Search This Blog

26.3.10

பார்ப்பனன் எங்காவது உழுகிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கூட்டுகிறாளா?


மதங்கள் ஆபாசம் நிறைந்தவைகள்!

இன்று நான் திராவிடர் கழகத்தைப் பற்றி எடுத்துச் சொல்வதை நீங்கள் தயவு செய்து கவனமாகக் கேட்க வேண்டும். ஆனால் கேட்டவற்றை உடனே நம்ப வேண்டுமென்று சொல்லவில்லை. கேட்பவற்றை மனதிலே இருத்தி ஆராய வேண்டும். நான் சொன்னவைகளுக்கு யாராவது மாறுபாடாகச் சொன்னாலும் இரண்டையும் வைத்து நாட்டின் நிலைமையை நன்றாக ஆராய்ந்து பின் எது சரி என்று தோன்றுகிறதோ அந்தப்படி நடக்க வேண்டும் என்று நான் உங்களை முதன்முதலாகக் கேட்டுக் கொள்கிறேன்.
  
மனிதன் மற்ற பிராணிகளை விட கொஞ்சம் அதிக அறிவு உள்ளவன். ஆகையினால் அந்தப் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டுகிறேன்.
  
தோழர்களே! இந்நாட்டுக்குரிய மக்கள் நாம் நாம் திராவிடர் நாட்டு மக்கள் என்று கூறப்பட்டு வருகிறோம். யாராலே, எப்பொழுது அந்தப் பெயர் வந்தது என்பது பற்றி இப்பொழுது விவரிக்க சமயம் இல்லை. அது தேவையும் இல்லை. ஆகவே நம் மக்களுக்குத் திராவிடர் என்பதைத் தவிர வேறு பெயர் இன்றைய தினம் சொல்வதற்கு இல்லை. ஏதாவது சொல்ல வேண்டுமானால் சூத்திரர், தாசர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்தப் பெயர் மிகவும் இழிவான கருத்துடையதாகும். இந்த நாட்டிலே மொத்த ஜனத்தொகையில் 100 க்கு 3 பேராகிய பார்ப்பனரைத் தவிர்த்து மற்ற எல்லா பேர்களும் சூத்திரர்கள்தான். அந்தச் சூத்திரர்களைத்தான் நான் இன்று திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறது. பார்ப்பனர் தன்மை என்பது ஆரியம் எனப்படுவது. நம்மை திராவிடர் என்று சொல்லாமல் வேறு பெயரால் அழைத்துக் கொள்ளலாம் என்றால், மேலே சொல்லியபடி சூத்திரர்கள் என்று சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை. தமிழர்கள் என்று சொன்னால் ஆகாதா என்றால், இந்த சூத்திரத்தன்மையை அது குறிப்பிடவில்லை. ஒரு காலத்திலே தமிழர்கள் என்று குறித்து இருக்கலாம். ஆனால் இப்பொழுது அது மொழியின் பேரால் போய்விட்டது. ஆகையால் தமிழர் என்று இப்பொழுது சொன்னால் அந்த மொழியைப் பேசுகிறவர்களை மாத்திரம் குறிக்கிறது. அதில் பார்ப்பானும் சேர்ந்து கொள்ளுகிறான். ஆகையால்தான் சூத்திரன் என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் திராவிடர்கள் என்று குறிப்பிடுவதிலே, யாரை குறிப்பிடுகிற தென்றால், பார்ப்பனரைத் தவிர்த்த மற்ற மக்களை, சமூதாயத் துறையில் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், நீசர்கள் என்றும் சொல்லப்படுகிறவர்களைத்தான்.
  
ஆகையால், இன்று நமக்குத் திராவிடர் சமூதாயத் துறையிலே உள்ள இழிவு நீக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கிய கொள்கை. திராவிடர்கள் இன்றைய தினம் என்ன நிலைமையில் இருக்கிறார்கள்? 100 க்கு 98 பேர்கள் உள்ள சமூதாயம் நீச ஜாதி. ஆனால், 100 க்கு மூன்று பேர் இருக்கிற சமூதாயம் பார்ப்பன ஜாதி. அதாவது மேல் ஜாதி. இந்த நிலை மாறவேண்டும்.
  
தோழர்களே! இந்தச் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தான், இந்த நாட்டு பழங்குடி மக்கள். பார்ப்பனர் என்று சொல்லப்படுபவர்கள் இந்த நாட்டுக்கு வெளி நாடுகளிலிருந்து பிழைப்புக்காக குடியேறினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இது நான் சொல்லுவதில்லை. ஆதாரத்தின்படி, ஆராய்ச்சியின்படி, பார்ப்பனரால் எழுதி வைத்திருக்கிற ஆதாரத்தின்படி ஆரியன் என்றும், இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவன் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் ஆரிய முறைப்படி நடக்கிறார்கள். இந்த பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குச் சுமார் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே பிழைக்க வந்தவர்கள். வந்ததும் இந்த நாட்டு வாழ்க்கைக்குச் சம்பந்தப்படாமல் இந்த நாட்டு வளப்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
  
நாம் உழைக்கிறோம், உழுகிறோம்; நம்மால்தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யாவிட்டால் இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம். நம்மால்தான் அத்தனை பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம் தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால் தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதி எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலியன வசதியளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவு படுத்தப்பட்டு இருக்கிறோம்.
 
பார்ப்பனன் எங்காவது உழுகிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கூட்டுகிறாளா? கல்லுடைக்கிறார்களா? ஏன்? இவை எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவை எல்லாம் மாறி நாம் முன்னேறவேண்டுமென்றுதான் கேட்கிறோம்.
  
மற்றவர்களுக்கெல்லாம் உயர்ந்த வசதியாக, பார்ப்பானாக இருப்பதால்தான் 100 க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள். ஆனால் நாம் சூத்திரர்களாக ஆக்கப்பட்டிருப்பதால் தான் தற்குறிகளாக சகல தொழில்களும் செய்யும்படியாக ஆகிவிட்டோம். அவர்கள் இன்றைய தினம் மோட்சத்திற்கு டிக்கட் கொடுக்கிறார்கள். கடவுளுக்கு அடுத்தபடியில் இருக்கிறார்கள். நம்முடைய மதத்தின் தத்துவத்தின்படி பார்ப்பான்தான் படிக்க வேண்டும்; சூத்திரன் படிக்கக்கூடாது; பார்ப்பனனுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று இருக்கிறது. மதத்தின் பேரால் கடவுள் சொன்னார் என்கிற பேரால் இருந்து வருகிறது. மற்றவர்கள் எல்லாம் தற்குறிகளாக இருந்து வருகிறார்கள்.
  
இவற்றைப் பற்றி நாம் கவனிப்பது இல்லை. அதாவது கவனிக்கப் போனால், மதம் என்ன சொல்லுகிறது? கடவுளுக்கு இது விரோதம் சாஸ்திரம் என்ன சொல்லுகிறது? என்று பார்க்கிறோம். ஆனால், இதை மக்களுக்கு எடுத்துக் சொல்லும் பொறுப்பில் இதுவரை யாரும் புறப்பட்டதில்லை, எங்களைத் தவிர. நாங்கள் தான் தோன்றி இருக்கிறோம். நாங்கள் என்ன பெரிய வீரர்களா? இல்லை மகா சூரர்களா? நமக்கு முன்னால் இருந்த 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகாத்மாக்கள் எல்லோரையும் விட நாங்கள் என்ன உசத்தியா? இப்பொழுது தான், சட்டசபையிலே மெம்பராக தலைவராக இருக்கும் சிவவண்முகம் பிள்ளையால் கேட்க முடியுமா? சர்.சண்முகம் செட்டியார், சர் ராமசாமி முதலியார், ராஜா சர் முத்தையா செட்டியார், பெரிய பெரிய அரசாங்கப் புலவர்கள் இருக்கிறார்களே, இவர்களுக்காவது வாயில் வருமா? முடியவே முடியாது! காரணம்? இவர்கள் எல்லாம் பார்ப்பானுக்கும் அவனால் ஆக்கப்பட்ட மதம், சாஸ்திரம், கடவுள் ஆகியவற்றுக்கும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்றைய தினம் நாங்கள் அவற்றை லட்சியப்படுத்துவது இல்லை. ஏன்? என்றால் எங்களுக்கு இதைப் பற்றிய கவலையோ பயமோ கிடையாது. இந்த காரியத்திற்கு எங்களைத் தவிர, இன்றும் வெகுநாட்கள் வரை யாரும் தோன்றமாட்டான் என்பது உறுதி.
  
சுதந்திர சர்க்கார், "தீண்டாமையை ஒழித்தோம்", அப்படி இப்படி என்று எல்லாம் ஒப்பாரி வைக்கிற காங்கிரஸ்காரன் வாயில் கூட ஜாதியை ஒழித்தோம், சாஸ்திரங்கள், கடவுள்கள் எல்லாம் ஒதுக்கிவிட்டோம் என்று வந்ததே கிடையாது.

ஆகையால் இந்த அருமையான காரியத்தைத் திராவிடர் கழகம்தான் செய்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். எங்களுக்கு இந்த நாட்டுக் கடவுள்களைப் பற்றி கவலை இல்லை. கடவுள்களை எல்லாம் குழவிக் கற்கள், மண்ணாங்கட்டிகள், மாடு, பாம்பு, கழுகு என்றும், சாஸ்திரங்களை எல்லாம் குப்பை கூளங்கள் என்றும், ஆபாசங்கள் நிரம்பியது என்றும், மதத்தை முட்டாள்தனம் என்றும், அடிமைக்கட்டுப்பாடானது என்றும் நினைக்கிறோம். ஜாதி ஒழிய வேண்டுமென்றுதான் அர்த்தம், சாஸ்திரப் புராணங்களைக் கிழித்துக் குப்பையில் போட வேண்டியதுதான். நெருப்பு வைத்து கொளுத்த வேண்டியதுதான் என்று அருத்தம் ஏன் ஜாதி கூடாது என்றால் ஜாதியைக் கூறக்கூடிய ஆதாரங்களும் ஜாதி உற்பத்தி செய்த கடவுளும் மதமும் கூடாது என்றுதான் அர்த்தம்.

இவற்றைச் சொல்ல இன்று யார் சம்மதிப்பார்கள்? இவர்களிடம் போய் சிலப்பதிகாரத்தில் ஜாதி இருக்கிறது; ராமாயணத்தில் ஜாதி இருக்கிறது என்று சொன்னால் அப்படியானால் நமக்கும் இருக்கட்டும் ஜாதி என்பார்களே தவிர அவை தவறு என்று சொல்ல எங்களை விட்டால் வேறு ஆள் இல்லை. எங்களைத் தவிர வேறு யாருக்கும் தைரியமும் வராது. வருமா என்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். தோழர்களே! இன்று நம் பெண்களைத் திருத்தினாலும் திருத்தலாம். ஆனால் படித்த அறிவாளிகளை அய்க்கோர்ட் ஜட்ஜீகளை, மாபெரும் டாக்டர், புலவர்களை, பண்டார சன்னதிகளைத் திருத்துவது கடினம். இன்று வரையில் மேற்கண்டவர்கள் உள்பட நாம் எல்லாம் பார்ப்பனர் வைப்பாட்டி மகன் அடிமை என்று தான் இருக்கிறது. ஆகவேதான் இவை எல்லாம் ஒழிய வேண்டும் என்று நாங்கள் பாடுபடுகிறோம். அவர்களுக்கு ஏனோ மான ஈனமில்லை.
  
ஆகவே தோழர்களே! இவற்றை எல்லாம் சொல்லி நாங்கள் கடவுள் இல்லை என்ற சொல்ல வந்ததாக நீங்கள் நினைக்கக் கூடாது. கடவுள் உண்டா, இல்லையா என்பது உங்களிடம் பேசுகிற பேச்சல்ல. அது அறிவுப் பேச்சு. ஆனால் உலகத்திலே 250 கோடி மக்களில் 20 கோடி மக்களாகிய நமக்குத்தானே பலகோடி கடவுள்களும், சாஸ்திரமும், மதமும், ஜாதியும் இருக்கின்றன. மீதி உள்ளவர்கள் எல்லோருக்கும் ஒரே கடவுள் ஒரே மதம் என்ற முறையில் மனிதர்களாகத்தானே வாழுகிறார்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இவர்களுக்குள்ளே ஜாதி வேறுபாடு உண்டா? இவர்களுக்கு மதம் இல்லையா? சாஸ்திரம் இல்லையா? வேதம் இல்லையா? ஆனால் இவை ஏதும் ஜாதியைக் குறிப்பிடுபவையல்ல. இதைப் போல நாமும் ஜாதியற்று, மதம் அற்று, இதைக் காட்டுகிற சாஸ்திரம் அற்று வாழவேண்டுமென்று சொன்னால் எல்லோரும் நாசக்காரர்களாய் மதத் துரோகிகளாய் மதிக்கப்படுகிறோம்.

இன்று உண்மையிலேயே இவ்வளவு விஞ்ஞான அறிவு ஏற்பட்ட பிறகும் நாம் முட்டாள்களாக பழைய கருத்துக்களையே கட்டி அழுகிறோம். இன்று ஆகாய கப்பல்களும், கம்பியில்லா தந்தியும், ரேடியோவும் வந்து நம்மை அதிசயப்படுத்துகிற சமயத்தில், நாம் தேர் திருவிழாவும் கும்பாபிஷேகமும் செய்கிறோம். 20 மணி நேரத்தில் அமெரிக்கா போகிறான். ஆனால், நாம் கட்டை வண்டி கட்டிக் கொண்டு பிரயாணம் செய்கிறோம்.
 
ஆகையால் நாம் எடுத்துக் கொள்கிற முயற்சியின் பயனாக, சமூதாயத் துறையில் நாம் செய்கிற முயற்சியின் விளைவாக சுமார் அய்ந்து வருடத்திற்குள் பார்ப்பானோ, பறையனோ, சூத்திரனோ, பஞ்சமனோ, இருக்கக்கூடாது. இந்த மாதிரியான உணர்ச்சி வந்தால்தான் நமக்கு நன்மை கிடைக்கும். மற்றபடி சுதந்திரமோ, சுயராஜ்யமோ வந்தால் நம் அறிவு வளர்ந்து நாம் முன்னுக்கு வரமுடியாது. ஆகவே, எல்லோரும் இதற்காகப் பாடுபட வேண்டும் என்று சொல்லுகிறேன்.
 
இன்று நமக்கு இவற்றின் பேரால் அறிவு மட்டும் கெட்டுப் போவதில்லை. ஏராளமான பணமும் பாழ் செலவு செய்யப்படுகிறது. எவ்வளவு பணம் இந்த கடவுள்களால் வரும்படி வருகிறதெனப் பாருங்கள். திருப்பதி கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் வரும்படி இதையெல்லாம் அனுபவிப்பவர்கள் யார்? மதுரை கோவிலுக்கு 7, 5லட்ச ரூபாய் வரும்படி; இதையெல்லாம் யார் உண்டு கொழுக்கிறார்கள்? சிறீங்கத்துக்கு 10 லட்சம் ரூபாய் வரும்படி. இதையெல்லாம் யார் மோசடி செய்கிறார்கள்? இவை மக்களுடைய முன்னேற்றத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறதா? பின் எங்கே போகிறது? பாழும் மதில்களைக் கட்டுவதற்குச் செலவு செய்யப்படுகிறது. அர்ச்சகர்கள் தொந்தி நிரம்புகிறது. இந்தப் பாழாய்ப் போகும் பணத்தில் ஒரு பகுதியை மக்கள் முன்னேற்றத்திற்காக விஞ்ஞான ஸ்தாபனங்கள் ஏற்படுத்த, அறிவு ஊட்டும் அலுவலகங்களைச் செய்யும்படி செய்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும்?
 
ஆகையால் இனி கடவுள்கள் என்ற பெயரால் ஒரு காசுகூட கொடுக்கக்கூடாது. பத்து சதுர அடி நிலம் கூட கொடுக்கக் கூடாது. நாம் உண்டாக்கின சாமி, நம்மால் கட்டப்பட்ட கோவில், ஆனால் நாம் அதைத் தொடக்கூடாது. நாம் தொட்டால் சாமி செத்துப் போகும். கும்பாபிஷேகத்துக்கு நாம் செலவு செய்கிறோம். ஆனால் பார்ப்பான் சாமியைத் தொடுவது, சாப்பாடு போடுவது, சகலவற்றிலும் அவனுக்குத் தான் அதிகாரம்.
 
ஆகையால் இந்த மாதிரியான கண்மூடித்தனமான உணர்ச்சிகளை விட்டுவிட்டு அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும். அப்படி நடந்தால் இந்த ஆயிரம் வருடக் கணக்காக நமக்கும் நம் தாய்மார்களுக்கும் இருந்து வருகிற சூத்திரப் பட்டம் பறந்துபோகும்.

இதற்காகத்தான் நாங்கள் சமூதாயத் துறையில் சமத்துவம் வேண்டுமென்று கேட்கிறோம். மக்கள் பிறவியிலே உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது. எனவே தோழர்களே! சமூதாயத்துறையில் எங்களுடைய திட்டத்தை எடுத்துச் சொன்னோம். இது சரி என ஒப்புக் கொண்டால் நீங்கள் அதன்படி நடக்க வேண்டுமென்று சொல்கிறேன்.
 
 
-------------------26.07.1951-இல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 30-07-1951
 
 
 
 

7 comments:

passerby said...

பெரியார் எழுப்பிய கேள்விகள் அவர் காலத்தையொட்டியன. இன்று அவை செல்லா.

வீட்டு வேலை செய்யும் பார்ப்பனத்திகள், கடைனிலை ஊழியர்கள், ஓட்டல் சர்வர்கள் - என்று பார்ப்பன ஊழியர்களை இப்போது காணலாம்.

வீட்டுவேலை செய்வோர் - எச்சில் பாத்திரங்களையும் வீட்டையும் கழுவிவிடுவர்; வேலைசெய்து போகும்போது, அவ்வீட்டின் கழிவுகளை, எடுத்துத் தெருவோரத்தில் இருக்கும் கழிவுத்தொட்டியில் இட்டுச்செல்வது அவர்கள் பணியாகும்.

ஓட்டல் சர்வர் மேசையைத்துடைப்பார். எச்சில் பாத்திரங்களையும் எடுத்துச்செல்வார். தென்காசியில் நாங்கள் ஒரு ஓட்டலில் உணவருந்தும் போது என் இருவயது பையனை மேசைமேல வைத்து ஊட்டினேரம். அது ஒரு சின்ன ஓட்டல். அவன் மூத்திரம் போய்விட்டான்.

பார்ப்பன சர்வர்: “பரவாயில்லை, நான் துடைத்துக்கழுவி விடுகிறேன். நீங்கள் பக்கத்து மேசைக்குப்போங்கள்” என்றார். அப்படியே செய்தார்.

நான் சென்னையில் வேலைப்பார்த்தபோது, என் டிரைவர் ஒரு பார்ப்பன இளைஞன். அவன் வாயைத்திறந்தா நான் காதுகளைப்பொத்த வேணும். அவ்வளவும் மெட்ராஸ் சேரிப்பாசை.

நான் டெல்லிக்கு மாற்றலாகிச்சென்ற போது, தமிழ்தெரிந்த வேலைக்காரி தேடியபோது வந்தவர் ஒரு பார்ப்பனப்பெண். அவர் ஒரு கோயில் குருக்கள் பெண்டாட்டி.

கடைனிலயூழியர்கள், ஆபிசர் சொல்லும் வேலையெல்லாம் செய்யவேண்டும். பெட்டி சுமக்கவேண்டும்.

இன்று இதையெல்லாம் பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் செய்ய், நீங்கள் அக்காலத்தில் வாழ்கிறீர்கள்.

பெரியார் இன்றிருந்தார் வேறுமாதிரியாகத்தான் எழுதுவார்.

Anonymous said...

"திராவிட கழகத்தான் எங்காவது உழுகிறானா? எந்த திராவிட கழக பெண்ணாவது வீடு கூட்டுகிறாளா?"

Dhilip said...

Please change the background color from Black to something else may be pleasing colors.

It is very tough to read big articles

கபிலன் said...

வாழ்த்துக்கள் கள்ளபிரான்!
தங்களின் வாதம் அருமை !

seethag said...

எதை வைத்து பெரியார் உழுகிறர்கள , பெருகுகிறர்களா என்ரு சொனர் என்று தெரியவில்ல்ஐ. ஏநென்றல் இவை யாவுமே சாதியை மத்தும் சார்ந்து இல்லை ,வர்க்க ரீதியாகவுமே உள்ள ப்ரசீனகள்.
ஏழை பார்ப்பனர்கள் அன்ரும் உண்டு ,இன்றும் உண்டு.அவர்கள் வாக்கை முரை எப்படி என்று தெரியஇல்லை.

இதே பெரியார், paarppana பெண்களை போக பொறூளாக சொன்னதாக படிதிருக்கிறேன்.உண்மையா தெரியவில்ல்ஐ.

பெரியார் தோன்றாத கர்னாடகாவில் உழுபவனுக்க்ஏ நிலம் என்ர சட்டதின் மூலம் பார்ப்பன் ஆதிக்கம் வெகுவாக அழிந்தது. இன்று தங்கள் நிலத்தை உழுத பார்ப்பனர்களஇ நான் அறிவேன்.

நம்பி said...

//Blogger seetha said...ஏழை பார்ப்பனர்கள் அன்ரும் உண்டு ,இன்றும் உண்டு.அவர்கள் வாக்கை முரை எப்படி என்று தெரியஇல்லை.//

மூன்று சதவீதமுள்ள பார்ப்பனர்களில் ஏழை பார்ப்பனர்களை மட்டும் கண்ணிற்கு தெரிகிறதே...97 சதவீதத்தில் உள்ள திராவிடர்களில் ஏழைகள் எத்தனை சதவீதத்தில் உள்ளனர் என்றாவது தெரியுமா..வீடற்றவர் எத்தனை சதவீதத்தில் உள்ளனர், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எத்தனை சதவீதத்தினர் என்பதாவது....? இதை தெரிந்திருந்தால் இந்த கேள்வி எழுந்திருக்காது...

பெரியார் பார்ப்பனர் திராவிட பெண்கள் என்று பிரித்து பார்த்ததில்லை...பெண்களே வர்ணத்தில் மிக கீழே வருபவர்கள்...அதில் பார்பனர்...பார்ப்பனர் அல்லாதவர் என்ற வேறுபாடில்லை...அதை மறந்து பார்ப்பனீயத்தை ஆதரிக்கும் பெண்களை எதிர்க்கவும் தயங்கியதில்லை...

உழுதவனுக்கே நிலம் சொந்தம் அனைத்து உழவருக்கும் தான்...நிலத்தை உழும் பார்ப்பனரை எவரும் அறிந்திலர்...இருந்திருந்தால் பார்ப்பனீயத்தில் இருந்து வெளியே வந்தவராயிருப்பார்.

நம்பி said...

//Blogger கள்ளபிரான் said...

பெரியார் எழுப்பிய கேள்விகள் அவர் காலத்தையொட்டியன. இன்று அவை செல்லா.//

இப்படியொரு நிலைமை வரவேண்டும் என்று தான் அனைவருக்கும் ஆசை...அது இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் ஆனாலும் முடியாது போல த்தான் கருத்துக்கள் வருகிறது...இணையத்தில் வர்ணாசிரமத்தை ஆதரித்து தான் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன. பெரியார் எழுப்பிய கேளவிகள் எல்லா காலத்திற்கும் நிலையானவை...நாற்பது வருடத்திற்கு முன்னாடி தான்...பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை...அதே தான் இப்பவும் இருக்கிறது...இணையத்திலேயே இருந்தால் ஒன்றும் தெரியாது. வெளியே போனால் எல்லா அட்டூழியங்களையும் காணலாம். எந்த காலத்திற்கும் செல்லும்...இது ஒரு வெட்ககேடான ஒப்புதல்.

//பார்ப்பன சர்வர்: “பரவாயில்லை, நான் துடைத்துக்கழுவி விடுகிறேன். நீங்கள் பக்கத்து மேசைக்குப்போங்கள்” என்றார். அப்படியே செய்தார்.

பார்ப்பன சர்வர்: “பரவாயில்லை, நான் துடைத்துக்கழுவி விடுகிறேன். நீங்கள் பக்கத்து மேசைக்குப்போங்கள்” என்றார். அப்படியே செய்தார்.//

அவர் பார்ப்பன சர்வர் என்று எப்படி தெரிந்தது...அது பெரிய விஷயமாக கண்ணில் பட்டது எப்படி?...அப்படியே டீக்கடையில்...ஏன் அங்கேயே வெகுகாலமாக டீ கிளாஸ், எச்சை பிளேட் கழுவிக்கொண்டிருப்பவனை கண்கள் காணாதது ஏனோ...?

இங்கு பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் இல்லை...வேலை பார்க்கும் ஏழை...இந்த அடிப்படையில் தான் பார்க்கவேண்டும். ஏதோ செய்யக்கூடாததை அவர்கள் செய்கின்றனர் என்ற நிலையில் பார்க்ககூடாது. பார்வையே பிரிவை ஏற்படுத்துகிறதே..பிரிவை ஏற்படுத்த ஏதோ ஒரு அடையாளம் சுட்டி காட்டியிருக்கும்...அது என்ன பூணூல்....அனைவரையும் உழைக்கும் ஏழைத் தொழிலாளிகள் என்று ஓன்றுபடுத்தி பார்க்க மனம் வரவில்லை...அப்படித்தானே....?


//நான் டெல்லிக்கு மாற்றலாகிச்சென்ற போது, தமிழ்தெரிந்த வேலைக்காரி தேடியபோது வந்தவர் ஒரு பார்ப்பனப்பெண். அவர் ஒரு கோயில் குருக்கள் பெண்டாட்டி.//

//கடைனிலயூழியர்கள், ஆபிசர் சொல்லும் வேலையெல்லாம் செய்யவேண்டும். பெட்டி சுமக்கவேண்டும்.

இன்று இதையெல்லாம் பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் செய்ய், நீங்கள் அக்காலத்தில் வாழ்கிறீர்கள்.//

இதையும் இப்படித்தான்...பிரிக்கப்பட்டு பார்க்கப்படுகிறது..எத்தனையோ பார்ப்பனரல்லாத பெண்கள் வேலை பார்க்கின்றனர்...

ஏதோ பார்ப்பன பெண்களை வேலை பார்ப்பது பெரிய விஷயம் போலவும் இங்கு காணப்படுகிறது...சுடுகாட்டில் பிண்ங்களை தோண்டி எரிக்கும் பெண்களை பார்த்திருக்கிறீர்களா...அவர்கள் வெளியே வந்தால் கூட எந்த ஜாதி என்று எவரும் பிரித்து பார்ப்பதில்லை....பகுதி நேர வேலைக்கும் செல்வார்கள்...எந்த ஜாதி என்றும் தெரிவதில்லை...அவரை பற்றி நாம் கவலைப்படுவதில்லை....இது மாதிரி எந்த வேலையும் பார்ப்பன பெண்கள் பார்த்திருக்கிறார்களா?...பார்த்திருந்தால் ஜாதி எவருக்கும் தெரிந்திருக்காது....உழைப்பது பெரியவிஷயமா...? மலம் அள்ளும் பெண்களை பார்த்திருக்கிறீர்களா...பார்ப்பனர் பண்ணினாலே ஜாதி மறந்து விடும். நான் பார்ப்பனர் என்று எந்த இடத்திலும் சொல்லிக்கொள்ள மாட்டார். அடையாளம் தரிக்க மாட்டார். அவர்களை எவ்வளவு வற்புறுத்தி கேட்டால் கூட நம்மால் அவர்களின் ஜாதியை தெரிந்து கொள்ள முடியாது...அப்படி இருக்கவேண்டும்.

இப்படி சொல்லுவார்கள் நான் பார்ப்பன ஜாதியில் பொறந்து.. விதி என்னை இந்த வேலை செய்ய வெச்சிடுச்சி...இப்படி சொல்லுவார்கள்....அப்ப இது கேவலமான தொழில்....கன்பார்ம்...ஜாதி போகல...

இவர்கள் (பார்ப்பனரல்லாதவர்).... நான் தான் மலம் அள்ளுகின்றேன் என்மகனாவது...பெரிய படிப்பு படிக்கவேணும்...நான் படிக்கவைக்கிறேண்டா ராசா..படி மலம் அள்ளி படிக்கவெக்கறேன்...வித்தியாசம் தெரியுமே....

இதையெல்லாம் நாங்களும் எல்லா இடங்களிலும் பார்த்து வருகிறோம்...

எந்த தொழிலும் கேவலமானது அல்ல...அனைத்தும் உழைப்பு...என்ற நினைப்பு அனைவரது மனதிலும் வரவேண்டும்.

அவர் கோயில்லேயும் வேலை பார்ப்பார்....மலமும் அள்ளுவார் இப்படி வரவேண்டும்.

மற்றவர்கள் எவர் உழைத்தாலும் ஜாதி தெரிவதில்லை...இவர்கள் உழைப்பது கூட பெரிய விஷயமா...? இப்படி பார்க்காதீர்கள் மற்றவர்களை போல ஏழைகள்...என்று பார்க்க மனம் வரவில்லையே...உங்கள் பார்வை இந்தக்காலத்திற்கேற்ப ஒரு பிரிவினரின் பரிவுக்காக மாறியிருக்கிறது அவ்வளவு தான்.

அது அப்படியே தான் இருக்கிறது. இதை தான் பெரியார் மிகவும் வன்மையாக இப்பொழுது இருந்தால் கண்டித்திருப்பார்.