Search This Blog

8.6.08

பிராமணர் மாமிசம் புசித்தவர்களா?பிராமணர் மாமிசம் புசியாதவர்களா?

பிராமணர் மாமிசம் புசித்தவர்களா?பிராமணர் மாமிசம் புசியாதவர்களா?
இக்கேள்வி நம்மவர்களுக்கு அப்போதைக்கப்போது ஜனிப்பதுண்டு. இதைப்பற்றிச் சற்றாராய்வோம். 1871 வருஷத்தில் ஸ்ரீமத் சைதாபுரம் காசி விசுவநாத முதலியாரவர்களாலியற்றிய பிரம்ஹசமாஜ நாடகத்தில் 138-வது ஏட்டில் விளக்கியதை யடியிற்காண்க.

முற்காலத்தில் மாமிசம் புசித்துக் கொண்டிருந்த பிராமண ருக்கும், இக்காலத்திய பிராமணருக்கும் உண்டாயிருக்கிற வித்தியாசமென்ன? கேள்விக்கு விடைகளாவன.

``அவர்வன் என்கிற பிராமணன் வாயிலிருந்து புறப்பட்ட அக்கினியானது ஆயு என்பவன் வமிசத்தையெல்லாம் அழித்து விட்டது. கபிலன் என்கிற பிராமணன் வாயிலிருந்து புறப்பட்ட அக்கினியானது சாரனுடைய புத்திரராகிய அறுபதினாயிரம் பேர்களைப் பஸ்பமாக்கி விட்டது. ஜன்னு என்கிற பிராமணன் கங்கை சுவர்க்கத்திலிருந்து இறங்கி வரும்போது அதைக் குடித்து விட்டான், அகஸ்தியனென்கிற பிராமணன் சமுத்திரத்தைக் குடித்து விட்டான். தூர்வாசன் என்கிற பிராமணன் தன்னால் செய்யப்படுகிற ஒரு சமயசார் சடங்கை முடிக்க வேண்டிப் பகற் பொழுதை நீடிக்கச் செய்தான். பிருகு என்கிற பிராமணன் ஒரு தருணத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களிடங்களுக்குப் போயிருந்த போது, அவன் காலால் விஷ்ணுவின் மார்பிலுதைத்தான். ஒரு கூட்டமான சித்திரக்குள்ளரான பிராமணர் ஒரு புது இந்திரனைச் சிருட்டித்து விட்டார். அகஸ்தியர் சாபத்தால் புருஷன் என்பவன் சுவர்க்கத்தைவிட்டுத் துரத்தப்பட்டதுமல் லாமல் பாம்பாக்கி விட்டான். வசிஷ்டன் என்கிற பிராமணன் சௌதசன் என்கிற இராஜனை இராக்கதனாகச் சபித்து விட்டான். மாண்டல்லியன் என்கிற பிராமணன் இயமனைப் பார்த்து ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை எப்படிப் பட்ட பாவச் செய்கைகளைக் குறித்தும் நரகத்துக்குள்ளாக்க லொண்ணாதென்று கட்டளையிட்டான். தூர்வாசன் சாபத்தால் சுவர்க்க பாடானாகிய வசு என்பவன் இராசாளி யாய் விட்டான். சபரி என்கிற பிராமணன் நூறு சரீரமெடுத்து ஒரு இராசாவினுடைய நூறு பெண்களை மணஞ் செய்து, நூறு வருஷம் அவர்களோடு கூடி வாழ்ந்தான். இருஷியகிருங்கு என்கிற பிராமணன் ஒரு உரோமபாதன் என்கிற இராஜாவின் நாட்டில் 12 வருஷம் மழையில்லாதிருந்த காலத்தில் மழைபெய்வித்தான். விசுவாமித்திரன் என்கிற பிராமணன் ஒரு திரிசங்கு என்னும் இராசனுக்காக அவன் பேரால் ஒரு சுவர்க்கம் புதிதா யுண்டு பண்ணினான். திருது முதலாகிய பிராமணர் சிவன் தங்கள் மனைவிகளைக் கற்பழித்த நிமித்தம் அவனுக்கு புருஷத்துவமில்லாமற்போகச் சபித்து விட்டார். தூருவாசன் கிருஷ்ணனையும், அவனுடைய சந்ததியையும் சபித்து அழித்து விட்டான்.
இவ்வாறான சமர்த்துகளை மாமிசம் புசித்தபிராமணர்கள் விளக்கியிருக்க இப்போது மாமிசம் புசியாத பிராமணர் களாலென்ன மகத்துவங்கள் நடக்கின்றன யாதுமே யாமறிந்திலம். ஆனால் திராவிடர்களை ஏமாற்றித் தொழில் சாலைகளிலும், வியாபாரச் சாலைகளிலும், நிலங்களைப் பயிரிடுவனவற்றிலும் ஏராளமாகப் புகும் மஹத்துவங்களைப் புரிந்தே வரும் இக்காலத்தியப் பிராமணர்கள் காணப்படு கிறார்களென்று தாராளமாகக் கூறலாம்.------------------------ திராவிடன் நேசன் - 16.6.1917

1 comments:

tamilsangami said...

vanakam........www.tamilsangami.blogspot.com