Search This Blog

22.3.15

பெண்கள் சமையல் செய்யக் கூடாது!- தாலி எதற்காகக் கட்டப்படுகிறது? பெரியார்

பெண்கள் சமையல் செய்யக் கூடாது

தாய்மார்களே! பெரியோர்களே! மண மக்களின் பெற்றோர்களே! தோழர்களே!

இந்நிகழ்ச்சியானது இதுவரை நம்மில் கல்யாணம் - விவாகம் - முகூர்த்தம் என்னும் பெயரால் நடைபெற்றுப் பெண்களை ஆண்களின் அடிமைகளாகவும், சொத்துகளாகவும் ஆக்கப்பட்டு வந்திருக்கிறது.


பிறகுதான் பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். ஆண்களும் பகுத்தறிவு பெற்றுச் சிறந்த வாழ்வு வாழ வேண்டுமெனக் கருதிப் பழைய முறையினை மாற்றி, வாழ்க்கை ஒப்பந்த விழா என்னும் பெயரால் இம்முறையினைத் தோற்றுவித்து இதன்படி நடத்திக் கொண்டு வருகின்றோம். இம்முறையானது கடவுள், மத, சாஸ்திரங்களின் மீதுள்ள வெறுப்பாலோ, சிறுபான்மையாக இருக்கும் மேல்ஜாதிக்காரர்களான பார்ப்பனர்களின் மீது வெறுப்புக் கொண்டோ இந்த நிகழ்ச்சி முறை செய்யப்படுவது கிடையாது. சிலர் பார்ப்பனர்களின் மீது கொண்ட துவேஷத்தால் இது துவக்கப்பட்டது என்று நினைத்துப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அது தவறான பிரசாரமாகும்.


இது பெண்களின் விடுதலையைக் கருதியே ஏற்பாடு செய்து துவக்கப்பட்டதாகும்.


இந்நிகழ்ச்சிக்குச் சுயமரியாதைத் திருமணம் என்று பெயர் வரவேண்டிய அவசியம் என்னவென்றால், இதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், மான உணர்ச்சி, சமத்துவம் அளிக்கப்படுகின்றன. ஆண்களுக்குப் பகுத்தறிவு இல்லை. இதன் மூலம் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். அறிவைப் பயன்படுத்தாமலிருப்பதற்குக் காரணம் மானம், மரியாதை இல்லாதது தான். அதுபோலவே பெண்களும் ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று அறிவற்று மானம் மரியாதையற்றிருந்தார்கள். இந்த இருபாலரிடமும் இருந்து வந்த அறிவற்ற தன்மை - மானம் மரியாதை அற்ற தன்மையை நீக்குவதால் தான் இந்நிகழ்ச்சியை சுயமரியாதைத் திருமணம் என்கிறோம்.ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறியால் தான் வித்தியாசமே தவிர, மற்றப்படி அறிவு, வலிவு, பிறப்பு இவற்றில் எல்லாம் இருவரும் சமமானவர்களே ஆவார்கள். மனித சமுதாயத்தில் சோறு சமைப்பதற்கும், வீட்டு வேலைகளை செய்வதற்கும், குட்டி போடுவதற்கும், தன் புருஷனுக்கு அடிமையாக இருந்து ஏவல் செய்வதற்கும், என்றாக்கி அவர்களைக் கல்வி கற்காமலும் வைப்பதே இதுவரை இருந்த முறைகளாகும்.


இந்நிகழ்ச்சியானது இதுவரை சட்ட சம்மதமில்லாத நிகழ்ச்சியாக இருந்து வந்தது என்றாலும், மக்களிடையே பல்லாயிரக்கணக்கில் நடைபெற்று வந்து கொண்டுதானிருந்தது. இவற்றில் சில வழக்கு மன்றங்கள் சென்று இது செல்லுபடியாகாத திருமணம் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்ட போதும், மக்கள் அதனைப் பற்றி இலட்சியம் செய்யாமல் பலப்பல திருமணங்களை இம்முறையில் நடத்தியே வந்திருக்கின்றனர். இப்போது அமைந்துள்ள (தி.மு.க) ஆட்சியானது மக்கள் ஆட்சியானதாலும், பகுத்தறிவாளர்கள் ஆட்சியானதாலும் இம்முறையைச் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று சட்டம் செய்து விட்டார்கள்.இதற்கு முன்னும் இதுபோன்ற முறையில் தான் அரசாங்கத்தால் பதிவுத் திருமணம் என்கிற பெயரால் திருமணம் நடந்து கொண்டிருந்தது. பதிவுத் திருமணத்தில் திருமணம் செய்து கொள்கிற ஆணும், பெண்ணும் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் போய், 'நான் இவரை என் கணவராக ஏற்றுக் கொள்கிறேன்' என்று பெண்ணும், 'நான் இப்பெண்ணை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன்' என்று ஆணும் உறுதி கூறிக் கையொப்பமிடுவார்கள். இம்முறையாவது கணவன், மனைவி என்பதை வலியுறுத்தக் கூடியதே ஆகும்.ஆனால், நாம் செய்கின்ற இம்முறையில் கணவன் - மனைவி என்பது கிடையாது. இருவருக்கும் சமஅந்தஸ்துள்ள நண்பர்கள் என்பதை வலியுறுத்துகிறோம். இதில் ஒருவருக்கொருவர் அடிமை என்கின்ற தன்மை இல்லை.


நான் பொதுத் தொண்டையே முக்கியமாகக் கருதுபவன் ஆனதனாலே, நம் மனித சமுதாயம் முன்னேற வேண்டும் என்பவன் ஆனதனாலே, பழைமைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் ஆனதனாலே என் கண் முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு, அதன்படி மனிதன் முன்னேற வேண்டுமென்று நினைப்பவனாவேன்.புலவர் அவர்கள் நேற்று, சுமார் அய்ந்து ஆண்டுகளுக்கு முன் நம் கண் முன்னிருந்த பாரதிதாசன் அவர்களின் கதையை எடுத்துக் கூறினார்கள். அதைக் கேட்கும்போது எனக்கே மிக ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு தெளிவாக உண்மையை எடுத்துக் கூறி இருக்கிறார். நமக்கு என்னென்ன தேவை என்பதை எடுத்து விளக்கி இருக்கிறார். இதையெல்லாம் நம் மக்கள் படித்துத் தெளிவடைய வேண்டும். நம் உண்மை நிலையை உணர வேண்டும், திருந்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைக்கு நமக்கு என்ன வேண்டுமென்பது வள்ளுவனுக்கு எப்படித் தெரியும்? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே இருந்தவனுக்கு மனிதன் எப்படி ஆவான் என்பது எப்படித் தெரியும்?


அதற்கு முன் பெண்களைப் பார்த்தாலே அவள் அணிந்திருக்கும் நகை - உடைகளை வைத்து, அவள் எந்த ஜாதியைச் சேர்ந்தவள் என்று சொல்ல முடியும். இப்போது யாரைப் பார்த்தாலும் ஒன்றாகவே தோன்றுகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு வளர்ச்சியடைந்து விட்டது.


தாலி எதற்காகக் கட்டப்படுகிறது என்பதை நம் பெண்கள் இன்னும் உணரவில்லை. ராஜா மனைவியாக இருந்தாலும், பெரிய ஜமீன்தார் மனைவி - பணக்காரர் மனைவி என யாராக இருந்தாலும், அவன் செத்தவுடன் அறுப்பதற்காகத் தானே அந்தப் பெண்ணை முண்டச்சியாக்கத் தானே பயன்படுகிறது. வேறு எதற்குத் தாலி பயன்படுகிறது?


100-வருடங்களுக்கு முன் வரை உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது.


அது மதப்படி ஒரு சடங்காகச் செய்யப்பட்டு வந்தது. வெள்ளைக்காரன் வந்து அது கொலைக் குற்றம் என்று ஆக்கியபின் தான் நின்றது. இப்போது என்ன சொல்கிறோம், இப்படி ஒரு காட்டுமிராண்டிக் காலமா இருந்தது? என்று எண்ணுகின்றோம், ஆச்சரியப்படுகின்றோம். அதுபோல் தான் நாளைக்கு வரும் பெண்கள் நினைப்பார்கள். பெண்களுக்குத் தாலி கட்டும் பழக்கம் கூடவா இருந்தது என்று!


நாட்டிலே காட்டுமிராண்டித் தன்மைகள், கொடுமைகள் நிறைந்து விட்டன. பார்ப்பான் வந்தான், அவன் யோசனை சொல்பவனாக ஆகிவிட்டான்.


பெண்கள் ஆண்களின் சொத்துகள். அவன் சொல்படி நடந்து கொள்ள வேண்டியவர்கள் என்றும் ஆக்கி விட்டான். நம் இலக்கியம், புராணம் இவற்றில் வரும் பெண்களை அடிமைகளாகவே காட்டி விட்டான். கண்ணகி - அரிச்சந்திரன் - திரவுபதி இந்தக் கதைகள், பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும், கணவன் சொல்படியே நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பெண்கள் கற்புடையவர்கள் என்பதற்கு இலக்கணம். இதுபோன்று நடக்கிற பெண்கள் தான் மோட்சத்திற்குப் போக முடியும் என்று எழுதி வைத்து விட்டான்.


இந்தக் கதை எழுதினவனெல்லாம் முட்டாள் என்று கூடக் கருத முடியவில்லை. மகா அயோக்கியன்கள் என்று தான் கருத வேண்டி இருக்கிறது!


அந்தக் காலத்து முட்டாள் கதை எழுதினான் என்றால், இந்தக் காலத்து முட்டாள் அவற்றுக்குச் சிலை வைக்கிறான்.


இந்த நாடு - காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விலகாமல் மக்களைச் சிந்திக்க விடாமல் பாதுகாத்து, முட்டாள்களாக்கவே பாடுபடுகின்றார்கள். அதனால் தான் நம் நாடு இன்னமும் முன்னேற்றமடையாமல் காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது. தமிழன் பண்பாடு - தமிழின நன்மை - தமிழின வாழ்வு என்று போனால், இன்னும் 2,000 ஆண்டுகளுக்குப் பின் தானே செல்வோம். ஓர் அடி கூட முன்னே செல்ல முடியாதே!


தனக்கு வேண்டிய கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை கூட பெண்களுக்கு இல்லை என்றால், இது என்ன சுதந்திரம்? ஆறறிவுள்ள மனிதனுக்கு இதுதானா பயன்? பெரிய குறை - பெண்கள் அடிமையாக இருந்ததற்குக் காரணம் பெண்களுக்குக் கல்வி அறிவு, படிப்பு வாசனை இல்லாமல் செய்ததே யாகும். பெண்கள் படித்தாலே கெட்டு விடுவார்கள் என்று ஒரு தவறான கருத்தே நீண்ட காலமாக மக்களிடமிருந்து வந்தது. எதுவரை இருந்தது என்றால், வெள்ளைக்காரன் வந்து 150-வருடம் வரை நம்மை ஆட்சி செய்தும், பெண்கள் படிக்கவேயில்லை. 30, 40-ஆண்டுகளுக்கு முன்பு நம் உணர்ச்சி கிளம்பிய பிறகுதான் பெண்கள் படிக்கவே ஆரம்பித்தனர்.


பெண்கள் உருப்படியாக வேண்டுமானால், இத்திருமண முறையையே உடன்கட்டை ஏறுதல் போல் சட்டம் கிரிமினல் குற்றமாக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் சமுதாயம் சுதந்திரம் பெற்று சமுதாயத்திற்குப் பயன்பட முடியும்.


இப்போது அரசாங்கத்தில் பெண்களின் திருமண வயது வரம்பை 21-க்கு உயர்த்திச் சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம், 21-வயதில் திருமணம் செய்தால் மூன்று குழந்தைகள் குறையும் என்பதாகும். நாம் சொல்வது அது மட்டுமல்ல, பெண்கள் அந்த வயதுக்குள் நல்ல கல்வி கற்று, தாங்களே உத்தியோகம், தொழில் செய்யும் அளவுக்கு அறிவு பெற்று விடுவர். அதன் பின் தனக்குத் தேவையான ஒத்த உரிமையுள்ள, தனக்கு ஏற்ற துணைவனைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய தன்மையும் பெற்று விடுவார்கள் என்பதுதான்.


தாய்மார்கள் தங்கள் பெண்களை நிறையப் படிக்க வைக்க வேண்டும். அதோடு ஒரு தொழிலையும் கூடக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை நடத்தக் கூடிய வருவாய் கிடைக்கும்படியான நிலைமை பெற வேண்டும். பெண்கள் கெட்டுப் போவார்கள் என்ற எண்ணமே பெற்றோர்களுக்கு இருக்கக் கூடாது.


பெண்கள் இனி சமையல் செய்யக் கூடாது. பின் எப்படி என்றால், ஹோட்டலுக்கு, ரெஸ்டாரென்ட்டுக்குப் போய் தங்கள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆரம்பித்தால் நல்ல ரெஸ்டாரன்ட்டுகளும் ஏற்பட்டு விடும். வெளிநாடுகளில் எல்லாம் அப்படித்தான்! ஆணும், பெண்ணும் தங்கள் தங்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். தங்குவதற்கு ஒரு அறையையே வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். அதற்குள் ஒரு பீரோ, கட்டில், இரண்டு நாற்காலிகள் இவை தான் இருக்கும். பொதுவான குளியலறையும் - கக்கூசும் இருக்கும். இரவு தூங்குவார்கள். தேவைக்குப் பொது குளியலறை கக்கூசைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால் ருசியான உணவு கிடைக்கிறது; வீட்டு வாடகை குறைகிறது; நேரம் மிச்சமாகிறது; உணவிற்காகச் செலவிடும் பணமும் குறைகிறது.


இன்னும் கொஞ்ச நாள் போனால், பொது உணவு விடுதிகளில் உண்ணும் முறை தான் இங்கு வரும். இதுதான் சுலபமானதாகும்.


நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.


மனிதன் காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம் ஆனதோடு - திருமணங்கள் மதத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால், கடவுளோடு சம்பந்தப்படுத்தி விட்டதால் இதனைவிட துணிவின்றி பின்பற்றிக் கொண்டிருகின்றார்.


வாழ்த்துவது என்பது ஒரு சம்பிரதாயப் பழக்கம் என்பதைத் தவிர, இதில் எந்தப் பொருளோ, பலனோ இல்லை. வசைமொழிகளுக்கு என்ன பலனோ அதே பலன்தான் இதற்கும் என்பதை உணர வேண்டும். அறிவோடு - சிக்கனமாக வாழ வேண்டும். வரவிற்கு மேல் செலவிட்டுப் பிறர் கையை எதிர்பார்ப்பதும், ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு இடம் கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டு, கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்.


இறுதியாகக் குழந்தைகள் அதிகம் பெறுவது பெரும் கேடாகும். இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு அரசாங்கமே இதனை உணர்ந்து, பல திட்டங்களைப் போட்டு அதிகக் குழந்தைகள் பெறாமல் தடுக்க மருத்துவ வசதிகள் செய்திருக்கின்றது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகக் குழந்தைகள் பெறுவதுதான் அவன் தன்னையும் தியாகம் செய்து, தனது மனைவியையும் தியாகம் செய்து ஒழுக்கக் கேடான காரியங்களிலும் ஈடுபடச் செய்கிறது. ஓரளவாவது சுதந்திரத்தோடு, பிறர் கையை எதிர்பார்க்காமல், கவலையற்று வாழ வேண்டுமானால் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது.


இதைவிட இன்னும் பகுத்தறிவாளர்கள் ஆட்சி வந்தால், அரசாங்கமே குழந்தை வளர்ப்தைத் தானே ஏற்றுக் கொள்ளும். ரஷ்யா போன்ற நாடுகளில் அரசாங்கமே குழந்தைகளை வளர்க்கின்றன. நல்ல சுகாதாரத்தோடு 15-வயது வரை வளர்கின்றன.


நான் போய்க் குழந்தைகள் விடுதியைப் பார்க்கப் போன போது, எனது காலில் இருந்த பூட்சைக் கழற்றி விட்டு, அவர்கள் ஒரு பூட்சு கொடுத்தார்கள். என் உடையின் மேல் ஓர் அங்கியை அணிவித்தார்கள். கைகளுக்கு உறை மாட்டினார்கள்.


அதன் பின்தான் விடுதிக்குள் அனுமதித்தார்கள். உள்ளே போனதும் குழந்தைகளைத் தொடக் கூடாது. பார்த்துச் சிரிக்கலாம் என்று சொன்னார்கள். எனக்கு மட்டுமல்ல, குழந்தைகளின் தாய், தகப்பனாக இருந்தாலும் இப்படித்தான்! இதனால் நோய்க் கிருமிகள் குழந்தைகளுக்குப் பரவாமல் தடுக்கின்றனர்.


தாய், தகப்பனை விட விஞ்ஞானத்தோடு குழந்தைகளை வளர்க்கின்றனர். அதனால் மக்கள் கவலையற்ற வாழ்வு வாழ்கின்றனர்.


நம்மால் குழந்தைகளை அவ்வளவு நல்ல முறையில் வளர்க்க முடியாது. அவ்வளவு ஆரோக்கியத்தோடு வளர்க்கின்றார்கள்.


மேலும் மணமக்கள் மூட நம்பிக்கையான கோயில் - குளம் - பண்டிகை - உற்சவம் இவற்றுக்குச் செல்லக் கூடாது. மிருக உணர்ச்சியைத் தூண்டும் சினிமாவிற்குச் செல்லக் கூடாது. வேண்டுமானால், கண்காட்சிகளுக்குச் சென்று பெரிய பெரிய இயந்திரங்கள் வேலை செய்யும் நெய்வேலி போன்ற நகரங்களுக்குச் சென்று அவை எப்படி வேலை செய்கின்றன என்பதையெல்லாம் பார்த்துத் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


-------------------------09.02.1968 அன்று தஞ்சை - லால்குடி வாழ்க்கை ஒப்பந்த விழாக்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 20.02.1968

20 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


ஹோமம்

கேள்வி: என் மனைவி இரண்டரை வருடமாக ருமடாய்டு ஆர்தரைடீஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின் றாள். எவ்வளவு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. ஏதா வது பரிகாரம் சொல் லுங்கள்.
பதில்: வீட்டில் ஆயுஷ் ஹோமம் மற்றும் பஞ்சகத்தி ஹோமம் செய்து நலம் பெறலாம்.

- கல்கி இதழில் காழியூர் நாராயணன்

குணமாகாவிட்டால் சோதிடர்மீது வழக்குப் போடலாமா? மக்களை மடமையில் ஆழ்த்துவது தான் ஆன்மீகமோ!

Read more: http://viduthalai.in/e-paper/98375.html#ixzz3VD1eey4G

தமிழ் ஓவியா said...

காவிக் கூட்டத்தின் வன்முறை கைவரிசை

மகாராஷ்டிராவில் 300 ஆண்டு பழைமையான தேவாலயம் தாக்கப்பட்டது


பன்வேல்(மகாராஷ்டிரா) மார்ச் 23 நவி மும்பையில் 17-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று தாக்குதலுக்கு ஆளானது. டில்லி, ஹரி யானா, மத்தியபிரதே சத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் காவிகளின் கைவண்ணம் தொடர்கிறது. வெள்ளிக்கிழமை இரவு மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தேவாலயம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை அன்று இரவு நவிமும்பை யில் உள்ள தேவாலயம் ஒன்றும் தாக்குதலுக்கு ஆளானது.

நவிமும்பையில் உள்ள செயின்ட்ஜார்ஜ் கத்தோலிக்க தேவாலயம் 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்டது. நவிமும் பையில் முதல்முதலாக பள்ளிக்கூடம் ஒன்றும் இந்த தேவாலயத்தின் நிர்வாகத்தினரால் கட்டப் பட்டதாகும். ஆங்கிலேயர் காலத்தில் கல்லூரியாக மாற்றப்பட்ட இந்த தேவாலயத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவ னங்கள் இயங்கி வருகின் றன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆராதனைக்காக காலை யில் தேவாலயத்திற்கு வந்தவர்கள் தேவாலயத் தின் வெளிப்புறமுள்ள சிலைகள் உடைந்து கிடப் பதையும் பல இடங்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதற்கான அடை யாளங்களைக் கண்டனர். உடனடியாக இவ்விவ காரம் குறித்து பன்வேல் காண்டேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் செய் யப்பட்டது. இந்த தாக் குதல் குறித்து மாநில கிறிஸ்தவ சிறுபான்மை யினர் அமைப்பின் தலை வர் ஆபிரகாம் மாத்யூ கூறும்போது இந்தப் பகுதியில் உள்ள சில இந்து அமைப்பைச் சேர்ந் தவர்கள் கடந்த சில நாட் களாகவே தேவாலயத் திற்கு வரும் கிறிஸ்தவர் களை அவதூறாக பேசு வதும், மிரட்டுவதுமாக தொடர்ந்தது, இது குறித்து அரசுக்கு எழுத்து மூலமாகவும் புகார் அளித் துள்ளோம். அதே நேரத் தில் காவல்துறையிலும் பல கிறிஸ்தவர்கள் புகார் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மோட்டர் சைக்கிளில் வந்த சிலர் கற்களை தேவாலயத்தின் மீது வீசியுள்ளனர். இதில் தேவாலயத்தின் வாயிலில் வைத்துள்ள செயின்ட் ஜார்ஜ் உருவச்சிலை சேதமடைந்துள்ளது,

புனிதநூல் வைக்கப்படும் பீடத்தில் உள்ள கண்ணா டிகளை உடைத்துள் ளனர். மேலும் கதவின் மேல் உள்ள பரிசுத்த மாதா சிலையின் கண் ணாடிகளையும் உடைத்து விட்டுச் சென்றுள்ளனர். இது திட்டமிட்ட தாக் குதலே ஆகும். திடீரென இந்த தாக்குதல் நடக்க வில்லை. இந்தப்பகுதியில் உள்ள 4 தலைமுறை மக் களுக்கு மதம் இனம் பாராமல் கல்விபோதித்த எங்கள் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்த எப்படித்தான் இவர் களுக்கு மனம் வந்ததோ என்று கூறினார். இச்சமபவம் குறித்து பன்வேல் நகர காவல் துறை இணை ஆணையர் சூரியவன்சி கூறும்போது இந்த விவகாரம் தொடர் பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விரை வில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98371.html#ixzz3VD1oJoPZ

தமிழ் ஓவியா said...


பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு எனக் கூறியவர் பெரியார்

உயர்நீதிமன்ற நீதிபதி உரை

தஞ்சாவூர், மார்ச்.23 தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உலக மகளிர் நாள் கருத்தரங்கு நடந் தது. கருத்தரங்கிற்கு தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் அங்கயற் கண்ணி தலைமை தாங் கினார். பல்கலைக் கழக இசைத்துறை உதவி பேரா சிரியை மாதவி வரவேற்றார்.

கருத்தரங்கில் பெண் ணிய மஞ்சரி என்ற நூலை வெளியிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி து.அரி பரந்தாமன் பேசும்போது கூறியதாவது:

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக மகளிர் நாள் பெண் விடுதலைக்காக அனுசரிக் கப்படுகிறது.

பண்டைய காலத்தில் பெண்கள் சரி சமமாக நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். விவசாயத் தொழில் வளர்ச்சியடைந்து சொத்துக்கு வாரிசு என்ற நிலை உருவானபோது, பெண்கள் பொருளாகவும், பின்னாளில் வெறும் இயந்திரமாகவும் கருதப் பட்டு அடிமைப்படுத்தப் பட்டனர்.

இந்த அடிமைத்தனம் நம்முடைய நில உடைமை சமூகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த அடி மைத் தனத்துக்கு எதி ராகக் குரல் கொடுக்கப் படுகிறது. இந்த அடிமை முறையைப் பெண்களும் அக்காலத்தில் ஏற்றனர். இதனால், பெண்கள் பொருளாகப் பார்க்கப்பட் டதுடன், பாலியல் இயந் திரமாகவும், கருவியாகவும் பயன்படுத்தப்பட்டனர். மன்னர்கள் காலத்தில் உடன் கட்டை ஏறுதல், இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்தனர்.

உறுதியாகக் குரல் கொடுத்தவர் பெரியார்

கடந்த நூற்றாண்டில் தொழில், விஞ்ஞான, சமூக வளர்ச்சி அடைந்த நிலை யில் பெண் விடுதலைக்கும் குரல் எழுப்பப்பட்டது. பெண் விடுதலைக்காகப் பல பேர் குரல் கொடுத் தாலும், உறுதியாகக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். மற்ற அடிமைத் தனங்களை விட பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு செயல் எனக் கூறினார் பெரியார்.

இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளை எதிர்த்து 1940 ஆம் ஆண்டு முதல் மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது. என்றாலும், பெண்களுக்கு இன்னும் சம அளவு உரிமை கிடைக்கவில்லை. எல்லா துறைகளிலும் பெண்கள் கால் பதித்துள்ளனர் என்றாலும், ஆட்சி முறையில் சம அளவு பங்கு பெறவில்லை. உதா ரணமாக உச்சநீதிமன் றத்தில் உள்ள 31 நீதிபதி களில் ஒரு பெண் மட் டுமே உள்ளார். உயர் நீதி மன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 3 பேர் மட் டுமே பெண்கள்.

இந்த நிலைமை மாற இதுபோன்ற கருத்தரங்கங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், மாற்று சிந்தனை உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98373.html#ixzz3VD1x7Tyy

தமிழ் ஓவியா said...

முயற்சிக்க வேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/98378.html#ixzz3VD2IBv25

தமிழ் ஓவியா said...

மணத்தக்காளி கீரையின் உடல்நலப் பயன்கள்

மணத்தக்காளிக்கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும் குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்துவரலாம். வாரம் இருமுறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளு றுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கலாம்.

இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தை கொடுக்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.

வயிற்று நோய், வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணத்தக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும். கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும். மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.

கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத் தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மணத் தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும்.

பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.

மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும்.

உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது. நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. எல்லா வகையான காய்ச்சல் களையும் இக்கீரை தணிக்கும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

தமிழ் ஓவியா said...

கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பதநீர் பதநீர்

நமது தேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம். நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது.

இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள். கோடை காலத்தில் தாகம் தணிக்க அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. இதை பருகினால் உடலுக்குநல்ல குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோடையில் ஏற்படும் நீர் கடுப்பை நீக்க பதநீர் அருந்தலாம்.

தொழு நோயை நீக்கும் பதநீர்

நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை, மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிறியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடிசையில் 96 நாள்கள் தங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ குறிப்பு உண்டு .

மாதவிடாய் தடை

மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த நோய்களால் பெண்கள் அவதிபடுவார்கள். இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .

இரத்த கடுப்பு

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மி.லி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .

இதில் நார்ச் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் பேறு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.

Read more: http://viduthalai.in/page-4/98388.html#ixzz3VD4Zvu6M

தமிழ் ஓவியா said...திருப்பதி கோவிலில் பக்தர்களிடம் பண மோசடி

நகரி, மார்ச் 23_ திருப் பதி ஏழுமலையான் கோவி லில் யுகாதி நாளை முன் னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டனவாம்.

நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 43,227 பக்தர்கள் ஏழு மலையானை தரிசனம் செய்தனராம். அதன்பிற கும் தர்ம தரிசனத்துக்கு 21 கம்பார்ட் மெண்டு களில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனராம். இவர் களுக்கு தரிசனத்துக்கு 11 மணி நேரம் ஆனதாம். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் தரிசனத் துக்கு 6 மணி நேரம் காத்து இருந்தனராம்.

கூட்டத்தைப் பயன் படுத்தி பக்தர்களிடம் பணம் மோசடி செய்த இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் பிரம்மபுத்ராவைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ்வர ராவ் தனது 2 நண்பர் களுடன் கோவிலுக்கு வந்தார்.

அப்போது அவர்களி டம் ஒருவர் அறிமுகமாகி தான் தேவஸ்தான ஊழி யர் என்றும், நபருக்கு ரூ.500 கொடுத்தால் ஏழு மலையானை உடனடி யாக தரிசிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதை நம்பிய கல்லூரி மாணவர்கள் 3 பேரும் ஆளுக்கு ரூ.500 வீதம் ரூ.1500 கொடுத்தனர்.

உடனே அவர் வைகுண் டம் வரிசையில் அனுப்பி உள்ளே ரமணா என்ப வர் இருப்பார் அவர் உங் களை மூலவர் அருகே அழைத்துச் செல்வார் எனக் கூறி நழுவினார்.

ஆனால் அனுமதிச் சீட்டு இல்லாததால் அவர் களை தரிசனத்துக்கு ஊழி யர்கள் அனுமதிக்க வில்லை. ரமணாவை தேடியபோது அப்படி ஒருவர் அங்கு இல்லை என்பதும் தாங்கள் ஏமாற் றப்பட்டோம் என்பதை யும் அவர்கள் உணர்ந் தனர். பின்னர் தர்மதரி சன வரிசையில் நின்று ஏழுமலையானை தரி சித்து திரும்பினார்.

வெளியே வந்தபோது பாஸ்போர்ட் சென்டரில் தங்களை ஏமாற்றிய இடைத்தரகர் நிற்பதை கண்டனர். உடனடியாக 3 பேரும் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப் படைத்தனர்.

விசாரணையில் அவ ரது பெயர் பனிக்குமார் (32) என்பதும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பனிக் குமாரை காவல்துறையி னர் கைது செய்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/98394.html#ixzz3VD58PX5S

தமிழ் ஓவியா said...

இலங்கைமீது பன்னாட்டு விசாரணை: 15 மொழிகளில் கையொப்ப இயக்கம்! அமெரிக்காவில் தொடங்கப்பட்டது!

நியூயார்க், மார்ச் 23_ இலங்கை தமிழினப் படு கொலை குறித்து பன் னாட்டு நீதிமன்றம் விசா ரணை நடத்தக்கோரி அமெரிக்காவில், 15 மொழி களில் கையொப்ப இயக் கம் தொடங்கப்பட்டது.

இலங்கையில் தமிழர் களுக்கு எதிராக அந் நாட்டு அரசாங்கம் செய்த போர்க் குற்றங்கள், இனப் படுகொலை, மனிதாபிமா னத்துக்கு எதிரான குற் றங்கள் ஆகியவற்றுக்காக இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசா ரணைக்கு உட்படுத்த அய்.நா. சபையை வலி யுறுத்தும் வகையில் அமெ ரிக்காவில் கையொப்பப் பிரச்சாரம் தொடங்கப் பட்டுள்ளது.

15 மொழி களில் 10 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற வகை செய்யும் இந்த மாபெரும் பிரச்சாரத்தை அமெரிக் காவின் முன்னாள் அட் டர்னி ஜெனரல் ராம் கிளார்க், நியூயார்க் நகரில் உள்ள அய்.நா.சபை தலைமை அலுவலகத் துக்கு வெளியே தொடங்கி வைத்தார். தமிழர்களின் துயரம் முடிவுக்கு வரவேண்டும்.

தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று குறிப்பிட்டு தனது கையொப் பத்தை பதிவு செய்து அவர் முறைப்படி பிரச் சாரத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழ் தேசிய கீதத்துடன் இந்த பிரச்சார நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நிவேதா ஜெய குமார், சவுமியா கருணா கரன் ஆகியார் பிரச்சார மனுவை தமிழிலும், ஆங் கிலத்திலும் வாசித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன், இனப்படு கொலை, போர்க்குற்றங் கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், இன வெறி ஆகியவற்றிலிருந்து தனது குடிமக்களை பாது காப்பதில் ஒரு நாடு வெளிப்படையாக தோல் வியடையும்போது அந்த மக்களை பாதுகாப்பதற் காக அதில் தலையிடுவது உலக சமுதாயத்தின் கடமை.

இந்த கையொப் பப் பிரச்சாரம் அய்.நா. சபைக்கு எதிரானது அல்ல. இது மக்கள் நலன் சார்ந்த பிரச்சாரம் ஆகும் என்று குறிப்பிட்டார் 15 மொழிகளில் கையொப்பப் பிரச்சார மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, உருது, அரபு, மலாய் உள்பட 15 மொழி களில் கையொப்பம் பெறு வதற்காக தனி இணைய தளமும் (www.tgte-ice) உரு வாக்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழ் ஈழம் அமைப்பு தெரிவித்துள் ளது.

Read more: http://viduthalai.in/page-8/98395.html#ixzz3VD5I4Tzn

தமிழ் ஓவியா said...

எனது கருத்து


மனிதன் தன் வாழ் நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து.
(விடுதலை, 3.2.1969)

Read more: http://viduthalai.in/page-2/98419.html#ixzz3VIsF1FCd

தமிழ் ஓவியா said...

எனது கருத்து


மனிதன் தன் வாழ் நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து.
(விடுதலை, 3.2.1969)

Read more: http://viduthalai.in/page-2/98419.html#ixzz3VIsF1FCd

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கான உடற்பயிற்சிகள் என்னென்ன?

பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம்.

1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.

2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.

3) யோகாசன பயிற்சிகள்.

4) ஸ்கிப்பிங் பயிற்சி

இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க இவற்றை செய்யலாம். ஆனோரோபிக் வகை உடற்பயிற்சி என்பது விளையாட்டுத் தனமாகவே இருக்கும். இதனை உடற்பயிற்சி செய்கிறோம் என்கிற உணர் வில்லாமல் விளையாட்டாக செய்யலாம்.

கைகள் வலுபெற: சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இடுப்பு வனப்பு பெற: இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக்ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.

தோள்பட்டை...: பெண்களின் தோள்பட்டை அவரவர் களின் தலை அமைப்பு, உடல்வாகு, இடுப்பின் அளவு போன்றவற்றை பொறுத்து அமைந்திருக்க வேண்டும். தோள்பட்டை அகலமாக இருந்து தலை சிறுத்திருந்தால் நன்றாக இருக்காது. தலையும், இடுப்பும் வனப்பாக இருந்து, தோள்பட்டை வனப்பாக இல்லை என்றால் அழகு வராது.

பாதம் உறுதி பெற: குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெட் மில் பயிற்சியினையும், மெல்லிய நடைப் பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்.

Read more: http://viduthalai.in/page-7/98446.html#ixzz3VIuJK2OU

தமிழ் ஓவியா said...

முல்லைவேந்தன் உரை

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் உரையாற்றும்பொழுது, கல்விக் கூடத்திலே தந்தை பெரியார் பெயரில் அரங்கம் அமைத்த நமது முனைவர் இராஜேந்திரன் அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அந்த அரங்கத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திறந்து வைப்பது என்பது பொருத்தமான ஒன்றாகும்.

தந்தை பெரியாருக்குக்கூட சிலை வைக்கக்கூடாது என சிறுமதி கூட்டத்தினரும் இன்று இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களை நான் கேட்கிறேன், அரசுக்குச் சொந்தமான இடத்தில், நெடுஞ் சாலையோரங்களில் எல்லாம் பூசணிக்காய் போன்ற கண்ணை வைத்து,கத்தியைக் கொடுத்து விழிபிதுங்க காளி என்றும், மாயி என்றும்,

முனியப்பன் என்றும் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சிலையை வைத்திருக்கிறார்களே, இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது; அவ்வளவு ஏன், ஓமந்தூரார் தோட்டத்திலேயே இன்றைய ஆட்சியாளர் கள் கோவிலைக் கட்டி வைத்துக்கொண்டு, கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட சட்டமன்றத்தையே இடிக்கிறார் களே இவற்றை யார் கேட்பது?

அரசு இடத்தில் கோவில் கட்டலாம்; ஆனால், சொந்த இடத்தில்கூட பெரியாருக்கோ, தீரன் சின்னமலை போன்ற வர்களுக்கோ இந்த நாட்டில் சிலை வைக்க முடியவில்லை. வெங்கடசமுத்திரத்தில் பெரியாரோடு வாழ்ந்த வி.ஆர்.வேங் கன் அவர்களுடைய சொந்த இடத்தில் சிலை வைக்கத் தடை போடுகிறார்கள்.

இங்கே பெரியார் அரங்கு என்று மட்டும் ஏற் படுத்திவிட்டால், போதாது. அது பகுத்தறிவுப் பாடங் களைச் சொல்லிக் கொடுக் கும் அரங்கமாகவும் இருக்க வேண்டும்; மாணவர் களுக்கு அறிவு வெளிச்சத் தைக் காட்டவேண்டும். மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்க ஆசிரி யர்கள் நல்ல சிந்தனையா ளர்களாக பகுத்தறிவாளர் களாக இருக்கவேண்டும்.

வீடு கட்டும்போது பூஜை அறை கட்டுவதை விட்டு விட்டு, படிப்பகம் கட்ட வேண்டும்; ஒரு பெண் நினைத்தால் தன் குழந்தை களை நல்ல பகுத்தறிவாளர் களாக ஆக்க முடியும். பகுத்தறிவு பரவ அகிலா எழிலரசனைப்போல வீட் டுக்கு ஒரு வீராங்கனை இருக்கவேண்டும்.

ஆசிரியர்கள் பெரி யாரை கற்கவேண்டும். அண்ணாவைப்பற்றி படிக்கவேண்டும். மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியை மட்டும் சொல்லிக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், பகுத்தறிவுப் பாடங்களைப் புகட்டுங்கள். மாணவர்கள் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்கும் நிலைக்கு மாறவேண்டும்.

பெரியாரின் கொள்கையை 100-க்கு 25 பேர் புரிந்து கொண்டு செயல்பட்டால்கூட, தமிழகத்தில் பெரிய மாற்றம் நிகழும். மாதாமாதம் பகுத்தறிவுப் பாசறை கற்கும் இடமாக இந்த அரங்கம் இருக்கவேண்டும்.

பட்டங்கள், பதவிகள், ஆட்சி அதிகாரங்கள் இருந் தாலும், இல்லாவிட்டாலும் கருப்புச் சட்டைக்குச் சொந்தக் காரனாக என்றைக்கும் இருப்பேன் என்று உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/98458.html#ixzz3VIuzrccG
24-03-2015

தமிழ் ஓவியா said...

நேருவும்- பசுவும்!இந்தக் கோமாதாவை வைத்துக்கொண்டு இந்த இந்துத்துவாவாதிகள் மார டிப்பது, அரசியலாக்குவது என்பது - நேரு அவர்கள் காலத்திலேயே தொடங்கப் பட்டு விட்டது.

1952 முதல் பொதுத் தேர்தலில் பண்டிட் ஜவகர் லால் நேரு அலகாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் ராம ராஜ்ய பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஷம்பூ நாராயண் என்பவர்.

தம்மை எதிர்த்துக் காங் கிரஸ் சார்பில் போட்டியிட்ட நேருவிடம், அவர் ஒரு கேள்வியைக் கேட்டார். உங்களுக்குப் பசுவின்மீது நேசம் இல்லையா? என்று நேருக்கு நேர் நேருவிடமே கேட்டார்.

கேள்வி வந்த அடுத்த நொடியே பொட்டில் அடித் ததுபோல நேரு பதில் சொன் னார், பசுவை மட்டுமல்ல; குதிரைகளையும் கூட நான் நேசிக்கிறேன்! என்று போட் டாரே ஒரு போடு! அவ் வளவுதான் ஆசாமி வாய டைத்து நின்றார்.

உயிர்களை நேசிப்பது என்கிற காரணத்துக்காக மனிதன் மாமிச உணவைச் சாப்பிடக்கூடாதா? காய்கறி களைக்கூடத்தான் வளர்க் கிறார்கள்; (கவனிக்கவேண் டும் வளர்க்கிறார்கள்) அவை யும் பிராண வாயுவை உட் கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகின்றன. அவற் றிற்கும் உயிர் இருக்கத்தான் செய்கிறது. அதனால் காய் கறிகளைச் சாப்பிட மறுப்பார் உண்டா?

உயிர்களை வதை செய் யக்கூடாது என்று சொல்லு வதைக்கூடப் புரிந்துகொள் ளலாம்; உயிர்களில் பசுவைத் தவிர மற்றவற்றைக் கொல் லலாம் என்பது எந்தவூர் ஜீவகாரூண்யம்?

ஒரு காலகட்டத்தில் இந்தப் பார்ப்பனர்கள் பசுக் களை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி பசு மாமிசம் தின்று கொழுத்தவர்கள்தான். இடைக்காலத்தில்தான் இவர் களிடம் மாற்றம் ஏற்பட்டது. இதனை வரலாற்று ஆசிரிய ரான இராகுல சாங்கிருத்தி யாயன் எழுதியுள்ளார்.

பிராமணர்கள் பவுத்தர் களைத் தங்களது பலமான விரோதிகள் என்று கருது கிறார்கள். எல்லா நாட்டிலும் உள்ள பவுத்தர்கள் பசு மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்துக்காகவே பசு மாமிசம் தடை செய் யப்பட்டது என்றும், பசு வையும், பிராமணர்களையும் காப்பாற்றுவது தர்மம் என்றும் பிராமணர்கள் பிரச் சாரம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிறார். (நூல்: வால்கா முதல் கங்கை வரை, பக்கம் 76).

இந்த வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், கோமா தாவுக்குள் ஒளிந்திருக்கும் ஆரியப் பார்ப்பனர்களின் அரசியல் உள்நோக்கம் என்னவென்று எளிதில் விளங்கிவிடும் அல்லவா! - மயிலாடன் 25-3-2015

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

என்ன ஆனந்தம்?

ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்!

- காஞ்சி சங்கராச்சாரியார் (மறைந்த) சந்திரசேகரேந்திர சரஸ்வதி
அப்படியா?

ராமன் சரயு நதியில் விழுந்து தற்கொலை யல்லவா செய்துகொண் டான் - ஆகா, என்ன ஆனந்தம்!

Read more: http://viduthalai.in/e-paper/98503.html#ixzz3VOduT5Va

தமிழ் ஓவியா said...

அனுமதியோம்!

செய்தி: பயங்கரவாதம் இல் லாத சூழலை பாகிஸ்தான் உருவாக்கவேண்டும்.
-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

சிந்தனை: ஆமாம், இந்தி யாவுக்குள் அத்தகைய வாதங்களை நடத்த எங் களுக்கு மட்டுமே பிரத்தி யேக உரிமை உண்டு - அதை யாரும் தட்டிப் பறிக்க அனுமதியோம்!

Read more: http://viduthalai.in/e-paper/98506.html#ixzz3VOe4ZXbd

தமிழ் ஓவியா said...

பரிகார முயற்சி

எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டில் ஒன்று காணவுமான காரியங்கள் நடைபெறும். - (குடிஅரசு, 4.10.1931)

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

குழந்தைப் பேறு

மயிலாடுதுறையையடுத்த திருவாலங்காட்டில் உள்ள கோயில் குளமான காமேஸ் வர தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப் பேறு கிடைக் குமாம். - ஒரு நாளேட்டின் செய்தி இது. அந்தத் திருவாலங் காட்டிலேயே குழந் தைகள் இல்லாத தம்பதிகள் இருக் கிறார்களே?

Read more: http://viduthalai.in/e-paper/98552.html#ixzz3VUa7RuPX

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கனம்!

செய்தி: நிதி நிலையில் தமிழகம் பாதுகாப்பாகவே உள்ளது.
- முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

சிந்தனை: ஆமாம். தமிழ் நாட்டின் கடன் சுமை ரூ.1.81 லட்சம் கோடி என்ற கனமான நிலைதானே!

Read more: http://viduthalai.in/e-paper/98554.html#ixzz3VUaRvJq6

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...

மாற்றுத் திறனாளிகள் மீது
மனிதநேய அணுகுமுறை தேவை

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சென்னை விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 24ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளைப் போராட வைப்பது என்பதே கருணையற்ற - மனித நேயமற்ற ஒன்று என்று எடுத்த எடுப்பிலேயே கூறிட வேண்டும். அவர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை - பார்வையற்றவர்கள் பிரச் சினையை அரசு திறந்த பார்வையுடன் பார்க்க வேண்டும்.

காது கேளாதோர் பிரச்சினையை அரசாங்கம் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பது இயற்கையின் பாற்பட்ட மனித நியதியாகும். அவர்களின் கோரிக்கைதான் என்ன?

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற அரசு கடைப்பிடிக்கும் சட்ட விரோத விதிகளை ரத்து செய்க!

மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே அனைவருக்கும் உதவி தொகை வழங்கிடுக!

40 சதம் ஊனம் உள்ள அனைவருக்கும் உதவித் தொகை வழங்கிடுக!

காது கேளாதோர் உதவித் தொகை பெற 80 சதம் என்கிற பாரபட்சத்தை ரத்து செய்க!

உதவித் தொகை நிறுத்தப்பட்ட அனைவருக்கும் நிலுவை தொகையுடன் உடனே வழங்குக!

உத்தரவு பெற்று காத்திருக்கும் அனைவருக்கும் காலதாமதமின்றி உதவித் தொகை வழங்கிடுக!

2014 மார்ச் அரசாணை எண்.10-ன் படி ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிக்குரிய 1107 பின்னடைவு காலிப் பணியிடங்களில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் 900-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியர்களை பணி நியமனம் செய்க!

அரசாணைப்படி ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாளச் சான்று வழங்கிடுக!

அரசு காலிப் பணியிடத்தில் 3 சதவிதத்தை மாற்றுத் திறனாளிகளை கொண்டு நிரப்பிடுக!


மேற்கண்ட ஒன்பது கோரிக்கைகளில் அடங்கி யுள்ள நியாயத்தை விளக்கிட வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு தாய்க்கு நான்கு குழந்தைகள் இருந்தால் அதில் ஒன்று பிறப்பிலேயே மாற்றுத் திறனாளியாக இருந்தால் அத்தாயின் கடமை என்பது அந்தக் குழந்தையின்மீது கூடுதல் கவனம் செலுத்துவ தாகும்.

அரசு என்பதும் அந்தத் தாயின் இடத்தி லிருந்து மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினையைப் பார்க்க வேண்டாமா? காது கேட்பதில் என்ன 80 சதவிதம்? விசித்திர மான கேலிக் கூத்து!

இவை எல்லாம் ஒரு பிரச்சினையைத் தட்டிக் கழிக்க வைக்கப்படும் நிபந்தனைகளாகவே தெரிகிறது.

இவர்கள் எல்லாம் என்ன மிட்டா மிராசு தார்களா? செல்வந்தர்களா?

அரசு கொடுக்கும் உதவித் தொகையில் வாழ வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாக்கப்படுபவர்களாயிற்றே! அவர்கள் விஷயத்தில் தேவையற்ற நிபந்தனைகளைத் திணிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் அய்யமில்லை.

இவர்களில் படித்தவர்களுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய வேலை வாய்ப்பை அளித்திட என்ன தயக்கம்? அப்படி என்ன இவர்களுக்குப் பெரிய தொகை செலவாகப் போகிறது?

அரசு கீழே சிந்தும் பணத்துக்கு ஈடாகுமா இது? அரசு இவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற் றிட முன்வர வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களால் உண்டாக்கப்பட்ட திராவிடர் கழகம் மனிதாபிமான இயக்கமாகும் - மனித உரிமைகளுக்காகப் போராடும் இயக்கமும் ஆகும்.

அந்த முறையில்தான் மாற்றுத் திறனாளிகளை அவர்கள் போராடும் இடத்திற்குச் சென்று நேற்று சந்தித்தோம். அவர்கள் நியாயமான கோரிக்கை களுக்காக திராவிடர் கழகம் உரத்த முறையில் குரல் கொடுக்கத் தயாராகவே இருக்கிறது.

நீதிமன்றம் சென்றுதான் ஆக வேண்டும் என்றாலும், அந்த வகையிலும் உதவிட திராவிடர் கழகம் தயாராகவே இருக்கிறது.

அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் தமிழ்நாடு அரசு கருணையோடும், மனிதநேய உணர்வுடனும் அணுக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்து கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

26.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98557.html#ixzz3VV2Av9w5