Search This Blog

31.3.10

நடிகைக்கும், நித்திய ஆனந்தாவுக்கும் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப்-கடவுளை அடைய ஆனந்த வழியாம்!


நித்யானந்தா உள்ளிட்ட மோசடி சாமியார் கும்பலை கைது செய்க!
உள்நாட்டு, வெளிநாட்டு சொத்துகளை அரசுடைமையாக்குக!
கருநாடக, மத்திய அரசுகளுக்கு தமிழர் தலைவர் முக்கிய வேண்டுகோள்!

காமலீலை நித்யானந்தா சாமியார்களின் மோசடி கும்பலைக் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும். வெளிநாடு, உள்நாடு ஆசிரம சொத்துக் களை அரசுடைமையாக்கி, மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தவேண்டும். கருநாடக அரசும், மத்திய அரசும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

ரூ.5 ஆயிரம் கோடியில்
நித்யா சுகபோக வாழ்க்கை அம்பலம்

பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற ஓர் 32 வயது இளைஞன் திடீரென நித்தியானந்தாவாக அவதாரம் எடுத்து, காவி உடை தரித்து, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆன்மிக வியாபாரம் செய்து, சுமார் ரூ.5 ஆயிரம் கோடி சொத்துகளைச் சேர்த்து, பல ஊர்-களிலும் மடங்கள், தியான பீடங்கள் என்று அமைத்து, அதில் சினிமா நடிகைகள், வாழ்க்கையில் விரக்தி அடைந்த மணவிலக்குப் பெற்ற பெண்கள், விதவைகள், குடும்பப் பெண்கள் முதலிய பலருடன் யோகா, தியானம் என்பவைகளைக் காட்டி அவர்களின் கற்பையும் சூறையாடி, சுகபோக வாழ்க்கை நடத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது!

இந்த கிருஷ்ணருக்கு வந்து பணிவிடை செய்த பெண்களுக்கெல்லாம் கோபிகா என்ற அடைமொழியில் பெயர்கள்! என்னே ஆன்மிகம்! என்னே கடவுள் பக்தி!!

லீலைகள் - அசிங்கங்கள்

இளம் பையன்கள் எல்லாம் கடத்தப்பட்டும், ஓடோடி வந்து இந்த ஆசிரமத்தில் தங்கியவர்களுடன் லீலைகள் ஆத்ம போதனை என்று எழுதமுடியாத அசிங்கங்களின் அரங்கேற்றங்கள் எல்லாம் நடந்ததுபற்றி, தொலைக்காட்சிகளும், மீடியாக்களும், நக்கீரன் போன்ற ஏடுகளும் வண்டி வண்டியாக தகவல்களைத் தந்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன!

தவியோ தவி என்று தவித்து!

பல படித்த பாமர முண்டங்கள் இந்த மோசடிப் பேர்வழி விரித்த ஆன்மிகப் பயிற்சி தியான, யோகா பயிற்சி வலைகளில் நன்றாக மாட்டிக்கொண்டு, அறுத்தெறியத் தெரியாது வேடனிடம் சிக்கிய புள்ளி மான்களாக ஆகி, தவியோ தவி என்று தவிக்கின்றார்கள்! அவமானத்தில் தலைகுனிவுடன் உள்ளார்கள்.

ஏதோ ஒரு குப்பையைக் கிளறினால் ஏதேதோ வருமாமே அதுபோன்று இந்த ஆசாமிபற்றி வரிசையாக அருவருப்புச் செய்திகள்.

சொகுசானந்தாவுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள்?

குறுகிய காலத்தில் இந்த சுந்தர கோஷ் சொகுசானந்தாவுக்கு இவ்வளவு சொத்துகள் சேர்ந்தது எப்படி?

இந்த மோசடிப் பேர்வழியை வளர்த்துவிட்ட குற்றவாளிகள் பெரிதும் வார ஏடுகளே!

மீடியாக்களின் எல்லை மீறல் விளம்பரங்கள் விதவிதமான போஸ்களில் அந்தப் பித்தலாட்டக்காரனின் படம், வாரந் தவறாமல் கட்டுரை அதையும் பேச்சுகள், எழுத்துகள் மற்றும் சி.டி., புத்தகங்கள் தமிழ், இங்கிலீஷ் மற்றும் பல மொழிகளில் எழுதிட பல கூலி போலி எழுத்தாளர்கள் , ஏஜண்டுகள், கங்காணிகள் இத்தியாதி! இத்தியாதி!!

அமைச்சர்கள், அதிகாரிகள்

இதில் ஒரு மகாவெட்கக்கேடு, நன்றாகப் படித்தவர்கள், பெருநிலை அதிகாரிகள், கருநாடக முதலமைச்சர் போன்ற பெரும் பதவியாளர்கள் எல்லாம் அவருடைய மடத்திற்கும், கூட்டங்களுக்கும் சென்றதால், அதைவிட பெரு விளம்பரம்; தொத்து நோய் போன்ற பக்திப் பரவசம்; பணத்தைத் தண்ணீராகச் செலவிட்டு, ஒரு கார்ப்பரேட் (வியாபாரக்) கம்பெனி போல இவரது அமைப்புகள் நடந்தன!

வெளிநாட்டில், அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளில் இவரது லீலா வினோத திருவிளையாடல்களுக்கு தனித்தனி பாஷ் (றிஷீலீ) மாட மாளிகை, கோபுரங்கள், கோயில்கள் என்ற திரையுடன்!

சீடர்கள், சீடிகள் எல்லாம்!

இப்போது இங்குள்ள சீடர்களால், சீடிகள் எல்லாம் அம்பலத்திற்குப் பல செய்திகளை அடுக்கடுக்காகக் கொண்டு வரப்படுகின்றனவோ, அதுபோல அமெரிக்காவில் இவரது கிருஷ்ண லீலைகளை அமெரிக்கவாழ் சீட கோடிகளே, அங்குள்ள அரசு (பிராசிகியூஷன்) வழக்குரைஞருக்குப் புகார் மனுவாகக் கொடுத்துள்ளனர்.

பல இடங்களிலும் அப்ரூவர்கள் யாரும் கேட்காமலேயே சுயம்புவாகக் கிளம்புகின்றனர்!

நித்யானந்தா என்ற காவி உடை ஏமாற்றுப் பேர்வழி ஆன்மிக வேடத்தில் பல மோசடிகள் செய்து வருகிறார்.

தேசத்தின் மானம் கப்பல் கப்பலாக ஏறி!

1. கலிபோர்னியாவில் நித்யானந்தா பவுண்டேசன் 2. லைஃப் பிள்ளீஸ் பவுண்டேசன் 3. நித்திய யோகா 4. வேதிக் டெம்பிள் 5. தியான பீட பவுண்டேசன் என்று பல வகையிலும் 2003 இல் தொடங்கி அவரோடு ஒட்டி உறவாடிய பக்தன் டக்ளஸ் மெக்கெல்லர் என்ற அமெரிக்கர் அந்த கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலுக்குப் புகார் மனுக்களை ஆதாரத்தோடு தந்து, கிரிமினல் மற்றும் சிவில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ள செய்தி, நாறடிக்கின்றது!

இந்தத் தேசத்தின் மானம், மரியாதை எல்லாம் கப்பல் கப்பலாக ஏறி வெளிச்சம் போட்டுக் காட்டி நம்மை வெட்கப்பட வைத்து வருகிறது!

நித்யானந்தா டக்ளஸ் மெக்கல்லர் என்பவர் சுவாமி நித்திய பிரபா கூறுகையில், அறையில் பெண்களுடன் இருக்கும்போது அறைக்கு வெளியே என்னைத்தான் பாதுகாவலராக நிறுத்தி வைப்பார் என்றும், நித்யானந்தா நடத்தும் யாகங்களில் யாக குண்டத்தில் காய்ந்த கஞ்சா விதைகளைப் போடுவார்.

2007 ஆம் ஆண்டு நித்யானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருத்தரை கலிபோர்னியாவுக்குக் கூட்டி வந்தாரு; அவங்க பேரு எனக்கு நினைப்பில்லே, ஆனா அவர்கள் திருமணம் ஆனவங்க என்பது மட்டும் தெரியும். அந்த நடிகைகூட என் வீட்டுல 15 நாள் தங்கியிருந்தார். அந்த நடிகைக்கும், நித்திய ஆனந்தாவுக்கும் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப் இருந்ததை நான் புரிஞ்சுகிட்டேன். அதைப் பத்தி அவரிடமே கேட்டேன்.

கடவுளை அடைய ஆனந்த வழியாம்!

கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்னு என்கிட்டே சிரிச்சுக்கிட்டே சொன்னாரு என்று கூறுகிறது அந்தக் கடிதம். அது மட்டுமா?

ஆசிரமத்திற்கு வந்த பல பெண்களோடு குரூப் செக்ஸ் வெச்சுகிட்டதையும் என்னால் உணர முடிந்தது. பல பெண்களோடு சந்தோஷமாக இருக்கிறதை அவர் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை!

பிரத்தியேகமான அறை

சனாதன கோயிலில் நித்தியானந்தாவின் பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக்கிரகத்திற்குப் பக்கத்திலேயே சகல வசதிகளோடு கூடிய சொகுசு அறை இருக்கு. அவருக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான அறை அது! ................ இதற்குமேல் எழுதி நம் தரத்தைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

ஆன்மிகத்தை உலகமயமாக்கி...?

இதுபோன்ற பல்வேறு குற்றங்களை சர்வதேச ரீதியில் செய்து, ஆன்மிகத்தை உலக மயமாக்கி கோபியர் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா என்ற கலியுக புருஷன் இந்த கிரிமினல் பேர்வழி சட்டத்தின் பிடிகளிலிருந்து தப்பிட, ஆசிரமத்தை வேறு ஒரு ஆனந்தாவிடம் விட்டுவிட்டு, இவர் தனியே ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடப் போவதாக ஒரு கபட நாடகம் போட்டுள்ளார்! இதை அரசுகள் ஏற்கப் போகின்றனவா? சட்டப் பிடியிலிருந்து தப்புவதற்குத்தானே இந்த தற்காலிக ஏற்பாடு?

மோசடி கும்பலுக்கு
சரியான தண்டனை

காலாவதியான மருந்துகள் விஷயத்தில் கடும் நடவடிக்கை எவ்வளவோ, அதைவிட மோசமான தேசியக் குற்றம் காலாவதியான பக்தி, மத வேடங்கள் அணிந்து பல்லாயிரக் கோடிகள் சொத்து சேர்த்த குற்றவாளி ஏதோ ராஜபோக வாழ்வு வாழ விட்டுவிடுவதாகும்.

1. இந்த மோசடிக் கும்பலைக் கைது செய்து சட்டத்-தின்முன் நிறுத்தி சரியான தண்டனை வழங்கவேண்டும்.

அரசுடைமையாக்க வேண்டும்!

2. அந்த ஆசிரமங்கள் உள்நாட்டு, வெளிநாடுகளிலும் உள்ளவைகளை அரசுடைமைகளாக்கி எடுத்துக்கொண்டு, மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்திடவேண்டும்.

கருநாடக அரசும், மத்திய அரசும் இதுபற்றி அலட்சியமாக இருக்கக் கூடாது.

அரசுகள் வெறும் ஓட்டுக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல், நாட்டுக் கண்ணோட்டத்தோடு, பார்க்க முன்வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும்.

சென்னை

31.3.2010

தலைவர்,

திராவிடர் கழகம்

குடிஅரசு 50 தொகுதிகள் வெளிவரும் - ஆசிரியர் வீரமணி அறிவிப்பு

தலைமுறைகளைக் கடந்தும் தேவைப்படும்
குடிஅரசு கருவூலங்கள்

1926, 1927, 1928 ஆம் ஆண்டுக்கான குடிஅரசு தொகுப்புகள் தந்தை பெரியார் அவர்களின் கட்டுரைகள் உரைகள் அடங்கிய தொகுப்பு ஆண்டு ஒன்றுக்கு இரு தொகுதிகள் வீதம் ஆறு தொகுதிகள் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது. (30.3.2010, மாலை).

பல்துறைப் பெருமக்கள்

பல்துறைகளைச் சேர்ந்த பெருமக்கள், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பகுத்தறிவாளர்கள், கழகத் தோழர்கள் அடங்கிய மன்றம் நிரம்பி வழிந்தது.

17.9.2009 அன்று தந்தை பெரியார் பிறந்த நாளில் வீடியோ கான்ஃபரன்சிங்மூலம் 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை முதலமைச்சர் கலைஞர் சேலத்தில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ஆறு தொகுதிகள் (இதுவரை 7) வெளியிடப்பட்டுள்ளன.

புரட்சி மகுடம்!

குடிஅரசு என்பது இதழ்கள் உலகில் தனி ஒளிவீசும் புரட்சி மகுடமாகும்.

பழைமையைச் சூறையாட வந்த புரட்சிப் புயல் பெண்ணடிமையைப் பெயர்த்து எறிய வந்த பூகம்பம், முன்னேற்றத்தின் புதிய திக்குகளைக் காட்ட வந்த கலங்கரை விளக்கு.

குடிஅரசு என்ன கூறுகிறது?

குடிஅரசு முதல் இதழின் தலையங்கம் (2.5.1925) பின்வருமாறு கூறுகிறது.

மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும், சகோதரத்துவமும் தோன்ற வேண்டும்; ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகலவேண்டும். உலகில் அனைத்தும் ஒன்றெனும் எண்ணம் உதிக்கவேண்டும். வகுப்புச் சண்டைகள் மறையவேண்டும். மேற்சொன்ன கொள்கைகளைப் பரவச் செய்வதற்காக நாம் உழைக்கும் காலத்தில், நம்மைத் தாக்குபவர்களுடைய வார்த்தைகளையா வது, செய்கைகளையாவது நாம் சிறிதும் பயமின்றி - சினேகிதர், விரோதி என்ற வித்தியாசமில்லாமல் யாவரையும் கண்டிக்க நாம் பயப்படப் போவதில்லை.

என்று அய்யா அன்று கொடுத்த சங்கநாதம் இன்னும் வெவ்வேறு தடங்களில் ஒலி முழக்கமாகக் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது.

குடிஅரசு விட்ட இடத்தில் விடுதலை தொடர்கிறது

வெற்றிகள் பல ஈட்டப்பட்டுள்ள நிலுவைகள் பல நம் முன் நிற்கத்தான் செய்கின்றன. குடிஅரசு விட்ட இடத்திலிருந்து விடுதலை தன் வீரப்பிரதாபங்களைக் காட்டிக் கொண்டுதானிருக்கிறது. விவேகப் பூக்களை அன்றாடம் மலர்வித்துக் கொண்டுதானிருக்கிறது.

குடிஅரசு இதழ் தொடக்க நாளை சுயமரியாதை இயக்கத்தின் பிறந்த நாளாகக் கூறும் ஆய்வாளர்கள் உண்டு அதனைப் பிழையென்றும் கூற முடியாது. காரணம், தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை தமது சுய சிந்தனையில் வெடிக்கும் புரட்சிக் கருத்துகளைப் பரப்புவதற்காகவே தோற்றுவித்தார்.

அப்படிப் பார்த்தால், குடிஅரசும் சுயமரியாதை இயக்கமும் வெவ்வேறானவை யல்லவே!

அமைப்பின் பெயரோ சுயமரியாதை இயக்கம் இதழின் பெயரோ குடிஅரசு. அதன் முதல் தலையங்கத்திலேயே சுயமரியாதை உணர்ச்சியைப் பரப்புவதே தன் நோக்கம் என்று கூறியிருக்கிறார்!

சுயமரியாதை என்ற பெயர்

விழாவில் பங்குகொண்டு ஆறு தொகுதிகளையும் வெளியிட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்ததற்கான காரணத்தைக் கூறியதைக் குறிப்பிட்டார்.

இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த் தாலும் அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய சுயமரியாதை என்ற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது (குடிஅரசு, 1.6.1930) என்பதுதான் அமைச்சர் சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் அகராதிப் பொருள்.

இடையில் பிரிட்டீஷ் அரசின் அடக்குமுறை வாள் வீச்சுக்குக் குடிஅரசு ஆளானபோது, வெவ்வேறு பெயர்களில் இதழ்கள் குடிஅரசின் குரலையே ஒலித்ததுண்டு. புரட்சி, பகுத்தறிவு என்று புதுப் பெயர்கள் பூண்டு தமது கொள்கையில் கால் மாத்திரை அளவுக்குக்கூட குறைவின்றி ஒலிக்கச் செய்த யுகத் தலைவர்தான் தந்தை பெரியார்.

தமிழுக்குத் தந்தை பெரியார் என்ன செய்தார் என்று ஏகடியம் செய்யும் ஈயம் பித்தளைகளின் முகத்தில் தந்தை பெரியார் நடத்திய இதழ்களின் பெயர்களே மொத்தும்.

எழில் கொஞ்சும் தமிழ்ப் பெயர்கள்

குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை இவற்றைவிட எழில் கொஞ்சும் இனிய தமிழில் எழுச்சி முரசு கொட்டிய கோமான்கள் யார்?


30.4.1933 நாளிட்ட குடிஅரசு இதழில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைச் சித்திரம் ஒன்றைத் தீட்டினார் குடிஅரசுபற்றி,

போர் முகத்தில் அணிவகுக்க இன்றழைத்தாய்

பொதுவுடைமை முரசறையக் கோலெடுத்தாய்

ஓர் முகத்தில் சந்தோசம் ஒன்றில் வாட்டம்

உண்டாக்கும் அரசியலை விழிநெறித்தே

ஊர் முகத்தில் நிற்காதே என முழங்க

ஒன்பதாம் ஆண்டினிலே உயர்ந்தாய் இந்நாள்

பார்முகத்தைச் சமப்படுத்த ஓகோகோகோ

பறந்தேறுகின்றாய் நீ வாழி நின்றே!

என்று பாடுகின்றார் புரட்சிப் பாவலர்.

அத்தகு குடிஅரசு கருவூலக்கிடங்கிலிருந்து கருத்து மணிகளைத் தொகுத்து வெளியிடும் பணியைத்தான் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் செய்து வருகிறது.

இயக்க வெளியீடுகள்

இதற்குமுன் பெரியார் களஞ்சியம் எனும் பெயரில் பொருள் வாரியாக இதுவரை 32 தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

கடவுள் _ 3 தொகுதிகள்

மதம் _ 7 தொகுதிகள்

பெண்ணுரிமை _ 5 தொகுதிகள்

ஜாதி _ தீண்டாமை ஒழிப்பு _ 17 தொகுதிகள் என்று வெளிவந்துள்ளன.

குடிஅரசின் பல கட்டுரைகளையும் சிறுசிறு வெளியீடாகவும் மக்கள் கரத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் பட்டுள்ளன.

பெரியார் களஞ்சியம், குடிஅரசு தொகுப்பு தொகுதிகள் என்று இன்னொரு வடிவத்தில் இப்பணிகள் நடந்து வருகின்றன.

1949 ஆம் ஆண்டுவரைக்கான தொகுதிகள் விரைவாக வெளிவரும்.

பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமிருந்து எழுத்தாளர் சின்னக்குத்தூசி பெற்றுக்கொண்டார். உடன் தமிழர் தலைவர் கி. வீரமணி, கோ. சாமிதுரை ஆகியோர் உள்ளனர்.

அடுத்த கோட்டை அருப்புக்கோட்டை

அடுத்து, சுயமரியாதைக் கோட்டையாகிய அருப்புக்கோட்டையில் வெளியிடும் விழா நடைபெறும். மாண்பு-மிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களே தாமாக முன்வந்து இத்தகையதோர் விழைவினை வெளிப்படுத்திக் கொண்டார்.

அருப்புக்கோட்டை என்பது எண்ணற்ற சுயமரி-யாதைச் சுடர்களை ஈன்று புறந்தந்த புதுப் புறநானூற்று மண்ணாயிற்றே!

அருப்புக்கோட்டையையடுத்த சுக்லநத்தம் கிராமத்தில்தான் தந்தை பெரியார் தலைமை தாங்கி முதல் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார் (28.5.1928).

இதுவரை ஏழு தொகுதிகள்

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 17.9.2009 அன்று வெளியிட்ட பெரியார் களஞ்சியம் குடிஅரசு முதல் தொகுதி 344 பக்கங்களைக் கொண்டதாகும். நன்கொடை ரூ.220. 2 முதல் 7 வரை நேற்று வெளியிடப்பட்ட 6 தொகுதிகளின் மொத்த பக்கங்கள் 2160.

6 தொகுதிகளில் மொத்த கட்டுரைகள் 626 ஆகும்.

இவ்வளவு மலிவு விலையிலா?

ரூ.1390 மதிப்புள்ள 6 தொகுதிகளும் நேற்று வெளியீட்டு விழாவையொட்டி ரூ.390 தள்ளுபடி செய்யப்பட்டு, ரூபாய் ஆயிரத்துக்கு அளிக்கப்பட்டது.

ஆறு தொகுதிகளையும் அடக்கிக் கொள்ளும் அழகிய பையில் வைத்து நூல்கள் அளிக்கப்பட்டன.

இரவு 7.15 மணி அளவில் வெளியீட்டு விழா தொடங்கப்பட்டது. திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் அறிமுகவுரையை வழங்கினார்.

இயக்கம் வெளியிட்டு வரும் வெளியீடுகள் குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார்.

35 ஆண்டு காணும் பெரியார் நூலகம்- ஆய்வகம்

இந்த வெளியீட்டு விழாவோடு, சென்னை பெரியார் திடலில் இயங்கிவரும் பெரியார் பகுத்தறிவு நூலகம் ஆய்வகத்தின் 35 ஆம் ஆண்டு விழாவும் இணைத்துக் கொண்டாடப்பட்டது.

இந்நூலகம் 17.9.1974 அன்று மாண்புமிகு கல்வி அமைச்சர் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்-களின் தலைமையிலும், அன்னை மணியம்மையார் முன்னிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தமிழர் தலைவர் அளித்த அரிய நூல்கள் 10,227

பல்துறைகளைச் சார்ந்த 50,236 நூல்கள் இந்நூலகத்தில் அணி செய்கின்றன. தமிழர் தலைவர் தமது இல்லத்தில் சேர்த்து வைத்திருந்த 10,227 அரிய நூல்களையும் இந்நூலகத்திற்கு வழங்கினார் தமது 75 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி. மாண்புமிகு ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அப்பகுதியை நூலகத்தில் திறந்து வைத்தார்.

26 வெளிநாட்டு ஆய்வாளர்களையும் சேர்த்து இதுவரை 376 ஆய்வுகள் இந்நூலகத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு எம்.ஃபில்., பிஎச்.டி., பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

வெளிநாடு என்கிறபோது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், சுவீடன், பிரான்சு, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை முதலிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் அடங்குவர்.

கொல்கத்தா ராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை 2009 இல் இந்நூலகத்தின் பணிகளைப் பாராட்டி ரூபாய் ஒன்றரை லட்சம் அளித்து ஊக்கப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நூலகத்தின் சிறப்பை விளக்கி தினமணி ஒரு சிறப்புக் கட்டுரையைக்கூட வெளியிட்டதுண்டு (22.2.1998). இத்தகவல்களை தமது அறிமுக உரையில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் எடுத்துக் கூறினார்.

நூலகத்தைச் சிறப்பாக நடத்தி வருவதற்காக நூலகர் கோவிந்தன் அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு சால்வை போர்த்தி பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

கழகப் பொருளாளர் வரவேற்புரை

திராவிடர் கழகப் பொருளாளரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நிருவாகக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் கோ. சாமிதுரை வரவேற்புரையாற்றினார்.

குடிஅரசு இதழின் ஆறாம் ஆண்டையொட்டி தந்தை பெரியார் எழுதிய செய்தியை படித்தார். குடிஅரசு இதழ் விருப்பு, வெறுப்பு இல்லாது பாடுபட்டு பார்ப்பனியத்தை ஒழித்து, பார்ப்பனரல்லாத மக்களுக்கு இன்று ஓரளவுக்கு திருப்தி ஏற்படுத்தும் வகையில் தொண்டாற்றி வருகிறது என்று பெரியார் கூறிய செய்தியை, அவருடைய உரையின்மூலம் விளக்கினார்.

பகுத்தறிவு குடும்பத்தைச் சார்ந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குடிஅரசு இதழை வெளியிடுவதற்கு வந்திருப்பது பொருத்த-மானது. இந்த விழாவில் வரவேற்புரையாற்ற எனக்கு வாய்ப்பளித்த நமது தமிழர் தலைவருக்கு நன்றி என்று கூறினார்.

கயல் தினகரன்

பகுத்தறிவாளரும், திராவிட இயக்க எழுத்தாளரும், பத்திரிகையாளரும் சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுவின் தலைவருமான கயல் தினகரன் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

சூடு சுரணையற்றுக் கிடந்த தமிழின மக்களுக்குச் சுயமரியாதை உணர்வூட்டிய தந்தை பெரியார் வாழ்ந்த இந்த இடம் வெறும் திடல் அல்ல; பெரியார் கடல் ஆகும் என்று சொன்னபொழுது கரவொலி எழுந்தது.

தமிழ்முரசு ஏட்டின் ஆசிரியராகவும், முரசொலியில் துணை ஆசிரியராகவும், செய்தியாளராகவும் இருந்த நிலையில், தந்தை பெரியார் அவர்களைக் காணவும், ஒரு-முறை பேட்டி காணவும் தமக்குக் கிடைத்த வாய்ப்-பினை மிகப்பெருமையாகக் குறிப்பிட்டார்.

உடல் உபாதையோடு முக்கல் முணுகலோடு தமிழ்ச் சமுதாயத்திற்கு அய்யா ஆற்றிய தொண்டை அளவிடவே முடியாது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகளவிலேயேகூட தந்தை பெரியார் அவர்களுக்கு ஈடு இணையான தலைவர் கிடையவே கிடையாது.

இரட்டைக் குழல் துப்பாக்கிகள்

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருந்து தமிழின உணர்வை உரிமைகளைக் காப்பாற்றி வருகின்றன.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்களுக்குப் பிறகு திராவிடர் கழகத்தை தமிழர் தலைவர் சீரிய முறையில் வழிநடத்திச் செல்கிறார். அதுபோலவே, அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு கலைஞர் அவர்கள் கழகத்தையும், தமிழர்களையும் காத்து வருகிறார் என்று குறிப்பிட்டார் கயல் தினகரன் அவர்கள்.

கயல் என்ற அச்சகத்தை அவர் நடத்தி வந்ததால், அந்த அச்சகம் அவர் பெயரில் முன்னொட்டாக இணைந்து கொண்டது.

குலக்கல்வித் திட்டம்

மற்றொரு முக்கியமான தகவலையும், கருத்தையும் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய வகையில் எடுத்துக்காட்டினார் கயல் தினகரன்.

1952 இல் ராஜாஜி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது குலக்கல்வித் திட்டம் என்ற வருணாசிரமத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அரை நேரம் பள்ளிப் படிப்பு, மீதி அரை நேரம் அப்பன் செய்யும் குலத்தொழிலை மகன் செய்யவேண்டும் என்பதுதான் அந்தத் திட்டம்.

**************************************************************************************

ஆசிரமம் என்றால் என்ன?

1926 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் பிராமண அகராதி என்ற தலைப்பில் வினா_விடையாக கருத்துக்களை கூறியுள்ளார்.

அதில் ஆசிரமம் என்றால் என்ன கேள்வி? அதற்குத் தந்தை பெரியார் கூறும் விடை.

காந்தர்வ விவாஹமும்,

ராட்சச விவாகமும்

நடக்குமிடங்கள்

(குடிஅரசு, 2.5.1926) என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கு ஆசிரமங்களில் நடக்கும் ஒழுக்கக் கேடுகள்பற்றி 84 ஆண்டுகளுக்குமுன்பே படம் பிடித்துக் காட்டியுள்ளார் தந்தை பெரியார் என்று கழகத் தலைவர் நேற்றைய நிகழ்ச்சியில் குறிப்பிட்ட பொழுது சிரிப்பொலி அடங்க வெகுநேரமாயிற்று.

காந்தர்வ மணம் என்பது என்ன? ஆரியர்களின் கற்பியல் முறையைக் குறிப்பிடுவதாகும். இதற்கொரு எடுத்துக்காட்டுதான் பருவம் அடைந்திராத மீனவப் பெண்ணான மச்சகந்தியை பராசர் என்னும் முனிவர் பட்டப்பகலில் நடு ஆற்றிலே ஓடத்திலேயே புணர்ந்து ரிஷிப் பிண்டம் ரா தங்காது என்பதற்கேற்ப வியாசனைப் பெற்றெடுத்ததாகும். இதுபோல ஏராளமான புராண ஆதாரங்கள் உண்டு. பராச மகரிஷி செய்த அந்த வேலையைத்தான் யோகானந்த பரமஹம்சரும் இப்பொழுது செய்துகொண்டுள்ளார்.

ராட்சச திருமணம் என்றால் என்ன?

ஒருவன் தன் பலத்தினாலோ அல்லது சாமர்த்தியத்தினாலோ ஒரு கன்னிகையை, அவள் பெற்றோர், சுற்றத்தார்கள் முதலிய மற்ற யாருடைய சம்மதம் இல்லாமலே, சிறை பிடித்துத் தூக்கிக் கொண்டுபோய் தம் இஷ்ட காமியத்தைப் பூர்த்தி செய்துகொள்வதுதான் (விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புவோர் கழகம் வெளியிட்ட சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் எனும் நூலைப் பார்க்க).


பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள்
6 வெளியீடு

1926, 1927, 1928 ஆம் ஆண்டுகளுக்குரிய _ தந்தை பெரியார் அவர்களின் உரைகள், கட்டுரைகள் அடங்கிய பெரியார் களஞ்சியம் குடிஅரசு ஆறு தொகுதிகளை தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட முதல் பிரதிகளை பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பெரியார் பெருந்-தொண்டர் செய்யாறு பா. அருணாசலம் அவர்கள் ரூபாய் பத்தாயிரம் அளித்து பத்து தொகுதிகளைப் பெற்றுக்கொண்டார்.

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்கள் ரூபாய் 5000 அளித்து தொகுதிகளைப் பெற்றுக்கொண்டார்.

தமிழக மூதறிஞர் குழு செயலாளர் பொறியாளர் டாக்டர் வ. சுந்தர்ராஜுலு, எமரால்டு பதிப்பக உரிமை-யாளர் கோ. ஒளிவண்ணன், குஞ்சிதம் நடராசன், மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி, திராவிட இயக்க எழுத்தாளர் மயிலை க. திருநாவுக்கரசு, பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன், துணைத் தலைவர் புதுவை மு.ந. நடராசன், டாக்டர் சரோஜா பழனியப்பன், டாக்டர் சரோஜா இளங்கோவன் (சிகாகோ), மடிப்பாக்கம் சித்ரா சுந்தரம், பேராசிரியர் முனைவர் மங்களமுருகேசன், பரமேசுவரி கிருஷ்ணன், பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவன், எவர்கிரீன் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் பி. புருசோத்தமன் (ரூபாய் மூவாயிரம் அளித்து) மூன்று தொகுதிகளைப் பெற்றுக்கொண்டார்.

பாளையங்கோட்டை சுப. சீதாராமன், என்.ஜி.ஜி.ஓ. சங்கத் தலைவர் சூரியமூர்த்தி, ஆடிட்டர் அரங்க. இராமச்சந்தின், பொறியாளர் வேல். சோ. நெடுமாறன், தஞ்சாவூர் பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் கே.ஆர். பன்னீர்செல்வம், சைதை எம்.பி. பாலு, ஆவடி பா. தெட்சிணாமூர்த்தி, ஆர்.டி. வீரபத்திரன், வாய்ஸ் ஆஃப் ஓ.பி.சி. சார்பாக அதன் ஆசிரியர் பார்த்தசாரதி, திருமகள் இறையன், பண்பொளி கண்ணப்பன், வடசென்னை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தென்சென்னை ப.க. துணைத் தலைவர் பொறியாளர் கரிகாலன், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, பாவலர் புரட்சிதாசன் (2 தொகுதிகள்) பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான், கோபாலகிருட்டிணன், திருவள்ளூர் வழக்கறிஞர் கெ. கணேசன், வழக்கறிஞர் த. வீரசேகரன், தாம்பரம் லட்சுமிபதி, ஆதம்பாக்கம் சவுரியப்பன், விழுதுகள் பதிப்பகம் வேணு, தே. தயாளன் (பொதுச்செயலாளர், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி) முதலியோர் பணம் கொடுத்து மேடையில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் பெற்றுக்கொண்டனர்.

************************************************************************************



அந்த வருணாசிரமத் திட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் போராடி ஒழிக்காவிட்டால், தமிழர்களில் இன்றைய தினம் அய்.ஏ.எஸ்.,களையும், அய்.பி.எஸ்.களையும் பார்த்திருக்க முடியுமா? என்ற அருத்தமிக்க வினாவை உருக்கமோடு எழுப்பினார் தினகரன் அவர்கள்.

தமிழர்கள் வீடு ஒவ்வொன்றிலும் தந்தை பெரியார் படம் இடம்பெற்றிருக்கவேண்டும். பக்தர்களாக இருந்தால்கூட தந்தை பெரியார் படத்தை வீட்டில் மாட்டவேண்டும்.

இதுவரை அந்தப் படத்தை மாட்டாமல் இருந்தால், இந்தத் திடலை விட்டுச் செல்லும்போதே அந்தக் கடமையைச் செய்தே தீருவது என்ற உறுதியோடு செல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

கயல் தினகரன் அவர்கள் உரை உணர்ச்சிப் பூர்வமாகவும், உணர்வுப் பூர்வமாகவும், உருக்கமாகவும் அமைந்திருந்தது என்பதே சரியாகும்.

முனைவர் க. அறிவொளி

பொது நூலக இயக்குநர் முனைவர் க. அறிவொளி சுருக்கமாக அதேநேரத்தில் தந்தை பெரியார் கொள்கையோடு அவருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் இருந்து வந்த இருந்து வரும் ஈடுபாட்டை உணர்ச்சியோடு எடுத்துக் கூறினார்.

எடுத்த எடுப்பிலேயே எனக்கு அறிவொளி என்று பெயர் சூட்டியவர் தந்தை பெரியார்தான் என்று சொன்னபோது, ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது.

என் தந்தையார் இந்தக் கொள்கைக்காரர். அதனைத் தொடர்ந்து நான், என்னைத் தொடர்ந்து என் மகன் என்று வாழையடி வாழையாக சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபாடு உடைய குடும்பம் எங்கள் குடும்பம்.

கொள்கை வழியில் ஆசிரியர்

ஜெயங்கொண்டம் பயணியர் விடுதியில் தந்தை பெரியார் தங்கி இருந்தார். நான் தொடக்கப் பள்ளி மாணவனாக இருந்தபோது, என் தந்தையார் என்னையும், அய்யாவைக் காண அழைத்துச் சென்றார்.

நான் சிறுவன். பெஞ்சில் உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டிருந்தேன்.

என் தந்தையார் என்னைக் கண்டித்தார். அதைக் கவனித்த தந்தை பெரியார் அவர்களோ, என் தந்தையைக் கண்டித்தார். இன்று நினைத்தாலும் அந்த நிகழ்ச்சி தந்தை பெரியார்மீது எனக்கிருக்கும் மரியாதையை அதிகப்படுத்தியது என்று குறிப்பிட்டார்.

அன்றைக்கு தந்தை பெரியார் கொள்கைகளுக்கு நேரிடையான எதிர்ப்பு இருந்தது. இன்றைக்கு மறைமுகமாக இருந்துகொண்டுதானிருக்கிறது. ஆசிரியர் அவர்கள் அய்யா கொள்கைகளை நன்கு வழி நடத்திச் செல்லுகிறார் என்று குறிப்பிட்டார்.

மாண்புமிகு தங்கம் தென்னரசு

தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியார் அவர்களின் குடிஅரசு இதழ் தொகுதிகளை வெளியிடுவதில் மிகுந்த மன நிறைவு கொள்கிறேன்.

நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் சென்றால், அந்த நூலை முழுவதுமாகப் படித்துவிட்டே செல்லுவார். நாங்கள் அவரிடம் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொண்டவர்கள்தாம்.

அதேநேரத்தில், இன்று நான் வெளியிட்ட குடிஅரசு ஆறு தொகுதிகளில் ஒன்றைக்கூட நான் படிக்கவில்லை. வேறு தொகுதியில் நான் இருந்ததால், இந்தத் தொகுதிகளை நான் படிக்க வாய்ப்புக் கிட்டாமற் போய்விட்டது.

எந்தத் தொகுதி?

எந்தத் தொகுதியில் நாம் வெற்றி பெறுவதாக இருந்தாலும், இந்தக் குடிஅரசு தொகுதிகளில் நாம் எப்படி வெற்றி பெறுகிறோம் என்பதுதான் மிக முக்கியம் என்று அமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட கருத்து மிகவும் ஆழமானதாகும்.

இதன் பொருள்: அரசியலில் நாம் ஈடுபட்டாலும், தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளில் உறுதியாக இருந்தால்தான் நிரந்தர வெற்றியைப் பெற முடியும் என்பதாகும். இதைத்தான் அவருக்கே உரித்தான முறையில் ஆழமாகச் சொன்னார் அமைச்சர் அவர்கள்.

எனக்குள்ள வருத்தம் தந்தை பெரியார் அவர்களை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதுதான்.

ஆசிரியரைக் காணும்போது அய்யாவைக் காணுகிறோம்

புழு பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய்க் கிடந்த நம் மக்களை மானமுள்ள மக்களாக்கப் பாடுபட்ட தந்தை பெரியார் இன்று இல்லையென்றாலும், நமது ஆசிரியர் அவர்கள் அந்தக் கொள்கையை நாளும் மக்களிடம் எடுத்துக் கூறி அந்த உணர்வுகளை வளர்த்து வருகிறார்கள். ஆசிரியர் அவர்களைக் காணும்போது அய்யாவைக் காணும் உணர்வுகளை நான் மட்டுமல்ல, தமிழர்கள் பெறுகிறார்கள் என்று உணர்ச்சிப் பொங்கக் குறிப்பிட்டார் அமைச்சர்.

இன்றைய தினம் நம் தமிழர்கள் படித்தவர்களாக, பட்டதாரிகளாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, ஏன், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வர முடிந்திருக்கின்றது என்றால், அதற்குக் காரணம், தந்தை பெரியார் அல்லவா? அவர் இல்லாவிட்டால் இந்த ஏற்றங்கள் நமக்கு ஏது என்ற வினாவை மிகுந்த யதார்த்தத்தோடும், உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் அமைச்சர் கூறினார்.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தேவை!

இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த குடிஅரசு தொகுப்புகள் வாழும் நமது தலைமுறைக்கு மட்டுமல்ல; அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கும் தேவைப்படும் விலை மதிக்க முடியாத கருத்துச் செல்வங்களாகும்.

இத்தகைய பணிகளை மேற்கொண்டுவரும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு தமிழர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பல நேரங்களில் பல சங்கடங்களைச் சந்திப்பது உண்டு. அந்த நேரத்தில் எல்லாம் அவர் மனம் செல்லும் இடம் உருவம் நமது தமிழர் தலைவர்தான். வீரமணி எங்கே இருக்கிறார்? எப்பொழுது வருவார்? என்று கேட்பார். இதனை நான் அருகில் இருந்து பார்த்திருக்கின்றேன் என்று கூறினார்.

இவ்வளவு குறைந்த விலையிலா?

குடிஅரசு தொகுதிகளைப் பற்றி குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், இத்தனைப் பக்கங்களில் இவ்வளவு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட ஆறு தொகுதிகளை இதற்காகவென்றே தயாரிக்கப்பட்ட அழகிய பையில் வைத்து வெறும் ஆயிரம் ரூபாய்க்கு எப்படி கொடுக்க முடிகிறது என்பதை நினைத்துத் தாம் ஆச்சரியப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்றைக்கு நூல்கள் வெளியில் விற்கும் தன்மையை உணர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ஆளாகியிருக்கும் உணர்வைத்தான் பெறுவார்கள் என்பதில் அய்யமில்லை. கருத்துகள் பரவவேண்டும் என்ற நோக்கம் இதன்மூலம் தெளிவாகிறது என்றார் அமைச்சர்.

இந்த நூல்கள் மட்டும் கனமல்ல; இதற்குள் இருக்கும் கருத்துகளும் கனமானவைதான் என்று அமைச்சர் குறிப்பிட்டபோது பலத்த கைதட்டல்!

எல்லா நூலகங்களுக்கும் குடிஅரசு தொகுப்புகள்

இந்தக் கருத்துகள் மாணவர்கள் மத்தியில் செல்லவேண்டும். இங்கே பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களும் வந்திருக்கிறார். அய்யாவின் இந்தக் கருவூலங்கள் அனைத்து இடங்களுக்கும் செல்லவேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

சமச்சீர் கல்வியும், தந்தை பெரியாரும்!

சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதில் மனிதர்களை வருணசிரமம் பெயரால் பிளவுபடுத்துவதை எதிர்த்து மனித சமத்துவத்திற்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் பாடமே முதல் பாடம் என்று கல்வித் துறை அமைச்சர் சொன்னபோது, கரவொலி அடங்கிட வெகுநேரமாயிற்று.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் குடிஅரசில் பணிபுரிந்ததையும், தீட்டாயிடுத்து என்று குடிஅரசில் மு.க. என்ற பெயரில் எழுதியதையும் எடுத்துக் காட்டிப் பேசினார் அமைச்சர்.

ஆறு தொகுதிகளைக் கொண்ட குடிஅரசு வெளியீடு ஒவ்வொன்றிலும் பத்து தொகுதிகளை தம் சொந்தப் பொறுப்பில் ரூபாய் பத்தாயிரம் அளித்து பலத்த கைதட்டலுக்கிடையே தமிழர் தலைவரிடம் பெற்றுக்கொண்டார் அமைச்சர்.

தமிழர் தலைவர் உரை

கடந்த 20 நாள்களாக கடும் வெயிலுக்கிடையே தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவிட்டு, கோடையிலே இளைப்பாறக் கிடந்த குளிர்தருவே என்பதுபோல, அமைச்சர் அவர்களுக்கு இது ஓர் இளைப்பாறும் நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது.

இந்தத் தேதியை அமைச்சர் அவர்கள்தான் கொடுத்தார். இந்தத் தேதி வெற்றிக் கனியைப் பெரியார் திடலுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தேதியாக அல்லவா அமைந்துவிட்டது! (பலத்த கைதட்டல்).

தந்தை பெரியார் அவர்களைப் போல மனதில் தோன்றிய கருத்துகளை யார் மனம் புண்படுகிறது என்று பார்க்காமல் பளிச்சென்று சொல்லக்கூடியவர். வேறு யாரும் அல்லர்.

மதுரை மேலூரில் வெற்றிலைப்பாக்குக் கடைக்காரர்கள் தங்கள் ஆண்டு விழாவுக்காக தந்தை பெரியார் அவர்களை அழைத்தார்கள்.

அங்கு சென்ற தந்தை பெரியார் என்ன பேசினார்? நீங்கள் புகையிலை விற்பதால் புற்றுநோய் வருகிறது. வெற்றிலைப் பாக்குப் போடுவதால் கண்ட இடத்தில் எச்சில் துப்புகிறார்கள். எனவே, இந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறு நல்ல தொழிலை மக்களுக்குப் பயன்படும் தொழிலைச் செய்யுங்கள் என்று தந்தை பெரியார் சொன்னதை கழகத் தலைவர் எடுத்துச் சொன்னபோது, அமைச்சர் உள்பட பார்வையாளர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

கெட்ட பெயர் வாங்குவதுபற்றிக் கவலைப்படாதே!

யார் யாரை எல்லாம் பெரியார் கண்டித்தார்? எதை எதையெல்லாம் பெரியார் கண்டித்தார்? என்பதை தந்தை பெரியார் அவர்களே எழுதிய கட்டுரையிலிருந்து எடுத்துக்காட்டி, தமிழர் தலைவர் படித்தபோது, தந்தை பெரியார் எத்தகு எதிர்ப்புச் சூழலில் தமது தொண்டைத் தொடர்ந்திருக்கிறார் என்று ஒருகணம் எண்ணிப் பார்த்தால் தலைசுற்றுகிறது.

உண்மையான பொதுத்தொண்டு செய்ய விரும்புவோர் யாரும் கெட்ட பெயர் வாங்குவதுபற்றிக் கவலைப்படக் கூடாது என்பார் தந்தை பெரியார். மான உணர்வைப்பற்றிக் கவலைப்படாத மக்களிடம் எதற்காக நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று கேட்பார் தந்தை பெரியார் என்று கழகத் தலைவர் எடுத்துச்சொன்னபொழுது, திரண்டிருந்த மக்கள் அதில் உள்ள நியாயத்தை உணர்ந்ததுபோல உணர்ச்சிகளைப் பிரதிபலித்தனர்.

அண்ணா பெயரில் நூலகம்

மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களைப்பற்றி தமிழர் தலைவர் தெரிவிக்கும்பொழுது நல்ல பகுத்தறிவுவாதி அவர் தந்தையார் தங்கபாண்டியன் அவர்களும் அப்படியே. தந்தையார் வழியில் கொள்கை உணர்வோடு இருக்கிறார்.

சென்னை கோட்டூர்புரத்தில் பிரம்மாண்டமான முறையில் அறிஞர் அண்ணா பெயரில் நூலகம் ஒன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உறுதுணையோடு நமது கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் ஆர்வத்தோடு உருவாகிக் கொண்டிருக்கிறது. அதுவும் தந்தை பெரியார் அவர்களின் பெயராலே அமைந்த பெரியார் அறிவியல் மய்யத்தின் அருகில் உருவாவது பொருத்தமானது என்றார்.

சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தை விஞ்சக்கூடிய வகையில் இந்நூலகம் உருவாவதைப் பெருமை பொங்க எடுத்துரைத்தார் ஆசிரியர்.

50 தொகுதிகள் வெளிவரும்

குடிஅரசு தொகுப்பு தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். மாதாமாதம் வந்து கொண்டிருக்கும். 50 தொகுதிகள்வரை வரும் என்றும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் ஆசிரியர் கூறினார்.

இறுதியாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு நன்றி நவில, இரவு 9 மணிக்கு இந்த நேர்த்தியான விழா நிறைவு பெற்றது.

அறிவார்ந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட உணர்வோடு பொதுமக்கள் திரும்பினர்.


குடிஅரசு தொகுப்புப் பணிகளில் ஈடுபட்டோருக்குச் சிறப்பு

குடிஅரசு கட்டுரைகளையும், உரைகளையும் தொகுக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டு தங்கள் பங்களிப்பினைச் செய்தவர்களுக்கு விழா மேடையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவகுத்து சிறப்பு செய்தார்.

குடிஅரசு தொகுப்புப் பணியில் துணைச் செயலாளர்களாக தஞ்சை இரெ. இரத்தினகிரி, தஞ்சை மருதவாணன் ஆகியோர் சார்பாக அவர்களின் மகன்கள் முறையே கார்க்கி, லெனின் ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்பட்டது.

பேராசிரியர் மு.நீ. சிவராசன் (ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அதிகாரி, பெரியார் பயிலக நெறியாளர்), தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் சைதை மதியழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. பார்வதி, பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், இறைவி, க. விசேயந்திரன், தாஸ், விழிவேந்தன், மீனாகுமாரி, கலைவாணி, மணியம்மை, மரகதமணி, ரமா, இல.சங்கர், கதிரேசன், கலைச்செல்வி, பண்பொளி, பேராசிரியர் முனைவர் இராமு, புதுவை நடராசன், பெரியார் நூலக வாசகர் வட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியன், ஆசிரியர் நல்லதேவன், ஆசிரியர் குணசேகரன் ஆகியோருக்குத் தமிழர் தலைவர் கி. வீரமணி சால்வை அணிவித்துப் பாராட்டினார்.

தனது நிறைவு உரையிலும், மேற்கண்ட தோழர்களின் உழைப்புக்கும், ஆர்வத்திற்கும் மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார் கழகத் தலைவர் கி. வீரமணி.


------------------" விடுதலை” 31-3-2010 இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அத்துமீறல்களை ஒடுக்கவேண்டும்


அதிராம்பட்டினத்தில் ஒத்திகையா?

இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவாரங்கள், பாரதீய ஜனதா கட்சி இவற்றின் அன்றாட திருப்பணியே ஆங்காங்கே மதக் கலவரங்களை உருவாக்கி, அதன்மூலம் இந்து வெறியை ஊட்டிக் குளிர்காய்வதுதான்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை வட்டாரங்களில் அடிக்கடி இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதைத் தங்களின் வழமையான பணியாகவே கொண்டுள்ளனர்.

அதிராம்பட்டினத்தில் உள்ள ஏ.ஜே. பள்ளிவாசல் சுற்றுச்சுவர் அண்மையில் இடிக்கப்பட்டது. கோட்டாட்சியரிடம் முறைப்படி புகார் கொடுக்கப்பட்டது. கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி அந்தச் சுவர் பள்ளிவாசலுக்குச் சொந்தமானதுதான் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

பொறுக்குமா விஷமிகளுக்கு? மீண்டும் அந்தப் பள்ளிவாசல் சுவரினை மதவாதக் கும்பல் இடித்தது. இதனை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முசுலிம் அமைப்புகள் அறிவித்தன.

ஆர்ப்பாட்டத்தில் 4000 முசுலிம்கள் பங்கேற்றனர். இந்து முன்னணியின் கலவரங்களுக்குத் துணை போக விரும்பாத இந்துக்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கடைகளும் அடைக்கப்பட்டன.

முஸ்லிம்களின் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்யக்கூடாது என்று திட்டமிட்ட சங் பரிவார்க் கும்பல் போட்டி ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

இரண்டு மீனவத் தெருக்களுக்கு இடையே நிலவி வந்த வாய்க்கால் தாவாவைப் பயன்படுத்தி கலவரத்திற்குக் கத்தியைத் தீட்டினர்.

வேண்டுமென்றே ஒரு கலவரத்தை உருவாக்குவதற்காகத் தீட்டப்பட்ட இந்தச் சதித் திட்டத்திற்கு, எதிர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதியளிக்கக் கூடாது என்று காவல்துறையிடம் எழுத்து மூலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட தகவல் அளிக்கப்பட்டது.

பா.ஜ.க. வகையறாக்களின் உள்நோக்கத்துடன் கூடிய ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இந்துக்களும் ஆதரவு தராத நிலையில், பா.ஜ.க.வினரின் முயற்சி படுதோல்வியை அடைந்தது. தொடக்கத்தில் சங் பரிவார் நடவடிக்கைகளுக்கு ஓரளவு ஆதரவு காட்டி வந்தவர்களும், இந்துக்களும் நாளடைவில் அவர்கள் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, ஆதரவினை விலக்கிக் கொண்டனர். இதன்மூலம் இவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு விட்டனர்.

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பகுதியில் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கூட ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் கலவரம் விளைவித்ததுண்டு. முத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலையையும்கூட அவமதித்தனர். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைமைகளே பின்பலமாக இருந்து குறிப்பிட்ட சில பகுதிகளில் பிரச்சினைகளை உருவாக்கத் தீனிபோட்டும் வருகின்றன. உளவுத் துறையும் இதன் விஷ ஊற்றைக் கண்டுபிடித்து, தொலைநோக்குக் கண்ணோட்டத்தோடு செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வட்டாரங்களில் கணிசமான அளவு முஸ்லிம்கள் இருக்கும் நிலையில், அதனைக் குறி வைத்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதுதான் பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் நோக்கமாகும்.

குறிப்பிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் வியாபாரம் உள்ளிட்டவைகளில் செல்வாக்குப் பெற்றிருப்பது இயல்பானதே! அதனை ஏதோ இந்துக்களுக்கு எதிரான ஒன்று என்று திசை திருப்பி அப்பாவிகளைத் தூண்டிவிடும் விஷமத்தனத்திற்கு முஸ்லிம்கள் அல்லாதார் இரையாகக் கூடாது. காவல்துறையும் கவனமாக இருந்து ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அத்துமீறல்களை சட்ட ரீதியாக ஒடுக்கவேண்டும் என்பதே நல்லிணக்கத்தை விரும்பும் பொதுவான மக்களின் எதிர்பார்ப்பாகும்.


--------------------”விடுதலை” தலையங்கம் 30-3-2010

30.3.10

சோ ராமசாமியின் அக்ரகாரச் சிந்தனை!


சோ!

திருவாளர் சோ ராமசாமி ஏதோ சிந்திக்கக் கூடியவராம். இந்த வார துக்ளக் (31.3.2010) தலையங்கத்தில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட தலைமைச் செயலகம்பற்றி வழக்கமான பாணியில் அகடவிகடக் கிண்டல்கள், அரட்டைக் கச்சேரிகள், கோணங்கித்தனங்கள், கிச்சுக்கிச்சுகள்!

இந்தச் சேட்டை, மூட்டை செவ்வாய்க்கிழமைகளுக்கிடையே ஒரு படு தமாஷ்!

தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளதைப் பாராட்டவேண்டியதுதான். ஆனால், கொஞ்சம் சிந்திக்கவேண்டியிருக்கிறது.

இந்தப் பாழாய்ப்போன சிந்திக்கிற பழக்கத்தினால்தான் நாம் குட்டிச்சுவர் ஆகிறோம் என்பது தெரிந்தும் வழக்கத்தை விட முடியவில்லை என்று தலையங்கம் பகுதியில் தீட்டியுள்ளார்.

அவர் ஏதோ சிந்திக்கக்கூடிய சிற்பியாம். பூணூல் திரண்ட முதுகை ஒருமுறை தட்டிக் கொள்கிறார்.

ஆமாம், பெரியார், அண்ணா, கலைஞர், வீரமணி, வி.பி. சிங் என்று வந்துவிட்டால், அவர் சிந்தனை ஊற்று பொத்துக்கொண்டு கிளம்பிவிடும்.

இதே துக்ளக்கில் ஹிந்து மகாசமுத்திரம் பற்றி எழுதும்போது மட்டும் மண்டை காய்ந்துவிடும்.

ராமன் 17 லட்சம் ஆண்டுகளுக்குமுன் குரங்குகள், அணில்கள் துணைகொண்டு பாலம் கட்டினான் என்றால், அந்த இடத்தில் மட்டும் அவாள் சிந்தனை பிரேக் போட்டுவிடும்!

மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் போய் விழுந்தான் என்று நம்புகிற நேரத்தில் மட்டும் கண்டிப்பாக சோ ராமசாமி அய்யர்வாளின் சிந்தனை மை காய்ந்து போய்விடும்.

காஞ்சி மட சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் காமலீலை சரசங்கள் சம்பந்தப்பட்டவை என்று வந்துவிட்டால் சிந்தனை ஜில்லிட்டு உறைந்து போய்விடும்.

இஸ்லாமியர்களை வேட்டையாடிய நரேந்திர மோடியின் சமாச்சாரங்கள் என்ற கட்டம் வரும்போது கண்டிப்பாக பூணூலின் சிந்தனை உள் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளும்.

காஷ்மீர் பண்டிட்டகள் (பார்ப்பனர்கள்) பிரச்சினை என்று வந்துவிட்டால் சிந்தனைக் கொம்பு சீறிக்கொண்டு பாயும். ஈழத் தமிழர் பிரச்சினை என்றால், சிந்தனைக்குச் சீக்கு வந்துவிடும்.

அடேயப்பா! எப்படிப்பட்ட சிந்தனை இந்த ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் (மனுவாத) அக்ரகாரச் சிந்தனை!

------------- மயிலாடன் அவர்கள் 30-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

சாமியார்களுக்கெல்லாம் இது கெட்ட நேரம்




(மார்ச் 18 ஆம் தேதி தான் பிடாடி ஆசிரமத்திற்கு கட்டா யம் வருவேன் என்று சாமி நித்யானந்தா உறுதிபடக் கூறினார்; ஆனால் அவ்வ று வரவேயில்லை - மாய மாக மறைந்துவிட்டார்!)

நான் கோயில்களுக்கெல்லாம் அதிகமாகப் போவதில்லை. கடந்த முறை அமெரிக்க நாட்டின் சீட்டிலுக்கு நாங்கள் சென்றிருந்தபோது உங்களின் பிறந்தநாளன்று, கடவுளின் ஆசி பெற ஒரு கோயிலுக்கு நாம் செல்ல வேண்டும் என்று என் மனைவி கல்யாணி கூறினார். 2009 ஆகஸ்ட் 27 தேதி எனது 70 ஆவது பிறந்த நாள்.

சீட்டில் நகரத்து நித்யானந்தசாமி வேதகோயில்

போயிங் விமான நகரமாக சீட்டில் நகரின் ரெட்மாண்ட் பகுதியில் உள்ள நித்யானந்தா வேத கோயில்தான் அருகில் உள்ள கோயில் என்று எனது மருமகள் மஞ்சுளா கூறினார். இந்தப் பெயரை அப்போதுதான் முதன் முதலாக நான் கேட்-டேன். கிர்க்லேண்டில் வசிக்கும் எங்-களது இளைய மகன் கவுரங்கும், மரு-மகள் மஞ்சுளாவும் மாலை 6 மணிக்குப் பிறகு அவர்களது டயோடா பியரிஸ் காரில் எங்களை அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்திருந்த எங்களது மூத்த மகன் கவுரவ்கும் சேர்ந்து கொண்டார். ஒரு சில நாட்களுக்கு முன்புதான் அந்தக் காரை வாங்கியிருந்த கவுரங், தான் ஒரு நாத்திகன் என்றும், கவுரவ் கோயில்களுக்கும் திருவிழாக்களுக்கும் அங்கு கொடுக்கப்படும் சாப்பாடு அயிட்டங்களுக்காகத்தான் செல்கிறார் என்றும் கூறினார்.

நித்யானந்த வேதக் கோயிலின் வாசலில் இருந்த உயரமான பெண் தொண்டர் ஒருவர் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். வாழ்க்கைக்கு வேதப் பேரறிவைக் கொண்டு வரும் நோக்கத்தில் நித்யானந்த பரமஹம்சர் கட்டியுள்ள நான்கு கோயில்களில் இதுவும் ஒன்று என்று அவர் கூறினார். நாங்கள் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்தவுடன், தானும் பெங்களூருவுக்கு அருகில் பிடாடியில் உள்ள ஆசிரமத்தில் சில வார காலம் தங்கிவிட்டு இப்-போதுதான் திரும்பியிருப்பதாக அப்பெண் தொண்டர் கூறினார்.

புன்னகையுடன் கூடிய இளைஞரான நித்யானந்த சாமியின் புகைப்படம் வருபவர்களை வரவேற்பது போல் தோற்றமளித்தது. அவரது சிறிய உடலுக்கு அவர் அணிந்திருந்த காவித் தலைப்பாகை பொருத்தமில்லாதது போலத் தோன்றியது. தரைதளத்தில் ஆசிரமம் அமைந்திருந்த அந்தக் கட்டடம் நகரின் மிகவும் முக்கியமான வணிக வளாகப் பகுதியில் அமைந்திருந்தது. நித்யானந்தா வேத மய்யம் என்ற பெயர்ப்பலகை தனது செயல்பாடுகளைப் பற்றி விளக்குவதாக நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக இருந்த வரவேற்பறையை அடுத்து உள்ளே சற்று பெரிய அறை ஒன்று இருந்தது.

கோயிலின் கருவறைக்குச் செல்லும் வழியில் இருந்த ஹால் பெரியதாக இருந்தது. அழகான, நல்ல நிறம் கொண்ட ஒரு பூசாரி, வழிபாடு சடங்குகளைச் செய்து கொண்டும் மேற்பார்வையிட்டுக் கொண்டும் இருந்தார். அவருக்கு வயதில் இளைய பயிற்சித் தொண்டர்கள் உதவி செய்து கொண்டிருந்தனர். ஊதுவத்தி எரியும் வாசம் வந்து கொண்டிருக்க, கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டு, தீர்த்தமும், குங்குமமும், பூக்களும் பிரசாதமாக வழங்கப்பட்டன. அங்கு வந்திருந்த பக்தர்களில் சில அயல்நாட்டினரும் இருந்தனர். வெளியே வரும் வழியில் இருந்த சிறு அறை ஒன்றில் இலைகளால் ஆன கோப்பைகளில் பிரசாதங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறைந்த அளவு நன்கொடை 1 டாலர் என்று பெயர்ப்பலகை தெரிவித்தது.

சோதனை செய்து வெற்றி கண்ட ஆன்மீக வியாபாரம்

சில வார காலத்தில் சுவாமிஜி வர இருக்கும்போது நடத்தப்பட இருக்கும் பயிற்சி முகாமுக்கு ஆள்களை சேர்ப்பதில் தொண்டர்கள், குறிப்பாக பெண் தொண்டர்கள் மும்முரமாக இருந்தனர். தங்குமிடம், உணவு உள்ளிட்ட இந்த முகாமுக்கான நன்கொடைக் கட்டணம் 6,000 டாலர்கள். மற்ற ஆன்மிகத் தலைவர்களால் சோதனை செய்து வெற்றி பெற்ற ஆன்மிக வியாபாரம் இது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அவரது ஆசிகளையும், தங்களைக் குணப்படுத்தவேண்டும் என்று கோரியும் வரும் இமெயில் கடிதங்களைக் கையாளக்கூட இயலாத அளவுக்கு அவரைப் பின்பற்றும் தொண்டர்கள் கூட்டம் பெருகியது. தனது ஆசிகளைக் கோரும் இத்தகைய தொண்டர்கள் தினமும் காலை 7 மணி முதல் 7.20 வரை வரதமூர்த்தியைத் தொழ வேண்டும் என்று ஆலோசனை கூறி சாமிகள் கேட்டுக் கொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த கணினியில் எங்கள் வருகையைப் பதிவு செய்த பின் நாங்கள் வெளியேறினோம்.

நாங்கள் இந்தியாவிற்குத் திரும்பிய பின் சிறிது காலம் சென்றபின், தனது நகைச்சுவைப் பேச்சுக்குப் பெயர் போன ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி ஒருவரைப் பார்த்து, சாமி நித்யானந்தாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டேன். கேள்விப்பட்டது மட்டுமல்ல; பிடாடி அருகே உள்ள அவரது ஆசிரமத்திற்கும் நான் சென்றிருக்கிறேன். நான் சென்றிருந்தபோது அவர் அங்கிருக்கவில்லை; ஆனால் விருந்தோம்பல் நன்றாகவே இருந்தது என்று கூறிய அவர், பாமர மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

கள்ளக் காதல் மட்டுமா?
கள்ள நோட்டுகளுமா?

சாமி நித்யானந்தாவுடன் தமிழ் சினிமா நடிகை ஒருவர் சல்லாபம் செய்த வீடியோ காட்சிகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தது இது. யூடியூப் மற்றும் கூகுல் ஆகியவற்றின் மூலம் அவருக்குக் கிடைத்த விளம்பரத்தைவிட மிகப் பெரிய விளம்பரம் இந்த தொலைக் காட்சி ஒளிபரப்பின் மூலம் நித்யானந்தாவுக்குக் கிடைத்தது. பாலியல் திறமை மட்டுமல்லாமல், கள்ள நோட்டு அடிக்கும் திறமையும் அவருக்கு இருக்கிறது என்று பேசப்படுவதற்குக் காரணமாக, அவரிடமிருந்து பணத்தைத் திருடிக் கொண்டு போன ஒருவனிடம் இருந்த அந்தப் பணம் கள்ள நோட்டுகள் என்று கண்டு பிடிக்கப்பட்டது அமைந்தது.

தற்போது நடைபெறும் கும்பமேளாவிற்குப் பிறகு மார்ச் 18 ஆம் தேதிதான் பிடாடி ஆசிரமத்திற்குக் கட்டாயமாக வருவேன் என்று உறுதிபடக்கூறிய நித்யானந்தா அவ்வாறு வரவில்லை என்பதுடன் மாயமாக மறைந்துவிட்டார். கற்பழிப்பு, முறையற்ற பாலியல் உறவு போன்ற ஏழு குற்றச்சாற்றுகள் அவர் மீது காவல்துறையால் பதிவு செய்யப்-பட்டுள்ளன. அவரது பக்தர்களும் மற்ற பொதுமக்களும் அவரது வருகைக்-காகக் காத்திருக்கின்றனர்.

இப்போதெல்லாம் சாமியார்களுக்குக் கெட்ட காலம்தான். ஒன்று வானத்து நட்சத்திரச் சேர்க்கைகளாலோ, அல்லது திரை நட்சத்திரச் சேர்க்கைகளாலோ அவர்களுக்குக் கெட்ட பெயர்தான்.

விபசார தரகர் டில்லி திவேதி சாமியார்

அதிகம் படிக்கவே செய்யாத 39 வயது திவிவேதி டில்லியில் செக்யூரிடி பாதுகாவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் மசாஜ் பார்லர் பணியாளராக மாறினார். சதைத் தொழில் நடத்தியதற்காகவும், திருட்டுக் குற்றத்துக்காகவும் பல முறை கைது செய்யப்பட்ட இவர் தன்னைத்தானே சந்த் சாமி பீமானந்த்ஜீ மகராஜ் சித்ரகூட்வேல் என்று அழைத்துக் கொண்டார். உயர்ரக விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்த அவரது ஆசிரமத்தில் இல்லாமல், இப்போது அவர் சிறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆளுக்குத் தகுந்தபடி ஒழுக்கக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் உடுப்பி மடம்

இது போன்று எவரோ ஒருவரை வைத்துக் கொண்டு மொத்த ஆன்மிக பெருமக்களையும் குறைகூறக்கூடாது என்று சிலர் கூறுவர். ஆனால் இது தவறான கருத்தாகும். மிகவும் தொன்மை வாய்ந்ததும், பாரம்பரியம் மிக்கதுமாகக் கருதப்படுவதுமான மாத்வ பிரிவைச் சேர்ந்த உடுபி ஷிரூர் சாமி லட்சுமிவார தீர்த்த மடத்துக்கு மூன்றாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரய சாமிக்கு 15 ஆண்டு காலமாக ஒரு பெண்ணுடன் பாலியல் தொடர்பு உள்ளது என்று தெரிந்த பிறகும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்றால் என்னவென்று சொல்வது?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மடத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் கடல் கடந்து பயணம் செய்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கிரஷ்ண விக்ரகத்தைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை. அதற்கு முன்பு, தனது பக்தர் ஒருவரின் மகளின் மீது தான் காதல் கொண்டு விட்டதாகவும், அவரை மணந்து கொள்ள இருப்பதாகவும் வித்யா பூஷண சாமி கூறியபோது, அவருக்கு எதிராக மாதவ மடம் திரண்டு எழுந்தது. அவர் தனது துறவைக் கைவிட்டு-விட்டார் என்ற போதும், அவரது நேர்மைக்காகப் பாராட்டப்பட்டார். அவரது பஜனைகளுக்கு மக்கள் கூட்டம் குவிந்தது; அவரது நிகழ்ச்சிகளின் குறுந்தகடுகள் பெரும் அளவில் விற்பனை ஆயின.

பெண் துறவிகளை கருவுறச் செய்த ஜைனத்துறவி

யார் அதிக அளவு எண்ணிக்கையிலான பக்தைகளைக் கெடுத்தது என்பதில் ஜெய்பூரில் இருந்த இரு ஜைன முனிவர்களிடையே போட்டி ஏற்பட்டது. இதுபற்றி பக்தர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தபோது, ஒரு முனிவர் தற்கொலை செய்து கொண்டார். வேறு இடத்தில் இருந்த மற்றொருவர் புலியையும் சைவமாக வளர்க்க முடியும் என்று சொல்லி வந்தவர். இந்த முனிவர், இரண்டு பெண் ஜைனத் துறவிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்தார். பல முறை அவர்-கள் கருவுற்று, பின்னர் அவரால் கருக்கலைப்பு செய்யப்பட்டவர்கள். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து எழுந்த கூச்சலும், எதிர்ப்பும் அதிக நாள்கள் நீடிக்கவில்லை. தவறு செய்தவர்களைத் தண்டித்து வெளியேற்றுவது என்பது இல்லாமல், பணபலத்தினால் இந்த நிகழ்ச்சி பற்றிய விவரமே மூடி மறைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.

பாதிரியாரின் ஒழுக்கக் கேட்டை பார்த்ததால் கொலை செய்யப்பட்ட பெண்

அதனைஅடுத்து, கேரளாவில் பாதிரியார் ஒருவரால் நடத்தப்பட்ட கிறித்தவ அமைப்பைச் சார்ந்த கன்னியாஸ்திரீ ஒருவரும் ஓர் ஆணும் கொலை செய்யப்பட்ட வழக்கு ஒன்று எழுந்தது. பாலியல் உறவு கொண்டிருந்ததைக் கண்டதுதான் கொலையுண்ட பெண் செய்த குற்றம். இந்த வழக்கை மூடி முறைக்க அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்தியப் புலனய்வுத் துறை அதிகாரி ஒருவரின் தீவிர விசாரணையில் முழு உண்மையும் வெளிவந்தது.

வெளிச்சத்துக்கு வரும் நிகழ்ச்சி ஒன்று என்றால், வெளியே வராதவை நூறு இருக்கின்றன

வெளிச்சத்துக்கு வரும் ஒவ்வொரு வெட்கப்படத்தக்க நிகழ்ச்சி ஒன்று என்றால், இது போன்ற செய்தி வெளி-வராத நிகழ்ச்சிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அப்படியிருக்கும்போது மக்கள் கூட்டம் ஏன் சாமியார்களையும், சாமியாரிணிகளையும் தேடிச் செல்கிறது? ஆன்மிக ஆறுதலைத் தேடிச் செல்கிறோம் என்று அவர்கள் கூறுவதே ஒரு ஏமாற்றுவேலை. தங்களின் உண்மையான அல்லது கற்பனையிலான பிரச்சினைகள் இது போன்ற சாமியார்களின் பக்கத்தில் இருந்தால் தீர்ந்துவிடும் என்று இந்தப் பக்தர்கள் (இவர்களும் சிலநேரங்களில் கயவர்களே) கருதுவதுதான் உண்மையான காரணமாக இருக்கக்-கூடும்.


------------நன்றி: தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், 29.3.2010 இல் என். நரசிம்மன் அவர்கள் எழுதியகட்டுரை -தமிழில்: த.க.பாலகிருட்டிணன் “விடுதலை” 29-3-2010

29.3.10

வடலூரில் புகுந்த பார்ப்பனியம்!




வடலூர் வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார் 1867இல் வடலூரில் தரும சாலை ஒன்றை நிறுவினார். அதில் உருவ வழிபாட்டுக்கு இடம் வைக்காமல், ஜோதியைத் தான் வணங்க வேண்டும் என்று ஏற்பாடும் செய்தார்.

அந்த ஜோதி வழிபாட்டுக்குக்கூட இடையில் பூசாரி இருக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக, தெளிவாக இருந்தார்.

தம்மால் நிறுவப்பட்ட அந்த ஞான சபைக்குள் பித்தளை முதலியவற்றால் ஆன குத்து விளக்கு வைக்கக் கூடாது; வெறும் தகரக் கண்ணாடி விளக்கு வைக்கப்பட வேண்டும் என்றார்.

பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட சிறுவர் கையிலோ, அல்லது எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியவர் ஒருவர் கையிலோ கொடுத்தாவது தகரக் கண்ணாடி விளக்கை உட்புற வாயில்களுக்கு சமீபத்தில் வைத்து வரச் செய்ய வேண்டும் என்று வடலூர் அடிகளார் கூறியிருக்கிறார்.

தொடக்கத்தில் திருவொற்றியூர், சிதம்பரம், கந்தக் கோட்டம் முதலிய இடங்களில் உள்ள சிவன், முருகன் போன்ற கடவுள்கள் பற்றியெல்லாம் விழுந்து விழுந்து எழுதியவர்தான் இராமலிங்க அடிகள். இராமனைப் பற்றியும் பாடல்கள் எழுதியுள்ளார்.

முதல் திருமுறையில் 52 பதிகங்களும், 570 பாடங்களும் முருகனைப் பற்றி வடலூராரால் பாடப்பட்டவை தான்.

அதன் பிறகே உருவ வழிபாடுகளில் வெறுப்பு கொண்டு, கடந்த கால அறியாமை இருளிலிருந்து விடுபட்டு, ஒளி வழிபாடு என்னும் ஒரு முடிவுக்கு வந்தார்.

1873 அக்டோபர் 23 அன்று சன்மார்க்க அவையைக் கூட்டி, சித்தி வளாகத்தில் சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய உரையில் வடலூர் இராமலிங்கனார் தெரிவித்த கருத்துகளும், நிலைப்பாடும் தான் நிலையானவையாகும்.

நாம் நாமும் முன் பார்த்தும், கேட்டும், லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனெனில் அவைகளில் ஒன்றிலாவது குழுஉக் குறியின்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்..... நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அதே லட்சியம் எப்படிப் போய் விட்டது பார்த்தீர்களா? அப்படி லட்சியம் வைத்திருந்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கிற ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும், மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றனர். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள் என்று கூறியுள்ளார் வடலூரார்.

ஒருவரின் உண்மையான முதிர்ந்த கருத்து என்பது, இறுதி கட்டத்தில் வெளிப்படுத்தப்படுபவையே! இதற்கு மாறாக வடலூரில் அடிகளாரால் ஏற்படுத்தப்பட்ட சத்திய ஞான சபையில் சிவலிங்கம் உருவம் வைத்து வழிபாடு நடத்தினார் ஒரு பார்ப்பனர் என்றால், இதற்குப் பெயர்தான் பார்ப்பனிய ஊடுருவல் என்பது.

இந்த நிலைக்கு இந்து அறநிலையத்துறை தடை செய்த நிலையில், சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்ற ஞானசபையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்த நிலையில், அறநிலையத்துறை எடுத்த முடிவு சரியானதே என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதாகும்.

பார்ப்பனிய ஊடுருவல் எத்தகைய ஆபத்தானது என்பது ஆன்மிகவாதியான வடலூர் வள்ளலார் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தில் கிடைத்த இந்தப் பாடம் போதுமான சாட்சியமாகும்.

------------------- "விடுதலை” தலையங்கம் 29-3-2010

குலக்கல்வித் திட்டம்-தீப்பந்தமும், பெட்ரோலும் தயாராக வைத்திருக்க பெரியார் அறிவிப்பு


குலக்கல்வி!

இந்த நாளை எந்த சூத்திரத் தமிழனும், பஞ்சமத் தமிழனும் மறக்கவே முடியாது, மறக்கவும் கூடாது.

இந்த நாளில்தான் (1954) நாகப்பட்டினத்திலிருந்து, தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில் படையொன்று சென்னைக்குப் புறப்பட்டது.

என்ன படை அது? குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படைதான் அது. நாகப்பட்டினத்தில் 1954 மார்ச் 27, 28 ஆகிய நாள்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்தப் படை புறப்பட்டது.

1952 இல் ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக வந்தார். வந்ததும், வராததுமாக அவர் செய்த ஒரு காரியம் அரை நேரம் படிப்பு; அரை நேரம் அவரவர்களின் குலத்தொழில் என்ற ஒரு கல்வித் திட்டத்தை அறிவித்தார். 6000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடினார்.

இப்பொழுது மட்டுமல்ல, 1937 இல் அன்றைய சென்னை மாநிலத்தின் பிரதமராக இருந்தபோதும்கூட 2500 கிராமப்புறப் பள்ளிகளுக்கு மூடுவிழா செய்தார்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பதுதானே பார்ப்பனர்களின் மனுதர்ம சாஸ்திரம்?

1952 ஜூன் 13 அன்று திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார் (ராஜாஜி) எல்லோரும் படித்துவிட்டால் வேலைக்கு எங்கே போவது? நீங்கள் துணியைக் கிழிக்காமல் சலவை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று இதோபதேசம் செய்தார்.

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பெரும் புயலைக் கிளப்பினார் தந்தை பெரியார். 1954 சனவரி 24 இல் டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜம் அவர்கள் தலைமையில் ஈரோட்டில் குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்டினைக் கூட்டி, அனல் பறக்கும் தீர்மானங்களை நிறைவேற்றினார். ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தால் 50 விழுக்காடு மாணவர்களும், 70 விழுக்காடு மாணவிகளும் படிப்பை நிறுத்திய அதிர்ச்சிக்கு உரிய தகவலை தந்தை பெரியார் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்துதான் நாகப்பட்டினத்தில் 1954 மார்ச் 27, 28 இல் மாநாடு கூட்டி, மார்ச் 29 இல் குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப்படை நாகையிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட முடிவு செய்யப்பட்டது.

ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால், கழகத் தோழர்களே, தீப்பந்தமும், பெட்ரோலும் தயாராக வைத்திருங்கள். நாள் குறிப்பிடுவேன், அக்ரகாரத்திற்குத் தீ வையுங்கள் என்று அபாய அறிவிப்பைச் செய்தார்!

நாகையிலிருந்து படையும் புறப்பட்டது. ஆச்சாரியாரால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை; உடல்நலம் சரியில்லை என்று பதவியிலிருந்து ஓடினார் (30.3.1954). தந்தை பெரியார் அவர்களின் ஆதரவோடு காமராசர் முதலமைச்சர் ஆனார் (14.4.1954). ஏப்ரல் 18 இல் குலக்கல்வித் திட்டத்தின் கழுத்தில் கத்தியை வைத்துத் தீர்த்துக் கட்டினார். கல்வி வள்ளலாக மாறினார் காமராசர்.

அன்றைக்குக் குலக்கல்வித் திட்டம் தந்தை பெரியாரால், கழகத்தால் ஒழிக்கப்-படவில்லையானால், டாக்டர்களையும், பொறியாளர்களையும் தமிழர்களில் காண முடியுமா? நன்றியோடு தமிழர்களே, சிந்திப்பீர்!

--------------- மயிலாடன் அவர்கள் 29-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

அஞ்சாநெஞ்சன் அழகிரி பற்றி அறிஞர் அண்ணா


தோழர் அழகிரிசாமி!



தமிழரின் தன்மானப் போர்த் தளபதி. அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அகிரிசாமியவர்கள் இயற்கை எய்தினார் என்ற சேதி எவரும் எதிர் பார்த்தது என்றாலும் செய்தியைக் கேட்டவுடன் பேரதிர்ச்சியைத் தராமலில்லை. சமுதாயத்தின் என்புருக்கியான ஆரியச் சழக்கரோடு தீரமாகப் போர்தொடுதத அவரின் உடம்பை, என்புருக்கி நோய் இன்ற இரையாகக் கொண்டுவிட்டது.

தோழர் அழகிரி ஆம்! தோழமை என்பதன் தத்துவத்தை நன்குணர்ந்த அழகிரியவர்கள், இறப்பை, இன்றோ நாளையே என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்தான். அப்படி எதிர் பார்க்க வேண்டிய நிலையில், தன்னுடைய வாழ்வைப் பற்றிப் பெருங்கவலை கொள்ளாதவராய் இருந்துவர, தன்னை அவர் பழக்கிக்கொண்டவர் என்று கூறினால் அது தவறில்லை.

சானடோரியத்தில் இருப்பதைக் காட்டிலும் அவர் தன்னுடைய வீட்டுக்குச் சென்று ஓய்வு பெற்றுக்கொள்வது நல்லது இது, அவர் பெருந்துறை சானடோரியத்துக்குத், தோழர்களின் தூண்டுதலால் போனபோது அங்குள்ள டாக்டரால் கூறப்பட்ட ஆலோசனை. சாவதை ஆஸ்பத்திரியில் சாவாதே, வீட்டுக்கப் போய் இறந்துவிடு என்பதுதான் இதன் கருத்து. இதை டாக்டர் கூறுவதற்கு முன்னாலேயே அழகிரி அறிவார். அதனால்தான் அய்ம்பதாயிரத்துக மேற்பட்டுக கூடும் தோழர்களை, நாம் வேறு எங்கு, எப்போது சந்திக்கப்போகிறோம்? என்கிற ஒரே ஏக்கத்தினால் அவர் ஈரோட்டு மாநாட்டுக்கு எப்படியும் வந்து சேரவேண்டும் என்கிற துடிப்போது வந்து, மாநாட்டில் கலந்து கொண்டதாகும்.

ஈரோட்டு மாநாட்டைப் பெரியாரவர்கள், ஒருவர்க்கொருவர் விடைபெற்றுக்கொள்ளும் மாநாடு என்று குறிப்பிட்டார்கள்; பார்ப்பனீய அடிமைகளான இந்துஸ்தான் தாங்கிகளால், எந்த நேரத்தில் எப்படி வேண்டுமானாலும ஒடுக்கப்படலாம், ஒழிக்கப்படலாம், மறைக்கப் படலாம் என்ற துணிவினால். அதுபோலவே சில காட்சிகள் நடந்து முடிந்தன. அடுத்த சில பாகங்கள் எப்போதோ? ஆனால் அதே மாநாட்டில் தோழர் அழகிரி அவர்கள், உங்கள் அனைவரையும் மறுபடியும் காண்பேனா? சொல்லமுடியாது. என் தலைவருக்கும் தோழர்களுக்கும் இறுதியாக என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ளவே இப்போது வந்தேன் என்று அவர் கூறியது இன்று முற்றிலும் உண்மையாகிவிட்டது.

எதிரியாக வந்து உட்கார்ந்தாலும், சிரிக்கச் சிரிக்கவைத்துப் பின் இடித்து இடித்துக் கூறம் அவர் வாய்ச்சொற்கள், பண பலத்திற்கோ, திமிர் பலத்திற்கோ, பணிந்துவிடாத தயவு தாட்சண்யம் பாராத அவர் அஞ்சா நெஞ்சம், ஆகிய இவற்றை ஈரோட்டு மாநாட்டில் தோழர்கள் கண்டிருக்க முடியாது. கம்பீரமான நீண்ட தோற்றம் கனல் வீசும் கண்கள் கொஞ்சும் தமிழ்ச் சொற்கள் அன்றில்லை மாய்ந்தொழிந்தன உட்கார்ந்த நிலை ஒளி குன்றிய தோற்றம் உள்ளத்தை உருக்கிடும் சோகச் சொற்கள், இவைதான் அன்று கண்டவை.
பெருந்துறையும் தாம்பரமும், காலங்கடந்த முயற்சி என்பதையே அன்று ஈரோட்டில் அவர் சொற்கள் கூறியது. அவர் உடலும் அதை ஆதரித்தது. இன்ற அவர் மறைந்தே போனார்.

கல்லும், கட்டாந்தரையும், முள்ளும் புதருமாய் இருந்த புன்செய், பெரும் பகுதி இன்று நன்செய்யாக மாற்றப்பட்டுவிட்டது. திருத்தி மாற்றப்பட்ட நன்செய்யில் சீரிய விதைகள் தூவப்பட்டு, அவை முளைவிட்டுப பின் வளரவும் ஆரம்பித்துவிட்டன. பயிர் வளர்ச்சியையே முதலில் பார்ப்பவன், நீர் பாய்ச்சும் துயரத்தையும் களை பிடுங்கும் தொல்லையையும் கண்டாலும் கூட, நன்செய்யின் ஆதி வரலாற்றை - அது நன்செய்யாக உருமாற எத்தனைபேர், எத்தனை நாள், எவ்வளவு கஷ்டப்பட்டு, எப்படி நன்செய்யாக மாற்றினார்கள் என்பதை எப்படி அறிந்து கொண்டுவிட முடியும்?

கல்லும் முள்ளுமாயிருந்த புன்செய், ஆரிய நச்சுக் கருத்துகள் படர்ந்த திராவிடச் சமுதாயம். அதை நன் செய்யாக மாற்ற முயன்ற முயற்சியில் தோள் கொடுத்து, பெரியாரவர்கட்கு உதவி புரிந்த சிலருள் தோழர் அழகிரி ஒருவர். அந்தச் சிலருள், சிலர் ஏற்கனவே இயற்கை எய்திவிட, சிலர் களையாக மாறிப் பின் கையாலாகாதவர்களாய்ப் போய்விட, எஞ்சி நின்ற ஒருவர் குறிக்கத்தகுந்தவரை சளையாமல், பெரியார் வழி பற்றிய பெரும்போர் மறவன் என்கிற பெருமை அவர் ஒருவருக்கே உண்டு. சென்ற இந்தி எதிர்ப்புப் போரில், 1938-ல் தமிழர் பெரும்படை நடத்தி, திருகசியிலிருந்து சென்னை வரையுள்ள ஊர்தொறும், தமிழரின் தன்மானப் போர் முரசுகொட்டி, வெற்றிச்சங்கு ஊதி வீரர் பலரைப் பாசறையில் சேர்த்த வெற்றி கூரன், அதற்குப்பின் மிக விரைவிலேயே என்புருக்கியால் தாக்கப்பட்டு, நேரில் வந்து அழைக்குமிடம் செல்லும் உற்சவமூர்த்தியாக ஆகிவிட்டதால், இன்றைய இளைஞர் சிலர் அவரை - அவரின் உழைப்பைப் பூரணமாக அறிந்தவர்களா? என்பது சந்தேகம்தான்.

இயக்கத்தால் விளம்பரவும் பெறவும், சிலர் வியாபாரம் நடத்தவுமான இன்றைய நிலையை, இந்த நாட்டில் இன்ற காணுகிறோமென்றால், அதற்க அந்த நிலையை உண்டாக்குவதற்கு அடிப்படைக் காரணஸ்தர்களாய் உழைத்த பெருமை, பெரியார் அவர்கட்கு அடுததபடி தோழர அழகிரிக்கே உண்டு என்றால் அது வெறும் பெருமைக்குரிய பேச்சல்ல.

தோழர் அழகிரியின் மறைவு இயக்கத்திற்குப் பெரிய நஷ்டம்.

இந்த வீரருக்கு நாம் செய்யும் கடமை என்ன?

அவர் செய்த தொண்டை அவர்பின் பற்றிய பாதையைப் பின்பற்றுவதைக் காட்டிலும், உண்மையிலேயே அவருக்குச் செய்யும் மரியாதை நன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

அழகிரியின் பிரிவால் வருந்தும், அவர் குடும்பத்தினரோடு நாமும் பங்குகொள்ளுகிறோம். தோழர்கள் அனைவர்க்கும் பெரும் பங்குண்டு!

----------------------------அறிஞர் அண்ணா "குடி அரசு" தலையங்கம் - 02-04-1949

போப் மன்னிப்பு கேட்டால் போதுமா?



நீங்கள் மிகவும் கொடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். நான் மிகவும் வருந்துகிறேன். உங்கள் நம்பிக்கை பாழ்பட்டுவிட்டது. உங்கள் சுயமதிப்பு சூறையாடப்பட்டுவிட்டது.

நான் வெட்கப்படுகிறேன் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவாலயங்களின் மரியாதை குலைக்கப்பட்டதற்கான அவமானச் செயல் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும். அத்தகைய குற்றத்தைப் புரிந்தவர்கள் நிச்சயமாகக் கடவுளின் முன்பு பதில் சொல்லியே தீரவேண்டும். இவர்களின் பாபங்களைப் பற்றி விசாரிக்கும் நியாய விசாரணையின்போது பதிலளித்தே ஆகவேண்டும்.

இவ்வளவும் எழுதியிருப்பது போப். கத்தோலிக்க மதத்தின் உலகத் தலைவர். ஆம். மன்னிப்பை எழுத்து மூலமாகவே தந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தந்துள்ளார். என்ன பாதிப்பு? யார் பாதிக்கப்பட்டனர்?

அயர்லாந்து நாட்டுக் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அசிங்கமான இந்தச் செயலைச் செய்தவர்கள் யாரோ காலிகளோ, அயோக்கியர்களோஅல்லர். காமாந்தகாரம் பிடித்த காலிகள், அயோக்கியர்கள். வெள்ளை அங்கி அணிந்து கொண்டு தங்கள் அயோக்கியத்தனங்களை மறைக்க முயலும் கத்தோலிக்க பாதிரிகள்தான் அவர்கள்.

பெரும் தவறுகள் தேவாலயங்களில் நடந்து விட்டன என்று அந்நாட்டு கத்தோலிக மதத் தலைமை ஒத்துக் கொள்கிறதாம். நடந்த கேவலமான செயல் தவறா? குற்றங்கள் அல்லவா! 30 ஆண்டுகளாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்டு வரும் குற்றங்கள் ஆகும்.

வெறும் மன்னிப்புத் தாள்கள் போதுமா? இக் குற்றங்களைக் கேடயங்களாக இருந்து மறைத்துக் கொண்டு இருக்கும் மத முகமூடி கிழித்தெறியப்பட வேண்டாமா? போப் சிந்திக்கவேண்டும். அவரது மதத்தவர் சிந்திக்கவேண்டும்.

பாதிரியார்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி யோசிக்கிறாராம் போப். ஒழுக்கமான, மனிதத் தன்மையுள்ள, அறிவுடன் கூடிய ஆன்மிகப் பள்ளிகள் குறைவாக இருப்பதே, இப்படிப்பட்ட பாதிரிகள் வருவதற்குக் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறாராம். அது சரியல்ல.

மாற்று முறை கண்டறியப்படவேண்டும் என்று புலம்புகிறராம் போப். புலம்புவதை விட்டுவிட்டுப் புத்தியைப் பயன்படுத்த வேண்டும்.

முறைகெட்ட பாலியல் புணர்ச்சி முறைகளுக்குக் காரணம் - பெண்ணோடு புணர்வது பாபம் என்று கூறும் மதக் கருத்துகள் அல்லவா? பாதிரிகள் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்கும் வேறொரு கிறித்துவப் பிரிவில் இம்மாதிரிக் குற்றங்களைக் காணோமே!

எனவே சரியான வழியில் போப் சிந்திக்க வேண்டியதும் செயல்படவேண்டியதும் மதமவுடீகக் கொள்கைகளை மாற்றி அமைப்பதும்தான் தேவையே தவிர, மன்னிப்பு அல்ல!

மதம் மீதுள்ள அக்கறையல்ல இந்த யோசனைக்குக் காரணம்! மனித மாண்புகள் மதிக்கப்படவேண்டும் என்ற கவலைதான் காரணம்!


------------------- சு.அறிவுக்கரசு அவர்கள் 28-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.3.10

அஞ்சாநெஞ்சன் அழகிரி பற்றி அய்யா பெரியார்

அஞ்சா நெஞ்சன்

அஞ்சா நெஞ்சன் என்கிற அடைமொழி கழகத்தில் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்களுக்கு மட்டுமே கிடைத்த அரிய பட்டம்.

முன்னாள் இராணுவ வீரரான அவர் தன்மான இயக்கக் காலந்தொட்டு தந்தை பெரியார் அவர்களின் படைவரிசையில் தன்னிகரில்லாச் சிப்பாய்.

அவர் மறைந்தபோது (28-3-1949) அவரைப் பற்றி தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள்அஞ்சா நெஞ்சன் புகழ் உடலில் என்றைக்குமே தங்கி ஒளிவிடும் பதக்கங்களாகும்.

தோழர் அழகிரி நல்ல பேச்சாளர். மக்களின், சிறப் பாக இளைஞரின் அபி மானம் பெற்றவர். அவர் நல்ல செலவாளி. தனக்கென ஒரு காசும் சேர்த்துக் கொண்டவர் அல்லர். என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதை தனது பெரும் பணியாகக் கொண்டி ருந்தார்.

அவரைப் பல முறை கண்டித்திருக்கிறேன்; கோபித்திருக்கிறேன். அவர் முன்கோபி. ஆனால் என்னிடத்தில் எந்நிலையிலும் கருத்து வேறுபாடு கொண் டது கிடையாது. அவருக்கு அடிக்கடி பணக் கஷ்டங்கள் வருவது சகஜம். அதனால் அதில் அவருக்கு எவ்வித தொல்லைகள் ஏற்பட்ட போதிலும், தன் கருத்தையோ, கொள்கையையோ, லட்சியத்தையோ, தொண்டையோ கொஞ்சம் கூட மாற்றிக் கொண்டது கிடையாது. பிடிவாதமான கட்சிப் பற்றுடன் நடந்து கொண்டார். அவரை விலைக்கு வாங்கிவிடலாம் என்று எண்ணிய எதிரிகளை ஏமாற்றியிருப்பாரே யொழிய, அவர்களின் வலையில் ஒரு நாளும் சிக்கியவர் அல்லர்

நேற்று வரை கூறி வந்த கருத்துக்கு மாறுபாடான ஒரு கருத்தை எங்கோ ஒரு இடத்தில் நான் கூறினால், அதற்காக என்னிடம் எவ்வித விளக்கமோ, சமா தானமோ எதிர்பார்க்காமல், அக்கருத்தைப் பின் பற்றியே தமது பிரச்சாரத்தை ஆரம்பித்து விடுவார் என்று தந்தைபெரியார், அழகிரி பற்றிக் கூறினார் என்றால், இது தந்தை பெரியார், அஞ்சாநெஞ்சன் அழகிரியோடு மட்டுமே சம்பந்தப்பட்ட கருத்தல்ல. ஒரு இயக்கம், தலைமை, பின்பற்றுவோர்க்கிடையே இருக்க வேண்டிய பாலத்தின் இலக்கணம் இது.

தமிழர்களிடையே உள்ள பெருங்குறை ஸ்தாபன ரீதியாகத் தொடர்ந்து பணியாற்றிடப் பழகிடாத, பக்குவப்படாத குணமாகும்.

அழகிரி பற்றி அய்யா கூறிய இந்தக் கருத்தை தொண்டர்கள் வாசிப்பது மட்டுமல்ல. சுவாசிப்பதும் முக்கியமாகும். கலைஞருக்கு கழகத்தில் ஒரு முன்மாதிரி அஞ்சா நெஞ்சன் அழகிரியே! அவர் நினைவாகத்தான் தன் மகனுக்கு அப்பெயரைச் சூட்டினார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு நடிகவேள் என்ற பட்டம் அளித்ததும் அஞ்சாநெஞ்சன் அழகிரியே!

அஞ்சாநெஞ்சன் மறைந்த நாளில் அவர் நிலைக்க வைத்துச் சென்ற உணர்வுகளை உள்வாங்கிக் கொள்வோம்! வீறு நடைபோடுவோம்!!

வாழ்க பெரியார்! தொடர்க அழகிரியின்பாட்டை!!

-------------- மயிலாடன் அவர்கள் 28-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

நட்சத்திர ஓட்டலில் கடவுள் கல்யாணம்



வருகின்றன 29 ஆம் தேதி பங்குனி உத்திரமாம். அன்றைய நாளில்தான் கடவுள்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டதுகளாம். சிவன்_ பார்வதி, முருகன்_ தெய்வானை, ரங்கமன்னார்_ஆண்டாள் என்று பலதுகளும் வாழ்க்கை இணை ஏற்பு விழாவை நடத்திக் கொண்டது இந்த நாளில்தான் எனக் கதை.

சிவனின் உடல் வியர்வையில் ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களே ஒட்டு மொத்தமாகப் பிறந்ததாகவும் ஒரு கதை. வியர்வையில் விந்தும் சினை முட்டையும் சேர்ந்து இருந்ததா என்பதற்கு விவரம் யாரும் தரவில்லை.

இந்தக் கதைகளுக்கு மாறாக சிவன்_ பார்வதி விவாகம் மகா சிவராத்திரி நாளன்று நடந்ததாம். ஷிவ்விவாஹ் இம்மாதம் 12 முதல் 14 தேதிகளில் வடக்கே நடந்ததாம். நீலப்பட்டு வேட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்த சிவன், சிவப்புப் பட்டுச் சேலை கட்டிய பார்வதியை விவாகம் செய்து கொண்டதாம். எல்லாக் கடவுள்களும் வந்திருந்தனவாம்.

விவாக வைபவத்தைக் காண பிரம்மன், விஷ்ணு, இந்திரன் ஆகியவை வந்ததாகச் செய்தி. எழுதியிருப்பது தி இந்து ஏடு. பார்த்து அறிந்து உறுதி செய்த பிறகுதான் வெளியிட்டிருக்கும்(?) என நம்பலாமா?

சிவன்_பார்வதி திருமணத்திற்குப் புரோகிதம் பார்த்த பிரம்மாவின் காமவெறி நினைப்பினால் நெருப்பே அவிந்துவிட்டதாகச் சேதி கூறுகிறது புராணம். இந்தக் கல்யாணத்தில் எப்படி நடந்தது என்று ஏடு எழுதவில்லை. அய்ந்து நட்சத்திர ஓட்டலில் நடந்ததாகவும் சூட் அணிந்தவர்கள் கலந்து கொண்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் பெண் வீட்டாராகத்தான் இருப்பார்கள் என்று யூகம். மணமகனே புலித்தோலை அரைக்கசைத்து இருக்கும் ஆள்தானே! தந்தை பெரியார் சொன்ன மாதிரி நூல், ஆடை போன்றவை கண்டுபிடிக்கப் படாத காலக் கடவுள்தானே!

----------------------- சு.அறிவுக்கரசு அவர்கள் 28-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

விவேகானந்தரின் காவியுடையும் - மற்ற ஆனந்தர்களின் காவியுடையும்

25.3.2010 அன்று திருச்சியில் நடைபெற்ற டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களின் சகோதரர் சோம.பொன்னுசாமி அவர்களது இல்லத் திருமணத்தில் என்னைச் சந்தித்த, தஞ்சையின் மூத்த வழக்கறிஞரும் சிறந்த எழுத்தாளரும், அரசியல்வாதியுமான நண்பர் தஞ்சை அ.இராமமூர்த்தி அவர்கள், தாம் எழுதி வெளியிட்டுள்ள சமயச் சமத்துவம் சமூகநீதி என்ற தலைப்பில், விவேகானந்தர் பற்றிய அரிய நூலைத் தந்தார்.

விவேகானந்தர் என்ற பெயரைப் பெற்ற வங்கத்து சமயப் புரட்சியாளர் துறவி நரேந்திரர் அவர்கள் பற்றி ஒரு புதிய கோணத்தில் மற்றவர்கள் பார்க்காத பார்வையோடு, பார்த்து அந்நூலை எழுதியுள்ளார்.

224பக்கங்கள் கொண்ட அந்நூல் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டு, இறுதியில் அந்த ஆதார நூல்கள் பட்டியலையும்கூட அவர்கள் தொடுக்கத் தவறவில்லை.

வழக்கம் போல எனது பல்வேறு தொடர் பணிகளுக்கு இடையேயும் நேற்று முன்தினம் (25.3.2010) பிற்பகலில் இருந்து படிக்கத்துவங்கி பெரும் பகுதி முடித்துள்ளேன்.

இதில் உள்ள சுவையான இரண்டு செய்திகள் (பலவும் சுவையானவையே) நமது வாசகர் நேயர்களுடன் பகிர்ந்து கொள்வது தேவை என்பதால் உடன் எழுதுகிறேன்.

இராமகிருஷ்ணரைத் தனது குருவாகக் கொண்டு, இன்று இராமகிருஷ்ண மடம் உலகெங்கும் பரவியிருப்பதற்கு முக்கிய சீடரான ஏன், முதல் சீடரான (மொத்தம் 12 சீடர்கள்தான் ராமகிருஷ்ணருக்கு துவக்கத்தில் இருந்தனர், யேசு பற்றி சொல்வதைப்போலவே) நரேந்திரர், துறவியாக இருந்தபோது, வழமைக்கு மாறான சிந்தனையோடு எப்படி இந்து மதம் என்பதை, ஏற்காது, ஜாதி முறையைச் சாடி ஒழிக்க முயலவேண்டும் என்று கூறியதிலிருந்து, இளைஞர்களே, நீங்கள் வேதம் பகவத் கீதை படிப்பதை விட கால் பந்து விளையாடுங்கள். அதன் மூலம் பலன் பெறுவீர்கள் என்பதுபோன்ற கருத்தோட்டம் இருந்ததற்கு முக்கிய காரணம் பற்றி தெரிந்துள்ள ஒரு சம்பவத்தை இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

பல ஊர்களுக்குச் சென்ற நரேந்திரர் (ராகுல சாங்கிருத்தியாயன் தன்னை ஓர் ஊர் சுற்றி என்று கூறி, அதனால் ஞானம் பெற்றவர் என்பது போன்று) இராஜஸ்தானில் ஒரு புதிய பகுதிக்குள் தன்னந்தனியே நுழைந்தார்

அப்போது ஒரு புத்தத் துறவியார் பாடல் ஒன்றைக் கேட்டுக்கொண்டே புறப்பட்டார்; அந்தப்பாடல் வருமாறு:

முன்னேறு, மேற்செல்!

பாதையில்லா வழியில் புதிய

பாதை போட்டுச்செல்

எதையும் கண்டு நிற்காத காண்டாமிருகம் போல்!

தனியே போ!

யாரையும் கண்டு அஞ்சாத சிங்கம் போல் செல்!

வலையைப் பொருட்படுத்தாது காற்று

போல் புகுந்து போ!

தண்ணீரால் கறைபடாத தாமரை போல்

தூயவனாகச் செல்!.

இந்தப் பாடல் அவர் தன்னைச் செதுக்கிக்கொள்ளப் பெரிதும் காரணமாய் இருந்திருக்கிறது என்பது அவரது துணிச்சல் மிகுந்த தனித்தன்மையான பல்வேறு புரட்சிக் கருத்துக்களுக்கு அடிநீரோட்டமாக அமைந்திருக்கக்கூடும் என்பது நமது ஊகம். இது இன்றுள்ள இளைஞர்கள் ஆக்கச் செயல்களை சமூகக் கண்ணோட்டத்தோடு சாதித்திட உதவிடும் என்பது உறுதி.

இதிலிருந்து ஒரு முக்கிய உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். புத்தமார்க்கம் அறிவுமார்க்கம்; அது வெறும் மதம் அல்ல. வாழ்விற்குப் பயன்தரும் பல வழிகாட்டும் நெறிகளைக் கூறிய அமைப்பு என்பதாகும்.

மதம் என்றால் கேள்வி கேட்காமல்,சொல்லப்படுவதை அப்படியே நம்புவது.

மார்க்கம் என்றால் வாழ்வியல் வழிமுறைஅறிவுப்படி சிந்தித்துச் செயல்பட என்பதை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!

என்பது தெளிவாகிறது அல்லவா?

இதே புத்தகத்தில் (பக்கம் 41இல்) ..... ஆல்வாரில் (ஒருநகரம் ராஜஸ்தானில்) அன்பர் ஒருவர், இவர் காவிஉடை அணிவதைப் பற்றி ஒரு கேள்வி கேட்டுவிட்டதற்கு, நரேந்திரர் (பின்னாளில் விவேகானந்தர் ஆகும் முன்பே) அய்யா நான் வேறு உடை அணிந்திருந்தால் என்னிடம் யாரும் பிச்சை கேட்டு-விடுவார்கள். நானோ காசில்லாத பிச்சைக்காரன்! எனவே என்னிடம் யாரும் பிச்சை கேட்காமல் இருப்பதற்காகவே நான் காவி உடை அணிகின்றேன். என்னிடம் யாசிப்போருக்கு இல்லை என்று சொன்னால் உள்ளம் நோகும் என்று பதில் அளித்தாராம்!

விவேகானந்தர் காவி உடையை ஏன் தேர்வுசெய்தார் அன்று?

இன்று காவி உடை வேஷத்தில், ஆன்மிக ஆராய்ச்சி என்ற பெயரால், ஒரு 32வயது ஏமாற்று ஆனந்தாவுக்கு (அவரிடம் சீடகோடியாக இருந்த பிரபல எழுத்தாளர் கூறுகிறபடி) சொத்து எவ்வளவு தெரியுமா?

அற்பத் தொகைதான். ரூபாய் 5000 கோடி (அய்யாயிரம் கோடிதான்!) சகல சவுபாக்கியங்களோடு சாங்கோபா சனாதான ஆன்மிக ஆராய்ச்சி! வெப்சைட், பல்வேறு மொழிகளில் கூலி (பேய்) எழுத்தாளர்கள்.

அமெரிக்காவில் வாழும் பல அரசியல் தலைவர்களின் இமேஜைப் பெருக்கிக்காட்ட பல ஆலோசகர்கள் உண்டாம். நம் ஊர் ஆனந்தாக்களும், கல்கிகளும் அவர்களை மிஞ்சி விளம்பரம் தேடிட ஏடுகளில் தொடர் கட்டுரை, கருத்துரை என்ற விளம்பர முறை தொலைக்காட்சிகளில் ஏஜென்ட்டுகள் எங்கும்!

வியாபாரத்திற்கு அழகு விளம்பரம் செய்தல் தானே!

விவேகானந்தரின் காவியையும் மற்ற ஆனந்தர்களின் காவியையும் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளுங்கள், மனிதநேயம் எங்கேயிருக்கிறது என்பதை!


------------------------ கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் -”விடுதலை” 27-3-2010

பெரியாரின் குடிஅரசு களஞ்சியம் வெளியீடு

அறிவுச்சோலை விழா அழைக்கிறது

வரும் செவ்வாயன்று (30.3.2010) சென்னை பெரியார் திடலில் ஒரு சிறப்பான விழா.

தந்தை பெரியார் தம் குடிஅரசு களஞ்சியம் ஆறு தொகுதிகள் வெளியிடப்பட உள்ளன. 1926, 1927, 1928 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான தொகுதிகள் இவை. ஒவ்வொரு ஆண்டுக்கும் இரு தொகுதிகள்.

இவை வெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட (Selected Works) கட்டுரைகள் அல்ல. அனைத்தும் அடங்கிய (Collected Works) கருத்துப் பெட்டகமாக களஞ்சியமாக வெளிவருகிறது. 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கடந்த ஆண்டு அய்யா பிறந்த நாளன்று (17.9.2009) வீடியோ கான்பரன்சிங் மூலம் சேலத்தில் வெளியிட்டார்.

தொடர்ந்து இப்பொழுது ஆறு தொகுதிகளும் அழகான அச்சுப் பொலிவுடன், கண்களில் ஒத்திக்கொள்ளும் நேர்த்தியுடன் காலத்திற்கேற்ற நவீன கோலத்துடன் வெளிவரவிருக்கிறது.

தொழில் ரீதியாக வெளியிடும் பதிப்பகத்தாரே மூக்கில் விரலை வைக்கும் வண்ணம் நமது ஏடுகளும், இதழ்களும், வெளியீடுகளும் வெளிவருவதை நெருப்புக்கோழி மனப்பான்மையினர் தவிர்த்து அனைவரும் பாராட்டி மகிழ்கின்றனர்.

நெஞ்சில் காழ்ப்பு இல்லையென்றால், நேர்மையான விமர்சனங்களும் வரும் அல்லவா?

இவ்வளவு நேர்த்தியாக பொருள் செலவுடன் வெளியிட்டாலும் இலாப நோக்கம் சிறிதும் இன்றி பிரச்சார வெறியுடன், நெறியுடன் நன்கொடைகள் பெறப்பட்டு அளிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போதும், அடேயப்பா! 80, 85 ஆண்டுகளுக்குமுன் இத்தகைய சிந்தனைகளா? தொலைநோக்குப் பார்வையா? என்று மலைக்கத்தான் செய்கிறது.

குடந்தை பெரியவர் வெங்கட்ராமன் அவர்கள் தந்தை பெரியாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

கடவுள் மறுப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நம் குடிஅரசு அதிகமாக மக்களிடம் போகுமே என்பதுதான் அந்த யோசனை.

அதற்குத் தந்தை பெரியார் அளித்த பதில், போகும்தான், அதற்காக இந்த இதழை நான் தொடங்கவில்லை. கொள்கையைப் பரப்புவதற்காக, நான் ஒருவனே அச்சிட்டு நான் ஒருவனே படிக்க நேர்ந்தாலும் கொள்கையில் சமரசம் என்பது கனவிலும் இல்லை என்று கறாராகக் கூறினார்.

அந்தக் கருத்துப் பெட்டகம்தான் குடிஅரசு. இந்த இதழைத் தொடங்க தந்தை பெரியார் விரும்பிய கட்டத்தில் ஆச்சாரியார் இந்த முயற்சி வேண்டாம்? என்று தடுத்தார். திரு.வி.க. அவர்களோ, தாராளமாக நடத்துங்கள், பத்திரிகை நடத்த தகுதியானவர் நீங்கள்தான் என்று தைரியத்தையும், ஆர்வத்தையும் அளித்தார்.

குடிஅரசின் பயணம் 1949 வரை தொடர்ந்தது. இடையில் ஏடுகளின் பெயர்கள் மாறி இருக்கலாம்; அரசுகளின் தடை வாள்கள் தீண்டியிருக்கலாம். ஆனாலும், அய்யாவின் இதழ் பயணம், இலட்சியப் பாட்டையில் வீறுநடை போட்டே வந்தது.

காலத்தால் அழிக்க முடியாத, பணத்தால் எடை போட முடியாத இந்த அறிவுச் செல்வம் தமிழர் இல்லம் ஒவ்வொன்றிலும் இடம்பெற வேண்டாமா?

நமது சந்ததியினர்க்குச் சேர்த்து வைப்பது நிலமோ, பணமோ, நகைகளோ அல்ல!

அறிவுலக ஆசானின் அறிவுச் செல்வமாம் இந்தத் தொகுதிகள் வீட்டுக்கு வீடு வீற்றிருக்கட்டும்.

தாய்ப் பாலோடு இந்தக் குடிஅரசு இதழையும் புகட்டி வந்தால், நோயில் பொல்லா நோயாகிய அறியாமை நோய் அலறி அடித்துக்கொண்டு ஓடிவிடும்.

துணிவையும், அறிவையும் கொடுத்துவிட்டால், துன்பம் துன்பம் அடையும், தோல்வி தோல்வி அடையும். வைத்த அடி விளங்கும் வாகை மலர்கள் வணக்கம் கூறி வரவேற்கும்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மானமிகு மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் ஆறு தொகுதிகளையும் வெளியிடுகிறார். நூலகத்துறை இயக்குநர் பேராசிரியர் முனைவர் க. அறிவொளி (சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுத் தலைவர்), திராவிட இயக்கத் தீந்தமிழர் எழுத்தாளர் கயல் தினகரன் ஆகியோர் கருத்து மணம் கமழவிருக்கின்றனர்.

தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார். ஆன்றோர் பெருமக்கள், தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த எழுத்தாளர்கள் தொகுதிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

வெளியீட்டு விழா அன்று ஆறு தொகுதிகளை வாங்குவோர்க்கு சிறப்பான கழிவு உண்டு. ரூபாய் 370 தள்ளுபடி போக ரூபாய் ஓராயிரத்துக்கு ஆறு தொகுதிகள் கிடைக்கும்.

முதல்வர் கலைஞர் வெளியிட்ட முதல் தொகுதியும் கிடைக்கும். விழாவுக்குக் குடும்பத்தோடு வாருங்கள். நண்பர்களோடு வாருங்கள்.

கருத்துச் செல்வம் குதூகலிக்கும் ஓர் அறிவுச்சோலை விழாவின் மணத்தை நுகரும் வாய்ப்புண்டு வாரீர்! வாரீர்!!

----------------------- கருஞ்சட்டை 27-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

27.3.10

அண்டை வீட்டு நெய்யே அக்கிரகார மாமியின் கையே!

அவாள் அப்பன் வீட்டுச் சொத்தோ!


பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்பது ஒரு பழமொழி, இன்றைக்கு இந்தியன் வங்கியும் இந்த வகையில் பூணூல் கயிற்றில் மனு நீதிக் கொடியை ஏற்றி பார்! பார்!! எங்கள் பார்ப்பன தர்பாரைப் பார்! என்று பழிப்புக் காட்டுகிறது தமிழர்களைப் பார்த்து

கடந்த வாரத்தில் இரு தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு சேதி இந்து ஏடு வெளியிட்டதாகும்.

Sankara Nethralaya Activities Hailed என்ற தலைப்பில்18.3.2010 அன்று வெளியானது.

The Bank donated Rs.1 crore to sankara Nethralaya for revamping infrastructure and introducing new services. இன்னொரு தகவல் தினமணியில் (18.3.2010) சங்கரா பல்கலைக் கழகத்துக்கு இந்தியன் வங்கி ரூ.1 கோடி நிதியுதவி என்பது தான் இந்த இரண்டாவது சேதியாகும்.

இந்தியன் வங்கியின் தலைவராக (Chairman) இருக்கும் எம்.எஸ். சுந்தர்ராஜன் என்ற பார்ப்பனர் இந்த நிறுவனங்களுக்கு அரசுடைமையாக்கப்பட்ட இந்தியன் வங்கியின் பணத்திலிருந்து அண்டை வீட்டு நெய்யே அக்கிரகார மாமியின் கையே! என்ற போக்கில் தூக்கிக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பார்ப்பனர்மீது சி.பி.அய். விசாரணையெல்லாம் நடைபெற்றதுண்டு. எப்படியோ அவற்றிலிருந்து எல்லாம் தப்பித்து இந்தியன் வங்கியின் தலைவராகி, தங்கள் இனத்தைச் சேர்ந்த வாளுக்கு இப்படியெல்லாம் அள்ளிக் கொடுக்கிறார்.

இவ்வளவுக்கும் இந்தப் பார்ப்பனர் வரும் ஏப்ரலில் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் நம்மவாளுக்கு எதையாவது செய்து கொடுக்க வேண்டும் என்ற துரித வெறியில் ஈடுபட்டு இருப்பதாகத் தெரிகிறது.

சங்கரா நேத்திராலாயா நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்.எஸ். பத்ரிநாத் என்பவரும் ஆந்திராவைச் சேர்ந்த சங்கர மடத்தின் அத்தியந்த சிஷ்யக் கோடி.

இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் எல்லாம் சங்கராச்சாரியார் தான் தலைமை விருந்தினர்.

அதேபோல காஞ்சி மடம் ஏனாத்தூரில் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் பெயரில் நடத்தும் பல்கலைக் கழகத்துக்கும் கொலைக் குற்றத்தின்கீழ் திரிந்து கொண்டிருக்கும். ஜெயேந்திர சரஸ்வதியிடம் ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை இந்தியன் வங்கித் தலைவர் சுந்தர்ராஜன் கொடுத் துள்ளார்.

வங்கித் தலைவரான சுந்தர்ராஜன் தன்னிச்சையாகத் தூக்கிக் கொடுத்திருக்க முடியாது. அதன் தலைமை அமைப்பின் (Board) ஒப்புதல் பெற்றுத்தான் கொடுத்திருக்க வேண்டும்.

மத்திய அரசின் பிரதிநிதி, ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி என்று பல இயக்குநர்கள் அடங்கிய கூட்டத்தில் இதனைத் தீர்மானித்திருப்பர் என்பது உண்மைதான்.

ஆனாலும் அந்த இயக்குநர்களும் யார்? எல்லாம் அக்கிரகாரத்து மடிசஞ்சிக் கூட்டம்தானே!

இந்தியன் இ.பி.கோ. குற்றப் பிரிவின்கீழ் (302, 120-பி, 34, 201) கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட பிரிவின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டு, கைதும் செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறைச்சாலையில் 61 நாள்கள் கம்பி எண்ணிக் கொண்டிருந்த ஓர் அசிங்கமான பிறவிதான் ஜெயேந்திரர் என்பது ஊர் சிரித்த செய்தியாகும்.

இந்த யோக்கியதையுள்ள ஒரு மனிதரிடம் நாட்டுடைமையாக்கப்பட்ட அரசு வங்கியின் தலைவர் மக்கள் பணத்தை ஒரு கோடி தூக்கிக் கொடுக்கிறார் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றியென்றால், பார்ப்பனர்களின் இனவெறி எந்த நிர்வாணக் கோலத்தில் கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு கூத்தாடுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

கொலைக் குற்றம் மட்டுமல்ல; பெண்கள் விஷயத்திலும், எவ்வளவு பெரிய பச்சை இந்த ஜெயேந்திரர் சரஸ்வதி என்பதை, பார்ப்பனப் பெண்ணான அனுராதா ரமணன் என்ற எழுத்தாளரே தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தினாரே!

தன் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் இந்தப் பெரியவாளு உடலுறவு கொண்ட அகோரத்தை என்ன சொல்ல என்று தலையில் அடித்துக் கொண்டாரே!

ஆனாலும் பார்ப்பனர்களின் இனப்பற்று இருக்கிறதே அது மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவி நிற்கும் தடிமன் கொண்டது.

வேசியர்களிடத்தில்கூட வெட்கமிருக்கும்; ஆனால் இந்த வேதியக் குலக் கொழுந்துகளிடம் மருந்துக்கும்கூட வெட்கம், கூச்சம் என்பது கிடையவே கிடையாது என்பதற்கு ஜெயேந்திர சரஸ்வதிகளையும் இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் சுந்தர்ராஜன்களையும் பார்க்கும்பொழுது புரியவில்லையா?

இந்த ஏனாத்தூர் பல்கலைக் கழகத்திலும், விடுதிகளிலும் பச்சையாக தீண்டாமைப் பாம்பு படம் எடுத்து ஆடியதே நினைவிருக்கிறதா? திராவிடர் கழகம் அதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் கூட நடத்தியதே!

இந்தியன் வங்கி ஒரு கோடி ரூபாயை, தூக்கிக் கொடுத்துள்ளதே அந்தப் பல்கலைக் கழகம் யார் பெயரால் அமைந்தது? மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியான் பெயரால் அமைந்ததுதான்!

அவர் யார்? தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறிய இந்திய அரசமைப்புக் சட்டத்தின் 17ஆவது பிரிவின்கீழ் தீண்டாமை ஒழிப்புக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டியவர். அத்தகைய ஒருவரின் பெயரால் அமைந்திருக்கும் ஒரு பல்கலைக் கழகத்துக்கு அரசு வங்கி இவ்வளவு பெரிய தொகையைத் தானமாக வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள பொது நல விரும்பிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எந்த அடிப்படையில் சங்கரா நிறுவனங்களுக்கு இந்தியன் வங்கி இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தது? இதற்குமுன் இந்த மடத்துக்கு எப்பொழுதெல்லாம் அரசு வங்கியின் பணம் தாரை வார்க்கப்பட்டது?

இப்படி நிதியைக் கொடுக்க இந்தியன் வங்கி வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல், நிபந்தனைகள் என்னென்ன? வேறு யார் எல்லாம் இப்படி நன்கொடை கேட்டனர்? அவர்களுக்கெல்லாம் அளிக்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேளுங்கள்! கேளுங்கள்!!

கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் தங்கள் குலத் தலைவர் சங்கராச்சாரியார்! அவரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்தப் பார்ப்பனர்களை தமிழர்களே, தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்களின் இனநலம் எங்கே? நம் மக்களின் இனநலம் எங்கே? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!

------------------ 27-3-2010 "விடுதலை” ஞாயிறுமலரில்

மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை



அன்னலட்சுமி விரதமல்ல பார்ப்பனத் தந்திரமே!




அஷ்ட அய்ஸ்வரர்யங்களுக்கும் அதிபதி வரலட்சுமி வரலட்சுமி விரதம் இருப்பதால் குடும்ப நிம்மதி, கணவருக்கு நீண்ட ஆயுள், நெல், பொன், வாகனம், அன்பு, அமைதி, இன்பம், ஆரோக்கியம், புகழ் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது அய்தீகம். ஆவணி மாதத்தில் வரும் விரதங்களில் முக்கியமான விரதம் வரலட்சுமி விரதம். இந்த விரதத்தின் பெருமை பவிஷ்யேந்தர புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. (தினமலர்_வாரமலர்)

பரமேஸ்வரனே பார்வதிக்கு வரலட்சுமி விரத மகிமைகளை விளக்கிச் சொன்னார் என்று கூறுவார்கள்.

விரதம் வந்த கதை குண்டினபுரம் என்ற ஊரில் சாருமதி இருந்தாள். மனத்தால் கூட அடுத்தவர்களுக்குத் தீங்கு நினைக்காதவள். அவளுடைய பேச்சும் மிக இனிமையாக இருக்கும்.

சாருமதியின் கனவில் ஒரு நாள் மகாலட்சுமி தரிசனம் தந்து சாருமதி! நான்தான் வரலட்சுமி. தெலுங்கில் சிராவண மாதமும் தமிழில் ஆடி மாதமும் உள்ள பவுர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமை அன்று பக்தியோடு பூஜை செய்தால், உனக்கு வேண்டும் வரங்களைத் தருவேன் என்று சொல்லி மறைந்தாள். கனவு கலைந்து, பொழுது விடிந்ததும், உறவினர்களிடமும் தெரிந்தவர்களிடமும், தான் கண்ட கனவை விவரித்தாள் சாருமதி. நல்லகனவு, வரங்களை அள்ளித் தரும் அந்த வரலட்சுமி விரதத்தை நாம் அனுஷ்டிக்க வேண்டும் என்றார்கள் அனைவரும்.

சில நாட்களுக்குள்ளாகவே, வரலட்சுமி விரதநாளும் வந்தது. அனைவரும் சாருமதியின் தலைமையில் கூடினர். நீராடி, தூய்மையான ஆடைகள் உடுத்தி, ஒரு கலசத்தில் (பித்தளைச்செம்பு அல்லது குடத்தில்) அரைஅரிசி கால்அரிசியாக ஒன்று கூட இல்லாமல், அனைத்தும் முழுசாக உள்ள பச்சரிசியைப்போட்டு, பூரணகும்பம் தயாரித்து, அதன்பின் அந்தக் கலசத்தில் வரலட்சுமியை ஆவாகனம் (எழுந்தருள) செய்து

பத்மஸநே பதிமகரே ஸர்வலோகைக பூஜிதே

நாராயண ப்ரியதேவி. ஸுரப்ரீதா பவணாவதா

நாராயணனுக்குப் பிரியமான தேவியே! தாமரைப் பூவில் இருப்பவளே! தாமரைப்பூவைக் கைகளில் ஏந்தியவளே! உலகமெல்லாம் பூஜிக்கப்படுபவளே! எங்களுக்குத் தரிசனம் தரவேண்டும் தாயே என்று துதித்துப் பூஜை செய்தார்கள். ஏற்கெனவே கனவில் மகாலட்சுமி கூறியபடி சாருமதியும் அவளுடன் விரதம் இருந்தவர்களும் மகாலட்சுமியின் விரதத்தினால் (கருணையினால்) எல்லாவிதமான செல்வங்களும் பெற்று வாழ்ந்தார்கள். அத்துடன் நமக்கு இந்த மங்கலங்கள் கிடைக்கக் காரணம் சாருமதி உபதேசித்த வரலட்சுமி விரதம் தான் என்று சொல்லி வருடாவருடம் அவர்கள் வரலட்சுமி விரதம் இருந்தார்கள்.

கேட்ட வரங்கள் கொடுப்பது வரலட்சுமி விரதம் என்று உலகத்தில் பிரசித்தமாக இருக்கிறது. வரலட்சுமி விரத சரித்திரத்தைக் கேட்டவர்களும் அடுத்தவர்களுக்கு நன்றாகப் புரியும்படிச் சொன்னவர்களும் எல்லாவிதமான செல்வங்களையும் அடைந்து நலமாக இருப்பார்கள்.

பூஜைபற்றிய தகவல்கள் விரத பூஜைக்கான இடத்தை நன்கு மெழுகித்துடைத்து, கோலம் போட்டு விளக்கேற்றி வைத்து வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் மேல் பூஜைக்குண்டான கலசத்தை வைக்க வேண்டும். கலசத்துக்குள் குறுநொய் இல்லாத பச்சரிசி, பொன் கருகமணி, மஞ்சள் முதலான மங்கலப் பொருள்-களைப் போட்டு, அதன் மேல் மாவிலை மற்றும் தேங்காய் வைக்க வேண்டும். பூஜையின் போது, அர்ச்சனை முடிந்த பின் கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீஸ்துதி முதலான லட்சுமிஸ் தோத்திரங்களையோ பாடல்களையோ பாடுவது நல்லது. கலசத்தில் வைத்த தேங்காயை அடுத்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து பாயாசம் பண்ணலாம்.

சிவனுக்கு வில்வம், மகாவிஷ்ணு-வுக்குத் துளசி; அதுபோல் மகாலட்-சுமிக்கு அருகம்புல். அருகம்புல் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது விசேஷம். பொதுவாக பெண்களுக்கான விரதமாக இருந்தாலும் சித்ரநேமி, நந்தன், விக்ரமாதித்தன் முதலான ஆண்களும் வரலட்சுமி விரதம் இருந்து நலமடைந்ததாக ஞானநூல்கள் கூறுகின்றன.

விரதத்துக்கு மறுநாள் புனர்பூஜை முடித்து, அன்றுமாலை ஆரத்தி எடுத்த பிறகு, பூஜைக் கலசத்தை இரவில் அரிசிப் பானையில் வைப்பது வழக்கம். எப்போதும் அன்னலட்சுமிக்குப் பஞ்சமே இருக்காது (சக்தி விகடன்)

(அஷ்டலட்சுமிகள் என்று பலராலும் சொல்லப்படும் ஒரு கடவுளுக்கே எட்டு உருவங்கள் உள்ளன. தனலட்சுமி, தான்யலட்சுமி வீரலட்சுமி, ராஜலட்சுமி, சந்தானலட்சுமி, ஆதிலட்சுமி, வித்யாலட்சுமி, விஜயலட்சுமி என்பவைதான். வரலட்சுமி என்று ஒரு பெயர் இல்லை இவர்களில் யார் வரலட்சுமி? சிவன் பார்வதிக்கு வரலட்சுமி விரதம் பற்றிச் சொன்னானாம். பார்வதி பூஜிக்கப் போகிறாளா? ஒரு பெண் தன் கனவில் மகாலட்சுமி வந்து விரதம் இருக்கச் சொன்னதாக எல்லோரிடமும் சொல்லி இந்த விரதம் வந்ததாம். அதற்குச் சொல்லப்பட்ட பாடல் மகாலட்சுமியைப் பற்றியதே. முதல் கூட்டம் பூஜை செய்த முறைக்கும் தற்போதுள்ளதற்கும் மாறுதல் உள்ளது. அது அவரவர் வசதியும் இஷ்டமும் போலும். ஓர் ஆண்டு விரதம் இருந்தால் தான் எல்லா செல்வங்களும் கிடைத்துவிடுமே. பின் ஏன் ஆண்டுக்கு ஆண்டு செய்ய வேண்டும்? சொல்லப்பட்டுள்ள தோத்திரங்கள் எல்லாம் வடமொழியே. கலசத் தேங்காயை அடுத்த வாரமே பயன்படுத்தச் சொல்கிறாள். ஒரு ஆண்டு வைத்திரு என்று சொல்லவில்லை, இதில் ஆண்களும் விரதம் இருந்தார்கள் என்ற ஒரு கதை. கலசத்தை அரிசிப் பானையில் வைக்க வேண்டும் என்றால் குடத்தை எப்படி அரிசிப் பானையில் வைக்க முடியும்? அன்னலட்சுமிக்குப் பஞ்சம் கிடையாதாம். யார் இவள்? இந்த விரதம் இருப்பதால் பல நலன்கள் கிடைக்கும் என்ற ஆசையைத் தூண்டி, பெண்கள் மாறாமல் இருக்கவே இந்தக் கதை. இந்த சரித்திரத்தைக் கேட்டவர்களும், பிறருக்குப் புரியும்படிச் சொன்னவர்-களும் பல நலன்கள் பெறுவராம். ஒரு கடவுளச்சிக்கு எட்டுப் பெயர்களுடன் எட்டு உருவங்கள் சொல்லி இன்னும் பல பெயர்கள் கூறப்படுகின்றன. மக்கள் என்றும் அறிவு பெறக்கூடாது என்பதே பார்ப்பனத் தந்திரம். சிந்திப்பீர்!


------------------ 20-3-2010 " விடுதலை” ஞாயிறுமலரில்

தங்க நாராயணசாமி அவர்கள் எழுதிய கட்டுரை