Search This Blog

5.3.15

குடமுழுக்கு பெயரால் ஜாதி மோதலா?சேலம் மாவட்டம் சித்தர்கோயில் அருகே திருமலைகிரி தோப்புக்காடு பகுதியில் சைலகிரீஸ்வரர்  என்ற கோயில் இருக்கிறது. நேற்று அந்தக் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்படுவதாக இருந்தது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் கலந்து கொள்ள இன்னொரு பிரிவினர் தடை விதித்தார்களாம். இதனை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


இதில் அரசு அதிகாரிகள் தலையிட்டனர், சமரசம்  ஏற்படாத நிலையில் கோயில் இழுத்து மூடப்பட்டது, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 21 கிராமங்களில் 144 தடை ஆணையை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.


இந்த 21ஆம் நூற்றாண்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியைத்தான் இது எழுப்புகிறது. நாட்டு மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக கிராமங்களின் வளர்ச்சி என்பது பஞ்சமத் தன்மையிலும் சூத்திரத் தன்மையிலும்தான் இருக் கின்றது.


விவசாயம் பாவப்பட்ட தொழிலாகவே (பார்ப்பன மனுதர்மப் பார்வையில்) ஆக்கப்பட்டு விட்டது. கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்பட்ட கடனைத் திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு விவசாயம் வருமானம் இல்லாமல் தேய்ந்து கட்டெறும்பாக ஆகி விட்டது; தற்கொலையின் விளிம்பில் விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றனர்.


இவற்றையெல்லாம் புறந்தள்ளி கிடப்பது கிடக் கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்பது போல கிராமங்களில் கோயில்களைக் கட்டுவதும், குட முழுக்குச் செய்வதும், அதில் காலம் காலமாக உரிமை மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்டோர் கலந்து கொள் ளக் கூடாது என்பதும் அர்த்தம் நிறைந்தவைதானா?


மற்ற மற்ற சண்டைகளைவிட பக்தர்கள் சண்டைதான் அதிகரித்து வருகிறது என்று ஒருமுறை ராஜாஜி சொன்னது தான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.


கடவுளை மற - மனிதனை நினை என்பது தந்தை பெரியார் கொள்கை - சிந்தனைக் கருத்து எவ்வளவு ஆழமானது - அவசியமானது என்பதை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.


மதம் மக்களை ஒன்றுபடுத்தாது - பேதப்படுத்தும் - அதுவும் வருணாசிரமம் என்ற பிளவுக் கலாச்சாரத்தை ஆணி வேராகக் கொண்ட இந்து மதம் - இதனை மிக அதிகமாகவே செய்யும் என்பது வெளிப்படை.


கோயிலுக்குள் குடியமர்த்தப்பட்ட கடவுளாவது இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டாமா? அது எப்படித் தீர்க்கும்? அதுதான் சுத்த குழவிக் கல்லா யிற்றே! 

ஒரு கல் மனிதரின் மூளையை எந்த அளவுக்கு நாசப்படுத்தியிருக்கிறது பார்த்தீர்களா?


இதற்கெல்லாம் மூல காரணமாக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் இந்தப் பிரச்சினை என்கிற படத்தில் நேரிடையாக வர மாட்டார்கள். தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்டவர்களும் தங்களுக்குள் மோதிக் கொள்வதை தூரத்திலிருந்து பார்த்து வெகுவாகவே ரசிப்பார்கள். பலே, பலே! நம் மருந்து எப்படியெல்லாம் இன்னும் வேலை செய்கிறது? என்று தங்கள் முதுகினைத் தாங்களே தட்டிக் கொள்வார்கள்.


இது இப்படி என்றால், இந்தக் கோயில் பிரச் சினையில் மனித உரிமை மீறல் இருக்கிறது என்பதை யும் புறத்தள்ளி விட முடியாதுதான்.


இந்துக்களே ஒன்று சேருங்கள்! என்று கூப்பாடு போடுகின்ற இந்து முன்னணி வகையறாக்களும், ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களும் இந்தப் பிரச்சினையில் ஏன் தலையிடவில்லை? - இரு தரப்பு மக்களாகிய இந்துக்களை ஏன் ஒன்று சேர்க்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை?


அது எப்படிச் செய்வார்கள்? இந்து மதத்தில் உள்ள ஜாதியின் குணாம்சம் என்ன என்பது அவர்களுக்குத் தெரியாதா?


கடவுள் இல்லை, இல்லவே இல்லை, கடவுள் ஒழிக்கப்பட வேண்டும் என்று கருதுகிற, கூறுகிற நாங்கள்தான் வேதனைப்படுகிறோம். பக்தியின் பெயரால் நம் மக்கள் மோதிக் கொள்கிறார்களே என்று வருத்தப்படுகிறோம். இரு தரப்பிலும் உள்ள முக்கிய ஸ்தர்கள் இதில் ஒற்றுமைக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.


சேலம் மட்டுமல்ல; இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வை நாம் கண்டாக வேண்டும். அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சமத்துவக் கருத்தை - மனித உரிமைப் பிரச்சினையைப் பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் முன் வைத்தார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அதற்கான திட்டத்தையும், களங்களையும் முன் வைத்தார்கள். தந்தை பெரியார் அவர்களின் சீடரான மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தமது ஆட்சியில் அதற்கான சட்டத்தையும் நிறைவேற்றிக் கொடுத் தார்கள். இரண்டு முறை அவர் சட்ட ரீதியான ஆக்க பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டும், பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று அதனை முடக்கி விட்டனர்.


அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, செயல்பாட் டுக்கு வந்திருக்குமானால், தாழ்த்தப்பட்டவர்களும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு இருந்தால், சேலம் சம்பவம் போல தாழ்த்தப்பட்டவர்கள் கோயி லுக்குள் வரக் கூடாது என்ற குரல் கிளம்பி இருக்க முடியுமா? அப்படிக் கிளம்பினால் அதற்குக் காரண மானவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டிய கடமையும், கட்டாயமும் ஏற்பட்டு இருக்குமே!


பகுத்தறிவை முன்னெடுப்பது என்பது ஒரு பக்கம்; சட்டப்படி மனித உரிமையைப் பாதுகாப்பது என்பது இன்னொரு பக்கம்  - இந்த இரண்டு தீர்மானங்களை யுமே கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகம்தான் முன் வைக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சேலம் நிகழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்க அரசு முயல வேண்டும். இன்னொரு தர்மபுரியாக ஆகாமல் முளையிலேயே கிள்ளிடுக என்று அரசை வலியுறுத்துகிறோம்.

                     ------------------------”விடுதலை” தலையங்கம் 5-3-2015
 

52 comments:

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி உண்ணவும் தடையா?

தனி மனிதர் உண்ணும் உரிமையில் அரசு தலையிட முடியுமா?

ஒத்த கருத்துள்ளோர் கூடி இந்துத்துவா கோட்பாட்டை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

மாட்டுக்கறி உண்பதைத் தடை செய்துள்ள மகாராட்டிர அரசின் நடவடிக்கையை ஒத்தக் கருத்துள்ளோர் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டு அரசு இயங்குகிறது.

பா.ஜ.க. முதல் அமைச்சராக பாட்னாவிஸ் என்ற (ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.) பார்ப்பனர் தலைமையில் அங்கே நடைபெறும் அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான - மதச் சார்பின்மைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையாக மாட்டிறைச்சியைத் தடை செய்து சட்டம் இயற்றியுள்ளது அதற்குக் குடிஅரசுத் தலைவரும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இதே மகாராட்டிரத்தில் முந்தைய தபோல்கர், அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீரிய பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே மத வெறிச் சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவே இல்லை.

கோமாதா - இந்துத்துவா கொள்கைக் கோட்பாடே!

தமிழ் ஓவியா said...

ஹிந்துத்துவா கொள்கை அடிப்படையில் கோமாதா குல மாதா, கோ. பூஜை, பசு மாட்டு வணக்கம் இந்த அடிப்படையில்தான் அங்கே மாட்டுக் கறி விற்பனை தடை செய்யப்பட்டு, மாட்டுத் தொட்டிகள் மூடப்பட்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு - வருவாய் - இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்!

கோதானம், கோ பூஜை என்ற பசு மாட்டு வணக்கம் என்பவை ஆரிய - சனாதன இந்து தர்மமே! இதை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களது ஆதர்ச புருஷ ராக - வழிகாட்டியாகக் கொள்ளும் விவேகானந்தர்கூட ஏற்கவில்லை என்பது அவரது கடுமையான தாக்குதல் - நீங்கள் மாட்டுக்குப் பிறந்த பிள்ளைகளா? என்றும், தாயின் ஈமச் சடங்கை, பிள்ளைதானே செய்ய வேண்டும்? நீங்கள் கோமாதா என்று கொண்டாடும் பசு மாட்டுக்குச் செய்கிறீர்களா? என்று கேட்டுள்ளாரே! (பெட்டிச் செய்தி காண்க) பதில் உண்டா?

உணவுப் பழக்கம் தனி மனிதர் உரிமை

உணவுப் பழக்கம் என்பது அவரவர் அடிப்படை உரிமை - பன் மதங்களும், பல கலாச்சாரம் உள்ள இந்தியத் துணைக் கண்டமெனும் நம் நாட்டில் ஒரு மதக்காரர் ஆடும், கோழியும் சாப்பிடுகிறார்கள்; தத்தம் கடவுளுக்கும் வைத்துப் படைக்கிறார்கள். இன்னொரு மதக்காரர் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்; பன்றி இறைச்சி சாப்பிடுவ தில்லை. சிலர் காய்கறி உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளும் பழக்க வழக்கமுடையவர்களாக உள்ளனர். இதனைத் தடுக்க மக்கள் ஜனநாயகத்தில் இயங்கும் அரசுக்கு எவ்வகையில் உரிமை உண்டு?
வைணவர்களில் சிலர் வெங்காயத்தைக்கூட உண்ண மாட்டார்களே!

காய்கறிகளில்கூட வைணவ மதத்தவர் வெங்காயம், வெள்ளைப் பூண்டு முதலியவற்றைத் தவிர்த்து விடுவர். அதை வெட்டினால் மகாவிஷ்ணுவின் சங்கு சக்கரம் போல் காட்சியளிக்கிறதாம்! எனவே சாப்பிடக் கூடாது என்கின்றனர். அத்தகையவர்கள் சத பத பிரமாணத்தில், மாட்டிறைச்சியை பசு மாட்டின் பல பாகங்களை யாகம் வளர்த்து மந்திரம் சொல்லி அவிர் பாகம் என்று கூறி ருசித்துச் சாப்பிட்டவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளதே!

வால்மீகி இராமாயணத்தில், காட்டிற்குச் சென்ற இராமன் இறைச்சியைத் தின்று பல வகை மது வகைகளை குடித்ததாக எழுதப்பட்டுள்ளதை, எவரே மறுப்பர்?

சுரர் என்ற பெயரே ஆரியர்களுக்கு சுரபானம், சோமபானம் குடித்ததினால் வந்த பெயர்தானே!

புத்தருக்குப்பின் வந்த மாற்றம் - பின்னணி என்ன?

புத்தரின் கொள்கையோ கொலைகளை எதிர்த்தது - உயிர்க் கொலையை எதிர்த்த பிறகு அவரது செல்வாக்கு உயருவதைத் தடுக்கவே, ஆரியப் பார்ப்பனர் பின்னாளில் இந்த புலால் - இறைச்சி மறுப்பும், காய்கறி உணவுப் பழக்கத்தையும் ஏற்றனர் என்பது வரலாறு.

(ஆதாரம்: திரு டி.எம். நாயர் எழுதிய ஜிhe Dynamic Brahmin என்ற நூல்) அம்பேத்கர் எழுதிய நூலில் Who are the untouchables, why they are untouchbles என்ற நூலில், ஆரியர்கள் ஆதி காலத்திலிருந்து மாட்டிறைச்சி உண்டவர்கள் என்பதை சமஸ்கிருத நூலான சத பத பிராமணம் போன்ற நூலில் உள்ளதை எடுத்துக்காட்டி புத்தருக்குப் பின்பே அவர்கள் தமது இழந்த செல்வாக்கை மீட்டுருவாக்கிடவே இந்த இறைச்சி எதிர்ப்பு கோமாதா - பசுவதைத் தடுப்பு என்ற துருப்புச் சீட்டை இறக்கினர்!

எவரே மறுக்க முடியும்? எருமை மாடு என்ன பாவம் செய்தது? பசுவுக்கு மட்டும் பாதுகாப்பு - காரணம் எருமை கறுப்பு, பசு வெள்ளை - இதிலும் வருணாசிரமக் கண்ணோட் டமா? பால் எல்லாம் வெள்ளைதானே! இன்னும் கேட்டால் எருமை அதிகமாக அல்லவா பால் தருகிறது?
உலகம் முழுவதும் பெரும்பாலோர் உண்ணும் சத்துணவு மாட்டிறைச்சியே! மாட்டிறைச்சியை உலகம் முழுவதும் உள்ள பெரும் பான்மை மக்கள் தங்களது முக்கிய உணவாகக் கொள்ளுகின்றனர்.

இங்கு -நம் நாட்டில் அது ஏழைகளுக்கு எளிய விலைக் குக் கிடைக்கும் - உணவாக இருக்கிறது, சத்துணவாகவும் உள்ளது.

இதைத் தடுக்கலாமா? மதவெறியைக் காட்டலாமா?

இந்த அடிப்படை உரிமையை பறிப்பதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

1972இல் தந்தை பெரியார் இதை வெகு காலத்திற்கு முன்பே சொன்னார். திராவிடர் கழகமும் ஆந்திர நாத்திகர் கோராவும் சேர்ந்து ஆங்காங்கு மாட்டுக்கறி - பன்றிக் கறி விருந்தும் நடத்திப் பிரச்சாரம் செய்தோமே! (மீண்டும் தேவையானால் செய்யத் தயார்)

உச்சநீதிமன்ற தீர்ப்புகளேகூட இந்த உணவுப் பழக் கத்தில் தலையிடுவதற்கு விரோதமாகத்தான் வந்துள்ளன.

எனவே, மும்பையில் இந்தச் சட்டத்தினை எதிர்த்து நீதிமன்றத்திலும் போராட வேண்டும்.

அதே நேரத்தில் வீதி மன்றத்திலும், பாதிக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி, அற வழியில் போராட முன் வர வேண்டும் மகாராஷ்டிரத்தில்.

ஒத்த கருத்துள்ளவர்கள் போராட முன் வருக!

இது அங்கே வந்த தீ என்று நாமும் அலட்சியமாக இல்லாமல், இங்கும் பரவ எவ்வளவு நேரம் ஆகும் என்ற உணர்வுடன், அதை எதிர்த்துக் குரல் கொடுக்க முன் வர வேண்டும் - ஒத்த கருத்துள்ள அத்தனை அமைப்புகளும் (நாம் முன்பே இப்படி போராடியுள்ளோம்).கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

5.3.2015, சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/97302.html#ixzz3TVqojxfb

தமிழ் ஓவியா said...

பசுவதை பற்றி - விவேகானந்தர்

ஒன்பது லட்சம் மக்கள் பட்டினி - உதவி செய்யுங்களே!

நரேந்திர பாபு போன பின்னர், பசுக்களைப் பரிபாலிக்கிற சபை ஒன்றினுக்குரிய ஊக்கமுள்ள பிரசாரகர் ஒருவர் சுவாமிஜியைக் காணும் பொருட்டு வந்தார். அவர் தம் தலை யிலே காஷாயத் தலைப்பாகை அணிந் திருந்தார்; தோற்றத்தில் வடநாட்டி னரைப் போலக் காணப்பட் டார். அவரது உடை ஏறக்குறைய சந்நியாசி களுடைய உடை போன்றிருந்தது. அந்தப் பசு பரிபாலன சபைப் பிரசாரகர் வந்தார் என்று கேள்விப்பட்டதும் சுவாமிஜி சாலை அறைக்கு வந்தார். பிரசாரகர் சுவாமிஜியை வணங்கிப் பசுத்தாயினுடைய படம் ஒன்றினைச் சுவாமிஜிக்குக் கொடுத் தார். சுவாமிஜி படத்தைப் பெற்று அருகில் நின்ற ஒருவர் கையில் கொடுத்த பின்னர், பின்வரும் சம்பாஷணை நிகழ்ந்தது.

சுவாமி: உங்களுடைய சங்கத்தின் நோக்கம் என்ன?

பிரசாரகர்: நமது நாட்டிலுள்ள பசுத் தாய்களைக் கசாப்புக்காரர்களிட மிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்களும் வலுவிழந்தனவும் கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட் டனவும் பரிபாலிக்கப்படுவததற்காகப் பசு வைத்திய சாலைகளை ஏற்படுத்தி யிருக்கிறோம்.

சுவாமி: அது மிக நல்லது. உங்கள் வருவாய்க்கு வழி என்ன?

பிரசாரகர்: உங்களைப் போன்ற பெரிய மனிதர் அன்போடு கொடுக் கின்ற நன்கொடைகளைக் கொண்டே சபையின் வேலை நடந்து வருகின்றது.

தமிழ் ஓவியா said...


சுவாமி: இப்பொழுது எவ்வளவு பணம் சேர்த்து வைத்திருக்கிறீர்கள்?

பிரசாரகர்; இந்த முயற்சிக்கு மார்வாடி வணிகர் கூட்டம் சிறந்த உதவி புரிகின்றது. இந்த நன்முயற்சிக்காக அவர்கள் பெருந்தொகை கொடுத்திருக் கின்றார்கள்.

சுவாமி: மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்று இந்திய அரசாங்கத் தார் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். இதற்கு உதவி புரிவதற்கு உங்களுடைய சபை ஏதாவது செய்திருக்கின்றதா? மக்களுக்கு இரங்கோம்: மாடுகளுக்கே இரங்குவோம்

பிரசாரகர்: பஞ்சம் முதலிய துன்பம் வரும்பொழுது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத்தாய் களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது.

சுவாமி: உங்களுடைய சொந்தச் சகோதர சகோதரிகளாகிய லட்சக்கணக் கான மக்கள் பஞ்சத்தினால் துன்பம் அடைந்து மரணத்தின் வாயில் விழும் பொழுது அவர்களுக்கு எவ்வழியிலா வது உணவளித்துக் காப்பாற்ற வேண் டுவது உங்கள் கடமை என நீங்கள் நினைக்க வில்லையா?

பிரசாரகர்: இல்லை. இந்தப் பஞ்சம் மக்களுடைய பாவகருமத்தினாலே ஏற் பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே.

பிரச்சாரகர் இந்த வார்த்தை களைக் கூற, இவறறைக் கேட்டுச் சுவாமிஜி யினுடைய கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறப்பது போன்றி ருந்தது. முகம் சிவந்தது. அவர் தம் சினத்தை அடக்கிக் கொண்டு, பின்வருமாறு சொல்லு வராயினார்:

தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை. மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடை கிறதென நான் எண்ணவில்லை.

மனிதர் தம் கருமத்தினால் இறக்கின் றனரென்று நீர் வாதிப்பீராயின், இவ்வு லகத்திலே எதைக் கருதியும் முயல வேண்டுவதில்லை என்பது தீர்மானமா கின்றது. விலங்குகளைப் பரிபாலிப்ப தற்காக நீர் செய்கிற வேலையும் இவ் விதிக்குப் புறம்பாகாது. பசுத்தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக் காரர்களுடைய கையிலகப்பட்டு இறக்கின்றன வென்று சொல்லிவிட்டுச் சும்மா இருக்கலாமே?

பிரசாரகர்: சிறிது நாணி, ஆம். நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், பசு நம் அன்னை என்று சாத்திரங்கள் சொல்லு கின்றனவே? என்றார்.

சுவாமிஜி: நகைத்துக் கொண்டே, ஆம், பசு நம் அன்னை என்பதை நான் அறிந்து கொண்டேன்; இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்! என்றார்.

இவர்கள் மனிதர்களா?

வடநாட்டுப் பிரசாரகர் அந்த விஷ யத்தைப் பற்றி பின்பு ஒன்றும் பேச வில்லை. சுவாமிஜி கேலி பண்ணிய கருத்தை அவர் அறிந்து கொள்ள வில்லை போலும்! தமது சபைக்காக ஏதாவது உதவ வேண்டுமென்று அவர் சுவாமிஜியை கேட்டார்.

சுவாமி: நான் ஒரு சந்நியாசி, பக்கிரி உமக்கு உதவி செய்ய எங்குப்பணம் பெறுவேன்? பணம் பெற்றாலும், முதலிலே மனிதருடைய சேவைக்காகச் செலவழிப்பேன். முதலிலே மனிதனுக்கு உணவு, கல்வி, ஆன்மிக வாழ்க்கை என்னும் இவற்றைத் தந்து காப்பாற்ற வேண்டும் அதற்குப் பின்பு ஏதாவது மிகுந்திருந்தால், உம்முடைய சபைக்குக் கொடுக்கலாம்.
இந்த வார்த்தைகளைக் கேட்டுப் பிரசாரகர் சுவாமிஜியை வணங்கி விட்டுப்போய்விட்டார். பின்பு சுவாமிஜி எங்களை நோக்கிச் சொல்லுகிறார்.

அந்த மனிதனுடைய சொற்களைப் பாருங்கள்! மனிதர் தமது கருமத்தினால் இறக்கிறார்கள் என்று சொல்கின்றான், அவர்களுக்கு உதவுவதனால் என்ன பயன் என்கிறான். நாடு நாசமாய்ப் போய்விட்ட தென்பதற்கு இது ஒரு தக்கசான்று. இந்துக்களுடைய கரும விசாரணை எவ்வளவு பழுதடைந்து விட்டதென்பதைப் பாருங்கள்! மனித ருக்கு இரங்காத இதயமுள்ளவர்கள் இவர்கள் இத்தகையோரை மனிதர் என்று எண்ணலாமா?

(சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை பக்கம் 5,7)

Read more: http://viduthalai.in/e-paper/97303.html#ixzz3TVrM62Ox

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயம்


நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்தின் அத்தனைப் பேரை யும் பொறுத்ததே ஒழிய, மூன்றே முக்கால் பேர்களைப் பொறுத்தது அல்ல.
(விடுதலை, 2.4.1966)

Read more: http://viduthalai.in/page-2/97291.html#ixzz3TVrgElcB

தமிழ் ஓவியா said...

இந்துத்துவா வெறி கொடி கட்டிப் பறக்கிறது
மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சிக்கு தடையாம்!
மீறினால் 5 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதமாம்


மும்பை, மார்ச் 5_ மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்ப னைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக் கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இம்மாநிலத்தில் பசுக்களை கொல்வதற்கு தடை விதித்து 1976-ஆம் ஆண்டு மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. என்றாலும் எருதுகள் மற்றும் காளைகளை கொல்வதற்கு, தகுதிச் சான்றின் அடிப்படையில் அனுமதி தரப்பட்டு வந்தது.

இந்நிலையில் 1995ஆ-ம் ஆண்டு பாஜக சிவசேனா ஆட்சியின்போது, மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி பசுக்கள் மட்டுமின்றி, எருதுகள் மற்றும் காளைகளைக் கொல்வதற்கும் தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இந்நிலையில் 19 ஆண்டு களுக்குப் பிறகு இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி வழங்கியுள்ளதாக மகாராஷ் டிர ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மார்ச் மூன்றாம் தேதி தகவல் அனுப்பியது.

இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் பசுக்கள், காளைகள் மற்றும் எருதுகள் இறைச்சிக்கான தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

என்றாலும் எருமைகள் இறைச் சிக்கு இந்த சட்டம் அனுமதி வழங்கு கிறது. குறைந்த தரம் கொண்டதாக கருதப்படும் எருமை இறைச்சி, இம்மா நிலத்தில் மொத்த இறைச்சி விற்ப னையில் நான்கில் ஒரு பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் மகாராஷ் டிரத்தில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என்றும், பிற இறைச்சிகளின் விலை உயரும் என்றும் மாட்டிறைச்சி விற் பனையாளர்கள் அச்சம் தெரிவித் துள்ளனர்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், மகா ராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப் புதல் அளித்த குடியரசுத் தலைவருக்கு நன்றி. பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவேண்டும் என்ற எங்கள் கனவு இப்போது நிதர்சனம் ஆகியுள்ளது என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/97294.html#ixzz3TVrqXMwu

தமிழ் ஓவியா said...

மார்ச் 8: அனைத்துலக பெண்கள் நாள்!

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முதல் பெண் பெற்ற தாய் ஆவார். அடுத்து உறவினர்களில் சிறப்பிடம் பலருக்கும் பாட்டிகளாக இருப்பார்கள். அமெரிக்காவில் அன்னையர் நாள் மிகவும் சிறப்பானது.

என்னுடைய வாழ்க்கையில் அப்பாவின் தாயார் அப்பாயி பாப்பாத்தி அம்மாள் மிகவும் முக்கிய இடம் வகித்தவர். 13 ஆவது வயதிலேயே மணமுடித்துப், பெரிய குடும்பத்தில் பலருடன் வாழ்ந்து, சிறப்பாக வழிகாட்டி ஊருக்கே ஒரு ஆலமரமாகத் திகழ்ந்தவர். தாத்தா அய்ம்பது வயது போலவே புற்று நோயால் இறந்த போது அவர் சொன்னது, சொத்தெல்லாம் போனாலும் படிக்கவைத்துவிடு என்பதாம். அதை முடிந்த அளவு நிறைவேற்றி வைத்தவர்.

தி.க., திமுக, காங்கிரசு என்று இருந்த தனது பிள்ளைகளை அரசியல் வீட்டிற்கு வெளியே இருக்கட்டும் என்று கண்டிப்புடன் சொன்னவர்.எனக்கெல்லாம் காலையில் பணம் கொடுத்து மாலை வாங்கிய புத்தகம், வாங்கிய கட்டணத் தாளைக் காண்பித்து மீதியை ஒழுங்காகக் கொடுத்து பின்னர் அவர் தரும் சில்லறையைப் பெற்றுக் கொள்ளுமாறு கண்டிப்புடன் வளர்த்தவர்.

இரண்டு பிள்ளைகள் மட்டுமே கல்லூரி செல்லவைக்க முடிந்த ஏக்கத்தை அத்தனைப் பேரப்பிள்ளைகளையும் கல்லூரியில் படிக்க வைத்த பெருமை அவரையே சேரும். நான் மருத்துவப் படிப்பை முடித்துப் பயிற்சி மருத்துவராக இருந்து அவரது புற்றுநோய்க்கு முடிந்ததைதைச் செய்ததைப் பெருமையாகக் கருதியவர்.

அவருடைய 45 ஆவது நினைவுநாள் மார்ச் 4. அதை நினைவு கூரவும், உலகப் பெண்கள் நாளைக் கொண்டாடவும், நமது தமிழின உடன் பிறப்புக்களை உற்சாகப்படுத்தவும் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுடன் உணவு உன்பதற்கு ஏற்பாடு செய்து மகிழ்வுடன் கலந்துகொள்கின்றோம்.

நமது ஒவ்வொருவருக்கும் உள்ள உறவுகளில் பல பெண்கள் நமது மதிப்பிற்கும், மரியாதைக்கும், அன்பிற்கும் உகந்தவர்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நம் அனபையும், ஆறுதலையும் காட்டி பெண்ணினம் வாழ வழிகாட்ட, வாழவைக்க வாழ்த்துவோம்!

- டாக்டர் சோம.இளங்கோவன்,
பிச்சாண்டார்கோவில்.

Read more: http://viduthalai.in/page-8/97309.html#ixzz3TVsfwpuW

தமிழ் ஓவியா said...

நீதிபதிகள் ஆகப் பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் தகுதியா?
சென்னை சிறப்புக் கூட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்கநாதம்

சென்னை, மார்ச் 5_ சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக வருவதற்குப் பார்ப்பனர்கள் மட்டும்தான் தகுதி உடையவர்களா? என்ற வினாவை எழுப்பினர் வழக்குரைஞர்கள்.

திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன்:

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நிரப்பு வதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கையில் இதுவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பார்ப்பனர்கள் 6 பேர் இருக்கிறார்கள். அவர் களுடைய விகிதாச்சாரமாக உள்ள நூற்றுக்கு மூன்று பேர் என்றால் நாங்கள் மறுக்கவில்லை.

அதேநேரத் தில் மற்ற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த வழக்குரைஞர்கள் சென்னையில் ஏராளமானபேர் இருக்கிறார்கள். சிறப்பானவர்கள் இருக்கிறார்கள். மற்றவர்களோடு போட்டிபோட்டு வழக்குகளை நடத்தக்கூடிய அளவுக்கு இருக்கிறார்கள்.

பல வழக்குகளில் வெற் றியை ஈட்டி இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு இப்போது 6 பேர் இருக்கும் நீதிபதிகளோடு சேர்த்து, மீண்டும் 6 நீதிபதிகளை பார்ப்பனர்களை நிரப்பு வதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதை தடுப்பதற்காகத்தான் இந்தப்பொதுக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

தகுதி, திறமை என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இனமான பார்ப்பனருக்குமட்டும்தான் இருப்பதுபோல், சென்னை தலைமை நீதிபதி அவர்கள் நடந்துகொண் டிருக்கிறார்கள். ஆனால், இந்த உயர்நீதிமன்றத்தில் என்ன நடந்தது இதற்கு முன்பு என்பதை ஒருசில வார்த்தைகளில் கூறிவிடைபெற விரும்புகிறேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர் தலைமை நீதிபதியாக இருந்தார். அப்போது அவருக்கு வயதோ 62ஆண்டைத் தாண்டி மூன்று ஆண்டுகள் நீட்டிப் பில் உள்ளார். அவருடைய தம்பியோ (சஷ்டியப்தி) 60 ஆண்டுகள் கொண்டாடினார். அப்படி அவர் கொண்டாடியபோது அவர் 63ஆண்டுகளைத் தாண்டி யும் உயர்நீதிமன்றத்தில் தலைமைநீதிபதியாக இருந்துள்ளார்.

அப்போதுதான் பெரியார் அவர்கள் விடுதலை தலையங்கத்திலே எழுதுகிறார்கள். அப்படி என்றால் அவருடைய வயது என்ன? பொய் வயதைக் கொடுத்து உயர்நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வீற்றிருக்கிறாரே? அவர் கொடுத்த தீர்ப்புகள் என்ன ஆவது? என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது.

கோவார் என்கிற வழக்கு ஏற்றுக் கொள்ளப்படும் போது அவர் தலைமை நீதிபதி பதவியிலிருந்து வெளியேறிப் போகிறார். ஆனால், அதெல்லாம் இன்று தலைமை நீதிபதியாக வீற்றிருக்கும் திரு. கவுல் அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதை நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் எல்லோரும் இந்த நிலைமையை எடுத்துக்கூற டில்லிவரை சென்று அங்கு தலைமைநீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் மற்றும் பிற நீதிபதிகளையும் சந்தித்து இதை அவர்களுக்கு எடுத்துரைத்துவிட்டு வந்திருக் கிறார்கள்.

இதில் தொடர்ந்த போராட்டமாக உயர்நீதி மன்றத்திலே நடந்துகொண்டிருக்கிறது. நேற்றைக்கு முன்னாள் கூட பாலு அவர்கள் உயர்நீதிமன்றத் துக்குள் ஓர் ஆர்ப்பாட்டமும், அதை தடுத்து நிறுத்து வதற்கான முயற்சிகளும் நடந்துகொண்டே இருக் கின்றன. இந்த முயற்சியில் நமக்குத் தலைவராக இருந்து பல முக்கிய விவரங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூற உள்ளார்கள்.

திமுக மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி:

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிய மனத்தில் சமூகநீதிக்கோரி நடைபெற்றுக் கொண்டிருக் கின்ற இந்த சிறப்புக் கூட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, மேடையில் வீற்றிருக்கக்கூடிய வழக்குரைஞர் பெருமக்களே, பெரியோர்களே, தாய்மார்களே! உங்கள் அனை வருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

என்னுடைய தொண்டையில் செய்யப்பட்ட ஓர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, முதல் முறையாக பேசுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல்முதலில் இந்த மேடையில் குரல் எழுப்பு வதை பெருமையாக நான் கருதுகிறேன். காரணம் மக்களுக்குப் பேசக் கற்றுக்கொடுத்த ஒரு மண்ணி லிருந்து மீண்டும் பேசுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். எல்லோரும் எல்லாவற்றையும் கூறியிருக்கிறார்கள்.

நேரம் அதிகமாகிவிட்டது. நம்முடைய ஆசிரியர் அவர்கள் பேசவேண்டும். இங்கே பேசியவர்கள் எல் லாம் பல்வேறு கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். எனக்கு இருக்கிற மகிழ்ச்சி எல்லாம் என்னவென்றால், இந்த நாட்டிலே திராவிடம் என்கிற சொல்லைப் பயன்படுத்துவதைப் பாவமாகக் கருதக்கூடிய சிலபேர் இருக்கின்ற இந்த நாட்டில்,

திராவிட இயக்கத்தால் தான் உண்மையான வாழ்வைப் பெற்றுத் தரமுடியும் என்று அவர்களும் இந்த மேடையில் வந்திருக் கிறார்கள் என்றால் அதற்குக்காரணம். Dravidian Movement என்பதை untouchable class என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு Touchable Class என்பதை இந்த பொதுக்கூட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய நிகழ்ச்சியை நான் பார்க்கிறபோது 1950ஆம் ஆண்டில் அரசமைப்பு சட்டம் உருவாக்கப் பட்டு, அதற்குப் பின்னர் இதே சென்னை உயர்நீதி மன்றத்தில் செண்பகம் துரைராஜன் என்கிற ஒரு வழக்கு சென்னை மருத்துவக் கல்லூரியிலே, மனுவே போடாத ஒரு பார்ப்பனப் பெண்ணுக்காக தரப்பட்ட தீர்ப்புக்கு செண்பகம் துரைராஜன் தன் உணர்ச்சி யோடு மதித்தபோது, எப்படி தமிழ்நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டதோ, அதே கிளர்ச்சி ஏற்படும் தருணம் இப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

ஒருவகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்குக் காரணமானவர்களைப் பாராட்டுகின்றேன். ஏனென்றால், தமிழனுக்கு இப்போதுதான் சொரணை வர காரணமாக இருந்த அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். எப்பொழுதெல்லாம் வலி வருகிறதோ அப்பொழு தெல்லாம் இங்கு தேடி வருவார்கள்.

எல்லாம் பெற்றுக்கொண்டதும் முதலில் நமக்குத்தான் தீங்கு செய்வார்கள். அதனால்தான் இப்படிப்பட்ட கேடுகள் எல்லாம் நமக்கு வந்துக்கொண்டிருக்கிறது. அதை நம் ஆசிரியர் விளக்கமாக எடுத்துச்சொல்லுவார்.

ஒன்றை மட்டும் நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். பிரபாகரன் சொன்னார் அரசியல் வாதிகள் எல்லாம் பயப்படுவார்கள் என்று. நான் ஒரு கட்சியினுடைய அமைப்புச் செயலாளர். நம்மு டைய பாலு பாமக. இப்போதெல்லாம் பேஷன். சில பேருக்கு திராவிட இயக்கத்தை விமரிசிப்பது பேஷன். ஆனால் அந்த பேஷனை எல்லாம் இப்போது முறியடிக்கின்ற அளவுக்கு அய்யா ஆசிரியர் அவர்கள் சரியான சவுக்கடி கொடுப்பார்.

காரணம் இந்த சமுதாயம் புரையோடிப்போனதை மீட்கக் காரணமாக இருந்தது இந்த கருஞ்சட்டை மட்டும்தான் என்பதை யாரும் எளிதாக மறக்க முடியாது. கம்யூனர் ஜி.ஓ.வாக இருந்தாலும் சரி, வேலை வாய்ப்பு. எனக்கு என்ன மகிழ்ச்சி என்றால், தமிழ்நாட்டில் 84ஆயிரம் வழக்குரைஞர்கள் என்று பிரபாகரன் பெருமையாகச் சொன்னார்.

அந்த 84 ஆயிரம் வழக்குரைஞர்களும் இந்தக் கருப்புக்கோட்டு போடுவதற்கு யார் காரணம் என்று நினைத்தாலே, தமிழ்நாட்டிலே மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் அவர்கள் மிக அழகாக ஒன்றைச் சொன்னார். சைக்காலஜி ஆப் தி சாயில் இந்த மண்ணினுடைய சைக்காலஜி பெரியார், அண்ணா, பெருந்தலைவர் காமராசர் பிறந்த இந்த மண்ணினுடைய சைக்காலஜியை நீதிமன்றத்தில் இருக்கும் நீதியரசர் புரிந்துகொண்டு நீதிபதிகள் நியமனத்தில் நடந்துகொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இந்தியா முழுமைக்கும் நாம்தான் வழிகாட்டவேண்டும். எப்படி 1950ஆம் ஆண்டுக்குப் பின்னால், செண்பகம் துரை ராஜன் வழக்குக்குப் பின்னால், தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராசரும் போராடிஅரசியல் சட்டத்துக்கு முதல் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தார்களோ, அதேபோல, நமக்கெல்லாம் வழிகாட்டுவதற்கு, நம்மை வழிநடத்துவதற்கு ஆசிரியர் இருக்கிறார்.

காரணம் அவரே ஒரு வழக்குரைஞர். அவரை நம்புவோம். அவர் காட்டிய வழியில் செல்வோம். அவருடைய தலைமை யிலே இந்த நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி:

இந்தப்போராட்டம் தொடர்ச்சியாக மக்களிடம் ஆதரவு பெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 இடங்கள் காலியாக இருக்கின்றன. அந்த 18 இடங்களுக்கு பெயர்ப்பட்டியல் அனுப்பப்படுகிறது. அதில் 9பேர் மட்டும் பரிந்துரைக்கப்படுகிறார்கள் என்று சொல்லும்போது இருக்கிற காலியிடங்களை ஒரே முறையில் 18பேர்களையும் நீங்கள் பட்டியலிட்டு அனுப்புங்கள் என்பது இந்தப் போராட்டத்தினுடைய அடிப்படை கேள்வியாக இருக்கிறது.

வழக்குரைஞர் களைத் தேர்வு செய்கிறார்களே, அதில் திறமை அல்லது ஆற்றல் என்பதை எந்த அடிப்படையில் எடுக்கிறார்கள். யார்யாரெல்லாம் கூடி முடிவெடுக் கிறார்கள்? ஏற்கெனவே தந்தை பெரியார் திடலில் வழக்குரைஞர்களின் சமூகநீதி மாநாடு நடைபெற்றி ருக்கிறது.

நீதிபதி பதவிகள் அரசால் நிரப்பப்பட்டது, இன்று நீதிபதிகளே கையில் எடுத்துக்கொண்டு எப்படி தன்னைத்தானே நியமித்துக்கொள்ளுகிற அதிகாரத்தை அரசியல் சாசனத்தை மீறி உச்சநீதி மன்றமும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் கையில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் பலமுறை விவாதித்து இருக்கிறோம்.

இதில் தேர்ந்தெடுப்பவர்கள் குறித்த பட்டியல் அவ்வளவு ரகசியமாகக் காப்பாற்றப்படுகிறது. இந்தத் தேர்வு முறை என்பது முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை திராவிடர் கழகம் பல ஆண்டுகளாக தந்தை பெரியார் அவர்கள் காலத்திலே இருந்து வலியுறுத்தி வருகிறது.

அதனுடைய தொடர்ச்சியாக இன்று நடந்துகொண் டிருக்கக்கூடிய வழக்குரைஞர்கள் போராட்டத்தை ஒரு முழுமையான முறையில் வழிநடத்தக்கூடிய பொறுப்பை நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்தக் கூட்டத்தை தலைமையேற்று நடத்துகிறார்கள்.

இந்தப் போராட்டங்களை நாம் எப்படி எடுத்துச்செல்வது என்பதையும், நம்முடைய கோரிக்கை ஒரே குரலாக எழுப்பப்படவேண்டும் என்பதையும், நம்முடைய குரலில் ஏற்படக்கூடிய பிசிறுகள் போராட்டத்தை பின்னடையச் செய்யும் என்கிற உணர்வோடு நாம் நமக்குள் ஒருமித்த குரலை ஏற்றுக்கொண்டு, அந்தக் கோரிக்கையை வலிமையாக முன்வைப்பதுதான் உண்மையிலேயே இந்தக் கோரிக்கையினுடைய வெற்றியாக அமையும்.

அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் வழக்குரைஞர் எஸ்.பிரபாகரன்:

ஆறு மாதத்துக்கு முன்னால் இந்தப்பிரச்சினையில் காந்தி அவர்கள் வழக்குப்போட்டார். வழக்கைத் தள்ளுபடி செய்யும் நோக்கில் நீதிபதிகள் இருந்தபோது, காந்தி அவர்கள் பார்ப்பன நீதிபதிகள் இருக்கின்ற நீதிமன்றத்தில் நான் வழக்கை நடத்தத் தயாராக இல்லை என்றார். அதற்குப்பிறகு வழக்கில் நீதிபதிகள் நியமனத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாலை 3 மணிக்கு தடை உத்தரவு வந்தபிறகு, தலைமை நீதிபதி அறையில் தலைமை நீதிபதியே சொல்லச்சொல்ல மற்ற இரண்டு நீதிபதிகள் அமர்ந்து உடனடியாக டைப் செய்யப்பட்டு, உச்சநீதிமன்ற பதி வாளருக்கு சென்று, அடுத்த நாள் காலையில் உடனடி யாக இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. தடை உத்தரவுக்கு, அரசு வழக்குரைஞர் தடை வாங்குகிறார்.

தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட இந்த சமுதாயப்புரட்சி இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த சமுதாய சீர்திருத்தவாதியின் இயக்கத்தால்தான் இன்றைக்கு 60, 70 விழுக்காடு மற்ற ஜாதி சமுதாயத்தவர்கள் இன்றைக்கு நீதிபதிகளாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.

அதைக் கெடுத்துவிட வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடினேன். மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கவேண்டும். அது சமுதாயப் புரட்சியாக இருக்கவேண்டும். நீதிமான்கள் யாராக இருக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை இந்த மாமன்றம், இங்குள்ள வழக்குரைஞர்கள் எடுக்க வேண்டும் என்று கூறிக்கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...


சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் ஆர்.சி.பால்கனகராஜ்:

அறிவு, ஞானம் என இரண்டு உள்ளது. இரண் டையும் பயன்படுத்தி நாம் வஞ்சிக்கப்படாத வகையில் ஒட்டுமொத்தமாக ஒற்றுமையாகப் போராட வேண்டும்.

வழக்குரைஞர்கள் சமூகநீதிப்பேரவை தலைவர் வழக்குரைஞர் கே.பாலு:

சமூகநீதி தொடர்பான கருத்துகள் என்று சொன்னால் திராவிடர் கழகம்தான் அதில் தலைமை தாங்கவேண்டும். ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஆசிரியரிடம் சொல்லுங்கள் என்றார் மருத்துவர் இராமதாசு; நான் ஆசிரியர் அய்யாவிடம் சொன்னேன். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நெஞ்சம் குமுறு கிறது. நீதிபதிகள் நியமனத்தில் ஜாதி தலைவிரித் தாடுகிறது.

சமூகப் பிரச்சினையாக, மக்கள் பிரச்சினையாக, அரசியல் பிரச்சினையாக இன்னும் மாறாமல் இருக் கிறது என்பதை வேதனையோடு சுட்டிக்காட்டுகிறேன். 1921இல் நீதிக்கட்சித் துவங்கப்பட்டபிறகு கம்யூனல் ஜி.ஓ. இடஒதுக்கீட்டுக்காக வந்த பிரச்சினை உருவெடுத்தது, 1951இல் அரசியல் சட்டத்தைத் திருத்த தந்தை பெரியாரால் இரண்டாவது இட ஒதுக் கீட்டுக்கான போர் இந்தியா முழுவதும் தலைவிரித் தாடியது. அதன்காரணமாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

1980_களில் மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு இடஒதுக்கீடுவேண்டும் என்று நடத் தப்பட்ட போராட்டத்துக்கு பிறகு திராவிட முன் னேற்றக்கழகம் 1989 இல் ஆட்சிக்கு வந்து 20 விழுக் காடு இட ஒதுக்கீட்டை 109 ஜாதிகளுக்கு கொடுத் தார்கள். நான்காவது போரை ஆசிரியர் அவர்கள் துவங்கவேண்டும் என்று நான் சொல்லுவேன்.

உயர்நீதிமன்றத்தில் நடக்கக்கூடிய பிரச்சினை என்பது நீதி சம்மந்தப்பட்ட பிரச்சினை, வழக்குரை ஞர்கள் பிரச்சினை என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சமூக நீதிக்காக மிக நீண்ட போராட்டத்தை நடத்தி சட்டமன்றத்தின்மூலமும், நாடாளுமன்றத்தின்மூலமும் உரிமைகளைப் பெறுகின்றபோது அதற்கு சாவுமணி அடிக்கக்கூடிய இடமாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இருந்து கொண்டிருக்கிறது.

நீதித்துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டி ருந்தால், இட ஒதுக்கீட்டில் உச்சவரம்பு 50 விழுக்காடு என்பது இருந்திருக்காது. கிரீமிலேயர் முறை இல்லாமல் போயிருக்கும். இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு என்பது கிடைத்திருக்கும்.இதையெல்லாம் தடுத்த இடம் உயர்நீதிமன்றம். நீதிபதிகள் எப்படி எல்லாம் சமூகநீதியை குழி தோண்டிப் புதைக்கலாம் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சமூக நீதிக்காக எதிலும் சமரசம் செய்து கொள் வோம். ஆனால், சமூக நீதியை அடைவதில் எதிலும் சமரசம் கொள்ளமாட்டோம். ஏனென்றால், தந்தை பெரியார் அவர்களால் இட ஒதுக்கீடு எங்கள் உதிரத் தோடு கலந்துவிட்டது. உயர்நீதிமன்றத்தில் ஒட்டு மொத்தமாகப் போராட்டம் வெடித்துள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனையோ இயக்கங்கள் இருக் கலாம். தாய் இயக்கம் திராவிடர் கழகம். வழிகாட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் திராவிடர் கழகத் துக்கு இருக்கிறது. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இருக்கிறது.

பெண் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் வி.நளினி:

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பெண்களுக்கு ஒரு சதவிகித அளவுகூட உரிமை கொடுக்கவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லை. வழக்குரைஞர்கள் சங்கத்தினருடன்கூட கலந்து ஆலோசிக்கவில்லை. எல்லா சமூகத்தவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களை முன் னிறுத்தவே இரண்டு கட்டமாகப் பட்டியலை புத்தி சாலித்தனமாக அனுப்புகிறார்கள். இட ஒதுக்கீட்டுக் காக இன்று நேற்றல்ல. நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். நீதிபதி நியமனத்தில் ஆர்.காந்தி போட்ட வழக்கிலிருந்து உண்மைகள் தெரிய வந்தது. மேலும் மேலும் பார்ப்பனர்களுக்கே வாய்ப்பு கொடுக் கிறார்கள்.

பார்ப்பனர்களுக்கு மட்டுமே புத்தி இருப்ப தாக தவறாக முடிவெடுத்துள்ளார்கள். மற்ற ஜாதி யினருக்கு படிப்பறிவு கிடையாதா? ஏன் அவர்கள் முன்னேறக் கூடாது? இதை திராவிடர் கழகம் முன்னெடுத்து இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றுசேருவோம்.

தமிழ்நாடு அம்பேத்கர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பேராசிரியர் எஸ்.உதயபானு:

தலைமை வகிக்கும் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்தப்பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறார்கள். எந்த பிரச்சினையானாலும் ஆசிரியர் அவர்கள் கையில் எடுக்கும்போது அது வெற்றியைத்தான் பெறும்.

தமிழ்நாடு முற்போக்கு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ரஜினிகாந்த்:

திராவிடர்கள் ஒருங்கிணைந்தால், ஜாதியை மறந்து, ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒன்றாக களத்தில் நின்றோம் என்று சொன்னால், பார்ப்பனீயத்தின் வேர் சாய்க்கப்படும். இந்திய அரசமைப்பு சட்டத்திலே இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எந்த சமூகத் திற்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லையோ, அந்த சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு சட்டம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 12இல் கூறப்பட்டுள்ளதில் அரசு என்கிற வரையறைக்குள் நீதித்துறை வராதா?

பிரிவு 16இல், 16(4)இல் அரசில் அனைத்து துறைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் இல் லாத சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று உள்ளது. சமூக நீதிக்கானப் போராட்டம் வெல்லட்டும். தந்தை பெரியார் சமூகநீதிக்கொடியைக் கொண்டு பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்குவோம்.

எஸ்.டி.பி.அய். அமைப்பின் வழக்குரைஞர் ராஜாமுகமது:

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், சமூகநீதி வழங்கக்கூடிய இடத்திலே சமூக நீதி கேட்கும் ஓர் அவலத்தை இன்றைக்கு நாம் தொடர்ந்து நடத்திக்கொண்டுள்ளோம். சமூக நீதிப் போராட்டம் என்றாலே, அங்கே பெரியார் கொள்கை களும், பெரியார்சித்தாந்தவாதிகளும் முன்னிலையில் இருப்பார்கள் என்பதிலே தமிழகத்தைச் சார்ந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

எப்போதெல்லாம் சென்னை உயர்நீதிமன்றத்திலே பார்ப்பனர் ஆதிக்கமும் மற்றும் நீதிமன்றத் தேர்வு முறையிலே ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போதெல்லாம் தமிழர் தலைவர் அய்யாவின் குரல் ஒலிப்பதை சட்ட மாணவராக இருக்கும்போதே என்னால் உணர முடிந்தது.

இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் கோபால் சிங் அறிக்கையில் இந்தியாவில் சிறுபான்மைச் சமுதாயத்தினருக்கு அதிலும் குறிப்பாக நீதித்துறையில் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும். அவர்களுடைய உரிமைகளும், உணர்வுகளும் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்திலே சச்சார் குழு, ரங்கநாத் மிஸ்ரா குழு உள்ளிட்ட பல அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. சிறுபான்மையர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் எல்லாத் துறையிலும் அளிக் காமல் ஒதுக்கப்படுவதுபோன்று திட்டமிட்டு இந்த நீதித்துறையிலும் அளிக்காமல் ஒதுக்கப்படுவதை நம்மால் காண முடிகிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் சமூக நீதி கேட்டு போராடுவது என்பது ஏற்படுத்தப்படுவது என்பது தற்செயலானதா? இது ஒரு சதித்திட்டமா? என்பதை நாம் உணர வேண்டும்.

சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் ஒரு குறிப்பிட்ட இனம் வளர்ந்துகொண்டே இருப்பதும், மற்ற சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் குறைந்துகொண்டே இருப்பது, உடலில் ஒரு பகுதி மட்டும் வளர்ந்து கொண்டிருந் தால் அதை வியாதி, அந்த இடத்தில் குறை உள்ளது என்று கூறுவோம். அதே நிலைதான் கொலிஜியம் முறையில் இன்றைக்கு நீதிபதிகள் நியமனத்தில் உள்ளது.

இதில் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் கூட இன்றைக்கும் நம் உரிமைகளைப் பெற முடிய வில்லை என்று சொன்னால், இதில் மிகப்பெரிய சதித் திட்டம் பின்னிப்பிணைந்து இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக சிறுபான்மை சமூகம் இந்த நீதித்துறை யால் பாதிக்கப்பட்டு வருகிறது.

இன்றைக்கு ஏன் உயர்நீதிமன்றத்திலே சமூக நீதி வேண்டும் என்று கேட்கின்றோம்? இன்றைக்கு சட்ட மன்றத்தைக் காட்டிலும், நாடாளுமன்றத்தைக் காட்டி லும் அன்றாட வாழ்க்கையிலே பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஓர் அதிகாரம் உள்ளதாக உயர்நீதிமன்றம் உள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/97266.html#ixzz3TVt8Kjw2

தமிழ் ஓவியா said...

இளைஞர் என்பதற்கு இலக்கணம் என்ன? வயதைப் பொறுத்ததல்ல; அது உணர்வைப் பொறுத்தது

தந்தை பெரியார் அளவீட்டின்படி தளபதி ஸ்டாலின் இளைஞரே!

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் உரை


சென்னை, மார்ச். 4- தளபதி மு.க.ஸ்டாலின் இளைஞரணி பொறுப்பாளராக இருப்பது அவரின் வயதைப் பொறுத்ததல்ல - உணர்வைப் பொறுத்தே என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

2.3.2015 அன்று சென்னை வேளச்சேரி - விஜயநகர் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

மா.சு. என்று அழைக்கப்படுகிற, எங்கள் மாசில்லா மணி

கொள்கை ரீதியிலே தமிழர்களால் எதிர்பார்க்கப்படு கிறதோ, அந்தத் தமிழருடைய அற்புதமான ஒரு பிறந்த நாளை, ஒரு சிறந்த இளைஞர் எழுச்சி நாள் என்று சொல்லக்கூடிய இந்தத் தலைப்பில், கடந்த சில நாள்களாக, சிறப்பாக பல்வேறு வகையில், தமிழகம் முழுவதும் மட்டு மல்லாமல், கடல் கடந்தும் கொண்டாடப்படுகின்ற இந்தக் காலகட்டத்திலே, இந்தப் பகுதியில் மிக அருமையாக, இன்றைக்கு இரண்டாவது நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கக்கூடிய, பாராட்டுதலுக் கும், பெருமிதத்திற்கும் உரிய நம்முடைய மாவட்டத்தினு டைய செயலாளர், ஆற்றல்மிக்க செயல் வீரர் மேனாள் மேயர் என்று சொல்வதைவிட, அதைவிட தளபதியினு டைய நம்பிக்கைக்குரிய ஓர் அற்புதமான தோழர், தொண்டர் என்ற பெருமையோடு, நாங்கள் எல்லாம் விரும்பக்கூடிய அளவிற்கு, என்றைக்கும் இருக்கக்கூடிய கொள்கையாளர், சுயமரியாதை வீரர் மா.சு. என்று அழைக்கப்படுகிற, எங்கள் மாசில்லா மணி, சுப்பிரமணியம் அவர்களே,

இந்த நிகழ்ச்சியில், அற்புதமாக கவிஞர்களையெல்லாம் அழைத்து, அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, இன உணர்வு, கொள்கை உணர்வு, மொழி உணர்வு, திராவிடத் தால்தான் எழுந்தோம் என்று காட்டக்கூடிய ஒரு சிறப்பான உணர்வுக்கு என்றைக்கும் கொள்கை ரீதியாகவே காத்துக் கொண்டும், செயல்படுகின்ற இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் தாயகம் கவி அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் அற்புதமான ஆறு கவிஞர்கள். இவர்களையெல்லாம் இணைத்து, நம்முடைய அருமை முதுபெரும் கவித்துறை தலைவரை, தமிழ்நாட்டிலே, திரைப்படமானாலும், தெருவிலே நடைபெறக்கூடிய நிகழ்ச்சியானாலும், எல்லா வகையிலும் சிறப்பாக இருந்து திராவிடத்தினுடைய ஈர்ப்பு என்ன? திராவிடத்தினுடைய முழு உருவம் எப்படிப்பட்டது என்று காட்டவேண்டு மானால், அது பேராசிரியர் கவிஞர் மு.மேத்தா அவர்களைத் தான் காட்டவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஓர் எழுச்சிமிகுந்த கவிஞராக, எந்தக் கவியரங்கத்திலும் சரி, அல்லது அவையிலும் சரி, மிகச் சிறப்பாக இருக்கக்கூடிய இந்தக் கவியரங்கத்தின் தலைவர் அருமைச் சகோதரர் மானமிகு கவிஞர் மேத்தா அவர்களே,

சங்கத் தமிழ் பெற்ற புறப்பாட்டு வரி

நல்ல தலைப்பு, பொதுத் தலைப்பு - சங்கத் தமிழ் பெற்ற புறப்பாட்டு வரி என்ற அற்புதமான தலைப்பைக் கொடுத்து, இப்பொழுது தேவையானது புறப்பாட்டுத்தான். இப் பொழுது தேவையானதெல்லாம் மிகத் தெளிவான வகை யிலே, ஓர் எழுச்சியோடு ஒரு களத்திலே நிற்கவேண்டிய அளவிற்கு, நம்மை, நம்முடைய இன எதிரிகள் ஆக்கி யிருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


இந்தக் காலகட்டத்திலே கவிதை பாடும்பொழுதுகூட, களத்தைத்தான் நினைக்கவேண்டுமே தவிர, இல்லத்தை நினைக்கக்கூடாது. அல்லது வேறு வகையில் நம்முடைய எண்ணங்கள் போகக்கூடாது என்கிற உணர்ச்சியை மய்யப்படுத்தி, நம்முடைய தளபதி அவர்களுடைய பிறந்த நாள் விழாவிலும், அது ஒரு மிகப்பெரிய இனப்போர் முழக்கமாக இருக்கவேண்டும்; அறிவுப் போர் முழக்கமாக இருக்கவேண்டும்; மானப் போர் முழக்கமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை தட்டி எழுப்பக்கூடிய அந்த ஓர் அற்புதமான அரங்கமாக இந்த மேடையை ஆக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக வந்திருக்கின்ற அருமைக் கவிஞர்களே தாய்மார்களே, இளைஞர்களே, தோழர்களே, உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.

இங்கே இந்தக் கவியரங்கத்தைப் பார்க்கின்ற நேரத்தில், எவ்வளவு உணர்ச்சிபூர்வமான கொள்கையாளர்களான கவிஞர்கள் இருக்கிறார்கள்.

இங்கே அழகாகச் சொன்னார், ஆட்சியிலே இல்லாத போது நாங்கள் வந்திருக்கின்றோம் என்று சொன்னார். ஆட்சியில் இருக்கும்பொழுது யார் வேண்டுமானாலும் வருவார்கள். ஆனால், ஆட்சி என்பது நமக்கு முக்கியமல்ல; இந்த இயக்கம் ஆட்சிக்காகத் தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. ஆட்சி வந்தால், அதன்மூலமாக நம்முடைய கொள் கைகளை செய்வோம் என்பதற்காகப் பிறந்ததுதான் திரா விடர் இயக்கம். அதனைத்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த இயக்கம் எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது? ஏன் தளபதி அவர்களுடைய பிறந்த நாள் விழாவை நாம் கொண்டாடுவதன்மூலமாக, ஓர் உணர்ச்சியை, எழுச்சியை உருவாக்க விரும்புகிறோம் என்பது இருக்கிறதே, அதுதான் மிக முக்கியமானது. இது ஆட்சிக்காக அல்ல நண்பர்களே, அல்லது இப்பொழுது நடைபெறுவதைப்போல காட்சிக் காக அல்ல நண்பர்களே! இந்த இனத்தின் மீட்சிக்காக இருக்கிற இயக்கம் இந்த இயக்கம்.

தமிழ் ஓவியா said...

அதற்காகத்தான் தந்தை பெரியார், அதற்காகத்தான் பேரறிஞர் அண்ணா, அதற்காகத்தான் கலைஞர், என் றைக்கும் இளைஞர்களை வழிநடத்துவதற்கு ஈடு இணை யற்ற தளபதியாக இருக்கின்ற நம்முடைய அருமைத் தளபதி மு.க.ஸ்டாலின் போன்றவர்கள். அதற்காகத்தான் இன்றைக்கு முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.

இன முழக்கம் மக்கள் மத்தியிலே வரவேண்டும்

எனவே, நம்முடைய இனம், இது ஒரு களம். அந்தக் களத்திலே நம்முடைய இனம் சோதனைக்கு ஆளாகியிருக் கிறது. நம்முடைய தலைவர்கள் இதுவரையில் வகுத்துத் தந்த பாதைகளெல்லாம் அடைபட்டுப் போகின்ற நேரத்தில், பாட்டுப்பாடி இவர்கள் கதவைத் தட்டுகிறார்கள். அதுவும், புறப்பாட்டுப் பாட புறப்பட்டு இருக்கிறார்கள். சரியான தருணத்தில் நீங்கள் புறப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் புறப்பட்டால் மட்டும் போதாது கவிஞர்களே, இந்த மக்களை யெல்லாம் உங்கள் கவிதையாற்றலால், வீட்டிற்கு வீடு புறப்படும்படியாக, நீங்கள் ஆற்றலோடு முன்னாலே பாடுங் கள். தெருவெல்லாம் முழக்கமிடுங்கள்; வீதியெல்லாம் இந்த முழக்கம் இருக்கட்டும்; இன முழக்கம் மக்கள் மத்தியிலே வரவேண்டும். அதுதான் மிக முக்கியமானது.

நம்முடைய தளபதி அவர்களுடைய வாழ்க்கை, 63 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்று சொல்கின்ற நேரத் தில், இந்த 63 வயதிலே, அவருடைய சிறப்பு என்னவென்று சொன்னால், மற்றவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு, ஓர் இளைஞராக இருந்து, மிசாவில் அவர்கள் தாக்கப்பட்டது. இது மற்றவர்களுக்கு எளிதாகக் கிடைக்காது. நீங்கள் எல்லாம் படிப்பீர்கள், படித்துத் தெரிந்துகொள்வீர்கள். அவரை அடித்து சிறைச்சாலைக்குள் போட்டபொழுது, அணைத்து அவரை வரவேற்ற ஓர் உருவம்தான் இப் பொழுது உங்கள் முன்பு உரையாற்றிக் கொண்டிருக்கின்ற நான். என்மீதுதான் வந்து விழுந்தார். எட்டடிக் கொட்டடி என்று அண்ணா அவர்கள் எழுதினார்கள்.

எட்டடிக் கொட்டடியில், அதுவும் பெருநோயாளிகளுக் கென்று ஒதுக்கப்பட்ட அறைகளையெல்லாம் காலி செய்து விட்டு, எங்களை உள்ளே வைத்தார்கள். 1976, ஜனவரி 31 ஆம் தேதி. அன்றைக்கு நெருக்கடி காலம் என்ற முறையில், எத்தனையோ விருப்புகளைக் காட்டி, நெருக்கடி நிலையை ஆதரியுங்கள் என்று இந்திரா காந்தி அம்மையார் பிரதம ராக இருந்தபொழுது நடந்தது, ஜனநாயகத்தைக் காப்பாற்று வதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள் கையாக இருக்க முடியுமே தவிர, இதற்காக நாங்கள் ஒரு போதும், நாங்கள் உங்களுடைய ஈர்ப்புகளை அல்லது நீங்கள் வழங்குகின்ற சன்மானங்களை ஏற்று நாங்கள் கொள்கையை மாற்றிக்கொள்ளமாட்டோம். ஆட்சியை இழந்தாலும் இழப்போமே தவிர, கொள்கையை இழக்கமாட் டோம் என்று சொன்ன பெருமை கலைஞரைச் சாரும்.

ஈரோட்டுக் குருகுலத்தில் பெற்ற பயிற்சிகள்

தமிழ் ஓவியா said...

அதன் விளைவாக என்னாயிற்று? குஜராத்தும், தமிழ் நாடும் இரண்டும் ஒழுங்கீனமான தீவுகளாக இருக்கின்றன என்று அந்த அம்மையார் பேசினார். அப்பொழுது பிறக்காதவர்கள் இன்றைக்கு இளைஞராக இன்றைக்கு வந்திருக்கிறீர்கள். வரலாற்றினுடைய அந்தப் பக்கங் களைப் புரட்டிப் பார்க்கவேண்டும். போர்ப் பாட்டு அப் பொழுதே பாடப்பட்டது. கலைஞரால் பாடப்பட்டது. இந்தியாவிலே வேறு எவரும் எதிர்க்கத் துணிவில்லாத நேரத்திலே, அவர்கள் எதிர்த்தார்கள். இதற்குப் பெயர்தான், ஈரோட்டுப் பூகம்பம்; இதற்குப் பெயர்தான் ஈரோட்டுக் குருகுலத்தில் பெற்ற பயிற்சிகள்; அந்தக் குருகுலத்திலே கலைஞர் பயிற்சி பெற்றார். அவரிடத்திலே அருமையாகப் பயிற்சி பெற்று, அதே அளவிற்கு உழைப்பின் உருவமாக இன்றைக்குத் தளபதி ஸ்டாலின் அவர்கள் உலகெலாம் சுற்றிக் கொண்டிருக்கிறார்; எல்லோருடைய கவனத்தை யும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார். அதைத்தான் அழகாகச் சொன்னீர்கள்.

நான் இன்னமும்கூட இருந்து எல்லோருடைய கவி தையையும் கேட்கவேண்டும். இதிலே எனக்கு அறிமுகமான வர் கள் யுவபாரதி போன்றவர்கள் மற்றவர்களும் நண்பர் கள் தான். மற்றவர்களைப் புதியதாகப் பார்க்கும்பொழுது பெரிய நம்பிக்கை எனக்கு வந்தது. அதிலும் கவிஞர் இசையைப் பார்த்தோம்; இசையைவிட மிகத் தெளிவாக, இசையிலே ஓர் ஈர்ப்பு வரும். இசையினுடைய வேகம். அதுபோலவே, ஒவ்வொரு கவிஞருடைய உறுதி இருக்கிறதே, நீங்கள் எல்லாம் கவிஞர்கள் சில நேரங்களில் தடுமாறுவார்கள், என்னை மன்னிக்கவேண்டும் உண்மையைச் சொல்வதற் காக. ஆனால், இந்தக் கவிஞர்கள் ஒருபோதும் கொள்கைத் தடுமாற்றம் இல்லாதவர்கள் என்று நினைக்கின்ற நேரத்தில், இவ்விழாவில் கலந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடை கிறேன். அவர்களைப் பாராட்டுகிறேன். இன்னும் மூன்று பேர்களுடைய பாட்டைக் கேட்கவேண்டும் என்று விருப்பம் இருந்தாலும்கூட, சில நெருக்கடிகள் இருக்கின்ற காரணத்தினால், நான் இடையிலே விடைபெற்று செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, சில செய்தி களை மட்டும் சொல்கிறேன்.

தமிழ் ஓவியா said...

நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்தவர் அல்ல;

தளபதியினுடைய வாழ்க்கையில் சிறப்பானது என்ன? அவர் திடீரென்று நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்தவர் அல்ல; அதனைத்தான் நினைத்துப் பார்க்க வேண்டும். தானே, மற்றவர்களைப் போல தலைவராக அவரை ஆக்கிக்காட்டி மேலே நிறுத்தியிருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய நிலை அல்ல. அதனைத்தான் புரிந்துகொள்ளவேண்டும். அந்த வகையில், நம்முடைய தளபதி அவர்கள், சிறைச்சாலையில் மிசாவில் அடைக்கப் பட்டபொழுது, நாங்கள் எல்லாம் அதற்கு முதல் நாள் தாக்கப்பட்டு, அந்த நிகழ்ச்சி முடிந்தது. எங்கிருக்கிறோம் என்று தெரியாது. கலைஞருக்கும் தெரியாது. எந்தச் சிறையில் இருக்கிறோம் என்று தெரியாது. மிசாவினுடைய சிறப்பு என்ன? பல பேருக்கு மிசா என்றால் என்னவென்று தெரியாது. சிறைச்சாலைக்குச் செல்வது என்பது வேறு. ஆனால், மிசா என்றால், எதற்காக சிறைக்குப் போனோம் என்று யாருக்கும் தெரியாது. சிறை பிடிக்கப்பட்டவருக்கும் தெரியாது; உத்தரவு போட்டவருக்கே தெரியாது. இவரை எதற்காக கைது செய்தோம் என்று. பட்டியல் போகும், மாவட்ட அதிகாரி உத்தரவு போட்டு அனுப்புவார். எப் பொழுது வெளியே அனுப்புவார்கள் என்றும் தெரியாது.

இந்தச் சூழ்நிலையில், வேறு எங்கும் நடக்காத கொடுமை சென்னை சிறைச்சாலையில் நடந்தபொழுது, அங்கே இவரைத் தேடுகிறார்கள் என்று சொன்ன நேரத்தில், கலைஞர் அவர்கள், நானே ஒப்படைக்கிறேன் என்று சொல்லி, தன்னுடைய மகனை ஒப்படைத்தார்கள் என்று சொன்னால், அதற்குத் தயாராக, இளைஞரணியில் இருந்த ஒருவர் வந்தார் என்று சொன்னால், அன்றைக்கு அவருக்கு இருந்த கொள்கை உறுதி, இன்றைக்கும் ஆயிரம் ஆயிரம் மடங்கு உயர்ந்திருக்கிறதே தவிர, அது பதவிகளால் அளக்கப்படக்கூடியது அல்ல. அதைத்தான் எண்ணிப்பார்க்கவேண்டும்.
அவர் நேற்று என்ன பதவியில் இருந்தார்; மேயராக இருந்தார்; அமைச்சராக இருந்தார்; துணை முதலமைச் சரானார்; நாளைக்கு முதலமைச்சராவார். இப்படிப்பட்ட பதவிகளால் அளக்கப்படுவது அல்ல. அவருடைய தன்னல மறுப்பு; அவருடைய கொள்கை உறுதி. அவருடைய கடும் உழைப்பு. இந்த இயக்கத்தை எங்களைப் போன்றவர்கள் தூக்கி நிறுத்த முடியும் என்ற அந்த நம்பிக்கை. இதோ ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தோழர்கள் வந்திருக் கிறார்கள்.

தி.மு.க. தோற்றுவிட்டது; தி.மு.க.வுக்கு நாடாளு மன்றத்தில் இடமில்லை என்றெல்லாம், பல ஊடகங்கள் ஏதோ தி.மு.க.வினுடைய அத்தியாயமே முடிந்துவிட்டது என்று கருதுகின்ற நேரத்தில், இவருடைய பிறந்த நாள் விழா என்கிற பெயராலே, இப்படி கொண்டாடுகிறார்கள் என்றால், இதுதான் எழுச்சியினுடைய உருவம்; இதுதான் மறுமலர்ச்சியினுடைய அடையாளம். எனவே, அதை சிறப்பாக எல்லோரும் எண்ணிப் பார்க்கவேண்டும்.

தமிழ் ஓவியா said...

ஆகவே, இந்த வாய்ப்பு சாதாரண வாய்ப்பு அல்ல. மிகப் பெரியதொரு வாய்ப்பு. இந்த வாய்ப்பை நாம் எல்லோருமே நினைத்து இந்தப் பிரச்சாரத்தில் அழகாகச் சொன்னார்கள். திட்டங்களைச் சொன்னார்கள். இந்த நிகழ்ச்சி இது ஒரு துவக்கம். இது ஒரு முடிவல்ல. இதைத் தொடர்ந்து, வீதிக்கு வீதி அவர்களே சொன்னார்கள். வீட்டுக்கு வீடு. இவை களெல்லாம் நீங்கள் சொல்லவேண்டும். அதைத்தான் திராவிட முன்னேற்றக் கழகச் செயலரும், தொண்டரும், இருபால் தொண்டர்கள் தாய்மார்கள் உள்பட, மகளிரணி யைச் சார்ந்த தோழியர்கள், இளைஞரணித் தோழர்கள் உள்பட அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் மிக வேகமாக. இதைச் சொன்னாரே, தாயகம் அவர்களும் சொன்னார்கள், நம்முடைய அருமைச் செயலாளர் சுப்பிர மணியம் அவர்களும் சொன்னார்கள்.

தமிழ் ஓவியா said...

இதில் அவர்களுடைய செய்திப்படி, குருதிக்கொடை அதைக் கொடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். மிகப்பெரிய அளவுக்கு அளவீடு வைத்து, எல்லோரும் அதைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பேதம் ஒழிப்பு

இது வெறும் மனிதநேயப் பணி மட்டும் அல்ல. அதற்கு அவர்கள் கொடுத்திருக்கிற தலைப்பு இருக்கிறதே, அது ரொம்ப பாராட்ட வேண்டிய தலைப்பு. என்னவென்றால், பேதம் ஒழிப்பு. எந்த பேதங்களும் கிடையாது. எல்லோருக் கும் ஒன்று என்று மானிடத்தை ஒன்று சேர்க்கக்கூடிய மிகப்பெரிய அளவு. எண்ணிப்பாருங்கள். அய்யங்காருக்கு அடிபட்டு, அவருக்கு ரத்தம் தேவை என்று சொன்னால், என்ன குரூப் ரத்தம் தேவை என்று மருத்துவர் கேட்பார். அய்யங்கார் ரத்தம் வேண்டும் என்றா அவர் சொல்லுவார்?

கிடையவே கிடையாது. என்ன குரூப்? ஏ ஒன் பாசிட் டிவ், ஓ குரூப், இப்படி பல வகையாக ரத்தத்தில் உலகம் முழுவதும் பிரித்திருக்கிறார்கள். அந்த ரத்தம் யாருக்குப் பொருந்துமோ, அவருக்கு அது போக வேண்டும். அந்த முறையிலே பார்க்கும்போது, இது எந்த ஜாதிக்கு என்பது கிடையாது. எந்த மதத்துக்கு என்று கிடையாது. எந்தக் கட்சிக்கு என்று கிடையாது என்று சொல்லும்போது, ஜாதி மதம் என்ப தெல்லாம் மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்டது என்ற பேதத்தை இந்த விழாக்கள்மூலமாக ஒழிப்பதற்கு அவர்கள் திட்ட மிட்டார்களே, அவர்களை நான் வெகுவாகப் பாராட்டு கிறேன். இது கொள்கைபூர்வமான விழா.

மனித நேயத்துக்காக மட்டுமல்ல. இந்த மத வெறி ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு அத்தனையும் முன்னெடுக்கக்கூடிய வாய்ப்பாக இது இருக்கிறது.

தமிழ் ஓவியா said...


எனவே, இந்த விழாக்கள் பெருகவேண்டும். ஒவ்வொரு வரும் உறுப்புக் கொடை உள்பட இப்போது கொடுக் கிறோம். அதிலும்கூட இன்னும் ஜாதி பார்த்தா அந்த உறுப்பு பொருத்தப்படுகிறது? நாடு பார்த்தா அந்த உறுப்பு பொருத்தப்படுகிறது? எல்லையைக் காக்கும் அவருக்கு விழிக்கொடை மூலமாக கொடுக்கப்படுகிறது.
எனவே, தன்னுடைய பிறந்த நாள் விழாவிலே, ஒரு நல்ல மனித நேயமும், அதேநேரத்தில் மனித நேயம் இருந் தால் மட்டும் போதாது. இன உணர்வு அடிப்படையிலே, எந்தக் கொள்கைக்காக திராவிடர் இயக்கம் தொடங்கப்பட் டதோ, அந்த ஜாதி ஒழிப்பு, அந்த பேதம் ஒழிப்பு என்பதை மய்யப்படுத்தி, இப்படி ஓர் அற்புதமான ஒரு வாய்ப்பை அவர்கள் தந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதை நம் முடைய இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள் என்று சொன்னால், உங்களுடைய முயற்சி வெல்லவேண்டும் என்று தெளி வாகச் சொல்லி, வாழ்த்தி, இன்னும் மூன்று கவிஞர்கள் இருக்கிறார்கள்.

நான் எத்தனையோ முறை நம்முடைய பொதுக்கூட்டத் திலேகூட பேசக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதால், இங்கே ஒன்றே ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.
நாம் களத்திலே நிற்கிறோம். உறுதியோடு இருங்கள். தெளிவாக இருங்கள். போராடக்கூடிய உணர்வைப் பெற்றிடுங்கள். பதவி நமக்கு முக்கியமல்ல. இன்னும்கூட சிலர் நினைக்கிறார்கள். அவருக்கு 63 வயதாகி இருக்கிறதே, இப்போதும் இளைஞர் அணியிலே இருக்கிறாரே என்று எங்கோ சிலர் கிண்டலாக எழுதியதைக் கூட நான் படித் தேன். பார்த்தேன்.

வாலிபன் என்பதற்கு தந்தை பெரியாரின் விளக்கம்

நான் இந்தச் செய்தியை தந்தை பெரியாரு டைய மாணவன் என்கிற முறையிலே பார்த்தபோது, ஒரு செய்தியை உங்களுக்கெல்லாம் நினைவூட்டுகிறேன். தந்தை பெரியார் அவர்கள் வாலிபன் என்பதற்கு ஒரு விளக்கம் சொல்லுகிறார். இது 1944 குடியரசு ஏட்டில் இதே மார்ச் மாதம் 18.3.1944 லிலே ஒரு விளக்கம் சொல்லுகிறார்.
அந்த விளக்கம் நம்முடைய தளபதி அவர்களுடைய உழைப்புக்கு எவ்வளவு பெரிய ஆதாரபூர்வமாக, ஒரு சிறப் பான, பாராட்டுப்பத்திரமாக இருக்கிறது! எப்படி ஒரு அடித் தளமாக இருக்கிறது என்பதை நினைத்து நினைத்து, நான் வருவதற்கு முன்னாலே, அதை உங்கள் மத்தியிலே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து தான் நான் வந்தேன்.

பெரியார் பேசுகிறார். கேளுங்கள். பெரியாரை அழைத்து வந்து இந்த மேடையிலே நாம் பேச வைப்போம். இந்த விழா விலே பேச வைப்போம். அப்போது பெரியார் பேசுகிறார்.

நான் ஒருவரை வாலிபர் என்று சொல்லுவது, அன்னாரு டைய வயதைப்பொறுத்து அல்ல என்கிறார் தெளிவாக! இவ் வளவு வயதாகிவிட்டதே இளைஞர் அணியிலே இருக் கலாமா? என்று கேட்கிறார்கள். அதற்குப் பதில் சொல்லுகி றோம். மிகப்பெரிய அளவிலே, நான் ஒருவரை வாலிபர் என்று சொல்லுவது, இளைஞர் என்று சொல்லுவது அவர் வயதைப்பொறுத்தது அல்ல. என்னைப் பொறுத்த வரை, எனக்கு இயக்கப் பொறுப் பைத்தவிர வேறு பொறுப்பு எது வும் இல்லை. எனவேதான் என்னை நான் வாலிபன் என்று கருதிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிறார்கள்.

என்றும் இளைஞர்கள் நாங்கள்

இந்த இயக்கத்தை நடத்துவது என்ற பொறுப்பைத் தவிர, இதற்காக உழைப்பது, என்னை நானே தியாகம் செய்வது என்ற பொறுப்பைத் தவிர எனக்கு வேறு இல்லை என்று நினைக்கின்ற நேரத்தில், தளபதி என்றும் இளைஞர்; கலைஞர் என்றும் இளைஞர், இனமானப் பேராசிரியர் என் றும் இளைஞர், எங்களைப் போன்றோர் என்றும் இளைஞர் கள், ஏன் நீங்கள் எல்லோரும் இளைஞர்கள்தாம். வெறும் வயதால் அளக்காதீர்கள்; ஆண்டால் அளக்காதீர்கள். கொள்கையால் அளந்து பாருங்கள்; உங்கள் உழைப்பால் உயர்ந்து வாருங்கள்; உங்கள் இன உணர்வால் மேலும் மேலும் தெம்பு பெறுங்கள். இதுதான் இன்றைய செய்தி.

வாழ்க பெரியார்! வளர்க தளபதி! வணக்கம், நன்றி!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/97213.html#ixzz3TVtVtSMo

தமிழ் ஓவியா said...

சமூகநீதி வளாகமாகக் காட்சியளித்த பெரியார் திடல்

சென்னை, மார்ச் 4_ சென்னை பெரியார் திடலில் நேற்று (3.3.2015) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நியமனத்தில் சமூக நீதி கோரிய சிறப்புப் பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் வரவேற்றார்.

பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அறிமுக உரை ஆற்றினார். திராவிடர் கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் வீரமர்த்தினி இணைப்புரையை வழங்கினார்.

திமுக மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் வழக்குரைஞர் எஸ்.பிரபாகரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் ஆர்.சி.பால் கனகராஜ், வழக்குரைஞர்கள் சமூகநீதிப்பேரவை தலைவர் வழக்குரைஞர் கே.பாலு,

தமிழ்நாடு அம்பேத்கர் வழக்குரைஞர்கள் சங்கத் தலை வர் பேராசிரியர் எஸ்.உதயபானு, பெண் வழக்குரை ஞர்கள் சங்கத் தலைவர் வழக்குரைஞர்கள் வி.நளினி, தமிழ்நாடு முற்போக்கு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ரஜினிகாந்த், எஸ்.டி.பி.அய். அமைப்பின் வழக்குரைஞர் ராஜாமுகமது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

எங்கள் பகைவர் எங்கோ ஓடி மறைந்தார் இங் குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற புரட் சிக்கவிஞர் வரிகளுக்கு இணங்க, சிறப்புரை ஆற்றிய பல்வேறு அமைப்புகளின் சார்பில் பங்கேற்றவர்கள் பேசும்போது, அனைவரையும் சமூகநீதி எனும் திசையில் பயணத்தை பெரியார் திடலிலிருந்து தொடங்கிட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிநடத்தினால்தான் சமூகநீதியை வென்றெடுக்க முடியும் என்று ஆணித்தரமாக கூறினார்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். கூட்ட முடிவில் சென்னை பெரியார் சட்ட உதவி மய்ய அமைப்பாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் நன்றி கூறினார்.

மாநாடா? கருத்தரங்கமா? பொதுக்கூட்டமா? என்று காண்போர் வியக்கும் வண்ணம் சமூக நீதி காக்கும் படையினரின் குவிப்பாக சமூகநீதிப்போருக்கு திட்டமிடப்பட்ட பாங்கில், போர்க்கால யுக்திகளை வகுக்கும் மன்றம் நிரம்பி வழியும் அளவுக்கு வழக் குரைஞர்கள் கூடியிருந்த கூட்டமாக அமைந்தது என்றால் மிகையாகாது.

கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ் ணன், செயலாளர் சித்தியநாராயண சிங், பொரு ளாளர் மனோகரன், திராவிடர் கழக வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞான சேகரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நட ராசன்,

மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், கொடுங்கையூர் தங்கமணி, தன லட்சுமி, சைதை தென்றல், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தி.சு.திருவள்ளுவன், தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், பேராசிரியர் இசையமுது, மருத்துவர் க.வீரமுத்து, மருத்துவர் தேனருவி,

ஆவடி பா.தென் னரசு, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், சிவசாமி, கவிஞர் கண்மதியன், தொழிலாளர் அணி செல்வராஜ், சிந்தாதிரிப்பேட்டை பாலகிருஷ்ணன், வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், வட சென்னை இளைஞரணி தள பதி பாண்டியன், திருவொற்றியூர் கணேசன், மகளிரணி சுமதி கணேசன்,

வழக்குரைஞர்கள் அறிவழகன், முத்து லிங்கம், திருப்பூர் பாண்டியன், சென்னியப்பன், ந.விவே கானந்தன், அருள்மொழி, பகுத்தறிவாளன், பெர் னாட்ஷா, ரகு, இரவி, கிரிராஜன், திராவிடர் கழக வழக்குரைஞர்கள், திராவிட முன்னேற்றக்கழக வழக்குரைஞர்கள், பாட்டாளி மக்கள் கட்சி வழக் குரைஞர்கள், தமிழ் மாநிலக் கட்சியின் வழக்குரைஞர் கள்,

தமிழ்நாடு முற்போக்கு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர், எஸ்.டி.பி.அய் கட்சியின் வழக்குரைஞர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த வழக்குரை ஞர்கள் பெருந்திரளாக கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


சமூக நீதி தொடர்பான நூல்களின் தொகுப்பு நூல்களை தமிழர் தலைவர் அவர்களிடமிருந்து ஏராளமானவர்கள் பெற்றுக்கொண்டனர். ரூ.294 மதிப்புள்ள நூல்களின் தொகுப்பு ரூ.250க்கு வழங்கப் பட்டது. நீதிமன்றங்களில் பரபரப்பாக எதிர்பார்க்கப் படும் வழக்குகளில் அளிக்கப்படக்கூடிய தீர்ப்புகளை எதிர் நோக்குவது போன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரையைக் கேட்க கூட்டம் முடியும்வரை அசையாமல் கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசமைப்புச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள பிரிவு 12இல் அரசு என்கிற வரையறைக்குள் நீதித் துறை வருகிறது, அரசமைப்பு பிரிவு 16(4) அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு சமூக நீதி அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. நீதித்துறையை அரச மைப்புச் சட்டம் கூறும் நீதியை நடைமுறைப்படுத்தக் கோரி, அதை வலியுறுத்தும் கூட்டமாக நடைபெற்றது.

சமூகநீதிக்கான அறிவுக்குண்டுகள்

தமிழ்நாடு என்பது தந்தை பெரியார் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட தனித்தன்மையான சமூக நீதிப் பூமி!

புரையோடிக் கிடக்கும் சமூகத்தை மாற்றியமைக்கும் மகத்தான படை கருஞ்சட்டைப் படை.

கட்சி அரசியல்களைக் கடந்து சமூகநீதிப் போரில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் அணிவகுப்போம்!

சமூகநீதிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் வலிமையோடு குரல் கொடுத்துப் போராட்டத்தை முன்னெடுப்பது திராவிடர் கழகமே!

பிரச்சினை பெரியார் திடலுக்கு வந்து சேர்ந்தது என்றால், அது வெற்றியின் அருகில் வந்துவிட்டதாகப் பொருள்.

1950 இல் வகுப்புரிமைக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் வருவதற்கான சமூகநீதிப் போருக்குத் தலைமை தாங்கி வெற்றிக் கனியைப் பறித்துத் தந்தவர் தந்தை பெரியார்.

மேட்டுக்குடி மக்கள் என்றும், பிராமணர்கள் என்றும் சொல்லி வந்தவர்கள் இப்பொழுது பச்சையாகப் பார்ப்பனர்கள் என்று பேசும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. (பார்ப்பனர் என்பதுதான் தமிழில் அவர்களுக்குரிய சொல் - அப்படி சொல்லுவதுகூட அவர்களைத் தாழ்வுபடுத்தியதாகக் கருதப்படும் நிலை இருந்ததைத் தமிழர் தலைவர் சுட்டிக்காட்டியது அருமை).

திராவிடர் கழக மேடைகளில்தான் பார்ப்பான் என்று அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கப்படும்.
இன்று அந்த நிலை மாறி, அனைவராலும் உச்சரிக்கப் படும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலையை உருவாக்கிய பார்ப்பன நீதிபதி களுக்கு நன்றி! நன்றி!!

வயதைத் திருத்தி, மோசடி செய்து தலைமை நீதிபதியாகப் பதவியை நீடித்துக்கொண்ட பார்ப்பனர்கள் - நீதி, நேர்மைபற்றிப் பேசலாமா?

அரசமைப்புச் சட்ட தயாரிப்புக் குழுவில் (Drafting Committee) உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் இந்தப் பொய் வழக்குக்காக ஆஜரானது எந்த வகையில் ஒழுக்கமானது?

சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த - உயர்நீதிமன்றத்தில் சமூகநீதி கோரி ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் (3.3.2015) பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த வழக்குரைஞர் பெருமக்கள் வீசிய சமூகநீதிக்கான அறிவுக்குண்டுகள்தான் இவை!

தந்தை பெரியார் மறைந்தார் என்று யார் சொன்னது? நேற்று உயிர்த்தெழுந்ததை நேரில் வந்தவர்கள் பார்த்தனரே!

Read more: http://viduthalai.in/page1/97256.html#ixzz3TVuXANCf

தமிழ் ஓவியா said...

வீகேஎன் என்னும் மாமனிதம்!


மனிதர்கள் எத்தனையோ பேர் பிறக் கிறார்கள்; இறக்கிறார்கள்.

உயிருடன் இருப்பவர்கள் எல்லாம் வாழ்பவர்கள் அல்லர்! - வள்ளுவரின் கணக்குப்படி - மனிதநேயத்தில் யார் உயர்ந்து காணப்படுகிறார்களோ அவர் களே வாழும் மனிதர்கள்; மற்றவர்கள் இருக்கும் மனிதர்கள்கூட அல்லர். செத்தாருள் வைக்கப்படுபவர்கள்! ஆம் நடை பிணங்களே.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் - (குறள் 214)

இந்த இலக்கணத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்ட மாமனிதர் களில் ஒருவர்தான் திருச்சியின் கல்வி வள்ளல் - தொழிலதிபர் - அடக்கத்தின் திருஉருவம் - வற்றாத அன்பின் - பண்பின் பெருஉருவம் நமது அருமைச் சகோதரர் வீகேஎன் கண்ணப்பன் பி.இ. அவர்கள்!

அவரது தயாள சிந்தையும், பிறர் துன்பம் போக்கி இன்பம் காணும் இயல்பும் கொண்டு வாழ்ந்தவர்தான் அவரது அன்பு வாழ்விணையர் திருமதி கண்ணாத்தாள் ஆச்சி அவர்கள்.

தனது தலைவனின் மனமறிந்து, குணநலன் பெருக பெரிதும் ஒத்துழைத்த வர் அவர். சிறிது காலமாக உடல் நோய்க் காளான நிலையிலும் கண்ணை இமை காப்பதைப் போல், காலம், பொருள், எதுபற்றியும் கவலை கொள்ளாது, தம் விருப்பக் கோட்டைத் தாண்டாத மூன்று அருமையான பிள்ளைகளுடன் பெரு ஒத்துழைப்போடு கவனித்து வந்தார்.

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி ஆச்சி யார் மறைந்தார். மறைந்தார் என்பதைவிட அனைவர் உள்ளத்திலும் நிறைந்தார். வீகேஎன் அவர்கள் நெஞ்சில் நிரந்தரமாக உறைந்தார்! உயர்ந்தார்!!

அவர்தம் கண்மணிகளும் குடும்பத் தாரும் அவர்தம் குடும்பத்து நிழல்போன்ற பாண்டியன் போன்ற நண்பர்களும் துக்கத்தின் கடலில் வீழ்ந்து மீளாது தவிக்கின்றனர்!

துக்கத்தை அடக்கிப் பார்க்கும் அரிய பண்புடன் சகோதரர் வீகேஎன் அவர்களே முயன்றாலும் விழிகளோ, குற்றாலம் அருவியென வழிந்து கொண்டே உள்ளன!

நாங்கள் அவருக்கு உற்றவர்கள் எனும் உறவுமுறையில் தேற்றினோம். எப்போதும் எனது வாழ்விணையருடன் மனந்திறந்து பேசுவார் ஆச்சியார்! மன பாரத்தை இறக்கி வைக்க இவர் உதவுவார்; இவரும் நானும் தொலைப்பேசியில் ஆறுதல் மொழி கூறித் தேற்ற முடிந்த அளவு தேற்றினோம்.

கழகச் சார்பில், கல்வி நிறுவனங்கள் சார்பில் நமது பொதுச்செயலாளர் அன்பு ராஜ், துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன், திருச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், கல்வி நிலையத் தலைவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர் தோழர்கள், கழகப் பொறுப் பாளர்கள் ஒருபுறமும், மறுபுறம் சென்னை யிலிருந்து தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலினும், மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவும், தி.மு.க.வினரும், அனைத்துக் கட்சியினரும் ஆறுதல் கூறினர்.

துயர வீட்டிலும் வீகேஎன் பண்பு, தணலில் இட்டத் தங்கமாய் ஜொலித்ததை, இரண்டு நாளுக்கு முன் என்னிடம் உரையாடிய தளபதி ஸ்டாலின் சொல்லிச் சொல்லி வியந்தார்!

அம்மையாரின் உடல் கிடத்தப்பட்ட இல்லத்தில் அனைவரும் இறுதி மரியாதை செலுத்த வந்தபோது அழுது புலம்பிக் கொண்டே அம்மா, அம்மா நீங்கள் மறைந்துவிட்டீர்களே என்று கதறிக் கண் ணீர் வடித்து மாலை வைத்து மரியாதை செய்த ஒரு எளிய பாட்டாளித் தோழர் வந்தார்.

அவரை வீகேஎன் அருகில் வந்தவுடன் வீகேஎன் அந்த துக்க நேரத்தில், தம்பி உன் வீட்டுத் திருமணத்திற்கு (இரண்டு நாள் முன்பு) வர இயலவில்லை; ஆச்சி உடல்நிலை காரணமாக. திருமணம் நன்றாக நடந்ததா? என்று ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை மணமக்களுக்குப் பரிசாக அளித்தார். எங்களையும் கார் வரை வந்தே, வழமைபோல் வழி அனுப்பி வைத்தார். இந்தப் பண்பை, அன்பை எங்கே எவரிடத்தில் நாம் பார்க்க முடியும் என்று கூறினார்!

ஆம். வீகேஎன் கண்ணப்பன் ஒரு மாமனிதர். பல மனிதர்களிடம் காண இயலாத மனிதம், மாமனிதம், ஒத்தது அறியும் பண்பு! எல்லா மனிதர்களிடமும் காண முடியாதுதான்!

வீகேஎன் என்ற பெயரே தலையெ ழுத்து - முன்னெழுத்துகூட உயர்ந்திடக் காரணமாக நெருக்கடியில் உதவிய நண்பரை மறக்காத நன்றியின் அடையா ளமாக, தந்தை, தாய் இடத்தில் உத வியவரை உயர்த்தி வைத்த உயர்தனிச் செம்மலின் அருங்குணம் - உலகில் எங்கும் காணாத பெரும் செயல்!

அத்தகையவருக்கு ஏற்பட்ட துக்கமும், துயரமும் அவரது தொண்டால் - மலை யென வந்தது - பனியென விலகும் என்று நம்புவோம்!

அவரது மூன்று அருஞ்செல்வங்கள் அக்குடும்பத்தின் புகழ் பூத்த வாழ்வைக் கட்டிக் காத்து, தாயார் இடத்தை நிரப்பி வாழ்வர் என்பது நமது ஏக்கம் அல்ல; நன்னம்பிக்கை!

- கி.வீரமணி

வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page1/97255.html#ixzz3TVuvoNUo

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மார்க்கண்டேயன்

மார்க்கண்டேயனை எமன் பிடிக்க வந்தபோது மார்க்கண்டேயன் சிவ லிங்கத்தைக் கட்டிய ணைத்தான் என்பதற்காக, எமனை உதைத்து அனுப்பி உனக்கு என்றும் பதினெட்டு - சீரஞ்சீவி யாக இருக்கக் கடவாய்! என்று அருள்பாலித் தானே சிவன் - அப்படி யென்றால் அந்த மார்க் கண்டேயன் இன்றும்கூட பதினெட்டு வயதில் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் அல் லவா? அவன் எங்கே இருக்கிறான்? கண்டு பிடியுங்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/97336.html#ixzz3TcAwdoRH

தமிழ் ஓவியா said...

முஸ்லீம்களைப் பார்த்ததும் கல்லெறிந்து கொல்லுங்கள்

பாலிகாசரஸ்வதி சாமியாரிணியின் பாசிசப் பாய்ச்சல்

போபால், மார்ச் 6_ முஸ்லீம்கள் நாடு முழுவ தும் பரவி லவ்ஜிகாத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார் கள். அவர்களைக் கண்டதும் கல்லெறிந்து கொல்லுங்கள் என்று பாலிகா சரஸ்வதி சாமியாரிணி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் நூற் றாண்டு விழா கொண்டா டப்பட்டு வருகிறது, இந்தக் கொண்டாட்டங்களின் போது அனைத்து இந்துத் துவ தலைவர்களும் மோச மான சொற்களைப் பயன்படுத்திவருகிறார்கள். மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் நடந்த விஷ்வ இந்துபரிஷத் விழாவில் பாலிகா சரஸ்வதி என்ற சாமியாரிணி பேசிய தாவது, : நான் இந்துப் பெண்களைக் கேட்டுக் கொள்கிறேன், எந்த ஒரு முஸ்லீம் இளைஞனின் பார்வைகூட உங்கள் மீது பட விடாதீர்கள், அப் படியே உங்கள் பார்வை யில் பட்டாலும் அவர்களைக் கல்லெறிந்து கொல் லுங்கள். முஸ்லீம்கள் வேண்டு மென்றே இந்துப் பெண் களை காதல்வயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்துப்பெண்கள், முஸ்லீம் இளைஞர்களின் வலையில் எளிதாக விழுந்து விடுகி றார்கள். அப்படி வலையில் விழுந்த பெண்களை உடனடியாக திருமணம் செய்து அவர்களை முஸ் லீம்களாக மாற்றிவிடுகின் றனர். அந்தப் பெண்களை நாயைப்போல பிள்ளை களைப் பெறவைத்து முஸ்லீம்களின் எண்ணிக் கையைப் பெருக்கிவிடுகின் றனர். நாட்டில் லவ்ஜிகாத் அதிகரித்து விட்டது. இதை நாம் எச்சரிக்கை யுடன் அணுகவேண்டிய கட்டாயத்தில் இருக் கிறோம். முஸ்லீம் இளைஞர் களுக்கு, மசூதிகளிலும், மதராசாக்களிலும் எப்படி இந்துப்பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்யவேண்டும் என்று பயிற்சி கொடுக்கப்படுகிறது. லவ் ஜிகாத் பலவிதமாக முஸ்லீம் இளைஞர்களால் செயல்படுத்தப்படுகிறது. முஸ்லீம் அரசியல்வாதி கள். சினிமா நடிகர்கள் அனைவரும் லவ்ஜிகாத் திற்கு ஆதரவாக உள் ளனர். ஒவ்வொரு இந்துப் பெண்ணும் முஸ்லீம் களுக்கு எதிரான நட வடிக்கை எடுக்க சபதம் எடுக்கவேண்டும். ஜாதி பற்றி கூறும் போது இந்து தர்மத்தில் ஜாதி தேவையான ஒன்று, கடவுள் அவர் அவர் தொழிலுக்கு ஏற்ப அந்த அந்த ஜாதிகளைப் உரு வாக்கியுள்ளார். விமானம் என்று இருந்தால் அதற்கு பைலட் என்பவரும் உண்டு தூய்மைப்படுத்துப வரும் உண்டு, தூய்மைப் படுத்துபவர் விமானம் ஓட்டினால் என்ன ஆகும், அது போல் தான் ஜாதியும், யார் யாருக்கு என்ன என்ன என்று கீதையும் எழுதியுள்ளது. அதன் படிதான் நடக்கவேண்டும் சூத்திரர்கள், பிராமணர் களின் வேலைகளை செய்ய முயற்சி செய்யக்கூடாது, அதே போல் பிராமணர்கள் சூத்திரர்களைப் போல சாராயம் குடிக்கக்கூடாது. இங்கே கீதையைப் பற்றி குறைகூறுகிறவர்கள், அதை முழுமையாக படிக் காதவர்கள் ஆகையால் அவர்கள் விருப்பம் போல் பேசுவார்கள்

கடவுள் ஜாதிகளைப் படைத்தார், ஆகையால் ஜாதி மாறித் திருமணம் செய்வது கட வுளின் கட்டளைக்கு எதிரான செயலாகும். அந்த அந்த ஜாதியில் தான் திருமணம் செய்ய வேண் டும் அப்படி செய்யும் போதுதான் இந்து மதம் சிறந்துவிளங்கும். இந்து மதம் சிறந்து விளங்கினால் இந்தியாவும் சிறப்புறும். இங்குள்ள இஸ்லாமியர்கள் மற்றும் இதர மதத்தவரை நாம் இந்துவாக மாற்ற வேண் டும் அப்படி மாற்றும் போதுதான் இந்துக்களின் நாடாக மாறும் என்று முடித்தார். அரசு மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் அது இந்துமதம் மாறுவ தற்கு தடையாக இருக்காது. காரணம் மதம் மாறிய வர்கள் தாய்மதம் தான் திரும்புகிறார்கள் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/97338.html#ixzz3TcB5a4h6

தமிழ் ஓவியா said...

மத்திய ஆட்சியின் மதவாதம் நீதிபதி சந்துரு கருத்து


சென்னை, மார்ச் 6_ மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி, இந்தியாவை காவி மயமாக்கும் சோதனையில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறினார்.

சென்னை புதுக்கல் லூரி முதுகலை வரலாறு துறை சார்பில் மனித உரிமைகள் குறித்த கருத் தரங்கு நடந்தது. இதற்கு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமை வகித்தார். இதில், கல்லூரி முதல்வர் அப்துல் மாலிக், வர லாற்று துறை தலைவர் ஜபருல்லா கான், பேரா சிரியர் முகமது தாரிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் முன் னாள் நீதிபதி சந்துரு பேசியதாவது:

மனித உரிமை என்பது ஒரு மனிதனுக்கு ரத்தமும் சதையும் போன்றது. மனித உரிமை நமது வாழ்வில் ஒரு பகுதியாக மாற வேண்டும். அதனை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். முள்வேலி முகாம்கள் இலங்கையில் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். சென்னையில் கண்ணகி நகர் உள்ளிட்ட சில பகு திகள் முள்வேலி முகாம் கள் போல் உள்ளன. இங்கும் மனிதர்கள் வலுக் கட்டாயமாக தங்க வைக் கப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறலுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

அதேபோல, மகாராஷ் டிரா மாநிலத்தில் மாட் டிறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது. மனிதன் என்ன சாப்பிட வேண்டும் என்பது அவ னது உரிமை. நம்முடைய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்று மகாராஷ்டிராவில் வந்த இச்சட்டம் நாளை குஜ ராத்திலும், தமிழகத்திலும் கூட கொண்டு வரப்பட லாம். எனவே, நமது உரிமையை வேறு யாரும் தீர்மானிக்க வேண்டாம்.

மத்தியில் ஆட்சி புரியும் கட்சி, இந்தியாவை காவி மயமாக்கும் சோத னையில் ஈடுபட்டு வரு கிறது. சரஸ்வதி பூஜை, பள்ளிகளில் குரு பூஜை, பசுமாட்டை வழிபட வேண்டும், பகவத் கீதை புனித நூல் என்று கூறி வருகின்றனர். அவர் களுக்கு யார் இந்த உரிமையை கொடுத்தது. இதனை புரிந்து கொண் டால் மனித உரிமைகள் என்னவென்பது தெளிவ டையும். இவ்வாறு அவர் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/97340.html#ixzz3TcBJtbD5

தமிழ் ஓவியா said...

இந்திய வரலாற்று இயல் கவுன்சில் நியமனம்
அரசியல் தவிர வேறில்லை

ஆய்வாளர் வெங்கடாசலபதி


சென்னை, மார்ச் 6_ சென்னை மேம்பாட்டு கல்வி நிலைய (எம்.அய். டி.எஸ்.,) பேராசிரியர், ஏ.ஆர்.வெங்கடாசலபதி கூறியதாவது: இந்திய வர லாற்று இயல் கவுன்சிலின் தலைவர், உறுப்பினர் நியமனங்களில், அரசி யலை தவிர வேறில்லை. இதற்கு முன், இக்கவுன் சிலின் தலைவர், உறுப் பினர் நியமனம், அரசியல் சார்புடன் இருந்தாலும், அவர்கள் வரலாற்றுத் துறைக்கு பங்களித்தவர் களாக இருப்பர். வாஜ் பாய் தலைமையிலான அரசு காலத்தில், கவுன் சிலுக்கு நியமித்தவர்கள் கூட, வரலாற்று துறைக்கு பங்களிப்பு செய்தவர் களாக இருந்தனர். ஆனால், இப்போதைய தலைவர் மற்றும் உறுப் பினர் நியமனம், முழுக்க முழுக்க அரசியல் நியமன மாகவே உள்ளது. மகா பாரதத்துக்கு மொழி பெயர்ப்பு செய்தவர், வரலாற்று ஆய்வாளர் அல்ல; அவர், மொழி பெயர்ப்பாளர் மட்டுமே. அவரது மொழி பெயர்ப் புக்கு வேண்டுமானால் பரிசு வழங்கலாம். அவரை, கவுன்சிலின் உறுப்பின ராக்க முடியாது. ஆனால், அவரைப் போன்றோரை, வரலாற்று இயல் கவுன் சிலின் உறுப்பினராக நியமித்து உள்ளனர். இவ் வாறு, அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/97337.html#ixzz3TcBUcADU

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கோ பூஜையின் பலன்

செய்தி: ஜெயலலிதா அவர் களுக்காக, கோ பூஜையில் கலந்து கொண்ட அதிமுக பிரமுகர்கள் வேறு கார ணங்களுக்காக கட்சியை விட்டு நீக்கம். சிந்தனை: கோ பூஜையின் பலன் என்பது இதுதானோ! ஆடு! ஆடு!!
தமிழக அமைச்சர் நத்தம் விசுவநாதன் 67 இணையர் களுக்குக் கல்யாணம் செய்து வைத்திருக்கிறார். இந்த இணையர்களுக்கு ஆடுகளும் பரிசாக அளிக் கப்பட்டனவாம்.

அந்த ஆடுகளின் கழுத்தில் ஜெயலலிதா படத்தை மாட்டியிருந்தனராம்.

விவசாயிகளுக்கு நான் எதிரியல்ல!

விவசாயிகளுக்கு நான் எதிரியல்ல என்று கூறியுள் ளார் பிரதமர் நரேந்திர மோடி. எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என் பார்களே அது இது தானோ!இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 41 பேர் பலியானதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 1239 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97335.html#ixzz3TcBcixR0

தமிழ் ஓவியா said...

தீபாவளிக்கு விடுமுறை இல்லை!


அமெரிக்காவில் நியூயார்க் நகர நிருவாகம் தீபாவளிக்கு விடுமுறை இல்லை என்று அறிவித்து விட்டது. இந்து அமெரிக்கன் ஃபவுண்டேசன் லபோ திபோ என்று குதிக்கிறது.

Read more: http://viduthalai.in/e-paper/97333.html#ixzz3TcBmjunx

தமிழ் ஓவியா said...

புரோகிதர் யோக்கியதை!

பணத்துக்காகப் பகவத் பூஜை பண்ணும் புரோகிதர் வீட்டில் நீர் அருந்தலாகாது, போஜனம் பண்ணலாகாது. பெண் கொள்வது, கொடுப்பது வைத்துக் கொள்ளலாகாது என்றொரு கொள்கையுண்டு. ஈசுவர ஆராதனையை வியாபார முறையில் பண்ணுபவர்கள் புனிதவான்கள் ஆகார் என்பது ஒருவேளை இதன் அடிப்படையான கருத்தாயிருக்கலாம். உண்மை எதுவாயினும் ஆகுக.

அர்ச்சகர்களுள் தரித்திரமும், கயமையும் மிகுந்திருப்பதை எளிதில் காணலாம். பணத்துக்காக அவர்கள் கோயிலில் முறை தவறி நடந்து கொள்வது சர்வ சாதாரணம். புரோகிதர்கள் செய்யும் பூஜை தெய்வத்துக்கு உரியது அன்று; ஏராளமாக தட்சணை தருபவர்களுக்கே உரியது ஏனென்றால் எவ்விதத்திலும் தனவான்களுக்குப் பிரீதியுண்டாக்கத்தான் அவர்கள் முயலுகிறார்கள்.

பாமரர்களை வஞ்சிக்கவும், அவர்கள் அஞ்சுகிறார் களில்லை. புரோகிதம் என்பது மேன்மை பொருந்திய பொறுப்பு வாய்ந்த தொழிலாயிருப்பதற்கு பதிலாக இப்போது அது இழி தொழிலாயிருக்கிறது.

அர்ச்சகர்கள் ஜன சமூகத்துக்குப் பயன்படுபவர்களாயிருப்பதற்குப் பதிலாகக் பங்கம் விளைவிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் கொடுமையால் இப்போது கோயில் களெல்லாம் வியாபாரஸ்தலங்களாகி விட்டன. மீண்டும் அவர்கள் மேன்மை அடையும்போதுதான் ஆலயங்கள் என்று இப்போது அவர்களால் காக்கப்படும் இடங்கள் மெய்யான தேவாலயங்களாகும்.

-சுவாமி சித்பவானந்தர்

(நூல்: சிறீ ராமகிருஷ்ண விஜயம், சென்னை- 1935, பக்கம் 177)

Read more: http://viduthalai.in/e-paper/97368.html#ixzz3TcDxzl6C

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி வேதநாயகம்!

ஒருநாள் இரண்டு பிராமணர்கள் மிஞ்சின போஜனம் அருந்தினதால் கீழே குனியக்கூட முடியாமல் அண்ணாந்து கொண்டு மேல்நோக்கின பார்வையாய்த் தெருவில் போகும் போது, அவர்களின் ஒருவனுக்குக்காலில் மிதியடியிருக்கிறதா இல்லையாவென்கிற சந்தேகமுண்டாகி மற்றொருவனை நோக்கி தம்பி, சுப்பு!

என் காலில் மிதியடியிருக்கிறதா பார் என்றானாம் அந்த பிராமணனும் குனியமுடியாமல் அண்ணாந்து கொண்டு போனதால் அண்ணா! ஆகாச மண்டலம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணோம் என்றானாம்,

- மாயூரம் ச.வேதநாயகம் எழுதிய சுகுண சுந்தரி (சமூக நாவல்) தகவல்: ஆ.கணேசன், சென்னை -21 :

Read more: http://viduthalai.in/e-paper/97369.html#ixzz3TcEGpMO8

தமிழ் ஓவியா said...

ராசி பலன்காரர்களுக்கு வந்தது வேட்டு!

சே! சம்சாரம் ஒரு சாகரம்! எனக்கென்று வாய்த்தது பார் ஒரு சனியன்! மூளி அலங்காரி! மூணாம் பேஸ்து மாதிரி! முப்பது நாழியும் மூலையும் முக்காடும்தான் கதி! என்று சலித்துக் கொள்ளும் கணவன்மார்களைக் கண்டிருக் கிறோம்.

கிளியை வளர்த்து பூனை கையிலே கொடுத்தாளே என்னை பெத்தவ - அவளைச் சொல்லணும்! புருஷனா எனக்கு வாய்ச்சவன்.. காட்டுப் புலி! நின்னா தப்பு. குனிஞ்சா தப்பு. சிரிச்சா தப்பு. சீச்சீ... சீ... இந்த மனுஷனை கட்டிகிட்டு மாரடிக்கிறதவிட குளத்திலேயோ குட்டையிலேயோ விழுந்து சாகலாம் என்று கொதித்துக் குமுறும் மனைவிமார்களையும் பார்த்திருக்கிறோம்.

தம்பதிகளிடையே இத்தகைய சலிப்பிற்கும் சஞ்சலத்திற்கும் இடம் ஏற்படாத வகையில் ஒரு நூதனக் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறாராம் பிரிட்டிஷ் விஞ்ஞானி டாக்டர் வால்டர் என்பவர்.

இக்கருவியால் மூளை ரேகைகள் படம் பிடிக்கப்பட்டு, ஒருவர் சுபாவத்திற்கு இன்னொருவர் ஒத்துவருவார்களா என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு திருமணம் செய்து வைக்கலாமாம்.

இக்கருவி இங்கெல்லாம் பரவினால் ராசி பலன் கார்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே!

தென்னகம்
பொங்கல் மலர், 1971

Read more: http://viduthalai.in/e-paper/97370.html#ixzz3TcEUnTkT

தமிழ் ஓவியா said...

சந்தேகம் சார்!

சார் ஒரு சந்தேகம்!

என்னடா சந்தேகம்?

சரஸ்வதி எங்கு இருக்கிறாள்?

வெண்டாமரையில்!

அது எங்கே இருக்கிறது சார்?

பிரம்மாவின் நாவில்!

பிரம்மா எங்கே இருக்கிறார் சார்?

மகாவிஷ்ணுவின் தொப்புட் கொடியில்! (வயிற்றில் உதித்தார்)

மகாவிஷ்ணு எங்கு இருக்கிறார்?

ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல்!

அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்?

திருப்பாற்கடலில் உள்ளது.!

திருப்பாற்கடல் எங்கு உள்ளது சார்?

....?....?...? ஏய், நீ ஒரு கருப்புச் சட்டை..... நாத்திகன்... பகுத்தறிவுக்காரன்.. இரு இரு... உன்னை பரீட்சையில் கவனித்துக் கொள்கிறேன்.

-சி.பூபாலன், சி.இராசசேகரன்
சென்னை-40

Read more: http://viduthalai.in/e-paper/97370.html#ixzz3TcEbbIUF

தமிழ் ஓவியா said...

குழந்தைகள் திருமண தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது
உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சென்னை, மார்ச் 10_ மத்திய குழந்தைகள் திருமண தடைச் சட்டம் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதத்தினருக் கும் பொருந்தும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

பெரம்பலூரைச் சேர்ந்த அப்துல் காதரின் மகளுக்கு கடந்த 17.11.2012 அன்று திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. அப்போது, அந்தச் சிறுமிக்கு 18 வயது நிறை வடையவில்லை என சமூக நலத் துறை அதிகாரிக்கு புகார் சென்றது. இதையடுத்து சிறுமி யின் திருமணத்தை அதி காரிகள் தடுத்து நிறுத் தினர்.

பின்னர், அந்தச் சிறுமிக்கு 18 வயது நிறை வாகும்வரை திருமணம் செய்யக்கூடாது என பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட் டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அப்துல் காதர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சமூகநலத் துறை அதிகாரி விளம்ப ரம் பெறும் நோக்கத்தில் திருமணத்தை தடுத்துள் ளார். முஸ்லிம்களுக்கு தனிச் சட்டம் உள்ளது.

அந்த சட்டத்தின் அடிப் படையில், முஸ்லிம் பெண் ணுக்கு அவர் பருவம் அடைந்ததும் திருமணம் செய்துகொள்ளலாம். மத்திய குழந்தை திருமண தடைச் சட்டம் பொது வான சட்டம். அந்தச் சட்டம் முஸ்லிம்களுக்குப் பொருந்தாது என்றார்.

இந்த வழக்கு விசா ரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அங்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம் பிறப்பித்த உத் தரவு வருமாறு:

மத்திய குழந்தை திரு மண தடுப்புச் சட்டம் ஒரு மதச் சார்பற்ற சட்டமா கும். அந்த சட்டத்தின் அடிப்படையில் 18 வயது நிறைவடையாத பெண் ணுக்கு திருமணம் செய்து வைக் கக்கூடாது.

மேலும், இந்தச் சட்டம் முஸ்லிம் கள், இந்துக்களின் தனிச் சட்டங்களுக்கு அப்பாற் பட்டது. குழந்தைகள் திரு மணத்தை பொருத்தவரை முஸ்லிம்களுக்கு அவர் களின் தனிச் சட்டம்தான் பொருந்தும் என்பதை ஏற்க முடியாது. சிறப்பு காரணங்களுக்காக குழந் தைகள் திருமண தடுப்புச் சட்டம் கொண்டுவரப் பட்டது.

குழந்தைகளின் உடல் நலன், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சட் டம் நிறைவேற்றப்பட்டது. குழந்தைகள் திருமணச் சட்டத்தை மேலும் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு திரு மணம் செய்து வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப் படி செய்தால் மட்டுமே குழந்தைகள் திருமணம் எனும் தீய பழக்கத்தை தடுக்க முடியும்.

இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலன், பெண்ணின் கவுரவம் ஆகியவற்றை உயர்த்த முடியும். இது போன்ற திருமணங்களை தடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு.

மத நம்பிக்கை வேறு, உரிமைகள் என்பது வேறு. குழந்தைகளுக்கு திரும ணம் செய்து வைப்பது தங்களது உரிமை எனக் கூற முடியாது. குழந்தை கள் நலன், முன்னேற்றம் முக்கியமா அல்லது குழந் தைகள் திருமணமா என்ற கேள்விகள் எழும்போது, குழந்தைகளின் நலன், முன் னேற்றம்தான் முக்கியம். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97375.html#ixzz3TcFUkeMf

தமிழ் ஓவியா said...

இது நாடா? காடா?
உ.பி.சித்தார்த் நகரில் இந்து இளைஞர்களின் இட்லரிசம்!

சித்தார்த் நகர், மார்ச் 6_ சித்தார்த் நகரின் ஹிந்து வாகினி இளைஞர்கள் அனைத்து மசூதிகளிலும் காவிக்கொடி பறக்கவேண் டும் என்று சபதம் எடுத்து விட்டார்கள். இனி ஒவ் வொரு மசூதிகளிலும் அல்லாகு அக்பர் என்று ஒலிக்கவிடமாட்டார்கள் அங்கெல்லாம் ஹர ஹர மகாதேவ் என்று கூற வேண்டும், கூறவைப்போம் என்று சபதமெடுத்துவிட் டார்கள்.

இனி காலையில் எழுந்ததும் மசூதிகளில் இருந்து ஹர ஹர மகா தேவ் என்று ஒலிக்கவேண் டும், இந்த நாடு இந்து தேச மாக மாறி மேடையில் வீற் றிருக்கும் ஆதித்யநாத் போன் றவர்களின் கைகளில் இந்த நாடு ஒப்படைக்கப்பட்டு விட்டால் இங்குள்ள ஒவ் வொரு மசூதியிலும் பன்றி கள் வளர்க்கப்படும், அங் கெல்லாம் பன்றிப் பண் ணைகள் வைக்க முன்னுரி மையளிக்கப்படும்.

இந்து நாட்டில் முஸ்லீம்கள் இந் தியக்குடிமக்களாக இருக்க மாட்டார்கள், அவர்களின் அனைத்து அதிகாரங்களும் பிடுங்கப்படும், அவர்கள் வேண்டுமென்றால் இங்கே அடிமைகளாக இருக்கட் டும், அவர்களின் வாக்கு கள் பிடுங்கப்படும், அதன் பிறகு எந்த ஓர் அரசியல் வாதியும் முஸ்லீம்களின் வாக்குக்காக இந்துமதத்தை களங்கப்படுத்த முடியாது.

முஸ்லீமக்கள் எல்லாம் இந்துக்களாக மாற வேண் டும், அப்படி மாறாதவர் கள் உண்மையில் இந்து அப்பனுக்கு பிறந்திருக்க முடியாது; அவர்கள் உஸ் பெகிஸ்தான், அரபு நாடு களின் ஆண்களுக்குப் பிறந்தவர்களாக இருப்பார் கள்.

முஸ்லீம்பெண்களை சாகும்வரை பாலியல் வன்கொடுமை செய்யுங்கள், முஸ்லீம்களின் பிணங்கள் இருக்கும் கல்லறைகளில் உள்ள பிணங்களை எடுத்து நாய்களுக்குப் போடுங்கள், முஸ்லீம்களின் சகோதரி கள் மற்றும் அவர்களின் தாயார்களை விடாதீர்கள், முஸ்லீம் ஆண்களை வெட்டிப்போடுங்கள்.

இந்து யுவா வாகினி இதைச் செய்யும்! இதைச் செய்வதற்கு இந்துக்கள் யாரும் தயங்கவேண்டாம்! இது இந்து நாடு, இங்கு இந்து மாத்திரமே வசிக்க வேண்டும். அடுத்து நமது பரம்பூஞ்ய யோகி ஆதித்ய நாத் உங்களிடம் உரையாற் றுவார் இத்துடன் முடித் துக்கொள்கிறேன்.

இவ்வாறு இண்டியா டைம்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97380.html#ixzz3TcFjQm7H

தமிழ் ஓவியா said...

2000 ஆண்டு பழங்குடி மன்னர் பரம்பரை

உலகின் மிகப் பழமையான மன்னர் வம்சம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிந்து-போனது. அதுவும் இந்தியாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மன்னர் ஒருவரின் தத்துப் பிள்ளையாக எடுக்கப்பட்டு மன்னர் ஆனவர். இந்தியாவின் முதல் சூத்திரப் பேரரசு மவுரியப் பேரரசு. அதைப்போலவே பழங்குடி மன்னர் பரம்பரை ராடு எனும் சமஸ்தானத்தை ஆண்ட பரம்பரை. அதன் கடைசி மன்னரான சிந்தாமணி ஷரன்நாத் சகாதேவ் எனும் பெயர் கொண்ட ராடு மகாராஜாதான் கடந்த ஜூலை மாதத்தில் மறைந்து போனார். அவருக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே அந்த மன்னர் பரம்பரை தொடர வாய்ப்பில்லை. உலகின் மிகப் பழமையான மன்னர் பரம்பரைகளில் எஞ்சியிருப்பவை ஜப்பான் மன்னரும், கொரியாவின் ஹாங் பாங் பரம்பரையும், பல்கேரிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவரும்தான் இன்றைய நிலையில் இருப்பவர்கள்.

ராடு மகாராஜா பரம்பரை கடந்த 1950 ஆண்டுகளாக இருந்துவந்தது ஆகும். கி.பி.64இல் தொடங்கிய வம்சம் கி.பி.முதல் நூற்றாண்டில் மத்ரா முண்டா எனும் பழங்குடி மன்னர் பானி முகுத்ராய் என்பவரை சுவீகாரம் எடுத்தார். அவரது வாரிசுகள்தாம் ராடு ராஜாக்கள் என்கிறது வரலாறு.

ராடு ராஜ்யத்தின் கோட்டை கொத்தளங்-களைப் பேணி வருவதற்கெனத் தனியான அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டை 103 அறைகளைக் கொண்டது. இங்கிலாந்து நாட்டின் பக்கிங்காம் அரண்-மனையைப் போலவே கட்டப்பட்டுள்ளது. இம்மன்னர் பரம்பரையின் தனிப்பெரும் சிறப்புகளை கடைசி மன்னரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான ராஞ்சியிலுள்ள கல்லூரிப் பேராசிரியர் அதிதேந்திரநாத் சகாதேவ் கூறியிருக்கிறார்.

குடிமக்களிடம் வரி ஏதும் வசூலிக்கப்பட்டது கிடையாது. நவராத்திரி பண்டிகையின்போது பழங்குடிகளின் தலைவர்கள் தரும் தான்யங்கள், ஆடு, மாடுகள் தவிர வேறு எதையும் மன்னர்கள் பெற்றுக் கொண்டதில்லை. ஆனாலும் பெரும் பரப்பிலான நிலங்களை மன்னர்கள் கல்வி, மதம், மற்ற தேவைகளுக்காக நன்கொடை அளித்தது ஏராளம். இந்தத் தானங்களுக்காக மன்னர் விதித்த நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். மன்னர் தானம் தந்ததாகத் தெரிவிப்பதோ, குறிப்பு எழுதுவதோ, கல்வெட்டுப் பதிப்பதோ கூடாது என்பது மட்டுமே நிபந்தனை. தமிழ்நாட்டு நிலையோடு பொருத்திப் பாருங்கள் விளம்பர உத்திகளை! மக்கள் பணத்தில் மக்களுக்காகச் செலவு அழிப்பதில் செய்யப்படும் விளம்பரங்களை, பொறிக்கப்படும் சலவைக் கல்வெட்டுகளை! சொந்தச் சொத்தைத் தந்தவர் விளம்பரமே கூடாது என்கிறார். கிறித்துவ தேவாலயம், காவல் நிலையம், ராஞ்சி பொழுதுபோக்கு மன்றம் முதலிய எல்லாமே அவருடைய நிலத்தில்! ஒரு கல்வெட்டும் இல்லை.

வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்தே கோடீசுவரக் கொடிகட்டிப் பறந்தது பிர்லா குடும்பம்! அதன் ஆதிகர்த்தா பல்தேவ் தாஸ் பிர்லா! பிரிட்டிஷ் அரசிடம் ராஜா பட்டம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். (செட்டி நாட்டு அரசர் அண்ணாமலை செட்டியாரும் இப்படி ராஜா பட்டம் வாங்கியவர்தான்.) பணம் வைத்திருந்த பிர்லா நிலம் வைத்திருக்கவில்லை. ராடு மன்னரான பிரதாப் உதயநாத் சகாதேவ் என்பாரை அணுகினார். அற்பத் தொகையைப் பெற்றுக்கொண்டு லோகர்தாகா எனுமிடத்தில் பெரும் பரப்பளவு நிலத்தைக் கொடுத்தார். நன்றிக் கடனாக ஒவ்வொரு ஆண்டு நவராத்திரி பண்டிகையின்போது பிர்லா மன்னரைச் சந்தித்து தங்க நாணயம் ஒன்றைத் தருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அவருடைய நாட்டில் கிளர்ச்சி ஏதும் நடந்ததில்லை. சண்டைகள் போட்டதோ, வென்றதோ பற்றிய குறிப்பும்கூட இல்லை. ஆயுதங்கள் எதுவுமே மன்னரின் கோட்டையில் கிடையாது. வரவேற்பறையில் பழங்காலப் போர்வாள் ஒன்று மட்டுமே உண்டு. காட்சிப் பொருளாக!

வங்காளத்திலிருந்து வந்த ராணி லட்சுமண் குன்வர் என்பவர் துர்கா பூஜையை இம்மன்னரிடமும் மக்களிடமும் புகுத்தியிருக்-கிறார். இதே வங்காளத்தவர்தான் கிருஷ்ண வழிபாட்டை குஜராத் மாநிலத்தில் புகுத்தியவர்கள்.

மன்னர் பரம்பரையில் பெண்கள் சமமாக நடத்தப்பட்டனர். மகளுக்கும் மருமகளுக்கும் ஆண்களைப் போலவே அனைத்து உரிமைகளும்!

சூத்திரன் எனக் கூறி சிவாஜிக்குத் தொல்லை தந்த ஆரியக் கொடுமைகளை நினைத்துப் பாருங்கள்! இந்நாட்டுப் பூர்வ குடியைச் சேர்ந்த மன்னர்களின் நடத்தையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! வந்தேறிகளின் வஞ்சக வலையைப் புரிந்து கொள்ளுங்கள்!

- அன்றில்

தமிழ் ஓவியா said...

அன்னை நாகம்மையாரின் ஒப்பற்ற தொண்டு


பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அன்னை நாகம்மையார். சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் பிறந்தவர். தந்தை பெரியாரின் தாய் சின்னத்தாயம்மையாரின் ஒன்றுவிட்ட தம்பி மகளாவார். பள்ளி சென்று கல்வி கற்கவில்லை எனினும் உலக அறிவில் சிறந்து விளங்கினார். பெரியார் அவர்களை மணந்துகொண்ட பின், பெரியாரின் பொதுவாழ்வுக்கு உறுதுணையாக, மேடைப் பேச்சுக்கான தனித்த ஆற்றலை வளர்த்துக் கொண்டு பொதுவாழ்விற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டார்.

1920ஆம் ஆண்டு தந்தை பெரியார் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது கதர் உடுத்தி எளிய தோற்றத்திற்கு மாறினார். பூவும் பொட்டும் பிற அணிகலன்களும் அடிமைச் சின்னங்கள் என சுயமரியாதை இயக்கம் பிரகடனப்படுத்தியபோது அவற்றைத் துறந்து பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.1921ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலின்போது அரசாங்கம் 144 தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. தந்தை பெரியாரும், அவரது தொண்டர்களும் தடையை மீறியதால் கைது செய்யப்பட்டனர். மறுநாள் அன்னையார் தந்தை பெரியாரின் தங்கை ஆர்.எஸ்.கண்ணம்மாளுடன் சென்று தடையுத்-தரவை மீறினார். மறியலை நிறுத்துவதென்றால் ஈரோட்டில் நாகம்மையாரைத்தான் கேட்க வேண்டும் என்று காந்தியாரே கூறியுள்ளதி-லிருந்து அம்மையாரின் உறுதியினைத் தெரிந்து கொள்ளலாம். திகைப்படைந்த அரசு, உடனே தடையுத்தரவை நீக்கியது.

1924ஆம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் போராட்டத்திலும் பங்கு கொண்டதுடன், பல பெண்களையும் பங்கு கொள்ளச் செய்தார். இவர் தலைமையேற்று வைக்கம் தெருக்களில் பெண்கள் படையை நடத்திச் சென்ற பாங்கு இப்போராட்டத்தின்பால் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்ச்சிகளை இப்போராட்டம் தட்டி எழுப்பியது! இதுகுறித்து தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்,

வீட்டின் ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார், தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்தவேண்டி வைக்கம் சத்யாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூட்டினார் என்று பாராட்டி எழுதினார்.

1925ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. குடிஅரசு பத்திரிகையும் வெளிவந்தது. தாம் இருக்கும்வரை குடிஅரசு பத்திரிகையின் பதிப்பாசிரியராகவும் பிரசுரகர்த்தாவாகவும் இருந்துள்ளார். சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்றதற்கும் அதில் பெண்கள் நிறையப் பேர் கலந்து கொண்டதற்கும் அன்னையாரே காரணம். அவர் தமது கணவரின் எல்லா முயற்சிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்ததே சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிக்குக் காரணமாகும். எல்லோரையும் அன்புடன் உபசரிப்பார். பொதுஜன நன்மைக்காக வேலை செய்த எல்லா இளைஞர்களையும் பெண்களையும் தமது சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து வந்தார். அவர் தமது சிறந்த கொள்கைகளுக்காக வேலை செய்தவர்களுக்-கெல்லாம் ஒரு தாயாக இருந்தார். அவர்களுடைய சொந்த சவுகரிங்களை அவர் தாமே நேராகக் கவனித்து வந்தார். சமூகப் போராட்டத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு அவர் அபயம் அளித்தார் என்று தோழர் எஸ்.ராமநாதன் கூறியுள்ளார்.

அன்னையாரின் மலாய் நாட்டுப் பயணத்தைப்பற்றி, சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த முன்னேற்றம் பத்திரிகை, அவர்களின் மலாய் நாட்டு விஜயத்தால் மலாய் நாட்டு மக்கள் எல்லாம் அவருக்கு அறிமுகமானார்கள். மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கம் அதிதீவிரமாய்ப் பரவியிருந்ததைப் பார்த்த அன்னையார் அடைந்த களிப்பு அளப்பரியது. சிங்கப்பூருக்கு வந்திருந்து திரும்புங்கால் அவர்களுக்கு விருப்பமான _ தேவையான மலாய் நாட்டுப் பொருள் என்ன வேண்டுமென்று நாம் கேட்டதற்கு நீங்கள் எல்லாம் இம்மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைப் பரப்பியிருப்பதே நான் விரும்பும் பொருள் என்று அன்னையார் சொல்லிய வார்த்தைகள் இன்னும் நமது செவியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வீராங்கனையாய், ஒரு சமுதாயப் போராளியாய், ஓர் அன்னையாய் அருந்தொண்டாற்றிய அன்னை நாகம்மையார் 11.5.1933 அன்று மறைந்து சுயமரியாதை இயக்கத்தின் பொன்னேடுகளில் பொறிக்கத்தக்க பொன்னொளிச் சுடரானார்.

தமிழ் ஓவியா said...

அன்று.. நரேந்திர தபோல்கர்

இன்று ... கோவிந்த் பன்சாரே படுகொலை?

மகாராட்டிர மண்ணில் ஜாதீய வாதம், மதவாதம், மூடநம்பிக்கை இவற்றுக்கு எதிராக இயக்கம் நடத்திய நரேந்திர தபோல்கர் இந்துத்துவ வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் (2012 ஆகஸ்டு). இப்பொழுது அதே பணிகளைச் செய்து வந்தவரும், அம்மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தவருமான தோழர் கோவிந்த் பன்சாரே மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருவருமே நடைப்பயிற்சி சென்றபோதுதான் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நரேந்திர தபோல்கரைச் சுட்டுக் கொன்ற கொலையாளிகள்தான் இவரையும் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

நரேந்திர தபோல்கரைச் சுட்டுக்கொன்ற கொலையாளிகளை இதுவரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தாத நிலையில், அடுத்த கொலையும் இப்பொழுது நடந்திருக்கிறது. (அன்று காங்கிரஸ்; இன்று பா.ஜ.க. ஆட்சி)

தோழர் கோவிந்த் பன்சாரே வலதுசாரி மதவாத அரசியலுக்கு எதிராகச் சிம்மக் குரல் கொடுத்து வந்தவர்; சாமியார்களுக்கு எதிரான கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்; உயர் ஜாதி ஜாட் பிரிவினரின் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்தவர்.

சிவாஜியை இந்துத்துவாவாதிகள் தங்களின் மதவெறி அரசியலுக்குத் தூக்கிப் பிடித்ததை, தக்க வெளியீடுகள் மூலம் தூள் தூளாக்கியவர்!

சிவாஜி பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பன்சாரே காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்குச் சிலை எழுப்ப வேண்டும் என்று கூறப்பட்டதைக் கடுமையாகச் சாடினார்; அதே நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த வெறியன், தோழர் பன்சாரேயின் கருத்திற்கு எதிராக மேடையில் ஏறி வெறிக் கூச்சல் போட்டுள்ளான். நாதுராம் கோட்சே உண்மையான தேச பக்தர் என்று கூறியதோடு பன்சாரேயின் பேச்சை எதிர்த்து நீதிமன்றம் செல்லுவேன் என்றும் மிரட்டியிருக்கிறான். தோழர் கோவிந்த் பன்சாரே பதற்றம் சிறிதும் அடையாமல் அமைதியாக, தாராளமாக வழக்குப் போடுங்கள் இதே கருத்தை அங்கும் வந்து சொல்லுவேன் என்று கூறியிருக்கிறார்.

அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதில் இந்த இந்துத்துவா பின்னணி இருக்கிறது என்பதில் அய்யமில்லை.

நாடு ஒரு மோசமான தருணத்தில் இருக்கிறது; இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும்; அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதற்கு எதிரான மதவெறி சக்திகள் படுகொலைக் கருவியைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.

மதவெறி நஞ்சை அன்றாடம் கக்கிவரும் சக்திகள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களை இயக்குவிக்கும் இடத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில், மதச் சார்பின்மை சக்திகள், இடதுசாரிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும், போராடவும் முன்வர வேண்டும்.

மதம், பக்தி என்பவை எல்லாம் தனி மனிதனைச் சார்ந்தது; வீட்டுக்குள் பூஜை அறைக்குள் முடங்கிக் கிடக்கட்டும்!

மனித உரிமைக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் பேரச்சுறுத்தலாக இருக்கும் இந்தப் போக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

நேர்மையான சட்ட ஆட்சி - நீதிமன்றத்தின் பொறுப்பு, ஊடகங்களின் கடமை இவற்றின் பங்களிப்பும் இதில் மிக முக்கியமானதாகும்! தேவையுமாகும்.

21ஆம் நூற்றாண்டில் முற்போக்குச் சமுதாயம், சரிநிகர் வாழ்வு மணக்கும் அத்தியாயம் மலர வேண்டுமே அன்றி, மதவெறிப் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகி, நாளும் கலவரச் சூழலும், அமைதியைத் தொலைத்த அருவருக்கத்தக்க நிலையும் நிலவ வேண்டுமா என்பதை முடிவு செய்வோம்! அரசியலுக்கு அப்பாற்பட்டு பகுத்தறிவுப் பிரச்சாரம் சுழன்றடிக்கட்டும்! சுழன்றடிக்-கட்டும்!!

அவருக்கு நமது வீர வணக்கம்; பல தபோல்கர்களும், பன்சாரேகளும் உருவாவது நிச்சயம். அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கல்.

நரேந்திர தபோல்கர்களுக்கும், கோவிந்த் பன்சாரேக்கும் நாம் காட்டும் உண்மையான மரியாதை இதுதான். வன்முறை ஆயுதம் -_ பகுத்தறிவு முற்போக்கு பொதுவுடைமைச் சித்தாந்தங்களை வீழ்த்த முடியாது என்றே செயலில் காட்டுவோம் _ - வாரீர்!

கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உயிரியல் அடிப்படையில் அனைவரும் ஓர் இனமே!


மொழி மக்களை நிலத்தோடு பிணைக்கும் கருவி, மொழி மக்களை நிலத்தோடு பிணைக்கும் வேலையை மட்டும் செய்வதில்லை. அதற்கும் மேலாக அந்த மக்களின் வரலாற்றைத் தன்னியல்பாக எழுதும் ஒரு கருவியாகவே மொழி வளர்கிறது, ஆரியப் புனைவுகளை முன்னிறுத்தும் பல்வேறு தரப்பு மனிதர்கள் இன்றும் ஊடகங்களில் கிடைக்கிற இடைவெளிகளில் எல்லாம் சமஸ்கிருதம் தேவ மொழி என்றும், எல்லா உலக மொழிகளுக்கும் தாய் என்றும் ஒரு கடைந்தெடுத்த பொய்யை உளறிக் கொண்டே இருப்பார்கள்.

இந்திய மொழிகளைப் பற்றி ஆய்வு செய்த ருஷ்ய அறிஞர் நிகிதா குரோவ் இதற்கான விடையை நமக்குச் சொல்கிறார். சமஸ்கிருதத்தின் அறியப்பட்ட முதல் நூலான ரிக் வேதத்தில் ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட திராவிட மொழிச் சொற்கள் இடம் பெறுகின்றன. வெவ்வேறு காலத்தில் இந்திய மொழிகளை ஆய்வு செய்த பல அறிஞர்கள் இவரது மேற்கோள்களை வழிமொழிகிறார்கள்.

உலகின் முதன் மொழி என்று பார்ப்பனர்-களால் தொடர்ந்து சொல்லப்படுகிற சமஸ்கிருதம் திராவிட மொழிக் குடும்பத்தின் சொற்களை வைத்தே தனது வேதப் பாடல்களைத் தொடங்கியது என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிடாதீர்கள். குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் நமது மொழியின் தொன்மையையும், சிறப்பையும் நினைவூட்ட மறந்து விடாதீர்கள். ஏனெனில், மொழியின் இருப்பே ஒரு மனிதக் குழுவின் ஏற்றமாகவும், வீழ்ச்சியாகவும் வரலாற்றில் இடம் பிடிக்கிறது. மொழி நிலத்தோடு நம்மைப் பிணைப்பது மட்டுமல்லாமல், அரசியல் அதிகாரமாகவும் பொருளாதாரக் காரணியாகவும் நிலைகொள்கிறது.

இந்திய வரலாற்றின் பக்கங்களில் வருணமும், அதன் கொடூரமான தாக்கமும் இன்று வரை ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பிறப்பால் உயர்ந்தவர் என்றும், ஏனைய மனிதக் குழுக்களை அவர்களுக்குக் கீழானவர்கள் என்று சொல்வதற்கு எப்படி மிக முக்கியமான காரணியாக இருக்கிறதோ அதற்குக் குறையாத காரணியாக மொழியின் கூறுகளை, மொழியின் வரலாற்றை நாம் அறியாமல் போனதும், கற்பிக்காமல் போனதும் ஆகும். இனக்குழு வரலாற்றிலும், உயிரியல் கோட்பாட்டிலும் உயர் ஜாதி என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிற ஒரு மனிதனின் குழந்தைக்கும், உங்கள் குழந்தைக்கும் எந்த வேறுபாடுகளும் இல்லை என்று ஆய்வுகளும், அறிவியலும் சொல்லும்போது நீங்கள் ஏன் அந்த ஆரியப் புனைவை இன்னமும் பின்பற்றுகிறீர்கள், நம்புகிறீர்கள். உங்கள் உடலும், உங்கள் உணர்வுகளும் மேன்மையானவை, வேறெந்த மனிதருக்கும் நிகரானவை என்கிற அடிப்படை உண்மையை உணரும் கணத்தில் இருந்துதான் உங்கள் வரலாறு தொடக்கம் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

மதமும், மத நூல்களும் இந்திய சமூகத்தின் வருணக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஆரியப் புரட்டர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதம். அவற்றுக்கு எதிரான அறிவுப் புரட்சியை நமது குழந்தைகளுக்கு நாம் இன்னமும் கற்றுத் தரவில்லை.

இன்றுவரை இந்தியா முழுவதும் ஆட்சி அதிகாரம், பொருளாதார நிலை, சமூக வாழியல் நிலை என்று எல்லாப் பக்கமும் ஆரியக் கோட்பாட்டின் மய்யக் கருத்தான, அறிவியலுக்கு எதிரான, பிறப்பால் உயர்நிலைத் தகுதியைப் பெறுகிற வருணக் கோட்பாட்டின் வழி வந்தவர்களே கோலோச்சிக் கொண்டு இருக்கிறார்கள். கடவுளுக்கு அருகில் இருக்கிற மனிதனாகத் தன்னை அடையாளம் செய்து கொண்டு, ஏனைய அனைத்தையும் தனக்கு அடிபணிகிற குழுக்களாக வைத்துக் கொள்வதில் வெற்றி பெறுகிற கோட்பாட்டையே ஆரியம் என்கிறோம்.

அண்ணல் அம்பேத்கர், "அடிமைகளாக எமது மக்கள் இருப்பதுகூட அவமானமில்லை. ஆனால், தாங்கள் அடிமைகள் என்பதையே அறியாமல், தமக்குக் கிடைத்த பெருமை என்கிற மனமயக்கத்தில் உழல்கிறார்களே" என்று கூறுவார். அவரது சொற்கள் மத மயக்கத்தில் வீழ்ந்து வருணக் கோட்பாட்டின் படிநிலை-களில் தன்னைப் பொருத்திக் கொள்கிற எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.

இந்திய சமூகம் முழுவதும் அப்படியான ஒரு மன மயக்கத்தில்தான் உழன்று கொண்டிருக்-கிறது. இனக்குழு வரலாற்றையும், உயிரியல் வரலாற்றையும் நாம் தொடர்ந்து மீட்டுருவாக்கம் செய்வதன் காரணம் இந்திய சமூகத்தில் மனித உயிரியல் என்கிற காரணியைப் பின்னுக்குத் தள்ளி பிறப்பால் ஒரு குழு உயர்ந்தது என்கிற பொய்யை எல்லா இடங்களிலும் பரவச் செய்திருப்பதுதான். பழங்குடி இந்தியர்களின் கலாச்சாரமும், பண்பாடும், உழைப்பும், பொருளாதாரமும் சுரண்டப்பட்டு உயர் ஜாதி என்கிற அரணைச் சுற்றிக் கட்டிக் கொண்டு ஒய்யாரமாக இந்த வருண ஜாதி அமைப்பின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் மனிதக் குழுக்களின் கோட்பாடே நம்மைப் பொருத்தவரை ஆரியக் கோட்பாடு. பிறப்பால் நான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற இந்த உளவியல் நோய் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்ட கொடுநோய்.

ஆரியக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து வரலாற்றில் இரட்டை வேடம் போடுவதை நம்மால் பார்க்க முடியும். எப்போதெல்லாம் அவர்களின் இருப்புக் குறித்த வரலாறு கேள்விக்கு உள்ளாக்கப்-படுகிறதோ அப்போதெல்லாம் ஆரியக் குடியேற்றம் பொய் என்றும், அது நிகழவே இல்லை என்றும் வாதிடுவார்கள். எப்போ-தெல்லாம் வெற்றி கிடைக்கிறதோ அப்போ-தெல்லாம் ஆரியக் குடியேற்றம் மட்டுமல்லாமல், அவர்களின் வருகையும், இலக்கியமும், பண்பாடும்தான் இங்கே எல்லாவற்றையும் கட்டமைத்தது என்று உறுதியாகச் சொல்வார்கள்.

பிறப்பால் நான் உயர்ந்தவன் என்கிற அறிவியலுக்கு எதிரான பிற்போக்குக் கதைகளை நெடுங்காலமாக இந்த மண்ணில் கட்டவிழ்த்து அதன் மூலமாகவே உழைப்பையும், பொருளையும் சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்வது மட்டுமல்லாது, பல கோடிக் குழந்தைகளின் பிறப்பைக் கேலி செய்தும், அவர்களின் உளவியலைச் சிதைத்தும் சமூகக் கட்டமைப்பை அறிவியலுக்கு எதிரான மூடத்தனங்களால் நிரப்பிய கோட்பாடே ஆரியம் என்கிற நாசிசக் கோட்பாடு. பிறப்பால் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்கிற கோட்பாடு அறிவின் மீதும் மனித உடல் மற்றும் உயிரின் சமநிலை மீதும் நம்பிக்கை அற்ற பிற்போக்குக் கோட்பாடு, அத்தகைய கோட்பாட்டின் எல்லா முடிச்சுகளும் இந்திய சமூகத்தின் வேர்களில் மதம் மற்றும் ஏனைய சமூகப் பழக்கங்களின் வழியாகப் பிணைக்கப்-பட்டிருக்கிறது. இந்தச் சிக்கலான அடிமைத்தனத்தின் வேர்களை அறுத்து விடுதலை பெற்ற மானுட சமூகத்தின் தலைமுறையாக நமது குழந்தைகளை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை. கடமை மட்டுமல்ல, அடிப்படை உரிமையும்கூட.

உயிரியல் அடிப்படையில், மனித உளவியல் அடிப்படையில் மனித இனக்குழுக்கள் எல்லாம் சமநீதியும், உரிமையும் பெற்றவை என்கிற எளிய உண்மையை நமது குழந்தைகளுக்குத் தீவிரமாகக் கற்றுக் கொடுக்க வேண்டிய காலமிது. உளவியல் வழியாக காலம் காலமாக அவர்களின் மரபு நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. கல்வியும், முறையான உளவியல் வழிகாட்டுதலும் இல்லாமல் அவர்களை விடுதலையை நோக்கிச் செலுத்துவது இயலாத ஒன்று.

இறுதியாக அறிவியலுக்கு எதிரான, மானுட சமநீதிக்கு எதிரான ஆரியம் போன்ற பிறவி உயர்வுக் கோட்பாடுகளை உடைக்க நாம் எந்தத் தளங்களில் பணியாற்ற வேண்டும் என்பதை அடுத்த பகுதியில் ஆய்வு செய்வோம்.

- அறிவழகன் கைவல்யம்

(தொடரும்)

தமிழ் ஓவியா said...

ஊன்றிப் படிக்க! உண்மையை உணருக!


வந்தவர் மொழியா?
செந்தமிழ்ச் செல்வமா?

கணம்

இயல்பாக ஒருவன் கண் இமைக்கும் நேரத்திற்குப் பெயர். இச்சொல் கண் என்பதிலிருந்து பிறந்தது. கண் அம் கணம் ஆகி, அது கண்ணிமைக்கும் நேரத்திற்கானதை ஈறு திரிந்தோர் ஆகு பெயர் என்பர்.

இவ்வாறு கண் என்பது அம் பெறாமலே கண்ணிமைப்போது என்ற பொருள் தருவதும் உண்டு.

கயற்கணின் அளவும் கொள்ளார்
(சீவக சிந்தாமணி 1393)

என்று வந்துள்ளதும் கருதத்தக்கது. எனவே கணம் வந்தவர் சொல்லன்று. செந்தமிழ்ச் செல்வமே என்று கொள்க. இதைப் பார்ப்பனர் க்ஷணம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள். கணமும் க்ஷணமும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றன. கணம் என்ற தமிழ்ச் சொல் பழந்தமிழ் நூல்களில் நாம் எடுத்துக் காட்டியுள்ளவாறு காரணப் பெயராய் வந்துள்ளது. இந்நிலையில் நாம் அறிய வேண்டியது என்னவெனில், வந்தவர் நம் தமிழாகிய கணத்தை க்ஷணம் என்று தம் வாய்க்கு வந்தவாறு சொல்லிக்-கொண்டார்கள் என்பதே.

தானம்

தன்மை என்பது மைஈற்றுப் பண்புப்பெயர் ஆகும். மை ஈற்றுப் பண்புப் பெயர்கள் அனைத்தும் பல மாறுதல்களை அடையும்.

ஈறு போதல் இடை உகரம் இய்யாதல்
ஆதிநீடல் அடி அகரம் ஐயாதல்
தன் ஒற்று இரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இனம்மிகல் இணையவும் பண்புக்கியல்பே

என்ற நன்னூற் பாட்டினால் இன்னின்ன மாறுதல் அடையும் என்பது அறிக. மேற்சொன்ன தன்மை என்ற பண்புப் பெயர் ஈறுபோதல் என்ற சட்டத்தால் மை கெட்டுத் தன் என நின்றது. அந்தத் தன் என்பது ஆதி நீடல் என்ற சட்டத்தால் தான் என நீண்டு நின்றது. அந்தத் தான் என்பது அம் என்ற பண்புப் பெயர் இறுதிநிலை பெற்றுத் தானம் ஆயிற்று. தானம் என்பதன் பொருள் தன்மை, உயர்வு என்பன. எனவே, தானம் என்பது கொடைத்தன்மை என்று உணர்தல் வேண்டும்.

தானம் என்பது ஈண்டுக் காட்டிய பொருளில் அமைந்து இருப்பதை அடியில் வரும் சிந்தாமணிச் (2924) செய்யுளாலும் அறியலாம்.

கருங்கடற் பிறப்பின் அல்லால்
வலம்புரி காணுங் காலைப்
பெருங்குளத் தென்றும் தோன்றா
பிறை நுதல் பிணையினீரே.
அருங் கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம்
தெரியின் மண்மேல்
மருங் குடை யவர்கட் கல்லால்
மற்றையவர்க் காவ துண்டோ.

இச் செய்யுளில் வந்துள்ள அருங்கொடைத் தானம் என்ற தொடர் மேலே நாம் காட்டிய வண்ணம் தானம் என்பது தன்மை என்று பொருள்படுவது காண்க.

எனவே, தானம் என்ற சொல் தூய தமிழ்ச் சொல் அன்றோ? இதைப் பார்ப்பனர் வடமொழிச் சொல் என்று கயிறு திரிப்பர். தானம் என்ற சொல் வடவர் இலக்கியத்திலும் இருக்கின்றதே எனில், ஆம், வந்தேறிகளாகிய வடவர் தமிழினின்று எடுத்துக் கொண்டார்கள் என்றோ அறிய வேண்டும்.

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

(குயில், 1.6.1958)

தமிழ் ஓவியா said...

கருத்து


பொதுத்துறை நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் ஆராய்ச்சிகள் தொழில்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சோதனைக்-கூடங்களோடு மட்டும் நின்றுவிடாமல் ஆராய்ச்சிகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும். இனிவரும் காலங்களில் நடக்கவிருக்கும் ஆராய்ச்சிகளும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துகின்ற வகையில் இருக்க வேண்டும்.

- கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை அங்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் இல்லை. எனவே, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதியை மாவட்ட அளவில் ஒரு மருத்துவ-மனையிலாவது ஏற்படுத்த வேண்டும். மருத்துவ சேவைகள் அனைத்தும் மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

- செலமேஸ்வர், உச்ச நீதிமன்ற நீதிபதி.

வளர்ச்சி என்று கூறிக்கொண்டு மக்களிடம் கருத்துக் கேட்காமல் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தும் முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் அதுபற்றிக் கருத்துக் கேட்க வேண்டும். மக்களுடைய ஒத்துழைப்புடன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

இந்தத் திட்டம் பற்றிய விவரங்கள், ஆய்வுகள் முழுவதையும் தமிழில் மொழிமாற்றம் செய்து கிராம சபைகளில் மக்கள் தெரிந்துகொள்ள அரசு செய்ய வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

- மேதா பட்கர், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்புத் தலைவர்

குடியரசு தின அணி-வகுப்புக்கு ரூ.100 கோடி செலவழிக்கிறீர்கள். ஆனால் ஏழை விவசாயிகளின் நிலத்திற்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகிறீர்யீகள். வழக்குத் தொடர்வதற்கு செலவழிக்க முன்வரும் நீங்கள் ஏன் இழப்பீடு தரத் தயங்குகிறீர்கள்?

- எச்.எல்.தத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.

தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக் கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியம். பள்ளிக் கல்வியை மாணவர்களுக்கு நல்ல அனுபவக் கல்வியாக மாற்றினால் மட்டுமே தகுதிவாய்ந்த, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். இப்போது இருக்கும் பாடத்திட்டத்தில் 25 விழுக்காடு குறைத்து தொழில்திறன் மேம்பாடு உள்ளிட்ட பாடத்திட்டங்களைக் கற்பிக்க வேண்டும்.

- ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்.

குழந்தைத் திருமணம், பள்ளிகளில் பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்-படுவதாலேயே இத்தகைய குற்றங்கள் நிகழ்கின்றன.

குழந்தைகள்மீது நடத்தப்படும் குற்றங்கள் குறித்து காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகிய அரசு அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

- வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

தமிழ் ஓவியா said...

மணியம்மையாரை அன்னை என்பது ஏன்?

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மார்ச் - 10

மணியம்மையாரை அன்னை என்பது ஏன்?

புகழக்கூடாத மணியம்மையாரை அன்னை எனப் புகழ்கிறீர்களே! இது சரியா? என்று மணச்சநல்லூரிலிருந்து ஒருவர் கேட்ட கேள்விக்கு சூடாக புரட்சிக்கவிஞர் அளித்த பதிலிருந்து சில பகுதிகள் இதோ!

நாம் இளைமைப் போதில் முருகனைப் புகழ்ந்தோம் _ பாடினோம் _ ஆனால் நாளடைவில் முருகன் புகழத்தக்க ஒரு பொருளன்று. பாடத்தக்க ஒருபொருளன்று எனக் கண்டோம். முருகனைப் புகழ்வதை விட்டோம். முருகனைப் பாடுவதை விட்டோம்.பாரதி தமிழ்ப் பாட்டுக்கு ஒரு புதுநடை கண்ட புலவன். பாரதியைப் புகழ்ந்தோம் _ பாடினோம் _ இதைச் சிலர் எதிர்த்தார்கள். பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதை எதிர்த்து வருகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பை நாம் பொருட்-படுத்தவில்லை. ஆனால் நாம் புகழ்வதற்கும் புகழ்ந்து பாடுதற்கும் பாரதியைவிட ஒருவர் இருக்கிறாரா? அவர் யார் என்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

தாம் போகும் வழியை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன் தமிழரைக் காப்பேன். ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல; மலைமேல் நின்று மெல்ல அல்ல தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.

அது மட்டுமல்ல.

குன்று உடைக்கும் தோளும் நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம். பெரியாரைப் புகழ்ந்து பேசினோம்; புகழ்ந்து எழுதினோம்; புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ நாம் பாட இன்னும் ஒரு மேலான ஒரு பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

பெரியார் செத்துக் கொண்டிருந்தார்! தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்.

ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரை _ போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு. மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.

ஆயினும் காற்றிறங்கிப் பொதிமாடுபோல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒரு பால் ஒட்டிய ஆண் குறியினின்று முன்னறிவிப்பின்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந் தொண்டால் முடியாது. அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது; வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு

ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை,

அன்னை என்று புகழாமல் நாம்வேறு

என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகுபெறக் கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார், ஏதுங்கெட்ட வேலைக்காரி போல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை என் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை; எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டைக் கட்டுவதன்றி அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலையில் வைத்தார் என்பதும் இல்லை.
மணச்சநல்லூராரே,

நான் யாரைப் புகழ வேண்டும்?

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், (குயில் 10.5.1960; 2,3)

தமிழ் ஓவியா said...

மகளிர் சமுதாய மேன்மைக்கான அரசுப் பணிகளில்
பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு திட்டம்

சம சொத்துரிமை வழங்கிட தனிச் சட்டம் நிறைவேற்றம் கலைஞர் அறிக்கை

சென்னை, மார்ச் 7_ இந்தியாவிலேயே முதன் முறையாக அரசுப் பணி களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடும் திட்டம்! பெண்களுக்குச் சம சொத் துரிமை வழங்கிட தனிச் சட்டம்! உள்ளாட்சி அமைப்புகளில் பெண் களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!! போன்ற மகளிர் சமுதாய மேன்மைக்கு மகத்தான பல சட்டங் களையும், திட்டங்களை யும் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது என உலக மகளிர் நாள் (மார்ச் 8)யொட்டி இன்று (7.3.2015) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத் துள்ள வாழ்த்து செய்தி யில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

உலக மகளிர் நாள்!

19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய அய்ரோப் பிய நாடுகளிலும், பின்னர் அமெரிக்காவிலும், ரஷ்யா விலும் ஆயிரக்கணக்கில் மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை, வாக் களிக்கும் உரிமை முதலிய வற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போரா டினர். அப்போராட்டங் களின் ஒருகட்டத்தில் பிரான்சில், புருஸ்ஸிய னில் இரண்டாவது குடி யரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் என்னும் மன் னன் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்கு ரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டின் மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, உலக மகளிர் நாள் என ஆண்டுதோறும் உலகெங் கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த திட்டங்கள் உருவெடுக்கத் தொடங்கின.

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டிலும், அதன் பின் னரும் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, மகளிர் சமுதாய மேன் மைக்கு மகத்தான பல சட்டங்களையும், திட்டங் களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது. அதன் விளைவாகத்தான் இன்று எங்கும் - எல்லா அலுவலகங் களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாக் கலைகளிலும் பெண்கள் பங்குபெற்றுப் பயனடைந்து முன்னேற் றம் கண்டு சாதனைகள் பல படைத்துப் பெரு மைகளைக் குவித்து வருகிறார்கள் என்பதனை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. இந்தியாவிலேயே முதன் முறையாக அரசுப் பணி களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடும் திட்டம்!

பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கிட தனிச் சட்டம்!

உள்ளாட்சி அமைப்பு களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!
காவல்துறையில் பெண்களைக் காவலர் களாக நியமனம் செய்யும் திட்டம்!

தமிழ் ஓவியா said...

விதவை மகளிர் திருமண நிதி உதவித் திட்டம்!

10ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு மூவலூர் மூதாட்டியார் பெயரில் திருமண நிதியு தவித் திட்டம்!

நாகம்மையார் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்

ஏழைப் பெண்கள் உயர் கல்வி பயில ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம்; பின்னர் பட்ட மேற் படிப்பு நீட்டிப்பு!

ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி நல்கும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியு தவித் திட்டம்!

விதவைப் பெண்களுக் கும், கணவனால் கைவிடப் பட்ட பெண்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும் உதவித் தொகை வழங்கும் திட்டம்!

இலட்சக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுக் கள் உருவாக வழிவகுக் கப்பட்ட மகளிர் திட்டம்!

அரசு உருவாக்கிடும் தொழில் மனைகளில் 10 சதவீத மனைகளைப் பெண் தொழில் முனை வோருக்கு ஒதுக்கீடு செய் யும் திட்டம்! திருக்கோயில் களில் செயல்படும் அறங் காவலர் குழுக்களில் மகளிர் ஒருவரை அறங் காவலராக நியமிக்க வகை செய்யும் சட்டம்!

மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம்!

ஏழைத் தாய்மார்கள் மனம் குளிர இலவச வண்ணத் தொலைக்காட் சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்!

எரிவாயு இணைப்பு டன் இலவச எரிவாயு இலவச அடுப்புகள் வழங் கும் திட்டம்!

ஆதிதிராவிட மகளிர்க்கு விமானப் பணிப் பெண் பயிற்சி வழங்கும் திட்டம்!

அய்ம்பது வயது கடந்தும் திருமணமாகா மல், உழைத்து வாழ முடியாத சூழலில் வாழும் ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டம்!

இரண்டு இலட்சத்திற் கும் மேற்பட்ட சத்துண வுத் திட்டப் பணியாளர்கள் பயன் பெற காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கும் திட்டம்!

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்களும், செவிலியர்களும் நியமிக் கப்பட்டு, கிராமப்புற மக ளிர்க்கு 24 மணிநேர மருத்துவச் சேவை அளிக் கும் திட்டம்! எனப் பல்வேறு திட் டங்களையும், சட்டங் களையும் நிறைவேற்றி, அரசுத் துறைகளிலும், அரசியல் களங்களிலும், தொழில் முறைகளிலும் பெண்கள் முன்னேற்றத் திற்குத் தேவையான அடித்தளங்கள் பலவற்றை வலுவாக அமைத்துத் தந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகமே என்பதனை நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல நமக்கு உரிமை உண்டு.

ஆனால், 2011க்குப் பிறகு, எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி, பெண் கள் பாதுகாப்பின்றிப் பல வழிகளிலும் பாதிக்கப் பட்டு வருகின்றனர் என் பதனை இவ்வேளையில் வேதனையுடன் நினைவு கூரும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

மனித குலத்தின் மகத் தான சக்திகளில் ஒன் றாகத் திகழும் மகளிர்க்கு எதிரான இத்தகைய கொடுமைகள் முற்றிலும் அகற்றப்பட - கழக அரசு காலத்தில் தொடங்கப் பட்ட பெண்கள் நலத் திட்டங்கள் தங்கு தடை யின்றித் தொடர்ந்திட - எங்கும் எதிலும் ஆண் களுக்கு இணையான சமத்துவம் நிலவச் செய் திட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம்!

தமிழக மகளிர் அனைவர்க்கும் உலக மகளிர் நாள் நல் வாழ்த்துகளை உரித்தாக் குவோம் என கலைஞர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97448.html#ixzz3ThZVSpff

தமிழ் ஓவியா said...

மறதி நோய் தாக்குதல் ஏன்? ஓர் அதிசய ஆய்வு!


மீதூண் விரும்பேல் என்ற அறிவுரை, அதிகம் சாப்பிட்டால் எடை கூடும்; ஊளைச் சதை - கொழுப்புச் சத்துக் கூடும்; கொலஸ்ட் ரால் - கூடுவதோடு, சர்க்கரை நோய்க்கும் அழைப்பு விடுக்கும் என்பது மட்டுமல்ல.

பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரை ஒன்றில் ஒரு மருத்துவ ஆய் வாளர் இதை மற்றொரு கோணத்திலும் ஆய்வு செய்து நிறுவியுள்ளார்!

மறதி நோய் (Dementia)” என்பது இப்போது பலருக்கு முதுமை முளைப்பதற்கு முன்னதாகக்கூட வந்து விடுகிறது!

அதற்கு ஒரு முக்கிய காரணம் அதிகம் சாப்பிடுவதும், சில உணவு களே அப்படி ஒரு நிலையை இன் சுலின் சுரக்காத அளவுக்கு ஆகி மூளையைத் தாக்கி - மறதி நோய்க்குக் காரணமாகியிருப்பதைக் கண்டுபிடித்துள்ளதோடு

சர்க்கரை நோய் - Type I, Type II என்று இதுவரை இரு வகையாகப் பகுத்தனர் மருத்துவர்கள்.

இவரோ, Type III என்றால் இந்த Alzheimer’s Disease ஆகிய இரண் டையும் தோற்றுவிக்க காரணமான மூன்றாம் வகை சர்க்கரை நோய் Type III Diabetes என்று கூறியுள்ளனர். டாக்டர் டி லா மாண்டி என்பவர் இப்படி ஒரு பெயரையும் தந்துள்ளார்.

மூளையில் உள்ள செல் மெம்பி ரேன்களுக்கு அதிக புரதச் சத்தை அளித்து உதவக் கூடியது பீட்டா ஆம்லாய்ட் (Beta amyloid) என்ற ஒரு வகை புரதச்சத்தின் துண்டு துகள் ஆகும்.

முக்கியப் பணிகளை மூளை செய்ய இதுதான் பெரிதும் உதவக் கூடியதாம்!

மைக்ரோப்ஸ் என்பவைகளை எதிர்த்துப் போரிடுதல், கொலஸ்ட்ராலை வேறு இடத்திற்கு அனுப்பி குழாய் அடைப்பை தடுக்க உதவுதல், சில மரபணுக்களை (Genes)
ஒழுங்குபடுத்தும் பணி இவைகளையும் இந்த துகள் துண்டுதான் செய்யும் இந்தப் பணியை செய்யவிடாமல் செய்கிறது மீதூண் உணவு என்பதே முக்கிய கருத்தாகும்!

ஹார்மோன்கள் பல வகை நோய்களை உடல் பலவீனங்களை - நோய் தாக்குதலை எதிர்க்க உதவி செய்யும் படை வீரர்கள்.

நம் மூளையைப் பொறுத்தவரை நியுரான்கள் என்பவைகள் குளுக் கோஸ் - சர்க்கரையை சக்தியாக மாற்றி நியூரோடிரான்ஸ் மீட்டர்களை நினைக் குதிர் நன்றாக இயங்கும் வண்ணம் உதவும் பணிக்குக் காரணமாக உள்ளது. இரத்தக் குழாய் அவற்றின் பணி செய்ய, பிராண வாயு போதிய அளவில் கிடைக்க வழி செய்யும் பல பணிகள் மூலம், மூளைக்குப் போதிய குளுக்கோஸ் - சர்க்கரைச் சத்து - சக்தி கிடைப்பதை - சில வகை உணவு - கொழுப்பு கூடுதலாக, இன்சுலின் சுரத்தலைத் தடுத்து விடுகிறது.

அது மறதி நோய்க்கு அடித்தளம் இடுகிறது!

கணையம் அதிகமாக ஓவர் டைம் வேலை செய்து பழுதாகி விடுவதால் இந்த ஆபத்து. இதைப் புரிந்து அளவோடு சரியான உணவைத் தேர்வு செய்து, முக்கால் வயிற்றுடன் எழுந்து வாழுங்கள்.

வாழுவதை நினைவுபடுத்திக் கொண்டு, பிறருக்குச் சுமையாய் இராத வாழ்வு வாழுங்கள் - வாழ முனை யுங்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/97441.html#ixzz3ThaKecM0

தமிழ் ஓவியா said...

உள்ள கோவில்கள் போறாதா?

இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன.

இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒண்ணரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒர் புதுக்கோயில் கட்டி அதில் ஆதிதிராவிடர்களை அனுமதித்திருக் கிறார்களாம். இதை தேசியப் பத்திரிகைகள் போற்றுகின்றன. இது என்ன அக்கிரமம்? எவ்வளவு முட்டாள்தனம்? என்பதை பார்க்க வேண்டுகிறோம்.

பழைய கோவில்களில் ஆதிதிராவிடர்களை விட வில்லையானால் அதற்காக புதுக்கோவில்கள் கட்டுவது பித்தலாட்டமான காரிய மல்லவா? தீண்டப்படாதவர் களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக்கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக்கோவில் கட்டி அவர் களுக்குப் பிரவேசமளித்து விட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா? என்று கேட்கின்றோம்.

தேசியம் என்ற பித்தலாட்டச் சூழ்ச்சி என்று ஆரம்பமானதோ அன்று முதல் இன்று வரை தேசியத் தலைவர் முதல், வாலர்கள் வரையில் ஒவ்வொரு விஷயத் திலும் இந்தமாதிரியான சூழ்ச்சிகளும், பித்தலாட்டங் களுமே நடைபெற்று மக்களையும் முழுமூடர்களாக்கி வருகின்றது. என்றுதான் இந்த புரட்டுகளும், கேடுகளும் ஒழியுமோ?

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 05.02.1933

Read more: http://viduthalai.in/e-paper/97447.html#ixzz3ThbCxawo

தமிழ் ஓவியா said...

காந்தியின் மிரட்டல்

காந்தியவர்கள் உயிர்விடுகிறேன்! உயிர் விடுகிறேன் என்று சர்க்காரை மிரட்டலாம், தாழ்த்தப் பட்ட வகுப்பாராகிய தீண்டப்படாதார் என்பவர்களை மிரட்டலாம், ஆனால், பார்ப்பனர்களை மாத்திரம் மிரட்ட முடியாது.

ஏனென்றால் இந்த மகாத்மா உயிர் விட்டால் அவருக்குச் சமாதி கட்டி குருபூஜை, உற்சவம் செய்யச் செய்து விட்டு அதன் பேராலும் பலருக்குப் பிழைப்பு ஏற்படுத்திக்கொண்டு மற்றொரு மகாத்மாவையும் சிருஷ்டி செய்து கொள்ள அவர் களால் முடியும், ஆதலால் காந்தி மிரட்டல் பார்ப்பனர் களிடம் மாத்திரம் செல்லாது.

ஆகையால் காந்திமகாத்மா பட்டம் நிலைக்க வேண்டுமானால் ஹரிஜன சேவையை விட்டு விட்டு மதத்திற்காகத்தான் சுயராஜியம் கேட்கின்றேன் என்று உப்புக்காய்ச்சும் வேலைக்கோ, ராட்டினம் சுத்தும் படி செய்யும் வேலைக்கோ,

ஏழைகள் பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது என்ற உபதேசம் செய்யும் வேலைக்கோ திரும்புவது தான் நல்ல யோசனையாகும். இல்லாவிட்டால் எப்படியாவது ராஜி செய்துகொள்ளுவது எல்லாவற்றையும் விட நல்ல தாகும்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 05.02.1993

Read more: http://viduthalai.in/e-paper/97454.html#ixzz3ThbaWZ8Q

தமிழ் ஓவியா said...

உண்மையிலேயே ஒரு மனிதனுடைய இலட்சியத்திற்கு வெற்றி ஏற்பட வேண்டும் என்று கருதுகின்ற மனிதனுக்கு அவன் ஆசை நிறைவேற வேண்டுமானால் அந்த இலட்சியத்திற்கு அவனது உயிரைக் கொடுத்ததாய் அதாவது அந்த இலட்சியத்தின் பயனாய் உயிர் இழக்கப்பட்டதாய் ஏற்பட்டால் அது உண்மையில் பயனளிக்கக் கூடியதேயாகும்.

-தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/97455.html#ixzz3ThbnjC3d

தமிழ் ஓவியா said...

பெருமைமிகு பெரியார்

சிற்பம் வடித்திடுக; சிற்பியர்காள்! அய்யாவின்
பொற்புவந்து கல்லிற் புக.

கவிதை புனைக; கவிஞர்காள்! இந்தப்
புவிபுதுக்கி னாரைப் புகழ்ந்து.

ஓவியர்காள் தந்தை உருவத்தைத் தீட்டிடுக!
ஆவிபெற்று மீண்டாற்போல்; ஆழ்ந்து.

நாளும் முழக்கிடுக; நாவலர்காள்! அய்யாவின்
நீளும் புகழை நிலத்து.

பண்ணிசைத்துப் பாடிடுக; பாடகர்காள்! அய்யாவின்
தொண்டுகளை யெல்லாம் தொகுத்து.

நடிகர்காள்! ஒன்றி நடித்திடுக! அய்யா
வடிவேந்தும் நாடகத்துள் வாழ்ந்து.

பரதநடப் பாவையர்காள்! பாவனையால் அய்யா
வரலாற்றைச் சொல்க மகிழ்ந்து.

ஆய்ந்திடுக நாளும்; அறிஞர்காள்! பேரறிவில்
தோய்ந்தவரின் சிந்தனையில் தோய்ந்து.

ஈடில்லாத் தந்தைபணி எண்ணட்டும்; ஏத்தட்டும்
கூடிக் கலைஞர் குழாம்.

அஞ்சுகங்காள்! சிந்திடுக! அய்யாவின் சீர்த்தியினைக்
கொஞ்சுதமிழ்த் தேனில் குழைத்து.

கோகிலங்காள்! கூவிடுக! கோமகனின் மேன்மையினைப்
பாகினிமை தோற்கப் பகுத்து!

ஆழியின் பேரலைகாள்! ஆர்த்திடுக. நாளுமிந்த
ஊழிப் பெரியோன்சீர் ஓர்ந்து.

மாமலைகாள்! இன்னும் மவுனம்ஏன்? விண்டுரைப்பீர்
தீமலையாய் வந்தார் திறம்.

சுட்டெரிக்கும் சூரியனே! சொல்க! மடமைவனம்
பட்டெரியச் செய்தார் பணி.

பாடிவா! பால்நிலவே! பாரெங்கும் அய்யாவின்
ஈடிலாத் தொண்டை இனிது.

அலைந்துதிரி காற்றே! அவனிக்குச் சொல்க!
தலைவரிவர் தொண்டதனைச் சற்று.

களிறுகாள்! சாற்றுங்கள்! காசினியில் நாளும்
பிளிறிப் பெரியாரின் பீடு.

புல்லாங் குழல்காள்! புரட்சிகளின் நாயகர்சீர்ப்
பல்லாண் டிசைப்பீர் பணிந்து.

செந்தமிழ் மக்காள்! செகம்முழுதும் ஆர்த்துரைப்பீர்!
அந்தமிலாத் தந்தைபுகழ் ஆய்ந்து.

(ய. மணிகண்டன் ஒளிந்திருக்கும் சிற்பங்கள் வெளியீடு: விழிகள் பதிப்பகம் நன்கொடை ரூ.70)

Read more: http://viduthalai.in/page3/97395.html#ixzz3ThdKr0wS

தமிழ் ஓவியா said...

அய்யாவின் ஊன்று கோலாய்!

மா.காசிநாதன் - செகதீசன் சகோ தரர்கள் சிங்கப்பூரில் பெரு வணிகர் களாக உருவெடுத்து பொருளீட்டிக் கொண்டிருந்தார்கள்.
பிறந்த ஊரான ஆயக்காரன்புலத்தி லிருந்து உறவினர்கள் வாழும் ஆலத் தம்பாடிக்கு குடி ஏற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த காலம்.

1965 இல் ஒரு மாளிகை வீடு நிர்மாணிக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. எதிரே உள்ள திடலில் ஓலையால் வேயப்பட்ட சிறுகுடில் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மீனாட்சி சுந்தரம் குடும்பத்தைச் கவனிக்கும் பொறுப்பில் இருந்தார்.

ஆலத்தம்பாடிக்கு பக்கத்து கிராமமான கீரக்களூரில் சுயமரி யாதைச் சுடரொளி சு.சாந்தன் இல்லம் இருந்ததனால் அடிக்கடி ஆலத்தம் பாடிக்கு வந்து மீனாட்சிசுந்தரத்தை சந்திப்பதை வாடிக்கையாகக் கொண் டிருந்தார். இவரது வீடே அவருக்கு பாடி வீடாக அமைந்திருந்தது.

இவர்கள் இருவரும் பழகத் தொடங்கிய காலம் தி.க.விற்கும், திமுக விற்கும் ஆகாத காலம்! துருப்பிடித் துப்போன முரட்டு இரும்புகளையும் ஈர்த்துக்கொண்டிருந்த பெருங்காந்த மாய் விளங்கிய பெரியாரின் கொள் கையில் மீனாட்சிசுந்தரம் கட்டுண்டுக் கிடந்ததில் ஒன்றும் வியப்பில்லை தான்!

ஆனாலும் இவர் திமுகவில் பிரபலமாகி வளர்ந்து கொண்டிருந் தார். இவரைச் சுற்றி ஒரு பெரும் இளைஞர் பட்டாளமே சுழன்று கொண்டிருந்தது! தந்தை பெரியாரை அழைத்து ஆலத்தம்பாடியில் பொதுக்கூட்டம் நடத்த சாந்தன் ஏற்பாடு செய் திருந்தார்.

அய்யா அவர்கள் ஆலத்தம் பாடிக்கு வரும்போது எங்கள் வீட் டிற்கு விருந்து சாப்பிட வரவேண்டும் என்று சாந்தனிடம் மீனாட்சிசுந்தரம் சொன்னார்.

அதற்கு சாந்தன் சொல்கிறார், எல்லாத்திலேயும் விளையாடாதீங்க தம்பீ... என்று மூஞ்சை ஒருபக்கம் திருப்பிக்கொள்கிறார்! அதற்கு மீனாட்சிசுந்தரம் இல்லை,,, இல்லை,,, அய்யா அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்துதான் ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்! என்ன தம்பி சொல்றீங்க! நிஜ மாவா சொல்றீங்க! ஆமாம்... அதற் கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்கிறார்.

உடனடியாக சாந்தன், அப்போ தைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவ ராக இருந்த தோலி ஆர்.சுப்பிர மணியம் அவர்களுடன் திருச்சி பெரியார் மாளிகைக்குச் சென்று அய்யா அவர்களிடம் செய்தி சொல்லி ஒப்புதல் பெற்றுக் கொண்டு வந்து விட்டார்கள்.

பெரியார் வருகிறார் என்றதும் இவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நண்பர்களைக் கூட்டிக் கொண்டு திருவாரூக்குப் போய் அய்யா உட்கார ஒரு விலை உயர்ந்த சோபாசெட் வாங்கிக்கொண்டு வந்தார். அய்யாவுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகள் பக்குவமாய் சமைக்கப்பட்டிருந்தன.

தந்தை பெரியாருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து சாப் பிடச் செய்தார்கள். அய்யா அவர்கள் விருந்து சாப்பிட வந்ததற்காக மீனாட்சிசுந்தரம் இருபத்தைந்து ரூபாயை அய்யாவிடம் கொடுத்தார்.

ரொம்ப நன்றிங்க... ரொம்ப நன்றிங்க... என்று சொல்லிக் கொண்டே தனது உள் சட்டைப் பைக்குள் இருந்த மணிபர்சை எடுத்து அதற்குள் வைத்துக் கொண்டார். பிதுங்கிக் கொண்டிருந்த வெளிப் பையில் இருந்து ஒரு குட்டை நோட்டை எடுத்து மீனாட்சிசுந்தரம் என பெயர் எழுதி வரவு இருபத் தைந்து என குறித்துக் கொண்டாராம்.

சரி... சரி... கூட்டத்திற்கு நேரமாகி விட்டது என சொல்லிக்கொண்டே, சாப்பாடு ரொம்ப பிரமாதம் - ரொம்ப நன்றி... நன்றி... என்று மீனாட்சி சுந்தரம் கையை ஊன்று கோலாகப் பிடித்துக்கொண்டு பெரியார் இருக் கையை விட்டு எழுந்து நடக்கிறார். அப்பொழுது ஒரு நிழற்படம் எடுக்கப்பட்டது.

இருவருக்கும் பக்கத் தில் அய்யாவின் தனிச்செயலாளர் புலவர் கோ.இமயவரம்பன், ஆயக் காரன்புலம் சு.இராமையன் இருக் கிறார்கள்.
பொதுக்கூட்ட மேடைக்கு சென்ற உடனேயே பெரியார் பேச ஆரம் பித்துவிட்டார். திமுகவை வாங்கு... வாங்கு என்று வாங்கினார்! கடுமை யான தாக்கு!

ஏராளமான திமுக தோழர் களோடு மீனாட்சிசுந்தரம் மேடை அருகே உட்கார்ந்து கொண்டு அய்யா பேசுகிறார்! நம்மை அய்யா பேசாமல் யார் பேசுவது!! என்று சிரித்துக் கொண்டே அய்யாவின் பேச்சு முழு வதையும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

- கி.முருகையன் (மாவட்ட தி.க.தலைவர் ஆயக்காரன் புலம் 2 - வேதாரண்யம் வட்டம்)

Read more: http://viduthalai.in/page5/97399.html#ixzz3Thdndwl3

தமிழ் ஓவியா said...

விரும்பினால் மட்டுமே பின்பற்ற வேண்டிய கொள்கை அல்ல மதச்சார்பின்மை!
இந்து நாளிதழின் தலையங்கம்

மதத்தின் அடிப்படையில் வெறுப் பினையும் வன்முறையையும் தூண்டு வதற்கு எதிராக பேசுகையில் நாட்டில் உள்ள சிறுபான்மை மத மக்கள் மீது இந்துத்துவக் குழுக்கள் சொல் அளவி லும், உடல் அளவிலும் தாக்குதல்களை நடத்துவதைத் தனது அரசு தடுக்காமல் ஊக்கமளிக்கிறது என்பது பற்றி வளர்ந்து வரும் கண்ணோட்டத்தைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டார்.

பெரும்பான்மை, சிறு பான்மை மதக் குழுக்களிடையேயான ஒரு வேறுபாட்டைப் பற்றி குறிப் பிடுவதை மிகுந்த கவனத்துடன் அவர் தவிர்த்தபோதிலும், வெறுப்பினைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு உறுதி அளித்தபோது, இந்துத்துவ குழுக்களால் சொல்லாலும், செயலாலும் தாக்கு தலுக்கு உள்ளாகும் சிறுபான்மை மத மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முறையில் அவர் பேசியிருக்கிறார் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

அண்மைக் காலங்களில் தேவாலயங்கள் தாக்கு தலுக்கு உள்ளான நிலையில், கத்தோ லிக்க சைரோ மலபார் தேவாலயம் புதுடில்லியில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு பேச நேர்ந்தது.

ஆனால் அவரது உறுதிமொழி பயன் நிறைந்த தாகத் தோன்றவில்லை. சிறுபான்மை மத மக்களுக்கு எதிராக சொல்லாலும் செயலாலும் தாக்குதல் நடத்துவதன் மூலம் அரசியல் நாகரிகம், பொறுப் புணர்வு என்ற எல்லையைத் தாண்டும் தனது அமைச்சர்களையோ நாடாளு மன்ற உறுப்பினர்களையோ, கட்டுப் படுத்தவோ, கண்டிக்கவோ தயங்குப வராகவே இதுவரை மோடி தோற்ற மளித்து வந்துள்ளார்.

அவரது சொற்களைத் தொடர்ந்து செயல் பாடுகள் மேற்கொள்ளப்படாமல் போனால், மதவெறுப்பினைத் தூண்டி விடுவதற்கு அவரது அமைச்சர்களையும், கட்சித் தோழர்களையும் அவர் இனியும் தொடர்ந்து அனுமதித்தால், அவர் அளிக்கும் உறுதிமொழிக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். கடந்த சில மாதங்களாக மோடி அரசு குழப்பம் அளிக்கும் சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

அரசின் மேல்மட் டத்தில் உள்ளவர்கள் தங்கள் பேச்சில் எச்சரிக்கையாக இருக்கும் அதே நேரத் தில், இடையிலும், கீழ்மட்டத்திலும் இருப்பவர்கள் தங்களது இழிவான, கடுமையான, ஆபத்து நிறைந்த பேச்சுக் களால் சட்டம் மற்றும் நாகரிக எல்லைகளை சோதனை செய்து பார்க்கின்றனர்.

ஒரு கட்சியாக, பா.ஜ.க., பொறுப்பு நிறைந்த, ஆட்சியில் உள்ள ஒரு அரசியல் கட்சி என்ற நிலைக்கும், தங்களது இந்துத்துவ ஆதரவாளர் களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய, தீனி போடவேண்டிய தேவை உள்ள நிலைக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

பா.ஜ.க.யில் உள்ள பலரும் நினைப்பதாகத் தோன்றுவது போல, மதசார்பின்மை என்பது அரசு விரும்பினால் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற ஒரு கொள்கை யல்ல; கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை என்று அரசி யல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகும்.

இந்தியக் குடியரசைக் குறிப்பிடுவதற்கு மதச் சார்பற்ற என்ற சொல் வேண்டுமானால் அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையில் 1976 இல் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் தாங்கள் விரும்பும் மதநம் பிக்கையைக் கொண்டிருப்பதற்கும், தாங்கள் விரும்புகிற மதத்தைப் பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் அரசமைப்பு சட்ட 25 ஆவது பிரி வில் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் அரசமைப்பு சட்டத்தில் உறுதிப் படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.

அனைத்து மக்களுக்கும் உள்ள, தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற் கான இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாப்பது ஆட்சியில் உள்ள அரசின் கடமையாகும். மதசுதந்திரம் என்பது எந்த ஒரு ஜனநாயகச் சமூகத் திலும் இரண்டறப் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்திருப்பதாகும்.

தாங் கள் விரும்பும் மதத்தைக் கடைப் பிடிப்பதற்கான சுதந்திரத்தைத் தனது குடி மக்களுக்கு அளிக்காமல் இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்க முடி யாது.

அரசமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப் பட்ட அடிப்படை உரிமைகள் தனது குடிமக்கள் அனைவருக்கும் அளிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள இயலாத ஓர் அரசு விரைவில் தனது அரசமைப்புச் சட்டப்படியான நியாயத் தன்மையையும், பிரதிநிதித்துவப் பண்பையும் இழந்துவிடும். தனது கட்சி அந்தப் பாதையில் பயணிப்பதை மோடி விரும்ப மாட்டார் என்பது மட்டும் நிச்சயம்.

நன்றி: தி இந்து 19-.02.-2015

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page8/97404.html#ixzz3Theqv24T