Search This Blog

2.2.09

வார்த்தை சுத்தமில்லை ராஜபக்சேயிடம்!



(இலங்கை இராணுவத்தினரால், சேதமடைந்த மருத்துவமனையின் பகுதி. உள்படம்: எறிகணை தாக்குதலினால் அச்சமடைந்த சிறுவர்கள் பாதுகாப்பு தேடும் சிறுவர்கள்.)


வார்த்தை சுத்தமில்லை ராஜபக்சேயிடம்!

மக்கள் பாதுகாப்பு வளையத்தின்மீதும்
குண்டு வீசி தமிழர்கள் பலி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வளையப் பகுதிகளான மூங்கிலாறு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவ மனை மீது சிறீலங்கா படை யினர் நேற்று இரவு நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 18 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர். மூங்கிலாற்றில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர் குடியிருப்புக் கள் மீது சிறீலங்கா வான்படை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் பார சூட் மூலம் எரிகுண்டுகளை வீசி தாக்கியுள்ளது.

இதில் 12 தமிழர்கள் கொல் லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர். காய மடைந்த பலர் எரிகாயங் களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளையில், புதுக்குடியிருப்பு மருத்துவமனை நோக்கி நேற்று இரவு 11 மணி யளவில் சிறீலங்கா படையினர் செறிவான எறிகணை, பல்குழல் மற்றும் பீரங்கித் தாக்குதல் களை நடத்தியுள்ளனர்.

மருத்துவமனையின் பெண் நோயாளர் பகுதியில் பெரு மளவிலான எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதில் 6 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த மருத்துவமனை வளா கப்பகுதியில் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்க குழு மற் றும் அய்க்கிய நாடுகள் சபை யின் பணியகங்களும் இருக்கின்றன.

மருத்துவமனை மீது நடத் தப்பட்ட எறிகணைத் தாக்குதலை அனைத்துலக செஞ் சிலுவைச்சங்கத்தின் கொழும்பு வதிவிடப் பிரதிநிதியும் உறுதிப் படுத்தியுள்ளார்.


------------------நன்றி:”விடுதலை” 2-2-2009

0 comments: