Search This Blog

20.3.15

ஜெயேந்திரரும் - சு.சாமியும்


பார்ப்பனர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் அவர்களின் தலைவர்களைப் பாருங்கள் - அதன் பின் முடிவுக்கு வாருங்கள் பார்ப்பனர்களின் யோக்கியதைபற்றி.


பார்ப்பனர்களுக்கெல்லாம் தலைவராக இருக்கிற சங்கராச்சாரியாரை எடுத்துக் கொள்ளலாம். பார்ப்பனர் மாநாடுகளுக்கெல்லாம் சென்று தலைமை வகிப்ப வர்கள் ஆயிற்றே. கடவுளுக்கு மேல் பிராமணன் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கொலை வழக்குப் புகழ்   ஜெயேந்திர சரஸ்வதி சொல்ல வில்லையா?


1992 டிசம்பர் 6 - அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்வு செய்து சங்பரிவார்க் கும்பல், நிர்வாண சாமியார்கள், பிஜேபி தலைவர்கள் தலைமை தாங்க - சிறுபான்மை மக்களின் 450 ஆண்டு கால வழி பாட்டுத்தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்தவர்கள் அல்லவா! உலகமே கைகொட்டி நகைக்கவில்லையா?


இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ள எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி. செல்வி உமாபாரதி ஆகியோர் மத்திய அமைச்சர் பதவிகளில் நீடிக்கக் கூடாது; அவர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புப் புயலைக் கிளப்பிய நேரத்தில், இந்தக் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார் - நினைவிருக்கிறதா?


அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை என்று கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று (தினமணி 27.11.2000) என்று கூறினாரா இல்லையா?


ஆக வன்முறைவாதிகள் தான் இந்த நாட்டின் சங்கராச்சாரியார்கள் என்பதற்கு இந்த ஒரு சாட்சியம் போதாதா?


முற்றும் துறந்த முனிவர்கள் நாட்டில் வன்முறையை மாய்த்து, நன்முறையை உபதேசிக்க வந்த உத்தமர்கள் என்பதுபோல இந்தக் காவி வேட்டிகள்மீது பிரச்சாரம் செய்து வைத்துள்ளனரே -  அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனரே - அது எந்த அளவுக்குப் பிரச்சாரப் பலத்தால் உண்மைக்கு மாறாகக்  கட்டப்பட்டது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?
 

ஒரு மதக்காரன் இன்னொரு மதக்காரனைச் சீண்டுவதும், இன்னொரு மத வழிபாட்டுத் தலத்தை வன்முறையால் இடித்துத் தள்ளுவதும் தான் மதம் காட்டும் வழியா? இறை நம்பிக்கை இட்டுச் செல்லும் பாதையா?


இன்னொரு மதக் கடவுள் என்பதை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அந்த மதக்காரன் பார்வையில் இந்த மதக்காரர்கள் நாத்திகர்கள் தானே?


நாத்திகர்கள் எந்தக் கோயிலை இடித்தார்கள் - சிலைகளை  திருடினர்? எந்த மதக்காரனைத் தாக்கினர் என்று விரலை மடக்கிட முடியுமா?


அன்றைக்கு பாபர் மசூதியை வெறும் கட்டடம் என்று காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சொன்னார் என்றால், இன்றைக்கு அவரது சீடரும், அரட்டைக் கச்சேரி அடாவடிப் பேர்வழி பிஜேபியின் தேசியக் குழு உறுப்பினருமான சுப்பிர மணிய சுவாமி என்பவர் அஸ்ஸாமுக்குச் சென்றிருந்த போது என்ன சொல்லியிருக்கிறார்?


குவாஹாட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற இந்த சு.சாமி மசூதி  என்பது வழிபாட்டுத்தலமல்ல, அது கட்டடம் மட்டும் தான், அதை எந்த நேரத்திலும் இடிக்கலாம் என்று சொல்லி இருக்கிறாரே!


இதுகுறித்து அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் தருண் கோக்காய் கண்டனம் தெரிவித்துள்ளார்; தொடர்ந்து இவ்வாறு இவர் பேசினால் அஸ்ஸாமுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். அதோடு நின்றுவிடக் கூடாது; இந்த பேச்சின் மீது உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.


மத்தியில் பிஜேபி அதிகாரத்துக்கு வந்துள்ளதாலும், இந்தியாவில் பல மாநிலங்களிலும் பிஜேபி காவி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளதாலும், ஆணவப் போதை தலையில் ஏறி அடவாடித்தனமாகப் பேசி வருகின்றனர். வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


1992இல் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் 23 ஆண்டுகளுக்குப் பிறகும் தண்டிக்கப் படாததும் இத்தகைய அடாவடித்தனப் பேச்சுக்கும், வன்முறை வெறியாட்டங்களுக்கும் மிக முக்கிய காரணமாகும்.


இதில் என்ன வெட்கக்கேடு தெரியுமா? இவ்வளவுப் பெரிய குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பிற்காலத்தில் துணைப் பிரதமர் ஆகிடவில்லையா? மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் அலங்கரிக்க வில்லையா?


மிகப் பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதுதான். மக்கள் மத்தியிலே சட்டத்தின் மீதான நம்பிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாகும்.


அதுவும் சு.சாமி தொடர்ந்து சிறுபான்மையினர்மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார் - வன் முறையைத் தூண்டியும் வருகிறார்! இதற்கொரு முடிவு கட்டப்பட வேண்டும். அஸ்ஸாம் மாநில அரசு உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

                               ----------------------------"விடுதலை” தலையங்கம் 20-03-2015

49 comments:

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டைச் சேர்ந்த நோபல்விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் இங்கிலாந்து ராயல் சொசைட்டியில் தலைவரானது வரவேற்கத்தக்கது

மும்பையில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரஸில் மூடத்தனங்களுக்கு வக்காலத்தா? இராமகிருஷ்ணன் கண்டனம்

இளைஞர்களே விஞ்ஞான மனப்பான்மை கொள்வீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கட் ராமன் இராமகிருஷ்ணன் இங்கிலாந்தில் புகழ் பெற்ற ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் வலியுறுத்திவரும் பகுத்தறிவு விஞ்ஞான மனப்பான்மையைப் பெறுங்கள் என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தி வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இங்கிலாந்தில் உள்ள பிரபல ராயல் சொசைட்டியின் தலைவராக தமிழ்நாட்டில் படித்து பட்டம் பெற்ற ஒருவர், அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்றவர் திரு. வெங்கி ராமகிருஷ்ணன் என்று அழைக்கப்படும் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் தேர்வு செய்யப் பெற்றுள்ளார் என்பது மிகவும் மகிழத்தக்கது ஆகும்.

இதற்குமுன் ஆங்கிலேயர்களான அறிவியல் மேதைகள் மட்டுமே இந்த பெயர் பெற்ற ராயல் சொசைட்டியின் (ஆராய்ச்சி நிறுவனம்) தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; இப்போது தமிழ்நாட்டுக்காரர் (இவர் பார்ப்பனர்) ஒருவர் வந்துள்ளது ஒரு சிறப்பு வரலாறு ஆகும்.

அவர் தன் மனதில் பட்டதை அறிவியல் சிந்தனை களின் அப்பட்டமான பிரதிபலிப்பாக பளிச் என்று கூற என்றுமே தயங்கியதில்லை.

முன்பு அவருக்கு நோபல் பரிசு அறிவித்து, பெற்ற நிலையில், பலரும் அவரைப் பேட்டி கண்டபோது, அவர் மூடநம்பிக்கைகள் நம் இந்திய நாட்டில் மண்டிக் கிடப்பதைச் சாடினார்; அதோடு ஜோதிடம் என்பது ஒரு போலி விஞ்ஞானம்; அது அறிவியலோ உண்மையோ ஆகாது என்ற கருத்தினை அழுத்தத் திருத்தமாகக் கூறினார். நாமும் அதனை எடுத்துப் போட்டு, வரவேற்று எழுதியுள்ளோம்.

இப்போது அவர் இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியின் தலைவராகி - அறிவியல் உலகத்தின் தலை சிறந்த அறிவாளி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் சாட்டையடி!

அவர் தேர்வு செய்யப்பட்டவுடன் லண்டனில் உள்ள ஹிந்து நாளேட்டின் செய்தியாளர் பார்வதிமேனன் அவர்களிடம் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

அரசியலோ, அ

தமிழ் ஓவியா said...

ல்லது மதங்களின் லட்சியங்களோ, அறிவியலுக்குள் ஒரு போதும் வலுக்கட்டாய மாக நுழைந்து விடக் கூடாது.

மும்பையில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில், கலந்து கொண்டு முட்டாள்தனமான பல கருத்துக்களை, அரசியல் கட்சியின் லட்சியங்களாகக் கொண்டுள்ள சிலர் ஊற்றுவாய் மாதிரிப் பேசியுள் ளார்கள் என்று கேள்விப்பட்டேன்.

எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், இந்திய அறிவியல் மாநாட்டினை நடத்திய அந்த அமைப்பாளர் இதற்கு சரியான மறுப்புத் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனியாக இருந்துள்ளார்கள். அப்போதே ஒரு வெளிப் படையான மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். எனக்கு எந்த அரசாங்கத்துடனும், ஏன் இந்த (இந்திய) அர சாங்கத்துடன் கூட எந்தப் பிரச்சினையும் கிடையாது.

அரசியலும் மதக் கொள்கைகளும் அறிவியலுக் குள் உள்ளே வலுக்கட்டாயமாக நுழைக்கப்படுவதை எவரும் ஏற்கவே கூடாது என்று ஓங்கி மண்டையில் அடித்ததைப் போலக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, அம்மாநாட்டில் மரபு அணுக்களும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் எங்கள் இந்து புராணங்களில் எங்கள் கடவுள்களாலேயே செய்து காட்டப்பட்டுள்ளது. இன்று விஞ்ஞானிகள் ஏதோ புதுமை போல கூறுகிறார்கள் என்று அறியாமையான கருத்தும், அறிவியல் துறை அமைச்சராக உள்ள ஒருவர் (பா.ஜ.க.) இதுபோல கருத்துக்களைக் கூறியும், திட்டமிட்டே சில புராணக் கருத்துக்களை மேற்கோள் காட்டி, அறிவியலுக்கு மதச் சாயம் பூசியது மகா வெட்கக் கேடு! உலகமே கை கொட்டிச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தியது; இதைத்தான் நோபல் பரிசு பெற்று, இங்கிலாந்தில் ராயல் சொசைட்டி தலைவராக ஆகியுள்ள திரு. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற இந்திய விஞ்ஞானியே துணிந்து கூறி இந்தப் புரட்டை உடைத்துத் தள்ளியுள்ளார்.

முதுகெலும்போடு இப்படி அப்பட்டமான உண்மை களை விஞ்ஞானிகள்தான் வெளியிட வேண்டும். இதற்குப் பிறகாவது ஹிந்துத்துவா கருத்துக்களை விஞ்ஞானத்திற் குள், ஊடுருவச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் தங்கள் மரியாதையையும், மதிப்பையும் ஆட்சிப் பொறுப் பில் உள்ளோர் காப்பாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

அதைவிட வேடிக்கை இன்று எப்படிப்பட்ட காவிகள் - நாடாளுமன்ற உறுப்பினர்களாகி அங்கே பேசுகிறார்கள் என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு: நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி. கட்சி உறுப்பினர் பி.பி. சவுகான் என்பவர் நேற்று (19.3.2015) ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

புனித கங்கையைக் கொண்டு வந்தவர் யார்?

புனித கங்கை ஆற்றினை இந்த பூமிக்கு யார் அழைத்துக் கொண்டு வந்தது? ஏன் அவர் அதை அழைத்து வந்தார்? அப்படி அழைத்து வந்ததின்நோக்கம் என்ன? அதன் விளைவாக குளியலில் என்ன விளைவை அது ஏற்படுத்தியது? என்னே அறிவுக்கொழுந்து கேள்வி! பதிலளித்த இணையமைச்சர் சன்வார் லால் ஜாட் என்பவர் கங்கையை பகீரதன் என்ற ராஜா அழைத்து வந்தார் (மேல் உலகத்திலிருந்து) மக்களின் சேமத்திற்காக உடனே சபாநாயகரான அம்மையார் சுமித்ரா மகாஜன் (இவரும் பிஜேபிதான்) இது என்ன? இப்படி ஒரு கேள்வியா என்று குட்டி உள்ளார்!

மத்திய அரசு அலுவலகங்களில் பினாயிலுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார் - அதனால் செலவு மிச்சமாகுமாம். இப்படி மோடி தலைமையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாக நடக்கும் பா.ஜ.க.வின் ஆட்சி யின் அலங்கோலங்களை கண்டு அவனியும் அறிவுலகமும் நாணி, நகைக்கிறதே!

இளைஞர்களே, திருந்துவீர்!

இணையத்தினையே பார்த்து ஏமாந்து, வளர்ச்சி மாயையில், மயக்கத்தில் மோடிக்கு - மாற்றத்திற்கென வாக்களித்து குளிக்கப் போய் சேற்றை வாரி பூசிக் கொண்ட இளைஞர் உலகமே!

இனியாவது, இத்தகைய காட்சிகள், நிகழ்வுகள், விமர்சனங்களைக் கேட்டு, கண்ட பிறகாவது, பகுத்தறிவோடு, விஞ்ஞான மனப்பான்மையோடு விழித்து எழக் கூடாதா?

எவ்வளவு பெரிய தேசிய அவமானத்தை நம் நாடு சந்தித்துக் கொண்டுள்ளது என்பதை இனியாவது உணர்ந்து தக்க பரிகாரங்களைத் தேடுங்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
20.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/98163.html#ixzz3Uw62fDJc

தமிழ் ஓவியா said...

பஞ்சகவ்யப் பிரசாதமும் அறிமுகப்படுத்தப்படுமோ!

மத்திய அரசு அலுவலகங்களில் இனிமேல் மாட்டு மூத்திரம் (கோமியம்) தானாம் பாஜக அறிவிப்பு

புதுடில்லி, மார்ச் 20_ நாடு முழுவதுமுள்ள மத்திய அரசு அலுவலகங் களில் மாட்டு மூத்திரத் தைப் பயன்படுத்த வேண்டும் என்று பாஜக தலைமையில் ஆன அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந் தியின் அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:

நாடு முழுவதுமுள்ள மத்திய அரசு அலுவலகங் களில் தூய்மைப் பணி களுக்கு பினாயில் மற்றும் இதர வேதிப்பொரு ளுக்குப் பதிலாக பசு மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்தவேண்டும், பசுமாட்டு மூத்திரத்தில் கிருமிநாசினி உள்ளதால் இவற்றை காலங்காலமாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

பசுமாட்டு மூத்திரத் தில் உள்ள மருத்துவக் குணத்தைக் கருத்தில் கொண்டு பசுக்களை காப்பாற்றும் நோக்கில் மாட்டு மூத்திரத்தை அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தவேண்டும். முக்கியமாக பினாயில் மற்றும் திரவ வேதிப் பொருளுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துவது மேலா னது என அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரி கையாளர்களிடம் பேசிய மேனகா காந்தி கூறிய தாவது: முதலில் டில்லி யில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பினா யிலுக்கு பதிலாக பசுவின் மூத்திரத்தைப் பயன்படுத் தினால் பசுக்களும் பாதிக் கப்படாமல் காப்பாற்றப் படும். பசுக்கள் எப்போ துமே மதிப்புக்குரியவை ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதனுடைய எண்ணற்ற துணை அமைப்புகள் நாடு முழுவதும் மதவெறி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பசு மாட்டின் கோமியத்தை அரசு அலுவலகங்களில் சுத்தம் செய்வதற்கு பயன் படுத்துவது என முடிவு செய்ய உள்ளது. ஆர் எஸ்எஸ் அமைப்பான புனித பசு நிறுவனம் இந்த நோக்கத்திற்காக பசுவைக் காப்போம்; தேசத்திற்கு சேவை செய்வோம் என்ற முழக்கத்தை நாடு முழு வதும் அறிமுகப்படுத்த உள்ளது.

டில்லியில் மட்டும் அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்த ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிற தாம். பசு கோமியத்தை பயன்படுத்தினால் அர சுக்கு செலவு மிச்சமாகும் என்றும் அறிக்கை விட் டுள்ளது. இதற்கிடையே பாஜக அரசின் இந்த நடவடிக்கை சுகாதா ரத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நாடு செல்லும் போக்கைப் பார்த்தால் ஊழியர்களுக்குத் தேநீர் வழங்குவதற்குப் பதிலாக பஞ்கவ்யம் (மாட்டு மூத் திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய்) வழங்கப் பட்டாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/98164.html#ixzz3Uw6lh6e3

தமிழ் ஓவியா said...

இயற்கை


பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரை சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்றவேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/98173.html#ixzz3Uw7CFfXQ

தமிழ் ஓவியா said...

இந்த ஏழிசை கேட்டு உயர்வோம்!

அமெரிக்காவில், இலியனாய் மாநிலத்தில் (சிகாகோ உள்ள மாநிலம்) பிரபல கல்வி வள்ளல்களில் ஒருவரும், மிகச் சிறந்த கொடையாளியுமான 104 வயது வரை வாழ்ந்தவர் டாக்டர் அர்னால்ட் பெக்மென் என்பவர். கருமான் என்ற கொல்லுப் பட்டறைத் தொழிலில் மிக எளிமையாகத் தன் வாழ்வைத் தொடங்கியவர்.

தெளிந்த சிந்தனை, தீர்க்கமான முடிவு, கடும் உழைப்பு - இவைகளாலும் அவரது கண்டு பிடிப்புகள் மூலம் தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் பெல் - ஆகியோர் வரிசையில் வைத்து மிக உயர்வான அறிவியல் தொழில் நுட்ப மேதைகளில் ஒருவராக இன்றும் கருதப்படுகிறார்!

இலியனாய் மாநிலத்தில் சிறிய விவசாயப் பண்ணை ஒன்றைத் துவக்கினார். அதில் பல கருவிகளை தனது நுண்ணறிவின் திறத்தால் கண்டுபிடித்து, உலகம் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்து புகழும் பொருளும் சம்பாதித்தார்!

ரசாயன அறிவியலில் பி.எச்.மீட்டர் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்திட Analytical chemistry -க்கு பெரிதும் உதவிடும் வாய்ப்பான கருவியை கண்ட றிந்து, ஏராளமான விருதுகளை அக்கண்டுபிடிப்பு களுக்காகப் பெற்றார்!

இவரது தொழில் திறமை, அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளைத் தாண்டி, இவரது புகழ் நிலைத்த புகழாக வரலாற்றில் நிற்பதற்கு மற்றொரு மிக முக்கிய காரணம் இவர் ஒரு தலை சிறந்த கொடை வள்ளல் என்பதனால் ஆகும்!

டாக்டர் பெக்மென் அவர்களது தனித்த, படைப்பாற்றல், அறிவியல் நுண்மாண் நுழைபுலம் இவரது வாழ்வை வளப்படுத்தினால் மட்டும் போதாது: தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு, குடும்பம் என்ற சின்ன கடுகு உள்ளத்தை விரட்டிவிட்டே தொல்லுலக மக்கள் எல்லாம் எம்மால் பயன்பெற்று வாழ பணி செய்வதே தனது கடன் என்று எண்ணி, 1977-இல் இவர் சுமார் 40 கோடி டாலர்களை ஒதுக்கி தனது வாழ் விணையர் மேபல் என்ற அம்மையாரும் இணைந்த அர்னால்ட் அண்ட் மேபல் பெக்மேன் பவுண்டேஷன் என்ற ஒரு பொது அறக்கட்டளைத் துவக்கினார்.

இலியனாய் பல்கலைக் கழகத்திற்கு 4 கோடி டாலர் நன்கொடை அளித்து மிக பிரம்மாண்டமான 3,13,000 ச.அடி உள்ள மாபெரும் கட்டடம் ஒன்றை கட்டிடக் கொடுத்து, உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சி யாளர்கள் வந்து ஒன்றுக்கொன்று தொடர்புடைய அறிவியல் (Inter-disciplinary research) ஆராய்ச்சி நடைபெற உதவியுள்ளார்!

ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு! (குறள் - 231)

என்ற குறளுக்கேற்ப அவரது வாழ்க்கை அமைந்து விட்டது! நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதால் பெருமை வராது;

நாம் எவ்வளவு புகழ், பெருமைக்குரிய அறிவாளியாய் உயர்ந்துள்ளோம் என்பதாலும் உண்மையான சிறப்பு வராது; மாறாக, நாம் உலகத்திற்கும் சமுதாயத் தொண்டறத்திற்காகவும் எவ்வளவு உதவினோம் என்பதைப் பொறுத்ததே நிலைத்த புகழும் பெருமையும்!
அத்தகைய மாமனிதர்தம் வாழ்க்கையில் அவர் கையாண்டு உயர்ந்தமைக்குக் காரணமாக அமைந் தவை அவரால் கூறப்பட்ட ஏழு விதிகள்!

நம்மைப் பொறுத்தவரை நமக்கு அவை ஏழிசைகளாகவே இன்பத்தைப் பாய்ச்சுகின்றன!

பெக்மேன் அவர்கள் கூறுகிறார்:

1. எந்தக் கால கட்டத்திலும் நேர்மையையே(integrity) கடைப்பிடித்து ஒழுகுதல்.

2. எந்தப் பணியை எடுத்துக் கொண்டு செய்தா லும், அரை மனதோடு அதில் ஈடுபடாமல், முழு விருப்பத்தோடு செய்யவே பழக வேண்டும்.

எதில் முழுதாய் ஈடுபட முடியாதோ அதை ஏற்காமல் வெளியேறிட வேண்டும்.

விருப்பத்துடன் உள்ளே அல்லது விருப்ப மில்லா விட்டால் வெளியே என்பதே தம் கொள்கையாக இருக்க வேண்டும்.

3. பிறருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எதையும் செய்யாமல் இருப்பது முக்கியம்.

4. எந்தக் காரியத்தைச் செய்தாலும் பின்னால் அதனால் பிறகு அவமானம் ஏற்படக் கூடிய எதனையும் செய்ய முனையவே கூடாது.

5. எதையும் மிக நேர்த்தியுடன் (Excellence) (மற்றவர் மிக மிக விரும்புவதே நேர்த்தி) அதற்கு வேறு மாற்று கிடையவே கிடையாது!

6. எதிலும் தன்னடக்கமும் நிதானமும் கடைப் பிடித்தல் மிக நன்று.
(சிற்சில நேரங்களில் இது சற்று கூடுதல் ஆனாலும் பரவாயில்லை)

7. உங்களை நீங்கள் எப்போதும் பெரிய ஆளாக எண்ணி இறுமாறாதீர்கள்!

இப்படி இந்த ஏழு இசைகளை இசைத்த இந்தப் பெருமகனாரின் படத்துடன் அக்கட்டடத்தில் அவரது வாழ்வு : பிறப்பு: 10.4.1900 மறைவு: 18.5.2004 என்று செதுக்கப்பட்டுள்ளது.

இவைகளை நாமும் பின்பற்றலாமே!

(சிகாகோவிலிருந்து இதை அனுப்பிய திருமதி அருள்பாலுவுக்கு என் நன்றி!)

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/98184.html#ixzz3Uw7LlgY4

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம் >>>

திருச்செந்தூர் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு ஒரு வரலாற்றுத் திருப்பம்

திருச்செந்தூர்... சற்று நின்று திரும்பிப் பார்த்தால் நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று யோசிக்க வைக்கும் இடம்! காரணம், இங்கே வருகின்ற பக்தர்களின் கூட்டத்தில் ஒருவராவது நாகரிகச் சிந்தனை உடையவரா என்பது தெரியாததுதான், நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே காட்டுமிராண்டிக் காலத்தை நினைவூட்டும் வகையில் பக்தர்கள் நடந்து கொள்கின்றார்கள். இந்த ஊரிலுள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் தங்கும் வசதி பிற ஊர்களில் இல்லாத அளவுக்கு உள்ளது. உணவுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு திருமண மண்டபமாகச் சுற்றிக் கொண்டிருந்தால் முற்பகல் 11 மணியிலிருந்து இரவு 7 மணிவரை இலவசமாக உணவு கிடைக்கும். இதனால் குற்றவாளிகளின் புகலிடம் இந்தக் கோயில் எனலாம்.

சனாதன இந்து மதத்தின் உறைவிடம் திருச்செந்தூர். இங்கேயுள்ள மக்கள், கடவுள் என்று நம்புகின்ற சுப்பிரமணிய சாமியை விட அதிக சக்தி படைத்தவன் பார்ப்பனன் தான் என்று உறுதியாக நம்புகின்றனர். அதனால் பார்ப்பனர்களை வைத்து பல வழிபாடுகளை தங்கள் வீடுகளில் நடத்து கின்றனர். இதனால் பார்ப்பனர்களின் வீடுகளில் பணம் கரைபுரண்டோடுகின்றது.

இங்கே சில நாத்திக அமைப்புகள் ஓரிரு நிகழ்ச்சிகள் நடத்தியிருந்தாலும், பார்ப் பனர்கள் கலங்கவில்லை. காரணம், அவற் றால் தங்களை வீழ்த்த முடியாது என்பது தான். அவர்கள் அஞ்சுகின்ற ஒரே எதிரி தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்தின் தலைவரான நமது தமிழர் தலைவர் அவர்கள் தான்.

திருச்செந்தூர் பார்ப்பனர்களின் 19 ஆம் நூற்றாண்டு எதிரி முத்துக்குட்டி (வைகுண்ட சுவாமிகள்) 20 ஆம் நூற்றாண்டு எதிரி தந்தை பெரியார்; இன்று நமது தமிழர் தலைவர் அவர்கள்.

19 ஆம் நூற்றாண்டு மத்தியில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த முத்துக்குட்டியை கடலில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்றவர்கள் பார்ப்பனர்கள்தான். அவரை அதிலிருந்து காப்பாற்றியவர்கள் சில முற் போக்கு சிந்தனை கொண்ட துறவிகள்தான்.

25 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழர் தலைவர் அவர்கள் திருச்செந்தூர் வந்த பொழுது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

எனவே மாநாட்டு நாளான மார்ச் 12 அன்று காவல் துணைக்கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் தூத்துக்குடியி லிருந்து திருச்செந்தூர்வரை தமிழர் தலைவருக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கிய துடன், மாநாட்டுக்கும் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தமிழர் தலைவரின் எழுச்சி மிகு உரையால் திருச்செந்தூரில் சனாதன இந்துமதம் ஆட்டம் கண்டு விட்டது. உங்கள் தலைவரையும் தெரியும், தலைவரின் மகனையும் தெரியும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியவர்கள் இன்று மலைத்துப்போய் நிற்கின்றார்கள்.

திருச்செந்தூர் வட்டார மாநாடு மிகப்பெரிய வரலாற்றுத்திருப்பத்தை உருவாக்கப் போவது உறுதி.

மாநாடு நடைபெற்ற மறுநாள் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து நன்றி யையும் பாராட்டுகளையும் தெரிவித்த போது அவர் கூறினார். யாருமே இதுவரை இப்படிப் பாராட்டியது இல்லை.

யார் நல்லது செய்தாலும் பாராட்ட வேண்டும். இதை தந்தை பெரியாரின் வரலாற்றிலிருந்தும் எங்கள் தலைவரிடமி ருந்தும் கற்றுக் கொண்டோம் என்றேன்.

- த.அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page-2/98188.html#ixzz3Uw7WXh9E

தமிழ் ஓவியா said...

மருந்துக்கு மட்டுமல்ல கருத்துக்கும் காலாவதியுண்டு!


மருந்துக்கு மட்டுமல்ல கருத்துக்கும் காலாவதியுண்டு!

அறியாமை நோயைப் போக்க பெரியார் தேவை!

வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவனத் தலைவர் ஆசிரியர் தலைமையுரை


வல்லம், மார்ச் 20- மருந்துக்கும்; மட்டுமல்ல கருத்துக்கும் கூட காலாவதி உண்டு என்று கூறி, அறியாமை நோயைப் போக்க தேவைப்படும் மாமருந்து தந்தை பெரியார் என்று கூறினார் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

7.3.2015 அன்று வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி யின் 35ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும், ஏற்றத் தோடும் 35ஆவது ஆண்டு பவள விழாவைக் கொண் டாடும் இந்த பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் ஆற்றல்மிகு முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா அவர் களே, இங்கு வரவேற்புரை நிகழ்த்திய துணைமுதல்வர் டாக்டர் பர்வீன் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே முன் னிலை ஏற்று இருக்கக் கூடிய தாளாளர் டாக்டர் சுந்தர ராஜுலு அவர்களே எங்களுடைய அன்பான அழைப்பை ஏற்று காலை முதற்கொண்டு பெரியார் கல்வி நிறுவனங் களை திருச்சியிலும், தஞ்சை வல்லத்தில் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகம், மாலையிலே இந்த நிறுவனத் திலே இன்றைய நேரத்தை ஒதுக்கிய மதிப்பிற்கும் மரி யாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய பேராசிரியர் டாக்டர் பி.அனந்தராமன் அவர்களே, அவர்களுடைய வாழ் விணையரும் எங்களால் அன்போடு, குறிப்பாக என்னால் அன்போடு வாத்தியார் அம்மா என்று அழைக்கக் கூடிய திருமதி உமா அனந்தராமன் அவர்களே, இந்த நிறுவனம் தொடங்கப்படும் நேரத்தில் முதல் தலைமை தனி அதிகாரி யாக, இந்நிறுவனம் ஓராண்டு தஞ்சையிலே இயங்கிய நேரத்திலே அதற்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாக வும் இருந்த பேராசிரியை சுலோச்சனா அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி இந்த நிறுவனங்களுக்கெல்லாம் எப்போதும் நம் பேராசிரியர்கள் அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்து எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மானமிகு சிகாகோ டாக்டர் சோம இளங்கோவன் அவர்களே, நமது அருமை பாராட்டு தலுக்குரிய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் நல்,இராமச்சந்திரன் அவர்களே, இந்த நிகழ்ச்சியில் நாம் அனைவரும் 35 ஆண்டு காலமாக இந்த நிறுவனம் வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டி இனிமேல் நாம் வளரக்கூடிய எல்லைகளை அடைவதற்கு ஒரு நல்ல தன்னம்பிக்கையை இங்கே அமர்ந்திருக்கும் இருபால் மாணவச் செல்வங்களுக்கு ஒரு உதாரணம் காட்டக்கூடிய திருமதி சாந்தி அவர்கள் நான் இருக்கிறேன் பாருங்கள் எவ்வளவு வளர்ந்திருக்கிறேன், எத்தனை பட்டங்கள், மேற்பட்டங்களையெல்லாம் வாங்கியிருக் கிறேன்,

அதுபோல் நீங்கள் வளரவேண்டும் என்பதைக் காட்டுவதற்கு அவர்கள் உரையை விட அவர்களின் நல்ல உருவம், ஆற்றல், கருத்தோட்டம் தான் சிறப்பானது. எனவே நாங்கள் அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லை. எனது பேராசிரியரின் பெருமை 35 ஆண்டுக் காலத்திலே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியடைந்த செய்தி என்னவென்றால் என்னுடைய ஆசிரியர் அவர்கள் உடல் தளர்ந்திருந்தாலும் மனம் தளராமல் வந்திருக்கிறார். அவர் வந்ததில் நமக்கு லாபம் என்னவென்றால் எங்களுக்கு பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறார். அவருக்கும், அவரது வாழ்விணையருக் கும் எங்களது தலை தாழ்ந்த நன்றியினை, வணக்கத்தினை அனைவர் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனுபவம் என்பது 62 ஆண்டுக் காலம் பணியாற்றி இருக்கிறார்கள், வழிநடத்தி இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலே அவர் பட்டம் பெற்றவர்கள். கனடா நாட்டிலே, சிங்கப்பூரிலே, அமெரிக்காவிலே, மலேசியா விலே ஆசிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய சிறப்பு வாய்ந்த அவர்கள் எங்களைப் பார்த்தால் அறிவுரை சொல்வார்கள், வழிநடத்துவார்கள், மேடையில் மட்டுமல்ல, தனி வாழ்விலும் என்னென்ன புதுமை படைத்தல் (Innovation) சொல்லக் கூடிய மதிப்பீட்டை தருவார்கள். அவர்களைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது, அவர் ஒரு திறந்த புத்தகம், அவர் பல்கலைக்கழகமானாலும் கனடா நாட்டு பல்கலைக் கழகம் ஆனாலும், IIT ஆனாலும், Wisconsin-Madison
பல்கலைக்கழகம் ஆனாலும், தேசிய பல்கலைக்கழகம் ஆனாலும் மற்றவர்களுக்கு உதவுவதில், கை தூக்கிவிடுவதில் ஒரு ஏணி போன்றவர் என்பதை மறந்துவிடக் கூடாது. அவர் பெரியாரைப் போல் நன்றியை எதிர்பார்ப்பது கிடையாது. அவரால் உதவிப் பெற்றவர்கள், அவரால் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் ஏராளம் உண்டு. அதில் அவருக்குரிய மகிழ்ச்சி, தன்னிறைவு. அதோடு மறந்து விடுவார்கள். உதவி பெற்றவர்கள் நன்றியை திருப்பி காட்டியிருக்கிறார்களா என்று கருத்தில் எடுத்துக் கொண் டதில்லை. இது அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண் டிய பாடம். தந்தை பெரியார் சொன்னதை காலையில் நமது முன்னாள் மாணவி, அருமைத் தோழியர் சிறப்பாகச் சொன்னார்கள். நன்றி என்பது பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பே தவிர உதவி செய்தவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கக்கூடாது என்று அவர்கள் அழகாகச் சொன்னார்கள். அவர்கள் நமக்கு பின்பற்றத்தக்க (Exemplary) ஒரு முன்மாதிரி (Role Model) என்ற வகையிலே நம் மாணவ மாணவியர் செயல்பட வேண்டும்.

மேலும் படியுங்கள்!

இறுதி ஆண்டு படித்து முடித்து வெளியேறக் கூடிய மாணவர்களாகிய நீங்கள் இன்னும் மேலே மேலே வளர வேண்டும். உங்களுக்கு வாழ்த்துக்களை சொல்ல வேண் டிய நேரத்திலே, நமது முன்னாள் மாணாக்கர்கள் அருமை யாகச் சொன்னார்கள். காலையிலே எனக்கு ஒரு எல்லை யற்ற மகிழ்ச்சியை இந்த ஆண்டு தந்தது என்னவென்றால் அவர்களது உரையைக் கேட்டப்போது இந்த நிறுவனத்தில் பயின்றதன் காரணமாகத்தான் திறமைசாலிகள் மட்டுமல்ல, நாணயமானவர்கள் மட்டுமல்ல, தைரியமானவர்களாக இருக்கிறோம், துணிச்சல் உள்ளவர்களாக இருக்கிறோம் என்று சொன்னபோது எனக்கு வார்த்தைகளை வர வில்லை. எங்கள் எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு தோட்டக்காரன் ஒரு மரத்தை வளர்த்து செடியை பூக்க வைத்து காயாக்கி பழமாக்கும் சந்தோசத்தை விட அந்த பழத்தைப் பறித்துச் சாப்பிட்டவர்கள் அருமையாக இருக்கிறது என்று சொல்கிற போது ஏற்படும் மகிழ்ச்சிதான் எங்களுக்கு ஏற்படுகிறது. அதைப் பார்க்கிற வாய்ப்பு பல பேருக்கு இருக்காது. இந்த மகிழ்ச்சிதான் எங்களுக்கு உள்ளது. அது ஒரு கடவுள் மறுப்பாளனுக்கு கிடைத்திருக் கிறது என்பதுதான் பார்க்கவேண்டும். என்னை ஊக்கப்படுத்த பெருமைப்படுத்த மேலும் வேலை வாங்க சொன்னார்கள், இவர்களுடைய உழைப்பு என்றார்கள். அது வெறும் என்னுடைய உழைப்பு அல்ல, தனி ஒரு மனிதனால் இதை சாதிக்க முடியாது. இதற்கெல்லாம் காரணம் இங்குள்ள அத்தனை பேரும் தான், இவ்வளவு அருமையான மாணவர்களைச் சேர்க்கும் போது எங் களுக்குள் ஒரு அச்சம் இருந்தது. நாம் இதுவரை மாணவி களைத் தானே சேர்த்து நடத்தினோம். மாணவர்களைச் சேர்க்கிறோமே இது என்ன ஆகுமோ, கட்டுபாடு இருக்குமா, கட்டுபாடு இருந்தால்தான் மற்றவைகளுக்கு எல்லாம் அடித்தளமாக இருக்கும் என்று நினைத்த நேரத்திலே இங்கு அமர்ந்திருக்கும் மாணவச் செல்வங்கள் ஒவ்வொருவரும் கல்வியிலே மட்டும் அல்ல, ஒழுக்கத்தி லேயும் மற்றவருக்கு ஒரு எடுத்துக்காட்டாக, மற்ற இடங் களிலே சில வக்கிரங்களும், கோணல்களும் நடைபெறு கின்றன என்றால் அதில் முற்றிலும் மாறான ஒரு கல்விச் சமுதாயம் உருவாகிறது என்றால் அந்த சமுதாயம் எங்கே என்று யாராவது கேட்டால் இதோ! பெரியார் நிறுவனங் களிலே உருவாகி கொண்டிருக்கிறது. எங்களது மாணவர் கள் அவர்களோடு பயிலும் மாணவிகளை எப்படி நடத்து கிறார்கள் என்றால், எப்படி ஒழுக்கத்தோடு படிக்கிறார்கள் என்பதை பாருங்கள் என்று சொல்லகூடிய அளவுக்கு மேல் இங்கிருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலேயும் மாணவர் கள் சிறப்பாக இருக்கிறார்கள், அதற்கு முதலில் வாழ்த்துகள்.

தமிழ் ஓவியா said...

சிறப்பான நாடகங்கள்

சிறப்பான கருத்துள்ள நாடகங்களை இங்கே செய்து காட்டினார்கள், சிலம்பத்திலே டில்லியிலே போய் பரிசு வாங்கி வந்த மாணவத் தோழருக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள். நம்முடைய பிள்ளைகள் படிப்பிலே மட்டும் அல்ல, வெறும் மதிப்பெண்களை வைத்து கணக்கு போட்டுவிடக் கூடாது. சிலம்பம் சுழற்றுகின்ற நேரத்திலே கூட அவர்களுடைய ஆற்றல் திறமை, இவற்றை வெளி காட்டியுள்ளார்.

வல்லம் பேரூராட்சியினுடைய மேனாள் தலைவர் பொன்னுச்சாமி உடையார் அவர்கள் நமக்கு இந்த 35 ஆண்டுக்காலம் தோன்றாத் துணையாக இருக்கிறார்கள். ஒரு செய்தியைச் சொன்னார்கள், சோம இளங்கோவன் அவர்களுடன் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு மலேசியா சென்று திரும்பினோம், திரும்பும் போது எதிர்பார்க்காமல் விமான நிலையத்தில் அவர்களுடைய பேத்தி வெளிநாட்டிலே இருக்கிறார்கள். அவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு சொன்னார்கள் - உலகத்தினுடைய எந்த கோடிக்கு போனாலும் இந்த நிறுவனத்தில் படித்த மாணவ, மாணவியர்கள சந்திப்பதிலே எல்லையற்ற மகிழ்ச்சி. நான் கேட்டேன், என்னம்மா, இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கே இவ்வளவு தூரம் வரக்கூடிய அளவுக்கு தனியாக வந்து இருக்கிறாயே அம்மா, பயமாக இல்லையா என்று. அதற்கு அந்தப் பெண் நான் பெரியார் கிட்டே இருந்து படித்துவிட்டு போன பெண். இது ஒன்று போதாதா, எங்களுக்கு துணிச்சல் வந்ததற்கு என்று சொன்னபோது, நான் அசந்து போனேன். இதுதான் இந்த நிறுவனத்தினுடைய சாதனை. ஆகவே, நம் பிள்ளை கள் துணிச்சலோடு வாழுங்கள், பகுத்தறிவோடு வாழுங்கள், மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் பெரி யாருக்காக அல்ல, நமக்காக.

அறியாமை நோயைப் போக்க தேவை பெரியார்!

நான் அடிக்கடி சொல்லக் கூடிய உதாரணத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மருந்து சாப்பிடுவது மருத்துவருக்காகவா? இல்லை. நம் நோய் குணமாகுவதற்கு தான், அது போல நமக்கு அறியாமை நோயைப் போக்க பெரியார் தேவைப்படுகிறார், அறிவை வளர்க்க பெரியார் தேவைப்படுகிறார், இல்லையானால் இந்த கிராமத்துப் பிள்ளைகள் இவ்வளவு ஆற்றலோடு வருகிறார்கள். எவ்வளவு தன்னம்பிக்கையோடு வளர்ந்திருக்கிறார்கள், பேரப் பிள்ளைகளோடு வந்தார்கள் என்று சொன்னால் அப்படிப்பட்ட அளவுக்கு இந்த நிறுவனம் வளர்ந்து ஓங்கு கிறது. இதற்கெல்லாம் காரணம் ஆற்றல்மிகு முதல்வர், துணை முதல்வர், முதன்மையர், பேராசிரியர்கள், பேராசிரி யைகள் அது போல கட்டுப்பாடு ஒழுக்கமும் திறமையை யும் கூடிய எங்கள் மாணவச் செல்வங்கள் என்பதை நினைத்து நினைத்து பெருமைப்படுகிறோம்.உங்களது கட்டுப்பாடு மிகுந்த கூச்சல்கள். கூச்சல் என்கிற செல்லத் தோடு சொல்கிறோம், ஏனென்றால் கூச்சலிலே பல வகையான கூச்சல் இருக்கிறது. ஏனென்றால் நாங்களும் மாணவர்களாக இருந்து கூச்சல் போட்டவர்கள் தான். ஆகவே தான் அந்தக் கூச்சல் எப்படி என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் படித்த அண்ணாமலைப் பல்கலைகழகத் திலே தான் கைத்தட்டுவதற்கே தனிப் பொருள் உண்டு. பாராட்டு கைத்தட்டு ஒன்று, பேச்சை முடியுங்கள் என்ற கைத்தட்டு உண்டு. அதேமாதிரி வேறு வகையாக சொல்கிற போது கைத்தட்டுவதும் உண்டு. அவைகளையெல்லாம் நாங்கள் தாண்டி வந்துள்ளோம் என்பதை மறந்துவிடக் கூடாது. எல்லா பேரக் குழந்தைகளும் நினைக்க வேண்டும், எல்லா தாத்தாக்களும் இதைத் தாண்டித்தான் வந்துள்ளனர் என்று. எனவே தாத்தாக்களை ஏமாற்றிவிடலாம் என்று எந்த பேரக்குழந்தையும் எண்ணிவிடக் கூடாது. அந்த வகையிலே தான் உங்களை பாராட்டுகிறோம்.

கருத்துகளுக்கும் காலாவதி உண்டு

அதைவிட மெத்த மகிழ்ச்சி, நான் வருகிறபோது பிள்ளைகளின் அறிவியல் கண்டுபிடிப்பு என்று சொல்லி பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு மாதிரித் திட்டம்(Project) காப்புரிமைப் பட்டயம் (patent) செய்கின்ற அளவுக்கு அவர்கள் ஆற்றல் உடையவர்களாக உள்ளனர் என்று சொல்கிறபோது பெருமகிழ்ச்சி அடை கிறேன், அவர்கள் ஒவ்வொரு துறையிலேயும் புதுமையாக (Innovative) ஆக செய்து உள்ளார்கள், அது போல புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுங்கள். உங்கள் அறிவு, ஆராய்ச்சி உணர்வை சுதந்திரமாக விடுங்கள். இந்த நிறுவனம் உங்களை தட்டிக் கொடுக்க தயாராக உள்ளது. எனவே ஆய்வு செய்யுங்கள். பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுடைய படிப்பு என்ன, அவர்களுடைய ஆராய்ச்சி உணர்வு தான் இவ்வளவு பெரிய நிலைமையை ஏற்படுத்தி தந்துள்ளது. இன்னும் கேட்டால் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. இன்னும் ஆப்பிள் என்ன விலை விற்கிறது. நாம் சாப்பிடுகிற ஆப்பிளை வாங்க முடியவில்லை. எல்லாம் புத்தாக்கச் சிந்தனை தான். மருந்துகளைப் போல கருத்துக்களுக்கும் காலாவதி உண்டு. அதற்காக பழைய சிந்தனைகளை எல்லாம் வேண்டாம் என்பதல்ல. நல்ல கருத்துக்களை ஏற்போம், காலாவதியான கருத்துக்கள ஏற்காதீர். புதுமை யைச் சாதிப்போம், புத்தாக்கத்தை உருவாக்குவோம். எனக்கு தன்னம்பிக்கை உண்டு.

தமிழ் ஓவியா said...

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது

வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று தன்னம்பிக்கையை வளர்த்து வாய்ப்புக் கொடுத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! என்று சொல்லி உரையை நிறைவு செய்கிறேன்.

தாளாளர் டாக்டர் சுந்தரராஜுலு

நாம் விமர்சையாக கொண்டாடி கொண் டிருக்கும் இந்த 35 ஆவது ஆண்டு பவள விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் நம்முடைய பாலி டெக்னிக் கல்லூரித் தலைவர் அய்யா அவர் களுக்கும், நமது ஆசி ரியருக்கு ஆசிரிய ராக நம்மிடையே சிறப்புரையாற்ற வந்தி ருக்கும் நம்முடைய சிறப்பு விருந்தினர் அய்யா அவர் களுக்கும் மற்றும் மேடையில் விருந்தினராக வந்திருக்கும் அனைவருக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் என்னுடைய மாணவச் செல்வங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை கூறி கொள்கிறேஃப்ன்.

இந்த ஆண்டு விழாவில் முக்கியமாக அனைவருக்கும் எங்களுக்கும் சந்தோஷமான செய்தி என்னவென்றால் ஆரம்ப நாள்களிலிருந்து இன்றைய வரையிலும் பொது வாக ஒவ்வொரு வருடமும் மூன்று வருட மாணவர்கள் மட்டும் இருப்பார்கள். இந்தத் தடவை 35 ஆண்டு மாணவர்களும் இங்கு இருக்கிறார்கள்.

கல்லூரி ஆரம்பித்த காலத்தில் இருந்த முதல்வர் முதல் இன்றைய முதல்வர் வரை இருக்கிறார்கள். அதில் எங்களுக்கு மிக பெரிய சந்தோஷம். மற்றும் நேரம் கருதி நான் எப்பொழுதும் மாணவர், மாணவிகளுக்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை மட்டும் கூறி கொள்கிறேன்.

இந்த ஆண்டு விழா நம்முடைய சாதனைகளை நாம் திரும்ப நினைவு கூர்ந்து பார்ப்பதற்காகவும் நீங்கள் இங்கிருந்து மூன்று ஆண்டுகள் படித்து விட்டு வெளியே செல்லும் மாணவர்களுக்கு ஒரு வாக்குறுதியாக நீங்கள் உங்கள் குடும்ப தாய் தந்தையரிடமிருந்து இங்கு வந்து படிக்கும் பொழுது அவர்கள் வாழ்த்தி அனுப்பினார்கள். திரும்பவும் நீங்கள் இங்கிருந்து வேலைக்கு உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து வேலைக்கு போய் முன்னேறுவதற் காக செல்கின்ற உங்களுக்கு எங்கள் வார்த்தைகளை சொல்லி அனுப்புகிறோம்.

தமிழ் ஓவியா said...


அப்படி வார்த்தைகளை சொல்லி அனுப்பும் போது முக்கியமாக எப்போதுமே நாம் சொல்லுவது இங்கு பாலிடெக்னிக்கில் படித்த மாணவர்கள் இதோடு நின்று விடாதீர்கள். குறைந்த பட்சம் ஒரு பட்டப்படிப்பாவது (Degree) வாங்குங்கள். ஏனென்றால் எங்களது மாணவச் செல்வங்கள் வெறும் டெக்னீசியன் என்ற பெயரோடு நில்லாமல் பொறியாளராக நீங்கள் வர வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துதல்கள் அதற்கு உதாரணமாக பழைய மாணவ, மாணவிகள் வந்திருக்கிறார்கள் இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் திருமதி சாந்தி அவர்கள் உதாரணமாக இருக்கிறார்கள். அது மாதிரி நீங்கள் வாழ்க் கையில் முன்னேற உங்களுடைய எண்ணங்களோடு வெளியில் சேருங்கள்.

உடனடியாக படிக்க முடிந்தவர்கள் படியுங்கள் இல்லை என்றால் கிட்டத்தட்ட நிறைய நிறைய பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேரப் படிப்பு (part time) இருக்கிறது. அதில் சேர்ந்து நீங்கள் படியுங்கள். பொதுவாக பெண் களுக்கு நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று யாராவது உங்களை பெண் பார்க்க வருவார்களேயானால் அவர்களை நீங்கள் மறுத்து விடுங்கள். இந்த நான்கு சுவருக்குள் ரசம், சாம்பார் வைத்து குடும்பத்தினரிடம் கொடுப்பதற்காக மட்டும் உங்களை இந்த கல்லூரி உருவாக்கவில்லை என்பதை மட்டும் நீங்கள் ஞாபகம் வைத்து கொண்டு அதுவும் அல்லாமல் 50 சதவீதம் உங்களுடைய பங்கு இருக்கிறது . இந்த சமுதாயத்தில் அவ்வளவு வளங்களையும் (resources) நீங்கள் வீண டிக்கக் கூடாது என்பதற்காக என்னுடைய தனிப்பட்ட அறிவுரை, உங்களுக்கு என்னவென்றால் இன்றைய காலக்கட்டத்தில் ஒட்டு மொத்தமாக நம்முடைய சிறப்பு விருந்தினர் அவர்கள் பொருளாதாரப் பேராசிரியர். ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் அதில் நமக்கு அறிவார்ந்த சமுதாயம் (knowledge society) கண்டிப் பாகத் தேவை. அந்த அறிவார்ந்த சமுதாயத்திற்கு பெரியார் அய்யா எல்லா அறிவை விட தொழில் நுட்ப அறிவு தான் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அந்த விதத்தில் நீங்கள் அந்த தொழில் நுட்ப அறிவுக்காக இங்கு வந்து படித்து சென்றது மிகவும் பாராட்டுக்குரியவர்கள். எனவே நீங்கள் அந்த அறிவார்ந்த சமுதாயம் மட்டும் அல்லாமல் தொண்டு என்ற ஒரு வார்த்தைக்கு அய்யா சொல்லுவது நாம் கோவிலில் அன்னதானம் செய்வதோ, தெருவைக் கூட்டுவதோ தொண்டு அல்ல. இது நிச்சயமாக இந்த சமுதாயம் உங்களது அறிவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது. அந்த அறிவு பங்களிப்பை ஒரு தொண்டறமாக செய்து நீங்கள் முன்னேறி வாழ்க்கையில் அமைதியாக ஆனந்தமாக மிக உயர்ந்து வாழ என்னுடைய வாழ்த்துகள் என்று கூறிக் கொண்டு விடைபெறுகிறேன். வணக்கம்.

தமிழ் ஓவியா said...

டாக்டர் சோம. இளங்கோவன்

அருமை தமிழ் நெஞ்சங்களே, பெரி யாரின் தொண்டன் என்று தன்னை அடக்க மாக அழைத்துக் கொண் டாலும் உலகெங்கும் வாழும் என்போன்ற தமிழர்க்கு ஆசிரிய ராகவும், குடும்பத்தின் தலைவராக விளங் கும் மானமிகு அய்யா அவர்களே, அந்த ஆசிரியருக்கு ஆசிரி யராக இருந்த அய்யா அனந்தராமன் அவர்களே, இங்கே பணியாற்றும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர் பெருமக்களே, கூடியுள்ள பெரியோர்களே, மாணவச் செல்வங்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.

இந்த நிலம் காடு மேடுமாக, மனிதன், மாடுகள் நடக்க முடியாத நிலைமையை பார்த்தவன். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 1960இல் படித்த போது இந்த இடம் காடும் மேடுமாக இருக்கும். அவற்றை சோலைவனம் ஆக்கிய பெருந்தகைகள் பலர் இங்கு இருக்கிறார்கள். துணை வேந்தர் இராமச்சந்திரன் முதல் இன்னும் பலர் இங்கிருந்து ஆரம்பம் ஆனவர்கள் தான்.

உங்களை போன்று பலர் இன்று சிங்கப்பூரிலும் மற்ற நாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். முன்னாள் மாணவி சொன்ன மாதிரி எவ்வளவு பேர் படித்து பட்டங்கள் பெற்று தந்தை பெரியாரையும், தஞ்சாவூரையும், வல்லத்தையும் உலகெங்கிலும் உயர்த்தி சென்றுள்ளார்கள், உங்கள் ஒவ்வொருவருக்கும் அந்த கடமை உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவீர்கள் என்று எனக்கு நம் பிக்கை உள்ளது. ஆகவே அவர்கள் சொன்ன மாதிரி படிப்பு முதல் படியாக இருக்கட்டும். மேலும் உங்கள் படிகள் முன்னேறி தந்தை பெரியார் அவர்களையும் தஞ்சை நிலத்தையும், வல்லத்தையும் உலகெங்கும் கொண்டு செல்லுங்கள் என்று உங்களை அன்புடன் வேண்டி கொள்கிறேன்.
காடும் மேடாக இருந்த இடம் நாடு, உலகமும் போற்றும் விளைநிலைமாய் நாளும் பொழுதும் வளர்ந்து தந்தை பெரியாரின் புகழ், நாடு போற்றும் புரட்சி மண்ணாய் ஆசி ரியர் வீரமணியின் உழைப்பின் உன்னதத்தால் வளரட்டும், வள ரட்டும், வான்புகழ் வளரட்டும் என்று கூறி விடை பெறுகி றேன். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! என்று பேசினார்.

எங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது: முன்னாள் மாணவி தி.சாந்தியின் தன்னம்பிக்கை உரை

அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம். இந்த 35 ஆவது ஆண்டு பவள விழாவில் முன்னாள் மாணவர்கள் சார்பாக என்னை தேர்ந்தெ டுத்து என்னை இங்கு அழைத்ததற்கு அய்யா அவர்களுக் கும் முதல்வர் அவர் களுக்கும் மற்றும் ஏனைய நல்ல உள் ளங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

நான் 1982-85இல் மின்னணுவியல் பிரிவு முன்னாள் மாணவி, இப்போது இந்த கல்லூரியில் உள்ள வசதிகளை பார்க்கும்போது எந்த அளவுக்கு இந்தக் கல்லூரி வளர்ந் திருக்கிறது என்பதை உணர முடிகிறது. ஏனென்றால் நாங்கள் படிக்கும் போது ஒரே ஒரு குடில், ஒரு அறை. அவ் வளவு தான் இருந்தது, ஒரு சிற்றுண்டிச்சாலை வசதி கூட உண்பதற்காக இல்லை. விடுதி வசதிகள் எதுவும் இல்லை. நூலகம் மட்டும் இருக்கும். நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த நூலகத்திற்கு போய் புத்தகம் எடுத்து எழுதிக் கொள்வோம், ஏனென்றால் அப்போது செராக்ஸ் வசதி கிடையாது கையால்தான் எழுதவேண்டும். எழுதி எழுதிதான் படிக்கவேண்டும். அப்போது அந்த நூலகத் திற்கு போட்டி போட்டு நூலக ஆசிரியரிடம் முன் பாகவே டோக்கன் வாங்கி நாங்கள் அப்படி எல்லாம் படித்தோம். இந்த கல்லூரியில் இப்போது இருக்கின்ற கட்டடத்தை பார்க்கும் போது இந்த கல்லூரியின் 35ஆவது வருடம் என்பது கட்டடத்தில் மட்டுமல்ல, இங்கே இப்போது மாதிரித் திட்டக் காட்சி பார்த்தோம். நமது மாணவர்களுக்கு எல்லா துறைகளிலும் எவ்வளவு படைக்கும் திறன் இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது நமக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. இதை இத்தோடு நிறுத்தாமல் இந்த மாணவர்கள் மேன்மேலும் பட்டப் படிப்பு படிக்க வேண்டும். நிறைய கண்காட்சிகளில் எல்லாம் கலந்து கொள்ள வேண்டும்.

ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால் நான் 1985 இல் டிப்ளமோ முடித்தேன். 1986 இல் மணலி ராம கிருஷ்ணா பாலிடெக்னிக்கில் பேராசியர் பணிக்கு சேர்ந் தேன். அதற்குப் பிறகு பகுதி நேர படிப்பாக ரிஜீனல் பொறி யியல் கல்லூரியில் பி.இ. முடித்தேன். அதன் பிறகு முழு நேரப் படிப்பாக எம்.டெக். சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் படித்து 2011இல் முடித்தேன். பிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.இ. மின்னணுவியல் துறை முடித்தேன். டிப்ளமோ கணினியியல் படிப்பு பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் முடித்தேன். இப்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் டாக்டரேட் படிப்பையும் படித்து முடித்துள்ளேன். நானும் என்னுடைய வாழ்க்கையில் 35 வருட காலமும் மின் னணு வியல் பிரிவில் இந்த அளவுக்கு படித்துக் கொண்டும், பணியாற்றிக் கொண்டும் இருக்கிறேன். இதனை பார்க்கும் போது இங்கே டிப்ளமோ படிப்பு என்பது இது ஒன்றும் முடிவு அல்ல, இதுதான் முதல்படி. என்னை மாதிரி நீங்களும் மேன்மேலும் நிறைய படித்துவிட்டு பெரிய பெரிய பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

தமிழ் ஓவியா said...

மணலி ராமகிருஷ்ணா பாலிடெக்னிக்கில் பணியாற்றும் போது இங்கே பெரியார் பாலிடெக்னிக்கில் நடக்கும் எல்லா தேர்வுக்கும் அதாவது பாடத்தேர்வு மற்றும் பயிற்சித் தேர்வு எல்லாவற்றிக்கும் நான் தான் தவறாமல் ஒரு புறத் தேர்வாளராக வருவேன். 1986ஆம் ஆண்டிலிருந்து 2011 வரைக்கும் இந்த தேர்வுகள் நடக்கும்போது நான் இல் லாமல் ஒரு தேர்வும் நடந்தது இல்லை. அந்த அளவுக்கு தேர்வு மதிப்பீடு, மாதிரித் திட்டம் என்று எல்லாவற்றிற்கும் வருவேன். அப்போது சாந்திக்கு பெரியார் பாலிடெக்னிக் தான் பிறந்த வீடு, மணலி ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் தான் புகுந்த வீடு என்று சொல்லுவார்கள். இது நாங்கள் தேர்வு செய்வது இல்லை. தொழில் நுட்பக் கல்வி இயக் ககத்தில் இருந்து என் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பு வார்கள். அனைத்து தேர்வுகளையம் நடத்தி கொண்டு இருந்தோம்.

நான் எனது எம்,டெக் படிப்பை முடித்த பிறகு கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் 2013இல் பேராசிரியராக பணியில் அமர்ந்தேன். மணலி ராமகிருஷ்ணா பாலிடெக்னிக்கில் இருந்து போய் கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பின்னர் இதே தேர்வு முறையில் பாடத்தேர்விற்கும், பயிற்சி தேர்வு எல்லாவற்றிற்கும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு போய் கொண்டு இருந்தேன். நான் ஒவ்வொரு முறை வரும் பொழுதும் இந்த கல்லூரியின் வளர்ச்சியை படிப்படியாக பார்த்து வருகிறேன். 2007-2008 இல் பாடத் திட்ட தயாரிப்புக்கான Apex Committee உறுப்பினராகவும் இருந்து நிறைய பாடத்திட்டங்கள் எல்லாம் உருவாக்கி கொடுத்து இருக்கிறேன்.

தமிழ் ஓவியா said...


இவை எல்லாம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள். இப்போதும் இரண்டாம் ஆண்டு சேர்க்கை யின் போது எங்கள் பெரியார் பாலிடெக்னிக் மாணவி என்றால் கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் முதலில் நாங்கள் சேர்த்து கொண்டு தான் இருக்கிறோம். ஏன் என்றால் இந்த வல்லத்துக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்கள் அப்பா, தாத்தா எல்லாரும் இருந்த ஊர் இந்த ஊர் வல்லம். வல்லத்தார் பேத்தி என்றுதான் என்னை சொல்லுவார்கள். வல்லம் என் அப்பா அம்மா பிறந்த ஊர். அதனாலேயே இந்த தொழில் செய்யும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த வல்லத்துக்கு வரும்போது என்னுடைய பிறந்த இடத்துக்கு வருவது மாதிரியே தான் இருக்கும்.

எங்கள் வளர்ச்சியைத் தடுக்க முடியாது

தமிழ் ஓவியா said...

பொதுவாக எங்களுடைய பிள்ளைகளுக்குப் பெண் கள் உரிமை, பெண்கள் கல்லூரி, பெண் முதல்வர் பற்றி நிறைய சொல்வேன். ஏனென்றால் நான் முதல் முதலில் வந்த போது இங்கே மேடம் சுந்தரி வெள்ளையன் அவர்கள் தான் முதல்வராக இருந்தார்கள். அப்போதே எனக்குள் ஒரு தாக்கம், ஒரு தன்னம்பிக்கை இப்படித்தான் நாமும் வளர வேண்டும். பெண்கள் முன்னேற்றம் வேண்டும். நான் பெண்கள் உரிமை மாநாட்டிலே மாணவிகளுக்கு சொல்லும் போது இந்த பெண்கள் எப்படி இருக்க வேண்டும் பெண் நீ அழகாக இருந்தா ரசிப்பார்கள், கவிதையாய் இருந்தா வாசிப்பார்கள், அறிவாளியாக இருந்தா பெருமைப்படுத்து வார்கள் ஆனால் கோழையாய் மட்டும் இருக்காதே இந்த சமுதாயம் உன்னை கொன்றுவிடும். எப்போதும் பெண்கள் தைரியமாய் இருக்கவேண்டும் என்று அடிக்கடி சொல் லுவேன். அதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு சொல்கிறேன். ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை ஒரு கூட்டத்தில் காண் பித்தால் இது யாருக்கு வேண்டும் என்று கேட்டால் எல் லோரும் கைத்தூக்குவார்கள். அடுத்து அதை கசக்கிவிட்டு இது யாருக்கு வேண்டும் என்று கேட்டால் அப்பொழுதும் எல்லோரும் வேண்டும் என்று கைத்தூக்குவார்கள். பிறகு கசக்கியதையும் கேட்கிறார்களே என்று அதை காலில் போட்டு நன்கு மிதித்து கேட்டாலும் அப்பொழுதும் எல் லோரும் வேண்டும் என்று கைத்தூக்குவார்கள். நீங்கள் கசக் கினாலும் சரி மிதித்தாலும் சரி பெண்கள் எங்களுடைய உணர்ச்சிகளை விட மாட்டோம் நாங்கள் மேலும் மேலும் முன்னுக்கு தான் வருவோம்.

இந்த சமுதாயம் என்ன செய்தாலும் சரி எங்களுடைய வளர்ச்சியை ஒன்றும் செய்ய முடியாது. இதுதான் முக்கியம் இந்த தைரியம் இதுதான் பெரியார் கண்ட கனவை நன வாக்கி கொண்டு இருக்கிறது. என்னுடைய கணவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார். பெரியார் பெண்ணுரிமை மாநாட்டில் ஒரு பெண் எப்பொழுது முழுமை அடைகிறாள் என்றால் அவள் தாய்மையில் தான் முழுமை அடைய முடியும். அந்த தாய்க்கு இந்த சமுதாயம் என்ன அங்கீகாரம் கொடுக்கிறது? இவ்வளவு கஷ்டப்பட்டு பெற்று எடுக்கிற அந்த தாயுடைய முதல் எழுத்தை தான் அந்த குழந்தைக்கு முதல் எழுத்தாக வைக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

அது மாதிரி இந்த கொள்கையையாவது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். எனக்கு இரண்டு குழந்தைகள் இரண்டு குழந்தைக்கும் என்னுடைய முதல் எழுத்தை தான் வைத்திருக்கிறேன். என் குழந்தைக்கு என்னுடைய முதல் எழுத்தையும் அப்புறம் என் கணவருடைய முதல் எழுத் தையும் வைத்திருக்கிறேன். என்னுடைய பெண் சென்னை பல்கலைக் கழகத்தில் Master of Psychology படித்து கொண்டு இருக்கிறாள். எனது பையன் சாய் ராம் கல்லூரி யில் பொறியியல் படிப்பு படிக்கிறான். இதை நான் மட்டும் செய்யவில்லை என்னை சுற்றி இருக்கிற நண்பர்கள் எனது கல்லூரியில் இருக்கிற புதிதாக திருமணம் ஆன எல் லோரும் தாய்க்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று அந்த முதல் எழுத்தை வைக்க சொல்கிறோம். உங்களிடமும் அதை கேட்டுக்கொள்கிறேன். வரப்போகிற தலைமுறையில் எல்லோரும் அவர்களுடைய அம்மாவின் முதல் எழுத்தை வைக்க வேண்டும். நாளைக்கு மகளிர் தினம். அந்த பெண் உரிமை மாநாட்டில் அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்று பார்த்தால் நம்து பெண்கள் தலை பின்னும் போது பார்த்தீர்கள் என்றால் மூன்று கால் எடுப் பார்கள். அதில் தெரிவது இரண்டு கால்தான். ஒருகால் உள்ளே மறைந்து சம நிலையாக பின்னால் நிற்கின்ற கால். அதுதான் பெண்கள். அந்த கால் சரியாக இல்லை என்றால் உங்களுக்கு அந்த சடை தளர்ந்து போய்விடும். இறுக்கமாக இருக்க வேண்டும் என்றால் அந்த கால்தான் முக்கியம் . அந்த பெண் பின்னாடிதான் குடும்பம். பெண் இல்லை யென்றால் குடும்பமே இல்லை.

பெரியார் கண்ட கனவு!

அது மாதிரி அந்த பெண்கள் எல்லாரும் சார் சொன்ன மாதிரி பெண் சாம்பார், ரசம் வைக்க மட்டும் இல்லை வீட் டுக்கு உள்ளே இருக்க கூடாது வெளியிலே வர வேண்டும். நிறைய வேலைப் பார்க்க வேண்டும். இது பெரியார் கண்ட கனவு. இது நடைமுறை ஆகிகொண்டு இருக்கிறது. நாங்கள் எல்லாம் இப்படி மேடையில் வந்து நின்று பேசுவது எல்லாம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த multimedia வை பார்க்கும் போது எனக்கு அவ்வளவு ஒரு சந்தோஷமாக இருக்கிறது. எந்த அளவுக்கு இந்த கல்லூரி வளர்ந்து இருக் கிறது, இன்னும் மென்மேலும் வளர வேண்டும் அதற்கு எங்கள் துணை எப்போதும் இருக்கும். மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பாக இந்த கல்லூரி மென்மேலும் வளர வேண்டும் நீங்களும் இந்த மாதிரி வளரவேண்டும் முன் னுக்கு வரவேண்டும் என்று வாழ்த்தி நன்றி கூறுகிறேன். நன்றி. வணக்கம்.

Read more: http://viduthalai.in/page-4/98211.html#ixzz3Uw8F4ALK

தமிழ் ஓவியா said...

அயோக்கியதனம் எது?

அயோக்கியதனம் எது? நன்றாய்க் கொழுக்கட்டை போலும், மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்து கொண்டு ஐயா மூன்று நாளாகக் கஞ்சியே காணவில்லை. காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம்.

ஆனால், அதுபோலவே இருந்து கொண்டு யாதொருவிதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்து விட்டுப்போனார்கள் என்றோ, பரம்பரை சொத்து பாத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தை வைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாகக் கருதிக் கொண்டு சோம் பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம்.

பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

தொல்லை எது? பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. அது போலவேதான் பணக்காரன் (தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன்) பணத்தை வைத்துக் கொண்டு கோவில், மடம் கட்டிக் கொண்டு கும்பாபிஷேகம், உற்சவம், பிராமண சமாராதனை முதலியன செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது.

கடவுள் எது? பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்:

ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்தினாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோத மாக சமமாக்க முடியும்! ஆதலால் மக்களை எல்லாம் நாஸ் திகர்களாக ஆக்கி விட்டால் பணக்காரனும், தரித்திரனும் தானாகவே மறைந்துபோவார்களா மாட்டார்களா?

- தந்தை பெரியார், குடிஅரசு 28.10.1944

Read more: http://viduthalai.in/page-7/98187.html#ixzz3Uw9PtsMf

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலின் பொன்மொழிகள்!

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து எடுத்து விடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளைத் தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

..........

அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங்குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.

..........

போப் ஆண்டவர்களை விட - குருமார்களைவிட - புரோகிதர்களைவிட - பாதிரியார்களைவிட - அர்ச்சகர் களைவிட - ஆண்டவனின் அடியவர்களைவிட குண்டூ சியைக் கண்டுபிடித்தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந்திருக்கிறான்.

..........

இன்று நாம் உணர்கிறோம் உலகம் உருண்டை என்பதை! ஆனால், இதைக் கண்டுபிடித்தவர் யார்? போப் ஆண்டவரா? புனித மதக் குருக்களா? புரோகிதர் கூட்டமா? ஆண்டவன் தூதரா? கிறித்துவப் பெருமானா? கடவுள்களால் அனுப்பப்பட்ட அவதாரங்களில் ஒன்றா? அல்ல, நிச்சயமாக அல்ல! ஆனால், சாதாரண ஒரு மனிதன், அதிலும் ஒரு மாலுமி!

..........

என்னைப் பொறுத்தமட்டில் நான் நினைக்கிறேன், மனிதத் தன்மையை அடியோடு ஒழித்து விட்ட ஆஸ்திகர்களை விட, மனிதத் தன்மையைப் பத்திரமாகப் பாதுகாக்கும் நாஸ்திகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.

Read more: http://viduthalai.in/page-7/98183.html#ixzz3Uw9k7t9g

தமிழ் ஓவியா said...

விதியைப் பற்றி...

மனித சக்தி விதி என்ற சங்கிலியால் கட்டுண்டு கிடப்பது, பெரும் பரிதாபமே. மனிதன் சிந்திக்கச் சிந்திக்க, விதியி னின்று விடுதலை அடைகிறான்.

மனித மூளை சிந்தனையால் விதியை எதிர்த்து, அதை அழித்து, வெ றும் பிரமை என்று நிரூபிக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகிறது. பல மற்றவர்கள், பாதகர்கள் - இவர் களே உழைக்காமல் சோம்பலில் மடிந்து, விதியைக் குறை கூறுகிறார்கள். - எமர்சன்

Read more: http://viduthalai.in/page-7/98183.html#ixzz3Uw9rpvSw

தமிழ் ஓவியா said...

தரித்திரம் ஏன்?

சாமி, பூசை, உற்சவம், புண்ணியம், யாத் திரை ஆகியவைகளின் பெயரால் தனித் தனி செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும், கணக்கு பார்த்தால், மனிதனின் மொத்த வரும்படி யில், ஒரு குறிப்பிட்ட பாகம் வீணா வதைக் காணலாம்.

மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போதே பெரும் பான்மையோர் அவர்களது கல்வி, கல்யாணம் முதலியவை களால் ஏற்பட்ட கடனின் பேரிலே வாழ்க் கையைத் தொடர வேண்டியிருக்கிறது.

இவை எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படிச் செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும் இருக்க வேண்டியதாய் இருக்கிறது

- தந்தை பெரியார் (27.12.1930 களக்காட்டில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து)

Read more: http://viduthalai.in/page-7/98193.html#ixzz3UwAEYTmJ

தமிழ் ஓவியா said...

மக்களை ஏமாற்றும் பில்லி சூனியம், மாந்திரீகம் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் எங்கே?
பெரியார் மண்ணில் ஏன் கொண்டு வரவில்லை? தமுஎகச மாநாட்டில் கேள்வி

திருப்பூர், மார்ச் 20_ மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் 13 ஆவது மாநில மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

திருப்பூரில் வியாழனன்று பேரெழுச்சியுடன் துவங்கிய தமுஎகச மாநில மாநாட்டின் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

சமூகத்தில் நிலவும் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்களால் மக்களுக்கு பெரும் பொருட்செலவும், ஆரோக்கியக்கேடும், நம்பிக்கையின்மையும் ஏற் படுகிறது. நரபலி, பில்லி சூனியம், மாந்திரீகம் என்ற பல்வேறு பெயர்களில் மக்கள் ஏமாற்றப்படு கிறார்கள்.

இந்திய விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் செயற்கைக் கோளை அனுப்பிய பிறகும் செவ்வாய் தோஷம் என்ற பெயரில் சோதிடர்கள் இளம் பெண்களின் வாழ்வை கேள்விக் குறியாக்குகின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் மூட நம்பிக்கைகளுக்கெதிராக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய நரேந்திர தபோல்கர் 20.8.2013 அன்று மதவெறி சமூக விரோதக் கும்பலால் படு கொலை செய்யப்பட்டார். மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மராட்டிய மாநில அரசு நிறைவேற்ற வேண்டுமென அவர் தொடர்ந்து போராடி வந்தார்.

தபோல்கர் படுகொலையைத் தொடர்ந்து பிருதி விராஜ் சவாண் தலைமையிலான முந்தைய மகா ராஷ்டிர மாநில அரசு 13 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தை அவசரச் சட்டமாக பிறப்பித்து பின்னர் சட்டமாக இயற்றியது.

இதன்படி மூட நம்பிக்கை செயல்களில் ஈடுபடு வோர் கைதானால் பிணையில் வெளிவர முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும். நரேந்திர தபோல்கரைத் தொடர்ந்து பொதுவுடைமை இயக்கப் போராளி தோழர் கோவிந்த் பன்சாரே 2015 பிப்ரவரி 16 ஆம் தேதி மதவெறி பிற்போக்குக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தோழர் பன்சாரே, ஷ்ரமிக் பிர திஸ்தான் என்ற பண்பாட்டு அமைப்பை உருவாக்கி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடி வந்ததால்தான் கொல்லப்பட்டார். சித்தராமையா தலைமையிலான கருநாடக அரசு மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தனது வாழ்நாள் முழுவதும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்படாதது வேதனைக்குரியது, வெட்கப்படத்தக்கது.

நாம் மீள வேண்டுமானால் சுயமரியாதை பெற்ற மக்களாக வாழவேண்டுமென்று நினைத்தால் அடிமைப்படுத்தும் மூட நம்பிக்கைகளையும், குருட்டுத்தனமான பழக்கவழக்கங்களையும் முதலில் விட்டுவிடவேண்டும் என்று 1923 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 51-ஏ(எச்) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிவியல் மனப் பான்மையை வளர்த்துக் கொள்வது அடிப்படைக் கடமை என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வதை இந்த மாநாடு வன்மையாகக் கண் டிக்கிறது. இந்தப் போக்கை கைவிடவேண்டுமென மோடி அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும் என மாநாடு வலியுறுத்து கிறது.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகளை எதிர்த்து தமுஎகச-வினர் பண்பாட்டுத்தளத்தில் அயர்வற்ற போராட்டத்தை நடத்துவது என்று இந்த மாநாடு உறுதி ஏற்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/98198.html#ixzz3UwAPweW4

தமிழ் ஓவியா said...

குஜராத் பகுத்தறிவாளர் மறைவு

சூரத், மார்ச் 20_ சிறந்த பகுத்தறிவாளர், எழுத்தாளர் மற்றும் மனித நேயர் பேரா சிரியர் ராமன் பதக், குஜராத் மாநிலம், பர் தோலி நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் (92 வயது) மறைந்தார்.

குஜராத்தி மொழி யில் மிகவும் புலமை பெற்ற பதக், குஜராத்தி மொழியில் ராமன்_பிராமன், ஆன்சு அந்த்ராதர், ஆக்ரோஷ், பட்கர், பிராதிகார், பிரகோப் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.

நீண்ட காலமாக செய்தித்தாள்களில் சிறந்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந் துள்ளார். அவர் கட்டுரைகளில் மதமூடநம்பிக்கை களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளார். அவர் எழுதிய ராமன்_பிராமன் நாவல் முழு மையான பகுத்தறிவுச் சிந்தனையோடு அமைந் துள்ளதாகும். தவிர்க்கப்பட வேண்டிய மத பழைமைவாதங்கள் மற்றும் அதன் கேடுகளுக்கு எதிராக ஏராளமான கருத்துகள் அதில் அடங்கியுள்ளன.

சூரத் பகுத்தறிவாளர் அமைப்பில், பாபு தேசாய் மற்றும் பேராசிரியர் பிஏபாரிக் ஆகி யோருடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். ராமன் பதக், பஞ்சமால் மாவட் டத்தின் மலைப்பகுதியில் உள்ள ராஜ்காட் கிராமத்தில் 22.7.1922 அன்று பிறந்தார்.

ராமன் பதக்கின் மூத்த சகோதரர் குஜராத்தி மொழியில் சிறந்த கவிஞரான ஜெயந்தி பதக் ஆவார். அவருக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, அவர் இறந்த பிறகு, தமது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடையாக அளிக்கவேண்டும் என்பதை தம்முடைய இறுதி விருப்பமாகத் தெரிவித்திருந்தார்.

அவர் விருப்பப்படியே வல்சாத் பகுதி மருத்துவக் கல்லூரிக்கு அவருடைய உடல் கொடையாக வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/98199.html#ixzz3UwAapJLw

தமிழ் ஓவியா said...

யாகத்தில் பொசுக்கி பசுக் கறியைத் தின்றவர்கள்தான் பார்ப்பனர்கள்
தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் கழக துணைத் தலைவர் உரை

சென்னை, மார்ச் 20_சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 14.3.2015 அன்று திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு பொறியாளர் மயிலை ஈ.குமார் தலைமையில் நடைபெற்றது.

தென்சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மு.சண்முகப் பிரியன் வரவேற்றார். தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.இரா.பார்த்தசாரதி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோவீ.இராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன் முன்னிலை வகித்தனர்.

வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் தொடக்க உரை ஆற்றினார்.

தென்சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் மணியம்மை, பெரியார் சட்ட உதவிமய்ய அமைப்பாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்,

சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் தமிழ்சாக்ரடீஸ், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் உரைக்குப் பின்னர் மாநாட்டு சிறப்புரையாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.

வழக்குரைஞர் அருள்மொழி பேசும்போது, இந்தி யாவில் உள்ள மக்களின் வாழ்க்கை எப்படி இருக் கிறது? இந்தியாவைப்பற்றி உலக மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய நேரத்திலே, நம் நாட்டில்நினைக்கிற கருத்தைப் பேசலாமா? கூடாதா?

அந்தக் கருத்துகளை தொலைக்காட்சியில் வருவதற்கு, அதை ஒளிபரப்புவதற்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? இதைவைத்து ஒருவாரமாக தமிழ்நாட்டில் செய்திகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இதுகுறித்து நாடாளு மன்றத்தில் பேசப்படுகிறது. இல்லை நாங்கள் இதை யெல்லாம் அனுமதிக்கமாட்டோம் என்கிறார்கள். இதை ஆதரிக்கவில்லை, கண்டிக்கிறோம் என்கிறார்கள்.

இங்கிலாந்திலிருந்து பிபிசி எடுத்து வெளியிட் டுள்ள இந்தியாவின் மகள் ஆவணப்படத்தில் தூக் குக்கயிறை எதிர்நோக்கி உள்ள கைதியின் பேட்டியை அரசின் அனுமதிபெற்றே எடுத்து வெளியிட்டுள்ளது. அதில் கைதியாக உள்ள முகேஷ் என்பவன் கூறியுள்ள கருத்தில் ஆணாதிக்க மனப்பான்மையே இருக்கிறது. அதே கருத்துதான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்தாகவும் உள்ளது.

_இவ்வாறு பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது:

இப்போது நிலைமை என்னவென்றால், ஆட்டைக் கடித்து, மாட்டைக்கடித்து, மனிதனைக் கடித்து என்று சொல்வார்கள். இப்போது ஏற்பட்டிருக்கிற மதவெறி, காவி வெறி, இந்து வெறி எந்த அளவிற்கு இன் றைக்குத் தலைவிரித்து ஆடுகிறது என்று சொன்னால், இன்றைக்கு இரவு நம் வீட்டில் என்ன குழம்பு வைக்கவேண்டும் என்பதை இராம.கோபாலனைக் கேட்டுத்தான் செய்யவேண்டும்.

நாளைக்கு மதியம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை இல.கணே சனைக் கேட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும். இப்படி ஒரு அராஜகமான, எந்த நாட்டிலும் கேள் விப்படாததை இந்துத்துவாவாதிகள் சொல்கிறார்கள்.

அதுதான் பசுவதைத் தடுப்பு. பசுவின் கறியை சாப் பிடக் கூடாது. மகாராட்டிர மாநிலத்திலே சட்டம் போட்டது மட்டுமல்லாமல், இந்த சட்டத்தை இந் தியா முழுமையும் கொண்டுவருவதற்கு ஓர் ஏற்பாடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

பசுவதைத் தடையா?

தமிழ் ஓவியா said...

மாநில அரசினுடைய கருத்துகளையெல்லாம் கேட்டு, அதனடிப்படையில் இப்படி ஒரு சட்டம் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண் டிருக்கிறார்கள். இப்படி ஒரு செய்தியை வெளிநாட் டில் இருப்பவர்கள் கேள்விப்பட்டால் வாயாலேயே சிரிக்க மாட்டார்கள். இந்துமதவெறி. ஏதோ மத்தியிலே ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்கிற திமிர்.

பத்து ஆண்டுகள் மத்தியிலே காங்கிரசு ஆட்சி இருந் தது. அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக அந்த இடத்திலே போய் உட்கார வைத்தார்களே தவிர, இந்துத்துவாமீது அபரிதமான ஆர்வம் மக்களுக்குப் பெருக்கெடுத்து ஓடி இவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால் அதைவிட படு முட்டாள்தனம் உலகத் திலே வேறு எதுவும் இருக்க முடியாது.

நாள் ஒன்றுக்கு ரூபாய் 20 சம்பாதிக்கக்கூடியவர்கள், இந் தியாவிலே 77 விழுக்காடு இருப்பதாகச் சொல்லு கிறார்கள். இரவு சாப்பாடு இல்லாமல் தூங்குபவர்கள் இந்தியாவிலே 70 கோடி பேர் இருப்பதாகச் சொல்லு கிறார்கள். ஓர் அரசு என்றால், இதுபற்றித்தான் கவலைப்பட வேண்டும்.

வெறும் 20 ரூபாயில் எப்படி ஒரு நாள் பொழுதைக் கழிக்க முடியும்? இந்தியா சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனதற்குப் பின்னாலே, இரவு சாப்பாடு இல்லாமல் வயிற்றைப்பிசைந்துகொண்டு ஏழை எளிய மக்கள் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே, இதற்கு என்ன திட்டம் போடுவது?

மக்களுடைய அடிப் படைத் தேவையான இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை இந்த அத்தியவசியமான பொருளை மக்களுக்கு எப்படி உறுதிப்படுத்துவது? இதைப்பற்றி ஓர் அரசு சிந்தித்தால், திட்டமிட்டால், அது நல்லரசு என்று சொல்லலாம்.

இன்று இரவு என்ன சாப்பிடுவது, நாளை மதியம் எதைச் சாப்பிடக்கூடாது என்று சட்டாம்பிள்ளைத் தனமாக தனக்குக் கிடைத்த ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு கூட்டம் நாட்டிலே புறப்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

மாநில அரசினுடைய கருத்துகளையெல்லாம் கேட்டு, அதனடிப்படையில் இப்படி ஒரு சட்டம் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண் டிருக்கிறார்கள். இப்படி ஒரு செய்தியை வெளிநாட் டில் இருப்பவர்கள் கேள்விப்பட்டால் வாயாலேயே சிரிக்க மாட்டார்கள். இந்துமதவெறி. ஏதோ மத்தியிலே ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்கிற திமிர்.

பத்து ஆண்டுகள் மத்தியிலே காங்கிரசு ஆட்சி இருந் தது. அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக அந்த இடத்திலே போய் உட்கார வைத்தார்களே தவிர, இந்துத்துவாமீது அபரிதமான ஆர்வம் மக்களுக்குப் பெருக்கெடுத்து ஓடி இவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால் அதைவிட படு முட்டாள்தனம் உலகத் திலே வேறு எதுவும் இருக்க முடியாது.

நாள் ஒன்றுக்கு ரூபாய் 20 சம்பாதிக்கக்கூடியவர்கள், இந் தியாவிலே 77 விழுக்காடு இருப்பதாகச் சொல்லு கிறார்கள். இரவு சாப்பாடு இல்லாமல் தூங்குபவர்கள் இந்தியாவிலே 70 கோடி பேர் இருப்பதாகச் சொல்லு கிறார்கள். ஓர் அரசு என்றால், இதுபற்றித்தான் கவலைப்பட வேண்டும்.

வெறும் 20 ரூபாயில் எப்படி ஒரு நாள் பொழுதைக் கழிக்க முடியும்? இந்தியா சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனதற்குப் பின்னாலே, இரவு சாப்பாடு இல்லாமல் வயிற்றைப்பிசைந்துகொண்டு ஏழை எளிய மக்கள் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே, இதற்கு என்ன திட்டம் போடுவது?

மக்களுடைய அடிப் படைத் தேவையான இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை இந்த அத்தியவசியமான பொருளை மக்களுக்கு எப்படி உறுதிப்படுத்துவது? இதைப்பற்றி ஓர் அரசு சிந்தித்தால், திட்டமிட்டால், அது நல்லரசு என்று சொல்லலாம்.

இன்று இரவு என்ன சாப்பிடுவது, நாளை மதியம் எதைச் சாப்பிடக்கூடாது என்று சட்டாம்பிள்ளைத் தனமாக தனக்குக் கிடைத்த ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு கூட்டம் நாட்டிலே புறப்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இந்தியக் கோமாதா கறப்பது என்ன?

இந்தியாவில் இருக்கும் பசுக்கள் கோமாதா என்று சொல்கிறார்களே, ஒரு நாளைக்கு சராசரியாக 2.19 கிலோ கிராம் அளவில்தான் பால் கறக்கிறது. இந்திய கோமாதா பாலைக் கறக்கவில்லை, நம்முடைய பணத் தைத்தான் கறக்கிறது.

கோமாதாவைப் பராமரிக்க வேண்டும் என்றால் நாம்தான் செலவு செய்யவேண் டும். ஆனால், வெளியாடுகளில் கனடா, டென்மார்க் அந்த நாடுகளில் அவன் கோமாதா என்று சொல்வதில்லை. 75 லிட்டர் பால் கறக்கும் மாடுகளை அந்த நாடுகளில் கோமாதா என்று சொல்வதில்லை.

செயற்கைக் கருவூட்டலில் எந்த விந்து?

பசுமாட்டைக் கருத்தரிக்க என்ன செய்கிறீர்கள்? கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு போகி றீர்கள். செயற்கை முறையில் கருத்தரித்தல்; அதில் எந்தக் காளையின் விந்தைப் போடுகிறார்கள் தெரியுமா? இந்தியாவில் உள்ள காளைமாடுகளின் விந்துக்களைச் சேர்ப்பதில்லை. வெளிநாட்டு காளைகளின் விந்தைத்தான் சேர்க்கிறார்கள்.

நாள் ஒன்றுக்கு 75 லிட்டர் கறக்கக்கூடிய வெளிநாட்டு பெர்சியன், ஜெர்சி முதலிய காளைகளின் சினை முட்டைகளை கோமாதாவுக்குள்ளே செலுத்தி கருத் தரிக்கச் செய்கிறார்கள். கோமாதா கற்பு என்னாயிற்று?

அவர்களின் மிலேச்சப் பசுக்களின் விந்தணுக்களை கோமாதாவுக்குள் செலுத்தி செயற்கைக் கருத்தரித்தல் செய்கிறார்கள். கோமாதா கோமாதா என்கிறார் களே? கோயில்களில் நேர்த்திக்கடன் என்று பசுமாடு களை விடுகிறார்கள். அப்படி விடப்படும் பசுக்களை கோயில் நிர்வாகம் சரியாகப் பராமரிப்பதில்லை.

அதைத் திருட்டுத்தனமாக கசாப்புக்கடைக்கு அனுப்புகிறார்கள். பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.கோயிலுக்கு விடப் பட்ட பசுக்களையே கசாப்புக்கடைக்குக் கொண்டு செல்கிறார்கள். உலகில் அதிகமாக மக்கள் சாப்பிடக் கூடிய உணவு ஒன்று என்றால், அது மாட்டுக்கறி தான். சத்துள்ள உணவு, ஆட்டுக்கறியைவிட பாதி விலையில் கிடைக்கின்ற மாட்டுக்கறியை அரசே சாப் பிடச் சொல்லவேண்டும்.

ஆனால், அரசு என்ன செய்கிறது? பார்ப்பனர்கள் மாட்டுக்கறியை சாப் பிட்டதே இல்லையா? பசு புனிதம் என்கிறார்களே, புராணங்கள், இதிகாசங்களில் பார்ப்பனர்கள் எப்படி யாகம் நடத்தினார்கள்? பசு மாட்டை நெருப்பில் போட்டுக் கொளுத்தி, எப்படிச் சமைத்து எப்படி சாப்பிடுவது என்று கூறப்பட்டுள்ளதே. எங்களிடம் ஆதாரம் உள்ளது.

பசுக்கறியைப் பார்ப்பனர்கள் சாப்பிட்ட விதம்

தமிழ் ஓவியா said...

பசு மாட்டை யாகத்திலே கொன்று எப்படி சாப்பிடுவது என்று பார்ப்பனர்களுடைய இதிகாசத் திலே சொல்லி இருக்கிறார்கள். மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண் டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அஃகு வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும்.

அவ்வாறு அதே இடங்களிலிருந்து 26 துண்டுகளை அறுத்தெடுத்தபின், எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க. அப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

மாட்டைக் கொல்லும்போது நன்றாக அடித்துக் கொல்! கொல்!! என்று சத்தம் போடவேண்டும். அந்த மாட்டை அடிக்கும்போது நன்றாக அடி அடி என்று சத்தம் போடவேண்டும். இப்படியெல்லாம் புரா ணத்திலே, இதிகாசத்திலே எழுதி வைத்திருக்கிறார் கள். இப்போது இந்துக்களின் புனிதம் என்று சொல்கிறாயே, இந்து மதத்திலே இருப்பதை ஏன் மாற்றிப் பேசுகிறாய்? நாங்கள் எடுத்துச் சொல்லும் போது உனக்கு ஏன் கோபம் வருகிறது?

பார்ப்பனர்கள் மாமிச உணவை எப்போது விட் டார்கள் என்பதற்கு வரலாறு இருக்கிறது. புத்தர் காலத்திற்குமுன்வரை பார்ப்பனர்கள் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். கவுதம புத்தர் தோன்றி, இந்தப் பார்ப்பன யாகங்களை எதிர்த்து, நெருப்பில் போட்டு பொசுக்குகின்ற அந்த யாகங்களைத் தடுத்து நிறுத்தி மக்கள் மத்தியிலே வைதீக, ஆரிய, பார்ப்பன எதிர்ப்பை உண்டாக்கி,

மக்கள் பவுத்த மதத்துக்கு மாறும் சூழ்நிலையில், பார்ப்பனர்கள் தங்கள் மதத் தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக சைவத்துக்கு மாறினார்கள். இதுதான் வரலாறு. இதை நாங்கள் சொல்லவில்லை. ராகுலசாங்கித்யாயன் என்கிற உலகப்புகழ்பெற்ற, மிகப்பெரிய வரலாற்றுப் பேராசிரியர் எடுத்துக்கூறியுள்ளார்.

பார்ப்பனர்கள் இதற்கப்புறம்தான் பசு மாட்டுக் கறியை உண்ணக்கூடாது என்று கொண்டுவந்தார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

_ இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையில் உரை யாற்றும்போது குறிப்பிட்டார்.

கலந்துகொண்டவர்கள்

மயிலை சேதுராமன், வழக்குரைஞர்கள் ஆ.வீரமர்த் தினி, ந.விவேகானந்தன், ம.வீ.அருள்மொழி, க.பால முரளி, சரவணன், மு.பவானி, வி.வளர்மதி, ச.அரவிந்த், அய்ஸ்அவுஸ் சேது, ச.துணைவேந்தன், சந்தோஷ், யாழ்ஒளி, தங்கமணி, திருவொற்றியூர் கணேசன், சுமதி, கூடுவாஞ்சேரி ராசு, மதுரவாயல் தங்க.சரவணன், அம் பத்தூர் பூ.இராமலிங்கம், கோவிந்தராசன், இளை ஞரணி மகேந்திரன்,

மு.முகிலன், மணிதுரை, எம். இரமேஷ், ஜெயப்பிரகாஷ், சிவக்குமார், இசையின்பன், பசும்பொன், கலையரசன், சவுந்தரராஜன், பெரியார் பிஞ்சுகள் அபினா சுருதி, கோவன் சித்தார்த், அசுரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-8/98203.html#ixzz3UwAnkzk9

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மஞ்சள் நீர்

கடை திறக்கும்போது வாசலில் மஞ்சள் நீர் தெளிப்பது எல்லாம் பிற் காலத்தில் புகுந்து விட்ட பழக்கங்கள். மகாலட் சுமிக்கு விருப்பமான மஞ்சளைக் கால்படும் விதமாக கீழே தெளிப்பது தவறு என்கிறது ஓர் ஆன் மிக இதழ்.

ஒருவர் சரி என்பது இன்னொருவர் தவறு என்பார். இதெல்லாம் இந்து மதத்தில் சர்வ சாதாரணம். பூமிகூட பூமாதேவிதான் அதில் என்னென்னவெல் லமோ நடக்கிறதே!

Read more: http://viduthalai.in/e-paper/98240.html#ixzz3V1UqoPw2

தமிழ் ஓவியா said...

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க இயலாது! உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி மார்ச் 21 பகவத் கீதைஎன்னும் நூலை தேசிய நூலாக அறிவிக்க இயலாது என்று கூறி வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து மத அமைப்புசார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் வெளி விவகாரத்துறை அமைச் சர் சுஸ்மா சுவராஜ் பேசும் போது; விரைவில் பகவத் கீதையை தேசிய நூலாக அரசு அறிவிக்கும் என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு தேசிய அளவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத் தியது. சில இந்துமத அமைப்புகள் கூட மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் இதற்கு வலு ஊட்டுவதுபோல் மோடி வெளிநாட்டிற்கு செல் லும் போதெல்லாம் அங் குள்ள தலைவர்களின் கையில் வலுக்கட்டாய மாக பகவத்கீதையை திணித்துவிட்டு வருகிறார்.

அரசின் தேசிய நூல் பற்றிய கொள்கை முடிவுகள் தெளிவில்லாத பட்சத்தில் வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் என்பவர் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண் டும் என்று அரசுக்கு ஆணையிடக்கோரி பொது நலமனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த பொதுநலமனு வெள்ளிக் கிழமையன்று விசார னைக்கு வந்தது. இந்த மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதா வது:

ஒரு நூலை தேசிய நூலாக அறிவிக்கவேண் டும் அல்லது அதை தவிர்க்கவேண்டும் என் பதை நீதி மன்றம் வலி யுறுத்த முடியாது. இந்திய சமூகம் என்பது பல்வேறு மதம் மற்றும் இனங் களைக் கொண்ட நாடு. அரசு எடுக்கும் எந்த ஒரு செயலும் அனைத்து சமூகத்தினருக்கும் இணக்கமான ஒன்றாகத் தான் இருக்கவேண்டும். சமூக நல்லிணக்கம் சார்ந்த பிரச்சனைகளில் அரசின் முடிவு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக இருக்கவேண்டும்.

பகவத் கீதை என்பது ஒரு மதத் தினரின் புனித நூல், நீதி மன்றம் இந்த விவகாரத் தில் எந்த ஒரு கருத்தும் சொல்லமுடியாது. அரசு அரசியல் சாசனப்படி செயல்படும், ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய் கிறோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98243.html#ixzz3V1V2itGs

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சதி


பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும், அவர் களை ஒழித்துக் கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக் கையாக இருந்து வந்திருக்கிறது.

- (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/e-paper/98252.html#ixzz3V1VSThdI

தமிழ் ஓவியா said...

நாகம்மாள் தகனம்

தோழர் ஈ.வெ.ரா.நாகம்மாள் அவர்கள் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு இனிதாங்காது என்ற நிலையில் ஆஸ்பத் திரியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வந்ததும் கடைசி ஸ்திதியில் செய்யக்கூடிய சிகிச்சைகளை செய்து பார்த்ததும் இரவு 7-45 மணிக்கு அம்மையார் ஆவி நீத்தார்கள்.

உடனே அம்மையாரின் உடல் சுத்தம் செய்யப் பட்டு நன்கு அலங்கரித்து ஈ.வெ.ரா. அவர்கள் இல்லத்தின் முன் மண்டபத்தில் யாவரும் எளிதில் பார்த்துச்செல்ல வசதியுடன் அழகிய பெட்டியில் அடக்கம் செய்து வைக்கப்பட்டது. உடனே 8-30 மணிக்கு யாவருக்கும் (ஈ.வெ.ரா. உள்பட) சாப்பாடு நடந்தது. ஊர் பிரமுகர்களும், வெளியூர் தோழர்களும் இரவு முழுவதும் வந்து கொண்டே இருந்தார்கள்.

அநேகமாக எல்லோரும் இரவு முழுவதும் விழித்துக்கொண்டே கேளிக்கையாய் இருந்ததோடு இடை இடையே டீ வழங்கப்பட்டு வந்தது. முக்கியமாய் யாவரும் கவனிக்க வேண்டியதும், கவனித்ததுமான சம்பவம் யாதெனில் நெருங்கிய உறவினர் முதல் உற்ற தோழர்கள் வரை யாவரும் அழுதல் என்னும் அநாகரிகமான காரியத்தை அறவே ஒழித்து ஆண் பெண் அடங்கலும் ஒற்றுமையாய் பேசிக்கொண்டும் நாளைய காரியங்கள் கவனித்தும் வந்ததே.

மறுநாள் காலை 9 மணி அளவிற்கு தகனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று இரவே துண்டுப் பிரசுரம் ஊரெல்லாம் வழங்கப்பட்டது. அந்தப்படிக்கே மறுநாள் காலையில் எவ்வித சடங்கும் இல்லாமல் ஒரு இரதத்திற்கு ஒப்பான ஒர் அழகிய நாலு சக்கரவண்டியில் அம்மாளின் உடல் மூடப்பட்ட பெட்டி வைக்கப்பட்டு பெட்டியை பட்டாடைகளாலும், புஷ்பங் களாலும்,

அலங்கரித்து வைத்து பல ஆயிரக்கணக்கான ஜனங்கள் பின்தொடர தகனம் செய்ய குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கி வண்டி மெல்ல தள்ளிக்கொண்டு செல்லப்பட்டது. ஊர்வல ஆரம்பத்தில் போட்டோ படக்காரர்கள் பலர் படம் எடுத்தார்கள்.

வழிநெடுக அநேக கடைகளிலும், முக்கியமாய் சுயமரியாதை வாலிபர் சங்கத்தின் முன்னிலும் (மகாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் தலைவருக்கு மாலைகள் சூட்டி உபசரிப்பதை போல்) நிறுத்தி நிறுத்தி மாலைகள் போடப்பட்டு புஷ்பங்கள் வாரி வாரி இறைக்கப்பட்டன.

தகனம் நடக்கும் இடமாகிய காவேரிக்கரை அணுகியதும் உடனே தகன ஏற்பாடுகள் நடந்து

கொண்டேயிருக்கும் போது தோழர் எஸ். மீனாட்சி சுந்தரம் பி.ஏ., எல்.டி., அவர்கள் தலைமையில் ஒர் கூட்டம் கூடி வந்திருந்த பிரமுகர்களும், இயக்க தோழர்களும் தங்கள் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் தோழர்கள் சாமி சிதம்பரனார், ராவணதாஸ், சேலம் நடேசன், டாக்டர் கிருஷ்ணசாமி, மாயவரம் சி. நடராஜன், ஈ.வி.நஞ்சப்ப செட்டியார், எம்.சிக்கையா, மைதீன் பாட்சா முதலியவர்கள் அம்மையாரின் குணாதிசயங்களைப் பற்றியும்,

வரலாற்றைப் பற்றியும் பேசினார்கள். பின் தோழர் ஈ.வெ.ரா அவர்கள் பதில் சொல்லி முடித்தவுடன் கூட்டம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பினார்கள். வெளியூர் பிரமுகர்கள் வந்துகொண்டே இருப்பதுடன், தந்திகளும், கடிதங்களும் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

ஒரு மணி நேரத்தில் எல்லாம் முடிந்தது. தகனம் செய்த பின்பு எவ்வித சடங்கும் அது சம்பந்தமான நடவடிக்கையும் இல்லை. ஈ.வெ.ரா. சனிக்கிழமை இரவு சுற்றுப்பிரயாணம் செய்வதற்குத் திருச்சிக்குப் புறப்பட்டு விட்டார்.

குடி அரசு - கட்டுரை - 14.05.1933

Read more: http://viduthalai.in/page-4/98291.html#ixzz3V1Wg6Zt1

தமிழ் ஓவியா said...

பெசண்டம்மையாரின் முடிவு

தோழர் அன்னிபெசண்டம்மையார் 20.09.1933 அன்று மாலை 4 மணிக்கு சென்னை அடையாற்றில் முடிவெய்தி விட்டார்கள். அம்மையாரின் வாழ்வு பெண் மணிகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஆண்களுக்கும் ஓர் அறிவுறுத்தல் ஆகும்.

பெண்கள் பாவஜென்மம் என்றும், பேதமையென்பது மாதர்க்கணிகலம் என்றும், பெண்கள் ஆண்களின் காவலுக் குட்பட்டு இருக்க வேண்டியவர்கள் என்றும், அறியாமையும், அயோக்கியத்தனமும், முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் கொண்ட வாக்கியங்களை பொய்யாக்கி அவற்றில் பொதிந் துள்ள சூழ்ச்சிகளை வெளியாக்க வென்றே தோன்றியவர் என்று கருதும்படியானவர் நமது பெசண்டம்மையார்.

தோழர் பெசண்டம்மையார் ஒரு பாதிரியாரின் மனைவி யாவார் பாதிரிகளின் கொடுமையும், பித்தலாட்டமும் அம்மையாரை நாஸ்திகமாக்கி, தெய்வம்இல்லை என்று பிரச்சாரம் செய்யும்படி செய்தது பிறகு புருஷனைவிட்டு பிரிந்தார். பிறகு கர்ப்பத் தடையை யாவருக்கும் பிரச்சாரம் செய்துவந்தார் கர்ப்பத்தடையை சட்டசம்பந்த மாக்கினார். அக்காலத்திலேயே அரசாங்கத்தையும் எதிர்த்து பிரச்சாரமும் செய்தார்.

பின்னர் தனது 32ஆம் வயதுக்கு மேல் மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். பிறகு பல புத்தகங்களை எழுதினார். அதன் பிறகு பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தார். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார் வந்து அச்சபையின் உலக தலைவரானார். பிறகு சென்னையை வாசஸ்தலமாகக் கொண்டார். கிறிஸ்தவ மதத்தை கண்டித்து இந்துமத தத்துவ பிரச்சாரம் என்னும் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தார்.

இதனால் சென்னையில் உள்ள விபூதி பூசும் பார்ப்பனரிடம் மிக செல்வாக்கு அடைந்தார். அய்க்கோர்ட்டு ஜட்ஜ்கள் உள்பட அநேக பெரிய பதவியாளர்களை தனக்கு சிஷ்யராகக் கொண்டார். அரசாங்கத்திலும் ஒரளவு செல்வாக்குப் பெற்று. விபூதிப் பார்ப்பனர்களுக்கு அச்செல்வாக்கை பெரிதும் உதவினார்.

இதுகண்டு பொறாத சென்னை நாமம் போடும் அய்யங்கார் பார்ப்பனர்கள் அம்மையாருக்கு பல தொல்லைகளை விளைவித்தார்கள். அவற்றை சமாளிக்க (முன் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தது போலவே) அரசியலில் தலையிட்டு அரசியல் பிரச்சாரமும் செய்தார்கள். இதன் பயனாயும், அம்மையாரின் அபார சக்தியாலும் இந்தியா முழுமைக்கும் அரசியல் தலைவராயும் விளங்கினார்.

காலஞ்சென்ற தோழர்கள் தாஸர், பாலர், நேரு முதலியவர்கள் எல்லாம் அம்மையாருக்கு சிஷ்யர்களாக இருந்தார்கள். அம்மையார் ஓடி ஆடித்திரிய சக்தி உள்ளவரையில் அய்யங்கார் கூட்டத்தை பொது வாழ்வில் தலை எடுக்க வொட்டாமல் செய்து கொண்டே வந்தார்.


தமிழ் ஓவியா said...

இதன் பயனாகவே (அம்மையாருக்கு அரசியலிலும் மதத்திலும் செல்வாக்கு இருக்கும்வரை) தோழர் சி.விஜயராகவாச் சாரியாராகிய அய்யங்கார் காங்கிரஸ் பிரசிடெண்டாக முடியா மலேயே போய்விட்டது.

இந்தக் காரணத்தால் சென்னை அய்யங்கார்கள் அரசியலில் மிதவாதிகள் ஆகி தோழர்கள் சி.எஸ். கஸ்தூரிரங்கய்யங்கார், சி.விஜயராகவாச்சாரியார், சி.ராஜகோபா லாச்சாரியார், எஸ். சீனிவாசய்யங்கார் முதலிய அய்யங்கார்கள் ஒன்று சேர்ந்து, மறுபடியும் அம்மையாரின் அரசியல் செல்வாக்கை ஒழிக்க வேண்டியவர்களானார்கள்,

இதற்கு பார்ப்பனரல்லாத தோழர்கள் பி.வரதராஜீலு, வி.ஒ.சிதம்பரம் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப், ஈ.வெ.ராமசாமி முதலியவர்களையும், அய்யர் பார்ப்பனரில் தோழர் எஸ். சத்தியமூர்த்தி அய்யர் முதலியவர்களையும் பயன்படுத்திக் கொண்டு, அம்மையாரை எதிர்த்து அம்மை யாருக்கு பல தொல்லைகளும் கொடுத் தார்கள். அம்மையாருக்கு சரியான போட்டித் தலைவராக தோழர் காந்தியாரைப் பிடித்துக் கொண்டுவந்து மகாத்மாவாக்கினார்கள்.

இதன் பயனாகவும் அம்மையாரின் வயோதிகத்தின் பயனா கவும் அம்மையார் அரசியலில் சிறுகச்சிறுக, விட்டுக் கொடுத்துக் கொண்டே வந்துவிட்டார்கள் என்றாலும் அரசாங்கத்தின்மூலம் தனது விபூதிப் பார்ப்பன அய்யர் சிஷ்யர்களுக்கு அளவு கடந்த உதவி செய்து கொண்டே வந்தார்.

தோழர் சர்.சி.பி. போன்றவர்கள் எல்லாரும் உயர்ந்த அந்தஸ்திற்கு அம்மையாராலே ஆக்கப் பட்டவர்கள் ஆவார்கள், அம்மையாரின் அபார சத்தியை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அம்மையார் இந்த உலகம் முழுவதும் ஒரு ஆட்சிக்கு உட்படுத்தி அதன், தலைமை ஸ்தானத்தைக் கொடுத்தால் அதை ஒருகையிலும், அதன் ராணுவ ஆட்சியை மற்றொரு கையிலும்,

உலகமத (போப்) குருவேலை யை உபவேலை யாகவும், பார்க்கத் தகுதியும் ஆற்றலும் உடையவர் என்றே சொல்லுவோம். ஆகவே பெண்களுக்கு எவ்வளவு ஞானம் எவ்வளவு தைரியம் எவ்வளவு சக்தி இருக்கின்றது என்று கணிப்பதற்கு அம்மையார் ஒரு ஒப்பற்ற சாதனமாவார். அப்படிப்பட்ட அம்மையார் தனது 86ஆவது வயதில் முடிவெய்தியதுபற்றி யாரும் வருந்த வேண்டியதே இல்லை.

ஏனெனில் இனி தன்னால் யாதொரு காரியமும் செய்யமுடியாமல் போய்விட்டதென்றால் உடனே முடி வெய்துவிட வேண்டியதுதான் நல்லறிவின் குறிப்பாகும்.

ஆகவே அம்மையாரைத் தாயைப்போலவும் குருவைப் போலவும் தெய்வத்தைப் போலவும் கருதி அம்மையாரைப் போற்றிவந்த அவரது சிஷ்யர்கள் பெரிதும் மனித ஜீவ இயற்கையை உணர்ந்த ஞான வான்கள் ஆதலால் அப்படிப் பட்டவர்களுக்கு பிறரது அனுதாபமோ ஆறுதலோ அவசியம் இல்லையென்றே கருதுகிறோம்.

குடிஅரசு - துணை தலையங்கம் - 24.09.1933

Read more: http://viduthalai.in/page-4/98290.html#ixzz3V1WpNjrX

தமிழ் ஓவியா said...

தமிழின் தனித் தன்மை

உலகின் பழைய மொழிகள் ஏழு. அவற்றில் இப்போது வரை வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். ஒன்று தமிழ். இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன.

இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன.

இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது. திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந் தியது. ஆனால், அதில் உள்ள சொற் களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம்.

உதாரணம்: எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன. கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத் தில் பத்து கோடி, நூறு கோடி என்று தான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).

தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் கூறியுள்ளார்.

வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்)

ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த வல்லினம், மி மெல்லினம், ழ் இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
உலகில், பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது. இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

தமிழ், உலகில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசு அலுவல் மொழியாக உள்ளது. மேலும், இலங்கையில் நாடாளுமன்ற மொழியாகவும் உள்ளது.

Read more: http://viduthalai.in/page3/98223.html#ixzz3V1YNM7pD

தமிழ் ஓவியா said...

கச்சனம் - கருஞ்சட்டை வீரர் ப. ஆத்மநாதன்

திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கும் கச்சனம் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். எனக்கு இப்ப எண்பத்தி ரெண்டு வயது ஆகிறது. எட்டாவது வரைக்கும் படிச்சேன். அதுக்கு மேல் படிக்க முடியவில்லை. காரணம் ஏழ்மையான விவசாய குடும்பம்.

எனக்கு எலெக்டிரிக்கல் வேலையில் கொஞ்சம் ஆர்வம் அதிகம். லைன் மேனுக்கு உதவியா போவேன். கோயில் திருவிழாவுக்கு லைட் கட் டுவேன். அப்ப கோயிலில் நடக்கும் சில தவறான செயல்களை காண முடிந்தது.

அந்த காலத்திலே எங்க அப்பா திராவிட நாடு பத்திரிகை வாங்குவார். நான் படிச்சு பல விவசயங்களை தெரிந்து கொண்டேன்.

வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை இவைகளைப்பற்றி நண்பர்களிடம் பேசுவேன். அதனால நான் ஒரு கடவுள் மறுப்பாளன் என அப்பகுதியிலேயே அறிமுகமானேன்.

அந்த சமயத்தில் தான் தோலி. ஆர்.எஸ். (ஆர். சுப்பிரமணி) சாந்தன் ஆகியோர் என்னை வந்து சந்திச்சு எங்க பகுதிக்கு என்னை பொறுப்பாள ராக நியமிச்சாங்க மிலிடரி வைத்திய நாதன் எனக்கு அப்போது உதவியாக இருந்தார்.

முதன் முதலாக வடபாதி மங்கலம் திருஞானசம்பந்தத்தை அழைத்து எங்க ஊரில் கூட்டம் போட்டோம். ஒரு முறை எங்க ஊரில் வைத்து இருந்த வெங்கடாசலபதி படத் துக்கு செருப்பு மாலை போட்டு விட்டேன்.

எனக்கு 33ஆவது வயதில் திருமணம் அதில் என்னானா அந்த பொண்ணு வேறு ஒரு வருக்கு நிச்சயம் செய்யப் பட்டது. ஏதோ காரணத் தால் அந்த பையன் இறந்து விட்டான். உடனே அந்த பொண்ணு ராசி இல்லாத பொண்ணு. அதான் நிச்சயம் செய்யப்பட்ட பையன் செத்துப் போயிட்டான் என செய்தியை பரப்பி விட்டார்கள். அதை அறிந்து நான் போய் அந்த பெண்ணை மணந்தேன். இன்னிக்கு வரைக்கும் நான் சாக வில்லை.

திருத்துறைப்பூண்டியில் நடந்த தீக் குண்டம் இறங்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீயில் இறங்கினேன். தஞ்சை பெரியார் சிலை திறப்பு விழா உட்பட பல வெளியூர் நிகழ்ச்சிக்கு போய் உள்ளேன். தனித் தமிழ்நாடு போராட் டம் சட்ட எரிப்பு போராட்டம் என பல போராட்டங்களில் கலந்து கொண்டேன். நான் சிறுவன் எனக் கூறி கைது செய்யவில்லை. சிறைக்கு போகாதது வருத்தம்தான். இனி வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன்.

கச்சனத்தில் ஆர்.எஸ்., சாந்தன் கோவிந்தசாமி, வைத்தியநாதன் மற்றவர்களோடு சேர்ந்து ஜாதி ஒழிப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஆப்பரக்குடி மீனாட்சி தியேட்டரில் நடத்தினோம். அந்த மாநாட்டில் அய்யா, ஆசிரியர், பாலதண்டாயுதம், எஸ்.எஸ். பாஷா, யாதுப், கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் தலைமையில் அம்பகரத் தூரில் கோயிலில் எருமை மாடு வெட் டுவதைத் தடுத்து நிறுத்த போராட்டம் நடந்தது. அதிலும் கலந்து கொண்டேன். நம்ம போராட்டத்துக்கு பின் அங்கே கிடா வெட்டுவது தடை செய்யப் பட்டது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அய்யாவுடன் சேர்ந்து சில நாட்கள் வேனில் பிரச்சாரத்திற்கு சென்றது வாழ்வில் மறக்க முடியாத வாய்ப்பு
எனது மூத்த மகளுக்கு அய்யா அறிவுக்கண்ணு என்று பெயர் வைத் தார். மயிலாடுதுறையில் அய்யா தலை மையில் நடைபெற்ற கவிஞர் திருமணத் துக்கு போய் வந்தேன். அய்யா காலம் முதல் இன்று வரை முடிந்த வரை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறேன்.

கடைசியா நான் கூற விரும்புவது ஆசிரியரைப் பற்றி அய்யா அவர்கள் ஆசிரியர்மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஆசிரியர் நம் இயக்கத் தின் ஈடில்லா சொத்து. ஓய்வு இல்லாமல் கொள்கைக்காக உழைக்கிறார். தனி மனித ஒழுக்கத்துக்கு இலக்கணம் ஆசிரியர்தான்.

69 சதவீத இடஒதுக்கீடு மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்த வைத் தது பொன் ஏட்டில் பொறிக்கப்பட வேண்டியது.

வாழ்க பெரியார் தொடர்க ஆசிரியர் பணி

சந்திப்பு: தி. குணசேகரன், திருத்துறைப்பூண்டி

Read more: http://viduthalai.in/page3/98222.html#ixzz3V1YXLF78

தமிழ் ஓவியா said...

கம்பராமாயணத்திற்கு ஒரு சவுக்கடி!

கம்பரின் பயனற்ற கற்பனை களுக்கும் பொருளற்ற பாடல் களுக்கும் அடிகள் கடல் தாவு படலத்தை அடுத்தடுத்து எடுத்துக் காட்டுவார். அவர்கள் கூற்றை யான் ஏற்றுக் கொண்டு ஆயினும், சாமி! கம்பரின் நல்ல பாட்டுக்களைப் பாருங்கள் என்று மீண்டும் யான் சுவைக்கும் பாடல்களை எடுத் தெடுத்து மொழிவேன். கடைசியில் வழக்கின் முடிவென்ன?

திருநாவு! அதெல்லாம் சரிதான். கம்பரால் பண்டைத் தண்டதமிழ் மரபு, தனித்தமிழ், தமிழர் இன, நாகரிகச் சிறப்பெல்லாம் மறக்கடிக் கப்பட்டன. சைவ வைணவத்திரு முறைகள் சிறப்புக்களெல்லாம் குறைந்தன. தமிழ்ப் பெருங்காவியங் கட்கும், தமிழிற்குமுள்ள சிறப்புகள் குன்றின. தமிழ்ப்பற்றும் குறைந்தது. ஆரிய நாகரிகமும், வடமொழியும் அதன் காவியங்களும் எங்கும் போற்றப்பட்டன.

பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதி காரம், சிந்தாமணி, மணிமேகலை முதலிய தமிழ்நாட்டாருக்கே உரிய தமிழ்க்காவியங்களைப் பிராம ணர்கள் பயிலாதும் பாராட்டாதும் இகழ்ந்து ஒதுக்குகின்றனர், பிரா மணர்களில் மிகப்பெரும்பாலோர் தேவார திருவாசகத் திருமுறைகளை ஓதுதலும், பாராட்டுதலும் இல்லை. தமிழ்நாட்டுக் கதைகள், வரலாறு களைப் போற்றுவதுமில்லை. இவற்றிற்கெல்லாம் காரணம் கம்பராமாயணமே!

இவ்வாறு பிராமணர்களால் கம்பராமாயணமும், அதன் சார்பான ஆரிய வடநாட்டுக் கதைகளான பாரதம், பாகவதம், கீதை, பஜனை, சாதி, சடங்கு, மூடப்பழக்க வழக் கங்கள், கடவுள் நிலைக்கு மாறான கருத்துக்களும் எங்கும் பரவிவிட்டன.

பிராமணர்களின் இப்பரப்புதல் களால் பார்ப்பனரல்லாதவர்களும் அவர் முறைகளை மேற்கொண்டு நம் தமிழ், தனித்தமிழ் - தமிழின நாகரிகத்திற்கே மாறு பட்டவர் களாய்ப் பொய்க் கதைகளை நம்பி, பயனில்லாச் சடங்குகளைச் செய்து தாமும் ஏமாறி அறிவிலிகளாய் வறிதே வாணாளை வீணாளாக்கு கின்றனர்.

தம்மை சார்ந்த ஏனையோரையும், அவ்வாறாக்கி விடுகின்றனர். ஆதலால் இவற்றிற்கெல்லாம் முதற் காரணமான கம்பராமாயணப் பயிற்சியையும், பரப்புதலையும் புலவர்கள் கைவிட்டாக வேண்டும்.

(மறைமலை அடிகளாரின் மகன் வித்துவான் மறை திருநாவுக்கரசு தீட்டிய - மறைமலை அடிகளின் வரலாறு என்ற நூலில் பக்கம் 648)

குறிப்பு: இதில் நாவு என்று குறிக்கப்பெறுவது மறைமலை அடிகளாரின் மகன் மறை திருநாவுக்கரசு ஆவார்.

Read more: http://viduthalai.in/page4/98224.html#ixzz3V1Z9wCJZ

தமிழ் ஓவியா said...

பித்தக்கோளாறைப் போக்கும்அன்னாசி

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங் களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப் பட்டுள்ளது.

அன்னாசி பெரும்பாலும் வெப்ப மான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.

அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ஃப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதி கரிக்கும்.

இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு, பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர் களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப் பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் நீங்கும். அன்னாசிப் பழத்தை, தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, அனைத்து விதமான உடல் உபாதை களும் தீரும். இதைத் தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர, ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க விடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

Read more: http://viduthalai.in/page4/98225.html#ixzz3V1ZGx0bE

தமிழ் ஓவியா said...

தாலி வந்தது ஏன்?

சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ் அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது.

புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவது தான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது.

அதற்குப்பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்கு வதற்காகத்தான் தாலி கட்டும் திருமணம் என்னும் சடங்கு நடத்தப்படுகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப் பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி (பக்.101)

(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206)

Read more: http://viduthalai.in/page4/98229.html#ixzz3V1ZqbbAz

தமிழ் ஓவியா said...

நெய்வேலி அருகே பழைமையான கல் ஆயுதம் கண்டெடுப்பு

மருங்கூர் கிராமத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழைமையான கல் ஆயு தத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் கிராமம் பல அரிய தகவல்கள் பொதிந்துள்ள இடமாக கருதப்படுகிறது. இங்கு அரசு மருத்துவமனைக்கு வடக்குப் பகுதியில், கிழக்கு மேற்காக சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் கிடைத்து வருகின்றன.

அதாவது, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இரும்புக் காலத்திய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.

கல் ஆயுதம்: இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த ஊரைச் சார்ந்த ராஜசேகர் என்பவர், தனது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதற் காக தோண்டியபோது, சுமார் மூன்ற ரையடி ஆழத்தில் கல் ஆயுதம் கிடைத் துள்ளதாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில், இந்தத் துறையைச் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட ஆய்வு மாணவர்கள் கல் ஆயுதத்தை ஆய்வு செய்தனர். 1,050 கிராம் எடை கொண்ட கூழாங்கல்லின் நடுப்பகுதியில் 6 செ.மீ. அளவில் வட்ட வடிவ துளை இடப்பட்டுள்ளது. மேலும், 12 செ.மீ. சுற்றளவும், 6 செ.மீ. கணமும் கொண்ட தாக இந்த ஆயுதம் வடிவமைக்கப்பட் டுள்ளது.

இந்த ஆயுதத்தின் நடுவில் உள்ள துளையில் 6 செ.மீ. கன அளவு கொண்ட ஒரு வலிமையான மரக் குச்சியினை சொருகி, கதை போன்ற தற்காப்பு ஆயுதமாக பண்டைய கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம்.

மேலும், நெல், பயறு வகை தானி யங்களை பிரித்தெடுக்கவும், விலங்கு களை வேட்டையாட சுத்தியல் போன்ற கருவியாகவும் இந்த ஆயுதத்தை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த ஊரைச் சார்ந்த ராமலிங்கம் என்பவர், தனது நிலத்தை சீர் செய்தபோது, 4 அடி ஆழத்தில் உடைந்த முதுமக்கள் தாழிகள், அதன் மூடுகற்கள் கிடைத்தன. அந்தப் பகுதியில் இருந்து தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகளும் கிடைத்தன.

பண்டைகால மக்களின் வாழ்விடப் பகுதி: இந்தக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் 10 அடி உயரமும், ஒரு ஏக்கர் பரப்பளவும் கொண்ட பண் பாட்டு மேடு உள்ளது.

இந்தப் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு சாலை சீரமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால செங்கற்கள், சிவப்பு நிற மட்கல ஓடுகள், நான்கு கால்களுடன் கூடிய அம்மிக்கல், பெண்கள் விளை யாடுவதற்குப் பயன்படுத்திய சில்லு கருவிகள் கிடைத்தன.

மேலும், சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு மருங்கூர் பகுதியில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கல் லாயுதங்கள், கற்செதில்கள், பிறைவடிவ கல்லாயுதங்களும் இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது கல் ஆயுதம் கிடைத்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரும்புக் கால பண்பாட்டை சார்ந்த மக்களின் முதுமக்கள் தாழிகள் காணப்படுவதால், இந்த ஆயுதமும் அதே காலக்கட்டத்தை சார்ந்ததாக இருக்கலாம் என சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page4/98230.html#ixzz3V1a999Es

தமிழ் ஓவியா said...

மோடி அரசுக்கு சொந்தக் கட்சி ஆளும் மாநிலமே எதிர்ப்பு!
கோவாவில் மாட்டிறைச்சிக்குத் தடையில்லை!

கோவா முதல் அமைச்சர் அறிவிப்பு

பானாஜி மார்ச் 22_ பாஜக ஆளும் மாநில மான கோவாவில் மாட் டிறைச்சிக்குத் தடை விதிக்க இயலாது என அம்மாநில முதல்வர் லட் சுமிகாந்த் பரோஷ்கர் எதிர்ப்பு தெரிவித்துள் ளார். பரோஷ்கரின் இந்த அறிவிப்பால் மத்தியில் உள்ள பாஜகவிற்கு நெருக் கடி ஏற்பட்டுள்ளது. மத்தியில் பாஜக தலைமையில் ஆன அரசு அமைந்த உடனேயே நாடுமுழுவதும் இறைச்சிக்காக மாடு களைவெட்டுவதை தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப் புகள் கோரிக்கை வைத் தன. இதைத் தொடர்ந்து குஜராத்தில் உள்ள பல் டானா என்ற மாவட் டத்தை மாட்டிறைச்சி இல்லாத மாவட்டமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ராஜஸ் தானில் உள்ள சில மாநக ராட்சிகள், மத்தியப் பிரதேசத்தில் சில மாவட் டங்கள் என மெல்ல மாட்டிறைச்சி தடை விதித்துக் கொண்டே சென்றது, கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதவி ஏற்ற தேவேந்திரபிட்னவிஸ் தடாலடியாக மாநிலம் முழுவதும் மாட்டிறைச் சிக்கு தடைவிதித்தார்.

இதனால் அந்த மாநிலத் தைச் சேர்ந்த 15-லட்சத் திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை ஒரே நாளில் இழந்தனர். இந்த தடையை நாடுமுழுவதும் கொண்டுவரும் முயற் சியில் பல்வேறு பொதுக் கூட்டங்கள் கருத்து கேட்புக்கூட்டங்களை மத்திய அரசு நிகழ்த்தி வருகிறது, தமிழகத்தில் கூட கோவையில் விளம் பரமில்லாமல் சில இந்து அமைப்புகள் மாட்டி றைச்சி தடை செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற கருத்துகணிப்பை நடத்தியுள்ளன.

மத்திய அரசின் சட்ட திட்டங்கள்பற்றிக் கவலையில்லை

இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான கோவாவில் மாட்டிறைச்சியை தடை செய்யமாட்டோம் என்று கோவா மாநில முதல்வர் அறிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: எங்களுக்கு மத்திய அரசின் சட்ட திட்டங்கள் குறித்து கவலையில்லை எங்களின் மாநிலத்தில் பெரும் பான்மை என்ணிக்கையில் மாட்டிறைச்சி உண்பவர் கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை யில் ஒரு பகுதியாக மாட் டிறைச்சி உள்ளது. ஆகை யால் இந்த மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பதை தடைசெய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. மேலும் அவர் கூறிய தாவது, பசு அல்லது காளைகளை சில இந் துக்கள் புனிதமாக கருது கிறார்கள். அதற்காக பெரும்பான்மையான எண்ணிக்கையில் மாட் டிறைச்சி உண்ணும் மக் களின் உணவுப்பழக்கத் தில் கைவைக்கமுடியாது. ஊடகங்கள் பாஜக சிறுபான்மையின விரோத கட்சியாக காட்டிவரு கிறது, ஆனால் நாங்கள் ஊடகங்களின் இந்த போக்கிற்கு பலியாகமாட் டோம். கோவாவில் எக்காரணத்தைக் கொண் டும் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கமாட்டோம், என்று கோவா முதல்வர் கூறியுள்ளார்.

மாட்டிறைச்சி மேளா ஆண்டுதோறும் கோவா விழா ஏப்ரல் மாதம் நடைபெறும் இந்த விழாவில் மாட்டிறைச்சி மற்றும் கடல் உணவு வகைகள் முக்கிய இடம் பெறும், இந்த விழாவின் போது உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். அருகில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்துள்ளதால் கோவாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் அப்படி இங்கும் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்டால் கோவாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளையே அது எதிரொலிக்கும் இதன் மூலம் கோவாவின் முக்கிய பொருளாதார முதுகெலும்பான சுற்றுலா தடைபட்டுப்போகும் ஆகையால் வருமானம் கைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே கோவா முதல்வர் இந்த அறி விப்பை வெளியிட்டுள் ளார்.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தீவிர உறுப்பினரான கோவாமுதல்வரின் இந்த அறிக்கைக்கு இதுவரை ஆர்.எஸ்.எஸ் தலைமை யில் இருந்து எந்த எதிர்ப் பும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Read more: http://viduthalai.in/e-paper/98310.html#ixzz3V79ovfXH

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பிரகதீஸ்வரர்

பிரகதீஸ்வரம் என்றால் உலகெங்கும் வியாத் திருப்பது என்று பொரு ளாம்; அப்படியென்றால் தஞ்சை பிரகதீஸ்வரர் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ருசியா உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் வியா பித்துள்ளாரா? ஏற்றுக் கொள்ளத்தக்கக் கடவுளா? ஒபாமாவும் அன்றாடம் பிரகதீஸ்வரரைத்தான் வணங்குகிறாரா?

Read more: http://viduthalai.in/e-paper/98311.html#ixzz3V7A9SWXJ

தமிழ் ஓவியா said...

இதுதான் பிரதமர் மோடியின் சாதனை

300 நாட்களில் 600 மதக் கலவரங்கள் 49 பேர் மரணம்!

மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் அதிர்ச்சி அறிக்கை

புதுடில்லி, மார்ச் 22- மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 300 நாட் களில் 600 மதக்கலவ ரங்கள் நடந்துள்ளன; அதில் 49 பேர் மரண மடைந்துள்ளனர் என்று தொழிற்சங்கங்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித் துள்ளன.

மோடி ஆட்சியின் கீழ் அதிகரித்து வரும் சிறு பான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளை எதிர்த்து புதுடில்லியில் நாடாளு மன்ற வீதியில் நாடு முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் சிஅய்டியு, ஏஅய்டியுசி உள்ளிட்ட தொழிற்சங் கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

அப்போது மோடி ஆட்சியின் 300 நாட் களில் 600 மதக்கலவ ரங்கள் என்ற பெயரில் 100 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: மோடி ஆட்சிக்கு வந்து 300 நாட்களில், இன்றைக்கு மார்ச் வரை 600 மதக் கலவரங்கள் நடத்தப்பட் டுள்ளன. இவை திட்ட மிடப்பட்டு சிறுபான்மை யினர் அதிகமாக இருக் கும் பகுதிகளில் நடத்தப் பட்டவையாகும். இந்த கலவரங்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 149 தாக்குதல்கள் கிறிஸ் துவர்கள் மீது நடத்தப் பட்டுள்ளன.

மீதி முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்டவை யாகும். ஆனால், கிறிஸ் தவ அமைப்புகள் 168 வன் முறைகள் நிகழ்ந்துள்ள தாக ஆவணப்படுத்தியுள் ளன. இதில் சத்தீஸ்கரில் தான் அதிகபட்சமாக 28 சம்பவங்கள் நடந்துள் ளன. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 26ம் உத்தரப்பிரதேசத்தில் 18ம் தெலுங்கானாவில் 15ம் நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் 73 வயது இறைப்பணி செவிலியர் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடூரம் ஒரு திட்டமிட்ட சிறுபான் மையினர் மீதான வன் முறையின் ஒரு பகுதி யாகும்.

இது எங்குமே நடை பெறாத கொடூரம் ஆகும். நேரடியான கலவரங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நீங்கலாக, ஜனநாயக அமைப்புகள் மீது எண்ணற்ற தாக்கு தல்கள் தொடுக்கப்பட் டன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/98312.html#ixzz3V7AfSzhz

தமிழ் ஓவியா said...

காவிக் கூட்டத்தின் வன்முறை கைவரிசை

மகாராஷ்டிராவில் 300 ஆண்டு பழைமையான தேவாலயம் தாக்கப்பட்டது


பன்வேல்(மகாராஷ்டிரா) மார்ச் 23 நவி மும்பையில் 17-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று தாக்குதலுக்கு ஆளானது. டில்லி, ஹரி யானா, மத்தியபிரதே சத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் காவிகளின் கைவண்ணம் தொடர்கிறது. வெள்ளிக்கிழமை இரவு மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தேவாலயம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை அன்று இரவு நவிமும்பை யில் உள்ள தேவாலயம் ஒன்றும் தாக்குதலுக்கு ஆளானது.

நவிமும்பையில் உள்ள செயின்ட்ஜார்ஜ் கத்தோலிக்க தேவாலயம் 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்டது. நவிமும் பையில் முதல்முதலாக பள்ளிக்கூடம் ஒன்றும் இந்த தேவாலயத்தின் நிர்வாகத்தினரால் கட்டப் பட்டதாகும். ஆங்கிலேயர் காலத்தில் கல்லூரியாக மாற்றப்பட்ட இந்த தேவாலயத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவ னங்கள் இயங்கி வருகின் றன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆராதனைக்காக காலை யில் தேவாலயத்திற்கு வந்தவர்கள் தேவாலயத் தின் வெளிப்புறமுள்ள சிலைகள் உடைந்து கிடப் பதையும் பல இடங்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதற்கான அடை யாளங்களைக் கண்டனர். உடனடியாக இவ்விவ காரம் குறித்து பன்வேல் காண்டேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் செய் யப்பட்டது. இந்த தாக் குதல் குறித்து மாநில கிறிஸ்தவ சிறுபான்மை யினர் அமைப்பின் தலை வர் ஆபிரகாம் மாத்யூ கூறும்போது இந்தப் பகுதியில் உள்ள சில இந்து அமைப்பைச் சேர்ந் தவர்கள் கடந்த சில நாட் களாகவே தேவாலயத் திற்கு வரும் கிறிஸ்தவர் களை அவதூறாக பேசு வதும், மிரட்டுவதுமாக தொடர்ந்தது, இது குறித்து அரசுக்கு எழுத்து மூலமாகவும் புகார் அளித் துள்ளோம். அதே நேரத் தில் காவல்துறையிலும் பல கிறிஸ்தவர்கள் புகார் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மோட்டர் சைக்கிளில் வந்த சிலர் கற்களை தேவாலயத்தின் மீது வீசியுள்ளனர். இதில் தேவாலயத்தின் வாயிலில் வைத்துள்ள செயின்ட் ஜார்ஜ் உருவச்சிலை சேதமடைந்துள்ளது,

புனிதநூல் வைக்கப்படும் பீடத்தில் உள்ள கண்ணா டிகளை உடைத்துள் ளனர். மேலும் கதவின் மேல் உள்ள பரிசுத்த மாதா சிலையின் கண் ணாடிகளையும் உடைத்து விட்டுச் சென்றுள்ளனர். இது திட்டமிட்ட தாக் குதலே ஆகும். திடீரென இந்த தாக்குதல் நடக்க வில்லை. இந்தப்பகுதியில் உள்ள 4 தலைமுறை மக் களுக்கு மதம் இனம் பாராமல் கல்விபோதித்த எங்கள் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்த எப்படித்தான் இவர் களுக்கு மனம் வந்ததோ என்று கூறினார். இச்சமபவம் குறித்து பன்வேல் நகர காவல் துறை இணை ஆணையர் சூரியவன்சி கூறும்போது இந்த விவகாரம் தொடர் பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விரை வில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98371.html#ixzz3VD1oJoPZ

தமிழ் ஓவியா said...


பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு எனக் கூறியவர் பெரியார்

உயர்நீதிமன்ற நீதிபதி உரை

தஞ்சாவூர், மார்ச்.23 தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உலக மகளிர் நாள் கருத்தரங்கு நடந் தது. கருத்தரங்கிற்கு தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் அங்கயற் கண்ணி தலைமை தாங் கினார். பல்கலைக் கழக இசைத்துறை உதவி பேரா சிரியை மாதவி வரவேற்றார்.

கருத்தரங்கில் பெண் ணிய மஞ்சரி என்ற நூலை வெளியிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி து.அரி பரந்தாமன் பேசும்போது கூறியதாவது:

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக மகளிர் நாள் பெண் விடுதலைக்காக அனுசரிக் கப்படுகிறது.

பண்டைய காலத்தில் பெண்கள் சரி சமமாக நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். விவசாயத் தொழில் வளர்ச்சியடைந்து சொத்துக்கு வாரிசு என்ற நிலை உருவானபோது, பெண்கள் பொருளாகவும், பின்னாளில் வெறும் இயந்திரமாகவும் கருதப் பட்டு அடிமைப்படுத்தப் பட்டனர்.

இந்த அடிமைத்தனம் நம்முடைய நில உடைமை சமூகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த அடி மைத் தனத்துக்கு எதி ராகக் குரல் கொடுக்கப் படுகிறது. இந்த அடிமை முறையைப் பெண்களும் அக்காலத்தில் ஏற்றனர். இதனால், பெண்கள் பொருளாகப் பார்க்கப்பட் டதுடன், பாலியல் இயந் திரமாகவும், கருவியாகவும் பயன்படுத்தப்பட்டனர். மன்னர்கள் காலத்தில் உடன் கட்டை ஏறுதல், இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்தனர்.

உறுதியாகக் குரல் கொடுத்தவர் பெரியார்

கடந்த நூற்றாண்டில் தொழில், விஞ்ஞான, சமூக வளர்ச்சி அடைந்த நிலை யில் பெண் விடுதலைக்கும் குரல் எழுப்பப்பட்டது. பெண் விடுதலைக்காகப் பல பேர் குரல் கொடுத் தாலும், உறுதியாகக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். மற்ற அடிமைத் தனங்களை விட பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு செயல் எனக் கூறினார் பெரியார்.

இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளை எதிர்த்து 1940 ஆம் ஆண்டு முதல் மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது. என்றாலும், பெண்களுக்கு இன்னும் சம அளவு உரிமை கிடைக்கவில்லை. எல்லா துறைகளிலும் பெண்கள் கால் பதித்துள்ளனர் என்றாலும், ஆட்சி முறையில் சம அளவு பங்கு பெறவில்லை. உதா ரணமாக உச்சநீதிமன் றத்தில் உள்ள 31 நீதிபதி களில் ஒரு பெண் மட் டுமே உள்ளார். உயர் நீதி மன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 3 பேர் மட் டுமே பெண்கள்.

இந்த நிலைமை மாற இதுபோன்ற கருத்தரங்கங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், மாற்று சிந்தனை உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98373.html#ixzz3VD1x7Tyy

தமிழ் ஓவியா said...

மணத்தக்காளி கீரையின் உடல்நலப் பயன்கள்

மணத்தக்காளிக்கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும் குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்துவரலாம். வாரம் இருமுறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளு றுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கலாம்.

இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தை கொடுக்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.

வயிற்று நோய், வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணத்தக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும். கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும். மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.

கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத் தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மணத் தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும்.

பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.

மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும்.

உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது. நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. எல்லா வகையான காய்ச்சல் களையும் இக்கீரை தணிக்கும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

தமிழ் ஓவியா said...

இருமலை குணமாக்கும் மாதுளம் பூக்கள்

மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.

தொண்டை ரணம்: மாதுளம் பூக்களை மசிய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண் டைக்குள் மெதுவாக விழுங்கவேண்டும். இதனால் தொண்டை கரகரப்பு, தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.

தாதுபலம்: தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்த மடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.

ரத்த மூலம்: மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக் கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-4/98386.html#ixzz3VD4Nr0ua

தமிழ் ஓவியா said...

கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பதநீர் பதநீர்

நமது தேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம். நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது.

இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள். கோடை காலத்தில் தாகம் தணிக்க அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. இதை பருகினால் உடலுக்குநல்ல குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோடையில் ஏற்படும் நீர் கடுப்பை நீக்க பதநீர் அருந்தலாம்.

தொழு நோயை நீக்கும் பதநீர்

நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை, மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிறியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடிசையில் 96 நாள்கள் தங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ குறிப்பு உண்டு .

மாதவிடாய் தடை

மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த நோய்களால் பெண்கள் அவதிபடுவார்கள். இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .

இரத்த கடுப்பு

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மி.லி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .

இதில் நார்ச் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் பேறு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.

Read more: http://viduthalai.in/page-4/98388.html#ixzz3VD4Zvu6M

தமிழ் ஓவியா said...திருப்பதி கோவிலில் பக்தர்களிடம் பண மோசடி

நகரி, மார்ச் 23_ திருப் பதி ஏழுமலையான் கோவி லில் யுகாதி நாளை முன் னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டனவாம்.

நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 43,227 பக்தர்கள் ஏழு மலையானை தரிசனம் செய்தனராம். அதன்பிற கும் தர்ம தரிசனத்துக்கு 21 கம்பார்ட் மெண்டு களில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனராம். இவர் களுக்கு தரிசனத்துக்கு 11 மணி நேரம் ஆனதாம். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் தரிசனத் துக்கு 6 மணி நேரம் காத்து இருந்தனராம்.

கூட்டத்தைப் பயன் படுத்தி பக்தர்களிடம் பணம் மோசடி செய்த இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் பிரம்மபுத்ராவைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ்வர ராவ் தனது 2 நண்பர் களுடன் கோவிலுக்கு வந்தார்.

அப்போது அவர்களி டம் ஒருவர் அறிமுகமாகி தான் தேவஸ்தான ஊழி யர் என்றும், நபருக்கு ரூ.500 கொடுத்தால் ஏழு மலையானை உடனடி யாக தரிசிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதை நம்பிய கல்லூரி மாணவர்கள் 3 பேரும் ஆளுக்கு ரூ.500 வீதம் ரூ.1500 கொடுத்தனர்.

உடனே அவர் வைகுண் டம் வரிசையில் அனுப்பி உள்ளே ரமணா என்ப வர் இருப்பார் அவர் உங் களை மூலவர் அருகே அழைத்துச் செல்வார் எனக் கூறி நழுவினார்.

ஆனால் அனுமதிச் சீட்டு இல்லாததால் அவர் களை தரிசனத்துக்கு ஊழி யர்கள் அனுமதிக்க வில்லை. ரமணாவை தேடியபோது அப்படி ஒருவர் அங்கு இல்லை என்பதும் தாங்கள் ஏமாற் றப்பட்டோம் என்பதை யும் அவர்கள் உணர்ந் தனர். பின்னர் தர்மதரி சன வரிசையில் நின்று ஏழுமலையானை தரி சித்து திரும்பினார்.

வெளியே வந்தபோது பாஸ்போர்ட் சென்டரில் தங்களை ஏமாற்றிய இடைத்தரகர் நிற்பதை கண்டனர். உடனடியாக 3 பேரும் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப் படைத்தனர்.

விசாரணையில் அவ ரது பெயர் பனிக்குமார் (32) என்பதும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பனிக் குமாரை காவல்துறையி னர் கைது செய்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/98394.html#ixzz3VD58PX5S

தமிழ் ஓவியா said...

பலே பலே - பிழைக்கத் தெரிந்த பார்ப்பனர்கள்!
பார்ப்பனப் புரோகிதனை இணையத்தின் மூலம் வீட்டிற்கு வரவழைக்கும் புதுவித பித்தலாட்டம்

திருமணம், கிரகப்பிரவேஷம் மற்றும் திதி போன்ற பல்வேறு காரியங் களுக்கு இனிமேல் இணையத்தின் மூலமே பார்ப்பனப் புரோகிதனைப் பதிவு செய்து விட்டிற்கு வரவழைக்க லாம். அறிவியல் உபகரணங்களை எந்த அளவிற்கு ஏளனம் செய்யவேண்டு மென்பதற்கு இந்திய பார்ப்பனர்களைப் போல் வேறு யாரும் கிடையாது.

அயல்நாடுகளில் வாழும் பார்ப்பனர்கள் தங்களின் திருமணத்திற்கு இந்தியாவில் இருந்து பார்ப்பனப் புரோகிதர்களை வரவழைத்து மந்திரம் ஓதுவதற்கு செலவு அதிகமாவதால் காணொளி இணையதளம் மூலம் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மூலையில் கணினி முன்பு அமர்ந்து புரியாத மொழியில் மந்திரம் ஓத அங்கே பார்ப்பனர்கள் மட்டுமல்லாது படித்து அயல்நாடு சென்று வேலைபார்க்கும் பார்ப்பன அடிமைகளும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கியது.

இதற்கு ஆங்காங்கே வரவேற்பு கிடைத்தாலும் பார்ப்பனர்களின் பேராசை யாரைவிட்டது? கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த பார்ப்பன புரோகிதர் மாநாட்டில் ஆன்லைனில் மந்திரம் ஓதுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சாஸ்திரப்படி பார்ப்பனப் புரோகிதர்கள் நேரடியாக இருந்து மந்திரம் ஓதினால் தான் எந்த ஒரு காரியமும் முழுமைபெறும் என்று யாரோ ஒரு பேராசைப் பார்ப்பான் கிளப்பிவிட்டான்.

இந்த அய்டியாவில் உதித்தது தான் பார்ப்பனப் புரோகிதர் டாட் காம்.

எதிலும் காசுபார்க்கும் பிரபல பலசரக்கு இணையதளம் ஒன்று இந்த பார்ப்பனபுரோகிதர் இணையதளத்தை வாங்கிவிட்டது.

இப்போது பூசைக்குரிய சாமான்கள் வாங்கும் போதே பார்ப்பனப் புரோகிதரையும் பதிவு செய்யலாம். ஒவ்வோரு பார்ப்பனப் புரோகிதர் புகைப்படத்துடன் அவரது கல்வி மற்றும் அவர் செய்து வைத்த பல்வேறு திருமணங்கள் கிரகப்பிரவேஷ நிகழ்ச்சிகள் இணைத்திருக்கும் இதைப் பார்ப்பவர்கள் தங்களுக்குத் தேவை யான பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமாம்.

சமீபத்தில் ஆன்லைனில் பூசைப் பொருள் விற்கும் இணையதளம் ஒன்றின் மீது பழனிக் கோவில், திருப்பதி மற்றும் மதுரை மீனாட்சி கோவில் நிர்வாகம் பிரசாதம் மற்றும் பூசை சாமான்கள் என்ற பெயரில் போலியான பொருட்களைத் தயாரித்து இந்தியாவில் மட்டுமல்லாது அயல் நாட்டிலுள்ள இந்துபக்தர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்று கூறி வழக்கு தொடர்ந்தது.

தற்போது திடீரென பார்ப்பனப் புரோகிதனை இணையத் தில் தேடி வீட்டிற்கு வரவழைக்கும் புதுவித பித்தலாட்டம் துவங்கியுள்ளது.

Read more: http://viduthalai.in/page7/98233.html#ixzz3VD5osAu2