Search This Blog

7.3.15

மார்ச் 8 உலக மகளிர் நாள்- சிந்தனை

மகளிர் நாள் மார்ச் 8 உலகம் முழுவதும் மகளிர் நாள் கொண் டாடப்படுகிறது. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பாதிப் பகுதியினரான பெண்கள் அவர்களுக்குரிய மதிப்பும், உரிமையும் பெற முடியாதவர்களாக இந்த ஆணாதிக்க சமுதாயம் ஆக்கி வைத்துள்ளது.


இந்தியாவின் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங் களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது 1996ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் (மக்கள வையில்) நிறைவேற்றப்பட முடியாமல் முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் கட்சி வேறுபாடு இல்லாமல் ஆண் உறுப்பினர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இதனை எதிர்த்துப் பெண்கள் வீதிக்கு வந்து போராட வேண்டாமா? அப்படிப் போராடாமல் இருப்பதிலிருந்து, இந்தியப் பெண்கள் போதிய விழிப்புணர்வு அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது விளங்கவில்லையா?


அதுவும் இன்றைக்கு மத்தியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான அரசு, இந்துத்துவாவை உயிர் மூச்சாகக் கொண்டு இருப்பதால், மகளிர் சட்டத்தை நிறைவேற்றித் தரும் என்று எதிர்பார்க்க முடியாது.


இந்திய  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கக் கூடியவர் ஒரு பெண்ணாக இருந்தாலும்கூட (சுஷ்மா சுவராஜ்) பகவத் கீதை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப்படும் - அதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கிறார் என்றால் இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்லுவது.


பெண்களைப்பற்றி கீதையில் என்ன சொல்லப்பட் டுள்ளது என்பதை இவர்கள் அறிவார்களா? அந்த அம்மையார் மேலும் சொல்லுகிறார் - பகவத் கீதையைப் படித்தால் மன அழுத்தம் குறையும் என்றும் கூறியுள்ளார்.  இந்த மருத்துவ விஞ்ஞானத்தில் இது நிருபிக்கப்பட்டுள்ளது என்று கூற முடியுமா?


உண்மையைச் சொல்லப் போனால் கீதையால் பெண்களும், சூத்திர மக்களும்தான் மன உளைச் சலுக்குப் பெரிதும் ஆளாவார்கள்.

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (கீதை அத்தியாயம் 18  சுலோகம் 44) என்று கூறுகிறதே - இதனை வெளி யுறவுத்துறை அமைச்சரான பெண்மணி ஏற்றுக் கொள்கிறாரா?


இந்து மதத் தத்துவப்படி பெண்களுக்கு மோட்சம் கிடையாது அடுத்த ஜென்மத்தில், ஆண்களாகப் பிறந்து அதற்குப் பிறகுதான் பெண்களால் மோட்சத்திற்குச் செல்ல முடியுமாம். பக்தியிலும், மதத்திலும் நம்பிக்கை யுள்ள பெண்கள் இவைபற்றி எல்லாம் சிந்திக்க வேண்டாமா?


இன்றைய இந்திய நிலவரம் என்னவென்றால் 1000 ஆண்களுக்கு, 940 பெண்களே இருக்கிறார்கள் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஆண்களைவிட பெண்கள் 1,28,920 பேர் குறைவாக உள்ளனர்.


பெண் சிசுக்களை கருவிலேயே கொல்லும் கொடுமை இன்னும் நிலவுகிறது. அந்தப் பெண் சிசுவை கொலை செய்வது பெரும்பாலும் வயது முதிர்ந்த பெண்கள்தான் செய்கின்றனர் என்பது அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்.


காரணம் பெண்ணென்றால் குடும்பத்திற்குச் சுமை என்று ஆக்கப்பட்டு இருப்பது தான். கல்வியில் பெண்கள் வளர்ச்சி பெற்று கை நிறைய சம்பாதிப்ப தாலும் திருமணம் என்று வருகிற போது வரதட்சணை, பெண் தரப்பில்,  கொடுத்தே ஆக வேண்டும் என்று இருப்பது எதைக் காட்டுகிறது? 

பெண்கள்மீதான சமூக மதிப்பீட்டின் அடையாளம்தானே இது.


இதற்கு ஒரே வழி பெண்கள் ஜாதிகளைக் கடந்து தமக்குரிய துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரி மையைத் தாராளமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.


இதில் ஜாதியைக் கொண்டு வந்து திணிப்பவர்களை, ஜாதிக் கவுரவம் பேசுகின்றவர்களைத் தனிமைப்படுத் தும் பணியை முற்போக்குச் சக்திகள் தீவிரமாகவே செய்ய வேண்டும்.


கவுரவக் கொலை என்ற புதிய சொல்லாடல் புறப்பட்டு இருப்பது உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். அரசு இதில் கடுமையான முறையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றவாளி களுக்குக் கடும் தண்டனைகளை அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.


நாடாளுமன்றத்தில் 1952 தேர்தல் முதல் இதுவரை பெண்களில் சதவிகிதமும் சராசரி 10 என்கிற அளவில்தானே இருக்கிறது.


முஸ்லிம்கள் நாட்டில் பெண்ணுரிமை இல்லை என்று சொல்லுகிறார்களே - உண்மை என்னவென்றால் பாகிஸ்தான், வங்கதேசத்தில் நிலவும் சதவிகிதத்தைவிட இந்தியாவில் குறைவு என்பதுதான் உண்மை.


பெண்களுக்கு வெறும் படிப்பைக் கொடுத்தால் மட்டும் போதாது, விழிப்புணர்வையும் கொடுக்கும் கல்வி முறை அமைய வேண்டும்.


பாலியல் வன்முறை செய்து பெண்ணைக் கொன்ற ஒரு கயவன், பெண்கள்தான் ஆண்கள் தவறு செய்வதற்குக் காரணம் என்று துணிவோடு சொல்லுவது இந்தியத் திருநாட்டில்தானே நடக்கிறது.

உண்மையிலே தமிழ் நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுமையும் பெண்கள் மத்தியில் உரிமை உணர்வு வெடித்துக் கிளம்ப வேண்டுமானால் பெண்ணியம் பற்றி தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை இந்திய அளவில் பாடத் திட்டத்தில் வைக்க வேண்டும் பெரியாருக்காக அல்ல- பெண்களின் முன்னேற் றத்திற்காக!

                      -----------------------” விடுதலை” தலையங்கம் 7-3-2015

45 comments:

தமிழ் ஓவியா said...

மகளிர் சமுதாய மேன்மைக்கான அரசுப் பணிகளில்
பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு திட்டம்

சம சொத்துரிமை வழங்கிட தனிச் சட்டம் நிறைவேற்றம் கலைஞர் அறிக்கை

சென்னை, மார்ச் 7_ இந்தியாவிலேயே முதன் முறையாக அரசுப் பணி களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடும் திட்டம்! பெண்களுக்குச் சம சொத் துரிமை வழங்கிட தனிச் சட்டம்! உள்ளாட்சி அமைப்புகளில் பெண் களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!! போன்ற மகளிர் சமுதாய மேன்மைக்கு மகத்தான பல சட்டங் களையும், திட்டங்களை யும் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது என உலக மகளிர் நாள் (மார்ச் 8)யொட்டி இன்று (7.3.2015) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத் துள்ள வாழ்த்து செய்தி யில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

உலக மகளிர் நாள்!

19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய அய்ரோப் பிய நாடுகளிலும், பின்னர் அமெரிக்காவிலும், ரஷ்யா விலும் ஆயிரக்கணக்கில் மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை, வாக் களிக்கும் உரிமை முதலிய வற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போரா டினர். அப்போராட்டங் களின் ஒருகட்டத்தில் பிரான்சில், புருஸ்ஸிய னில் இரண்டாவது குடி யரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் என்னும் மன் னன் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்கு ரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டின் மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, உலக மகளிர் நாள் என ஆண்டுதோறும் உலகெங் கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த திட்டங்கள் உருவெடுக்கத் தொடங்கின.

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டிலும், அதன் பின் னரும் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, மகளிர் சமுதாய மேன் மைக்கு மகத்தான பல சட்டங்களையும், திட்டங் களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது. அதன் விளைவாகத்தான் இன்று எங்கும் - எல்லா அலுவலகங் களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாக் கலைகளிலும் பெண்கள் பங்குபெற்றுப் பயனடைந்து முன்னேற் றம் கண்டு சாதனைகள் பல படைத்துப் பெரு மைகளைக் குவித்து வருகிறார்கள் என்பதனை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. இந்தியாவிலேயே முதன் முறையாக அரசுப் பணி களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடும் திட்டம்!

பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கிட தனிச் சட்டம்!

உள்ளாட்சி அமைப்பு களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!
காவல்துறையில் பெண்களைக் காவலர் களாக நியமனம் செய்யும் திட்டம்!

தமிழ் ஓவியா said...

விதவை மகளிர் திருமண நிதி உதவித் திட்டம்!

10ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு மூவலூர் மூதாட்டியார் பெயரில் திருமண நிதியு தவித் திட்டம்!

நாகம்மையார் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்

ஏழைப் பெண்கள் உயர் கல்வி பயில ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம்; பின்னர் பட்ட மேற் படிப்பு நீட்டிப்பு!

ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி நல்கும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியு தவித் திட்டம்!

விதவைப் பெண்களுக் கும், கணவனால் கைவிடப் பட்ட பெண்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும் உதவித் தொகை வழங்கும் திட்டம்!

இலட்சக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுக் கள் உருவாக வழிவகுக் கப்பட்ட மகளிர் திட்டம்!

அரசு உருவாக்கிடும் தொழில் மனைகளில் 10 சதவீத மனைகளைப் பெண் தொழில் முனை வோருக்கு ஒதுக்கீடு செய் யும் திட்டம்! திருக்கோயில் களில் செயல்படும் அறங் காவலர் குழுக்களில் மகளிர் ஒருவரை அறங் காவலராக நியமிக்க வகை செய்யும் சட்டம்!

மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம்!

ஏழைத் தாய்மார்கள் மனம் குளிர இலவச வண்ணத் தொலைக்காட் சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்!

எரிவாயு இணைப்பு டன் இலவச எரிவாயு இலவச அடுப்புகள் வழங் கும் திட்டம்!

ஆதிதிராவிட மகளிர்க்கு விமானப் பணிப் பெண் பயிற்சி வழங்கும் திட்டம்!

அய்ம்பது வயது கடந்தும் திருமணமாகா மல், உழைத்து வாழ முடியாத சூழலில் வாழும் ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டம்!

இரண்டு இலட்சத்திற் கும் மேற்பட்ட சத்துண வுத் திட்டப் பணியாளர்கள் பயன் பெற காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கும் திட்டம்!

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்களும், செவிலியர்களும் நியமிக் கப்பட்டு, கிராமப்புற மக ளிர்க்கு 24 மணிநேர மருத்துவச் சேவை அளிக் கும் திட்டம்! எனப் பல்வேறு திட் டங்களையும், சட்டங் களையும் நிறைவேற்றி, அரசுத் துறைகளிலும், அரசியல் களங்களிலும், தொழில் முறைகளிலும் பெண்கள் முன்னேற்றத் திற்குத் தேவையான அடித்தளங்கள் பலவற்றை வலுவாக அமைத்துத் தந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகமே என்பதனை நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல நமக்கு உரிமை உண்டு.

ஆனால், 2011க்குப் பிறகு, எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி, பெண் கள் பாதுகாப்பின்றிப் பல வழிகளிலும் பாதிக்கப் பட்டு வருகின்றனர் என் பதனை இவ்வேளையில் வேதனையுடன் நினைவு கூரும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

மனித குலத்தின் மகத் தான சக்திகளில் ஒன் றாகத் திகழும் மகளிர்க்கு எதிரான இத்தகைய கொடுமைகள் முற்றிலும் அகற்றப்பட - கழக அரசு காலத்தில் தொடங்கப் பட்ட பெண்கள் நலத் திட்டங்கள் தங்கு தடை யின்றித் தொடர்ந்திட - எங்கும் எதிலும் ஆண் களுக்கு இணையான சமத்துவம் நிலவச் செய் திட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம்!

தமிழக மகளிர் அனைவர்க்கும் உலக மகளிர் நாள் நல் வாழ்த்துகளை உரித்தாக் குவோம் என கலைஞர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97448.html#ixzz3ThZVSpff

தமிழ் ஓவியா said...

மகளிர் சமுதாய மேன்மைக்கான அரசுப் பணிகளில்
பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு திட்டம்

சம சொத்துரிமை வழங்கிட தனிச் சட்டம் நிறைவேற்றம் கலைஞர் அறிக்கை

சென்னை, மார்ச் 7_ இந்தியாவிலேயே முதன் முறையாக அரசுப் பணி களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடும் திட்டம்! பெண்களுக்குச் சம சொத் துரிமை வழங்கிட தனிச் சட்டம்! உள்ளாட்சி அமைப்புகளில் பெண் களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!! போன்ற மகளிர் சமுதாய மேன்மைக்கு மகத்தான பல சட்டங் களையும், திட்டங்களை யும் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது என உலக மகளிர் நாள் (மார்ச் 8)யொட்டி இன்று (7.3.2015) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத் துள்ள வாழ்த்து செய்தி யில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

உலக மகளிர் நாள்!

19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய அய்ரோப் பிய நாடுகளிலும், பின்னர் அமெரிக்காவிலும், ரஷ்யா விலும் ஆயிரக்கணக்கில் மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை, வாக் களிக்கும் உரிமை முதலிய வற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போரா டினர். அப்போராட்டங் களின் ஒருகட்டத்தில் பிரான்சில், புருஸ்ஸிய னில் இரண்டாவது குடி யரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் என்னும் மன் னன் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்கு ரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டின் மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, உலக மகளிர் நாள் என ஆண்டுதோறும் உலகெங் கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த திட்டங்கள் உருவெடுக்கத் தொடங்கின.

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டிலும், அதன் பின் னரும் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, மகளிர் சமுதாய மேன் மைக்கு மகத்தான பல சட்டங்களையும், திட்டங் களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது. அதன் விளைவாகத்தான் இன்று எங்கும் - எல்லா அலுவலகங் களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாக் கலைகளிலும் பெண்கள் பங்குபெற்றுப் பயனடைந்து முன்னேற் றம் கண்டு சாதனைகள் பல படைத்துப் பெரு மைகளைக் குவித்து வருகிறார்கள் என்பதனை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. இந்தியாவிலேயே முதன் முறையாக அரசுப் பணி களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடும் திட்டம்!

பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கிட தனிச் சட்டம்!

உள்ளாட்சி அமைப்பு களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!
காவல்துறையில் பெண்களைக் காவலர் களாக நியமனம் செய்யும் திட்டம்!

விதவை மகளிர் திருமண நிதி உதவித் திட்டம்!

10ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு மூவலூர் மூதாட்டியார் பெயரில் திருமண நிதியு தவித் திட்டம்!

நாகம்மையார் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்

ஏழைப் பெண்கள் உயர் கல்வி பயில ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம்; பின்னர் பட்ட மேற் படிப்பு நீட்டிப்பு!

ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி நல்கும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியு தவித் திட்டம்!

விதவைப் பெண்களுக் கும், கணவனால் கைவிடப் பட்ட பெண்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும் உதவித் தொகை வழங்கும் திட்டம்!

இலட்சக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுக் கள் உருவாக வழிவகுக் கப்பட்ட மகளிர் திட்டம்!

தமிழ் ஓவியா said...

அரசு உருவாக்கிடும் தொழில் மனைகளில் 10 சதவீத மனைகளைப் பெண் தொழில் முனை வோருக்கு ஒதுக்கீடு செய் யும் திட்டம்! திருக்கோயில் களில் செயல்படும் அறங் காவலர் குழுக்களில் மகளிர் ஒருவரை அறங் காவலராக நியமிக்க வகை செய்யும் சட்டம்!

மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம்!

ஏழைத் தாய்மார்கள் மனம் குளிர இலவச வண்ணத் தொலைக்காட் சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்!

எரிவாயு இணைப்பு டன் இலவச எரிவாயு இலவச அடுப்புகள் வழங் கும் திட்டம்!

ஆதிதிராவிட மகளிர்க்கு விமானப் பணிப் பெண் பயிற்சி வழங்கும் திட்டம்!

அய்ம்பது வயது கடந்தும் திருமணமாகா மல், உழைத்து வாழ முடியாத சூழலில் வாழும் ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டம்!

இரண்டு இலட்சத்திற் கும் மேற்பட்ட சத்துண வுத் திட்டப் பணியாளர்கள் பயன் பெற காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கும் திட்டம்!

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்களும், செவிலியர்களும் நியமிக் கப்பட்டு, கிராமப்புற மக ளிர்க்கு 24 மணிநேர மருத்துவச் சேவை அளிக் கும் திட்டம்! எனப் பல்வேறு திட் டங்களையும், சட்டங் களையும் நிறைவேற்றி, அரசுத் துறைகளிலும், அரசியல் களங்களிலும், தொழில் முறைகளிலும் பெண்கள் முன்னேற்றத் திற்குத் தேவையான அடித்தளங்கள் பலவற்றை வலுவாக அமைத்துத் தந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகமே என்பதனை நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல நமக்கு உரிமை உண்டு.

ஆனால், 2011க்குப் பிறகு, எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி, பெண் கள் பாதுகாப்பின்றிப் பல வழிகளிலும் பாதிக்கப் பட்டு வருகின்றனர் என் பதனை இவ்வேளையில் வேதனையுடன் நினைவு கூரும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

மனித குலத்தின் மகத் தான சக்திகளில் ஒன் றாகத் திகழும் மகளிர்க்கு எதிரான இத்தகைய கொடுமைகள் முற்றிலும் அகற்றப்பட - கழக அரசு காலத்தில் தொடங்கப் பட்ட பெண்கள் நலத் திட்டங்கள் தங்கு தடை யின்றித் தொடர்ந்திட - எங்கும் எதிலும் ஆண் களுக்கு இணையான சமத்துவம் நிலவச் செய் திட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம்!

தமிழக மகளிர் அனைவர்க்கும் உலக மகளிர் நாள் நல் வாழ்த்துகளை உரித்தாக் குவோம் என கலைஞர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97448.html#ixzz3ThZVSpff

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

தப்பு

ஒரு தப்பு செய்த போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத் துகிறது. உடனே இந்த அழுக்கை யாரும் தெரிந்துகொண்டு விடக் கூடாது என்று அதை மூடி மறைக்கத் தோன்று கிறது. நியாயமாக தவறு தல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினார். அந்தப் பிரார்த்தனையே சோப்பைப் போல் அந்தத் தப்பை அகற்றி விடும் (கல்கி 8.3.2015 பக்கம் 2). என்கிறார் சங்க ராச்சாரியார் சந்திரசே கேந்திர சரஸ்வதி.

அப் படியென்றால் கொலை செய்த ஒருவன் பிரார்த் தனை செய்து விட்டால் அந்தத் தப்பு அகன்றி டுமா? நான் பிரார்த்தனை செய்து விட்டேன், நான் குற்றவாளியல்ல என்று ஒருவன் சொன்னால் அர சின் சட்டமும், நீதிமன்ற மும் தான் ஏற்றுக் கொள் ளுமா?

Read more: http://viduthalai.in/e-paper/97451.html#ixzz3ThZxpN1z

தமிழ் ஓவியா said...

முசுலீம்களுக்கான இட ஒதுக்கீடு: மகாராட்டிர மாநில அரசு நீக்கம்மும்பை, மார்ச்.7_ மகாராட்டிர மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் முசுலீம்களுக்கு வழங்கப் பட்டுவரும் இட ஒதுக்கீடு குறித்த தீர்மானங்களை 2.3.2015 அன்று நீக்கி அம் மாநில பாஜக முதல்வர் பட்னவிஸ் அலுவலக ரீதி யாக உத்தரவு பிறப்பித் துள்ளார்.

இத்தகவலை அம்மாநி லத்தின் மூத்த காங்கிரசு கட்சியின் தலைவரும், மேனாள் சிறுபான்மை நலத் துறை அமைச்சரு மான நசீம்கான் தெரிவித் துள்ளார்.

முசுலீம்களுக்கு மகா ராட்டிர மாநில முதல்வர் பட்னவிஸ் அரசு இதே பாதையில் சென்றால் என்னதான் கொடுக்க முடி வெடத்துள்ளது என்கிற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசு ஆட்சியின் போது, முதல்வர் பிரித்வி சவான் 16.6.2014 அன்று மராத்தாக்களுக்கு 16 விழுக்காடு, முசுலீம்களுக்கு 5 விழுக்காடு என்று அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அளிப்பதற்கான உத்தர வைப் பிறப்பித்திருந்தார்.

காங்கிரசு அளித்த அனைத்து இடஒதுக்கீடு களையும் நீக்கி உள்ள பாஜக அரசு முசுலீம் விரோத அரசாக உள்ளது என்று காங்கிரசுக் கட்சி யின் மூத்த தலைவரும், மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்தவருமான நசீம்கான் தெரிவித்துள்ளார்.

மராத்தாக்கள், முசுலீம் களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு காங்கிரசு அர சால் கொண்டு வரப் பட்டது. கடந்த பத்து ஆண்டு களாக எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப் படையில்தான் மராத் தாக்கள் மற்றும் முசுலீம் களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட் டது. கடந்த ஆண்டு ஜூலை 24 அன்று இரண்டு தனித் தனி சட்ட வரைவுகள் கொண்டு வரப்பட்டன.

மும்பை உயர்நீதிமன் றத்தில் சட்டரீதியாக வழக்காடியதில், மராத் தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை ஒப்புக் கொண்டது. முசுலீம் களுக்கு அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு வழங்க மட்டும் ஒப்புக் கொள் ளப்பட்டு, கல்வி நிறுவனங் களில் சிறப்பு ஒதுக்கீடு செய்ய முன்வரவில்லை.

கடந்த டிசம்பரில் மராத்தாக்களுக்கான ஒதுக்கீட்டை ஏற்று மகா ராட்டிர மாநிலத்தின் இரண்டு அவைகளிலும் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து நசீம்கான் கூறும்போது, சட்டமுன்வரைவை நிறை வேற்ற செய்யத் தேவை யான மாற்றங்களை முதல்வர் செய்திருக்க வேண்டும் அல்லது புதிய சட்டமுன்வரைவை அளித்திருக்க வேண்டும். உரிய நடவடிக்கைகளை செய்யாமல் விட்டு விட்ட தால் அச்சட்ட முன் வரைவு எடுத்துக் கொள் ளப்படாமல் காலாவதி ஆகிவிட்டது. அதனால், முசுலீம்களுக்கு கல்வி நிறு வனங்களில் இடஒதுக்கீடு இல்லாமல் ஆகிவிட்டது என்றார்.

ஆனாலும், தற்போதைய சிறுபான்மைநலத்துறை மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஏக்நாத் காட்சே கூறும்போது, ஏற்கெனவே ஒதுக்கீட் டின்படி கல்வி பயில்வ தற்கு அனுமதிக்கப்பட்ட முசுலீம் மாணவர்கள்நலன் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97452.html#ixzz3Tha5RCdC

தமிழ் ஓவியா said...

முட்டாள்தனம்

மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத்திலேயே மாறும். அவன் சந்ததிக் காலத்திலும் மாறும். ஆகவே, அதைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள்தனம்.
(விடுதலை, 28.4.1943)

Read more: http://viduthalai.in/e-paper/97434.html#ixzz3ThaSlhVd

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திராவிடர் எழுச்சி விழிப்புணர்வு மாநாட்டு சிறப்புரை ஆற் றினார்.

அவர் உரையாற்றிய போது குறிப்பிட்டதாவது:

திராவிடர் விழிப் புணர்வு மாநாடு என்பது நம்முடைய மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண் டாக்க வேண்டும் என்பது ஒரு புறம். இன்னொரு வகையிலே திராவிடர் இயக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிற கட்சிகள் கூட இன்றைக்குக் கொள்கை ரீதியான விழிப்புணர்வு தேவை என்கிற காரணத் தினாலே அந்த அடிப் படையிலும் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அண்ணாவின் பெய ராலே கட்சியை நடத்து கிறார்கள். அவர்கள் வெளி யிடுகின்ற சுவரொட்டி களில் தந்தை பெரியா ருடைய உருவப்படத்தைப் பொறிக்கிறார்கள். அண்ணா பிறந்த நாளில் அண்ணா நாமம் வாழ்க என்று சொல்கிறார்கள். கொள்கையிலும் பெரியார் கொள்கைக்கு நாமம், அண்ணா கொள்கைக்கு நாமம் என்றால், பெரி யார், அண்ணா பெயரை உச்சரிப்பதிலே என்ன பொருள் இருக்கிறது? இதை திராவிடர் இயக் கத்தைச் சார்ந்தவர்களுக்கு, இந்த விழிப்புணர்ச்சி மாநாட்டு மூலமாக நாம் தெரிவிக்கக்கூடிய மிக முக்கியமான கருத்தாகும். அந்தக்கட்சியிலே இருக்கக்கூடிய தோழர்கள் இங்கே பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் சொன்னது போல, அவர்கள் நமக்கு ஒன்றும் விரோதிகள் அல்ல. ஆனால், ஒன்றை நினைக்க வேண்டும். தம்முடைய கட்சியின் பெயரில் அண்ணா இருக் கிறார். தம்முடைய கட்சி யின் கொடியில் அண்ணா பறக்கிறார்.

அப்படி என் றால், அண்ணா கொள் கையில் தாம் இருக்க வேண்டும் என்கிற குறைந்த பட்சம், ஓர் அடிப்படைத் தகுதியுடன் இருக்கிறோமா? என்கிற கேள்வியை அவர் களுக்குள் கேட்க வேண் டுமா? வேண்டாமா? அவர்கள் ஏடு ஒன்று வருகிறது. அநேகமாக பலர் படித்திருக்க மாட்டார்கள். அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட அந்த ஏட்டைப் பார்ப்பதற்கு முக்கியக் காரணம், இன் றைக்கு நாம் இந்தப் பொறுப்பில் இருக்கி றோமா? இல்லையா? (கைதட்டல்) கட்டம் கட் டிப்போடப்பட்டிருக்கி றோமா, இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காக ஓர் அறிவிப்புக்காக பார்ப் பார்கள். (கைதட்டல்)

தமிழ் ஓவியா said...

நான் நாள்தோறும் அந்த பத்திரிகையைப் படிக்கிறேன். இந்த ஏட்டை மட்டும அல்ல. தமிழ்நாட் டில் இருக்கக்கூடிய அர சியல் கட்சிகள் நடத்து கின்ற அத்தனை ஏடுகளை யும் படிக்கிறேன். முதலில் கட்சி ஏடுகளைப் படித்து விட்டுத்தான், செய்தி ஏடு களைப் படிப்பது வழக்கம். அந்தக் கட்சியினுடைய போக்கு, பிரச்சினைகளில் எப்படி இருக்கிறது? இதைப் பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண் டிய ஒரு கடமை இருக் கிறது. அண்ணா திமுக ஏட்டில் ஆன்மீகப்பகுதி. தினமலரிலேயே ஆன்மீகப் பகுதி வருகிறது. அது வேறு விஷயம். அண்ணா திமுகவினுடைய அதிகார பூர்வமான ஏட்டில் ஆன் மீகப்பகுதி வருகிறது. கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த கட்சியில் இருக்கக்கூடிய நண்பர்கள் இங்கு வந்திருந் தால், அண்ணா கொள் கைக்காக அந்தக் கட்சியில் தாம் இருப்பதாக உள்ள படியே அவர்கள் உணர்ந் திருந்தால், அவர்கள் இதைப்பற்றி சிந்திக்க வேண்டியது ஓர் அடிப் படையான கோட்பாடு.

அந்த ஏட்டிலே ஆன் மீகப்பகுதியிலே ஒரு நாள் ஒரு படத்தோடு ஒரு செய் தியை பார்த்துவிட்டு அதிர்ந்துபோனேன். ஒரு பார்ப்பனருடைய உருவத் தைப் போட்டு, கையிலே பூணுலைப் பிடிப்பது போன்ற ஒரு காட்சியை அமைத்து, பூணுல் அணி வதன் தத்துவம் என்று இருக்கிறது. நன்றாக நினைத்துப் பாருங்கள்.

அதற்காகவா அண்ணா ஆரிய மாயை எழுதினார்? அதற்காகவா அண்ணா ஆரிய மாயை எழுதி ஆறு மாதம் சிறைத்தண்டனைப் பெற்றார்? அண்ணாவை அவமதிக்காதீர்கள். குறைந்த பட்சம் அண்ணாவைக் காப்பாற்றட்டும் அந்தக் கட்சியில் உள்ள தொண் டர்கள். யாரோ ஒரு பெண் மணி, திரை உலகத்திலி ருந்து வந்தவர், எம்ஜி ஆருக்கு வேண்டியவர், ஆட்சிக்கு வந்தார் என்பது வேறு விஷயம்.

ஆனால், அண்ணாவி னுடைய கொள்கையை இவர் காப்பாற்றுவார், இந்தக் கட்சிதான் அண் ணாவின் கொள்கையைக் காப்பாற்றும் என்று எண்ணினீர்களானால், இதைவிட அண்ணாவுக்கு செய்த துரோகம் உண்டா? அதுமட்டுமல்ல தோழர் களே, ஒவ்வொரு நாளும் இன்றைய ராசிபலன், டாக்டர் நமது எம்ஜிஆர் என்று அந்த பத்திரிகைக் குப் பெயர்.

அந்த இயக்கத்தில் கொள்கையோடு ஒருவர் இல்லையா? புலவர் புலமைப்பித்தன் இருந்தார், அவரை ஒதுக்கிவிட்டார் கள். கொள்கை உள்ளவர்கள் இருக்கக்கூடாதில்லையா? அவர் உண்மையான பழைய கொள்கையாளர். தெரியும் எனக்கு. ஒருமுறை கண்ணதாசன் அவர்கள் அன்னை நாகம்மையா ரைக் கொச்சைப்படுத்தி எழுதினார் என்பதற்காக, அப்போது மேலவையினு டைய துணைத்தலைவராக புலவர் புலமைப்பித்தன் இருந்தார். எம்ஜிஆர்தான் அவரை துணைத்தலைவ ராக ஆக்கினார். கண்ண தாசன் ஆஸ்தானக் கவி ஞர். நாகம்மையைப்பற்றி அவர் கொச்சைப்படுத்திப் பேசினார் என்பதற்காக என்னுடைய பாதக்குறடு என்னுடைய கையில் வரும் என்று சொன்னவர் புல மைப்பித்தன் (கைதட்டல்) அதற்காக எம்.ஜி.ஆர். கண் ணதாசனிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், புல மைப்பித்தன் மன்னிப்புக் கேட்கவில்லை. அப்படி ஒரு சுயமரியாதைக்காரரும் இருக்கிறார். ஆனால், இருக்குமிடத்தில் இல்லை. கொள்கை உள்ளவர் இருக் கலாமா? அதுவும் அண்ணா திமுகவில் இருக்க முடி யுமா? _இவ்வாறு துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தம் உரையில் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/97413.html#ixzz3ThavF69z

தமிழ் ஓவியா said...

உள்ள கோவில்கள் போறாதா?

இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன.

இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒண்ணரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒர் புதுக்கோயில் கட்டி அதில் ஆதிதிராவிடர்களை அனுமதித்திருக் கிறார்களாம். இதை தேசியப் பத்திரிகைகள் போற்றுகின்றன. இது என்ன அக்கிரமம்? எவ்வளவு முட்டாள்தனம்? என்பதை பார்க்க வேண்டுகிறோம்.

பழைய கோவில்களில் ஆதிதிராவிடர்களை விட வில்லையானால் அதற்காக புதுக்கோவில்கள் கட்டுவது பித்தலாட்டமான காரிய மல்லவா? தீண்டப்படாதவர் களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக்கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக்கோவில் கட்டி அவர் களுக்குப் பிரவேசமளித்து விட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா? என்று கேட்கின்றோம்.

தேசியம் என்ற பித்தலாட்டச் சூழ்ச்சி என்று ஆரம்பமானதோ அன்று முதல் இன்று வரை தேசியத் தலைவர் முதல், வாலர்கள் வரையில் ஒவ்வொரு விஷயத் திலும் இந்தமாதிரியான சூழ்ச்சிகளும், பித்தலாட்டங் களுமே நடைபெற்று மக்களையும் முழுமூடர்களாக்கி வருகின்றது. என்றுதான் இந்த புரட்டுகளும், கேடுகளும் ஒழியுமோ?

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 05.02.1933

Read more: http://viduthalai.in/e-paper/97447.html#ixzz3ThbCxawo

தமிழ் ஓவியா said...

மாமாங்கத்தின் அற்புதம்

-சித்திரபுத்திரன்-

புராண மரியாதைக்காரன் கேள்வி: அய்யா, சுயமரியாதைக்காரரே கும்பகோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம். சுயமரியாதைக்காரன்

பதில்: என்ன அற்புதமய்யா?

பு.ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும், கூழாய் இருந்தபோதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.

சு.ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான், இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத் தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள்.

ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்று வேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும்.

இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.

பு-ம:- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?

சு.ம: - இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல்லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில்மறைவே

இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள்.

எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும்.

அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும்.

பு.ம;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?

சு.ம:- நாற்றமிருக்கத்தான் செய்யும். தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள்.

ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென் னறால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.

குடிஅரசு - உரையாடல் - 26.02.1933

Read more: http://viduthalai.in/e-paper/97454.html#ixzz3ThbQF66R

தமிழ் ஓவியா said...

காந்தியின் ஆலயப் பிரவேச நோக்கம்

தோழர் காந்தியவர்கள் தாழ்த்தப்பட்ட தலைவர் ஒருவருக்கு ஆலயப் பிரவேச நோக்கத்தைப் பற்றி எழுதிய நோக்கத்தில் அடியில்கண்ட குறிப்புகள் காணப்படுகின்றன.

அவையாவன: ஆலயப் பிரவேசத்தால் மட்டும் தீண்டாமை தீர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை ஆனால் பிறருடன் சரி சமமாக ஆலயப்பிரவேச உரிமை பெறாதவரை தீண்டாமை தீராது, ஆலயப் பிரவேசத்தால் பொருளாதாரம் கல்வி முன்னேற்றம் ஏற்படும் என்ற குறிப்புகள் இருக்கின்றன.

இவைகளில் ஏதாவது இன்றைய அனுபவத்திற்கு ஒத்து இருக்கின்றதா? என்பதை யோசிக்கவேண்டும். இந்து மதத்தில் தீண்டாத ஜாதியார் என்கின்ற கூட்டமல்லாமல் தீண்டக்கூடிய மக்கள் பல கோடிக்கணக்கான பேர்கள் ஆலயப்பிரவேச சமஉரிமையை தாரளாமாய் அனுபவித்து வருபவர்களாகவே இருந்தும் பல வகுப்புகளில் இன்று நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர்கள் தற்குறிகளாகவும்,

நூற்றுக்குத் தொண்ணூத் தொன்பது பேர் போதிய இடமும் துணியும் உடையும் இல்லாமலும் அவர்களது பிள்ளை குட்டிகளுக்குக் கல்வி கொடுக்கவோ, நோய்க்கு மருந்து கொடுக்கவோ முடியாமலும் இருப்பதின் காரணம் என்னவென்று கேட்கின்றோம்.

இன்று மக்களுக்குப் பொதுவாக அதாவது இந்திய மக்களுக்கு மதம், ஜாதி, தீண்டாதவர் தீண்டக்கூடியவர் என்கின்ற பாகுபாடே இல்லாமல் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்கள் மனிதத் தன்மையிழந்து மானத்தை விற்று கஷ்ட ஜீவனம் ஜீவிக்க வேண்டியவர்களாகவும் அநேகர் அப்படிச் செய்தாலும் ஜீவிக்க முடியாதவர்களாகவும்,

மிருகங் களுக்கு இருக்கும் நிலைமையும் இல்லாமலும் இருந்து வருகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? இப்படிப் பட்டவர்களுக்கு என்ன மார்க்கம்? என்றுதான் கேட்கின்றோம். ராட்டினத்தையும், கோவிலையும், காட்டுவது யோக்கியமான மார்க்கமா? மோசடியான மார்க்கமா? என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள். இப்பொழுது தீண்டக்கூடிய மக்களுடைய பட்டினிக்கும்,

படிப்புக்கும் காந்தியார் கண்டுபிடித்த மருந்து ராட்டினமாகும். தீண்டப்படாத மக்களுடைய பட்டினிக்கும் படிப்புக்கும், காந்தியார் கண்டு பிடித்திருக்கும் மருந்து ஆலயங்கள் ஆகும். ஆகவே இந்த வைத்தியரின் சக்தியை நீங்களே மதியுங்கள்.

இந்த மாதிரி வைத்தியங்களால் காந்தியார் பணக்காரர்களுக்கும், பணக்காரர் கொள்கை கொண்ட அரசாங்கத்திற்கும் உள் ஆளாய் இருந்து உதவி செய்தவர் ஆகிறாரா அல்லது ஏழைகளுக்கும் தீண்டப்படாத மக்களுக்கும் நண்பராய் இருந்து உதவி செய்தவராகிறாரா? என்பதை உணர்ந்து பாருங்கள்.

குடிஅரசு - அறிக்கை - 26.02.1933

Read more: http://viduthalai.in/e-paper/97455.html#ixzz3ThbhBkG5

தமிழ் ஓவியா said...

உண்மையிலேயே ஒரு மனிதனுடைய இலட்சியத்திற்கு வெற்றி ஏற்பட வேண்டும் என்று கருதுகின்ற மனிதனுக்கு அவன் ஆசை நிறைவேற வேண்டுமானால் அந்த இலட்சியத்திற்கு அவனது உயிரைக் கொடுத்ததாய் அதாவது அந்த இலட்சியத்தின் பயனாய் உயிர் இழக்கப்பட்டதாய் ஏற்பட்டால் அது உண்மையில் பயனளிக்கக் கூடியதேயாகும்.

-தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/97455.html#ixzz3ThbnjC3d

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் அப்படியென்ன எளிமையான இலக்கா?

சென்னையில் நடந்து முடிந்த சங்கம் 4 நிகழ்வில், தமிழச்சி தங்கப் பாண்டியன் அவர்கள் இன்றையத் தேவைக்கு நேற்றையப் பங்களிப்புகள் என்றத் தலைப்பில் காலத்திற்கேற்ற அருமையான உரை ஒன்றை வழங்கினார்.

நூற்றாண்டுக் கால திராவிட இயக்கத்தினைக் குறித்த தவறான புரிதல்களுக்கும், அதை ஒட்டி எழுப்பப்படும் அபத்தமான கேள்வி களுக்கும், அழுத்தமாகவும், ஆணித்தர மாகவும் பதிலளித்தார்.

பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோர் இடையே திட்டமிட்டு உண்டாக்கப்படும் பிள வுகள் எத்தகைய ஆபத்தானவை, விஷமத்தனம் கொண்டவை அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என் றும் நயம்பட உரைத்தார். வரலாற்றில், அடிமைப்படுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களுக்கு போராடிய திராவிட இயக்கமோ அதன் தலைவர்களோ எந்தக்காலத்திலும் இத்தகைய பாகு பாட்டினைக் கொண்டிருக்கவில்லை.

மாறாக, அவர்களது சமூக நீதிக் குரல் ஒட்டுமொத்த சமூகத்திற்காக இயங்கி யதே தவிர, வகைவகையாகப் பிரித்து (COMPARTMENTALISED) எந்தக் குழுவி னருக்கும் தனியாக இயங்கவில்லை. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஏற்றத்திற்குத் திராவிட இயக்கம் எவ்வாறு செயற்பட்டது என்று சரித்திரச் சான்றுகளுடன் விளக் கினார்.

மிக நிறைவான பேச்சு. அத்துடன் முடிந்து இருந்தால் மெத்த மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இந்தக் கட்டுரைக்கும் அவசியம் இருந் திருக்காது.. அவரைத் தொடர்ந்து தமிழச்சியின் பேச்சுக்கு விளக்கம் சொல் வதாகக் (அதுகாறும் அப்படியொரு பழக்கம் இல்லையாம்; இருந்தாலும் சொல்லவேண்டிய அவசியம் என்று தந்த தன்னிலை விளக்கம்) கூறிக் கொண்டு, அருட்தந்தை ஜெகத் அவர்கள் வழங்கிய மறுதலிப்பு உரை அவசியமில்லாத ஒன்று.

ஏன் தமிழச்சி போன்றவர்கள் பார்ப்பனர்களை மட்டும் (BRHAMINS – SOFT TARGET) எளிதான இலக்காகக் குறி வைத்து மேடைகளில் தாக்க வேண் டும், ஏன் ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஏனைய உயர் சாதியினர்களை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை என்று ஒரு கேள்வி எழுப்பினார்.

மேலோட்டமாகப் பார்த்தால், ஆமாம், நியாயம்தானே என்று தோன்றும். அருட்தந்தை, இச்சமூக சாதி கட்ட மைப்புகளையோ, வருணாசிரம தர்மத் தையோ புரிந்து கொண்டு இப்படிப் பேசினாரா? இல்லை சங்கம் 4 போன்ற நிகழ்வுகளை நடத்த, தான் சார்ந்த கிறித் துவ மதத்தினரோ அல்லது திருச் சபையோ உதவி செய்ய வராதபொழுது பார்ப்பன நண்பர்கள் சிலர் உதவி செய்ததை (அவரே மேடையில் கூறிய வார்த்தைகள்) அன்போடு நினைவிற் கொண்டு பேசினாரோ? தெரியவில்லை. எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும்.

தமிழ் ஓவியா said...

ஒருமுறை பேராசிரியர் சுப.வீ. அவர்கள் குறிப்பிட்டார், தமிழ்நாட்டில் பார்ப்பனர்களை விடுத்து அனைத்துச் சாதியிலிருந்தும் ஒருவரை சட்டையைக் கழற்றிவிட்டு நிற்கச் சொல்லி, அவர்கள் சாதியைக் கண்டுபிடியுங்கள் என்று யாரையாவது கேட்டால், சொல்லுவது கடினம். காரணம், உருவ ஒற்றுமை.

அதே நேரத்தில் பார்ப்பனர் ஒருவரை எளிதில் அவர் முதுகில் தொங்கும் நூலைக் கொண்டு அறிந்து கொள்ள லாம். இது ஏதோ ஒரு நூல் சமாச்சாரம் அல்ல. பிராமணனுக்கும், ஏனைய சாதியினருக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பிராமணன் என் பவன் வருணாசிரம அமைப்பில் முத லானவன். மற்ற சாதியினர், அவ்வமைப் பின் கடைசியில் வரும் சூத்திரர்களோ அல்லது இவ்வமைப்புக்குள் வராத சண்டாளர்கள் எனப்படும் தாழ்த்தப் பட்ட சாதியினர்களோ.

ஆகவே, செட்டியார், முதலியார், தேவர், பள்ளர் போன்ற சாதிப் பெயர்களுடன் பிராமணன் என்பதைச் சேர்ப்பது தவறு. சாதிப் பெயர்களெல்லாம் இடையில் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல காரணப்பெயர்களாகவும், தொழிற் பெயர்களாகவும் வந்து சேர்ந்தன.

ஆனால், வருணம் ஒட்டுமொத்தமாக நம்மை அடையாளப் படுத்துவது சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் தான். இந்த அடிப்படைப் புரிதல் மிக அவசியம். அய்யர், அய்யங்கார் என்பது சாதிப் பெயர்கள். பிராமணன் என்பது, வருணப் பெயர்.

பிராமணன் என்று பார்ப்பான் தன்னைக் கூறிக் கொள்ளும்பொழுது, தான் அனைவரிலும் உயர்ந்தவன் என்றும் நம்மை மறைமுகமாக சூத்திரன் என்றும் நிறுவுகிறான். சூத்திரன் என்பது ஏதோ பட்டப் பெயர் அல்ல. நம்மை வேசியின் மகன் என்றும் மனு விளக்கம் கொடுக்கிறது.

பார்ப் பனர்கள்தான் இன்றைய சமூக அவலங் களுக்கும், சாதிப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிற உண்மையினைக் கூறும்பொழுது எளிமையான இலக்கு என்று சொல்வது, மேம்போக்காக, நியாயம் போலத் தோன்றினாலும், ஆழமாக, பெரியாரையும், அம்பேத் கரையும் படித்தவர்கள் அதில் எள்ள ளவும் உண்மையில்லை என்பதை அறிவார்கள்.

இன்றைக்கு இடைச் சாதியினர் சாதி பெருமை பேசுவதற்கும் பார்ப்பனர்கள் வருணப் பெருமைப் பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதை புரிந்து கொண்டால், இன்றைய சூழலை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ஆயிரம் ஆண்டுகளாக அழுத்தி வைக் கப்பட்ட பல்வேறு சாதியினர் கடந்த ஓரிரு தலைமுறையாகத்தான் படித்து மேலே வருகின்றனர்.

பொருளாதாரத் தில் ஏற்றம் பெறுகின்றனர். இன்றைக்கு தங்கள் சாதி அடையாளத்தை வெளிப் படுத்துகின்றனர். உளவியலாளர்கள் இதை சாதிக் கட்டமைப்பு உடைவ தற்கான இறுதிக் கட்டம் என்று கூறுகின்றனர். இன்றைக்கு சாதிப் படிக்கட்டில் மேலே இருக்கும் சாதி யினரை விட (பார்ப்பனர்கள் தவிர்த்து) இடை மற்றும் கீழே இருப்பவர்கள் தான் அதிகமாக சாதி அடையாளத் தோடு காணப்படுவது போல ஒரு தோற்றம் தெரிகிறது.

தமிழ் ஓவியா said...

அது ஒருவகையில் உண்மையும் கூட.. எந்தச் சாதியின் பெயர் அவர்களுக்கு இழிவானதாகவும், அவமானமாகவும் இருந்ததோ அதே சாதிப் பெயர் இன்றைக்கு அவர்களுக்கு பெருமையாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது.

தங்கள் சாதியின் பெரு மையை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் நாங்கள் இச் சமூகத்தில் எல்லோரையும் போல உயர்ந்தவர்கள், யாருக்கும் தாழ்ந் தவர்கள் அல்ல என்று மறைமுகமாக உரைக்கின்றனர். சிறிது காலத்திற்கு இப்படித்தான் இருக்கும். இந்தக் கட் டத்தைத் தாண்டிவிட்டால், எல்லோ ரும் ஒன்றுதான் என்ற உணர்வு மேலோங்கிவிடும். சாதி காணாமல் போய் விடும்.

ஆனால், பார்ப்பனர்களைப் பொறுத்தவரை, சாதி அமைப்புகள் தொடர வேண்டும் என எண்ணுப வர்கள். காரணம், இந்து மதம் என்பது சாதி அமைப்புகளால் கட்டப்பட்ட ஒன்று. சாதியை நீக்கிவிட்டால், இந்து மதம் சரிந்துவிடும். அதனால் தான், இந்துத்துவா மற்றும் சனாதனிகள், நாலு வருண தர்மத்தைக் காக்க வேண்டும் என்று போராடுகிறார்கள்.

பார்ப்பனர்கள், எளிதான இலக்கு என்றால், ஏன் இத்தனை ஆண்டுகள் ஆகியும், அரசு ஆணை வெளியிட்டும், கோயில் கருவறைக்குள் பார்ப்பனர் அல்லாதார் பூசை செய்யும் உரிமை பெற வழியில்லை அல்லது சங்கர மடத் திற்கு ஒரு தாழ்த்தப்பட்டோர், இல்லை இல்லை ஒரு பார்ப்பனரல்லாதார் தலைமையேற்க முடியவில்லை.

இந்த நாட்டில், ஆட்சி வேண்டுமானால், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர் கைகளில் சென்று இருக்கலாம். ஆனால், இன்றுவரை, நிருவாகம், அவாள் கைகளில்தானே இருக்கிறது. நமது கவலையெல்லாம், அருட் தந்தையின் குரல் இன்னொரு ஜெய மோகன் மற்றும் பத்ரி சேஷாத்ரி குரலாக மாறிவிடக்கூடாது அல்லது நம்மை தவறாகப் புரிந்து கொள்ள வைத்துவிடக்கூடாது.

அது போன்று அவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு துண்டு போடாமல் இருப்பது அவர் விருப்பம். ஆனால், அது ஏதோ அருவருக்கத்தக்க செயல் போலவும் திராவிட இயக்கத்தினரின் மூடப் பழக்கம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. துண்டு என்பது தமிழகத்தின் ஆதிக்க வெறியின் குறியீடு.

ஒரு தலைமுறைக்கு முன்னால், தன்னை விட மேலான சாதியினரைக் கண்டு பேச வந்தால், தோளில் இருக்கும் துண்டு இடுப்புக்குச் செல்ல வேண்டும், எதிரில் அவர்களைக் கண்டால் தோளில் இருப்பது கைகளுக்கும் கக்கத்திற்கும் இடையே வர வேண்டும். சட்டை அணிய கீழ் சாதியினருக்கு உரிமை இல்லை. சங்கம் நடந்த இடம் நாதஸ்வர சக்ரவர்த்தி திருவாவடுதுறை .. இராஜரத்தினம் பிள்ளை அரங்கம்.

முன்பெல்லாம் நாதஸ்வரம் வாசிக்கின்றவர்கள் அல்லது தவில் வாசிக்கின்றவர்கள், யாராக இருந் தாலும் அவர்கள் தங்களுடைய உடலின் மேற்பகுதியில் எந்த உடையும் அணியக் கூடாது, இது அன்றைக்கிருந்த ஆதிக்க வர்க்கத்தினுடைய கட்டளை - ஆதிக்க வர்க்கம் பரப்பிய ஒரு நிலைமை.

அப்படிப்பட்ட நிலைமையைத் தகர்க்க வேண்டுமென்பதற்காக தன்னுடைய உடலிலே பொன்னாடை போர்த்திக் கொண்டு, சட்டை போட்டுக் கொண்டு நாதஸ்வரம் வாசித்த ஒரேவொரு நபர் அன்றைக்கு ராஜரத்தினம் அவர்கள் தான். மற்றவர்கள் எல்லாம், நாம் சட்டை போட்டுக் கொண்டால் என்ன நினைப்பார்களோ, நமக்கு அடுத்தடுத்து வருகின்ற வாய்ப்புகள் எல்லாம் வருமா வராதா என்று அஞ்சியபோது வாய்ப்பு களைப் பற்றிக் கவலைப் படாமல், தன்னுடைய சுயமரியாதையைப் பற்றி மாத்திரம் கவலைப்பட்டு,

அவரைச் சார்ந்த ஒட்டுமொத்த கலைஞர்கள் வாழ்விலும் ஏற்றம் பெறச் செய்த கலகக்காரர் இராஜரத்தினம் பிள்ளை அவர்கள். அத்தகையவர் பெயர் தாங்கிய அரங்கில் நின்று கொண்டு தோளில் துண்டு போடும் கலாச்சாரத்தை எள்ளி நகையாடியது, ஒரு நகை முரணாகவும், நெருடலாகவும் இருந்தது.

அத்தகைய ஆதிக்கக் குறியீடுகளை ஒழிக்கத் தான் தந்தை பெரியார் சுயமரியாதை மாநாடுகளில் ஒருவருக்கு ஒருவர் துண்டு போட்டு ஆதிக்கச் சக்திகளின் ஆணிவேரில் வெந்நீர் ஊற்றினர். இவைகளையெல்லாம் அருட்தந்தை ஜெகத் அறியாதவர் அல்லர். இருந்தா லும் நமது பங்கிற்கு நினைவூட்டுவோம் என்ற அளவில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.

_ வெளிச்சம்

Read more: http://viduthalai.in/page2/97393.html#ixzz3ThcnYELb

தமிழ் ஓவியா said...

சாதி விளைக்கும் கேடு!

சாதிக் கொடுமையும் பலவுள, கலியாணம் கருமாந்திரம் முதலிய காலங்களில் நடத்தும் செலவுகளை மட்டுக்கு மிஞ்சி செய்வதால் ஏழைகளாகிப் பரிதவிப்போர் எத்தனை பேர்? காந்தியாருக்கு இடுவதில் போட்டி போட்டுக் கெட்டவர்கள் எத்தனை பேர்? சாதிக் கொழுப்பால் வழக்கிட்டு கெட்டவர் எத்தனை பேர்?

இவ்வித வீண் வியர்த்தச் செலவுகளால் பனாதிகளாய் விட்டவர் எத்தனை பேர்? நமது மதங்களாலும், சாதி வேற்றுமைகளாலும், துர்ப்பழக்க வழக்கங்களாலும், சாதி, சமய ஆசாரங்களாலும் மூட பக்தியாலும், கோவில்களாலும், குளங்களாலும், புரோகிதர்களாலும், குருமார்களாலும், மந்திர தந்திரவாதிகளான மாயக்காரர்களாலும் கெட்டழிந்து வரத் துர்ப்பாக்கியம் பெற்றவர்களாகயிருக்கும் நமது நாட்டாருக்குத் துன்பங்களுக்குக் குறை வேது?

சாதி வேற்றுமையின் கொடுமையினால் நமது சமுகத்திலேற்பட்டிருக்கும் பிளவுகளுக்கும் ஒற்றுமையின்மைக்கும் அளவேது? இந்தச் சங்கடங்களெல்லாம் எப்பொழுது நம் நாட்டை விட்ட ஒழியுமோ அப்பொழுதுதான் நம் நாடு சுகப்படும்! நமது நாட்டைப் பிடித்திருக்கும் வறுமையும் தொல்லையும்!

(சுயராஜ்யம் யாருக்கு? என்ற புத்தகத்தில் தோழர் மா. சிங்காரவேலு பி.ஏ., பி.எல். எழுதியவை பக்கம் 12)

Read more: http://viduthalai.in/page3/97396.html#ixzz3Thd8sxHV

தமிழ் ஓவியா said...

,300 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால தடயங்கள் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் வரலாற்றுத் தடயங்கள், கி.பி. 11-13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் வாழ்விடப் பகுதி ஆகியவற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

விருத்தாசலத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் முதனை கிராமம் உள்ளது. இவ்வூரில் உள்ள செம்பையனார் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள சின்ன ஓடையில் சிலர் மண் தோண்டும் போது முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதை அறிந்த இவ்வூரைச் சேர்ந்த ஆசிரியர் குணசேகரன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில், அப்பகுதிக்கு பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வாளரும், பேராசிரியர்களு மான சிவராமகிருஷ்ணன், கலைச்செல்வன் ஆகியோருடன் ஆய்வு மாணவர்கள் சென்று ஓடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

உடைந்த முதுமக்கள் தாழிகள்: மண் எடுக்கப் பட்ட பள்ளத்தில் 15 அடி இடைவெளியில் மூன்று முதுமக்கள் தாழிகள் முற்றிலும் உடைபட்ட நிலையில் கிடந்தன.

அதன் அருகே கருப்பு- சிவப்பு மட்கல ஓடுகளும், வழுவழுப்பான கருப்பு நிற மட்கல ஓடுகளும், உடைந்த விளக்குத் தாங்கிகளும் காணப்பட்டன.

ஆய்வு செய்ததில் இவற்றின் காலம் கி.மு 3-4-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனத் தெரியவந்தது. மேலும், மனித எலும்புத் துண்டுகளும் காணப்பட்டன. இவை சிதைந்த நிலையில் இருந்ததால், டிஎன்ஏ சோதனைக்கு உள்படுத்த முடியாது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். முதனை கிராமத்தின் மேற்குப் பகுதி முழுவதும் கள ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

பழையபட்டினம்: விருத்தாசலம் வட்டத் துக்கு உள்பட்ட பழையபட்டினம் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் தமது முதல் கட்ட தொல் லியல் கள ஆய்வை கடந்த இரண்டு மாதங் களாகச் செய்து வருகின்றனர். இதன் மூலம், இவ்வூரைப் பற்றிய பல புதிய வரலாற்றுத் தகவல்களை கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக, பட்டினம் என முடியும் ஊர்கள் பண்டைய காலத்தில் வணிக, வர்த்தக மய்யங் களாக விளங்கியவை என்ற அடிப்படையில் இவ்வூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நீராழி மேடு: சுமார் அய்ந்து ஏக்கர் பரப் பளவில் உள்ள நீராழி மேட்டை சுற்றி நடத்தப் பட்ட கள ஆய்வில் உடைந்த சிவப்பு நிற மட்கல ஓடுகளும், செங்காவி நிறம் பூசப்பட்ட மட்கல ஓடுகளும், சொரசொரப்பான சிவப்பு நிற மட்கல ஓடுகளும், தானியங்களை சேமித்து வைக்கப் பயன்படும் பெரிய அளவிலான மட்பாண்டங்களின் உடைந்த ஓடுகளும் இப்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், செங்கற்களும், கட்டடங்கள் கட்ட பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்புக் காறைகளும் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.

"ட' வடிவ கூரை ஓடுகள்: இந்தப் பண்பாட் டுப் பகுதியின் கிழக்குப் பகுதியில் உடைந்த "ட' வடிவ கூரை ஓடுகளின் பாகங்கள் கிடைத்துள் ளன. இவ்வகை கூரை ஓடுகள் இடைக்கால பண்பாட்டுப் பகுதிகளான கங்கைகொண்ட சோழபுரம், சேந்தமங்கலம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ள அகழ்வாய்வுகளிலும் கிடைத்துள்ளன.

எனவே, பழையப்பட்டினம் நீராழி மேட்டுப் பகுதியிலும் இதே கால கட்டத்தைச் சார்ந்த அதாவது கி.பி. 11-13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

மேலும், இப்பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ள மட்கல ஓடுகள், அதில் உள்ள கோடுகள், பூ வேலைப்பாடுகள் அதன் வளைவு தொழில்நுட்பம் போன்றவை இடைக் கால பண்பாட்டுத் தாக்கத்தோடு உள்ளன என் பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வூரில் தொடர்ந்து களஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டு இடங்களையும் சேர்த்து கடலூர் மாவட்டத்தில் இதுவரை 306 இடங் களில் பண்டைய கால மக்களின் வரலாற்றுத் தடயங்களை கண்டறிந்து முறையான ஆவணப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறார் வர லாற்று ஆய்வாளர் பேராசிரியர் சிவராம கிருஷ்ணன்.

Read more: http://viduthalai.in/page3/97394.html#ixzz3ThdFjNaI

தமிழ் ஓவியா said...

பெருமைமிகு பெரியார்

சிற்பம் வடித்திடுக; சிற்பியர்காள்! அய்யாவின்
பொற்புவந்து கல்லிற் புக.

கவிதை புனைக; கவிஞர்காள்! இந்தப்
புவிபுதுக்கி னாரைப் புகழ்ந்து.

ஓவியர்காள் தந்தை உருவத்தைத் தீட்டிடுக!
ஆவிபெற்று மீண்டாற்போல்; ஆழ்ந்து.

நாளும் முழக்கிடுக; நாவலர்காள்! அய்யாவின்
நீளும் புகழை நிலத்து.

பண்ணிசைத்துப் பாடிடுக; பாடகர்காள்! அய்யாவின்
தொண்டுகளை யெல்லாம் தொகுத்து.

நடிகர்காள்! ஒன்றி நடித்திடுக! அய்யா
வடிவேந்தும் நாடகத்துள் வாழ்ந்து.

பரதநடப் பாவையர்காள்! பாவனையால் அய்யா
வரலாற்றைச் சொல்க மகிழ்ந்து.

ஆய்ந்திடுக நாளும்; அறிஞர்காள்! பேரறிவில்
தோய்ந்தவரின் சிந்தனையில் தோய்ந்து.

ஈடில்லாத் தந்தைபணி எண்ணட்டும்; ஏத்தட்டும்
கூடிக் கலைஞர் குழாம்.

அஞ்சுகங்காள்! சிந்திடுக! அய்யாவின் சீர்த்தியினைக்
கொஞ்சுதமிழ்த் தேனில் குழைத்து.

கோகிலங்காள்! கூவிடுக! கோமகனின் மேன்மையினைப்
பாகினிமை தோற்கப் பகுத்து!

ஆழியின் பேரலைகாள்! ஆர்த்திடுக. நாளுமிந்த
ஊழிப் பெரியோன்சீர் ஓர்ந்து.

மாமலைகாள்! இன்னும் மவுனம்ஏன்? விண்டுரைப்பீர்
தீமலையாய் வந்தார் திறம்.

சுட்டெரிக்கும் சூரியனே! சொல்க! மடமைவனம்
பட்டெரியச் செய்தார் பணி.

பாடிவா! பால்நிலவே! பாரெங்கும் அய்யாவின்
ஈடிலாத் தொண்டை இனிது.

அலைந்துதிரி காற்றே! அவனிக்குச் சொல்க!
தலைவரிவர் தொண்டதனைச் சற்று.

களிறுகாள்! சாற்றுங்கள்! காசினியில் நாளும்
பிளிறிப் பெரியாரின் பீடு.

புல்லாங் குழல்காள்! புரட்சிகளின் நாயகர்சீர்ப்
பல்லாண் டிசைப்பீர் பணிந்து.

செந்தமிழ் மக்காள்! செகம்முழுதும் ஆர்த்துரைப்பீர்!
அந்தமிலாத் தந்தைபுகழ் ஆய்ந்து.

(ய. மணிகண்டன் ஒளிந்திருக்கும் சிற்பங்கள் வெளியீடு: விழிகள் பதிப்பகம் நன்கொடை ரூ.70)

Read more: http://viduthalai.in/page3/97395.html#ixzz3ThdKr0wS

தமிழ் ஓவியா said...

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலியும், போட்டியாஞ்சலியும்

-கடலூர் மண்டலச் செயலாளர்
பேரா.பூ.சி.இளங்கோவன்

சிதம்பரம் நடராசர் கோயில் உச்சநீதிமன்ற மோசடித் தீர்ப்பின்படி தில்லை தீட்சிதர்களின் நிர்வாகத்தில் வந்த பின்பு பல வித மோசடிகளும், அடாவடித்தனமும் நிகழத் தொடங்கி விட்டன என்பதற்கோர் சரியான எடுத் துக்காட்டு மேற்கண்ட தலைப்பாகும்.

கடந்த 33 ஆண்டுகளாக நாட்டியாஞ் சலி அறக்கட்டளை என்ற பெயரில் பார்ப்பனரல்லாத வழக்குரைஞர் ஒருவர் முன்னின்று சிதம்பரம் நடராசர் கோயில் ஆயிரங்கால் மண்டபப் பகுதியில் சிவராத்திரியில் தொடங்கி சுமார் ஒரு வாரம் நாட்டியாஞ்சலி என்ற பெயரில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார். இந்த அறக்கட்டளையில் ஒரு சில பார்ப்பனர்கள் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் பார்ப்பன ரல்லாதார் ஆவார்கள்.

சிதம்பரம் நடராசர் கோயிலை கலைஞர் ஆட்சியில் தமிழக அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கட் டுப்பாட்டில் கொண்டுவந்ததை எதிர்த்து தீட்சிதர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது இந்த நாட்டியாஞ்சலி அறக் கட்டளை தீட்சிதர்களுக்கு ஆதரவாக இருந்தது. இவ்வழக்கில் தீட்சிதர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அனைத்தையும் செய்தனர் இவ்வறக் கட்டளை உறுப்பினர்கள்.

இவ்வாண்டு சிவராத்திரி தொடங்கி நாட்டியாஞ்சலி நடத்த, இந்த அறக்கட்டளையினர், தீட்சிதர்களின் கோயில் நிர்வாக செயலாளர் ரா.பாஸ்கர தீட்சிதரிடம் அனுமதிகோரி விண்ணப் பித்தபொழுது அவர் இவ்வாண்டு தீட்சிதர்களாகிய நாங்களே நாட்டி யாஞ்சலி நடத்திக்கொள்கிறோம். உங்களுக்கு அனுமதியில்லை என்று கூறிவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

இவ்வாண்டு தீட்சிதர் களே சிவராத்திரி தொடங்கி நாட்டியா ஞ்சலி நடத்துகின்றனர். நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர், அரசர் முத்தையா செட்டியாருக்குச் சொந்தமான தெற்கு வீதியில் ஒரிடத்தில் நடத்துகின்றனர்.

இனிதான், பார்ப்பனர் ஆதிக்கம் இன்றும் கொடிக்கட்டிப் பறக்கிறது என்ற திராவிடர் கழகத்தாரின் கருத்து உண்மைதான் என்பதை இன உணர் வற்ற பார்ப்பனரல்லாதார் உணர வேண்டும். பக்தியில் நமக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை இனஉணர்வு நோக்கில் பார்ப்பதுதான் தந்தை பெரியாரின் சிந்தனையாகும்.

இதே தீட்சிதர்கள்தான் அன்று இராசராசசோழன் வந்து தேவார - திருவாசக ஏடுகளைக் கேட்ட பொழுது அவற்றை எழுதியவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் நேரில் வந்து கேட்டால்தான் கொடுப்போம் என்று அரசனிடத்திலேயே மறுப்புரை கூறினார்கள்.

பிறகு இராசராசன் மேற் கண்ட நான்கு நாயன்மார்களின் சிலை களைக் கொண்டுவந்து காட்டி இப்பொழுது கொடுங்கள் என்று கேட்க, இவைகள் எல்லாம் சிலைகள் தானே என்று இறுமாப்போடு கூறினர். தீட்சிதர்கள் இந்த நால்வரும் சிலைகள் என்றால் உள்ளே உள்ள நடராசனும் சிலைதானே என்று பதில் கூறியதை இராச இராசசோழன் என்ற திரைப் படத்தில் கண்டோம்.

இந்த தீட்சிதர்கள், இராசராசன் காலம் தொடங்கி இன்று நாட்டி யாஞ்சலி அறக்கட்டளையினர் வரை தங்களின் திமிர்த்தனத்தைக் காட்டிக் கொண்டுதான் உள்ளனர். தமிழர் களுக்கு உணர்வு வந்தபாடில்லை சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலார்; இந்த நடராசர் கோயிலிலிருந்து விரட்டியடிக் கப்பட்டதால்தான் வடலூர் சென்றார் என்பது வரலாறு ஆகும்.

இதுபோலவே, திருமுருக என்ற அடைமொழியுடன் கூடிய கிருபானந்தவாரியார் சிதம்பரம் கோயிலிலிருந்து விரட்டியடிக்கப்பட் டார். அதன் பிறகு கிருபானந்தவாரியார் சிதம்பரத்திலேயே வாரக்கணக்கில் தங்கிக்கொண்டு பிரசங்கம் செய்தார். இவரின் பிரசங்கத்திற்கு இரத்தினசாமி செட்டியார் போன்ற செல்வந்தர்கள் ஏற்பாடு செய்தனர்.

ஏற்பாடு செய்யப் பட்ட இடம், நடராசர் கோயில் அல்ல, இளமையாக்கியனார் கோயில் என்ற இடமாகும். ஏனெனில் கிருபானந்தவாரி யாரின் மதப்பிரச்சாரத்திற்கு நடராசர் கோயிலில் அனுமதியில்லை.

தந்தை பெரியார் தொண்டர்கள் சார்பாக நாட்டியாஞ்சலி அறக்கட்ட ளையினருக்கு ஒரு வினா விடுக்க விரும்புகிறோம். சிதம்பரம் நடராசர் கோயில் தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறையின் கட்டுப்பாட் டில் தொடர்ந்திருந்தால், உங்களுக்கு இந்த நிலை வந்திருக்குமா?

தமிழ் ஓவியா said...

அன்றைக்கு தீட்சிதர்களுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றம் வரை தீட்சிதர்களைத் தாங்கிப் பிடித்தீர்களே! உங்களுக்கு அவர்கள் அளித்த பரிசு இதுதான் என்பதை இனிமேலாவது உணருங்கள்.

எனவேதான், தந்தை பெரியார் பார்ப்பனர்களின் நஞ்சு உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டினார். தந்தை பெரியார் தொண்டர்களாகிய நாங்கள், பார்ப்பனர் ஆதிக்கம் தொடர்கிறது என்றால், இல்லை இல்லை பார்ப்பனர்கள் மாறிவிட்டனர்.

இந்த தி.க.காரர்களுக்கு வேறு வேலையில்லை என்றீர்களே! இதுதான் பார்ப்பனர்கள் மாறிய நிலையா? இதைத்தான் பிப்ரவரி 10 ஆம் நாள் சிதம்பரத்தில் தந்தை பெரியார் படிப்பகத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் பேசிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கரையான் புற் றெடுக்க, கருநாகம் குடி கொண்டது போல என்று சிதம்பரம் நடராசன் கோயில் நிலைகுறித்துப் பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், தீட்சிதர் ஆட்சி குறித்து பேசினார்.

சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சிதர்களின் கையில் போய்விடக் கூடாது என்பதற்காக தன் 90-ஆம் அகவையிலும், உச்சநீதிமன்றம் வரை சென்று தீட்சிதர்களுக்கு எதிராக முன் னாள் இந்து சமய அறநிலைய அமைச் சர் வி.வி.சாமிநாதன் போராடுகிறார். இவருக்கு உறுதுணையாக சிதம்பரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வ.மா.சந்திரபாண்டியன், விருத்தாசலம் வழக்குரைஞர் தோழர் இராசு போன்றவர்கள் இன்றும் உச்சநீதி மன்றத்தில் தீட்சிதர்களுக்கு எதிராக தீர்ப்பு பெற போராடுகின்றனர்.

இது தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் சென்ற ஆண்டு உரையாற்றினார். பல இனஉணர்வு அமைப்புகளும் இச்செய லுக்கு ஒன்றுபட்டு சிதம்பரத்தில் போராட்டம் ஆர்பாட்டம் நடத்தின. அன்றைக்கு இந்த நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் மேற்கண்ட செயல்களுக்கு எதிராக, பார்ப்பனர் களுக்கு, தீட்சிதர்கட்கு ஆதரவாக இருந் தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

சிதம்பரம் நடராசர் கோயில் சன்னதியில் அதாவது நடராசருக்கு பூசை செய்தபின் பக்தர்களுக்கு விபூதி இலவசமாக வழங்குவது நடைமுறையி லிருந்தது. இப்பொழுது இலவசமாக விபூதி வழங்குவது நிறுத்தப்பட்டு, சிறுசிறு பொட்டலங்களாகக்கட்டி தட்டில் வைத்துக் கொண்டுள்ளனர்.

அத்தட்டில் காசு போட்டுவிட்டு விபூதி கொடுத்தால் என்ன? கொடுக்கா விட்டால் என்ன? என்பது நமது கருத்தல்ல, எப்படியெல்லாம் பணம் சுரண்டப்படுகிறது பக்தியின் பெயரால் என்பதுதான் நம்கேள்வியாகும். அரசு காட்டுப்பாட்டிலிருந்தால் இந்நிலை வந்திருக்குமா? என்பதை பக்தர்கள் உணர வேண்டும்.

பல கோயில்களைக் கட்டிய இராசஇராசசோழன் தொடங்கி, வள்ள லார், கிருபானந்தவாரியார், நாட்டி யாஞ்சலி அறக்கட்டளையினர் (அறக் கட்டளையில் மிகுதியானவர்கள் பார்ப்பனர் அல்லாதார்) ஆகியோர் களை ஈரோட்டுக் கண்ணாடி போட் டுக்கொண்டு பார்த்தால் ஒன்று மட்டும் புலனாகிறது.

அது என்ன வென்றால் மேற்கண்ட அனைவரும் பார்ப்பனரல் லாதார், அனைவரும் பார்ப்பனர்களிடம் ஏமாந்தவர்கள். ஆனால் பெரியார் ஒருவர் மட்டுமே பார்ப்பனர்களிடம் ஏமாறாதவர் என்பது உண்மையாகும்.

வாழ்க பெரியார்!

வளர்க அவர்தம் கொள்கை!

Read more: http://viduthalai.in/page4/97398.html#ixzz3ThdVoLKC

தமிழ் ஓவியா said...

அய்யாவின் ஊன்று கோலாய்!

மா.காசிநாதன் - செகதீசன் சகோ தரர்கள் சிங்கப்பூரில் பெரு வணிகர் களாக உருவெடுத்து பொருளீட்டிக் கொண்டிருந்தார்கள்.
பிறந்த ஊரான ஆயக்காரன்புலத்தி லிருந்து உறவினர்கள் வாழும் ஆலத் தம்பாடிக்கு குடி ஏற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த காலம்.

1965 இல் ஒரு மாளிகை வீடு நிர்மாணிக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. எதிரே உள்ள திடலில் ஓலையால் வேயப்பட்ட சிறுகுடில் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மீனாட்சி சுந்தரம் குடும்பத்தைச் கவனிக்கும் பொறுப்பில் இருந்தார்.

ஆலத்தம்பாடிக்கு பக்கத்து கிராமமான கீரக்களூரில் சுயமரி யாதைச் சுடரொளி சு.சாந்தன் இல்லம் இருந்ததனால் அடிக்கடி ஆலத்தம் பாடிக்கு வந்து மீனாட்சிசுந்தரத்தை சந்திப்பதை வாடிக்கையாகக் கொண் டிருந்தார். இவரது வீடே அவருக்கு பாடி வீடாக அமைந்திருந்தது.

இவர்கள் இருவரும் பழகத் தொடங்கிய காலம் தி.க.விற்கும், திமுக விற்கும் ஆகாத காலம்! துருப்பிடித் துப்போன முரட்டு இரும்புகளையும் ஈர்த்துக்கொண்டிருந்த பெருங்காந்த மாய் விளங்கிய பெரியாரின் கொள் கையில் மீனாட்சிசுந்தரம் கட்டுண்டுக் கிடந்ததில் ஒன்றும் வியப்பில்லை தான்!

ஆனாலும் இவர் திமுகவில் பிரபலமாகி வளர்ந்து கொண்டிருந் தார். இவரைச் சுற்றி ஒரு பெரும் இளைஞர் பட்டாளமே சுழன்று கொண்டிருந்தது! தந்தை பெரியாரை அழைத்து ஆலத்தம்பாடியில் பொதுக்கூட்டம் நடத்த சாந்தன் ஏற்பாடு செய் திருந்தார்.

அய்யா அவர்கள் ஆலத்தம் பாடிக்கு வரும்போது எங்கள் வீட் டிற்கு விருந்து சாப்பிட வரவேண்டும் என்று சாந்தனிடம் மீனாட்சிசுந்தரம் சொன்னார்.

அதற்கு சாந்தன் சொல்கிறார், எல்லாத்திலேயும் விளையாடாதீங்க தம்பீ... என்று மூஞ்சை ஒருபக்கம் திருப்பிக்கொள்கிறார்! அதற்கு மீனாட்சிசுந்தரம் இல்லை,,, இல்லை,,, அய்யா அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்துதான் ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்! என்ன தம்பி சொல்றீங்க! நிஜ மாவா சொல்றீங்க! ஆமாம்... அதற் கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்கிறார்.

உடனடியாக சாந்தன், அப்போ தைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவ ராக இருந்த தோலி ஆர்.சுப்பிர மணியம் அவர்களுடன் திருச்சி பெரியார் மாளிகைக்குச் சென்று அய்யா அவர்களிடம் செய்தி சொல்லி ஒப்புதல் பெற்றுக் கொண்டு வந்து விட்டார்கள்.

பெரியார் வருகிறார் என்றதும் இவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நண்பர்களைக் கூட்டிக் கொண்டு திருவாரூக்குப் போய் அய்யா உட்கார ஒரு விலை உயர்ந்த சோபாசெட் வாங்கிக்கொண்டு வந்தார். அய்யாவுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகள் பக்குவமாய் சமைக்கப்பட்டிருந்தன.

தந்தை பெரியாருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து சாப் பிடச் செய்தார்கள். அய்யா அவர்கள் விருந்து சாப்பிட வந்ததற்காக மீனாட்சிசுந்தரம் இருபத்தைந்து ரூபாயை அய்யாவிடம் கொடுத்தார்.

ரொம்ப நன்றிங்க... ரொம்ப நன்றிங்க... என்று சொல்லிக் கொண்டே தனது உள் சட்டைப் பைக்குள் இருந்த மணிபர்சை எடுத்து அதற்குள் வைத்துக் கொண்டார். பிதுங்கிக் கொண்டிருந்த வெளிப் பையில் இருந்து ஒரு குட்டை நோட்டை எடுத்து மீனாட்சிசுந்தரம் என பெயர் எழுதி வரவு இருபத் தைந்து என குறித்துக் கொண்டாராம்.

சரி... சரி... கூட்டத்திற்கு நேரமாகி விட்டது என சொல்லிக்கொண்டே, சாப்பாடு ரொம்ப பிரமாதம் - ரொம்ப நன்றி... நன்றி... என்று மீனாட்சி சுந்தரம் கையை ஊன்று கோலாகப் பிடித்துக்கொண்டு பெரியார் இருக் கையை விட்டு எழுந்து நடக்கிறார். அப்பொழுது ஒரு நிழற்படம் எடுக்கப்பட்டது.

இருவருக்கும் பக்கத் தில் அய்யாவின் தனிச்செயலாளர் புலவர் கோ.இமயவரம்பன், ஆயக் காரன்புலம் சு.இராமையன் இருக் கிறார்கள்.
பொதுக்கூட்ட மேடைக்கு சென்ற உடனேயே பெரியார் பேச ஆரம் பித்துவிட்டார். திமுகவை வாங்கு... வாங்கு என்று வாங்கினார்! கடுமை யான தாக்கு!

ஏராளமான திமுக தோழர் களோடு மீனாட்சிசுந்தரம் மேடை அருகே உட்கார்ந்து கொண்டு அய்யா பேசுகிறார்! நம்மை அய்யா பேசாமல் யார் பேசுவது!! என்று சிரித்துக் கொண்டே அய்யாவின் பேச்சு முழு வதையும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

- கி.முருகையன் (மாவட்ட தி.க.தலைவர் ஆயக்காரன் புலம் 2 - வேதாரண்யம் வட்டம்)

Read more: http://viduthalai.in/page5/97399.html#ixzz3Thdndwl3

தமிழ் ஓவியா said...

குடிஅரசில் வந்த அறிவிப்பு
பகுத்தறிவுப் புலவர்கள் மாநாடு

7.10.1944 நாளிட்ட குடிஅரசு இதழில் வெளியிடப்பட்டிருந்த ஓர் அறிவிப்பு. இந்த அறிவிப்பு, அன் றையப் புலவர்கள் பகுத்தறிவாளர் களாக இருந்ததைக் காட்டுகிறதா? இன்றும் இதுபோன்ற மாநாடுகள் தேவை என்பதைக் காட்டுகிறதா? படித்துப் பாருங்கள்!

பகுத்தறிவுப் புலவர்கள் மாநாடு

தோழர்களே, மேற்படி மாநாடு ஒன்று விரைவில் கூட்டப் போவ தால், ஆங்காங்குள்ள புலவர்களும், புலவர் நண்பர்களும், பகுத்தறிவுக் கொள்கையை - கருத்தை வலி யுறுத்துக் கூடிய புலவர்கள் பெயரை அருள்கூர்ந்து தெரிவிக்க வேண்டு கிறோம்.

மகாநாட்டில் விவாதிக்கப்பட்ட ஒரு நண்பரால் அனுப்பப்பட் டிருக்கும் விஷயங்கள்:

1. மற்ற எந்தக் கிருமியையும்விட சங்கீதம் அதிக நோயைக் கொடுக் கிறது.

2. எந்தக் கிருமியையும்விட சோதிடம் அதிக நோயைத் தருகிறது.

3. இந்தியாவில் சங்கீதமும் சோதி டமும் சேர்ந்து செய்யும் தீங்கைவிட கொடுக்கும் தொல்லையைவிட தத்துவ ஞானமும் கடவுளும் அதிகத் தொல்லையைக் கொடுக்கின்றன.

4. நாட்டிலே உள்ள வேறுவித பைத்தியக்காரர்களைவிட, பயங்கரப் பையத்திக்காரர்களையும், அதிகமான பைத்தியக்காரர்களையும் ஆத்மீகவாதம் (Spritualism) உண்டு பண்ணுகிறது.

5. தமிழ் வருந்தத்தக்க லோபி களையும் அரைப் பைத்தியங்களை யும் (அரைக் கிராக்குகளை) உண்டு பண்ணுகிறது.

6. இன்னும் 25 வருடங்களுக்கு இந்தியாவில் பிலிம்கள் ஏன் (படங்கள்) கூடாது?

7. இப்பொழுதுள்ள கல்வி ஸ்தாபனங்களும், பல்கலைக் கழகங் களும், கோயில்களும் இடிக்கப்பட வேண்டும் அல்லது எரிக்கப்பட வேண்டும்.

8. இளைஞர்கள் மூளைக்குக் கரையான்களும், இந்தியாவின் சுமையும்.

9. பிராமணர்களுக்கு ஒரே வார்த்தை.

10. இந்தியாவுக்குத் தேவை என்ன?

மேலே கண்ட இவ்விஷயங் களைக் குறித்தும் மற்றும் பல புதிய விஷயங்களைக் குறித்தும் மேற்படி மாநாட்டில் விவாதம் நடக்கும். இதில் கலந்து கொள்ள விரும்பும் பகுத்தறிவுப் புலவர்கள் தங்கள் விருப்பத்தையும் எங்களுக்கு உடனே தெரிவிக்கவும்.

- பகுத்தறிவுப் புலவர்கள் மாநாட்டார், ஈரோடு

Read more: http://viduthalai.in/page5/97399.html#ixzz3ThdwRfvm

தமிழ் ஓவியா said...

வரவு எட்டணா - செலவு பத்தணா தேர்தலில் அதிகம் செலவழித்த பாஜக

2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் கட்சி சமாஜ்வாடி கட்சி களை விட பாஜக அதிகமாக செலவழித் துள்ளது. தேர்தலின் போது பெற்ற நிதியை விட தேர்தல் செலவுகள் அதிக மாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் வரவுசெலவு கணக்குகளை அனைத்துக் கட்சிகளும் சமர்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணை யத்தின் இந்த உத்தரவிற்கு பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்டுகள் தவிரவேறு எந்த கட்சிகளும் குறிப்பிட்ட நேரத்தில் தரமால் மிகவும் தாமதமாக சமர்ப்பித் திருந்தது.

அனைத்துக் கட்சிகள் சமர்ப் பித்த விவரங்களை வைத்து 2 தொண்டு நிறுவனங்கள் ஆய்வு நடத்தி உள்ளன. இந்த ஆய்வில் ஆளும் கட்சியான பாஜக தேர்தல் நிதி மற்றும் செலவில் முதலிடம் உள்ளது. அறிவிப்பிற்கு பின்பு 75 நாள் தேர்தல் பிரச்சார காலத்தில் நாடு முழுவது தேர்தல் நிதியாக ரூ558 கோடி பாஜகவிற்கு கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் தேர்தல் காலத்தில் பாஜகவின் செலவாக ரூ712 கோடி கணக் கில் காட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.350 கோடியே 39 லட்சம் வசூ லித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.486 கோடி செல வாகியுள்ளதாக கணக்கு காட்டியுள்ளது.

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, பெரியகட்சிகள் பெற்ற மொத்த நிதி ரூ.223 கோடியே 80 லட்சம் ஆகும். 2009 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகை ரூ.854 கோடியே 89 லட்சமாக உயர்ந்தது.

இதுவே கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரூ.1,158 கோடியே 59 லட்சமாக உயர்ந்தது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளின் தேர்தல் நிதி வசூல், 4 மடங்கு அதிகரித்து இருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page6/97401.html#ixzz3TheSCTqj

தமிழ் ஓவியா said...

தாலி குறித்து விவாதம் நடத்தவே கூடாதா?


இந்து மத வெறி கும்பலுக்கு மாதர் சங்கம் கண்டனம்

சென்னை, மார்ச் 9_ தாலி குறித்து விவாதம் நடத்தக்கூடாது என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது இந்து மதவெறிகும்பல் தாக்குதல் தொடுத்துள்ளதை அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின்மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிப்பரப் பப்பட விருந்த தாலி குறித்த விவாதநிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் சில மதவெறி சக்திகள் தடுத்து நிறுத்தி உள்ளன. அந்த நிகழ்ச்சிஒளிபரப்பப்படாது என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் அந்த சமூக விரோதிகள் புதிய தலை முறை தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்பு கூடி அங்கிருந்த ஒளிப்பதிவா ளர் ஒருவரை தாக்கி விலை உயர்ந்த கேம ராவை உடைத்துள்ளனர். அத்துடன் பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு பெண் பத்திரிகையாள ரையும் தாக்கியுள்ளது அதிர்ச்சியை தருகின்றது.

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மதவெறி சக்தி களின் தாக்குதலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.தாலி என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷய மல்ல. சங்ககால இலக்கி யங்கள் முதல் இன்று வரை தாலி குறித்த பல்வேறு கருத்துக்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. தமிழகத் தில் ம.பொ.சி,பெரியார் போன்ற தலைவர்கள் தாலி குறித்த பல்வேறு விவாதங்களை நடத்தி கட்டுரைகளும் வெளி யிட்டு உள்ளனர். பெரியார் பெண்ணே உன்னை அடிமைப்படுத்தும் இந்தக் கயிறை அறுத்தெறி என்று பெண்ணடிமைத் தனத்தை சாடியுள்ளார்.

எனவே, தாலி குறித்து பேசவே கூடாது என்ற இந்த கலாச்சார காவலர் களின் கருத்து சுதந்திர பறிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் இந்த தாக் குதல் நடைபெறும் போது காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததும் கண்டிக்கத்தக்கது. தமிழ கத்தில் ஜாதிய ஆதிக்க செயல்களை தமிழக காவல்துறை எப்படி கை கட்டி வேடிக்கை பார்க் கின்றதோ அப்படியே மதவெறி சக்திகளின் சமூக விரோத செயல்களையும் கை கட்டி வேடிக்கை பார்த்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அந்த விவா தத்தினை ஒளிபரப்புவதற் கான ஏற்பாட்டினையும் செய்யவும் தமிழக அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத் துகின்றது.

Read more: http://viduthalai.in/e-paper/97530.html#ixzz3TuM2so9g

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


உயிர்கள்தானே
சாப்பாட்டு விஷயத் தில்கூட காய்கறியில் புட லங்காய்தான் பிடிக்கும். உருளைக்கிழங்குதான் பிடிக்கும் என்று சொல் கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண்டைக்குள் செல்லும் வரைக்கும்தான்; அப்புறம் எந்த உணவாக இருந்தா லும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவதுபோல, உயிர்கள் பிறவி எடுத் திருப்பதே கடவுளை அறிவதற்குத்தான் என்று ஓர் ஆன்மிக மலர் கதை அளக்கிறது.

இதன்படி எந்த உயிர் கடவுளை அறிந்ததாம்? கண்டவர் விண்டிலர், விண்டலர் கண்டிலர் என்று தானே சொல்லப் பட்டுள்ளது? உயிர் என் றால் மனித உயிர் மட்டும் தானா! விலங்குகளும், பறவைகளும்கூட உயிர் தானே அவை சாப்பிடு வதும் கடவுளை அறிவ தற்காகத்தானா? காய் கறிகள்கூட சுவாசிக்கின் றனவே, அவைகளும் உயிர்கள்தானே! அப்படி என்றால் அவற்றிற்கு எரு போடுவது, தண்ணீர் ஊற்றுவது (அவையும் அவைகளுக்கு உணவு தானே) எல்லாம் கட வுளை அறிவதற்குத்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/97529.html#ixzz3TuMOlE2M

தமிழ் ஓவியா said...

பழனி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கார் மோதி சாவு


சத்திரப்பட்டி, மார்ச்.9 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்யா நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது23). அங்குள்ள காய்கறி சந்தையில் வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி மலர்விழி (19). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு குழந்தை இல்லை. வீரமணி சில நாள்களுக்கு முன் புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கினார். அதில் அவர் நேற்று மனைவியுடன் பழனிக்கு சாமி கும்பிட சென்றார்.

சாமி தரிசனம் செய்த பின்னர் இரு சக்கர வாக னத்தில் வீடு திரும்பினர். விருபாச்சி மேட்டுப்பகுதி யில் வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் இரு சக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் வீரமணி சம்பவ இடத் திலேயே உடல்நசுங்கி பலியானார். படுகாயம டைந்த மலர்விழியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவரும் இறந்தார்.
இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/97537.html#ixzz3TuMYiR7i

தமிழ் ஓவியா said...

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அவசியமே!


மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க சட்டம் செய்யப்பட்டது.

இப்பொழுது அம்மாநிலத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி. சிவசேனைக் கூட்டாட்சி முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டைக் காலாவதி ஆகச் செய்துவிட்டது.
சிறுபான்மை மக்கள் என்றாலே பி.ஜே.பி. சிவசேனா, சங்பரிவார்க் கும்பலுக்குக் கடுமையான வெறுப்பும், வன்மமும் தான் மேலோங்கி நிற்கின்றன.

சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் குடியுரிமையின்றியும் வாழ முன் வர வேண்டும் என்று எழுதி வைத்தவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தங்களின் குருநாதர் என்று போற்றித் துதிக்கும் எம்.எஸ். கோல்வால்கர்.

அப்படிப்பட்ட கொள்கையைக் கொண்டவர்கள் ஆளும் ஒரு மாநிலத்தில் இத்தகு நடவடிக்கைகள் என்பவை ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால்கூட மேற்கு வங்கத்தில் 10 சதவீதம், கேரளாவில் 12 சதவீதம். கருநாடகத்தில் 4 சதவீதம், தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் முஸ்லிம் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையிலும்கூட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என்றே கூறப்பட்டு விட்ட நிலையில் மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய அரசின் முடிவை ரத்து செய்கிறது என்றால் இதன் பொருளென்ன?

உலகில் அதிக முஸ்லிம்கள் வாழக் கூடிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அத்தகைய ஒரு நாட்டில் அவர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவது சரியானதுதானா?
நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா குழு தனது பரிந்துரை யில் கல்வி, வேலை வாய்ப்பில் முசுலிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதே!
வேலை வாய்ப்பில் 5 சதவீதம் அளவுக்குத்தான் முசுலிம்கள் இடம் பெற்றுள்ளனர் என்று விசாரணை அறிக்கைகளே கூறுகின்றன. இந்த நிலையில் அவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வளர்ச்சி அடைய சட்டரீதியாக இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்!

16ஆவது மக்களவையில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில், முசுலிம்கள் வெறும் 24 பேர் மட் டுமே! இது 4.4 சதவீதமேயாகும். அவர்களின் மக்கள் தொகையோ 14 சதவீதமாற்றே.
பிஜேபி சார்பில் ஒரே ஒரு முசுலிம் கூட வெற்றி பெற முடியவில்லையே! 9 மாநிலங்களில் பிஜேபி ஆட்சி இருக்கிறது. அவற்றில் 155 அமைச்சர்கள் இருக் கிறார்கள் என்றால் அதில் இடம் பெற்றுள்ள முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? ஒன்றே ஒன்றுதான்.
சிறுபான்மை மக்களுக்கு இந்தியாவில் உரிய பாதுகாப்பு இல்லை; உரிய உரிமைகள் இல்லை என்பது அப்பட்டமான உண்மையாகும்.

இது ஏதோ முஸ்லிம் மக்களைச் சார்ந்த பிரச்சினையாகக் கருதி விடக் கூடாது - முடியாது. ஒட்டு மொத்தமான சமுதாயப் பிரச்சினையாகும். நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிற சக மனிதனின் நல வாழ்வும், உரிமை வாழ்வும் கிடைக்க வழி செய்யா விட்டால் ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற வினாவை எழுப்பாதா?

பொதுவாகவே மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இடஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லாத ஆட்சி என்பதைவிட அது கூடவே கூடாது என்று கருதுகிற கோட்பாட்டைக் கொண்டதாகும்.

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பில் வழங்கினார் என்ப தற்காக சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் தானே பிஜேபியினர் என்பதை மறந்து விடக் கூடாது. இதனை எல்.கே. அத்வானி அவர்கள் தமது சுயசரிதை நூலில் தெளிவாகவே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே.

சிறுபான்மையினருக்கு ஏதோ ஒரு மாநிலத்தில் நடந்தது தானே என்று மற்றவர்கள் பாராமுகமாக இருக்கக் கூடாது.

சமூக நீதியில் அக்கறை உள்ளவர் அத்தனைப் பேரும் ஒன்று சேர்ந்து அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் வீதிக்கு வந்து போராட வும் தயங்கக் கூடாது. சமூக நீதி என்பது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று; யாரோ கருணையின் அடிப்படையில் கொடுக்கிற பிச்சையல்ல.

Read more: http://viduthalai.in/page-2/97543.html#ixzz3TuMwikeY

தமிழ் ஓவியா said...

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அவசியமே!


மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க சட்டம் செய்யப்பட்டது.

இப்பொழுது அம்மாநிலத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி. சிவசேனைக் கூட்டாட்சி முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டைக் காலாவதி ஆகச் செய்துவிட்டது.
சிறுபான்மை மக்கள் என்றாலே பி.ஜே.பி. சிவசேனா, சங்பரிவார்க் கும்பலுக்குக் கடுமையான வெறுப்பும், வன்மமும் தான் மேலோங்கி நிற்கின்றன.

சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் குடியுரிமையின்றியும் வாழ முன் வர வேண்டும் என்று எழுதி வைத்தவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தங்களின் குருநாதர் என்று போற்றித் துதிக்கும் எம்.எஸ். கோல்வால்கர்.

அப்படிப்பட்ட கொள்கையைக் கொண்டவர்கள் ஆளும் ஒரு மாநிலத்தில் இத்தகு நடவடிக்கைகள் என்பவை ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால்கூட மேற்கு வங்கத்தில் 10 சதவீதம், கேரளாவில் 12 சதவீதம். கருநாடகத்தில் 4 சதவீதம், தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் முஸ்லிம் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையிலும்கூட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என்றே கூறப்பட்டு விட்ட நிலையில் மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய அரசின் முடிவை ரத்து செய்கிறது என்றால் இதன் பொருளென்ன?

உலகில் அதிக முஸ்லிம்கள் வாழக் கூடிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அத்தகைய ஒரு நாட்டில் அவர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவது சரியானதுதானா?
நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா குழு தனது பரிந்துரை யில் கல்வி, வேலை வாய்ப்பில் முசுலிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதே!
வேலை வாய்ப்பில் 5 சதவீதம் அளவுக்குத்தான் முசுலிம்கள் இடம் பெற்றுள்ளனர் என்று விசாரணை அறிக்கைகளே கூறுகின்றன. இந்த நிலையில் அவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வளர்ச்சி அடைய சட்டரீதியாக இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்!

16ஆவது மக்களவையில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில், முசுலிம்கள் வெறும் 24 பேர் மட் டுமே! இது 4.4 சதவீதமேயாகும். அவர்களின் மக்கள் தொகையோ 14 சதவீதமாற்றே.
பிஜேபி சார்பில் ஒரே ஒரு முசுலிம் கூட வெற்றி பெற முடியவில்லையே! 9 மாநிலங்களில் பிஜேபி ஆட்சி இருக்கிறது. அவற்றில் 155 அமைச்சர்கள் இருக் கிறார்கள் என்றால் அதில் இடம் பெற்றுள்ள முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? ஒன்றே ஒன்றுதான்.
சிறுபான்மை மக்களுக்கு இந்தியாவில் உரிய பாதுகாப்பு இல்லை; உரிய உரிமைகள் இல்லை என்பது அப்பட்டமான உண்மையாகும்.

இது ஏதோ முஸ்லிம் மக்களைச் சார்ந்த பிரச்சினையாகக் கருதி விடக் கூடாது - முடியாது. ஒட்டு மொத்தமான சமுதாயப் பிரச்சினையாகும். நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிற சக மனிதனின் நல வாழ்வும், உரிமை வாழ்வும் கிடைக்க வழி செய்யா விட்டால் ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற வினாவை எழுப்பாதா?

பொதுவாகவே மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இடஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லாத ஆட்சி என்பதைவிட அது கூடவே கூடாது என்று கருதுகிற கோட்பாட்டைக் கொண்டதாகும்.

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பில் வழங்கினார் என்ப தற்காக சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் தானே பிஜேபியினர் என்பதை மறந்து விடக் கூடாது. இதனை எல்.கே. அத்வானி அவர்கள் தமது சுயசரிதை நூலில் தெளிவாகவே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே.

சிறுபான்மையினருக்கு ஏதோ ஒரு மாநிலத்தில் நடந்தது தானே என்று மற்றவர்கள் பாராமுகமாக இருக்கக் கூடாது.

சமூக நீதியில் அக்கறை உள்ளவர் அத்தனைப் பேரும் ஒன்று சேர்ந்து அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் வீதிக்கு வந்து போராட வும் தயங்கக் கூடாது. சமூக நீதி என்பது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று; யாரோ கருணையின் அடிப்படையில் கொடுக்கிற பிச்சையல்ல.

Read more: http://viduthalai.in/page-2/97543.html#ixzz3TuMwikeY

தமிழ் ஓவியா said...

நோய் எதிர்ப்பாற்றல் தரும் பேரிச்சை

உடலுக்கு தேவையான சத்துகளை பெற இயற்கை பல பொருட்களை நமக்கு கொடையாக தந்துள்ளது. அதில் பேரிச்சை மிகவும் அற்புதமான ஒன்று. வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சத்துகள் நிறைந்தது. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் அவசியம் பேரிச்சை பழத்தை உண்ண வேண்டும்.

பேரிச்சையின் பலன்: பேரிச்சையில் உள்ள நார்ச் சத்துக்கள் எளிதாக செரிமானமாகும். உண்டதும் புத்துணர்ச் சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.

கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரிச்சைக்கு ஈடு இல்லை. டேனின்ஸ் எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பேரிச்சையில் உள்ளது.

இது நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் வெப்பமாதல் ஆகியவற்றுக்கு எதிரான செயல்படக்கூடியது. வைட்டமின் ஏ, பேரிச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.

சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியது.

பேரிச்சை இரும்புச் சத்தை ஏராளமான அள்ளி வழங்கும். 100 கிராம் பேரிச்சையில் 0.90 மி.கி இரும்புச் சத்து உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தத்தில் ஆக்சிஜனை சுமந்து செல்லும் ப்ளேட்ளெட்ஸ் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. இது இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. இதனால் ஏற்படும் பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.

இதில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித்துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது

Read more: http://viduthalai.in/page-5/97580.html#ixzz3TuNt7Gep

தமிழ் ஓவியா said...

தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி

ஜில்லென்ற தர்பூசணியின் சுவையில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. கொளுத்தும் வெயிலில் சுவைக்கும்போது, தாகம் தணியும். உடலும், உள்ளமும் குளிரும். தர்பூசணியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளன என்பது பலர் அறியாத விஷயம். தர்பூசணியில் பசலைக்கீரைக்குச் சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, ஏ, பி 6, பி1 உள்ளன.

பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரி, கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின் அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்கு விக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றம் சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். கண்களைப் பராமரிக்க வைட்டமின் ஏ, மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சியையும் கொண்டு செயல்படுகிறது. தமனி, ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது.

உடலிற்கு தேவையான இன்சுலினையும் மேம்படுத்தும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். சதையுடன் விதையும் பலன் தரக்கூடியது. விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது. தர்பூசணியை சாப்பிட மட்டுமல்லாமல், தற்போது பதார்த்தங்கள் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். தர்பூசணி தென் ஆப்ரிக்காவைத் தாயகமாகக் கொண்டது.

முதலில் எகிப்தில் அதிகளவில் பயிரிடப்பட்டது. 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலும், 10ஆம் நூற்றாண்டில் சீனாவிலும் தர்பூசணி அறிமுகமாகியுள்ளது. உலகில் தர்பூசணியை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்குவது குறிப்பிடத்தக்கது. தர்பூசணியில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்தப் பழம் ஒரு இயற்கை வயாக்ரா என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளது. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் சத்துகள் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத் திருக்கின்றன.

இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் சத்துப்பொருள், வயாக்ராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

Read more: http://viduthalai.in/page-5/97580.html#ixzz3TuO1biFN

தமிழ் ஓவியா said...

ஆரோக்கியம் காக்க...

* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.

* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.

* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.

* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

* பப்பாளி நம் வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.

* பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

* பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page-5/97581.html#ixzz3TuO9QvRp

தமிழ் ஓவியா said...

கொழுப்பை கரைக்கும் உணவுகள்

* கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

* இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும். * வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

* லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

* சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.

* நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.

* கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

Read more: http://viduthalai.in/page-5/97581.html#ixzz3TuOHPyWq

தமிழ் ஓவியா said...

இலங்கைப் பிரதமருக்கு தமிழக மீனவர் அமைப்பு கண்டனம்

ராமேசுவரம், மார்ச் 8_ இலங்கை கடல் எல் லைக்குள் அத்து மீறி நுழையும் தமிழக மீனவர் களை சுடுவதில் தவ றில்லை என்று அந்நாட் டுப் பிரதமர் ரணில் விக் ரமசிங்கே கூறியிருப்பதற்கு தமிழக மீனவர்கள் கண் டனம் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன் றுக்கு ரணில் விக்ரம சிங்கே அளித்துள்ள பேட் டியில் கூறியிருப்பதாவது: இந்திய மீனவர்கள் கோரு வது போல், இலங்கையின் பாரம்பரிய மீன்பிடி பகுதி யில் மீன்பிடிக்க அனுமதி அளிக்க முடியாது.

இந்திய மீனவர்கள் 600_-க்கும் மேற்பட் டோரை இலங்கைக் கடற் படையினர் சுட்டு வீழ்த் தியதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 2011_-க்கு முன்னர் விடுதலைப் புலி களுக்கு இந்திய மீனவர் கள் சிலர் ஆயுதங்களை வழங்கி வந்தனர். அவ் வாறு ஆயுதங்கள் வழங்க இலங்கை கடல் எல்லைக் குள் அத்துமீறும் மீனவர் களே சுடப்பட்டுள்ளனர். 2011-_க்குப் பிறகு எவ்வித துப்பாக்கிச் சூடும் நடை பெறவில்லை.

இலங்கை கடல் எல் லைக்குள் அத்து மீறி நுழை யாமல் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடந் திருக்காது. இந்திய கடல் எல்லைக்குள்ளேயே அவர்கள் இருந் திருந்தால் எவ்வித துப்பாக்கிச் சூடும் நடந்திருக்காது. எங்கள் எல்லைக்குள் நடக்கும் துப்பாக்கிச் சூடு தவ றில்லை எனக் கூறியிருந் தார். அவரது கருத்து தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இதுகுறித்து ராமேசு வரம் மீனவர் நேசக்கரங் கள் அமைப்பின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர் னாண்டோ கூறியதாவது:
இலங்கை மீனவர்கள், இந்திய கடல் பகுதியில் வந்து மீன் பிடிப்பதும், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதும் பல நூற்றாண்டுகளாக நடை பெற்று வரக்கூடியது.

குறிப்பாக இந்தியா வின் ஆழ்கடல் பகுதியான வெட்ஜ் பாங்க் பகுதியில் உலக அளவில் அதிக வருவாய் தரக்கூடிய சூரை மீன்களை சிங்கள மீன வர்கள் அள்ளிச் செல் கிறார்கள். இவ்வாறு எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்களுக்கு சிறுகா யத்தை கூட இந்திய கடற் படையினர் ஏற்படுத் தியதாக வரலாறு கிடை யாது.

2011--க்கு பிறகு தமிழக மீனவர்கள் மீது எந்த துப்பாக்கிச்சூடும் நடை பெறவில்லை என ரணில் கூறியுள்ளார். ஆனால், 2.4.2011 அன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா விடம் இலங்கை தோற் றது. இதனால் ஆத்திர மடைந்த இலங்கைக் கடற்படையினர், அன் றிரவு நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேரை கொன்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/97475.html#ixzz3TuXs1pyn

தமிழ் ஓவியா said...

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் 35 ஆம் ஆண்டு பவள விழா

வெளிநாட்டிலுள்ள ‘Statue of Liberty’-யைப்போல உலகமே வியக்கும் வகையில் ‘Statue of Self-Respect’-அய் உருவாக்குகிறார் கி.வீரமணி

பேராசிரியர் அனந்தராமன் அவர்கள் கல்லூரி தலைவருக்குப் பாராட்டு

வல்லம், மார்ச் 8_ தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் 35 ஆம் ஆண்டு பவள விழா நேற்று (7.03.2015) இப் பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தலைமையேற்று உரையாற்றிய பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள்,

மாணவ, மாணவிகள் அனை வரும் தைரியமாகவும் எதையும் செய்து முடிக் கும் ஆற்றல் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என்று கூறிய அவர், நமது நோயைப் போக்கிக் கொள்ள மருந்து சாப்பிடுவதுபோல் அறியாமையையும், மூட நம்பிக்கையையும் போக்கிக்கொள்ள நாம், அறிவைத் தரும் கல்வியைக் கற்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

முன்னாள் மாணவ, மாணவிகள் தைரியமாகவும், தன்னம்பிக்கைமிக்கவர்களாகவும் விளங்குகிறார்கள் என்றும், இப்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர் நவீன தொழில்நுட்பத்திலும். ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ஆராய்ச்சி மனப்பான் மையையும்,

புதுமையான எண்ணங்களையும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய இக்கல்லூரி நிறு வனத் தலைவரின் ஆசிரியரும், சென்னை அய்.அய். டி.யின் முன்னாள் பேராசிரியரும், இவ்விழாவின் சிறப்பு விருந்தினருமாகிய டாக்டர் வி.அனந்தராமன் தமது சிறப்புரையில்,

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவிகளும், பயிலும் இந்நாள் மாணவிகளும் மிகவும் தைரியசாலிகளாக விளங்குகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், மகளிர் மேம்பாட்டையும், மறு மலர்ச்சியையும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

மாணவர்கள் அனைவரும் ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறிய அவர், டிப்ளமோ பயின்ற மாணவர்கள் அனைவரும் உயர் கல்வியைப் பயின்று வாழ்க்கையில் உயரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களுடைய கல்விப் பணியையும், இயக்கப் பணியையும் பாராட்டியதோடு, வெளிநாட்டில் உள்ள Statue of Liberty -யை உலகமே வியந்து பாராட்டுவதைப்போல, Statue of Self-Respect என்று கூறக்கூடிய வகையில், தந்தை பெரியாருடைய பிரம்மாண்ட சிலையை அமைக்க தமிழர் தலைவர் பாடுபட்டு வருவதை வெகு வாகப் பாராட்டி வரவேற்றார்.

பெரியார் உலகம் சிறப்பாக அமைவதற்கு தமது பாராட்டுதல்களைத் தெரிவித்தார். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா ஆண்டறிக்கை வாசித்தளித்தார். இப்பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் தனி அலுவலர் சுலோச்சனா வேதமூர்த்தி, முன்னாள் மாணவி டி. சாந்தி,

அமெரிக்காவில் மருத்து வராகப் பணியாற்றும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், முன்னதாக இக்கல்லூரியின் துணை முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

மாணவர்களின் தொழில்நுட்பக் கண்காட்சி விருந்தினர்களின் கண்ணையும், கருத்தை யும் கவர்வதாக இருந்தது. விழாவில் 35 ஆம் ஆண்டு பவள விழா ஆண்டு மலரை சிறப்பு விருந்தினர் டாக்டர் வி. அனந்தராமன் வெளியிட கல்லூரி நிறுவனத் தலைவர் பெற்றுக் கொண்டார்.

முன்னாள் மாணவர்களின் விவரப் புத் தகத்தை முன்னாள் தனி அலுவலர் சுலோச்சனா வேதமூர்த்தி வெளியிட, முன்னாள் மாணவி டி.சாந்தி பெற்றுக்கொண்டார், மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து உருவாக்கிய பாலிடெக்னிக் கல்லூரியின் பெயர்ப்பலகையை கல்லூரி நிறுவனத் தலைவர் திறந்து வைத்தார்.

சமுதாயக் கல்லூரியில் முதலாண்டு படிப்பை முடித்த மாணவர்களுக்கு முதலாண்டு நிறைவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இருபத்து அய்ந்து ஆண்டு பணியை நிறைவு செய்த முதலா மாண்டு துறைத் தலைவர் க. சாந்தி மற்றும் நூலகர் க. சிவகாமி ஆகியோருக்கு ரூ 10,000 பணப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த முன்னாள் மாணவர் விருது கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் துறைத்தலைவராக பணியாற்றும் டி.சாந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் இக்கல்லூரியின் முதன்மையர் டாக்டர் அ. ஹேமலதா நன்றியுரையாற்ற விழா நிறைவுற்றது.

Read more: http://viduthalai.in/page1/97495.html#ixzz3TuYmxSAW

தமிழ் ஓவியா said...

பூஜை, ஹோமத்துடன் அரசியலா?
முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு

பெங்களூரு, மார்ச் 11- உச்சநீதிமன்ற உத் தரவுப்படி, பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்த ம.ஜ.த., அலுவலகம் காலி செய்யப்பட்டு, காங்கிரஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஏராளமான எலுமிச்சை பழங்களும், மந்திரிக்கப்பட்ட பொருள் களும் இருந்ததாக, காங்கிரஸ் தொண்டர்கள் கூறினர்.

இதுகுறித்து சித்தராமையா கூறியதாவது:

இதற்காக, காங்கிரஸ் அலுவலகத்தில் பூஜை, ஹோமம் நடத்த வேண்டும் என, மாநிலத் தலைவர் பரமேஸ்வர் உள்பட, பல மூத்த காங் கிரஸ் தலைவர்கள் ஏற்பாடு செய்திருப்பதாக அறிகிறேன். இது மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தலாம். பல ஆண்டுகளாக, கேரளாவில் உள்ள கோவிலுக்குச் சென்று, தேவகவுடா பூஜை செய்வது வழக்கம். அவரது மகன் ரேவண்ணா, கையில் எலுமிச்சை பழம் இல்லாமல், சட்டசபைக்குள் வரமாட்டார்.

நான், ஜனதா தளத்தில் இருந்தபோதே, இவைகளை எதிர்த்ததுண்டு. பரமேஸ்வர் பூஜை, ஹோமம் நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், அவரது செய்கையைத் தடுக்கமாட்டேன். புதிய அலுவலகத்தில் நடக்கும் பூஜைகளில் பங்கேற்க மாட்டேன். - இவ்வாறு அவர் கூறினார்

Read more: http://viduthalai.in/e-paper/97675.html#ixzz3U4sL0s5e

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்கு தீர்வு அளிக்க மறுக்கும் பாம்பே உயர்நீதிமன்றம்


மும்பை, மார்ச் 11_ 9.3.2015 அன்று பாம்பே உயர்நீதிமன்றத்தில் மும்பை புறநகர் மாட் டிறைச்சி விற்பனையாளர் கள் நலச்சங்கத்தின் சார் பில் மாட்டிறைச்சித் தடை யால் பாதிப்புக்குள்ளாகும் வணிகர்கள் நலனைக் கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள் ளனர். ஆனால், பாம்பே உயர்நீதிமனறம் மாட்டி றைச்சி விவகாரம் மத ரீதியிலான அல்லது கவு ரவ ரீதியிலான பிரச்சி னையாக உள்ளதாகக் கருதவேண்டாம் என்று நீதிமன்றம் கூறி வணிகர் கள் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி வி.எம்.கானடே கூறும்போது, மாட்டிறைச்சிக்குத் தடைச் சட்டம் நடை முறைக்குக் கொண்டுவரப் பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் கடமையாற்றும் நிலையில் உள்ளனர். ஆகவே, இப்பிரச்சி னையை மத ரீதியாகவோ, கவுரவப் பிரச்சினையா கவோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார்.

அரசிதழில் வெளி யிடாமல், மகாராட்டிர விலங்குகள் காப்பு (திருத்த) புதிய சட்டத் தின்படி மாடுகளைக் கொல்வதற்கு தடை விதிக்க முடியாது என்று மும்பை புறநகர் மாட் டிறைச்சி விற்பனையாளர் கள் நலச்சங்கத்தின் சார் பில் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நீதிமன்ற அறிவிக்கையின்மூலமாக ஏற்கெனவே அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது என்று கூறிய அரசு வழக் குரைஞர் அரசிதழின் நகலையும் உயர்நீதிமன் றத்தில் ஒப்படைத்தார். அதன்பிறகு, பாம்பே உயர்நீதிமன்றம் அவ் விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டதோடு, புதிய சட்டத்தை நடை முறைப்படுத்த அதிகாரி கள் கடமைப்பட்டுள்ளனர் என்றும் கூறிவிட்டது.

பாரதீய கவ்வான்ஷ் ரக்ஷன் சன்வர்த்தன் பரிஷத் என்கிற அமைப் பின் சார்பில் புதிய சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோரி அளிக்கப் பட்ட மனுவில் தலையிட வேண்டுமாய் மாட்டி றைச்சி வணிகர்கள் கோரி யிருந்தனர்.

மகாராட்டிர மாநிலம் முழுமையாக இறைச்சி வெட்டுமிடங்களில் மாட் டிறைச்சிக்குத் தடைவிதிக் கும் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த உத் தரவிடக் கோரி பாம்பே உயர்நீதிமன்றத்தில் பார தீய கவ்வான்ஷ் ரக்ஷன் சன்வர்த்தன் பரிஷத் என்கிற அமைப்பின் சார் பில் மனு அளிக்கப்பட் டிருந்தது.

இதுதொடர்பான விசாரணையின்போது, பாம்பே உயர்நீதிமன்றம் மும்பை காவல் ஆணை யர் மற்றும் மும்பை மாநகர ஆணையர் ஆகி யோருக்கு பாம்பே உயர் நீதிமன்றத்தின் சார்பில் அளிக்கப்பட்ட உத்தரவில் எருதுகள், வண்டி மாடு கள் ஆகியவைகளைக் கொல்வதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று புதிய சட்டத்தை நடை முறைப்படுத்த வலியுறுத் தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாட்டிறைச்சி வணிகர் கள் கோரிக்கையான மாட் டிறைச்சித் தடைச்சட்டத் தில் தலையிடக்கோரிய மனுவின்மீது பாம்பே உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/97676.html#ixzz3U4shzhzy

தமிழ் ஓவியா said...

உயிர் ஒன்று - உடல் மூன்றுஆட்சி, பிரபுத்துவம், ஜாதி உயர்வு இவை மூன்றும், உயிர் ஒன்றும், உடல் மூன்றுமாயிருக்கின்றன.
_ (குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...

அய்ந்து பெண் அமைச்சர்கள் போர்க்கொடி!


மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை எதிர்த்து மத்திய பெண் அமைச்சர்கள் அய்வர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அருண்ஜெட்லிமீது பிரதமர் நரேந்திர மோடியிடம் இதுகுறித்துப் புகாரும் கூறியுள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ருதிராணி இதுபற்றிக் கூறியதாவது:

பள்ளிக் கல்விக்கு கேட்கப்பட்ட நிதியோ 12 ஆயிரத்து 896 கோடி ரூபாய்; நிதியமைச்சரோ கேட்கப்பட்ட தொகை யிலிருந்து ஓராயிரம் கோடி ரூபாயை வெட்டியுள்ளார் என்று கூறியுள்ளார்.

மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளதாவது:

பிரதமரின் கனவுத் திட்டமான பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு வெறும் 97 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, ஒருங் கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குக் கேட்கப்பட்டுள்ள தொகையைவிட 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் மட்டுமே ரூபாய் 11 கோடி நிதி வெட்டப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குமுறியுள்ளார்.

நீர்வளத் துறையில் 9 ஆயிரத்து 64 கோடியை நிதியமைச்சர் வெட்டித் தள்ளியுள்ளார் என்று மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.

சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா இந்தத் துறைக்கான தொகை நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, உணவுப் பதப்படுத்துதல் துறையிலும் நிதி வெட்டப்பட்டுள்ளதாக வேதயைத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர்.

இந்த அய்ந்து பெண் அமைச்சர்களும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் புகார் செய்துள்ள நிலையில், பிரதமர் தெரிவித்த கருத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

என்னிடம் சொல்வதைவிட, நிதியமைச்சரிடமே உங்கள் குறைபாடுகளைச் சொல்லி நிவாரணம் தேடுங்கள் என்று கூறி, தம் பொறுப்பைத் தட்டிக் கழித்து வழக்கம்போல, தமது வெளிநாட்டுப் பயணத்தில் கவனம் செலுத்தினார்.

பரிதாபத்திற்குரிய இந்த அய்ந்து பெண் அமைச்சர் களும் உள்ளுக்குள் குமுறுவதைத் தவிர வேறு மார்க்கம் அறியாதவர்களாகத் திகைத்து நிற்கின்றனர்.

இதில் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன? பாதிப்புக்கு ஆளானவர்கள் அய்வரும் பெண்கள். பாரதீய ஜனதாவில் பெண்களுக்குரிய இடம் இதுதான்; இந்துத்துவா கொள்கைப்படி பெண்கள் உயிருள்ள ஒரு ஜீவனே கிடையாதே! எந்த வயதிலும் ஆணுக்குக் கட்டுப்பட்டு அடங்கிக் கிடக்கவேண்டியவர்கள் பெண்கள் என்பதுதானே மனுதர்மம்.

பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லுவது தானே பகவத் கீதை. அந்தப் பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போகிறோம் என்று சொல்லுகிற ஆட்சிதானே மத்தியில் இருக்கிறது!

கல்வியிலும், குழந்தைகள் நலத்துறையிலும் கைவைக் கிறார்கள் என்றால், இந்த ஆட்சியைப்பற்றி எடை போட்டுப் பார்க்கவேண்டும். அதேநேரத்தில், சமஸ்கிரு தத்தைப் பரப்புவதிலும், கங்கை நீரைச் சுத்தப்படுத்துவதிலும் காட்டும் ஆர்வத்தை, அவற்றைவிட அதிமுக்கியமான துறைகளின்மீது காட்ட மறுப்பது ஏன்? அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள இந்துத்துவா எண்ணம்தான் இப்படிச் செயல்பட வைக்கிறது.

மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கிறது என்றால், பல்லாயிரம் கோடி ரூபாயை அந்நியச் செலாவணியாக ஈட்டித் தருகிற மாட்டிறைச்சியை முடக்கும் வேலையில் ஈடுபடுவார்களா?

பசு மாட்டையும், காளை மாட்டையும் உணவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்கிற அவர்களின் இந்துத்துவா உணர்வுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களே தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தோ, பசுவதைத் தடை சட்டத்தால் பாதிக்கப்படுகிற மக்களைப்பற்றியோ, கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை பறி கொடுப் பவர்களைப்பற்றியோ கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை.

இந்துத்துவாவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கும் இந்தப் பெண் அமைச்சர்கள் இந்த சந்தர்ப்பத்திலாவது அவர்கள் தங்களைப் பிணைத்துக் கொண்டிருக்கும் கட்சியின் இந்துத்துவா கொள்கை பெண்களுக்கும், நாட்டு மக்கள் வளர்ச்சிக்கும் எந்தளவு முட்டுக்கட்டையானது என்பதை உணர முன்வர வேண்டும்; சிந்தித்தும் பார்க்கவேண்டும்.

தங்களுக்கு என்று வந்தால்தான் தலை வலியும், வயிற்று வலியும் என்று நினைக்கலாமா? அப்படி வந்த நேரத்திலாவது உண்மை நிலையை உணர்ந்து பார்க்கவேண்டாமா?

நிதியமைச்சரும் கைவிரித்துவிட்டார்; பிரதமரும் கைவிரித்துவிட்டார்! அடுத்து இந்த அய்ந்து பெண் அமைச்சர்களும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தைச் சந்திக்கவேண்டியதுதான் பாக்கி; அவர் எப்படிப்பட்டவர்?

கணவனைவிட அதிகம் படித்த பெண்கள், அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் கணவன்மார்கள் சொல்லுவதற்குக் கட்டுப்படுவதில்லை. அந்த நிலையில், கணவர்கள், மனைவிகளை விவாகரத்துச் செய்யவேண்டும் என்று சொன்னாரே - அவரிடம் நியாயம் எங்கிருந்து கிடைக்கப் போகிறது?

இந்திய நாட்டுப் பெண்களும் சிந்திக்கவேண்டிய தருணம் இது.

Read more: http://viduthalai.in/page-2/97683.html#ixzz3U4tB1JS1

தமிழ் ஓவியா said...

பன்றி இறைச்சியை முஸ்லிம்கள் வெறுத்தாலும்
இஸ்லாமிய நாடுகளில் பன்றி இறைச்சிக்குத் தடையில்லைஇது இந்தியா போன்ற ஜனநாயக நாடல்ல, மன் னராட்சி நடக்கும் நாடு.

இது இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடும் அல்ல. மதச்சார்புடைய நாடு. ஒரு இஸ்லாமிய நாடு.

இஸ்லாமியர்கள் பன்றிக் கறியை 'ஹராம்' என சொல்லி விலக்கி விடுவார்கள். பெரும்பா லும், பன்றிக் கறியைக் கண்ணால் பார்ப்பதைக் கூட தவிர்த்துவிடுவார்கள். ஆனால், அத்தகைய கட்டுப்பாடுகள் உடைய ஒரு இஸ்லாமிய நாடான UAE ல் பெரும்பாலான 'ஹைப்பர் மார்க்கெட் டுகளில்' பன்றி இறைச்சி தாராளமாக கிடைக்கும்.'For Non Muslims' என பெரிதாக அறிவிப்பு பலகை வைத்து விடுவார்கள்.

ஒரு மதச்சார்புள்ள நாட்டில் அவர்கள் மார்க் கத்திற்கு எதிரான ஒரு இறைச்சி விற்பனையா கிறது. பன்றி இறைச்சியை விருப்ப உணவாக சாப் பிடுபவர்களை இங்கு யாரும் தடுப்பது கிடை யாது. அடுத்தவன் தட்டில் என்ன இருக்க வேண்டும்? அவன் என்ன சாப்பிட வேண்டும்? என இங்கு யாரும் சட்டம் போட்டுத் தடுக்கவில்லை.

ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என சொல்லிக்

கொள்ளும் இந்தியாவில் ஒரு மாநிலத் தில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்து தங்கள் மதச் சார்பின்மையை(?!) உல கிற்கு பறைசாற்றுகின்றார்கள்.

அடுத்தவன் என்ன சாப்பிட வேண் டும் என சொல்வது அரசாங்கத்தின் வேலையா?

ஒரு உணவுப் பொருளை மக்களின் ஆரோக்கியம் கருதி அரசாங்கம் தடை செய்தால் அது வரவேற்கத்தக்கது. மற்றக் காரணங்களுக்காக தடை செய்வதாக இருந்தால் அது தனி மனித உரிமை மீறல்.

எனக்கு மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் இல்லை. அதனால் நான் நல்லவன் என்றும் மாட்டிறைச்சி சாப்பிடும் என் நண்பன் கெட்டவன் என்றும் அர்த்தம் இல்லை.

அவன் சாப்பிடும் உணவு அவன் விருப்பம் சார்ந்த விஷயம். அதில் யார் தலையிட முடியும்?

சாதி, மதம் இதை தூக்கி ஓரம் வைத்து விட்டு இதை படியுங்கள் புரியும். புரியாவிட்டால் மேலுள்ள படத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள்!

- நம்பிக்கை ராஜ் முகநூல் பக்கத்திலிருந்து

தகவல்: ந.விவேகானந்தன், செஞ்சி.

Read more: http://viduthalai.in/page1/97643.html#ixzz3U4uZbQdo

தமிழ் ஓவியா said...

ஆதரிப்பது...


எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

தமிழ் ஓவியா said...

தெருக்கள், பொதுஇடங்களுக்கு சூட்டப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கக்கோரி வழக்கு

மதுரை, மார்ச் 10_ தமிழகத்தில் தெருக்கள், பொது இடங்களுக்கு சூட் டப்பட்ட ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதி லளிக்க சென்னை உயர் நீதிமன்ற மது ரைக்கிளை திங்கள்கிழமை உத்தர விட்டது.

திருச்சியைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன் நிர்வாகி பொன்தம்மபாலா இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். மனு விவரம் _ தமிழகத்தில் சாலைகள், தெருக்கள், பொது இடங்களுக்கு சூட்டப்பட்ட ஜாதிப் பெயர்களை நீக்குவதற்கு உரிய தீர்மானங்களை நிறைவேற்றுமாறு உள்ளாட்சி மன்றங்களுக்கு 1978இல் அரசு உத்தரவிட்டது. இதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து அறிக்கை அளிக்குமாறு அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த உத்தரவை உள்ளாட்சி மன்றங்கள் நிறைவேற்றவில்லை. திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரிகளில் சாதிப்பெயர்கள் இடம் பெற்றிருந்ததை சுட்டிக்காட்டி, அவற்றை நீக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு 2014 செப்.15 இல் புகார் அனுப்பினேன். அந்தப் புகார் மனு, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட் டது. அதன்பிறகும் ஜாதிப் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தில் பொது இடங் கள், தெருக்களுக்கு சூட்டப்பட்ட ஜாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இம்மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வா ணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங் கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசா ரணைக்கு வந்தது. மனுவுக்கு தலை மைச் செயலர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச் சித் துறை செயலர்கள் பதிலளிக்க நீதி பதிகள் உத்தரவிட்டனர். விசாரணை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.

Read more: http://viduthalai.in/page1/97635.html#ixzz3U4vHAXF8

தமிழ் ஓவியா said...

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அவசியமே!


மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க சட்டம் செய்யப்பட்டது.

இப்பொழுது அம்மாநிலத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி. சிவசேனைக் கூட்டாட்சி முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டைக் காலாவதி ஆகச் செய்துவிட்டது.
சிறுபான்மை மக்கள் என்றாலே பி.ஜே.பி. சிவசேனா, சங்பரிவார்க் கும்பலுக்குக் கடுமையான வெறுப்பும், வன்மமும் தான் மேலோங்கி நிற்கின்றன.

சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் குடியுரிமையின்றியும் வாழ முன் வர வேண்டும் என்று எழுதி வைத்தவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தங்களின் குருநாதர் என்று போற்றித் துதிக்கும் எம்.எஸ். கோல்வால்கர்.

அப்படிப்பட்ட கொள்கையைக் கொண்டவர்கள் ஆளும் ஒரு மாநிலத்தில் இத்தகு நடவடிக்கைகள் என்பவை ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால்கூட மேற்கு வங்கத்தில் 10 சதவீதம், கேரளாவில் 12 சதவீதம். கருநாடகத்தில் 4 சதவீதம், தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் முஸ்லிம் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையிலும்கூட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என்றே கூறப்பட்டு விட்ட நிலையில் மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய அரசின் முடிவை ரத்து செய்கிறது என்றால் இதன் பொருளென்ன?

உலகில் அதிக முஸ்லிம்கள் வாழக் கூடிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அத்தகைய ஒரு நாட்டில் அவர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவது சரியானதுதானா?
நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா குழு தனது பரிந்துரை யில் கல்வி, வேலை வாய்ப்பில் முசுலிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதே!
வேலை வாய்ப்பில் 5 சதவீதம் அளவுக்குத்தான் முசுலிம்கள் இடம் பெற்றுள்ளனர் என்று விசாரணை அறிக்கைகளே கூறுகின்றன. இந்த நிலையில் அவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வளர்ச்சி அடைய சட்டரீதியாக இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்!

16ஆவது மக்களவையில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில், முசுலிம்கள் வெறும் 24 பேர் மட் டுமே! இது 4.4 சதவீதமேயாகும். அவர்களின் மக்கள் தொகையோ 14 சதவீதமாற்றே.
பிஜேபி சார்பில் ஒரே ஒரு முசுலிம் கூட வெற்றி பெற முடியவில்லையே! 9 மாநிலங்களில் பிஜேபி ஆட்சி இருக்கிறது. அவற்றில் 155 அமைச்சர்கள் இருக் கிறார்கள் என்றால் அதில் இடம் பெற்றுள்ள முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? ஒன்றே ஒன்றுதான்.
சிறுபான்மை மக்களுக்கு இந்தியாவில் உரிய பாதுகாப்பு இல்லை; உரிய உரிமைகள் இல்லை என்பது அப்பட்டமான உண்மையாகும்.

இது ஏதோ முஸ்லிம் மக்களைச் சார்ந்த பிரச்சினையாகக் கருதி விடக் கூடாது - முடியாது. ஒட்டு மொத்தமான சமுதாயப் பிரச்சினையாகும். நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிற சக மனிதனின் நல வாழ்வும், உரிமை வாழ்வும் கிடைக்க வழி செய்யா விட்டால் ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற வினாவை எழுப்பாதா?

பொதுவாகவே மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இடஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லாத ஆட்சி என்பதைவிட அது கூடவே கூடாது என்று கருதுகிற கோட்பாட்டைக் கொண்டதாகும்.

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பில் வழங்கினார் என்ப தற்காக சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் தானே பிஜேபியினர் என்பதை மறந்து விடக் கூடாது. இதனை எல்.கே. அத்வானி அவர்கள் தமது சுயசரிதை நூலில் தெளிவாகவே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே.

சிறுபான்மையினருக்கு ஏதோ ஒரு மாநிலத்தில் நடந்தது தானே என்று மற்றவர்கள் பாராமுகமாக இருக்கக் கூடாது.

சமூக நீதியில் அக்கறை உள்ளவர் அத்தனைப் பேரும் ஒன்று சேர்ந்து அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் வீதிக்கு வந்து போராட வும் தயங்கக் கூடாது. சமூக நீதி என்பது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று; யாரோ கருணையின் அடிப்படையில் கொடுக்கிற பிச்சையல்ல.

Read more: http://viduthalai.in/page1/97543.html#ixzz3U4xCuyp6

தமிழ் ஓவியா said...

மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page1/97541.html#ixzz3U4xLGvum