Search This Blog

2.3.15

பெரியாரும் இந்தியாவின் திராவிடர் இயக்கமும்


பெரியாரும் இந்தியாவின் திராவிடர் இயக்கமும்: மதங்களின் மண்ணில் வலிமை மிக்கதோர் நாத்திகர்

அறிமுகம்: 

டாக்டர் ரியான் சேஃபர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு ஆய்வு மய்யத்தில் பணியாற்றும் சிறந்த ஆய்வாளர். பிஎச்.டி. ஆய்வு முடித்து விட்டுத் தற்போது முது முனைவர் (டி.லிட்) எனும் மிக உயரிய ஆய்வுப் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். வரலாற்றியல் துறை சார்ந்த பல ஆய்வுக் கட்டுரை களை ரியான் எழுதி துறை சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளை  எழுதி யுள்ளார். 2014ஆம் ஆண்டு பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடி விட்டுச் சென்ற ஆய்வாளர் ரியான் அமெரிக்காவிற்குச் சென்றதும் தமிழர் தலைவரைச் சந்தித்து உரை யாடிய இனிய நிகழ்வுகளைக் கட்டுரைகளாக வடித்து ‘Free Inquiry’  எனும் ஆங்கில இதழில் வெளியிட் டுள்ளார். அவற்றின் தமிழாக்கம் தான் நீங்கள் படிக்கப் போவது!


‘Free Inquiry’ இது அமெரிக்கா விலிருந்து வெளிவரும் ஆங்கில இதழாகும். உலகெங்கும் அதிக அளவில் விற்பனையாகி வரும் பகுத் தறிவு இதழ் இது! மதச்சார்பற்ற மனித நேயத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மை கொண்ட சமுதாய அமைப்பிற்காகப் பாடு படுவது, பகுத் தறிவையும் மனித நேய மாண்பு களையும் கருத்துரிமையையும் பேணி வளர்ப்பது எனும் கோட் பாடுகளைக் கொண்டு இவ்விதம் இயங்கி வருகின்றது. இவ்விதழில் ஆய்வாளர் ரியான் சேஃபர் தந்தை பெரியாரைப் பற்றியும் திராவிடர் இயக்கத்தைப் பற்றியும் தமிழர் தலைவரைப் பற்றியும் விரிவாக எழுதிய கட்டுரைகளைத் தமிழில் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தந்தை பெரியார் உலக மயமாகி வருகிறார் என்பதற்கு தந்தை பெரி யாரைப் படிக்கிறார்கள்; பேசு கிறார்கள்; ஆய்வு செய்கிறார்கள்; நேரடியாகப் பெரியார் திடலுக்கே வந்து தலைவரைச் சந்தித்து உரை யாடி மகிழ்ந்து திரும்புகிறார்கள். (ப.கா.) இனி, கட்டுரைக்குள் செல்வோம்.


கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
- பெரியார்


(தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்களுடன் ரியான் தனது கட்டுரையைத் தொடங்குகிறார்.


கடந்த அய்ம்பது ஆண்டுகளுக் கும் மேலாக, இந்தியாவின் சிறப்பு வாய்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஆளும் கட்சிகளுக்கு உயிர்ப்பூட்டித் தூண்டுணர்வு நல்கி வருபவர் உரத்த சிந்தனையாளரான ஒரு நாத்திகர் ஆவார். முதுபெரும் சான்றோர் என்று பொருள்படும் பெயரைத் தாங்கிய பெரியார் ஒரு சமூகப் புரட்சியாளர்; இந்தியாவின் விடுதலைக்காகவும் சமத்துவச் சம நிலைக்காகவும் பகுத்தறிவு நெறியை மக்களிடையே பரப்புவதற்காகவும் தம்முடைய வாழ்நாளெல்லாம் போராடியவர். (பார்ப்பனிய) மேலாதிக்கத்திற்கு எதிராகவும் அதன் சாதிய முரண்பாட்டு நிலைக்கு எதி ராகவும் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்தும் போராடிய பெரியார் ஏறக் குறைய இருபது முறை கைது செய்யப் பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார். பகுத்தறிவு நூல்களை வெளியிட்டார் என்றும் தங்கள் ஆடைகளைத் தாங்களே நெய்து கொள்ளுமாறு மக்களைத் தூண்டினார் என்றும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. 1953இல் நடைபெற்ற புகழ்வாய்ந்த பிள்ளையார் சிலை உடைப்புப் போராட் டத்தில், பிள்ளையார் சிலைகளுக்கு எவ்விதச் சக்தியும் இல்லை என்பதை விளக்கிக் காட்டுவதற்காகப் பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைத்துக் காட்டினார். அதற்காக அவர்மீது சட் டத்தை மீறித் தெய்வ நிந்தனை செய்தார் என்று குற்றம் சுமத்தினார்கள்.

 


1967 முதற்கொண்டு தமிழ்நாட்டை ஆண்டு வரும் தி.மு.க.வும் அ.இ.அ.தி. மு.க.வும் பெரியாரை உயர்வாகப் போற்றி மதித்த போதிலும் இந்துத்துவத் தேசிய வாதிகளாலும் தென்னிந்தியாவின் உயர் சாதிப் (பார்ப்பனர்) பிரிவினராலும் பெரியார் எதிரியாகவே பார்க்கப்படுகிறார்.


வெளித் தோற்றத்திற்கு இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்று கூறப்பட் டாலும், சிறுபான்மையினரான கிறித்து வர்களும் முசுலீம்களும் சீக்கியர்களும் கணிசமான அளவு மக்கள் தொகையில் இருந்த போதிலும் இந்துத்துவம் நாடு முழுவதும் ஊடுருவிப் பரந்து கிடக்கிறது. பருவ காலங்களில் நடைபெறும் பெரிய மத விழாக்கள் தொடங்கி, கடவுள் சிலைகளை மக்களுக்குக் காட்சிப் படுத்தும் விழாக்கள் வரை இந்திய வாழ்க்கையில் இந்துத்துவம் தவிர்க்க இயலாத ஒன்றாக விளங்கி வருகிறது. இருந்த போதிலும் மாநில அரசியலில் நாத்திகம், ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ளவர்களிடத்திலும் கூட, மதவாதிகள் நடத்துகின்ற அரசியல் கட்சிகளிடம் கூட பகைமை பாராட்டுவதில்லை. தென்னிந்தி யாவில் ஒரு மாநிலமான தமிழ்நாடு - ஏழரைக் கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாடு - சிறப்பு வாய்ந்த தன் பழம் பெரும் மரபுகளையும் மொழியையும் போற்றிக் கொண்டாடி வருகிறது. இந்தப் பண்பாட்டுப் பெருமையுடன் தமிழ் மாநில அரசு, தொடர்ந்து தனக்குப் புறம்பான அயலார் ஆதிக்கத்தையும், இந்துத்துவம் தூக்கிப் பிடிக்கும் ஏற்றத் தாழ்வுகளையும் சாதிய அமைப்பையும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. பெரியார் ஒளிவு மறைவின்றித் தெளிவாக எழுதினார்:- நாங்கள் மதங்களையும் மதவாதிகளையும் தவறானவர்கள் என்று அவர்கள் மீது நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்; அவர்கள் மக்களின் அறிவுப் புலத்தையும் சிந்திக்கும் திறனையும், நேர்மைத் திறத்தையும், அன்பையும் இரக்க உணர்வையும் ஒற்று மையையும் சமத்துவத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.


பெரியார் பிறந்தார்: ஈ.வெ.ராமசாமி தமிழ்நாட்டில் ஈரோட்டில் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் வளமிக்க ஒரு வணிகர் குடும்பத்தில் பிறந்தார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர் இளம் பருவத்திலேயே பிற சாதியைச் சேர்ந்த தன் வகுப்புத் தோழர் களைத் தொடுவதற்கும் அவர்கள் வீடு களில் தண்ணீர் வாங்கிக் குடிப்பதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்துத் தன் போராட்டத்தைத் தொடங்கினார். அவருடைய முறையான கல்வி, தொடக் கப் பள்ளியோடு முடிவுக்கு வந்து விட்டது. பின்னாளில் ஊரைவிட்டுப் புறப்பட்டு, வடக்கில் கங்கைக் கரையிலுள்ள காசியைக் காண்பதற்குப் போனார். அவர் உயர்சாதிப் பார்ப்பனர் அல்லாதவர் என்ற காரணத்தினால் பயணத்தின் போது அவர் பசியால் வருந்த நேர்ந்தது. ஏனென்றால் வடக்கிலிருந்த சத்திரங்கள் அனைத்தும் பார்ப்பனர் அல்லாத கீழ்ச்சாதி மக்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இச் செயல் அவர் உள்ளத்தில் அழிக்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. பின்னர் ஈரோட்டிற்குத் திரும்பி வந்த போது அவர்தம் தந்தையார் தம் வணிக நிறுவனங் களை ஈ.வெ.இராமசாமியின் பெய ருக்கு மாற்றி அவற்றை அவரிடம் ஒப்படைத்தார். 1904இல் பிளேக் நோய் மக்களை வாட்டியபோது மக்களோடி ருந்து மீட்பு வேலைகளில் ஈ.வெ.ரா. இரவு பகல் பாராது ஈடுபட்டார்.


விரைவில் இராமசாமி அரசியலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் நகராட்சி அமைப்பிலும் அதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரசிலும் இணைந்து பிரிட்டானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார். 1919இல் காங்கிரஸ் அவரை வரவேற்றது. ஏனெனில் பிற கட்சிகளின் அறைகூவல்களை எதிர் கொள்வதற்கு அப்போது அக்கட்சிக் குப் பார்ப்பனரல்லாத வலிமைமிக்க ஒரு மாபெரும் தலைவர் தேவைப் பட்டார். காங்கிரசில் இணைந்தவுடன் இருமுறை அவர் கைது செய்யப் பட்டார். அடுத்த பத்து ஆண்டுகளில் அவர் பல முறை கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.


நகராட்சியிலும் பிற துறைகளிலும் அவர் வகித்து வந்த பதவிகளை விட்டு விலகி மகாத்மா காந்தியார் தலை மையில் காங்கிரஸ் நடத்திய ஒத்து ழையாமை இயக்கத்தில் பங்கேற்றுத் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். ஒத்துழையாமை இயக்கம் ஆங்கி லேய நீதிமன்றங்களைப் புறக் கணித்தது; ஆங்கில நாட்டுத் துணி களை அணிய மறுத்தது; உள்நாட்டில் நெய்யப்பட்ட உடைகளை உடுத்து மாறு மக்களைக் கேட்டுக் கொண்டது. கதர் ஆடை அணிந்தமைக்காகவும் அதைப் பரப்பியமைக்காகவும் ஈ.வெ.ரா. கைது செய்யப்பட்டார். கதர் இயக்கம் இந்தியாவில் ஆங்கிலேயரின் துணி வணிகத்தைப் பெரிதும் பாதித்தது. அதனால் அவர்கள் வெறுப்படைந் தனர். அடுத்து, கள்ளுக் கடைகளை எதிர்த்து ஈ.வெ.ரா. நடத்திய போராட் டத்திற்காகக் கைது செய்யப்பட்டார். வைக்கத்தில் உள்ள சிவன் கோவில் சாலைகளில் தீண்டத்தகாதவர்கள் நடப்பதற்கான உரிமைப் போரில் அவர் வெற்றி ஈட்டித் தந்தமைக்காக அவருக்குப் பெரும்புகழ் கிடைத்தது. மக்கள் அவரை வைக்கம் வீரர் என்று அன்புப் பெயரிட்டு அழைத்து மகிழ்ந் தார்கள். வைக்கம் போராட்டத்தின் போது அவர் இருமுறை கைது செய் யப்பட்டார். 1925இல் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி தீண்டத் தகாதவர்கள் அந்தச் சாலைகளில் நடப்பதற்கான உரிமைகள் வழங்கப் பட்டன. ஈ.வெ.ரா. வைக்கம் வீரராகப் போற்றப்பட்டார். இந்நிகழ்வு அவரை ஒரு சமத்துவ இயக்கத்தை நோக்கி முன்னோக்கிச் செலுத்தியது.

                                
           -------தொடரும்  ----------------------- ஆங்கிலத்தில்-- டாக்டர் ரியான் சேஃபர் -- தமிழில் டாகடர் காளிமுத்து --”விடுதலை” 02-03-2015

18 comments:

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்குப் பாரபட்சம்
நிதிஷ்குமார் குறிப்பிடுகிறார்

மத்திய வரி வருவாயிலிருந்து, மாநிலங்களுக்கான பங்கீட்டு தொகையை மிகக்குறைந்த அளவில் பெறும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் முதலிடத்தைப் பிடித்து உள்ளது. கடந்த 28-இல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளு மன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில், மாநிலங் களுக்கு வழங்கப்படும் பங்குத்தொகையை 10 சதவீதம் உயர்த்துவதாக ஜெட்லி அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர்.

ஆனால், மாநிலங்களுக்கான நிதிப் பங்களிப்பை உயர்த்தியபோதும், நிதியைப்பெறும் வளர்ச்சி வீதத்தில், தழிழகம், தெலுங் கானாவைத் தொடர்ந்து, பீகார் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்ப தாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.

இது குறித்து நிதிஷ்குமார் கூறியதாவது: மத்திய வரிவருவாயிலிருந்து, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட் டில் 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டைவிட மத்திய வரி வருவாய் பங்கீட்டை பெறுவதில் தமிழகத் திற்கு 25.7 சதவீத வளர்ச்சி மட்டுமே கிடைக்கும். இந்த மாநிலம், நாட்டிலேயே மிகக்குறைந்த சதவீத பங்கீட்டு உயர்வைப்பெறும். இதற்கு அடுத்தப்படியாக தெலுங் கானா, 30.9 சதவீதமும், பீகார் 37.3 சதவீத வளர்ச்சியும் பெறும். இந்த மூன்று மாநிலங்களும், நாட்டிலேயே மிகக்குறைந்த வரி வருவாய் பங்கீட்டு வளர்ச்சியைப் பெறவுள்ளன.

நாட்டிலேயே அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலம் 93.9 சதவீதமும், ஜம்மு - காஷ்மீர் 80.6 சதவீதமும் இதற்கு அடுத்தப்படியாக மத்தியபிரதேசம் 64.7, அரியானா 60.3, குஜராத், 57.7 உள்ளிட்ட மாநிலங்களும் அதிகப்படியான மத்திய வரி வருவாய் பங்கீட்டு வளர்ச்சியைப் பெறவுள்ளன. மத்திய அரசின் இந்த போக்கு ஓட்டு வங்கி அரசியலை வெளிப்படுத்து கிறது.

மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக சில முக்கிய முடிவுகளை எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவுள்ளேன். விரை வில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/97182.html#ixzz3TK8m2Aiy

தமிழ் ஓவியா said...

அய்யோ ஜோதிடமா? அலறும் ராஜபக்சே!

கொழும்பு, மார்ச் 3_ எதை செய்தாலும் ஜோதிடரை கேட்டு செய்த இலங்கை முன்னாள் ராஜபக்சே, நான் இனியும் ஜோதிடத்தை நம்பப் போவ தில்லை' என்று கூறியுள்ளார். உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்டே என்று ஒரு சொல் வழக்கு உண்டு. ஆனால் ஜோதிடத்தால் கெட்டது யார் என்றால் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே என்று யாரைக் கேட்டாலும் சரியாகச் சொல்வார்கள்.

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து, வேட்புமனு தாக்கல் செய்தது வரை ஜோதிடரை கேட்டு காய் நகர்த்திய ராஜபக்சேவோ, இப் போது ஜோதிடம் என்றாலே அலறுகிறார். பாகிஸ்தான் இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிபர் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் மக்கள் தன்னை கைவிட்டதால்தான் பலவிதமான சர்வ தேச தாக்கங்களுக்குள்ளாகிய தாக குறிப்பிட் டுள்ளார். இன்னமும் ஜோதிடத்தை நம்புகிறீர் களா என்ற கேள்விக்கு பதில் அளித் துள்ள ராஜபக்சே, நான் இனியும் ஜோதிடத்தை நம்பப் போவதில்லை எனக் கூறியுள்ளார். ஆட்சி முடிய 2 ஆண்டுகள் இருந்த நிலையில், ஜோதிடர் களின் சொல்லைக் கேட்டு ஆட்சியை கலைத்த ராஜபக்சே, அதிபர் தேர்தலில் படுதேல்வியை சந்தித்தார் இப்போதோ வழக்குகளைச் சந்திக்க இருக்கிறார் ராஜபக்சே. (ஒன் இண்டியா)

Read more: http://viduthalai.in/e-paper/97191.html#ixzz3TK8vB88W

தமிழ் ஓவியா said...

புண்ணியம்

ஏகாதசி என்றும் பட்டினி விரதம் என்றும் கொட்டி அளக்கிறார் களே - அன்றாடம் கோடிக் கணக்கான மக்கள் வறு மையில் உணவின்றிப் பட்டினி கிடக் கிறார்களே

அவர்களுக்கெல்லாம் புண்ணியம் கிடைக்குமா?

Read more: http://viduthalai.in/e-paper/97184.html#ixzz3TK94MSEV

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பாதுகாப்பு

செய்தி: இந்தியாவில்தான் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
- யோகி ஆதித்யநாத் எம்.பி., (பிஜேபி)

சிந்தனை: அதனைக் கெடுக்கத்தானே இவர் வன் முறையைத் தூண்டும் வார்த் தைகளை அவ்வப்போது உதிர்த்துக் கொண்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97185.html#ixzz3TK9Dszud

தமிழ் ஓவியா said...

தலை தப்பாது!

உடலுறுப்புகள் மாற்றம் என்ற மருத்துவ விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வரு கிறது. இதுவரை தலை மாற்று அறுவை சிகிச்சை வரவில்லை. 2017இல் தலை மாற்று அறுவைச் சிகிச்சையும் நடை முறைக்கு வருமாம். அன் றைக்கே பிர்மாவின் தலையைக் கிள்ளினார் சிவன் என்று கூறி, தலை மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட முதல் மருத்துவர் எங்கள் சிவன் தான் என்று பிரதமர் சொல்லு வாரோ என்னவோ!

Read more: http://viduthalai.in/e-paper/97188.html#ixzz3TK9axpBY

தமிழ் ஓவியா said...

அன்று சொன்னது

வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட வேண்டும் என்று அன்று எதிர்க்கட்சி யாக இருந்தபோது சொன்ன அருண்ஜேட்லிதான் இன் றைய நிதி அமைச்சர் - ஏன் அதனைச் செயல்படுத்தவில் லையாம்? அரசியல் பேச்சு பொழுது விடிந்தால் போச்சோ!

Read more: http://viduthalai.in/e-paper/97188.html#ixzz3TK9jsG71

தமிழ் ஓவியா said...

மீண்டும் டால்மியா

இந்திய கிரிக்கெட் கட்டுப் பாடு வாரியத்தில் (பிசிசிஅய்) தலைவராக ஜக்மோகன் டால்மியா 10 ஆண்டுகளுக் குப்பின் மீண்டும் போட்டி யின்றித் தேர்வு செய்யப்பட் டுள்ளார். அது சரி அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப் பட்டதே, அது என்னவாயிற் றாம்?

Read more: http://viduthalai.in/e-paper/97188.html#ixzz3TK9qFTrU

தமிழ் ஓவியா said...

அழிக்காமல்...


ஜாதியையும், அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி - தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா?
(குடிஅரசு, 12.5.1935)

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் முயற்சி வரவேற்கத்தக்கது


தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா அவர்கள் மாநிலங்களவையில் திருநங்கைகளின் நலன்களைப் பேணும் வகையில் தனி நபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அப்பொழுது அவர் அவையில் தெரிவித்த கருத்துக்கள் சிறப்பானவை;-

மனித குலம் தோன்றியது முதல் பல்வேறு கலாச்சாரம், இனம் ஆகியவற்றில் திருநங்கைகள் பிரதிபலிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் அந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த அவர்கள் மனம், உடல், பாலின ரீதியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். சமூகத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்றால் அதைப் பதிவு செய்ய அதிகாரிகள் தயங்கும் நிலைதான் நம் நாட்டில் நிலவுகிறது. சில இடங்களில் திருநங்கைகள் தீண்டத்தகாதவர்கள் போல நடத்தப்படுகின்றனர். இதனால் கல்வி, சட்ட உதவி, வேலைவாய்ப்பு ஆகியவை மறுக்கப்படுவதுடன் சிலர் வீடற்ற நிலையில் அவதிப்படுகின்றனர். பொது இடங் களில் அவர்களுக்கென பிரத்யேக கழிவறைகள்கூட கிடையாது. அவர்களின் வாழ்வாதாரத்தையும், நிலை யையும் சீர்படுத்த பொறுப்புள்ள உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வேறு யார் அதைச் செய்ய முற்படுவர்?

திருநங்கைகளுக்கு நாட்டில் மதிப்பையும் பாலின பிரிவினை இல்லாத வாழ்க்கையையும் உறுதிப்படுத்த இந்த மசோதாவை முன்மொழிகிறேன். அவர்களுக் கான நலத் திட்டங்களை வகுத்து அவை செயல்படுத்தப் படுவதை தேசிய, மாநில ஆணையம் அமைத்து கண்காணிக்க வேண்டும்.

திருநங்கைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். 2008-இல் தமிழக முதல்வராக கலைஞர் இருந்த போது திருநங்கைகளுக்கென நல வாரியம் அமைக்கப்பட்டது. பாலினத்தை மாற்றிக் கொள்ள அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு அரசு மானியமும் வழங் கப்பட்டது. ஆனால், அவை இப்போதும் வழங்கப் படுகிறதா எனத் தெரியவில்லை! திருநங்கைகளின் நலன்களைக் காக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, காலம் தாழ்த்தாமல் இந்த மசோதாவைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

பெண்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கக் கூடிய இயக்கம் திராவிட இயக்கம்; அந்த வகையில் சிவா அவர்களின் முயற்சியும் பேச்சும் வரவேற்கத் தகுந்தவை.
அரவாணிகள் என்று கூறப்பட்டு, கேலிக்குரியவர் களாக சமுதாயத்தில் ஆக்கப்பட்டவர்களுக்கு திரு நங்கைகள் என்ற அழகிய பெயரை அளித்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே! மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சொன்னதெல்லாம் சாதாரணமானதா?

கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பெண்கள் புரட்சி மாநாட்டில் திருநங்கைகள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியமானது (13.4.2013).

அம்மாநாட்டில் நாமக்கல்லைச் சேர்ந்த ரேவதி என்ற திருநங்கை அழைக்கப்பட்டுச் சிறப்பு செய்யப் பட்டார். திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசும் வாய்ப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது.

ஊடகத்தில் பகுத்தறிவுப் பணியாற்றி வந்த ரோஸ் அவர்கள் அழைக்கப்பட்டு பெரியார் திடலில் பாராட்டப்பட்டார்.

திருநங்கைகள் தன்மானத்தோடும், மற்றவர்களுக்கு நிகராக வாழ வேண்டும் என்று நினைப்பதும், அதற்கான திட்டங்கள் தீட்டுவதும் ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும்.
தி.மு.க. ஆட்சியில் மாநிலம் அளவில் மேற்கொள் ளப்பட்ட முயற்சியும் அளிக்கப்பட்ட அங்கீகாரமும், தீட்டப்பட்ட திட்டங்களும் இந்திய அளவில் மேற் கொள்ளப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சிவா அவர்கள் இப்படியொரு மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்குள்ளும் தேவையில்லாமல் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் மாநிலங்களவையில் மூக்கை நுழைத்திருப்பது தேவையில்லாததாகும்.

இன்றைக்கும்கூட திருநங்கைகள் இரயில்களில் ஏறிப் பயணிகளிடம் பிச்சை எடுப்பது போன்ற சுய மரியாதைக்கு எதிரான செயல்பாடுகளுக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இது அவர்களுக்கான இழிவாகாது; இதற்குக் காரணமான சமுதாயத்தின் இழிவாகும்; இந்த நிலைக்குச் சமுதாயமே பொறுப்பு ஏற்க வேண்டும்.

கட்சி அரசியல்களுக்கு அப்பால் நின்று, சிவா அவர்களால் முன்மொழியப்பட்ட மசோதாவை நிறைவேற்றிக் கொடுத்து மூன்றாவது பாலினத்தை சுயமரியாதையோடு கம்பீரமாக வாழ வைத்தால், அது நாட்டுக்கும் மனித குலத்துக்கும் மிகப் பெரிய தலை நிமிர்வாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/97196.html#ixzz3TKAAadk1

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்கு பட்டை நாமம் எப்படி?

கைவிடப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள்

1. சென்னை சிறீபெரும்புதூர் (வழி பூவிருந்தவல்லி)
2. ஆவடி- சிறீபெரும்புதூர்
3. இராமேசுவரம்-தனுஷ்கோடி
4. தஞ்சாவூர்-அரியலூர்-சென்னை எழும்பூர்
5. திண்டிவனம்-கடலூர் (வழி புதுச்சேரி)
6. மயிலாடுதுறை-திருக்கடையூர் - திருநள்ளாறு- காரைக்கால்
7. ஜோலார்பேட்டை-ஓசூர் (வழி கிருஷ்ணகிரி)
8. சத்தியமங்கலம்-மேட்டூர்
9. ஈரோடு-சத்தியமங்கலம்
10. சத்தியமங்கலம்-பெங்களூரு
11. மொரப்பூர்-தருமபுரி (வழி முக்கனூர்)
12. மதுரை- காரைக்குடி (வழி திருப்பத்தூர்)
13. வில்லிவாக்கம்-காட்பாடி
14. திருவண்ணாமலை-ஜோலார்பேட்டை
15. மதுரை-கோட்டயம்
16. அரக்கோணம்-திண்டிவனம் (வழி வாலாஜாபேட்டை)
17. சிதம்பரம்-ஆத்தூர் (வழி அரியலூர்)
18. திண்டுக்கல்-கூடலூர்
19. திண்டுக்கல்- குமுளி
20. காட்பாடி- சென்னை (வழி பூவிருந்தவல்லி)
21. கும்பகோணம்- நாமக்கல்
22. மானாமதுரை- தூத்துக்குடி
23. நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை (வழி மன்னார்குடி)
24. தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை

பாதியில் கைவிடப்பட்டவை

1. சென்னை- கடலூர்
2. பழனி- ஈரோடு
3. திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை
4. திண்டிவனம்- வாலாஜா- நகரி (திண்டிவனம்- வாலாஜா வரை கைவிடப்படுகிறது)
5. சிறீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி அகலப்பாதைப் பணி
6. மதுரை- போடி 7. திண்டுக்கல்- கோவை

இரு வழிப்பாதைப் பணி

1. திருச்சி- தஞ்சாவூர்
2. இருகூர்- போத்தனூர்

Read more: http://viduthalai.in/page-2/97160.html#ixzz3TKAecBIT

தமிழ் ஓவியா said...

செய்தியும்-சிந்தனையும்!

உயிருடன்...!

செய்தி: அமர்நாத் யாத் திரை முன்பதிவு தொடங் கியது!
சிந்தனை: நோய் நொடியின்றிப் பக்தர்கள் உயிருடன் திரும்ப வாழ்த்துகிறோம்.

Read more: http://viduthalai.in/e-paper/97250.html#ixzz3TQUZMGxL

தமிழ் ஓவியா said...

21% முசுலிம்கள்

இந்தியா முழுமையும் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட வர்கள் 57,936. இதில் முசுலிம்கள் மட்டும் 21.30 விழுக் காடாம்.

44 லட்சம் பேர்

2013-2014 இல் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதோர் 44,07,193 பேர்கள்.

3869

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் களுக்கான இடங்கள் 3869.

அரசு செலவில் தனியார் மயமா?

20 விமான நிலையங்கள் ரூ.27,000 கோடி செலவு செய்து நவீன மயமாக்கப் பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமான நிலை யங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் வேலையும் மறுபுறம் நடந்து வருகிறது. ஆக, அரசு செலவில் நவீனப்படுத்தி, தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஆகா, தனியார் நிறு வனங்கள்மீது பி.ஜே.பி. அரசுக்கு என்ன கரிசனம்!

Read more: http://viduthalai.in/e-paper/97251.html#ixzz3TQUrM9Ni

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி உண்ணவும் தடையா?

தனி மனிதர் உண்ணும் உரிமையில் அரசு தலையிட முடியுமா?

ஒத்த கருத்துள்ளோர் கூடி இந்துத்துவா கோட்பாட்டை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

மாட்டுக்கறி உண்பதைத் தடை செய்துள்ள மகாராட்டிர அரசின் நடவடிக்கையை ஒத்தக் கருத்துள்ளோர் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டு அரசு இயங்குகிறது.

பா.ஜ.க. முதல் அமைச்சராக பாட்னாவிஸ் என்ற (ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.) பார்ப்பனர் தலைமையில் அங்கே நடைபெறும் அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான - மதச் சார்பின்மைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையாக மாட்டிறைச்சியைத் தடை செய்து சட்டம் இயற்றியுள்ளது அதற்குக் குடிஅரசுத் தலைவரும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இதே மகாராட்டிரத்தில் முந்தைய தபோல்கர், அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீரிய பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே மத வெறிச் சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவே இல்லை.

கோமாதா - இந்துத்துவா கொள்கைக் கோட்பாடே!

ஹிந்துத்துவா கொள்கை அடிப்படையில் கோமாதா குல மாதா, கோ. பூஜை, பசு மாட்டு வணக்கம் இந்த அடிப்படையில்தான் அங்கே மாட்டுக் கறி விற்பனை தடை செய்யப்பட்டு, மாட்டுத் தொட்டிகள் மூடப்பட்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு - வருவாய் - இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்!

கோதானம், கோ பூஜை என்ற பசு மாட்டு வணக்கம் என்பவை ஆரிய - சனாதன இந்து தர்மமே! இதை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களது ஆதர்ச புருஷ ராக - வழிகாட்டியாகக் கொள்ளும் விவேகானந்தர்கூட ஏற்கவில்லை என்பது அவரது கடுமையான தாக்குதல் - நீங்கள் மாட்டுக்குப் பிறந்த பிள்ளைகளா? என்றும், தாயின் ஈமச் சடங்கை, பிள்ளைதானே செய்ய வேண்டும்? நீங்கள் கோமாதா என்று கொண்டாடும் பசு மாட்டுக்குச் செய்கிறீர்களா? என்று கேட்டுள்ளாரே! (பெட்டிச் செய்தி காண்க) பதில் உண்டா?

தமிழ் ஓவியா said...

உணவுப் பழக்கம் தனி மனிதர் உரிமை

உணவுப் பழக்கம் என்பது அவரவர் அடிப்படை உரிமை - பன் மதங்களும், பல கலாச்சாரம் உள்ள இந்தியத் துணைக் கண்டமெனும் நம் நாட்டில் ஒரு மதக்காரர் ஆடும், கோழியும் சாப்பிடுகிறார்கள்; தத்தம் கடவுளுக்கும் வைத்துப் படைக்கிறார்கள். இன்னொரு மதக்காரர் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்; பன்றி இறைச்சி சாப்பிடுவ தில்லை. சிலர் காய்கறி உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளும் பழக்க வழக்கமுடையவர்களாக உள்ளனர். இதனைத் தடுக்க மக்கள் ஜனநாயகத்தில் இயங்கும் அரசுக்கு எவ்வகையில் உரிமை உண்டு?
வைணவர்களில் சிலர் வெங்காயத்தைக்கூட உண்ண மாட்டார்களே!

காய்கறிகளில்கூட வைணவ மதத்தவர் வெங்காயம், வெள்ளைப் பூண்டு முதலியவற்றைத் தவிர்த்து விடுவர். அதை வெட்டினால் மகாவிஷ்ணுவின் சங்கு சக்கரம் போல் காட்சியளிக்கிறதாம்! எனவே சாப்பிடக் கூடாது என்கின்றனர். அத்தகையவர்கள் சத பத பிரமாணத்தில், மாட்டிறைச்சியை பசு மாட்டின் பல பாகங்களை யாகம் வளர்த்து மந்திரம் சொல்லி அவிர் பாகம் என்று கூறி ருசித்துச் சாப்பிட்டவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளதே!

வால்மீகி இராமாயணத்தில், காட்டிற்குச் சென்ற இராமன் இறைச்சியைத் தின்று பல வகை மது வகைகளை குடித்ததாக எழுதப்பட்டுள்ளதை, எவரே மறுப்பர்?

சுரர் என்ற பெயரே ஆரியர்களுக்கு சுரபானம், சோமபானம் குடித்ததினால் வந்த பெயர்தானே!

புத்தருக்குப்பின் வந்த மாற்றம் - பின்னணி என்ன?

புத்தரின் கொள்கையோ கொலைகளை எதிர்த்தது - உயிர்க் கொலையை எதிர்த்த பிறகு அவரது செல்வாக்கு உயருவதைத் தடுக்கவே, ஆரியப் பார்ப்பனர் பின்னாளில் இந்த புலால் - இறைச்சி மறுப்பும், காய்கறி உணவுப் பழக்கத்தையும் ஏற்றனர் என்பது வரலாறு.

(ஆதாரம்: திரு டி.எம். நாயர் எழுதிய ஜிhe Dynamic Brahmin என்ற நூல்) அம்பேத்கர் எழுதிய நூலில் Who are the untouchables, why they are untouchbles என்ற நூலில், ஆரியர்கள் ஆதி காலத்திலிருந்து மாட்டிறைச்சி உண்டவர்கள் என்பதை சமஸ்கிருத நூலான சத பத பிராமணம் போன்ற நூலில் உள்ளதை எடுத்துக்காட்டி புத்தருக்குப் பின்பே அவர்கள் தமது இழந்த செல்வாக்கை மீட்டுருவாக்கிடவே இந்த இறைச்சி எதிர்ப்பு கோமாதா - பசுவதைத் தடுப்பு என்ற துருப்புச் சீட்டை இறக்கினர்!

எவரே மறுக்க முடியும்? எருமை மாடு என்ன பாவம் செய்தது? பசுவுக்கு மட்டும் பாதுகாப்பு - காரணம் எருமை கறுப்பு, பசு வெள்ளை - இதிலும் வருணாசிரமக் கண்ணோட் டமா? பால் எல்லாம் வெள்ளைதானே! இன்னும் கேட்டால் எருமை அதிகமாக அல்லவா பால் தருகிறது?
உலகம் முழுவதும் பெரும்பாலோர் உண்ணும் சத்துணவு மாட்டிறைச்சியே! மாட்டிறைச்சியை உலகம் முழுவதும் உள்ள பெரும் பான்மை மக்கள் தங்களது முக்கிய உணவாகக் கொள்ளுகின்றனர்.

இங்கு -நம் நாட்டில் அது ஏழைகளுக்கு எளிய விலைக் குக் கிடைக்கும் - உணவாக இருக்கிறது, சத்துணவாகவும் உள்ளது.

இதைத் தடுக்கலாமா? மதவெறியைக் காட்டலாமா?

இந்த அடிப்படை உரிமையை பறிப்பதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

1972இல் தந்தை பெரியார் இதை வெகு காலத்திற்கு முன்பே சொன்னார். திராவிடர் கழகமும் ஆந்திர நாத்திகர் கோராவும் சேர்ந்து ஆங்காங்கு மாட்டுக்கறி - பன்றிக் கறி விருந்தும் நடத்திப் பிரச்சாரம் செய்தோமே! (மீண்டும் தேவையானால் செய்யத் தயார்)

உச்சநீதிமன்ற தீர்ப்புகளேகூட இந்த உணவுப் பழக் கத்தில் தலையிடுவதற்கு விரோதமாகத்தான் வந்துள்ளன.

எனவே, மும்பையில் இந்தச் சட்டத்தினை எதிர்த்து நீதிமன்றத்திலும் போராட வேண்டும்.

அதே நேரத்தில் வீதி மன்றத்திலும், பாதிக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி, அற வழியில் போராட முன் வர வேண்டும் மகாராஷ்டிரத்தில்.

ஒத்த கருத்துள்ளவர்கள் போராட முன் வருக!

இது அங்கே வந்த தீ என்று நாமும் அலட்சியமாக இல்லாமல், இங்கும் பரவ எவ்வளவு நேரம் ஆகும் என்ற உணர்வுடன், அதை எதிர்த்துக் குரல் கொடுக்க முன் வர வேண்டும் - ஒத்த கருத்துள்ள அத்தனை அமைப்புகளும் (நாம் முன்பே இப்படி போராடியுள்ளோம்).



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

5.3.2015, சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/97302.html#ixzz3TVqojxfb

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயம்


நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்தின் அத்தனைப் பேரை யும் பொறுத்ததே ஒழிய, மூன்றே முக்கால் பேர்களைப் பொறுத்தது அல்ல.
(விடுதலை, 2.4.1966)

Read more: http://viduthalai.in/page-2/97291.html#ixzz3TVrgElcB

தமிழ் ஓவியா said...

இந்துத்துவா வெறி கொடி கட்டிப் பறக்கிறது
மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சிக்கு தடையாம்!
மீறினால் 5 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதமாம்


மும்பை, மார்ச் 5_ மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்ப னைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக் கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இம்மாநிலத்தில் பசுக்களை கொல்வதற்கு தடை விதித்து 1976-ஆம் ஆண்டு மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. என்றாலும் எருதுகள் மற்றும் காளைகளை கொல்வதற்கு, தகுதிச் சான்றின் அடிப்படையில் அனுமதி தரப்பட்டு வந்தது.

இந்நிலையில் 1995ஆ-ம் ஆண்டு பாஜக சிவசேனா ஆட்சியின்போது, மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி பசுக்கள் மட்டுமின்றி, எருதுகள் மற்றும் காளைகளைக் கொல்வதற்கும் தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இந்நிலையில் 19 ஆண்டு களுக்குப் பிறகு இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி வழங்கியுள்ளதாக மகாராஷ் டிர ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மார்ச் மூன்றாம் தேதி தகவல் அனுப்பியது.

இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் பசுக்கள், காளைகள் மற்றும் எருதுகள் இறைச்சிக்கான தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

என்றாலும் எருமைகள் இறைச் சிக்கு இந்த சட்டம் அனுமதி வழங்கு கிறது. குறைந்த தரம் கொண்டதாக கருதப்படும் எருமை இறைச்சி, இம்மா நிலத்தில் மொத்த இறைச்சி விற்ப னையில் நான்கில் ஒரு பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் மகாராஷ் டிரத்தில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என்றும், பிற இறைச்சிகளின் விலை உயரும் என்றும் மாட்டிறைச்சி விற் பனையாளர்கள் அச்சம் தெரிவித் துள்ளனர்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், மகா ராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப் புதல் அளித்த குடியரசுத் தலைவருக்கு நன்றி. பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவேண்டும் என்ற எங்கள் கனவு இப்போது நிதர்சனம் ஆகியுள்ளது என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/97294.html#ixzz3TVrqXMwu

தமிழ் ஓவியா said...

கொஞ்சம் யோசிக்கலாமே!


வடநாட்டுத் தலைவர்களைப் போல தமிழ்நாட்டுத் தலைவர்களும் நட்புடன் பழக கற்றுக் கொள்ள வேண்டும்! என்பதற் கான ஆசிரியரின் அறிக்கை சமீபத்தில் விடுதலையில் வெளியானது. மிகவும் அரு மையான அறிக்கை. நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய அறிவுரை இது.

கொஞ்ச காலமாகவே இதுபோன்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதுண்டு. ஆனால் எழுதத்தூண்டியதில்லை குறிப் பாக அறிவாளிகள் என நினைத்துக் கொண்டிருக்கும் நம் தமிழ்நாட்டுத் தலைவர்கள் நட்புடன் நடந்து கொள்ளும் பழக்கமின்மை காரணமாக நீண்ட நாள் இருப்பில் கிடந்த முட்டை அழுகிப் போவதுபோல ஆகிவிடுகிறார்கள்.

வறட்டுக் கவுரவம் தேவையில்லை சுக, துக்க நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை தவிர்க்கிறார்கள். அனுபவம் மிக்க நம் ஆசிரியரின் இவ்வறிக்கையினை வயது அனுபவம் பார்க்காமல் ஒரு அறிவுரையாக எண்ணி, எல்லா தமிழ்நாட்டுத் தலைவர் களும் படித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இப்படிப் பழகுவதனால் ஒன்றும் உங்களுக்கு கிடைக்கும் வாக்கு மாறிப்போய் விடாது. ஏனெனில் உங்களின் மனம் விட்டுப் பேசும் தன்மையினால் இன்னும் செல்வாக்கு கூடிக்கொண்டேதான் போகும். யார் மீதும் யாருக்கும் நிரந்தர கோபம் இல்லை. கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள் கருத்துமாறுபாடு உள்ள ஒருவருடன் பழகு வதனாலோ, பேசுவதனாலோ மாறிவிடப் போவதில்லை.

சமீபத்தில் எங்கள் ஊராட்சியில் நடந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் விழாவில் நான்தான் கேக் வெட்டினேன். அதிமுக தோழர்கள் நம்மீது கொண்ட பற்றும், பாசமும் இதற்கு ஒரு சான்றாகும். இதனால் நான் என்ன அதிமுக கட்சிக்கா சென்று விட்டேன்?

கொள்கைப்பற்று ஒருவனுக்கு வந்து விட்டால் எக்காலத்திலும் எந்தச் சூழ் நிலையிலும் கருத்து மாறமாட்டான். இப்பெரியார் தொண்டர்களுக்குப் புரிந்த இந்த எளிய விளக்கம், உலகமே சுற்றிவரும் நம் தமிழ்நாட்டுத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- கல்மடுகன்

Read more: http://viduthalai.in/page-2/97297.html#ixzz3TVrxmrIZ

தமிழ் ஓவியா said...

மார்ச் 8: அனைத்துலக பெண்கள் நாள்!

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முதல் பெண் பெற்ற தாய் ஆவார். அடுத்து உறவினர்களில் சிறப்பிடம் பலருக்கும் பாட்டிகளாக இருப்பார்கள். அமெரிக்காவில் அன்னையர் நாள் மிகவும் சிறப்பானது.

என்னுடைய வாழ்க்கையில் அப்பாவின் தாயார் அப்பாயி பாப்பாத்தி அம்மாள் மிகவும் முக்கிய இடம் வகித்தவர். 13 ஆவது வயதிலேயே மணமுடித்துப், பெரிய குடும்பத்தில் பலருடன் வாழ்ந்து, சிறப்பாக வழிகாட்டி ஊருக்கே ஒரு ஆலமரமாகத் திகழ்ந்தவர். தாத்தா அய்ம்பது வயது போலவே புற்று நோயால் இறந்த போது அவர் சொன்னது, சொத்தெல்லாம் போனாலும் படிக்கவைத்துவிடு என்பதாம். அதை முடிந்த அளவு நிறைவேற்றி வைத்தவர்.

தி.க., திமுக, காங்கிரசு என்று இருந்த தனது பிள்ளைகளை அரசியல் வீட்டிற்கு வெளியே இருக்கட்டும் என்று கண்டிப்புடன் சொன்னவர்.எனக்கெல்லாம் காலையில் பணம் கொடுத்து மாலை வாங்கிய புத்தகம், வாங்கிய கட்டணத் தாளைக் காண்பித்து மீதியை ஒழுங்காகக் கொடுத்து பின்னர் அவர் தரும் சில்லறையைப் பெற்றுக் கொள்ளுமாறு கண்டிப்புடன் வளர்த்தவர்.

இரண்டு பிள்ளைகள் மட்டுமே கல்லூரி செல்லவைக்க முடிந்த ஏக்கத்தை அத்தனைப் பேரப்பிள்ளைகளையும் கல்லூரியில் படிக்க வைத்த பெருமை அவரையே சேரும். நான் மருத்துவப் படிப்பை முடித்துப் பயிற்சி மருத்துவராக இருந்து அவரது புற்றுநோய்க்கு முடிந்ததைதைச் செய்ததைப் பெருமையாகக் கருதியவர்.

அவருடைய 45 ஆவது நினைவுநாள் மார்ச் 4. அதை நினைவு கூரவும், உலகப் பெண்கள் நாளைக் கொண்டாடவும், நமது தமிழின உடன் பிறப்புக்களை உற்சாகப்படுத்தவும் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுடன் உணவு உன்பதற்கு ஏற்பாடு செய்து மகிழ்வுடன் கலந்துகொள்கின்றோம்.

நமது ஒவ்வொருவருக்கும் உள்ள உறவுகளில் பல பெண்கள் நமது மதிப்பிற்கும், மரியாதைக்கும், அன்பிற்கும் உகந்தவர்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நம் அனபையும், ஆறுதலையும் காட்டி பெண்ணினம் வாழ வழிகாட்ட, வாழவைக்க வாழ்த்துவோம்!

- டாக்டர் சோம.இளங்கோவன்,
பிச்சாண்டார்கோவில்.

Read more: http://viduthalai.in/page-8/97309.html#ixzz3TVsfwpuW