Search This Blog

3.3.10

காவி உடை காமுகன் நித்யானந்தாவின் நிர்வாண லீலைகள்!

அட வெட்கக்கேடே, உன் பெயர்தான் சாமியாரா?
காவி உடை காமுகன் நித்யானந்தாவின் நிர்வாண லீலைகள்!
பொதுமக்கள் ஆவேசம் - ஆசிரமத்துக்கு தீ வைப்பு கைது செய்யக் கோரிக்கை


சுவாமி பரமஹம்ச நித்யானந்தா என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் ஒரு ஆன்மிக தலைவர், பிரபலமான நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை தனியார் தொலைக் காட்சி நேற்று ஒளிபரப்பியது. இதனை அடுத்து ஆன்மிகம் என்ற

பெயரில் இளம் வயது சாமியார் நடத்திய காம லீலைகளை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நித்யானந்தாவின் ஆசிரமங்களை தீ வைத்துக் கொளுத்தினர்.மேலும் காவி உடை காமுகன் நித்யானந்தாவை கைது செய்யுமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருவுக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மய்யங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது கோடிக்கணக்கில் வருமானம் கொட்டு-கிறது. நித்யானந்த சுவாமி தமிழகத்திலும் பிரபலமானவர். தமிழகத்தின் திருவண்ணாமலைதான் அவர் பிறந்த ஊர். பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம். 1978 ஆம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் இயற்பெயர் ராஜ
சேகரன். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன் 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக கதையளந்துள்ளார். இமயமலை
யில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக தியானபீடத்தின் இணையதளம் கூறுகிறது. (விஞ்ஞானக் கருவிகள் எவற்றிற்கெல்லாம் பயன்படுகிறது பார்த்தீர்களா?).

நடிகையுடன் காம லீலை!

பெயர் மாற்றத்துக்கு பின்னர் ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்த அவர், அங்கிருந்து பெங்களூரு சென்று ஆசிரமம் நிறுவினார். பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் நித்யானந்தா, ஒரு தமிழ் நடிகையுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இடம் வீடா அல்லது ஆசிரமத்தின் ஓர் அறையா என்பது தெரியவில்லை. நடிகையும் சாமியாரும் படுசகஜமாக பேசிக் கொண்டு உல்லாசத்தில் ஈடுபடுவதை பார்க்கும்போது இது நீண்டகால பழக்கம் என்று தெரிகிறது. ஒருநாள் புடவையில் வரும் நடிகை அடுத்தநாள் சுடிதாரில் வருகிறார். கட்டிலில் சாமியாரும் அவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். நடிகையிடம் கேட்டு ஏதோ மாத்திரை வாங்கி சாப்பிடும் சாமியார் பின்னர் அய்ஸ்கிரீம் சாமியாரின் காம லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நித்தியானந்தாவின் இந்த ஒரே ஒரு காம லீலை மட்டும்தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுபோல் இன்னும் எத்தனை எத்தனை லீலைகளோ அதேபோல் இன்னும் நாட்டில் காவி உடையில் வலம் வரும் சாமியார்களின் பின்னணியை பின் தொடர்ந்தால் இது போன்ற காலித்தனங்கள், காமவேட்டைகள் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்தே தீரும்.

கல்கி ஆசிரமம்

நித்யானந்தா மட்டுமில்லாமல் இன்னும் பல்வேறு சாமியார்களின் அசிங்க வேலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில் ஒன்று ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமம்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வரதையாபாலம் என்ற இடத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்குதான் பெண்களுக்கு லேகியத்தில் போதை மருந்தை கலந்து தருவதாகவும், பண மோசடி நடப்பதாகவும் கூறி பொதுமக்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர். கல்கி ஆசிரமத்திடம் ஏமாந்த ஒருவர், முக்தி, மகா தீட்சை என்ற பெயரில் பக்தர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை ஆசிரமம் ஈட்டி-வருகிறது. ஆசிரமத்தை நடத்தி வரும் கல்கி பகவானை நம்பி 12 ஆண்டுகளாக முக்திக்காக 12 லட்ச ரூபாயை இழந்து விட்டேன். கல்கி பகவானை பாத தரிசனம் செய்ய வெளிநாட்டு பக்தர்களிடம் 5 லட்ச ரூபாயும், உள்நாட்டு பக்தர்களிடம் 5 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கிறார்கள்.

ஆசிரமத்தில் நடக்கும் பல்வேறு மோசடிகளை விசாரிக்க மாநில அரசு உடனடியாக ஒரு விசாரணை கமிஷனை நியமிக்கவேண்டும். அத்துடன் கல்கி ஆசிரம சொத்துக்களை ஜப்தி செய்வதுடன் அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்யவேண்டும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியை தனியார் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்கி ஆசிரமத்துக்கு எதிராக அதன் கிளைகள் உள்ள இடங்கள் முன்பாக திரண்டு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர். இதனிடையே, ஏராளமானோர் நேற்று முன்தினம் இரவு வரதய்ய பாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்துக்குள் புகுந்து சூறையாடினார்கள். அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினார்கள். பக்தர்களின் ஓய்வுக் கூடம் ஒன்றும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த தாக்குதலின்போது ஆசிரம காவலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரமத்துக்குச் சொந்தமான 3 பேருந்துகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பொதுமக்கள் தாக்கியதில் கல்கி ஆசிரமத்தின் 3 வேலைக்காரர்களுக்கு சரமாரி அடி விழுந்தது. ஆசிரமத்தின் தகவல் அலுவலகமும் தாக்கி சூறையாடப்பட்டு விட்டது. பக்தி, முக்தி என்ற பெயரில் இந்த ஆசிரமத்தில் செக்ஸ் அக்கிரமங்கள் நடப்பதாகவும், பெண்களுக்கு போதைப் பொருட்களைத் தருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாற்றியுள்ளனர். ஆசிரமம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் பெருமளவில் விரைந்து வந்தனர். போராட்டக்காரர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தினர்.

டெல்லியில் சாய்பாபா சீடராக வலம் வந்த சாமியார்

தலைநகர் டெல்லியில் சாய்பாபாவின் சீடர் என்று கூறிக் கொண்டு வலம் வந்த மற்றொரு சாமியார் செய்த காரியம் என்ன தெரியுமா? இளம் பெண்களை விபச்சார வலைக்குள் தள்ளி அவர்களை வைத்து கோடி கோடியாய் பணம் சம்பாதித்துள்ளார் இந்தச் சாமியார். சாய்பாபாவின் சீடர்கள் என்றாலே அப்படித்தானோ? கடந்த வாரம் டெல்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த சாமியாரின் கேவலத் தனமான தொழில் ஒட்டு மொத்த மனித சமூகத்தையே முகஞ்சுளிக்க வைக்கிறது-.

டெல்லி கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ்முரத் திவேதி. சத்ய சாய்பாபாவின் சீடர் என்று தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். மிக குறுகிய காலத்தில் இவருக்கு டெல்லியில் உள்ள அரசியல்வாதிகளிடமும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் புகழ் பெற்ற சாமியாராக வலம் வந்தார். இந்த நிலையில் சாமியாரான அவர் மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி காவல்துறையினர் சிவ்முரத் திவேதியையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர்.

காவல்துறை விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபசாரம் நடப்பதும் உறுதியாக தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையினர் சிவ்முரத் திவேதியின் கோவிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது விபசாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. உடனடியாக சாமியார் சிவ்முரத் திவேதி கைது செய்யப்பட்டார். அவருடன் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 2 விமானப்பணிப் பெண்கள், கல்லூரி மாணவிகள் 2 பேர் பிடிபட்டனர். இந்தி படங்களில் நடித்து வரும் துணை நடிகை ஒரு வரும் இந்த வேட்டையில் சிக்கினார். மேலும் டெல்லியில் உள்ள பணக்காரர்களின் வீடுகளுக்கு செல்ல தயாராக இருந்த இளம் பெண்களும் காவல்துறையினரிடம் பிடிபட்டனர். சாமியாரின் பாபா கோவில் முழுக்க காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது 5 டைரிகள் கிடைத்தன. அந்த டைரிகளில் இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள் இருந்தன. அவர்கள் அனைவரையும் சாமியார் சிவ்முரத் திவேதி விபசாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மூலம் அவர் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக டெல்லி காவல்துறையினர் கண்டு பிடித்து உள்ளனர். சிவ்முரத் திவேதியிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் புது புதுத் தகவல்களாக வெளியானபடி உள்ளது. நேற்று நடந்த விசாரணையில் டெல்லியில் 5 இடங்களில் விபசார மையம் வைத்திருந்த தகவலை காவல்துறையினரிடம் சிவ்முரத் திவேதி வெளியிட்டார். டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம், பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்), மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசார விடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் காவல்துறையினர் சீல் வைத்து உள்ளனர். டெல்லி தவிர தன்னிடம் சிக்கும் பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி சிவ்முரத் திவேதி பணம் சம்பாதித்துள்ளார். இது பற்றிய தகவல்களை காவல்துறையினர் சேகரித்து வருகிறார்கள். விபசார தொழில் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை கொண்டு புனே, வாரணாசி, லக்னோ, பெங்களூரு நகரங்களில் சாமியார் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அவற்றையும் காவல்துறையினர் முடக்கி வருகிறார்கள். சாமியாரிடம் விசாரணை நடத்த தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

------------------------------ நன்றி:-”விடுதலை” 3-3-2010

5 comments:

Chittoor Murugesan said...

அன்புடையீர்,
ஒரே கொள்கைக்காக ,ஒரே லட்சியத்துடன் தொடர்ந்து எழுதும் தங்களூக்கு வாழ்த்துக்கள்.

இறைவன் இருக்கிறானோ இல்லையோ ஆனால் மனிதனில் மட்டும் பகுத்தறிவு இல்லவே இல்லை. ஆன்மீகச்செம்மல்களில் உண்மை இல்லவே இல்லை. ஆயிரம் பெரியார் ஒரே நேரத்தில் பிறந்து வந்தாலும் இந்த மக்களை திருத்தவே முடியாதோ என்று தோன்றுகிறது

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

சித்தூர்.எஸ்.முருகேசன்

tamilselvan said...

pagutharivu pagalavan peryarin kolgaikalai parappum thozhamaiku nandri.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

tamilselvan

rdj said...

They spoil the people in the name of relligian we spoil the people in the name of knowlege by selling TASMARK and when jayalalitha comes to power we lost the perrior,s power.Dont say tamilan be a good human beeing.dont make others fool.just simply folow the bhudda steps.one will come to know who he is.