Search This Blog

18.3.15

வீரமணியின் தொண்டு சுயநலமில்லாதது--பெரியார்1973 டிசம்பர் 24 இல் அறிவுலக ஆசான் அய்யா மறைந்த அந்த நேரம் - உலகப் பந்தில் சூரியன் அஸ்தமித்து விட்டதோ என்கிற அளவுக்கு நாடே கதிகலங்கி நின்றது.


அய்யா விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டுத் தந்த பாதையில் அன்னை மணியம்மையார் தலைமையில் அணிவகுத்தோம்!


தந்தையைக் காப்பாற்றுவதிலேயே காலத்தையும், கருத்தையும் செலவழித்த அந்தத் தாய் தன் உடல்நலனைத் தொலைத்தார்கள்.


ஆனாலும், அவர்கள் தலைமை வகித்துத் தாய்ப் பறவையாகக் கழகத்திற்கும், கழகக் கொள்கைகள் வாயிலாக நாட்டு மக்களுக்கும் நற்றொண்டு ஆற்றினார்கள்.

ஓர் ஆண்டு அவசரக் காலத்தை ஊதித் தள்ளினார்கள். 1978 மார்ச் 16 ஆம் நாள் அந்தத் தாய்ப் பறவையும் தன் வாழ்வை முடித்துக்கொண்டது! 60 அய்த் தொடுமுன் சென்று வருகிறேன் என்று கூறி விடைபெற்றார்.


ஆனாலும், அவர்கள் உயிரோடு இருக்கும்போதே (25.12.1977) மத்திய திராவிடர் கழகக் கூட்டத்தைக் கூட்டி நிரந்தரப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என்பதை மிகச் சரியாகவே அறிவித்து, இயக்கத்திற்கு மிகப்பெரிய அரணை அமைத்துக் கொடுத்தார்கள்.


அம்மா மறைந்து அடக்கம் செய்யப்பட்ட அதே நாளில் (17.3.1978) கழகப் பொருளாளர் மானமிகு கா.மா.குப்புசாமி அவர்கள் தலைமையில், கழக நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கூடி, அன்று அன்னையார் கழகத் தோழர்களின் ஒத்த உணர்வோடு அறிவித்த (25.12.1977) அந்த அறிவிப்பினையே உறுதிப்படுத்தி, தீர்மானமாக்கி, இயக்கத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்று வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பணியாற்றுமாறு ஆசிரியர் அவர்களைக் கேட்டுக்கொண்டது.


37 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் தான் அடேயப்பா, எத்தனை எத்தனை நிகழ்வுகள் - எதிர்ப்புகள் - துரோகங்கள் - இவற்றின் மத்தியில் இமாலயச் சாதனைகள்!

திரும்பிப் பார்த்தால், திகைப்பாகத்தான் இருக்கிறது; எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால், ஏடுகள் தாங்காது.


புகழ்ச்சியல்ல - பொருள் பொதிந்த புரட்சிப் பயணம் அது!

ஆசிரியர் அவர்களின் அரும்பணி கண்டு ஆரியம் அலறியது. பழனியிலே பாடை கட்டிக் கூடத் தூக்கினார்கள் பார்ப்பனர்கள்- அதன்மூலம் அய்யா கிழித்த நேர் கோட்டில் அடிபிறழாது மானமிகு வீரமணி நடந்து செல்லு கிறார் என்கிற அங்கீகாரத்தை அறிவித்துவிட்டார்களே!


திராவிடர் இயக்க ஆட்சி என்று கூறிக்கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் பொருளா தார அளவுகோலைக் கொண்டு வந்தாரே மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.


அதை உடைத்துக் காட்டியதோடு 49 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டை, 69 சதவிகிதமாக உயரக் காரணமாக இருந்த கருஞ்சட்டை இயக்கத்தின் மாபெரும் தலைவர் நமது தலைவர்!


69 சதவிகிதத்திற்கு ஆபத்து வந்தபோது, அந்தச் சிக்கலிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மீட்க, தனக்கே உரித்தான சட்ட அறிவைப் பயன்படுத்தி, அதற்கான சட்டத்தையும் உருவாக்கி, எழுதிக் கொடுத்து, அன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை - முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களையும் பயன்படுத்தி, சட்டம் இயற்றச் செய்து, நாடாளுமன்றத்திலும் நிறைவேறச் செய்து, ஒன்பதாவது அட்டவணையிலும் இடம்பெறச் செய்து இந்தியாவி லேயே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு 69 சதவிகிதம் - சட்டப்படி பாதுகாக்கப்படும் நிலையை உறுதி செய்த அந்த ஒப்பற்ற சாதனையைக் காலம் என்றென்றைக்கும் மணி அடித்து ஒலித்துக்கொண்டே இருக்கும். (முதலமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் மூவரும் பார்ப்பனர்கள் என்பது கவனிக்கத்தக்கது).


மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அறவேயில்லாத நிலையில், மண்டல் குழுப் பரிந்துரை களை அமலாக்கம் செய்வதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி, இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டுக்குக் காரணமாக இருந்த மூலகர்த்தா நமது முத்தான தலைவர் அன்றோ!


பகுத்தறிவுப் பணியின் பாய்ச்சல் சாதாரணமானதா? இயக்க வெளியீடுகள் புது சகாப்தமாக - புதிய பொலிவில் பூத்துக் குலுங்குகின்றனவே! விடுதலை 8 பக்கங்களில், பல வண்ணங்களில் - இரு பதிப்பாக ஒளிர்கிறதே!


பெரியார் பன்னாட்டு மய்யம்மூலம் பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகம் முழுவதும் தொழச் செய்துவிட்டாரே!


கிராமப் பிரச்சாரத் திட்டம், வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க எத்தனை எத்தனைத் தொடர் பிரச்சாரங்கள் - ஜாதி ஒழிப்பு மாநாடுகள், மதவெறியை மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம் என்ற தலைப்பில் வட்டார மாநாடுகள், 2000 திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டுக்கு அழைப்பு கொடுத்து, அதன் வீச்சு தற்போது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தொளி வீசிக்கொண்டு இருக்கிறதே - இயக்க அமைப்பில் எத்தனையோ மாறுதல்கள் - அதன் விளைவு இளைஞர்களின் பாசறையாக அல்லவா கழகம் ஜொலிக் கிறது!


 

மகளிர் அணியின் பணிகள்தான் சாதாரணமானவையா?


உச்சக்கட்டமாக பெரியார் உலகம் 135 அடி உயரத்தில் பகுத்தறிவுப் பகலவன் ஒளிவீசப் போகிறார். அந்தச் சாதனை நமது தலைவரின் புகழ் மகுடத்தில் ஒளிரும் - மிளிரும் - சாதனை என்றால் வீரமணி என்றும் பறைசாற்றும்!


இந்தியத் தலைநகர் டில்லியிலேயே பெரியார் மய்யம் - எவரும் மூக்கின்மேல் விரலை வைக்கிறார்கள்!


அறக்கட்டளை பணிகளைச் சொல்லி மாளுமா? விரல் விட்டு எண்ணக்கூடிய பெரியார் கல்வி நிறுவனங்கள், நமது தலைவர் காலத்தில் பல்கலைக் கழகம்வரை பரிணாமம் பெற்றுள்ளதே!


உலக நாடுகளின் விருதுகள் நமது கல்வி நிறுவனங்களை நோக்கிப் பாய்ந்து வருகின்றன!


இந்தியத் துணைக் கண்டத்திலேயே மதவாதத்தை எதிர்த்து வீழ்த்தும் மிகப்பெரிய போர்க் களத்தில் இப் பொழுது இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் தலைவர் நமது ஆசிரியர் அல்லவா!


மதவாதப் பன்றிக் காய்ச்சலுக்கு, பெரு நோய்க்குத் தந்தை பெரியாரியல்தான் மாமருந்து என்பதை இந்தியாவே உணரும்படிச் செய்து வருகிறாரே!


சமூகப் புரட்சியாளர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை உலகம் அறிந்ததே - அந்த வகையில் நமது தலைவரின் உயிருக்கு நான்குமுறை குறி வைக்கப்பட்டதே! மூன்று முறை அவரின் இதயத்தில் மருத்துவர்கள் கை வைத்துவிட்டார்களே!

அடங்கிப் போய்விட்டாரா? முடங்கி விட்டாரா?


ஆயிரம் கால் அரிமாவாக அல்லவா ஆர்ப்பரித்துப் பாய்ந்து பகுத்தறிவு - இனமானம் - சமூகநீதிப் பணிகளை 24 மணிநேரம் போதவில்லையே என்ற ஆதங்கத்தோடு ஆற்றி வருகிறார்!


கடிகாரமும் ஓடத் தவறிடும் - அவர் கால்களோ என்றுமே ஓடிடும்!
பெரியாரை இழந்த மானுடம் பெரும் ஆறுதல் பெறுவது இவரிடம்!

வாழ்க தமிழர் தலைவர்!
வளர்க அவர்தம் ஆயுள்!

அன்னையாரைத் தொடர்ந்து ஆசிரியர் தலைமையில் தலைமேற்கொண்டு தந்தை பெரியார் பணி முடிப்போம்! பணி முடிப்போம்!!

வாழ்க பெரியார்!

குறிப்பு: கழகத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்று ஆசிரியர் வீரமணி அவர்கள் 38 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தொடக்க நாள் இந்நாள்...!

---------------------- கலி.பூங்குன்றன்  துணைத் தலைவர், திராவிடர் கழகம் -”விடுதலை” 18-03-2015

52 comments:

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. உறுப்பினர் சேர்க்கும் யோக்கியதை இதுதான்!

நமது கழகத் தோழர் திருவொற்றியூர் கணேசன் அவர்களுக்கு பி.ஜே.பி. குறுஞ்செய்தி ஒன்றை (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியுள்ளது; என்ன தெரியுமா?

From Dm Member Welcome to BJP your primary membership no is 1073426799 sms your Name, Address & Pin Code (If possible Email & Voter ID) to 09242492424 to complete the process என்பதுதான் அந்த குறுஞ்செய்தி.

திராவிடர் கழகத் தோழருக்கே குறுஞ்செய்தி அனுப்பி முதற்கட்ட உறுப்பினராக ஆகியுள்ளீர் கள். மேலும் உங்கள் முகவரி உள்ளிட்ட தகவல் களை அனுப்புங்கள் என்று தகவல் தெரிவிக் கின்றனர் என்றால், மற்றவர்களை உறுப்பினர் ஆக்குவதுபற்றிக் கேட்கவேண்டுமா?

கையில் கிடைத்த கைப்பேசி எண்களைக் கொண்டு இந்தக் கைங்கரியத்தை நடத்தி வருவது வெட்கக்கேடு அல்லவா!

பி.ஜே.பி உறுப்பினர் சேர்க்கும் யோக்கியதை இதுதான்!

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!

உஷார்! உஷார்!

இப்படி குறுஞ்செய்தி வந்தால், சம்பந்தப்பட்ட எண்ணுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கலாமே!

Read more: http://viduthalai.in/e-paper/98075.html#ixzz3UkGS75zp

தமிழ் ஓவியா said...

உ.பி.யில் கர்வாபசி கந்தல்

கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்ததால்

இசுலாம் மதத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டவர்கள்

மீரட், மார்ச் 18_ உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயி லில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்த வர்கள் இசுலாம் மதத்தைத் தழுவி உள்ளனர்.

மீரட் நகருக்கு அருகில் பாக்பட் பகுதியில் உள்ள மோகா கிராமத்தில் வால் மீகி கோயிலுக்குள் ஷியாம் சிங் என்பவர் குடும்பத்தின ருடன் பாரம்பரியமான பூஜை செய்வதற்காக கோயி லுக்குள் செல்ல முயன்ற போது, அர்ச்சகர் தாழ்த் தப்பட்ட வகுப்பினரான ஷியாம் சிங் குடும்பத்தின ருக்கு கோயிலில் பூஜை செய்வதற்கு அனுமதி கிடையாது என்று கூறி கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

கடந்த நவம்பரில் தொடங்கியுள்ள இந்த புகைச்சலுக்கு தீர்வை காண முடிவெடுத்துள்ளனர். அவமானமும், கொதிப்பும் அடைந்த ஷியாம்சிங் கடந்த ஒருமாதமாக அதற் குத் தீர்வுக்காக சிந்திக்கலா னார். விளைவு இந்து மதத் துக்கு முழுக்கு போடுவது என்று முடிவெடுத்துவிட் டார். அதன்படி, இரண்டு வாரங்களுக்கு முன்பாக இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு இசுலாம் மதத்தைத் தழுவியுள்ளார். ஷியாம் சிங் தற்போது மொகம்மத் அலி ஆகிவிட் டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போது விடுதலை (ஆசாத்) பெற்று விட்ட உணர்வுடன் உள் ளதாகக் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் புதிய அடையாளத்தைப் பெற் றுள்ளதாகத் தெரிவித்தார்.

கோயிலில் பூஜை செய் வதற்கான உரிமைகோரிய தால், உள்ளூர் சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் காவல்துறை அலுவலர் களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களை அடுத்தே ஷியாம்சிங் தன்னுடைய மத நம்பிக்கையையே மாற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தக் கோயில் அப்பகு தியில் யாதவ வகுப்பினர் களால் நிர்வாகம் செய்யப் பட்டுவருகிறது. வால்மீகி வகுப்பினர் பூஜை செய்யக் கூடாது என்று அர்ச்சகர் கள் பிரச்சினை செய்கி றார்கள்.
சம உரிமைக்காக எவ் வளவோ போராடியும், முடியாமல் போனதால், இசுலாம் மதத்துக்கு மாறி விட முடிவு செய்ததாக அறிவித்துள்ளனர்.

கோயிலில் பூஜை செய்ய உரிமை கோரி, அதன்பின் மதம் மாறுவதற்கான அறி விப்பை வெளியிட்டதன் வாயிலாக அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் இடையூறு விளைவிப்பதாக கடந்த வாரத்தில் மீரட்டில் அரசின்சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம் பரில் ஷியாம் மற்றும் அவர் வகுப்பைச் சார்ந்தவர்கள் பூஜை செய்ய சென்ற போதும், அர்ச்சகர் அவர் களுக்கு பூஜை செய்யும் உரிமை கிடையாது என்று மறுத்துவிட்டார்.

கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு விட்ட பிறகு, நான் இந்து வாக நீடித்து இருப்பதில் பொருளில்லை என்று ஷியாம்சிங் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரி லிருந்து, மீரட் மற்றும் பக்பாட் பகுதிக்கான மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ச்சியாக பூஜை செய்யும் உரிமைகோரி மனு கொடுத்துவந்துள்ளார். அதேபோலவே, தேசிய தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையத்துக்கும் மனு கொடுத்து வந்துள்ளார். மேலும், பிரதமர் அலுவல கத்துக்கும் மனுவை அளித்துள்ளார்.

ஷியாம்சிங் கூறும் போது, கோயிலுக்குள் ளேயே நுழைய முடிய வில்லை, பூஜையும் செய்ய முடியவில்லை. பூஜை செய்வதற்காக, என்னுடைய கையில் புனிதக் கயிறு கட்டிக்கொண்டு, நான் இந்துவாக நீடித்திருப்பதில் என்ன பொருள் உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள் ளார்.

நூற்றுக்கணக்கான வால்மீகி வகுப்பினருடன் சேர்ந்து இசுலாம் மதத் துக்கு மதம் மாறியுள்ள ஷியாம் சிங், தொடர்ச்சி யாக இந்தப் பிரச்சினையில் தொடர்பாக அரசுத்துறை யினரின் அச்சுறுத்தல் இருந்துவருகிறது என்ப தால், உத்தரப்பிரதேச மாநிலத்தைவிட்டே இடம் பெயர்ந்து வேறு மாநிலத் துக்கு செல்ல நேரிடுமோ என்று அச்சத்தை வெளி யிட்டுள்ளனர்.

ஷியாம்சிங் மட்டும் நேபாளத்துக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஷியாம் சிங் மற்றும் அவர் வகுப்பைச் சார்ந்த வர்களின் மத மாற்ற அறி விப்பு வலது சாரிகளாக உள்ள இந்துத்துவாவாதி களின் கவனத்தை ஈர்த்துள் ளது. உடனடியாக அவர் கள் மத மாறும் முடிவைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஷியாம் கூறுகையில், எங்களில் அனைவருமே இசுலாம் மதத்துக்கு மாறு வதற்கு விரும்பவில்லை. அதேநேரத்தில் எங்களுக்கு சம உரிமை வழங்க இந் துக்களில் எவருமே முன் வரவில்லை. வரலாற்று ரீதியாக, காலம்காலமாக எங்களை எப்படி ஏமாற்றி வந்துள்ளார்கள் என்பதை உணர்த்துகிறது என்றார்.

பக்பாட் பகுதியில் கோட்டாட்சியராக உள்ள ராஜேந்தர்சிங் கூறுகையில், இந்து மதத்தில் வால்மீகி வகுப்பினருக்கு விரிவான அளவில் பூஜை செய்வ தற்கு, புதிதாக கூறப்படு கின்ற மதப் பழக்கத்தின் பெயரால் அனுமதி மறுக் கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்துமதம் சுயமரி யாதைக்கு சவால்விடும் இதுபோன்ற நேரங்களில் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மதம் மாறும் முடிவு களை மேற்கொள்கின் றார்கள். ஆனால், இந்துத் துவாவாதிகள் மட்டுமன்றி அரசு மற்றும் காவல் துறையினரும் அச்சுறுத்த லாக உள்ளனர் என்பதால் அவர்களின் அடிப்படை வாழும் உரிமையே பறி போகின்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தாய்மதம் (கர்வாபசி) மாறுவதற்கு இந்துத்துவா சக்திகள் அதிகார பலம், பண பலத்தைப் பயன்படுத் தும் இந்தக் காலகட்டத் தில், உள்ளதும் போச்சு என்ற முறையில் இந்து மதத்திலிருந்து இஸ்லா மைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/98074.html#ixzz3UkGi8wpZ

தமிழ் ஓவியா said...

கடந்த நவம்பரில் தொடங்கியுள்ள இந்த புகைச்சலுக்கு தீர்வை காண முடிவெடுத்துள்ளனர். அவமானமும், கொதிப்பும் அடைந்த ஷியாம்சிங் கடந்த ஒருமாதமாக அதற் குத் தீர்வுக்காக சிந்திக்கலா னார். விளைவு இந்து மதத் துக்கு முழுக்கு போடுவது என்று முடிவெடுத்துவிட் டார். அதன்படி, இரண்டு வாரங்களுக்கு முன்பாக இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு இசுலாம் மதத்தைத் தழுவியுள்ளார். ஷியாம் சிங் தற்போது மொகம்மத் அலி ஆகிவிட் டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போது விடுதலை (ஆசாத்) பெற்று விட்ட உணர்வுடன் உள் ளதாகக் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் புதிய அடையாளத்தைப் பெற் றுள்ளதாகத் தெரிவித்தார்.

கோயிலில் பூஜை செய் வதற்கான உரிமைகோரிய தால், உள்ளூர் சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் காவல்துறை அலுவலர் களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களை அடுத்தே ஷியாம்சிங் தன்னுடைய மத நம்பிக்கையையே மாற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தக் கோயில் அப்பகு தியில் யாதவ வகுப்பினர் களால் நிர்வாகம் செய்யப் பட்டுவருகிறது. வால்மீகி வகுப்பினர் பூஜை செய்யக் கூடாது என்று அர்ச்சகர் கள் பிரச்சினை செய்கி றார்கள்.
சம உரிமைக்காக எவ் வளவோ போராடியும், முடியாமல் போனதால், இசுலாம் மதத்துக்கு மாறி விட முடிவு செய்ததாக அறிவித்துள்ளனர்.

கோயிலில் பூஜை செய்ய உரிமை கோரி, அதன்பின் மதம் மாறுவதற்கான அறி விப்பை வெளியிட்டதன் வாயிலாக அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் இடையூறு விளைவிப்பதாக கடந்த வாரத்தில் மீரட்டில் அரசின்சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம் பரில் ஷியாம் மற்றும் அவர் வகுப்பைச் சார்ந்தவர்கள் பூஜை செய்ய சென்ற போதும், அர்ச்சகர் அவர் களுக்கு பூஜை செய்யும் உரிமை கிடையாது என்று மறுத்துவிட்டார்.

கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு விட்ட பிறகு, நான் இந்து வாக நீடித்து இருப்பதில் பொருளில்லை என்று ஷியாம்சிங் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரி லிருந்து, மீரட் மற்றும் பக்பாட் பகுதிக்கான மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ச்சியாக பூஜை செய்யும் உரிமைகோரி மனு கொடுத்துவந்துள்ளார். அதேபோலவே, தேசிய தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையத்துக்கும் மனு கொடுத்து வந்துள்ளார். மேலும், பிரதமர் அலுவல கத்துக்கும் மனுவை அளித்துள்ளார்.

ஷியாம்சிங் கூறும் போது, கோயிலுக்குள் ளேயே நுழைய முடிய வில்லை, பூஜையும் செய்ய முடியவில்லை. பூஜை செய்வதற்காக, என்னுடைய கையில் புனிதக் கயிறு கட்டிக்கொண்டு, நான் இந்துவாக நீடித்திருப்பதில் என்ன பொருள் உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள் ளார்.

நூற்றுக்கணக்கான வால்மீகி வகுப்பினருடன் சேர்ந்து இசுலாம் மதத் துக்கு மதம் மாறியுள்ள ஷியாம் சிங், தொடர்ச்சி யாக இந்தப் பிரச்சினையில் தொடர்பாக அரசுத்துறை யினரின் அச்சுறுத்தல் இருந்துவருகிறது என்ப தால், உத்தரப்பிரதேச மாநிலத்தைவிட்டே இடம் பெயர்ந்து வேறு மாநிலத் துக்கு செல்ல நேரிடுமோ என்று அச்சத்தை வெளி யிட்டுள்ளனர்.

ஷியாம்சிங் மட்டும் நேபாளத்துக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஷியாம் சிங் மற்றும் அவர் வகுப்பைச் சார்ந்த வர்களின் மத மாற்ற அறி விப்பு வலது சாரிகளாக உள்ள இந்துத்துவாவாதி களின் கவனத்தை ஈர்த்துள் ளது. உடனடியாக அவர் கள் மத மாறும் முடிவைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஷியாம் கூறுகையில், எங்களில் அனைவருமே இசுலாம் மதத்துக்கு மாறு வதற்கு விரும்பவில்லை. அதேநேரத்தில் எங்களுக்கு சம உரிமை வழங்க இந் துக்களில் எவருமே முன் வரவில்லை. வரலாற்று ரீதியாக, காலம்காலமாக எங்களை எப்படி ஏமாற்றி வந்துள்ளார்கள் என்பதை உணர்த்துகிறது என்றார்.

பக்பாட் பகுதியில் கோட்டாட்சியராக உள்ள ராஜேந்தர்சிங் கூறுகையில், இந்து மதத்தில் வால்மீகி வகுப்பினருக்கு விரிவான அளவில் பூஜை செய்வ தற்கு, புதிதாக கூறப்படு கின்ற மதப் பழக்கத்தின் பெயரால் அனுமதி மறுக் கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்துமதம் சுயமரி யாதைக்கு சவால்விடும் இதுபோன்ற நேரங்களில் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மதம் மாறும் முடிவு களை மேற்கொள்கின் றார்கள். ஆனால், இந்துத் துவாவாதிகள் மட்டுமன்றி அரசு மற்றும் காவல் துறையினரும் அச்சுறுத்த லாக உள்ளனர் என்பதால் அவர்களின் அடிப்படை வாழும் உரிமையே பறி போகின்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தாய்மதம் (கர்வாபசி) மாறுவதற்கு இந்துத்துவா சக்திகள் அதிகார பலம், பண பலத்தைப் பயன்படுத் தும் இந்தக் காலகட்டத் தில், உள்ளதும் போச்சு என்ற முறையில் இந்து மதத்திலிருந்து இஸ்லா மைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/98074.html#ixzz3UkGi8wpZ

தமிழ் ஓவியா said...

பத்தினி - பதிவிரதை

பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ்ச் சொற்களுமல்ல. - (விடுதலை, 4.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/98061.html#ixzz3UkH51Slc

தமிழ் ஓவியா said...

சமயச் சார்பற்ற மொழியும்- புனிதமான மொழியும்!

- மறைமலை இலக்குவனார்

புராணங்களின் அடிப்படையை மட் டுமே கொண்டு சமற்கிருதத்தை மொழி களுள் தலைமைவாய்ந்த மொழியாகக் கூறப்படுவதும் இந்தியப் பண்பாட்டில் ஆரியப்பண்பாடே தலைமைச்சிறப்புடைய தாகப் பேசப்படுவதும், சமயச்சார்பற்ற ஆய்வாளர்களாலும், அறிஞர்களாலும் மறுத்துரைக்கப்படுவதில்லை. மேலும் இத்தகைய கிளிப்பிள்ளை வாதங்கள் முற்போக்குப் பார்வையுடைய அறிஞர்கள் உள்ளத்திலும் செல்வாக்குப் பெற்றுவிட் டதோ என்னும் அய்யம் ஏற்படுகிறது. திராவிட மொழிகளின் தொன்மையை ஏற்றுக்கொள்வதில் முற்போக்கு அறிஞர்கள் காட்டும் தயக்கமும் சமற்கிருதத்துக்குக் கற்பித்துக் கூறப்படும் தொன்மையை மறுத்துரைக்கும் ஆய்வுகளை முன்மொழி யாத அமைதியும் வருந்தத்தக்கன. இதன்விளைவாக வரலாற்றைப் புரிந்து கொள்ளுதற்குரிய முறையான மாற்று அணுகுமுறையை அடைவது கடினமாகி விட்டது என்னும் கருத்தினைக் காணுங் கால் இதனை யார் உரைத்திருப்பர் என்னும் அய்யம் எழலாம்.

ஒப்பியன் மொழி நூல் வகுத்த தேவ நேயப் பாவாணரோ தொல் காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தமிழின் தொன்மையை உலகுக்கு உரைத்த இலக் குவனாரோ திராவிட இனத்தின் தனிச் சிறப்பை ஆய்ந்து அறிவித்த கா.அப்பா துரையோ என நீங்கள் அய்யுறலாம். அவர்கள் தமது ஆய்வுகளால் திராவிட மொழிகளின் தனித் தன்மையையும் தொன்மையையும் நன்கு விளக்கியுள்ளனர்.

முதன்முதலாகப் பா.ச.க. நடுவண் ஆட்சிப் பொறுப்பேற்ற போது இந்துத்வக் குழுவினர் சமற்கிருத ஆண்டு கொண் டாடியும் பள்ளிகளில் சமற்கிருதப் படிப் பைக் கட்டாயமாகப் புகுத்தியும் மகிழ்வுற்ற சூழலில் கெயில் ஆம்வெத் என்னும் மேலை நாட்டார்தான் இக் கருத்தைத் தம் மனக்குறையாகவே குமுறலுடன் கட்டு ரையாகத் தீட்டியுள்ளார். மொழி-புனித மானதும் சமயச்சார்பற்றதும் என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை இந்துஆங்கில நாளேடு 19.9.1999 ஆம் நாளிட்ட இதழில் வெளியிட்டுள்ளது. இன்றைய சூழலில் இக் கட்டுரை இன்னும் பொருள் பொதிந்ததாகவும் முற்போக்கு அறிஞர்களுக்கு அவர்கள் கடமையை உணர்த்துவதாகவும் திகழ்கிறதல்லவா?

தமிழ் ஓவியா said...


கெயில் ஆம்வெத் அம்மையார் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம். அமெரிக்கா வில் மின்னாபொலிசு நகரில் பிறந்து (1941) கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் முனைவர் பட்டம் (1973) பெற்றவர். குடியிருப்பாதிக்கச் சமு தாயத்தில் பண்பாட்டுப் புரட்சி; மேற்கிந்தி யாவில் பிராமணரல்லாதார் இயக்கம் (Cultural Revolt in a Colonial Society: The NonBrahman Movement in Western India, 1873-1930.) என்னும் தலைப்பில் சோதிராவ் பூலேயின் இயக்கம் பற்றியதே இந்த ஆய்வேடு.

அமெரிக்காவின் இனவாதக் கோட் பாட்டை வெறுத்து இந்தியாவுக்கு வந்து இந்தியக் குடியுரிமை பெற்றுப் பெண் ணியம்,ஒடுக்கப்பட்டோரியல் என்னும் துறைகளில் பல ஆய்வுநூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள் ளார். 1979 இல் சிறையை உடைத்தெறி வோம்; போராட்டக் களத்தில் இந்திய மகளிர் என்னும் நூல் தொடங்கி 2010-இல் சாதியைப் பற்றிய புரிந்துணர்வு: புத்தரி லிருந்து அம்பேத்கர் வரையும் அதற்குப் பின்னரும் என்னும் நூல் வரை பன் னிரண்டு நூல்கள் இயற்றியுள்ளார். சாதிய அணுகுமுறையை இனவெறிக்கு இணை யான கொடுமையாகக் கருதும் இந்தச் சமூக ஆர்வலர் பெண்ணிய, தலித்தியப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்ட போராளி எனலாம்.சிம்லாவில் இயங்கி வரும் இந்திய உயராய்வு மய்யத்தில் ஆய்வாளராக விளங்கும் இந்த அறிஞர் கருத்தரங்குகள்,விவாதமேடைகளில் மராட்டிய மாநிலத்திலும் டில்லி நகரத்திலும் கலந்துகொண்டும் ஆய்வுநூல்கள் வழங்கி யும் தொண்டாற்றி வருகிறார்.

தமிழ் ஓவியா said...


மொழி மனிதன் தன்னை அடை யாளப்படுத்திக் கொள்ள உதவும் வாழ் வியற் கூறு; உணர்வு, பூசல், எதிர்பார்ப்பு ஆகியவற்றின் முதன்மை ஊற்று எனக் கூறும் கெயில் இந்தியா, பன்னூற்றுக்கணக் கான மொழிகள் புழங்கும் ஒரு பன்முகப் பண்பாட்டுக் களம்.இஃது ஒரு வரமா சாபமா எனத் தெரியவில்லை என்கிறார். இந்தப் பன்னூற்றுக்கணக்கான மொழி களுள் சமற்கிருதம் தன்னைத் தேவ மொழியாக, புனித மொழியாக அடை யாளப்படுத்தியுள்ளது. இதற்கு மாறாகத் தமிழ்மொழி சமயச்சார்பற்ற, தொன்மை வாய்ந்த இலக்கியம் உடைய மொழியாக விளங்குகிறது என்கிறார் கெயில்.

தமிழ் ஓவியா said...

புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அறிஞர் சார்சு கார்ட்டு கூறுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக அமைந்துள்ள புற நானூறு தமிழின் தொன்மை வாய்ந்த இலக்கியங்களுள் ஒன்று. ஆரியச்செல் வாக்கு தென்னகத்தில் ஊடுருவுவதற்கு முன்னரேயே படைக்கப்பட்ட சிறப்பை யுடையது. ஆரியவருகைக்கு முந்தைய தென்னிந்தியாவையும் பெரும்பான்மை யும் ஆரிய வருகைக்கு முற்பட்ட இந்தியாவையும் அறிந்துகொள்ள உதவும் சான்றாவணம் புறநானூறு எனலாம். தெற்கு ஆசியாவின் வரலாறு, பண்பாடு, சமயம், மொழியியல் ஆகியவற்றை அறியப் பயன்படும் இன்றியமையா நூல் புற நானூறு. எனத் தமது ஆங்கில மொழி பெயர்ப்பின் முன்னுரையில் சார்சு கார்ட்டு தெரிவிக்கிறார்.இந் நூலும் கொலம்பியா பல்கலைக்கழக வெளியீடாக 1999-ஆம் ஆண்டு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. (பின்னர் 2002-ஆம் ஆண்டில் பெங்குவின் வெளியீடாக வந்தது.)

தமிழ் ஓவியா said...

செவ்வியற்கால இந்தியாவின் நூல்களுள் புறநானூறு போன்ற அரிதான சில நூல்களே வாழ்க்கையைத் தத்துவமுற் சாய்வு கொண்டு நோக்காத சிறப்பையு டையன எனலாம். வாழ்க்கையை எதிர் கொள்ளும்போது தத்துவக் கேடயத்தை ஏந்திக் கொள்ளாமல் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பாங்கு புறநானூற்றுக்கே உரிய ஒன்று. கர்மா கோட்பாட்டை முன் மொழியும் எத்தகைய குறிப்பையும் புற நானூற்றில் காண இயலாது. இன்னொரு உலகத்தைப் பற்றிய சிந்தனையும் அந் நூலில் எங்கும் முன்மொழியப்படவில்லை என சார்சு குறிப்பிடுவது நாம் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

புறநானூறு ஆங்கில மொழியாக்கப் பணி நிறைவுற்றவுடன் (இந்நூல் வெளி வருதற்கு முன்னரே) அறிஞர் சார்சு அவர்களுக்குப் பாராட்டு விழாவை வளைகுடாத் தமிழ்ச்சங்கம் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பாப்லோ நகரில் நடத் தியது. பொறியாளர்கள் குமார் குமரப்பன், மணி மணிவண்ணன் ஆகியோர் முன் னிருந்து நடத்திய விழாவில் சிறப்புரை யாற்றும் பணி எனக்கு அளிக்கப்பட்டது. பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்கிய சார்சு கார்ட்டு புறநானூற்றில் தம்மைப் பெரிதும் கவர்ந்த பண்பு அதன் சமயச்சார்பின்மையே என்றார்.

தமிழ் ஓவியா said...

உலகத்தில் இத்துணைத் தொன்மை வாய்ந்த சமயச்சார்பற்ற நூல் வேறெம் மொழியிலும் இல்லை எனக் கூறிய சார்சு பதினெட்டு மொழிகளில் புலமைமிக்கவர் என்பதனை நோக்குகையில் அவர் கருத்தின் ஆழம் நமக்குத் தெரியவரும்.செவ்வியல் மொழி களாகிய சமற்கிருதம், சீனம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய நான்கினையும் புலமை நலம் தோயக் கற்றறிந்த சார்சு, செவ்வியல் இலக்கியங்களுள் வாழ்க்கைக்குக் கற்பனை மிக்க சமயநம்பிக்கைகளை அடிப்படை யாகக் கொள்ளாமல் நேரடியாக அதன் அறைகூவல்களை எதிர்கொள்ளும் மனப் போக்கு புறநானூற்றில் மட்டுமே காணப் படுகிறது எனக் கூறும்போது அந் நூலை மட்டுமின்றித் தமிழ்மொழியையும் சமயச்சார்பற்ற நோக்கின் வழிகாட்டியாகப் போற்றக் கடமைப்பட்டுள்ளோம்.

இராமாயணம், மகாபாரதம் ஆகிய வற்றின் பெருமையைப் போற்றுவதில் தயக்கம் காட்டாத முற்போக்கு அறி ஞர்கள் புறநானூற்றைப் புனைக்கதையாக ஒதுக்கித் தள்ளும் போக்கிலிருந்து மாறி னார்களா? அமெரிக்காவிலிருக்கும் சார்சு கார்ட்டுக்குத் தெரிவது இந்தியாவிலிருக்கும் ரொமிலா தாப்பருக்கு ஏன் தெரியவில்லை?

அதே 1999 ஆம் ஆண்டில் பெங்குவின் வெளியீடாகவந்த தமது இந்திய வரலாறு எனும் நூலில் ரொமிலா தாப்பர் சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பை எடுத்துரைக்காத போக்கினைக் கெயில் வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறார். சிந்துவெளி நாகரிகம் திராவிடநாகரிகம் என அவர் தெரிவிக் காதது பெருங்குறை என்கிறார் கெயில்.

தமிழ் ஓவியா said...

இந்திய வரலாற்றின் வரலாற்றுக்கு முந்தைய முன்னோர்களின் நாகரிகமாகச் சிந்துவெளி நாகரிகத்தைக் குறிப்பிடும் தாப்பர் அதன் திராவிடச் சார்பையோ அல்லது ஆரியமல்லாக் கூறுகளையோ சற்றேனும் கூறவில்லை. இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துவிசையாகத் திகழ்ந்தது ஆரியரின் வருகையும் அவர்கள் கொணர்ந்த பண்பாடுமேஅதனிலிருந்து பிரிந்து பலதிசைகளில் சென்ற பல இயக்கங்களும் இந்திய வரலாற்றில் தாக்கம் செலுத்தின என்கிறார் தாப்பர்.

தாப்பர் போன்ற அறிஞர்களின் இத் தகைய போக்கு மாறவேண்டும் என்பதே கெயில் வலியுறுத்த விரும்பும் கருத்து.1999 ஆம் ஆண்டில் இக்கட்டுரை வெளி வந்த பின்னர் பதினாறாண்டுகள் கழிந்துவிட்டன. பல்வேறு கருத்துப் பூசல்களிலும் வாக்கு வாதங்களிலும் தாப்பர் பல்முனைத் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ள சூழலில் கெயில் 1999 இல் கூறியுள்ள கருத்து பொருந்துமா என்னும் அய்யம் எழலாம். இந்தியாவில் வைதிக, அவைதிகக் கோட் பாடுகள் மலர்ச்சி பெற்ற சூழலையும் பன்முகப் பண்பாட்டுச் சூழலில் இந்தியப் பண்பாட்டுக்கு ஒற்றைத் தனிமுகம் காட்டுவது பொருந்தாது என்பதனையும் தாப்பர் பல நூல்களில் வலியுறுத்தியுள்ளார். எனினும் ஆரிய/திராவிட எதிர்நிலைகளை ஆரியத்திற்கு முந்தைய திராவிடத்தின் தனிச்சிறப்பை அவர் எங்கேயாயினும் எடுத்துரைத்துள்ளாரா?

தமிழ் ஓவியா said...


இன்று இந்தியாவெங்கும் கல்வி பயிலும் மாணவர்கள் இந்தியப் பண்பாட்டுக்குச் சமற்கிருதம் மூல ஊற்றாகவும் ஆரியர் களையே நமது முன்னோர்களாகவும் பாடநூல்களில் படிப்பதும் கருதுவதும் தமக்கு எத்தகைய வியப்பையும் அளிக்க வில்லை எனக் கூறும் கெயில் திராவிட மொழிகளின் தொன்மையையும் முதன் மையையும் ஏற்றுக்கொள்வதில் அறிஞர்கள் காட்டும் தயக்கமே இதற்குக் காரணம் என்கிறார்.

தொடக்கத்தில் அய்ரோப்பியர்களை மிலேச்சர்கள் என ஒதுக்கித் தள்ளிய திலகர் உள்ளிட்ட வைதிகச் சார்பினர் ஆரியர் களின் முதன்மையை வலியுறுத்தியதுடன் வெள்ளை நிற அய்ரோப்பியர்களுடன் ஆரியர்களையும் இணைத்துக் கொண்ட னர். கறுப்பு நிறச் சூத்திரர்கள் இழித் தொதுக்கப்பட்டனர்.

சமற்கிருதம் இந்தோ-அய்ரோப்பிய மொழிகளின் தலைமைப் பீடத்தில் அமர்த்தப்பட்டது. திராவிட மொழிக் கூறுகளே சமற்கிருதத் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்கிய தனை அறிந்துகொள்ளப் பெரிய மொழி யறிவு எதுவும் தேவையில்லை என்கிறார் கெயில். நாவளை ஒலிகளை அடிப்படை யாகக் கொண்டு நோக்கினாலே திராவிட மொழிகள் இந்திய மொழிகளில் பெற்றுள்ள பெரும்பங்கு புலப்படும் என்கிறார்.அவர் கூறும் ஓர் எடுத்துக்காட்டை இங்குக் காண்போம். ண, ந என்னும் வேறுபட்ட ஒலிகளைத் தம்மைப் போன்ற அமெரிக் கராலோ அல்லது வேறு அய்ரோப்பிய ராலோ எளிதில் ஒலிக்க இயலாது என்கிறார். அவர் கூறும் எடுத்துக்காட்டுகள் ராமா யணா, பாநி என்னும் இரு சொற்களில் இடம்பெற்றுள்ள இருவேறு ஒலிகள் (ண, ந) ஆகும்.இத்தகைய மரபுகள் திராவிட மொழிகளின் தனித்தன்மைக்கு எடுத்துக் காட்டு என்கிறார்.

ஒரு வாக்கியத்தின் இறுதியில் வினைச் சொல் வருவது இந்தியமொழிகளின் பொதுத்தன்மையாகும்.

நான் பள்ளிக்குச் செல்கிறேன் என்பதனை நான் செல்கிறேன் பள்ளிக்கு என யாரும் கூறுவதில்லை. இது தென் னிந்திய மொழிகளுக்கு மட்டுமல்ல பல வட இந்தியமொழிகளுக்கும் பொருந்தும் எனவும் திராவிட மொழிகள் என்பதால் தென்னிந்திய மொழிகள் எனக் கருதிவிட முடியாது எனவும் அவர் கூறுவது கால்டுவெல் ஏற்கெனவே கூறிய கருத்தே. (பிராகுயி, குமர்பாக் பஹாரியா, குறுக்ஸ், நேபாளி குறுக்ஸ், சௌரியா பஹாரியா மொழி ஆகியன வட திராவிட மொழிகள் ஆகும்.) எனினும் கால்டுவெல்லுக்கு ஒருபடி மேலே சென்று கெயில் கேட்கும் வினா நம் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. சொற்றொடர் அமைப்பிலும் இலக்கண அமைப்பைக் கொண்டு நோக்கினாலும் திராவிடமொழி களைப் போன்றே விளங்கும் இந்தியையும் மராத்தியையும் ஏன் இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தில் சேர்க்கவேண்டும் என்பதே கெயில் கேட்கும் வினா.

மெசபொட்டோமிய மக்கள் சிந்து வெளி நாகரிகத்தைக் குறிக்க மெலூகா என்னும் சொல்லைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கும் கெயில் இச் சொல்லே பின்னர் மிலேச்சர்என்னும் சொல் உருவாக அடிப்படையாக விளங்கியிருக்கவேண்டும் என்கிறார். ஆரியர்கள், சிந்துவெளிவாழ் மக்களைக் குறிக்கப் பயன்படுத்திய இந்தச் சொல், பின்னர், தூய்மை குறைந்தோரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படலாயிற்று. மெசபட்டோமியரின் இச் சொல்லாட்சி யைச் சிந்துவெளி நாகரிகம் திராவிடர்க் குரியது என்பதனை வலியுறுத்தும் சான்றுகளுள் ஒன்றாகக் கொள்ளலாம்.

இவ்வாறு பல சிந்தனைகளைத் தூண் டும் கருத்துகளைத் தமது கட்டுரையில் வழங்கிய கெயில், நடுநிலையுணர்வும் முற்போக்குப் பார்வையும் கொண்ட அறிஞர்கள், திராவிடமொழிகளின் சிறப் பையும் ஆரியம் திராவிட மொழிகளுக்குக் கடன்பட்டிருப்பதையும் விளக்கும் பல ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறார்.

பொய்யுடை ஒருவன் சொல்வன்மையால் மெய்போலும்மே

மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் பொய் போலும்மே.

Read more: http://viduthalai.in/page-2/98063.html#ixzz3UkHFNxqB

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறியுடன் - கீரைத் தண்டுகள் மோத வேண்டாம்!

பசு மாட்டிறைச்சிக்குத் தடை என்பது மேம்போக்கில் சாதாரணமாக சிலருக்குத் தோன்றலாம்; ஆனால் இந்துத்துவாவாதிகளின் கைகளில் கிடைத்த அரசியல் ஆயுதம் இது. இந்து - முஸ்லீம் - கிறித்தவர் என்று பேதம் பிரித்து, அதில் குளிர் காய நினைக்கும் சூட்சமும் இதற்குள் சுருண்டு கிடக்கிறது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை சமுதாய மக்கள் வீதிக்கு வந்தால், பசுவைப் புனிதம் என்று கூறி இந்துக்களை எதிர் வரிசையில் நிறுத்தி, மோதவிடச் செய்து அதில் அரசியல் லாப ரத்தம் குடிக்கலாம் என்பது ஆர்.எஸ்.எஸின்கீழ் இயங்குகிற பிஜேபி அரசின் நுட்பமான அரசியல்.

1857இல் வெள்ளைக்காரர்களை எதிர்த்து நடத்தப்பட்ட கலவரத்திற்குச் சிப்பாய்க் கலகம் என்று பெயர் சூட்டி னார்கள், அதில் உள்ளது என்ன என்றால் பசுவின் கொழுப் பைத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களைப் பயன்படுத்தச் சொல்லுகிறார்கள் என்று இந்து ராணுவத்தினரிடமும், பன்றி கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களைக் கொடுத்துள்ளனர் என்று முசுலிம்களிடையே பரப்பி இந்திய சிப்பாய்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளப்பி விட்டனர்.

இது மதக் கலவரமே தவிர, சிப்பாய்க் கலகம் அல்ல என்று மக்கள் மத்தியில் போட்டு உடைத்துக் காட்டியவர் தந்தை பெரியாரே! அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

விக்டோரியா மகாராணி சாசனம் என்று கூறி இந்தியாவில் நிலவும் மதப் பிரச்சினைகளில் வெள்ளை அரசாங்கம் தலையிடாது என்று விக்டோரியா மகாராணி பிரகடனம் செய்ததை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இப்பொழுது அதே தந்திரத்தை வேறு வகையில் செய்கிறார்கள். இந்துக்களின் புனித தெய்வமான பசுவை வெட்டுவதா? என்று விதண்டாவாதம் செய்கிறார்கள்.

உணவுப் பழக்க வழக்கம் என்பது ஒருவனின் தனி மனித உரிமை எங்கள் வீட்டில் என்ன குழம்பு வைப்பது என்பதை இராம கோபாலன்களைக் கேட்டா முடிவு செய்ய முடியும்!

அப்படியே பார்க்கப் போனாலும் பார்ப்பனர்கள் ஒட்டு மொத்தமாக சைவப் பட்சிணிகளா? வங்காளத்துப் பார்ப் பனர்களுக்கு மீன் இல்லாமல் ஓருருண்டை சோறுகூட தொண்டைக்குள் போகாதே!

மீன் என்று சொல்லாமல் ஜல புஷ்பம் என்று சொல்லிக் கொள்வார்கள்.

தமிழ் ஓவியா said...


19 ஆண்டு காலமாக குடியரசு மாளிகையில் கிடப்பில் கிடந்த மகா ராட்டிர மாநில மசோதாவுக்கான ஒப்புதல் - இப்பொழுது பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக இருக்கும் பொழுது உயிர்ப் பெற்று எழுந்தது எப்படி? இதற்குள்ளிருக்கும் அரசியல் (இந்துத்துவா) என்ன என்ற கேள்வி எழத்தானே செய்யும்?

2012ஆம் ஆண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப் பட்ட மாட்டிறைச்சி 36.4 லட்சம் டன், அதில் உள்நாட்டில் உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டது. 19.6 லட்சம் டன், மீதி மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியாவின் கருவூலத்தில் அந்நியச் செலாவணியாக வந்து சேர்ந்தது - இவற்றை எல்லாம் இந்த அரசு நிராகரிக்கப் போகிறதா? மதச் சார்பற்ற அரசு என்றால் மதத்துக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்று தானே பொருள். அப்படி இருக்கும்போது ஒருவரின் உணவுப் பிரச்சினையில் மத மூக்கை நுழைப்பது அத்துமீறலும், அடாவடித்தனமும், சட்டமீறலும் ஆகாதா?

உலக நாடுகளை எடுத்துக் கொண்டாலும் வெகு மக்களால் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு மாட்டுக் கறி தானே - மறுக்க முடியுமா?

ஏன் இந்தியாவை எடுத்துக் கொண்டாலும் வெகு மக்களால் அதிகம் சாப்பிடக் கூடிய விலை மலிவான சத்து நிறைந்த உணவு மாட்டுக் கறி தானே!

சந்தேகத்துக்குரிய மூன்று சதவீத உயர் ஜாதி மக்களின் உணவுக் கலாச்சாரத்தை 97 சதவீத மக்களிடத்திலே திணிப்பது அராஜகம் அல்லாமல் வேறு என்னவாம்?

மாட்டுக்கறி சாப்பிடும் 97 சதவீத மக்களும் ஒன்று திரண்டு தங்களுடைய தோள் வலிமையைக் காட்டினால் மூன்று சதவீத கீரைத் தண்டுகளின் நிலை என்ன?

வேறு எந்த உணவிலும் கிடைக்காத சத்துகள் மாட்டுக் கறியில் கிடைக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை களாகும். 85 கிராம் மாட்டுக் கறியில் 179 கலோரிகள் தான் இருக்கின்றன.

ஆனால், அந்த 85 கிராம் மாட்டுக் கறியில் கிடைக்கக் கூடிய உயிர்ச் சத்துக்களோ பத்து சதவீதத்திற்கு மேலாகும். உடல் எடையைக் குறைப்பதற்கும் உரிய உணவும் இந்த உணவே! புரதம், ஸிங்கு (துத்தநாதம்), மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், கோபல்ட், குரோமியம், நிக்கல், செல்னியம், இரும்பு, வைட்டமின் டி, வைட்டமின் இ,மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மாட்டிறைச்சியில் மிகுந்துள்ளன என்பது மருத்துவ ரீதியான தகவல்களாகும். பசு புனிதம் என்பது போன்ற புராணக் கூத்தல்ல.

நமது தசைகள், பற்கள், எலும்புகள் வலுவாகின்றன. உடலின் செல்களுக்குப் பிராண வாயுவையும் சக்தியையும் அளிக்கின்றன. பி. வைட்டமின்களான தையமின், ரைபோப்ஃபேவின் பேன்டோனிக் ஆசிடுஃபோலேட், நியாசின் மற்றும் வைட்டமின் பி சத்துக்களும் சிகப்பு இறைச்சிகளில் மிகுந்து காணப்படுகின்றன. வளர் பரு வத்தில் உள்ள இருபால் குழந்தைகளுக்கும் மாட்டிறைச்சி மகத்தானது.

மாட்டுக்கறியில் உள்ள ஸ்டீரிக் ஆசிடு நல்ல கொழுப்பை (கொலஸ்ட்ரால் HDL) அதிகரிக்கச் செய்கிறது! நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. பாதிக்கும் மேற்பட்ட மாட்டுக் கொழுப்பில் இதயத்திற்குத் தேவையான ஓலிக் ஆசிட்கள் நிரம்பியுள்ளன.

மாட்டுக்கறியில் உள்ள அடர்த்தியான கொழுப்பை வெட்டி அகற்றிவிடவும் முடியும். அதைத்தான் லீன்பீப் (Lean Beef) என்று சொல்லுகிறோம். சிவப்பு இறைச்சிகளில் மட்டும் கிடைக்கும் கார்டினன் என்ற சத்து இதயத்தை சீராக இயங்க வைக்கிறது.

எல்லாவற்றையும்விட 51 சதவீத புரோட்டின் சக்தி மாட்டுக்கறியல்லாமல் வேறு எதிலிருந்து கிடைக்கிறதாம்? இந்தக் கீரைத் தண்டுகளின் உளறலை. சட்டத்தை மதிக்கப் போகிறவர்கள் யார்? சட்டம் மரியாதை இழந்து போவ தைப் பார்க்கத்தானே போகிறோம்!

அதே நேரத்தில் உணவின் பெயரால் மேற்கொள்ளப்படும் பார்ப்பனீயக் கலாச்சாரத்தை கவனிக்கவும் தவறக் கூடாது.

Read more: http://viduthalai.in/page-2/98062.html#ixzz3UkHxdsi0

தமிழ் ஓவியா said...

கட்சிகளைக் கடந்து மதவாதங்களை முறியடிப்பதற்கு ஓரணியில் திரள்வோம்
சிறப்புக் கருத்தரங்கில் சூளுரை - தமிழர் தலைவர் வழிநடத்த வேண்டுகோள்

சென்னை, மார்ச். 18_ சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் நேற்று (17.3.2015) மதவாத சக்திகளும், இந் திய அரசியலும் என்கிற தலைப்பில் சிறப்புக் கருத் தரங்கம் தமிழக மூதறிஞர் குழுத் தலைவர், மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற் றது. தமிழக மூதறிஞர் குழு துணைத் தலைவர் வரியியல் அறிஞர் எஸ். இராஜரத்தினம் முன்னி லையில் மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி வர வேற்புரை ஆற்றினார்.

பயனாடைகள், நூல்கள் வழங்கி பாராட்டு

சிறப்புக் கருத்தரங்கத் தில் தலைமையுரை ஆற் றிய நீதியரசர் எஸ்.மோகன் மற்றும் பங்கேற்று சிறப் புரையாற்றிய ஈவெ.கி.ச. இளங்கோவன், ஜி.இராம கிருஷ்ணன், காங்கிரசு கட்சியின் பொருளாளர் நா.சே.இராமச்சந்திரன் அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் பயனாடை அணிவித்து, இயக்க வெளியீடுகளை வழங்கினார்கள்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன், காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலை வர் ஈ.வெ.கி.ச.இளங்கோ வன், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார்கள்.

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் இணைப் புரை வழங்கினார்.

தமிழக மூதறிஞர் குழு துணைத்தலைவர் பொறியாளர் வி.சுந்தர ராசுலு நன்றி கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் திரா விடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலராமன், முருகானந்தம் மற்றும் காங்கிரசு கட்சி நிர்வாகி கள், பெருங்கவிக்கோ வா. மு.சேதுராமன், புலவர் பா.வீரமணி, பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்தியநாரா யணசிங், திமுக தொழி லாளர் கழகம் ஆ.சீ. அருணகிரி, திராவிடர் கழக வடமாவட்டங்களின் அமைப்புச்செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலச் செய லாளர் வி.பன்னீர்செல் வம், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், பொழிசை கண்ணன், பாசு. ஓவியச்செல்வன், கோ. தங்கமணி, பேராசிரியை இசையமுது, பெரியார் மாணாக்கன், பா.மணி யம்மை, செந்துறை இராசேந் திரன் மற்றும் திராவிடர் கழகம், இந்திய கம்யூ னிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தமிழக மூதறிஞர் குழு தயாளன் உள்பட ஏராள மானவர்கள் கலந்து கொண்டனர்.

நூல்கள் வெளியீடு

மதவாதம் தொடர் பான நூல்கள் தொகுப்பு களாக காந்தியார் கொலை அதிர்ச்சியூட்டும் தகவல் கள், காமராஜர் கொலை முயற்சி சரித்திரம், புரிந்து கொள்ளுங்கள் சாவர்க்கர், காந்தியார், கோட்சே, ஆர்.எஸ்.எஸ்., வன்முறை யின் மறுபெயரே சங் பரிவார்க் கும்பல், இந்திய அரசியலும் மதவெறியும், பாஜகவும் இந்துத்துவா வும் ஆகிய ஆறு நூல்கள் மதிப்பு ரூ.253. சிறப்புக் கூட்டத்தில் ரூ.200 கொடுத்து மத்திய சென்னை காங்கிர சுக் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரங்கபாஷ்யம், குமரி மகாதேவன், அம் பத்தூர் இராமலிங்கம், வழக்குரைஞர்கள் சு.குமார தேவன், வீரமர்த்தினி, பெரியார் களம் இறைவி, அரும்பாக்கம் சா.தாமோ தரன், சூளை எஸ்.இராம லிங்கம், தாம்பரம் மாவட் டத் தலைவர் முத்தய்யன், பல் மருத்துவர் தேனருவி, தங்க.தனலட்சுமி, சுரேஷ், நல்லாசிரியர் வீராசாமி, வனத்துறை இராமச்சந் திரன் உள்பட ஏராளமா னவர்கள் தமிழர் தலைவர் அவர்களிடமிருந்து பெரு மகிழ்வுடன் பெற்றுக் கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் இந்திய அரசியலில் மோடியின் தலைமையில் பாஜக தலைமையில் மத்தி யில் ஓர் ஆட்சி அமைந்த போது, அதுவும் அறுதிப் பெரும்பான்மையோடு அந்த ஆட்சி அமைந்த போது, நான் சார்ந்துள்ள இயக்கத்தின் மத்தியக்குழு இந்த அரசியல் போக்கை விமரிசிக்கும்போது, பிஜேபி தலைமையில் ஓர் ஆட்சி அமைந்துள்ளது என்பது இந்திய அரசிய லில் வலதுசாரி திருப்பம் ஏற்பட்டுள்ளது என்ப தையே அது எடுத்துக் காட்டுவதாக எங்களு டைய கட்சி கூறியது.

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். சங் பரி வார் அமைப்புகள் சார் பில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அந்த இயக்கத்தின் தலைவராக இருந்த அத்வானி கூறும் போது, நாங்கள் தேர்த லில் வெற்றி பெற வேண் டும் என்பது ஆட்சிக்கு வருவதற்காக அல்ல. அதி காரத்தைப்பிடிப்பதற்காக அல்ல. இந்தியாவை ஓர் இந்துத்துவ நாடாக மாற்ற வேண்டும் என் பதே எங்களுடைய அடிப் படை நோக்கமாகும் என் றார். அத்வானி கூறியதன் அடிப்படையில் அந்த வழியில் செயல்படுபவர் கள்தான் இன்று மத்தியில் ஆட்சியில் உள்ள பிஜேபி மற்றும் சங் பரிவார் அமைப்புகள்.

நம்முடைய இந்தக் கூட்டத்தின் நோக்கம் மதசார்பின்மையை வலி யுறுத்துவதுதான். மதம் மனிதனுடைய தனிப் பட்ட உரிமை. அரசியலில் மதம் தலையிடக்கூடாது. தமிழகத்து மண்ணில் இந்துத்துவா காலூன் றக்கூடாது.

இவ்வாறு ஜி.இராம கிருஷ்ணன் தம்முடைய உரையில் குறிப்பிட்டார்.

காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஒர் முக்கியமான காலக் கட்டத்தில் தேவைப்படு கின்ற விவாதமல்ல. முடி வெடுக்கவேண்டிய ஒரு நிலையில் இந்தக்கட்டத் தில் நாம் இருக்கிறோம் என்று சொன்னால் மிகை யாகாது. அரசியலில் இன் றைக்கு மதவாத சக்திக ளின் ஆதிக்கம் உச்சக் கட்டத்தில் இருக்கிறது. மதவாத சக்திகள் மட்டு மல்ல. முதலாளித்துவ சக் திகளும் சேர்ந்து இன் றைக்கு இந்திய நாட்டில் மக்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து கொண் டிருக்கிறது. தினந்தோறும் நடைபெறுகின்ற செயல் களைப்பார்த்தீர்கள் என்று சொன்னால், எவ் வளவு சீக்கிரம் இந்த மதவாத சக்திகளுக்கு இந்தியாவிலே முடிவு கட்டப்படுகின்றதோ அவ் வளவு சீக்கிரம் இந்திய மக்களுக்கு விமோசனம் ஏற்படும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இது ஏதோ பகுத்தறிவாளர் களுக்கும் மற்றவர்களுக் கும் நடைபெறுகின்ற ஒரு விவாதமாக, சமூகப்போ ராக நான் கருதவில்லை. இதை இந்திய மக்களுக்கும் மதவாத சக்திகளுக்கும், முதலாளித்துவ சக்தி களுக்கும் நடைபெறுகின்ற போராக மிகப்பெரிய போராட்டமாக நான் கருதுகின்றேன். மதவாத சக்திகள் தூக்கி எறியப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

இன்றைக்கு பெரியார் இருந்தால் என்ன செய் வாரோ அதை ஆசிரியர் அவர்கள் செய்ய வேண் டும்.

மிகவும் ஆபத்தான காலக்கட்டத்தில் இருக்கி றோம். இதுபோன்ற கூட்டங்கள் அதிகமாக நடைபெற வேண்டும். இந்த ஆட்சியை நாம் விரைவில் முடிவைக் கொண்டுவர வேண்டும். அதற்கான வாகளை எதையுமே எதிர்பார்க் காமல் சமுதாயத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கிற பெரியவர்கள் ஆசிரியரைப் போன்றவர்கள் முடி வெடுக்க வேண்டும்.

நீதிபதி மோகன் இந்தியாவில் உள்ள அனைவருமே இந்துக்கள் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு நாட்டு வரலாறு தெரியாது. மக் களுடைய மனப்போக்குத் தெரியாது. 1858 ஆம் ஆண்டில் விக்டோரியா சாசனம் கூறுகிறது அனை வருக்கும் சம உரிமை உண்டு என்று. காந்தி கூறும்போது சுதந்திர இந்தியாவில் இந்து அர சாக இருக்காது, இந்தியன் அரசாகவே இருக்கும் என்றார். அரசியலிலே மதம் தலையீடே இருக்கக் கூடாது என்றார். இந்தி யாவின் மிகச்சிறந்த பிரத மரான நேரு கூறும்போது, இது ஒரு மதசார்பான நாடல்ல, வகுப்புவாத நாடல்ல, இந்தியக்குடி மக்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதை நாங்கள் காப்பாற்றுவோம் என்றார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் மதவாத அரசியல் என்று வருகிற நேரத்தில் எவ்வளவு பெரிய ஆபத்து வருகிறது என்பதை அவ் வப்போது எச்சரிக்கைக ளைக் கொடுக்க இந்த இயக்கம் தயங்கியதே இல்லை. ஆகவே எல்லோ ரையும் ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ்நாட்டிலே 2000 திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநா டுகளை நடத்திவருகி றோம் ஒத்த கருத்துள்ள அனைத்து அமைப்பினரை யும் இணைத்து நடத்தி வருகிறோம்.

ஒன்றரை மாதத்தில் 111 மாநாடுகள் நடத்தியுள்ளோம். எல்லாக்கட்சியிலும் இந் தக் கொள்கை உடையவர் கள் வருகிறார்கள். திராவிடர் கழகம் சார் பில் நடைபெற்ற மாநாடுக ளில் கம்யூனிஸ்ட்டு நண் பர்கள், விடுதலை சிறுத் தைகள், காங்கிரசு கட்சி நண்பர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். மதவா தத்தை எதிர்க்கக்கூடிய, மூட நம்பிக்கையை எதிர்க் கக்கூடிய, ஜாதி வெறியை எதிர்க்கக்கூடிய, அத்துணை பேரும் ஒற்றுமையை உருவாக்கக்கூடிய சூழலில், மக்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடிய, விழிப் புணர்வு தேவை என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

அரசியல்வாதி அடுத்த தேர்தலைப்பற்றி சிந்திக் கிறார்கள். பொதுநல வாதி, சமுதாய நலவாதி கள் அடுத்த தலைமுறை யைப்பற்றி சிந்திக்கிறார் கள். நம்மைப்பொறுத்தவ ரையிலே தேர்தலையும், தலைமுறையையும் இணைத்தே சிந்திக்க வேண்டும் என்பதுதான் இப்போது நடந்திருக்கிற ஆபத்துகள் உணர்த்துவ தாகும்.

கடவுள் இல்லை என்று சொல்லக்வடியவர்கள். எதற்காகவும் அந்தக் கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்கள். மதத்தை ஏற்காதவர்கள். திராவிடர் கழகத்தைப் பொறுததவரையிலே, பெரியார் தொண்டர்க ளைப் பொறுத்தவரை யிலே, பகத்தறிவாளர்க ளைப் பொறுத்தவரை யிலே, பெரியார் தொண் டர்களால், நாத்திகர் களால் கடவுள் மறுப்பா ளர்களால் இதுவரை சிறு கோயிலுக்கு, அந்த மத வழிபாட்டு இடங்களுக் கும் ஒரு சிறு ஆபத்து ஒரு கல்லுக்காவது வந்திருக்கிறதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

காரணம் என்ன வென்றால், கருத்தைக் கருத்தாலே சந்திக்க வேண் டும் என்று நினைக்கிறவர் கள் பகுத்தறிவாளர்கள். அடுத்தவர்களுடைய கருத்தை மதித்து அவர்க ளோடு நாம் விவாதம் செய்ய வேண்டும். அவர் களை மாற்ற வேண்டும். அவர்களைத் திருத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய அடிப்படை.

இவ்வாறு தமிழர் தலைவர் உரையின்போது தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/98080.html#ixzz3UkITQJi0

தமிழ் ஓவியா said...

எமது 38 ஆண்டுப் பணிகள் தோழர்களுக்கு நன்றி!


நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் வைத்த நம்பிக் கையை, கூட்டுப் பொறுப்போடு நடத்திடும் வாய்ப்பும் கடமையும் துவங்கிய நாள் என்பதை, கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும் ஏராளமான கழகக் குடும்பத்தினரும் நேற்று முதல் (18.3.2015) நினைவூட்டி வாழ்த்துக்களைத் தெரி வித்தனர். நம் கவிஞர் ஒரு கட்டுரைகூட விடுதலையில் (18.3.2015) எழுதியுள்ளார்.

என்னைப் பாராட்டுவதை நாம் ஏற்றுக் கொள்ளுமுன், அதற்கு முழுக் காரணமாக இருந்த, இருக்கும் எண்ணற்ற எனது கழகக் குடும்பத் தினரை அல்லவா பாராட்டி, நன்றியை நான் குவிக்க வேண்டும்!

நம் அய்யாவும், அன்னையாரும் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்திட, மானம் பாராது, நன்றியை எதிர் நோக்காது, சுயநலத்திற்கு இடம் தராது, துரோகத்தால் துவளாது, எதிர்ப்பில் ஒதுங்காது எடுத்த பணியை அவர்தம் ஆணைப்படி செய்து முடிக்கும் கடமையில் என்றும் கண்ணாக இருப்பவன் உங்களின் இந்த எளிய தோழன் - தொண்டன்.

எனக்கு எவ்வளவு மன நிறைவும், மகிழ்ச்சியும் தரும் பணி இந்த அரும் பணி! அய்யா, அன்னையார் காலத்திற்குப்பின் விதைத்தது முளைத்தது. காத்தது கிளைத்தது, கிளைத்தது விளைச்சலாகியது! இதை கண்ணெதிரில் பார்த்து பூரிப்பும் மகிழ்ச்சியும் பெறுவதை விடப் பெரும் பேறு வேறு ஏது?

நம் நிறுவனங்களில் பயின்று சென்று வாழ்வில் முன்னேறியுள்ளவர்களின் மகிழ்ச்சியைக் கண்டும் கேட்டும் பெறும் உற்சாகத்திற்கு ஈடு இணை உண்டா? எடுத்துக்காட்டாக, 7.3.2015 தஞ்சை வல்லத்தில் பெரியார் நூற்றாண்டு பழைய மாணவிகள் - பெற்றோர்களாகிய குழந்தை குட்டிகளுடன் வந்து உவகைக் கூத்தாடியது போல் உற்சாகப் பொங்கலில் திளைத்த காட்சி - (எழுத்துருவில் 7ஆம் பக்கத்தில் பார்க்க) எத்தகைய மாட்சியைத் தந்தது!

நாகம்மைக் குழந்தைகள் இல்லத்தில் - ஈழத்தில் இனக் கலவரத்தில் கையில் தீக்காயம்பட்டு, அகதியாய் குடும்பத்துச் சிறுமியாய் திருச்சிக்கு வந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் படித்து முன்னேறிய நாசரம்மா என்ற பெண் மேல் நிலைக் கல்வி முடித்து, நமது தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கிலும் படித்து, பட்டயம் பெற்று, பணியும் வாழ்க்கையும் பெற்ற நிலை எய்திய பின்னர் எழுதிய நன்றிக் கடிதம் ஒன்று 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது!

இவைகள்தான் எமது நேரிய பணியின் மூலம் கிடைத்த மதிப்பூதியம் என்று கூற வேண்டும்! எனவே, கழகமானாலும், கல்வி நிறுவனங்களா னாலும், ஏடுகள், வெளியீட்டகங்களினாலும், எல்லா இடத்திலும் உள்ள கூட்டுக் குழு மனப்பான்மை யுடன் பணியாற்றும்(Team Spirit) எல்லோருக்கும் இவ்வெற்றியில் பங்கு உண்டு

எனவே, இன்னும் நாம் உழைத்து பெரியாரின் தத்துவங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்று - வெற்றியடைய வீறுநடை போட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெரியார் உலகம் என்ற மிகப் பெரிய திட்டம் - ரூபாய் 30 கோடி முதல் 100 கோடி வரை செல வாகும் மிக பிரம்மாண்டத் திட்டம்! விரிந்து கொண்டே செல்கிறது!

பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கென - தனித் தொலைக்காட்சி துவக்கும் திட்டம் - இரண்டும் நமது முக்கிய லட்சியத் திட்டங்கள்! அனைவரது ஆதரவு ஒத்துழைப்பு, நிதி சேகரிப்பு, அவை பற்றிய விளம்பரங்களைத் திட்டமிட்டு திக்கெட்டும் செய்ய வேண்டும் முனைப்போடு! திராவிடர் எழுச்சி மாநாடுகள் 150அய் நெருங்கி விட்டன!

இதுவரை நமது கொள்கைப் பிரச்சாரம் பாயாத பகுதியில்கூட, புது வெள்ளமென - பாய்ந்து, புதிய வரலாற்றை இணைக்கிறது!

உற்சாகத்தோடு களத்தில் நின்று போராடுவோம்! வெற்றி பெறுவோம்! எப்படி அறிவியல் ஒருபோதும் தோற்காதோ அதுபோலவே பெரியார் கொள்கை என்ற பகுத்தறிவியல் ஒரு நாளும் தோற்காது; துவளாது, வென்றே தீரும்!

இது உறுதி! உறுதி!

அனைவருக்கும் எமது தலை தாழ்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
19.3.2015

Read more: http://viduthalai.in/component/content/article/71-headline/98123--38-.html#ixzz3Updy5wuN

தமிழ் ஓவியா said...

மூடத்தனத்துக்கு அளவேயில்லையா?

வகுப்பறையில் மயங்கி விழும் மாணவர்கள் அரசு பள்ளியில் பேய் பீதியாம்!

தலைவாசல், மார்ச் 19_ தலைவாசல் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவமாணவிகள் திடீர் திடீரென மயங்கி விழுவ தால், அந்த பள்ளியில் பேய் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், புத்தகப்பையில் மந்திரித்த வேப்பிலை மற்றும் எலு மிச்சம் பழத்தை மாண வர்கள் எடுத்து வரு கின்றனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட் சியில் உள்ள இந்திராநகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி யில், அந்த பகுதியை சேர்ந்த 28 மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக மருதமுத்து என்பவரும், ஓர் ஆசிரியரும் பணி யாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவி கள் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களைப் படித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென முதல் வகுப்பு மாணவர் சஞ்சய், 2 ஆம் வகுப்பு மாணவி ரம்யா, 3 ஆம் வகுப்பு மாணவர்கள் சதீஷ், சந்தோஷ், மாணவி யுவராணி ஆகியோர் திடீரென மயங்கி கீழே விழுந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் மருதமுத்து, உடனே பெற்றோர்களை வரவழைத்து, மயங்கி விழுந்த மாணவ, மாண விகளை மருத்துவம னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக் கும்படி கூறி இருக் கிறார்.

மாணவ மாணவிகளைப் பரி சோதித்த டாக்டர்கள் குழந்தைகளுக்கு ஒன்றுமில்லை அவர்கள் நலமாக இருப்பதாக கூறி இருக்கின்றனர். இதற்கிடையே பள்ளியில் இருந்த மற்ற மாணவர் களில், அரவிந்த், தமிழ்ச் செல்வன், தமிழ்மணி, அருண், கவுதம் ஆகியோ ரும் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். உடனே ஆசிரி யர்கள், அந்த குழந்தைகளையும் அவர் களின் பெற்றோரிடம் ஒப் படைத்து சிகிச்சை அளிக்கச் சொல்லி இருக் கின்றனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் மருதமுத்து கூறும்போது, ''வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் சென்ற 1 மணி நேரத்தில் மயங்கி விழுந்து விடுகிறார்கள். இதனால், அவர்களை மருத்துவர்களிடம் காட்டி சிகிச்சை அளிக்குமாறு பெற்றோரிடம் கூறினேன். ஆனால், பள்ளியில் பேய் நடமாடுவதாக தற்போது புரளியை கிளப்பி விட்டுள்ளார்கள்" என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/98119.html#ixzz3UpgP3Gmx

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சம்பிரதாயம்

ஒரு முறை அர்ச் சனை செய்தாலே தேங் காய் பிரசாதமாகி விடும். இதை நிர்மால்யம் என் பர். மீண்டும் அந்தத் தேங்காயைப் பயன் படுத்தி செய்த உணவை சுவாமிக்குப் படைப்பது கூடாது. ஓர் ஆன்மீக இதழ்

ஏன் படைத்தால் என்ன? எப்படியும் சுவாமி சாப்பிடப் போவதில்லை. அதில் என்ன சம்பிரதாயம்?

Read more: http://viduthalai.in/e-paper/98120.html#ixzz3UpgYTcmD

தமிழ் ஓவியா said...


மாட்டாரா?
காந்தியாரைப் பற்றித் தவறுகள் பேசியதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூமீது தமிழருவி வழக்குத் தொடுத்துள்ளாராம்.
அவரைவிட ஆளும் பிஜேபி பிரமுகர்கள் காந்தியாரைக் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்திப் பேசுகிறார்களே - அவர்கள்மீதும் வழக்குத் தொடுக்கப் பட வேண்டாமா? பா.ஜ.க. பாசம் இன்னும் அறுபட வில்லையோ!

Read more: http://viduthalai.in/e-paper/98118.html#ixzz3UpgwVGrl

தமிழ் ஓவியா said...

உயர் தர்மம்!

இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக் கிறார்கள்! - (விடுதலை, 11.9.1972)

Read more: http://viduthalai.in/page-2/98122.html#ixzz3UphJpjc0

தமிழ் ஓவியா said...

எமது 38 ஆண்டுப் பணிகள் தோழர்களுக்கு நன்றி!


நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் வைத்த நம்பிக் கையை, கூட்டுப் பொறுப்போடு நடத்திடும் வாய்ப்பும் கடமையும் துவங்கிய நாள் என்பதை, கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும் ஏராளமான கழகக் குடும்பத்தினரும் நேற்று முதல் (18.3.2015) நினைவூட்டி வாழ்த்துக்களைத் தெரி வித்தனர். நம் கவிஞர் ஒரு கட்டுரைகூட விடுதலையில் (18.3.2015) எழுதியுள்ளார்.

என்னைப் பாராட்டுவதை நாம் ஏற்றுக் கொள்ளுமுன், அதற்கு முழுக் காரணமாக இருந்த, இருக்கும் எண்ணற்ற எனது கழகக் குடும்பத் தினரை அல்லவா பாராட்டி, நன்றியை நான் குவிக்க வேண்டும்!

நம் அய்யாவும், அன்னையாரும் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்திட, மானம் பாராது, நன்றியை எதிர் நோக்காது, சுயநலத்திற்கு இடம் தராது, துரோகத்தால் துவளாது, எதிர்ப்பில் ஒதுங்காது எடுத்த பணியை அவர்தம் ஆணைப்படி செய்து முடிக்கும் கடமையில் என்றும் கண்ணாக இருப்பவன் உங்களின் இந்த எளிய தோழன் - தொண்டன்.

எனக்கு எவ்வளவு மன நிறைவும், மகிழ்ச்சியும் தரும் பணி இந்த அரும் பணி! அய்யா, அன்னையார் காலத்திற்குப்பின் விதைத்தது முளைத்தது. காத்தது கிளைத்தது, கிளைத்தது விளைச்சலாகியது! இதை கண்ணெதிரில் பார்த்து பூரிப்பும் மகிழ்ச்சியும் பெறுவதை விடப் பெரும் பேறு வேறு ஏது?

நம் நிறுவனங்களில் பயின்று சென்று வாழ்வில் முன்னேறியுள்ளவர்களின் மகிழ்ச்சியைக் கண்டும் கேட்டும் பெறும் உற்சாகத்திற்கு ஈடு இணை உண்டா? எடுத்துக்காட்டாக, 7.3.2015 தஞ்சை வல்லத்தில் பெரியார் நூற்றாண்டு பழைய மாணவிகள் - பெற்றோர்களாகிய குழந்தை குட்டிகளுடன் வந்து உவகைக் கூத்தாடியது போல் உற்சாகப் பொங்கலில் திளைத்த காட்சி - (எழுத்துருவில் 7ஆம் பக்கத்தில் பார்க்க) எத்தகைய மாட்சியைத் தந்தது!

நாகம்மைக் குழந்தைகள் இல்லத்தில் - ஈழத்தில் இனக் கலவரத்தில் கையில் தீக்காயம்பட்டு, அகதியாய் குடும்பத்துச் சிறுமியாய் திருச்சிக்கு வந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் படித்து முன்னேறிய நாசரம்மா என்ற பெண் மேல் நிலைக் கல்வி முடித்து, நமது தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கிலும் படித்து, பட்டயம் பெற்று, பணியும் வாழ்க்கையும் பெற்ற நிலை எய்திய பின்னர் எழுதிய நன்றிக் கடிதம் ஒன்று 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது!

இவைகள்தான் எமது நேரிய பணியின் மூலம் கிடைத்த மதிப்பூதியம் என்று கூற வேண்டும்! எனவே, கழகமானாலும், கல்வி நிறுவனங்களா னாலும், ஏடுகள், வெளியீட்டகங்களினாலும், எல்லா இடத்திலும் உள்ள கூட்டுக் குழு மனப்பான்மை யுடன் பணியாற்றும்(Team Spirit) எல்லோருக்கும் இவ்வெற்றியில் பங்கு உண்டு

எனவே, இன்னும் நாம் உழைத்து பெரியாரின் தத்துவங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்று - வெற்றியடைய வீறுநடை போட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெரியார் உலகம் என்ற மிகப் பெரிய திட்டம் - ரூபாய் 30 கோடி முதல் 100 கோடி வரை செல வாகும் மிக பிரம்மாண்டத் திட்டம்! விரிந்து கொண்டே செல்கிறது!

பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கென - தனித் தொலைக்காட்சி துவக்கும் திட்டம் - இரண்டும் நமது முக்கிய லட்சியத் திட்டங்கள்! அனைவரது ஆதரவு ஒத்துழைப்பு, நிதி சேகரிப்பு, அவை பற்றிய விளம்பரங்களைத் திட்டமிட்டு திக்கெட்டும் செய்ய வேண்டும் முனைப்போடு! திராவிடர் எழுச்சி மாநாடுகள் 150அய் நெருங்கி விட்டன!

இதுவரை நமது கொள்கைப் பிரச்சாரம் பாயாத பகுதியில்கூட, புது வெள்ளமென - பாய்ந்து, புதிய வரலாற்றை இணைக்கிறது!

உற்சாகத்தோடு களத்தில் நின்று போராடுவோம்! வெற்றி பெறுவோம்! எப்படி அறிவியல் ஒருபோதும் தோற்காதோ அதுபோலவே பெரியார் கொள்கை என்ற பகுத்தறிவியல் ஒரு நாளும் தோற்காது; துவளாது, வென்றே தீரும்!

இது உறுதி! உறுதி!

அனைவருக்கும் எமது தலை தாழ்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
19.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98123.html#ixzz3UphVRQWX

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டைச் சேர்ந்த நோபல்விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் இங்கிலாந்து ராயல் சொசைட்டியில் தலைவரானது வரவேற்கத்தக்கது

மும்பையில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரஸில் மூடத்தனங்களுக்கு வக்காலத்தா? இராமகிருஷ்ணன் கண்டனம்

இளைஞர்களே விஞ்ஞான மனப்பான்மை கொள்வீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கட் ராமன் இராமகிருஷ்ணன் இங்கிலாந்தில் புகழ் பெற்ற ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் வலியுறுத்திவரும் பகுத்தறிவு விஞ்ஞான மனப்பான்மையைப் பெறுங்கள் என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தி வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இங்கிலாந்தில் உள்ள பிரபல ராயல் சொசைட்டியின் தலைவராக தமிழ்நாட்டில் படித்து பட்டம் பெற்ற ஒருவர், அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்றவர் திரு. வெங்கி ராமகிருஷ்ணன் என்று அழைக்கப்படும் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் தேர்வு செய்யப் பெற்றுள்ளார் என்பது மிகவும் மகிழத்தக்கது ஆகும்.

இதற்குமுன் ஆங்கிலேயர்களான அறிவியல் மேதைகள் மட்டுமே இந்த பெயர் பெற்ற ராயல் சொசைட்டியின் (ஆராய்ச்சி நிறுவனம்) தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; இப்போது தமிழ்நாட்டுக்காரர் (இவர் பார்ப்பனர்) ஒருவர் வந்துள்ளது ஒரு சிறப்பு வரலாறு ஆகும்.

அவர் தன் மனதில் பட்டதை அறிவியல் சிந்தனை களின் அப்பட்டமான பிரதிபலிப்பாக பளிச் என்று கூற என்றுமே தயங்கியதில்லை.

முன்பு அவருக்கு நோபல் பரிசு அறிவித்து, பெற்ற நிலையில், பலரும் அவரைப் பேட்டி கண்டபோது, அவர் மூடநம்பிக்கைகள் நம் இந்திய நாட்டில் மண்டிக் கிடப்பதைச் சாடினார்; அதோடு ஜோதிடம் என்பது ஒரு போலி விஞ்ஞானம்; அது அறிவியலோ உண்மையோ ஆகாது என்ற கருத்தினை அழுத்தத் திருத்தமாகக் கூறினார். நாமும் அதனை எடுத்துப் போட்டு, வரவேற்று எழுதியுள்ளோம்.

இப்போது அவர் இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியின் தலைவராகி - அறிவியல் உலகத்தின் தலை சிறந்த அறிவாளி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் சாட்டையடி!

அவர் தேர்வு செய்யப்பட்டவுடன் லண்டனில் உள்ள ஹிந்து நாளேட்டின் செய்தியாளர் பார்வதிமேனன் அவர்களிடம் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.


தமிழ் ஓவியா said...

அரசியலோ, அல்லது மதங்களின் லட்சியங்களோ, அறிவியலுக்குள் ஒரு போதும் வலுக்கட்டாய மாக நுழைந்து விடக் கூடாது.

மும்பையில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில், கலந்து கொண்டு முட்டாள்தனமான பல கருத்துக்களை, அரசியல் கட்சியின் லட்சியங்களாகக் கொண்டுள்ள சிலர் ஊற்றுவாய் மாதிரிப் பேசியுள் ளார்கள் என்று கேள்விப்பட்டேன்.

எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், இந்திய அறிவியல் மாநாட்டினை நடத்திய அந்த அமைப்பாளர் இதற்கு சரியான மறுப்புத் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனியாக இருந்துள்ளார்கள். அப்போதே ஒரு வெளிப் படையான மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். எனக்கு எந்த அரசாங்கத்துடனும், ஏன் இந்த (இந்திய) அர சாங்கத்துடன் கூட எந்தப் பிரச்சினையும் கிடையாது.

அரசியலும் மதக் கொள்கைகளும் அறிவியலுக் குள் உள்ளே வலுக்கட்டாயமாக நுழைக்கப்படுவதை எவரும் ஏற்கவே கூடாது என்று ஓங்கி மண்டையில் அடித்ததைப் போலக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, அம்மாநாட்டில் மரபு அணுக்களும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் எங்கள் இந்து புராணங்களில் எங்கள் கடவுள்களாலேயே செய்து காட்டப்பட்டுள்ளது. இன்று விஞ்ஞானிகள் ஏதோ புதுமை போல கூறுகிறார்கள் என்று அறியாமையான கருத்தும், அறிவியல் துறை அமைச்சராக உள்ள ஒருவர் (பா.ஜ.க.) இதுபோல கருத்துக்களைக் கூறியும், திட்டமிட்டே சில புராணக் கருத்துக்களை மேற்கோள் காட்டி, அறிவியலுக்கு மதச் சாயம் பூசியது மகா வெட்கக் கேடு! உலகமே கை கொட்டிச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தியது; இதைத்தான் நோபல் பரிசு பெற்று, இங்கிலாந்தில் ராயல் சொசைட்டி தலைவராக ஆகியுள்ள திரு. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற இந்திய விஞ்ஞானியே துணிந்து கூறி இந்தப் புரட்டை உடைத்துத் தள்ளியுள்ளார்.

முதுகெலும்போடு இப்படி அப்பட்டமான உண்மை களை விஞ்ஞானிகள்தான் வெளியிட வேண்டும். இதற்குப் பிறகாவது ஹிந்துத்துவா கருத்துக்களை விஞ்ஞானத்திற் குள், ஊடுருவச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் தங்கள் மரியாதையையும், மதிப்பையும் ஆட்சிப் பொறுப் பில் உள்ளோர் காப்பாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

அதைவிட வேடிக்கை இன்று எப்படிப்பட்ட காவிகள் - நாடாளுமன்ற உறுப்பினர்களாகி அங்கே பேசுகிறார்கள் என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு: நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி. கட்சி உறுப்பினர் பி.பி. சவுகான் என்பவர் நேற்று (19.3.2015) ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

புனித கங்கையைக் கொண்டு வந்தவர் யார்?

புனித கங்கை ஆற்றினை இந்த பூமிக்கு யார் அழைத்துக் கொண்டு வந்தது? ஏன் அவர் அதை அழைத்து வந்தார்? அப்படி அழைத்து வந்ததின்நோக்கம் என்ன? அதன் விளைவாக குளியலில் என்ன விளைவை அது ஏற்படுத்தியது? என்னே அறிவுக்கொழுந்து கேள்வி! பதிலளித்த இணையமைச்சர் சன்வார் லால் ஜாட் என்பவர் கங்கையை பகீரதன் என்ற ராஜா அழைத்து வந்தார் (மேல் உலகத்திலிருந்து) மக்களின் சேமத்திற்காக உடனே சபாநாயகரான அம்மையார் சுமித்ரா மகாஜன் (இவரும் பிஜேபிதான்) இது என்ன? இப்படி ஒரு கேள்வியா என்று குட்டி உள்ளார்!

மத்திய அரசு அலுவலகங்களில் பினாயிலுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார் - அதனால் செலவு மிச்சமாகுமாம். இப்படி மோடி தலைமையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாக நடக்கும் பா.ஜ.க.வின் ஆட்சி யின் அலங்கோலங்களை கண்டு அவனியும் அறிவுலகமும் நாணி, நகைக்கிறதே!

இளைஞர்களே, திருந்துவீர்!

இணையத்தினையே பார்த்து ஏமாந்து, வளர்ச்சி மாயையில், மயக்கத்தில் மோடிக்கு - மாற்றத்திற்கென வாக்களித்து குளிக்கப் போய் சேற்றை வாரி பூசிக் கொண்ட இளைஞர் உலகமே!

இனியாவது, இத்தகைய காட்சிகள், நிகழ்வுகள், விமர்சனங்களைக் கேட்டு, கண்ட பிறகாவது, பகுத்தறிவோடு, விஞ்ஞான மனப்பான்மையோடு விழித்து எழக் கூடாதா?

எவ்வளவு பெரிய தேசிய அவமானத்தை நம் நாடு சந்தித்துக் கொண்டுள்ளது என்பதை இனியாவது உணர்ந்து தக்க பரிகாரங்களைத் தேடுங்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
20.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/98163.html#ixzz3Uw62fDJc

தமிழ் ஓவியா said...

பஞ்சகவ்யப் பிரசாதமும் அறிமுகப்படுத்தப்படுமோ!

மத்திய அரசு அலுவலகங்களில் இனிமேல் மாட்டு மூத்திரம் (கோமியம்) தானாம் பாஜக அறிவிப்பு

புதுடில்லி, மார்ச் 20_ நாடு முழுவதுமுள்ள மத்திய அரசு அலுவலகங் களில் மாட்டு மூத்திரத் தைப் பயன்படுத்த வேண்டும் என்று பாஜக தலைமையில் ஆன அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந் தியின் அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:

நாடு முழுவதுமுள்ள மத்திய அரசு அலுவலகங் களில் தூய்மைப் பணி களுக்கு பினாயில் மற்றும் இதர வேதிப்பொரு ளுக்குப் பதிலாக பசு மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்தவேண்டும், பசுமாட்டு மூத்திரத்தில் கிருமிநாசினி உள்ளதால் இவற்றை காலங்காலமாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

பசுமாட்டு மூத்திரத் தில் உள்ள மருத்துவக் குணத்தைக் கருத்தில் கொண்டு பசுக்களை காப்பாற்றும் நோக்கில் மாட்டு மூத்திரத்தை அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தவேண்டும். முக்கியமாக பினாயில் மற்றும் திரவ வேதிப் பொருளுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துவது மேலா னது என அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரி கையாளர்களிடம் பேசிய மேனகா காந்தி கூறிய தாவது: முதலில் டில்லி யில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பினா யிலுக்கு பதிலாக பசுவின் மூத்திரத்தைப் பயன்படுத் தினால் பசுக்களும் பாதிக் கப்படாமல் காப்பாற்றப் படும். பசுக்கள் எப்போ துமே மதிப்புக்குரியவை ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதனுடைய எண்ணற்ற துணை அமைப்புகள் நாடு முழுவதும் மதவெறி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பசு மாட்டின் கோமியத்தை அரசு அலுவலகங்களில் சுத்தம் செய்வதற்கு பயன் படுத்துவது என முடிவு செய்ய உள்ளது. ஆர் எஸ்எஸ் அமைப்பான புனித பசு நிறுவனம் இந்த நோக்கத்திற்காக பசுவைக் காப்போம்; தேசத்திற்கு சேவை செய்வோம் என்ற முழக்கத்தை நாடு முழு வதும் அறிமுகப்படுத்த உள்ளது.

டில்லியில் மட்டும் அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்த ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிற தாம். பசு கோமியத்தை பயன்படுத்தினால் அர சுக்கு செலவு மிச்சமாகும் என்றும் அறிக்கை விட் டுள்ளது. இதற்கிடையே பாஜக அரசின் இந்த நடவடிக்கை சுகாதா ரத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நாடு செல்லும் போக்கைப் பார்த்தால் ஊழியர்களுக்குத் தேநீர் வழங்குவதற்குப் பதிலாக பஞ்கவ்யம் (மாட்டு மூத் திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய்) வழங்கப் பட்டாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/98164.html#ixzz3Uw6lh6e3

தமிழ் ஓவியா said...

சட்டம் ஒழுங்கு!

தமிழ்நாட்டில் நீதிபதி தாக்கப்படுகிறார் என்றால் மத்திய பிரதேசத்தில் அமைச்சரிடமே மிரட்டிக் கொள்ளை அடித்துள்ளனராம்! இந்த நாட்டுக்கு எந்த நாடு ஈடோ!

கஞ்சர்களா?

பிஜேபியைச் சேர்ந்த மத்திய கேபினட் அமைச்சர்கள் 27 பேர்களில் 11 அமைச்சர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதுவரை ஒரு பைசாகூட செலவழிக்கவில்லையாம்!

மக்கள் நலத்தை அரசு நலன் (பணத்தை மிச்சப்படுத்தி விட்டார்கள் அல்லவா) தான் இவர்கள் குறிக்கோளோ! சரியான கஞ்சர்களப்பா!

கடும் எச்சரிக்கை!

சமூக வலை தளங்களில் பெண்களின்படத்தை உள் நோக்கத்துடன் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் - 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று காவல்துறை எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/98172.html#ixzz3Uw6wMwRk

தமிழ் ஓவியா said...

இயற்கை


பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரை சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்றவேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/98173.html#ixzz3Uw7CFfXQ

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம் >>>

திருச்செந்தூர் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு ஒரு வரலாற்றுத் திருப்பம்

திருச்செந்தூர்... சற்று நின்று திரும்பிப் பார்த்தால் நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று யோசிக்க வைக்கும் இடம்! காரணம், இங்கே வருகின்ற பக்தர்களின் கூட்டத்தில் ஒருவராவது நாகரிகச் சிந்தனை உடையவரா என்பது தெரியாததுதான், நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே காட்டுமிராண்டிக் காலத்தை நினைவூட்டும் வகையில் பக்தர்கள் நடந்து கொள்கின்றார்கள். இந்த ஊரிலுள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் தங்கும் வசதி பிற ஊர்களில் இல்லாத அளவுக்கு உள்ளது. உணவுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு திருமண மண்டபமாகச் சுற்றிக் கொண்டிருந்தால் முற்பகல் 11 மணியிலிருந்து இரவு 7 மணிவரை இலவசமாக உணவு கிடைக்கும். இதனால் குற்றவாளிகளின் புகலிடம் இந்தக் கோயில் எனலாம்.

சனாதன இந்து மதத்தின் உறைவிடம் திருச்செந்தூர். இங்கேயுள்ள மக்கள், கடவுள் என்று நம்புகின்ற சுப்பிரமணிய சாமியை விட அதிக சக்தி படைத்தவன் பார்ப்பனன் தான் என்று உறுதியாக நம்புகின்றனர். அதனால் பார்ப்பனர்களை வைத்து பல வழிபாடுகளை தங்கள் வீடுகளில் நடத்து கின்றனர். இதனால் பார்ப்பனர்களின் வீடுகளில் பணம் கரைபுரண்டோடுகின்றது.

இங்கே சில நாத்திக அமைப்புகள் ஓரிரு நிகழ்ச்சிகள் நடத்தியிருந்தாலும், பார்ப் பனர்கள் கலங்கவில்லை. காரணம், அவற் றால் தங்களை வீழ்த்த முடியாது என்பது தான். அவர்கள் அஞ்சுகின்ற ஒரே எதிரி தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்தின் தலைவரான நமது தமிழர் தலைவர் அவர்கள் தான்.

திருச்செந்தூர் பார்ப்பனர்களின் 19 ஆம் நூற்றாண்டு எதிரி முத்துக்குட்டி (வைகுண்ட சுவாமிகள்) 20 ஆம் நூற்றாண்டு எதிரி தந்தை பெரியார்; இன்று நமது தமிழர் தலைவர் அவர்கள்.

19 ஆம் நூற்றாண்டு மத்தியில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த முத்துக்குட்டியை கடலில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்றவர்கள் பார்ப்பனர்கள்தான். அவரை அதிலிருந்து காப்பாற்றியவர்கள் சில முற் போக்கு சிந்தனை கொண்ட துறவிகள்தான்.

25 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழர் தலைவர் அவர்கள் திருச்செந்தூர் வந்த பொழுது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

எனவே மாநாட்டு நாளான மார்ச் 12 அன்று காவல் துணைக்கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் தூத்துக்குடியி லிருந்து திருச்செந்தூர்வரை தமிழர் தலைவருக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கிய துடன், மாநாட்டுக்கும் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தமிழர் தலைவரின் எழுச்சி மிகு உரையால் திருச்செந்தூரில் சனாதன இந்துமதம் ஆட்டம் கண்டு விட்டது. உங்கள் தலைவரையும் தெரியும், தலைவரின் மகனையும் தெரியும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியவர்கள் இன்று மலைத்துப்போய் நிற்கின்றார்கள்.

திருச்செந்தூர் வட்டார மாநாடு மிகப்பெரிய வரலாற்றுத்திருப்பத்தை உருவாக்கப் போவது உறுதி.

மாநாடு நடைபெற்ற மறுநாள் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து நன்றி யையும் பாராட்டுகளையும் தெரிவித்த போது அவர் கூறினார். யாருமே இதுவரை இப்படிப் பாராட்டியது இல்லை.

யார் நல்லது செய்தாலும் பாராட்ட வேண்டும். இதை தந்தை பெரியாரின் வரலாற்றிலிருந்தும் எங்கள் தலைவரிடமி ருந்தும் கற்றுக் கொண்டோம் என்றேன்.

- த.அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page-2/98188.html#ixzz3Uw7WXh9E

தமிழ் ஓவியா said...

அயோக்கியதனம் எது?

அயோக்கியதனம் எது? நன்றாய்க் கொழுக்கட்டை போலும், மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்து கொண்டு ஐயா மூன்று நாளாகக் கஞ்சியே காணவில்லை. காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம்.

ஆனால், அதுபோலவே இருந்து கொண்டு யாதொருவிதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்து விட்டுப்போனார்கள் என்றோ, பரம்பரை சொத்து பாத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தை வைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாகக் கருதிக் கொண்டு சோம் பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம்.

பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

தொல்லை எது? பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. அது போலவேதான் பணக்காரன் (தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன்) பணத்தை வைத்துக் கொண்டு கோவில், மடம் கட்டிக் கொண்டு கும்பாபிஷேகம், உற்சவம், பிராமண சமாராதனை முதலியன செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது.

கடவுள் எது? பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்:

ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்தினாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோத மாக சமமாக்க முடியும்! ஆதலால் மக்களை எல்லாம் நாஸ் திகர்களாக ஆக்கி விட்டால் பணக்காரனும், தரித்திரனும் தானாகவே மறைந்துபோவார்களா மாட்டார்களா?

- தந்தை பெரியார், குடிஅரசு 28.10.1944

Read more: http://viduthalai.in/page-7/98187.html#ixzz3Uw9PtsMf

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலின் பொன்மொழிகள்!

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து எடுத்து விடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளைத் தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

..........

அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங்குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.

..........

போப் ஆண்டவர்களை விட - குருமார்களைவிட - புரோகிதர்களைவிட - பாதிரியார்களைவிட - அர்ச்சகர் களைவிட - ஆண்டவனின் அடியவர்களைவிட குண்டூ சியைக் கண்டுபிடித்தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந்திருக்கிறான்.

..........

இன்று நாம் உணர்கிறோம் உலகம் உருண்டை என்பதை! ஆனால், இதைக் கண்டுபிடித்தவர் யார்? போப் ஆண்டவரா? புனித மதக் குருக்களா? புரோகிதர் கூட்டமா? ஆண்டவன் தூதரா? கிறித்துவப் பெருமானா? கடவுள்களால் அனுப்பப்பட்ட அவதாரங்களில் ஒன்றா? அல்ல, நிச்சயமாக அல்ல! ஆனால், சாதாரண ஒரு மனிதன், அதிலும் ஒரு மாலுமி!

..........

என்னைப் பொறுத்தமட்டில் நான் நினைக்கிறேன், மனிதத் தன்மையை அடியோடு ஒழித்து விட்ட ஆஸ்திகர்களை விட, மனிதத் தன்மையைப் பத்திரமாகப் பாதுகாக்கும் நாஸ்திகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.

Read more: http://viduthalai.in/page-7/98183.html#ixzz3Uw9k7t9g

தமிழ் ஓவியா said...

விதியைப் பற்றி...

மனித சக்தி விதி என்ற சங்கிலியால் கட்டுண்டு கிடப்பது, பெரும் பரிதாபமே. மனிதன் சிந்திக்கச் சிந்திக்க, விதியி னின்று விடுதலை அடைகிறான்.

மனித மூளை சிந்தனையால் விதியை எதிர்த்து, அதை அழித்து, வெ றும் பிரமை என்று நிரூபிக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகிறது. பல மற்றவர்கள், பாதகர்கள் - இவர் களே உழைக்காமல் சோம்பலில் மடிந்து, விதியைக் குறை கூறுகிறார்கள். - எமர்சன்

Read more: http://viduthalai.in/page-7/98183.html#ixzz3Uw9rpvSw

தமிழ் ஓவியா said...

சொர்க்கமா - நரகமா?

தன்னை எதிர்த்து பார்லி மென்டிற்குப் போட்டியிடும் ஒருவர் நடத்தும் தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு ஆப்ரகாம் லிங்கன் சென்றிருந்தார். மேடை யில் பேசிக் கொண்டிருந்த பாதிரியார் லிங்கனைக் கண்டதும் அவரை அவமானப்படுத்த வேண்டும் என எண்ணினார்.

லிங்கன், சொர்க்கம் - நரகம் ஆகியவை மீது நம்பிக்கை அற்றவர் என்பது பாதிரியாருக்குத் தெரியுமாகையால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் அனைவரும் தயவு செய்து எழுந்து நிற்கவும் என்றார். ஆப்ரகாமைத் தவிர, எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

மறுபடியும் பாதிரியார் சொன்னார். நரகத்திற்குப் போக விரும்பாதவர்கள் எழுந்து நிற்கவும் என்றார். இப்பொழுதும் லிங்கனை தவிர்த்து எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

உடனே பாதிரியார் லிங்கனை பார்த்துக் கேட்டார். நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்? லிங்கன் சொன் னார், நான் பார்லிமெண்டிற்கு போக விரும்புகிறேன், பாதிரியார் வாயடைத்துப் போனார்.

Read more: http://viduthalai.in/page-7/98193.html#ixzz3Uw9zGwDX

தமிழ் ஓவியா said...

என்னை அழைக்கின்ற கோவிலின் சாமி
எனக் கிழிவாய்த் தெரியும் - சாதி

தன்னை விளக்கிடுமோ இதை யோசிப்பீர்
சமூக நிலை புரியும்.

என்னை அளித்தவர் ஓர் கடவுள் மற்றும்
ஏழையர்க்கோர் கடவுள் - எனில்

முன்னம் இரண்டையும் சேர்த்துருக்குங்கள் முளைக்கும் பொதுக் கடவுள்.

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/98193.html#ixzz3UwA72nzs

தமிழ் ஓவியா said...

குஜராத் பகுத்தறிவாளர் மறைவு

சூரத், மார்ச் 20_ சிறந்த பகுத்தறிவாளர், எழுத்தாளர் மற்றும் மனித நேயர் பேரா சிரியர் ராமன் பதக், குஜராத் மாநிலம், பர் தோலி நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் (92 வயது) மறைந்தார்.

குஜராத்தி மொழி யில் மிகவும் புலமை பெற்ற பதக், குஜராத்தி மொழியில் ராமன்_பிராமன், ஆன்சு அந்த்ராதர், ஆக்ரோஷ், பட்கர், பிராதிகார், பிரகோப் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.

நீண்ட காலமாக செய்தித்தாள்களில் சிறந்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந் துள்ளார். அவர் கட்டுரைகளில் மதமூடநம்பிக்கை களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளார். அவர் எழுதிய ராமன்_பிராமன் நாவல் முழு மையான பகுத்தறிவுச் சிந்தனையோடு அமைந் துள்ளதாகும். தவிர்க்கப்பட வேண்டிய மத பழைமைவாதங்கள் மற்றும் அதன் கேடுகளுக்கு எதிராக ஏராளமான கருத்துகள் அதில் அடங்கியுள்ளன.

சூரத் பகுத்தறிவாளர் அமைப்பில், பாபு தேசாய் மற்றும் பேராசிரியர் பிஏபாரிக் ஆகி யோருடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். ராமன் பதக், பஞ்சமால் மாவட் டத்தின் மலைப்பகுதியில் உள்ள ராஜ்காட் கிராமத்தில் 22.7.1922 அன்று பிறந்தார்.

ராமன் பதக்கின் மூத்த சகோதரர் குஜராத்தி மொழியில் சிறந்த கவிஞரான ஜெயந்தி பதக் ஆவார். அவருக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, அவர் இறந்த பிறகு, தமது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடையாக அளிக்கவேண்டும் என்பதை தம்முடைய இறுதி விருப்பமாகத் தெரிவித்திருந்தார்.

அவர் விருப்பப்படியே வல்சாத் பகுதி மருத்துவக் கல்லூரிக்கு அவருடைய உடல் கொடையாக வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/98199.html#ixzz3UwAapJLw

தமிழ் ஓவியா said...

அய்ரோப்பா கண்டம் மற்றும் யுரேஷிய பகுதி முழுவதும் முழுமையாகத் தெரியும் சூரிய கிரகணம் இன்று

ஓஸ்லோ மார்ச் 20- அய்ரோப்பிய நாடுகளில் 9 மணியள வில் (இந்திய நேரப்படி நண்பகல் ஒரு மணி) சூரிய கிரகணம் ஏற்படும். இந்தச் சூரியகிரகணம் மிகவும் அபூர்வமானது.

அதாவது அய்ரோப்பிய நாடுகளில் 8 மணிமுதல் நன்றாக விடியத் துவங்கும், அந்தக் காலகட்டத்தில் இந்தச் சூரிய கிரகணம் ஏற்படுவதல், தொடர்ந்து 2 மணிநேரம் அதாவது 90 முதல் 130 நிமிடம் வரை இந்தச் சூரிய கிரகணம் நிலைத்து நிற்கும். இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999 ஆம் ஆண்டுதான் இறுதியாக நடந்துள்ளது. 16 ஆண்டுகள் கழித்து அது தற்போது நிகழவுள்ளது.

இங்கிலாந்தில் 84 சதவீதமான சூரிய ஒளி மறைக்கப்படலாம். ஜெர்மன், சுவிட்சர்லாந்து, நார்வே ஸ்வீடன் மற்றும் கிழக்கு ரஷ்யப்பகுதிகள் முழுவதும் சூரியன் மறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மீண்டும் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் 2026 ஆம் ஆண்டில்தான் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வருவது ஆகும். சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்க நாட்டையும் பின் தள்ளி ஜெர்மனி உலக அளவில் முன்னணியில் உள்ளது.

ஒரு மணிநேரம் ஏற்படும் இந்தச் சூரிய கிரகணத்தால் சூரிய மின்சார உற்பத்தியில் 2.7 சதவிகித அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது என்று இது குறித்து சூரிய மின் உற்பத்தியை ஆய்வு செய்து வரும் வல்லுனர் பாரி பிஸ்சர் கூறியுள்ளார்.

இதனால் சூரிய கிரகணத்தின்போது ஏற்படும் மின் பற்றாக்குறையை எதிர்கொள்ள மின் நிலையங்கள் அவசரத் திட்டங்களை வகுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இயற்கை வாயுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை உடனடியாக தொடங்குவது, மின் மிகையுள்ள மற்ற பகுதிகளிலிருந்து மின்சாரத்தை அவசரகால அடிப்படையில் பகிர்ந்து அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மின் நிலையங்கள் தீவிரப்படுத்தும்.

எனவே, அன்றைய தினத்தில் கிரகணத்தின்போது மின் உற்பத்தி குறைந்தாலும், சூரிய கிரகணம் முடிந்தவுடன் வழக்கமான மின் உற்பத்தியை விட, 3.5 சதவிகிதம் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

சூரிய கிரகணம் என்றதுமே கோவில்களில் நடை சாத்தும் இந்துத்துவாவாதிகள் வெளிச்சத்திற்கு வருவார்களா?

Read more: http://viduthalai.in/page-8/98206.html#ixzz3UwBH7XkZ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மஞ்சள் நீர்

கடை திறக்கும்போது வாசலில் மஞ்சள் நீர் தெளிப்பது எல்லாம் பிற் காலத்தில் புகுந்து விட்ட பழக்கங்கள். மகாலட் சுமிக்கு விருப்பமான மஞ்சளைக் கால்படும் விதமாக கீழே தெளிப்பது தவறு என்கிறது ஓர் ஆன் மிக இதழ்.

ஒருவர் சரி என்பது இன்னொருவர் தவறு என்பார். இதெல்லாம் இந்து மதத்தில் சர்வ சாதாரணம். பூமிகூட பூமாதேவிதான் அதில் என்னென்னவெல் லமோ நடக்கிறதே!

Read more: http://viduthalai.in/e-paper/98240.html#ixzz3V1UqoPw2

தமிழ் ஓவியா said...

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க இயலாது! உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி மார்ச் 21 பகவத் கீதைஎன்னும் நூலை தேசிய நூலாக அறிவிக்க இயலாது என்று கூறி வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து மத அமைப்புசார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் வெளி விவகாரத்துறை அமைச் சர் சுஸ்மா சுவராஜ் பேசும் போது; விரைவில் பகவத் கீதையை தேசிய நூலாக அரசு அறிவிக்கும் என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு தேசிய அளவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத் தியது. சில இந்துமத அமைப்புகள் கூட மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் இதற்கு வலு ஊட்டுவதுபோல் மோடி வெளிநாட்டிற்கு செல் லும் போதெல்லாம் அங் குள்ள தலைவர்களின் கையில் வலுக்கட்டாய மாக பகவத்கீதையை திணித்துவிட்டு வருகிறார்.

அரசின் தேசிய நூல் பற்றிய கொள்கை முடிவுகள் தெளிவில்லாத பட்சத்தில் வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் என்பவர் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண் டும் என்று அரசுக்கு ஆணையிடக்கோரி பொது நலமனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த பொதுநலமனு வெள்ளிக் கிழமையன்று விசார னைக்கு வந்தது. இந்த மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதா வது:

ஒரு நூலை தேசிய நூலாக அறிவிக்கவேண் டும் அல்லது அதை தவிர்க்கவேண்டும் என் பதை நீதி மன்றம் வலி யுறுத்த முடியாது. இந்திய சமூகம் என்பது பல்வேறு மதம் மற்றும் இனங் களைக் கொண்ட நாடு. அரசு எடுக்கும் எந்த ஒரு செயலும் அனைத்து சமூகத்தினருக்கும் இணக்கமான ஒன்றாகத் தான் இருக்கவேண்டும். சமூக நல்லிணக்கம் சார்ந்த பிரச்சனைகளில் அரசின் முடிவு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக இருக்கவேண்டும்.

பகவத் கீதை என்பது ஒரு மதத் தினரின் புனித நூல், நீதி மன்றம் இந்த விவகாரத் தில் எந்த ஒரு கருத்தும் சொல்லமுடியாது. அரசு அரசியல் சாசனப்படி செயல்படும், ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய் கிறோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98243.html#ixzz3V1V2itGs

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சதி


பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும், அவர் களை ஒழித்துக் கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக் கையாக இருந்து வந்திருக்கிறது.

- (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/e-paper/98252.html#ixzz3V1VSThdI

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சதி


பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும், அவர் களை ஒழித்துக் கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக் கையாக இருந்து வந்திருக்கிறது.

- (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/e-paper/98252.html#ixzz3V1VSThdI

தமிழ் ஓவியா said...

பெசண்டம்மையாரின் முடிவு

தோழர் அன்னிபெசண்டம்மையார் 20.09.1933 அன்று மாலை 4 மணிக்கு சென்னை அடையாற்றில் முடிவெய்தி விட்டார்கள். அம்மையாரின் வாழ்வு பெண் மணிகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஆண்களுக்கும் ஓர் அறிவுறுத்தல் ஆகும்.

பெண்கள் பாவஜென்மம் என்றும், பேதமையென்பது மாதர்க்கணிகலம் என்றும், பெண்கள் ஆண்களின் காவலுக் குட்பட்டு இருக்க வேண்டியவர்கள் என்றும், அறியாமையும், அயோக்கியத்தனமும், முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் கொண்ட வாக்கியங்களை பொய்யாக்கி அவற்றில் பொதிந் துள்ள சூழ்ச்சிகளை வெளியாக்க வென்றே தோன்றியவர் என்று கருதும்படியானவர் நமது பெசண்டம்மையார்.

தோழர் பெசண்டம்மையார் ஒரு பாதிரியாரின் மனைவி யாவார் பாதிரிகளின் கொடுமையும், பித்தலாட்டமும் அம்மையாரை நாஸ்திகமாக்கி, தெய்வம்இல்லை என்று பிரச்சாரம் செய்யும்படி செய்தது பிறகு புருஷனைவிட்டு பிரிந்தார். பிறகு கர்ப்பத் தடையை யாவருக்கும் பிரச்சாரம் செய்துவந்தார் கர்ப்பத்தடையை சட்டசம்பந்த மாக்கினார். அக்காலத்திலேயே அரசாங்கத்தையும் எதிர்த்து பிரச்சாரமும் செய்தார்.

பின்னர் தனது 32ஆம் வயதுக்கு மேல் மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். பிறகு பல புத்தகங்களை எழுதினார். அதன் பிறகு பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தார். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார் வந்து அச்சபையின் உலக தலைவரானார். பிறகு சென்னையை வாசஸ்தலமாகக் கொண்டார். கிறிஸ்தவ மதத்தை கண்டித்து இந்துமத தத்துவ பிரச்சாரம் என்னும் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தார்.

இதனால் சென்னையில் உள்ள விபூதி பூசும் பார்ப்பனரிடம் மிக செல்வாக்கு அடைந்தார். அய்க்கோர்ட்டு ஜட்ஜ்கள் உள்பட அநேக பெரிய பதவியாளர்களை தனக்கு சிஷ்யராகக் கொண்டார். அரசாங்கத்திலும் ஒரளவு செல்வாக்குப் பெற்று. விபூதிப் பார்ப்பனர்களுக்கு அச்செல்வாக்கை பெரிதும் உதவினார்.

இதுகண்டு பொறாத சென்னை நாமம் போடும் அய்யங்கார் பார்ப்பனர்கள் அம்மையாருக்கு பல தொல்லைகளை விளைவித்தார்கள். அவற்றை சமாளிக்க (முன் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தது போலவே) அரசியலில் தலையிட்டு அரசியல் பிரச்சாரமும் செய்தார்கள். இதன் பயனாயும், அம்மையாரின் அபார சக்தியாலும் இந்தியா முழுமைக்கும் அரசியல் தலைவராயும் விளங்கினார்.


தமிழ் ஓவியா said...

காலஞ்சென்ற தோழர்கள் தாஸர், பாலர், நேரு முதலியவர்கள் எல்லாம் அம்மையாருக்கு சிஷ்யர்களாக இருந்தார்கள். அம்மையார் ஓடி ஆடித்திரிய சக்தி உள்ளவரையில் அய்யங்கார் கூட்டத்தை பொது வாழ்வில் தலை எடுக்க வொட்டாமல் செய்து கொண்டே வந்தார்.

இதன் பயனாகவே (அம்மையாருக்கு அரசியலிலும் மதத்திலும் செல்வாக்கு இருக்கும்வரை) தோழர் சி.விஜயராகவாச் சாரியாராகிய அய்யங்கார் காங்கிரஸ் பிரசிடெண்டாக முடியா மலேயே போய்விட்டது.

இந்தக் காரணத்தால் சென்னை அய்யங்கார்கள் அரசியலில் மிதவாதிகள் ஆகி தோழர்கள் சி.எஸ். கஸ்தூரிரங்கய்யங்கார், சி.விஜயராகவாச்சாரியார், சி.ராஜகோபா லாச்சாரியார், எஸ். சீனிவாசய்யங்கார் முதலிய அய்யங்கார்கள் ஒன்று சேர்ந்து, மறுபடியும் அம்மையாரின் அரசியல் செல்வாக்கை ஒழிக்க வேண்டியவர்களானார்கள்,

இதற்கு பார்ப்பனரல்லாத தோழர்கள் பி.வரதராஜீலு, வி.ஒ.சிதம்பரம் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப், ஈ.வெ.ராமசாமி முதலியவர்களையும், அய்யர் பார்ப்பனரில் தோழர் எஸ். சத்தியமூர்த்தி அய்யர் முதலியவர்களையும் பயன்படுத்திக் கொண்டு, அம்மையாரை எதிர்த்து அம்மை யாருக்கு பல தொல்லைகளும் கொடுத் தார்கள். அம்மையாருக்கு சரியான போட்டித் தலைவராக தோழர் காந்தியாரைப் பிடித்துக் கொண்டுவந்து மகாத்மாவாக்கினார்கள்.

இதன் பயனாகவும் அம்மையாரின் வயோதிகத்தின் பயனா கவும் அம்மையார் அரசியலில் சிறுகச்சிறுக, விட்டுக் கொடுத்துக் கொண்டே வந்துவிட்டார்கள் என்றாலும் அரசாங்கத்தின்மூலம் தனது விபூதிப் பார்ப்பன அய்யர் சிஷ்யர்களுக்கு அளவு கடந்த உதவி செய்து கொண்டே வந்தார்.

தோழர் சர்.சி.பி. போன்றவர்கள் எல்லாரும் உயர்ந்த அந்தஸ்திற்கு அம்மையாராலே ஆக்கப் பட்டவர்கள் ஆவார்கள், அம்மையாரின் அபார சத்தியை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அம்மையார் இந்த உலகம் முழுவதும் ஒரு ஆட்சிக்கு உட்படுத்தி அதன், தலைமை ஸ்தானத்தைக் கொடுத்தால் அதை ஒருகையிலும், அதன் ராணுவ ஆட்சியை மற்றொரு கையிலும்,

உலகமத (போப்) குருவேலை யை உபவேலை யாகவும், பார்க்கத் தகுதியும் ஆற்றலும் உடையவர் என்றே சொல்லுவோம். ஆகவே பெண்களுக்கு எவ்வளவு ஞானம் எவ்வளவு தைரியம் எவ்வளவு சக்தி இருக்கின்றது என்று கணிப்பதற்கு அம்மையார் ஒரு ஒப்பற்ற சாதனமாவார். அப்படிப்பட்ட அம்மையார் தனது 86ஆவது வயதில் முடிவெய்தியதுபற்றி யாரும் வருந்த வேண்டியதே இல்லை.

ஏனெனில் இனி தன்னால் யாதொரு காரியமும் செய்யமுடியாமல் போய்விட்டதென்றால் உடனே முடி வெய்துவிட வேண்டியதுதான் நல்லறிவின் குறிப்பாகும்.

ஆகவே அம்மையாரைத் தாயைப்போலவும் குருவைப் போலவும் தெய்வத்தைப் போலவும் கருதி அம்மையாரைப் போற்றிவந்த அவரது சிஷ்யர்கள் பெரிதும் மனித ஜீவ இயற்கையை உணர்ந்த ஞான வான்கள் ஆதலால் அப்படிப் பட்டவர்களுக்கு பிறரது அனுதாபமோ ஆறுதலோ அவசியம் இல்லையென்றே கருதுகிறோம்.

குடிஅரசு - துணை தலையங்கம் - 24.09.1933

Read more: http://viduthalai.in/page-4/98290.html#ixzz3V1WpNjrX

தமிழ் ஓவியா said...

தமிழின் தனித் தன்மை

உலகின் பழைய மொழிகள் ஏழு. அவற்றில் இப்போது வரை வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். ஒன்று தமிழ். இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன.

இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன.

இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது. திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந் தியது. ஆனால், அதில் உள்ள சொற் களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம்.

உதாரணம்: எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன. கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத் தில் பத்து கோடி, நூறு கோடி என்று தான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).

தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் கூறியுள்ளார்.

வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்)

ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த வல்லினம், மி மெல்லினம், ழ் இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
உலகில், பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது. இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

தமிழ், உலகில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசு அலுவல் மொழியாக உள்ளது. மேலும், இலங்கையில் நாடாளுமன்ற மொழியாகவும் உள்ளது.

Read more: http://viduthalai.in/page3/98223.html#ixzz3V1YNM7pD

தமிழ் ஓவியா said...

கச்சனம் - கருஞ்சட்டை வீரர் ப. ஆத்மநாதன்

திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கும் கச்சனம் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். எனக்கு இப்ப எண்பத்தி ரெண்டு வயது ஆகிறது. எட்டாவது வரைக்கும் படிச்சேன். அதுக்கு மேல் படிக்க முடியவில்லை. காரணம் ஏழ்மையான விவசாய குடும்பம்.

எனக்கு எலெக்டிரிக்கல் வேலையில் கொஞ்சம் ஆர்வம் அதிகம். லைன் மேனுக்கு உதவியா போவேன். கோயில் திருவிழாவுக்கு லைட் கட் டுவேன். அப்ப கோயிலில் நடக்கும் சில தவறான செயல்களை காண முடிந்தது.

அந்த காலத்திலே எங்க அப்பா திராவிட நாடு பத்திரிகை வாங்குவார். நான் படிச்சு பல விவசயங்களை தெரிந்து கொண்டேன்.

வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை இவைகளைப்பற்றி நண்பர்களிடம் பேசுவேன். அதனால நான் ஒரு கடவுள் மறுப்பாளன் என அப்பகுதியிலேயே அறிமுகமானேன்.

அந்த சமயத்தில் தான் தோலி. ஆர்.எஸ். (ஆர். சுப்பிரமணி) சாந்தன் ஆகியோர் என்னை வந்து சந்திச்சு எங்க பகுதிக்கு என்னை பொறுப்பாள ராக நியமிச்சாங்க மிலிடரி வைத்திய நாதன் எனக்கு அப்போது உதவியாக இருந்தார்.

முதன் முதலாக வடபாதி மங்கலம் திருஞானசம்பந்தத்தை அழைத்து எங்க ஊரில் கூட்டம் போட்டோம். ஒரு முறை எங்க ஊரில் வைத்து இருந்த வெங்கடாசலபதி படத் துக்கு செருப்பு மாலை போட்டு விட்டேன்.

எனக்கு 33ஆவது வயதில் திருமணம் அதில் என்னானா அந்த பொண்ணு வேறு ஒரு வருக்கு நிச்சயம் செய்யப் பட்டது. ஏதோ காரணத் தால் அந்த பையன் இறந்து விட்டான். உடனே அந்த பொண்ணு ராசி இல்லாத பொண்ணு. அதான் நிச்சயம் செய்யப்பட்ட பையன் செத்துப் போயிட்டான் என செய்தியை பரப்பி விட்டார்கள். அதை அறிந்து நான் போய் அந்த பெண்ணை மணந்தேன். இன்னிக்கு வரைக்கும் நான் சாக வில்லை.

திருத்துறைப்பூண்டியில் நடந்த தீக் குண்டம் இறங்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீயில் இறங்கினேன். தஞ்சை பெரியார் சிலை திறப்பு விழா உட்பட பல வெளியூர் நிகழ்ச்சிக்கு போய் உள்ளேன். தனித் தமிழ்நாடு போராட் டம் சட்ட எரிப்பு போராட்டம் என பல போராட்டங்களில் கலந்து கொண்டேன். நான் சிறுவன் எனக் கூறி கைது செய்யவில்லை. சிறைக்கு போகாதது வருத்தம்தான். இனி வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன்.

கச்சனத்தில் ஆர்.எஸ்., சாந்தன் கோவிந்தசாமி, வைத்தியநாதன் மற்றவர்களோடு சேர்ந்து ஜாதி ஒழிப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஆப்பரக்குடி மீனாட்சி தியேட்டரில் நடத்தினோம். அந்த மாநாட்டில் அய்யா, ஆசிரியர், பாலதண்டாயுதம், எஸ்.எஸ். பாஷா, யாதுப், கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் தலைமையில் அம்பகரத் தூரில் கோயிலில் எருமை மாடு வெட் டுவதைத் தடுத்து நிறுத்த போராட்டம் நடந்தது. அதிலும் கலந்து கொண்டேன். நம்ம போராட்டத்துக்கு பின் அங்கே கிடா வெட்டுவது தடை செய்யப் பட்டது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அய்யாவுடன் சேர்ந்து சில நாட்கள் வேனில் பிரச்சாரத்திற்கு சென்றது வாழ்வில் மறக்க முடியாத வாய்ப்பு
எனது மூத்த மகளுக்கு அய்யா அறிவுக்கண்ணு என்று பெயர் வைத் தார். மயிலாடுதுறையில் அய்யா தலை மையில் நடைபெற்ற கவிஞர் திருமணத் துக்கு போய் வந்தேன். அய்யா காலம் முதல் இன்று வரை முடிந்த வரை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறேன்.

கடைசியா நான் கூற விரும்புவது ஆசிரியரைப் பற்றி அய்யா அவர்கள் ஆசிரியர்மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஆசிரியர் நம் இயக்கத் தின் ஈடில்லா சொத்து. ஓய்வு இல்லாமல் கொள்கைக்காக உழைக்கிறார். தனி மனித ஒழுக்கத்துக்கு இலக்கணம் ஆசிரியர்தான்.

69 சதவீத இடஒதுக்கீடு மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்த வைத் தது பொன் ஏட்டில் பொறிக்கப்பட வேண்டியது.

வாழ்க பெரியார் தொடர்க ஆசிரியர் பணி

சந்திப்பு: தி. குணசேகரன், திருத்துறைப்பூண்டி

Read more: http://viduthalai.in/page3/98222.html#ixzz3V1YXLF78

தமிழ் ஓவியா said...

கம்பராமாயணத்திற்கு ஒரு சவுக்கடி!

கம்பரின் பயனற்ற கற்பனை களுக்கும் பொருளற்ற பாடல் களுக்கும் அடிகள் கடல் தாவு படலத்தை அடுத்தடுத்து எடுத்துக் காட்டுவார். அவர்கள் கூற்றை யான் ஏற்றுக் கொண்டு ஆயினும், சாமி! கம்பரின் நல்ல பாட்டுக்களைப் பாருங்கள் என்று மீண்டும் யான் சுவைக்கும் பாடல்களை எடுத் தெடுத்து மொழிவேன். கடைசியில் வழக்கின் முடிவென்ன?

திருநாவு! அதெல்லாம் சரிதான். கம்பரால் பண்டைத் தண்டதமிழ் மரபு, தனித்தமிழ், தமிழர் இன, நாகரிகச் சிறப்பெல்லாம் மறக்கடிக் கப்பட்டன. சைவ வைணவத்திரு முறைகள் சிறப்புக்களெல்லாம் குறைந்தன. தமிழ்ப் பெருங்காவியங் கட்கும், தமிழிற்குமுள்ள சிறப்புகள் குன்றின. தமிழ்ப்பற்றும் குறைந்தது. ஆரிய நாகரிகமும், வடமொழியும் அதன் காவியங்களும் எங்கும் போற்றப்பட்டன.

பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதி காரம், சிந்தாமணி, மணிமேகலை முதலிய தமிழ்நாட்டாருக்கே உரிய தமிழ்க்காவியங்களைப் பிராம ணர்கள் பயிலாதும் பாராட்டாதும் இகழ்ந்து ஒதுக்குகின்றனர், பிரா மணர்களில் மிகப்பெரும்பாலோர் தேவார திருவாசகத் திருமுறைகளை ஓதுதலும், பாராட்டுதலும் இல்லை. தமிழ்நாட்டுக் கதைகள், வரலாறு களைப் போற்றுவதுமில்லை. இவற்றிற்கெல்லாம் காரணம் கம்பராமாயணமே!

இவ்வாறு பிராமணர்களால் கம்பராமாயணமும், அதன் சார்பான ஆரிய வடநாட்டுக் கதைகளான பாரதம், பாகவதம், கீதை, பஜனை, சாதி, சடங்கு, மூடப்பழக்க வழக் கங்கள், கடவுள் நிலைக்கு மாறான கருத்துக்களும் எங்கும் பரவிவிட்டன.

பிராமணர்களின் இப்பரப்புதல் களால் பார்ப்பனரல்லாதவர்களும் அவர் முறைகளை மேற்கொண்டு நம் தமிழ், தனித்தமிழ் - தமிழின நாகரிகத்திற்கே மாறு பட்டவர் களாய்ப் பொய்க் கதைகளை நம்பி, பயனில்லாச் சடங்குகளைச் செய்து தாமும் ஏமாறி அறிவிலிகளாய் வறிதே வாணாளை வீணாளாக்கு கின்றனர்.

தம்மை சார்ந்த ஏனையோரையும், அவ்வாறாக்கி விடுகின்றனர். ஆதலால் இவற்றிற்கெல்லாம் முதற் காரணமான கம்பராமாயணப் பயிற்சியையும், பரப்புதலையும் புலவர்கள் கைவிட்டாக வேண்டும்.

(மறைமலை அடிகளாரின் மகன் வித்துவான் மறை திருநாவுக்கரசு தீட்டிய - மறைமலை அடிகளின் வரலாறு என்ற நூலில் பக்கம் 648)

குறிப்பு: இதில் நாவு என்று குறிக்கப்பெறுவது மறைமலை அடிகளாரின் மகன் மறை திருநாவுக்கரசு ஆவார்.

Read more: http://viduthalai.in/page4/98224.html#ixzz3V1Z9wCJZ

தமிழ் ஓவியா said...

பித்தக்கோளாறைப் போக்கும்அன்னாசி

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங் களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப் பட்டுள்ளது.

அன்னாசி பெரும்பாலும் வெப்ப மான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.

அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ஃப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதி கரிக்கும்.

இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு, பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர் களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப் பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் நீங்கும். அன்னாசிப் பழத்தை, தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, அனைத்து விதமான உடல் உபாதை களும் தீரும். இதைத் தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர, ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க விடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

Read more: http://viduthalai.in/page4/98225.html#ixzz3V1ZGx0bE

தமிழ் ஓவியா said...

கரை புரளும் உற்சாகம்!

கடந்த இரண்டு மாதங்கள் போல் தமிழகம் வந்திருந்த எனக்குப் பெரும் மகிழ்ச்சி. எப்போதும் ஊரிலிருந்து திரும்பும் போது தாழ்ந்த தமிழகமே என்ற மன உளைச்சலில் தான் வருவேன். இந்த முறை கரைபுரளும் உற்சாகத்தைக் கண்டு நம்பிக்கையுடன் திரும்பியுள்ளேன் !
தமிழகம் பல்வேறு முனைகளில் தாழ்ந்து தான் உள்ளது.

தமிழினத்தின் எதிரிகள் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக இல்லாத மீசையை முறுக்கப் பார்க்கின்றார்கள்.தமிழர்களைப் பிரிப் பதிலும், விலை கொடுத்து வாங்குவதிலும் மற்ற பல வெளியே சொல்லாத திட்டங் களை நிறைவேற்றுவதிலும் மன சாட்சி யையும், இன சாட்சியையும் பண சாட்சிக்கு விற்று விட்ட பிறப்பால் "தமிழர்கள்" என்று சொல்லிக் கொள்ளும் இனத் துரோகிகளை அடையாளம் கண்டு மயக்கப் பார்க்கின்றனர்.

குழப்பப் பட்டு வருவோரும், குழம்பியுள்ளோரும் தங்களை அறிந்து கொள்ளாமல் துணை போகும் படி நிற்கின்றார்கள். நெற்றியிலே பொட்டும், கையிலே கயிறும் கட்டியுள்ள பலர் நெஞ்சிலே பெரியார் இருந் தாலும், நெஞ்சிலே உள்ள பெரியார் மூளைக்குச் செல் வதைப் பல் வேறு பயத்தினாலும், மதப் பிரச்சார மயக்கத்தினாலும் மூளையில் இட்டுள்ள விலங்கை உடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தன்னுடைய தாத்தாவை " டேய் முருகா, அதை எடுத்து வா" என்று சொன்ன பார்ப்பனப் பொடியனும், அவனுடைய குழந்தைகளும் இன்று தங்களையும், தங்களது குழந்தைகளையும் " யுவர் ஹானர். சார் "என்று அழைப்பது யாரால் வந்தது என்று வெளியே சொல்லா விட்டாலும் நெஞ்சிலே உணர்ந்து தான் உள்ளனர்.

அவர்களெல்லாம் இன்று மதவாதம் படுத்தும் பாட்டையும், மதவாதிகளின் திமிர் பிடித்த நடவடிக் கைகளையும் கண் முன்னே கண்டு கலங்குகின்றார்கள். மீண்டும் பார்ப்பன ஆதிக்கம் தமிழர்களைத் தூண்டி விட்டுத் தமிழர்களே பதவி மோகத்தால் தமிழின எதிரிகள் ஆவதையும் கண் கூடாகப் பார்க்கின்றனர்!

இதையெல்லாம் எதிர்த்துப் போராட ஒரே இயக்கமாகக் கருஞ்சட்டைப் படை யினர் முன்னே அணி வகுத்துச் செல்ல அனைத்துத் தமிழர்களும் உடன் தோள் கொடுத்து நிற்கும் உற்சாகமே இன்று கரைபுரண்டு வெள்ளமாக "இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே" என்ற புரட்சிக் கவிஞரின் சங்க நாதத்திற்கு வழி வகுத்துள்ளது.

பொருள் வசதியும், உடல் வசதியும் இல்லாதவர்கள் மற்றும் இளைஞரின் உற்சாகத்தைக் கண்டு மானமிகு ஆசிரியப் பெருந்தகை அறிவித்தலை ஆணையாகக் கொண்டு 80 நாட்களில் நூற்றுப் பதினைந்துக்கும் மேற்பட்ட மாநாடு களைத் திருச்செந்தூரிலிருந்து, சென்னை வரை என்று தினமும் நடத்தும் உற்சாகம் கரைபுரண்டு ஓடும் எழுச்சி தமிழரின் விடி வெள்ளியாகத் திகழ்கின்றது.

தன்னுடைய உடல் நலத்தைப் பணையம் வைத்து இன நலத்திற்காகப் பாடு படும் தலைவர் பய ணங்கள் ஓய்வதில்லை என்று முன் செல்ல கருஞ் சட்டைப் படையினர் உற்சாகத்துடன் வழி நடக்கின்றனர்.

செய்தித் தாள்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்களுக்கே வந்துள்ள இடையூறையும் அச்சுறுத்தலையும் உணர்ந்து இனியாவது நாம் தமிழர்கள் திராவிடர்கள்' என்ற உணர்வைப் பெறட்டும்! பார்ப்பனீய அடிமைத் தனத்தை, மத வாதிகளின் மிரட்டலை ஒழிக்கக் கற்றுக் கொள்ளட்டும்!!

கரைபுரண்டு ஓடும் உற்சாகம் சங்கே முழங்கு என்று முழங்கட்டும்! நன்றி எதிர் பார்க்காத கருஞ்சட்டைப் படையினரை, அவர்களின் தொண்டு தந்தை பெரியாரின் தமிழன் மானமும், அறிவும் உள்ளவனாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற தொண்டு என்பதை ஒவ்வொருவரும் உணரட்டும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

Read more: http://viduthalai.in/page4/98228.html#ixzz3V1Ze8SAc

தமிழ் ஓவியா said...

தாலி வந்தது ஏன்?

சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ் அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது.

புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவது தான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது.

அதற்குப்பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்கு வதற்காகத்தான் தாலி கட்டும் திருமணம் என்னும் சடங்கு நடத்தப்படுகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப் பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி (பக்.101)

(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206)

Read more: http://viduthalai.in/page4/98229.html#ixzz3V1ZqbbAz

தமிழ் ஓவியா said...

நெய்வேலி அருகே பழைமையான கல் ஆயுதம் கண்டெடுப்பு

மருங்கூர் கிராமத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழைமையான கல் ஆயு தத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் கிராமம் பல அரிய தகவல்கள் பொதிந்துள்ள இடமாக கருதப்படுகிறது. இங்கு அரசு மருத்துவமனைக்கு வடக்குப் பகுதியில், கிழக்கு மேற்காக சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் கிடைத்து வருகின்றன.

அதாவது, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இரும்புக் காலத்திய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.

கல் ஆயுதம்: இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த ஊரைச் சார்ந்த ராஜசேகர் என்பவர், தனது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதற் காக தோண்டியபோது, சுமார் மூன்ற ரையடி ஆழத்தில் கல் ஆயுதம் கிடைத் துள்ளதாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில், இந்தத் துறையைச் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட ஆய்வு மாணவர்கள் கல் ஆயுதத்தை ஆய்வு செய்தனர். 1,050 கிராம் எடை கொண்ட கூழாங்கல்லின் நடுப்பகுதியில் 6 செ.மீ. அளவில் வட்ட வடிவ துளை இடப்பட்டுள்ளது. மேலும், 12 செ.மீ. சுற்றளவும், 6 செ.மீ. கணமும் கொண்ட தாக இந்த ஆயுதம் வடிவமைக்கப்பட் டுள்ளது.

இந்த ஆயுதத்தின் நடுவில் உள்ள துளையில் 6 செ.மீ. கன அளவு கொண்ட ஒரு வலிமையான மரக் குச்சியினை சொருகி, கதை போன்ற தற்காப்பு ஆயுதமாக பண்டைய கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம்.

மேலும், நெல், பயறு வகை தானி யங்களை பிரித்தெடுக்கவும், விலங்கு களை வேட்டையாட சுத்தியல் போன்ற கருவியாகவும் இந்த ஆயுதத்தை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த ஊரைச் சார்ந்த ராமலிங்கம் என்பவர், தனது நிலத்தை சீர் செய்தபோது, 4 அடி ஆழத்தில் உடைந்த முதுமக்கள் தாழிகள், அதன் மூடுகற்கள் கிடைத்தன. அந்தப் பகுதியில் இருந்து தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகளும் கிடைத்தன.

பண்டைகால மக்களின் வாழ்விடப் பகுதி: இந்தக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் 10 அடி உயரமும், ஒரு ஏக்கர் பரப்பளவும் கொண்ட பண் பாட்டு மேடு உள்ளது.

இந்தப் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு சாலை சீரமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால செங்கற்கள், சிவப்பு நிற மட்கல ஓடுகள், நான்கு கால்களுடன் கூடிய அம்மிக்கல், பெண்கள் விளை யாடுவதற்குப் பயன்படுத்திய சில்லு கருவிகள் கிடைத்தன.

மேலும், சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு மருங்கூர் பகுதியில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கல் லாயுதங்கள், கற்செதில்கள், பிறைவடிவ கல்லாயுதங்களும் இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது கல் ஆயுதம் கிடைத்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரும்புக் கால பண்பாட்டை சார்ந்த மக்களின் முதுமக்கள் தாழிகள் காணப்படுவதால், இந்த ஆயுதமும் அதே காலக்கட்டத்தை சார்ந்ததாக இருக்கலாம் என சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page4/98230.html#ixzz3V1a999Es

தமிழ் ஓவியா said...

மோடி அரசுக்கு சொந்தக் கட்சி ஆளும் மாநிலமே எதிர்ப்பு!
கோவாவில் மாட்டிறைச்சிக்குத் தடையில்லை!

கோவா முதல் அமைச்சர் அறிவிப்பு

பானாஜி மார்ச் 22_ பாஜக ஆளும் மாநில மான கோவாவில் மாட் டிறைச்சிக்குத் தடை விதிக்க இயலாது என அம்மாநில முதல்வர் லட் சுமிகாந்த் பரோஷ்கர் எதிர்ப்பு தெரிவித்துள் ளார். பரோஷ்கரின் இந்த அறிவிப்பால் மத்தியில் உள்ள பாஜகவிற்கு நெருக் கடி ஏற்பட்டுள்ளது. மத்தியில் பாஜக தலைமையில் ஆன அரசு அமைந்த உடனேயே நாடுமுழுவதும் இறைச்சிக்காக மாடு களைவெட்டுவதை தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப் புகள் கோரிக்கை வைத் தன. இதைத் தொடர்ந்து குஜராத்தில் உள்ள பல் டானா என்ற மாவட் டத்தை மாட்டிறைச்சி இல்லாத மாவட்டமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ராஜஸ் தானில் உள்ள சில மாநக ராட்சிகள், மத்தியப் பிரதேசத்தில் சில மாவட் டங்கள் என மெல்ல மாட்டிறைச்சி தடை விதித்துக் கொண்டே சென்றது, கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதவி ஏற்ற தேவேந்திரபிட்னவிஸ் தடாலடியாக மாநிலம் முழுவதும் மாட்டிறைச் சிக்கு தடைவிதித்தார்.

இதனால் அந்த மாநிலத் தைச் சேர்ந்த 15-லட்சத் திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை ஒரே நாளில் இழந்தனர். இந்த தடையை நாடுமுழுவதும் கொண்டுவரும் முயற் சியில் பல்வேறு பொதுக் கூட்டங்கள் கருத்து கேட்புக்கூட்டங்களை மத்திய அரசு நிகழ்த்தி வருகிறது, தமிழகத்தில் கூட கோவையில் விளம் பரமில்லாமல் சில இந்து அமைப்புகள் மாட்டி றைச்சி தடை செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற கருத்துகணிப்பை நடத்தியுள்ளன.

மத்திய அரசின் சட்ட திட்டங்கள்பற்றிக் கவலையில்லை

இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான கோவாவில் மாட்டிறைச்சியை தடை செய்யமாட்டோம் என்று கோவா மாநில முதல்வர் அறிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: எங்களுக்கு மத்திய அரசின் சட்ட திட்டங்கள் குறித்து கவலையில்லை எங்களின் மாநிலத்தில் பெரும் பான்மை என்ணிக்கையில் மாட்டிறைச்சி உண்பவர் கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை யில் ஒரு பகுதியாக மாட் டிறைச்சி உள்ளது. ஆகை யால் இந்த மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பதை தடைசெய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. மேலும் அவர் கூறிய தாவது, பசு அல்லது காளைகளை சில இந் துக்கள் புனிதமாக கருது கிறார்கள். அதற்காக பெரும்பான்மையான எண்ணிக்கையில் மாட் டிறைச்சி உண்ணும் மக் களின் உணவுப்பழக்கத் தில் கைவைக்கமுடியாது. ஊடகங்கள் பாஜக சிறுபான்மையின விரோத கட்சியாக காட்டிவரு கிறது, ஆனால் நாங்கள் ஊடகங்களின் இந்த போக்கிற்கு பலியாகமாட் டோம். கோவாவில் எக்காரணத்தைக் கொண் டும் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கமாட்டோம், என்று கோவா முதல்வர் கூறியுள்ளார்.

மாட்டிறைச்சி மேளா ஆண்டுதோறும் கோவா விழா ஏப்ரல் மாதம் நடைபெறும் இந்த விழாவில் மாட்டிறைச்சி மற்றும் கடல் உணவு வகைகள் முக்கிய இடம் பெறும், இந்த விழாவின் போது உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். அருகில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்துள்ளதால் கோவாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் அப்படி இங்கும் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்டால் கோவாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளையே அது எதிரொலிக்கும் இதன் மூலம் கோவாவின் முக்கிய பொருளாதார முதுகெலும்பான சுற்றுலா தடைபட்டுப்போகும் ஆகையால் வருமானம் கைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே கோவா முதல்வர் இந்த அறி விப்பை வெளியிட்டுள் ளார்.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தீவிர உறுப்பினரான கோவாமுதல்வரின் இந்த அறிக்கைக்கு இதுவரை ஆர்.எஸ்.எஸ் தலைமை யில் இருந்து எந்த எதிர்ப் பும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Read more: http://viduthalai.in/e-paper/98310.html#ixzz3V79ovfXH

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பிரகதீஸ்வரர்

பிரகதீஸ்வரம் என்றால் உலகெங்கும் வியாத் திருப்பது என்று பொரு ளாம்; அப்படியென்றால் தஞ்சை பிரகதீஸ்வரர் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ருசியா உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் வியா பித்துள்ளாரா? ஏற்றுக் கொள்ளத்தக்கக் கடவுளா? ஒபாமாவும் அன்றாடம் பிரகதீஸ்வரரைத்தான் வணங்குகிறாரா?

Read more: http://viduthalai.in/e-paper/98311.html#ixzz3V7A9SWXJ