்தித்து தேவையான முயற்சிகளை அவர் மேற்கொண்ட நிலையில், பழம் நழுவிப் பாலில் விழும் ஒரு தருணத்தில் குறுக்கே பாய்ந்து கெடுத்தவர்கள் உண்டு.


திராவிட அரசியல் கட்சிகள் மற்ற மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதைவிட திராவிட இயக்கக் கட்சிகளிடையே கூட கூட்டணி வைத்துக் கொள்ளலாமே என்ற திராவிட இயக்கப் ஃபார்முலாவைக் கூட அவர் தெரிவித்ததுண்டு.


அத்தகைய தலைவர் திராவிடர் இயக்க அரசியல் கட்சிகளுக்குள் பகைமைப் பாராட்டிக் கொள்ளாமல், வடநாட்டுத் தலைவர்கள்போல இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியதை ஓர் ஆரோக்கியமான பார்வை யில் பார்க்க மனமின்றி, அதனைத் திசை திருப்பி, திராவிடர் இயக்கத்தையே கொச்சைப்படுத்த இதுதான் சந்தர்ப்பம் என்று சேற்றை வாரி இறைக்க முயற்சிப்பது ஆரோக்கியமான தல்ல - அது ஒரு தாழ்நிலை மனோபாவம் அல்லது திட்ட மிட்ட விஷமம் என்று சுட்டிக்காட்டுவது நமது கசப்பான கடமையாகும்.


திராவிட அரசியல் கட்சிகளில் நிலவும் ஒரு போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மற்ற தேசியக் கட்சிகளில் அந்த நிலை இல்லை; அவர்கள் எல்லாம் உயர்ந்த பண்பாட்டுத் தளத்தில் சஞ்சரிக்கிறார்கள் என்று பொருளாகாது.


கட்சிக் கமிட்டிக் கூட்டத்தைக்கூட அமைதியாக, ஆரோக்கியமாக நடத்த முடியாத நிலை எல்லாம் உண்டு.

தேசியக் கட்சிகளால் தந்தை பெரியார் சந்தித்த அவமானங்கள் ஒன்றா? இரண்டா?


தந்தை பெரியார் சென்ற ஊர்வலத்தில் செருப்புத் தோரணங்களைத் தொங்க விட்டவர்கள் யார்? செருப்பை வீசியவர்கள் யார்? முட்டைக்குள் மலத்தை நிரப்பி பெரியார்மீதும், திராவிடர் இயக்க முன்னணியினர்மீதும் வீசியவர்கள் யார்?


அணுகுண்டு அய்யாவுகளையும், விபூதி வீரமுத்து சாமிகளையும் தயார் செய்து, புழுத்த நாய் குறுக்கே போக முடியாது என்கிற அளவுக்கு திராவிட இயக்கத்தை நாசகார முறையில் கொச்சைப்படுத்திய புராணங்கள் ஏராளம் உண்டே!


திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு என்ற போர்வையில் ம.பொ.சி. கம்பெனிகள் எப்படியெல்லாம் பேசித் தீர்த்தன - இவர்களின் மிச்ச சொச்சங்கள்தான் இப்பொழுது புறப்பட்டுள்ளன!


தூத்துக்குடிக்கு வருகை தந்த தந்தை பெரியார் அவர் களை அவமதிக்கவேண்டும் என்று ராமசாமி கழுதை செத்துவிட்டது என்றும், ராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் சுவர்களில் எழுதி வைத்தவர்கள் யார்?

எவ்வளவோ சொல்லலாம்.


வெகுகாலத்திற்கு முன்புகூட செல்லவேண்டாம். பழனியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் உருவம் செய்து பாடை கட்டித் தூக்கிச் செல்லவில்லையா? அவரின் துணைவியாரைக் குறிப்பிட்டு எல்லாம் கொச்சைப்படுத்திக் கோஷம் போடவில்லையா? (இதற்கும் திராவிடர் இயக்கம்தான் காரணம் என்று சொல்லாமல் இருந்தால் சரி)


தந்தை பெரியார் மறைவையொட்டி தலையங்கம் தீட்டாத ஆங்கில ஏட்டுக்கு என்ன மதிப்பீடு? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், அன்னை மணியம்மையார் போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள் மறைவை ஆபிச் சுவரி காலத்தில் அதே பார்ப்பன ஏடு போடவில்லையா?


அப்படி அசிங்கமாக அநாகரிகமாக அவர்கள் நடந்து கொண்டபோது, இப்பொழுது சம்மன் இல்லாமல் ஆஜராகும் வக்கீல்கள் அப்பொழுது எங்குப் போயிருந்தார்களாம்?


எந்த நோக்கத்துக்காக திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டார் என்ற சாரத்தைப் புரிந்து கொள்ளாமல், அப்படி சொல்லுகிறவர் தாய்க்கழகத்தின் தலைவர் என்ற முக்கியத்துவத்தையும் புறந்தள்ளி, திராவிட இயக்கத்தைத் தாக்குவதற்கு, கொச்சைப்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்த முயலுவது, திராவிடர் இயக்கத்தின்மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை, வெறுப்பு உணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய பரிதாபமே!


குறைகூற முயல்பவர்கள் நல்லெண்ணத்தோடு, திராவிடர் கழகத் தலைவர் கூறியுள்ள கருத்து வரவேற்கத்தக்கது; அனைவரும் பின்பற்றவேண்டியது என்று சொல்லியிருந்தால், சொல்லுகின்றவர்கள்மீது ஒரு தனி மரியாதைகூட ஏற்பட வாய்ப்புண்டு. அது அல்லவே அவர்களின் நோக்கம்! திராவிடர் கழகத் தலைவரே இப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள் - பாருங்கள் என்ற பராக்குக் கூறுவதற்கு அல்லவா பயன்படுத்தத் துடிக்கிறார்கள்.

எந்த அளவுக்கு திரு.பழ.நெடுமாறன் அவர்கள் சென்றுள்ளார் என்றால், (தினமணி, 2.3.2015) 40 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியை ஜெர்மானிய ஹிட்லரோடு ஒப்பிடும் அளவுக்கு இந்தச் சந்தர்ப்பச் சந்துக்குள் நுழைய முயல்வது கண்டிக்கத்தக்கதே - மிகப்பெரிய திரிபுவாதச் சறுக்கல் இது!
 

ஒரு காலத்தில் திராவிட அரசியல் கட்சிகளோடு சங்கமித்துப் பயணம் செய்து கொண்டிருந்தவர்தானே - மறுக்க முடியுமா?

திராவிடக் கட்சிகளின் 40 ஆண்டுகாலத்திற்கு மேலான ஆட்சியில், தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டிருக்கிற சீரழிவை சரி செய்வதற்கு என்ன செய்வது, எப்படி செய்வது, யாரால் இயலும் என்ற கவலை நாட்டுப்பற்றாளர்களுக்கு ஏற்பட்டுவிட்டது என்று மிகவும் கவலைப்பட்டு எழுதியுள்ளார்.


திராவிடர் இயக்க ஆட்சியில் எந்த நல்லதும் நடந்து விடவில்லையா? சாதனைகள் ஏதும் நிகழ்த்தப்பட வில்லையா?

திராவிடர் இயக்கத்தைவிட சாதனை செய்தவர்கள் யார்?


சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர், சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்டவடிவம், தமிழ்நாட்டில் இரு மொழிக்குத்தான் இடம்; மூன்றாம் மொழி இந்திக்கு இடமில்லை.


தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு (By an Act) பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் பெண்கள் மறுமலர்ச்சிக்கான அடுக்கடுக்கான திட்டங்கள் (அன்னை நாகம்மையார், டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்,
அன்னை மணியம்மையார், டாக்டர் சத்தியவாணிமுத்து முதலிய வீரப் பெண்மணிகளின் பெயர்களில் எத்தனை எத்தனைப் பெண்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள்), பெரியார் நினைவு சமத்துவபுரம், தமிழ் செம்மொழிக்கான அங்கீகாரம், அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் உரிமைச் சட்டம் - இவையெல்லாம் கண்களுக்குத் தெரியவில்லையா? திராவிடர் இயக்கக் கொள்கைகளின் விளைச்சல் இவற்றில் எதிரொலிக்கவில்லையா?


காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சுயமரியாதைத் திருமணத்தைச் செல்லும்படியாக்கவேண்டும் என்று தனி நபர்களாக (சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவன், போளூர் அண்ணாமலை) தீர்மானங்களைக் கொண்டு போன நிலையில், காங்கிரஸ் ஆட்சியினர் ஏன் ஏற்றுக்கொள்ள வில்லை? சுயமரியாதைத் திருமணத்தை வரையறுக்க முடியுமா? (Define) என்று அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் சட்டமன்றத்தில் சொன்னாரே, மறந்துவிட்டதா?


சுயமரியாதைத் திருமணம் என்று வருகிறபோது பெரியார் சொன்னபடி எளிமையாக நடக்கவில்லையே என்று அதிலும் குறையைக் காணும் கண்ணோட்டம்.


திருமணம் மட்டுமல்ல, எளிமையாக, சிக்கனமாக எல்லாவற்றிலும் நடந்துகொள்வது நல்லதுதான். அதை வலியுறுத்துவோம் - நல்லெண்ணம் இருந்தால் இப்படித்தான் சிந்திப்பார்கள்.


பார், பார், சிக்கனமாக சுயமரியாதைத் திருமணங்களை நடத்தச் சொன்னார் பெரியார் - தி.மு.க. - அ.தி.மு.க.வினர் களோ ஆடம்பரமாக நடத்துகின்றனர் என்று அதிலும் குறை காணும் இடத்தைப் பெரிதுபடுத்தும் கண்ணோட்டம்தான் குதித்து எழுகிறது.


திராவிட இயக்கப் பொதுக்கூட்ட மேடைகளிலும், மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களின் வீட்டிற்கே வந்தும்கூட தோழர்கள் எளிய முறையில் சுயமரியாதைத் திருமணங்கள் செய்துகொள்வதெல்லாம் இவர்களின் கண்களுக்குப் படவே படாதா?


இந்தியத் துணைக் கண்டத்திலேயே பார்ப்பனீயப் பண்பாட்டு ஆதிக்கத்தை ஆணிவேரோடு கெல்லி எரியும் மிகப்பெரிய சாதனையை - வரலாற்றையே திருப்பிப் போட்ட புரட்சியைச் செய்து காட்டியவர்கள் யார்? திராவிடர் இயக்கத் தலைவர் தந்தை பெரியார்தான் செய்தார்; திராவிடர் இயக்க ஆட்சிதான் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தது என்பதை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லையே, ஏன்?


எப்படி வரும்? முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்தில் இடம்பெறத் தகுதியில்லாதவர் பெரியார் என்ற சிந்தனை உள்ளவர்களிடத்தில் வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?


தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பெரியார் எந்தவிதத் தொண்டும் செய்யவில்லை என்ற முடிந்த முடிவுக்கு வந்தவர்கள் வேறு எப்படித்தான் எழுதுவார்கள்?


நல்லதுதான்! இதன்மூலம் வரலாற்றுக்கு இவர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்கள் - ஒரு வகையில் அதுவும் வரவேற்கப்படவேண்டியதுதான்.


தமிழர் தலைவரின் பண்பாடு மிளிரும் அறிக்கையின் கருத்தை காமாலைக் கண்ணோடு பார்த்து, திராவிடர் இயக்கத்தையும், அதன் தலைவர்களையும் கொச்சைப் படுத்தும் வகையில் திசை திருப்பும் பார்ப்பன ஏடுகளோடு சங்கமமாகி அந்தப் பார்ப்பன ஏடு மெச்சத் தகுந்த வகையில் கைலாகு கொடுத்துக் கட்டுரை எழுதுவது குறித்து காலந்தாழ்ந்தாவது வருத்தம் அடைவார்கள் என்று கருதுகிறோம்.

திராவிட இயக்கக் கொள்கைகளைப் புறந்தள்ளி செய்யப்படும் எந்த ஒரு செயலும் பார்ப்பனீய நச்சுக் களைக்கு எரு போட்டு, நீர் ஊற்றி வளர்க்கத்தான் பயன்படும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளட்டும்!


மீள்வது எப்படி? என்று கேட்கிறார்கள். திராவிடர் சமுதாயத்தையே சீர்குலைத்த - ஜாதி சாக்கடைக்குள் குப்புறத் தள்ளிய கொடிய பார்ப்பனீய ஆக்டோபசின் பிடியிலிருந்து மீள்வதற்குத் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் செம்மாந்த கருத்துகளையும், வழிமுறைகளையும் கடந்த ஒரு நூற்றாண்டாக கூறியும்,

வழிகாட்டியும் வந்துள்ளனர். அவற்றைப் பின்பற்றினால் மீள்வது சுலபமே! இன்றேல், மொழி உணர்வு, இன உணர்வு, மனிதநேயம் - மாள்வது உறுதி!


 ----------------கலி.பூங்குன்றன்  துணைத் தலைவர், திராவிடர் கழகம் 3-3-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

47 comments:

தமிழ் ஓவியா said...

தமிழர்கள் நுழைய கதவடைப்பா? இரயில்வே துறை நடத்திய குரூப் டி

பணியாளர் தேர்வு திட்டமிட்ட மோசடி!


இரயில்வே தேர்வு ஆணையம் (Rly Recruitment Cell) என்ற அமைப்பின் மூலம் தெற்கு இரயில்வேயில் காலியாக உள்ள குரூப் டி பதவிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்பதற்கான சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

5450 பணியாளர் பதவிக்குத் தேர்வு செய்திட 21.9.2013 அன்று ரயில்வே தேர்வு வாரியம் விளம்பரம் செய்திருந்தது. தேர்வு 2014 நவம்பர் 2ஆம் தேதி அய்ந்து கட்டங்களாக நடந்துள்ளது.

மத்திய அரசின் விளம்பரத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது, இணைக்கப்படும் சான்றிதழ்களுக்கு அரசு பதிவிதழ் அலுவலரிடமிருந்து (Gazetted Officer) மேலொப்பம் பெற வேண்டும் என்ற விதி நீக்கப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதில் என்ன மோசடி என்றால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்திலே கெசட்டட் அதிகாரிகளிடமிருந்து மேலோப்பம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்விளம்பரங்களிலோ அது தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழில் வெளிவந்த விளம்பரத்தின் அடிப்படையில் சான்றிதழ்களுக்குக் கெசட்டட் அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை என்ற அடிப்படையில் விண்ணப்பித்த ஏறத்தாழ இரண்டரை லட்சம் தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப்பட்டு விட்டன.

அதே நேரத்தில் சான்றொப்பமின்றி ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மகா கொடுமையை வஞ்சகத்தை என்னென்று சொல்லுவது!
தென்னக ரயில்வே துறைக்குப் பணியமர்த்தம் என்றாலும் வட மாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளில் ஏகப்பட்ட குழப்பங்கள் - தவறான மொழி பெயர்ப்புகள் - அதனால் சரியாக விடை எழுத முடியாத நெருக்கடிகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்வில் வெற்றி பெற்று விடக் கூடாது என்றே திட்டமிட்டும், அதே நேரத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மலையாளிகள் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற இமாலய சதியோடு சூழ்ச்சியோடு திரைமறைவில் காரியங்கள் நடைபெற்றுள்ளன. (விரிவாக வெளியிடப்பட்டுள்ளதை காண்க)

நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற் தகுதி தேர்வு வரும் 8ஆம் தேதி நடக்க உள்ளதாம். நடைபெற்ற இந்தத் தேர்வு செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும், முறையாக தெளிவாக விளம்பரம் செய்யப்பட்டு ஒழுங்கான முறையில் தேர்வுத்தாள் தயாரிக்கப்பட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை நாடாளுமன்றத்தில் கேள்வியாக எழுப்பி நிவாரணம் தேடிட வழி வகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

6.3.2015
சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/97311.html#ixzz3TcAjqN5y

தமிழ் ஓவியா said...

முஸ்லீம்களைப் பார்த்ததும் கல்லெறிந்து கொல்லுங்கள்

பாலிகாசரஸ்வதி சாமியாரிணியின் பாசிசப் பாய்ச்சல்

போபால், மார்ச் 6_ முஸ்லீம்கள் நாடு முழுவ தும் பரவி லவ்ஜிகாத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார் கள். அவர்களைக் கண்டதும் கல்லெறிந்து கொல்லுங்கள் என்று பாலிகா சரஸ்வதி சாமியாரிணி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் நூற் றாண்டு விழா கொண்டா டப்பட்டு வருகிறது, இந்தக் கொண்டாட்டங்களின் போது அனைத்து இந்துத் துவ தலைவர்களும் மோச மான சொற்களைப் பயன்படுத்திவருகிறார்கள். மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் நடந்த விஷ்வ இந்துபரிஷத் விழாவில் பாலிகா சரஸ்வதி என்ற சாமியாரிணி பேசிய தாவது, : நான் இந்துப் பெண்களைக் கேட்டுக் கொள்கிறேன், எந்த ஒரு முஸ்லீம் இளைஞனின் பார்வைகூட உங்கள் மீது பட விடாதீர்கள், அப் படியே உங்கள் பார்வை யில் பட்டாலும் அவர்களைக் கல்லெறிந்து கொல் லுங்கள். முஸ்லீம்கள் வேண்டு மென்றே இந்துப் பெண் களை காதல்வயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்துப்பெண்கள், முஸ்லீம் இளைஞர்களின் வலையில் எளிதாக விழுந்து விடுகி றார்கள். அப்படி வலையில் விழுந்த பெண்களை உடனடியாக திருமணம் செய்து அவர்களை முஸ் லீம்களாக மாற்றிவிடுகின் றனர். அந்தப் பெண்களை நாயைப்போல பிள்ளை களைப் பெறவைத்து முஸ்லீம்களின் எண்ணிக் கையைப் பெருக்கிவிடுகின் றனர். நாட்டில் லவ்ஜிகாத் அதிகரித்து விட்டது. இதை நாம் எச்சரிக்கை யுடன் அணுகவேண்டிய கட்டாயத்தில் இருக் கிறோம். முஸ்லீம் இளைஞர் களுக்கு, மசூதிகளிலும், மதராசாக்களிலும் எப்படி இந்துப்பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்யவேண்டும் என்று பயிற்சி கொடுக்கப்படுகிறது. லவ் ஜிகாத் பலவிதமாக முஸ்லீம் இளைஞர்களால் செயல்படுத்தப்படுகிறது. முஸ்லீம் அரசியல்வாதி கள். சினிமா நடிகர்கள் அனைவரும் லவ்ஜிகாத் திற்கு ஆதரவாக உள் ளனர். ஒவ்வொரு இந்துப் பெண்ணும் முஸ்லீம் களுக்கு எதிரான நட வடிக்கை எடுக்க சபதம் எடுக்கவேண்டும். ஜாதி பற்றி கூறும் போது இந்து தர்மத்தில் ஜாதி தேவையான ஒன்று, கடவுள் அவர் அவர் தொழிலுக்கு ஏற்ப அந்த அந்த ஜாதிகளைப் உரு வாக்கியுள்ளார். விமானம் என்று இருந்தால் அதற்கு பைலட் என்பவரும் உண்டு தூய்மைப்படுத்துப வரும் உண்டு, தூய்மைப் படுத்துபவர் விமானம் ஓட்டினால் என்ன ஆகும், அது போல் தான் ஜாதியும், யார் யாருக்கு என்ன என்ன என்று கீதையும் எழுதியுள்ளது. அதன் படிதான் நடக்கவேண்டும் சூத்திரர்கள், பிராமணர் களின் வேலைகளை செய்ய முயற்சி செய்யக்கூடாது, அதே போல் பிராமணர்கள் சூத்திரர்களைப் போல சாராயம் குடிக்கக்கூடாது. இங்கே கீதையைப் பற்றி குறைகூறுகிறவர்கள், அதை முழுமையாக படிக் காதவர்கள் ஆகையால் அவர்கள் விருப்பம் போல் பேசுவார்கள்

கடவுள் ஜாதிகளைப் படைத்தார், ஆகையால் ஜாதி மாறித் திருமணம் செய்வது கட வுளின் கட்டளைக்கு எதிரான செயலாகும். அந்த அந்த ஜாதியில் தான் திருமணம் செய்ய வேண் டும் அப்படி செய்யும் போதுதான் இந்து மதம் சிறந்துவிளங்கும். இந்து மதம் சிறந்து விளங்கினால் இந்தியாவும் சிறப்புறும். இங்குள்ள இஸ்லாமியர்கள் மற்றும் இதர மதத்தவரை நாம் இந்துவாக மாற்ற வேண் டும் அப்படி மாற்றும் போதுதான் இந்துக்களின் நாடாக மாறும் என்று முடித்தார். அரசு மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் அது இந்துமதம் மாறுவ தற்கு தடையாக இருக்காது. காரணம் மதம் மாறிய வர்கள் தாய்மதம் தான் திரும்புகிறார்கள் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/97338.html#ixzz3TcB5a4h6

தமிழ் ஓவியா said...

மத்திய ஆட்சியின் மதவாதம் நீதிபதி சந்துரு கருத்து


சென்னை, மார்ச் 6_ மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி, இந்தியாவை காவி மயமாக்கும் சோதனையில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறினார்.

சென்னை புதுக்கல் லூரி முதுகலை வரலாறு துறை சார்பில் மனித உரிமைகள் குறித்த கருத் தரங்கு நடந்தது. இதற்கு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமை வகித்தார். இதில், கல்லூரி முதல்வர் அப்துல் மாலிக், வர லாற்று துறை தலைவர் ஜபருல்லா கான், பேரா சிரியர் முகமது தாரிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் முன் னாள் நீதிபதி சந்துரு பேசியதாவது:

மனித உரிமை என்பது ஒரு மனிதனுக்கு ரத்தமும் சதையும் போன்றது. மனித உரிமை நமது வாழ்வில் ஒரு பகுதியாக மாற வேண்டும். அதனை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். முள்வேலி முகாம்கள் இலங்கையில் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். சென்னையில் கண்ணகி நகர் உள்ளிட்ட சில பகு திகள் முள்வேலி முகாம் கள் போல் உள்ளன. இங்கும் மனிதர்கள் வலுக் கட்டாயமாக தங்க வைக் கப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறலுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

அதேபோல, மகாராஷ் டிரா மாநிலத்தில் மாட் டிறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது. மனிதன் என்ன சாப்பிட வேண்டும் என்பது அவ னது உரிமை. நம்முடைய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்று மகாராஷ்டிராவில் வந்த இச்சட்டம் நாளை குஜ ராத்திலும், தமிழகத்திலும் கூட கொண்டு வரப்பட லாம். எனவே, நமது உரிமையை வேறு யாரும் தீர்மானிக்க வேண்டாம்.

மத்தியில் ஆட்சி புரியும் கட்சி, இந்தியாவை காவி மயமாக்கும் சோத னையில் ஈடுபட்டு வரு கிறது. சரஸ்வதி பூஜை, பள்ளிகளில் குரு பூஜை, பசுமாட்டை வழிபட வேண்டும், பகவத் கீதை புனித நூல் என்று கூறி வருகின்றனர். அவர் களுக்கு யார் இந்த உரிமையை கொடுத்தது. இதனை புரிந்து கொண் டால் மனித உரிமைகள் என்னவென்பது தெளிவ டையும். இவ்வாறு அவர் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/97340.html#ixzz3TcBJtbD5

தமிழ் ஓவியா said...

இந்திய வரலாற்று இயல் கவுன்சில் நியமனம்
அரசியல் தவிர வேறில்லை

ஆய்வாளர் வெங்கடாசலபதி


சென்னை, மார்ச் 6_ சென்னை மேம்பாட்டு கல்வி நிலைய (எம்.அய். டி.எஸ்.,) பேராசிரியர், ஏ.ஆர்.வெங்கடாசலபதி கூறியதாவது: இந்திய வர லாற்று இயல் கவுன்சிலின் தலைவர், உறுப்பினர் நியமனங்களில், அரசி யலை தவிர வேறில்லை. இதற்கு முன், இக்கவுன் சிலின் தலைவர், உறுப் பினர் நியமனம், அரசியல் சார்புடன் இருந்தாலும், அவர்கள் வரலாற்றுத் துறைக்கு பங்களித்தவர் களாக இருப்பர். வாஜ் பாய் தலைமையிலான அரசு காலத்தில், கவுன் சிலுக்கு நியமித்தவர்கள் கூட, வரலாற்று துறைக்கு பங்களிப்பு செய்தவர் களாக இருந்தனர். ஆனால், இப்போதைய தலைவர் மற்றும் உறுப் பினர் நியமனம், முழுக்க முழுக்க அரசியல் நியமன மாகவே உள்ளது. மகா பாரதத்துக்கு மொழி பெயர்ப்பு செய்தவர், வரலாற்று ஆய்வாளர் அல்ல; அவர், மொழி பெயர்ப்பாளர் மட்டுமே. அவரது மொழி பெயர்ப் புக்கு வேண்டுமானால் பரிசு வழங்கலாம். அவரை, கவுன்சிலின் உறுப்பின ராக்க முடியாது. ஆனால், அவரைப் போன்றோரை, வரலாற்று இயல் கவுன் சிலின் உறுப்பினராக நியமித்து உள்ளனர். இவ் வாறு, அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/97337.html#ixzz3TcBUcADU

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கோ பூஜையின் பலன்

செய்தி: ஜெயலலிதா அவர் களுக்காக, கோ பூஜையில் கலந்து கொண்ட அதிமுக பிரமுகர்கள் வேறு கார ணங்களுக்காக கட்சியை விட்டு நீக்கம். சிந்தனை: கோ பூஜையின் பலன் என்பது இதுதானோ! ஆடு! ஆடு!!
தமிழக அமைச்சர் நத்தம் விசுவநாதன் 67 இணையர் களுக்குக் கல்யாணம் செய்து வைத்திருக்கிறார். இந்த இணையர்களுக்கு ஆடுகளும் பரிசாக அளிக் கப்பட்டனவாம்.

அந்த ஆடுகளின் கழுத்தில் ஜெயலலிதா படத்தை மாட்டியிருந்தனராம்.

விவசாயிகளுக்கு நான் எதிரியல்ல!

விவசாயிகளுக்கு நான் எதிரியல்ல என்று கூறியுள் ளார் பிரதமர் நரேந்திர மோடி. எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என் பார்களே அது இது தானோ!இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 41 பேர் பலியானதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 1239 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97335.html#ixzz3TcBcixR0

தமிழ் ஓவியா said...

தீபாவளிக்கு விடுமுறை இல்லை!


அமெரிக்காவில் நியூயார்க் நகர நிருவாகம் தீபாவளிக்கு விடுமுறை இல்லை என்று அறிவித்து விட்டது. இந்து அமெரிக்கன் ஃபவுண்டேசன் லபோ திபோ என்று குதிக்கிறது.

Read more: http://viduthalai.in/e-paper/97333.html#ixzz3TcBmjunx

தமிழ் ஓவியா said...

அன்பு வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி ஏற்படுத்தப்பட் டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.
(விடுதலை, 20.9.1968)

Read more: http://viduthalai.in/e-paper/97327.html#ixzz3TcCFWinH

தமிழ் ஓவியா said...

நாத்திகர்களே தேவை!

இந்துக்கள் தங்களுடைய மதமே சிறந்தது எனக் கருது கிறார்கள். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் தர்மமே மேலானது என்று கூறுகிறார்கள்.

இந்த நிலையில் நாம் எந்த மதத்தைத் தழு வுவது என்று அக்பர் ஒரு முறை கேட்டதாக கிறிஸ்துவப் பாதிரிகள் சொல்லுகிறார்கள். அக்பருடைய கேள்வி நியாமானது. ஆனால், அது கிறிஸ்துவ பாதிரிகளுக்கு பிடிக்கவில்லை.

தங்கள் குறிப்பேட்டில், எல்லா நாஸ்திகர்களுக்கும் உரிய பொதுவான குற்றம் அக்பரிடத்தும் காணப்படுகிறது. நாஸ்திகர் தங்கள் படித்தறிவை மத நம்பிக்கைகளுக்கு கீழ்ப்படுத்த மறுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

ஒரு நாஸ்திகனுக்குரிய லட்சணம் இதுவாயின் இத்தகைய நாஸ்திகர்களின் தொகை பெருகுவதால் நாட்டுக்கு நன்மையே தவிர வேறில்லை.

-ஜவகர்லால்நேரு

உலக சரித்திரம், பக்கம் 157

Read more: http://viduthalai.in/e-paper/97368.html#ixzz3TcE5XXSv

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி வேதநாயகம்!

ஒருநாள் இரண்டு பிராமணர்கள் மிஞ்சின போஜனம் அருந்தினதால் கீழே குனியக்கூட முடியாமல் அண்ணாந்து கொண்டு மேல்நோக்கின பார்வையாய்த் தெருவில் போகும் போது, அவர்களின் ஒருவனுக்குக்காலில் மிதியடியிருக்கிறதா இல்லையாவென்கிற சந்தேகமுண்டாகி மற்றொருவனை நோக்கி தம்பி, சுப்பு!

என் காலில் மிதியடியிருக்கிறதா பார் என்றானாம் அந்த பிராமணனும் குனியமுடியாமல் அண்ணாந்து கொண்டு போனதால் அண்ணா! ஆகாச மண்டலம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணோம் என்றானாம்,

- மாயூரம் ச.வேதநாயகம் எழுதிய சுகுண சுந்தரி (சமூக நாவல்) தகவல்: ஆ.கணேசன், சென்னை -21 :

Read more: http://viduthalai.in/e-paper/97369.html#ixzz3TcEGpMO8

தமிழ் ஓவியா said...

யார் காரணம்?

ஆழ்வார்கள், அவதார புருசர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமா ரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர்கள், திருடர்கள், கொலை காரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள்,

வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?
ஈ.வெ.ரா. பகுத்தறிவு

Read more: http://viduthalai.in/e-paper/97369.html#ixzz3TcENOXdN

தமிழ் ஓவியா said...

ராசி பலன்காரர்களுக்கு வந்தது வேட்டு!

சே! சம்சாரம் ஒரு சாகரம்! எனக்கென்று வாய்த்தது பார் ஒரு சனியன்! மூளி அலங்காரி! மூணாம் பேஸ்து மாதிரி! முப்பது நாழியும் மூலையும் முக்காடும்தான் கதி! என்று சலித்துக் கொள்ளும் கணவன்மார்களைக் கண்டிருக் கிறோம்.

கிளியை வளர்த்து பூனை கையிலே கொடுத்தாளே என்னை பெத்தவ - அவளைச் சொல்லணும்! புருஷனா எனக்கு வாய்ச்சவன்.. காட்டுப் புலி! நின்னா தப்பு. குனிஞ்சா தப்பு. சிரிச்சா தப்பு. சீச்சீ... சீ... இந்த மனுஷனை கட்டிகிட்டு மாரடிக்கிறதவிட குளத்திலேயோ குட்டையிலேயோ விழுந்து சாகலாம் என்று கொதித்துக் குமுறும் மனைவிமார்களையும் பார்த்திருக்கிறோம்.

தம்பதிகளிடையே இத்தகைய சலிப்பிற்கும் சஞ்சலத்திற்கும் இடம் ஏற்படாத வகையில் ஒரு நூதனக் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறாராம் பிரிட்டிஷ் விஞ்ஞானி டாக்டர் வால்டர் என்பவர்.

இக்கருவியால் மூளை ரேகைகள் படம் பிடிக்கப்பட்டு, ஒருவர் சுபாவத்திற்கு இன்னொருவர் ஒத்துவருவார்களா என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு திருமணம் செய்து வைக்கலாமாம்.

இக்கருவி இங்கெல்லாம் பரவினால் ராசி பலன் கார்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே!

தென்னகம்
பொங்கல் மலர், 1971

Read more: http://viduthalai.in/e-paper/97370.html#ixzz3TcEUnTkT

தமிழ் ஓவியா said...

சந்தேகம் சார்!

சார் ஒரு சந்தேகம்!

என்னடா சந்தேகம்?

சரஸ்வதி எங்கு இருக்கிறாள்?

வெண்டாமரையில்!

அது எங்கே இருக்கிறது சார்?

பிரம்மாவின் நாவில்!

பிரம்மா எங்கே இருக்கிறார் சார்?

மகாவிஷ்ணுவின் தொப்புட் கொடியில்! (வயிற்றில் உதித்தார்)

மகாவிஷ்ணு எங்கு இருக்கிறார்?

ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல்!

அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்?

திருப்பாற்கடலில் உள்ளது.!

திருப்பாற்கடல் எங்கு உள்ளது சார்?

....?....?...? ஏய், நீ ஒரு கருப்புச் சட்டை..... நாத்திகன்... பகுத்தறிவுக்காரன்.. இரு இரு... உன்னை பரீட்சையில் கவனித்துக் கொள்கிறேன்.

-சி.பூபாலன், சி.இராசசேகரன்
சென்னை-40

Read more: http://viduthalai.in/e-paper/97370.html#ixzz3TcEbbIUF

தமிழ் ஓவியா said...

குழந்தைகள் திருமண தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது
உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சென்னை, மார்ச் 10_ மத்திய குழந்தைகள் திருமண தடைச் சட்டம் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதத்தினருக் கும் பொருந்தும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

பெரம்பலூரைச் சேர்ந்த அப்துல் காதரின் மகளுக்கு கடந்த 17.11.2012 அன்று திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. அப்போது, அந்தச் சிறுமிக்கு 18 வயது நிறை வடையவில்லை என சமூக நலத் துறை அதிகாரிக்கு புகார் சென்றது. இதையடுத்து சிறுமி யின் திருமணத்தை அதி காரிகள் தடுத்து நிறுத் தினர்.

பின்னர், அந்தச் சிறுமிக்கு 18 வயது நிறை வாகும்வரை திருமணம் செய்யக்கூடாது என பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட் டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அப்துல் காதர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சமூகநலத் துறை அதிகாரி விளம்ப ரம் பெறும் நோக்கத்தில் திருமணத்தை தடுத்துள் ளார். முஸ்லிம்களுக்கு தனிச் சட்டம் உள்ளது.

அந்த சட்டத்தின் அடிப் படையில், முஸ்லிம் பெண் ணுக்கு அவர் பருவம் அடைந்ததும் திருமணம் செய்துகொள்ளலாம். மத்திய குழந்தை திருமண தடைச் சட்டம் பொது வான சட்டம். அந்தச் சட்டம் முஸ்லிம்களுக்குப் பொருந்தாது என்றார்.

இந்த வழக்கு விசா ரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அங்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம் பிறப்பித்த உத் தரவு வருமாறு:

மத்திய குழந்தை திரு மண தடுப்புச் சட்டம் ஒரு மதச் சார்பற்ற சட்டமா கும். அந்த சட்டத்தின் அடிப்படையில் 18 வயது நிறைவடையாத பெண் ணுக்கு திருமணம் செய்து வைக் கக்கூடாது.

மேலும், இந்தச் சட்டம் முஸ்லிம் கள், இந்துக்களின் தனிச் சட்டங்களுக்கு அப்பாற் பட்டது. குழந்தைகள் திரு மணத்தை பொருத்தவரை முஸ்லிம்களுக்கு அவர் களின் தனிச் சட்டம்தான் பொருந்தும் என்பதை ஏற்க முடியாது. சிறப்பு காரணங்களுக்காக குழந் தைகள் திருமண தடுப்புச் சட்டம் கொண்டுவரப் பட்டது.

குழந்தைகளின் உடல் நலன், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சட் டம் நிறைவேற்றப்பட்டது. குழந்தைகள் திருமணச் சட்டத்தை மேலும் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு திரு மணம் செய்து வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப் படி செய்தால் மட்டுமே குழந்தைகள் திருமணம் எனும் தீய பழக்கத்தை தடுக்க முடியும்.

இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலன், பெண்ணின் கவுரவம் ஆகியவற்றை உயர்த்த முடியும். இது போன்ற திருமணங்களை தடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு.

மத நம்பிக்கை வேறு, உரிமைகள் என்பது வேறு. குழந்தைகளுக்கு திரும ணம் செய்து வைப்பது தங்களது உரிமை எனக் கூற முடியாது. குழந்தை கள் நலன், முன்னேற்றம் முக்கியமா அல்லது குழந் தைகள் திருமணமா என்ற கேள்விகள் எழும்போது, குழந்தைகளின் நலன், முன் னேற்றம்தான் முக்கியம். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97375.html#ixzz3TcFUkeMf

தமிழ் ஓவியா said...

இது நாடா? காடா?
உ.பி.சித்தார்த் நகரில் இந்து இளைஞர்களின் இட்லரிசம்!

சித்தார்த் நகர், மார்ச் 6_ சித்தார்த் நகரின் ஹிந்து வாகினி இளைஞர்கள் அனைத்து மசூதிகளிலும் காவிக்கொடி பறக்கவேண் டும் என்று சபதம் எடுத்து விட்டார்கள். இனி ஒவ் வொரு மசூதிகளிலும் அல்லாகு அக்பர் என்று ஒலிக்கவிடமாட்டார்கள் அங்கெல்லாம் ஹர ஹர மகாதேவ் என்று கூற வேண்டும், கூறவைப்போம் என்று சபதமெடுத்துவிட் டார்கள்.

இனி காலையில் எழுந்ததும் மசூதிகளில் இருந்து ஹர ஹர மகா தேவ் என்று ஒலிக்கவேண் டும், இந்த நாடு இந்து தேச மாக மாறி மேடையில் வீற் றிருக்கும் ஆதித்யநாத் போன் றவர்களின் கைகளில் இந்த நாடு ஒப்படைக்கப்பட்டு விட்டால் இங்குள்ள ஒவ் வொரு மசூதியிலும் பன்றி கள் வளர்க்கப்படும், அங் கெல்லாம் பன்றிப் பண் ணைகள் வைக்க முன்னுரி மையளிக்கப்படும்.

இந்து நாட்டில் முஸ்லீம்கள் இந் தியக்குடிமக்களாக இருக்க மாட்டார்கள், அவர்களின் அனைத்து அதிகாரங்களும் பிடுங்கப்படும், அவர்கள் வேண்டுமென்றால் இங்கே அடிமைகளாக இருக்கட் டும், அவர்களின் வாக்கு கள் பிடுங்கப்படும், அதன் பிறகு எந்த ஓர் அரசியல் வாதியும் முஸ்லீம்களின் வாக்குக்காக இந்துமதத்தை களங்கப்படுத்த முடியாது.

முஸ்லீமக்கள் எல்லாம் இந்துக்களாக மாற வேண் டும், அப்படி மாறாதவர் கள் உண்மையில் இந்து அப்பனுக்கு பிறந்திருக்க முடியாது; அவர்கள் உஸ் பெகிஸ்தான், அரபு நாடு களின் ஆண்களுக்குப் பிறந்தவர்களாக இருப்பார் கள்.

முஸ்லீம்பெண்களை சாகும்வரை பாலியல் வன்கொடுமை செய்யுங்கள், முஸ்லீம்களின் பிணங்கள் இருக்கும் கல்லறைகளில் உள்ள பிணங்களை எடுத்து நாய்களுக்குப் போடுங்கள், முஸ்லீம்களின் சகோதரி கள் மற்றும் அவர்களின் தாயார்களை விடாதீர்கள், முஸ்லீம் ஆண்களை வெட்டிப்போடுங்கள்.

இந்து யுவா வாகினி இதைச் செய்யும்! இதைச் செய்வதற்கு இந்துக்கள் யாரும் தயங்கவேண்டாம்! இது இந்து நாடு, இங்கு இந்து மாத்திரமே வசிக்க வேண்டும். அடுத்து நமது பரம்பூஞ்ய யோகி ஆதித்ய நாத் உங்களிடம் உரையாற் றுவார் இத்துடன் முடித் துக்கொள்கிறேன்.

இவ்வாறு இண்டியா டைம்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97380.html#ixzz3TcFjQm7H

தமிழ் ஓவியா said...

2000 ஆண்டு பழங்குடி மன்னர் பரம்பரை

உலகின் மிகப் பழமையான மன்னர் வம்சம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிந்து-போனது. அதுவும் இந்தியாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மன்னர் ஒருவரின் தத்துப் பிள்ளையாக எடுக்கப்பட்டு மன்னர் ஆனவர். இந்தியாவின் முதல் சூத்திரப் பேரரசு மவுரியப் பேரரசு. அதைப்போலவே பழங்குடி மன்னர் பரம்பரை ராடு எனும் சமஸ்தானத்தை ஆண்ட பரம்பரை. அதன் கடைசி மன்னரான சிந்தாமணி ஷரன்நாத் சகாதேவ் எனும் பெயர் கொண்ட ராடு மகாராஜாதான் கடந்த ஜூலை மாதத்தில் மறைந்து போனார். அவருக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே அந்த மன்னர் பரம்பரை தொடர வாய்ப்பில்லை. உலகின் மிகப் பழமையான மன்னர் பரம்பரைகளில் எஞ்சியிருப்பவை ஜப்பான் மன்னரும், கொரியாவின் ஹாங் பாங் பரம்பரையும், பல்கேரிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவரும்தான் இன்றைய நிலையில் இருப்பவர்கள்.

ராடு மகாராஜா பரம்பரை கடந்த 1950 ஆண்டுகளாக இருந்துவந்தது ஆகும். கி.பி.64இல் தொடங்கிய வம்சம் கி.பி.முதல் நூற்றாண்டில் மத்ரா முண்டா எனும் பழங்குடி மன்னர் பானி முகுத்ராய் என்பவரை சுவீகாரம் எடுத்தார். அவரது வாரிசுகள்தாம் ராடு ராஜாக்கள் என்கிறது வரலாறு.

ராடு ராஜ்யத்தின் கோட்டை கொத்தளங்-களைப் பேணி வருவதற்கெனத் தனியான அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டை 103 அறைகளைக் கொண்டது. இங்கிலாந்து நாட்டின் பக்கிங்காம் அரண்-மனையைப் போலவே கட்டப்பட்டுள்ளது. இம்மன்னர் பரம்பரையின் தனிப்பெரும் சிறப்புகளை கடைசி மன்னரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான ராஞ்சியிலுள்ள கல்லூரிப் பேராசிரியர் அதிதேந்திரநாத் சகாதேவ் கூறியிருக்கிறார்.

குடிமக்களிடம் வரி ஏதும் வசூலிக்கப்பட்டது கிடையாது. நவராத்திரி பண்டிகையின்போது பழங்குடிகளின் தலைவர்கள் தரும் தான்யங்கள், ஆடு, மாடுகள் தவிர வேறு எதையும் மன்னர்கள் பெற்றுக் கொண்டதில்லை. ஆனாலும் பெரும் பரப்பிலான நிலங்களை மன்னர்கள் கல்வி, மதம், மற்ற தேவைகளுக்காக நன்கொடை அளித்தது ஏராளம். இந்தத் தானங்களுக்காக மன்னர் விதித்த நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். மன்னர் தானம் தந்ததாகத் தெரிவிப்பதோ, குறிப்பு எழுதுவதோ, கல்வெட்டுப் பதிப்பதோ கூடாது என்பது மட்டுமே நிபந்தனை. தமிழ்நாட்டு நிலையோடு பொருத்திப் பாருங்கள் விளம்பர உத்திகளை! மக்கள் பணத்தில் மக்களுக்காகச் செலவு அழிப்பதில் செய்யப்படும் விளம்பரங்களை, பொறிக்கப்படும் சலவைக் கல்வெட்டுகளை! சொந்தச் சொத்தைத் தந்தவர் விளம்பரமே கூடாது என்கிறார். கிறித்துவ தேவாலயம், காவல் நிலையம், ராஞ்சி பொழுதுபோக்கு மன்றம் முதலிய எல்லாமே அவருடைய நிலத்தில்! ஒரு கல்வெட்டும் இல்லை.

வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்தே கோடீசுவரக் கொடிகட்டிப் பறந்தது பிர்லா குடும்பம்! அதன் ஆதிகர்த்தா பல்தேவ் தாஸ் பிர்லா! பிரிட்டிஷ் அரசிடம் ராஜா பட்டம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். (செட்டி நாட்டு அரசர் அண்ணாமலை செட்டியாரும் இப்படி ராஜா பட்டம் வாங்கியவர்தான்.) பணம் வைத்திருந்த பிர்லா நிலம் வைத்திருக்கவில்லை. ராடு மன்னரான பிரதாப் உதயநாத் சகாதேவ் என்பாரை அணுகினார். அற்பத் தொகையைப் பெற்றுக்கொண்டு லோகர்தாகா எனுமிடத்தில் பெரும் பரப்பளவு நிலத்தைக் கொடுத்தார். நன்றிக் கடனாக ஒவ்வொரு ஆண்டு நவராத்திரி பண்டிகையின்போது பிர்லா மன்னரைச் சந்தித்து தங்க நாணயம் ஒன்றைத் தருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அவருடைய நாட்டில் கிளர்ச்சி ஏதும் நடந்ததில்லை. சண்டைகள் போட்டதோ, வென்றதோ பற்றிய குறிப்பும்கூட இல்லை. ஆயுதங்கள் எதுவுமே மன்னரின் கோட்டையில் கிடையாது. வரவேற்பறையில் பழங்காலப் போர்வாள் ஒன்று மட்டுமே உண்டு. காட்சிப் பொருளாக!

வங்காளத்திலிருந்து வந்த ராணி லட்சுமண் குன்வர் என்பவர் துர்கா பூஜையை இம்மன்னரிடமும் மக்களிடமும் புகுத்தியிருக்-கிறார். இதே வங்காளத்தவர்தான் கிருஷ்ண வழிபாட்டை குஜராத் மாநிலத்தில் புகுத்தியவர்கள்.

மன்னர் பரம்பரையில் பெண்கள் சமமாக நடத்தப்பட்டனர். மகளுக்கும் மருமகளுக்கும் ஆண்களைப் போலவே அனைத்து உரிமைகளும்!

சூத்திரன் எனக் கூறி சிவாஜிக்குத் தொல்லை தந்த ஆரியக் கொடுமைகளை நினைத்துப் பாருங்கள்! இந்நாட்டுப் பூர்வ குடியைச் சேர்ந்த மன்னர்களின் நடத்தையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! வந்தேறிகளின் வஞ்சக வலையைப் புரிந்து கொள்ளுங்கள்!

- அன்றில்

தமிழ் ஓவியா said...

அன்னை நாகம்மையாரின் ஒப்பற்ற தொண்டு


பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அன்னை நாகம்மையார். சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் பிறந்தவர். தந்தை பெரியாரின் தாய் சின்னத்தாயம்மையாரின் ஒன்றுவிட்ட தம்பி மகளாவார். பள்ளி சென்று கல்வி கற்கவில்லை எனினும் உலக அறிவில் சிறந்து விளங்கினார். பெரியார் அவர்களை மணந்துகொண்ட பின், பெரியாரின் பொதுவாழ்வுக்கு உறுதுணையாக, மேடைப் பேச்சுக்கான தனித்த ஆற்றலை வளர்த்துக் கொண்டு பொதுவாழ்விற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டார்.

1920ஆம் ஆண்டு தந்தை பெரியார் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது கதர் உடுத்தி எளிய தோற்றத்திற்கு மாறினார். பூவும் பொட்டும் பிற அணிகலன்களும் அடிமைச் சின்னங்கள் என சுயமரியாதை இயக்கம் பிரகடனப்படுத்தியபோது அவற்றைத் துறந்து பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.1921ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலின்போது அரசாங்கம் 144 தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. தந்தை பெரியாரும், அவரது தொண்டர்களும் தடையை மீறியதால் கைது செய்யப்பட்டனர். மறுநாள் அன்னையார் தந்தை பெரியாரின் தங்கை ஆர்.எஸ்.கண்ணம்மாளுடன் சென்று தடையுத்-தரவை மீறினார். மறியலை நிறுத்துவதென்றால் ஈரோட்டில் நாகம்மையாரைத்தான் கேட்க வேண்டும் என்று காந்தியாரே கூறியுள்ளதி-லிருந்து அம்மையாரின் உறுதியினைத் தெரிந்து கொள்ளலாம். திகைப்படைந்த அரசு, உடனே தடையுத்தரவை நீக்கியது.

1924ஆம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் போராட்டத்திலும் பங்கு கொண்டதுடன், பல பெண்களையும் பங்கு கொள்ளச் செய்தார். இவர் தலைமையேற்று வைக்கம் தெருக்களில் பெண்கள் படையை நடத்திச் சென்ற பாங்கு இப்போராட்டத்தின்பால் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்ச்சிகளை இப்போராட்டம் தட்டி எழுப்பியது! இதுகுறித்து தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்,

வீட்டின் ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார், தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்தவேண்டி வைக்கம் சத்யாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூட்டினார் என்று பாராட்டி எழுதினார்.

1925ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. குடிஅரசு பத்திரிகையும் வெளிவந்தது. தாம் இருக்கும்வரை குடிஅரசு பத்திரிகையின் பதிப்பாசிரியராகவும் பிரசுரகர்த்தாவாகவும் இருந்துள்ளார். சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்றதற்கும் அதில் பெண்கள் நிறையப் பேர் கலந்து கொண்டதற்கும் அன்னையாரே காரணம். அவர் தமது கணவரின் எல்லா முயற்சிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்ததே சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிக்குக் காரணமாகும். எல்லோரையும் அன்புடன் உபசரிப்பார். பொதுஜன நன்மைக்காக வேலை செய்த எல்லா இளைஞர்களையும் பெண்களையும் தமது சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து வந்தார். அவர் தமது சிறந்த கொள்கைகளுக்காக வேலை செய்தவர்களுக்-கெல்லாம் ஒரு தாயாக இருந்தார். அவர்களுடைய சொந்த சவுகரிங்களை அவர் தாமே நேராகக் கவனித்து வந்தார். சமூகப் போராட்டத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு அவர் அபயம் அளித்தார் என்று தோழர் எஸ்.ராமநாதன் கூறியுள்ளார்.

அன்னையாரின் மலாய் நாட்டுப் பயணத்தைப்பற்றி, சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த முன்னேற்றம் பத்திரிகை, அவர்களின் மலாய் நாட்டு விஜயத்தால் மலாய் நாட்டு மக்கள் எல்லாம் அவருக்கு அறிமுகமானார்கள். மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கம் அதிதீவிரமாய்ப் பரவியிருந்ததைப் பார்த்த அன்னையார் அடைந்த களிப்பு அளப்பரியது. சிங்கப்பூருக்கு வந்திருந்து திரும்புங்கால் அவர்களுக்கு விருப்பமான _ தேவையான மலாய் நாட்டுப் பொருள் என்ன வேண்டுமென்று நாம் கேட்டதற்கு நீங்கள் எல்லாம் இம்மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைப் பரப்பியிருப்பதே நான் விரும்பும் பொருள் என்று அன்னையார் சொல்லிய வார்த்தைகள் இன்னும் நமது செவியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வீராங்கனையாய், ஒரு சமுதாயப் போராளியாய், ஓர் அன்னையாய் அருந்தொண்டாற்றிய அன்னை நாகம்மையார் 11.5.1933 அன்று மறைந்து சுயமரியாதை இயக்கத்தின் பொன்னேடுகளில் பொறிக்கத்தக்க பொன்னொளிச் சுடரானார்.

தமிழ் ஓவியா said...

அன்று.. நரேந்திர தபோல்கர்

இன்று ... கோவிந்த் பன்சாரே படுகொலை?

மகாராட்டிர மண்ணில் ஜாதீய வாதம், மதவாதம், மூடநம்பிக்கை இவற்றுக்கு எதிராக இயக்கம் நடத்திய நரேந்திர தபோல்கர் இந்துத்துவ வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் (2012 ஆகஸ்டு). இப்பொழுது அதே பணிகளைச் செய்து வந்தவரும், அம்மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தவருமான தோழர் கோவிந்த் பன்சாரே மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருவருமே நடைப்பயிற்சி சென்றபோதுதான் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நரேந்திர தபோல்கரைச் சுட்டுக் கொன்ற கொலையாளிகள்தான் இவரையும் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

நரேந்திர தபோல்கரைச் சுட்டுக்கொன்ற கொலையாளிகளை இதுவரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தாத நிலையில், அடுத்த கொலையும் இப்பொழுது நடந்திருக்கிறது. (அன்று காங்கிரஸ்; இன்று பா.ஜ.க. ஆட்சி)

தோழர் கோவிந்த் பன்சாரே வலதுசாரி மதவாத அரசியலுக்கு எதிராகச் சிம்மக் குரல் கொடுத்து வந்தவர்; சாமியார்களுக்கு எதிரான கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்; உயர் ஜாதி ஜாட் பிரிவினரின் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்தவர்.

சிவாஜியை இந்துத்துவாவாதிகள் தங்களின் மதவெறி அரசியலுக்குத் தூக்கிப் பிடித்ததை, தக்க வெளியீடுகள் மூலம் தூள் தூளாக்கியவர்!

சிவாஜி பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பன்சாரே காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்குச் சிலை எழுப்ப வேண்டும் என்று கூறப்பட்டதைக் கடுமையாகச் சாடினார்; அதே நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த வெறியன், தோழர் பன்சாரேயின் கருத்திற்கு எதிராக மேடையில் ஏறி வெறிக் கூச்சல் போட்டுள்ளான். நாதுராம் கோட்சே உண்மையான தேச பக்தர் என்று கூறியதோடு பன்சாரேயின் பேச்சை எதிர்த்து நீதிமன்றம் செல்லுவேன் என்றும் மிரட்டியிருக்கிறான். தோழர் கோவிந்த் பன்சாரே பதற்றம் சிறிதும் அடையாமல் அமைதியாக, தாராளமாக வழக்குப் போடுங்கள் இதே கருத்தை அங்கும் வந்து சொல்லுவேன் என்று கூறியிருக்கிறார்.

அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதில் இந்த இந்துத்துவா பின்னணி இருக்கிறது என்பதில் அய்யமில்லை.

நாடு ஒரு மோசமான தருணத்தில் இருக்கிறது; இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும்; அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதற்கு எதிரான மதவெறி சக்திகள் படுகொலைக் கருவியைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.

மதவெறி நஞ்சை அன்றாடம் கக்கிவரும் சக்திகள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களை இயக்குவிக்கும் இடத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில், மதச் சார்பின்மை சக்திகள், இடதுசாரிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும், போராடவும் முன்வர வேண்டும்.

மதம், பக்தி என்பவை எல்லாம் தனி மனிதனைச் சார்ந்தது; வீட்டுக்குள் பூஜை அறைக்குள் முடங்கிக் கிடக்கட்டும்!

மனித உரிமைக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் பேரச்சுறுத்தலாக இருக்கும் இந்தப் போக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

நேர்மையான சட்ட ஆட்சி - நீதிமன்றத்தின் பொறுப்பு, ஊடகங்களின் கடமை இவற்றின் பங்களிப்பும் இதில் மிக முக்கியமானதாகும்! தேவையுமாகும்.

21ஆம் நூற்றாண்டில் முற்போக்குச் சமுதாயம், சரிநிகர் வாழ்வு மணக்கும் அத்தியாயம் மலர வேண்டுமே அன்றி, மதவெறிப் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகி, நாளும் கலவரச் சூழலும், அமைதியைத் தொலைத்த அருவருக்கத்தக்க நிலையும் நிலவ வேண்டுமா என்பதை முடிவு செய்வோம்! அரசியலுக்கு அப்பாற்பட்டு பகுத்தறிவுப் பிரச்சாரம் சுழன்றடிக்கட்டும்! சுழன்றடிக்-கட்டும்!!

அவருக்கு நமது வீர வணக்கம்; பல தபோல்கர்களும், பன்சாரேகளும் உருவாவது நிச்சயம். அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கல்.

நரேந்திர தபோல்கர்களுக்கும், கோவிந்த் பன்சாரேக்கும் நாம் காட்டும் உண்மையான மரியாதை இதுதான். வன்முறை ஆயுதம் -_ பகுத்தறிவு முற்போக்கு பொதுவுடைமைச் சித்தாந்தங்களை வீழ்த்த முடியாது என்றே செயலில் காட்டுவோம் _ - வாரீர்!

கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உயிரியல் அடிப்படையில் அனைவரும் ஓர் இனமே!


மொழி மக்களை நிலத்தோடு பிணைக்கும் கருவி, மொழி மக்களை நிலத்தோடு பிணைக்கும் வேலையை மட்டும் செய்வதில்லை. அதற்கும் மேலாக அந்த மக்களின் வரலாற்றைத் தன்னியல்பாக எழுதும் ஒரு கருவியாகவே மொழி வளர்கிறது, ஆரியப் புனைவுகளை முன்னிறுத்தும் பல்வேறு தரப்பு மனிதர்கள் இன்றும் ஊடகங்களில் கிடைக்கிற இடைவெளிகளில் எல்லாம் சமஸ்கிருதம் தேவ மொழி என்றும், எல்லா உலக மொழிகளுக்கும் தாய் என்றும் ஒரு கடைந்தெடுத்த பொய்யை உளறிக் கொண்டே இருப்பார்கள்.

இந்திய மொழிகளைப் பற்றி ஆய்வு செய்த ருஷ்ய அறிஞர் நிகிதா குரோவ் இதற்கான விடையை நமக்குச் சொல்கிறார். சமஸ்கிருதத்தின் அறியப்பட்ட முதல் நூலான ரிக் வேதத்தில் ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட திராவிட மொழிச் சொற்கள் இடம் பெறுகின்றன. வெவ்வேறு காலத்தில் இந்திய மொழிகளை ஆய்வு செய்த பல அறிஞர்கள் இவரது மேற்கோள்களை வழிமொழிகிறார்கள்.

உலகின் முதன் மொழி என்று பார்ப்பனர்-களால் தொடர்ந்து சொல்லப்படுகிற சமஸ்கிருதம் திராவிட மொழிக் குடும்பத்தின் சொற்களை வைத்தே தனது வேதப் பாடல்களைத் தொடங்கியது என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிடாதீர்கள். குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் நமது மொழியின் தொன்மையையும், சிறப்பையும் நினைவூட்ட மறந்து விடாதீர்கள். ஏனெனில், மொழியின் இருப்பே ஒரு மனிதக் குழுவின் ஏற்றமாகவும், வீழ்ச்சியாகவும் வரலாற்றில் இடம் பிடிக்கிறது. மொழி நிலத்தோடு நம்மைப் பிணைப்பது மட்டுமல்லாமல், அரசியல் அதிகாரமாகவும் பொருளாதாரக் காரணியாகவும் நிலைகொள்கிறது.

இந்திய வரலாற்றின் பக்கங்களில் வருணமும், அதன் கொடூரமான தாக்கமும் இன்று வரை ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பிறப்பால் உயர்ந்தவர் என்றும், ஏனைய மனிதக் குழுக்களை அவர்களுக்குக் கீழானவர்கள் என்று சொல்வதற்கு எப்படி மிக முக்கியமான காரணியாக இருக்கிறதோ அதற்குக் குறையாத காரணியாக மொழியின் கூறுகளை, மொழியின் வரலாற்றை நாம் அறியாமல் போனதும், கற்பிக்காமல் போனதும் ஆகும். இனக்குழு வரலாற்றிலும், உயிரியல் கோட்பாட்டிலும் உயர் ஜாதி என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிற ஒரு மனிதனின் குழந்தைக்கும், உங்கள் குழந்தைக்கும் எந்த வேறுபாடுகளும் இல்லை என்று ஆய்வுகளும், அறிவியலும் சொல்லும்போது நீங்கள் ஏன் அந்த ஆரியப் புனைவை இன்னமும் பின்பற்றுகிறீர்கள், நம்புகிறீர்கள். உங்கள் உடலும், உங்கள் உணர்வுகளும் மேன்மையானவை, வேறெந்த மனிதருக்கும் நிகரானவை என்கிற அடிப்படை உண்மையை உணரும் கணத்தில் இருந்துதான் உங்கள் வரலாறு தொடக்கம் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

மதமும், மத நூல்களும் இந்திய சமூகத்தின் வருணக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஆரியப் புரட்டர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதம். அவற்றுக்கு எதிரான அறிவுப் புரட்சியை நமது குழந்தைகளுக்கு நாம் இன்னமும் கற்றுத் தரவில்லை.

இன்றுவரை இந்தியா முழுவதும் ஆட்சி அதிகாரம், பொருளாதார நிலை, சமூக வாழியல் நிலை என்று எல்லாப் பக்கமும் ஆரியக் கோட்பாட்டின் மய்யக் கருத்தான, அறிவியலுக்கு எதிரான, பிறப்பால் உயர்நிலைத் தகுதியைப் பெறுகிற வருணக் கோட்பாட்டின் வழி வந்தவர்களே கோலோச்சிக் கொண்டு இருக்கிறார்கள். கடவுளுக்கு அருகில் இருக்கிற மனிதனாகத் தன்னை அடையாளம் செய்து கொண்டு, ஏனைய அனைத்தையும் தனக்கு அடிபணிகிற குழுக்களாக வைத்துக் கொள்வதில் வெற்றி பெறுகிற கோட்பாட்டையே ஆரியம் என்கிறோம்.

அண்ணல் அம்பேத்கர், "அடிமைகளாக எமது மக்கள் இருப்பதுகூட அவமானமில்லை. ஆனால், தாங்கள் அடிமைகள் என்பதையே அறியாமல், தமக்குக் கிடைத்த பெருமை என்கிற மனமயக்கத்தில் உழல்கிறார்களே" என்று கூறுவார். அவரது சொற்கள் மத மயக்கத்தில் வீழ்ந்து வருணக் கோட்பாட்டின் படிநிலை-களில் தன்னைப் பொருத்திக் கொள்கிற எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.

இந்திய சமூகம் முழுவதும் அப்படியான ஒரு மன மயக்கத்தில்தான் உழன்று கொண்டிருக்-கிறது. இனக்குழு வரலாற்றையும், உயிரியல் வரலாற்றையும் நாம் தொடர்ந்து மீட்டுருவாக்கம் செய்வதன் காரணம் இந்திய சமூகத்தில் மனித உயிரியல் என்கிற காரணியைப் பின்னுக்குத் தள்ளி பிறப்பால் ஒரு குழு உயர்ந்தது என்கிற பொய்யை எல்லா இடங்களிலும் பரவச் செய்திருப்பதுதான். பழங்குடி இந்தியர்களின் கலாச்சாரமும், பண்பாடும், உழைப்பும், பொருளாதாரமும் சுரண்டப்பட்டு உயர் ஜாதி என்கிற அரணைச் சுற்றிக் கட்டிக் கொண்டு ஒய்யாரமாக இந்த வருண ஜாதி அமைப்பின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் மனிதக் குழுக்களின் கோட்பாடே நம்மைப் பொருத்தவரை ஆரியக் கோட்பாடு. பிறப்பால் நான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற இந்த உளவியல் நோய் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்ட கொடுநோய்.

ஆரியக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து வரலாற்றில் இரட்டை வேடம் போடுவதை நம்மால் பார்க்க முடியும். எப்போதெல்லாம் அவர்களின் இருப்புக் குறித்த வரலாறு கேள்விக்கு உள்ளாக்கப்-படுகிறதோ அப்போதெல்லாம் ஆரியக் குடியேற்றம் பொய் என்றும், அது நிகழவே இல்லை என்றும் வாதிடுவார்கள். எப்போ-தெல்லாம் வெற்றி கிடைக்கிறதோ அப்போ-தெல்லாம் ஆரியக் குடியேற்றம் மட்டுமல்லாமல், அவர்களின் வருகையும், இலக்கியமும், பண்பாடும்தான் இங்கே எல்லாவற்றையும் கட்டமைத்தது என்று உறுதியாகச் சொல்வார்கள்.

பிறப்பால் நான் உயர்ந்தவன் என்கிற அறிவியலுக்கு எதிரான பிற்போக்குக் கதைகளை நெடுங்காலமாக இந்த மண்ணில் கட்டவிழ்த்து அதன் மூலமாகவே உழைப்பையும், பொருளையும் சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்வது மட்டுமல்லாது, பல கோடிக் குழந்தைகளின் பிறப்பைக் கேலி செய்தும், அவர்களின் உளவியலைச் சிதைத்தும் சமூகக் கட்டமைப்பை அறிவியலுக்கு எதிரான மூடத்தனங்களால் நிரப்பிய கோட்பாடே ஆரியம் என்கிற நாசிசக் கோட்பாடு. பிறப்பால் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்கிற கோட்பாடு அறிவின் மீதும் மனித உடல் மற்றும் உயிரின் சமநிலை மீதும் நம்பிக்கை அற்ற பிற்போக்குக் கோட்பாடு, அத்தகைய கோட்பாட்டின் எல்லா முடிச்சுகளும் இந்திய சமூகத்தின் வேர்களில் மதம் மற்றும் ஏனைய சமூகப் பழக்கங்களின் வழியாகப் பிணைக்கப்-பட்டிருக்கிறது. இந்தச் சிக்கலான அடிமைத்தனத்தின் வேர்களை அறுத்து விடுதலை பெற்ற மானுட சமூகத்தின் தலைமுறையாக நமது குழந்தைகளை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை. கடமை மட்டுமல்ல, அடிப்படை உரிமையும்கூட.

உயிரியல் அடிப்படையில், மனித உளவியல் அடிப்படையில் மனித இனக்குழுக்கள் எல்லாம் சமநீதியும், உரிமையும் பெற்றவை என்கிற எளிய உண்மையை நமது குழந்தைகளுக்குத் தீவிரமாகக் கற்றுக் கொடுக்க வேண்டிய காலமிது. உளவியல் வழியாக காலம் காலமாக அவர்களின் மரபு நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. கல்வியும், முறையான உளவியல் வழிகாட்டுதலும் இல்லாமல் அவர்களை விடுதலையை நோக்கிச் செலுத்துவது இயலாத ஒன்று.

இறுதியாக அறிவியலுக்கு எதிரான, மானுட சமநீதிக்கு எதிரான ஆரியம் போன்ற பிறவி உயர்வுக் கோட்பாடுகளை உடைக்க நாம் எந்தத் தளங்களில் பணியாற்ற வேண்டும் என்பதை அடுத்த பகுதியில் ஆய்வு செய்வோம்.

- அறிவழகன் கைவல்யம்

(தொடரும்)

தமிழ் ஓவியா said...

ஊன்றிப் படிக்க! உண்மையை உணருக!


வந்தவர் மொழியா?
செந்தமிழ்ச் செல்வமா?

கணம்

இயல்பாக ஒருவன் கண் இமைக்கும் நேரத்திற்குப் பெயர். இச்சொல் கண் என்பதிலிருந்து பிறந்தது. கண் அம் கணம் ஆகி, அது கண்ணிமைக்கும் நேரத்திற்கானதை ஈறு திரிந்தோர் ஆகு பெயர் என்பர்.

இவ்வாறு கண் என்பது அம் பெறாமலே கண்ணிமைப்போது என்ற பொருள் தருவதும் உண்டு.

கயற்கணின் அளவும் கொள்ளார்
(சீவக சிந்தாமணி 1393)

என்று வந்துள்ளதும் கருதத்தக்கது. எனவே கணம் வந்தவர் சொல்லன்று. செந்தமிழ்ச் செல்வமே என்று கொள்க. இதைப் பார்ப்பனர் க்ஷணம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள். கணமும் க்ஷணமும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றன. கணம் என்ற தமிழ்ச் சொல் பழந்தமிழ் நூல்களில் நாம் எடுத்துக் காட்டியுள்ளவாறு காரணப் பெயராய் வந்துள்ளது. இந்நிலையில் நாம் அறிய வேண்டியது என்னவெனில், வந்தவர் நம் தமிழாகிய கணத்தை க்ஷணம் என்று தம் வாய்க்கு வந்தவாறு சொல்லிக்-கொண்டார்கள் என்பதே.

தானம்

தன்மை என்பது மைஈற்றுப் பண்புப்பெயர் ஆகும். மை ஈற்றுப் பண்புப் பெயர்கள் அனைத்தும் பல மாறுதல்களை அடையும்.

ஈறு போதல் இடை உகரம் இய்யாதல்
ஆதிநீடல் அடி அகரம் ஐயாதல்
தன் ஒற்று இரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இனம்மிகல் இணையவும் பண்புக்கியல்பே

என்ற நன்னூற் பாட்டினால் இன்னின்ன மாறுதல் அடையும் என்பது அறிக. மேற்சொன்ன தன்மை என்ற பண்புப் பெயர் ஈறுபோதல் என்ற சட்டத்தால் மை கெட்டுத் தன் என நின்றது. அந்தத் தன் என்பது ஆதி நீடல் என்ற சட்டத்தால் தான் என நீண்டு நின்றது. அந்தத் தான் என்பது அம் என்ற பண்புப் பெயர் இறுதிநிலை பெற்றுத் தானம் ஆயிற்று. தானம் என்பதன் பொருள் தன்மை, உயர்வு என்பன. எனவே, தானம் என்பது கொடைத்தன்மை என்று உணர்தல் வேண்டும்.

தானம் என்பது ஈண்டுக் காட்டிய பொருளில் அமைந்து இருப்பதை அடியில் வரும் சிந்தாமணிச் (2924) செய்யுளாலும் அறியலாம்.

கருங்கடற் பிறப்பின் அல்லால்
வலம்புரி காணுங் காலைப்
பெருங்குளத் தென்றும் தோன்றா
பிறை நுதல் பிணையினீரே.
அருங் கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம்
தெரியின் மண்மேல்
மருங் குடை யவர்கட் கல்லால்
மற்றையவர்க் காவ துண்டோ.

இச் செய்யுளில் வந்துள்ள அருங்கொடைத் தானம் என்ற தொடர் மேலே நாம் காட்டிய வண்ணம் தானம் என்பது தன்மை என்று பொருள்படுவது காண்க.

எனவே, தானம் என்ற சொல் தூய தமிழ்ச் சொல் அன்றோ? இதைப் பார்ப்பனர் வடமொழிச் சொல் என்று கயிறு திரிப்பர். தானம் என்ற சொல் வடவர் இலக்கியத்திலும் இருக்கின்றதே எனில், ஆம், வந்தேறிகளாகிய வடவர் தமிழினின்று எடுத்துக் கொண்டார்கள் என்றோ அறிய வேண்டும்.

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

(குயில், 1.6.1958)

தமிழ் ஓவியா said...

கருத்து


பொதுத்துறை நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் ஆராய்ச்சிகள் தொழில்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சோதனைக்-கூடங்களோடு மட்டும் நின்றுவிடாமல் ஆராய்ச்சிகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும். இனிவரும் காலங்களில் நடக்கவிருக்கும் ஆராய்ச்சிகளும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துகின்ற வகையில் இருக்க வேண்டும்.

- கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை அங்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் இல்லை. எனவே, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதியை மாவட்ட அளவில் ஒரு மருத்துவ-மனையிலாவது ஏற்படுத்த வேண்டும். மருத்துவ சேவைகள் அனைத்தும் மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

- செலமேஸ்வர், உச்ச நீதிமன்ற நீதிபதி.

வளர்ச்சி என்று கூறிக்கொண்டு மக்களிடம் கருத்துக் கேட்காமல் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தும் முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் அதுபற்றிக் கருத்துக் கேட்க வேண்டும். மக்களுடைய ஒத்துழைப்புடன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

இந்தத் திட்டம் பற்றிய விவரங்கள், ஆய்வுகள் முழுவதையும் தமிழில் மொழிமாற்றம் செய்து கிராம சபைகளில் மக்கள் தெரிந்துகொள்ள அரசு செய்ய வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

- மேதா பட்கர், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்புத் தலைவர்

குடியரசு தின அணி-வகுப்புக்கு ரூ.100 கோடி செலவழிக்கிறீர்கள். ஆனால் ஏழை விவசாயிகளின் நிலத்திற்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகிறீர்யீகள். வழக்குத் தொடர்வதற்கு செலவழிக்க முன்வரும் நீங்கள் ஏன் இழப்பீடு தரத் தயங்குகிறீர்கள்?

- எச்.எல்.தத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.

தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக் கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியம். பள்ளிக் கல்வியை மாணவர்களுக்கு நல்ல அனுபவக் கல்வியாக மாற்றினால் மட்டுமே தகுதிவாய்ந்த, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். இப்போது இருக்கும் பாடத்திட்டத்தில் 25 விழுக்காடு குறைத்து தொழில்திறன் மேம்பாடு உள்ளிட்ட பாடத்திட்டங்களைக் கற்பிக்க வேண்டும்.

- ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்.

குழந்தைத் திருமணம், பள்ளிகளில் பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்-படுவதாலேயே இத்தகைய குற்றங்கள் நிகழ்கின்றன.

குழந்தைகள்மீது நடத்தப்படும் குற்றங்கள் குறித்து காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகிய அரசு அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

- வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

தமிழ் ஓவியா said...

மணியம்மையாரை அன்னை என்பது ஏன்?

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மார்ச் - 10

மணியம்மையாரை அன்னை என்பது ஏன்?

புகழக்கூடாத மணியம்மையாரை அன்னை எனப் புகழ்கிறீர்களே! இது சரியா? என்று மணச்சநல்லூரிலிருந்து ஒருவர் கேட்ட கேள்விக்கு சூடாக புரட்சிக்கவிஞர் அளித்த பதிலிருந்து சில பகுதிகள் இதோ!

நாம் இளைமைப் போதில் முருகனைப் புகழ்ந்தோம் _ பாடினோம் _ ஆனால் நாளடைவில் முருகன் புகழத்தக்க ஒரு பொருளன்று. பாடத்தக்க ஒருபொருளன்று எனக் கண்டோம். முருகனைப் புகழ்வதை விட்டோம். முருகனைப் பாடுவதை விட்டோம்.பாரதி தமிழ்ப் பாட்டுக்கு ஒரு புதுநடை கண்ட புலவன். பாரதியைப் புகழ்ந்தோம் _ பாடினோம் _ இதைச் சிலர் எதிர்த்தார்கள். பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதை எதிர்த்து வருகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பை நாம் பொருட்-படுத்தவில்லை. ஆனால் நாம் புகழ்வதற்கும் புகழ்ந்து பாடுதற்கும் பாரதியைவிட ஒருவர் இருக்கிறாரா? அவர் யார் என்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

தாம் போகும் வழியை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன் தமிழரைக் காப்பேன். ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல; மலைமேல் நின்று மெல்ல அல்ல தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.

அது மட்டுமல்ல.

குன்று உடைக்கும் தோளும் நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம். பெரியாரைப் புகழ்ந்து பேசினோம்; புகழ்ந்து எழுதினோம்; புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ நாம் பாட இன்னும் ஒரு மேலான ஒரு பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

பெரியார் செத்துக் கொண்டிருந்தார்! தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்.

ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரை _ போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு. மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.

ஆயினும் காற்றிறங்கிப் பொதிமாடுபோல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒரு பால் ஒட்டிய ஆண் குறியினின்று முன்னறிவிப்பின்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந் தொண்டால் முடியாது. அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது; வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு

ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை,

அன்னை என்று புகழாமல் நாம்வேறு

என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகுபெறக் கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார், ஏதுங்கெட்ட வேலைக்காரி போல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை என் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை; எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டைக் கட்டுவதன்றி அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலையில் வைத்தார் என்பதும் இல்லை.
மணச்சநல்லூராரே,

நான் யாரைப் புகழ வேண்டும்?

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், (குயில் 10.5.1960; 2,3)

தமிழ் ஓவியா said...

மகளிர் சமுதாய மேன்மைக்கான அரசுப் பணிகளில்
பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு திட்டம்

சம சொத்துரிமை வழங்கிட தனிச் சட்டம் நிறைவேற்றம் கலைஞர் அறிக்கை

சென்னை, மார்ச் 7_ இந்தியாவிலேயே முதன் முறையாக அரசுப் பணி களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடும் திட்டம்! பெண்களுக்குச் சம சொத் துரிமை வழங்கிட தனிச் சட்டம்! உள்ளாட்சி அமைப்புகளில் பெண் களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!! போன்ற மகளிர் சமுதாய மேன்மைக்கு மகத்தான பல சட்டங் களையும், திட்டங்களை யும் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது என உலக மகளிர் நாள் (மார்ச் 8)யொட்டி இன்று (7.3.2015) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத் துள்ள வாழ்த்து செய்தி யில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

உலக மகளிர் நாள்!

19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய அய்ரோப் பிய நாடுகளிலும், பின்னர் அமெரிக்காவிலும், ரஷ்யா விலும் ஆயிரக்கணக்கில் மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை, வாக் களிக்கும் உரிமை முதலிய வற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போரா டினர். அப்போராட்டங் களின் ஒருகட்டத்தில் பிரான்சில், புருஸ்ஸிய னில் இரண்டாவது குடி யரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் என்னும் மன் னன் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்கு ரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டின் மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, உலக மகளிர் நாள் என ஆண்டுதோறும் உலகெங் கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த திட்டங்கள் உருவெடுக்கத் தொடங்கின.

தமிழ் ஓவியா said...

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டிலும், அதன் பின் னரும் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, மகளிர் சமுதாய மேன் மைக்கு மகத்தான பல சட்டங்களையும், திட்டங் களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது. அதன் விளைவாகத்தான் இன்று எங்கும் - எல்லா அலுவலகங் களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாக் கலைகளிலும் பெண்கள் பங்குபெற்றுப் பயனடைந்து முன்னேற் றம் கண்டு சாதனைகள் பல படைத்துப் பெரு மைகளைக் குவித்து வருகிறார்கள் என்பதனை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. இந்தியாவிலேயே முதன் முறையாக அரசுப் பணி களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடும் திட்டம்!

பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கிட தனிச் சட்டம்!

உள்ளாட்சி அமைப்பு களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!
காவல்துறையில் பெண்களைக் காவலர் களாக நியமனம் செய்யும் திட்டம்!

விதவை மகளிர் திருமண நிதி உதவித் திட்டம்!

10ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு மூவலூர் மூதாட்டியார் பெயரில் திருமண நிதியு தவித் திட்டம்!

நாகம்மையார் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்

ஏழைப் பெண்கள் உயர் கல்வி பயில ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம்; பின்னர் பட்ட மேற் படிப்பு நீட்டிப்பு!

ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி நல்கும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியு தவித் திட்டம்!

விதவைப் பெண்களுக் கும், கணவனால் கைவிடப் பட்ட பெண்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும் உதவித் தொகை வழங்கும் திட்டம்!

இலட்சக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுக் கள் உருவாக வழிவகுக் கப்பட்ட மகளிர் திட்டம்!

அரசு உருவாக்கிடும் தொழில் மனைகளில் 10 சதவீத மனைகளைப் பெண் தொழில் முனை வோருக்கு ஒதுக்கீடு செய் யும் திட்டம்! திருக்கோயில் களில் செயல்படும் அறங் காவலர் குழுக்களில் மகளிர் ஒருவரை அறங் காவலராக நியமிக்க வகை செய்யும் சட்டம்!

மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம்!

ஏழைத் தாய்மார்கள் மனம் குளிர இலவச வண்ணத் தொலைக்காட் சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்!

எரிவாயு இணைப்பு டன் இலவச எரிவாயு இலவச அடுப்புகள் வழங் கும் திட்டம்!

ஆதிதிராவிட மகளிர்க்கு விமானப் பணிப் பெண் பயிற்சி வழங்கும் திட்டம்!

அய்ம்பது வயது கடந்தும் திருமணமாகா மல், உழைத்து வாழ முடியாத சூழலில் வாழும் ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டம்!

இரண்டு இலட்சத்திற் கும் மேற்பட்ட சத்துண வுத் திட்டப் பணியாளர்கள் பயன் பெற காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கும் திட்டம்!

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்களும், செவிலியர்களும் நியமிக் கப்பட்டு, கிராமப்புற மக ளிர்க்கு 24 மணிநேர மருத்துவச் சேவை அளிக் கும் திட்டம்! எனப் பல்வேறு திட் டங்களையும், சட்டங் களையும் நிறைவேற்றி, அரசுத் துறைகளிலும், அரசியல் களங்களிலும், தொழில் முறைகளிலும் பெண்கள் முன்னேற்றத் திற்குத் தேவையான அடித்தளங்கள் பலவற்றை வலுவாக அமைத்துத் தந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகமே என்பதனை நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல நமக்கு உரிமை உண்டு.

ஆனால், 2011க்குப் பிறகு, எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி, பெண் கள் பாதுகாப்பின்றிப் பல வழிகளிலும் பாதிக்கப் பட்டு வருகின்றனர் என் பதனை இவ்வேளையில் வேதனையுடன் நினைவு கூரும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

மனித குலத்தின் மகத் தான சக்திகளில் ஒன் றாகத் திகழும் மகளிர்க்கு எதிரான இத்தகைய கொடுமைகள் முற்றிலும் அகற்றப்பட - கழக அரசு காலத்தில் தொடங்கப் பட்ட பெண்கள் நலத் திட்டங்கள் தங்கு தடை யின்றித் தொடர்ந்திட - எங்கும் எதிலும் ஆண் களுக்கு இணையான சமத்துவம் நிலவச் செய் திட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம்!

தமிழக மகளிர் அனைவர்க்கும் உலக மகளிர் நாள் நல் வாழ்த்துகளை உரித்தாக் குவோம் என கலைஞர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97448.html#ixzz3ThZVSpff

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

தப்பு

ஒரு தப்பு செய்த போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத் துகிறது. உடனே இந்த அழுக்கை யாரும் தெரிந்துகொண்டு விடக் கூடாது என்று அதை மூடி மறைக்கத் தோன்று கிறது. நியாயமாக தவறு தல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினார். அந்தப் பிரார்த்தனையே சோப்பைப் போல் அந்தத் தப்பை அகற்றி விடும் (கல்கி 8.3.2015 பக்கம் 2). என்கிறார் சங்க ராச்சாரியார் சந்திரசே கேந்திர சரஸ்வதி.

அப் படியென்றால் கொலை செய்த ஒருவன் பிரார்த் தனை செய்து விட்டால் அந்தத் தப்பு அகன்றி டுமா? நான் பிரார்த்தனை செய்து விட்டேன், நான் குற்றவாளியல்ல என்று ஒருவன் சொன்னால் அர சின் சட்டமும், நீதிமன்ற மும் தான் ஏற்றுக் கொள் ளுமா?

Read more: http://viduthalai.in/e-paper/97451.html#ixzz3ThZxpN1z

தமிழ் ஓவியா said...

கோவாவிலும் மாட்டிறைச்சிக் கடைகள் மூடப்படும் அவலம்


பனாஜி, மார்ச்.7_ கோவா இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத் தின் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ஏராளமான இறைச்சிக்கடைகள் மூடப்பட்டுவருகின்றன. காரணம், இறைச்சிக் கிடைப்பதில் பற்றாக் குறையும், விலங்குகள் உரிமைகளுக் கான அமைப்பினரின் செயல்கள் காரணமாக உள்ளன என்று குறிப் பிட்டுள்ளார்.

மகாராட்டிர மாநிலத்தில் மாட் டிறைச்சிக்குத் தடைவிதிக்கப்பட்டு இருப்பதால், அதன் பாதிப்பு கோவா வில் ஏற்பட்டுள்ளது. இறைச்சி பற்றாக்குறையாலும், விலங்குகள் உரிமைகளுக்கான அமைப்பினரின் கெடுபிடிகளாலும் இறைச்சி விற்பனைக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

அன்வர் பிபாரி என்பவர் கூறும் போது, மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை போடப் பட்டு விட்டதால், மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாகவே இறைச்சிக் கிடைப் பதில் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்றார். கடந்த 4.3.2015 அன்று கோவா மாநிலம் முழுவதும் ஏற்பட் டுள்ள இப்பிரச்சினைகுறித்து விவா திக்க மாட்டிறைச்சி விற்பனையா ளர்கள் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர்.
கிறித்தவர்களுக்கான வழிபாட் டாண்டில் முக்கித்துவம் வாய்ந்த தவக்காலம் எனப்படும் 40 நாள் கொண்டாட்டக் காலக்கட்டத்தில் மாட்டிறைச்சிப் பற்றாக்குறை, மாட்டிறைச்சிக்கடைகள் மூடப்படுவது என்பது கோவா மாநிலத்தில் 26 விழுக்காட்டளவில் உள்ள கிறித்த வர்களுக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும்வகையில் உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே மாட்டிறைச்சிகுறித்த முரண்பாடுகள் ஏற்பட்டுவருகின்றன. கருநாடகா மற்றும் மகாராட்டிர மாநிலங்களி லிருந்து சட்டவிரோதமாக கால் நடைகளைக் கோவா மாநிலத்துக்குள் கொண்டுவரப்படுகின்றன. அதனால், கோவா மாநில அரசு கால்நடைகள் கொல்லப்படுவது மற்றும் இறைச்சி ஆகியவைகளை முடக்கி வருகிறது.

கடந்த மாதம் விலங்குகள் உரிமை களுக்காக பணியாற்றிவரும் அம்ரூத் சிங் என்பவர் கடுமையாகத் தாக்கப் பட்டார். கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த பெல்காமிலிருந்து மாட்டி றைச்சி விற்பனையாளர்கள் அருகமை மாநிலமான கோவா மாநிலத்துக்கு கொண்டுவருகிறார்கள் என்பதைக் கூறி, அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் தாக்கப்பட்டார்.

கடந்த காலங்களில் கருநாடகா மற்றும மகாராட்டிர மாநிலங்களிலி ருந்து கோவா மாநிலத்தில் நடை பெறும் சட்டவிரோதமாக மாட்டி றைச்சிக் கொண்டுவரப்படுவதை நிறுத்துவதற்காக தொடர்ச்சியான முயற்சிகளை செய்து வந்துள்ளார்.

பிபாரி கூறும்போது, கோவா மாநி லத்தில் அரசு வரையறுத்துக் கொடுத் துள்ள பகுதிகளில் மட்டுமே மாட்டி றைச்சித் தொழில் நடைபெற்று வருகிறது. மாநில அரசால் நடத் தப்பட்டுவரும் குறிப்பிட்ட இடங் களில்தான் கால்நடைகள் இறைச்சிக் காக அறுக்கப்படுகிறது. அதன்மூலம் குறைந்த அளவு வணிகம் நடந்தாலும், சட்டபூர்வமாக இறைச்சி வணிகம் நடந்துவந்துள்ளது. சீரமைப்பு என்கிற பெயரால், கால்நடைகள் கொண்டுசெல்வதைக் கண்காணிக்கும் நடவடிக்கைளால் மாட்டிறைச்சித் தொழிலை அழிக்கும் நோக்கமே இருப்பதாகத் தெரிகிறது. அதனால் இத்தொழிலில் செயல்படாத தன்மை தற்போது ஏற்பட்டு வருகிறது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/97445.html#ixzz3ThaaVlk3

தமிழ் ஓவியா said...

உள்ள கோவில்கள் போறாதா?

இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன.

இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒண்ணரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒர் புதுக்கோயில் கட்டி அதில் ஆதிதிராவிடர்களை அனுமதித்திருக் கிறார்களாம். இதை தேசியப் பத்திரிகைகள் போற்றுகின்றன. இது என்ன அக்கிரமம்? எவ்வளவு முட்டாள்தனம்? என்பதை பார்க்க வேண்டுகிறோம்.

பழைய கோவில்களில் ஆதிதிராவிடர்களை விட வில்லையானால் அதற்காக புதுக்கோவில்கள் கட்டுவது பித்தலாட்டமான காரிய மல்லவா? தீண்டப்படாதவர் களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக்கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக்கோவில் கட்டி அவர் களுக்குப் பிரவேசமளித்து விட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா? என்று கேட்கின்றோம்.

தேசியம் என்ற பித்தலாட்டச் சூழ்ச்சி என்று ஆரம்பமானதோ அன்று முதல் இன்று வரை தேசியத் தலைவர் முதல், வாலர்கள் வரையில் ஒவ்வொரு விஷயத் திலும் இந்தமாதிரியான சூழ்ச்சிகளும், பித்தலாட்டங் களுமே நடைபெற்று மக்களையும் முழுமூடர்களாக்கி வருகின்றது. என்றுதான் இந்த புரட்டுகளும், கேடுகளும் ஒழியுமோ?

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 05.02.1933

Read more: http://viduthalai.in/e-paper/97447.html#ixzz3ThbCxawo

தமிழ் ஓவியா said...

மாமாங்கத்தின் அற்புதம்

-சித்திரபுத்திரன்-

புராண மரியாதைக்காரன் கேள்வி: அய்யா, சுயமரியாதைக்காரரே கும்பகோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம். சுயமரியாதைக்காரன்

பதில்: என்ன அற்புதமய்யா?

பு.ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும், கூழாய் இருந்தபோதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.

சு.ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான், இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத் தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள்.

ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்று வேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும்.

இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.

பு-ம:- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?

சு.ம: - இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல்லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில்மறைவே

இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள்.

எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும்.

அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும்.

பு.ம;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?

சு.ம:- நாற்றமிருக்கத்தான் செய்யும். தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள்.

ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென் னறால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.

குடிஅரசு - உரையாடல் - 26.02.1933

Read more: http://viduthalai.in/e-paper/97454.html#ixzz3ThbQF66R

தமிழ் ஓவியா said...

காந்தியின் மிரட்டல்

காந்தியவர்கள் உயிர்விடுகிறேன்! உயிர் விடுகிறேன் என்று சர்க்காரை மிரட்டலாம், தாழ்த்தப் பட்ட வகுப்பாராகிய தீண்டப்படாதார் என்பவர்களை மிரட்டலாம், ஆனால், பார்ப்பனர்களை மாத்திரம் மிரட்ட முடியாது.

ஏனென்றால் இந்த மகாத்மா உயிர் விட்டால் அவருக்குச் சமாதி கட்டி குருபூஜை, உற்சவம் செய்யச் செய்து விட்டு அதன் பேராலும் பலருக்குப் பிழைப்பு ஏற்படுத்திக்கொண்டு மற்றொரு மகாத்மாவையும் சிருஷ்டி செய்து கொள்ள அவர் களால் முடியும், ஆதலால் காந்தி மிரட்டல் பார்ப்பனர் களிடம் மாத்திரம் செல்லாது.

ஆகையால் காந்திமகாத்மா பட்டம் நிலைக்க வேண்டுமானால் ஹரிஜன சேவையை விட்டு விட்டு மதத்திற்காகத்தான் சுயராஜியம் கேட்கின்றேன் என்று உப்புக்காய்ச்சும் வேலைக்கோ, ராட்டினம் சுத்தும் படி செய்யும் வேலைக்கோ,

ஏழைகள் பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது என்ற உபதேசம் செய்யும் வேலைக்கோ திரும்புவது தான் நல்ல யோசனையாகும். இல்லாவிட்டால் எப்படியாவது ராஜி செய்துகொள்ளுவது எல்லாவற்றையும் விட நல்ல தாகும்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 05.02.1993

Read more: http://viduthalai.in/e-paper/97454.html#ixzz3ThbaWZ8Q

தமிழ் ஓவியா said...

காந்தியின் ஆலயப் பிரவேச நோக்கம்

தோழர் காந்தியவர்கள் தாழ்த்தப்பட்ட தலைவர் ஒருவருக்கு ஆலயப் பிரவேச நோக்கத்தைப் பற்றி எழுதிய நோக்கத்தில் அடியில்கண்ட குறிப்புகள் காணப்படுகின்றன.

அவையாவன: ஆலயப் பிரவேசத்தால் மட்டும் தீண்டாமை தீர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை ஆனால் பிறருடன் சரி சமமாக ஆலயப்பிரவேச உரிமை பெறாதவரை தீண்டாமை தீராது, ஆலயப் பிரவேசத்தால் பொருளாதாரம் கல்வி முன்னேற்றம் ஏற்படும் என்ற குறிப்புகள் இருக்கின்றன.

இவைகளில் ஏதாவது இன்றைய அனுபவத்திற்கு ஒத்து இருக்கின்றதா? என்பதை யோசிக்கவேண்டும். இந்து மதத்தில் தீண்டாத ஜாதியார் என்கின்ற கூட்டமல்லாமல் தீண்டக்கூடிய மக்கள் பல கோடிக்கணக்கான பேர்கள் ஆலயப்பிரவேச சமஉரிமையை தாரளாமாய் அனுபவித்து வருபவர்களாகவே இருந்தும் பல வகுப்புகளில் இன்று நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர்கள் தற்குறிகளாகவும்,

நூற்றுக்குத் தொண்ணூத் தொன்பது பேர் போதிய இடமும் துணியும் உடையும் இல்லாமலும் அவர்களது பிள்ளை குட்டிகளுக்குக் கல்வி கொடுக்கவோ, நோய்க்கு மருந்து கொடுக்கவோ முடியாமலும் இருப்பதின் காரணம் என்னவென்று கேட்கின்றோம்.

இன்று மக்களுக்குப் பொதுவாக அதாவது இந்திய மக்களுக்கு மதம், ஜாதி, தீண்டாதவர் தீண்டக்கூடியவர் என்கின்ற பாகுபாடே இல்லாமல் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்கள் மனிதத் தன்மையிழந்து மானத்தை விற்று கஷ்ட ஜீவனம் ஜீவிக்க வேண்டியவர்களாகவும் அநேகர் அப்படிச் செய்தாலும் ஜீவிக்க முடியாதவர்களாகவும்,

மிருகங் களுக்கு இருக்கும் நிலைமையும் இல்லாமலும் இருந்து வருகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? இப்படிப் பட்டவர்களுக்கு என்ன மார்க்கம்? என்றுதான் கேட்கின்றோம். ராட்டினத்தையும், கோவிலையும், காட்டுவது யோக்கியமான மார்க்கமா? மோசடியான மார்க்கமா? என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள். இப்பொழுது தீண்டக்கூடிய மக்களுடைய பட்டினிக்கும்,

படிப்புக்கும் காந்தியார் கண்டுபிடித்த மருந்து ராட்டினமாகும். தீண்டப்படாத மக்களுடைய பட்டினிக்கும் படிப்புக்கும், காந்தியார் கண்டு பிடித்திருக்கும் மருந்து ஆலயங்கள் ஆகும். ஆகவே இந்த வைத்தியரின் சக்தியை நீங்களே மதியுங்கள்.

இந்த மாதிரி வைத்தியங்களால் காந்தியார் பணக்காரர்களுக்கும், பணக்காரர் கொள்கை கொண்ட அரசாங்கத்திற்கும் உள் ஆளாய் இருந்து உதவி செய்தவர் ஆகிறாரா அல்லது ஏழைகளுக்கும் தீண்டப்படாத மக்களுக்கும் நண்பராய் இருந்து உதவி செய்தவராகிறாரா? என்பதை உணர்ந்து பாருங்கள்.

குடிஅரசு - அறிக்கை - 26.02.1933

Read more: http://viduthalai.in/e-paper/97455.html#ixzz3ThbhBkG5

தமிழ் ஓவியா said...

சாதி விளைக்கும் கேடு!

சாதிக் கொடுமையும் பலவுள, கலியாணம் கருமாந்திரம் முதலிய காலங்களில் நடத்தும் செலவுகளை மட்டுக்கு மிஞ்சி செய்வதால் ஏழைகளாகிப் பரிதவிப்போர் எத்தனை பேர்? காந்தியாருக்கு இடுவதில் போட்டி போட்டுக் கெட்டவர்கள் எத்தனை பேர்? சாதிக் கொழுப்பால் வழக்கிட்டு கெட்டவர் எத்தனை பேர்?

இவ்வித வீண் வியர்த்தச் செலவுகளால் பனாதிகளாய் விட்டவர் எத்தனை பேர்? நமது மதங்களாலும், சாதி வேற்றுமைகளாலும், துர்ப்பழக்க வழக்கங்களாலும், சாதி, சமய ஆசாரங்களாலும் மூட பக்தியாலும், கோவில்களாலும், குளங்களாலும், புரோகிதர்களாலும், குருமார்களாலும், மந்திர தந்திரவாதிகளான மாயக்காரர்களாலும் கெட்டழிந்து வரத் துர்ப்பாக்கியம் பெற்றவர்களாகயிருக்கும் நமது நாட்டாருக்குத் துன்பங்களுக்குக் குறை வேது?

சாதி வேற்றுமையின் கொடுமையினால் நமது சமுகத்திலேற்பட்டிருக்கும் பிளவுகளுக்கும் ஒற்றுமையின்மைக்கும் அளவேது? இந்தச் சங்கடங்களெல்லாம் எப்பொழுது நம் நாட்டை விட்ட ஒழியுமோ அப்பொழுதுதான் நம் நாடு சுகப்படும்! நமது நாட்டைப் பிடித்திருக்கும் வறுமையும் தொல்லையும்!

(சுயராஜ்யம் யாருக்கு? என்ற புத்தகத்தில் தோழர் மா. சிங்காரவேலு பி.ஏ., பி.எல். எழுதியவை பக்கம் 12)

Read more: http://viduthalai.in/page3/97396.html#ixzz3Thd8sxHV

தமிழ் ஓவியா said...

பெருமைமிகு பெரியார்

சிற்பம் வடித்திடுக; சிற்பியர்காள்! அய்யாவின்
பொற்புவந்து கல்லிற் புக.

கவிதை புனைக; கவிஞர்காள்! இந்தப்
புவிபுதுக்கி னாரைப் புகழ்ந்து.

ஓவியர்காள் தந்தை உருவத்தைத் தீட்டிடுக!
ஆவிபெற்று மீண்டாற்போல்; ஆழ்ந்து.

நாளும் முழக்கிடுக; நாவலர்காள்! அய்யாவின்
நீளும் புகழை நிலத்து.

பண்ணிசைத்துப் பாடிடுக; பாடகர்காள்! அய்யாவின்
தொண்டுகளை யெல்லாம் தொகுத்து.

நடிகர்காள்! ஒன்றி நடித்திடுக! அய்யா
வடிவேந்தும் நாடகத்துள் வாழ்ந்து.

பரதநடப் பாவையர்காள்! பாவனையால் அய்யா
வரலாற்றைச் சொல்க மகிழ்ந்து.

ஆய்ந்திடுக நாளும்; அறிஞர்காள்! பேரறிவில்
தோய்ந்தவரின் சிந்தனையில் தோய்ந்து.

ஈடில்லாத் தந்தைபணி எண்ணட்டும்; ஏத்தட்டும்
கூடிக் கலைஞர் குழாம்.

அஞ்சுகங்காள்! சிந்திடுக! அய்யாவின் சீர்த்தியினைக்
கொஞ்சுதமிழ்த் தேனில் குழைத்து.

கோகிலங்காள்! கூவிடுக! கோமகனின் மேன்மையினைப்
பாகினிமை தோற்கப் பகுத்து!

ஆழியின் பேரலைகாள்! ஆர்த்திடுக. நாளுமிந்த
ஊழிப் பெரியோன்சீர் ஓர்ந்து.

மாமலைகாள்! இன்னும் மவுனம்ஏன்? விண்டுரைப்பீர்
தீமலையாய் வந்தார் திறம்.

சுட்டெரிக்கும் சூரியனே! சொல்க! மடமைவனம்
பட்டெரியச் செய்தார் பணி.

பாடிவா! பால்நிலவே! பாரெங்கும் அய்யாவின்
ஈடிலாத் தொண்டை இனிது.

அலைந்துதிரி காற்றே! அவனிக்குச் சொல்க!
தலைவரிவர் தொண்டதனைச் சற்று.

களிறுகாள்! சாற்றுங்கள்! காசினியில் நாளும்
பிளிறிப் பெரியாரின் பீடு.

புல்லாங் குழல்காள்! புரட்சிகளின் நாயகர்சீர்ப்
பல்லாண் டிசைப்பீர் பணிந்து.

செந்தமிழ் மக்காள்! செகம்முழுதும் ஆர்த்துரைப்பீர்!
அந்தமிலாத் தந்தைபுகழ் ஆய்ந்து.

(ய. மணிகண்டன் ஒளிந்திருக்கும் சிற்பங்கள் வெளியீடு: விழிகள் பதிப்பகம் நன்கொடை ரூ.70)

Read more: http://viduthalai.in/page3/97395.html#ixzz3ThdKr0wS

தமிழ் ஓவியா said...

அய்யாவின் ஊன்று கோலாய்!

மா.காசிநாதன் - செகதீசன் சகோ தரர்கள் சிங்கப்பூரில் பெரு வணிகர் களாக உருவெடுத்து பொருளீட்டிக் கொண்டிருந்தார்கள்.
பிறந்த ஊரான ஆயக்காரன்புலத்தி லிருந்து உறவினர்கள் வாழும் ஆலத் தம்பாடிக்கு குடி ஏற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த காலம்.

1965 இல் ஒரு மாளிகை வீடு நிர்மாணிக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. எதிரே உள்ள திடலில் ஓலையால் வேயப்பட்ட சிறுகுடில் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மீனாட்சி சுந்தரம் குடும்பத்தைச் கவனிக்கும் பொறுப்பில் இருந்தார்.

ஆலத்தம்பாடிக்கு பக்கத்து கிராமமான கீரக்களூரில் சுயமரி யாதைச் சுடரொளி சு.சாந்தன் இல்லம் இருந்ததனால் அடிக்கடி ஆலத்தம் பாடிக்கு வந்து மீனாட்சிசுந்தரத்தை சந்திப்பதை வாடிக்கையாகக் கொண் டிருந்தார். இவரது வீடே அவருக்கு பாடி வீடாக அமைந்திருந்தது.

இவர்கள் இருவரும் பழகத் தொடங்கிய காலம் தி.க.விற்கும், திமுக விற்கும் ஆகாத காலம்! துருப்பிடித் துப்போன முரட்டு இரும்புகளையும் ஈர்த்துக்கொண்டிருந்த பெருங்காந்த மாய் விளங்கிய பெரியாரின் கொள் கையில் மீனாட்சிசுந்தரம் கட்டுண்டுக் கிடந்ததில் ஒன்றும் வியப்பில்லை தான்!

ஆனாலும் இவர் திமுகவில் பிரபலமாகி வளர்ந்து கொண்டிருந் தார். இவரைச் சுற்றி ஒரு பெரும் இளைஞர் பட்டாளமே சுழன்று கொண்டிருந்தது! தந்தை பெரியாரை அழைத்து ஆலத்தம்பாடியில் பொதுக்கூட்டம் நடத்த சாந்தன் ஏற்பாடு செய் திருந்தார்.

அய்யா அவர்கள் ஆலத்தம் பாடிக்கு வரும்போது எங்கள் வீட் டிற்கு விருந்து சாப்பிட வரவேண்டும் என்று சாந்தனிடம் மீனாட்சிசுந்தரம் சொன்னார்.

அதற்கு சாந்தன் சொல்கிறார், எல்லாத்திலேயும் விளையாடாதீங்க தம்பீ... என்று மூஞ்சை ஒருபக்கம் திருப்பிக்கொள்கிறார்! அதற்கு மீனாட்சிசுந்தரம் இல்லை,,, இல்லை,,, அய்யா அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்துதான் ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்! என்ன தம்பி சொல்றீங்க! நிஜ மாவா சொல்றீங்க! ஆமாம்... அதற் கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்கிறார்.

உடனடியாக சாந்தன், அப்போ தைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவ ராக இருந்த தோலி ஆர்.சுப்பிர மணியம் அவர்களுடன் திருச்சி பெரியார் மாளிகைக்குச் சென்று அய்யா அவர்களிடம் செய்தி சொல்லி ஒப்புதல் பெற்றுக் கொண்டு வந்து விட்டார்கள்.

பெரியார் வருகிறார் என்றதும் இவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நண்பர்களைக் கூட்டிக் கொண்டு திருவாரூக்குப் போய் அய்யா உட்கார ஒரு விலை உயர்ந்த சோபாசெட் வாங்கிக்கொண்டு வந்தார். அய்யாவுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகள் பக்குவமாய் சமைக்கப்பட்டிருந்தன.

தந்தை பெரியாருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து சாப் பிடச் செய்தார்கள். அய்யா அவர்கள் விருந்து சாப்பிட வந்ததற்காக மீனாட்சிசுந்தரம் இருபத்தைந்து ரூபாயை அய்யாவிடம் கொடுத்தார்.

ரொம்ப நன்றிங்க... ரொம்ப நன்றிங்க... என்று சொல்லிக் கொண்டே தனது உள் சட்டைப் பைக்குள் இருந்த மணிபர்சை எடுத்து அதற்குள் வைத்துக் கொண்டார். பிதுங்கிக் கொண்டிருந்த வெளிப் பையில் இருந்து ஒரு குட்டை நோட்டை எடுத்து மீனாட்சிசுந்தரம் என பெயர் எழுதி வரவு இருபத் தைந்து என குறித்துக் கொண்டாராம்.

சரி... சரி... கூட்டத்திற்கு நேரமாகி விட்டது என சொல்லிக்கொண்டே, சாப்பாடு ரொம்ப பிரமாதம் - ரொம்ப நன்றி... நன்றி... என்று மீனாட்சி சுந்தரம் கையை ஊன்று கோலாகப் பிடித்துக்கொண்டு பெரியார் இருக் கையை விட்டு எழுந்து நடக்கிறார். அப்பொழுது ஒரு நிழற்படம் எடுக்கப்பட்டது.

இருவருக்கும் பக்கத் தில் அய்யாவின் தனிச்செயலாளர் புலவர் கோ.இமயவரம்பன், ஆயக் காரன்புலம் சு.இராமையன் இருக் கிறார்கள்.
பொதுக்கூட்ட மேடைக்கு சென்ற உடனேயே பெரியார் பேச ஆரம் பித்துவிட்டார். திமுகவை வாங்கு... வாங்கு என்று வாங்கினார்! கடுமை யான தாக்கு!

ஏராளமான திமுக தோழர் களோடு மீனாட்சிசுந்தரம் மேடை அருகே உட்கார்ந்து கொண்டு அய்யா பேசுகிறார்! நம்மை அய்யா பேசாமல் யார் பேசுவது!! என்று சிரித்துக் கொண்டே அய்யாவின் பேச்சு முழு வதையும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

- கி.முருகையன் (மாவட்ட தி.க.தலைவர் ஆயக்காரன் புலம் 2 - வேதாரண்யம் வட்டம்)

Read more: http://viduthalai.in/page5/97399.html#ixzz3Thdndwl3

தமிழ் ஓவியா said...

குடிஅரசில் வந்த அறிவிப்பு
பகுத்தறிவுப் புலவர்கள் மாநாடு

7.10.1944 நாளிட்ட குடிஅரசு இதழில் வெளியிடப்பட்டிருந்த ஓர் அறிவிப்பு. இந்த அறிவிப்பு, அன் றையப் புலவர்கள் பகுத்தறிவாளர் களாக இருந்ததைக் காட்டுகிறதா? இன்றும் இதுபோன்ற மாநாடுகள் தேவை என்பதைக் காட்டுகிறதா? படித்துப் பாருங்கள்!

பகுத்தறிவுப் புலவர்கள் மாநாடு

தோழர்களே, மேற்படி மாநாடு ஒன்று விரைவில் கூட்டப் போவ தால், ஆங்காங்குள்ள புலவர்களும், புலவர் நண்பர்களும், பகுத்தறிவுக் கொள்கையை - கருத்தை வலி யுறுத்துக் கூடிய புலவர்கள் பெயரை அருள்கூர்ந்து தெரிவிக்க வேண்டு கிறோம்.

மகாநாட்டில் விவாதிக்கப்பட்ட ஒரு நண்பரால் அனுப்பப்பட் டிருக்கும் விஷயங்கள்:

1. மற்ற எந்தக் கிருமியையும்விட சங்கீதம் அதிக நோயைக் கொடுக் கிறது.

2. எந்தக் கிருமியையும்விட சோதிடம் அதிக நோயைத் தருகிறது.

3. இந்தியாவில் சங்கீதமும் சோதி டமும் சேர்ந்து செய்யும் தீங்கைவிட கொடுக்கும் தொல்லையைவிட தத்துவ ஞானமும் கடவுளும் அதிகத் தொல்லையைக் கொடுக்கின்றன.

4. நாட்டிலே உள்ள வேறுவித பைத்தியக்காரர்களைவிட, பயங்கரப் பையத்திக்காரர்களையும், அதிகமான பைத்தியக்காரர்களையும் ஆத்மீகவாதம் (Spritualism) உண்டு பண்ணுகிறது.

5. தமிழ் வருந்தத்தக்க லோபி களையும் அரைப் பைத்தியங்களை யும் (அரைக் கிராக்குகளை) உண்டு பண்ணுகிறது.

6. இன்னும் 25 வருடங்களுக்கு இந்தியாவில் பிலிம்கள் ஏன் (படங்கள்) கூடாது?

7. இப்பொழுதுள்ள கல்வி ஸ்தாபனங்களும், பல்கலைக் கழகங் களும், கோயில்களும் இடிக்கப்பட வேண்டும் அல்லது எரிக்கப்பட வேண்டும்.

8. இளைஞர்கள் மூளைக்குக் கரையான்களும், இந்தியாவின் சுமையும்.

9. பிராமணர்களுக்கு ஒரே வார்த்தை.

10. இந்தியாவுக்குத் தேவை என்ன?

மேலே கண்ட இவ்விஷயங் களைக் குறித்தும் மற்றும் பல புதிய விஷயங்களைக் குறித்தும் மேற்படி மாநாட்டில் விவாதம் நடக்கும். இதில் கலந்து கொள்ள விரும்பும் பகுத்தறிவுப் புலவர்கள் தங்கள் விருப்பத்தையும் எங்களுக்கு உடனே தெரிவிக்கவும்.

- பகுத்தறிவுப் புலவர்கள் மாநாட்டார், ஈரோடு

Read more: http://viduthalai.in/page5/97399.html#ixzz3ThdwRfvm

தமிழ் ஓவியா said...

மனச்சிதைவு, பதட்ட நோய் மரபணு கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் ஸ்கிசோபிரேனியா எனப்படும் மனச்சிதைவு நோய் மற்றும் மனப்பதற்ற நோய்களுக்கான மரபணுவை கண்டுபிடித்துள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர் இர்வின் தெரிவித்துள்ளார்.

நவீன அறிவியல் எவ்வளேவோ வளர்ந்தாலும் இன்னமும் உலகம் முழுவதும் மனநோய்கள் பற்றி பலவிதமானமூட நம்பிக்கைகளும் தேவையில்லாத அச்சங்களுமேநிலவுகின்றன.

உடலில் நோய்கள் வந்தால் அதை தைரியமாகவும் பெருமையாகவும் வெளிப்படுத்திக்கொள்ளும் சமூகம் இன்னும் மனநோய்களை ஒரு வித களங்கமாகவே பார்க்கிறது. மனநோய்கள் உடல் நோய்கள் போன்றே குணப்படுத்தக்கூடியவை. மனநோய்களில் பெரிய மனநோய்களாக வகைப்படுத்தப்பட்ட சைக்கோசிஸ் என்ற பிரிவில் அடங்குபவை ஸ்கிசோபிரேனியா என்ற மனச்சிதைவு நோய்.

இந்நோயினால் முழுமையான ஆளுமைச்சிதைவு ஏற்படும். புலன் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும். இதைஎல்லாநோய்களைப்போலவே ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம் . இந்நோய் வருவதற்கான காரணங்கள் குறித்து பலவிதமான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த நோய்க்கான மரபணு கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இர்வின் மற்றும் திமோதி பிரெடி உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: கோமபூ என்ற மரபணு மனிதர்களின் நடத்தையில் மனச்சிதைவு நோய் ஏற்பட காரணமாக உள்ளது. இந்தமரபணு பதட்ட நடவடிக்கைக்கும் காரணமாக உள்ளது.

இம்மரபணு 98 விழுக்காடு எந்த செயல்பாடும் இல்லாத ஜங் மரபணு கூட்டத்தில் உள்ளதாக முந்தைய ஆராய்ச்சிகள் தெரிவித்திருந்தன. தற்போது தொடர்ந்து மேற்கொண்டஆராய்ச்சிகளில் கோமபூ மரபணுவின் செயல்பாட்டுத்திறன் கண்டறிப்பட்டுள்ளது. இந்த மரபணுவின் செயல்பாட்டில் சிறிய அளவில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை புலன்களின் செயல்பாட்டைச் சிதைக்கின்றன.

இதன் விளைவாக நோயாளி தனக்கு எதிரே யாரும் இல்லாதபோதே, ஒருவர் இருப்பதாக பார்த்து பேசிக் கொண்டிருப்பதும் தலைக்குள் குரல்கள் கேட்பதும் பார்த்தல் மற்றும்கேட்பது போன்றவை புலன் பணிகளின் சிதைவுகளாகும் . இது பெரிய அளவில் வளர்ந்து மொத்த ஆளுமையும் சிதைவுக்குள்ளாகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/page7/97402.html#ixzz3TheXIWPH

தமிழ் ஓவியா said...

விரும்பினால் மட்டுமே பின்பற்ற வேண்டிய கொள்கை அல்ல மதச்சார்பின்மை!
இந்து நாளிதழின் தலையங்கம்

மதத்தின் அடிப்படையில் வெறுப் பினையும் வன்முறையையும் தூண்டு வதற்கு எதிராக பேசுகையில் நாட்டில் உள்ள சிறுபான்மை மத மக்கள் மீது இந்துத்துவக் குழுக்கள் சொல் அளவி லும், உடல் அளவிலும் தாக்குதல்களை நடத்துவதைத் தனது அரசு தடுக்காமல் ஊக்கமளிக்கிறது என்பது பற்றி வளர்ந்து வரும் கண்ணோட்டத்தைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டார்.

பெரும்பான்மை, சிறு பான்மை மதக் குழுக்களிடையேயான ஒரு வேறுபாட்டைப் பற்றி குறிப் பிடுவதை மிகுந்த கவனத்துடன் அவர் தவிர்த்தபோதிலும், வெறுப்பினைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு உறுதி அளித்தபோது, இந்துத்துவ குழுக்களால் சொல்லாலும், செயலாலும் தாக்கு தலுக்கு உள்ளாகும் சிறுபான்மை மத மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முறையில் அவர் பேசியிருக்கிறார் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

அண்மைக் காலங்களில் தேவாலயங்கள் தாக்கு தலுக்கு உள்ளான நிலையில், கத்தோ லிக்க சைரோ மலபார் தேவாலயம் புதுடில்லியில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு பேச நேர்ந்தது.

ஆனால் அவரது உறுதிமொழி பயன் நிறைந்த தாகத் தோன்றவில்லை. சிறுபான்மை மத மக்களுக்கு எதிராக சொல்லாலும் செயலாலும் தாக்குதல் நடத்துவதன் மூலம் அரசியல் நாகரிகம், பொறுப் புணர்வு என்ற எல்லையைத் தாண்டும் தனது அமைச்சர்களையோ நாடாளு மன்ற உறுப்பினர்களையோ, கட்டுப் படுத்தவோ, கண்டிக்கவோ தயங்குப வராகவே இதுவரை மோடி தோற்ற மளித்து வந்துள்ளார்.

அவரது சொற்களைத் தொடர்ந்து செயல் பாடுகள் மேற்கொள்ளப்படாமல் போனால், மதவெறுப்பினைத் தூண்டி விடுவதற்கு அவரது அமைச்சர்களையும், கட்சித் தோழர்களையும் அவர் இனியும் தொடர்ந்து அனுமதித்தால், அவர் அளிக்கும் உறுதிமொழிக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். கடந்த சில மாதங்களாக மோடி அரசு குழப்பம் அளிக்கும் சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

அரசின் மேல்மட் டத்தில் உள்ளவர்கள் தங்கள் பேச்சில் எச்சரிக்கையாக இருக்கும் அதே நேரத் தில், இடையிலும், கீழ்மட்டத்திலும் இருப்பவர்கள் தங்களது இழிவான, கடுமையான, ஆபத்து நிறைந்த பேச்சுக் களால் சட்டம் மற்றும் நாகரிக எல்லைகளை சோதனை செய்து பார்க்கின்றனர்.

ஒரு கட்சியாக, பா.ஜ.க., பொறுப்பு நிறைந்த, ஆட்சியில் உள்ள ஒரு அரசியல் கட்சி என்ற நிலைக்கும், தங்களது இந்துத்துவ ஆதரவாளர் களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய, தீனி போடவேண்டிய தேவை உள்ள நிலைக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

பா.ஜ.க.யில் உள்ள பலரும் நினைப்பதாகத் தோன்றுவது போல, மதசார்பின்மை என்பது அரசு விரும்பினால் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற ஒரு கொள்கை யல்ல; கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை என்று அரசி யல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகும்.

இந்தியக் குடியரசைக் குறிப்பிடுவதற்கு மதச் சார்பற்ற என்ற சொல் வேண்டுமானால் அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையில் 1976 இல் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் தாங்கள் விரும்பும் மதநம் பிக்கையைக் கொண்டிருப்பதற்கும், தாங்கள் விரும்புகிற மதத்தைப் பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் அரசமைப்பு சட்ட 25 ஆவது பிரி வில் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் அரசமைப்பு சட்டத்தில் உறுதிப் படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.

அனைத்து மக்களுக்கும் உள்ள, தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற் கான இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாப்பது ஆட்சியில் உள்ள அரசின் கடமையாகும். மதசுதந்திரம் என்பது எந்த ஒரு ஜனநாயகச் சமூகத் திலும் இரண்டறப் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்திருப்பதாகும்.

தாங் கள் விரும்பும் மதத்தைக் கடைப் பிடிப்பதற்கான சுதந்திரத்தைத் தனது குடி மக்களுக்கு அளிக்காமல் இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்க முடி யாது.

அரசமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப் பட்ட அடிப்படை உரிமைகள் தனது குடிமக்கள் அனைவருக்கும் அளிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள இயலாத ஓர் அரசு விரைவில் தனது அரசமைப்புச் சட்டப்படியான நியாயத் தன்மையையும், பிரதிநிதித்துவப் பண்பையும் இழந்துவிடும். தனது கட்சி அந்தப் பாதையில் பயணிப்பதை மோடி விரும்ப மாட்டார் என்பது மட்டும் நிச்சயம்.

நன்றி: தி இந்து 19-.02.-2015

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page8/97404.html#ixzz3Theqv24T

தமிழ் ஓவியா said...

எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்களை பிற்போக்குச் சக்திகள் அச்சுறுத்திய நிலை

இப்பொழுது புதிய தலைமுறைப் பணியாளர்களை
தாக்கிய இந்துத்துவ அடிப்படைவாதிகள்

காவல்துறை துணை போகலாமா? மீண்டும் நெருக்கடி காலமா?
முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டி முறியடிப்போம்

எழுத்தாளர்களையும், ஊடகத் துறையினரை யும் தாக்கும் அடிப்படைவாதிகளை முற்போக்கு சக்திகள் ஒன்று திரட்டி முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் நாடு ஜனநாயக நாடு என்று இந்திய அரசியல் சட்டத்தின் படி அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 மாதங்களுக்குமுன் அமைந்த பா.ஜ.க. ஆட்சி என்னும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின் ஆட்சியின் கீழ் அத்தன்மை வேகவேகமாக மாற்றப்பட்டு நவீன ஹிட்லரிச பாசீச ஆட்சியாக அவ்வாட்சி மாறி வரு கிறதோ என்ற அய்யம், பரவலாக எங்கும் எழுந்துள்ளது!

கருத்துரிமையைப் புறக்கணிப்பதா?

அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மதச் சுதந்திர உரிமை - எல்லாம் மெல்ல மெல்லக்கூட அல்ல - வெகு வேகமாக காணாமற் போகிறதோ என்ற நிலை, தீ பரவுவது போல பரவி வருகிறது!

மோடி அரசுக்குத் தாளம் போட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு முதலியவை மத்திய அரசின் இரயில்வே, மற்றும் பொது பட்ஜெட் மூலம் பறிக்கப்பட்டாலும் வாய் மூடி மவுனியாக தமிழக அரசும், தமிழ்நாட்டின் பெரும்பான்மை எம்.பி.க்களான 37 பேர்களும் (மாநிலங்கள் அவை 10 ஆக கூடுதல் உறுப்பினர்களும்) ஆளுங் கட்சி பலத்துடன் மத்திய அரசிடமிருந்து நிதி ஆதாரம் உட்பட பலவற்றைப் பெறும் சூழ்நிலை இருந்தும், வேறு சில காரணங்கள் காரணமாக மவுனத்தையும் தலையாட்டுதலையும், நடத்திடும் போக்கு நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ்.

இந்துத்துவா ஆட்கள் எண்ணிக்கையில் வெகு குறைவாக இருந்தாலும் தமிழ்நாட்டில், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிராக வன்முறைக் களத்தில் இறங்கி, எழுத்தாளர்களை மிரட் டியும், அடித்தும், உதைத்தும், ஆட்சி இயந்திரமும் அத் தகைய வன்முறையாளர்கள் பக்கம் சாயும் நிலையும்கூட இருக்கிறது என்பது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்!

திருச்செங்கோடு எழுத்தாளர் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோர் அப்படிப்பட்ட கொடு மைக்கு ஆளாகும் நிலையிலும் ஆட்சி, காவல்துறை குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறி யுள்ளனர்!
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகளே எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டது மிகவும் வெட்கக் கேடானது.

ஜாதி அரசியலால் லாபம் பெறலாம் என்ற அற்பத்தன ஆசையோ என்னவோ இதற்குக் காரணம் போலும்!

புதிய தலைமுறைப் பணியாளர்கள் தாக்கப்பட்ட கொடுமை


புதிய தலைமுறை என்ற ஒரு தனியார் தொலைக் காட்சியில் மகளிரை அழைத்து தாலிபற்றிய கருத்துக்கள் பற்றி ஒரு விவாதம் நடத்திட முனைந்தால் அவர்களை மிரட்டுவது, கேமிரா மேன்களை அடிப்பது, உடைப்பது, இதற்குக் காவல் துறை அதிகாரிகள் சிலரும் தாறுமாறாகப் பேசி - வசவுகளைப் பொழிவது எவ்வகையில் நியாய மாகும்?

புதிய தலைமுறை என்ற ஒரு தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று இதைஒதுக்கிவிட முடியாது.

இந்தப் போக்கு ஜனநாயக விரோத பாசிசத்தின் பச்சையான படமெடுத்தாடும் அவலம்!
இதனை திராவிடர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

முன்பு தீபாவளி பற்றிய ஒரு கருத்துரைக்கும்கூட எதிர்ப்புக் குரல். நமது கூட்டங்கள் நடத்த முயன்றால், அதற்கு எதிராக ஒரு தயார் மனு வழமையாக காவல் நிலையங்களில் கொடுப்பது, அந்த அனாமதேயங்களின் மனுக்களை பெற்று ஏதோ பிரளயமே உருவாக இருப்பதைப் போல சில மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கருத்துச் சுதந்திர உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது!

கிருஷ்ணகிரியில் காவல்துறை ஒரு பெண் அதிகாரி தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு எதிராக இப்படி ஒரு தடை முயற்சிகளைச் செய்து வரும் நிலை உண்டு.
விரைவில் நீதிமன்றத்திற்கேகூட அத்தகையவர்களை அழைக்கும் நிலையை திராவிடர் கழக சட்டத்துறை செய்யவிருக்கிறது!

இந்தக் கருத்துச் சுதந்திர பறிப்பு பற்றி முற்போக்கு சிந்தனையாளர்கள், ஒத்த கருத்து உள்ளவர்களை ஒன்று திரட்டி பல்முனைப் போராட்டங்களை அறிவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள திராவிடர் கழகம் தயங்காது! நெருக்கடி காலம் திரும்புகிறதோ? நெருக்கடி காலத்தின் முடிவை ஆட்சியாளர்கள் மறந்து விடக் கூடாது.

சென்னை கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம்
9.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/97527.html#ixzz3TuLpOpWw

தமிழ் ஓவியா said...

தாலி குறித்து விவாதம் நடத்தவே கூடாதா?


இந்து மத வெறி கும்பலுக்கு மாதர் சங்கம் கண்டனம்

சென்னை, மார்ச் 9_ தாலி குறித்து விவாதம் நடத்தக்கூடாது என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது இந்து மதவெறிகும்பல் தாக்குதல் தொடுத்துள்ளதை அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின்மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிப்பரப் பப்பட விருந்த தாலி குறித்த விவாதநிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் சில மதவெறி சக்திகள் தடுத்து நிறுத்தி உள்ளன. அந்த நிகழ்ச்சிஒளிபரப்பப்படாது என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் அந்த சமூக விரோதிகள் புதிய தலை முறை தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்பு கூடி அங்கிருந்த ஒளிப்பதிவா ளர் ஒருவரை தாக்கி விலை உயர்ந்த கேம ராவை உடைத்துள்ளனர். அத்துடன் பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு பெண் பத்திரிகையாள ரையும் தாக்கியுள்ளது அதிர்ச்சியை தருகின்றது.

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மதவெறி சக்தி களின் தாக்குதலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.தாலி என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷய மல்ல. சங்ககால இலக்கி யங்கள் முதல் இன்று வரை தாலி குறித்த பல்வேறு கருத்துக்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. தமிழகத் தில் ம.பொ.சி,பெரியார் போன்ற தலைவர்கள் தாலி குறித்த பல்வேறு விவாதங்களை நடத்தி கட்டுரைகளும் வெளி யிட்டு உள்ளனர். பெரியார் பெண்ணே உன்னை அடிமைப்படுத்தும் இந்தக் கயிறை அறுத்தெறி என்று பெண்ணடிமைத் தனத்தை சாடியுள்ளார்.

எனவே, தாலி குறித்து பேசவே கூடாது என்ற இந்த கலாச்சார காவலர் களின் கருத்து சுதந்திர பறிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் இந்த தாக் குதல் நடைபெறும் போது காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததும் கண்டிக்கத்தக்கது. தமிழ கத்தில் ஜாதிய ஆதிக்க செயல்களை தமிழக காவல்துறை எப்படி கை கட்டி வேடிக்கை பார்க் கின்றதோ அப்படியே மதவெறி சக்திகளின் சமூக விரோத செயல்களையும் கை கட்டி வேடிக்கை பார்த்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அந்த விவா தத்தினை ஒளிபரப்புவதற் கான ஏற்பாட்டினையும் செய்யவும் தமிழக அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத் துகின்றது.

Read more: http://viduthalai.in/e-paper/97530.html#ixzz3TuM2so9g

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


உயிர்கள்தானே
சாப்பாட்டு விஷயத் தில்கூட காய்கறியில் புட லங்காய்தான் பிடிக்கும். உருளைக்கிழங்குதான் பிடிக்கும் என்று சொல் கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண்டைக்குள் செல்லும் வரைக்கும்தான்; அப்புறம் எந்த உணவாக இருந்தா லும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவதுபோல, உயிர்கள் பிறவி எடுத் திருப்பதே கடவுளை அறிவதற்குத்தான் என்று ஓர் ஆன்மிக மலர் கதை அளக்கிறது.

இதன்படி எந்த உயிர் கடவுளை அறிந்ததாம்? கண்டவர் விண்டிலர், விண்டலர் கண்டிலர் என்று தானே சொல்லப் பட்டுள்ளது? உயிர் என் றால் மனித உயிர் மட்டும் தானா! விலங்குகளும், பறவைகளும்கூட உயிர் தானே அவை சாப்பிடு வதும் கடவுளை அறிவ தற்காகத்தானா? காய் கறிகள்கூட சுவாசிக்கின் றனவே, அவைகளும் உயிர்கள்தானே! அப்படி என்றால் அவற்றிற்கு எரு போடுவது, தண்ணீர் ஊற்றுவது (அவையும் அவைகளுக்கு உணவு தானே) எல்லாம் கட வுளை அறிவதற்குத்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/97529.html#ixzz3TuMOlE2M

தமிழ் ஓவியா said...

பழனி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கார் மோதி சாவு


சத்திரப்பட்டி, மார்ச்.9 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்யா நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது23). அங்குள்ள காய்கறி சந்தையில் வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி மலர்விழி (19). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு குழந்தை இல்லை. வீரமணி சில நாள்களுக்கு முன் புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கினார். அதில் அவர் நேற்று மனைவியுடன் பழனிக்கு சாமி கும்பிட சென்றார்.

சாமி தரிசனம் செய்த பின்னர் இரு சக்கர வாக னத்தில் வீடு திரும்பினர். விருபாச்சி மேட்டுப்பகுதி யில் வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் இரு சக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் வீரமணி சம்பவ இடத் திலேயே உடல்நசுங்கி பலியானார். படுகாயம டைந்த மலர்விழியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவரும் இறந்தார்.
இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/97537.html#ixzz3TuMYiR7i

தமிழ் ஓவியா said...

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அவசியமே!


மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க சட்டம் செய்யப்பட்டது.

இப்பொழுது அம்மாநிலத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி. சிவசேனைக் கூட்டாட்சி முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டைக் காலாவதி ஆகச் செய்துவிட்டது.
சிறுபான்மை மக்கள் என்றாலே பி.ஜே.பி. சிவசேனா, சங்பரிவார்க் கும்பலுக்குக் கடுமையான வெறுப்பும், வன்மமும் தான் மேலோங்கி நிற்கின்றன.

சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் குடியுரிமையின்றியும் வாழ முன் வர வேண்டும் என்று எழுதி வைத்தவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தங்களின் குருநாதர் என்று போற்றித் துதிக்கும் எம்.எஸ். கோல்வால்கர்.

அப்படிப்பட்ட கொள்கையைக் கொண்டவர்கள் ஆளும் ஒரு மாநிலத்தில் இத்தகு நடவடிக்கைகள் என்பவை ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால்கூட மேற்கு வங்கத்தில் 10 சதவீதம், கேரளாவில் 12 சதவீதம். கருநாடகத்தில் 4 சதவீதம், தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் முஸ்லிம் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையிலும்கூட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என்றே கூறப்பட்டு விட்ட நிலையில் மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய அரசின் முடிவை ரத்து செய்கிறது என்றால் இதன் பொருளென்ன?

உலகில் அதிக முஸ்லிம்கள் வாழக் கூடிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அத்தகைய ஒரு நாட்டில் அவர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவது சரியானதுதானா?
நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா குழு தனது பரிந்துரை யில் கல்வி, வேலை வாய்ப்பில் முசுலிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதே!
வேலை வாய்ப்பில் 5 சதவீதம் அளவுக்குத்தான் முசுலிம்கள் இடம் பெற்றுள்ளனர் என்று விசாரணை அறிக்கைகளே கூறுகின்றன. இந்த நிலையில் அவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வளர்ச்சி அடைய சட்டரீதியாக இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்!

16ஆவது மக்களவையில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில், முசுலிம்கள் வெறும் 24 பேர் மட் டுமே! இது 4.4 சதவீதமேயாகும். அவர்களின் மக்கள் தொகையோ 14 சதவீதமாற்றே.
பிஜேபி சார்பில் ஒரே ஒரு முசுலிம் கூட வெற்றி பெற முடியவில்லையே! 9 மாநிலங்களில் பிஜேபி ஆட்சி இருக்கிறது. அவற்றில் 155 அமைச்சர்கள் இருக் கிறார்கள் என்றால் அதில் இடம் பெற்றுள்ள முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? ஒன்றே ஒன்றுதான்.
சிறுபான்மை மக்களுக்கு இந்தியாவில் உரிய பாதுகாப்பு இல்லை; உரிய உரிமைகள் இல்லை என்பது அப்பட்டமான உண்மையாகும்.

இது ஏதோ முஸ்லிம் மக்களைச் சார்ந்த பிரச்சினையாகக் கருதி விடக் கூடாது - முடியாது. ஒட்டு மொத்தமான சமுதாயப் பிரச்சினையாகும். நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிற சக மனிதனின் நல வாழ்வும், உரிமை வாழ்வும் கிடைக்க வழி செய்யா விட்டால் ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற வினாவை எழுப்பாதா?

பொதுவாகவே மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இடஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லாத ஆட்சி என்பதைவிட அது கூடவே கூடாது என்று கருதுகிற கோட்பாட்டைக் கொண்டதாகும்.

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பில் வழங்கினார் என்ப தற்காக சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் தானே பிஜேபியினர் என்பதை மறந்து விடக் கூடாது. இதனை எல்.கே. அத்வானி அவர்கள் தமது சுயசரிதை நூலில் தெளிவாகவே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே.

சிறுபான்மையினருக்கு ஏதோ ஒரு மாநிலத்தில் நடந்தது தானே என்று மற்றவர்கள் பாராமுகமாக இருக்கக் கூடாது.

சமூக நீதியில் அக்கறை உள்ளவர் அத்தனைப் பேரும் ஒன்று சேர்ந்து அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் வீதிக்கு வந்து போராட வும் தயங்கக் கூடாது. சமூக நீதி என்பது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று; யாரோ கருணையின் அடிப்படையில் கொடுக்கிற பிச்சையல்ல.

Read more: http://viduthalai.in/page-2/97543.html#ixzz3TuMwikeY

தமிழ் ஓவியா said...

நோய் எதிர்ப்பாற்றல் தரும் பேரிச்சை

உடலுக்கு தேவையான சத்துகளை பெற இயற்கை பல பொருட்களை நமக்கு கொடையாக தந்துள்ளது. அதில் பேரிச்சை மிகவும் அற்புதமான ஒன்று. வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சத்துகள் நிறைந்தது. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் அவசியம் பேரிச்சை பழத்தை உண்ண வேண்டும்.

பேரிச்சையின் பலன்: பேரிச்சையில் உள்ள நார்ச் சத்துக்கள் எளிதாக செரிமானமாகும். உண்டதும் புத்துணர்ச் சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.

கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரிச்சைக்கு ஈடு இல்லை. டேனின்ஸ் எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பேரிச்சையில் உள்ளது.

இது நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் வெப்பமாதல் ஆகியவற்றுக்கு எதிரான செயல்படக்கூடியது. வைட்டமின் ஏ, பேரிச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.

சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியது.

பேரிச்சை இரும்புச் சத்தை ஏராளமான அள்ளி வழங்கும். 100 கிராம் பேரிச்சையில் 0.90 மி.கி இரும்புச் சத்து உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தத்தில் ஆக்சிஜனை சுமந்து செல்லும் ப்ளேட்ளெட்ஸ் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. இது இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. இதனால் ஏற்படும் பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.

இதில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித்துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது

Read more: http://viduthalai.in/page-5/97580.html#ixzz3TuNt7Gep

தமிழ் ஓவியா said...

தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி

ஜில்லென்ற தர்பூசணியின் சுவையில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. கொளுத்தும் வெயிலில் சுவைக்கும்போது, தாகம் தணியும். உடலும், உள்ளமும் குளிரும். தர்பூசணியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளன என்பது பலர் அறியாத விஷயம். தர்பூசணியில் பசலைக்கீரைக்குச் சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, ஏ, பி 6, பி1 உள்ளன.

பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரி, கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின் அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்கு விக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றம் சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். கண்களைப் பராமரிக்க வைட்டமின் ஏ, மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சியையும் கொண்டு செயல்படுகிறது. தமனி, ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது.

உடலிற்கு தேவையான இன்சுலினையும் மேம்படுத்தும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். சதையுடன் விதையும் பலன் தரக்கூடியது. விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது. தர்பூசணியை சாப்பிட மட்டுமல்லாமல், தற்போது பதார்த்தங்கள் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். தர்பூசணி தென் ஆப்ரிக்காவைத் தாயகமாகக் கொண்டது.

முதலில் எகிப்தில் அதிகளவில் பயிரிடப்பட்டது. 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலும், 10ஆம் நூற்றாண்டில் சீனாவிலும் தர்பூசணி அறிமுகமாகியுள்ளது. உலகில் தர்பூசணியை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்குவது குறிப்பிடத்தக்கது. தர்பூசணியில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்தப் பழம் ஒரு இயற்கை வயாக்ரா என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளது. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் சத்துகள் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத் திருக்கின்றன.

இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் சத்துப்பொருள், வயாக்ராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

Read more: http://viduthalai.in/page-5/97580.html#ixzz3TuO1biFN

தமிழ் ஓவியா said...

ஆரோக்கியம் காக்க...

* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.

* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.

* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.

* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

* பப்பாளி நம் வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.

* பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

* பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page-5/97581.html#ixzz3TuO9QvRp

தமிழ் ஓவியா said...

கொழுப்பை கரைக்கும் உணவுகள்

* கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

* இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும். * வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

* லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

* சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.

* நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.

* கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

Read more: http://viduthalai.in/page-5/97581.html#ixzz3TuOHPyWq

தமிழ் ஓவியா said...

செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்தது ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் கடல் இருந்ததற்கான அடையா ளங்கள் உள்ளன என்று புதிய ஆய்வில் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆய்வு நிறு வனமான நாசாவில், கோடார்ட் விண்வெளி உயிரியல் ஆய்வு மய் யத்தைச் சார்ந்த தலைமை விஞ்ஞானி மைக்கேல் மும்மா கடந்த ஆறு ஆண்டு களாக மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க் கோளில் வட துருவத்தில் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்தது. அது ஆர்டிக் பெருங்கட லின் அளவுக்குப் பெரிய கடலாக இருந்துள்ளது.
பூமியில் இருப்பதைப் போலவே ஒரு வகையான நீர் செவ்வாயிலும் இருந் துள்ளது. அதாவது, இங்கு இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸி ஜன் அணுவும் சேர்ந்த நீர் போலவே செவ்வாயிலும் இருந்துள்ளது.

அதேசமயம் இன் னொரு வகையான நீரும் செவ்வாயில் இருந்திருக் கிறது. அந்த வகையான நீர், ஹைட்ரஜனின் அய்சோ டோப்பான டியூட்ரியம் என் பதைக் கொண்டிருந்தது.
பூமியில் உள்ள நீரில் இருக்கும் டியூட்ரியத்தின் அளவைக் காட்டிலும், செவ்வாயில் எட்டு மடங்கு அதிகமாக டியூட் ரியம் இருந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, செவ்வாய்க் கோளில் 137 மீட்டர் ஆழத்தில் மூழ்கடித்து விடக் கூடிய அளவுக்கு ஒரு காலத்தில் அந்தக்கட லின் நீர் அளவு இருந் திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்தப் புதிய கண்டு பிடிப்பு செவ்வாய்க் கோளை பற்றி தங்களுக்கு மேலும் பல புரிதல்களைத் தந்திருப்பதாக விஞ்ஞானி கள் கூறுகின்றனர்.
"இந்த அளவுக்கான நீர், பல்லாண்டு காலமாக செவ்வாயில் இருந்தது என்றால், நிச்சயமாக அங்கே உயிர்கள் தோன்றி வளர்வதற்கான வாய்ப்பு களும் இருக்கவே செய்யும்" என்று கோடார்ட் விண் வெளி ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த பால் மஹாஃபி தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/97483.html#ixzz3TuY1is2O

தமிழ் ஓவியா said...

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் 35 ஆம் ஆண்டு பவள விழா

வெளிநாட்டிலுள்ள ‘Statue of Liberty’-யைப்போல உலகமே வியக்கும் வகையில் ‘Statue of Self-Respect’-அய் உருவாக்குகிறார் கி.வீரமணி

பேராசிரியர் அனந்தராமன் அவர்கள் கல்லூரி தலைவருக்குப் பாராட்டு

வல்லம், மார்ச் 8_ தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் 35 ஆம் ஆண்டு பவள விழா நேற்று (7.03.2015) இப் பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தலைமையேற்று உரையாற்றிய பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள்,

மாணவ, மாணவிகள் அனை வரும் தைரியமாகவும் எதையும் செய்து முடிக் கும் ஆற்றல் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என்று கூறிய அவர், நமது நோயைப் போக்கிக் கொள்ள மருந்து சாப்பிடுவதுபோல் அறியாமையையும், மூட நம்பிக்கையையும் போக்கிக்கொள்ள நாம், அறிவைத் தரும் கல்வியைக் கற்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

முன்னாள் மாணவ, மாணவிகள் தைரியமாகவும், தன்னம்பிக்கைமிக்கவர்களாகவும் விளங்குகிறார்கள் என்றும், இப்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர் நவீன தொழில்நுட்பத்திலும். ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ஆராய்ச்சி மனப்பான் மையையும்,

புதுமையான எண்ணங்களையும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய இக்கல்லூரி நிறு வனத் தலைவரின் ஆசிரியரும், சென்னை அய்.அய். டி.யின் முன்னாள் பேராசிரியரும், இவ்விழாவின் சிறப்பு விருந்தினருமாகிய டாக்டர் வி.அனந்தராமன் தமது சிறப்புரையில்,

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவிகளும், பயிலும் இந்நாள் மாணவிகளும் மிகவும் தைரியசாலிகளாக விளங்குகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், மகளிர் மேம்பாட்டையும், மறு மலர்ச்சியையும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

மாணவர்கள் அனைவரும் ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறிய அவர், டிப்ளமோ பயின்ற மாணவர்கள் அனைவரும் உயர் கல்வியைப் பயின்று வாழ்க்கையில் உயரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களுடைய கல்விப் பணியையும், இயக்கப் பணியையும் பாராட்டியதோடு, வெளிநாட்டில் உள்ள Statue of Liberty -யை உலகமே வியந்து பாராட்டுவதைப்போல, Statue of Self-Respect என்று கூறக்கூடிய வகையில், தந்தை பெரியாருடைய பிரம்மாண்ட சிலையை அமைக்க தமிழர் தலைவர் பாடுபட்டு வருவதை வெகு வாகப் பாராட்டி வரவேற்றார்.

பெரியார் உலகம் சிறப்பாக அமைவதற்கு தமது பாராட்டுதல்களைத் தெரிவித்தார். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா ஆண்டறிக்கை வாசித்தளித்தார். இப்பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் தனி அலுவலர் சுலோச்சனா வேதமூர்த்தி, முன்னாள் மாணவி டி. சாந்தி,

அமெரிக்காவில் மருத்து வராகப் பணியாற்றும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், முன்னதாக இக்கல்லூரியின் துணை முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

மாணவர்களின் தொழில்நுட்பக் கண்காட்சி விருந்தினர்களின் கண்ணையும், கருத்தை யும் கவர்வதாக இருந்தது. விழாவில் 35 ஆம் ஆண்டு பவள விழா ஆண்டு மலரை சிறப்பு விருந்தினர் டாக்டர் வி. அனந்தராமன் வெளியிட கல்லூரி நிறுவனத் தலைவர் பெற்றுக் கொண்டார்.

முன்னாள் மாணவர்களின் விவரப் புத் தகத்தை முன்னாள் தனி அலுவலர் சுலோச்சனா வேதமூர்த்தி வெளியிட, முன்னாள் மாணவி டி.சாந்தி பெற்றுக்கொண்டார், மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து உருவாக்கிய பாலிடெக்னிக் கல்லூரியின் பெயர்ப்பலகையை கல்லூரி நிறுவனத் தலைவர் திறந்து வைத்தார்.

சமுதாயக் கல்லூரியில் முதலாண்டு படிப்பை முடித்த மாணவர்களுக்கு முதலாண்டு நிறைவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இருபத்து அய்ந்து ஆண்டு பணியை நிறைவு செய்த முதலா மாண்டு துறைத் தலைவர் க. சாந்தி மற்றும் நூலகர் க. சிவகாமி ஆகியோருக்கு ரூ 10,000 பணப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த முன்னாள் மாணவர் விருது கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் துறைத்தலைவராக பணியாற்றும் டி.சாந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் இக்கல்லூரியின் முதன்மையர் டாக்டர் அ. ஹேமலதா நன்றியுரையாற்ற விழா நிறைவுற்றது.

Read more: http://viduthalai.in/page1/97495.html#ixzz3TuYmxSAW