Search This Blog

15.6.08

மதச்சார்பின்மைக்குச் சவால்! சட்டம் பாயுமா?மதவாத அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் என்று தோள் தட்டுகிறோம். இந்துத்துவா என்பது இந்து மதத்தின் சாரம் என்று தோலுரித்துக் காட்டுகிறோம். இந்தியாவுக்குத் தேவை மதச் சார்பின்மையே தவிர ராம ராஜ்ஜியம் அல்ல என்று அடித்துப் பேசுகிறோம்.

பா.ஜ.க.,வும் சங்பரிவார்களும் இந்த நாட்டை இந்து ராஜ்ஜியமாக ஆக்கத் துடிப்பதை ஒவ்வொரு கட்டத்திலும் அங்குலம் அங்குலமாக எதிர் கொள்கிறோம்.
அதே நேரத்தில் இந்துத்துவாவின் வால் வெவ்வேறு வகைகளிலும் சேட்டை செய்வதை நாம் கவனத்தில் கொண்டே தீர வேண்டும். பக்தியைப் பயன்படுத்திக் கொண்டு தந்திரமாக அந்த வேலை நடந்து கொண்டு இருக்கிறது.

அரசு அலுவலகங்களுக்குள் வளாகங்களுக்குள் அந்தச் சித்து வேலை வேகமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, செவ்வாய், வெள்ளி பூஜை என்று அதிகாரப் பலத்துடன் நடந்து கொண்டு இருக்கிறது.

சட்ட ஒழுங்கைக் கவனிக்க வேண்டிய, காக்க வேண்டிய காவல்துறையே சட்ட விரோதமாக காவல் நிலையங்களுக்குள் கோயில் கட்டுகிறது; அதற்குப் பொது வசூல் செய்கிறது.
நடைபாதைக் கோயில்கள் திடீர் திடீர் என்று முளைக்கின்றன. அதில் உண்டியல் வசூல் கண ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை விரிவுபடுத்தும் பணி தேசிய நெடுஞ்சாலைத் துறையினராலும், மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்படுகின்றன.

பல ஆண்டு காலமாக கடை வைத்து வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் நடு வீதியில் நிற்கும் அளவுக்கு ஆக்கிரமிப்பு அகற்றும் வேலைகள் ஓகோ என்று நடந்து கொண்டு இருக்கின்றன.

ஒரு பொதுக் காரியத்தில் பொது நோக்கில் செயல்படும் போது இத்தகைய சேதாரங்கள் தவிர்க்க முடியாததுதான் என்று சமாதானங்களும் கூறப்படுகின்றன.

ரொம்ப சரி; இந்த முற்போக்குத் தீவிர செயல்பாடுகளுக்கு வணக்கம், வாழ்த்துகள்; வந்தனமும்கூட!

அதே நேரத்தில் குழவிக் கல் ஒன்றை உள்ளே வைத்து கோயில்கள் கட்டப்பட்டு உள்ளனவே நடைபாதையில் கம்பீரமாக நிற்கின்றனவே!

பார்ப்பவர்கள் கண்களுக்குப் `பளிச் என்று தெரிகின்றனவே! பக்தர்கள்கூட இது அநியாயம் ஓர வஞ்சனை என்று முணுமுணுக்கும் அளவுக்குச் சட்டம் ஜகா வாங்குகிறதே ஏன்?
இந்தக் கேள்விக்கு உள்நோக்கம் கற்பிக்க முடியுமா?

அரசு அலுவலகங்களில் எந்த விதமான மதச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்று மத்திய மாநில அரசுகளின் ஆணைகள், சுற்றறிக்கைகள் திட்டவட்டமாக இருக்கத்தான் செய்கின்றன.
மத்திய அரசின் ஆணை


Copy of: Letter No.5/23/94-CHC, Govt. of India/Bharat Sarkar Ministry of Home Affairs/Grih Mantralaya, New Delhi the 4th May 1994. From Thiru T.N. SRIVASTAVA, JOINT SECRETARY to Government of India addressed to chief Secretaries of all States/UTS.
Sub: Religious place of worship inside the Government buildings and slogans inscribed on the walls of Government buildings.


Sir,
I am directed to say that in the Consultative Committee meeting of the Ministry of Home Affairs held on 31.1.1994, some Members of Parliament pointed out that in some States religious slogans have been inscribed on the walls of Government buildings and there are religious places of worship inside Goverment buildings. Such a practice is against the secular character of the Country and may give rise to grievances to the other religions. The Hon’ble MPs, therefore, suggested that there should be no religious slogans inscribed on the walls of Government buildings and there should be no religious place of worship inside Government buildings.
2. The above suggestion is brought to the notice of the State Government/UT for necessary action.
3. The Receipt of the letter may kindly be acknowledged.
(T.N. SRIVASTAVA)
Joint Secretary to the Govt. of India.
தமிழ்நாடு அரசின் ஆணையும் மிகத் தெளிவாகவேயிருக்கிறது


Copy of:
STRICTLY CONFIDENTIAL
GOVERNMENT OF TAMIL NADU
Public (Law & Order B) Department
Secretariat, Chennai-9 Letter No.8472/L & 0.B/94-1


From:
Thiru N. Haribhaskar, I.A.S.,
Chief Secretary to Government
Dated: 18.8.94


To
All Secretaries to Government, Secretariat, Chennai-9.
Sir/Madam,


Sub: LAW AND ORDER - Religious places of worship inside the Government buildings and slogans
inscribed on the walls of Government buildings ­ Instructions - Issued.
Ref: i) Government Lr.No.3379/L & 0.B/91-3, Public (L &O.B) Department,dated 16.9.93
ii) From the Government of India, Ministry of Home Affairs, Lr.No.5/23/94 CHC, dtA.5.94.
The Government of India, Ministry of Home Affairs in their letter second cited (copy enclosed) have stated that in the consultative committee meeting ofthe Ministry of Home Affairs, some Members of the Parliament have pointed out that in some States religious slogans have been inscribed on the walls of Government buildings and that there are religious practice against the secular character of the country and may give rise to grievances to the other religions. The Members of parliament have therefore, suggested that there should be no religious slogans inscribed on the walls of Government buildings and that there should be no religious places of worship inside Government buildings.
. In the above circumstances, I am directed to invite attention to the instructions issued in the Government letter (ii) cited wherein it was requested to ensure that construction of any new shrines for religious worship or prayer within the Office Campus or enlargement or modification of any existing shrines for similar purpose is discouraged and also that the provisions of Rule 14(a) of the Tamilnadu Government Servants Conduct Rules 1973 are followed strictly.
I am also to request you to ensure that no religious slogans are inscribed on the walls of the Government Buildings. The instructions may be communicated to all the offices under your control for strict compliance.
The receipt of this letter should be acknowledged.


Yours faithfully,
for CHIEF SECRETARY TO GOVT.


நடைபாதைக்கோயில்களை அகற்றுவதுபற்றி தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை 1973-ஆம் ஆண்டிலேயே ஆணை பிறப்பித் துள்ளது. Go Ms No. 1052 Dated 28.5.1973.அந்த ஆணை என்ன சொல்லுகிறது?

1) In order to have a close watch over the mattter the commissioner, Corporation of Madras and the Commissioners of the Municipalities should instruct the conservancy supervising staff who visit the areas in their jurisdiction frequently in the course of their normal duties to report immediately about the springing up of unauthrorised temples or places of worships.
2) The commissioner, corporation of Madras and the Commissioners of Municipalities on receipt of the reports mentioned in item (1) above should take steps immediately under the existing provisions in the M.C.M.C. Art and the Building Rules framed thereunder to remove such unauthorised temples and places of worship.
3) Periodical reports about the action taken to remove the unauthorised temples should to shown to the Inspecting Officers.

இவ்வளவுத் தெளிவாக ஆணைகள், சுற்றறிக்கைகள் இருந்தும் நடைபாதைக் கோயில்களை அகற்றிட என்ன தயக்கம்? என்ன அச்சம்?

அரசு ஆணை பெற்று நிறுவப்பட்ட தலைவர்களின் சிலைகளைக்கூட வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறுகிற அதிகாரிகள், எவ்வித அனுமதியும் இன்றி, சட்ட விரோதமாக இரவோடு இரவாகக் கட்டுகின்ற கோயில்களைக் கை வைப்பதில் தயக்கம் காட்டுகின்றனர் என்றால் இதன் பொருள் என்ன? சட்ட விரோதச் செயலுக் குத் துணை போகிறார்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியுமா?

இதில் இன்னொரு அதிர்ச்சியூட்டும் கொடுமை என்னவென்றால் அரசு அதிகாரிகளே முன்னின்று கோயில் கட்டுவதுதான்.

எழும்பூர் இரயில் நிலையம் 100-ஆம் ஆண்டு விழாவை நடத்தியுள்ளது (11.6.2008) இந்த நிலையில் எழும்பூர் இரயில் நிலையத்தின் பின்புறத்தில் உள்ள சென்னை மாநகராட்சியின் குடிநீர் வடிகால் வாரியத்தின் அதிகாரிகளே கோயிலை எழுப்பி இருக்கிறார்கள் என்றால், எதில் எங்குப் போய் முட்டிக் கொள்வது! இதுபற்றி சென்னை மாநகர வணக்கத்துக்குரிய மேயர் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கும், ஆணையருக்கும் அதிகாரப் பூர்வமாகக் கடிதமும் கொடுக்கப்பட்டும் எந்தவித நடடிக்கையும் இல்லையே! சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்துக்குள்ளும் கோயில், அங்கு செல்லும் நடைபாதையிலும் கோயில் செங்குத்தாக நின்று கொண்டுள்ளன.திருவான்மியூரில் நடுநாயகமாக சாலையை ஆக்கிர மித்து ஒரு கோயில்; சென்னை சைதாப்பேட்டையில் எதிரில் சாலையில் ஒரு மாடல் பள்ளி ழுழுப் பாதையேயே அடைத்துக் கோயில்; - அதனையொட்டி அர்ச்சகப் பார்ப்பானுக்கு வீடு! இதற்கெல்லாம் யார்தான் என்னதான் சமாதானம் சொல்ல முடியும்?

தருமபுரி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் காவல் நிலையங்கள் போட்டி போட்டுக் கொண்டு காவல் நிலைய அலுவலகங்களையே கொச்சைப்படுத்தும் வகையில் பரம மூடத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி நகரில் தீயணைப்புத் துறைக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு கோயில் அல்ல - இரு கோயில்கள் அல்ல 12 கோயில்களைக் கட்டியிருக் கிறார்கள். தீயணைப்புத் துறையில் பணியாற்றுவோக்கு எப்போதாவதுதான் பணியிருக்கும் - மீதி நேரங்களில் எல்லாம் இவர்களுக்கு இந்தக் கோயில் பணிகள்தாம்.

சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள், மதச் சார்பற்றவர்கள், பகுத்தறிவாளர்கள் எல்லாம் அலு வலகங்களில் பணியாற்றுவது இல்லையா? அவர்கள் மனதில் இந்த நடவடிக்கைகள் எத்தகைய அலைகளை ஏற்படுத்தும்? மதச் சார்பின்மை என்று சொல்லும்போது, அத்தகைய அரசை அமைப்போம் என்று குரல் கொடுக்கும்போது, மதவாத சக்திகளை வீழ்த்துவோம் என்று வீரக் கர்ச்சனையை நாம் செய்யும்பொழுது, மதச் சார்பின்மைக்கு விரோதமான காட்டுத்தனமாக, திட்ட மிட்ட முறையில் நடந்து வரும், மதவாத சக்திகளின் இந்தச் சன்னமான சூழ்ச்சி வலைகளைத் தரைமட்ட மாக்க வேண்டாமா? அடாவடித்தனமான கோரிக்கையல்ல இது.

அரசு ஆணை ரீதியான கொள்கை; இன்னும் சொல்லப்போனால் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள மதச் சார்பின்மை என்ற அடிப்படையில் வைக்கப்படும் கோரிக்கை.
மாநில அரசும், மத்திய அரசும் இந்தப் பக்கம் தங்கள் கண்களைத் திருப்புமா? - எங்கே பார்ப்போம்!


---------- 14-6-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் - மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: