Search This Blog

20.3.10

சிவன் யோக்கியதை பற்றி பெரியார்
(அன்பிற்கினிய வலைப்பதிவு வாசகர்களே அனைவருக்கும் வணக்கம்.

சமீப காலமாக சாமியார்களின் பக்தி வேஷம் கலைந்து உண்மை முகம் அம்பலமாகி வருகிறது. ஒரு தீபாவளி நாளில் நடமாடும் கடவுள் என்றும் லோககுரு என்றும் சொல்லி ஏமாற்றிய காஞ்சி காமகோடி ஜெயேந்திர சர(ஸ்)ஸவதியை காவல்துறையினர் கைது செய்தனர். புலன் விசாரணையில் அக்கிரகார மாமிகளுடன் ஜெயேந்திர சர(ஸ்)ஸவதிக்கு உள்ள தொடர்பு, பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திர சர(ஸ்)ஸவதி தன்னை கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்தார் என்று தொலைக்காட்சி நேர்காணலில் கூறிய செய்திகள், நடிகைகளுடன் தொடர்பு, ஆபாசப் படம் பார்த்தல் போன்ற பல உண்மைகள் உலா வந்து பரபரப்புக்கு உள்ளானது.(அதற்கு முன் பிரேமானந்தா) தொடர்ந்து சதுர்வேதி சாமியார், கருவறைக்குள் காம லீலை நடத்திய அர்ச்சகப்பார்ப்பான் தேவநாதன் போன்றவர்களின் செயல்கள் மூலம் “பக்தி” மணம் கமழ்ந்து நாற்றமடித்தது.

தற்போது நித்தியானந்தா என்ற சாமியாரும் நடிகை ரஞ்சிதா வும் நடத்திய காமக் களியாட்டங்களை தொலைக்காட்சியில் உலகமே பார்த்து சாமியார்களை காறித்துப்பி வருகிறது. இதில் இதுபோன்ற போலிச்சாமியார்களை ஒழிக்க வேண்டும் என்று ஒரு சிலர் குரல்கொடுக்கின்றனர். சாமிகள் என்றாலே போலி தான். இதில் உண்மைச் சாமிகள் எங்கே இருக்கிறது. என்ன சங்கராச்சாரி, நித்தியானந்தா போன்றவர்கள் மாட்டிக் கொண்டனர். உண்மைகள் தெரிந்து விட்டது. மாட்டிக் கொள்ளாத சாமியார்களைப் பற்றி தீவிரமாக விசாரித்தால் இது போல் பல உண்மைகள் வெளிவரும். அரசு இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இந்த சாமியார் பயல்கள் சுட்டிக் காட்டும் கடவுள்களாவது ஒழுக்கமாக இருந்துள்ளார்களா? படைத்தல்,காத்தல் அழித்தல் கடவுள்களாக சித்தரிக்கப்பட்டுள்ள பிரம்மா,விஸ்ணு, சிவன் யோக்கியதை என்ன? இது குறித்து ஆதார பூர்வமாக பெரியார் என்ன எழுதியுள்ளார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

கடவுள்களின் யோக்கியதையை சான்றுகளுடன் பெரியார் அம்பலப்படுத்தும் பகுதி இதோ உங்களின் பார்வைக்கு விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடன் ஆய்வு செய்து உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.)

*********************************************************************************


3.சிவன்


இனி, சிவன் என்னும் கடவுளைப்பற்றி ஆராய்வோம்.

இவரும் அயோக்கியத்தனத்தில் விஷ்ணுவுக்குக் குறைந்தவர் அல்லர். இவர் தமது பக்தர்களைச் சோதிக்க விரும்பினால் பண்டார வேஷம் போட்டுக் கொண்டு தன் பக்தனிடம் சென்று "பக்தா உன் மனைவியை எனக்குக் கொடு" என்று கேட்கும் அத்தகைய பெரியவர். எத்தகைய பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாயிருந்தாலும் "சிவ சிவா” என்று தன் பேரைச் சொல்லிவிட்டால் அவர்களுக்கு உடனே மோட்சம் அளிக்கும் கருணாநிதி. இப் பெரியாருடைய யோக்கியதைகளை முற்றிலும் எழுத இப்புத்தகம் இடம் கொள்ளலாது. ஆகையால், இவர் யோக்கியதையைத் தெரிவிக்கும் பொருட்டு ஒரே ஒரு விஷயத்தை மாத்திரம் இங்கு எழுதுவோம்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது அமிர்தம் யாருக்கு உரியது என்பதைப்பற்றி விவாதம் நிகழ்ந்தது. இரண்டு பேரும் சேர்ந்து கடைந்ததனால் கிடைத்த அமிர்தத்தை இரு பகுதியாரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டியது நியாயமாக இருக்க விஷ்ணு அவ்விதம் பங்கிட்டுக் கொள்ளாமல் அயோக்கியத்தனமாக ஒரு காரியம் செய்தார். அது என்னவென்றால் மிக்க அழகு வாய்ந்த ஒரு கன்னிகை போல உருவெடுத்துக் கொண்டு அசுரரிடம் வந்து உங்களுக்கு அமிர்தம் வேண்டுமா? நான் வேண்டுமா? என்று கேட்டாராம். அசுரர்கள் இப்பெண்ணின் அழகைக் கண்டு ஆசைக்கொண்டு நீதான் வேண்டுமென்று சொல்ல அந்தப் பெண் அவர்களை அழைத்துக் கொண்டு ஓரிடஞ் சென்றாள். அவ்விடத்தில் அப்பெண்ணை யார் அடைவது என்னும் விஷயத்தில் அசுரர்களுக்குள் சண்டையுண்டாகி ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இறந்து விட்டார்கள்.

பிறகு விஷ்ணுவாகிய அப்பெண்ணை சிவன் (காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றமும் இல்லாத எம்பெருமான் பார்த்து கட்டிலடங்காக் காமங்கொண்டார். இச்சிவபெருமான் தமது ஞானக் கண்ணைத் திறந்து பார்த்து அப்பெண் விஷ்ணுவின் மாறுவேடம் என்பதை அறிந்தோ, அறியாமலோ அப்பெண்ணிடம் சென்று "எல்லா ஜீவகோடிகளும் உய்யும் பொருட்டு அப்பெண்ணைக் கூடிச் சையோகஞ் செய்தாராம்! இது எவ்வளவு யோக்கியமான பெருந்தன்மையான புண்ணியமான செய்கை என்பதைப் பாருங்கள். சிவன் சையோகம் செய்தார்! யாரை பெண் உருவந்தாங்கிய விஷ்ணுவை! சிவனும், விஷ்ணுவும் சையோகஞ் செய்தால் பலனில்லாமற் போகுமா? அவர்களை "புத்" என்னும் நரகத்திலிருந்து காப்பாற்ற ஒரு புத்திரன் வேண்டாமா? ஆகவே, ஒரு புத்திரன் தோன்றினான். அவன் பெயர் "அரிகரபுத்திரன்" அரிக்கும், அரணுக்கும் பிறந்தவன் என்பது பொருள். இப்புத்திரனுக்கு அய்யனார் என்றும் ஒரு பெயர் உளதாம்! இப்புத்திரனைப்பற்றி நமக்குக் கவலையில்லை. நிற்க,


வாசகர்களே! மும்மூர்த்திகளின் யோக்கியதைகள் முழுவதும் சொல்ல முடியவில்லை. ஆயிரம் நாவுபடைத்த ஆதிசேசடனாலும் சொல்ல முடியாதென்றால் சாட்சாத் எம்பெருமான்களாகிய மும்மூர்த்திகளின் யோக்கியதைகளை ஒரு நாவு படைத்துள்ள நானா சொல்லக்கூடும்? ஆயிரத்தில் ஒரு பங்கு மாத்திரந்தான் சொன்னேன். ஆனால் இம் மும்மூர்த்திகள் சம்பந்தப்படாத புராணங்கள் கிடையாது. ஆகையால், இவர்கள் தன்மைகளையெல்லாம் எழுதப்புகின் மிகமிக விரியுமாதலின் கடைசியாக வாசகர்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன்.


மும்மூர்த்திகளின் யோக்கியதையை ஒரு சிறிதாவது தெரிந்து கொண்ட பிறகு புராணங்களும், இதிகாசங்களும் நமது நாட்டில் இருக்க வேண்டுமா? அவைகளினால் மோட்சம் கிடைக்குமா? அவைகளைப் படிப்பதினால் நல்ல புத்தி ஏற்படுமா? என்பதையும் இத்தகைய புராணங்களைக் கொளுத்த வேண்டாமா? அல்லது போற்றி துதிக்க வேண்டாமா என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய அயோக்கியத்தனமான தேவர்கள் வேறு மதத்திலாவது உண்டா? என்பதையும் கவனியுங்கள்.

-------------------- தந்தைபெரியார் - நூல்:- “புராணம்” பக்கம் 73 - 75

3 comments:

Unknown said...

Pope Benedict XVI has apologised to victims of child sex abuse by Catholic priests in Ireland.
Don't blame Hinduism for few Ill Minded people's wrong doings...if you compare the wrong people in Hinduism with other religion’s bad priests - in Hinduism they will be very less,- because in Hinduism there is a prescriptions for life style for Sanyais. In Hinduism the sanyasi must fallow a very modest life style and not enjoying any worldly pleasures - those who don't fallow such life style becomes Nithyananda..where us in other religion there is on such restriction of life style for priest they drink wine and eat non veg food and sleep in luxury bed...but the dravida party will only say all the bad words about our own Hindu culture and religion and never had the guts to say any single words about the other religion - the main reason is all those people who abuse Hinduism are Christians but they are in the name of Nasthigan abuse Hinduism but secretly fallow there religion...
By Tamil Arasan

Padmanbhan said...

yenna periyar mattum nalla vara


50 vayathil maniammaiyar rai kalayanam panni kondara athu ethuku

mightymaverick said...

இதெல்லாம் எழுதிய பெரியார் மட்டும் வயசு காலத்தில் சும்மாவா இருந்தார்... ராமசாமியா இருந்தப்ப ஆடுற ஆட்டமெல்லாம் ஆடிட்டு பெரியாரா மாறினப்புறம் புத்திமதி சொன்னவர் தானே... சிலர் ஆடி அடங்குறாங்க... பெரியார் இந்த வகை தான்...