Search This Blog

31.3.10

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அத்துமீறல்களை ஒடுக்கவேண்டும்


அதிராம்பட்டினத்தில் ஒத்திகையா?

இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவாரங்கள், பாரதீய ஜனதா கட்சி இவற்றின் அன்றாட திருப்பணியே ஆங்காங்கே மதக் கலவரங்களை உருவாக்கி, அதன்மூலம் இந்து வெறியை ஊட்டிக் குளிர்காய்வதுதான்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை வட்டாரங்களில் அடிக்கடி இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதைத் தங்களின் வழமையான பணியாகவே கொண்டுள்ளனர்.

அதிராம்பட்டினத்தில் உள்ள ஏ.ஜே. பள்ளிவாசல் சுற்றுச்சுவர் அண்மையில் இடிக்கப்பட்டது. கோட்டாட்சியரிடம் முறைப்படி புகார் கொடுக்கப்பட்டது. கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி அந்தச் சுவர் பள்ளிவாசலுக்குச் சொந்தமானதுதான் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

பொறுக்குமா விஷமிகளுக்கு? மீண்டும் அந்தப் பள்ளிவாசல் சுவரினை மதவாதக் கும்பல் இடித்தது. இதனை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முசுலிம் அமைப்புகள் அறிவித்தன.

ஆர்ப்பாட்டத்தில் 4000 முசுலிம்கள் பங்கேற்றனர். இந்து முன்னணியின் கலவரங்களுக்குத் துணை போக விரும்பாத இந்துக்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கடைகளும் அடைக்கப்பட்டன.

முஸ்லிம்களின் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்யக்கூடாது என்று திட்டமிட்ட சங் பரிவார்க் கும்பல் போட்டி ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

இரண்டு மீனவத் தெருக்களுக்கு இடையே நிலவி வந்த வாய்க்கால் தாவாவைப் பயன்படுத்தி கலவரத்திற்குக் கத்தியைத் தீட்டினர்.

வேண்டுமென்றே ஒரு கலவரத்தை உருவாக்குவதற்காகத் தீட்டப்பட்ட இந்தச் சதித் திட்டத்திற்கு, எதிர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதியளிக்கக் கூடாது என்று காவல்துறையிடம் எழுத்து மூலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட தகவல் அளிக்கப்பட்டது.

பா.ஜ.க. வகையறாக்களின் உள்நோக்கத்துடன் கூடிய ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இந்துக்களும் ஆதரவு தராத நிலையில், பா.ஜ.க.வினரின் முயற்சி படுதோல்வியை அடைந்தது. தொடக்கத்தில் சங் பரிவார் நடவடிக்கைகளுக்கு ஓரளவு ஆதரவு காட்டி வந்தவர்களும், இந்துக்களும் நாளடைவில் அவர்கள் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, ஆதரவினை விலக்கிக் கொண்டனர். இதன்மூலம் இவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு விட்டனர்.

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பகுதியில் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கூட ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் கலவரம் விளைவித்ததுண்டு. முத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலையையும்கூட அவமதித்தனர். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைமைகளே பின்பலமாக இருந்து குறிப்பிட்ட சில பகுதிகளில் பிரச்சினைகளை உருவாக்கத் தீனிபோட்டும் வருகின்றன. உளவுத் துறையும் இதன் விஷ ஊற்றைக் கண்டுபிடித்து, தொலைநோக்குக் கண்ணோட்டத்தோடு செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வட்டாரங்களில் கணிசமான அளவு முஸ்லிம்கள் இருக்கும் நிலையில், அதனைக் குறி வைத்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதுதான் பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் நோக்கமாகும்.

குறிப்பிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் வியாபாரம் உள்ளிட்டவைகளில் செல்வாக்குப் பெற்றிருப்பது இயல்பானதே! அதனை ஏதோ இந்துக்களுக்கு எதிரான ஒன்று என்று திசை திருப்பி அப்பாவிகளைத் தூண்டிவிடும் விஷமத்தனத்திற்கு முஸ்லிம்கள் அல்லாதார் இரையாகக் கூடாது. காவல்துறையும் கவனமாக இருந்து ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அத்துமீறல்களை சட்ட ரீதியாக ஒடுக்கவேண்டும் என்பதே நல்லிணக்கத்தை விரும்பும் பொதுவான மக்களின் எதிர்பார்ப்பாகும்.


--------------------”விடுதலை” தலையங்கம் 30-3-2010

4 comments:

C.S.Raja said...

மதமில்லை மார்கம் என்று சொல்லி உலகில் தீவிரவாத தாக்குதல் நடத்தி வருபவர்களை ஆதரித்து பேசுவது ஏன்?

எப்போதோ நடந்த பாபர் மசுதியை பற்றி வாய்கிழிய பேசிவிட்டு இரட்டை கோபுர தாக்குதலையும், காசி, கோயமுத்தூரில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களையும், மும்பை தாஜ் ஓட்டல் உட்பட எட்டு இடங்களில் நடந்த தாக்குதல், பாராளுமன்றத்தில் நடந்த முஸ்லிம் வெறித் தாக்குதலையும் என எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றார்கள். இப்போது கூட எங்கே தாக்குதல் நடத்த முடியுமென இந்தியாவிற்குள் ஊடுருவிக் கொண்டிருப்பவர்களை பற்றி பேச மறுக்கின்றார்கள் தேச துரோகிகள்.

உண்மையை சொன்னால் பகுத்தறிவாதிகள் என்று ஊரை ஏமாற்றுகிறு ஒரு கூட்டம். பகுத்தறிவு என்பது அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் மற்றவர்களுக்கு பகுத்தறிவே வேலை செய்வதில்லை என வாதம் செய்கின்றார்கள்.உங்க புழுத்துப்போன நாத்திகம் கொள்கைகளை இங்கே (தமிழ் நாட்டில்) பாருங்கடா......
நாத்திகம் என்பது பெரியார் காலத்தில் 'கடவுளே இல்லை' என்று வாதிட்டது. பின்னர் அண்ணா காலத்தில் ஒருவனே தேவன் என்று மாறியது. அதன் பிறகு ஆட்சி அதிகார சுவையை அறிந்ததும் இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பதாக அமைந்தது. தற்போது, இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களை மட்டும் ஆதரித்து பேசுவதோடு இந்துக்களையும் பார்ப்பனர்களையும் சகட்டுமேனிக்கு திட்டுவது.
நாத்திக கொள்கைகளின் பரிணாம வளர்ச்சி இது தான். இதற்கு எல்லாம் என்ன காரணம். அதிகார சுவையை அனுபவிப்பது மட்டுமே. பெரியாருக்கு அதிகாரமும், ஆட்சியையும் தேவை இல்லை. ஆனால் அவர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துபவர்களுக்கு அதிகார போதை தேவை படுகிறது.
ஆட்சியில் நேரடியாக இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல. காங்கிரசை திட்டிக்கொண்டு அவர்கள் உதவியோடு எம்பி பதிவியை பெறுவது. இலங்கை சென்று ராஜபக்ஷே உடன் குலவுவது. ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு முன்பு பெரியார் சிலையை அமைப்பது என ஒண்டிக்கொள்ளும் பிடாரிகளுக்கும் அதிகாரம் தேவை.
எனவே, முஸ்லிம் மற்றும் கிறித்துவ மதங்களை விமர்சிப்பது கிடையாது. இந்து மதம் 'சகிப்பு' மற்றும் பொறுமையை போதிக்கிறது. அதனால் தான் அளவு கடந்து விமர்சித்தாலும் இந்துக்கள் பொறுமையாக இருக்கிறார்கள். முஸ்லிம் போல இருந்தால் நாத்திகவாதிகள் விமர்சனம் செய்வார்களா?
பார்ப்பன எண்ணிக்கை தமிழ் நாட்டில் மிக குறைவு. அதிக அளவு வாக்குகள் இல்லாததால் அவர்களும் உங்களிடம் மிதி படுகிறார்கள். உத்தர பிரதேசம் போல பெரும்பான்மையினராக இருந்தால் நீங்கள் விமர்சனம் செய்வீர்களா? ஓட்டு போய் விடுமே? ஆட்சிக்கு வர முடியாதே?

smart said...

மதிப்புக்குரிய தமிழ் ஓவியா ஐயா,
உங்கள் நாத்திகத்தை தவறாக பயன் படுத்தி பணம் சம்பாரிப்பவர்களையும் நீங்கள் திட்டினால் உத்தமம்.

மேலதிகத்தகவலுக்கு

நம்பி said...

//எப்போதோ நடந்த பாபர் மசுதியை பற்றி வாய்கிழிய பேசிவிட்டு இரட்டை கோபுர தாக்குதலையும், காசி, கோயமுத்தூரில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களையும், மும்பை தாஜ் ஓட்டல் உட்பட எட்டு இடங்களில் நடந்த தாக்குதல், பாராளுமன்றத்தில் நடந்த முஸ்லிம் வெறித் தாக்குதலையும் என எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றார்கள்.//

இதில் இரட்டை கோபுர தாக்குதலையுக் கணக்கில் எடுத்துக் கொண்டீரே...மற்றத் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு ஆதரவளித்தவர்...இந்த ரெட்டை கோபுர நாட்டு ஆசாமி தான்...

இவர் தான் பிறநாட்டிற்கு எதிராக தீவிரவாதத்தை உருவாக்கும் நாட்டாமைக்காரர், சர்வாதிகாரர், தீவிரவாதத்தின் மொத்த குத்தகை...அவர்கள் விதைத்த வினை அவர்களுக்கு மட்டுமல்ல பிற நாடுகளுக்கும் வினையாய் முடிகிறது..யார் அந்த சர்வாதிகாரி அமெரிக்கா தான்...வேறு யாருமல்ல..அவர்களே தான் இத்தனைக்கும் காரணம். இது சர்வதேச அரசியல்.

பின்லேடனை ரஷ்யாவிற்கு எதிராக உருவாக்கியவரும் இவர்தான் அவரை, இப்போது சேட்டிலைட் விட்டு தேடிக்கொண்டிருப்பவரும் இவர் தான் (அமெரிக்கா).

கியுபாவிற்கு எதிராக கிளர்ச்சிக்கரார்களை தூண்டிவிட்டவரும் இவர்தான்..அதன் மூலம் பிடல் காஸ்டிரோவிடம் பாடம் கற்றுக்கொண்டவரும் இவர்கள் தான். அதனால் ரஷ்யா கியுபாவோடு கை கோர்த்ததும் இவர்களால் (அமெரிக்கா) தான். இவர்கள் விதைத்த வினை இவர்களுக்கு எதிராக மாறிக்கொண்டே வருகிறது.

அவரின் இரட்டை கோபுர தாக்குதலை இந்திய தாக்குதலோடு ஒப்பிடுவது...சரியாக வராது...அவங்க தலையில அவங்க மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது. நீங்க முன்னாடி மத்தவங்களை தூண்டிவிட்டு கொன்றீர்கள்...இப்போது அது பழிவாங்கும் படலமாக மாறியிருக்கிறது. இதில் எது சரி...எது தவறு?

எல்லாமே தவறு...நிறுத்தனும்...எல்லாத்தையும் நிறுத்தனும்...அது தான் சரி. கமல் சொல்ற மாதிரி...முதல்ல ஆரம்பிச்சவன் நிறுத்தனும்...இன்னும் எகிப்துல கூட அவன் ஆதாயம் பார்க்கத்தான் இப்போதும் தூண்டிவிட்டு கொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன...உண்மையிலேயே இந்திய மக்கள் மேல் அக்கறையா? என்ன? எந்த நாட்டிற்கும் அடுத்த நாட்டின் மக்கள் மீது அக்கறை வராது. அவன் நாட்டுக்காகத் தான் அவன் எல்லாவற்றையும் செய்வான். தீமைகள் உட்பட.

இங்கு நடக்கும் பாக்கிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு ஆதரவளிப்பதும் பணவுதவி செய்வதும் அவர் தான் (அமெரிக்கா).

(எங்கே? அங்கே போய் (அமெரிக்கா) வேலை பார்க்கும் அனைவரும் இனி இந்த நாட்டிற்காக பாடுபடக்கூடாது நமது நாட்டை நாசமாக்கும் இந்த நாட்டுக்கு நாம் ஏன் உழைக்கவேண்டும்? என்று அனைவரும் ஓடி வரட்டுமே பார்க்கலாம். ஒரு பயலும் வரத்தயாராயில்லை....)

அந்த நாட்டுக்கும், அதிபருக்கும் கொடி தூக்குபவர்களும் இந்து வெறி பார்ப்பனர்கள் தான். அவரும் (அமெரிக்கா) இதற்கு அவ்வப்போது எண்ணை ஊற்றிக்கொண்டிருப்பவர்.

இதை கணக்கில் எடுக்காமல் வெறும் இங்கிருக்கும் ஒரு சமயத்தை குற்றம் சாட்டிக்கொண்டிருப்பவர்கள் இந்துத்துவா அமைப்பினர், சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ் ஆரிய பார்ப்பன வெறியர்கள். இப்படி குற்றம் சாட்டிவிட்டு அப்பாவிகள் மீது மீண்டும் மீண்டும் மதத்தை காக்கிறேன் என்ற பெயரில் பெண் மூலம் குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவது இவர்கள் தான். எங்கே இப்போது யார் தேசதுரோகிகள்...?

(ஒன்னுமில்லாத பாபர் மசூதியை இடிக்கிறேன் என்ற பெயரில் ஒரு பெரிய மதக் கலவரத்தை உருவாக்கியது...யார்?..இந்த ஆர்.எஸ்.எஸ்...சங்பரிவார், பி.ஜே.பி....இந்துத்துவா...இந்த அமைப்பினர்கள் தான். அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதற்காக அதை வைத்து கொண்டு இன்னும் குண்டு வெடிப்பும் எந்த சமயத்தாலும் நிகழ்த்த கூடாது.)

கூடவே இந்த தாக்குதலுக்கு சீனாவும் பழைய பகைமையுட்ன உதவி புரிகிறது. ஆனால் அமெரிக்கா உதவி புரியும் அளவுக்கு அது உதவி புரியவில்லை.

மதவெறி வந்தால் இரண்டு பக்கமே லாஸ் தான்...இதில் தேவையில்லாத லாஸ் மதமே வேண்டாம் என்பவர்களின் நிலை தான். அவர்களின் நிலைதான் பரிதாபத்துக்குரியது.

நம்பி said...

//பார்ப்பன எண்ணிக்கை தமிழ் நாட்டில் மிக குறைவு. அதிக அளவு வாக்குகள் இல்லாததால் அவர்களும் உங்களிடம் மிதி படுகிறார்கள். உத்தர பிரதேசம் போல பெரும்பான்மையினராக இருந்தால் நீங்கள் விமர்சனம் செய்வீர்களா? ஓட்டு போய் விடுமே? ஆட்சிக்கு வர முடியாதே?//

என்ன உத்திரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி செல்வி மாயாவதியின் ஆட்சி...அவர்கள் யார் என்பதாவது தெரியுமா...? விமர்சனம் செய்யாமலா ஆட்சிக்கு வந்தார்கள்.

எங்கே உத்திரபிரதேசத்தில் எத்தனை சதவீதம்...பார்ப்பனர்கள் 15% சதவீத பார்ப்பனர்கள்....2001 கணக்கெடுப்பின்படி...மக்கள் தொகை 19,39,77,000 2008 தோராய கணக்கெடுப்பின் படி...2,90,96,550....பாக்கியுள்ள 16,48,80,450 அதாவது 85 சதவீத மக்கள்......இந்த 85 சதவீத மக்கள் மிதி படுவதை பற்றி கவலைப்படவில்லை....ஆனால் தனியே பார்ப்பனர்கள் 15 % மிதிபடுவதை பற்றி மட்டும் கவலைப்படுகிறீர்கள்.

உத்திரபிரதேசத்தில் பட்டியலினத்தவர் 44.8%, இதர பிற்பட்ட வகுப்பினர் 32.9%, மற்றவர்கள் 19.7%. இது கிராமப்புறங்களில், நகர்புறங்களில் பட்டியலினத்தவர் 44.9%, இதர பி.வ.36.6%, மற்றவர்கள் 19.2%.

இது உத்திரபிரதேசத்தில்....இங்கு அதைவிடக் குறைவு.

தமிழ் நாடு மக்கள் தொகை 6,63,96,000 2006 தோராய கணக்கெடுப்பின்படி...பார்ப்பனர்கள் சதவீதம் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்கள்...அதன்படி 19,91,880 மீதமுள்ளவர்கள் பார்ப்பனரல்லாதவர்கள். 6,44,04,120. பேர்கள்...வாக்காளர்கள் எனப்படும் பொழுது இன்னும் குறைவாகும்...(மொத்த வாக்காளர்கள் இப்பொழுதய நிலவரப்படி 4,50,59,620 பேர்கள்.)

தமிழ் நாடு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலினத்தவர் 31.2%,, இதர பிற்பட்ட வகுப்பினர் 19.8%, மற்றவர்கள் 19.1% இது 2004-2005 இது கிராமப்புறங்களில், நகர்புறங்களில் பட்டியலின்த்தவர் 40.2 %, இதர பிற்பட்ட வகுப்பினர் 20.9%, மற்றவர்கள் 6.5% (மற்றவர்கள் எனபது பார்ப்பனர்கள், முற்பட்ட வகுப்பினர்) இந்திய அரசுத் தளம்.

உத்திரபிரதேசத்தில் அத்துணை பெரிய மக்கள் தொகையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் மொத்த சதவீதம் அனைவரையும் சேர்த்து 32.8%

தமிழ் நாட்டில் இவ்வளவு குறைந்த மக்கள் தொகையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை சதவீதம் அனைவரையும் சேர்த்து 22.5

அங்கு பகுஜன் சமாஜ் கட்சிதான் ஆட்சி புரிகிறது...இதை விட மூன்று மடங்கு மக்கள் தொகை வறுமை கோட்டிற்குக்கீழ்வாழும் மக்கள் நிலவரத்தையும் பாருங்கள்...புரியும். இங்கு தான் அதிக எண்ணிக்கையில் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்...இந்த குறைந்தளவு மக்கள் தொகையில்...அதுவும் பட்டியலினத்தவரும் அதற்கடுத்து பிற்பட்ட சமுதாயத்தினரும் இருக்கின்றனர். நகர்ப்புறங்களில் பார்ப்பனர் மற்றும் முற்பட்ட சமுதாயத்தினர் மிக மிக குறைவாக இருப்பதையும் காணலாம்.

(மாநில பரப்பளவும் குறைவு...எந்த நீராதாரமும் இங்கு கிடையாது)

இப்போது யார் மிதிபட்டுக்கிடக்கிறார்கள், யாரால் நணுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள், இப்படி அவர்கள் இருப்பது பார்ப்பது நியாயமா...? என்றும் கூறலாம். இங்கே இருப்பதை விட பார்ப்பனர்கள் 3 மடங்கு கூடுதல் அதே போன்று இங்கே இருப்பதை போன்று பார்ப்பனரல்லாதவர்களும் கூடுதல் அவ்வளவு தான்...மக்கள் தொகையும் கூடுதல்...


ஆதாரங்கள் இந்திய அரசு மாநில வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் 2004-2005 நிலவரப்படி....