Search This Blog

3.3.15

பெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும்-பெரியார்

பெண்களுக்குத் தற்காப்பு
  

பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கப்படுமா என்று மத்திய சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், மாகாண சர்க்கார் அவசியமானதைச் செய்யும் என்று உள்நாட்டு மந்திரியான தோழர் பட்டேல் கூறியிருக்கிறார்.

மாகாண சர்க்கார் இத்துறையில் எதுவும் செய்யும் என்று நம்பிக்கை நமக்கில்லை. ஏனெனில், பெண்களை அடிமைப் பிறவிகளாக நினைக்கும் வைதிக மனப்பான்மை படைத்தவர்களே பெரிதும் மாகாண மந்திரிகளாயிருக்கின்றனர் என்றாலும், இவர்கள், எங்களுக்கு எந்த விடுதலையும் வேண்டாம்! அடிமைத்தனமே ஆனந்தம் என்று சொல்லக்கூடிய பத்தாம் பசலிகளாகவே இருக்கின்றனர்.

இந்தியப் பெண்கள் கல்வி, சொத்து, திருமண வாழ்க்கைகள் ஆகிய எந்தத் துறையிலும் சுயேச்சையில்லாதவர்களா-யிருக்கின்றனர். நவீன நாகரிகம் என்றால், பிரிட்டிஷ் பெண்களைப் போலவும், அமெரிக்க சிங்காரிகளைப் போலவும் உடை உடுத்துவதும், அலங்கரித்துக் கொள்வதும்தான் எனக் கருதியிருக்கிறார்களே தவிர, இரஷ்யப் பெண்களைப்போலவும், துருக்கிப் பெண்களைப்போலவும், போலீஸ், இராணுவம், விமானம் ஓட்டுதல் போன்ற காரியங்களையும் ஆண்களைப் போலவே செய்ய வேண்டும் என்ற நினைப்பே நமது படித்த பெண்களுக்குக்கூட இருப்பதில்லை.

தற்காலப் படிப்பு ஆண்களை எப்படித் தொடை நடுங்கிகளாகவும், வெறும் புத்தகப் பூச்சிகளாகவும் ஆக்கிவிட்டதோ, அதைப்போலவே நம் பெண் மக்களையும் வெறும் அலங்காரப் பொம்மைகளாகவும், புல் தடுக்கிகளாகவும் ஆக்கிவிட்டது.
உயர் படிப்புப் படித்துப் பட்டமும் பெற்ற பெண்கள், ஆண்டாள் அன்பு பற்றியும், காரைக்காலம்மையாரின் சிவ பக்தி பற்றியும் பேசிப் பொழுது போக்குகிறார்களென்றால், நம் பெண்களுக்கு நவீன மேல்நாட்டுக் கல்விகூட ஒருவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லையென்பது கண்கூடு.
நம்முடைய ஆட்சிமுறையில் அடிப்படையான, புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டாலொழிய, இந்தியப் பெண்களைச் சுயேச்சையுள்ள ஜீவன்களாக ஆக்குவது முடியாத காரியமேயாகும்.

பெண்களுக்கு உத்தியோகம் கொடுப்பதைப்பற்றிப் பேசியுள்ள ஒரிசா முதன் மந்திரியார், போலீஸ் இலாகாவைத் தவிர, மற்ற சர்க்கார் இலாக்காக்களில் பெண்களுக்கு உத்தியோகம் அளிப்பதென்று ஒரிசா சர்க்கார் தீர்மானித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இம்மாகாண சர்க்காரைக் காட்டிலும் முற்போக்கான முடிவைச் செய்துள்ள ஒரிசா சர்க்காரை நாம் பாராட்ட வேண்டியதுதான். ஏனெனில், பெண்கள் ஆசிரியர் வேலைக்கும், டாக்டர் வேலைக்கும், நர்சு வேலைக்கும், குமாஸ்தா வேலைக்கும் தவிர வேறு பதவிகளுக்குத் தகுதியற்றவர்கள் என்றே சென்னை சர்க்கார் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

இதைப்பற்றிப் பெண் மந்திரியான தோழியர் ருக்குமணி லட்சுமிபதி அம்மாளுக்குச் சிறிதும் கவலையிருப்பதாகவே தெரியவில்லை. அவர்களிடம் முற்போக்கான திட்டங்களையோ, பெண் இனத்தின் சுதந்திரத்திற்கான முயற்சி-களையோ எதிர்பார்ப்பது, 20 வயதுள்ள இளங்காளை, 75 வயது கிழவியை ஓட்டப்-பந்தயத்திற்குக் கூப்பிடுவது போலவேயாகும்.

ஆனால், ஒரிசா சர்க்கார் போலீஸ் இலாகாவை மட்டும் நீக்கி வைத்திருப்பதன் காரணம் நமக்கு விளங்கவில்லை. போலீசாருக்குப் பொதுமக்கள் அஞ்சுகிறார்-களென்றால், அவர்களுக்கிருக்கும் தனிப்பட்ட வலுவினால் அல்ல; அவர்கள் கையில் குண்டாந்தடி அல்லது துப்பாக்கிக்கும், அவர்களுக்குள்ள அதிகாரத்துக்குமே பொது-மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே, பெண்கள் கையிலும் போலீஸ் துப்பாக்கியைக் கொடுத்தால், தபாலாபீசைக் கொளுத்திய மாஜி ஆகஸ்ட் வீரன் கூட அவரைக் கண்டு ஓட்டம் பிடிப்பான் என்பது நிச்சயம்.
இரஷ்யாவில் பெண் போலீஸ் மிகத் திறமையாக வேலை செய்கிறது. இரஷ்யப் பெண்கள் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் குதிப்பதிலும் வல்லுநர் எனப் பெயர் பெற்றிருக்கின்றனர்.

இந்நாட்டிலும் போலீஸ் வேலை செய்யும் துணிவும், திறமையும், ஆசையும் உள்ள பெண்கள் ஆயிரக்கணக்கிலிருக்கின்றனர். பெண்கள் படிப்பதே பெரிய அதிசயமாகவும், சைக்கிள் விடுவதை வேடிக்கையாகவும் கருதப்-பட்டதுபோலவே, போலீஸ் உத்தியோகமும் சில ஆண்டுகள் வரையில் அதிசயமாகத் தோன்றலாம். பிறகு, நாளடைவில் அதுவும் இயற்கைக் காட்சியாகவே போய்விடும்.

எனவே, பெண்கள் முன்னேற்றத் துறையில் இரஷ்யா, துருக்கி போன்ற பெண் இனப்புரட்சி நாடுகளை இந்தியா பின்பற்றினாலொழிய, நம் பெண்கள் என்ன கல்வி கற்றாலும், எவ்வளவு சொத்துரிமை பெற்றாலும், வெறும், நகை பீரோவாகவும், உடை ஸ்டாண்டாகவும்தான் இருப்பார்கள். பெண் உலகில் தலைகீழான புரட்சி ஏற்படக்கூடிய முறைகள் நமக்குத் தேவை. அதுவரையில் துரௌபதையைப் பற்றியும், சீதையைப் பற்றியும் பேசியும் எழுதியும் வருகின்ற ஆமைத் தன்மைதான் இருக்கும். பெரோவிஸ்காயா போன்ற இரஷ்ய வீரப்பெண்கள் நம் நாட்டில் தோன்றவே முடியாது. நளாயினிகள் போன்ற தன்மானமற்ற அடிமைகள்தான் தோன்ற முடியும்.
-----------------------18.11.1946 _ விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
******************************************************************************** *
பெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும்

நம் மக்கள் ஆரிய மாயையில் சிக்கி இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இத்திருமண முறை என்பதாகும். இம்முறை மூன்று காரியங்களை அடிப்படையாக வைத்து நம்மிடையே புகுத்தப்பட்டதாகும். பெண்ணடிமை, மூடநம்பிக்கை, ஜாதி இழிவு ஆகிய மூன்று காரியங்களே அவையாகும்.

இம்மூன்றையும் ஒழிக்க  வேண்டுமென்று இந்த நாட்டில் யாருமே பாடுபட முன்வரவில்லை. தோன்றிய மகான்கள், மகாத்மாக்கள், தெய்வீக சக்தி பொருந்தியவர்கள் எல்லாம் மனிதனின் மானமற்ற தன்மை. மூடநம்பிக்கை, ஜாதி இழிவு ஆகியவற்றைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்பதோடு, இவற்றை நிலைநிறுத்தவே பாடுபட்டு வந்திருக்கின்றார்கள்.

சுமார் 30 ஆண்டு காலத்திற்குமுன் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கமானது மனித சமுதாய மடமையையும், ஜாதி இழிவையும், பெண்ணடிமையையும் ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டு பாடுபட்டு வருவது. ஆகையால், இவற்றை நிலைநிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பழைய திருமண முறையினை மாற்றியமைக்க வேண்டியதாயிற்று.

நமது நாட்டில் மொத்த ஜனத்தொகையில் சரி பகுதியாக இருக்கிற பெண்கள், மனித சமுதாயத்திற்குப் பயன்படாமல் ஆண்களுக்கு அடிமையாகிப் பிள்ளை பெறுவதையும், அதைக் காப்பதையுமே கடமையாகக் கொண்டிருக்-கிறார்கள். உலகில் பல இடங்களில் தற்போது பெண்ணடிமை நீங்கி வருகின்றது.

எனக்கு இப்பெண்ணடிமையை நீக்க, திருமண முறையையே நீக்கவேண்டும், சட்ட விரோதமாக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகின்றது. நம் நாட்டில் அடிமை முறை இருந்தது, பெண்களை விற்கும் முறை, உடன்கட்டை ஏறும் முறை, குழந்தைகளைப் பலியிடும் முறை போன்ற அனேகக் கொடுமைகள் இருந்தன. வெள்ளைக்காரன் ஆட்சியின் போது இக்கொடுமைகள் யாவும் சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டன.

அதன் பின்னும் வெள்ளையன் ஆட்சியின் போது பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. பால்ய விவாகம் என்கின்ற மணமுறை, கணவன் பிடிக்காமல் பிரிந்து சென்றால் ஜீவனாம்சம் என்கிற பெயரால் மிகச் சிறிய தொகை கொடுக்கப்பட்டு வந்தது. நமது இயக்கம் தோன்றிய பின்தான் இவையெல்லாம் நம் போராட்டத்தின் காரணமாகச் சிறிது சிறிதாக மாற்றியமைக்கும்படிச் செய்தோம்.

நமது நாட்டு இலக்கியங்கள், தோன்றிய பெரியவர்கள், அறிவாளிகள் என்பவர் யாவரும் பெண்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று சொன்னார்களே ஒழிய, பெண்கள் சுதந்திரத்தோடு வாழ வேண்டுமென்று எவருமே சொல்லவில்லை.


வள்ளுவனைச் சொந்த புத்தியுள்ளவன் என்பார்கள். அவனும் ஒரு சில இடங்களில் பார்ப்பன புத்தி கொண்டவனே யாவான். அவன் பெண்களை அடிமையாகவே இருக்க வேண்டுமென்றுதான் சொல்கின்றான். நம் பெண்கள் பகுத்தறிவு பெற்றிருந்தால் இப்போதிருப்பது போல் இரண்டு மடங்கு வளர்ச்சியினை இந்நாடு அடைந்திருக்கும்.

பெண்கள் குறைந்தது 20 வயதுவரைப் படிக்கவேண்டும். கோவில்களுக்குச் செல்லக் கூடாது. உத்தியோகங்களுக்குச் செல்ல வேண்டும். அல்லது ஏதாவது தொழில் செய்ய வேண்டும். மேல்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள். உத்தியோகத்-திற்குச் செல்பவர்களைத் தவிர மற்ற பெண்கள் வீட்டில் சும்மா இருப்பதில்லை. ஏதாவது கைத்தொழில் செய்து அதன்மூலம் தங்கள் வாழ்விற்குரிய வருவாயைத் தேடிக் கொள்கிறார்கள்.

நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு உள்ள பெண்கள் சிங்காரித்துக் கொள்வது கிடையாது. லுங்கி கட்டிக் கொள்கிறார்கள். மேலே சட்டை போட்டுக் கொள்கிறார்கள். மக்கள் யாவருடனும் கலந்து பழகுகிறார்கள். தன் கணவனைப் பிடிக்கவில்லையென்றால், வேறு பிடித்த ஆணோடு சென்று விடுவார்கள். அங்கு அது குற்றமாகக் கருதப்படுவது கிடையாது. 

இளம் வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்வதால் அவர்களுக்கு உலக அறிவு வளர முடியாமல் போய்விட்டது.
இதற்கு முன் இருந்தவர்கள் எல்லாம் பழைமையைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போனார்களே ஒழிய, கோவிலைக் கட்டி மக்களை மடையர்களாக்கிப் போனார்களே ஒழிய, மனிதனுக்கு அறிவு இருக்கிறது, அதைக் கொண்டு சிந்தித்து அதன்படி நட என்று எவனும் சொல்லவில்லை. உலக வளர்ச்சியில் நம் நாட்டு மக்களுக்கு ஒரு சிறு பங்குகூட இல்லையே!

கல்லையும், செம்பையும் உருவமாக்கி _- கடவுளாக்கி அவற்றை வணங்கும்படியாகச் செய்து, திருவிழா, உற்சவம் என்று நடத்தி மக்களை மடையர்களாக்கினரே ஒழிய, அறிவுப்படி நட என்று எவனுமே சொல்ல-வில்லை. காரணம் தெரியாத _- சமாதானம் சொல்ல முடியாத காரியங்களை மனிதன் கைவிடவேண்டும்.

நாம் வளர்ச்சியடைய வேண்டும். நம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் மக்கள் அறிவு வளர்ச்சி பெற முடியாமல் போனதற்குக் காரணமே கடவுள், மதம், சாஸ்திரம் ஆகியவற்றாலேயேயாகும். இவற்றையெல்லாம் மாற்றினால் நம் மக்களின் அறிவு வளர்ச்சி-யடையும். மற்ற மக்களுக்கு நம் அறிவு பயன்படும்; நம் அறிவிற்கு அவ்வளவு சக்தியுண்டு.

இறுதியாக, மணமக்கள் வாழ்வில் சிக்கனமாக வாழவேண்டும். ஆடம்பரமாக வாழக் கூடாது. பெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ளவேண்டும். லுங்கி அணியவேண்டும், சட்டையணிந்து கொள்ளவேண்டும். நகை அணியக் கூடாது. வரவிற்குள் செலவிட்டுப் பழக வேண்டும். கூடுமானவரை குழந்தை பெறுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று மிஞ்சினால் இரண்டு. அதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

-----------------------11.4.1971 அன்று அறந்தாங்கியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு-"விடுதலை', 10.6.1971

39 comments:

தமிழ் ஓவியா said...

இரயில்வே பட்ஜெட்டிலும் - மத்திய வரி வருவாய் ஒதுக்கீட்டிலும் தமிழ்நாடு புறக்கணிப்பு

தமிழக எம்.பி.க்களே உரிமைக் குரல் எழுப்புவீர்!

தமிழக உரிமை காக்கும் தமிழர் தலைவரின் வேண்டுகோள்

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

இரயில்வே பட்ஜெட்டிலும், வரி வருவாய் ஒதுக் கீட்டிலும் தமிழகம் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து சுட்டிக்காட்டி, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இவற்றிற் காகக் குரல் எழுப்ப வேண்டாமா என்ற வினாவை எழுப்பியுள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் - அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டு வாக்காளர்களால் ஒன்பது மாதங்களுக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்குச் சென்றுள்ள வர்கள் அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேர். பா.ஜ.க. ஒருவர்; பா.ம.க. மற்றொருவர்

மாநிலங்கள் அவையில் தி.மு.க. உறுப்பினர்கள் மூவர் இதிலும் அதிக எண்ணிக்கை அ.தி.மு.க.வினர்களே! (11 பேர்)

இரயில்வே பட்ஜெட்டிலும் - தமிழகம் பாதிப்பு

இவ்வளவு பெரிய எண்ணிக்கை உடையவர்கள் - எதிர்க்கட்சி வரிசையில் உள்ள நிலையில், இரயில்வே பட்ஜெட்டிலும், பொது பட்ஜெட்டிலும் தமிழ்நாடு பெரும் அளவில் வஞ்சிக்கப்பட்டுள்ளது - ஏற்கெனவே முந்தைய தி.மு.க. இடம் பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் வாதாடி, போராடிப் பெற்ற தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித் திட்டங்கள், ஏற்கெனவே எடுத்துக் கொள்ளப் பட்ட திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன ; புதிய திட் டங்கள் ஏதுமில்லை.

ஏற்கெனவே செலவழிக்கப்பட்ட பணம் என்ன கோவிந்தா தானா? தமிழ்நாட்டு மக்களுக்கு, வாக்காளர் களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் வாய் திறந்து பேசி, வாதாடி, கடமையாற்றிட வேண்டாமா?

அம்மா பாட்டுப் பாடினால் போதுமா?

தமிழ் ஓவியா said...

மவுன சாமிகளாகவே, அல்லது அம்மா பாட்டுப் பாடும் பரவசத்தில் கொடுத்த நேரத்திலும் கோரிக்கைகளை வலியுறுத்தாது கோட்டை விட்டு வருவது, சிலர் சும்மா இருப்பதே சுகம் என்று இருந்து கமிட்டிகளில் இடம் பிடித்தாலே போதும் என்ற மன நிறைவும் கொண்டிருப்பது நியாயம்தானா?

தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ள இரயில்வே பட்ஜெட்டினை - அ.இ.அ..தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் வரவேற்றுள்ளது - அதைவிட மிகப் பெரிய வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது. (கைவிடப்பட்ட திட்டங்கள் 3ஆம் பக்கம் காண்க)

தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை

அதே நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்று தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் என்ற ஒரு அறிவிப்பு (இது இரண்டாம் முறையாக இதே மத்திய அரசால் அறிவிக்கப் படுகிறது. முன்பு ஹர்ஷவர்த்தன், நல வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தபோது அறிவிப்பு செய்யப்பட்டது) மட்டுமே நம்மை மகிழ்ச்சிக்கும், திருப்திக்கும் உள்ளாக்கி விடுவதா?

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகிறார்

நமக்குத் தொலைவில் உள்ள பிகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

மத்திய வரி வருவாயிலிருந்து, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில், 10 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த ஆண்டைவிட, மத்திய வரி வருவாய் பங்கீட்டைப் பெறுவதில் தமிழகத்திற்கு 25.7 சதவிகித வளர்ச்சி மட்டுமே கிடைக்கும். இந்த மாநிலம் (தமிழ்நாடு) நாட்டிலேயே மிகக் குறைந்த சதவிகிதப் பங்கீட்டு உயர்வைப் பெறும்.

இதற்கு அடுத்தபடி தெலுங்கானா, 30.9 சதவிகிதமும், பிகார் 39 சதவிகிதம் வளர்ச்சியும் பெறும். இந்த மூன்று மாநிலங்களும் நாட்டிலேயே மிகக் குறைந்த வரி வருவாய்ப் பங்கீட்டு வளர்ச்சியை பெறவுள்ளன என்று பிகார் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். (இது தனியே காண்க).
தமிழ்நாட்டு எம்.பி.க்களின் கடமை என்ன?

இந்த நிலையைவிட தமிழ்நாடு, மோடி அரசால் வஞ்சிக் கப்படுகிறது என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா?

இதுபற்றி நமது தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் உரிமை குரல் எழுப்பி, தீர்வு காண முயல வேண்டாமா?

பொதுவாக சமூக நலத் திட்டங்களுக்கான (மக்கள் நலத் திட்டங்கள் அவை) நிதியை வெகுவாகக் குறைத்துள்ள இந்த பட்ஜெட் ஒரு மக்கள் விரோத பட்ஜெட் அல்லவா?

கார்ப்பரேட்டுக் கம்பெனிகளுக்குச் சலுகையும் - நகைச்சுவையும்

கார்ப்பரேட்டுக்களுக்கான வரி 30 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதம் ஆகக் குறைக்கப்பட்டு, ஏழை, எளிய மக்கள்மீது பல வகை மறைமுக வரிகள் சுமத்தப்பட்டுள்ளது எவ்வகையில் நியாயம்?

கார்ப்பரேட் கம்பெனிகளான பெரு முதலாளிகளுக்குச் சலுகை அல்ல; 23.25 சதவிகிதம் தான் வரி வசூலாகிறது; மற்றவை (5 சதவிகிதம்) வசூலாவதில்லை - எனவே தான் குறைக்கிறோம் என்று சமாதானம் - விளக்கம் அரசு தரப்பில் கூறப்படுவது மிகச் சிறந்த நகைச்சுவை - கேலிக் கூத்து அல்லவா?

(வோடாபோன் கம்பெனிக்கு விதிக்கப்பட்ட 3000 கோடி ரூபாய் அரசுக்கு வர வேண்டியதற்கு அப்பீல் செய்வ தில்லை என்ற முடிவு கார்ப்பரேட்டுகளுக்குக் காட்டும் கருணை அல்லவா?)

வரி ஏய்ப்போருக்குக் கடுமையான தண்டனை என்பது கார்ப்பரேட்டுகளுக்கும் சேர்த்துதானே சட்ட அறிவிப்பு. பின் 25 சதம் தான் வசூலாகிறது. ஆகவே குறைத்துள்ளோம் என்பது வேடிக்கையான விசித்திர வாதம் அல்லவா?

தமிழ்நாட்டு எம்.பி.க்களே, அவர்களின் கட்சித் தலைவர்களே உடனடியாக இதற்கு உரிமை முழக்கங்கள் எழுப்பி, உரிமையை நிலை நாட்டுங்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
3.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/97172.html#ixzz3TK8dFW6W

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்குப் பாரபட்சம்
நிதிஷ்குமார் குறிப்பிடுகிறார்

மத்திய வரி வருவாயிலிருந்து, மாநிலங்களுக்கான பங்கீட்டு தொகையை மிகக்குறைந்த அளவில் பெறும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் முதலிடத்தைப் பிடித்து உள்ளது. கடந்த 28-இல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளு மன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில், மாநிலங் களுக்கு வழங்கப்படும் பங்குத்தொகையை 10 சதவீதம் உயர்த்துவதாக ஜெட்லி அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர்.

ஆனால், மாநிலங்களுக்கான நிதிப் பங்களிப்பை உயர்த்தியபோதும், நிதியைப்பெறும் வளர்ச்சி வீதத்தில், தழிழகம், தெலுங் கானாவைத் தொடர்ந்து, பீகார் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்ப தாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.

இது குறித்து நிதிஷ்குமார் கூறியதாவது: மத்திய வரிவருவாயிலிருந்து, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட் டில் 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டைவிட மத்திய வரி வருவாய் பங்கீட்டை பெறுவதில் தமிழகத் திற்கு 25.7 சதவீத வளர்ச்சி மட்டுமே கிடைக்கும். இந்த மாநிலம், நாட்டிலேயே மிகக்குறைந்த சதவீத பங்கீட்டு உயர்வைப்பெறும். இதற்கு அடுத்தப்படியாக தெலுங் கானா, 30.9 சதவீதமும், பீகார் 37.3 சதவீத வளர்ச்சியும் பெறும். இந்த மூன்று மாநிலங்களும், நாட்டிலேயே மிகக்குறைந்த வரி வருவாய் பங்கீட்டு வளர்ச்சியைப் பெறவுள்ளன.

நாட்டிலேயே அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலம் 93.9 சதவீதமும், ஜம்மு - காஷ்மீர் 80.6 சதவீதமும் இதற்கு அடுத்தப்படியாக மத்தியபிரதேசம் 64.7, அரியானா 60.3, குஜராத், 57.7 உள்ளிட்ட மாநிலங்களும் அதிகப்படியான மத்திய வரி வருவாய் பங்கீட்டு வளர்ச்சியைப் பெறவுள்ளன. மத்திய அரசின் இந்த போக்கு ஓட்டு வங்கி அரசியலை வெளிப்படுத்து கிறது.

மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக சில முக்கிய முடிவுகளை எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவுள்ளேன். விரை வில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/97182.html#ixzz3TK8m2Aiy

தமிழ் ஓவியா said...

அய்யோ ஜோதிடமா? அலறும் ராஜபக்சே!

கொழும்பு, மார்ச் 3_ எதை செய்தாலும் ஜோதிடரை கேட்டு செய்த இலங்கை முன்னாள் ராஜபக்சே, நான் இனியும் ஜோதிடத்தை நம்பப் போவ தில்லை' என்று கூறியுள்ளார். உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்டே என்று ஒரு சொல் வழக்கு உண்டு. ஆனால் ஜோதிடத்தால் கெட்டது யார் என்றால் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே என்று யாரைக் கேட்டாலும் சரியாகச் சொல்வார்கள்.

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து, வேட்புமனு தாக்கல் செய்தது வரை ஜோதிடரை கேட்டு காய் நகர்த்திய ராஜபக்சேவோ, இப் போது ஜோதிடம் என்றாலே அலறுகிறார். பாகிஸ்தான் இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிபர் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் மக்கள் தன்னை கைவிட்டதால்தான் பலவிதமான சர்வ தேச தாக்கங்களுக்குள்ளாகிய தாக குறிப்பிட் டுள்ளார். இன்னமும் ஜோதிடத்தை நம்புகிறீர் களா என்ற கேள்விக்கு பதில் அளித் துள்ள ராஜபக்சே, நான் இனியும் ஜோதிடத்தை நம்பப் போவதில்லை எனக் கூறியுள்ளார். ஆட்சி முடிய 2 ஆண்டுகள் இருந்த நிலையில், ஜோதிடர் களின் சொல்லைக் கேட்டு ஆட்சியை கலைத்த ராஜபக்சே, அதிபர் தேர்தலில் படுதேல்வியை சந்தித்தார் இப்போதோ வழக்குகளைச் சந்திக்க இருக்கிறார் ராஜபக்சே. (ஒன் இண்டியா)

Read more: http://viduthalai.in/e-paper/97191.html#ixzz3TK8vB88W

தமிழ் ஓவியா said...

புண்ணியம்

ஏகாதசி என்றும் பட்டினி விரதம் என்றும் கொட்டி அளக்கிறார் களே - அன்றாடம் கோடிக் கணக்கான மக்கள் வறு மையில் உணவின்றிப் பட்டினி கிடக் கிறார்களே

அவர்களுக்கெல்லாம் புண்ணியம் கிடைக்குமா?

Read more: http://viduthalai.in/e-paper/97184.html#ixzz3TK94MSEV

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பாதுகாப்பு

செய்தி: இந்தியாவில்தான் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
- யோகி ஆதித்யநாத் எம்.பி., (பிஜேபி)

சிந்தனை: அதனைக் கெடுக்கத்தானே இவர் வன் முறையைத் தூண்டும் வார்த் தைகளை அவ்வப்போது உதிர்த்துக் கொண்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97185.html#ixzz3TK9Dszud

தமிழ் ஓவியா said...

அடே, அப்படியா?

நம் நாட்டில் மிகவும் குறைந்த விலையில் உண வுகள் கிடைக்கும் இடம் நாடாளுமன்ற உணவகங்கள் தானாம் பாவம் ஏழைகள் சாப்பிடும் இடம் அல்லவா அவை!

30 கோடி மக்கள் வறு மைக் கோட்டுக்கும் கீழே இருக்கிறார்களே -அவர் களுக்கு இதனை விரிவுபடுத் தக் கூடாதா?

Read more: http://viduthalai.in/e-paper/97188.html#ixzz3TK9QPNUP

தமிழ் ஓவியா said...

தலை தப்பாது!

உடலுறுப்புகள் மாற்றம் என்ற மருத்துவ விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வரு கிறது. இதுவரை தலை மாற்று அறுவை சிகிச்சை வரவில்லை. 2017இல் தலை மாற்று அறுவைச் சிகிச்சையும் நடை முறைக்கு வருமாம். அன் றைக்கே பிர்மாவின் தலையைக் கிள்ளினார் சிவன் என்று கூறி, தலை மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட முதல் மருத்துவர் எங்கள் சிவன் தான் என்று பிரதமர் சொல்லு வாரோ என்னவோ!

Read more: http://viduthalai.in/e-paper/97188.html#ixzz3TK9axpBY

தமிழ் ஓவியா said...

அழிக்காமல்...


ஜாதியையும், அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி - தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா?
(குடிஅரசு, 12.5.1935)

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் முயற்சி வரவேற்கத்தக்கது


தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா அவர்கள் மாநிலங்களவையில் திருநங்கைகளின் நலன்களைப் பேணும் வகையில் தனி நபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அப்பொழுது அவர் அவையில் தெரிவித்த கருத்துக்கள் சிறப்பானவை;-

மனித குலம் தோன்றியது முதல் பல்வேறு கலாச்சாரம், இனம் ஆகியவற்றில் திருநங்கைகள் பிரதிபலிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் அந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த அவர்கள் மனம், உடல், பாலின ரீதியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். சமூகத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்றால் அதைப் பதிவு செய்ய அதிகாரிகள் தயங்கும் நிலைதான் நம் நாட்டில் நிலவுகிறது. சில இடங்களில் திருநங்கைகள் தீண்டத்தகாதவர்கள் போல நடத்தப்படுகின்றனர். இதனால் கல்வி, சட்ட உதவி, வேலைவாய்ப்பு ஆகியவை மறுக்கப்படுவதுடன் சிலர் வீடற்ற நிலையில் அவதிப்படுகின்றனர். பொது இடங் களில் அவர்களுக்கென பிரத்யேக கழிவறைகள்கூட கிடையாது. அவர்களின் வாழ்வாதாரத்தையும், நிலை யையும் சீர்படுத்த பொறுப்புள்ள உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வேறு யார் அதைச் செய்ய முற்படுவர்?

திருநங்கைகளுக்கு நாட்டில் மதிப்பையும் பாலின பிரிவினை இல்லாத வாழ்க்கையையும் உறுதிப்படுத்த இந்த மசோதாவை முன்மொழிகிறேன். அவர்களுக் கான நலத் திட்டங்களை வகுத்து அவை செயல்படுத்தப் படுவதை தேசிய, மாநில ஆணையம் அமைத்து கண்காணிக்க வேண்டும்.

திருநங்கைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். 2008-இல் தமிழக முதல்வராக கலைஞர் இருந்த போது திருநங்கைகளுக்கென நல வாரியம் அமைக்கப்பட்டது. பாலினத்தை மாற்றிக் கொள்ள அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு அரசு மானியமும் வழங் கப்பட்டது. ஆனால், அவை இப்போதும் வழங்கப் படுகிறதா எனத் தெரியவில்லை! திருநங்கைகளின் நலன்களைக் காக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, காலம் தாழ்த்தாமல் இந்த மசோதாவைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

பெண்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கக் கூடிய இயக்கம் திராவிட இயக்கம்; அந்த வகையில் சிவா அவர்களின் முயற்சியும் பேச்சும் வரவேற்கத் தகுந்தவை.
அரவாணிகள் என்று கூறப்பட்டு, கேலிக்குரியவர் களாக சமுதாயத்தில் ஆக்கப்பட்டவர்களுக்கு திரு நங்கைகள் என்ற அழகிய பெயரை அளித்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே! மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சொன்னதெல்லாம் சாதாரணமானதா?

கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பெண்கள் புரட்சி மாநாட்டில் திருநங்கைகள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியமானது (13.4.2013).

அம்மாநாட்டில் நாமக்கல்லைச் சேர்ந்த ரேவதி என்ற திருநங்கை அழைக்கப்பட்டுச் சிறப்பு செய்யப் பட்டார். திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசும் வாய்ப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது.

ஊடகத்தில் பகுத்தறிவுப் பணியாற்றி வந்த ரோஸ் அவர்கள் அழைக்கப்பட்டு பெரியார் திடலில் பாராட்டப்பட்டார்.

திருநங்கைகள் தன்மானத்தோடும், மற்றவர்களுக்கு நிகராக வாழ வேண்டும் என்று நினைப்பதும், அதற்கான திட்டங்கள் தீட்டுவதும் ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும்.
தி.மு.க. ஆட்சியில் மாநிலம் அளவில் மேற்கொள் ளப்பட்ட முயற்சியும் அளிக்கப்பட்ட அங்கீகாரமும், தீட்டப்பட்ட திட்டங்களும் இந்திய அளவில் மேற் கொள்ளப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சிவா அவர்கள் இப்படியொரு மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்குள்ளும் தேவையில்லாமல் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் மாநிலங்களவையில் மூக்கை நுழைத்திருப்பது தேவையில்லாததாகும்.

இன்றைக்கும்கூட திருநங்கைகள் இரயில்களில் ஏறிப் பயணிகளிடம் பிச்சை எடுப்பது போன்ற சுய மரியாதைக்கு எதிரான செயல்பாடுகளுக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இது அவர்களுக்கான இழிவாகாது; இதற்குக் காரணமான சமுதாயத்தின் இழிவாகும்; இந்த நிலைக்குச் சமுதாயமே பொறுப்பு ஏற்க வேண்டும்.

கட்சி அரசியல்களுக்கு அப்பால் நின்று, சிவா அவர்களால் முன்மொழியப்பட்ட மசோதாவை நிறைவேற்றிக் கொடுத்து மூன்றாவது பாலினத்தை சுயமரியாதையோடு கம்பீரமாக வாழ வைத்தால், அது நாட்டுக்கும் மனித குலத்துக்கும் மிகப் பெரிய தலை நிமிர்வாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/97196.html#ixzz3TKAAadk1

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்கு பட்டை நாமம் எப்படி?

கைவிடப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள்

1. சென்னை சிறீபெரும்புதூர் (வழி பூவிருந்தவல்லி)
2. ஆவடி- சிறீபெரும்புதூர்
3. இராமேசுவரம்-தனுஷ்கோடி
4. தஞ்சாவூர்-அரியலூர்-சென்னை எழும்பூர்
5. திண்டிவனம்-கடலூர் (வழி புதுச்சேரி)
6. மயிலாடுதுறை-திருக்கடையூர் - திருநள்ளாறு- காரைக்கால்
7. ஜோலார்பேட்டை-ஓசூர் (வழி கிருஷ்ணகிரி)
8. சத்தியமங்கலம்-மேட்டூர்
9. ஈரோடு-சத்தியமங்கலம்
10. சத்தியமங்கலம்-பெங்களூரு
11. மொரப்பூர்-தருமபுரி (வழி முக்கனூர்)
12. மதுரை- காரைக்குடி (வழி திருப்பத்தூர்)
13. வில்லிவாக்கம்-காட்பாடி
14. திருவண்ணாமலை-ஜோலார்பேட்டை
15. மதுரை-கோட்டயம்
16. அரக்கோணம்-திண்டிவனம் (வழி வாலாஜாபேட்டை)
17. சிதம்பரம்-ஆத்தூர் (வழி அரியலூர்)
18. திண்டுக்கல்-கூடலூர்
19. திண்டுக்கல்- குமுளி
20. காட்பாடி- சென்னை (வழி பூவிருந்தவல்லி)
21. கும்பகோணம்- நாமக்கல்
22. மானாமதுரை- தூத்துக்குடி
23. நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை (வழி மன்னார்குடி)
24. தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை

பாதியில் கைவிடப்பட்டவை

1. சென்னை- கடலூர்
2. பழனி- ஈரோடு
3. திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை
4. திண்டிவனம்- வாலாஜா- நகரி (திண்டிவனம்- வாலாஜா வரை கைவிடப்படுகிறது)
5. சிறீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி அகலப்பாதைப் பணி
6. மதுரை- போடி 7. திண்டுக்கல்- கோவை

இரு வழிப்பாதைப் பணி

1. திருச்சி- தஞ்சாவூர்
2. இருகூர்- போத்தனூர்

Read more: http://viduthalai.in/page-2/97160.html#ixzz3TKAecBIT

தமிழ் ஓவியா said...

செய்தியும்-சிந்தனையும்!

உயிருடன்...!

செய்தி: அமர்நாத் யாத் திரை முன்பதிவு தொடங் கியது!
சிந்தனை: நோய் நொடியின்றிப் பக்தர்கள் உயிருடன் திரும்ப வாழ்த்துகிறோம்.

Read more: http://viduthalai.in/e-paper/97250.html#ixzz3TQUZMGxL

தமிழ் ஓவியா said...

இந்துக்கள் நாட்டில் முஸ்லீம்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு? சிவசேனா பாம்பு கக்கும் நஞ்சு

மும்பை, மார்ச் 4_ இந்து நாட்டில் முஸ்லீம்களுக்கு எதற்கு சிறப்பு சலுகைகள், ஒதுக்கீடுகள் அவர்களுக்கு சிறப்பு சலுகை வேண்டு மென்றால் பாகிஸ்தானுக் குச் செல்லட்டும் என்று சிவசேனா தலைவர் உத் தவ் தாக்கரே கூறியுள் ளார். கடந்த வெள்ளியன்று நாக்பூரில் நடந்த சிறு பான்மையினர் நல அமைப்பின் கூட்டம் ஒன் றில் பேசிய மஜ்லீஸ் கட்சி யின் தலைவரும் அய்த ராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸ் ஸாதீன் ஓவைசி பேசும் போது சிறுபான்மையினர் பெரும்பாலும் சமூகத்தில் மிகவும் மோசமான நிலை யில் உள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் அவர் களை வந்தடைவதில்லை. அவர்கள் பெரும்பான்மை சமூகத்தினரால் புறக் கணிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களுக்கு என்று சிறப்புச் சலுகை கள் இட ஒதுக்கீடு வேண் டும். தற்போது சில மாநிலங் கள் இஸ்லாமியர்களுக் கான ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தியுள்ளன. இதை நாடுமுழுவதும், நடைமுறைப்படுத்தவேண் டும். இதன் மூலம் இஸ் லாமியர்களின் வாழ்க்கை யில் முன்னேற்றம் காணும் என்று பேசியிருந்தார்.

சிவசேனா ஏட்டின் தலையங்கம்

இதற்கு பதிலடி கொடுப்பதுபோல் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே சாம்னா பத்திரி கையில் தலையங்கம் எழுதியிருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த தேசம் இந்துக்களின் தேசம் இங்கு உள்ளவர் கள் அனைவரும் இந்து உணர்வுடன் இருக்க வேண்டும், முஸ்லீம்கள் தங்கள் மதத்தை நாட்டை விட முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். வந்தே மாதரம் பாடச்சொன் னால் மதவிரோதம் என் கிறார்கள். பல்வேறு நலத் திட்டங்களை முன்வைத்த போதிலும் அவர்களுக்கு என்று சிறப்பு சலுகைகள் நலத்திட்டங்களை ஏன் எதிர்பார்க்கிறார்கள். இந்துக்கள் பற்றி கவலைப்பட்டுள்ளார்களா?

அப்படி அவர்களுக்கு என்று சிறப்புச் சலுகை கள் வேண்டுமென்றால் அவர்கள் பாகிஸ்தானுக் குச் செல்லவேண்டும். தீவிரவாதிகளால் எத் தனை இந்துக்கள் கொல் லப்பட்டுள்ளனர். இந்தக் காயம் சாமானியத்தில் ஆறாது. எந்த ஒரு சலு கையும் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக் கட்டும், முஸ்லிம்களுக்கு என்று சிறப்புச் சலுகை களை யாரும் கேட்கக் கூடாது. இனிமேலும் பொது இடங்களில் இது போன்ற கோரிக்கைகளை முஸ்லீம் தலைவர்கள் வைக்கவேண்டாம் அரசி யல் நடத்த முஸ்லீம் தலைவர்களுக்கு இது போன்ற கோரிக்கைகளை வைத்து தான் பிழைப்பு நடத்தவேண்டும் போலி ருக்கிறது. இவர்கள் என் றாவது ஏழ்மை நிலையில் உள்ள இந்துக்கள் பற்றி கவலைப்பட்டுள்ளார்களா?

இவர்களுக்கு தேசத்தின் இதர மக்களைப் பற்றி கவலையில்லை. ஆனால், ஏழ்மையில் வாழும் முஸ் லிம்களுக்கு மட்டும் சலுகை வேண்டும் என்று பேசுகின்றனர் என சாம்னா தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97249.html#ixzz3TQUhGfen

தமிழ் ஓவியா said...

21% முசுலிம்கள்

இந்தியா முழுமையும் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட வர்கள் 57,936. இதில் முசுலிம்கள் மட்டும் 21.30 விழுக் காடாம்.

44 லட்சம் பேர்

2013-2014 இல் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதோர் 44,07,193 பேர்கள்.

3869

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் களுக்கான இடங்கள் 3869.

அரசு செலவில் தனியார் மயமா?

20 விமான நிலையங்கள் ரூ.27,000 கோடி செலவு செய்து நவீன மயமாக்கப் பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமான நிலை யங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் வேலையும் மறுபுறம் நடந்து வருகிறது. ஆக, அரசு செலவில் நவீனப்படுத்தி, தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஆகா, தனியார் நிறு வனங்கள்மீது பி.ஜே.பி. அரசுக்கு என்ன கரிசனம்!

Read more: http://viduthalai.in/e-paper/97251.html#ixzz3TQUrM9Ni

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி உண்ணவும் தடையா?

தனி மனிதர் உண்ணும் உரிமையில் அரசு தலையிட முடியுமா?

ஒத்த கருத்துள்ளோர் கூடி இந்துத்துவா கோட்பாட்டை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

மாட்டுக்கறி உண்பதைத் தடை செய்துள்ள மகாராட்டிர அரசின் நடவடிக்கையை ஒத்தக் கருத்துள்ளோர் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டு அரசு இயங்குகிறது.

பா.ஜ.க. முதல் அமைச்சராக பாட்னாவிஸ் என்ற (ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.) பார்ப்பனர் தலைமையில் அங்கே நடைபெறும் அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான - மதச் சார்பின்மைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையாக மாட்டிறைச்சியைத் தடை செய்து சட்டம் இயற்றியுள்ளது அதற்குக் குடிஅரசுத் தலைவரும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இதே மகாராட்டிரத்தில் முந்தைய தபோல்கர், அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீரிய பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே மத வெறிச் சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவே இல்லை.

கோமாதா - இந்துத்துவா கொள்கைக் கோட்பாடே!

ஹிந்துத்துவா கொள்கை அடிப்படையில் கோமாதா குல மாதா, கோ. பூஜை, பசு மாட்டு வணக்கம் இந்த அடிப்படையில்தான் அங்கே மாட்டுக் கறி விற்பனை தடை செய்யப்பட்டு, மாட்டுத் தொட்டிகள் மூடப்பட்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு - வருவாய் - இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்!

கோதானம், கோ பூஜை என்ற பசு மாட்டு வணக்கம் என்பவை ஆரிய - சனாதன இந்து தர்மமே! இதை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களது ஆதர்ச புருஷ ராக - வழிகாட்டியாகக் கொள்ளும் விவேகானந்தர்கூட ஏற்கவில்லை என்பது அவரது கடுமையான தாக்குதல் - நீங்கள் மாட்டுக்குப் பிறந்த பிள்ளைகளா? என்றும், தாயின் ஈமச் சடங்கை, பிள்ளைதானே செய்ய வேண்டும்? நீங்கள் கோமாதா என்று கொண்டாடும் பசு மாட்டுக்குச் செய்கிறீர்களா? என்று கேட்டுள்ளாரே! (பெட்டிச் செய்தி காண்க) பதில் உண்டா?

உணவுப் பழக்கம் தனி மனிதர் உரிமை

உணவுப் பழக்கம் என்பது அவரவர் அடிப்படை உரிமை - பன் மதங்களும், பல கலாச்சாரம் உள்ள இந்தியத் துணைக் கண்டமெனும் நம் நாட்டில் ஒரு மதக்காரர் ஆடும், கோழியும் சாப்பிடுகிறார்கள்; தத்தம் கடவுளுக்கும் வைத்துப் படைக்கிறார்கள். இன்னொரு மதக்காரர் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்; பன்றி இறைச்சி சாப்பிடுவ தில்லை. சிலர் காய்கறி உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளும் பழக்க வழக்கமுடையவர்களாக உள்ளனர். இதனைத் தடுக்க மக்கள் ஜனநாயகத்தில் இயங்கும் அரசுக்கு எவ்வகையில் உரிமை உண்டு?
வைணவர்களில் சிலர் வெங்காயத்தைக்கூட உண்ண மாட்டார்களே!

தமிழ் ஓவியா said...


காய்கறிகளில்கூட வைணவ மதத்தவர் வெங்காயம், வெள்ளைப் பூண்டு முதலியவற்றைத் தவிர்த்து விடுவர். அதை வெட்டினால் மகாவிஷ்ணுவின் சங்கு சக்கரம் போல் காட்சியளிக்கிறதாம்! எனவே சாப்பிடக் கூடாது என்கின்றனர். அத்தகையவர்கள் சத பத பிரமாணத்தில், மாட்டிறைச்சியை பசு மாட்டின் பல பாகங்களை யாகம் வளர்த்து மந்திரம் சொல்லி அவிர் பாகம் என்று கூறி ருசித்துச் சாப்பிட்டவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளதே!

வால்மீகி இராமாயணத்தில், காட்டிற்குச் சென்ற இராமன் இறைச்சியைத் தின்று பல வகை மது வகைகளை குடித்ததாக எழுதப்பட்டுள்ளதை, எவரே மறுப்பர்?

சுரர் என்ற பெயரே ஆரியர்களுக்கு சுரபானம், சோமபானம் குடித்ததினால் வந்த பெயர்தானே!

புத்தருக்குப்பின் வந்த மாற்றம் - பின்னணி என்ன?

புத்தரின் கொள்கையோ கொலைகளை எதிர்த்தது - உயிர்க் கொலையை எதிர்த்த பிறகு அவரது செல்வாக்கு உயருவதைத் தடுக்கவே, ஆரியப் பார்ப்பனர் பின்னாளில் இந்த புலால் - இறைச்சி மறுப்பும், காய்கறி உணவுப் பழக்கத்தையும் ஏற்றனர் என்பது வரலாறு.

(ஆதாரம்: திரு டி.எம். நாயர் எழுதிய ஜிhe Dynamic Brahmin என்ற நூல்) அம்பேத்கர் எழுதிய நூலில் Who are the untouchables, why they are untouchbles என்ற நூலில், ஆரியர்கள் ஆதி காலத்திலிருந்து மாட்டிறைச்சி உண்டவர்கள் என்பதை சமஸ்கிருத நூலான சத பத பிராமணம் போன்ற நூலில் உள்ளதை எடுத்துக்காட்டி புத்தருக்குப் பின்பே அவர்கள் தமது இழந்த செல்வாக்கை மீட்டுருவாக்கிடவே இந்த இறைச்சி எதிர்ப்பு கோமாதா - பசுவதைத் தடுப்பு என்ற துருப்புச் சீட்டை இறக்கினர்!

எவரே மறுக்க முடியும்? எருமை மாடு என்ன பாவம் செய்தது? பசுவுக்கு மட்டும் பாதுகாப்பு - காரணம் எருமை கறுப்பு, பசு வெள்ளை - இதிலும் வருணாசிரமக் கண்ணோட் டமா? பால் எல்லாம் வெள்ளைதானே! இன்னும் கேட்டால் எருமை அதிகமாக அல்லவா பால் தருகிறது?
உலகம் முழுவதும் பெரும்பாலோர் உண்ணும் சத்துணவு மாட்டிறைச்சியே! மாட்டிறைச்சியை உலகம் முழுவதும் உள்ள பெரும் பான்மை மக்கள் தங்களது முக்கிய உணவாகக் கொள்ளுகின்றனர்.

இங்கு -நம் நாட்டில் அது ஏழைகளுக்கு எளிய விலைக் குக் கிடைக்கும் - உணவாக இருக்கிறது, சத்துணவாகவும் உள்ளது.

இதைத் தடுக்கலாமா? மதவெறியைக் காட்டலாமா?

இந்த அடிப்படை உரிமையை பறிப்பதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

1972இல் தந்தை பெரியார் இதை வெகு காலத்திற்கு முன்பே சொன்னார். திராவிடர் கழகமும் ஆந்திர நாத்திகர் கோராவும் சேர்ந்து ஆங்காங்கு மாட்டுக்கறி - பன்றிக் கறி விருந்தும் நடத்திப் பிரச்சாரம் செய்தோமே! (மீண்டும் தேவையானால் செய்யத் தயார்)

உச்சநீதிமன்ற தீர்ப்புகளேகூட இந்த உணவுப் பழக் கத்தில் தலையிடுவதற்கு விரோதமாகத்தான் வந்துள்ளன.

எனவே, மும்பையில் இந்தச் சட்டத்தினை எதிர்த்து நீதிமன்றத்திலும் போராட வேண்டும்.

அதே நேரத்தில் வீதி மன்றத்திலும், பாதிக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி, அற வழியில் போராட முன் வர வேண்டும் மகாராஷ்டிரத்தில்.

ஒத்த கருத்துள்ளவர்கள் போராட முன் வருக!

இது அங்கே வந்த தீ என்று நாமும் அலட்சியமாக இல்லாமல், இங்கும் பரவ எவ்வளவு நேரம் ஆகும் என்ற உணர்வுடன், அதை எதிர்த்துக் குரல் கொடுக்க முன் வர வேண்டும் - ஒத்த கருத்துள்ள அத்தனை அமைப்புகளும் (நாம் முன்பே இப்படி போராடியுள்ளோம்).கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

5.3.2015, சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/97302.html#ixzz3TVqojxfb

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயம்


நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்தின் அத்தனைப் பேரை யும் பொறுத்ததே ஒழிய, மூன்றே முக்கால் பேர்களைப் பொறுத்தது அல்ல.
(விடுதலை, 2.4.1966)

Read more: http://viduthalai.in/page-2/97291.html#ixzz3TVrgElcB

தமிழ் ஓவியா said...

இந்துத்துவா வெறி கொடி கட்டிப் பறக்கிறது
மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சிக்கு தடையாம்!
மீறினால் 5 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதமாம்


மும்பை, மார்ச் 5_ மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்ப னைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக் கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இம்மாநிலத்தில் பசுக்களை கொல்வதற்கு தடை விதித்து 1976-ஆம் ஆண்டு மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. என்றாலும் எருதுகள் மற்றும் காளைகளை கொல்வதற்கு, தகுதிச் சான்றின் அடிப்படையில் அனுமதி தரப்பட்டு வந்தது.

இந்நிலையில் 1995ஆ-ம் ஆண்டு பாஜக சிவசேனா ஆட்சியின்போது, மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி பசுக்கள் மட்டுமின்றி, எருதுகள் மற்றும் காளைகளைக் கொல்வதற்கும் தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இந்நிலையில் 19 ஆண்டு களுக்குப் பிறகு இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி வழங்கியுள்ளதாக மகாராஷ் டிர ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மார்ச் மூன்றாம் தேதி தகவல் அனுப்பியது.

இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் பசுக்கள், காளைகள் மற்றும் எருதுகள் இறைச்சிக்கான தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

என்றாலும் எருமைகள் இறைச் சிக்கு இந்த சட்டம் அனுமதி வழங்கு கிறது. குறைந்த தரம் கொண்டதாக கருதப்படும் எருமை இறைச்சி, இம்மா நிலத்தில் மொத்த இறைச்சி விற்ப னையில் நான்கில் ஒரு பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் மகாராஷ் டிரத்தில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என்றும், பிற இறைச்சிகளின் விலை உயரும் என்றும் மாட்டிறைச்சி விற் பனையாளர்கள் அச்சம் தெரிவித் துள்ளனர்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், மகா ராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப் புதல் அளித்த குடியரசுத் தலைவருக்கு நன்றி. பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவேண்டும் என்ற எங்கள் கனவு இப்போது நிதர்சனம் ஆகியுள்ளது என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/97294.html#ixzz3TVrqXMwu

தமிழ் ஓவியா said...

கொஞ்சம் யோசிக்கலாமே!


வடநாட்டுத் தலைவர்களைப் போல தமிழ்நாட்டுத் தலைவர்களும் நட்புடன் பழக கற்றுக் கொள்ள வேண்டும்! என்பதற் கான ஆசிரியரின் அறிக்கை சமீபத்தில் விடுதலையில் வெளியானது. மிகவும் அரு மையான அறிக்கை. நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய அறிவுரை இது.

கொஞ்ச காலமாகவே இதுபோன்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதுண்டு. ஆனால் எழுதத்தூண்டியதில்லை குறிப் பாக அறிவாளிகள் என நினைத்துக் கொண்டிருக்கும் நம் தமிழ்நாட்டுத் தலைவர்கள் நட்புடன் நடந்து கொள்ளும் பழக்கமின்மை காரணமாக நீண்ட நாள் இருப்பில் கிடந்த முட்டை அழுகிப் போவதுபோல ஆகிவிடுகிறார்கள்.

வறட்டுக் கவுரவம் தேவையில்லை சுக, துக்க நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை தவிர்க்கிறார்கள். அனுபவம் மிக்க நம் ஆசிரியரின் இவ்வறிக்கையினை வயது அனுபவம் பார்க்காமல் ஒரு அறிவுரையாக எண்ணி, எல்லா தமிழ்நாட்டுத் தலைவர் களும் படித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இப்படிப் பழகுவதனால் ஒன்றும் உங்களுக்கு கிடைக்கும் வாக்கு மாறிப்போய் விடாது. ஏனெனில் உங்களின் மனம் விட்டுப் பேசும் தன்மையினால் இன்னும் செல்வாக்கு கூடிக்கொண்டேதான் போகும். யார் மீதும் யாருக்கும் நிரந்தர கோபம் இல்லை. கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள் கருத்துமாறுபாடு உள்ள ஒருவருடன் பழகு வதனாலோ, பேசுவதனாலோ மாறிவிடப் போவதில்லை.

சமீபத்தில் எங்கள் ஊராட்சியில் நடந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் விழாவில் நான்தான் கேக் வெட்டினேன். அதிமுக தோழர்கள் நம்மீது கொண்ட பற்றும், பாசமும் இதற்கு ஒரு சான்றாகும். இதனால் நான் என்ன அதிமுக கட்சிக்கா சென்று விட்டேன்?

கொள்கைப்பற்று ஒருவனுக்கு வந்து விட்டால் எக்காலத்திலும் எந்தச் சூழ் நிலையிலும் கருத்து மாறமாட்டான். இப்பெரியார் தொண்டர்களுக்குப் புரிந்த இந்த எளிய விளக்கம், உலகமே சுற்றிவரும் நம் தமிழ்நாட்டுத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- கல்மடுகன்

Read more: http://viduthalai.in/page-2/97297.html#ixzz3TVrxmrIZ

தமிழ் ஓவியா said...

மார்ச் 8: அனைத்துலக பெண்கள் நாள்!

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முதல் பெண் பெற்ற தாய் ஆவார். அடுத்து உறவினர்களில் சிறப்பிடம் பலருக்கும் பாட்டிகளாக இருப்பார்கள். அமெரிக்காவில் அன்னையர் நாள் மிகவும் சிறப்பானது.

என்னுடைய வாழ்க்கையில் அப்பாவின் தாயார் அப்பாயி பாப்பாத்தி அம்மாள் மிகவும் முக்கிய இடம் வகித்தவர். 13 ஆவது வயதிலேயே மணமுடித்துப், பெரிய குடும்பத்தில் பலருடன் வாழ்ந்து, சிறப்பாக வழிகாட்டி ஊருக்கே ஒரு ஆலமரமாகத் திகழ்ந்தவர். தாத்தா அய்ம்பது வயது போலவே புற்று நோயால் இறந்த போது அவர் சொன்னது, சொத்தெல்லாம் போனாலும் படிக்கவைத்துவிடு என்பதாம். அதை முடிந்த அளவு நிறைவேற்றி வைத்தவர்.

தி.க., திமுக, காங்கிரசு என்று இருந்த தனது பிள்ளைகளை அரசியல் வீட்டிற்கு வெளியே இருக்கட்டும் என்று கண்டிப்புடன் சொன்னவர்.எனக்கெல்லாம் காலையில் பணம் கொடுத்து மாலை வாங்கிய புத்தகம், வாங்கிய கட்டணத் தாளைக் காண்பித்து மீதியை ஒழுங்காகக் கொடுத்து பின்னர் அவர் தரும் சில்லறையைப் பெற்றுக் கொள்ளுமாறு கண்டிப்புடன் வளர்த்தவர்.

இரண்டு பிள்ளைகள் மட்டுமே கல்லூரி செல்லவைக்க முடிந்த ஏக்கத்தை அத்தனைப் பேரப்பிள்ளைகளையும் கல்லூரியில் படிக்க வைத்த பெருமை அவரையே சேரும். நான் மருத்துவப் படிப்பை முடித்துப் பயிற்சி மருத்துவராக இருந்து அவரது புற்றுநோய்க்கு முடிந்ததைதைச் செய்ததைப் பெருமையாகக் கருதியவர்.

அவருடைய 45 ஆவது நினைவுநாள் மார்ச் 4. அதை நினைவு கூரவும், உலகப் பெண்கள் நாளைக் கொண்டாடவும், நமது தமிழின உடன் பிறப்புக்களை உற்சாகப்படுத்தவும் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுடன் உணவு உன்பதற்கு ஏற்பாடு செய்து மகிழ்வுடன் கலந்துகொள்கின்றோம்.

நமது ஒவ்வொருவருக்கும் உள்ள உறவுகளில் பல பெண்கள் நமது மதிப்பிற்கும், மரியாதைக்கும், அன்பிற்கும் உகந்தவர்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நம் அனபையும், ஆறுதலையும் காட்டி பெண்ணினம் வாழ வழிகாட்ட, வாழவைக்க வாழ்த்துவோம்!

- டாக்டர் சோம.இளங்கோவன்,
பிச்சாண்டார்கோவில்.

Read more: http://viduthalai.in/page-8/97309.html#ixzz3TVsfwpuW

தமிழ் ஓவியா said...

வீகேஎன் என்னும் மாமனிதம்!


மனிதர்கள் எத்தனையோ பேர் பிறக் கிறார்கள்; இறக்கிறார்கள்.

உயிருடன் இருப்பவர்கள் எல்லாம் வாழ்பவர்கள் அல்லர்! - வள்ளுவரின் கணக்குப்படி - மனிதநேயத்தில் யார் உயர்ந்து காணப்படுகிறார்களோ அவர் களே வாழும் மனிதர்கள்; மற்றவர்கள் இருக்கும் மனிதர்கள்கூட அல்லர். செத்தாருள் வைக்கப்படுபவர்கள்! ஆம் நடை பிணங்களே.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் - (குறள் 214)

இந்த இலக்கணத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்ட மாமனிதர் களில் ஒருவர்தான் திருச்சியின் கல்வி வள்ளல் - தொழிலதிபர் - அடக்கத்தின் திருஉருவம் - வற்றாத அன்பின் - பண்பின் பெருஉருவம் நமது அருமைச் சகோதரர் வீகேஎன் கண்ணப்பன் பி.இ. அவர்கள்!

அவரது தயாள சிந்தையும், பிறர் துன்பம் போக்கி இன்பம் காணும் இயல்பும் கொண்டு வாழ்ந்தவர்தான் அவரது அன்பு வாழ்விணையர் திருமதி கண்ணாத்தாள் ஆச்சி அவர்கள்.

தனது தலைவனின் மனமறிந்து, குணநலன் பெருக பெரிதும் ஒத்துழைத்த வர் அவர். சிறிது காலமாக உடல் நோய்க் காளான நிலையிலும் கண்ணை இமை காப்பதைப் போல், காலம், பொருள், எதுபற்றியும் கவலை கொள்ளாது, தம் விருப்பக் கோட்டைத் தாண்டாத மூன்று அருமையான பிள்ளைகளுடன் பெரு ஒத்துழைப்போடு கவனித்து வந்தார்.

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி ஆச்சி யார் மறைந்தார். மறைந்தார் என்பதைவிட அனைவர் உள்ளத்திலும் நிறைந்தார். வீகேஎன் அவர்கள் நெஞ்சில் நிரந்தரமாக உறைந்தார்! உயர்ந்தார்!!

அவர்தம் கண்மணிகளும் குடும்பத் தாரும் அவர்தம் குடும்பத்து நிழல்போன்ற பாண்டியன் போன்ற நண்பர்களும் துக்கத்தின் கடலில் வீழ்ந்து மீளாது தவிக்கின்றனர்!

துக்கத்தை அடக்கிப் பார்க்கும் அரிய பண்புடன் சகோதரர் வீகேஎன் அவர்களே முயன்றாலும் விழிகளோ, குற்றாலம் அருவியென வழிந்து கொண்டே உள்ளன!

நாங்கள் அவருக்கு உற்றவர்கள் எனும் உறவுமுறையில் தேற்றினோம். எப்போதும் எனது வாழ்விணையருடன் மனந்திறந்து பேசுவார் ஆச்சியார்! மன பாரத்தை இறக்கி வைக்க இவர் உதவுவார்; இவரும் நானும் தொலைப்பேசியில் ஆறுதல் மொழி கூறித் தேற்ற முடிந்த அளவு தேற்றினோம்.

கழகச் சார்பில், கல்வி நிறுவனங்கள் சார்பில் நமது பொதுச்செயலாளர் அன்பு ராஜ், துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன், திருச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், கல்வி நிலையத் தலைவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர் தோழர்கள், கழகப் பொறுப் பாளர்கள் ஒருபுறமும், மறுபுறம் சென்னை யிலிருந்து தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலினும், மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவும், தி.மு.க.வினரும், அனைத்துக் கட்சியினரும் ஆறுதல் கூறினர்.

துயர வீட்டிலும் வீகேஎன் பண்பு, தணலில் இட்டத் தங்கமாய் ஜொலித்ததை, இரண்டு நாளுக்கு முன் என்னிடம் உரையாடிய தளபதி ஸ்டாலின் சொல்லிச் சொல்லி வியந்தார்!

அம்மையாரின் உடல் கிடத்தப்பட்ட இல்லத்தில் அனைவரும் இறுதி மரியாதை செலுத்த வந்தபோது அழுது புலம்பிக் கொண்டே அம்மா, அம்மா நீங்கள் மறைந்துவிட்டீர்களே என்று கதறிக் கண் ணீர் வடித்து மாலை வைத்து மரியாதை செய்த ஒரு எளிய பாட்டாளித் தோழர் வந்தார்.

அவரை வீகேஎன் அருகில் வந்தவுடன் வீகேஎன் அந்த துக்க நேரத்தில், தம்பி உன் வீட்டுத் திருமணத்திற்கு (இரண்டு நாள் முன்பு) வர இயலவில்லை; ஆச்சி உடல்நிலை காரணமாக. திருமணம் நன்றாக நடந்ததா? என்று ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை மணமக்களுக்குப் பரிசாக அளித்தார். எங்களையும் கார் வரை வந்தே, வழமைபோல் வழி அனுப்பி வைத்தார். இந்தப் பண்பை, அன்பை எங்கே எவரிடத்தில் நாம் பார்க்க முடியும் என்று கூறினார்!

ஆம். வீகேஎன் கண்ணப்பன் ஒரு மாமனிதர். பல மனிதர்களிடம் காண இயலாத மனிதம், மாமனிதம், ஒத்தது அறியும் பண்பு! எல்லா மனிதர்களிடமும் காண முடியாதுதான்!

வீகேஎன் என்ற பெயரே தலையெ ழுத்து - முன்னெழுத்துகூட உயர்ந்திடக் காரணமாக நெருக்கடியில் உதவிய நண்பரை மறக்காத நன்றியின் அடையா ளமாக, தந்தை, தாய் இடத்தில் உத வியவரை உயர்த்தி வைத்த உயர்தனிச் செம்மலின் அருங்குணம் - உலகில் எங்கும் காணாத பெரும் செயல்!

அத்தகையவருக்கு ஏற்பட்ட துக்கமும், துயரமும் அவரது தொண்டால் - மலை யென வந்தது - பனியென விலகும் என்று நம்புவோம்!

அவரது மூன்று அருஞ்செல்வங்கள் அக்குடும்பத்தின் புகழ் பூத்த வாழ்வைக் கட்டிக் காத்து, தாயார் இடத்தை நிரப்பி வாழ்வர் என்பது நமது ஏக்கம் அல்ல; நன்னம்பிக்கை!

- கி.வீரமணி

வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page1/97255.html#ixzz3TVuvoNUo

தமிழ் ஓவியா said...

தமிழர்கள் நுழைய கதவடைப்பா? இரயில்வே துறை நடத்திய குரூப் டி

பணியாளர் தேர்வு திட்டமிட்ட மோசடி!


இரயில்வே தேர்வு ஆணையம் (Rly Recruitment Cell) என்ற அமைப்பின் மூலம் தெற்கு இரயில்வேயில் காலியாக உள்ள குரூப் டி பதவிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்பதற்கான சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

5450 பணியாளர் பதவிக்குத் தேர்வு செய்திட 21.9.2013 அன்று ரயில்வே தேர்வு வாரியம் விளம்பரம் செய்திருந்தது. தேர்வு 2014 நவம்பர் 2ஆம் தேதி அய்ந்து கட்டங்களாக நடந்துள்ளது.

மத்திய அரசின் விளம்பரத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது, இணைக்கப்படும் சான்றிதழ்களுக்கு அரசு பதிவிதழ் அலுவலரிடமிருந்து (Gazetted Officer) மேலொப்பம் பெற வேண்டும் என்ற விதி நீக்கப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதில் என்ன மோசடி என்றால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்திலே கெசட்டட் அதிகாரிகளிடமிருந்து மேலோப்பம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்விளம்பரங்களிலோ அது தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழில் வெளிவந்த விளம்பரத்தின் அடிப்படையில் சான்றிதழ்களுக்குக் கெசட்டட் அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை என்ற அடிப்படையில் விண்ணப்பித்த ஏறத்தாழ இரண்டரை லட்சம் தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப்பட்டு விட்டன.

அதே நேரத்தில் சான்றொப்பமின்றி ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மகா கொடுமையை வஞ்சகத்தை என்னென்று சொல்லுவது!
தென்னக ரயில்வே துறைக்குப் பணியமர்த்தம் என்றாலும் வட மாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளில் ஏகப்பட்ட குழப்பங்கள் - தவறான மொழி பெயர்ப்புகள் - அதனால் சரியாக விடை எழுத முடியாத நெருக்கடிகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்வில் வெற்றி பெற்று விடக் கூடாது என்றே திட்டமிட்டும், அதே நேரத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மலையாளிகள் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற இமாலய சதியோடு சூழ்ச்சியோடு திரைமறைவில் காரியங்கள் நடைபெற்றுள்ளன. (விரிவாக வெளியிடப்பட்டுள்ளதை காண்க)

நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற் தகுதி தேர்வு வரும் 8ஆம் தேதி நடக்க உள்ளதாம். நடைபெற்ற இந்தத் தேர்வு செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும், முறையாக தெளிவாக விளம்பரம் செய்யப்பட்டு ஒழுங்கான முறையில் தேர்வுத்தாள் தயாரிக்கப்பட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை நாடாளுமன்றத்தில் கேள்வியாக எழுப்பி நிவாரணம் தேடிட வழி வகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

6.3.2015
சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/97311.html#ixzz3TcAjqN5y

தமிழ் ஓவியா said...

முஸ்லீம்களைப் பார்த்ததும் கல்லெறிந்து கொல்லுங்கள்

பாலிகாசரஸ்வதி சாமியாரிணியின் பாசிசப் பாய்ச்சல்

போபால், மார்ச் 6_ முஸ்லீம்கள் நாடு முழுவ தும் பரவி லவ்ஜிகாத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார் கள். அவர்களைக் கண்டதும் கல்லெறிந்து கொல்லுங்கள் என்று பாலிகா சரஸ்வதி சாமியாரிணி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் நூற் றாண்டு விழா கொண்டா டப்பட்டு வருகிறது, இந்தக் கொண்டாட்டங்களின் போது அனைத்து இந்துத் துவ தலைவர்களும் மோச மான சொற்களைப் பயன்படுத்திவருகிறார்கள். மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் நடந்த விஷ்வ இந்துபரிஷத் விழாவில் பாலிகா சரஸ்வதி என்ற சாமியாரிணி பேசிய தாவது, : நான் இந்துப் பெண்களைக் கேட்டுக் கொள்கிறேன், எந்த ஒரு முஸ்லீம் இளைஞனின் பார்வைகூட உங்கள் மீது பட விடாதீர்கள், அப் படியே உங்கள் பார்வை யில் பட்டாலும் அவர்களைக் கல்லெறிந்து கொல் லுங்கள். முஸ்லீம்கள் வேண்டு மென்றே இந்துப் பெண் களை காதல்வயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்துப்பெண்கள், முஸ்லீம் இளைஞர்களின் வலையில் எளிதாக விழுந்து விடுகி றார்கள். அப்படி வலையில் விழுந்த பெண்களை உடனடியாக திருமணம் செய்து அவர்களை முஸ் லீம்களாக மாற்றிவிடுகின் றனர். அந்தப் பெண்களை நாயைப்போல பிள்ளை களைப் பெறவைத்து முஸ்லீம்களின் எண்ணிக் கையைப் பெருக்கிவிடுகின் றனர். நாட்டில் லவ்ஜிகாத் அதிகரித்து விட்டது. இதை நாம் எச்சரிக்கை யுடன் அணுகவேண்டிய கட்டாயத்தில் இருக் கிறோம். முஸ்லீம் இளைஞர் களுக்கு, மசூதிகளிலும், மதராசாக்களிலும் எப்படி இந்துப்பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்யவேண்டும் என்று பயிற்சி கொடுக்கப்படுகிறது. லவ் ஜிகாத் பலவிதமாக முஸ்லீம் இளைஞர்களால் செயல்படுத்தப்படுகிறது. முஸ்லீம் அரசியல்வாதி கள். சினிமா நடிகர்கள் அனைவரும் லவ்ஜிகாத் திற்கு ஆதரவாக உள் ளனர். ஒவ்வொரு இந்துப் பெண்ணும் முஸ்லீம் களுக்கு எதிரான நட வடிக்கை எடுக்க சபதம் எடுக்கவேண்டும். ஜாதி பற்றி கூறும் போது இந்து தர்மத்தில் ஜாதி தேவையான ஒன்று, கடவுள் அவர் அவர் தொழிலுக்கு ஏற்ப அந்த அந்த ஜாதிகளைப் உரு வாக்கியுள்ளார். விமானம் என்று இருந்தால் அதற்கு பைலட் என்பவரும் உண்டு தூய்மைப்படுத்துப வரும் உண்டு, தூய்மைப் படுத்துபவர் விமானம் ஓட்டினால் என்ன ஆகும், அது போல் தான் ஜாதியும், யார் யாருக்கு என்ன என்ன என்று கீதையும் எழுதியுள்ளது. அதன் படிதான் நடக்கவேண்டும் சூத்திரர்கள், பிராமணர் களின் வேலைகளை செய்ய முயற்சி செய்யக்கூடாது, அதே போல் பிராமணர்கள் சூத்திரர்களைப் போல சாராயம் குடிக்கக்கூடாது. இங்கே கீதையைப் பற்றி குறைகூறுகிறவர்கள், அதை முழுமையாக படிக் காதவர்கள் ஆகையால் அவர்கள் விருப்பம் போல் பேசுவார்கள்

கடவுள் ஜாதிகளைப் படைத்தார், ஆகையால் ஜாதி மாறித் திருமணம் செய்வது கட வுளின் கட்டளைக்கு எதிரான செயலாகும். அந்த அந்த ஜாதியில் தான் திருமணம் செய்ய வேண் டும் அப்படி செய்யும் போதுதான் இந்து மதம் சிறந்துவிளங்கும். இந்து மதம் சிறந்து விளங்கினால் இந்தியாவும் சிறப்புறும். இங்குள்ள இஸ்லாமியர்கள் மற்றும் இதர மதத்தவரை நாம் இந்துவாக மாற்ற வேண் டும் அப்படி மாற்றும் போதுதான் இந்துக்களின் நாடாக மாறும் என்று முடித்தார். அரசு மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் அது இந்துமதம் மாறுவ தற்கு தடையாக இருக்காது. காரணம் மதம் மாறிய வர்கள் தாய்மதம் தான் திரும்புகிறார்கள் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/97338.html#ixzz3TcB5a4h6

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கோ பூஜையின் பலன்

செய்தி: ஜெயலலிதா அவர் களுக்காக, கோ பூஜையில் கலந்து கொண்ட அதிமுக பிரமுகர்கள் வேறு கார ணங்களுக்காக கட்சியை விட்டு நீக்கம். சிந்தனை: கோ பூஜையின் பலன் என்பது இதுதானோ! ஆடு! ஆடு!!
தமிழக அமைச்சர் நத்தம் விசுவநாதன் 67 இணையர் களுக்குக் கல்யாணம் செய்து வைத்திருக்கிறார். இந்த இணையர்களுக்கு ஆடுகளும் பரிசாக அளிக் கப்பட்டனவாம்.

அந்த ஆடுகளின் கழுத்தில் ஜெயலலிதா படத்தை மாட்டியிருந்தனராம்.

விவசாயிகளுக்கு நான் எதிரியல்ல!

விவசாயிகளுக்கு நான் எதிரியல்ல என்று கூறியுள் ளார் பிரதமர் நரேந்திர மோடி. எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என் பார்களே அது இது தானோ!இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 41 பேர் பலியானதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 1239 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97335.html#ixzz3TcBcixR0

தமிழ் ஓவியா said...

அன்பு வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி ஏற்படுத்தப்பட் டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.
(விடுதலை, 20.9.1968)

Read more: http://viduthalai.in/e-paper/97327.html#ixzz3TcCFWinH

தமிழ் ஓவியா said...

புரோகிதர் யோக்கியதை!

பணத்துக்காகப் பகவத் பூஜை பண்ணும் புரோகிதர் வீட்டில் நீர் அருந்தலாகாது, போஜனம் பண்ணலாகாது. பெண் கொள்வது, கொடுப்பது வைத்துக் கொள்ளலாகாது என்றொரு கொள்கையுண்டு. ஈசுவர ஆராதனையை வியாபார முறையில் பண்ணுபவர்கள் புனிதவான்கள் ஆகார் என்பது ஒருவேளை இதன் அடிப்படையான கருத்தாயிருக்கலாம். உண்மை எதுவாயினும் ஆகுக.

அர்ச்சகர்களுள் தரித்திரமும், கயமையும் மிகுந்திருப்பதை எளிதில் காணலாம். பணத்துக்காக அவர்கள் கோயிலில் முறை தவறி நடந்து கொள்வது சர்வ சாதாரணம். புரோகிதர்கள் செய்யும் பூஜை தெய்வத்துக்கு உரியது அன்று; ஏராளமாக தட்சணை தருபவர்களுக்கே உரியது ஏனென்றால் எவ்விதத்திலும் தனவான்களுக்குப் பிரீதியுண்டாக்கத்தான் அவர்கள் முயலுகிறார்கள்.

பாமரர்களை வஞ்சிக்கவும், அவர்கள் அஞ்சுகிறார் களில்லை. புரோகிதம் என்பது மேன்மை பொருந்திய பொறுப்பு வாய்ந்த தொழிலாயிருப்பதற்கு பதிலாக இப்போது அது இழி தொழிலாயிருக்கிறது.

அர்ச்சகர்கள் ஜன சமூகத்துக்குப் பயன்படுபவர்களாயிருப்பதற்குப் பதிலாகக் பங்கம் விளைவிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் கொடுமையால் இப்போது கோயில் களெல்லாம் வியாபாரஸ்தலங்களாகி விட்டன. மீண்டும் அவர்கள் மேன்மை அடையும்போதுதான் ஆலயங்கள் என்று இப்போது அவர்களால் காக்கப்படும் இடங்கள் மெய்யான தேவாலயங்களாகும்.

-சுவாமி சித்பவானந்தர்

(நூல்: சிறீ ராமகிருஷ்ண விஜயம், சென்னை- 1935, பக்கம் 177)

Read more: http://viduthalai.in/e-paper/97368.html#ixzz3TcDxzl6C

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி வேதநாயகம்!

ஒருநாள் இரண்டு பிராமணர்கள் மிஞ்சின போஜனம் அருந்தினதால் கீழே குனியக்கூட முடியாமல் அண்ணாந்து கொண்டு மேல்நோக்கின பார்வையாய்த் தெருவில் போகும் போது, அவர்களின் ஒருவனுக்குக்காலில் மிதியடியிருக்கிறதா இல்லையாவென்கிற சந்தேகமுண்டாகி மற்றொருவனை நோக்கி தம்பி, சுப்பு!

என் காலில் மிதியடியிருக்கிறதா பார் என்றானாம் அந்த பிராமணனும் குனியமுடியாமல் அண்ணாந்து கொண்டு போனதால் அண்ணா! ஆகாச மண்டலம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணோம் என்றானாம்,

- மாயூரம் ச.வேதநாயகம் எழுதிய சுகுண சுந்தரி (சமூக நாவல்) தகவல்: ஆ.கணேசன், சென்னை -21 :

Read more: http://viduthalai.in/e-paper/97369.html#ixzz3TcEGpMO8

தமிழ் ஓவியா said...

யார் காரணம்?

ஆழ்வார்கள், அவதார புருசர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமா ரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர்கள், திருடர்கள், கொலை காரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள்,

வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?
ஈ.வெ.ரா. பகுத்தறிவு

Read more: http://viduthalai.in/e-paper/97369.html#ixzz3TcENOXdN

தமிழ் ஓவியா said...

ராசி பலன்காரர்களுக்கு வந்தது வேட்டு!

சே! சம்சாரம் ஒரு சாகரம்! எனக்கென்று வாய்த்தது பார் ஒரு சனியன்! மூளி அலங்காரி! மூணாம் பேஸ்து மாதிரி! முப்பது நாழியும் மூலையும் முக்காடும்தான் கதி! என்று சலித்துக் கொள்ளும் கணவன்மார்களைக் கண்டிருக் கிறோம்.

கிளியை வளர்த்து பூனை கையிலே கொடுத்தாளே என்னை பெத்தவ - அவளைச் சொல்லணும்! புருஷனா எனக்கு வாய்ச்சவன்.. காட்டுப் புலி! நின்னா தப்பு. குனிஞ்சா தப்பு. சிரிச்சா தப்பு. சீச்சீ... சீ... இந்த மனுஷனை கட்டிகிட்டு மாரடிக்கிறதவிட குளத்திலேயோ குட்டையிலேயோ விழுந்து சாகலாம் என்று கொதித்துக் குமுறும் மனைவிமார்களையும் பார்த்திருக்கிறோம்.

தம்பதிகளிடையே இத்தகைய சலிப்பிற்கும் சஞ்சலத்திற்கும் இடம் ஏற்படாத வகையில் ஒரு நூதனக் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறாராம் பிரிட்டிஷ் விஞ்ஞானி டாக்டர் வால்டர் என்பவர்.

இக்கருவியால் மூளை ரேகைகள் படம் பிடிக்கப்பட்டு, ஒருவர் சுபாவத்திற்கு இன்னொருவர் ஒத்துவருவார்களா என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு திருமணம் செய்து வைக்கலாமாம்.

இக்கருவி இங்கெல்லாம் பரவினால் ராசி பலன் கார்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே!

தென்னகம்
பொங்கல் மலர், 1971

Read more: http://viduthalai.in/e-paper/97370.html#ixzz3TcEUnTkT

தமிழ் ஓவியா said...

சந்தேகம் சார்!

சார் ஒரு சந்தேகம்!

என்னடா சந்தேகம்?

சரஸ்வதி எங்கு இருக்கிறாள்?

வெண்டாமரையில்!

அது எங்கே இருக்கிறது சார்?

பிரம்மாவின் நாவில்!

பிரம்மா எங்கே இருக்கிறார் சார்?

மகாவிஷ்ணுவின் தொப்புட் கொடியில்! (வயிற்றில் உதித்தார்)

மகாவிஷ்ணு எங்கு இருக்கிறார்?

ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல்!

அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்?

திருப்பாற்கடலில் உள்ளது.!

திருப்பாற்கடல் எங்கு உள்ளது சார்?

....?....?...? ஏய், நீ ஒரு கருப்புச் சட்டை..... நாத்திகன்... பகுத்தறிவுக்காரன்.. இரு இரு... உன்னை பரீட்சையில் கவனித்துக் கொள்கிறேன்.

-சி.பூபாலன், சி.இராசசேகரன்
சென்னை-40

Read more: http://viduthalai.in/e-paper/97370.html#ixzz3TcEbbIUF

தமிழ் ஓவியா said...

குழந்தைகள் திருமண தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது
உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சென்னை, மார்ச் 10_ மத்திய குழந்தைகள் திருமண தடைச் சட்டம் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதத்தினருக் கும் பொருந்தும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

பெரம்பலூரைச் சேர்ந்த அப்துல் காதரின் மகளுக்கு கடந்த 17.11.2012 அன்று திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. அப்போது, அந்தச் சிறுமிக்கு 18 வயது நிறை வடையவில்லை என சமூக நலத் துறை அதிகாரிக்கு புகார் சென்றது. இதையடுத்து சிறுமி யின் திருமணத்தை அதி காரிகள் தடுத்து நிறுத் தினர்.

பின்னர், அந்தச் சிறுமிக்கு 18 வயது நிறை வாகும்வரை திருமணம் செய்யக்கூடாது என பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட் டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அப்துல் காதர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சமூகநலத் துறை அதிகாரி விளம்ப ரம் பெறும் நோக்கத்தில் திருமணத்தை தடுத்துள் ளார். முஸ்லிம்களுக்கு தனிச் சட்டம் உள்ளது.

அந்த சட்டத்தின் அடிப் படையில், முஸ்லிம் பெண் ணுக்கு அவர் பருவம் அடைந்ததும் திருமணம் செய்துகொள்ளலாம். மத்திய குழந்தை திருமண தடைச் சட்டம் பொது வான சட்டம். அந்தச் சட்டம் முஸ்லிம்களுக்குப் பொருந்தாது என்றார்.

இந்த வழக்கு விசா ரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அங்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம் பிறப்பித்த உத் தரவு வருமாறு:

மத்திய குழந்தை திரு மண தடுப்புச் சட்டம் ஒரு மதச் சார்பற்ற சட்டமா கும். அந்த சட்டத்தின் அடிப்படையில் 18 வயது நிறைவடையாத பெண் ணுக்கு திருமணம் செய்து வைக் கக்கூடாது.

மேலும், இந்தச் சட்டம் முஸ்லிம் கள், இந்துக்களின் தனிச் சட்டங்களுக்கு அப்பாற் பட்டது. குழந்தைகள் திரு மணத்தை பொருத்தவரை முஸ்லிம்களுக்கு அவர் களின் தனிச் சட்டம்தான் பொருந்தும் என்பதை ஏற்க முடியாது. சிறப்பு காரணங்களுக்காக குழந் தைகள் திருமண தடுப்புச் சட்டம் கொண்டுவரப் பட்டது.

குழந்தைகளின் உடல் நலன், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சட் டம் நிறைவேற்றப்பட்டது. குழந்தைகள் திருமணச் சட்டத்தை மேலும் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு திரு மணம் செய்து வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப் படி செய்தால் மட்டுமே குழந்தைகள் திருமணம் எனும் தீய பழக்கத்தை தடுக்க முடியும்.

இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலன், பெண்ணின் கவுரவம் ஆகியவற்றை உயர்த்த முடியும். இது போன்ற திருமணங்களை தடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு.

மத நம்பிக்கை வேறு, உரிமைகள் என்பது வேறு. குழந்தைகளுக்கு திரும ணம் செய்து வைப்பது தங்களது உரிமை எனக் கூற முடியாது. குழந்தை கள் நலன், முன்னேற்றம் முக்கியமா அல்லது குழந் தைகள் திருமணமா என்ற கேள்விகள் எழும்போது, குழந்தைகளின் நலன், முன் னேற்றம்தான் முக்கியம். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97375.html#ixzz3TcFUkeMf

தமிழ் ஓவியா said...

2000 ஆண்டு பழங்குடி மன்னர் பரம்பரை

உலகின் மிகப் பழமையான மன்னர் வம்சம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிந்து-போனது. அதுவும் இந்தியாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மன்னர் ஒருவரின் தத்துப் பிள்ளையாக எடுக்கப்பட்டு மன்னர் ஆனவர். இந்தியாவின் முதல் சூத்திரப் பேரரசு மவுரியப் பேரரசு. அதைப்போலவே பழங்குடி மன்னர் பரம்பரை ராடு எனும் சமஸ்தானத்தை ஆண்ட பரம்பரை. அதன் கடைசி மன்னரான சிந்தாமணி ஷரன்நாத் சகாதேவ் எனும் பெயர் கொண்ட ராடு மகாராஜாதான் கடந்த ஜூலை மாதத்தில் மறைந்து போனார். அவருக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே அந்த மன்னர் பரம்பரை தொடர வாய்ப்பில்லை. உலகின் மிகப் பழமையான மன்னர் பரம்பரைகளில் எஞ்சியிருப்பவை ஜப்பான் மன்னரும், கொரியாவின் ஹாங் பாங் பரம்பரையும், பல்கேரிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவரும்தான் இன்றைய நிலையில் இருப்பவர்கள்.

ராடு மகாராஜா பரம்பரை கடந்த 1950 ஆண்டுகளாக இருந்துவந்தது ஆகும். கி.பி.64இல் தொடங்கிய வம்சம் கி.பி.முதல் நூற்றாண்டில் மத்ரா முண்டா எனும் பழங்குடி மன்னர் பானி முகுத்ராய் என்பவரை சுவீகாரம் எடுத்தார். அவரது வாரிசுகள்தாம் ராடு ராஜாக்கள் என்கிறது வரலாறு.

ராடு ராஜ்யத்தின் கோட்டை கொத்தளங்-களைப் பேணி வருவதற்கெனத் தனியான அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டை 103 அறைகளைக் கொண்டது. இங்கிலாந்து நாட்டின் பக்கிங்காம் அரண்-மனையைப் போலவே கட்டப்பட்டுள்ளது. இம்மன்னர் பரம்பரையின் தனிப்பெரும் சிறப்புகளை கடைசி மன்னரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான ராஞ்சியிலுள்ள கல்லூரிப் பேராசிரியர் அதிதேந்திரநாத் சகாதேவ் கூறியிருக்கிறார்.

குடிமக்களிடம் வரி ஏதும் வசூலிக்கப்பட்டது கிடையாது. நவராத்திரி பண்டிகையின்போது பழங்குடிகளின் தலைவர்கள் தரும் தான்யங்கள், ஆடு, மாடுகள் தவிர வேறு எதையும் மன்னர்கள் பெற்றுக் கொண்டதில்லை. ஆனாலும் பெரும் பரப்பிலான நிலங்களை மன்னர்கள் கல்வி, மதம், மற்ற தேவைகளுக்காக நன்கொடை அளித்தது ஏராளம். இந்தத் தானங்களுக்காக மன்னர் விதித்த நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். மன்னர் தானம் தந்ததாகத் தெரிவிப்பதோ, குறிப்பு எழுதுவதோ, கல்வெட்டுப் பதிப்பதோ கூடாது என்பது மட்டுமே நிபந்தனை. தமிழ்நாட்டு நிலையோடு பொருத்திப் பாருங்கள் விளம்பர உத்திகளை! மக்கள் பணத்தில் மக்களுக்காகச் செலவு அழிப்பதில் செய்யப்படும் விளம்பரங்களை, பொறிக்கப்படும் சலவைக் கல்வெட்டுகளை! சொந்தச் சொத்தைத் தந்தவர் விளம்பரமே கூடாது என்கிறார். கிறித்துவ தேவாலயம், காவல் நிலையம், ராஞ்சி பொழுதுபோக்கு மன்றம் முதலிய எல்லாமே அவருடைய நிலத்தில்! ஒரு கல்வெட்டும் இல்லை.

வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்தே கோடீசுவரக் கொடிகட்டிப் பறந்தது பிர்லா குடும்பம்! அதன் ஆதிகர்த்தா பல்தேவ் தாஸ் பிர்லா! பிரிட்டிஷ் அரசிடம் ராஜா பட்டம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். (செட்டி நாட்டு அரசர் அண்ணாமலை செட்டியாரும் இப்படி ராஜா பட்டம் வாங்கியவர்தான்.) பணம் வைத்திருந்த பிர்லா நிலம் வைத்திருக்கவில்லை. ராடு மன்னரான பிரதாப் உதயநாத் சகாதேவ் என்பாரை அணுகினார். அற்பத் தொகையைப் பெற்றுக்கொண்டு லோகர்தாகா எனுமிடத்தில் பெரும் பரப்பளவு நிலத்தைக் கொடுத்தார். நன்றிக் கடனாக ஒவ்வொரு ஆண்டு நவராத்திரி பண்டிகையின்போது பிர்லா மன்னரைச் சந்தித்து தங்க நாணயம் ஒன்றைத் தருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அவருடைய நாட்டில் கிளர்ச்சி ஏதும் நடந்ததில்லை. சண்டைகள் போட்டதோ, வென்றதோ பற்றிய குறிப்பும்கூட இல்லை. ஆயுதங்கள் எதுவுமே மன்னரின் கோட்டையில் கிடையாது. வரவேற்பறையில் பழங்காலப் போர்வாள் ஒன்று மட்டுமே உண்டு. காட்சிப் பொருளாக!

வங்காளத்திலிருந்து வந்த ராணி லட்சுமண் குன்வர் என்பவர் துர்கா பூஜையை இம்மன்னரிடமும் மக்களிடமும் புகுத்தியிருக்-கிறார். இதே வங்காளத்தவர்தான் கிருஷ்ண வழிபாட்டை குஜராத் மாநிலத்தில் புகுத்தியவர்கள்.

மன்னர் பரம்பரையில் பெண்கள் சமமாக நடத்தப்பட்டனர். மகளுக்கும் மருமகளுக்கும் ஆண்களைப் போலவே அனைத்து உரிமைகளும்!

சூத்திரன் எனக் கூறி சிவாஜிக்குத் தொல்லை தந்த ஆரியக் கொடுமைகளை நினைத்துப் பாருங்கள்! இந்நாட்டுப் பூர்வ குடியைச் சேர்ந்த மன்னர்களின் நடத்தையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! வந்தேறிகளின் வஞ்சக வலையைப் புரிந்து கொள்ளுங்கள்!

- அன்றில்

தமிழ் ஓவியா said...

அன்னை நாகம்மையாரின் ஒப்பற்ற தொண்டு


பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அன்னை நாகம்மையார். சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் பிறந்தவர். தந்தை பெரியாரின் தாய் சின்னத்தாயம்மையாரின் ஒன்றுவிட்ட தம்பி மகளாவார். பள்ளி சென்று கல்வி கற்கவில்லை எனினும் உலக அறிவில் சிறந்து விளங்கினார். பெரியார் அவர்களை மணந்துகொண்ட பின், பெரியாரின் பொதுவாழ்வுக்கு உறுதுணையாக, மேடைப் பேச்சுக்கான தனித்த ஆற்றலை வளர்த்துக் கொண்டு பொதுவாழ்விற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டார்.

1920ஆம் ஆண்டு தந்தை பெரியார் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது கதர் உடுத்தி எளிய தோற்றத்திற்கு மாறினார். பூவும் பொட்டும் பிற அணிகலன்களும் அடிமைச் சின்னங்கள் என சுயமரியாதை இயக்கம் பிரகடனப்படுத்தியபோது அவற்றைத் துறந்து பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.1921ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலின்போது அரசாங்கம் 144 தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. தந்தை பெரியாரும், அவரது தொண்டர்களும் தடையை மீறியதால் கைது செய்யப்பட்டனர். மறுநாள் அன்னையார் தந்தை பெரியாரின் தங்கை ஆர்.எஸ்.கண்ணம்மாளுடன் சென்று தடையுத்-தரவை மீறினார். மறியலை நிறுத்துவதென்றால் ஈரோட்டில் நாகம்மையாரைத்தான் கேட்க வேண்டும் என்று காந்தியாரே கூறியுள்ளதி-லிருந்து அம்மையாரின் உறுதியினைத் தெரிந்து கொள்ளலாம். திகைப்படைந்த அரசு, உடனே தடையுத்தரவை நீக்கியது.

1924ஆம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் போராட்டத்திலும் பங்கு கொண்டதுடன், பல பெண்களையும் பங்கு கொள்ளச் செய்தார். இவர் தலைமையேற்று வைக்கம் தெருக்களில் பெண்கள் படையை நடத்திச் சென்ற பாங்கு இப்போராட்டத்தின்பால் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்ச்சிகளை இப்போராட்டம் தட்டி எழுப்பியது! இதுகுறித்து தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்,

வீட்டின் ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார், தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்தவேண்டி வைக்கம் சத்யாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூட்டினார் என்று பாராட்டி எழுதினார்.

1925ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. குடிஅரசு பத்திரிகையும் வெளிவந்தது. தாம் இருக்கும்வரை குடிஅரசு பத்திரிகையின் பதிப்பாசிரியராகவும் பிரசுரகர்த்தாவாகவும் இருந்துள்ளார். சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்றதற்கும் அதில் பெண்கள் நிறையப் பேர் கலந்து கொண்டதற்கும் அன்னையாரே காரணம். அவர் தமது கணவரின் எல்லா முயற்சிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்ததே சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிக்குக் காரணமாகும். எல்லோரையும் அன்புடன் உபசரிப்பார். பொதுஜன நன்மைக்காக வேலை செய்த எல்லா இளைஞர்களையும் பெண்களையும் தமது சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து வந்தார். அவர் தமது சிறந்த கொள்கைகளுக்காக வேலை செய்தவர்களுக்-கெல்லாம் ஒரு தாயாக இருந்தார். அவர்களுடைய சொந்த சவுகரிங்களை அவர் தாமே நேராகக் கவனித்து வந்தார். சமூகப் போராட்டத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு அவர் அபயம் அளித்தார் என்று தோழர் எஸ்.ராமநாதன் கூறியுள்ளார்.

அன்னையாரின் மலாய் நாட்டுப் பயணத்தைப்பற்றி, சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த முன்னேற்றம் பத்திரிகை, அவர்களின் மலாய் நாட்டு விஜயத்தால் மலாய் நாட்டு மக்கள் எல்லாம் அவருக்கு அறிமுகமானார்கள். மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கம் அதிதீவிரமாய்ப் பரவியிருந்ததைப் பார்த்த அன்னையார் அடைந்த களிப்பு அளப்பரியது. சிங்கப்பூருக்கு வந்திருந்து திரும்புங்கால் அவர்களுக்கு விருப்பமான _ தேவையான மலாய் நாட்டுப் பொருள் என்ன வேண்டுமென்று நாம் கேட்டதற்கு நீங்கள் எல்லாம் இம்மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைப் பரப்பியிருப்பதே நான் விரும்பும் பொருள் என்று அன்னையார் சொல்லிய வார்த்தைகள் இன்னும் நமது செவியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வீராங்கனையாய், ஒரு சமுதாயப் போராளியாய், ஓர் அன்னையாய் அருந்தொண்டாற்றிய அன்னை நாகம்மையார் 11.5.1933 அன்று மறைந்து சுயமரியாதை இயக்கத்தின் பொன்னேடுகளில் பொறிக்கத்தக்க பொன்னொளிச் சுடரானார்.

தமிழ் ஓவியா said...

அன்று.. நரேந்திர தபோல்கர்

இன்று ... கோவிந்த் பன்சாரே படுகொலை?

மகாராட்டிர மண்ணில் ஜாதீய வாதம், மதவாதம், மூடநம்பிக்கை இவற்றுக்கு எதிராக இயக்கம் நடத்திய நரேந்திர தபோல்கர் இந்துத்துவ வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் (2012 ஆகஸ்டு). இப்பொழுது அதே பணிகளைச் செய்து வந்தவரும், அம்மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தவருமான தோழர் கோவிந்த் பன்சாரே மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருவருமே நடைப்பயிற்சி சென்றபோதுதான் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நரேந்திர தபோல்கரைச் சுட்டுக் கொன்ற கொலையாளிகள்தான் இவரையும் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

நரேந்திர தபோல்கரைச் சுட்டுக்கொன்ற கொலையாளிகளை இதுவரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தாத நிலையில், அடுத்த கொலையும் இப்பொழுது நடந்திருக்கிறது. (அன்று காங்கிரஸ்; இன்று பா.ஜ.க. ஆட்சி)

தோழர் கோவிந்த் பன்சாரே வலதுசாரி மதவாத அரசியலுக்கு எதிராகச் சிம்மக் குரல் கொடுத்து வந்தவர்; சாமியார்களுக்கு எதிரான கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்; உயர் ஜாதி ஜாட் பிரிவினரின் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்தவர்.

சிவாஜியை இந்துத்துவாவாதிகள் தங்களின் மதவெறி அரசியலுக்குத் தூக்கிப் பிடித்ததை, தக்க வெளியீடுகள் மூலம் தூள் தூளாக்கியவர்!

சிவாஜி பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பன்சாரே காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்குச் சிலை எழுப்ப வேண்டும் என்று கூறப்பட்டதைக் கடுமையாகச் சாடினார்; அதே நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த வெறியன், தோழர் பன்சாரேயின் கருத்திற்கு எதிராக மேடையில் ஏறி வெறிக் கூச்சல் போட்டுள்ளான். நாதுராம் கோட்சே உண்மையான தேச பக்தர் என்று கூறியதோடு பன்சாரேயின் பேச்சை எதிர்த்து நீதிமன்றம் செல்லுவேன் என்றும் மிரட்டியிருக்கிறான். தோழர் கோவிந்த் பன்சாரே பதற்றம் சிறிதும் அடையாமல் அமைதியாக, தாராளமாக வழக்குப் போடுங்கள் இதே கருத்தை அங்கும் வந்து சொல்லுவேன் என்று கூறியிருக்கிறார்.

அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதில் இந்த இந்துத்துவா பின்னணி இருக்கிறது என்பதில் அய்யமில்லை.

நாடு ஒரு மோசமான தருணத்தில் இருக்கிறது; இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும்; அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதற்கு எதிரான மதவெறி சக்திகள் படுகொலைக் கருவியைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.

மதவெறி நஞ்சை அன்றாடம் கக்கிவரும் சக்திகள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களை இயக்குவிக்கும் இடத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில், மதச் சார்பின்மை சக்திகள், இடதுசாரிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும், போராடவும் முன்வர வேண்டும்.

மதம், பக்தி என்பவை எல்லாம் தனி மனிதனைச் சார்ந்தது; வீட்டுக்குள் பூஜை அறைக்குள் முடங்கிக் கிடக்கட்டும்!

மனித உரிமைக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் பேரச்சுறுத்தலாக இருக்கும் இந்தப் போக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

நேர்மையான சட்ட ஆட்சி - நீதிமன்றத்தின் பொறுப்பு, ஊடகங்களின் கடமை இவற்றின் பங்களிப்பும் இதில் மிக முக்கியமானதாகும்! தேவையுமாகும்.

21ஆம் நூற்றாண்டில் முற்போக்குச் சமுதாயம், சரிநிகர் வாழ்வு மணக்கும் அத்தியாயம் மலர வேண்டுமே அன்றி, மதவெறிப் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகி, நாளும் கலவரச் சூழலும், அமைதியைத் தொலைத்த அருவருக்கத்தக்க நிலையும் நிலவ வேண்டுமா என்பதை முடிவு செய்வோம்! அரசியலுக்கு அப்பாற்பட்டு பகுத்தறிவுப் பிரச்சாரம் சுழன்றடிக்கட்டும்! சுழன்றடிக்-கட்டும்!!

அவருக்கு நமது வீர வணக்கம்; பல தபோல்கர்களும், பன்சாரேகளும் உருவாவது நிச்சயம். அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கல்.

நரேந்திர தபோல்கர்களுக்கும், கோவிந்த் பன்சாரேக்கும் நாம் காட்டும் உண்மையான மரியாதை இதுதான். வன்முறை ஆயுதம் -_ பகுத்தறிவு முற்போக்கு பொதுவுடைமைச் சித்தாந்தங்களை வீழ்த்த முடியாது என்றே செயலில் காட்டுவோம் _ - வாரீர்!

கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உயிரியல் அடிப்படையில் அனைவரும் ஓர் இனமே!


மொழி மக்களை நிலத்தோடு பிணைக்கும் கருவி, மொழி மக்களை நிலத்தோடு பிணைக்கும் வேலையை மட்டும் செய்வதில்லை. அதற்கும் மேலாக அந்த மக்களின் வரலாற்றைத் தன்னியல்பாக எழுதும் ஒரு கருவியாகவே மொழி வளர்கிறது, ஆரியப் புனைவுகளை முன்னிறுத்தும் பல்வேறு தரப்பு மனிதர்கள் இன்றும் ஊடகங்களில் கிடைக்கிற இடைவெளிகளில் எல்லாம் சமஸ்கிருதம் தேவ மொழி என்றும், எல்லா உலக மொழிகளுக்கும் தாய் என்றும் ஒரு கடைந்தெடுத்த பொய்யை உளறிக் கொண்டே இருப்பார்கள்.

இந்திய மொழிகளைப் பற்றி ஆய்வு செய்த ருஷ்ய அறிஞர் நிகிதா குரோவ் இதற்கான விடையை நமக்குச் சொல்கிறார். சமஸ்கிருதத்தின் அறியப்பட்ட முதல் நூலான ரிக் வேதத்தில் ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட திராவிட மொழிச் சொற்கள் இடம் பெறுகின்றன. வெவ்வேறு காலத்தில் இந்திய மொழிகளை ஆய்வு செய்த பல அறிஞர்கள் இவரது மேற்கோள்களை வழிமொழிகிறார்கள்.

உலகின் முதன் மொழி என்று பார்ப்பனர்-களால் தொடர்ந்து சொல்லப்படுகிற சமஸ்கிருதம் திராவிட மொழிக் குடும்பத்தின் சொற்களை வைத்தே தனது வேதப் பாடல்களைத் தொடங்கியது என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிடாதீர்கள். குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் நமது மொழியின் தொன்மையையும், சிறப்பையும் நினைவூட்ட மறந்து விடாதீர்கள். ஏனெனில், மொழியின் இருப்பே ஒரு மனிதக் குழுவின் ஏற்றமாகவும், வீழ்ச்சியாகவும் வரலாற்றில் இடம் பிடிக்கிறது. மொழி நிலத்தோடு நம்மைப் பிணைப்பது மட்டுமல்லாமல், அரசியல் அதிகாரமாகவும் பொருளாதாரக் காரணியாகவும் நிலைகொள்கிறது.

இந்திய வரலாற்றின் பக்கங்களில் வருணமும், அதன் கொடூரமான தாக்கமும் இன்று வரை ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பிறப்பால் உயர்ந்தவர் என்றும், ஏனைய மனிதக் குழுக்களை அவர்களுக்குக் கீழானவர்கள் என்று சொல்வதற்கு எப்படி மிக முக்கியமான காரணியாக இருக்கிறதோ அதற்குக் குறையாத காரணியாக மொழியின் கூறுகளை, மொழியின் வரலாற்றை நாம் அறியாமல் போனதும், கற்பிக்காமல் போனதும் ஆகும். இனக்குழு வரலாற்றிலும், உயிரியல் கோட்பாட்டிலும் உயர் ஜாதி என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிற ஒரு மனிதனின் குழந்தைக்கும், உங்கள் குழந்தைக்கும் எந்த வேறுபாடுகளும் இல்லை என்று ஆய்வுகளும், அறிவியலும் சொல்லும்போது நீங்கள் ஏன் அந்த ஆரியப் புனைவை இன்னமும் பின்பற்றுகிறீர்கள், நம்புகிறீர்கள். உங்கள் உடலும், உங்கள் உணர்வுகளும் மேன்மையானவை, வேறெந்த மனிதருக்கும் நிகரானவை என்கிற அடிப்படை உண்மையை உணரும் கணத்தில் இருந்துதான் உங்கள் வரலாறு தொடக்கம் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...


மதமும், மத நூல்களும் இந்திய சமூகத்தின் வருணக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஆரியப் புரட்டர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதம். அவற்றுக்கு எதிரான அறிவுப் புரட்சியை நமது குழந்தைகளுக்கு நாம் இன்னமும் கற்றுத் தரவில்லை.

இன்றுவரை இந்தியா முழுவதும் ஆட்சி அதிகாரம், பொருளாதார நிலை, சமூக வாழியல் நிலை என்று எல்லாப் பக்கமும் ஆரியக் கோட்பாட்டின் மய்யக் கருத்தான, அறிவியலுக்கு எதிரான, பிறப்பால் உயர்நிலைத் தகுதியைப் பெறுகிற வருணக் கோட்பாட்டின் வழி வந்தவர்களே கோலோச்சிக் கொண்டு இருக்கிறார்கள். கடவுளுக்கு அருகில் இருக்கிற மனிதனாகத் தன்னை அடையாளம் செய்து கொண்டு, ஏனைய அனைத்தையும் தனக்கு அடிபணிகிற குழுக்களாக வைத்துக் கொள்வதில் வெற்றி பெறுகிற கோட்பாட்டையே ஆரியம் என்கிறோம்.

அண்ணல் அம்பேத்கர், "அடிமைகளாக எமது மக்கள் இருப்பதுகூட அவமானமில்லை. ஆனால், தாங்கள் அடிமைகள் என்பதையே அறியாமல், தமக்குக் கிடைத்த பெருமை என்கிற மனமயக்கத்தில் உழல்கிறார்களே" என்று கூறுவார். அவரது சொற்கள் மத மயக்கத்தில் வீழ்ந்து வருணக் கோட்பாட்டின் படிநிலை-களில் தன்னைப் பொருத்திக் கொள்கிற எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.

இந்திய சமூகம் முழுவதும் அப்படியான ஒரு மன மயக்கத்தில்தான் உழன்று கொண்டிருக்-கிறது. இனக்குழு வரலாற்றையும், உயிரியல் வரலாற்றையும் நாம் தொடர்ந்து மீட்டுருவாக்கம் செய்வதன் காரணம் இந்திய சமூகத்தில் மனித உயிரியல் என்கிற காரணியைப் பின்னுக்குத் தள்ளி பிறப்பால் ஒரு குழு உயர்ந்தது என்கிற பொய்யை எல்லா இடங்களிலும் பரவச் செய்திருப்பதுதான். பழங்குடி இந்தியர்களின் கலாச்சாரமும், பண்பாடும், உழைப்பும், பொருளாதாரமும் சுரண்டப்பட்டு உயர் ஜாதி என்கிற அரணைச் சுற்றிக் கட்டிக் கொண்டு ஒய்யாரமாக இந்த வருண ஜாதி அமைப்பின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் மனிதக் குழுக்களின் கோட்பாடே நம்மைப் பொருத்தவரை ஆரியக் கோட்பாடு. பிறப்பால் நான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற இந்த உளவியல் நோய் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்ட கொடுநோய்.

ஆரியக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து வரலாற்றில் இரட்டை வேடம் போடுவதை நம்மால் பார்க்க முடியும். எப்போதெல்லாம் அவர்களின் இருப்புக் குறித்த வரலாறு கேள்விக்கு உள்ளாக்கப்-படுகிறதோ அப்போதெல்லாம் ஆரியக் குடியேற்றம் பொய் என்றும், அது நிகழவே இல்லை என்றும் வாதிடுவார்கள். எப்போ-தெல்லாம் வெற்றி கிடைக்கிறதோ அப்போ-தெல்லாம் ஆரியக் குடியேற்றம் மட்டுமல்லாமல், அவர்களின் வருகையும், இலக்கியமும், பண்பாடும்தான் இங்கே எல்லாவற்றையும் கட்டமைத்தது என்று உறுதியாகச் சொல்வார்கள்.

பிறப்பால் நான் உயர்ந்தவன் என்கிற அறிவியலுக்கு எதிரான பிற்போக்குக் கதைகளை நெடுங்காலமாக இந்த மண்ணில் கட்டவிழ்த்து அதன் மூலமாகவே உழைப்பையும், பொருளையும் சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்வது மட்டுமல்லாது, பல கோடிக் குழந்தைகளின் பிறப்பைக் கேலி செய்தும், அவர்களின் உளவியலைச் சிதைத்தும் சமூகக் கட்டமைப்பை அறிவியலுக்கு எதிரான மூடத்தனங்களால் நிரப்பிய கோட்பாடே ஆரியம் என்கிற நாசிசக் கோட்பாடு. பிறப்பால் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்கிற கோட்பாடு அறிவின் மீதும் மனித உடல் மற்றும் உயிரின் சமநிலை மீதும் நம்பிக்கை அற்ற பிற்போக்குக் கோட்பாடு, அத்தகைய கோட்பாட்டின் எல்லா முடிச்சுகளும் இந்திய சமூகத்தின் வேர்களில் மதம் மற்றும் ஏனைய சமூகப் பழக்கங்களின் வழியாகப் பிணைக்கப்-பட்டிருக்கிறது. இந்தச் சிக்கலான அடிமைத்தனத்தின் வேர்களை அறுத்து விடுதலை பெற்ற மானுட சமூகத்தின் தலைமுறையாக நமது குழந்தைகளை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை. கடமை மட்டுமல்ல, அடிப்படை உரிமையும்கூட.

உயிரியல் அடிப்படையில், மனித உளவியல் அடிப்படையில் மனித இனக்குழுக்கள் எல்லாம் சமநீதியும், உரிமையும் பெற்றவை என்கிற எளிய உண்மையை நமது குழந்தைகளுக்குத் தீவிரமாகக் கற்றுக் கொடுக்க வேண்டிய காலமிது. உளவியல் வழியாக காலம் காலமாக அவர்களின் மரபு நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. கல்வியும், முறையான உளவியல் வழிகாட்டுதலும் இல்லாமல் அவர்களை விடுதலையை நோக்கிச் செலுத்துவது இயலாத ஒன்று.

இறுதியாக அறிவியலுக்கு எதிரான, மானுட சமநீதிக்கு எதிரான ஆரியம் போன்ற பிறவி உயர்வுக் கோட்பாடுகளை உடைக்க நாம் எந்தத் தளங்களில் பணியாற்ற வேண்டும் என்பதை அடுத்த பகுதியில் ஆய்வு செய்வோம்.

- அறிவழகன் கைவல்யம்

(தொடரும்)

தமிழ் ஓவியா said...

ஊன்றிப் படிக்க! உண்மையை உணருக!


வந்தவர் மொழியா?
செந்தமிழ்ச் செல்வமா?

கணம்

இயல்பாக ஒருவன் கண் இமைக்கும் நேரத்திற்குப் பெயர். இச்சொல் கண் என்பதிலிருந்து பிறந்தது. கண் அம் கணம் ஆகி, அது கண்ணிமைக்கும் நேரத்திற்கானதை ஈறு திரிந்தோர் ஆகு பெயர் என்பர்.

இவ்வாறு கண் என்பது அம் பெறாமலே கண்ணிமைப்போது என்ற பொருள் தருவதும் உண்டு.

கயற்கணின் அளவும் கொள்ளார்
(சீவக சிந்தாமணி 1393)

என்று வந்துள்ளதும் கருதத்தக்கது. எனவே கணம் வந்தவர் சொல்லன்று. செந்தமிழ்ச் செல்வமே என்று கொள்க. இதைப் பார்ப்பனர் க்ஷணம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள். கணமும் க்ஷணமும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றன. கணம் என்ற தமிழ்ச் சொல் பழந்தமிழ் நூல்களில் நாம் எடுத்துக் காட்டியுள்ளவாறு காரணப் பெயராய் வந்துள்ளது. இந்நிலையில் நாம் அறிய வேண்டியது என்னவெனில், வந்தவர் நம் தமிழாகிய கணத்தை க்ஷணம் என்று தம் வாய்க்கு வந்தவாறு சொல்லிக்-கொண்டார்கள் என்பதே.

தானம்

தன்மை என்பது மைஈற்றுப் பண்புப்பெயர் ஆகும். மை ஈற்றுப் பண்புப் பெயர்கள் அனைத்தும் பல மாறுதல்களை அடையும்.

ஈறு போதல் இடை உகரம் இய்யாதல்
ஆதிநீடல் அடி அகரம் ஐயாதல்
தன் ஒற்று இரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இனம்மிகல் இணையவும் பண்புக்கியல்பே

என்ற நன்னூற் பாட்டினால் இன்னின்ன மாறுதல் அடையும் என்பது அறிக. மேற்சொன்ன தன்மை என்ற பண்புப் பெயர் ஈறுபோதல் என்ற சட்டத்தால் மை கெட்டுத் தன் என நின்றது. அந்தத் தன் என்பது ஆதி நீடல் என்ற சட்டத்தால் தான் என நீண்டு நின்றது. அந்தத் தான் என்பது அம் என்ற பண்புப் பெயர் இறுதிநிலை பெற்றுத் தானம் ஆயிற்று. தானம் என்பதன் பொருள் தன்மை, உயர்வு என்பன. எனவே, தானம் என்பது கொடைத்தன்மை என்று உணர்தல் வேண்டும்.

தானம் என்பது ஈண்டுக் காட்டிய பொருளில் அமைந்து இருப்பதை அடியில் வரும் சிந்தாமணிச் (2924) செய்யுளாலும் அறியலாம்.

கருங்கடற் பிறப்பின் அல்லால்
வலம்புரி காணுங் காலைப்
பெருங்குளத் தென்றும் தோன்றா
பிறை நுதல் பிணையினீரே.
அருங் கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம்
தெரியின் மண்மேல்
மருங் குடை யவர்கட் கல்லால்
மற்றையவர்க் காவ துண்டோ.

இச் செய்யுளில் வந்துள்ள அருங்கொடைத் தானம் என்ற தொடர் மேலே நாம் காட்டிய வண்ணம் தானம் என்பது தன்மை என்று பொருள்படுவது காண்க.

எனவே, தானம் என்ற சொல் தூய தமிழ்ச் சொல் அன்றோ? இதைப் பார்ப்பனர் வடமொழிச் சொல் என்று கயிறு திரிப்பர். தானம் என்ற சொல் வடவர் இலக்கியத்திலும் இருக்கின்றதே எனில், ஆம், வந்தேறிகளாகிய வடவர் தமிழினின்று எடுத்துக் கொண்டார்கள் என்றோ அறிய வேண்டும்.

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

(குயில், 1.6.1958)

தமிழ் ஓவியா said...

கருத்து


பொதுத்துறை நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் ஆராய்ச்சிகள் தொழில்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சோதனைக்-கூடங்களோடு மட்டும் நின்றுவிடாமல் ஆராய்ச்சிகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும். இனிவரும் காலங்களில் நடக்கவிருக்கும் ஆராய்ச்சிகளும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துகின்ற வகையில் இருக்க வேண்டும்.

- கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை அங்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் இல்லை. எனவே, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதியை மாவட்ட அளவில் ஒரு மருத்துவ-மனையிலாவது ஏற்படுத்த வேண்டும். மருத்துவ சேவைகள் அனைத்தும் மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

- செலமேஸ்வர், உச்ச நீதிமன்ற நீதிபதி.

வளர்ச்சி என்று கூறிக்கொண்டு மக்களிடம் கருத்துக் கேட்காமல் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தும் முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் அதுபற்றிக் கருத்துக் கேட்க வேண்டும். மக்களுடைய ஒத்துழைப்புடன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

இந்தத் திட்டம் பற்றிய விவரங்கள், ஆய்வுகள் முழுவதையும் தமிழில் மொழிமாற்றம் செய்து கிராம சபைகளில் மக்கள் தெரிந்துகொள்ள அரசு செய்ய வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

- மேதா பட்கர், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்புத் தலைவர்

குடியரசு தின அணி-வகுப்புக்கு ரூ.100 கோடி செலவழிக்கிறீர்கள். ஆனால் ஏழை விவசாயிகளின் நிலத்திற்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகிறீர்யீகள். வழக்குத் தொடர்வதற்கு செலவழிக்க முன்வரும் நீங்கள் ஏன் இழப்பீடு தரத் தயங்குகிறீர்கள்?

- எச்.எல்.தத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.

தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக் கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியம். பள்ளிக் கல்வியை மாணவர்களுக்கு நல்ல அனுபவக் கல்வியாக மாற்றினால் மட்டுமே தகுதிவாய்ந்த, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். இப்போது இருக்கும் பாடத்திட்டத்தில் 25 விழுக்காடு குறைத்து தொழில்திறன் மேம்பாடு உள்ளிட்ட பாடத்திட்டங்களைக் கற்பிக்க வேண்டும்.

- ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்.

குழந்தைத் திருமணம், பள்ளிகளில் பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்-படுவதாலேயே இத்தகைய குற்றங்கள் நிகழ்கின்றன.

குழந்தைகள்மீது நடத்தப்படும் குற்றங்கள் குறித்து காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகிய அரசு அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

- வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

தமிழ் ஓவியா said...

மணியம்மையாரை அன்னை என்பது ஏன்?

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மார்ச் - 10

மணியம்மையாரை அன்னை என்பது ஏன்?

புகழக்கூடாத மணியம்மையாரை அன்னை எனப் புகழ்கிறீர்களே! இது சரியா? என்று மணச்சநல்லூரிலிருந்து ஒருவர் கேட்ட கேள்விக்கு சூடாக புரட்சிக்கவிஞர் அளித்த பதிலிருந்து சில பகுதிகள் இதோ!

நாம் இளைமைப் போதில் முருகனைப் புகழ்ந்தோம் _ பாடினோம் _ ஆனால் நாளடைவில் முருகன் புகழத்தக்க ஒரு பொருளன்று. பாடத்தக்க ஒருபொருளன்று எனக் கண்டோம். முருகனைப் புகழ்வதை விட்டோம். முருகனைப் பாடுவதை விட்டோம்.பாரதி தமிழ்ப் பாட்டுக்கு ஒரு புதுநடை கண்ட புலவன். பாரதியைப் புகழ்ந்தோம் _ பாடினோம் _ இதைச் சிலர் எதிர்த்தார்கள். பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதை எதிர்த்து வருகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பை நாம் பொருட்-படுத்தவில்லை. ஆனால் நாம் புகழ்வதற்கும் புகழ்ந்து பாடுதற்கும் பாரதியைவிட ஒருவர் இருக்கிறாரா? அவர் யார் என்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

தாம் போகும் வழியை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன் தமிழரைக் காப்பேன். ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல; மலைமேல் நின்று மெல்ல அல்ல தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.

அது மட்டுமல்ல.

குன்று உடைக்கும் தோளும் நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம். பெரியாரைப் புகழ்ந்து பேசினோம்; புகழ்ந்து எழுதினோம்; புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ நாம் பாட இன்னும் ஒரு மேலான ஒரு பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

பெரியார் செத்துக் கொண்டிருந்தார்! தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்.

ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரை _ போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு. மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.

ஆயினும் காற்றிறங்கிப் பொதிமாடுபோல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒரு பால் ஒட்டிய ஆண் குறியினின்று முன்னறிவிப்பின்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந் தொண்டால் முடியாது. அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது; வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு

ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை,

அன்னை என்று புகழாமல் நாம்வேறு

என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகுபெறக் கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார், ஏதுங்கெட்ட வேலைக்காரி போல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை என் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை; எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டைக் கட்டுவதன்றி அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலையில் வைத்தார் என்பதும் இல்லை.
மணச்சநல்லூராரே,

நான் யாரைப் புகழ வேண்டும்?

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், (குயில் 10.5.1960; 2,3)