
சேலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவும், வெள்ளி சிம்மாசன அளிப்பு விழாவும் 4.11.71 அன்று மிகவும் சீரும் சிறப்புடனும் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மக்களின் உணர்ச்சி வெள்ளத்திற்கிடையே தந்தை பெரியாரை வெள்ளி சிம்மாசனத்தில் அமர வைத்தார்.
`ஏழைக்கு யானை அளித்த கதை போல் வெள்ளிச் சிம்மாசனம் அளித்துள்ளீர்கள். ஒரு ஏழை யானையைக் கொண்டு என்ன செய்வான்? அதுபோலத்தான் எனக்கும் இந்த வெள்ளிச் சிம்மாசனம் என்றாலும் உங்கள் அன்பின் காரணமாக இதனை ஏற்றுக் கொள்ளுகிறேன்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
தந்தை பெரியாரை அந்த வெள்ளி சிம்மாசனத்தில் அமர வைக்க முதலமைச்சர் கலைஞர் முயற்சித்தபோது தோளைப் பிடித்து அந்த வெள்ளிச் சிம்மானத்தில் அமர வைத்தார் தந்தை பெரியார். பொது மக்கள் ஆரவாரம் செய்து கரவொலி எழுப்பினார்.
0 comments:
Post a Comment