Search This Blog

11.6.08

அடிமைத் தாலி அகற்றம்


அம்பத்தூர் வினோதினி - புகழேந்தி ஆகியோர் மூன்றாண்டுகளுக்கு முன்தாலி அணிந்து இணையர் ஆயினர். தோழர் புகழேந்தி படிப்படியாக திராவிடர் கழகக் கருத்துகளையும், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளையும் எடுத்துக்கூறிய காரணத் தால் தோழியர் வினோதினி பக்குவ மடைய, அடிமைத்தளை தாலியை அகற்றிவிட முடிவுக்கு வந்தார்

அத்தகு தாலி அகற்று நிகழ்ச்சி 8.6.2008 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற பகுத்தறிவாளர் கழக மாநி லக் கலந்துரையாடல் கூட்டத்தில் நடைபெற்றது.

தாலியை அகற்று முன் உங்கள் சொந்த முடிவின் அடிப்படையில் இதனை அகற்றுகிறீர்களா அல்லது உங்கள் இணையரின் வற்புறுத்தலாலா? என்று கேட்டபொழுது தோழியர் வினோதினி தெளிவாக நானே இந்த முடிவுக்கு வந்தேன் என்று கூறினார்.

ஆரம்பத்தில் தாலி அணிந்து தான் திருமணம் நடக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தேன்; என் இணையரும் என் கருத்தை ஏற் றுக் கொண்டார். வற்புறுத்த வில்லை. அதன்பின் அவர் கூறிய கருத்துகள், படித்த நூல்கள், கேட்ட கூட்டங்கள்தான் எனக்குத் தெளிவை ஏற்படுத்தின. உற்றார் உறவினர்களுக்குச் சற்று அதிர்ச்சி தான். அது நாளடைவில் சரியாகப் போகும். மனமொத்ததேதான் வாழ்வே தவிர, இத்தகைய போலி அடையாளங்கள் தேவையில்லை என்று கூறினார்.


அதற்குபிறகுதான் அந்த அடிமைத் தளையை அகற்றி, அந்த பவுன் தாலியை திருச்சி நாகம்மை யார் குழந்தைகள் இல்லத்து வளர்ச் சிக்காக இணையர்கள் தமிழர் தலைவரிடம் ஒப்படைத்தனர். பெண்கள் மத்தியில் வளர்ந்து வரும் தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கொள்கை உணர்ச்சி எடுத் துக்காட்டானது என்பதில் அய்யமில்லை. மாநிலம் தழுவிய அளவில் வந்திருந்த தோழர்கள் இந்த இணையரைப் பாராட்டினர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த இணையர்களுக்கு இனமான நடிகர் மு.அ. கிரிதரன் வாழ்க்கை இணைநல ஒப்பந்தத்தை நடத்தி வைத்தார். ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் தோழர் முத்துக்கிருட்டிணன் அதற்கு உதவியாக இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மகிழ்வாக தோழர் முத்துகிருட்டிணன் விடுதலை வளர்ச்சிக்கு ரூபாய் 100/- அய் தமிழர் தலைவரிடம் நன்கொடையாக வழங்கினார்.




---------- நன்றி: "விடுதலை" 11-6-2008 பக்கம் -6

0 comments: