Search This Blog

18.2.09

ஆயிரம்( பெண்குறிகள்) கண்ணுடையான் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது.

தேவர்களின் தலைவன் தேவேந்திரன். இந்தப் பதவி பரம்பரைப் பதவியல்ல. தேர்தலில் நின்று வென்று அடைய வேண்டிய பதவி. ஆனால் தேவேந்திரனின் மனைவியான இந்திராணியோ நிரந்தரமானவள். யார் தேவேந்திர பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு மனைவி இந்திராணிதான். இது என்ன அசிங்கம் பிடித்த ஒழுக்கக் கேடு என்கிறீர்களா? இதுதான் அவாளின் ஒழுக்கம். அதைத்தான் புராணங்கள் பிரதிபலிக்கின்றன.தேவேந்திரன் பதவி நிலையானதல்ல. அடிக்கடி அதற்குப் போட்டி வருவதுண்டு.

அப்பாவியான அகலியை எனும் பெண்ணைக் கெடுத்ததோடு கல்லாக்கிய கல்மனங்கொண்ட காமாந்தகாரன் தேவர்கள் எப்பேர்ப்பட்ட ஒழுக்கங் கெட்டவர்கள் என்பதற்கு இந்தப் புராணமே போதும்.

கௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.
தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.

முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான்.

கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான். அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.

அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், ``இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்’ என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.

அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.
இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள். இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான்.

கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்துவணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.

ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.

எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்’ என்றும் `வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு’ என்றும் சபித்தார்.

அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர். அகலிகை தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினாள். அப்போது முனிவர் `சிறீமந் நாராயணன் ராமனாக அவதரித்து விசுவாமித்திரருடைய யாகத்தை நிறைவேற்ற கானகத்துக்கு வருவார். அந்த ராமர் பாதம் பட்டு சாபம் நீங்கி சுய உருவைப் பெறுவாய்’’ என்று கூறிவிட்டு வெளியேறினார் முனிவர்.

சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் `இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்’’ என்று கூறினார்.

இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்து பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன.எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது.


------------------- நன்றி:- "விடுதலை" - 19-5-2007

3 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Unknown said...

ஆபாசமாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது தேவேந்திரக் கடவுளின் கதை.

ஏதாவது ஒரு கடவுள் கதையாவது ஆபாசமில்லாமல் இருந்தால் அந்தக்கதையை தெரிவிக்கவும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி



திருநாவு