Search This Blog

16.3.08

'தமிழன் படும்பாடு!'

"தினமணி" நாளிதழ் எப்படியெல்லாம் தமிழனை தமிழினத்தை கொச்சைப்படுத்தி எழுதி வருகிறது என்பதை அவ்வப்போது தனது "மின்சார" எழுத்துக்களால் பார்ப்பனர்களுக்கு ச(ஷாக்)வுக்கடி கொடுத்துவரும் "மயிலாடன்" அவர்கள் எழுதிய கட்டுரையை ("விடுதலை" 15-3-2008)படியுங்கள்;உண்மையை உணருங்கள்.

'தினமணி' ஆசிரியரும் ஆர்.எஸ்.எஸ்.,காரருமான திருவாளர் வைத்தி அய்யர் - `துக்ளக் பேக்கரியில் தயாரிக்கப்பட்டவர் அல்லவா!

அதனால் `சோ பாணியிலே நக்கல், குரங்கு சேட்டை எல்லாம் அப்படியே உரித்து வைத்திருக்கிறது.
நேற்றைய `தினமணியில் (14.3.2008) `பாருக்குள்ளே நல்ல நாடு! என்ற தலைப்பில் ஒரு கற்பனை அம்மாமி அப்படம்!

`பஸ் டே என்று மாணவர்கள் பேருந்தின் மேல் ஏறி அமர்ந்து பாடினார்கள் என்ற ஒன்றை மையப் புள்ளியாக வைத்து `தமிழன் என்ற வார்த்தையை இதற்கு மேல் யாரும் கொச்சைப்படுத்த முடியாது என்கிற அளவுக்கு நையாண்டி செய்கிறார். துணைக்கு ஒரு கற்பனைப் பாத்திரம் - ஆப்பிரிக்கர் ஒருவரையும் சேர்த்துக் கொண்டு, அவர் கேள்வி கேட்டது போலவும் இவர் பதில் சொல்வது போலவும் வஜனங்கள்.

1) தமிழன் எப்போதும் நன்றி உணர்ச்சியால் கொப்பளிப்பவன். தன்னை ஆண்டு முழுவதும் சுமந்து சென்ற பஸ்ஸுக்கும் அதை இயக்கியவர்களுக்கும் மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த வழியில் நன்றி தெரிவிக்கின்றனர்.

2) மாநகர பஸ்களில் மாணவர்கள் ஓடி ஏறுகிறார்கள். படிக்கட்டுகளில் தொற்றுகிறார்கள். இதையெல்லாம் உங்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கண்களில் படுவதேயில்லையா என்று அந்த ஆப்பிரிக்கர் கேட்டாராம். அதற்கு இவர் பதில் என்ன தெரியுமா?
`தமிழ் இனத்துக்கு ஒரு ஆபத்து என்றால் ஒரு நாளைக்கு 3 வேளையும் உயிரைவிடக் கூடிய ``டாக்டர் தலைவர்கள் இருக்கிறார்கள்.

3) நீ நினைக்கிற மாதிரி இதெல்லாம் தவறான காரியம் என்றால் பகுத்தறிவாளர்கள், பொதுவுடைமைவாதிகள், ம.க.இ.க.வினர் மனிதஉரிமை ஆர்வலர்கள், சமூக நீதிக்கான போர்வாள்கள் என்று எல்லோருமே அணியாகத் திரண்டு பஸ் கூரையிலேயே தனி மேடை அமைத்து எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்க மாட்டார்களா?

4) தமிழனின் இலக்கிய வரலாறு உனக்குத் தெரியாதா? அந்தக் காலத்திலே தமிழன் போர் எங்கே என்று தினவெடுத்து தோளோடு அலைவான். போரே இல்லாமல் ஆறு மாதம் லே ஆஃப் என்றால் மலை முகட்டிலிருந்து கீழே குதித்து உயிரை விடுவான்.
5) எந்த வயதினனாய் இருந்தாலும், தலைவியைத் தேடி, காதல் வயப்பட்டு, கவிதையோடு செல்வான். எந்தத் தலைவியும் கிடைக்காவிட்டால் மடல் ஏறி மடிவான் என்ற பழைய வரலாற்றை அவனுக்குத் தெரிவித்தேன்.

அப்படியானால் தமிழனுக்குத் தற்கொலை உணர்வு ஆரம்ப காலத்திலிருந்தே இருந்தது என்கிறீர்களா? அதன் வெளிப்பாடுதான் இந்தப் புட்ஃபோர்டு டிராவலா? என்று கேட்டு எரிச்சல் ஊட்டினான்.

6) புட்போர்டு டிராவலில், இலவச பஸ் பாஸ் ஸ்டாப்பிங்கை விட்டுத் தள்ளி நிறுத்தியும், பீக் அவர்ல தாழ் தள சொகுசுப் பேருந்தை அனுப்பி பர்ஸை ஓட்டையாக்கிறதெல்லாம் எங்க நாட்ல இல்லே.. ஏன்னா எங்க நாட்ல பஸ்ஸே இல்லே எல்லாமே நடைதான் என்றான் அந்த வாலிபன்.

இவ்வளவும் நேற்றைய `தினமணி ஏட்டில்.
பஸ்ஸின் மேல் தளத்தில் மாணவர்கள் என்ற கற்பனையை மையப்படுத்தி `தமிழன் என்ற இனத்தை எப்படி எப்படியெல்லாம் சிதம்பரம் தீட்சதர்கள் போல கடித்துக் குதறியிருக்கிறது தினமணி.

தமிழின தலைவர்கள் தமிழ் இலக்கியங்கள், பகுத்தறிவாளர்கள், பொதுவுடைமைவாதிகள், சமூக நீதிப் போராளிகள் என்று ஒன்றை விட்டு வைக்கவில்லை. கலைஞர் அரசின் இலவச பஸ் பாஸ் வரை கரித்துக் கொட்டப்பட்டுள்ளது.

குப்பை மேட்டுலே கிடக்கிற கந்தலை நாலு கால் பிராணி புரண்டிப் புரண்டி, கடித்துக் கடித்து, குதறிக் குதறி எப்படியெல்லாம் சின்னா பின்னாப்படுத்துமோ, சாப்பிட ஒன்றும் கிடைக்காத நேரத்தில் கிடைத்த எலும்புத் துண்டை (அதில் சதைப் பற்று ஒன்றும் இல்லையென்றா லும்), கடித்துக் கடித்து, கடைவாயில் ரத்தம் கசியும் வரை போரா டுமோ.. அதுதான் இந்த நேரத்தில் நினைவுக்கு வந்து தொலைக்கறது.

தமிழர்கள்மீதும், தமிழினத் தலைவர்கள்மீதும், பகுத்தறிவு மீதும், சமூக நீதியின்மீதும், பார்ப்பனர்களுக்கு இன்று வரை இருக்கும் அளவு கடந்த ``துவேஷத்தின் பெருக்கல் தொகைதான் இது என்பதைத் தமிழர்கள் மறந்து விடக் கூடாது.

பார்ப்பன ஏடு தமிழர்களைப்பற்றி இப்படியெல்லாம் எழுதுகிறதே - இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு பார்ப்பானைப்பற்றி (அந்த வார்த்தை யைப் பயன்படுத்தக் கூடத் தொடை நடுங்குவார்கள் - இவ்வளவுக்கும் பார்ப்பான் சரியான தமிழ்ச் சொல்!) ஒரு தினத்தந்தியோ, தினகரனோ, `மாலை முரசோ எழுதத் துணியுமா?

தமிழ் செம்மொழியானால் கத்தரிக்காய் விலை குறையுமா? பிரியாணி கிடைக்குமா என்று `தினமலர் பார்ப்பன ஏடு எகத்தாளம் பேசுகிறது. கோயிலில் தமிழில் பாடச் சென்றால் தமிழன் கையை முறிக்கும் கூட்டம் தான், தமிழைப் விற்றுப் பிழைக்கும் இந்தப் பார்ப்பனக் கூட்டம்தான் தமிழர்களை இப்படியெல்லாம் கொச்சைப்படுத்துகிறது என்பதைத் தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சூத்திரன் என்று இன்று சொன்னால் ஒரு பார்ப்பானுக்கும் பல் இருக்காது என்று நன்கு தெரிந்து வைத்திருக்கும் நிலையில், இப்படி எகத்தாளம், நையாண்டி, கேலி, கிண்டல், சீண்டல் என்கிற யுக்திகளைக் கையாளுகிறது.

நாம் திருப்பி கொடுக்க ஆரம்பித்தால் இந்தக் கூட்டம் தாங்குமா?
அய்ந்து பேருக்கும் தேவி, அழியாத பத்தினி என்று குடும் பத்தைக் கூட்டுறவு சொசைட்டி வைத்து நடத்திய கும்பலா நம்மைப் பார்த்து குரங்காட்டம் போடுவது!
பெற்ற மகள் சரசுவதியையே பெண்டாண்ட பிர்மாதான் படைப்புக் கடவுள் என்று பெருமை பேசும் பித்தர்களா தமிழர்களை தரக் குறைவாக விமர்சிப்பது! யாசகம் புருஷ லட்சணம் என்று பிச்சை எடுப்பதைப் பெருமையாகப் பேசும் உஞ்சி விருத்திகளா பொதுவுடைமைவாதிகளைப் பார்த்து உறுமுவது! ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் எங்கள் அரிஹரபுத்திரக் கடவுள் என்று ஆராதிக்கும் ஆரியக் கூட்டமோ தமிழினத் தலைவர்களைச் சீண்டிப் பார்ப்பது?

எங்கள் ராமன் யார் தெரியுமா? - குதிரைக்குப் பிறந்தவனாக்கும் என்று குதியாட்டம் போடும் கோட்சே கூட்டமா பகுத்தறிவாளர் களைப் பரிகாசம் பண்ணுவது! அவிழ்த்துக் கொட்ட ஆரம்பித்தால் ஏடு தாங்காது. நாடு தாங்காது - எச்சரிக்கை!

தமிழர்கள் எதை மறந்தாலும் புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை மறக்கக் கூடாது!

பார்ப்பான் பால் படியாதீர்;
சொற்குக் கீழ்ப் படியாதீர்;
பார்பபான்; தீதுறப் பார்ப்பான்
கெடுத்துவிடப் பார்ப்பான் - எப்
போதும் பார்ப்பான்
ஆர்ப்பான் நம் நன்மையிலே
ஆர்வம் மிக உள்ளவன்போல்!
நம்ப வேண்டாம்
பார்ப்பானின் கையை எதிர்
பார்ப்பானையே பார்ப்பான்
தின்னப் பார்ப்பான்
தமிழன் பேர் சொல்லி மிகு
தமிழரிடைத் தமிழ்நாட்டில்
வாழ்ந்திட்டாலும்
தமிழழித்துத் தமிழர் தம்மைத்
தலை தூக்கா தழித்துவிட
நினைப்பான் பார்ப்பான்
அமுதாகப் பேசிடுவான்
அத்தனையும் நஞ்சென்க
நம்ப வேண்டாம்
தமிழர்கடன் பார்ப்பானைத்
தரை மட்டம் ஆக்குவதே
என்றுணர்வீர்!


------------------------- புரட்சிக் கவிஞர்

0 comments: