Search This Blog

18.2.09

பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா? -2






ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.


தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)

தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்

-------------------------------------------------------------------------------------


மனையடி சாத்திரத்திலும் வருண தர்மம்!


கட்டடம் கட்டும்போது பார்ப்பனர்கள் தர்ப்பையிலான முப்புரி கொள்ள வேண்டும்.

சூத்திரர்கள் (தமிழர்) ஆக்தியினால் இருபுரி கொள்ள வேண்டும். மூங்கிலால் ஆன முழக்கோலும் பார்ப்பனர்க்காம். உத்திர வேங்கை மரத்தினாலான கோல் சூத்திரர்க்காம் - சங்கு செய் மரம் – பார்ப்பனர்க்கு கருங்காலி மரம், சூத்திரர்க்கு (தமிழர்க்கு) புளியின்.. இன்னும் பாருங்கள்.

நிலத்தை அளக்க சூத்திரர்க்கு நூல் கயிற்றினாலும், பார்ப்பனர் திரிக்க தர்ப்பையினாலும் அளக்க வேண்டும்! இவை மட்டுமா?

அதன் சார்பாய் வடக்கு பார்த்த வாசல் மனை பார்ப்பனர்க்காம்.

கீழ் சார்பாய் மேற்கு பார்த்த வாசல் மனை சூத்திரர்க்காம்; இன்னும் கேளுங்கள்..

இனிப்பான மண் பார்ப்பனர்க்காம். கசப்பான மண் சூத்திரர்க்காம்!

இன்னும் பல உண்டு. பார்ப்பனரை உயர்த்தி தமிழர்களைத் தாழ்த்திக் கூறியவை.

நல்ல நாள் பார்த்து கூறுங்கோ சாமிவாள் என்று தங்களை கேட்க வேண்டும். அதனால் தம் ஆதிக்கத்தை நிலை நாட்டில் கொள்ள வேண்டும் என்பதற்காக, கீழ்க் காணும் பயத்தை ஏற்படுத்தக் கூறுவதைப் பாருங்கள்.

கூர்த்த நாண் முகூர்த்தந் தன்னை குறைவறப் பார்த்துக் கொண்டு வாஸ்துவின் இடையறிந்து மனைதனைக் கோணனாகில் சீர்த்தன பெருங் கேடாம்; செய்தவை அனைத்தும் பாழாம்; மூர்த்தமாய் நாசஞ் செய்து முனியையுந் தொடருமன்றே!

தமிழரை நடுங்க வைக்க வகுத்திட்ட பார்ப்பனரின் சூதினை பார்த்தீர்களா? பார்ப்பனர்கள் வகுத்த நாளில் வீடு கட்டத் தவறினால் வீடும் பொருளும் பாழாகும்.

தமிழர்களை எப்படியெல்லாம் கோழைகளாக்கி வைத்துள்ளார்கள் பார்ப்பனர்கள் என்பதை தமிழர்கள் உணரும் காலம் எப்போது?


------------------ஆதாரம்: "சிற்ப நூல்" என்னும் மனையடி சாஸ்திரம்

--------------------நன்றி:- "விடுதலை"10-10-2008


இப்படி நம்மை இழிவு படுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களை நாம் அம்பலப்படுத்தினால் காழ்ப்புனர்வு கொள்கிறோமாம். எப்படி இருக்கிறது கதை. பார்ப்பனர்கள் நம்மை எல்லா வகையிலும் இழிவுபடுத்துவார்களாம் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டுமாம்.

அப்பொழுது தப்பு செய்த பார்ப்பனர்களுக்காக இப்போதும் அவர்களை எதிர்க்கலாமா? என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது.

எந்தப்பார்ப்பான் திருந்தினான், சோ, சு.சாமி, இந்து ராம், தினமணி வைத்தியநாதன் போன்ற பார்ப்பனர்கள் எல்லாம் திருந்திவிட்டார்களா?

பார்ப்பானுக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பனரல்லாத அதிமேதாவிகள் பதில் சொல்லட்டும்.

2 comments:

Unknown said...

//எந்தப்பார்ப்பான் திருந்தினான், சோ, சு.சாமி, இந்து ராம், தினமணி வைத்தியநாதன் போன்ற பார்ப்பனர்கள் எல்லாம் திருந்திவிட்டார்களா?//

இந்த லிஸ்டில் எஸ்.வி.சேகர், போன்ற கோமாளிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பார்ப்பனர்கள் அவர்கள் விசயத்தில் கரெக்டாக இருக்கிறார்கள்( தமிழனை இழிவுபடுத்துவதில்) ஆனால் தமிழர்கள்?
பாப்பானுக்கு காவடி தூக்குவதில் போட்டா போட்டி.
என்று திருந்துவார்களோ?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி



திருநாவு