Search This Blog

7.5.11

பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் சிக்கல் பற்றி காந்தியார்

தமிழவேள் வேம்பப்பிள்ளை உமாமகேசுவரனார் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தஞ்சை - கரந்தைத் தமிழ்ச் சங்கமும் தமிழ்க் கல்லூரியும் நினை வுக்கு வந்தே தீரும்.

மதுரை என்றால் அங்கு தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துரைத் தேவர் போல் இவரும் ஆவார். தஞ்சை கரந்தட்டான்குடியில் (கரந்தை) பிறந்தவர் இவர் (7.5.1883). அந்தக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் சட்டம் படிப்பது என்பதே அரிதினும் அரிது. இவரோ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அதனைச் சாதித்துக் காட்டிய தலை நிமிர் தமிழராவார்.

அந்தக் காலத்திலேயே பார்-அட்-லா படித்த ஏ.டி.பன்னீர்செல்வமும், வழக்குரைஞர் உமா மகேசுவரனாரும் தஞ்சை மாவட்டத்தில் நீதிக் கட்சியின் உர மிக்க நிமிர்ந்த தூண்களாக ஒளி வீசினர்.

காந்தியார் அவர்கள் தஞ்சாவூரில் உக்கடை ஹவுசில் தங்கி இருந்தார். (16.9.1927) அப்பொழுது காந்தியாரை நீதிக்கட்சி சார்பில் சந்தித்தவர்களில் ஒருவர் உமாமகேசுவரனார் ஆவார். ஏ.டி.பன்னீர்செல்வம், உக்கடைத் தேவர், சையத் தாஜுதீன், கார்குடி சின்னையாபிள்ளை, பட்டுக்கோட்டை தண்டபாணி செட்டியார் ஆகியோர் காந்தியாரைச் சந்தித்தனர்.

உமாமகேசுவரனார் காந்தியைப் பார்த்து எழுப்பிய வினாக்கள். பிராமணர் - பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும் என்பது முதல் கோரிக்கை.

இரண்டாவது: அதிகாரம் பெறுதல் என்பது பல நோக்கங்களில் ஒன்றாகும். சமூகத் தீமைகளைப் போக்குவதும், மத சம்பந்தமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டு மென்பதும் எங்களுடைய மற்ற கோரிக்கை.

மூன்றாவதாக, உமாகேசுவரனார் காந்தியாரிடம் கூறியது:
இந்து சமயத் தலைவர்கள் எங்கள் இயக்கத்தைக் கவனியாதிருந்தபோது, நடந்தவரையில் நடைபெறட்டும் என்று கருதி இந்துக்கள் அல்லாதாரும் இயக்கத்தின் தொடக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். பிராமணரல்லாதார் பல வழி களிலும் பிராமணர்களால் அவமதிக்கப்பட்டிருக்கின்றனர். பொது மக்களிடையே இப்பொழுது விழிப்பு ஏற்பட்டிருக் கிறது என்றும் காந்தியாரி டம் எடுத்துரைத்தார். (இந்த உரையாடலின் முழு விவரம் 2ஆம் பக்கத்தில் காண்க).

தமிழ்ப் பொழில் என்னும் இதழையும் நடத்தினார். ஸ்ரீமான், ஸ்ரீமதி என்ற வட சொற்களுக்குப் பதில் திரு மகன், திருவாட்டி என்னும் சொற்களை அதில் கையாண்டார்.


பத்திராதிபர், சந்தா, விலாசம், வி.பி.பி. என்பனவற் றுக்கும் பதிலாக பொழிற் றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலை கொளும் அஞ்சல் போன்ற அருஞ்சொற்களைத் தமிழுக் குத் தந்தார். யாழ் நூல், நக்கீரர், கபிலர், தொல் காப்பியம் போன்ற நூல் களைப் பதிப்பித்த செம்மலும் இவரே! கூட்டுறவுத் துறை யில் அவர் பொறித்த முத் திரைகள் அவர் பெயரை இன்றும் நினைவு கூர்கின்றன.

----------------- மயிலாடன் அவர்கள் 6-5-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

***********************************

தமிழவேள் உமா மகேசுவரன் பிறந்த நாள் நினைவாக (7.5.1983) - (9.5.1941)

மன்னார்குடியிலிருந்து நாகப் பட்டினம் பாச்ஞ்சர் இரயிலில் மறுநாள் காலை தஞ்சாவூருக்கு அண்ணலும் அவரது குழுவினரும் வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும், கூட்டத்தைத் தவிர்ப்ப தற்காக அதற்கு முந்திய இரயில் நிலையத்தில் காந்திஜி இறங்கிவிடு கிறார் என்பதை அறிந்த தஞ்சை மக்கள் இன்று ஒரு தந்திரம் செய் தார்கள். மன்னார்குடியிலிருந்து தஞ்சைக்குள் டாக்ரோடு வழியாக நுழையக்கூடிய இடத்தில் நின்றார்கள். ஆனால் இம்முறை காந்திஜி அவ்வாறு இறங்கவில்லை. திட்டப்படி தஞ்சாவூர் இரயில் நிலையத்திலேயே வந்து இறங்கினார். மறுபடியும் பொதுமக் களுக்கு ஏமாற்றம் தான். தஞ்சையில் காந்திஜி குழுவினர் உக்கடை ஹவுஸ் இல் தங்கியிருந்தார்கள்.

இந்த நகரில் நடைபெற்ற ஒரு முக்கியமான காரியம் நீதிக்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும், காந்திஜி யும் சந்தித்துப் பேசியதேயாகும். பன்னீர்செல்வம், உமா மகேசுவரம் பிள்ளை (நீதிக்கட்சித் தலைவர்கள்) உக்கடைத்தேவர், சையத் தஜுதின், கார்குடி சின்னையாபிள்ளை, பட்டுக் கோட்டை தண்டபாணி செட்டியார் ஆகியோருக்கு அண்ணல் பேட்டி அளித்தார். (மற்றும் பாப்பநீடு ஜமீன்தார், கே.நடராஜன் முதலிய பல பிரமுகர்களையும் காந்திஜி சந்தித்துப் பேசினார்.

கே.நடராஜன் தாயாரான வயதான அம்மையார் காந்திஜியைப் பார்க்க வந்தபோது அண்ணல் அவரை அன்போடு வரவேற்று, பெண்கள் கட்டிக் கொள்ளத்தக்க மெல்லிய புடவைகள் கதரில் இருப்பதாகச் சொன் னார்) நீதிக்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியது இருதரப்பினருக்குமே நல்லதாகப் போயிற்று. காந்திஜியின் தரப்பை அவர்களும், அவர்கள் தரப்பை காந்திஜியும் அதிகம் புரிந்து கொள்ள இந்தச் சந்திப்பு உதவியது.

நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர் செல்வமும் உமா மகேசுவரம் பிள்ளையும் காந்திஜியைச் சந்த்தித்துப் பேசிய உரையாடல் சுதேசமித்திரன் இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகியிருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பது கூட இப்போது சுவையாக இருக்கும்.

உமா மகேசுவரம்பிள்ளை: பிராமணர் - பிரமாணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலை வர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும்.

மகாத்மா: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப் பற்றிப் பலவிதமாகக் கூறு கிறார்கள். பிராமணர் - பிரமாணரல்லா தாருக்கிடையே இப்போது வேறுபாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் அவை மறைந்து விடும் என்று டாக்டர் வரதராஜுலுநாயுடு கூறுகிறார். என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும் என்னைப் போன்றவர்கள் இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண் டுமென்றும் கூறுகிறார். இப்போது பிராமணர்களி டத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்த போது, எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டில் தாழ் வாரத்தில்தான் உட்கார்ந் திருந்தேன். இப்போது அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறாள்.

பன்னீர்செல்வம்: பிராமணர்கள் அதி காரங்களையும் உத்தியோகங்களையும் தாங்களே வைத்துக் கொள்கிறார்கள். பிற வகுப்பார் அவைகளே அடைவதற்கு இடமில்லாமற்போய் விடுகிறது.

மகாத்மா: நீங்கள் சொல்வதிலிருந்து அதிகாரங்களையும் உத்தியோகங்களை யும் பங்கு போட்டுக் கொள்வதே உங்களுடைய முக்கிய குறிக்கோளாய் இருப்பதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு குறிக்கோளுக்கு நான் ஆதரவாயிருக்க முடியாது. பொது மக்களுடைய நன்மை யைத் கருதாத எந்த இயக்கத்திலும் எனக்கு அனுதாபம் கிடையாது.

உமா: அதிகாரம் பெறுதல் என்பது பல நோக்கங்களில் ஒன்றாகும். சமூகத் தீமைகளைப் போக்குவதும், மத சம்பந்த மான சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்பதும் எங்களுடைய மற்ற குறிக்கோள்கள்.

மகாத்மா: உங்கள் இயக்கத்தின் கொள்கையில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது நல்லது. சமய சம்பந்தமான சீர்த்திருத் தங்கள் செய்வது நோக்கம் என்று கூறு கிறீர்கள். ஆனால் பிறமதத்தினரையும் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்களே?

உமா: இந்து சமயத் தலைவர்கள் எங்கள் இயக்கத்தைக் கவனியாதிருந்த போது, நடந்த வரையில் நடைபெறட்டும் என்று கருதி இந்துக்களல்லாதாரும் இயக்கத்தின் தொடக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். பிராமணரல்லாதார் பல வழிகளிலும் பிராமணர்களால் அவம திக்கப்பட்டிருக்கிறார்கள். பொது மக்களி டையே இப்போது விழிப்பு ஏற்பட்டிருக் கிறது.

மகாத்மா: இப்போது நடைமுறையி லிருக்கும் வர்ணாஷ்ரம தர்மத்தைக் களைந்தெறியலாம். ஆனாலும் அடிப்படை யான தத்துவத்தை அழிக்க முற்படலா காது. பிறப்பினால் மட்டும் ஒரு மனிதன் உயர்ந்தவனாகி விடமாட்டான்.

பன்னீர்: கதர் இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல பிராமணரல்லாதார் உங்களோடு சேர்ந்து வேலை செய்ய இடங் கொடுக்காமல் ராஜ கோபாலச்சாரியார் செய்கிறார் என்ற புகார் இருந்து வருகிறது. எஸ்.இராமநாதன் கதர் இயக்கத்தில் இருக் கிறார் என்பது உண் மையே. ஆனால் அவரை யும் வெளியே போகும்படி பிராமணர்கள் செய்து விடுவார்கள். (இவ்வாறு அவர் கூறியபோது ராஜாஜியும் எஸ்.இராமநாதனும் அங்கிருந்தார்கள்.)

மகாத்மா: ஆச்சாரியார் கதர் இயக் கத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித் தவர். கதர் இயக்கத்திலிருந்து அவருக்குப் பணம் கொடுக்கப்படவில்லை. பஜாஜுக்கு நான் எழுதி அவருக்கு உதவி கொடுக் கும்படி செய்தேன். கதர் இயக்கத்தில் ஈடுபாட்டுடன் வேலை செய்யக் கூடிய வர்கள் வந்தால் ஆச்சாரியாரை விலகிக் கொள்ளச் சொல்கிறேன். நானும் விலகிக் கொள்கிறேன். ஆச்சரியார் தமது வக்கீல் தொழில், சம்பாத்தியம், பதவி இவைகளை யெல்லாம் ஏன் விட்டுவிட்டு வரவேண்டும் என்பதை நாம் யோசிக்க வேண்டாமா?

பன்னீர்செல்வம்: கதர் வேலையைக் காரணமாக வைத்துக் கொண்டு தமக்கும், தம்மைச் சேர்ந்தவருக்கும் செல்வாக்குத் தேட வேண்டும் என்பது தான் அவர் நோக்கம். உங்களுடைய பக்கத்தில் இருப்பதால் மக்கள், ஒருவித பிரமையை அடைகிறார்கள். தேர்தல் காலத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளுதல் வழக்கமாகி விட்டது.
மகாத்மா: ஆச்சாரியார் சம்பந்தப்பட்ட மட்டில் அந்த மாதிரியான நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. கதர் இயக்கத்தில் வேஷக்காரர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. அப்படியிருந் தாலும் அவர்கள் கதர் வேடம் தானே போடுகிறார்கள்? அந்த அளவில் நன்மை தானே?


இந்த உரையாடல், அந்தக் காலத்தில் பிராமணர் அல்லாதார் மத்தியிலிருந்த கருத்தை எடுத்துக் காட்டுகிறது. மாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்த உரை யாடலைப் பற்றி காந்திஜி குறிப்பிட்டார். காந்திஜி சொன்னார்:

இங்குச் சில நண்பர்களுடன் நான் பிராமணர் - பிராமணரல்லாதார் சிக்கலைக் குறித்து விவாதித்தேன். இந்த வாதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. முன்னைக் காட்டிலும் சற்று நல்ல முறையில் பிராமணரல்லாதார் இயக்கத்தைப் பற்றி இப்போது நான் புரிந்து கொண்டி ருக்கிறேன். இந்த வாதத்தின் போது என்னைப் பற்றி அவர்கள் ஒரு கருத்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் அது அவர்கள் மனத்தைத் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது என்பதையும் கண்டேன். பிறப்பால் ஒருவர் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று நான் கருதுவதாக அவர்கள் எண்ணுகிறார்கள். எல்லா மனிதர்களும் பிறப்பால் சமம் என்பதுதான் என் கருத்து என்பதை அவர்களுக்கு நான் விளக்கினேன். ஒரு பிராமணரோ அல்லது யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும் போது பிராமணரல்லாதார் அதை எதிர்த்துப் போரிட்டால் அதை முழுக்க முழுக்க நான் ஆதரிக்கிறேன். நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவனல்ல. ஆனால் இந்த நம்பிக்கைகளெல்லாம் எனக்கு இருந்தாலும் வர்ணாஷ்ரம தர்மத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய பெற் றோர்கள், மூதாதையர்கள் ஆகியோரை அனுசரித்த உருவம் எவ்வாறு கிடைக் கிறதோ அதே போன்று அவர்களுடைய ஆற்றலும் கிடைக்கிறது. இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதன் மூலம் நம்முடைய லோகாயத ஆசை களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் படுகிறது. ஆன்மிக வளர்ச்சிக்கு நம் சக்தி பயன்படுகிறது. இதை நீங்கள் ஒப்புக் கொள்வதானால் சமய அடிப் படையில் பிராமணர் - பிரமணரல்லாதார் சிக்கல், எளிதாகத் தீர்ந்துவிடும். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப்பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணனே அல்லன்.

--------------(நூல்: தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 520 - 524

0 comments: