Search This Blog

14.3.15

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா?

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா?


புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஓர்அறிவிப்பு வெளி வந்தது; 

தாலியைக் குறித்து ஒட்டி வெட்டிப் பேசும் விவாதம் அது - அதனைக் கண்ணுற்ற இந்துத்துவா சக்திகள் ஆகா - இந்துக் கலாச்சாரத்துக்கு ஆபத்து! ஆபத்து!! இதனை அனுமதி யோம்! என்று ஆயிரம் கால் மிருகமாகக் கர்ச்சித்தனர். அந்த நிறுவனத்துக்குப் பல வகை களிலும் அழுத்தம் கொடுத்தனர் - ஒரு  கட்டத்தில் அச்சுறுத்தவும் செய்தனர்.

அதை ஒளிபரப்பி விடுவார்களோ என்ற எதிர்பார்ப்பில் கடந்த எட்டாம் தேதி புதிய தலைமுறை அலுவலகத்துக்குள்ளேயே தாக்குதல் தொடுத்துள்ளனர் - தடித்தனமாக - ஊடகவியலாளரான பெண்ணொருவரும் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர்களின் அராஜகம் அடங்கிடவில்லை.


12.3.2015 வியாழன் அதிகாலை 3 மணியளவில் டிபன்பாக்ஸ் வெடி குண்டு களை புதிய தலைமுறை அலுவலகத்தில் வீசி எறிந்து தங்களின் வெறி உணர்வைத் தீர்த்துக் கொண்டனர்.


மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்து இளைஞர்சேனா என்ற அமைப்பின் தலைவர் ஜெயம் பாண்டியன் என்பவர் எங்கள் அமைப்புதான் இதனைச் செய்தது; நாங்கள் அதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி மதுரை ஆறாவது ஜுடிஷியல் மாஜிஸ்ட் ரேட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.


நீதிமன்ற காவலில் வரும் 19ஆம் தேதி வரை வைக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித் துள்ளது. மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்துத்துவாவாதிகளைப் பொறுத்தவரை பல்வேறு பெயர்களைச் சூட்டிக் கொள்வார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார்கள் மற்றும் பிஜேபியினர் இது போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வார்கள் - சொல்லுவார்கள்?
எங்களுக்கும் அந்த அமைப்புக்கும் சம்பந்தமேயில்லை என்ற துணியைப் போட்டுத் தாண்டுவார்கள்


காந்தியாரை நாதுராம் கோட்சே என்ற பார்ப்பான் சுட்டுக் கொன்றபோதும் (30.1.1948) அப்படித்தான் சொன்னார்கள். கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல - இந்து மகாசபையைச் சேர்ந்தவர் என்று சாதித் தார்கள்.


(ஆனால் அவரின் குடும்பத்தவர் களோ காந்தி கொலையில் சம்பந்தப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான நாதுராம் கோட்சேயின் உடன்பிறப்பான கோபால் கோட்சேவோ நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.தான்; அவனை ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று அத்வானி கூறுவது அசல் கோழைத்தனம் என்று சொன்னதை நேர்முக பேட்டி மூலம் இந்துக் குழுமத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட் லைன் இதழ் அம்பலப்படுத்தவில்லையா?)


அதே வகையில் தான் புதிய தலைமுறை வன்முறைக்குத் தாங்கள் சம்பந்தம் இல்லை என்று சாதிக்கப் பார்க்கிறார்கள்.


ஆனால், எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லுவதுபோல பிஜேபியின் தேசியச் செயலாளர் எச். ராஜா என்பவர் தனது இணைய தளத்தின் மூலம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் வன் முறைக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.


தாலிபற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதத்திற்கு தேர்ந்தெடுத்தது வன்மையாகக் கண்டிக்கத் தக்க ஒன்றாகும். இந்துக்கள் அமைதியானவர்கள் என்பதால்தான் இவர்கள் இந்துமத பழக்க வழக்கங் களில் மட்டும் கேலியும், கிண்டலும் செய்கின்றனர்.


பெண்களுக்குத் தாலி தேவையா? இல்லையா? என்ற விவாதத்திற்கு ஏற்பாடு செய்ததற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் - என்று பிஜேபியின் தேசிய செயலாளர் ஒருவர் அறிக்கை வெளியிடுகிறார் என்றால் இதன் உள்ளடக்கம் என்ன?
தாக்கியவர்களை எந்த இடத்திலும் கண்டிக்கவில்லை; மாறாக அவர்கள்மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் புதிய தலைமுறை மீதான தாக்குதலின் பின்னணியில் யார் இருக் கிறார்கள் என்பது அம்பலமாகி விட்டது.


ஒரு தனியார் தொலைக்காட்சியில் சிறையில் இருப்பவர்களைச் சந்தித்துள் ளீர்களே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இவர் என்ன சொன்னார்? சிறையில் இருக்கும் எங்கள் தோழர்களைத் தானே பார்த்தோம் என்று, சொன்னதன் மூலம் புதிய தலைமுறை தாக்கப்பட்டதற்குப் பின்னணி யில் இருந்தவர்கள் இந்தக் கம்பெனிதான் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. (காவல்துறை என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்ப்போம்!)


இந்துத்துவாவாதிகள் இதில் தலையிடு வதற்கு என்ன இருக்கிறது? 

தமிழர்களுக்கும் இந்து என்பதற்கும் என்ன சம்பந்தம்? தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்களே - சட்ட ரீதியான தில்லுமுல்லுகளால் அப்படி ஒரு சூழலை உருவாக்கி இருக்கலாம்; ஆனால் பண்பாட்டு ரீதியாக இந்துவுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?


தமிழ்க் கடல் மறைமலை அடிகள் எம்.எல். பிள்ளை என்று போற்றப்படும் கா. சுப்பிரமணியம்பிள்ளை, நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்றவர்கள் தமிழர்கள் இந்து அல்லவென்றும் சைவம் வேறு இந்து வேறு என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக வெட்டி வீழ்த்திவிட வில்லையா?


இந்த நிலையில் இந்து மதக் கலாச்சாரத்தை தமிழர்கள்மீது திணிக்க இவர்கள் யார்? நியாயப்படி இவர்கள் மேற்கொள்ளும் இதே அணுகுமுறையை பார்ப்பனர்களால் தமிழர்கள்மீது திணிக்கப் படும் சடங்குகளின்மீது தமிழர்களாகிய நாங்கள் மேற்கொள்ளலாமா?


தமிழன் கட்டிய கோயிலில் கருவறைக் குள் புகுந்து நாங்கள் மட்டும்தான் அர்ச்சனை செயயலாம்; நீ சூத்திரன் வெளியில் நில்லு! என்று பார்ப்பனர்கள் கூறும் கோயிலுக்குள் புகுந்து தமிழர்கள் இதே வேலையைச் செய்தால் என்னாவது?


தமிழ்நாட்டுக் கோயிலுக்குள் வழிபாட்டு முறை தமிழில் அல்லாமல் சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து நாமும் கோயிலுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட லாமா? (ஆனால் அந்த வன்முறைகளில் நமக்கு நம்பிக்கை இல்லாததால் அறிவு வழியாக அற வழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்).


தமிழர்களுக்குத் தாலி கிடையாது என்று அறிஞர் டாக்டர் இரா. இராசமாணிக்கனார் தனி நூலே எழுதியுள்ளார் (தமிழர் திருமணத்தில் தாலி - என்பது அந்நூலின் பெயர்)


தமிழர் திருமணம் தொடர்பாக அகநானூற்றில் (பாடல் எண் 86, 136) இரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் தாலி என்ற பேச்சுக்கே இடமில்லையே! அப்படி இருக்கும் பொழுது தமிழர்களுக்குத் தொடர்பே இல்லாத தாலியைப்பற்றி தமிழர்கள் விவாதம் நடத்தக் கூடாதா? இடையில் புகுத்தப்பட்டது குறித்து கருத்துத் தெரிவிக்கக் கூடாதா?


அப்படியே பார்த்தாலும் தாலி என்ற சொல்லுக்குப் பனை ஓலை - தொங்க விடுவது என்றுதான் பொருள். இப்பொழுது தாலியை இவ்வாறு தான் பயன்படுத்து கிறார்களா?


தங்கத்தினால்  செய்து அல்லவா தொங்க விடுகிறார்கள். கழுத்தை உறுத்தும் என்பதற்காக இரவில் கழற்றி வைத்து விடுவதில்லையா? அப்பொழுது மட்டும் ஆச்சாரம் கெடாதா? ஏழைகள் அவசரத் துக்குத் தாலியை அடகு வைக்கிறார்களே- இந்துத்துவாவாதிகள் அடகுக் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் செய்வார்களோ!


தாலியிலும்கூட ஆரியம் ஜாதியைத் திணித்துள்ளதே! பறத்தாலி, பாப்பாரத் தாலி, பொட்டுத் தாலி, பிறைத்தாலி, சிலுவைத் தாலி என்று பிரித்து வைத்துள்ளார்களே! புலித்தாலி என்றால் காட்டுக்குச் சென்று புலியோடு சண்டை போட்டு புலியின் பல்லைப் பிடுங்கி வந்து, காதலியின் கழுத்தில் தாலியாகக் கட்ட வேண்டுமாம்! எத்தனைப் பேர் தயார்! ராம கோபாலன் கம்பெனிகள் முன் வரட்டுமே!


தந்தை பெரியார் அவர்களால் 1928 முதல்  (மே - 28) அறிமுகப்படுத்தப்பட்டு அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராகவிருந்த போது சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடி யாக்கும் சட்டத்தைச் செய்வித்தாரே- (20.1.1968 - குடியரசு தலைவர் ஒப்புதல்) அந்தத் திருமண சட்டத்தில் தாலியைக் கட்டாயமாக்கவில்லையே! மாலை அணிவித்தாலோ, மோதிரம் மாற்றிக் கொண் டாலோ போதும் என்று கூறப்பட்டுள்ளதே!


ஆயிரக்கணக்கான பெண்கள் அக்கொள்கையை ஏற்று தாலி கட்டாமல் திருமணங்களைச் செய்து கொண்டு வருகிறார்களே - ஏற்கெனவே ஏதோ ஒரு சூழ்நிலையில் தாலி கட்ட நேர்ந்த நிலையில், திராவிடர் கழக மேடைகளில் தாலி அகற்றும் நிகழ்ச்சி சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறதே - இப்பொழுதுகூட புதிய தலைமுறை ஒளிபரப்புப் பிரச் சினையில் எந்தஒரு தமிழ்நாட்டுப் பெண்ணும் எதிர்ப்புக் குரல் கொடுக்க வில்லையே! இந்த இந்து வெறி ஆண்கள் தானே குதியாட்டம் போடுகிறார்கள்.


ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட தற்கு அடையாளம்தான் தாலி என்றால், ஓர் ஆண் திருமணம் செய்து கொண்டதற்கு என்ன அடையாளம்? என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு என்ன பதில்? பார்ப்பனர்கள் நடத்தி வைக்கும் சூத்திரர்கள் வீட்டுத் திருமணத்தில் ஒரு சடங்கை மறக்காமல் செய்வார்கள்.


மணமகன் சூத்திரன் என்பதால், அவனுக்கு மந்திரங்கள் ஓதப்படக் கூடாது என்ற அவாளின் சாத்திர முறையால் மணமகனுக்குப் பூணூல் அணிவிப்பார்கள் கல்யாண சடங்குகள் முடிந்த நிலையில் மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றிக் குப்பையில் தூக்கி எறிந்து விடுவர்; பூணூல் மட்டும் தற்காலிகம்; தாலி மட்டும் நிரந்தரமா? எது பார்ப்பனர்களின் உயர் ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்துகிறதோ, அதனைக் கட்டிக் காப்பதுதான் அவாளின் திடச்சித்தம்!


ஊடகங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை மதவாதத்தின் ஆபத்தைப் புரிந்து கொண்டு அதன் ஆணி வேரை வீழ்த்தும் பணி என்பது எத்தகைய முக்கியமானது என்பதை இப்பொழுதாவது புரிந்து கொண்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகளை  தயாரிக்க வேண்டும் ஒளிபரப்ப வேண்டும்.


அதை விட்டு விட்டு எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்ற பெயரால் மசாலா கலவை நிகழ்ச்சிகளை நடத்திச் சென்றால் இந்த அடிப்படைவாதிகளின் கொம்புகள் மேலும் கூர்மை அடையத்தான் செய்யும் - எச்சரிக்கை! தனக்கு வந்தால்தான் தலைவலியும் திருகுவலியும் என்ற மனப்பான்மை கூடாது!


பிஜேபி, சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஊடகத்தின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளனராம். இந்தச் சந்தர்ப்பத்தை ஊடகத் துறையினர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு பாசிசக் குப்பைத் தொட்டிகளை வெளியே நிறுத்தி விடும் அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்றே மகிழ வேண்டும்.


அதே நேரத்தில் சென்னையில் ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் இந்தப் பிஜேபி மதவாத சக்திகள் கொடுத்த அழுத்தத்தினால் ஒரு பிரபலமான புகழ் பெற்ற ஊடகலியலாளர் ஒதுக்கி வைக்கப்பட்டாரே! தலைவர்கள் கண்டித்து அறிக்கை விடுத்தும் நிருவாகம் யாருக்குப் பணிந்தது என்பது எல்லோருக்கும் தெரியுமே! அந்தத் தைரியம் தான் இப்பொழுதும்.


ஏதோ புதிய தலைமுறைக்கு வந்தது என்று நினையாமல் (அது ஒரு குறியீடுதான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் கூறியுள்ளார் இந்தக் கருத்தை) மற்ற நிறுவனங்களிலிருந்தும் பாசிசக்  குப்பைகளை வெளியே வீசுவது அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்லதே!

............

போப் முதல் புதிய தலைமுறை வரை

கருத்துச்சுதந்தரம் என்பதைக் கடுகளவும் அனுமதிக்காக குணம் பாசிசத்தில் பிரதானமானது. இங்கு இருக்கும் ஒரே கலாச்சாரம் இந்துக் கலாச்சாரம் மட்டுமே - என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தின் முடிந்த முடிவு.
அதற்கு மாறாக இன்னொரு கலாச்சாரம் என்பதுபற்றி அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படி யாரேனும் அத்தகையப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவார்களேயானால் தசைப்பலத்தால் விநீறீமீ றிஷீஷ்மீக்ஷீ அவர்களை எலும்பு, சதை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்.


சிவசேனை - பா.ஜ.க.கூட்டணி ஆட்சியில் மும்பை நகரப் பகுதிக்குள் யார் கலை நிகழ்ச்சி நடத்தினாலும் அவர்கள் முன்கூட்டியே பால்தாக்கரேயின் மகன் உத்கர்தாக்கரே குழுவிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிகழ்ச்சிகள் தூள் தூள்தான்! அதுபோல, எத்தனையோ நிகழ்வுகள் நடந்ததுண்டு.

1998 டிசம்பர் 2-இல் மும்பை நகரிலும், டிசம்பர் 3-இல் டில்லியிலும் தீபாமேத்தாவின் ஃபயர் திரைப்படத்திற்கு எதிராக சிவசேனையினர், சங்பரிவாரத்தினர் பெரும் இரகளையில் ஈடுபட்டனர். சுவரொட்டிகள் தீயிடப் பட்டன. திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன!


1998 ஏப்ரல் 26 ஆம் நாளன்று சிவசேனைக் காலிகள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான குலாம் அலி நிகழ்த்த இருந்த இசை நிகழ்ச்சி அரங்கினுள் நுழைந்து துவம்சம் செய்தார்கள்.


1996 மே திங்களில் மும்பையில் இர்ஃபான் ஹூசேனி ஓவிய அரங்கு தீக்கிரையாக்கப் பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் இந்து மதக்கடவுளச்சியான சரஸ்வதியை ஆபாசமாக வரைந்திருந்தாராம் - அதுதான் காரணமாம்.
கோபிகாஸ்திரீகளை நிர்வாணப்படுத்தி ரசித்த கோகுல கிருஷ்ணனை கடவுளாகக் கும்பிடும் இந்த கூட்டத்துக்கு இதுபோலெல்லாம் சிந்திப்பதற்கே முதலில் அருகதை கிடையாதே! ஓவியர் ஹூசேன் ஓவியங்கள் அழிக்கப்பட்டபோது சிவசேனையின் தலைவர் பால்தாக்கரே என்ன கூறினார்?
ஹூசேன் ஹிந்துஸ்தானத்துக்குள் நுழைய முடிகிறதென்றால், நாங்கள் அவர் வீட்டுக்குள் நுழைய முடியாதா? என்று ஆணவத்துடன் கேட்டார் அந்த ஆரியப் பிதாமகர்!


1999 செப்டம்பர் 23 உ.பி.தலைநகரான லக்னோவில் நாடகத்தை நடத்திவிட்டு, சஹ்மத் ரங்க்மஞ்ச் நாடகக்குழு திரும்பிக்கொண்டிருந்த போது பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பல் வழிமறித்துத் தாக்கி கலைஞர்களைப் படுகாயப்படுத்தியது.


உ.பி.மாநில பிஜேபி மேலவை உறுப்பினரான (எம்.எல்.சி) அஜீத் சிங் என்பவரின் டாடா சுமோ வாகனத்தில் வந்துதான் அந்தக்காவிக் கொலைவெறிக்கும்பல் தாக்குதலைத் தொடுத்தது.


1999 மே நாளன்று கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகே ஆனெகல் என்ற இடத்தில் சமுதாய நாடகக் குழுவினர் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது பெங்களூர் மாநகராட்சி பா.ஜ.க. உறுப்பினர் எம்.நாகராஜ் தலைமையில் காவிக் கும்பலால் கலைஞர்கள் தாக்கப்பட்டனர்.


1999 நவம்பரில் இந்தியாவிற்கு வந்த உலகக் கத்தோலிக்க மக்களின் தலைவரும் வாடிகன் நகரின் ஆட்சித் தலைவருமான இரண்டாவது ஜான்பால் எப்படியெல்லாம் அவமதிக்கப்பட்டார்?


இந்தியாவில் புகழ்பெற்ற நடிகரான திலீப்குமார் - பாகிஸ்தான் அரசிடம் பெற்ற விருதைத் திருப்பித் தர வேண்டும் என்று கோரி 1999 ஜூலை 13 ஆம் நாள் டில்லியில் லி-மெரிடின் ஓட்டலுக்கு முன் சிவசேனையினர் திலீப்குமாரின் கொடும்பாவியைக் கொளுத்தி ஆட்டம் போட்டனர்.


இவ்வளவுக்கும் வாஜ்பேயி, அத்வானி ஆகியோரின் ஆசிர்வாதம் அனுமதியுடன் தான் அந்த விருதை திலீப்குமார் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதிகாரங்களைக் கையில் வைத்துக்கொண்டிருந்த அந்த பெரிய மனிதர்கள் இந்தியத் தலைநகரிலே நடைபெற்ற இந்த கேடுகெட்ட செயலைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை - என்ன வெட்கக்கேடு!


அவுட்லுக் இதழின் பிரபலமான கார்ட்டூனிஸ்ட் இர்பான் ஹூசேன். வகுப்புவாத வெறித்தனங்களை தமக்கே உரித்தான நுட்பத்தோடு கார்ட்டூன் மூலம் தோலுரித்துக் காட்டக்கூடியவர் - பொறுக்குமா காட்டு மனிதர்களுக்கு?
குரூரமான முறையில் அந்த மாபெரும் ஓவியனைக் கொலை செய்து சாக்குப்பைக்குள் போட்டுத் தைத்து சாக்கடைக்குள் உருட்டி விட்டுவிட்டனர். பாகிஸ்தான் இந்தியாவோடு கிரிக்கெட் விளையாடக் கூடாது என்பதற்காக ஆடு களத்தைச் சேதப்படுத்தியவர்கள் யார்?

ஏன் வெளியில் போவானேன்? சென்னையில் பாரதியார் நினைவிடத்தில் என்ன நடந்தது?


1998 செப்டம்பர் 13 அன்று சென்னை- திருவல்லிக்கேணியில் உள்ள கவிஞன் பாரதி நினைவு இல்லத்தில் கவிதைத் திருவிழா நடத்தப்பட்டபொழுது இந்து வெறியர்கள் தடிகளுடன் உள்ளே புகுந்த கவிஞர்களைத் தாக்கி தந்தை பெரியார், லெனின், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் நூல்களைக் கிழித்து எறியவில்லையா?


பாசிசத்தின் தகப்பன் முசோலினி இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்த இந்துத்துவா கூட்டத்திடம் பிச்சையல்லவா வாங்கி இருப்பான்!

வந்தே மாதரம் பாடல் உ.பி.அரசால் கட்டாயப்படுத்தப்பட்டது. சரஸ்வதி வந்தனாவும் அங்குக் கட்டாயம். இந்த நிலையில் இஸ்லாமிய மார்க்க அறிஞர் அபுல் ஹசன் அலி நத்வி அந்தப் பாடல்கள் பாடப்படும் பள்ளிகளுக்கு இஸ்லாமியப் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என்று கூறினார்.
அதன் தொடர்ச்சியாக என்ன நடந்தது? அந்த மார்க்க அறிஞன் வீட்டில் திடுதிப்பென்று நுழைந்து உ.பி.மாநிலக் காவல் துறை சோதனையிட்டு அவமானப்படுத்தியது (23.11.1998)


மற்ற மற்ற இடங்களில் நடந்ததெல்லாம் சங்பரிவார்க் கும்பலின் ரவுடிசம் என்றால் இங்கு ஒரு அரசே தன் கருத்துக்கு ஆகாதாவர்களை அச்சுறுத்துவது என்னும் பாசிச முறையைக் கையாண்டது!


தீபாமேத்தாவின் வாட்டர் திரைப்படப் படப்பிடிப்பின் கெதி என்ன என்று யாருக்குத் தெரியாது? அரசு அனுமதி பெற்றிருந்தும் ஒரு செயல் தடை செய்யப்படுகிறது என்றால், அரசுக்கும் மிஞ்சிய அராஜகக்கும்பல் ஒன்று இங்கு ஆட்டம் போடுகிறது, அதன் கட்டுப்பாட்டில் அரசும் இருக்கிறது என்றுதானே பொருள்?

புதிய தலைமுறை தாக்கப்பட்டதும் இந்த தொடர்ச்சியில் தான்.

.............

சங்கராச்சாரியாரின் பார்வையில் தாலி
 
               ---------------------மின்சாரம் அவர்கள் 14-03-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/2011-07-25-07-58-59/97852-2015-03-14-10-01-15.html#ixzz3UMa05uCy

46 comments:

தமிழ் ஓவியா said...

இதுதான் திருப்பதி?

திருப்பதி ஏழுமலை யான் என்றால் இந்தியா விலேயே பெரிய கல்லு முதலாளி அவர்தான். எத் தனை வேளை விருந்து படைத்தால் தான் என்ன பயன்? அவரா தின்று கொழுக்கப் போகிறார்? அவரை வைத்து அரை டன் அரை டன் கன பாடிகள் வைத்ததுதான் சட்டம்.

புனித நகரம் என்று பினாத்துகிறார்களே - அந்தத் திருப்பதியின் யோக்கியாம்சம் தான் என்ன?

இதோ சரக்கு 1

புனித நகரமாக கருதப் படும் திருப்பதி, சித்தூர் மாவட்டத்தில் மது விற் பனையில் முதலிடமாக உள்ளது என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 415 மதுக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் மட்டும் ஆயி ரத்து 188 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற் றுள்ளது. இதில் சித்தூர் மாவட்டத்தில் முதலிடம் வகிப்பது புனித நகரமான திருப்பதி; அங்கு கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.192 கோடிக்கு விற்பனையானது. சிறீகாளஹஸ்தியில் 2013ஆம் ஆண்டு ரூ.104 கோடிக்கு விற்பனையானது. 2014ஆம் ஆண்டு ரூ.103 கோடிக்கு விற்பனையானது. (தினகரன் 26.2.2015)

இதோ சரக்கு 11

திருமலை - திருப்பதி தேவஸ்தானம் வெளியிடும் காலண்டர், பஞ்சாங்கத்தை எனது உறவினர் வீட்டில் ரெகுலராக வாங்குவார்கள். அதே போல், அவர்கள் வாங்கி யிருந்த பானு ஆண் டிற்கான பஞ்சாங்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் 130ஆம் பக்கத்தில் மனை வாங்க - விற்க - வாகனம் வாங்க - விற்க - பயணம் செய்ய என பல நல்ல காரி யங்களுக்கு உகந்த நாள்கள் கச்சிதமாகக் குறிப்பிடப்பட் டுள்ளன. ஆனால் அந்தப் பக்கத்தின் கடைசியில் அச்சா கியிருந்த விஷயம்தான் அதிர்ச்சியைத் தந்தது. அதாவது மதுபானம் அருந்த உகந்த நாள்கள் என்ற தலைப்பில் சில நல்ல நாள்களும் தெரிவிக்கப்பட் டுள்ளன. மதிப்பிற்குரிய திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள பஞ்சாங்கத் தில், நமது பண்பாட்டுக்குப் பொருத்தமற்ற இப்படிப்பட்ட செய்தியை வெளியிடப்பட்டி ருப்பது மிகுந்த வருத்தத்தை யும், வேதனையையும் அளித் தது. இந்தத் தவறைத் திருத்த தேவஸ்தான நிருவாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும் அடுத்த வருட புதிய பஞ்சாங்கத்தில் இது போன்ற நல்ல விஷயங்கள் இடம் பெறாமல் கவனிக்க வேண்டும். ஏ மண்டி, பாக சூஸ்துரா?

-எஸ். வத்சலா, கெங்காபுரம்

(குமுதம் ரிப்போர்ட்டர் 6.7.2003 பக்.21)

இதோ சரக்கு 111

திருப்பதியில் 20 முதல் 25 செக்ஸ் மய்யங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபச்சார அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் திருப்பதியில் 7,604 ஆண்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. 268 பேருக்கு எச். அய்.வி. கிருமி தொற்றியிருப் பது தெரிய வந்துள்ளது - ஆந்திர எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி சந்திரவதன் திருப்பதியில் செய்தி யாளர்களிடம் கூறினார்.
(தினத்தந்தி 21.6.2008 பக்.17)

புனித நகரத்தின் யோக் கியதைக்கான சரக்குகள், அத்தாட்சிகள் போதுமா? திருப்பதி ஏழுமலையான் ஊரில் ஒழுக்கத்திற்கோ கோவிந்தா! பண்பாட்டுக்கோ பட்டை நாமம்! - மயிலாடன்

குறிப்பு: கோயில்கள் விபச்சார விடுதிகள்!

- காந்தி மகான்

Read more: http://viduthalai.in/e-paper/97846.html#ixzz3UMisEQgI

தமிழ் ஓவியா said...

மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதாசாரத்தை சரிப்படுத்தினால் ஆசிரியர்களுக்கு அதிக வேலை கிடைக்கும்


கல்விக்குச் செலவு செய்வது என்பது சோசியல் இன்வெஸ்ட்மென்ட்

மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதாசாரத்தை சரிப்படுத்தினால் ஆசிரியர்களுக்கு அதிக வேலை கிடைக்கும்

கல்விக்கு அரசு செலவு செய்வதை செலவினமாகப் பார்க்கக் கூடாது; அது ஒரு சோசியல் இன்வெஸ்ட்மென்ட் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மதுரையில் நேற்று (13.3.2015) செய்தியாளர்களிடையே அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களைச் சந்திக்கிறேன். திராவிடர் கழகத்தின் சார்பில் அண்மையில் கடந்த ஒன்பது மாதங்களாக பொதுத்தேர்தலுக்குப்பிறகு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தினால், ஆங்காங்கு மதவாத நிகழ்வுகள், அச்சுறுத்தல்கள் பல்வேறு ரூபத்தில் தலைதூக்கிக் கொண்டுவிட்டது.

ஜாதி வெறியை பலர் தூண்டி அதன்மூலமாக லாபம் அடையப் பார்ப்பது, ஜாதி மறுப்புத் திருமணங் களுக்கு எதிராக சில இடங்களில் ஜாதிவெறியைத் தூண்டிய கொலைகள் அசிங்கமான ஒரு செயலோடு கவுரவக் கொலை என்ற பெயரோடு நடைபெறுகிறது. திராவிட சமுதாயத்துக்கு ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவோடு திராவிடர் கழகம் அதனுடைய பொதுக்குழுவிலே, கடந்த டிசம்பர் ஏழாம் தேதி சேலத்திலே, 2000 திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாடுகளை தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள், பட்டி தொட்டி எல்லாம் என்று முடிவெடுத்து நடத்த வேண்டும் டிசம்பர் 24ஆம் தேதி தந்தைபெரியார் அவர்களுடைய நினைவு நாளையொட்டி ஆரம்பித்தோம்.

இந்த எண்பது நாள்களிலே, இதுவரை 110 மாநாடு கள் நடைபெறக்கூடிய அளவுக்கு தெளிவாக பிரச் சாரம் பல்வேறு பகுதிகளிலே கன்னியாகுமரி தொடங்கி திருத்தணிவரையிலே பல பகுதிகளிலே வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

நேற்றுகூட நான் திருச்செந்தூரிலே நடைபெற்ற மாநாட்டிலே கலந்துகொள்வதற்காகத்தான் திருச் செந்தூர் வருகைதந்துள்ளேன். இன்றைக்கு மாலை சிங்கம்புணரி திராவிட விழிப்புணர்வு மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த வாய்ப்பிலே உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கருத்துச் சுதந்திரம் வடபுலத்தில் கோட்சேவுக்கு சிலை வைப்பது, கோட்சேவைப்பற்றிப்புகழ்ந்து, காந்தியைக் கொன்றவர்களைப் புகழ்ந்து அவரைப் பற்றி திரைப்படம் எடுப்பது, காந்திக்குப்பதிலாக நேரு கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று வெளிப் படையாகவே பேசுவது, பாஜகவுக்குத் தேர்தலிலே வாக்களிக்காதவர்கள் எல்லாம் ராமனுக்குப் பிறந்தவர்கள் அல்ல. அவர்கள் வேறு யாருக்கோ பிறந்தவர்கள் என்று தரக்குறைவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்வது, அதுவும் மத்திய அமைச்சர்களே செய்வது போன்ற ஒரு கொடுமையான நிகழ்வு தொடர் நிகழ்ச்சிகளாக நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

பெரியார் மண்ணில் அச்சுறுத்தல்களா?

பெரியார் மண்ணாக, அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் அவைகளெல்லாம் இன்றைக்கு தொற்றுநோய்போன்று வராமல் தடுப்பதற்கு, நாம் பல முயற்சிகள் செய்தும்கூட, அண்மையிலே சென்னை யிலே சில அச்சுறுத்தல்கள் ஊடகங்களுக்கு வந்திருக் கின்றன. குறிப்பாக எழுத்தாளர்கள் இருவர் தாக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட கருத்தை அவர்கள் சொன் னார்கள் என்பதற்காக. இன்னொரு பக்கத்திலே, ஒரு ஊடகம் புதிய தலைமுறை அந்த ஊடகம் வந்து மிகப்பெரிய அளவிலே அவர்களுடைய நிலையத்தில் தாலியைப்பற்றி ஒரு விவாதம் வைத்திருந் தார்கள் என்பதற்காக இந்துத்துவ சக்திகள் வேண்டுமென்றே அந்த அலுவலகப் பகுதியிலே பணியாற்றுபவர்களிடையே முரட்டுத்தனமாகத் தாக்குவது, ஒரு வாரத்துக்கு முன்பாக நடந்தது. அதன்பின் டிபன் பாக்ஸ் குண்டு வெடித்து அதிலே ஆறேழுபேர் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். மிகப்பெரிய முழக்கம்போட்டு அத்தனைபேரின் கொதித்த கருத்துகள் வந்ததற்குப்பிறகு வந்துள்ளது. இது நல்ல ஆரோக்கியமான போக்கு அல்ல. இது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஊடகத்துக்கு எதி ரானது அல்ல. நாங்ககூட மாறுபடுகிறோம். அது வேற விஷயம்.

ஆனால், ஒருவர் மாறுபடலாமே தவிர, அதற்காக அவர்களைத் தாக்குவது அல்லது அவர்களை அச்சுறுத்துவது, அந்தக் கருத்தே வெளியே வரக்கூடாது என்று நினைப்பது ஜனநாயக நாட்டில் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாத ஒன்று. அது ஒரு பாசிச போக்கு. எனவே, இந்த பாசிசப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையெல் லாம் உள்ளடக்கித்தான் திராவிடர் விழிப் புணர்வு மாநாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்குக் குறிப்பாக இன்னொரு செய்தி என்னவென்றால், தந்தை பெரியா ரும், திராவிட இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் தோன்றியபின்னர்தான், உயர் ஜாதியினருக்குமட்டுமே ஏகபோகமாக இருந்த கல்வி என்பது எல்லா மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கியது திராவிடர் இயக்கம், காமராசருடைய ஆட்சி, பிறகு தொடர்ந்து திராவிடர் இயக்கங்கள் வந்தநிலையிலே.

ஆச்சாரியார் ஆட்சியில் குலக் கல்வி

ஆச்சாரியார் ஆட்சிக்கு வந்த நேரத் திலே குலக்கல்வித்திட்டம் என்ற ஒன்றை கொண்டுவந்தார். அரைநேரம்மட்டும் படிக்க வேண்டும். அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற குலக்கல்வித் திட்டம் என்று பெயர். இது 1952-1953ஆம் ஆண்டிலே வந்தது. ஏறத்தாழ 60, 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனாலே இளையதலைமுறைக்கு அந்தத் திட்டத்தின் கொடுமை என்ன என்று தெரியாது. அப்போது கிராமத்து பள்ளிக்கூடங்கள் ரொம்பக் குறைவு. ராஜகோபாலாச்சாரியார் 1952_1953ஆம் ஆண்டுகளில் 6000 பள்ளிகளை மூடினார். அதையெல்லாம் அவர் செய்த காரணத்தினால்தான், காம ராசர் ஆட்சிக்குவந்து குலக்கல்வித்திட் டத்தை நீக்கி மூடிய பள்ளிகளையெல்லாம் திறந்தார்கள்.

பிறகு ஏராளமான கல்வி உரிமைகள் வந்து, அரசியல் சட்டத்திலே பத்து ஆண்டு காலத்துக்கு உள்ளாக கட்டாயமான ஆரம்பக் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்ற உரிமையைக்கூட இதுவரையிலே நடைமுறைப்படுத்தாமல் இருந்து, கருத் தோட்டம் வேகமாக ஆனபிற்பாடு, சென்ற சில ஆண்டுகளுக்குமுன்தான் அய்க்கிய முற்போக்குக்கூட்டணி அரசில் கட்டாயக் கல்வி உரிமை என்பது அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, அங்கே கொடுக்கப்பட்டது.

ஆயிரம் பள்ளிகளை இழுத்து மூடுவதா!?

இப்போது தமிழ்நாட்டிலே இன்றைக்கு வந்துள்ள செய்தியாளர்கள்மூலமாக, உங்கள் மூலமாக தெரிவிப்பது என்னவென்றால், வேதனையான ஒரு செய்தி வந்திருக்கிறது. என்ன என்று சொன்னால், ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்களை மூடக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பள்ளியைத் திறப்பதற்குப் பதிலாக பள்ளியை மூடுகின்ற ஒரு விழாவை அதிமுக ஆட்சியில் நடைபெறுகிறது என்று சொல்லக்கூடியது. அந்த சூழலை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...


எனவே, இதை உங்கள்மூலமாக இது தமிழக அரசுக்கு ஓர் அவலமான ஒரு நிலை.

இந்த செய்தி சரியான செய்தியாக, உண்மையான செய்தியாக இருந்தால், இதை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வரவேண்டும். யார் பதவியிலே முதல மைச்சராக இருக்கிறார் என்பது முக்கிய மல்ல. இன்றைக்கும் திராவிடர் இயக்கம் என்ற பெயர் வைத்துக்கொண்டுதான் ஓர் ஆட்சி நடக்கிறது. அப்படிப்பட்ட ஓர் ஆட்சியிலே திராவிட இயக்கத்தினுடைய அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான அனைவருக்கும் அனைத்தும் கல்வி என்ற முறையில் முற்றிலும் மாறாக, 25000 பள்ளிக் கூடங்கள் ஆரம்ப, துவக்கப்பள்ளிகள் இருக்கின்ற இடத்திலே, மிகப்பெரிய அளவுக்கு ஆயிரம் பள்ளிகளை மூடுவது, அதன்மூலமாக ஆசிரியர்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்புவது, ஏற்கெனவே ஆசிரி யர் பயிற்சிப்பள்ளிகள் எல்லாம் மூடக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

காரணம் அசாங்கத்தினுடைய தவறான கல்விக் கொள்கையால்தான். தமிழக அரசினுடைய கல்விக் கொள்கையால்தான். என்ன என்று சொன்னால், மத்திய அரசைப் பொறுத்தவரையில் அவர்கள் பொதுப் பட்டியலிலே கல்வியை வைத்துக்கொண்டு சமஸ்கிருதத்தைப் புகுத்த வேண்டும், இந்தியைப் புகுத்தவேண்டும் என்று ஒரு பக்கத்திலே அவர்களின் அந்த முயற்சி.

மாநில அரசைப்பொறுத்தவரையிலே, இவர்கள் யாருக்கோ வந்த விருந்து என்று கருதிக்கொண்டு, எதையோ நினைத்துக் கொண்டு பள்ளிக்கூடங்களை மூடக்கூடிய ஓர் அவலமும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுதான் ரொம்ப ஆபத்தானது. திராவிடர் கழகம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் போக்கைக் கைவிடாவிட்டால், மிகப்பெரிய கிளர்ச்சியைத் தொடங்கிடும்.

ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்தால் பல சிறைச்சாலைகளை மூடுவதற்கு சமம். அப்படி என்றால் என்ன அர்த்தம்? பள்ளிக்கூடங் களை மூடினார்கள் எள்றால் என்ன செய்யப் போகிறார்கள்? சிறைச்சாலைகளைத் திறக் கிறார்கள் என்று அதற்கு அர்த்தம். இப்பவே இளைஞர்கள் திசைத் தடுமாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

கல்விக்குச் செலவு என்பது என்ன?

அந்த இரண்டு ஆசிரியர்களில்கூட, ஒருவர் போய்விட்டால் இன்னொருவர் மட்டுமே இருக்கும் நிலை. 21 பாடத் திட்டங்களைக் கொடுக்க வேண்டும். 21 பாடத்திட்டங்களை இரண்டு ஆசிரியர்கள் எவ்வளவு செய்வார்கள்? எனவே, ஆசிரி யர்கள் நியமனம் அதிகமாக வேண்டும். அப்ப பணச்செலவு, நிதிச் செலவு என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால், கல்விக்கு செலவாகிற நிதி இருக்கிறதே அது சோசியல் இன்வெஸ்ட்மெண்ட் சமுதாய முதலீடு. அதைச் செய்தால்தான் பிள்ளைகள் எதிர் காலத்துக்கு இளைஞர்கள் திசைத் தடு மாறாமல் கல்வி அறிவைப்பெறுவார்கள்.

இன்றைக்கு தமிழ்நாடு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று இருக்கிறது. எம்ஜிஆர் காலத்தில்கூட, காமராசர் காலத்தில், நீதிக்கட்சிக் காலத்தில், தியாகராயர் காலத்தில் மாநகராட்சியில் மட்டும் மதிய உணவு போட் டார்கள்.

அப்புறம் அது காமராசர் காலத்தில் பகல் உணவுத் திட்டமாயிற்று. பிறகு அது தொடர்ந்தது. அதற்குப்பிறகு எம்ஜிஆர் காலத்தில் சத்துணவுத் திட்டம். இப்போது எந்த ஆட்சி வந்தாலும் அந்தத்திட்டத்தை எடுக்கிறதில்லை. அதற்குப்பதிலாக முட் டையைக் கொடுக்கிறேன், வாழைப்பழம் கொடுக்கிறேன் என்று கூடக்கூட ஆக்கி யிருக்கிறார்களே தவிர குறைத்துவிட வில்லை. இது ஒரு பக்கத்திலே. இன்னொரு பக்கத்திலே பள்ளிக்கூடத்தையே மூடு கிறேன், சத்துணவுக்கூடத்துக்கே ஆபத்து என்று சொல்லக்கூடிய அளவில் முரண்பட்ட போக்கு இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப் புள்ளியும், வழியும் காண வேண்டும்.

ரூ.4,400 கோடியை சரண் செய்வதா?

இன்றைக்கு இன்னொரு செய்தியும் வந்திருக்கிறது.அதுவும் ரொம்ப கவலை யளிக்கக்கூடிய செய்தியாகும். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ரூ.4,400கோடி கல்வித் துறைக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், அதை இவர்கள் செயல்படுத்தாமல், செலவழிக்காமல் திருப்பிக் கொடுத்து, போயிருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அதிகாரிகளே குறை சொல்லியிருக்கிறார்கள் என்று ஒரு செய்தி வந்திருக்கிறது. இதுவும் வேதனை அளிக்கக்கூடிய செய்தி.

தமிழ் ஓவியா said...

இவைகளுக்கு எல்லாம் சரியான விளக்கம் அளிப்பது, இவைகளில் கவனம் செலுத்தவேண்டியது இப்போதிருக்கிற அரசாங்கத்தின் பொறுப்பு. யார் முதல் அமைச்சர் என்பது முக்கியமல்ல.

அரசாங்கம் இப்படி நடந்துகொண்டிருக்கிறது. அரசாங் கம் என்பது ஒரு தொடர்ச்சி. ஆகவே, அந்த நிலையிலே மக்களுடைய கல்வி பாதிக் கப்படக்கூடாது.

அதிலும் குறிப்பாக இளையர்களுடைய கல்வி, ஆரம்பப்பள்ளிக் கூடம்தான் ரொம்ப முக்கியம். எனவே அதிலே தெளிவாக இருக்க வேண்டும். பல இடங்களிலே ஆசிரியர்ப் பயிற்சி பள்ளிகளை இழுத்து மூடக்கூடிய அபாயம் இருக்கிறது. காரணம் ஆசிரியர்களுக்கு டிமாண்ட் இல்லை என்பதுதான். முதலில் டிமாண்ட் இருந்தபோது இஷ்டத்துக்கு கொடுத்தார்கள். ஏற்கெனவே பாஸ் பண்ண ஆசிரியர்கள் எல்லாம் வெவ்வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள்.

ஆசிரியர் பயிற்சி பெற்றோரின் பரிதாப நிலை!

சாலைப்பணியாளர்கள் எப்படி தெரு வோரத்தில் நின்றார்களோ, அதேமாதிரி ஆசிரியர்களும் இன்றைக்கு ஆசிரியர் பயிற்சி முடித்தும் அவர்களுக்கு பயன் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கும் தீர்வு காண முடியும். மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தைக் குறைத்து ஏராளமான ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும்.

ஒப்பந்த அளவில் நியமனம் செய் தார்கள் அதுகூட இல்லாத அளவுக்கு இன் றைக்கு மூடுகிறார்கள் என்று சொன்னால், பள்ளிமூடுவிழா ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கக்கூடாது.

தமிழ் ஓவியா said...

செய்தியாளர் கேள்வி: பள்ளி மட்டுமல்லாமல், பாலிடெக்னிக் மற்றம் உயர்கல்வியில் கூட ஆசிரியர்கள் நியமனம் இல்லையே...?

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் பதில்: அண்மையில் சென்ற ஆட்சியின் ஒரு தொடர்ச்சியாக, பாலிடெக்னிக் கல்வியில் நல்ல ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. என்னவென்றால், சமுதாய பாலிடெக்னிக் என்கிற மேலை நாட்டுக் கருத்துகள் கம்யூனிட்டி பாலிடெக் னிக்குகள் தஞ்சாவூரில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் 35 ஆண்டுகளாக அரிய சாதனைகள் செய்து தமிழ்நாட்டில் சிறந்த பாலிடெக்னிக் என்று அரசாங்கத்தாலேயும், கனடா நாட்டாலேயும் உலக அளவில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எங்களை கனடாவில் ஒட்டாவில் அழைத்து சிறப்பு செய்தார்கள்.

தமிழ் ஓவியா said...

ஆக பாலிடெக்னிக் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அதிலே மத்திய, மாநில அரசுகள் திட்டங்களைத் தெளிவு படுத்திக்கொடுத்தால், கம்யூனிட்டி பாலிடெக் னிக்குகளில் எப்படி என்றால், யார் வேண்டு மானாலும், இடைநிறுத்தம் செய்தவர்கள் (ட்ராப்-அவுட்) எப்போது வேண்டு மானாலும் கல்வி பயில வரலாம். 200 மணி நேரங்கள்தான் அவர்களுக்கு வகுப்புகள். இன்னின்ன பாடத்திட்டங்கள், கட்டணங்கள் என்று அவர்களுக்கு எதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் சேரலாம். 40 வயது, 50 வயதுள்ளவர்கள் எல்லாம் மாண வர்களாக சேருகிறார்கள். வேலையில் இருப்பார்கள். வாரத்தில் சனி,ஞாயிறுகளில் வகுப்பு, மாலை நேரத்தில் வகுப்பு குறிப் பிட்ட நேரம் என்று ரொம்ப அழகாக திட் டங்களை செயல்படுத்துகிறார்கள்.

தொழிற்சாலைகளை வளர்க்கவேண்டும் என்று நினைக்கிறபோது, மேலை நாட்டுக்காரர்கள் செய்வதுபோன்று ஒரு கான்செப்ட் செய்யவேண்டும். இண்டஸ்ட்ரி இன்ஸ்டிடியூசன் எஜூகேட் என்பதுபோல் ஒரு தொழிற்சாலை இருந்தால், இந்த ஊரில் ஒரு மோட்டார் தொழிற்சாலை இருக்கிறது என்றால், அல்லது ஒரு சிமெண்ட் தொழிற் சாலை இருக்கிறது என்றால், அல்லது வேறு ஒரு தொழிற்சாலை என்றால் அந்த தொழிற் சாலைக்கு உண்டான படிப்பு அந்த மாவட் டத்தில் இருக்கின்ற பாலிடெக்னிக்குகள் எத்தனை இருக்கிறது என்று பார்த்து, அதற்கு வேண்டிய டெக்னீசியன்கள், டிப்ளமா முடித்தவர்கள் எவ்வளவுபேர் வேண்டும் என்று 5 ஆண்டுகளுக்கு கணக்கெடுத்து, அந்தப்பாடத்தை மய்யமாக வைத்து, அதற்கு அரசு நிதிகூட தேவையில்லை.

மற்ற நாடுகளில் பல்கலைக் கழகங்கள்

தைவானில் உள்ள அனைத்து பல்கலைக் கழகத்துக்கும், அங்கிருக்கிற லிங்குவா பல்கலைக் கழகத்துக்கும் புரிந்துணர்வு உள்ளது. ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. 200 பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ள சிறிய நாடு, இலங்கையைவிட சிறிய நாடு. அந்த நாட்டில் வளர்ச்சி பயங்கரம். சீனாவுடன், ஜப்பானுடன் எலெக்ட்ரானிக்ஸ் தொழிலில் போட்டி போடும்நிலை உள்ளது.

நம்முடைய பாலிடெக்னிக் அளவில் அவர்கள் பல்கலைக்கழகம் உள்ளது. அடித்தளம் என்னவென்றால், அங்கிருந்த லேப் எல்லாவற்றையும் காட்டினார்கள். அந்த ஆய்வகங்களுக்குரிய செலவினங்கள் அத்தனையும் அங்குள்ள தொழிற்சாலை களுடையது. அவர்களே கட்டிக்கொடுக் கிறார்கள். அவர்களே ஆய்வக பொருட் களை வழங்குகிறார்கள். அவர்களே நிர் வாகம் செய்கிறார்கள். அவர்களுக்கு தேவைப்படுபவர்களை தயார்படுத்திக் கொடுக்கவேண்டியது பாலிடெக்னிக்குகள்.

தமிழ் ஓவியா said...


அதுமாதிரி தொழில் அமைப்பு இன்டஸ்ட்ரி இன்ஸ்டிடியூசன் இருக்க வேண்டும். தொழில் அமைப்பும், கல்வி நிறுவனமும் இணைந்து, நீண்ட காலத்துக்கு முன்பாக முதல்முதலில் தமிழ்நாட்டில் அப்படி தொடர்ச்சியாக கனடா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு தொடர்ச் சியாக நாங்கள் அதைச் செய்தோம்.

வருகின்ற நிபுணர்களை நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று அதைச் செய்தோம்.

தமிழ் ஓவியா said...

அதனால் கல்வி நிறுவனங்களுக்கு நிதிப்பற்றாக்குறை வரவே வராது. தொழிற் சாலைகள் வருமான வரி கட்டுவதற்குப் பதிலாக கல்விக்கு செலவழிப்பார்கள்.

அவர்களுக்குத் தேவையான டெக்னீசி யன்கள், டிப்ளமா முடித்தவர்கள் பாலிடெக் னிக்கிலிருந்து சரியாகக் கொடுத்து விடுவார்கள். இப்போது இங்கு ஜீனியஸ் இன்டஸ்ட்ரி இருக்கிறது. அவர்களுக்கு என்ன? மோட்டார் கார் தொழில் என்றால், மெக்கானிக்கல் பிராஞ்சில் இருக்கக்கூடிய ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரி ஆட்டோ மொபைல் டிப்ளமா முடித்தவர்களை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். பாலிடெக் னிக் மூட வேண்டிய அவசியமோ ஏற்படாது. இவ்வாறு தமிழர் தலைவர் தெரிவித்தார்.

-----------

ஆசிரியர் - மாணவர்கள் விகிதாச்சாரம் முக்கியம்

இளைஞர்களுக்கு கல்வி என்பது இன்னும் இங்கே 100க்கு 100 கல்வி வந்துவிடவில்லை. இன்னமும் சராசரி எழுதப்படிக்கத் தெரிந்தவர் களுடைய எண்ணிக்கை ஆண்களைப் பொறுத்தவரையில் இப்போதுதான் 70அய் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 7 விழுக்காட்டி லிருந்து 70 விழுக்காடு வந்ததே திராவிட இயக் கத்தால் இந்த வளர்ச்சி. நீதிக்கட்சி காலத்தி லிருந்து, காமராசர் ஆட்சி எல்லாம் உளளடக் கிய ஒரு கூட்டு ஒட்டுமொத்த முயற்சி. எனவே, ஆசிரியர்களை 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்து பத்தாயிரம் பள்ளிகள் இருந்ததை பூராவும் மாற்றி, திடீரென்று 30 மாணவர்கள் என்று ஆக்கினார்கள்.

ஆனால் சட்டப்படி, பலநேரங்களிலே கல்வி அறிவியல் கருத்துப்படி ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் பத்தாயிரம் பள்ளிக்கூடங்களில் இரண்டே ஆசிரியர்கள்தான் இருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/97845.html#ixzz3UMj4JMZB

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் சிறுபான்மையினர் யாரும் கிடையாதாம்!

அனைவரும் இந்துக்களாம்! ஆர்.எஸ்.எஸின் அடாவடித்தனம்!


நாக்பூர், மார்ச் 14_ இந்தியாவில் சிறுபான் மையினர் என்று யாரும் கிடையாது, அனைவரும் இந்துக்களே என்று ஆர். எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் தத் தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். கூட் டம் மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழுவான அகில பாரதீய பிரதிநிதி சபாவின் (ஏ.பி.பி.எஸ்) மூன்று நாள் கூட்டம் நேற்று தொடங் கியது. நாடு முழுவதும் இருந்து 1,600க்கும் மேற் பட்ட உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தின் இடையே ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைவரும் இந்துக் களே இந்தியாவில் சிறு பான்மையினர் என்று யாருமே கிடையாது. இங்கு கலாச்சார அடிப் படையிலும், தேசிய ரீதி யிலும், டி.என்.ஏ. அடிப் படையிலும் அனைவரும் இந்துக்களே. நாங்கள் யாரையும் சிறுபான்மை யினராக கருதவில்லை. இந்தியாவில் சிறுபான்மை கருத்து இருக்கக்கூடாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்களே என்று மோகன் பகவத் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) 20 தடவை சொல்லி இருக் கிறார். இதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, இல்லையோ, ஆனால் கலாச்சார, தேசிய மற்றும் டி.என்.ஏ. அடிப்படையில் அனைவரும் சமமான வர்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து கூறியதாவது:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தபின்னர், அந்த மசோதா மோச மானதாக இல்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந் தஸ்து அளிக்கும் ஷரத்து 370 மீதான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாட் டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.

எச்சரிக்கை

இந்தியாவில் நாள் தோறும் 5000 குழந் தைகள் புகையி லைக்கு அடிமையா கின்றனராம்.

பெற் றோர்களே, ஆசிரியர்களே, கவனியுங்கள்! கவனியுங்கள்!!

Read more: http://viduthalai.in/e-paper/97847.html#ixzz3UMjpdrFG

தமிழ் ஓவியா said...

பள்ளிகளை மூடினால், அரசை மூடி விடுவார்கள் - எச்சரிக்கை!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்த தமிழ்நாடு அரசின் கல்வி தொடர்பான தகவல்கள் மிகவும் முக்கியமானவை.

கேள்வி: தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறதே?

தமிழர் தலைவர் பதில்: தமிழ்நாட்டில் 25 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அதில் 1000 பள்ளிகள் மூடப்படுவதாக செய்திகள் வருகின்றன. அங்கு பணியாற்றும் ஆசிரியர்களையும் வீட்டுக்கு அனுப்ப உள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் நூற்றுக்கு நூறு விழுக்காடு மாணவர்கள் கல்வி பெறவில்லை.

தமிழ்நாடு அரசு அப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தந்தை பெரியார் உழைப்பினாலும், காமராசர், நீதிக்கட்சி, திராவிட இயக்கங்கள் உழைப்பினாலும் ஏராளமாக கல்வி நிறுவனங்கள் உருவாயின. தமிழ்நாட்டில் 1000 பள்ளிகளை மூடினால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும்

கேள்வி: மத்திய அரசு நிதி ரூ.4,400 கோடியை தமிழ்நாடு அரசு திருப்பி அனுப்பியது குறித்து...?

தமிழர் தலைவர் பதில்: இதுபோன்ற செயல்கள் தொடரக்கூடாது. தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி, அதற்கான ஆவன செய்ய வேண்டும். இளைஞர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது. பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் ஆட்சியாக இது இருக்கக்கூடாது என்று பேட்டியில் கூறியுள்ளார்.

சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது பார்ப்பனர்கள் மனுதர்மம்! தமிழ் மாநிலத்திற்கு இரண்டு முறை முதல் அமைச்சராக வந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இரண்டு முறையும் அவர் செய்தது பள்ளிகளை இழுத்து மூடியதுதான்.

1937இல் வந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார்; அதற்கு அவர் சொன்ன காரணம் விசித்திர மானது; மது விலக்கை அமல்படுத்தியதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய பள்ளிகளை மூட நேர்ந்தது என்று காரணம் கூறினார்.

1937இல் இருந்த பள்ளிகளே எண்ணிக்கையில் மிகவும் குறைவு. அந்த நிலையில் 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடியது எத்தகைய கொடுமை!

தமிழ் ஓவியா said...


1952இல் சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சராக மீண்டும் வந்தபோதும் 6000 பள்ளிகளை இழுத்து மூடியதோடு நின்றாரா?

மீதி பள்ளிகளில் அரை நேரம் மட்டும்தான் பள்ளிக்கூடம், பிற்பகலில் அப்பன் செய்யும் தொழிலை பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

வெகுண்டெழுந்த புயலாக வெடித்தெழுந்தார் தந்தை பெரியார். தமிழ்நாட்டு மக்கள் கடசிகள் பேதமின்றி தந்தை பெரியார் தலைமையில் அணி திரண்டனர். முதல் அமைச்சர் ஆச்சாரியாரின் கல்வித் திட்டம் என்பது குலக் கல்வித் திட்டம் - பார்ப்பனர்களின் வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும்படி எடுத்து விளக்கினார். தமிழகம் பொங்கி எழுந்த எதிர்ப்பு வெள்ளத்தில் முதல் அமைச்சர் ராஜாஜி மூழ்கி, பதவியை விட்டே விலகி ஓடினார் என்பது வரலாறு.

அந்த இடத்தில் காமராஜ் அவர்கள் அமர்ந்து ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை ரத்து செய்ததோடு அல்லாமல், ஆச்சாரியார் மூடிய பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு, மேலும் 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார் - கல்விப் புரட்சியே செய்தார் கல்வி வள்ளல்.

ஏழை எளிய மக்களின் கல்விக் கண்களைத் திறந்தவர் - காமராசர் என்றெல்லாம் தந்தை பெரியார் பாராட்டி தமிழர்கள் மத்தியில் காமராசரை மிக உயர்ந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்தினார்.

கல்விக் கூடங்களில் கடவுள் வாழ்த்து வேண்டாம்; காமராசர் வாழ்த்துப் பாடுங்கள் என்றுகூட தந்தை பெரியார் சொன்னதுண்டு.

இந்த வரலாற்றை எல்லாம் இன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசு உணர்ந்திருக்குமேயானால், கல்வியில் கை வைக்கும் ஒரு வேலையில் இறங்குமா? கல்வியில் கை வைத்தால் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை அ.இ.அ.தி.மு.க. அரசு இப்பொழுது உணராவிட்டாலும் 2016 தேர்தல் முடிவில் கண்டிப்பாகவே தெரிந்து கொள்ளும்.

புதிய கல்விக் கூடங்களைக் கட்டவும் ஏற்கெனவே பழுதுபட்ட பள்ளிகளைத் சீர்படுத்தவும் மத்திய அரசால் அளிக்கப்பட்ட 4400 கோடி ரூபாயைச் செலவு செய்யாமல் சரண் செய்து விட்டது அ.இ.அ.தி.மு.க. என்றால் இந்தக் கொடுமையை, பொறுப்பற்ற தன்மையை, அரசின் செயலற்ற போக்கைத்தான் வெளிப்படுத்தும்.

டில்லியில் நடைபெற்ற கல்வி தொடர்பான கூட்டத் திற்குத் தலைமை வகித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இடைநிலைக் கல்வித்துறை செயலாளர் பிருந்தாசாரும், தமிழ்நாடு அரசின் ஆர்வமற்ற தலைமை யையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒதுக்கப்பட்ட நிதியையும், செலவு செய்து மேலும் நிதி தேவை என்று வலியுறுத்தியிருந்தால் அதற்குப் பெயர்தான் மக்கள் நல அரசு. ஆனால் தமிழ்நாட்டின் நிலை தலைகீழாக அல்லவா இருக்கிறது.

இன்னொரு அதிர்ச்சியான தகவல், ஆயிரம் பள்ளிகளை அ.இ.அ.தி.மு.க. அரசு இழுத்து மூடப் போகிறதாம். இதனை எந்த விலை கொடுத்தும் தமிழ்நாட்டு மக்கள் தடுத்து நிறுத்துவார்கள் என்பதில் அய்யமில்லை.

அந்த நிலை ஏற்பட்டால், மிகப் பெரிய கிளர்ச்சி வெடிக்கும் என்று தமிழர் தலைவர் தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் 100-க்கு நூறு பேர் கல்வியறிவு பெற்றிடவில்லை. அதனை நோக்கி நகர்த்து வதுதான் ஓர் அரசின் அவசிய கடமையாகவும் செயலாக வும் இருக்கமுடியும் - மக்கள் நல அரசு என்பதற்கு அதுதான். (Welfare State) அடையாளமும் ஆகும்.

மாணவர்கள் சேர்க்கைக் குறைவு என்ற காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பள்ளிக்கு வராத பிள்ளைகளை நூற்றுக்கு நூறு கல்விக் கூடங்களுக்கு வருவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இடையில் கல்வியை விட்டு விலகும் (Drop Outs) நிலையை மாற்றி அமைப்பது என்பது போன்ற அதி முக்கியமான பிரச்சினைகளில் தமிழக அரசு கவனம் செலுத்தட்டும். இல்லையேல் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/97841.html#ixzz3UMkR8vQu

தமிழ் ஓவியா said...

வகுப்புரிமை


வகுப்புரிமைக்காகப் பாடுபட்டு மானத்தைக் காப்பாற்றக் கொல் லப்படும் செய்கைக்கும் நாம் தயாராக இருக்கவேண்டும். அப்போது நமது உரிமை காக்கப் படுவதுடன், நல் வாழ்வும் பெற முடியும். மானம் காத்தவருமாவோம்.
(விடுதலை, 13.8.1965)

Read more: http://viduthalai.in/page-2/97840.html#ixzz3UMkaYMnp

தமிழ் ஓவியா said...

முதுமையே, போ போ! முதிர்ச்சியே வா, வா! (4)


(நேற்றும் இன்றும் வந்த கட்டுரைக் கருத்துக்கள் திருமதி கரோலின் ஹான்சன் என்பவரின் கட்டுரை ஒன்றினையொட்டி இணைத்து நமது கருத்துக்கள் எழுதப்படுபவை ஆகும்)

நவீன மருத்துவத்துறையின் கண்டு பிடிப்புகள் நமது ஆயுள் நீடிப்பி னையும், ஆரோக்கியமான நலவாழ்வு வாழ உதவிடும் வகையிலும் பல மருத்துவ மின்னணுவியல் - டிஜிட்டல் யுகத்தில் வெளிவந்து விட்டன!

நமது உடலின் இதயத் துடிப்பு சீராக இல்லாமல், வேறு வகையாக இருப்பின் அதனைக் காட்டிட ஒரு வகையான (Chips) சிப்ஸ் ஒன்றினை காலில் அணியும் ஷூக்களிலோ, அல்லது நெஞ்சுப் பட்டையாக அணியும் டையின் ஒரு கிளிப் போலவே இணைத்து விட்டால், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் (Blood Pressure) முதலியவற்றைக் காட்டி, நமது மருத் துவரின் கணினிக்கு இது தகவல் கொடுத்து விடுமாம்! அவரும் உடனே விரைவார்; அல்லது நாம் அவரிடம் விரைவோம்!

இப்போது அதைவிட ஒருபடி மேலே சென்ற ஒரு செய்தி ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சார்பில் Tim அவர்கள் Apple Watch விரைவில் சந்தைக்கு வருகிறது.

அதுவே ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவை களை மணி பார்த்து கடியாரத்தில் தெரிந்து கொள்வதுபோல் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த வசதிகள் - மருத்துவத்தில் தொழில் நுட்பம் Technology புகுந்ததி னால் ஏற்பட்ட மகத்தான மாறுதல்கள் ஆகும்!

இவைகள் நமது ஆயுளை நீட்டு கின்றன!

4. திட்டமிட்ட அடுத்த கட்ட வாழ்க் கைக்கு நிதி, நேரம், மகிழ்ச்சி, குடும்பத்த வருடன் செலவழிக்க முன்பு தவறிய மைக்கு இப்போது ஈடுகட்டல், பொது அமைப்புகளில் உறுப்பினர் பொதுத் தொண்டராக (Public Volunteer) பணி புரியும் திட்டம் போன்ற பல நிலைகளைத் திட்டமிட்டு வாழ்ந்தால், நாம் நிச்சயம் 100 வயதை எளிதில் எட்டலாம்! அது வித்தையோ விரோதமோ அல்ல!

1950இல் உலக வரலாறு நூறாண்டு கண்ட பெரு மக்கள் 2300 (Centenarians) கொண்டிருந்தது!

இன்று (2015இல்) 40,000 பேர் (நாற்பதாயிரம்) பேர்கள் நூறாண்டு கண்ட பெரு மக்கள் எண்ணிக்கை.

2050 இது ஒரு 10 லட்சத்தைத் தாண்டும் (இன்னும் 35 ஆண்டு கால வளர்ச்சியில் மருத்துவம் எங்கோ போய் நிற்கும் எட்டிப் பிடிக்க முடியாத வளர்ச்சியை நோக்கி!)
எனவே, முதுமை வந்து விட்டதே என்று அலுத்து சலித்துக் கொள்ளாதீர்கள்!

முதிர்ச்சியைப் பெறுகிறோம் என்று துள்ளிக் குதியுங்கள்!

5. சமூக நோய்களிலேயே மிக மோசமான ஒரு நோய் எது என்றால் இந்த ரிட்டயர்மெண்ட் நோய் தான் என்கிறார் கரோலினா ஹென்ஸ்மென்.

ஓய்வு பெறுவதைக் கண்டு ஏன் அஞ்சி நடுங்க வேண்டும்?

சாவைக் கண்டே பகுத்தறிவு உள்ள வர்கள் அஞ்சுவதில்லை. அத்தகையவர் களில் சிலர்கூட இந்த ஓய்வு காலம் - பதவியிலிருந்து விடுபடும் காலம் கண்டு ஏனோ அஞ்சி அஞ்சிச் சாக வேண்டும்?

திட்டமிட்டால், அது நமது சுதந்தரம் மீண்டும் நமக்கு கிடைத்த நாள் என்று பெருமித உணர்வுடன் கூடிய மகிழ்ச்சிப் பெருக்கத்தைப் பெற்று கூத்தாட வேண்டாமா?

மில்டன் எழுதிய இரண்டு நூல்களின் தலைப்பு
Paradise Lost (இழந்த சொர்க்கம்)

Paradise Regained (மீண்ட சொர்க்கம்) சொர்க்கம் இருக்கிறதா, இல்லையா, அது வேறு பிரச்சினை அது வெறும் நம்பிக்கையைப் பொறுத்தது.

அது ஒரு உதாரணத்திற்கு அதைச் சுட்டுகிறேன்; அது மாதிரி, இழந்த சுதந்திரம், மீண்ட சுதந்திரம் என்று ஓய்வு பெறுவோர் எண்ணி மகிழ வேண்டும்.

- சரியான பார்வையோடு பார்த்தால் இந்த ரிட்டயர்மெண்ட் மனோபாவம், பலரை லாயக்கற்ற, ஒதுக்கப்பட்ட குப்பை, கூளம், அருதப்பழசு போன்று தேவையின்றி - ஆக்கி விடுவதால் தான் இந்நிலை - இதைத் தவிர்க்க மேலே (4)ல் சொன்னபடி, பொது சேவை செய்ய திட்டமிடுங்கள் புது உற்சாகம் பிறக்கும்!

6) நமது முதுமையின் அடை யாளமாக முன்னே சுட்டிக் காட்டிய படி, முடியில் சாயம் அடித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், உருவத்தைக் கூட எவ்வளவு பார்க்க சுறுசுறுப்பும், தோற்றப் பொலிவும் கூட்ட முடி யுமோ அவ்வளவு செய்யலாம் (அதற்காக ஒப்பனை நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செல வழிக்க வேண்டும் என்று தவறாக எண்ணி விடாதீர்!

நீண்ட நாளாக தள்ளிப் போட்ட உடல் ரிப்பேர்களை சரி செய்தல், உடல் அறுவை சிகிச்சைகள் அல்லது சில இளமை ததும்பும் திட்டங்களை செய்தல், எல்லாவற்றையும் விட இளையர்களிடம் அதிகம் வாஞ்சை யோடு பழகி, அவர்களது அனுபவங் களையும் கேட்டுச் சுவைத்த, முது மையைக் கீழே தள்ளுதல் எல்லாம் முக்கியம்தான் - இவற்றால் முதுமை போகும்! முதிர்ச்சி தானே வரும்.

(நிறைவு)Read more: http://viduthalai.in/page-2/97842.html#ixzz3UMkkSDDO

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் - காமராசர் இணைந்திருந்தது ஒரு பொற்காலம் - ஈ.வெ.கி.ச.இளங்கோவன்


மதவாதத்தை எதிர்த்து முதல் மேடையை அமைத்த திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறேன்

தந்தை பெரியார் - காமராசர் இணைந்திருந்தது ஒரு பொற்காலம்

ஒன்றிணைந்து மதவாதத்தை விரட்டுவோம் வாரீர்!

கோவை: காந்தியார் நினைவு நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் முழக்கம்

கோவை, மார்ச் 14- மதவாதத்தை எதிர்த்துத் திராவிடர் கழகம் எடுக்கும் செயல்பாட்டுக்கு ஆதரவாக ஒருங் கிணைந்து செயல்படுவோம் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.

30.1.2015 அன்று கோவையில் நடைபெற்ற காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

எனக்கு இன்றைக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின் றது. இந்த நாளில், இவ்வளவு பேர் வந்திருக்கின்றீர்கள் என்பதோடு மட்டுமல்ல, காந்தியை நினைவு கூருகின்ற வகையில், இன்றைக்கு எல்லோரும் குல்லாக்கள் அணிந்து வந்திருக்கின்றீர்கள். விரைவில் தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்துணைப் பேரும் குல்லா அணியக்கூடிய காலம் வரும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

சமுதாயத்தில் மாற்றங்கள் வேண்டும்; ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதற்காக பாடுபடுகின்ற இயக்கம் திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

இன்றைக்கு நாடு போகின்ற போக்கு எப்படி இருக் கின்றது என்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள். அரசியலில் தாங்கள் இல்லை என்று சொன்னாலும், சமுதாயத்தில் மாற்றங்கள் வேண்டும்; ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதற்காக பாடுபடுகின்ற இயக்கம் திராவிடர் கழகம், இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற துன்பத்தையும், பயங்கரத்தையும் யோசித்துப் பார்த்து, அதனால் ஏற்படக் கூடிய விபரீத விளைவுகளை எண்ணி, இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கின்றார்கள். அவர்களை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
திராவிடர் கழகம் என்று சொன்னால், ஒரு மாதிரியாக சொல்வார்கள்; ஆனால், தேசபக்தியில் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம் என்பதை இந்தக் கூட்டத்தைக் கூட்டியதன்மூலம் திராவிடர் கழகத்தினர் காட்டிவிட்டார்கள் என்று சொன்னால், அது மிகையாகாது.

நாட்டின் நடப்புகளைப்பற்றி ஆசிரியர் வீரமணி அவர்கள் மிகத் தெளிவாகப் பேசினார்கள். நான் வரு வதற்கு முன்பு முழக்கமாக முழங்கியிருப்பார். இன்றைக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், அரசியலில் இருப்ப வர்கள் எல்லாம் இன்றைக்கு ஒரே மேடையில் திரண் டிருக்கின்றோம் என்று சொன்னால், எங்களுக்குள் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். எங்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் வேறுபாடு உண்டு; எங்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் வேறுபாடு உண்டு; திராவிடர் கழகத்திற்கும், காங்கிரசுக்கும் வேறுபாடு உண்டு. ஆனால், எல்லாவற்றையும்விட அத்துணைப் பேரும் நாட்டின் நலனுக்காக ஒன்றுபட்டு இருக்கவேண்டும்; மதத்தின் பேரால் நாடு பிளவுபட்டுவிடக்கூடாது என்பதில் அக்கறையுள்ள காரணத்தினால், இன்றைக்கு இந்த மேடை யில் ஒருங்கிணைந்து நிற்கின்றோம். இந்த மேடைக்கு இன்னும் பல பேர் வருவார்கள்; காரணம், நாட்டை இன் றைக்கு சூழ்ந்துள்ள அந்தப் பயங்கரத்தைப் போக்கியாக வேண்டும் என்ற உணர்வுள்ளவர்கள், விரைவில் இந்த மேடைக்கு வருவார்கள் என்கிற நம்பிக்கை உண்டு. வர வேண்டும் என்று அவர்களை அழைக்க விரும்புகின்றேன்.

பெரியாரும், காமராசரும் பாடுபட்டது வீண்போகவில்லை என்பது இன்றைக்குத் தெரிகின்றது

இன்றைக்குத் தமிழ்நாட்டிலே ஒரு எழுச்சி ஏற்பட்டி ருக்கின்றது. இன்றைக்குக் காந்தியார் நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் நினைவுகூரப்பட்டது, அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைக்கு என்னவென்று சொன்னால், கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில், காங்கிரஸ் காரர்களைத் தவிர்த்து, பொதுமக்களும், மற்ற கட்சியினரும் இன்றைக்குக் காந்திக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள் தமிழகத்தில் என்கிற செய்தியைப் பார்க்கின்றபொழுது, பெரியாரும், காமராசரும் பாடுபட்டது வீண்போகவில்லை என்பது இன்றைக்குத் தெரிகின்றது. காரணம், இன்றைக்குக் காந்தியின் நினைவுகள் மட்டுமல்ல; தமிழகத்தில் இருக் கின்ற அத்துணைப் பேருக்கும் வந்திருக்கின்றது என்பதே ஒரு புது உணர்வு. நம்முடைய தமிழர்களுடைய தேசபக்தி யின் எடுத்துக்காட்டு இந்த நிகழ்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைக்கு சில தீய சக்திகள், இந்த அளவிற்குச் செய்கின்றார்கள் என்று சொன்னால், கோட்சேவுக்குச் சிலை வைக்கவேண்டும்; அதுவும் மார்பளவு சிலை. நோட்டீஸ் போடுவதற்கும் தைரியம் வந்திருக்கின்றது; நோட்டீஸ் ஒட்டுவதற்கும் தைரியம் இருந்திருக்கின்றது. அப்படி ஒட்டுவது மட்டுமல்ல, இன்றைக்கு ஊரிலே உலாவக்கூடிய தைரியம் அவர்களுக்கு இருக்கின்றது என்று சொன்னால், கொஞ்சம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

அப்படி ஒட்டுகின்றவர்கள் இந்தியாவிலே உலாவ முடியாது என்கிற நிலை ஏற்பட்டிருக்குமேயானால், இந்தச் செய்தி போய்ச் சேரவேண்டியவர்களுக்குச் சேர்ந்திருந் தால், அவர்கள் ஜாக்கிரதையாக இருந்திருப்பார்கள். ஆனால், அந்தச் செய்தியை நாம் இன்னும் அனுப்ப வில்லை. நோட்டீஸ் ஒட்டியவர்கள், மார்பளவு சிலை இந்தியா முழுவதும் வைக்கவேண்டும் என்று சொல்லிய வர்கள் இன்னும் இந்த இந்திய நாட்டில் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

யார் காந்தி?

நான் எதையும் மறைமுகமாக உங்களுக்குச் சொல்ல விரும்பவில்லை. யார் காந்தி? இன்றைக்கு அமெரிக்கா விலே கருப்பு இனத்தைச் சேர்ந்த ஒபாமா அவர்கள், ஜனா திபதியாக, அதிபராக வர முடிகிறது என்று சொன்னால், அதற்கு வித்திட்டவர் அந்த மகாத்மாதானே! டீக்கடையில் டீயை ஆற்றிக் கொண்டிருந்தவர்களும் இன்றைக்கு ஆட்சி பீடத்திலே முதன்மையாக அமரலாம்; அரை மணிநேரத்திற்கு ஒரு உடையை மாற்றலாம்; 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு கோட்டை அணியலாம் என்ற நிலை வந்ததே - அந்த ஜனநாயகம் - அந்த ஜனநாயகத்தை வாங்கிக் கொடுத்தது யார்? இந்தக் காந்திதானே!

அந்தக் காந்தியை கொச்சைப்படுத்துகின்ற வகையில், இங்கே இருக்கின்ற விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் செய்தார்கள் என்றால், அதை எப்படி நாம் அனுமதிக்க முடியும் என்பதை தயவு செய்து நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

தமிழ் ஓவியா said...

டில்லி கோட்டையில் ஆண்டு கொண்டிருக்கின்ற வர்கள் என்ன செய்கின்றார்கள்? பல அமைப்புகளை வைத்திருக்கின்றார்கள். கொலைகார அமைப்புகள் அவை அத்தனையும். நிர்வாண சாமியார்களை ரசித்ததுண்டு; காரணம், நிர்வாணமாக இருக்கின்றார்கள் என்பதற்காக அல்ல;

திராவிடர் கழக வெளியீடுகள் பலவற்றை நான் பல ஆண்டுகாலமாகப் படித்து வருகிறேன். இந்த நிர்வாண சாமியார்களை ரசித்ததுண்டு; காரணம், நிர்வாணமாக இருக்கின்றார்கள் என்பதற்காக அல்ல; அவர்களின் அயோக்கியத்தனங்களைப் புட்டு புட்டு வெளியே வைத்த வர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள் - இன்றல்ல, பல ஆண்டுகாலமாக அதனைச் செய்து வருகின்றார்கள்.

இந்த சக்திகள் யார்? இங்கே உரையாற்றும்பொழுது குறிப்பிட்டாரே, மரியாதைக்குரிய வீரமணி அவர்கள், காமராசரை கொல்ல வந்த சக்திகள்தான்; அன்றைக்கு மகாத்மா காந்தியைக் கொலை செய்ய சதி செய்த சக்திகள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

எதிர்ப்பு வந்தால், அவர்கள் வேறு; நான் வேறு. அவர்களுக்கும், எனக்கும் சம்பந்தம் கிடையாது என்று பதுங்குவது

கேட்பதற்கு ஆளில்லை என்பதற்காக, அவர்களின் மூர்க்கத்தனமும், அயோக்கியத்தனமும் எதிலே போய் முடியும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு மோடி என்ன செய்கின்றார்? வெள்ளோட்டம் விடுகின்றார். ஆர்.எஸ்.எசை விட்டு, இந்து மகாசபை யினரை விட்டு, விசுவ இந்து பரிசத்துக்காரர்களை விட்டு ஒவ்வொரு கருத்துகளாக வெளியே விடுவது; அந்தக் கருத்துக்கு மிகப்பெரிய எதிர்ப்பு வந்தால், அவர்கள் வேறு; நான் வேறு. அவர்களுக்கும், எனக்கும் சம்பந்தம் கிடையாது என்று பதுங்குவது.

எதிலே வந்து முடிந்திருக்கிறது என்று சொன்னால், இந்தியப் பெண்கள் 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு மதவெறி பிடித்த சாமியார் இன் றைக்குச் சொல்லக்கூடிய அளவிற்கு இந்த விஷயங்கள் வளர்ந்திருக்கின்றன.

நாடு விடுதலை பெறும்பொழுது 36 கோடி நம்முடைய ஜனத்தொகை. இன்றைக்கு 120 கோடியைத் தொட்டுக் கொண்டிருக்கின்றோம். நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ஜனத்தொகை இடைஞ்சலாக இருக்கிறது என்று நேருவிலே இருந்து இப்பொழுது இருக்கின்ற காங்கிரஸ் தலைவர்களும், மற்றவர்களும் எடுத்துச் சொன்னதின் காரணமாகத்தான், இன்றைக்கு இந்திய ஜனத்தொகை என்பது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பது மட்டு மல்ல, செய்யக்கூடிய நல்ல திட்டங்கள் மக்களை சென்ற டைகிறது என்று சொன்னால், ஜனத்தொகையைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம். குடும்பக் கட்டுப்பாட் டின் அவசியத்தை எப்படியெல்லாம் எடுத்துச் சொன் னோம் என்று உங்களுக்குத் தெரியும்.

எதற்காக அதனைச் செய்தோம்? நாட்டின் பொருளா தாரம் வளரவேண்டும் என்று சொன்னால், குடும்பக் கட்டுப்பாடுவேண்டும், ஜனத்தொகை வளர்ச்சிக்கு என்ற காரணத்தினால் சொன்னோம்; அதனை நிறைவேற்றிய காரணத்தினால்தான் இன்றைக்கு இந்தியா பொருளாதார வல்லரசு நாடாக வரக்கூடிய வாய்ப்பை நோக்கி மிகவேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், 10 குழந்தைகளைத் தாய்மார்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால்,
வெறும் குழந்தைகளைப் பெறக்கூடிய இயந்திரங்கள் அல்ல பெண்கள்!

பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியாரிலிருந்து அத்தனைப் பேரும்; வெறும் குழந்தைகளைப் பெறக்கூடிய இயந்திரங்கள் அல்ல பெண்கள் என்று சொல்லி, இன் றைக்குப் பெண்கள் சம உரிமையோடு முழுவதும் இல்லை என்றாலும்கூட, ஓரளவிற்குத் தன்மானத்தோடு சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்று சொன்னால், அந்தக் காலத்திலே பெண்களுக்கு உரிமை உண்டு என்று சொன்னதின் காரணத்தினால்தான்.

இன்றைக்கு மீண்டும் அந்தப் பெண்கள் பிள் ளைகளைப் பெறக் கூடிய இயந் திரங்களாக மாற வேண்டும் என்று சொல்கிறார்களே என்று எனக்குப் புரியவில்லை. எவ்வளவு பெரிய அயோக்கியத் தனமான கருத்து இது என் பதை தயவு செய்து நீங் கள் சிந்தித்துப் பாருங்கள்.

நாம் பெற்ற உரிமையை, அதைக் காப்பாற்றுவதற்கு, படிக்க வைப்பதற்கு நாம் எவ்வளவு சிரமப்படுகின்றோம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கணவனும், மனைவியும் சேர்ந்து 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்று சொன்னால், கிட்டத்தட்ட நம்முடைய வசதி களையும், நம்முடைய சவுகரியங்களையும் குறைத்துக் கொண்டு, அவர்களுடைய இரண்டு குழந்தைகளையும் படிக்க வைக்க ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய்வரை அவர்கள் படிப்பதற்காகச் செலவிடுகின்றோமே ஏன்?

தமிழ் ஓவியா said...

படிக்க வைத்தால்தான், எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற முடியும். இவர்களும் நல்லபடியாக இந்த சமுதாயத்தில் எல்லா சவுகரியங்களோடும் வாழ முடியும் என்கிற காரணத்தினால்தான், அந்தப் பெற் றோர்கள் அதனைச் செய்கின்றார்கள். நினைத்துப் பாருங் கள், இரண்டு குழந்தைகள் வைத்திருப்பவர்களே இப் பொழுது எவ்வளவு அவதிகளைப் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள். 10 குழந்தைகள் பெற்றால் என்னாகும்?

விலங்குகள் என்றாலும்கூட, குட்டிகளோடு சாக்க டைக்குள் போய் உருளலாம்; ஆனால், மனிதர்கள் குழந்தை களைப் பெற்றுக்கொண்டு அப்படியா போக முடியும்?
இதுபோன்ற அபத்தமான கருத்துகளைச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்; காரணம், முழுமையாக, கேட்டால் சிறுபான்மை மக்கள் வேகமாக வளருகின்றார்கள், ஆகவே, நாம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என் கிறார்கள். எதை எடுத்தாலும் சிறுபான்மை மக்களின்மீது காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகின்றனர். இதனை அவர் களுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் பார்க்கலாம்.

10 நிமிடத்திற்கு ஒருமுறை தலைப்பாகையையும் மாற்றிக்கொண்டார் இந்த மனிதர்!

கெட்ட வாய்ப்பாக ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்து விட்டார்கள் என்று சொன்னால், இவர்களுடைய இந்தப் போக்கின் காரணமாக, இந்தியாவில் மிகப்பெரிய சங்கடங்கள் வந்துவிடும் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

மூன்று நாள்கள் அமெரிக்க அதிபரோடு கொஞ் சினார்கள், குலாவினார்கள்; டீயைக் கப்புக் கப்பாக குடித்த னர். இருந்தாலும் அந்த மனிதர் முழுநேரமும் ஒரே சூட்டைத்தான் போட்டார். ஆனால், இந்த மனிதர் அரை மணிநேரத்திற்குத் துணி மாற்றினார் என்பதோடு மட்டுமல்ல, 10 நிமிடத்திற்கு ஒருமுறை தலைப்பாகை யையும் மாற்றிக்கொண்டார்.

ஏழை, எளியவர்கள் வாழுகின்ற நாட்டில், அதிலும் காந்தியினுடைய நினைவு நாளைக் கொண்டாடுகின்றோம். என்ன செய்தார் காந்தி? தமிழகத்திற்கு வந்தவுடன், மதுரைக்குப் பக்கத்தில் இருக்கின்ற ஏழை, எளிய விவசாயிகள் உடுத்துவதற்கு உடையில்லை என்கிற காரணத்தினால், இடுப்பில் ஒரு வேட்டியைக் கட்டிக் கொண்டு, மேலே ஒரு துண்டைப் போட்டு, இதுதான் என்னுடைய ஆடை; இந்திய மக்களுக்கு முழுமையாக ஆடை வசதிகள் கிடைக்கின்ற வரையில், நான் இப்படித் தான் இருப்பேன் என்று சொன்னாரே, அந்த மாமனிதர் எங்கே? டீ ஆற்றிக்கொண்டிருந்தவர், பதவிக்கு வந்த வுடன், அய்ந்து முறை உடை மாற்றுகிறார் என்று சொன் னால், இந்தப் படாடோபம் மிக்க இந்த மனிதர் எங்கே?

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவில் ஒரு அரசில் இருந்த பேரரசி என்ன செய்தார் என்று சொன் னால், ஆடம்பரத்தின் உச்சகட்டம் அந்த அம்மையார்; நான்காயிரம் செருப்புகள் வைத்திருந்தார் என்று சொல் வார்கள். தமிழகத்தில்கூட இந்தச் செய்தியைக் கேட்டது போல் இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். எல்லா ஊரிலும் ஆடம்பரக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

ஒரு அரை பிளேடையாவது வாங்கி வைத்திருக்கலாம்

அதுபோல், இந்த மனிதர் இன்றைக்குப் பிரதமராக வந்தவுடன், நாட்டு மக்களுக்கு என்ன செய்யவேண்டும்? உணவில்லாமல் கஷ்டப்படுகின்றார்களே, மாற்றுவதற்கு ஒரு நாளைக்கு ஒரு உடைகூட இல்லையே, அதை எப்படிப் போக்குவது என்பதிலே தன்னுடைய கவனத்தைச் செலுத்தாமல், இந்த மனிதர் தன்னை அலங்காரப்படுத்திக் கொள்கிறார்.

எத்தனை முறை அலங்காரப்படுத்தினாலும், எத்தனை முறை உடை மாற்றினாலும், அசிங்கமான முகம், அசிங்கமாகத்தான் இருக்கும். இவ்வளவையும் செய் வதற்குப் பதிலாக, ஒரு அரை பிளேடையாவது வாங்கி வைத்திருக்கலாம், அதில் ஏதாவது கொஞ்சம் பளபளப்பு வந்திருக்குமா? என்று பார்த்திருக்கலாம். நான் சொல்வது வேடிக்கையல்ல நண்பர்களே, அதனை எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காகத் தியாகம் செய்த காங்கிரஸ் தலைவர் எங்கே? உத்தமர் காந்தி எங்கே? இப்பொழுது இருக்கின்ற ஆடம்பரப் பிரியர் எங்கே? என்பதை நினைத்துப் பாருங்கள். இவர்களா, நம் முடைய நாட்டை முன்னேற்றம் செய்யப் போகின்றார்கள்? மூன்று நாள்கள் ஒட்டி உறவாடிய ஒபாமா, விட்டு விட்டுச் செல்லும்பொழுது என்ன சொல்லிவிட்டுப் போனார்?

ஒபாமா என்ன சொன்னார்?

இந்தியாவிலே மதத்தின் பெயரால், அநாகரிகச் செயல் கள் நடைபெறாமல் இருக்கின்ற வரை, இந்தியாவிற்கு ஆபத்து இல்லை என்று சொன்னாரே, எதனால் அதைச் சொன்னார். மூன்று நாள்கள் பழகிய மனிதருடைய எண்ணத்தைப் புரிந்துகொண்டதால்தான், அமெரிக்க ஜனாதிபதி அந்த வார்த்தையைச் சொல்லியிருக்கிறாரே தவிர, ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக அல்ல.

தமிழ் ஓவியா said...


மிகவும் பயங்காரவாதச் சக்திகள்; நாம் இங்கே குரல் கொடுப்பதோடு நிறுத்திவிடக்கூடாது; நேரிடையான நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபடவேண்டும். எப்படிப்பட்ட நடவடிக்கைகள் என்று கேட்டால், பின்னர் சொல்கின் றோம், நாங்கள் எல்லாம் பேசி முடிவெடுத்து. கூட்டம் போட்டால், மக்கள் வருவார்களா என்று எண்ணினார்கள்; ஆனால், கூட்டம் போட்ட பிறகுதான் தெரிகிறது, தமிழகத்தில் தேச பக்தி மிக்கவர்கள் அதிகம் என்பதை, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதன்மூலம் நீங்கள் காட்டியிருக்கின்றீர்கள்.

இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றவர் கள், மதத்தின் பெயரால், மதச்சார்பற்ற நாடாகவுள்ள இந்தியாவை, மதச்சார்புள்ள நாடாக ஆக்க வேண்டும் என்கிற முயற்சிகளை முனைப்போடு செய்து கொண்டிருக் கிறார்கள். அதுமட்டுமா? இந்தியைத் திணிக்கின்றார்கள்; சமஸ்கிருதத்தைப் படிக்கவேண்டும் என்று சொல்கின்றார் கள். இன்னும் பலவற்றை சொல்லிக் கொண்டிருக்கின் றார்கள்.

காந்தியைப் பல சமயங்களில் விமர்சித்தாலும், காந்தியின்மீது பாசமுள்ளவராக, மரியாதையுள்ளவராக இருந்தார் பெரியார்

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி சொல்லும் பொழுது, அவர் சொன்ன பல விஷயங்கள் இன்றைக்கு உண்மையாகிக் கொண்டிருக்கின்றன. காந்திக்கும், பெரியாருக்கும் பல வேறுபாடுகள் உண்டு. காந்தியைத்தான் தலைவராக ஏற்றுக்கொண்டு, காங்கிரசில் இணைந்தவர் பெரியார் அவர்கள். இருந்தாலும், சில வேறுபாடுகள் ஏற்பட்ட காரணத்தினால், சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், மாற்றப்படவேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்கிற காரணத்தினால், பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியே சென்றாலும், காந்தியைப் பல சமயங்களில் விமர்சித்தாலும், காந்தியின்மீது பாசமுள்ள வராக, மரியாதையுள்ளவராக இருந்தார். அதனால்தான், காந்தி இறந்தபோது பெரியார் சொன்னார், இந்தியாவிற்கு காந்தி தேசம் என்ற பெயரை வைக்கவேண்டும் என்று சொன்னார்.

இன்னொன்றையும் சொன்னார், விரைவில் உலகத்தில் இருக்கின்ற மனிதர்கள் உலகத்தையே தன் பாக்கெட் டுக்குள் வைத்துக்கொள்ளக்கூடியதை சொன்னார், அதுதான் செல்போன், அதைச் சொன்னவர் பெரியார்.

இன்னும் எத்தனையோ விஷயங்களைச் சொன்னார்; காமராசர்கூட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியினுடைய தலைவராக ஆகும்பொழுது, தந்தியே அடித்தார், கடிதம் எழுதும்பொழுதுகூட, வந்த கடிதத்திலேயே பின்புறம் எழுதுக்கூடியவர். அன்றைக்குச் செலவு செய்து தந்தி அடித்தார்; யாருக்கு என்றால், காமராசருக்கு. தமிழ்நாட்டை விட்டு நீங்கள் போகக்கூடாது; தமிழ்நாட்டில் நீங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால்தான், மக்களுக்கு நல்லது. நீங்கள் சென்றால், உங்கள் ஆட்சியின் பெருமையைக் கெடுத்துவிடுவார்கள், உங்களுக்குப் பிறகு வருகின்றவர்கள் என்றார், அது உண்மை என்று இன்றைக்கு சில பேர் அதனைச் செய்துகொண்டிருக்கின்றார்கள், அவர் வழியிலே வந்தவர்கள்.

பெரியாருடைய தொலைநோக்குப் பார்வை எவ்வளவு பெரிய அளவிற்கு விரிந்து பரந்திருக்கின்றது

ஆகவே, பெரியார் அவர்கள் சொல்லிய கருத்துகள் அத்தனையையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். அது வேறு விஷயம். அது தவறு என்று நான் சொல்ல வில்லை. முடியாது என்பதற்கு, என்னுடைய மூளைக்கு அவை அத்தனையையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சக்தி இல்லை என்று நினைக்கின்றேன். ஆனால், இதுபோன்ற நல்ல விஷயங்களைப் பெரியார் அவர்கள் சொல்லி விட்டுச் சென்றிருக்கின்றார் என்று சொல்லும்பொழுது, அவருடைய தொலைநோக்குப் பார்வை எவ்வளவு பெரிய அளவிற்கு விரிந்து பரந்திருக்கின்றது என்பதைப் பார்க்கலாம்.


தமிழ் ஓவியா said...

அதனால்தான் நண்பர்களே, நமக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்தப் பயங்கரமான சூழ்நிலையை நாம் முறியடிக்க வேண்டும். ஆட்சியில் இருக்கின்றவர்களை வீட்டிற்கு அனுப்பவேண்டும். இன்னும் நான்காண்டுகள் இருக்கிறது தேர்தல் வருவதற்கு என்று நாம் பொறுத்திருந்தால் பயன் கிடையாது. அதற்குள் இந்த நாட்டிற்கு என்னென்ன கேடுகளை விளைவிப்பார்களோ? எந்தெந்த மாநிலத்தில் ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால், மதத்தின் பெயரால் கலவரங்களைத் தூண்டிவிடப் போகிறார்களோ? வேகமாக வளர்ந்துகொண்டிருந்த நமக்கு, இன்றைக்கு நம்முடைய வளர்ச்சிக்குத் தடை போடப்பட்டிருப்பதோடு என்பது மட்டுமல்ல, நம்முடைய உயிருக்கும் ஆபத்து ஏற் பட்டிருக்கிறது; ஒற்றுமைக்கும், நிம்மதிக்கும் பங்கம் ஏற் படுத்துபவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள்.

திராவிடர் கழகத்துக்காரர்கள் தியாகச் சீலர்கள்

ஆகவே, நான் திராவிடர் கழகத்தைச் சார்ந்த அருமை நண்பர்களை கேட்கின்றேன். பதவிக்கு ஆசைப்படாத வர்கள் நீங்கள். பொய்ச் சொல்லி தேர்தலில் ஏமாற்றி வாக்குகள் பெற்று, மந்திரியாக வேண்டும், எம்.எல்.ஏ.வாக வேண்டும், எம்.பி.,யாக வேண்டும் என்ற எண்ணமில்லாத தியாகச் சீலர்கள் நீங்கள்.

தமிழ் ஓவியா said...

நாட்டின் ஒற்றுமையில், நாட்டின் தேச பக்தியில் எவருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல நீங்கள்; ஆகவே, இதுபோன்ற விஷயங்களை நீங்கள் கையில் எடுத்துக் கொள்ளவேண்டும். நீங்கள் எடுத்து முன்னின்று செல்லுங் கள்; நாங்கள் உங்கள் பின்னே வருவோம் என்று சொல்ல வில்லை, உங்களுக்கு இணையாக நாங்கள் வருவோம். வருகின்ற வழியில், திராவிடர் கழகக் கொடியையும், காங்கிரஸ் கொடியையும் பார்த்தேன். உடனே எனக்கு காமராசரும், பெரியாரும்தான் ஞாபகத்திற்கு வந்தார்கள்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஆதரித்த காலத்தில் தமிழகம் எப்படி இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். எப்படியெல்லாம் மேம்பட்டு இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆட்சியிலே காமராசர் அவர்கள் ஒன்பது ஆண்டுகாலம்தான் இருந்தார் என்று சொன் னாலும், அந்தத் தியாகச் சீலர் செய்த சாதனைகள் எவ்வளவு என்பதுபற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

காமராசர் அவர்கள் போட்ட மதிய உணவு திட்டத்தை யாரும் மறந்துவிட முடியாது
நாட்டில் இருக்கின்ற அணைக்கட்டுகளைக் கட்டியவர் காமராசர். நாட்டிலே இருக்கின்ற ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களுக்கு அஸ்திவாரம் போட்டவர் காமராசர். இன்றைக்குப் பல பேர் படித்து பெரிய பெரிய பதவிகளில் அதிகாரிகளாக இருக்கிறார்களே, ஏழைகளாகப் பிறந்தவர் கள் எப்படி படிக்க முடிந்தது என்று சொன்னால், அது காமராசர் அவர்கள் போட்ட மதிய உணவு திட்டத்தால் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

இன்றைக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் அரசாங்கத் திற்கு வருமானமாக வருகின்றது; ஆனால், அன்றைக்கு அரசாங்கத்திற்கு வருமானம் எவ்வளவு என்று சொன்னால் வெறும் 100 கோடி ரூபாய்தான். தமிழக அரசாங்கத்தி னுடைய வரவு - செலவு; பட்ஜெட் என்று சொல்கின் றார்களே, அது வெறும் 100 கோடி ரூபாய்தான். அந்த 100 கோடி ரூபாயில், அந்த மாமனிதன் எத்தனை லட்சம் குழந்தைகளின் பட்டினியைப் போக்கினார்; எத்தனை லட்சம் குழந்தைகள், அப்படி பட்டினியைப் போக்கியதால், படித்து இன்றைக்கு பெரியவர்களாக வந்திருக்கிறார்கள். குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

செய்த தவறைத் திருத்தவேண்டியவர்கள் மக்கள். அவர்களை இன்னும் நான்காண்டுகள் நாட்டை ஆளவிடக்கூடாது!

தமிழ் ஓவியா said...

ஆகவே, நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்ல காரியங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், இன்றைக்கு மக்களை மதத்தால், மொழியால், ஜாதியால், கலாச்சாரத்தால் பிரிக்கவேண்டும் என்று எண்ணக்கூடிய மதவெறி பிடித்தவர்களை ஆட்சியிலே எப்படியோ அமர்த்திவிட்டோம்; எல்லோரும் அதற்குப் பொறுப்புதான். ஆகவே, செய்த தவறைத் திருத்தவேண்டியவர்கள் மக்கள். அவர்களை இன்னும் நான்காண்டுகள் நாட்டை ஆளவிடக்கூடாது; விரைவிலேயே வீட்டிற்கு அனுப்புவது எப்படி என்கிற வழியை நாம் கற்றாகவேண்டும்; அதனைச் செய்தாகவேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய குழந்தைகள், பள்ளிகள், கல்லூரிகளில் படித்துக் கொண் டிருக்கக்கூடிய இளைஞர்களின் சமுதாயத்தினுடைய எதிர்காலம் சரியாக இருக்கும்.

அரை மணிநேரத்திற்கு ஒரு சட்டையை, ஒரு கோட்டை, ஒரு சூட்டை நீ மாற்றிக் கொண்டிருக்கிறாயே, நீ நினைத்தாயா? எத்தனை இளைஞர்கள் இன்றைக்கு பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கின்றார்களே, அவர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுப்பது எப்படி என்று இந்த மோடி மஸ்தான் நினைத் திருப்பாரா? என்றால், இல்லை! அவருடைய நினைப்பெல் லாம் என்ன? இன்னும் ஒரு மணிநேரம் கழித்து நான் உடை மாற்றவேண்டும்; எந்தத் துணியை அணியலாம் என்றுதானே நினைப்பு!

தமிழ் ஓவியா said...

படித்த இளைஞர்கள் வேலையில்லாமல், நாடு முழுவதும் இருக்கின்றார்களே, தமிழகத்தில் ஆயிரக்கணக் கான பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றார்களே, அவர் களுக்கு எப்படி வேலை வாய்ப்பினைத் தருவது என்கிற யோசனையும் கிடையாது. மாறாக, மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த அரசாங்க சலுகைகளை நிராகரித்து வருகிறார்கள். குறிப்பாக, சர்க்கரைக்குக் கொடுத்து வந்த மானியத்தை நிறுத்திவிட்டார்கள்.

ஏழை, எளிய விவசாயிகள் என்ன செய்ய முடியும்?

விவசாயிகள் பயன்படுத்துகின்ற யூரியாவிற்குக் கொடுத்து வந்த மானியத்தை நிறுத்திவிட்டார்கள் என்பது மட்டுமல்ல, அந்த யூரியாவின்மீது விலைக் கட்டுப்பாடு இருந்தது, அதையும் நீக்கிவிட்டார்கள். ஏழை, எளிய விவசாயிகள் என்ன செய்ய முடியும்?

2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கம் மத்தியிலே ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளினுடைய கடனை நீக்கியதா, இல்லையா? நெசவாளர்களின் துயரைப் போக்க வேண்டும் என்பதற்காக, சென்வாட் வரியை நீக்கினோமா இல்லையா!
ஆக, இன்றைக்கு ஆட்சிக்கு வந்த 6, 7 மாதங்களாகி, கிட்டத்தட்ட ஓராண்டு ஆகப் போகின்றது. என்ன செய்தாய் மோடி அவர்களே! டீசல், பெட்ரோல் கச்சா பொருள்களின் விலை 120 டாலரிலிருந்து கிட்டத்தட்ட 40, 50 டாலராக இறங்கியிருக்கிறதே, கிட்டத்தட்ட 100 சத விகிதம் இறங்கியிருக்கிறதே, டீசல், பெட்ரோல் விலை யைக் குறைத்தாயா? நீ மக்களுக்கு என்ன நன்மை செய்தாய் என்று சொல்லவேண்டும்.

மக்களுக்கு எதிராக செயல்படுகின்ற அரசினுடைய முகத்திரையை கிழித்தெறியக்கூடிய நேரம் வந்துவிட்டது

தமிழ் ஓவியா said...

மண்ணெண்ணெய்க்குக் கொடுத்து வந்த மானியம் ரத்து; சாதாரண கிராமப்புற மக்களுக்கு மண்ணெண்ணெய் கிடைக்காது. 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம், கிராமப் புறங்களில் இருக்கின்ற ஏழை, எளியவர்கள், குறிப்பாக பெரியவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள, சுயமரியாதையோடு வாழ முடியும் என்று வயதானவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த 100 நாள் வேலை திட்டத்தைப் போக்குவோம் என்று மிரட்டுகின்றாரே, இதுவா மக்களுடைய இயக்கம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மக்களுக்கு எதிராக செயல்படுகின்ற அரசினுடைய முகத்திரையை கிழித்தெறியக்கூடிய நேரம் வந்துவிட்டது என்பதை நீங்கள் உணரவேண்டும்.

தமிழ் ஓவியா said...

பொருளாதார ரீதியாக நமக்கு உயர்வு கிடையாது; சமூகத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளை நீக்குவார்களா? என்றால், அதனையும் செய்ய மாட்டார்கள். இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை பெரிதாக செய்யத் துணிவார்களே தவிர, ஒபாமா வந்தால், நாட்டிலுள்ள கோடீசுவரர்களை வரிசை யாக நிற்க வைத்து, ஒவ்வொருவரும் அடிமை ஊழியம் செய்கிறார்களே தவிர, ஏழை, எளிய மக்களுக்கு என்ன திட்டம் போட்டீர்கள்? அமெரிக்க ஜனாதிபதி மூன்று நாள் கள் உங்களோடு கொஞ்சிக் குலாவினாரே, அப்பொழுது!

சிந்திக்கவேண்டும்! வேகமாகச் சென்று கொண்டிருந்த பாரதம், இன்றைக்குத் தடுமாறி நிற்கின்றது என்று சொன் னால், யார் அதற்குக் காரணம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். விளையாட்டுத்தனமாக சென்ற தேர்தலில் இருந்துவிட்டோம். மக்கள் சில பேர் தாங்கள் வாங்கிய பணத்திற்காக ஓட்டுப் போட்டார்கள்; கொஞ்சம் வெட்கக்கேடான விஷயம் அது. ஒரு நாளைக்கு 200, 300 ரூபாய் வாங்கியதன் பலன், இன்றைக்கு என்னாயிற்று என்பதை நீங்கள் பார்க்கவில்லையா!

முதல் மேடையை அமைத்தவர்கள் திராவிடர் கழகத்தினர் என்று சொல்லும்பொழுது, நான் அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்

ஆகவே, தயவு செய்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையென்று சொன்னால், பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்திற்கும், பாடுபட்டு வாங்கிய ஜனநாய கத்திற்கும் கேடு வந்துவிடும் அருமை நண்பர்களே!

இந்தக் கூட்டத்தின் அவசியத்தை எல்லோரும் உணர்ந் திருக்கின்றோம். ஆனால், பதை பதைப்போடு முதல் படியேறியவர்கள், முதல் மேடையை அமைத்தவர்கள் திராவிடர் கழகத்தினர் என்று சொல்லும்பொழுது, நான் அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து சொல்லிக் கொள்கிறேன், நாங்கள் உங்களோடு இருப்போம் என்பதை.

நாங்கள் காமராசரையும் மறக்கவில்லை; பெரியாரையும் மறக்கவில்லை. இரண்டு பேரும் பதவிகளுக்காக அலைந் தது கிடையாது. பதவிகள் பெரிதல்ல; மக்களுக்கு நன்மை செய்வதே பெரிது என்று நினைத்த இருபெரும் தலைவர்கள் அவர்கள். அந்த வழியிலே நீங்களும் வந்திருக்கின்றீர்கள். காமராசருடைய வழியிலே நாங்களும் இருக்கின்றோம்.

மக்களை, இந்த நாட்டை மதவெறியர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு நாம் சபதமெடுப்போம் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/97833.html#ixzz3UMlHGFO0

தமிழ் ஓவியா said...

முதல் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடக்க விழா!

குடியாத்தம். மார்ச் 14- திராவிடர் மகளிர் பாசறை, மகளிரணி, திராவிடர் கழக மாணவரணி சார்பில் குடி யாத்தம் நகரிலுள்ள லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி யின் கூடுதல் கட்டடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இருபால் மாணவர்களுடன் கடந்த மார்ச் 7 ஆம் தேதி, தமிழர் தலைவரின் 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, உலக மகளிர் நாள் விழா,

முதல் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடக்க விழா என்று முப்பெரும் விழாவாகவும், அதே சமயம் ஒரு குட்டிப் பழகு முகாமாகவும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாவட்ட திராவிடர் மகளிர் பாசறைத் தலைவர் ந.தேன்மொழி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் வி.இ. சிவகுமார் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரை யாற்றினார். தலைமையேற்ற மாவட்டத் தலைவர் வி. சடகோபன் தமிழர் தலைவர் பிறந்த நாள், உலக மகளிர் நாள் பற்றி சில கருத்துகளை பகிர்ந்து கொண் டார்.

அதைத் தொடர்ந்து மாநில மாணவரணிச் செய லாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் பிஞ்சு முதல் வாசகர் வட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். அவர் தனது உரையில், பெரியார் பிஞ்சு மாத இதழின் சிறப்பைக் கூறி, இதில் மாணவர்களாகிய உங்களது படைப்புக்களும் இடம் பெற வேண்டும்.

இதை படிப்பதன்மூலம் புதுப்புது வார்த்தைகளையும், கருத்துகளையும் கற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் கற்றல் திறன் கூடும். அந்தத் திறனை மெருகேற்றும் விதமாக நூலகத்திற்குச் சென்று நல்ல புத்தகங்களைப் பெற்று வாசிக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ளுங் கள் என்று கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற வாசகர் வட்டம் தொடங்கப்படும் என்றும் பெரியார் பிஞ்சுகளின் பலத்த கைதட்டல்களுக் கிடையே அறிவிக்கப்பட்டது. நகர மகளிர் பாசறைத் தலைவர் ச. இரம்யா நன்றியுரை கூறி தொடக்க நிகழ்ச் சியை நிறைவு செய்தார். மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் தி.அனிதா ராணி விழாவை ஒருங் கிணைத்து சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் பெ.இந்திராகாந்தி, பள்ளியின் முதல்வர் ஜமுனா, மாவட்டச் செயலாளர் சிகாமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.கண்ணன், வேலூர் மாவட்டத் தலைவர் நே.கி.சுப்பிரமணியம், நகரத் தலைவர் வி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

கலைவாணன் செய்த பகுத்தறிவுத் துணுக்குகள்!

அதைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்த பெரியார் விருது பெற்ற கலை வாணன் அவர்கள் பகுத்தறிவு, தன்னம்பிக்கைக் கருத்துகளை சின்னச் சின்னக் கதைகள் மூலமும், கேள்வி கேட்டுப் பதிலைப் பெறுவதன் மூலமும் கலகலப்பு கலாட்டாவாகவே பெரியார் பிஞ்சுகளுடன் உரையாடினார்.

தமிழ் ஓவியா said...

அதனைத் தொடர்ந்து, அதே பள்ளியின் பொதுத் தேர்வுக்குத் தயாராகும் இருபால் மாணவர்களை தனியாகப் பிரித்து, பள்ளி வளா கத்தின் வேறு கட்டடத்தில் வைத்து அவர்களுக்கு, தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி?

என்று தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலும், பிரச்சினை களை எப்படிக் கையாள்வது என்பதை செய்முறை மூலமும் செய்ய வைத்து மாணவர்களுக்கு தெளி வையும் உற்சாகத்தையும் ஊட்டினார்.

மாணவர்களின் பிரச்சினையைப் பேசும் குறும்படம்

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் சார்பில், முதல் தலைமுறை மாணவர்கள் படும் அவதியை சித்தரிக்கும் விதமாக முதல் தலைமுறை குறும்படம் திரையிடப்பட்டது. மதிய உணவுக்குப் பிறகு, பூமி சுழற்சி பெயர்ச்சிப் பேரவையைச் சேர்ந்த செந்தமிழ் சேகுவேரா,

வானியல் தொடர்பான மூடநம்பிக்கை களை போக்கும் வண்ணம் அறிவியல் விளக்கங்களை பெரியார் பிஞ்சுகளுடன் பகிர்ந்து கொண்டார். இறுதியில் மாணவர்களிடம் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டத்திற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப் பட்டன.

அவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் அதை நிரப்பிக் கொடுத்தனர். இதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடர்ந்து சிறப்பாக இயங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஓயாத கேள்விகளும் -பதில்களும்!

நிகழ்ச்சி முடிந்த பிறகும் 6 மணிக்கு மேல், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் ஜோதிடம், சனிப்பெயர்ச்சி, வானியல் தொடர்பான கேள்விகளுக்கு குடியாத்தம் நகர மாவட்டத் தலைவர் வி. சடகோபன், உடுமலை வடிவேல், செந்தமிழ் சேகுவேரா, பெரியார் வலைக்காட்சியின் ஒளிப் பதிவாளர் ரேவந்த் ஆகியோர் பதிலளித்து மாண வர்களின் அய்யங்களைப் போக்கினர்.

குடியாத்தம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. அன்பரசு இந்த கேள்வி நேரத்தில் கலந்து கொண்டு மாண வர்களை உற்சாகப்படுத்தினார்.

வானநூல் பயிற்சி கொள்!

இரவு 8 மணிக்கு மேல் பள்ளியின் மொட்டை மாடியில் வைத்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், சில மாணவர்கள் ஆகியோருக்கு தொலைநோக்கி மூலம் நிலவை மிக அருகாமையில் பார்க்க வைத்து அது தொடர்பான வியப்பான வரலாறு மற்றும் அறிவியல் கருத்துகளை இரு தரப்பிலும் பகிர்ந்து கொள்ளப் பட்டன.

சலிக்க சலிக்க பார்த்துவிட்டு, வழக்கமான ஞாயிற்றுக் கிழமையாக இல்லாமல் என்றென்றும் நினைவில் நிற்கும் நாளாக அமைந்தது என்று நன்றி கூறி அனைவரும் விடைபெற்றனர். இந்த நிகழ்ச் சியை உடுமலை வடிவேல், செந்தமிழ் சேகுவேரா, ரேவந்த் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/97897.html#ixzz3UMmCMFiI

தமிழ் ஓவியா said...

உண்மைத் தோழர் மறைந்தார்

சுயமரியாதை இயக்கத்தின் உண்மைத் தோழர் எஸ். ராமச்சந்திரன் அவர்கள் 26-02-1933ந் தேதி மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் நாம் திடுக்கிட்டுப் போய் விட்டோம். நாம் மாத்திரமல்ல, சுயமரியாதை இயக்கத்தில் கடுகளவு ஆர்வமுள்ள எவரும் இச்சேதி கேட்டவுடன் திடுக்கிட்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

தோழர் ராமசந்திரனை இழந்தது சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரு நஷ்டமேயாகும். தோழர் ராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும் மனதில் உள்ளதை சிறிதும் எவ்வித தாட்சண்யத்திக்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது என்பது மிக மிக அரிதேயாகும்.

பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக என்ற கிளர்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் வீறு கொண்டிருந்த காலத்தில் தோழர் ராமச்சந்திரன் அவர்கள் தாலுகா போர்டு முதலிய பல ஸ்தாபனங்களில் தலைவராய் இருந்த சமயம் ஒருபொதுக் கூட்டத்தில் பேசும்போது இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுப்பதில்லை என்று ஒரு உறுதிமொழி கூறி அதை ஒரு விரதமாய் கொண்டிருப்பதாக விளம்பரப் படுத்தினார்.

மற்றும் அவரது திருநெல்வேலி சு.ம. மகாநாட்டின் தலைமை உரையில் (1929-ஆம் வருடத்தில்) வருங்காலத்தில் சுயமரியாதை இயக்கத் தால் ஏற்படும் பலன் இன்னின்னவை என்று குறிப்பிட்ட சமயத்தில், உலகம் எல்லாம் வழங்கப்படும் ஒரு பாஷை ஏற்படும்.

உலகம் எல்லாம் ஒப்புக்கொள்ளும் ஒரு கொள்கை ஏற்படும். உலகம் எல்லாம் ஒரு அய்க்கிய ஆட்சி நாடாகும். உலகத்திலுள்ள சொத்துக்கள் பூமிகள் எல்லாம் உலகத்திலுள்ள மக்களுக்குச் சொந்தமாகும். வேலை செய்யாத சோம்பேறிகள் ஒருவர்கூட இருக்க மாட்டார்கள். குற்றங்கள் குறைந்து விடும் நோய்கள் அகன்றுவிடும்.

மனிதன் ஆயுள் இரட்டித்துவிடும். மக்கள் வாழ்வில் உள்ள கவலைகள், பொறாமைகள் நீங்கி ஒருவருக்கொருவர் அன்பும் நட்பும் கூட்டுறவு முயற்சிகளும் தாண்டவ மாடுவதுடன், மக்கள் சதா சந்தோஷத்துடன் இருப்பார்கள் என்று கர்ஜித்ததுடன், தீண்டாமை என்பது மதக்கொள் கையைச் சேர்ந்தது என்பது முழுப்புரட் டென்றும் அது முழுதும் பொருளாதார சூழ்ச்சியின் அடிப்படையைக் கொண்டது என்றும் பேசி இருக்கிறார்.

இந்த தத்தவங்களில் ஒரு சிறிதும் மாற்றமில்லாமல் இன்று சு.ம. இயக்கம் வேலை செய்து வருவதைப் பார்ப்பவர்கள் இவ்வியக்கம் யாதொரு புதிய வழிகளிலும் செல்லவில்லை என்பதை உணர்வார்கள். தோழர் ராமச்சந்திரன் நல்ல வாக்கு விசாலமுள்ள வக்கீலாகவும் தகுந்த வரும்படியும் மேலும்மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடிய நிலையும் சவுகரியமும் இருந்தும் அவைகளை லட்சியம் செய்யாமல் இயக்கத்திலேயே கவலை கொண்டு மற்றவைகளை அலட்சியம் செய்து வந்த உண்மை சுயமரியாதை வீரரேயாவர்.

இவரது வயது 48, அதாவது 1884ல் பிறந்தவர் இவ்விளம் வயதில் இப்படிப்பட்ட உற்ற தோழரை இழக்க நேர்ந்தமைக்கு யார் வருந்தாமல் இருக்க முடியும்? இவருக்கு 4 ஆண் மக்களும், 3 பெண்மக்களும் உண்டு. இவரது வாழ்க்கைத் துணைவியார் ராமனாதபுரம் ஜில்லா போர்டு அங்கத்த வராகவும் சிவகங்ககை தாலூகா போர்டு அங்கத்த வராகவும் தகுந்த கல்வி ஞானமுள்ளவராகவும் இருக்கின்றார்கள்.

எனவே இவ்வம்மையார் இயற்கையை மதித்து, துணைவரின் பிரிவை சடுதியில் மறந்து அவரது சுயமரியாதை இயக்கத்தில் அவரது கொள்கைகளையே கொண்டு உலக விடுதலைக்கும் உலக இன்பத்துக்கும் உழைக்க முன்வருவார்கள் என்றே ஆசைப்படுகின்றோம்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 05.03.1933

Read more: http://viduthalai.in/page-7/97888.html#ixzz3UMmUIol1

தமிழ் ஓவியா said...

தீபாவளி முட்டாள்தனம்

தோழர்களே! தீபாவளி கொண்டாடப்போகிறீர்களா? அதன் கதை தெரியுமா? பகுத்தறிவுள்ள மனிதனுக்குப் பிறந்தவர்களாய் இருந்தால் இம்மாதிரி இழிவும், பழிப்பும் முட்டாள் தனமுமான காரியத்தைச் செய்வீர்களா? தீபாவளியை விளம்பரம் செய்கின்றவர்கள் யார்? சோம்பேறியும், துரோகியும், அயோக்கியர்களுமான கழுகுக்கூட்டமல்லவா?

கதர் கட்டினால் தான் சரியான தீபாவளி என்று பல சுயநல சூழ்ச்சிக்காரர்கள் சொல்லுகிறார்கள். இது மகா மகா பித்தலாட்டமாகும். இதற்கும் பார்ப்பன அயோக்கியர் களுடன் அரசியல் அயோக்கியர்களும் சேர்ந்து அனு கூலமாயிருந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். சொன்னதை எல்லாம் கேட்பதுதானா பார்ப்பனரல்லாத மக்களின் நிலை?

மலம் சாப்பிட்டால் மோட்சம் வரும் சுயராஜ்யம் வரும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவதுதான் மத தர்மமா? தேசிய தர்மமா? மதத்துக்காக மாட்டு மலம் சாப்பிடுவது போல் அரசியலுக்காக பணத்தை வீணாக்குவதா? சென்னையில் தீபாவளிக்கும், கதருக்கும் செய்யப்பட்டிருக்கும் விளம்பரம் குச்சிக்கார தாசி விளம்பரத்தையும் தோற்கடித்து விடும்போல் காணப்படுகின்றன.

இந்த செலவுகள் யார் தலையில் விடியும் தெரியுமா? புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள். கோபிப்பதால் பயனில்லை.

குறிப்பு:- ஒவ்வொரு சுயமரியாதைச் சங்கத்திலும் நாளையே தீபாவளியைப் பற்றிப் பொதுக்கூட்டம் கூட்டி மக்களுக்கு தீபாவளிப் புரட்டையும் கதர் புரட்டையும் எடுத்துச் சொல்லக்கோருகிறோம்.

குடிஅரசு - செய்தி - 15.10.1933

Read more: http://viduthalai.in/page-7/97888.html#ixzz3UMmduRtL

தமிழ் ஓவியா said...

தோழர் ஈ.வெ.ரா.நாகம்மாள்

குடிஅரசு பத்திரிகையின் பதிப்பாளராகிய தோழர் ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் சென்ற ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாது ஈரோடு லண்டன் மிஷன் ஆஸ்பத்திரி யில் டாக்டர் போலார்ட் அவர்களால் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இது சமயம் சற்று சவுக்கியமாகவிருக்கிறது விரைவில் குணமடைந்து விடலாமென டாக்டர் கூறுகிறார். தோழர் நாகம்மாள் அவர்களைப் பார்ப்பதற்கு தோழர்கள் ஆர். கே. ஷண்முகம் பி. ஏ. பி. எல். எம். எல். ஏ., சி. எஸ். இரத்தன சபாபதி எம். எல். சி. வி. எஸ். செங்கோட்டையா, முருகேச முதலியார், ஈரோடு முனிசிபால் சேர்மன் கே. ஏ. ஷேக்தாவுது சாயபு முதலிய ஆயிரக்கணக்கான பேர்கள் வந்து போனார்கள். இரண்டு மூன்று நாளாய் யாரையும் பார்க்க அனுமதிப்பதில்லை.

மாயவரத்திலிருந்து தோழர்கள் சி. நடராஜன் எஸ். சம்மந்தம், இரத்தினம், டி. சின்னையா, எஸ்.வி. லிங்கம் ஆகியவர்களும், சேலம் நடேசன், பாலுசாமி, அம்புலு, பவானிசிங், ஆகியவர்களும், திருச்செங்கோடு வரதராஜலு, ஜலாண்டாபுரம் அர்த்தனாரி, சிவலிங்கம், திருச்சி எஸ். நீலாவதி ராமசுப்பிரமணியம் ஆகியவர்களும், பாபநாசம் சாமி. சிதம்பரனார் சிவகாமி அவர்களும்,

சென்னை எஸ். குருசாமி - குஞ்சிதம் ஆகியவர்களும், தஞ்சை அய். குமாரசாமி பிள்ளை அவர்களும் மற்றும் பலரும் வந்திருக் கிறார்கள். தமிழ் நாடு ஆசிரியர் தோழர் வரதராஜலு, தோழர்கள் எம். சிங்காரவேலு, தூத்துக்குடி பெரியசாமி, முதலியவர்களிடமிருந்து தந்தியும் அநேகர்களிடமிருந்து கடிதங்களும் வந்திருக்கின்றன. ஆஸ்பத்திரியில் ஜனங் களை தாராளமாய் விடுவதில்லை.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.05.1933

Read more: http://viduthalai.in/page-7/97889.html#ixzz3UMmoGOPl

தமிழ் ஓவியா said...

வான நூல்களை எடுத்துக் கொண் டால் மதச் சம்பந்தமானது. புராணச் சம்பந்தமான புளுகுகள், ஆபாசங்கள், அவையும் 100-க்குத் 90 வடவன் கொண்டு வந்து ஜோசியன் பிழைக்கப் புகுத்தினதுடன் காரியத்திற்கு, அனுபவத்திற்குப் பயன்படாத குப்பைக் கூளங்களைத் தவிரத் தெரிந்து கொள்ளவேண்டிய, வளர்ச்சிக்குப் பயன்படக் கூடிய சரக்கு அதில் என்ன இருக்கிறது?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/97889.html#ixzz3UMmuIVUy

தமிழ் ஓவியா said...

மன்னிப்புக்கோரும் ஆர்.எஸ்.எஸ்.

இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானில் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப் பூர்வ இதழான ஆர்கனைசர் வெளியிட்டு இருந்தது அல்லவா?

அது புயலாக வெடித்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். வேறு வழியின்றி மன்னிப்புக் கோரியுள்ளது. மற்றவர்கள் செய்திருந்தால் அடேயப்பா எப்படி எல்லாம் குதித்திருப்பார்கள்?

கண்ணில்லையா முதல்வருக்கு?

கண் பார்வையற்றோர் கடந்த ஆறு நாட்களாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களைக் குண்டு கட்டாகக் காவல் துறையினர் தூக்கிச் செல்வதும், பார்வையற்றவர்கள் கதறுவதும் கண்ணுள்ளோர் அனைத்து உள்ளங்களிலும் ரத்தக் கண்ணீரை வர வழைக்கின்றது - கண் பார்வையற்றவர்கள்மீது கண் பார்வைபடாதா தமிழக முதல்வருக்கு?

போனுக்குக் கவசம் - தலைக்கு அலட்சியம்

கைப்பேசிகளுக்கு கவசம் போடும் வாகன ஓட்டிகள் தலைக்குக் கவசம் அணிவதில் கவலையற்றுள்ளனர். 80 சதவீத வாகன ஓட்டிகள் இந்த நிலையில்தான் உள்ளனர் என்று ஆதகங்கப்படுகிறார் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். - நியாயமான ஆதங்கம் தானே!

சாதிக்க முடியுமா?

லண்டன் பிபிசி நிறுவனம் இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்தை வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்குப் பதிலடி என்ற பெயரில் இங்கிலாந்தின் மகள்கள் என்ற பெயரில் வீடியோ டுவிட்டரில் உலா வருகிறதாம். தயாரித்தவர் ஹர்ஷர்தர்சிங் என்பவர்; இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகளில் பாலியல் வன்முறை எவ்வளவு மோசம் என்று அதில் காட்டப் படுகிறதாம். இதன் மூலம் புண்ணிய பாரத பூமியில் பாலியல் வன்முறை கிடையவே கிடையாது என்று சாதிக்க முடியுமா?

ஒரு குற்றத்துக்கு இன்னொரு குற்றம் பதிலாகுமா?

Read more: http://viduthalai.in/e-paper/97909.html#ixzz3USI9rze5

தமிழ் ஓவியா said...

சு.சாமியின் திமிர்ப் பேச்சு!


மசூதிகள் எந்நேரத்திலும் இடிக்கக்கூடிய வெறும் கட்டடங்களாம்!

கவுஹாத்தி, மார்ச் 15_ மசூதிகள் ஒன்றும் மதம் சார்ந்த இடம் இல்லை மாறாக எந்நேரத்திலும் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டடங்கள் தான் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி வெள்ளிக்கிழமை அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மசூதிகள் ஒன்று மதம் சார்ந்த இடம் இல்லை. அவை வெறும் கட்டடங்கள் தான். அந்த கட்டடங்களை எந்நேரத்திலும் இடிக்க முடியும். என் கருத்தை ஏற்காத யாருடனும் விவாதிக்க நான் தயார் என்றார்.

சாமியின் கருத்துக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சாமியின் கருத்துக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போன்று அஸ்ஸாம் மாநில பாஜக ஒதுங்கிக் கொண்டது. சாமியின் கருத்துக்கு அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் உள்ள க்ரிஷக் முக்தி சங்க்ரம் சமிதி என்ற விவசாயிகள் அமைப்பு அளித்த புகாரின்பேரில் சாமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/97907.html#ixzz3USIizK8r

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். ஏட்டில் பாகிஸ்தான் எல்லைக்குள் காஷ்மீர் இருப்பதாக படம்

மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு


புதுடில்லி, மார்ச்.15_ ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ ஏடான ஆர்கனைசர் ஏட்டில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் எல்லைக்குள் இருப்பது போன்ற படம் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மாநிலங் களவையில் பிரச்சினை எழுப்பப்பட்டது. மத்திய அரசு விசாரணை மேற் கொள்வதாக உறுதியளித் துள்ளது. சங் பரிவாரங் களின் நிலைப்பாடு அது அல்ல என்றும் ஆளும் பாஜக கூறியுள்ளது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள குலாம் நபி ஆசாத் அவை கூடியதும் ஆர் கனைசர் ஏட்டில் வெளி யாகி உள்ள படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை பாகிஸ் தானின் ஒரு பகுதி யாகவே வெளியிட்டுள் ளது குறித்து பிரச்சி னையை எழுப்பினார்.
குலாம் நபி ஆசாத் கூறும்போது, இந்தியா வின் மகுடமாக உள்ளது ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகும். இதற் காக எண் ணிலடங்கா தியாகங்களை செய்துள்ளோம் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, வெளி நாட்டு இதழ்களில் பாகிஸ்தா னால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை பாகிஸ் தானின் ஒரு பகுதி என வரை படத்தில் வெளியிட்டால் அதற்காக பாஜக, ஆர். எஸ்.எஸ். அமைப்புகள் போராட்டங்கள் நடத்து கின்றன. ஆனால், ஆர் கனைசரில் வெளியிட்ட தன்மூலமாக அதை அங்கீ கரித்து விட்டனவா என் பதை அறிய விரும்புவதாக குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

குலாம் நபி ஆசாத் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசின் சார்பில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதியாகவே உள்ளன. ஆர்கனைசரில் வெளியான தகவல் குறித்து நாங்கள் விசாரணை மேற்கொள்வோம் என்று கூறினார்.

அமைச்சர் இரவிசங்கர் அளித்த பதிலில் திருப்தி கொள்ளாத காங்கிரசு கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கை கோரி தொடர்ச்சியாக வலியுறுத் திய வண்ணம் இருந்தனர். ஆர்கனைசர் ஏட்டில் எழுதியவர்மீது நடவ டிக்கை எடுக்கும் திட்டம் உள்ளதா? என்று நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ் .சதுர்வேதி கேட்டார்.

துணை அவைத் தலைவர் பி.ஜே. குரியன் கூறும்போது, அமைச்சர் அய்யத்துக்கு இடமில்லா மல் பதிலில் கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகும். இதை யாரும் மாற்றிவிட முடியாது என்றார்.

இதனிடையே ஆர் கனைசர் ஏடு தன்னுடைய இணைய பதிப்பில் பதி வான வரைபடத்தை மாற்றிவிட்டது. மார்ச் 15 தேதியிட்ட அச்சுப் பிரதியில் முறைகேடான வரைபடமே இடம் பெற்றுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் வெளிப்படுத்தி உள்ளது.

ஆர்கனைசர் ஏட்டின் ஆசிரியராக உள்ள சிறீ பிரஃபல்ல கேட்கார் கூறும்போது, எதேச் சையாக நடந்தது என் றாலும் ஏற்கமுடியாத தவறுதான். எது எப்படி இருந்தாலும், ஆர்கனை சரில் இடம் பெற்றது ஏற்கமுடியாத தாகும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது, சார்க் இணையத் தில் பங்ளாபீடியா இணை யத்தின் வாயிலாக அந்த வரைபடம் எடுக்கப்பட் டுள்ளது. அடுத்த இதழில் திருத்தம் வெளியிடப் படும் என்று கூறினார்.
_இந்துஸ்தான் டைம்ஸ், 13.3.2015

Read more: http://viduthalai.in/page-2/97918.html#ixzz3USJSmtTT

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. ஆட்சிக்கு மொத்து!
மதச் சுதந்திரத்தில் வழுக்கிடும் இந்தியா அமெரிக்க செனட்டர் சாடல்

வாஷிங்டன், மார்ச்15 பொதுத் தேர்தல் நடை பெற்றுமுடிந்து கடந்த ஓராண்டாகவே மதச்சுதந் திரத்தில் இந்தியா வழுக் கிடும் நிலை ஏற்பட்டுள் ளது என்று அமெரிக்க செனட்டர் சாடியுள்ளார்.

கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு வருகைதந்த போதுகூட அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிப் படையாகவே இது குறித்துக் கூறினார். இது போன்ற முக்கியப் பிரச் சினைகளையொட்டியே வெளியுறவுக்கொள்கை அமைகிறது. வாஷிங்டனை மய்ய மாகக்கொண்டு இயங்கக் கூடிய கிறித்தவ பழமை வாதக் குழுவின் குடும்ப ஆய்வுக்குழுவின் தலை வராக உள்ளவரும், அமெ ரிக்க செனட்டருமாகிய டோனி பெர்க்கின்ஸ் செனட்டின் துணைக்குழு வில் பேசும்போது, இந் தியா குறித்துக் குறிப் பிட்டு சொல்லும்போது:- அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அந்த நாடு மதச் சுதந்திரத்திலிருந்து வழுக்கி உள்ளது. ஆகவே, கிறித்தவர் என்று மட்டு மன்றி அந் நாட்டிலுள்ள மதச்சிறுபான்மையராக உள்ளவர்கள்மீதான செயல்கள்குறித்து அந் நாட்டை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும் போது, பன்னாட்டு மதச் சுதந்திரச் சட்டத்திற்கே வெளியுறவுக்கொள்கையில் முன்னுரிமை அளிக்கப் படும். வெளியுறவுத் துறை யில் பணியாற்றும அலுவ லர்களிடம் இதற்கே முன் னுரிமை அளிக்க வேண் டும் என்பதையே பயிற்சி கொடுத்துவருகிறோம் என்றார்.

செனட்டர் ஸ்டீவ் டான்ஸ் என்பவர் செனட் டர் பெர்க்கின்சிடம் கேட்கும்போது, உங்கள் பார்வையில் தற்போ துள்ள (இந்திய) அரசு நிர் வாகம் மதச்சுதந்திரத்தில் தெளிவாக உள்ளதா? என்று கேட்டார்.

பெர்கின்ஸ் கூறும் போது, நான் அலுவலர் களிடம் பேசும்போது மதச்சுதந்திரம் என்கிற கருத்தில் முன்எப்போதும் இல்லாதவகையில் வெளி யுறவுக் கொள்கையில் முன்னுரிமை கொடுக்கப் பட வேண்டி உள்ளது. உண்மையைக் கூற வேண் டுமானால், இப்போது தான் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே, செனட்டர் ஸ்டீவ் கேள் விக்கு பதில் அளிப்பதில் நான் இல்லை என்றேகூற வேண்டியுள்ளது. அந்த நாட்டில்(இந்தியாவில்) அரசால் மதச் சுதந்திரத் துக்கு முன்னுரிமை வழங் கப்படவில்லை என்று பதில் அளித்தார்.

முடிவாக, மதரீதியில் துன்புறுத்தல் குறித்த பதிவுகளைப் பார்க்கலாம். இதுகுறித்து ஆய்வு செய் துள்ளவர்களின் கருத்துப் படி, மதச்சுதந்திரம் உயர் வானதாக இல்லை. தொடர்ச்சியாகவே மதரீதி யிலான துன்புறுத்தல்கள் உள்ளன. மதத்தைக் கட்டாயப்படுத்துவது எதிர்காலத்தில் நன்றாக இருக்காது என்றார்.

புதுடில்லி சிறீக் கோட் டையில் கடந்த ஜனவரி யில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சைச் சுட்டிக் காட்டி ராபி டேவிட் நாதன் சபர்ஸ் டெயின் பேசி னார். அமெரிக்க நாட் டின் பன்னாட்டளவில் மதச்சுதந்திரத்துக்கான தூதராக சபர்ஸ்டெயின் உள்ளார். அவர்கூறும் போது, வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மான பங்கு வகிப்பது மதச்சுதந்திரமாகும் என்று கூறினார்.

மேலும், அவர் கூறும் போது, மதச் சுதந்திரத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் செயல்களில் சட்டரீதியாக மாறுபட்ட விளக்கங்கள் கூறுவதாக வெளிப்படையாகவே அமைந்துள்ளதாகவே நான் எணணுகிறேன்.

காலைப் பிரார்த் தனைக் கூட்டங்களில் பங்கேற்பது கட்டாயப் படுத்தப்படுகிறது. தொடக்கநிலையில் தான் செயல்படுவதற்கான அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது, அதன் படியே செயல்படு கிறேன் என்றார். ஆனால், உண்மைநிலை என்ன? அரசின் அனைத்து துறை களிலும் மதச்சுதந்திரம் குறித்த திட்டம் என்ன? முக்கியத்துவம் வாய்ந்த செயல் திட்டமாக அல் லவா இருக்க வேண்டும்? என்று வாதிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் பல செயல்கள் நடந்துவிடு கின்றன. உண்மையல் நான் எண்ணுவது என்ன வென்றால், சட்டத்தில் உள்ளபடி, அரசு நிர்வா கம் மற்றும் அரசுத்துறை செயலாளர் மற்றும் தலைவர் ஆழமாக கவனம் செலுத்தவேண்டிய பிரச் சினையாக மதச்சுதந்திரம் உள்ளது என்று சபர்ஸ் டெயின் கூறினார்.

மத்திய அரசின் மதச் சுதந்திரம் குறித்து அமெ ரிக்க செனட்டர்கள் விவா திக்கும் அளவில் பாஜக அரசின் மதவாதச் செயல் பாடுகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/97917.html#ixzz3USJjAOnf

தமிழ் ஓவியா said...

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழா நெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப் பது இந்த வசம்பைத் தான்.

கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப் பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்று நோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப் பான் என்று கூறப்படுகிறது.

சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத் தலாம்.

வசம்பை தூள் செய்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று தேக்கரண்டி கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.


Read more: http://viduthalai.in/page2/97855.html#ixzz3USLcjD74

தமிழ் ஓவியா said...

மோடிக்கு கார்ப்பரேட்கள் வாரி வழங்கிய நன்கொடை

பாஜகவை சேர்ந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் காலத்தில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நூறுகோடி ரூபாய்களை நன் கொடையாக வாரி இறைத்திருக்கின்றன. இந்தியாவில் தேர்தல் நேரத்தில் அரசி யல் கட்சிகள் நன்கொடை பெறுவது வழக்கம்.

அந்த வகையில் மக்களிடம் இருந்தும், கட்சி உறுப்பினர்களிடம் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன் கொடையை திரட்டுகின்றன. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எப்போ தும் ஆதரவாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் நேரத்தில் அந்த நிறுவனங்களிடம் பல நூறு கோடிக் கணக்கான ரூபாயை நன்கொடையாய் பெற்றிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

கடந்த தில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெளிநாடுகளில் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்தும் கோடி கணக்கான ரூபாயை நன்கொடையாக பெற்றது என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இதை பெரிய குற்றச்சாட்டாக தெரிவித்தார்.

ஆனால் அவருடைய பாரதிய ஜனதா கட்சியே தில்லி சட்டசபை தேர்தலையொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது இப்போது தெரியவந்துள்ளது. டில்லி தேர்தலை யொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாரதீய ஜனதா கட்சி மொத் தம் ரூ.60.78 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை யில் கடந்த 2013_-2014ஆ-ம் ஆண்டில் மொத்த தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடையில் பாரதிய ஜனதா கட்சி 69 சதவிகிதம் நன்கொடை பெற்றுள் ளது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங் களிடம் இருந்து நன்கொடை பெற்ற கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
-பாரதீய ஜனதா கட்சி கடந்த 2012-_13-ஆம் நிதி ஆண்டில் ரூ.83.19 கோடி நன்கொடை பெற்றது. இது கடந்த 2013-_2014-ஆம் ஆண்டில் ரூ.87.67 கோடியாக வும், 2014_-2015-ம் ஆண்டில் 170.86 கோடியாக உயர்ந்து விட்டது.

அதாவது பாரதிய ஜனதாவின் நன்கொடை வசூல் 2012_-2013ஆ-ம் ஆண்டை விட 2014-_2015-ஆம் ஆண்டில் இரு மடங்கு மேல் உயர்ந்திருக் கிறது. பார்தி குழுமத்தின் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை பாரதிய ஜனதா கட்சிக்கு 3 தடவையாக கடந்த 2012_-2013ஆ-ம் ஆண்டில் ரூ.41.37 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளது.

இதேபோல் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2013-_2014ஆ-ம் ஆண்டில் 36.50 கோடியை கொடுத்து உள்ளது. சரத் பவாரின் தேசியவாத கட்சிக்கு சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை கடந்த 2013-_2014ஆ-ம் ஆண்டில் அளித்து உள்ளது.

தேசிய அரசியல் கட்சிகள் கடந்த 2013-_2014ஆ-ம் ஆண்டில் மொத்தம் ரூ. 247 கோடியை நன் கொடையாக பெற்றுள்ளன. இது கடந்த 2012_-2013-ஆம் ஆண்டை விட 158 சதவிகிதம் அதிக மாகும்.

மாநிலம் வாரியாக பார்த்தாலும் பாரதீய ஜனதா கட்சி தான் அதிக நன் கொடை வசூலித்தது தெரியவந்துள் ளது. குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ரூ.23.25 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ரூ. 22.24 கோடியை வசூலித்து முதலிடத்தை பிடித்து உள்ளது.

இதெல்லாம் வெளிப்படையாக தெரிந்த நன்கொடைகள் மட்டுமே ஆகும். அதானி குழுமம் போன்ற பாஜக மற்றும் மோடி விசுவாச கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரங்கோடிகளை வரி இறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரதிபல னாகவே, தற்போது நரேந்திர மோடி அரசு மக்கள் நலனை பின்னுக்கு தள்ளி, கார்ப்பரேட் நலனை முன்நிறுத்தி வருகிறார்.

மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங் களின் தலைமை செயல் அலுவலர் போன்று செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களையும் மோடியின் மீது சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர்.

பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பூடான், நேபாளம், பிரேசில், பல்கேரியா, அமெ ரிக்கா, ஜப்பான் உள்பட பல நாடுகளில் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் வெளிப்படைத் தன்மை உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் மறைமுகப் போக்கை கடைப்பிடிக்கின்றன என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page3/97858.html#ixzz3USMXYfNp

தமிழ் ஓவியா said...

அன்னை மணியம்மையாரும் சாவித்திரிபாய் புலேயும்

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 -_ 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதி மற்றும் கவிஞர் ஆவார். இவர் தம் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவில் நிறுவியவர்கள் ஆவர்.

வாழ்க்கை: இவர் 1831இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர்தம் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840இல் மணந்தார்.

ஜோதிராவ் புலே அவர்கள் தமது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு அந்தண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

கல்விப் பணிகள்: ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது.

பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

பிற பணிகள்: விதவைப் பெண்களின் தலையை மொட்டை யடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம்ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதை களான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.

கவிதை நூல்: 1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத் தும் கவிதைகளான 'கவிதை மலர்கள்' என்ற நூலை வெளியிட்டார்கள். கவிதை வரிகளில் சில: கல்வி கற்றுக் கொள். போ.

சுய சார்புள்ளவராக சுறுசுறுப்பானவராக இருங்கள்: வேலை செய்யுங்கள் அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள் . அறிவில்லாதிருந்தால் இழந்து நிற்போம் அனைத்தையும் . அறிவிழந்து போனால் நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்.

சும்மா இராதீர்கள். போய் இனியேனும் கல்வியைப் பெறுங்கள் ஒடுக்கப்பட்டோர் மற்றும் கைவிடப்பட்டோர் அனைவரது துன்பங்களையும் போக்குங்கள்.

படிக்க உங்களுக்கு வாய்த்துள்ளது ஒரு பொன்னான நேரம் எனவே படியுங்கள்!

குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்ததிலும் கல்விப் பணியில் சிறப்பாக ஈடுபட்டதிலும் சாவித்திரிபாய் புலே _- அன்னை மணியம்மையார் அவர்களை ஒத்திருப்பதைக் காண முடிகிறது. ஒருவருடைய பிறந்த நாள் (மார்ச் 10) மற்றொருவருடைய மறைந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page5/97861.html#ixzz3USNEE8D7

தமிழ் ஓவியா said...

என்று மறந்தோம்?

அறுபதைத் தொடுமுன்
அறுந்து விட்ட பம்பரம்
இளமைத் தென்றல் தேனை
எட்டி உதைத்த புத்தகம்

சுயமரியாதை ஏணியில் ஏறி
சூரியனிடம் வந்து சேர்ந்த நட்சத்திரம்
அந்தச் சூரிய வெப்பத்தில்
சுடப்பட்ட வைரக் கல்!

பெரும் பொறுப்பு மலையை
பொறுப்போடு சுமந்த தோள்!

ஏழை விட்டுப் பிள்ளைகளை
தோள் தொட்டியில் தாலாட்டிய அன்னை
எளிமை என்ற அணிகலனை

இயல்பாய்ப் பெற்ற வசீகரம்
அமைதியான தோற்றம் - அதற்குள்
அடங்கியிருக்கும் புலியின் சீற்றம்!

போராட்டப் பெருங் குணம்
போர்ப்பாட்டின் புதுமணம்!

நெருக்கடிக்கு நெருக்கடி
கொடுக்கும் கொள்கைச் சவுக்கடி
ஆழமான சிந்தனைக் கடல்
அதில் மூழ்கியிருக்கும் முழு உடல்!

தலைவரைக் காத்திடவே
தன்னலம் துறந்துள்ள தற்கொலை!

எங்கள் அன்னையே ஈடில்லா
மணியம்மையே!

என்று மறந்தோம்
உங்களை நினைப்பதற்கு?

- கவிஞர் கலி. பூங்குன்றன்
(மார்ச்சு 16 - அன்னை மணியம்மையார் நினைவு நாள் (1978).


Read more: http://viduthalai.in/page5/97862.html#ixzz3USNQd1po

தமிழ் ஓவியா said...

மார்ச்சு 8 மகளிர் நாள் சிந்தனை நினைவாக
ஹிட்லரும், சங்கராச்சாரியாரும், மடாதிபதிகளும் பெண்களை இழிவுபடுத்தி பேசுவது ஏன்?

ஆரிய கலாச்சாரத்தை நிலை நாட்டும் வெறி கொண் டிருந்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மன் சமூகத்தின் தூய்மையைக் காப்பாற்றும் வகையாக பெண்களை கிந்தர், கூஹே, கிர்ஹே (குழந்தைகள், சமையல், சர்ச்) ஆகியவற் றுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று முழங்கி னான். அதாவது, படி தாண்டா பத்தினிகளினாலேயே சமூகத்தின் பண்பாடு காப்பாற்றப்படும்.

படி தாண்டிவிட்டால், பெண்களின் ஒழுக்கம் கெடும் -_ மதத்தின் பெயரில், அரசியலின் பெயரில் நடக்கும் அராஜ கத்தாலும் எதேச்சாதிகாரத்தாலும் கெடாத சமூகம், பெண்கள் வெளியில் சென்றால் கெட்டுப் போகும்.

ஹிட்லர் காலம்தான் ஆச்சே என்று நினைக்காதீர்கள். இதெல்லாம் நம்ம ஊர் ஆள் ஹிட்லர் சாயலில் சொன் னது. ஒருவிசுவாசப் படையைக் கொண்ட காஞ்சி மடத்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சொல்லி யிருக்கிறார்.

பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. பணக் கஷ்டத்தால் தான் வேலைக்குச் செல்கின்றனர் என்றால் வீட்டிலிருந்தபடியே சில வேலைகள் செய்து சம்பாதிக்கலாம் (எப்படி? அப்பளம் இட்டா?) வேலைக் குச் செல்லும் பெண்களில் பத்து சதவீதம் பேர்தான் ஒழுக்கமாக இருக் கின்றனர். நமது பாரம்பர்யத்தைக் கட்டிக் காக்கின்றனர்.

காஞ்சி மடத்தில் இப்போதெல்லாம் இப்படிப்பட்ட ஆய்வுகள் செய்வதில்தான் நேரம் செலவழிகிறது என்று தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன்பு விதவைகளை தரிசுநிலம் என்று சுவாமிகள் சொன்னார். இப்போது வேலைக்குச் செல்லும் பெண்களில் 90 சதவீதம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்கிறார். எப்படி வந்தது இந்தக் கணக்கு? எப்படி அதை நிரூபிப்பார் சாமியார்?

ஆண் களில் எத்தனை சதவீதம் ஒழுக்கமான வர்களாம்? அதற்கு ஆய்வு உண்டா அல்லது ஆண்களுக்கு ஒழுக்கமே தேவையில்லை என்ற மனுதர்ம ஸ்மிரு திகளை ஆதாரமாக்கிக் கொள்கிறாரா? சங்கர மடம் நடத்தும் ஒரு பள்ளியில் ஒரு ஆண் ஆசிரியரின் ஒழுக்கத்தைப் பற்றி புகார் வந்தபோது ஆசிரியருக்கு வக்காலத்து பேசினவர்தானே?

ஸ்மிரு திகளில் பெண்களை அடிமைப்படுத்தும் படியான, கேவலப்படுத்தும்படியான பகுதிகளை அகற்றி நல்ல அறிஞர் களைக் கொண்டு முற்போக்குச் சிந் தனைகளுடன் மறுபடி எழுதப்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்னார். ஆனால், இந்த வேலையை நிச்சயமாக மடாதிபதிகளிடம் விடக் கூடாது என்றும் சொன்னார்.

தெரி யாமல் தான் கேட்கிறேன், இந்த சங்கர மடங்கள் எந்த யுகத்தில் புதைந்திருக் கின்றன? ஆணுக்குச் சற்றும் இளைப் பில்லை என்றே இந்த வையகத்தை ஆள வந்தோம் என்ற புதுயுகப் பாய்ச்சலோடு, தரிசனத்தோடு புதுமைப் பெண்ணை வரவேற் றானே 50 ஆண்டுகளுக்கு முன், பாரதி என்ற கவிஞன் அவனைப்பற்றி சங்கர மடத்துக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

கற்பு நிலை யென்று சொல்ல வந்தார். இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்ற வார்த்தை களின் சாராம்சமும் இவர்களுக்குப் புரியாது. முற்போக்குச் சிந்தனைகள் இவர் களுடைய எதேச்சாதிகாரத்துக்கு ஒத்து வராததாலேயே பண்பாடு, கலாச்சாரம் என்ற பசப்பு வார்த்தைகளைச் சொல்லி பலவீனமானவர்களின் சிந்தையைக் குழப்புகிறார்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்களின் கஷ்டங்களை உணராமல் சக்தி வாய்ந்த சாதனமான தொலைக் காட்சி வழியாக மடத்தின் தலைவர் ஒருவர் இப்படிச் சொல்வது எத்தனை ஆபத்தான விஷயம்? அலுவலகத்திற்குச் செல்லும் மத்திய வகுப்புப் பெண்கள் கையில் மட்டுமே நமது பண்பாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு இருப்பதாக சுவாமிகள் நினைப்பதும் தெரிகிறது.

பணத் தேவைக்காக மட்டுமே பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் என்று நினைப்பதும் மகா கேலிக் கூத்தாக இருக்கிறது.
சுவாமிகளுக்கு உடனடித் தேவை சரித்திரத்தில், சமூகவியலில் டியூஷன். அது கிடைக்கும் வரை வாயை மூடிக் கொண்டு இருக்கட்டும்.

பெண் பாவம் பொல்லாதது.
- வாஸந்தி
நன்றி: இந்தியா டுடே

Read more: http://viduthalai.in/page7/97864.html#ixzz3USNngJrj

தமிழ் ஓவியா said...

வளர்கிறார்கள் கோடீசுவரர்கள்

போர்ப்ஸ் பத்திரிகையின் தர வரிசைப்படி அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் பெரும் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 56 ஆக இருந்தது; இந்த ஆண்டு 90 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

சீனா மற்றும் ஜெர்மனி முறையே 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளன.போர்ப்ஸ் பத்திரிகை ஆய்வின் படி இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில், 90 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 29,400 கோடி டாலராகும். சென்ற ஆண்டில் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 56 ஆகவும், அவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 19,150 கோடி டாலராகவும் இருந்தது.உலக அளவில் மொத்தம் 1,826 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 6.4 லட்சம் கோடி டாலரிலிருந்து 7.05 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 536 கோடீஸ்வரர்கள் உள்ளனர். சீனாவில் 213 கோடீஸ்வரர்களும், ஜெர்மனியில் 103 கோடீஸ்வரர்களும் உள்ளனர்.

பிரிக் நாடுகளில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா 213 கோடீஸ்வரர்கள் மற்றும் 56,500 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 90 கோடீஸ்வரர்கள் மற்றும் 29,400 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பிரேசில் (54 பேர்-18,100 கோடி டாலர் மற்றும் ரஷ்யா (88 பேர்- 33,700 கோடி டாலர்) ஆகிய நாடுகள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.

ரஷ்யாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 111 லிருந்து 88 ஆக குறைந்துள்ளது. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5 இந்தியப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். சென்ற ஆண்டில் 2 இந்தியப் பெண்கள் இடம் பெற்றிருந் தனர்.

உலக அளவில் 100 மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page7/97865.html#ixzz3USNw2KT1

தமிழ் ஓவியா said...

காந்திமீதான அவமதிப்பு தொடர்கிறது
காந்தியார் பிறந்த நாள், கோவா அரசின் நாட்காட்டியில் இல்லை

பானாஜி மார்ச் 17_ கோவா அரசு தயார் செய்த நாட்காட்டி மற் றும் நாட்குறிப்பேடுகளில் காந்தியார் பிறந்தநாள் விடுபட்டிருந்தது. இதன் மூலம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவா மாநில பாஜக அரசு, இந்த ஆண்டிற் கான நாட்காட்டி தயா ரித்து வெளியிட்டுள்ளது. இந்த நாட்காட்டியில் காந்தியார் பிறந்த நாள் குறிப்பிடப்படவில்லை. இதனால் கோவா மாநில அரசு அலுவலகங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி வேலை நாளாக கணக் கிடப்பட்டுள்ளது. கோவா மாநில அரசின் இந்த அவமதிப்பு நடவடிக்கைக்கு, கோவா மாநில காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர் பாளர் துர்காதாஸ் காமத் கூறும்போது, காந்தியார் பிறந்த நாளான அக்டோ பர் 2-ஆம் தேதியை கோவா மாநில அரசு விடுமுறை நாட்கள் பட் டியலிலிருந்து நீக்கி யுள்ளது.

இதன்மூலம் பாஜக அரசின் மறைமுகத் திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடக் கம்தான். வரும் காலத்தில் காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட் சேவின் பிறந்த நாளை, விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார். இது தொடர் பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, தேசத் தந்தையான காந்தி யாரின் பிறந்த நாள் தேசிய விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர வேண்டும். இந்த நாளை விடுமுறைப் பட்டியலிலி ருந்து நீக்கக் கூடாது. கடந்த ஆண்டும் காந்தி யார் பிறந்த நாளில் பள் ளிக்கு வருமாறு மாண வர்கள் கட்டாயப்படுத் தப்பட்டார்கள். இது போன்ற செயலைக் கை விட வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/98046.html#ixzz3UdyKWfqY

தமிழ் ஓவியா said...

மேற்கு வங்கத்தில் ஒரு கேவலம்?

மேற்கு வங்கம் நாடியா மாவட்டம், கங்கனாபூர் பகுதியில் உள்ள கிறித்தவர்கள் நடத்தும் பள்ளியுடன் கூடிய ஆசிரமத்துக்குள் புகுந்து நான்கைந்து காலிகள் கொண்ட ஒரு கும்பல் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரியின் கழுத்தைப் பிடித்து நெரித்து, அவரைக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சியைக் கூட்டாகச் செய்து, பீரோவை உடைத்து உள்ளே இருந்த 12 லட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர் என்ற தகவல் நாணித் தலை குனிய வேண்டிய ஒன்றாகும்.

குறிப்பாக மதவாத சக்திகள் தலை தூக்கிய சிறிது காலமாகவே இது போன்ற மாற்று மதத்தைச் சேர்ந்த நிறுவனங்களைச் சூறையாடுவது, அம்மதத்தைச் சேர்ந்த பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்வது என்பது தொடர் கதையாகவே இருந்து வருகின்றன.

ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த பெண் சந்நியாசி சாத்வி ரிதம்பரா என்பவர் வழக்கமாக மேடைகளில் பேசுவது என்ன தெரியுமா?

இந்து ஆண்களே! முஸ்லிம் பெண்களைக் கர்ப்பிணியாக்குங்கள். அவர்கள் வயிற்றில் இந்துக் கரு ஜெனிக்கட்டும்! என்று பேசி வருகிறார். ஒரு பெண்ணாக இருந்தும் இப்படி பேசுகிறார்; எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண் பெண்தானே! அந்த உணர்வை - அவர்களைப் பிடித்து ஆட்டும் அடிப்படை மதவாதம் மழுங்கடித்து விடுகிறது என்பதுதான் உண்மை.

1998 செப்டம்பர் 25 அன்று மத்தியப் பிரதேசம் ஜாடியா கிராமம் கிறித்தவர்கள் நடத்தும் ஒரு மருத்துவமனையில் என்ன நடந்தது? 17 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டதால் பலருக்கு மறந்து கூடப் போயிருக்கலாம்; ஆனால் நடைபெற்ற சம்பவமோ அவ்வளவு எளிதில் மறக்கப்பட முடியாத ஒன்றே!

நள்ளிரவில் கதவைத் தட்டி உள்ளே நுழைந்த சங்பரிவார்க் காமவெறியர்கள் 4 கன்னிகாஸ்திரிகளைக் கதறக் கதறச் சூறையாடினார்களே - நினை விருக்கிறதா!?

இதுகுறித்து பிஜேபியின் மக்களவை முன்னாள் உறுப்பினர் வைகுந்தலால் சர்மா என்பவர் (எம்.பி. சர்மா) என்ன கூறினார் தெரியுமா? இப்பொழுது நினைத்தாலும் குருதி உறைந்து விடும். தேச விரோத சக்திகளுக்கு எதிரான தேசப் பற்றுமிக்க இந்து இளைஞர்களின் கோபம்! என்று இந்தக் கேவலத்தை மிகப் பெரிய தேசப்பற்றின் வீர சாதனைபோல் பேசினாரே!

மேற்கு வங்காளத்தில் நடந்ததைப் பார்த்தால் அன்று மத்தியப் பிரதேசத்தில் நடந்தது போலவே நள்ளிரவில் அதே பாணியில்தான் நடந்திருக்கிறது.

இரண்டொரு நாட்களில் அனேகமாக இதன் பின்னணித் தகவல்கள் அப்பட்டமாக வெளி வந்து விடக் கூடும்.

1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகே இந்தியா முழுமையும் மதக் கலவரங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் மிக அதிக மாகவே தலை விரித்தாடத் தொடங்கிவிட்டன.

இதில் வெட்கக் கேட்டுக்குப் பிறந்த அவலம் என்னவென்றால் பாபர் மசூதியை இடிப்பதற்குக் காரணமாக இருந்த பிஜேபி மற்றும் சங்பரிவார்களை சேர்ந்த பெருந் தலைவர்கள், கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். ஏன், இந்தியாவின் துணைப் பிரதம ராகவும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக வும் ஆனார்களே! வேறு எந்த நாட்டிலாவது இந்த ஆபாசச் சகதி வழிந்தோடுமா!?

இன்று அவர்கள் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி அதிகார பூர்வமாகவே 120 கோடி மக்கள் திறனைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விட்டதே!

இந்த அதிகாரப் பீடத்தின் தலைமை அமைச்சராக வந்துள்ளவர் யார் என்றால், ஒரு மாநிலத்தில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது முதல் அமைச்சராக இருந்தவர்

நாடு எந்தப் பாதையில் எக்கேடு கெட்டுக் குட்டிச் சுவராகியுள்ளது பார்த்தீர்களா? இது பாரதப் புண்ணிய பூமியாம்.

இது போதாது என்று இந்தியாவையே இந்து நாடாக ஆக்கப் போகிறார்களாம். எப்படி ஆக்குவார்கள்? இரவோடு இரவாக ஒரு சட்டத்தைப் (ளிக்ஷீபீவீஸீணீஸீநீமீ) பிறப்பித்தா?

மன மாற்றத்தால் நிகழ வேண்டிய ஒன்றை மதம் பிடித்த யானைபோன்ற மனிதர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன், எப்படியும் அது நிகழ வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள்.

ஏதோ ஒரு சூழலில் ஆட்சியைப் பிடித்து விட்டார்கள் - அந்தத் தவறை வெகு மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டனர்.
எவ்வளவு சீக்கிரத்தில் விடிவு ஏற்படுமோ, அவ் வளவுக் கவ்வளவு நாட்டுக்கும், நாகரிக வாழ்வுக்கும் நல்லது.
மக்கள் மத்தியில் மதவாதப் போக்கினைத் தோலுரிக் கும் கருத்தும் பிரச்சாரமும் திட்டமிட்ட வகையில் நடத்தி ஆக வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் - தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும் பயனை விளைவிக்கும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/98029.html#ixzz3UdysLeNh

தமிழ் ஓவியா said...

மூட மக்கள்

ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.
(விடுதலை, 24.9.1950)

Read more: http://viduthalai.in/page-2/98028.html#ixzz3Udz33A9L

தமிழ் ஓவியா said...

இளைஞர்களே, பாடம் கற்றுக் கொள்ளுங்கள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடந்த நான்கு நாள்களுக்கு முன் வெளிவந்த ஒரு செய்தி மிகவும் வேதனையையும் வெட்கத்தையும் தரக் கூடிய செய்தியாக அமைந்தது.

தேனி நகரத்தின் ஒரு பகுதி பழனிசெட்டிப்பட்டி என்பதாகும். அதில் ஓய்வு பெற்ற ஓர் ஆசிரிய மூதாட்டி வசித்து வருகிறார்.

அவருக்கு மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் இருவர் எல்லோரும் ஒன்றாகவே வாழுகிறார்கள்.

இந்த இரு பேரப் பிள்ளைகளும் படிக்கிறார்கள். பாட்டியிடம் பாசத் துடன் பழகக் கூடியவர்கள்தான். பாட்டி தரும் பணம் - எடுக்கும்பணம் - இவற்றால் ஆடம்பரமான, வாழ்க் கையை வாழுவது, வெளியில் தங்குவது, கண்டபடி செலவழிப்பது - இப்படி ஒரு உல்லாசப் பொழுது போக்கில் - ஆடம்பர வாழ்வு மோகத் தில் திளைத்திருக்கிறார்கள்.

தற்போதைய இளைஞர்களைத் தவறான முறையில் நுகர்வோர் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கியிருக்கும் சின்னத் திரை விளம்பரங்கள் (இதனால் பல குடும்பங்களில் குடும்ப இல்லத்தரசி களும்கூட சீரழியும்! செய்திகள் ஒரு தனி சோகக் காவியம் படைக்க வேண்டிய தாகும்) போதாக்குறைக்கு நாசப்படுத்தும் குடி - டாஸ்மாக் மதுக் கடைகள் - மதுப் பழக்க வழக்கங்கள் - இதனால் இவர் களுக்குப் பணத் தேவை அதிகமாகி யிருக்கிறது.

அதனைப் பெற இளைஞர்களேகூட பல தீய வழிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிறார்கள்!

தேனி - பழனி செட்டிப்பட்டி ஓய்வு பெற்ற ஆசிரியையின் பரிதாபக் கதைக்கு வருவோம்.

அந்தப் பாட்டியின் பணத்தைக் களவாடி செலவிட இந்த அண்ணனும் - தம்பியும் (பேரப்பிள்ளைகள்) திட்டம் போட்டனர். பாட்டி தூங்கும்போது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்று விட்டு, இவர்களும் துக்கத்தில் பூனைகள் போல் கலந்து கொள்கிறார்கள். பிஞ்சு வயதில் ஏறிய நஞ்சு - மனப்பான்மை - வித்தியாசமான நடத்தை மூலம் - விசாரணையில் இவர்கள் அகப்பட்டுக் கொள்ளுகிறார்கள்.

தங்களது கொலைக் குற்றத்தை தாங்களே ஒப்புக் கொண்டு விடுகிறார்கள்!

இந்தச் செய்தி கேட்டு தன்னுடைய தாய், தன்னுடைய மாமியார் கொலை செய்யப்பட்டது - தனது இரு பிள்ளை களாலே என்ற வேதனை, குடும்பத்தில் இருந்த மூதாட்டியாரை இழந்ததை விடப் பெருத்த அவமானம் நிறைந்த கொடுமை என்பதால் அவ்விருவரும் தற்கொலை செய்து மாண்டு விடுகிறார்கள்!

என்னே விபரீதம்! வருந்தத்தக்க முடிவு. வேதனை இந்த வாழ்ந்த குடும்பத்திற்கு. இச்செய்தியால் இந்த இளை ஞர்கள் இனி, பாடம் பெற்று தான் என்ன பயன்?

இந்த சம்பவம் பலருக்குப் பாடமாக அமைய வேண்டிய நிகழ்வு ஆகும்!

ஆடம்பர வாழ்க்கை ஒரு மனிதனை கள்ளனாக்கும், குடிகார னாக்கும், சூதாடியாக்கும், சுய கவுரவம்பற்றி மறக்கச் செய்யும்; எந்தக் குற்றத்தையும் செய்யத் தயங்காத வெறித்தனத்திற்கும் தள்ளி விடும்.

எளிமை வாழ்வும், சிக்கனமும் மனிதர்களை வாழ வைக்கும்; தன் மானம் காக்கும்; தகைசால் மனிதர் களாக உயர்த்தும்!

எனவே இளை ஞர்களே, இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்!- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/98030.html#ixzz3UdzFeQJ3