Search This Blog

18.2.09

பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா? -3


ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.


தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)

தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்

-------------------------------------------------------------------------------------

காஞ்சி சங்கராச்சாரிகளின் யோக்கியதை இதோ:-

காஞ்சி சங்கரமடத்தின் முன்பிருந்த மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசப் பிதாவுக்கே தீட்டைக் கழித்தவர்--அவரது தீட்டுக் கருத்தியல், பெண்களைக் குறித்த விமர்சனம் ஆகியன மிகவும் பிற்போக்கானவை.

அதிகார மையமாகச் செயல்பட்டு வரும் காஞ்சி சங்கரமடத்தின் இன்றைய மடாதிபதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது, இவருக்கு முன்பிருந்த மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பல்வேறு பத்திரிகைகள் அடிக்கடி நினைவு கூர்ந்தன. அவர் மிகவும் நல்லவர், நேர்மையானவர், அப்பழுக்கற்றவர் என்பதுபோன்ற கருத்துகள் முன் வைக்கப்பட்டன. அவரது தனிப்பட்ட ஒழுக்கத்துடன், ஜெயேந்திரர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒப்பு நோக்கப்பட்டன.

ஆனால் ஒரு மனிதனின் தனிப்பட்ட ஒழுக்கம் எந்தளவுக்கு முக்கியமானதோ, அந்தளவுக்கு அவனது சமூக ஒழுக்கமும் முக்கியமானது. இந்த வகையில் பார்த்தால் அவரது தீட்டுக் கருத்தியல், பெண்களைக் குறித்த விமர்சனம் ஆகியன மிகவும் பிற்போக்கானவை.

15.10.1927-இல் பாலக்காடு நல்லசேரி என்ற பகுதியில் இவர் தங்கியிருந்த போது மகாத்மா காந்தி இவரைச் சந்திக்கச் சென்றார். தேசத் தந்தை என்றழைக்கப்பட்டாலும், காந்தி வைசிய வருணத்தைச் சார்ந்தவர் என்பதால், `சாமியின் தரிசனம் மாட்டுத் தொழுவில்தான் அவருக்குக் கிட்டியது.

வைசியருடன் உரையாடுவதால் ஏற்படும் தீட்டை மாட்டுத்தொழு போக்கி விடும்’ என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம். தேசப் பிதாவுக்கே தீட்டைக் கழித்தவர், மாதப் பூப்புக்களாகும் பெண்களைக் குறித்து பயப்படாமல் இருப்பாரா?


திருப்பதி மலைப் பகுதியில் பேருந்து ஒன்று கீழே விழுந்து பலர் இறந்துபோன நிகழ்வை ஒட்டி அவர் தெரிவித்த கருத்து வருமாறு:

`முன்னெல்லாம் வீட்டு விலக்கு என்று எவர்களை வீடுகளிலேயே தனித்து வைத்தார்களோ அவர்கள் இப்போது கோயிலிலும்கூட விலக்கு இல்லாமல் பிரவேசித்துவிடுகிறார்கள்.

இந்த விதிகளை மீறுவதால்தான் மகாக்ஷத்திரங்களில், விபத்து, விபரதம் எல்லாம் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்’


இதோடு விட்டாரா? இந்தியா முன்னேறாது என்று சாபம் இடுகிறார்.

``இப்போது அந்த மூன்று நாட்களும் ஸ்திரீகள் ஆஃபீஸுக்குப் போவதில் ஊர் பூராவும் தீட்டுப் பரவுகிறது. `அட்மாஸ் ஃபெரிக் பொல்யூஷன்’ என்று இன்றைக்கு அநேக விஷயங்களை எடுத்துக்காட்டி எதிர்நடவடிக்கை எடுக்கும்படி எச்சரிக்கிறார்கள்.

அந்தப் `பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்த்ரீகளின் தீட்டே. அதை இப்படி எல்லா இடத்திலும் கலக்க விட்டால், ஜனங்களுக்கு எத்தனை தான் வரும்படி வந்தாலும், கவர்ன்மென்ட் எத்தனைதான் அய்ந்து வருட திட்டம் போட்டாலும், தேசத்தில் துர்பிக்ஷமும், அசாந்தியும், வியாதியுமாகத் தான் இருக்கும்.’


தீட்டு குறித்த அவரது பயம் ஒருபுறமிருக்க, திருக்குறள்மீதும், தமிழ்மொழி மீதும் அவருக்கு ஒரே பயம்தான். ஆண்டாள் திருப்பாவையில், `செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்’ என்ற தொடர் வருகிறது. இத்தொடரில் இடம் பெறும் `தீக்குறளை’ என்ற சொல் தீமை பயக்கும் புறம்பேசுதலைக் குறிக்குமென்பதே உண்மை. வைணவர்களும் இதே பொருளைத் தான் கூறுகிறார்கள்.

ஆனால் நமது ஆச்சாரியாரோ வேடிக்கையான விளக்கத்தைத் தந்தார். திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன. வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாதென்ற பொருளில்தான் `தீக்குறள்’ என்று ஆண்டாள் குறிப்பிட்டுள்ளதாகப் புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.


வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் எழுதியுள்ள சுயசரிதையில் இவரைப் பற்றி இடம் பெற்றுள்ள ஒரு செய்தி தமிழின்மீது இவர் கொண்ட வெறுப்பு எத்தகையதென்று வெளிப்படுத்துகின்றது.

குளித்துவிட்டு பூசை செய்து முடிக்கும்வரை இவர் தமிழில் பேச மாட்டாராம். சமஸ்கிருதத்தில்தான் பேசுவார். ஏனென்றால் தமிழ் `நீசபாசை’யாம். பூசை முடிந்தபிறகுதான் நீசபாசையில் பேசுவாராம்.

மனிதநேயம் என்ற சொல் அறிமுகமானபோது அவர் தந்த விளக்கம் வருமாறு:

ஸமீபத்தில் `மனிதநேயம்’ என்ற ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப் பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் `மனிதாபிமானம்’ என்று இத்தனை நாளாகச் சொல்லி வந்ததில் `அபிமானம்’ என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல் தான் இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது பரிஹாஸமாகத்தான் இருக்கிறது!

ஏbன்றால், `நேயம்’ என்பதும் ஸம்ஸ்கிருத `ஹநேஹ’த்தின் திரிபுதான்! ஸம்ஸ்கிருதம் என்பது இலக்கண சுத்தமான பாஷை. அதையே பேச்சுக் கொச்சையாக இருக்கும்போது ப்ராக்ருதம் என்பார்கள். அந்த ப்ராக்ருத பாஷையில்தான் ஸம்ஸ்கிருதத்தில் உள்ள நாடகங்களில் ஸ்த்ரீகள், படிப்பில்லாதவர்கள் ஆகியவர்கள் ஸம்பாஷிப்பார்கள். அதிலே `ஸ்நேகம்’ என்றுதான் வரும்.

அது போகட்டும். `மனிதநேயம்’ என்கிறதிலும் முதலில் மனித என்று வைத்துக் கொண்டிருக் கிறார்களே. அதுவும் ஸம்ஸ்கிருத `மநுஷ்ய’வின் திரிபுதானே? ஒருத்தருக்கும் ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் இப்படியெல்லாம் வெறும் த்வேஷத்தில் செய்கிற காரியங்கள் கடைசியில் பித்துக்குளித்தனமாகத்தான் முடிகின்றன.


அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்ட பொழுது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல ஏற்பாடு செய்தார். தமிழ் வழிபாட்டு மொழியாவதை எதிர்த்து வந்தவர். இப்படிப்பட்ட ஒருவரின் பெயரால் புதுச்சேரியிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் `காஞ்சி மாமுனிவர்’ பட்ட மேற்படிப்புத் துறை என்ற துறை ஒன்று புதுச்சேரி அரசியல்வாதி ஒருவரால் உருவாக்கப்பட்டது.

புதுச்சேரிக்கு நல்லதொரு முற்போக்குப் பண்பாட்டுப் பாரம்பரியம் உண்டு. `குயில்’, `சுதந்திரம்’, `புதுவைமுரசு’ என்ற முற்போக்கான இதழ்கள் இம்மண்ணிலிருந்து வெளியாகியுள்ளன. பாரதி நடத்திய `இந்தியா’ பத்திரிகை சிறிது காலம் இங்கிருந்துதான் வந்தது. பாரதிதாசன், தமிழ்ஒளி, வாணிதாசன் போன்ற அற்புத மான கவிஞர்கள் தோன்றிய மண். பிரபஞ்சன், புதுவை சிவம் போன்ற இலக்கியவாதிகள் வாழும் மண்.

இத்தகைய சிறப்புமிக்க பகுதியில் `நீசபாஷை’ என்று தமிழைக் கருதிய, தீண்டாமையை ஆதரித்த ஒருவரின் பெயரால் பட்ட மேற்படிப்பு மையம் அமைந்திருப்பதும், அம்மையத்தின் ஓர் அங்கமாகப் புதுவைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை இருப்பதும், பொருத்தமற்றது. இதை மாற்றியமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முற்போக்காளர் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டும்.

---------------- நன்றி:- ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் `ஜனசக்தி’ 17.5.2007 -இல் எழுதிய கட்டுரை

4 comments:

Unknown said...

இந்த அளவு கொடுமைகளை செய்து வரும் வந்த சங்காராச்சாரிகள் இன்னும் வீதிகளில் உலாவருகிறார்கள் என்றால் தமிழன் இளித்தவாயன்தான்.

இதையெல்லாம் படிக்கும் போது பார்ப்பனர்களின் அயோக்கியத்தங்களை அறியும் போது ரத்தம் கொதிக்கிறது.
ஆனாலும் பார்ப்பனர்களே சும்மா இருக்கும் போது ஒரு சில பார்ப்பனரல்லாதார்கள் பார்ப்பனனுக்கு வக்காலத்து வாங்குவது ஏன்?

வால்பையன் said...

//ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள்.//

எங்க ஒரு சில!
அப்படி இருந்தா சந்தோசப்பட்டிருப்பேனே!

நான் மட்டும் தான் தனியா கூவிகிட்டு இருக்கேன்

வால்பையன் said...

என்னுடய கேள்வியாக இருந்தது

ஏன் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமல்ல!

சங்க்ராச்சாரியார் ஒரு மொள்ளமாறி என்று சொல்லும் நான் பங்காரு பன்னியையும், பாபா கேனபயலையும் சேர்த்து சொல்வேன்.

ஆனால் சிலர் சும்மா பார்ப்பனர்களை மட்டுமே திட்டுவது ஏன் என்பது மட்டுமே எனது கேள்வி!

முழுமையான கடவுள் மறுப்பு கொள்கையுடயவன் நான்.

அதே நேரம் எல்லா கடவுளுக்கும்!
இந்து என்று பிரிவினையெல்லாம் கிடையாது!

என்னை பொறுத்தவரை எல்லா கடவுளும் கற்பனையே!

இது தான் நான் கத்தி கொண்டே இருக்கிறேன்.

Krish said...

இன்று தாழ்த்தப் பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு காரணம் யார்? தெற்கு பக்கம் பொய் பாருங்க. எல்லாம் தேவருங்க! தேவர், கௌண்டர், செட்டியார் ,பிள்ளை மார் , நாயுடு, வன்னியர், நாடர் இப்படி எல்லா ஜாதிக் காரங்களுக்கும், தாழ்த்தப் பட்டவர்கள், தாழ்த்தப் படடவர்கள் தான் . பிராமனர்களோடு இவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆஅனால் எந்தப் பெரியார் தொண்டனுக்கவது மத்த ஜாதியைப் பத்தி பேச தைரியம் உண்டா? சத்தியமா கிடையாது! அவங்க பண்ற அட்டூழியத்தை கேக்க யாரும் கெடயாது.
ஏன்? ஏன்? ஏன்னா அருவாள எடுத்து ஒரே போட போட்டுடுவன்....
இளிச்சவாயன் அய்யரு தானே. என்ன வென திட்டிக்கலாம். திருப்பி ஏதும் செய்ய மாட்டன்.
ஜாதியை வளர்த்து விட்டு ஓட்டு அரசியல்ல ஈன பொழப்பு நடத்தும், கருணாநிதி, ராமதாசு, பத்தி எதாவது திட்டி எழுத முடியுமா!!!!! முடியவே முடியாதே.