Search This Blog

21.3.15

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில்...தாலி அகற்றும் நிகழ்ச்சி!
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதியன்று கொள்கைப் பூர்வமான இரு நிகழ்ச்சிகளை அறிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.


ஒரு தலைவரின் பிறந்த நாள் என்பது வாண வேடிக் கையல்ல; பட்டாசு வெடிப்பு அல்ல; வெறும் தோரணங் களும் அல்ல; அந்தத் தலைவர் எந்தக் கொள்கைகளை வலியுறுத்தினார்களோ அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உரத்த சிந்தனையை ஏற்படுத்துவது தான் - உண்மையிலேயே அந்தத் தலைவரைப் போற்றி மதிக்கும் உண்மையான உணர்வாகும்.


மனு தர்ம சாஸ்திரத்தை எரிக்கச் சொன்னவர் - திராவிடர் கழகம் மகளிரே தலைமை தாங்கி நாடெங்கும் மனுதர்ம எதிர்ப்புப் போராட்டத்தை எரித்துச் சிறை யேகியதும் உண்டு.


இரண்டு தலைவர்களும் மனு தருமத்தை எரிக்கச் சொன்னதற்குக் காரணமே - அது ஒரு குலத்துக்கொரு நீதியை வலியுறுத்துவதோடு அல்லாமல் பெண்களைப் பிறவி அடிமைகளாகச் சித்தரிப்பதும் முக்கிய காரண மாகும்.

1919ஆம் ஆண்டில் பெண்களுக்கான சிறப்பு மாநாடுகளில் அண்ணல் அம்பேத்கர் கலந்து கொண்டு தாழ்த்தப் பட்ட சமூகம் விடுதலை பெற அதன் முதல் தேவை தலித் சமூகப் பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்றார். ஜாதிப் பெயர்களை ஆண்கள் தங்கள் பெயருக்குப் பின் னால் வைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்துகின்றனர்.


ஆனால் பெண்கள் தங்கள் பெயர்களின் பின்னால் ஜாதிப் பெயர்களைத் தவிர்க்கின்றனர். அதே நேரம் திருமணம் போன்ற நிகழ்வுகளில் ஜாதி உணர்வை வலியுறுத்த வேண்டிய சூழலில் பெண்களும் உள்ளனர். இதைக் களைந்தெறிய, பெண்கள் போதுமான அளவு  பொதுத் தளத்திற்கு வர வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றவர் அண்ணல் அம்பேத்கர்.


1951 (செப்டம்பர் 27) ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் மத்திய சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்ததற்கே காரணம் - இந்து திருத்த மசோதாவைக் கொண்டு வந்து பெண்களுக்கான உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நிலையில்தான்.


அந்த வகையில் பார்த்தால் ஆணின் உடைமை என்பதை அறிவிக்கும் விளம்பரப் பலகை ஆண் பெண்ணின் கழுத்தில் கட்டும் தாலி என்ற சின்னமாகும். தந்தை பெரியார் இது குறித்து விரிவாகப் பேசியுள்ளார். இப்பொழுது சட்டமாக்கப்பட்டுள்ள சுயமரியாதைத் திரும ணத்தில்கூட தாலி கட்டாயமில்லை - இது தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.


இந்தக் கால கட்டத்தில் தாலிபற்றிய ஒரு கருத்து விவாதமே நடத்தக் கூடாது என்று கருதுபவர்கள் பத்தாம்பசலிகள் என்பதைவிட ஆண் ஆதிக்கப்பாசிச சக்திகளே என்பதில் அய்யமில்லை.


தனியார்த் தொலைக்காட்சி ஒன்றில் பதிவு செய்யப் பட்ட இது தொடர்பான நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டுள்ளனர்.


இதற்குப் பதிலடியாகத்தான் பெண்ணுரிமைக் களத்தில் ஒளி வீசி நின்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) அடிமைச் சின்னமான தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கான அறிவிப்பை திராவிடர் கழகத் தலைவர் அளித்தார்.


பெண்ணுரிமைச் சிந்தனையாளர்களும், தந்தை பெரியார் வழி, அண்ணல் அம்பேத்கர் வழிப்பட்ட சிந்தனையாளர்களும் இந்தக் கொள்கைப் பூர்வமான அறிவிப்பு - அண்ணாவின் கொள்கை உந்துதலை கொடுக்கும் என்றே கருதுவார்கள்.


இதனைத் திசை திருப்பும் வகையில் இடையில் புகுந்து எவரேனும் குழப்புவார்களேயானால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

தாலியில்கூட பார்ப்பான் தாலி, பறைத்தாலி, பொட்டத் தாலி என்று பல வகைகளிலும் பிரித்து வைத்துள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது - ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இந்தத் தாலி அகற்றும் அறிவிப்பு - மிகுந்த வரவேற்புக்குரியதாகும்.


பெண் திருமணம் அடைந்ததற்கான அடையாளம் தான் தாலி என்று சிலர் சமாதானம் சொல்ல முயற்சிப்ப துண்டு. அதே கேள்வியைத் திருப்பிப் போட்டால் பதில் உண்டா? ஆண்கள் திருமணம் ஆனவர்கள் என்பதற்கு என்ன அடையாளம்?


பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக வெளியில் செல்லக் கூடியவர்கள் - ஊர் சுற்றுபவர்கள் முதலில்  அவர்களுக்கு அல்லவா திருமணம் செய்து கொண்ட தற்கான அடையாளம் வெளிப்படையாகத் தேவை.


ஆண்கள் மிஞ்சி போட்டுள்ளார்களே என்று சொல்லு கிறார்கள் - எத்தனை ஆண்கள் அந்த மிஞ்சியோடு நடமாடுகிறார்கள் என்பதைச் சொல்லட்டுமே பார்க்கலாம்; பெண்களும்கூடத்தான் மிஞ்சி போட்டுக் கொள்கிறார்கள்.


ஒரு பெண் திருமணம் ஆனவரா இல்லையா என்பதுபற்றி இன்னொரு ஆணுக்கு என்ன அக்கறை - கவலை? அது ஒரு பெண்ணின் தனிப்பட்ட (Personal) பிரச்சினையாகும். அதில் மூக்கை நுழைக்க இன்னொரு ஆணுக்கு உரிமை ஏது?


தாலி கட்டுவதன் நோக்கம் - அந்தப் பெண் கணவனை இழந்து விட்டால் அந்தத் தாலியை அறுத்து விதவை - அமங்கலி என்று காட்டி அவமானப்படுத்துவதற்காகத் தானே! மறுக்க முடியுமா?


கணவன் குடிகாரனாக இருந்தாலோ, முரடனாக இருந்தாலோ மனைவியை அடிப்பது உதைப்பது என்பது அன்றாட நிகழ்வாக அமைந்து விடுகிறது. அந்த நேரத்தில்கூட பாதிக்கப்பட்ட பெண்ணின் விடுதலை உணர்வை, சுயமரியாதை உணர்வைத் தடுப்பது - மனரீதி உளவியல் ரீதியான இந்தத் தாலி (மஞ்சள்) கயிறுதான் அந்தவகையில் பார்த்தாலும் தாலி பெண்ணின் முழு மனிதத்துவத்தை முற்றிலுமாக அழிக்கக் கூடிய ஆபத்தான அணிகலனாகும்.


அதனை அகற்றும் நிகழ்ச்சி என்பது தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பிறந்த நாளில் மிகவும் பொருத்தமானதாகும். அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் (ஏப்ரல் 14) மாலை 4 மணிக்கு கூடுங்கள் இருபால் தோழர்களே! பெரியார் திடலில்!

                             ----------------------------”விடுதலை” தலையங்கம் 21-03-2015

45 comments:

தமிழ் ஓவியா said...

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க இயலாது! உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி மார்ச் 21 பகவத் கீதைஎன்னும் நூலை தேசிய நூலாக அறிவிக்க இயலாது என்று கூறி வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து மத அமைப்புசார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் வெளி விவகாரத்துறை அமைச் சர் சுஸ்மா சுவராஜ் பேசும் போது; விரைவில் பகவத் கீதையை தேசிய நூலாக அரசு அறிவிக்கும் என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு தேசிய அளவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத் தியது. சில இந்துமத அமைப்புகள் கூட மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் இதற்கு வலு ஊட்டுவதுபோல் மோடி வெளிநாட்டிற்கு செல் லும் போதெல்லாம் அங் குள்ள தலைவர்களின் கையில் வலுக்கட்டாய மாக பகவத்கீதையை திணித்துவிட்டு வருகிறார்.

அரசின் தேசிய நூல் பற்றிய கொள்கை முடிவுகள் தெளிவில்லாத பட்சத்தில் வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் என்பவர் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண் டும் என்று அரசுக்கு ஆணையிடக்கோரி பொது நலமனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த பொதுநலமனு வெள்ளிக் கிழமையன்று விசார னைக்கு வந்தது. இந்த மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதா வது:

ஒரு நூலை தேசிய நூலாக அறிவிக்கவேண் டும் அல்லது அதை தவிர்க்கவேண்டும் என் பதை நீதி மன்றம் வலி யுறுத்த முடியாது. இந்திய சமூகம் என்பது பல்வேறு மதம் மற்றும் இனங் களைக் கொண்ட நாடு. அரசு எடுக்கும் எந்த ஒரு செயலும் அனைத்து சமூகத்தினருக்கும் இணக்கமான ஒன்றாகத் தான் இருக்கவேண்டும். சமூக நல்லிணக்கம் சார்ந்த பிரச்சனைகளில் அரசின் முடிவு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக இருக்கவேண்டும்.

பகவத் கீதை என்பது ஒரு மதத் தினரின் புனித நூல், நீதி மன்றம் இந்த விவகாரத் தில் எந்த ஒரு கருத்தும் சொல்லமுடியாது. அரசு அரசியல் சாசனப்படி செயல்படும், ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய் கிறோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98243.html#ixzz3V1V2itGs

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சதி


பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும், அவர் களை ஒழித்துக் கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக் கையாக இருந்து வந்திருக்கிறது.

- (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/e-paper/98252.html#ixzz3V1VSThdI

தமிழ் ஓவியா said...

வரலாற்றை மாற்றி எழுத முனைந்திருக்கும் காவிப்படையினரின் செயல்பாடுகள்

கோட்சேவுக்கு சிலை அமைக்க வேண்டுமாம்!

- சுசீத்ரா விஜயன்


மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேயை ஒரு தேசபக்தன் என்று நாடாளுமன்ற பா.ஜ.க.உறுப்பினர் சாட்சி மகராஜ் கூறிய சில நாட்களுக்குப் பின்னர், இந்தியா முழுவதிலும் பொது இடங்களில் கோட்சேயின் சிலையை வைப்பதற்கான இடம் ஒதுக்கித் தரு மாறு மத்திய அரசுக்கு சங்பரிவாரத்தின் துணை அமைப்பான அகில பாரதிய இந்து மகாசபை விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளது. ஹிந்து மதத்தினைப் பற்றிய அறிவார்ந்த ஆய்வு மற்றும் பிரச்சார சொற்பொழிவுக்கு ஈடும், இணையும், மாற்றும் அற்ற பொக் கிஷம் என்று வர்ணித்த மகாசபை யின் தேசிய தலைவர் சந்திர பிரகாஷ் கவுசி, காந்தியின் கொலைக்கு வழி வகுத்த நிகழ்வுகளைப் பற்றிய ஒரு முழுமையான விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது. அதன் மூலம் கோட்சேயைக் கொடுமையானவனாகக் காட்டுவது முடிவுக்கு வரும் என்பதுடன், அவன் விரும்பி காந்தியைக் கொலை செய்யவில்லை; அவ்வாறு செய்ய அவன் நிர்ப்பந்திக்கப்பட்டான் என் பதையும் நம் நாட்டு மக்கள் அறிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார். இந்த மாறுபட்ட கருத்து உத்தரப் பிரதேச மீரட்டில் இருந்து பரவி தமிழ் நாடு வரை வந்துவிட்டது; தமிழ் நாட்டின் 13 மாவட்டங்களில் கோட் சேயின் சிலை அமைக்கப்படும் என்று ஹிந்து மகாசபையின் இரண்டு பிரிவுகள் அறிவித்துள்ளன.

தமிழ் ஓவியா said...


இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கை, பன்முகத்தன்மை ஆகிய வற்றின் வரலாற்றை மாற்றி எழுதும் ஒரு நோக்கம் கொண்ட திட்டமிட்ட அரசியல் செயல்பாடே இது. இந்து மதமும், ஹிந்து மக்களும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பதையும், இந்திய நாடு ஒரு ஹிந்து தேசம் என்பதையும் உறுதிப் படுத்திக் கொள்வதற்கான முக்கியமான வழிகளில் ஹிந்து மகாசபையின் கோட்சேயைப் பற்றிய விவரிப்பு செயல்படுகின்றது. காந்தியைக் கொலை செய்தவன் ஒரு தேசபக்தன் என்ற கட்டுக் கதை கூறும் சூழ்ச்சியின் மூலம் பெரும்பான்மை மக்களாகிய ஹிந்துக்களின் ஆதரவை உருவாக்கி, ஒன்று திரட்டுவது அவர் களது அரசியல் நோக்கத்தின் மய்யக் கருத்தாகும். ஹிந்துக்கள் அல்லாதவர் களின் ஆட்சியின் கீழ் ஹிந்துக் களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று ரீதியிலான அநீதியை சரி செய்வதற் கான ஒரு வகை நியாயத்தை இவ்வாறு வரலாற்றை மாற்றி எழுதும் கோரிக்கை கோருகிறது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்கான நியாயமான வரலாற்று நிகழ்வுகளுக்கு எதிரானவை என்று தெளிவாகத் தெரியும் புராணக் கட்டுக் கதைகள் மூலம், வரலாற்றை மாற்றி எழுதி, முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மை மதத்தவர்க்கும் எதிரான உணர்வு களைப் பரப்புவதன் வழியாக இதனை அவர்கள் செய்கின்றனர்.


தமிழ் ஓவியா said...

ஹிந்துத்துவக் கோட்பாட்டை வடிவமைத்த சாவர்க்கர்

வரலாற்றை இவ்வாறு மாற்றி எழுதும் இந்த உத்தி, ஹிந்துத்வக் கோட் பாட்டுக்கு அடித்தளம் அமைத்த வினாயக தாமோதர் சாவர்க்கர் காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகும். இந்துத்துவா - ஒரு ஹிந்து என்பவன் யார்? என்ற தலைப்பில் 1922 இல் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் இந்திய மண்ணிலும், இந்திய மக்களின் ரத்தத்திலும், கலாச் சாரத்திலும் நிலை பெற்றுள்ள ஹிந்து தேசத்தைப் பற்றி அவர் பேசுகிறார். ஹிந்துக்கள் என்று அடையாளப்படுத்த இயன்ற இதர மதங்களைச் சார்ந்தவர் களில் சமணர்கள், புத்தர்கள், சீக்கியர் களைச் சேர்க்கும் அவர், அந்நிய நாட்டி லிருந்து வந்த மதங்களான கிறித்துவ, இஸ்லாமிய மத மக்களை சேர்க்கவில்லை. ஹிந்து சுய ஆட்சியைப் பற்றி 1925 இல் எழுதிய சாவர்க்கர், முஸ்லிம் மன்னர் களுக்கு எதிராக 17 ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து போரிட்ட சிவாஜி மன்னரைப் பற்றியும் எழுதுகிறார். மராட்டிய மக்களின் உள்நாட்டு வரலாற்றை, இந்தியாவை வெற்றி கொண்ட அந்நிய முஸ்லிம் மன்னர்களுக்கும், மண்ணின் மைந்தர் களுக்கும் இடையே நடைபெற்ற மாபெரும் தேசியப் போராட்டமாக மாற்றி அவர் எழுதுகிறார்.

சாவர்க்கரின் ஹிந்து தேசியம் என்பது நில எல்லை அளவிலும், இனம் மற்றும் கலாச்சார அளவிலும் உருவாக்கப்பட்ட தாகும். இந்தியாவுக்கு இருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று அயல் மதத்தினரை, குறிப்பாக முஸ்லிம்களை அவர் தனது பிந்தைய எழுத்துக்களில் அடையாளப்படுத்துகிறார்.

தேசிய விடுதலை இயக்கத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்

சாவர்க்கரை முன்னோடியாகக் கொண்டு, அவரது இந்துத்துவக் கோட் பாடுகளைப் பின்பற்றி வருபவர்கள் கடந்த இருபதாண்டு காலத்தில் தேசிய விடுதலை இயக்கத்தின் வரலாற்றையும், பாரம்பரியத் தையும் தங்களுக்கு ஆதரவானதாக, சாதகமானதாக பயன்படுத்தி வருகின்றனர். சர்தார் படேலின் வரலாற்றை இவ்வாறு பயன்படுத்திக் கொள்வதை ஏற்கெனவே அவர்கள் செய்துவிட்டனர். தங்கள் கோட்பாடுகளைப் பரப்பும் பிரச்சாரத்தில் உள்நாட்டுத் தலைவர்கள் மற்றும் வர லாற்று நாயகர்கள் கதைகளைத் தங்களுக்கும், தங்களது கோட்பாடுகளுக் கும் ஆதரவானவையாக மாற்றிக் கூற அவர்கள் தொடங்கிவிட்டனர். தவறாக வழிநடத்தப்பட்ட கோட்சேயைப் போற் றிப் பாராட்டும் அதே நேரத்தில், ஹிந்து சிந்தனையாளராக காந்தியையும், ராமராஜ்யத்தைப் பற்றி கனவு கண்ட மகாத்மாவையும் தங்களுடையவராக ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் ஏற்கெ னவே அவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.

மதச்சின்னங்களை, அடையாளங்களை தேசவிடுதலை இயக்கத்திற்கு ஆதரவு திரட்ட காந்தி பயன்படுத்தினார்

தமிழ் ஓவியா said...


இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் அரசியல் ஆதாயத்துக்காக கடவுள் களைத் துணைக்கிழுக்கும் பழக்கம் நீண்ட நெடுங் காலமாகவே இருந்து வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டம் என்னும் அரசியல் இயக்கம் வடிவெடுத்தவுடன், மதம் மற்றும் மதச் சின்னங்கள் மூலம் பொதுமக்களை ஒன்றுதிரட்டுவது என்னும் அரசியல் உத்தி பல்வேறுபட்ட பிரிவு அமைப்புகளாலும், மக்களாலும் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது. இத்தகையவர்களில் காந்தியும் அடக்கம். அந்நியர் ஆட்சியால் அவதிப்பட்ட இந்திய நாட்டு மக்களை ஒன்று திரட்டுவதற்குப் பயன்படுத்தப்பட ஆற்றல் மிகு அடையாளங்கள் இவை என்பதை காந்தியும் புரிந்து கொண்டிருந் தார். ஹிந்து மதச் சின்னங்களை, வாசகங்களை, கடவுள் சிலைகளை, உருவங்களை தேசிய இயக்கத்துக்கு ஆதரவாக காந்தி பெரும் அளவில் பயன் படுத்தி, இந்தியாவை பாரத மாதா என்னும் ஒரு ஹிந்து பெண் கடவுளாகக் காட்டிய துடன், நாட்டில் சிறந்த அரசாட்சிக்கு ராமராஜ்யம் ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தினார். ஹிந்துக்களுக்கு தூண்டுதல் அளித்த ஹிந்து மத அடையாளங்கள் முஸ்லிம்களை அந்நியப்படுத்திவிட்டது

தமிழ் ஓவியா said...

வறுமையும், படிப்பறிவின்மையும் மலிந்த இந்திய நாட்டில், இந்த மத அடையாளங்கள் ஆழ்ந்த அரசியல் பாதிப்புகளை ஏற்படுத்தின. பெரும் பான்மை மக்களான ஹிந்துக்களுக்கு அவை பெரும் தூண்டுதலாக அமைந்தன; ஆனால் அதே நேரத்தில் இந்திய முஸ்லிம் மக்களை அது அந்நியப் படுத்திவிட்டது. ஹிந்து வரலாறு, கட வுள்கள், அடையாளங்கள், ராமராஜ்யம் எனும் காந்தியின் கருத்து ஆகியவை களால் விளக்கம் அளிக்கப்பட்ட ஒரு தேசத்தில் தங்களையும் பொருத்திக் காண்பதற்கு அவர்களால் இயலவில்லை.

தமிழ் ஓவியா said...

மத அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்திய அது இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு வழிவகுத்தது. ஹிந்து தேசியம் என்னும் தங்களது கண்ணோட்டத்தில் பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட, விடுதலை பெற்ற அய்ம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அயோத்தி ராமஜென்ம பூமி இயக்கத்தை அவர்கள் உருவாக்கிப் பயன்படுத்தினர். ஹிந்து இந்தியாவின் அடையாள மய்யமாக ராமரையும், ராமராஜ்யத்தை யும் அவர்கள் அறிமுகப்படுத்தி, பரப்புரை செய்து வந்தனர்.

மதஅடிப்படையிலான தேசியத்தை வன்மையாகக் கண்டிக்கும் ரவீந்திரநாத் தாகூர்

தேசியம் என்ற பெயரில் மதத்தைப் பயன்படுத்துவதைக் கடுமையாகத் தொடர்ந்து எதித்து விமர்சித்து, கண்டித்து வந்தவர் ரவீந்திரநாத் தாகூர் ஆவார். கண்மூடித்தனமான, கட்டுப்பாடற்ற, ஆபத்தான மத தேசியத்தை தனிப்பட்ட வர்கள் பீடத்தில் ஏற்றி வைத்தால், எவ்வாறு வன்முறைகளும், கொலை களும், பலிகளும் அதன் சடங்குகளாக ஆகிவிடுகின்றன என்பதை வீடும் உலகமும் என்ற தனது புதினத்தில் தாகூர் காட்சிப்படுத்தியுள்ளார். தேசியம் என்ற நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் அடையாளங்கள், சொற்றொடர்கள், முழக்கங்கள், சிலைகள், உருவங்கள் ஆகியவற்றையும், அவைகளால் இழைக் கப்பட இயன்ற தீங்கினையும் தாகூர் நுணுகிப் பகுத்தாய்வு செய்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

தனிப்பட்டதும், இயல்பாகவே பிரிவினை உணர்வை ஏற்படுத்த இயன்ற துமான மத அடையாளங்களின் பயன் பாட்டைப் பற்றி தனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து தாகூர் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். தனிப்பட்ட கலாசார, மத, மொழிமரபில் ஆழப் பதிந் துள்ள அடையாளங்களைப் பயன்படுத் தும் உத்தியின் தவிர்க்க இயலாத, இயல் பான விளைவு வன்முறையாகவே இருக்கும் என்று தாகூர் 1915 ஆம் ஆண்டு வாக்கிலேயே எச்சரித்துள்ளார். அவரது தீர்க்கதரிசன சொற்கள் எவ்வளவு உண் மையானவை என்பது ஒரு முறையல்ல, பல முறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜின்னா பிரிவினையை விரும்பவில்லை; சமநிலையையே விரும்பினார்

மும்பை முன்னாள் அட்வகேட் ஜெனரலும், நீதிமானும், எழுத்தாளருமான எச்.எம்.சீராவி இந்தியப் பிரிவினை மரபுக் கதையும், உண்மை நிலையும் என்ற தனது நூலில், முகமது அலி ஜின் னாவின் நோக்கம் பிரிவினை அல்ல என்றும், சமநிலை பெறுவது மட்டுமே என்றும் கருத்து தெரிவித்துள்ளார். அதிகார மாற்றம் 1942-47 என்ற 12 தொகுதி ஆவணங்களையும், வரலாற் றுப் பதிவுகளையும் மிகுந்த முயற்சியுடன் நுணுகி அலசி ஆய்ந்தபின்னர்தான் அவர் தனது உறுதியான வாதங்களை முன்வைக்கிறார். இந்தியா ஹிந்து மயமாக்கப்படும் என்பதும், அதனால் முஸ்லிம் மக்கள் மீது ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் ஜின்னா பெரிதும் அச்சம் கொண்டிருந்தார் என்று சீராவி வாதிடுகிறார்.

சீராவி முன்வைக்கும் சமநிலைக் கோட்பாட்டை ஒருவர் ஏற்றுக் கொள்கிறாரோ அல்லது மறுக் கிறாரோ, அது முக்கியமல்ல; இரண் டாம் பட்சம்தான். என்றாலும், இந்தி யாவின் சிறுபான்மை மத மக்களி டையே நிலவும் ஹிந்து மத தேசியம் பற்றிய அச்சம் வளர்ந்து வருவதை நம்மால் காண முடிகிறது என்பதே இன்று நிலவும் நிலையாகும். தங் களால் செய்யப்படும் ஓர் உண்மை யான அரசியல் தேர்வு மற்றும் அரசமைப்புசட்டப் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள, 1947 இல் இருந்ததைப் போன்ற மதச்சார்பற்ற அரசியல் சூழல் இன்றும் நிலவ வேண் டும் என்பது மிகவும் இன்றியமை யாததும், தவிர்க்க இயலாததும் ஆகும்.

மதச்சார்பற்ற ஒரு ஜனநாயக நாட்டில் குடியுரிமை என்பதே அடிப்படை மதமாகும். மததேசியம் என்பது இக்கொள்கைக்கு நேர் எதிரானதும், மதச்சார்பற்ற அரசு என்னும் கோட்பாட்டை மறுப்பதும், பெரும்பான்மையினரின் மதத்துடன் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளாதவர்களுக்கு சமபங்கேற்பு மறுக்கப்படுவதும் ஆகும். சமமான குடியுரிமை மறுக்கப்படும்போது, மத, இன, ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்கும் அரசமைப்பு சட்ட 15 ஆம் பிரிவு அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது.

ஹிந்து தேசியத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள்
கலவரங்கள் மூலம் உருவாக்கப் படும் வன்முறை, கிறித்துவ தேவா லயம் போன்ற வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படல், மதமாற்ற முகாம்களை ஏற்பாடு செய்து நடத்துதல், மாட்டி றைச்சி விற்பனைக்குத் தடை விதிப் பது, பாடநூல்களை மாற்றி எழுதுவது, இந்து வரலாற்று பாடபேதத்தை மறுக்கும் வரலாற்று, இலக்கிய, புதின நூல்களில் காணப்படும் சொற்களை, சொற்றொடர்களை, பகுதிகளை தணிக்கை செய்வது, அரசியல் அடையாளச் சின்னங்களைப் பயன் படுத்துதல், நினைவுச் சின்னங்களை ஏற்படுத்துவது ஆகியவை அனைத் தும் ஹிந்து தேசியத்தைக் கட்ட மைக்கும் நோக்கத்துடன் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளாகும். மதம் மற்றும் தேசியத்துக்கு இடையேயான இந்த பேரழிவைத் தரும் திருமணம் போன்ற உறவு, இதுவரை இந்த நாட்டை ஒன்றுமையுடன் கட்டிக் காத்துவந்த மதிப்பீடுகளை முற்றிலு மாக அழித்துவிடும். மதச்சார்பற்ற நாட்டுக் குடியுரிமை, சமத்துவம், நீதி ஆகிய மதிப்பீடுகளின் இடத்தில் கொலைகாரர்களையும், மதச் சின் னங்களையும், அடையாளங்களையும் அது வைத்துவிடுகிறது என்பதே அதன் காரணம்.

நாட்டின் பன்முகத் தன்மை, சமநிலை, நியாயமான, கொள்கை அளவிலான பரந்த மனப்பான்மை ஆகியவற்றையே இந்தியாவின் எதிர்காலம் சார்ந்திருக்கிறதே அல்லா மல், வரலாற்று ரீதியிலான அநீதி களுக்குப் பழிதீர்த்துக் கொள்வதைச் சார்ந்திருக்கவில்லை.

நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ் 17-03-2015

தமிழில் : த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/e-paper/98254.html#ixzz3V1VfZJwP

தமிழ் ஓவியா said...

பெசண்டம்மையாரின் முடிவு

தோழர் அன்னிபெசண்டம்மையார் 20.09.1933 அன்று மாலை 4 மணிக்கு சென்னை அடையாற்றில் முடிவெய்தி விட்டார்கள். அம்மையாரின் வாழ்வு பெண் மணிகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஆண்களுக்கும் ஓர் அறிவுறுத்தல் ஆகும்.

பெண்கள் பாவஜென்மம் என்றும், பேதமையென்பது மாதர்க்கணிகலம் என்றும், பெண்கள் ஆண்களின் காவலுக் குட்பட்டு இருக்க வேண்டியவர்கள் என்றும், அறியாமையும், அயோக்கியத்தனமும், முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் கொண்ட வாக்கியங்களை பொய்யாக்கி அவற்றில் பொதிந் துள்ள சூழ்ச்சிகளை வெளியாக்க வென்றே தோன்றியவர் என்று கருதும்படியானவர் நமது பெசண்டம்மையார்.

தோழர் பெசண்டம்மையார் ஒரு பாதிரியாரின் மனைவி யாவார் பாதிரிகளின் கொடுமையும், பித்தலாட்டமும் அம்மையாரை நாஸ்திகமாக்கி, தெய்வம்இல்லை என்று பிரச்சாரம் செய்யும்படி செய்தது பிறகு புருஷனைவிட்டு பிரிந்தார். பிறகு கர்ப்பத் தடையை யாவருக்கும் பிரச்சாரம் செய்துவந்தார் கர்ப்பத்தடையை சட்டசம்பந்த மாக்கினார். அக்காலத்திலேயே அரசாங்கத்தையும் எதிர்த்து பிரச்சாரமும் செய்தார்.

பின்னர் தனது 32ஆம் வயதுக்கு மேல் மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். பிறகு பல புத்தகங்களை எழுதினார். அதன் பிறகு பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தார். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார் வந்து அச்சபையின் உலக தலைவரானார். பிறகு சென்னையை வாசஸ்தலமாகக் கொண்டார். கிறிஸ்தவ மதத்தை கண்டித்து இந்துமத தத்துவ பிரச்சாரம் என்னும் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தார்.

இதனால் சென்னையில் உள்ள விபூதி பூசும் பார்ப்பனரிடம் மிக செல்வாக்கு அடைந்தார். அய்க்கோர்ட்டு ஜட்ஜ்கள் உள்பட அநேக பெரிய பதவியாளர்களை தனக்கு சிஷ்யராகக் கொண்டார். அரசாங்கத்திலும் ஒரளவு செல்வாக்குப் பெற்று. விபூதிப் பார்ப்பனர்களுக்கு அச்செல்வாக்கை பெரிதும் உதவினார்.

இதுகண்டு பொறாத சென்னை நாமம் போடும் அய்யங்கார் பார்ப்பனர்கள் அம்மையாருக்கு பல தொல்லைகளை விளைவித்தார்கள். அவற்றை சமாளிக்க (முன் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தது போலவே) அரசியலில் தலையிட்டு அரசியல் பிரச்சாரமும் செய்தார்கள். இதன் பயனாயும், அம்மையாரின் அபார சக்தியாலும் இந்தியா முழுமைக்கும் அரசியல் தலைவராயும் விளங்கினார்.

தமிழ் ஓவியா said...

காலஞ்சென்ற தோழர்கள் தாஸர், பாலர், நேரு முதலியவர்கள் எல்லாம் அம்மையாருக்கு சிஷ்யர்களாக இருந்தார்கள். அம்மையார் ஓடி ஆடித்திரிய சக்தி உள்ளவரையில் அய்யங்கார் கூட்டத்தை பொது வாழ்வில் தலை எடுக்க வொட்டாமல் செய்து கொண்டே வந்தார்.

இதன் பயனாகவே (அம்மையாருக்கு அரசியலிலும் மதத்திலும் செல்வாக்கு இருக்கும்வரை) தோழர் சி.விஜயராகவாச் சாரியாராகிய அய்யங்கார் காங்கிரஸ் பிரசிடெண்டாக முடியா மலேயே போய்விட்டது.

இந்தக் காரணத்தால் சென்னை அய்யங்கார்கள் அரசியலில் மிதவாதிகள் ஆகி தோழர்கள் சி.எஸ். கஸ்தூரிரங்கய்யங்கார், சி.விஜயராகவாச்சாரியார், சி.ராஜகோபா லாச்சாரியார், எஸ். சீனிவாசய்யங்கார் முதலிய அய்யங்கார்கள் ஒன்று சேர்ந்து, மறுபடியும் அம்மையாரின் அரசியல் செல்வாக்கை ஒழிக்க வேண்டியவர்களானார்கள்,

இதற்கு பார்ப்பனரல்லாத தோழர்கள் பி.வரதராஜீலு, வி.ஒ.சிதம்பரம் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப், ஈ.வெ.ராமசாமி முதலியவர்களையும், அய்யர் பார்ப்பனரில் தோழர் எஸ். சத்தியமூர்த்தி அய்யர் முதலியவர்களையும் பயன்படுத்திக் கொண்டு, அம்மையாரை எதிர்த்து அம்மை யாருக்கு பல தொல்லைகளும் கொடுத் தார்கள். அம்மையாருக்கு சரியான போட்டித் தலைவராக தோழர் காந்தியாரைப் பிடித்துக் கொண்டுவந்து மகாத்மாவாக்கினார்கள்.

இதன் பயனாகவும் அம்மையாரின் வயோதிகத்தின் பயனா கவும் அம்மையார் அரசியலில் சிறுகச்சிறுக, விட்டுக் கொடுத்துக் கொண்டே வந்துவிட்டார்கள் என்றாலும் அரசாங்கத்தின்மூலம் தனது விபூதிப் பார்ப்பன அய்யர் சிஷ்யர்களுக்கு அளவு கடந்த உதவி செய்து கொண்டே வந்தார்.

தோழர் சர்.சி.பி. போன்றவர்கள் எல்லாரும் உயர்ந்த அந்தஸ்திற்கு அம்மையாராலே ஆக்கப் பட்டவர்கள் ஆவார்கள், அம்மையாரின் அபார சத்தியை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அம்மையார் இந்த உலகம் முழுவதும் ஒரு ஆட்சிக்கு உட்படுத்தி அதன், தலைமை ஸ்தானத்தைக் கொடுத்தால் அதை ஒருகையிலும், அதன் ராணுவ ஆட்சியை மற்றொரு கையிலும்,

உலகமத (போப்) குருவேலை யை உபவேலை யாகவும், பார்க்கத் தகுதியும் ஆற்றலும் உடையவர் என்றே சொல்லுவோம். ஆகவே பெண்களுக்கு எவ்வளவு ஞானம் எவ்வளவு தைரியம் எவ்வளவு சக்தி இருக்கின்றது என்று கணிப்பதற்கு அம்மையார் ஒரு ஒப்பற்ற சாதனமாவார். அப்படிப்பட்ட அம்மையார் தனது 86ஆவது வயதில் முடிவெய்தியதுபற்றி யாரும் வருந்த வேண்டியதே இல்லை.

ஏனெனில் இனி தன்னால் யாதொரு காரியமும் செய்யமுடியாமல் போய்விட்டதென்றால் உடனே முடி வெய்துவிட வேண்டியதுதான் நல்லறிவின் குறிப்பாகும்.

ஆகவே அம்மையாரைத் தாயைப்போலவும் குருவைப் போலவும் தெய்வத்தைப் போலவும் கருதி அம்மையாரைப் போற்றிவந்த அவரது சிஷ்யர்கள் பெரிதும் மனித ஜீவ இயற்கையை உணர்ந்த ஞான வான்கள் ஆதலால் அப்படிப் பட்டவர்களுக்கு பிறரது அனுதாபமோ ஆறுதலோ அவசியம் இல்லையென்றே கருதுகிறோம்.

குடிஅரசு - துணை தலையங்கம் - 24.09.1933

Read more: http://viduthalai.in/page-4/98290.html#ixzz3V1WpNjrX

தமிழ் ஓவியா said...

திகைப்பூட்டும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள்

உலக மக்களைப் போல் திராவிடர் இனத்து மக்களையும் திருத்தி மானமும் - அறிவும் உள்ள மக்களாக்கும் பணியே எனது தலையாய பணி என்றார் அறிவாசான் தந்தை பெரியார்.

திராவிடர் இனத்தின் தலைவர் தந்தை பெரியார் மறைந்ததும், தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம்என்ற சூளுரையை தமிழர் தலைவர் முழங்கிட, அன்னை மணியம்மையார் தலைமையில் குழுமியிருந்த தோழர்கள் அனைவரும் ஏற்றனர்.

அன்னை மணியம்மையார் மறைந்ததும், அய்யா-அம்மா இருவரும் எளியவனாகிய என்னிடம் ஒப்படைத்த இப்பெரும் பணியை செய்து முடிக்கும் நன்றியுடையவனாய் இறுதி மூச்சு அடங்கும் வரை இமைப் பொழுதும் சோராது உழைத்திடும் பெரியாரின் அடிமையாய் இருப்பேன் என அடக்கத்துடன் நாளும் உழைத்துக் கொண்டிருக்கும் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அய்யா அவர்கள் தனது 82 ஆம் வயதிலும் 22 வயது இளைஞராய் களப்பணி ஆற்றுகிறார்.

தமிழ் ஓவியா said...

82 ஆண்டுகள் என்பது தமிழர் தலைவரின் இயற்கை வயது. இதில் 74 ஆண்டுகள் என்பது அவரது இயக்கப் பணியின் வயது-இலட்சியப்பணியின் வயது. அவரது பொது வாழ்க்கையின் வயதே பவழ விழா காண இருக்கிறது.

பெரியாருக்குப் பின் திராவிடர் இனக் காவலராய் விளங்கிடும் தமிழர் தலைவர் அவர்கள், ஆரிய ஆட்சித் தீயில் திராவிடர் விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்து விடாதிருக்க, அரியணை சுகத்திற்கு ஆளாகாது திராவிடர் மானம் காக்க, அரசியலில் பதவி வெறி கொண்டு இனத்துரோகம் செய்யாதிருக்க, பார்ப்பன மதவெறி வர்ணாசிரமதர்ம பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட திராவிடர் மக்களிடையே விழிப்புணர்வூட்டும் நோக்கில் 2000-திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகளை, தமிழ் நாடெங்கும் நடத்திட ஆணையிட்டுள்ளார்கள்.

நாடெங்கும்-நாள்தோறும்-திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டு விளம்பரம் திரும்பும் திசையெங்கும் பார்க்க முடிகிறது. காண்போர் வியக்கின்றனர்-கேட்போர் மிரள்கின்றனர்-படிப்போர் துடிக்கின்றனர்-பார்ப்பனர் பதறுகின்றனர்-துரோகிகள் தூசாய் பறக்கின்றனர்-ஆள்வோர் அச்சம் கொள்கின்றனர்.

ஆட்சி, அதிகாரம், சுயநலம் என்றில்லாது கொள்கை, பிரச்சாரம், போராட்டம் என்று இனமானம் காக்க களமாடும் பணி ஒன்றே எங்களுக்கு இனிப்பான பணி இன்ப மூட்டும் பணி என்று பணியாற்றும் கழகத் தோழர்கள், துப்பாக்கியிலிருந்து புறப்பட்டத் தோட்டாக்களாய் நாடெங்கும் பறந்து பணியாற்றுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 15 முதல் 20 நாட்கள் இடைவெளிக்குள் தொடர்ந்து அடுத்தடுத்து மாநாடுகள். மாநாட்டில் போர் முரசு கொட்டிட திராவிடர் விழிப்புணர்வு தீ பரவிட, மகுடம் சூடிய மமதையில் திகைக்கும் மனுதர்மக் கோட்டையில் திராவிடர் இனமானக் குண்டுகளை பொழிந்திட விழிப்புணர்வு பிரச்சாரப் படை ஆறு குழுவாக தமிழர் தலைவர் தலைமையில் திக்கெங்கும் முழங்குகிறது.

திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டுப் பிரச்சார மேடையில் மதவெறி எதிர்ப்பு-மனத நேயக்காப்பு, ஆரிய ஆதிக்க எதிர்ப்பு திராவிடர் உரிமை மீட்பு எனும் தத்துவத் தடத்தில் பயனிக்கும் கருத்தொற்றுமை கொண்ட தி.மு.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ம.தி.மு.க, இந்திய பொது உடைமைக் கட்சி, மார்க்சிய பொது உடைமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பு ஆகியன பெற்று இலட்சிய முழக்கமிடும் காட்சி திராவிடர்க்கு விழிப்புணர்வு ஊட்டும் பணிக்கு உரம் சேர்த்து நிற்கிறது என்றால் அது மிகையாகாது.

தமிழ் ஓவியா said...

மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் அரசியல் கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவரும், காலத்தில் செய்துள்ள ஏற்பாடு இம்மாநாடு, இதைச் செய்யும் தகுதியும்-பொறுப்பும் திராவிடர் கழகத்துக்கு மட்டுமே உண்டு.

இதற்கான ஆற்றல்-ஒருங் கிணைக்கும் சக்தி தமிழர் தலைவர் அய்யா கி. வீரமணி அவர்களுக்கு மட்டுமே உண்டு என முழுமனதோடு முழங்குகிறார்கள். திராவிடர் கழகத்தின் தலைமையில் களம் காண நாங்கள் தயார் என உறுதியளித்து உறையாற்றுகிறார்கள்.

தந்தை பெரியார் இருந்தால் என்ன செய்வோமோ அதை நம் தமிழர் தலைவர் செய்து கொண்டிருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டுகிறோம். நன்றியை உரித்தாக்குகிறோம் என நெஞ்சுறப் புகழ்வதைக் கேட்கும் போது நமது மகிழ்ச்சிக்கு அளவுண்டோ?

4500 ஆண்டுக்கு முன்பு நம் நாட்டிற்குள் நாடோடியாய் நுழைந்த ஆரியர்கள், நம்மை அடிமையாக்கிடத் திட்டமிட்டு, அவர்களின் தாய் மொழியான சமஸ்கிருத்தை முன்னிருத்தி திராவிடர்களின் தாய் மொழியான தமிழ்மொழியை நீஷ மொழியாக்கினர். இயற்கோடிசைந்த-அறிவார்ந்த திராவிடர் பண்பாட்டை-வாழ்க்கை முறையை-சிதைத்தழிக்க சனாதன மதத்தை (இந்து மதம்) உருவாக்கி -அதையே திராவிடர்க்கு உரிய மத மாக்கினர்.

இதன் வழியாக பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்புக்கு ஆளாகி திராவிடர் இனத்தினர் சீரழிந்தனர். ஆரியம்-திராவிடர் இனத்தை அடிமையாக்கி ஜாதி நோய்க்கு இரையாக்கி கல்வி உரிமை, வேலைவாய்ப்புரிமை என எந்த வாழ்வு, உரிமையுமின்றி இருந்த திராவிடர் பேரினத்தை பெரியார் விழிப்புறச் செய்தார்.

மான உணர்வூட்டினார். ஆரியத்தின் உயிர் மூலத்தை (கடவுள், மதம், ஜாதி) நோக்கி பகுத்தறிவுக்கனை தொடுத்ததார்-அதன் விளைவு திராவிடர் வாழ்வில் இன்றைய மாற்றம்-எங்கெனும் ஏற்றும் உருவாகியுள்ளது. பார்ப்பானர்களோ, இந்திய அரசியலில் பா.ஜ.க. நாட்டை ஆளும் வாய்ப்பிற்கு வந்த பின், தொடக்கத்தில் அவர்கள் பயன்படுத்திய அதே கருவிகளை மீண்டும் பயன்படுத்தும் வகையில் தான், சமஸ்கிருத வாரம்,

குரு உத்சவ், காந்தியாரைக் கொன்ற கொடியவன் கோட்சேவுக்கு கோயில், ஆரிய ஆதிக்க சின்னமான இராமனுக்கு கோயில், சிறுபான்மை யினரான பிற மதக் கோயில்களை உடைப்பது உயிர்களை அழிப் பது பசு வதைத் தடைச் சட்டம் சிறுபான்மை மதத்தினர் தாய் மதத்திற்கு வருகை தர அழைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.

ஏனெனில்-பெரியார் பிறந்த மண்ணில் எதைக் கொண்டும், எதைப் பேசியும், நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் நாடெங்கும் வெற்றி பெற்ற பா.ஜ.க. தமிழ் நாட்டில் மட்டும் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் எப்படியும் இங்கே காலூன்றத் துடிக்கிறார்கள்- மனுதர்மக் கொடியை ஆட்சி மகுடத்தில் பொறிக்கத் துடிக்கிறார்கள்.

இந்திய நாட்டை இந்து நாடாக்கி, மண்ணின் மைந்தர்களான பூர்வக் குடிமக்கள் திராவிடர்களின் நெற்றியில் சூத்திரப் பட்டத்தை (தாசி மக்கள்) பச்சை குத்திப் பார்த்திட பார்ப்பன ஜனதா கட்சியும் அதன் ஆட்சியும் படாத பாடு படுகிறது.

ஆரிய சூழ்ச்சியை ஈரோட்டு ஆடி கொண்டு அனுப்பி சகாமல்-அளந்தறிந்து அதனை ஆழக் குழியில் புதைத்திடும் ஆற்றல் மிக்க தமிழர் தலைவர் அய்யா அவர்கள் பா.ஜ.க ஆட்சியின் வீழ்ச்சியிலிருந்து நம்மையும்-நாட்டையும் காத்திட தொலைநோக்கோடு, திராவிடர் இனத்தினை மீட்டுறுவாக்கும் செய்திடும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு 2000 எனும் கண்ணி வெடிகளை பதிக்கச் செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளார்கள்.

இக் கண்ணி வெடிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே நேரத்தில் நாடெங்கும் வெடிக்கும். திராவிடர் இனத்தை மீட்டுறுவாக்கும் இப்பேறில் ஆரியம் மரிக்கும் மகிழ்ச்சியில் திராவிடர் பேரினம் திளைக்கும் அதைக் காணத்தான் தமிழர் தலைவரின் ஆணைப்படி கழகப் பொறுப்பாளர்கள்-தோழர்கள் நாடே திகைப்பூட்டும் படி திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டினை திருவிழாக் கோலமாய் திக்கெட்டும் நடத்துகிறார்கள்.

அதிரடி க. அன்பழகன்

(தலைமைக் கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)

Read more: http://viduthalai.in/page-4/98292.html#ixzz3V1XWfvuP

தமிழ் ஓவியா said...

மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிற கொடூர, வஞ்சக எண்ணம் படைத்த கொடுமையாளர்களை எதிர்க்கின்ற
புரட்சி ஒரு நாளும் தோற்றதில்லை

மத்திய - மாநில அரசுகளுக்கு கலைஞர் எச்சரிக்கை

சென்னை, மார்ச் 21- புரட்சி ஒருநாளும் தோற்ற தில்லை. எந்த நாட்டிலும் தோற்காத புரட்சி இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பரவுகின்ற அந்தப் புரட்சி மதவாதிகளுக்கு ஆதர வாக இருக்கிற கொடூர, வஞ்சக எண்ணம் படைத்த கொடுமையாளர்களை எதிர்க்கின்ற புரட்சி,

அந்தப் புரட்சியை அடக்கிவிடலாம் என்று எந்தச் சட்டத்தை திட்டத்தைக் கொண்டு வந்தாலும், எந்த ஆயு தங்களைப் பயன்படுத்தினாலும், அவைகளுக்கு அடங்கிப் போகாது இந்த எழுச்சி. என்று சென் னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் உரையாற்றினார்.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சென் னையில் நேற்று (20.3.2015) நடந்த ஆர்ப்பாட்டத் திற்குத் தலைமை வகித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் உரையாற்றியதாவது:

இன்று தமிழ்நாடு முழுவதும் பல நூறு இடங் களில், தி.மு.க.வும், தோழமைக் கட்சிகளும் இணைந்த கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. நாட்டின் பல பகுதிகளில், லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு தங்கள் எண்ணத்தைப் பிரதிபலிக் கிறார்கள். மக்களுடைய எழுச்சியைக் கண்டு மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் அறிவு பெறவேண்டும், அடக்கம் கொள்ளவேண் டும், அராஜகத்தை விட்டொழிக்கவேண்டும் என் பதுதான் இந்தக் கூட்டங்களின் பிரதான நோக்கம்.

மத்திய அரசு நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வருகிறது. கையகப்படுத்தும் நிலங்களை யாருக்கு தரப்போகிறோம், ஏழை எளியவர்களுக்குத்தானே தரப்போகிறோம் என்று சிலர் பேசி, எழுதி வருகிறார்கள். நான் அவர்களைக் கேட்க விரும்புகிறேன், அது உண்மை என்றால்,

எதற்காக மத்திய அரசினுடைய நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை அமல்படுத்தச் சொல்லி நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் அதேநேரத்தில், தமிழகத்தில் உள்ள ஒரு அதிகாரியை மிரட்டி, அந்த அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு காரணமாக ஆகி இப்படி வேதனைப்படுத்துகிறீர் கள் என்ற கேள்வியை தமிழக அரசுக்கு முன் வைக்கிறேன்.

மத்திய அரசில், பா.ஜ.க. அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை இந்தியாவில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன. அப்படிப் பட்ட ஒரு சட்டத்தை, நியாயமான வாதங்களைப் புறந்தள்ளிவிட்டு நிறைவேற்றத் தேவையா என்பதை மத்திய அரசும், அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக உள்ள நம் மாநில அரசும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதல்வராக இருக்கின்ற மன்னிக்கவேண்டும் அது யார் என்று தெரியவில்லை. முதல்வர் ஜெயாவா? பன்னீரா? என்ற இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. அவர்கள் உறுதி அளிக்கிறார்கள். அவர்களுடைய ஆதரவுக்கு என்ன காரணம். நாங் கள் இந்தச் சட்டத்தை அது ஏழை, எளிய மக்களை வாட்டுவதாக இருந்தாலும் ஆதரித்து வாக்கு அளிக்கிறோம் என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா?

தமிழ் ஓவியா said...


மதவாதிகளை எதிர்க்கின்ற புரட்சி

நாங்கள் வாக்களித்தால்தான், எங்களுடைய கோடிக்கணக்கான ரூபாய் ஊழலை மறைத்து விட்டு எங்களை நீங்கள் விடுவிக்க முடியும், எங் களை விடுவிப்பதாக இருந்தால், இந்த மசோதாவை ஆதரிக்கிறோம், வாக்களிக்கிறோம் என்று ஜெயலலிதா கூறுகிறார் என்றால், நாக்கு ஒன்றா? இரண்டா?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எந்தச் சட்டத்தை ஜெயலலிதாவின் கும்பல் எதிர்த்ததோ, அதே சட்டத்தை இன்றைக்கு ஆதரித்து வாக்களிக்க வரிந்து கட்டிக் கொண்டு புறப்படுகிறது என்றால், இது தங்களுடைய தனிப்பட்ட சுயலாபத்திற்காகத் தான் என்பதை மறுக்க முடியாது, மறக்க முடியாது.

நாட்டில் இன்றைக்கு நடைபெறுகின்ற அநியா யங்கள் ஒருபுறம் இருந்தாலுங்கூட, பொழுது விடிந்து பொழுது போனால் ஊருக்கு ஒரு கொலை, தெருவுக்கு ஒரு கொள்ளை என்ற நிலை நாட்டில் உள்ளது.

அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழன் மாத்திரமல்ல, இந்தியன் ஒவ்வொருவரும் இன்றைக்கு முடிவு கட்டிக் கொண்டு புறப்படுவார்களேயானால், என்ன தான் துப்பாக்கிகள் பீரங்கிகளை பயன்படுத்தி னாலும்கூட, எழுச்சியுற்ற இந்த மக்களை யாராலும் எவராலும் அடக்க முடியாது.

எத்தனை சிறைச்சாலைகள் உண்டோ, அத்தனை சிறைச்சாலைகளையும் திறந்து வையுங் கள். சிறைக்கு செல்வதற்கு, சிறைகளை நிரப்புகின்ற போராட்டத்திற்கு, தமிழன் தயாராகி விட்டான். இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்கள் தயாராகி விட்டார்கள். யாரை ஏமாற்றலாம் என்று பார்க் கிறாய்?

எவரைக் கைது செய்து புரட்சியை அடக்கலாம் என்று கருதுகிறாய்? புரட்சி ஒருநாளும் தோற்றதில்லை. எந்த நாட்டிலும் தோற்காத புரட்சி இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பரவுகின்ற அந்தப் புரட்சி மதவாதி களுக்கு ஆதரவாக இருக்கிற கொடூர, வஞ்சக எண்ணம் படைத்த கொடுமையாளர்களை எதிர்க் கின்ற புரட்சி,

அந்தப் புரட்சியை அடக்கிவிடலாம் என்று எந்தச் சட்டத்தை திட்டத்தைக் கொண்டு வந்தாலும், எந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி னாலும், அவைகளுக்கு அடங்கிப் போகாது இந்த எழுச்சி.

நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை சிந்தித்துப் பாருங்கள் அந்தச் சிந்தனைகளுக்குப் பிறகு, இந்த நடமாட்டங்களுக்குப் பிறகு நாடு எங்கே போகிறது? எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டி ருக்கிறது? இந்தக் கட்டுப்பாட்டை மீறினால் என்ன ஆகும் என்பதை தயவுசெய்து ஆட்சியாளர்களே, நம்மை யாரும் வீழ்த்த முடியாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றவர்களே,

தயவு செய்து பழைய வரலாறுகளைப் படித்துப் பாருங்கள், பழைய சரித்திரங்கள் கூறுகின்ற பாடம் என்ன அந்தப் பாடங்களைப் படித்த பிறகாவது, அந்த அனுபவங் களை உணர்ந்து பார்த்த பிறகாவது, இனியும் தொடர்ந்து மக்களை வாட்டுவோம் என்று எண் ணாமல், புத்தி புகட்டப்பட்ட நிலைக்கு வாருங்கள். அமைதியாக ஆட்சி நடத்த முடிந்தால், அதற்கு முன் வாருங்கள்,

முடியாவிட்டால், எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று சொல்லிவிட்டு ஓடிவிடுங்கள் என்று ஆணவம் பிடித்த ஆட்சி யாளர்களுக்கு, தூங்கு மூஞ்சி ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை செய்து இந்த மக்கள் கடலுக்கு முன் னால் சபதம் எடுத்துக்கொண்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/98295.html#ixzz3V1Xsteyf

தமிழ் ஓவியா said...

தமிழின் தனித் தன்மை

உலகின் பழைய மொழிகள் ஏழு. அவற்றில் இப்போது வரை வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். ஒன்று தமிழ். இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன.

இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன.

இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது. திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந் தியது. ஆனால், அதில் உள்ள சொற் களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம்.

உதாரணம்: எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன. கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத் தில் பத்து கோடி, நூறு கோடி என்று தான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).

தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் கூறியுள்ளார்.

வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்)

ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த வல்லினம், மி மெல்லினம், ழ் இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
உலகில், பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது. இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

தமிழ், உலகில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசு அலுவல் மொழியாக உள்ளது. மேலும், இலங்கையில் நாடாளுமன்ற மொழியாகவும் உள்ளது.

Read more: http://viduthalai.in/page3/98223.html#ixzz3V1YNM7pD

தமிழ் ஓவியா said...

கச்சனம் - கருஞ்சட்டை வீரர் ப. ஆத்மநாதன்

திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கும் கச்சனம் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். எனக்கு இப்ப எண்பத்தி ரெண்டு வயது ஆகிறது. எட்டாவது வரைக்கும் படிச்சேன். அதுக்கு மேல் படிக்க முடியவில்லை. காரணம் ஏழ்மையான விவசாய குடும்பம்.

எனக்கு எலெக்டிரிக்கல் வேலையில் கொஞ்சம் ஆர்வம் அதிகம். லைன் மேனுக்கு உதவியா போவேன். கோயில் திருவிழாவுக்கு லைட் கட் டுவேன். அப்ப கோயிலில் நடக்கும் சில தவறான செயல்களை காண முடிந்தது.

அந்த காலத்திலே எங்க அப்பா திராவிட நாடு பத்திரிகை வாங்குவார். நான் படிச்சு பல விவசயங்களை தெரிந்து கொண்டேன்.

வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை இவைகளைப்பற்றி நண்பர்களிடம் பேசுவேன். அதனால நான் ஒரு கடவுள் மறுப்பாளன் என அப்பகுதியிலேயே அறிமுகமானேன்.

அந்த சமயத்தில் தான் தோலி. ஆர்.எஸ். (ஆர். சுப்பிரமணி) சாந்தன் ஆகியோர் என்னை வந்து சந்திச்சு எங்க பகுதிக்கு என்னை பொறுப்பாள ராக நியமிச்சாங்க மிலிடரி வைத்திய நாதன் எனக்கு அப்போது உதவியாக இருந்தார்.

முதன் முதலாக வடபாதி மங்கலம் திருஞானசம்பந்தத்தை அழைத்து எங்க ஊரில் கூட்டம் போட்டோம். ஒரு முறை எங்க ஊரில் வைத்து இருந்த வெங்கடாசலபதி படத் துக்கு செருப்பு மாலை போட்டு விட்டேன்.

எனக்கு 33ஆவது வயதில் திருமணம் அதில் என்னானா அந்த பொண்ணு வேறு ஒரு வருக்கு நிச்சயம் செய்யப் பட்டது. ஏதோ காரணத் தால் அந்த பையன் இறந்து விட்டான். உடனே அந்த பொண்ணு ராசி இல்லாத பொண்ணு. அதான் நிச்சயம் செய்யப்பட்ட பையன் செத்துப் போயிட்டான் என செய்தியை பரப்பி விட்டார்கள். அதை அறிந்து நான் போய் அந்த பெண்ணை மணந்தேன். இன்னிக்கு வரைக்கும் நான் சாக வில்லை.

திருத்துறைப்பூண்டியில் நடந்த தீக் குண்டம் இறங்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீயில் இறங்கினேன். தஞ்சை பெரியார் சிலை திறப்பு விழா உட்பட பல வெளியூர் நிகழ்ச்சிக்கு போய் உள்ளேன். தனித் தமிழ்நாடு போராட் டம் சட்ட எரிப்பு போராட்டம் என பல போராட்டங்களில் கலந்து கொண்டேன். நான் சிறுவன் எனக் கூறி கைது செய்யவில்லை. சிறைக்கு போகாதது வருத்தம்தான். இனி வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன்.

கச்சனத்தில் ஆர்.எஸ்., சாந்தன் கோவிந்தசாமி, வைத்தியநாதன் மற்றவர்களோடு சேர்ந்து ஜாதி ஒழிப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஆப்பரக்குடி மீனாட்சி தியேட்டரில் நடத்தினோம். அந்த மாநாட்டில் அய்யா, ஆசிரியர், பாலதண்டாயுதம், எஸ்.எஸ். பாஷா, யாதுப், கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் தலைமையில் அம்பகரத் தூரில் கோயிலில் எருமை மாடு வெட் டுவதைத் தடுத்து நிறுத்த போராட்டம் நடந்தது. அதிலும் கலந்து கொண்டேன். நம்ம போராட்டத்துக்கு பின் அங்கே கிடா வெட்டுவது தடை செய்யப் பட்டது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அய்யாவுடன் சேர்ந்து சில நாட்கள் வேனில் பிரச்சாரத்திற்கு சென்றது வாழ்வில் மறக்க முடியாத வாய்ப்பு
எனது மூத்த மகளுக்கு அய்யா அறிவுக்கண்ணு என்று பெயர் வைத் தார். மயிலாடுதுறையில் அய்யா தலை மையில் நடைபெற்ற கவிஞர் திருமணத் துக்கு போய் வந்தேன். அய்யா காலம் முதல் இன்று வரை முடிந்த வரை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறேன்.

கடைசியா நான் கூற விரும்புவது ஆசிரியரைப் பற்றி அய்யா அவர்கள் ஆசிரியர்மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஆசிரியர் நம் இயக்கத் தின் ஈடில்லா சொத்து. ஓய்வு இல்லாமல் கொள்கைக்காக உழைக்கிறார். தனி மனித ஒழுக்கத்துக்கு இலக்கணம் ஆசிரியர்தான்.

69 சதவீத இடஒதுக்கீடு மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்த வைத் தது பொன் ஏட்டில் பொறிக்கப்பட வேண்டியது.

வாழ்க பெரியார் தொடர்க ஆசிரியர் பணி

சந்திப்பு: தி. குணசேகரன், திருத்துறைப்பூண்டி

Read more: http://viduthalai.in/page3/98222.html#ixzz3V1YXLF78

தமிழ் ஓவியா said...

யார் தேசத் துரோகிகள்?

இந்த தேசத்துக்கு அன்னிய ஆட்சியென்பதை அழைத்து வந்தவர்கள் யார்? அவர்களுக்கு இங்கு என்றும் நிலைபெறும்படியான ஆட்சிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்து அவற்றிற்கு தூண்களாய் நின்றவர்கள் யார்? சரித்திரங்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள்.

நாம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையிலோ, ஆதிதிராவிடர் என்கின்ற முறையிலோ, முஸ்லீம்கள் என்ற முறையிலோ இந்து தேசத்துக்குத் துரோகம் செய்ததாக ஏதாவது ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டட்டும். நாம் உடனே அதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளத் தயாராய் இருக்கிறோம்.

வெள்ளைக்காரர்களைத் தங்கள் தெய்வம் என்றும், விஷ்ணுவின் அம்சம் என்றும் அவர்களும் தாங்களும் ஒரே ஜாதி என்றும், அவர் முகச்சாயலும் தங்கள் முகச்சாயலும் ஒரே மாதிரி இருக்கிறது என்றும், அவர்களும் தாங்களும் ராசியாய் போய் இந்த நாட்டில் நிரந்தரமாக வாழவேண்டும் என்றும் நேற்று வரையிலும் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்கள் யார்? பார்ப்பனர்களா?

அவர்கள் ஒழித்த மற்றவர்களா என்று யோசித்துப் பாருங்கள். இன்று கூட பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட விடுதலை கேட்டாலும் சரி, அதற்கு ஆக என்ன தியாகம் செய்ய தீர்மானித்தாலும் சரி, எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கப்புறம் நடப்பதென்ன? அதில் எங்கள் பங்கு என்ன? என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு நாங்களும் கையொப்பம் போடுகிறோம்.

அதற்குச் சக பார்ப்பனர்கள் எத்தனை பேர் சாகிறார்களோ அதற்கு இரண்டு பங்கு உயிர் கொடுக்கின்றோம். பிறகு யார் தேசபக்தர்கள்? யார் கோழைகள்? யார் தேசத்தைக் காட்டிக் கொடுத்து கக்கூசில் போய் ஒளிந்து கொள்பவர்கள்? என்று பார்க்கலாம்.

அதை விட்டுவிட்டு உண்மைக் காரணம் என்ன என்பதை மறைத்துவிட்டு எங்களைக் கோழைகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் சொல்லி விடுவதாலேயே எங்களை ஒழித்துவிடுவது என்று நினை த்தால் அது முடியுமா? என்று தான் கேட்கின்றேன்.

சேலம் விக்டோரியா மார்க்கெட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு குடிஅரசு 14.06.1936

Read more: http://viduthalai.in/page2/98221.html#ixzz3V1Yv2LBR

தமிழ் ஓவியா said...

கம்பராமாயணத்திற்கு ஒரு சவுக்கடி!

கம்பரின் பயனற்ற கற்பனை களுக்கும் பொருளற்ற பாடல் களுக்கும் அடிகள் கடல் தாவு படலத்தை அடுத்தடுத்து எடுத்துக் காட்டுவார். அவர்கள் கூற்றை யான் ஏற்றுக் கொண்டு ஆயினும், சாமி! கம்பரின் நல்ல பாட்டுக்களைப் பாருங்கள் என்று மீண்டும் யான் சுவைக்கும் பாடல்களை எடுத் தெடுத்து மொழிவேன். கடைசியில் வழக்கின் முடிவென்ன?

திருநாவு! அதெல்லாம் சரிதான். கம்பரால் பண்டைத் தண்டதமிழ் மரபு, தனித்தமிழ், தமிழர் இன, நாகரிகச் சிறப்பெல்லாம் மறக்கடிக் கப்பட்டன. சைவ வைணவத்திரு முறைகள் சிறப்புக்களெல்லாம் குறைந்தன. தமிழ்ப் பெருங்காவியங் கட்கும், தமிழிற்குமுள்ள சிறப்புகள் குன்றின. தமிழ்ப்பற்றும் குறைந்தது. ஆரிய நாகரிகமும், வடமொழியும் அதன் காவியங்களும் எங்கும் போற்றப்பட்டன.

பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதி காரம், சிந்தாமணி, மணிமேகலை முதலிய தமிழ்நாட்டாருக்கே உரிய தமிழ்க்காவியங்களைப் பிராம ணர்கள் பயிலாதும் பாராட்டாதும் இகழ்ந்து ஒதுக்குகின்றனர், பிரா மணர்களில் மிகப்பெரும்பாலோர் தேவார திருவாசகத் திருமுறைகளை ஓதுதலும், பாராட்டுதலும் இல்லை. தமிழ்நாட்டுக் கதைகள், வரலாறு களைப் போற்றுவதுமில்லை. இவற்றிற்கெல்லாம் காரணம் கம்பராமாயணமே!

இவ்வாறு பிராமணர்களால் கம்பராமாயணமும், அதன் சார்பான ஆரிய வடநாட்டுக் கதைகளான பாரதம், பாகவதம், கீதை, பஜனை, சாதி, சடங்கு, மூடப்பழக்க வழக் கங்கள், கடவுள் நிலைக்கு மாறான கருத்துக்களும் எங்கும் பரவிவிட்டன.

பிராமணர்களின் இப்பரப்புதல் களால் பார்ப்பனரல்லாதவர்களும் அவர் முறைகளை மேற்கொண்டு நம் தமிழ், தனித்தமிழ் - தமிழின நாகரிகத்திற்கே மாறு பட்டவர் களாய்ப் பொய்க் கதைகளை நம்பி, பயனில்லாச் சடங்குகளைச் செய்து தாமும் ஏமாறி அறிவிலிகளாய் வறிதே வாணாளை வீணாளாக்கு கின்றனர்.

தம்மை சார்ந்த ஏனையோரையும், அவ்வாறாக்கி விடுகின்றனர். ஆதலால் இவற்றிற்கெல்லாம் முதற் காரணமான கம்பராமாயணப் பயிற்சியையும், பரப்புதலையும் புலவர்கள் கைவிட்டாக வேண்டும்.

(மறைமலை அடிகளாரின் மகன் வித்துவான் மறை திருநாவுக்கரசு தீட்டிய - மறைமலை அடிகளின் வரலாறு என்ற நூலில் பக்கம் 648)

குறிப்பு: இதில் நாவு என்று குறிக்கப்பெறுவது மறைமலை அடிகளாரின் மகன் மறை திருநாவுக்கரசு ஆவார்.

Read more: http://viduthalai.in/page4/98224.html#ixzz3V1Z9wCJZ

தமிழ் ஓவியா said...

பித்தக்கோளாறைப் போக்கும்அன்னாசி

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங் களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப் பட்டுள்ளது.

அன்னாசி பெரும்பாலும் வெப்ப மான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.

அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ஃப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதி கரிக்கும்.

இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு, பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர் களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப் பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் நீங்கும். அன்னாசிப் பழத்தை, தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, அனைத்து விதமான உடல் உபாதை களும் தீரும். இதைத் தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர, ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க விடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

Read more: http://viduthalai.in/page4/98225.html#ixzz3V1ZGx0bE

தமிழ் ஓவியா said...

கரை புரளும் உற்சாகம்!

கடந்த இரண்டு மாதங்கள் போல் தமிழகம் வந்திருந்த எனக்குப் பெரும் மகிழ்ச்சி. எப்போதும் ஊரிலிருந்து திரும்பும் போது தாழ்ந்த தமிழகமே என்ற மன உளைச்சலில் தான் வருவேன். இந்த முறை கரைபுரளும் உற்சாகத்தைக் கண்டு நம்பிக்கையுடன் திரும்பியுள்ளேன் !
தமிழகம் பல்வேறு முனைகளில் தாழ்ந்து தான் உள்ளது.

தமிழினத்தின் எதிரிகள் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக இல்லாத மீசையை முறுக்கப் பார்க்கின்றார்கள்.தமிழர்களைப் பிரிப் பதிலும், விலை கொடுத்து வாங்குவதிலும் மற்ற பல வெளியே சொல்லாத திட்டங் களை நிறைவேற்றுவதிலும் மன சாட்சி யையும், இன சாட்சியையும் பண சாட்சிக்கு விற்று விட்ட பிறப்பால் "தமிழர்கள்" என்று சொல்லிக் கொள்ளும் இனத் துரோகிகளை அடையாளம் கண்டு மயக்கப் பார்க்கின்றனர்.

குழப்பப் பட்டு வருவோரும், குழம்பியுள்ளோரும் தங்களை அறிந்து கொள்ளாமல் துணை போகும் படி நிற்கின்றார்கள். நெற்றியிலே பொட்டும், கையிலே கயிறும் கட்டியுள்ள பலர் நெஞ்சிலே பெரியார் இருந் தாலும், நெஞ்சிலே உள்ள பெரியார் மூளைக்குச் செல் வதைப் பல் வேறு பயத்தினாலும், மதப் பிரச்சார மயக்கத்தினாலும் மூளையில் இட்டுள்ள விலங்கை உடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தன்னுடைய தாத்தாவை " டேய் முருகா, அதை எடுத்து வா" என்று சொன்ன பார்ப்பனப் பொடியனும், அவனுடைய குழந்தைகளும் இன்று தங்களையும், தங்களது குழந்தைகளையும் " யுவர் ஹானர். சார் "என்று அழைப்பது யாரால் வந்தது என்று வெளியே சொல்லா விட்டாலும் நெஞ்சிலே உணர்ந்து தான் உள்ளனர்.

அவர்களெல்லாம் இன்று மதவாதம் படுத்தும் பாட்டையும், மதவாதிகளின் திமிர் பிடித்த நடவடிக் கைகளையும் கண் முன்னே கண்டு கலங்குகின்றார்கள். மீண்டும் பார்ப்பன ஆதிக்கம் தமிழர்களைத் தூண்டி விட்டுத் தமிழர்களே பதவி மோகத்தால் தமிழின எதிரிகள் ஆவதையும் கண் கூடாகப் பார்க்கின்றனர்!

இதையெல்லாம் எதிர்த்துப் போராட ஒரே இயக்கமாகக் கருஞ்சட்டைப் படை யினர் முன்னே அணி வகுத்துச் செல்ல அனைத்துத் தமிழர்களும் உடன் தோள் கொடுத்து நிற்கும் உற்சாகமே இன்று கரைபுரண்டு வெள்ளமாக "இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே" என்ற புரட்சிக் கவிஞரின் சங்க நாதத்திற்கு வழி வகுத்துள்ளது.

பொருள் வசதியும், உடல் வசதியும் இல்லாதவர்கள் மற்றும் இளைஞரின் உற்சாகத்தைக் கண்டு மானமிகு ஆசிரியப் பெருந்தகை அறிவித்தலை ஆணையாகக் கொண்டு 80 நாட்களில் நூற்றுப் பதினைந்துக்கும் மேற்பட்ட மாநாடு களைத் திருச்செந்தூரிலிருந்து, சென்னை வரை என்று தினமும் நடத்தும் உற்சாகம் கரைபுரண்டு ஓடும் எழுச்சி தமிழரின் விடி வெள்ளியாகத் திகழ்கின்றது.

தன்னுடைய உடல் நலத்தைப் பணையம் வைத்து இன நலத்திற்காகப் பாடு படும் தலைவர் பய ணங்கள் ஓய்வதில்லை என்று முன் செல்ல கருஞ் சட்டைப் படையினர் உற்சாகத்துடன் வழி நடக்கின்றனர்.

செய்தித் தாள்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்களுக்கே வந்துள்ள இடையூறையும் அச்சுறுத்தலையும் உணர்ந்து இனியாவது நாம் தமிழர்கள் திராவிடர்கள்' என்ற உணர்வைப் பெறட்டும்! பார்ப்பனீய அடிமைத் தனத்தை, மத வாதிகளின் மிரட்டலை ஒழிக்கக் கற்றுக் கொள்ளட்டும்!!

கரைபுரண்டு ஓடும் உற்சாகம் சங்கே முழங்கு என்று முழங்கட்டும்! நன்றி எதிர் பார்க்காத கருஞ்சட்டைப் படையினரை, அவர்களின் தொண்டு தந்தை பெரியாரின் தமிழன் மானமும், அறிவும் உள்ளவனாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற தொண்டு என்பதை ஒவ்வொருவரும் உணரட்டும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

Read more: http://viduthalai.in/page4/98228.html#ixzz3V1Ze8SAc

தமிழ் ஓவியா said...

தாலி வந்தது ஏன்?

சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ் அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது.

புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவது தான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது.

அதற்குப்பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்கு வதற்காகத்தான் தாலி கட்டும் திருமணம் என்னும் சடங்கு நடத்தப்படுகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப் பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி (பக்.101)

(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206)

Read more: http://viduthalai.in/page4/98229.html#ixzz3V1ZqbbAz

தமிழ் ஓவியா said...

நெய்வேலி அருகே பழைமையான கல் ஆயுதம் கண்டெடுப்பு

மருங்கூர் கிராமத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழைமையான கல் ஆயு தத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் கிராமம் பல அரிய தகவல்கள் பொதிந்துள்ள இடமாக கருதப்படுகிறது. இங்கு அரசு மருத்துவமனைக்கு வடக்குப் பகுதியில், கிழக்கு மேற்காக சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் கிடைத்து வருகின்றன.

அதாவது, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இரும்புக் காலத்திய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.

கல் ஆயுதம்: இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த ஊரைச் சார்ந்த ராஜசேகர் என்பவர், தனது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதற் காக தோண்டியபோது, சுமார் மூன்ற ரையடி ஆழத்தில் கல் ஆயுதம் கிடைத் துள்ளதாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில், இந்தத் துறையைச் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட ஆய்வு மாணவர்கள் கல் ஆயுதத்தை ஆய்வு செய்தனர். 1,050 கிராம் எடை கொண்ட கூழாங்கல்லின் நடுப்பகுதியில் 6 செ.மீ. அளவில் வட்ட வடிவ துளை இடப்பட்டுள்ளது. மேலும், 12 செ.மீ. சுற்றளவும், 6 செ.மீ. கணமும் கொண்ட தாக இந்த ஆயுதம் வடிவமைக்கப்பட் டுள்ளது.

இந்த ஆயுதத்தின் நடுவில் உள்ள துளையில் 6 செ.மீ. கன அளவு கொண்ட ஒரு வலிமையான மரக் குச்சியினை சொருகி, கதை போன்ற தற்காப்பு ஆயுதமாக பண்டைய கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம்.

மேலும், நெல், பயறு வகை தானி யங்களை பிரித்தெடுக்கவும், விலங்கு களை வேட்டையாட சுத்தியல் போன்ற கருவியாகவும் இந்த ஆயுதத்தை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த ஊரைச் சார்ந்த ராமலிங்கம் என்பவர், தனது நிலத்தை சீர் செய்தபோது, 4 அடி ஆழத்தில் உடைந்த முதுமக்கள் தாழிகள், அதன் மூடுகற்கள் கிடைத்தன. அந்தப் பகுதியில் இருந்து தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகளும் கிடைத்தன.

பண்டைகால மக்களின் வாழ்விடப் பகுதி: இந்தக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் 10 அடி உயரமும், ஒரு ஏக்கர் பரப்பளவும் கொண்ட பண் பாட்டு மேடு உள்ளது.

இந்தப் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு சாலை சீரமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால செங்கற்கள், சிவப்பு நிற மட்கல ஓடுகள், நான்கு கால்களுடன் கூடிய அம்மிக்கல், பெண்கள் விளை யாடுவதற்குப் பயன்படுத்திய சில்லு கருவிகள் கிடைத்தன.

மேலும், சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு மருங்கூர் பகுதியில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கல் லாயுதங்கள், கற்செதில்கள், பிறைவடிவ கல்லாயுதங்களும் இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது கல் ஆயுதம் கிடைத்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரும்புக் கால பண்பாட்டை சார்ந்த மக்களின் முதுமக்கள் தாழிகள் காணப்படுவதால், இந்த ஆயுதமும் அதே காலக்கட்டத்தை சார்ந்ததாக இருக்கலாம் என சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page4/98230.html#ixzz3V1a999Es

தமிழ் ஓவியா said...

மத உணர்வுகள் புண்படுவதாகப் புலம்பல்கள்!

மனித உரிமைகள் பற்றிய அனைத் துலக பிரகடனத்தின் ஒரு பகுதியாக இருக்கும், கருத்தை வெளியிடும் சுதந் திரம், இந்திய அரசமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. சில்லறைக் கும்பல்கள் என்று அழைக் கப்படுபவர்களால் இந்த உரிமை வாராவாரம், நாளுக்கு நாள் மறுக்கப்பட்டு, மீறப்பட்டு வருகிறது.

இதனைப் பற்றி சற்றும் கவலைப் படாமல் இருப்பதற்கு ஆட்சியாளர் களை இது அனுமதிக்கிறது. அதனால், இப்போது இந்த விவகாரம் நாகரிக சமூகம் கவலைப்பட வேண்டிய ஒன்றாக ஆகிவிட்டது. அரசு அளிக்கும் உறுதி மொழிகளையும் கடந்து செயல்படவேண்டியவர்களாக நாமுள்ளோம். நமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வது நமது கடமை யேயாகும்.

சமூகத்தில் தனிமனிதனின் தன்னதிகாரத்தை உறுதிப்படுத்துவது இந்த உரிமையே என்பதால் இந்த உரிமை முழுமையாகவும் வெளிப் படை யாகவும் பேசப்படவேண்டிய ஒன்றாகும். நாம் உணர்வுள்ள மனிதர்களே அன்றி, உணர்வற்ற இயந்திர மனிதர்கள் அல்ல.

சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்றுதான் எது ஒன்றைப் பற்றியும் எழுப்பப்படும் ஆட்சேபணை அல்லது எதிர்ப்பு தெரிவிக்கப்படும்போதெல்லாம் வழக்கமாகக் கூறப்படுகிறது. ஆனால் கேட்கப்படாத சில முக்கியமான கேள் விகளையும், அவற்றிற்காக அளிக்கப் படாத பதில்களையும் அது எழுப்பு கிறது.

அந்த ஆட்சேபணை அல்லது எதிர்ப்பு ஒட்டு மொத்த சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறதா அல்லது அதன் ஒரு சிறு பகுதியினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறதா? இந்த சமூகம் என்பது எவரெல்லாம் சேர்ந் தது? அதன் பிரதிநிதியாக இருப்பவர் யார்?

சமூகத்தின், ஓர் இனத்தின் பிரதி நிதியாக நாமும்தான் இருக்கிறோம் என்பதையும், கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் நமக்கு மறுக்கப்படும்போது, நமது உணர்வுகளும்தான் ஆழமாகப் புண்படுகின்றன என்பதையும் நாமனை வரும் உறுதிப்படுத்திக் கொள்ளத் தொடங்க வேண்டிய நேரம் இதுதான். மற்ற மக்களின் உரிமைகளை நாம் மிதிப்பதில்லை; ஆனாலும், நமது கருத்தை வெளிப்படுத்தும் நமது சுதந் திரத்தை நாம்தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

புதினத்துக்கு எதிர்ப்பு

உணர்வுகள் புண்படுத்தப்பட்டன என்பதற்கு எந்த உண்மையான கார ணம் கூறப்படுகின்றது என்பதைப் பற்றி கேள்வியையும் நாம் கேட்கவேண்டும். மதத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு களங்கத்தினால் அது ஏற்பட்டதா அல்லது நமது சமூக மதிப்பீடுகளுடன் நெருங்கிய தொடர்புடைய வேறு சிலபல காரணங்களுக்காக மதம் என்பது ஒரு முகமூடியாகப் பயன்படுத் தப்படுகிறதா?

மாதொருபாகன் நூலில் பெருமாள் முருகன் அப்படி என்னதான் கூறிவிட்டார்? குழந்தைப் பேறற்ற ஓர் இணையர் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக மேற் கொள்ளும் முயற்சிகளை மிகுந்த நுண் ணுர்வுடனும், சோகத்துடனும், மென் மையாகவும், நாகரிகமாகவும் வியக்கத் தகுந்த வகையில் வெளிப்படுத்தியிருக் கிறார்.

அதற்கு மேல் அக்கதையில் மறைந்திருக்கும் வேறு கருத்துகள் எவை யேனும் உள்ளனவா? இந்த மண்ணில் உள்ள சட்டங்களின் கண்ணோட்டத் தில் இப்போது சட்டப்படி நடை முறைப்படுத்த முடியாத ஒரு கடந்த கால இந்து மத மரபுவழி பழக்கம் மறுபடியும் புதுப்பிக்கப்படும் என்ற கவலையினால் தெரிவிக்கப்படும் உண்மையான ஆட்சேபணையா இந்த எதிர்ப்பு?

அல்லது மத மரபுவழியிலான ஒரு பழக்கத்தின் மீது இந்த புதினம் களங்கம் ஏற்படுத்திவிட்டது என்பதால் அதற்காக தெரிவிக்கப்படும் எதிர்ப்பா? ஒரு தனிப்பட்ட மனிதன் சமூகத்துடன் கொண்டிருக்கும் தொடர்பு பற்றி ஒப்பிட்டு நோக்கும் நோக்கம்தான் இந்தக் கதை விவரிப்பில் தொக்கி நிற்பதாகும். இந்தக் கதையில் வரும் இணையர் பாத்திரங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருபவர்கள் என்றாலும், குழந்தைப் பேறு இல்லாததற்காக உறவினராலும் ஊராராலும் எள்ளி நடையாடப்படுகின்றனர்.

வழக்கம்போல் இதற்கு ஆணைவிட பெண்ணையே சமூகம் குறை கூறியது. மதமரபு வழியி லான பழக்கம் ஒன்றை கடைபிடிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண அப்பெண்ணுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு கோயில் திருவிழாவின்போது, கணவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலுடன் குழந்தை பேறுக்காக மட்டுமே வேறொரு ஆடவருடன் உடலுறவு கொள்வது ஒழுக்கக் கேடாகக் கருதப்படாமல், மதசம்பிரதாயத்தால் அனுமதிக்கப் பட்ட ஒன்றாகவே கருதப்படும்.

கடந்த காலங்களில் பார்ப் பனர்களின் சமூக ஒழுக்க சட்ட திட் டங்களுக்குள் அடங்காத, வேறு வழக்கத் திலான சில சட்ட திட்டங்களும் சமூகத்தின் ஒப்புதல் இருக்கும் வரை நடைமுறையில் இருந்து வந்துள்ளன என்பதையும், இந்த சமூக அனுமதிதான் இந்த புதினத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது என்பதையும் இன்று இந்த எதிர்ப் பாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

எதிர்ப்பு எந்த அடிப்படையில்

முன்னம் ஒரு காலத்தில் சமூகத்தால் அனுமதிக்கப்பட்டு வந்த, ஆனால் இன்று சட்டத்திற்குப் புறம்பான ஒரு பழக்க வழக்கத்திற்கு எதிரானதுதான் இந்த ஆட்சேபகரம் அல்லது எதிர்ப்பா? அந்த காரணத்தினாலேயே ஒரு புதினத்தில் அது நியாயப்படுத்தப்படக் கூடாது என்பதால்தான் இந்த எதிர்ப்பா? ஆனால் இதில் உள்ள உண்மையான ஆட்சேபணையே, இந்து மதம் அதனை அனுமதித்திருக்கிறது என்று இந்த புதினத்தில் எழுதப் பட்டுள்ளது தான்.

கடந்த காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு பழக்கத்தைப் பற்றி எழுதுவது மட்டுமே, இக்கால சட்டத்திற்குப் புறம்பானது என்ற போதிலும், அந்த பழக்கத்தை ஏற்றுக் கொள்ள பரிந்துரைப்பதாக ஆகாது. அது போலவே, சமூகத்தின் ஒப்புதல் இந்த பழக்கத்திற்கு இருந்தது என்பது இந்த புதினத்தில் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவ்வாறு எழுதியது எந்த விதத்திலும் மதத்தின் மீது ஏற்படுத்திய களங்கமாகவும் ஆகாது.

இந்த எதிர்ப்புக்கு வேறு காரணம் ஏதேனும் இருந்திருக்குமா? புதினத்தில் குறிப்பிடப் பட்டுள்ள இந்தத் தீர்வு கணவன் மீது சுமத்தப்படும் களங்கமாக வும் கருதப்பட்டிருக்கலாம். வேற்று மனிதர் ஒருவர் மூலம் மனைவி கருத் தரித்தால், கணவனின் ஆண்மையின் மையைக் காட்டுவதாக அது கருதப் படலாம்.

பெண் மீதே எப்போதும் குறை காணும் ஒரு ஆணாதிக்க சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட இயலாததாக அது இருக்கலாம். இவ்வாறு குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இறுதிவரை கணவன் முழுமையான அனுமதி அளிக்காமல் குழப்பத்தையே வெளிப் படுத்தி வந்ததால், இறுதியில் மனைவி தானாகவே தனிப்பட்ட முடிவை மேற்கொண்டுள்ளார்.

இவை அனைத் துமே ஆணாதிக்கத்துக்கு எதிராகப் பார்க்கப் பட்டதா? இந்த புதினத்துக்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பின் பின்ன ணியில் இருந்த காரணம் இதுதானா? இந்து மதத்தை இழிவுபடுத்தும் ஒரு மத பழக்கத்தை இந்தப் புதினம் நினைவுக் குக் கொண்டு வருகிறது என்பதால் தான் இந்த எதிர்ப்பா?

அல்லது கணவன், அவனது குடும்பம், சமூகம் ஆகியோருக்கு முக்கியமான ஒரு விஷயத்தில் ஒரு பெண் தானாக முடிவெடுத்து தனது உரிமையை நிலை நாட்டியிருப்பது பற்றியதா இந்த ஆட்சேபம்? அந்த பிராந்திய சமூகத்தில் கடந்த காலத்தில் நடைமுறையில் இருந்து தற்போது இல்லாத ஒரு பழக்கமா அது?

இந்த எதிர்ப்பின் நோக் கமே, சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கு அளிக்கப்படக் கூடாது என்பதா? அல்லது அன்பு நிறைந்த சாதாரணமான திருமண உறவு பற்றி புதினத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளதைக் கண்டிப்பதா? அப்படியானால் இந்த விவகாரத்தில் மதத்தை ஏன் இழுக்கவேண்டும்? இந்து மதத்தையே களங்கப்படுத்திவிட்டது போல் ஏன் பேசவேண்டும்? அதன் ஒரே காரணம் இவ்வாறு செய்தால்தான் இக்காலத்தில் மிகுந்த விளம்பரம் கிடைக்கும் என்பதே.

தமிழ் ஓவியா said...

மக்களைப் பேசவிடாமல் செய்தல்

இதில் மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கையே எழுத்தாளரைப் பேச விடாமல் பணிய வைப்பதுதான். மக்களை இவ்வாறு அடக்குவதற்கு பலப்பல வழிகள் உள்ளன. ஒரு போராட்டத்தின் எந்த நிலையிலும் உடல் அளவில் வன்முறைத் தாக்குதல் மேற்கொள்வது ஒழுக்கக்கேடானதும், நியாயமற்றதுமாகும்.

அதற்கான மாற்றுவழி உணர்வையும், அறிவையும் முடக்குவதுதான். ஒரு மதத்தை இழிவுபடுத்திவிட்டார் என்று குற்றம் சாட்டி எழுத்தாளரை பேசவிடாமல் செய்வது. தனக்கு எதிராகக் கிளம்பிய எதிர்ப்பைக் கண்டும் எதுவும் பேசாமல் அமைதி காத்தது அவரது நுண் ணுணர்வைக் காட்டுகிறது.

அந்த புத்தகம் அழிக்கப்பட வேண்டும், தடை செய்யப் படவேண்டும், எரிக்கப்படவேண்டும் என்றெல்லாம் கோரிக்கை எழுப்புவது இந்த நாட்டில் ஒரு வழக்கமான நடைமுறையாகவே ஆகிவிட்டது.

நாள்தோறும் நிகழ்ந்து கொண்டி ருக்கும் மாபெரும் வரலாற்று மாற்ற நடைமுறையை பயனுள்ள வழியில் புரிந்து கொண்டு, தாங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு, சுயமாக சிந்தித்து செயல்பட இயன்ற ஒரு சமூகம் உருவாவதைத் தடுப்பதற்கு, மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டன என்ற பெயரில், மேற்கொள்ளப் பட்ட ஒரு முயற்சிதான் அது.

மேலும் மேலும் மாற்றங்களையும், போராட்டங் களையும் எதிர்கொள்ள நம்மைக் கட்டாயப்படுத்தும் நடைமுறை இது. அதனால், இந்த நடைமுறையை நன்றாகப் புரிந்துகொண்டு, தாங்கள் விரும்பும் திசையில் விவகாரங்களைக் கொண்டு செல்வதற்கு விரும்புபவர் களுக்கு அவ்வாறு செய்வதற்கு நாம் இடம் தராமல் இருப்பது தேவை யானதும், முக்கியமானதும் ஆகும்.

அப்படியானால் நம்மால் என்ன செய்ய இயலும்? தனக்குத் தானே முருகன் தணிக்கையை உருவாக்கிக் கொண்டதற்காக அவரைக் கண்டிக்க லாமா? அல்லது அவருக்கு ஆதரவாக நாம் நிற்கவேண்டுமா? நம்மில் பலர் செய்வது போல அவருக்கு ஆதரவாக நின்று, இனி எதையும் எழுதப்போவ தில்லை என்ற அவரது முடிவை மாற்றிக் கொள்ள முருகனை நாம் கேட்டுக் கொள்ளவேண்டும்.

அவர் மேலும் மேலும் எழுதிக் கொண்டே சென்று, கருத்தை வெளிப் படுத்தும் தனது சுதந்திரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்குத் துணை நிற்க நாம் அவருக்கு உறுதி அளிக்கவேண்டும். அவர் சென்னைக்கு மாறுதல் பெற்று சென்றிருப்பது, நாடு கடத்தல் போன்றி ருக்கிறது. தன்னைத் தானே அவர் நாடு கடத்திக் கொள்வதை நாம் விரும்பவில்லை.

தமிழ் ஓவியா said...


கருத்தை வெளிப்படுத்தும் முழுமை யான சுதந்திரம் என்று எதுவுமில்லை. ஆனால் அது போன்றதொரு சுதந்திரம் நூலாசிரியரின் தொழிலில் அவருடன் இணைந்து செயலாற்றும் பொறுப்பு மிகுந்த மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று உறுதிபட நாம் கோருவது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

குறைந்தது, இந்தப் பொருள் மீதான அறிவு பூர்வமான விவாதம் மேற்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒருவர் எழுதுவதைப் பற்றி ஆட்சேபம் தெரிவிக்கும் உரிமை எந்த அமைப்பிற்கும் அளிக்கப்படக் கூடாது என்று கூற நாம் முன்வர வில்லை. என்றாலும், எந்த ஒரு மக்கள் அமைப்பும் ஒரு நூலாசிரியரைப் பேச விடாமல் செய்யக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.

அதற்குத் தணிக்கையே வழி என்று கருதப் படுமானால், அதிலும் எல்லைக் கோட் டைக் கிழிக்கும் இடம் எது என்பதை எவ்வாறு முடிவு செய்வது? தொழில் ரீதியாக அதில் சம்பந்தப்பட்டவர்களின் கைகளில் அது ஒப்படைக்கப்பட வேண்டுமேயன்றி,

தனிப்பட்ட மனிதர் களை வன்முறையால் அச்சுறுத்தி, அவர்களைப் பேசவிடாமல் செய்து பணிய வைக்கும் அரசியல் கட்சிகளின் சில்லறைக் குழுக்களின் கைகளில் ஒப்படைக்கப்படக்கூடாது. இதை எவ்வாறு செய்வது என்பது பற்றி கவலைப்படக்கூடாது.

ஆசிரியர்களும், பதிப்பாளர்களும் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் வாய்மூடித்தான் நமது சமூகம் இருக்கவேண்டுமா?

கருத்து வெளியிடும் உரிமையைப் பாதுகாப்பது

இது போன்ற அச்சுறுத்தல்களை இன்னமும் பயன்நிறைந்த வகையில் கையாள்வதைப் பற்றி நாம் சிந்திப் போமா? மக்கள், குறிப்பாக நூலாசிரியர் களின் கருத்தை வெளிப் படுத்தும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கென்றே ஒரு தனி அமைப்பு இருந்தால் அது பயன் நிறைந்ததாக இருக்கும்.

நூலா சிரியர்களை அச்சுறுத்தி, இழிவுபடுத்து பவர்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள், பதிப்பாளர்கள், சில நூலாசிரியர்கள் கொண்ட அமைப்பு ஒன்று உருவாக்கப் படலாம். முருகனைப் போன்ற நூலா சிரியர்களை அச்சுறுத்தும் அமைப்புகள், அவற்றின் உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு வெளியிடப்படலாம். இவர்களை பொது மக்கள் அடையாளம் கண்டு கொள்ள இது உதவும்.

இது குறித்து நீதிமன்ற நடவடிக்கை தேவை யானால், அதனையும் மேற்கொள்வது பற்றி பரிசீலிக்கவேண்டும். முரண்பாடு களைக் கண்டு அஞ்சக்கூடிய மற்றவர் களுக்கு, இந்த அமைப்பு வெளியிடும் அறிக்கைகள் அவர்களது அச்சத்தைப் போக்கி, உறுதியையும், துணிவையும் அளிப்பவையாகவும் இருக்கும்.

நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ் 13-3-2015

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page4/98231.html#ixzz3V1aPENxO

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பிரகதீஸ்வரர்

பிரகதீஸ்வரம் என்றால் உலகெங்கும் வியாத் திருப்பது என்று பொரு ளாம்; அப்படியென்றால் தஞ்சை பிரகதீஸ்வரர் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ருசியா உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் வியா பித்துள்ளாரா? ஏற்றுக் கொள்ளத்தக்கக் கடவுளா? ஒபாமாவும் அன்றாடம் பிரகதீஸ்வரரைத்தான் வணங்குகிறாரா?

Read more: http://viduthalai.in/e-paper/98311.html#ixzz3V7A9SWXJ

தமிழ் ஓவியா said...

இதுதான் பிரதமர் மோடியின் சாதனை

300 நாட்களில் 600 மதக் கலவரங்கள் 49 பேர் மரணம்!

மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் அதிர்ச்சி அறிக்கை

புதுடில்லி, மார்ச் 22- மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 300 நாட் களில் 600 மதக்கலவ ரங்கள் நடந்துள்ளன; அதில் 49 பேர் மரண மடைந்துள்ளனர் என்று தொழிற்சங்கங்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித் துள்ளன.

மோடி ஆட்சியின் கீழ் அதிகரித்து வரும் சிறு பான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளை எதிர்த்து புதுடில்லியில் நாடாளு மன்ற வீதியில் நாடு முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் சிஅய்டியு, ஏஅய்டியுசி உள்ளிட்ட தொழிற்சங் கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

அப்போது மோடி ஆட்சியின் 300 நாட் களில் 600 மதக்கலவ ரங்கள் என்ற பெயரில் 100 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: மோடி ஆட்சிக்கு வந்து 300 நாட்களில், இன்றைக்கு மார்ச் வரை 600 மதக் கலவரங்கள் நடத்தப்பட் டுள்ளன. இவை திட்ட மிடப்பட்டு சிறுபான்மை யினர் அதிகமாக இருக் கும் பகுதிகளில் நடத்தப் பட்டவையாகும். இந்த கலவரங்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 149 தாக்குதல்கள் கிறிஸ் துவர்கள் மீது நடத்தப் பட்டுள்ளன.

மீதி முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்டவை யாகும். ஆனால், கிறிஸ் தவ அமைப்புகள் 168 வன் முறைகள் நிகழ்ந்துள்ள தாக ஆவணப்படுத்தியுள் ளன. இதில் சத்தீஸ்கரில் தான் அதிகபட்சமாக 28 சம்பவங்கள் நடந்துள் ளன. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 26ம் உத்தரப்பிரதேசத்தில் 18ம் தெலுங்கானாவில் 15ம் நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் 73 வயது இறைப்பணி செவிலியர் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடூரம் ஒரு திட்டமிட்ட சிறுபான் மையினர் மீதான வன் முறையின் ஒரு பகுதி யாகும்.

இது எங்குமே நடை பெறாத கொடூரம் ஆகும். நேரடியான கலவரங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நீங்கலாக, ஜனநாயக அமைப்புகள் மீது எண்ணற்ற தாக்கு தல்கள் தொடுக்கப்பட் டன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/98312.html#ixzz3V7AfSzhz

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


ஹோமம்

கேள்வி: என் மனைவி இரண்டரை வருடமாக ருமடாய்டு ஆர்தரைடீஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின் றாள். எவ்வளவு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. ஏதா வது பரிகாரம் சொல் லுங்கள்.
பதில்: வீட்டில் ஆயுஷ் ஹோமம் மற்றும் பஞ்சகத்தி ஹோமம் செய்து நலம் பெறலாம்.

- கல்கி இதழில் காழியூர் நாராயணன்

குணமாகாவிட்டால் சோதிடர்மீது வழக்குப் போடலாமா? மக்களை மடமையில் ஆழ்த்துவது தான் ஆன்மீகமோ!

Read more: http://viduthalai.in/e-paper/98375.html#ixzz3VD1eey4G

தமிழ் ஓவியா said...

காவிக் கூட்டத்தின் வன்முறை கைவரிசை

மகாராஷ்டிராவில் 300 ஆண்டு பழைமையான தேவாலயம் தாக்கப்பட்டது


பன்வேல்(மகாராஷ்டிரா) மார்ச் 23 நவி மும்பையில் 17-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று தாக்குதலுக்கு ஆளானது. டில்லி, ஹரி யானா, மத்தியபிரதே சத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் காவிகளின் கைவண்ணம் தொடர்கிறது. வெள்ளிக்கிழமை இரவு மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தேவாலயம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை அன்று இரவு நவிமும்பை யில் உள்ள தேவாலயம் ஒன்றும் தாக்குதலுக்கு ஆளானது.

நவிமும்பையில் உள்ள செயின்ட்ஜார்ஜ் கத்தோலிக்க தேவாலயம் 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்டது. நவிமும் பையில் முதல்முதலாக பள்ளிக்கூடம் ஒன்றும் இந்த தேவாலயத்தின் நிர்வாகத்தினரால் கட்டப் பட்டதாகும். ஆங்கிலேயர் காலத்தில் கல்லூரியாக மாற்றப்பட்ட இந்த தேவாலயத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவ னங்கள் இயங்கி வருகின் றன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆராதனைக்காக காலை யில் தேவாலயத்திற்கு வந்தவர்கள் தேவாலயத் தின் வெளிப்புறமுள்ள சிலைகள் உடைந்து கிடப் பதையும் பல இடங்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதற்கான அடை யாளங்களைக் கண்டனர். உடனடியாக இவ்விவ காரம் குறித்து பன்வேல் காண்டேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் செய் யப்பட்டது. இந்த தாக் குதல் குறித்து மாநில கிறிஸ்தவ சிறுபான்மை யினர் அமைப்பின் தலை வர் ஆபிரகாம் மாத்யூ கூறும்போது இந்தப் பகுதியில் உள்ள சில இந்து அமைப்பைச் சேர்ந் தவர்கள் கடந்த சில நாட் களாகவே தேவாலயத் திற்கு வரும் கிறிஸ்தவர் களை அவதூறாக பேசு வதும், மிரட்டுவதுமாக தொடர்ந்தது, இது குறித்து அரசுக்கு எழுத்து மூலமாகவும் புகார் அளித் துள்ளோம். அதே நேரத் தில் காவல்துறையிலும் பல கிறிஸ்தவர்கள் புகார் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மோட்டர் சைக்கிளில் வந்த சிலர் கற்களை தேவாலயத்தின் மீது வீசியுள்ளனர். இதில் தேவாலயத்தின் வாயிலில் வைத்துள்ள செயின்ட் ஜார்ஜ் உருவச்சிலை சேதமடைந்துள்ளது,

புனிதநூல் வைக்கப்படும் பீடத்தில் உள்ள கண்ணா டிகளை உடைத்துள் ளனர். மேலும் கதவின் மேல் உள்ள பரிசுத்த மாதா சிலையின் கண் ணாடிகளையும் உடைத்து விட்டுச் சென்றுள்ளனர். இது திட்டமிட்ட தாக் குதலே ஆகும். திடீரென இந்த தாக்குதல் நடக்க வில்லை. இந்தப்பகுதியில் உள்ள 4 தலைமுறை மக் களுக்கு மதம் இனம் பாராமல் கல்விபோதித்த எங்கள் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்த எப்படித்தான் இவர் களுக்கு மனம் வந்ததோ என்று கூறினார். இச்சமபவம் குறித்து பன்வேல் நகர காவல் துறை இணை ஆணையர் சூரியவன்சி கூறும்போது இந்த விவகாரம் தொடர் பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விரை வில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98371.html#ixzz3VD1oJoPZ

தமிழ் ஓவியா said...


பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு எனக் கூறியவர் பெரியார்

உயர்நீதிமன்ற நீதிபதி உரை

தஞ்சாவூர், மார்ச்.23 தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உலக மகளிர் நாள் கருத்தரங்கு நடந் தது. கருத்தரங்கிற்கு தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் அங்கயற் கண்ணி தலைமை தாங் கினார். பல்கலைக் கழக இசைத்துறை உதவி பேரா சிரியை மாதவி வரவேற்றார்.

கருத்தரங்கில் பெண் ணிய மஞ்சரி என்ற நூலை வெளியிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி து.அரி பரந்தாமன் பேசும்போது கூறியதாவது:

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக மகளிர் நாள் பெண் விடுதலைக்காக அனுசரிக் கப்படுகிறது.

பண்டைய காலத்தில் பெண்கள் சரி சமமாக நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். விவசாயத் தொழில் வளர்ச்சியடைந்து சொத்துக்கு வாரிசு என்ற நிலை உருவானபோது, பெண்கள் பொருளாகவும், பின்னாளில் வெறும் இயந்திரமாகவும் கருதப் பட்டு அடிமைப்படுத்தப் பட்டனர்.

இந்த அடிமைத்தனம் நம்முடைய நில உடைமை சமூகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த அடி மைத் தனத்துக்கு எதி ராகக் குரல் கொடுக்கப் படுகிறது. இந்த அடிமை முறையைப் பெண்களும் அக்காலத்தில் ஏற்றனர். இதனால், பெண்கள் பொருளாகப் பார்க்கப்பட் டதுடன், பாலியல் இயந் திரமாகவும், கருவியாகவும் பயன்படுத்தப்பட்டனர். மன்னர்கள் காலத்தில் உடன் கட்டை ஏறுதல், இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்தனர்.

உறுதியாகக் குரல் கொடுத்தவர் பெரியார்

கடந்த நூற்றாண்டில் தொழில், விஞ்ஞான, சமூக வளர்ச்சி அடைந்த நிலை யில் பெண் விடுதலைக்கும் குரல் எழுப்பப்பட்டது. பெண் விடுதலைக்காகப் பல பேர் குரல் கொடுத் தாலும், உறுதியாகக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். மற்ற அடிமைத் தனங்களை விட பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு செயல் எனக் கூறினார் பெரியார்.

இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளை எதிர்த்து 1940 ஆம் ஆண்டு முதல் மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது. என்றாலும், பெண்களுக்கு இன்னும் சம அளவு உரிமை கிடைக்கவில்லை. எல்லா துறைகளிலும் பெண்கள் கால் பதித்துள்ளனர் என்றாலும், ஆட்சி முறையில் சம அளவு பங்கு பெறவில்லை. உதா ரணமாக உச்சநீதிமன் றத்தில் உள்ள 31 நீதிபதி களில் ஒரு பெண் மட் டுமே உள்ளார். உயர் நீதி மன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 3 பேர் மட் டுமே பெண்கள்.

இந்த நிலைமை மாற இதுபோன்ற கருத்தரங்கங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், மாற்று சிந்தனை உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98373.html#ixzz3VD1x7Tyy

தமிழ் ஓவியா said...

முயற்சிக்க வேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/98378.html#ixzz3VD2IBv25

தமிழ் ஓவியா said...

மார்ச் 23: இன்று உலக வானிலை தினம்

சென்னை, மார்ச் 23- வானிலை மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகள். இவற்றை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம். இந்நிலை தொடர்ந்தால், 'மூன்றாம் உலகப்போர்' தண்ணீருக்காக இருக்கும்' என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக வானிலை தினம், மார்ச் 23 இல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தினத்தில் மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்து வலியுறுத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இவ்வாண்டு, வானிலையை அறிவோம், செயல்படுவோம்! எனும் கருத்தை மய்யமாக வைத்து கொண்டாடப்படுகிறது.அதாவது, கடந்த கால வானிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வோம்.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிகழ்காலத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம். வருங்கால சந்ததியினரை பாதுகாப்போம் என்பதே இதன் சாராம்சம். விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியால், உடனுக்குடன் செய்திகள் பரிமாறுவதில் வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளோம்.

வானிலை பற்றிய செய்திகளில் குறிப்பாக, வெப்பமயமாதல், பனி உருகுதல், கடல்மட்டம் உயர்தல், ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசுபடுதல், இயற்கை பேரிடர்கள், மழை பற்றிய நிகழ்வுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம்.

இவை, தற்போதைய வானிலையை அறிந்துகொள்ளவும், அதன் தற்காலிக தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் மட்டுமே பயன்படுகின்றன. மாறாக இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனில், வானிலை குறித்த அடிப்படையை மக்கள் உணர வேண்டும். குறிப்பாக, நாம் வாழும் மாநிலத்தின் வானிலை மாற்றங்களை அறிந்திருக்க வேண்டும் என, இந்திய வானிலைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வானிலையாளர் சுகுமார், அறிவுறுத்துகிறார்.

அவர் கூறியதாவது:

இந்தியா சுதந்திரம் பெற்று, 67 ஆண்டுகளில் மக்கள்தொகை நான்கு மடங்காகப் பெருகியுள்ளது. ஆனால் நம் தேவைக்கேற்ப மழையின் அளவு பெருகியுள்ளதா என்றால் யாருக்கும் பதில் தெரியாது. பொதுவாக, வானிலை குறித்த அறிவு இதுவாகவே உள்ளது.

வாழும் பகுதியின் தட்பவெப்ப நிலைபற்றி அறிவது அவசியம்.தமிழகத்தை பொறுத்தவரை, எந்த மாதங்களில் பருவமழை பொழியும், எந்தெந்த பகுதிகளுக்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சமீபத்திய, வானிலை மாற்றங்களுக்கான காரணத்தையும், அதற்கான வழிமுறைகளையும் அரசு உணர வேண்டும்; மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.நிலத்தடி நீர் சேகரிப்பு, மரம் நடுதல் அதிகரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி,

சோலார் வாயிலாக பசுமை வீடுகள், கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி தயாரித்தல் உள்ளிட்ட வழிமுறைகளால், இயற்கை பாதுகாக்கப்பட அனைவரும் முனைய வேண்டும். இதற்கு, அரசும், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-4/98363.html#ixzz3VD3pEx9y

தமிழ் ஓவியா said...

மணத்தக்காளி கீரையின் உடல்நலப் பயன்கள்

மணத்தக்காளிக்கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும் குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்துவரலாம். வாரம் இருமுறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளு றுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கலாம்.

இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தை கொடுக்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.

வயிற்று நோய், வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணத்தக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும். கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும். மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.

கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத் தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மணத் தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும்.

பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.

மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும்.

உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது. நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. எல்லா வகையான காய்ச்சல் களையும் இக்கீரை தணிக்கும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

தமிழ் ஓவியா said...

கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பதநீர் பதநீர்

நமது தேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம். நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது.

இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள். கோடை காலத்தில் தாகம் தணிக்க அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. இதை பருகினால் உடலுக்குநல்ல குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோடையில் ஏற்படும் நீர் கடுப்பை நீக்க பதநீர் அருந்தலாம்.

தொழு நோயை நீக்கும் பதநீர்

நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை, மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிறியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடிசையில் 96 நாள்கள் தங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ குறிப்பு உண்டு .

மாதவிடாய் தடை

மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த நோய்களால் பெண்கள் அவதிபடுவார்கள். இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .

இரத்த கடுப்பு

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மி.லி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .

இதில் நார்ச் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் பேறு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.

Read more: http://viduthalai.in/page-4/98388.html#ixzz3VD4Zvu6M

தமிழ் ஓவியா said...திருப்பதி கோவிலில் பக்தர்களிடம் பண மோசடி

நகரி, மார்ச் 23_ திருப் பதி ஏழுமலையான் கோவி லில் யுகாதி நாளை முன் னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டனவாம்.

நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 43,227 பக்தர்கள் ஏழு மலையானை தரிசனம் செய்தனராம். அதன்பிற கும் தர்ம தரிசனத்துக்கு 21 கம்பார்ட் மெண்டு களில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனராம். இவர் களுக்கு தரிசனத்துக்கு 11 மணி நேரம் ஆனதாம். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் தரிசனத் துக்கு 6 மணி நேரம் காத்து இருந்தனராம்.

கூட்டத்தைப் பயன் படுத்தி பக்தர்களிடம் பணம் மோசடி செய்த இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் பிரம்மபுத்ராவைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ்வர ராவ் தனது 2 நண்பர் களுடன் கோவிலுக்கு வந்தார்.

அப்போது அவர்களி டம் ஒருவர் அறிமுகமாகி தான் தேவஸ்தான ஊழி யர் என்றும், நபருக்கு ரூ.500 கொடுத்தால் ஏழு மலையானை உடனடி யாக தரிசிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதை நம்பிய கல்லூரி மாணவர்கள் 3 பேரும் ஆளுக்கு ரூ.500 வீதம் ரூ.1500 கொடுத்தனர்.

உடனே அவர் வைகுண் டம் வரிசையில் அனுப்பி உள்ளே ரமணா என்ப வர் இருப்பார் அவர் உங் களை மூலவர் அருகே அழைத்துச் செல்வார் எனக் கூறி நழுவினார்.

ஆனால் அனுமதிச் சீட்டு இல்லாததால் அவர் களை தரிசனத்துக்கு ஊழி யர்கள் அனுமதிக்க வில்லை. ரமணாவை தேடியபோது அப்படி ஒருவர் அங்கு இல்லை என்பதும் தாங்கள் ஏமாற் றப்பட்டோம் என்பதை யும் அவர்கள் உணர்ந் தனர். பின்னர் தர்மதரி சன வரிசையில் நின்று ஏழுமலையானை தரி சித்து திரும்பினார்.

வெளியே வந்தபோது பாஸ்போர்ட் சென்டரில் தங்களை ஏமாற்றிய இடைத்தரகர் நிற்பதை கண்டனர். உடனடியாக 3 பேரும் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப் படைத்தனர்.

விசாரணையில் அவ ரது பெயர் பனிக்குமார் (32) என்பதும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பனிக் குமாரை காவல்துறையி னர் கைது செய்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/98394.html#ixzz3VD58PX5S

தமிழ் ஓவியா said...

இலங்கைமீது பன்னாட்டு விசாரணை: 15 மொழிகளில் கையொப்ப இயக்கம்! அமெரிக்காவில் தொடங்கப்பட்டது!

நியூயார்க், மார்ச் 23_ இலங்கை தமிழினப் படு கொலை குறித்து பன் னாட்டு நீதிமன்றம் விசா ரணை நடத்தக்கோரி அமெரிக்காவில், 15 மொழி களில் கையொப்ப இயக் கம் தொடங்கப்பட்டது.

இலங்கையில் தமிழர் களுக்கு எதிராக அந் நாட்டு அரசாங்கம் செய்த போர்க் குற்றங்கள், இனப் படுகொலை, மனிதாபிமா னத்துக்கு எதிரான குற் றங்கள் ஆகியவற்றுக்காக இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசா ரணைக்கு உட்படுத்த அய்.நா. சபையை வலி யுறுத்தும் வகையில் அமெ ரிக்காவில் கையொப்பப் பிரச்சாரம் தொடங்கப் பட்டுள்ளது.

15 மொழி களில் 10 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற வகை செய்யும் இந்த மாபெரும் பிரச்சாரத்தை அமெரிக் காவின் முன்னாள் அட் டர்னி ஜெனரல் ராம் கிளார்க், நியூயார்க் நகரில் உள்ள அய்.நா.சபை தலைமை அலுவலகத் துக்கு வெளியே தொடங்கி வைத்தார். தமிழர்களின் துயரம் முடிவுக்கு வரவேண்டும்.

தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று குறிப்பிட்டு தனது கையொப் பத்தை பதிவு செய்து அவர் முறைப்படி பிரச் சாரத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழ் தேசிய கீதத்துடன் இந்த பிரச்சார நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நிவேதா ஜெய குமார், சவுமியா கருணா கரன் ஆகியார் பிரச்சார மனுவை தமிழிலும், ஆங் கிலத்திலும் வாசித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன், இனப்படு கொலை, போர்க்குற்றங் கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், இன வெறி ஆகியவற்றிலிருந்து தனது குடிமக்களை பாது காப்பதில் ஒரு நாடு வெளிப்படையாக தோல் வியடையும்போது அந்த மக்களை பாதுகாப்பதற் காக அதில் தலையிடுவது உலக சமுதாயத்தின் கடமை.

இந்த கையொப் பப் பிரச்சாரம் அய்.நா. சபைக்கு எதிரானது அல்ல. இது மக்கள் நலன் சார்ந்த பிரச்சாரம் ஆகும் என்று குறிப்பிட்டார் 15 மொழிகளில் கையொப்பப் பிரச்சார மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, உருது, அரபு, மலாய் உள்பட 15 மொழி களில் கையொப்பம் பெறு வதற்காக தனி இணைய தளமும் (www.tgte-ice) உரு வாக்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழ் ஈழம் அமைப்பு தெரிவித்துள் ளது.

Read more: http://viduthalai.in/page-8/98395.html#ixzz3VD5I4Tzn

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் மேனாள் அதிபர்
லீக்வான்யூ மறைவிலும் பாடம் போதிக்கப்படுகிறது!

சிங்கப்பூர் என்ற மிகச் சிறிய நாட்டின், பணியாற்றும் - பண் பாடு (கலாச்சாரம்) எப்படிப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுவோம்.

அந்நாட்டின் உயர்வுக்கும் - வளர்ச்சிக்கும் புத்தாக்கத்திற்கும் காரணமாக அமைந்த அந்நாட் டின் தந்தை என்று அனைவ ராலும் மதிக்கப்படும் லீக்வான்யூ அவர்கள் நேற்று மறைந்துவிட்ட நிலையில், சிங்கை அரசு சார்பாக ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

அவரது உடல் வரும் 29.3.2015 ஞாயிறுதான் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.

ஒருநாள்கூட அரசு விடுமுறையோ, நிறுவனங்கள் மூடுதலோ இல்லை.

தலைவர்கள் மறைந்தால் துக்கம் அனுசரிக்க வழக்கமான வேலையை நிறுத்தாமல், பணியாற்றுவதே அவர்களது லட்சியங்களுக்கு ஏற்ப நடந்து காட்டும் முறை என்று உலகுக்குக் காட்டுகிறது சிங்கப்பூர். (ஏற்கெனவே ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலும் சில நடைமுறைகள் நிகழ்ந்துள்ளன)

மாறாக நமது ஞான பூமியின் இம்மாதம் அடுத்த மாதம் துவக்கத்தில் உள்ள அரசு விடுமுறைப் பட்டி யலைப் பாரீர்!

மார்ச் 28 - ராமநவமி விடுமுறை

மார்ச் 29 - ஞாயிறு (வார) விடுமுறை

மார்ச் 30&31 - (வங்கிகள் திறந்திருக்கும்)

ஏப்ரல் 1 - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு விடுமுறை

ஏப்ரல் 2 - மகாவீர் ஜெயந்தி விடுமுறை

ஏப்ரல் 3 - புனித வெள்ளிக்கிழமை விடுமுறை

ஏப்ரல் 4 - சனி (அரைநாள்) விடுமுறை

ஏப்ரல் 5 - வார (முழு நாள்) விடுமுறை

ஆறு நாள்களுக்கு தொடர் விடுமுறை; இந்த நாடும் பொருளாதாரமும் எப்படி வளரும்?

அந்தந்த மதத்தவர் அவரவர் தனியே விருப்ப விடுமுறை எடுத்துக் கொள்ளலாமே!

உலகிலேயே அதிகமான அரசு விடுமுறை நாள்கள் இந்தியத் திரு நாட்டில்தான்! லீக்யூவான் மறைவை பணி செய்தே துக்கம் அனுசரிக்கும் எடுத்துக்காட்டு எவ்வளவு பின்பற்றத் தக்கது என்று நாம் உணர வேண்டும்.

லீக்வான்யூ அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி - கடவுள் பற்றிக் கவலைப்படாத (Agnostic) அவர் ஆத்மாவில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று ஓங்கி அடித்துச் சொன்னவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/98445.html#ixzz3VIqUYOiM

தமிழ் ஓவியா said...

எனது கருத்து


மனிதன் தன் வாழ் நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து.
(விடுதலை, 3.2.1969)

Read more: http://viduthalai.in/page-2/98419.html#ixzz3VIsF1FCd

தமிழ் ஓவியா said...

காடுகள் பாதுகாப்பும் - வீடுகளின் பாதுகாப்பும்!

உலகில் நாடுகளும் மக்களும் நீண்ட நாள் நலவாழ்வு வாழ வேண்டுமானால் காடுகள் பாதுகாக் கப்பட்டாக வேண்டும். எந்த நாட்டில் காடுகள் அழிக்கப்படாமல் மிகவும் கவனத்துடன் பாதுகாக்கப்படுகின் றனவோ அந்நாட்டில்தான், பொருளா தார வளம் மட்டுமல்ல, நீண்ட ஆயுளைக் கொண்ட மக்களையும்கூடக் காண முடியும்.

வறட்சி ஏற்படாமல் விரட்டிட, மழை மிக முக்கியமல்லவா?

வானம் பொய்த்து விட்டது; மக்களுக்கு, மழை இல்லாததால் பயிர்கள் வளரவில்லை; நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் - காணாமலேயே போய் விட்டது, என்றெல்லாம் கூறுவ தற்கு அடிப்படைக் காரணம் காடுகளை அழித்து, மரங்களை வெட்டி, சூறை யாடி மனிதர்கள் பண அதிபர்கள் ஆகத் துடித்ததின் விளைவுதான்!

பயிர்கள் வளருவதுகூட பிறகு; உயிர்களுக்குக் குடிக்கவும்கூட குடிநீர் கிட்டவில்லையே!

ஒரு காலத்தில் வற்றாத ஜீவ நதியாக ஆறுகள் ஓடின. சிற்றோடை களும், மற்ற நீர் நிலைகளும் திரும்பும் பக்கமெல்லாம் வளமையை வாரித் தெளித்த வண்ணம் இருந்தன!

இன்றோ ஒரு போத்தல் தண்ணீர் ரூபாய் 16 முதல் 20 வரை வாங்கிக் குடிக்கும் அவலம் மலிந்து விட்டதே!

பற்பல ஊர்களில், நேரங்களில் ஒரு லிட்டர் பாலின் விலையைவிட அதிகமாக ஒரு லிட்டர் தண்ணீர் விலை உள்ளது என்பது மிகவும் வேடிக்கையும் வேதனை யும் தரவில்லையா?

இதற்கு மூல காரணம் என்ன? காடுகள்அழிக்கப்படுவதால், மரங்கள் வெட்டிக் கொள்ளையடிக்கப்படுவதால் தான்!

மழை வேண்டி யாகம் செய்யும் சில புத்திசாலிகள் - யாகத்திற்கென மரத்தை வெட்டிக் கொண்டு வந்து போட்டு யாகம் செய்யும் வேடிக்கையும் விசித்திரமும் மலிவு இங்கே!

காடுகள் ஒரு நாட்டின் இயற்கைச் செல்வம், அவை பற்பல காரணங்களால் சூறையாடப்பட்டதன் விளைவுதான் நவீன உலகில் புவி வெப்பம் (Global Warming) உயர்ந்து, பருவ மழை பொய்த்து, மக்களுக்கு நோய்கள் ஏராளம் பரவும் அபாயமும் ஓங்கி வருகின்றது!

காடுகளை அழித்து பலர் வீடுகள் கட்டுகின்றனர்! அமெரிக்கா போன்ற நாடுகளில் காடுகள் போன்ற மரங்கள் சூழ்ந்த மண்ணின் நடுவில் வீடுகளை கட்டி, ஏராளமான உயிர்க் காற்றினை (Oxygen) சுவாசித்து ஆயுள் பெருக்கி வாழுகின்ற முறை உண்டு.

காடுகளை அழித்து வருவதால், காட்டு மிருகங்கள் யானை, புலி, சிறுத்தைகள், ஊர்களுக்குள் வந்து மக்களை அடித்துக் கொல்லும் அவலம் தமிழ்நாட்டிலேயே பற்பல ஊர்களில் அன்றாட அவலங் களாக நிகழ்கின்றனவே! காடுகளை அழிப்பதின் தீய விளைவே இது! இன்று ஒரு நாளேட்டில் ஒரு வாசகர் எழுதியுள்ளார்.

ஒரு மனிதனுக்கு தினசரி மூன்று சிலிண்டர் ஆக்சிஜன் (Oxygen) உயிர் காற்று தேவை; ஒரு சிலிண்டர் 700 ரூபாய்; மூன்று சிலிண்டர் விலை ரூ.2100 ஆகும்.

இப்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதைப் போலவே இனி காற்றையும் காசு கொடுத்து வாங்கும் கொடுமை (இப்போதே சில வணிக நிறுவனங்கள் நுழைந்து விட் டன) விரைவில் வந்துவிடக் கூடும்.

மூங்கில் காடுகளை வளர்க்க வாய்ப்பு இருக்கும் இடங்களில், அவை சிறிய இடங்களாக இருப் பினும் வளருங்கள். ஏராளம் பிராண வாயு இதன் மூலம் கிடைக்கும்.

எனவே காடுகளை பாதுகாப்போம் அதன் மூலம் நம் வீடுகளை - வீட்டில் வாழும் உயிர்களையும் பாது காப்போம்!

ஏதோ காடுதானே என்று அழிக்காதீர்கள்! மேழிச் செல்வம் போலவே, காடுகளும் நாம் பாதுகாக்க வேண்டிய நிரந்தரச் செல்வம் ஆகும். உயிர் காக்கும் தோழர்கள் நம் மரங்களும், காடுகளும் என்பதை மறவாதீர்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/98423.html#ixzz3VIsPUpTk

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே!

பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உடல் மற்றும் மனநலம் குறித்த பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 13 வயதில் பெண்கள், சுய சுகாதாரம், ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி (விளையாட்டு) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 13 வயது முதல் 18வயது வரையுள்ள பெண் குழந்தைகளை மிகவும் பக்குவமாக கையாள வேண்டும்.

இந்த வயதில் மிகக்குறைந்த அல்லது அதிக உடல்எடை, பிறப்புறுப்பு பிரச்சினைகள், சிறுநீரக பாதை கோளாறுகள், பூப்படைதலில் கோளாறுகள் என பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த வயதில் சமூகத்தில் பெண்ணுக்குள்ள முக்கியத்துவத்தை உணர்த்தி ஆணுக்கு பெண், நிகரானவள் என்பதை உணர்த்த வேண்டும்.

மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் காலம் என்பதால் பெற்றோர் குழப்பத்தில் இருப்பார்கள். பூப்படைந்தது முதல் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மாதவிடாய் சுழற்சி இருக்காது என்பதை நாம் உணரவேண்டும். 19 வயது முதல் 39 வயது வரை திருமணம் மற்றும் குழந்தை பேறு உட்பட வாழ்வின் முக்கிய திருப்பங்கள் நடக்கும் காலகட்டமாகும்.

இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரிக்க திட்டமிட்ட 3மாதங்களுக்கு முன்பாகவே விட்டமின் மருந்தை, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உண்ண வேண்டும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியம். மகப்பேறு காலத்தில் உரிய பயிற்சி பெற்ற மருத்துவரிடம் காண்பித்து, பிரச்சினைகளை ஆரம்பநிலையில் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.

40 முதல் 65 வயதுக்குட்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள், மாதவிடாய் சுழற்சி நிற்கும் தறுவாயில் இருப்பதால் உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். அதை உணர்ந்து உணவு கட்டுப்பாடு, அதிக சர்க்கரை தவிர்ப்பு, உணவில் சோயா மற்றும் கால்சியம், உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். 65 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு குடும்பத்தினரின் துணை மிகவும் அவசியம்.

புற்று நோய்க்கான அபாயம் அதிகம் இருக்கும் காலம் இது. எனவே கருப்பை சம்பந்தமான சிறிய சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டு, பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தன்வாழ்வின்பெரும் பகுதியை குடும்பத்திற்காக செலவிடும் பெண்ணின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது.

எந்த குடும்பத்தில் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைத் திருக்கும் என்பது மட்டும் உண்மை.

Read more: http://viduthalai.in/page-7/98443.html#ixzz3VIu8doNJ

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு உகந்த பப்பாளி பழம்

தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடுவதன் மூலம் பால் பெருகும்.
நரம்பு வலியால் அவதிப்படுகிறவர்கள் பப்பாளி இலையை கொதித்த நீரில் முக்கியோ, தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால், வலி குறைந்துவிடும்.

பெண்கள் பப்பாளிப் பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் பெண்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், பப்பாளி பழம் சாப்பிடுகிறவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. 100 கிராம் பப்பாளியில் கிட்டத்தட்ட 2500 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது.

அதனால் பப்பாளி சாப்பிட்டால், பார்வை சக்தி அதிகரிக்கும். ஓய்வற்ற உழைப்பு, மனஅழுத்தம் நிறைந்த வேலை, உடற்பயிற்சியின்மை போன்றவைகளால் கழுத்து வலி, முதுகுவலி, முதுகு சவ்வு தேய்தல் போன்ற பாதிப்புகளால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள். அந்த பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சக்தி, பேப்பைன் என்ற என்சைம் இருக்கிறது. அதனால் வலியும், நோயுமின்றி வாழ விரும்புகிறவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/98444.html#ixzz3VIuaLXA9

தமிழ் ஓவியா said...

முல்லைவேந்தன் உரை

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் உரையாற்றும்பொழுது, கல்விக் கூடத்திலே தந்தை பெரியார் பெயரில் அரங்கம் அமைத்த நமது முனைவர் இராஜேந்திரன் அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அந்த அரங்கத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திறந்து வைப்பது என்பது பொருத்தமான ஒன்றாகும்.

தந்தை பெரியாருக்குக்கூட சிலை வைக்கக்கூடாது என சிறுமதி கூட்டத்தினரும் இன்று இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களை நான் கேட்கிறேன், அரசுக்குச் சொந்தமான இடத்தில், நெடுஞ் சாலையோரங்களில் எல்லாம் பூசணிக்காய் போன்ற கண்ணை வைத்து,கத்தியைக் கொடுத்து விழிபிதுங்க காளி என்றும், மாயி என்றும்,

முனியப்பன் என்றும் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சிலையை வைத்திருக்கிறார்களே, இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது; அவ்வளவு ஏன், ஓமந்தூரார் தோட்டத்திலேயே இன்றைய ஆட்சியாளர் கள் கோவிலைக் கட்டி வைத்துக்கொண்டு, கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட சட்டமன்றத்தையே இடிக்கிறார் களே இவற்றை யார் கேட்பது?

அரசு இடத்தில் கோவில் கட்டலாம்; ஆனால், சொந்த இடத்தில்கூட பெரியாருக்கோ, தீரன் சின்னமலை போன்ற வர்களுக்கோ இந்த நாட்டில் சிலை வைக்க முடியவில்லை. வெங்கடசமுத்திரத்தில் பெரியாரோடு வாழ்ந்த வி.ஆர்.வேங் கன் அவர்களுடைய சொந்த இடத்தில் சிலை வைக்கத் தடை போடுகிறார்கள்.

இங்கே பெரியார் அரங்கு என்று மட்டும் ஏற் படுத்திவிட்டால், போதாது. அது பகுத்தறிவுப் பாடங் களைச் சொல்லிக் கொடுக் கும் அரங்கமாகவும் இருக்க வேண்டும்; மாணவர் களுக்கு அறிவு வெளிச்சத் தைக் காட்டவேண்டும். மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்க ஆசிரி யர்கள் நல்ல சிந்தனையா ளர்களாக பகுத்தறிவாளர் களாக இருக்கவேண்டும்.

வீடு கட்டும்போது பூஜை அறை கட்டுவதை விட்டு விட்டு, படிப்பகம் கட்ட வேண்டும்; ஒரு பெண் நினைத்தால் தன் குழந்தை களை நல்ல பகுத்தறிவாளர் களாக ஆக்க முடியும். பகுத்தறிவு பரவ அகிலா எழிலரசனைப்போல வீட் டுக்கு ஒரு வீராங்கனை இருக்கவேண்டும்.

ஆசிரியர்கள் பெரி யாரை கற்கவேண்டும். அண்ணாவைப்பற்றி படிக்கவேண்டும். மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியை மட்டும் சொல்லிக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், பகுத்தறிவுப் பாடங்களைப் புகட்டுங்கள். மாணவர்கள் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்கும் நிலைக்கு மாறவேண்டும்.

பெரியாரின் கொள்கையை 100-க்கு 25 பேர் புரிந்து கொண்டு செயல்பட்டால்கூட, தமிழகத்தில் பெரிய மாற்றம் நிகழும். மாதாமாதம் பகுத்தறிவுப் பாசறை கற்கும் இடமாக இந்த அரங்கம் இருக்கவேண்டும்.

பட்டங்கள், பதவிகள், ஆட்சி அதிகாரங்கள் இருந் தாலும், இல்லாவிட்டாலும் கருப்புச் சட்டைக்குச் சொந்தக் காரனாக என்றைக்கும் இருப்பேன் என்று உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/98458.html#ixzz3VIuzrccG
24-03-2015