
உலகெங்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள்
இலங்கையில் தமிழினப் படுகொலையை
நிறுத்தக்கோரி உலகம் முழுவதும் தமிழர்கள் போராட்டம்
- பிரான்ஸ் தலைநகரில் 50,000 பேர் ஆர்ப்பாட்டம் -
இலங்கைத் தமி ழினப் படுகொலையைக் கண்டித்து உலகம் முழுவதும் பல் வேறு நாடுகளில் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பிரான்ஸ், தென்னாப்ரிக்கா, சுவிட்சர் லாந்து, நார்வே நாடுகளில் நடந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மட்டும் 50,000 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பிரான்ஸ் நாட்டில் கருப்பு தின ஆர்ப்பாட்டம்
பாரிஸில் உள்ள எக்கோல் மிலித்தர் என்ற இடத்திற்கு முன்னால் உள்ள அமைதிச் சுவர் அமைந்துள்ள இடத்தில் 3 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் கருப்புதின ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. குளிரின் மத்தியிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 50,000 க்கும் மேற்பட்டோர், இலங்கை அரசே! தமிழ் மக்களின் மீதான படுகொலையை நிறுத்து! விடுதலைப்புலிகள் தான் எங்களது ஏகப்பிரதிநிதிகள்! சர்வதேச ஊடகவியலாளர்களை தமிழ் மக்கள் பிர தேசங்களுக்கு அனுப்பு! என் பன போன்ற பதாதைகளைத் தாங்கியவாறும், உணர்ச்சி முழுக்கங்களை விண்ணதிரக் கூவியும் தமிழீழத் தேசியக் கொடி தாங்கியவாறும் பங் கேற்றனர்.
பிரஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன்வோன் கோக் கறுப்புதின ஆர்ப்பாட்ட நிகழ் வில் நேரடியாகக் கலந்து கொண்டு உரையாற்றியதுடன், மக்கள் அளித்த மனுவையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் நகர சபையில் நகரப் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு, இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு எதிராக, தமது கருத்துகளை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக முன் வைத்தனர்.
இந்த எழுச்சிக்கு ஆதரவாக பிரான்சில் உள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் கறுப்புத் துணிகளால் மூடி தமது முழுமையான எதிர்ப்பைத் தெரியப்படுத்தினர்.
சுவிட்சர்லாந்து நாட்டில் போராட்டம்
இலங்கை அரசின் சுதந்திர நாளான 4 ஆம் தேதியை தமிழர் வாழ்வின் துயர்நாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் போராட்டங்கள் முன் னெடுக்கப்பட்டன. அந்த வகையில், அழிவிலும் எழுவோம் என்ற குறியீட்டுப் பெயருடன் சுவிஸ் தமிழ் இளைஞர்கள் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டில் பல பாகங்களில் வாழும் தமிழ் மக்கள் அய்.நா. அலுவலகத்தை நோக்கி அணி திரண்டனர். அங்கு மக்கள் தமது உரிமைகளைக் கேட்டு முழக்கம் இட்டபடி நின்றனர். தமிழர் பேரவை துணைச் செயலாளர் சன்தவராஜா மற்றும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை சிறப்புப் பேச்சாளர் அர்பேட் ஆகியோரின் சிறப்புரைகள் இடம் பெற்றன.
உலக நாடுகளின் அமைதிப் போக்கைக் கண்டு சீற்றம் அடைந்த தமிழ் மக்கள் அய்.நா. அலுவலகத் திற்குள் செல்ல முற்பட்டனர். கம்பி வேலிகளைத் தாண்டி உட் செல்ல மக்கள் துடித்துக் கொண்டு தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண்டு இருந்தனர். சிங்களக் கொடி யைக் கொளுத்தினர். மகிந்த ராஜபக்சேயின் கொடும் பாவியை காலணியால் தாக்கி தங்கள் வெறுப்பைக் காட்டினர்.
போராட்டம் வலுத்ததை யடுத்து, அமெரிக்காவில் உள்ள அய்.நா. அலுவலகத்திற்கு தகவல் அனுப்பித் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு முடிவைத் தரக் கேட்டுக் கொள்வதாக சுவிஸ் அலுவலர்கள் கூறினர். இப்போராட்டத்தில் 20,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நார்வே நாட்டில்
கண்டனப் பேரணி
இலங்கைப் பிரச்சினையில் சமரசம் செய்து வைக்கும் பணியில் ஈடுபட்ட நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் 3 ஆம் தேதி கொட்டும் பனியிலும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆயி ரக்கணக்கானோர் கண்டனப் பேரணி நடத்தினர். தென் ஆப்பிரிக்காவில் ஆர்ப்பாட்டம்
தென்னாப்பிரிக்க மக்களும் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட் டம் நடத்தினர். நீதிக்கும் சமா தானத்திற்குமான தென்னாப் பிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தென்னாப்பிரிக்க தமிழர் கூட்டமைப்பு, அருட்பா கழகம், தென்னாப் பிரிக்க இஸ்லாமிய ஒன்றியம், ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ், தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்டு கட்சி, சிறுபான்மை முன்னணி ஆகிய அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, இலங்கை அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப் பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனை வரும் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உரையாற்றிய அனை வரும் மிகவும் நம்பிக்கை ஊட் டும் வகையில் கருத்துகளைத் தெரிவித்ததுடன் தமிழ் மக் களுக்கு அவர்களுடைய ஆத ரவை வழங்குவதாக உறுதி அளித்தனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சகத் திடம் கண்டன மனு அளிக்கப் பட்டது. இதனை டர்பன் நகர மேயர் லோகி நாயுடு பெற்றுக் கொண்டார்.
கத்தோலிக்க கிறித்தவ மதத்தலைவர் போப் வேண்டுகோள்
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கத்தோலிக்க கிறித்துவ மதத் தலைவர் போப் வற் புறுத்தியுள்ளார்.
வாடிகனில் நடந்த பொது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறிய தாவது:
இலங்கை ராணுவமும் விடு தலைப்புலிகளும் ஆயுதப் போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்க முன்வரவேண்டும். மோசமடைந்து வரும் மனித அவலங்களையும் அங்கு கொல் லப்படும் பொது மக்களின் எண்ணிக்கையையும் பார்த்து நான் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். இரு தரப்பினரும் மனிதாபிமான சட்ட விதிகளையும் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தையும் உறுதி செய்வது அவசியம்.
பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் அவசியத் தேவைகளான உணவு, மருத்துவ வசதிகளை அனுமதிப்பது இரு தரப்பினரது கடமையா கும். மிக அருமையான அந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் உருவாவதற்கு வழியமைக்க வேண்டும்.
- இவ்வாறு அவர் பேசினார்.
------------------நன்றி:- "விடுதலை" 6-2-2009
4 comments:
உலகமெங்கும் உள்ளவர்கள் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த குரலை அலட்சியப்படுத்தாமல் இந்தியா உரிய நடவடிக்கை எடுத்து அதன் மரியாதையை காப்பபற்றிக் கொள்ள வேண்டும் என்பதே நியாயமானவர்களின் எதிர்பார்ப்பு.
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் நடாத்திய ஈழ ஆதரவுப் போராட்டங்கள், பேரணிகள், கண்டனங்கள், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் ஒரே தளத்தில் காண்க:-
http://tamiluyir.blogspot.com/2009/02/blog-post_05.html
நன்றி ஆய்தன்
சத கோடி நிலவெரிக்கும் செந்தூர் முத்துவின் சிதை சாம்பல்
நீ சென்ற இடமெல்லாம் சிறக்கட்டும் தமிழர் நலம்
செந்தூர் முத்து நின் சிதை சாம்பல்
சென்ற இடமெல்லாம் சிறக்கட்டும் தமிழர் நலம்;
அங்கெல்லாம் அறம் தழைக்கட்டும் ஆற்றல் சிறக்கட்டும்!
உண்மை விளங்கட்டும் ஊழல் ஒழியட்டும்!
பெருமை விளையட்டும் பேரன்பு திளைக்கட்டும்!
கல்லடியும் சொல்லடியும் படட்டும்
கசடுகளும் கயவர்களும்!
தன்னலம் இன்றி தமிழர் நலம் நாடுவோர் மீது
கனல் எரியும் காட்டு பன்றிகள் சிரம் அழியட்டும்!
செந்தூர் முத்து நின் சிதை சாம்பல்
சென்ற இடமெல்லாம் சிறக்கட்டும் தமிழர் நலம்.
--செந்தில்--
Post a Comment