Search This Blog

13.2.09

இலங்கை அரசின் பக்கம் யுத்த தர்மம், நியதி என்பவை எந்நிலையில் உள்ளது?

குடியரசுத் தலைவரும் குரல் கொடுக்கிறார்

நேற்று நடைபெற்ற (12.2.2009) நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்கள் அரசின் கொள்கை முடிவுகளை விரிவாக எடுத்துரைத்த நேரத்தில் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் இலங்கை அரசின் போரைக் குறித்தும் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் தேவை என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். உரை குடியரசுத் தலைவருடையதாக இருந்தாலும், அது மத்திய அரசின் கொள்கையேயாகும். அந்த வகையில், கோடானுகோடி உலகத் தமிழர்கள் சார்பிலும், மனிதநேய மாண்பாளர்கள் சார்பிலும் இந்தியக் குடியரசுத் தலைவரின் இந்தக் கருத்தினை மனம் கனிந்து கரவொலி எழுப்பி வரவேற்கிறோம்.

இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று மத்திய அரசு சரியாக வலியுறுத்தவில்லை என்ற குற்றச்சாற்று அழுத்தமாக இருந்துவரும் நிலையில், குடியரசுத் தலைவர் உரை மூலமாக மத்திய அரசு தன் கருத்தினைப் பதிவு செய்து இருப்பதாகக் கருதலாம்.

இதனையும் இலங்கை அரசு புறக்கணிக்குமானால், அடுத்தகட்ட நடவடிக்கையைக் குறித்து மத்திய அரசு உரிய முறையில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்போம்.

இந்திய அரசின் அணுகுமுறைப் பயணத்தில் அடுத்து என்ன என்ற நிரலில், புதிதாக இணைக்கப்படுவதுபற்றி முடிவு செய்யவேண்டியது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே!

இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலாளரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் இலங்கைக்குச் சென்று திரும்பியுள்ள நிலையிலும், இந்தியாவின் குடியரசுத்தலைவர் இலங்கை அரசை வலியுறுத்தியிருக்கக் கூடிய சூழ்நிலையிலும், போர் நிறுத்தம் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா - இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளின் கூட் டறிக்கை, அய்ரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜெர்மன், பிரான்சு, கனடா, நெதர்லாண்ட், மலேசியா போன்ற நாடுகள் ஒரே குரலாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும்; உயிர்ப் பலி தடுக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். அய்.நா.வின் பொதுச்செயலாளரும் அவ்வாறே கூறியிருக்கிறார்.

இதற்குப் பிறகும் இலங்கை அரசு அடம்பிடிக்குமேயானால், உலக நாடுகளின் பொதுக் கருத்தைத் திரட்டும் பணியில் இந்திய அரசு ஈடுபடுவது என்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகும்.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணைக் குழு சென்னையில் (11.2.2009) கூடி ஈழத் தமிழர்ப் பிரச்சினையை அய்.நா. மன்றத்துக்கு இந்தியா எடுத்துச் செல்ல வலியுறுத்துவது என்றும், உலக நாடுகளின் கருத்தினை உருவாக்குவது என்றும் தீர்மானத்திருப்பதும் இந்த இடத்தில் இணைத்துப் பார்க்கத் தகுந்ததாகும்.

விரல் விட்டு எண்ணக்கூடிய சில நாடுகளைத் தவிர பெரும் பாலான நாடுகள் இலங்கையில் அவ்வரசு மேற்கொண்டுள்ள போரினை நிறுத்தவேண்டும் என்றே கோரியுள்ளன.

இப்படியொரு அழுத்தத்தையும் திமிரிக்கொண்டு இலங்கை அரசு தொடர்ந்து ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் நாசகார வேலையில் ஈடுபடுமானால், இந்தியாவோ, உலக நாடுகளோ அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

இனப்படுகொலை என்று வரும்போது அதில் தலையிட மற்ற நாடுகளுக்கும் உரிமை உண்டே! செஞ்சிலுவைச் சங்கத்தினர்கூட வெளியேற்றப்பட்டுள்ளனர் என்கிற போது, இலங்கை அரசின் பக்கம் யுத்த தர்மம், நியதி என்பவை எந்நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த நிலைக்குப் பிறகும் அய்.நா. தலையிடத் தயங்குமே யானால், அதற்குப் பின் எந்தப் பிரச்சினையில்தான் அய்.நா. தலையிட முடியும்?

குடியரசுத் தலைவரின் உரை என்பது மாண்புக்குரியதாகும். அதனை யாரும் அலட்சியப்படுத்தவும் முடியாது.

இந்தத் திசையை நோக்கி தமிழர்கள் ஒருமனதாகக் குரல் கொடுப்பார்களேயானால், இந்தியா மேலும் அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. தமிழகக் கட்சித் தலைவர்கள் சிந்திப்பார்களாக!

------------------- "விடுதலை" தலையங்கம் -13-2-2009

2 comments:

இறைகற்பனைஇலான் said...

இல்ங்கை த்தமிழர் நலஉரிமைப்பேரவை யின் தீர்மானம் காரணம் என்று நினைப்பது
அழகல்ல. தலையங்கம், அறிக்கை ,எதுவாக இருந்தாலும் கலைங்கரின் புகழ் காகவேதானே தவிர இனத்தினைக்காக்க வா என்று அய்யப்படவைக்கிறது .எல்லாம் முடிந்த்ப்பின் அழுவதற்கு பெரியார் இயக்கம்
தேவை இல்லை. இவ்வளவு அவகாசம்
தருவது எல்.டி.டி.ஈ. தலைமை எதெச்சதிகாரமானது என்று காட்டிக்கொடுப்பது பெரியார் மொழியில் சொல்வதானால் "அறிவு நாணயமற்ற செயல்.

தமிழ் ஓவியா said...

அய்யா யாரும் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக கண்டு கொள்ளப்படாமல் இருந்த போது முதன் முதலாக 23-9-2008 அன்று இரயில் மறியல் போராட்டம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியதே தி.க.வும். வீரமணியும்தான். அது தொடர்பான செய்திகள் உங்கள் பார்வைக்கு....

"திராவிடர் கழகம் நடத்திய ரயில் மறியல் போராட்டம்

ஆயிரக்கணக்கில் கழகத்தினர் கைது!

தமிழர்கள் ஒன்று சேர்ந்து
நிற்கிறோம் இது முதல்கட்டப் போராட்டம்தான்!

வெள்ளம்போல் திரண்டிருந்த தோழர்கள் மத்தியில் தமிழர் தலைவர் போர் முழக்கம்!

சென்னை, செப். 23- தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நிற்கி றோம் என்றும், இது முதல் கட்டப் போராட்டம்தான் என்றும், இரயில் மறியல் போராட்டத்துக்குத் தலைமை வகித்த தமிழர் தலைவர் கி. வீரமணி கர்ச்சனை செய்தார்.

இலங்கையிலே ஈழத்திலே தமிழர்களை சிங்கள இராணு வத்தின் குண்டுமழை பொழிந்து கொல்வது ஒரு தொடர் கதையாக நடந்துகொண்டு வருகின்றது.

அதேபோல, தமிழ்நாட்டிலிருந்து நம்முடைய தமிழர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றால், அவர்களை சிங்களக் கடற்படையினர் காக்கை, குருவிகளைச் சுடுவதைப்போல சுடுவது, அவர்களுடைய வலை, மீன்களைப் பறித்துச் செல்வது என்பது ஏதோ அன்றாடம் சடுகுடுப் போட்டி நடந்துவரு கிறது. கடற்படையினர் தமிழர்களை சுட்டு வீழ்த்துகின்றனர்.

தமிழக மீனவர்கள் கடத்தப்படுதல்

தமிழக மீனவர்களை கடத்திக்கொண்டு போய் கொன்று விடுகின்றனர்.

ஏன் இப்படி தொடர்கதையாகி விட்டது என்று கேள்வி கேட்பாரற்ற ஒரு நிலை தொடர்ந்து கொண்டிருக் கின்றது.

கிறித்துவர்கள், முசுலிம்கள் தாக்கப்படுதல்

அதேபோல, இந்தியாவில் பல மாநிலங்களில் கிறித்து வர்கள், கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கின்றனர். தேவாலயங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றார்கள் - இந்துத்துவாவாதிகளான பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பினர்.

மறியலின் நோக்கம்

இவைகளை எல்லாம் தடுத்து நிறுத்தி மனித உரிமை வாழ்வு, குறிப்பாக தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக் கப்படவேண்டும் என்பதற் காகத்தான் திராவிடர் கழகத் தின் சார்பில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் இன்று ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தார்.

கருஞ்சட்டைத் தோழர்கள் குவிந்தனர்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திராவிடர் கழகத் தோழர்கள், தோழியர்கள் இந்த ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்க சென்னை - பெரியார் திடலில் காலையிலிருந்தே குவிந்தனர்.

சரியாக 10 மணிக்கு சென்னை - பெரியார் திடலிலிருந்து திராவிடர் கழகத் தோழர்கள், தோழியர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் போன்ற அமைப் புகளைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர்.

பெரியார் திடலுக்கு வெளியே விளக்கக் கூட்டம்

பெரியார் திடலுக்கு வெளியே அமைக்கப்பட்ட சாமியானா பந்தலில் சிறைக்குச் செல்லக் கூடியிருந்த தோழர் கள் - பொதுமக்கள் முன்னி லையில், ஏன் இந்த ஆர்ப் பாட்டம்? என்பதை விளக்கித் தலைவர்கள் பேசினார்கள்.

கலி. பூங்குன்றன் வரவேற்பு

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங் குன்றன் அனைவரையும் வர வேற்றுப் பேசினார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகம் ஏன் ரயில் மறியல் போராட்டத்தை நடத் துகிறது என்பதை விளக்கி போராட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீர மணி அவர்கள் உரையாற்றி னார்.

அவர் தனது உரையிலே குறிப்பிட்டதாவது:

தமிழ்நாட்டிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள இலங்கையிலே தமிழர்கள்மீது குண்டு மழை பொழிந்து அங்குள்ள தமிழர்களை அழிக்கிறார்கள். அவர்களின் வாழ்வுரிமையை அழிக்கிறார்கள்.

காடுகளுக்கு ஓடினாலும் குண்டுமழை!

சிவிலியன் என்று சொல்லக் கூடிய அப்பாவி மக்கள் காடுகளிலே ஓடி ஒளிந்தாலும் அங்கும் சிங்கள இராணுவப் படை குண்டுவீசி அழிக்கிறது.

இலங்கையில் நடைபெறு கின்ற இதுபோன்ற இனப் படு கொலை உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்திருக்காது.

உலக சமாதான நாள் நடத்தி பயன் என்ன?

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டு வரு கின்றது. உலக சமாதான நாள், உலக ஒற்றுமை நாள் என்று பேசுகின்றார்களே தவிர, உலக அரங்கில் அதற்கு அர்த்தமற்ற சூழ்நிலைதான் விளங்குகிறது.

சிவாஜிலிங்கம் எம்.பி. கூறிய தகவல்

சற்று நேரத்திற்கு முன்புகூட இலங்கையிலிருந்து வந்திருக் கின்ற சிவாஜிலிங்கம் எம்.பி., அவர்கள் என்னைச் சந்தித்து இலங்கையிலே எத்தகைய இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப்பற்றிச் சொன்னார்.

தமிழக மீனவர்கள் சுடப்படுகின்றனர்

இரண்டாவதாக, தமிழகத் திலிருந்து மீன் பிடிக்கச் செல் கின்ற தமிழக மீனவர்களை இலங்கை சிங்கள கடற்படையினர் காக்கை, குருவியை சுட்டுத் தள்ளுவதைப்போல சுடுகிறார்கள்.

இது அன்றாடம் நடந்து வருகின்ற ஒரு தொடர் கதை போன்ற செய்தியாகி விட்டது.

மூன்றாவது காரணம்!

மூன்றாவதாக ஒரிசா, கரு நாடகம் போன்ற பல மாநிலங் களில் கிறித்துவர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள். கன்னி யாஸ்திரிகள் மானபங்கப்படுத் தப்பட்டு இருக்கின்றார்கள். கிறித்துவ தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக் கின்றன.

ஒரிசாவிலே தொழு நோய் சிகிச்சை செய்ய வந்த ஆஸ் திரேலிய பாதிரியார் ஸ்டூ வர்ட்ஸ் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிள்ளைகள் இருவர் உள்பட பஜ்ரங் தளத்தினரால் ஜீப்பில் வைத்து உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

வட நாட்டில் திட்டமிட்டுக் காலித்தனம்

வட நாட்டிலே திட்ட மிட்டு இப்படிக் கலவரம் நடந்துகொண்டிருக்கின்றது.

பரமத்தி வேலூரில்...

தமிழ்நாட்டிலே பரமத்தி வேலூரில் இதுபோன்ற ஒரு கலவரம் நடத்த ஆரம்பித்த பொழுது தமிழக முதலமைச்சர் அதைத் தடுத்து இங்கு அதுபோன்ற மதக் கலவரம் நடைபெறவிடாமல் ஒழித்தார். முளையிலேயே இங்கு கிள்ளி எறியப்பட்டது.

மத்திய அரசின் ஏனோ - தானோ போக்கு!

மத்திய அரசு ஏதோ கண்டும் காணாமல் ஏனோ தானோ என்று நடந்துகொண்டு வருகி ன்றது.

மதச்சார்பற்ற அரசாக நடந்துகொள்ளவேண்டிய அரசு மதச்சார்பற்ற தன்மை யைப் புரிந்துகொள்ளாமல், இன்னமும் மதக் கலவரத்தை நடத்திக் கொண்டு வரும் பஜ்ரங் தள் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது நட வடிக்கை எடுக்காமல், அவர் களை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் வேடிக்கை பார்த் துக் கொண்டிருக்கின்றது.

மத்திய அரசு - வன்முறையைத் தடுத்து நிறுத்த வேண்டும். வன்முறையை செய்பவர்களை தண்டிக்க வேண்டும்.

உடுக்கை இழந்தவன் கை போல உதவக் கூடியவர்கள் நாங்கள்

தமிழர்களுக்கு ஒரு துன்பம் என்றால் சிறுபான்மையின ருக்கு ஒரு துன்பம் என்றால், உடுக்கை இழந்தவன் கைபோல உதவக் கூடியவர்கள் நாங்கள்.

மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும்.

முதற்கட்டப் போராட்டம்

ஏதோ வாய்மூடி மவுனியாக இருக்கக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்வதற்காகத் தான் இந்த ரயில் மறியல் போராட்டம். இது முதல் கட்டப் போராட்டம். இது தொடக்கம்தான்.

திராவிடர் கழகம் நடத்தும் போராட்டம் கட்டுப்பாடு மிகுந்த போராட்டம். காவல் துறை அதிகாரிகளுக்கு எந்தவித வேலையையும் கொடுக் காமல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. எனவே, கட்டுப்பாட்டுடன் நடந்து சிறைக்குச் செல்ல வேண்டும்.

- இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

அன்புத் தென்னரசன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை வடக்கு மண்டலச் செயலாளர் அன்புத் தென்னரசன் தனது உரையில்,

இஸ்ரேலில் நடைபெறு கின்ற தேசியப் படுகொலைக்கு இந்தியா உற்றுநோக்கி கண் டனம் தெரிவிக்கின்றது. இலங்கையிலே நம் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் பாராமுகமாக இருக்கின்றது என்றார்.

பாவலர் அறிவுமதி

பாவலர் அறிவுமதி தனது உரையில், உலகத் தமிழர் களுக்கு ஒத்தடம் கொடுக்கக் கூடிய ஒரு அறப்போராட் டத்தை ஈழத் தமிழர்களுக் காகவும், இங்குள்ள தமிழர் களுக்காகவும் திராவிடர் கழகம் நடத்துகின்றது.

உலகத் தமிழர்கள் எதிர் பார்ப்பதெல்லாம் தமிழர் களுக்கு விடுதலை எப்போது என்பதுதான். உலகத் தமிழர் களுக்கு ஆறுதலாக நடக்கக் கூடிய இந்த ரயில் மறியல் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து பங்கேற்க வந்திருக்கிறார்கள். தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என் பதை நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் இந்தப் போராட்டத்தின் மூலம் எடுத்துக்காட்டியிருக்கின்றனர் என்றார்.

இயக்குநர் சீமான்

இன்றைக்கு ஒரு மகிழ்ச்சி யான செய்தி. மான உணர்வு உள்ளவர்கள் திரண்டிருக் கிறார்கள். ஆசியாவிலேயே, மனித உரிமை மீறல்கள் இலங்கையில்தான் அதிகம் என்று ஆசிய மனித உரிமை அமைப்பு தெரிவித்திருக் கின்றது.

2 லட்சம் பேர் மைதானத் தில் அகதிகளாக ஆக்கப்பட்டி ருக்கின்றார்கள். மக்கள் பட்டினியால் சாகிறார்கள். ஆயிரம் ரூபாய்க்கு மளிகை சாமான்கள் வாங்கினால் 100 கிராம் சீனி கொடுக்கிறார்கள். அதற்கும் விலை .உண்டு. விலை கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கிறது.

ஏ 9 என்ற நெடுஞ்சாலை வழிதடத்தையும் சிங்கள அரசு மூடிவிட்டது. தமிழர்களுக்குப் பொருள்கள் கிடைத்த பாடில்லை.

இதுவரை 6000 முறை சிங்கள இராணுவம் தமிழர்கள் மீது குண்டு வீசி தாக்கி யிருக்கிறது. ஒரு குண்டு எடை ஆயிரம் கிலோ. ஒரு குண்டு வீசப்பட்டால் அது பூமியை பிளந்து தண்ணீரைப் பீச்சி அடிக்கும் என்றால் நம் தமிழர் கள் தலையில் விழுந்தால் என்னாவது? இதுவரை தமிழ் நாட்டைச் சார்ந்த 305 மீனவர்களை சிங்க கடற் படையினர் கொன்றிருக்கின் றார்கள் என்றார்.

பேராயர் எஸ்றா சற்குணம்

பேராயர் எஸ்றா சற்குணம் பேசுகையில், திராவிடர் கழகம் ரயில் மறியல் போராட்டம் நடத்துகிறது என்றால், நாங் கள் வழியனுப்பிவைக்காமல் வேறு யார் வழியனுப்பி வைப் பார். இது வெள்ளைச்சட்டை மட்டுமல்ல, உள்ளே கருப்புச் சட்டையும் இருக்கிறது.

ஒரிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் 100 பேருக்கு மேல் கிறித்தவர்கள் கொல் லப்பட்டிருக்கின்றனர். 80,000 பேர் ஒரிசாவில் நாட்டைவிட்டு காடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் அகதி களாக வாழ்கிறார்கள்.

பஜ்ரங்தளம் போன்ற அமைப்பின்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல ஈழத் தமிழர்களும் கொல்லப் படுகின்றார்கள். இதற் கெல் லாம் முடிவு காண வேண்டும் என்றார்.

டாக்டர் எஸ்.ஏ. சையத் சத்தார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில செயலாளர் எஸ்.ஏ. சையத் சத்தார் பேசு கையில், சிறுபான்மையினர் மீது இந்துத்துவா வாதிகள் குறிவைத்துத் தாக்குகின் றார்கள். தமிழர்களை குறிவைத்து இனப்படுகொலை செய்கிறார்கள். நாங்கள் உறங்குகிறோம் அமைதியாக இருக்கிறோம். எங்களை தட்டி எழுப்பி ஜனநாயகத்தை கெடுத்துவிடாதீர்கள் என்றார்.

பேராசிரியர் தெய்வநாயகம்

திராவிட ஆன்மிக பேரவையின் நெறியாளர் டாக்டர் தெய்வநாயகம் பேசுகையில், இலங்கையில் நடப்பது இரண்டு இனங் களுக்கு இடையே நடை பெறுகின்ற இனப் போராட் டம். ஸ்மார்த்தர் என்ற பார்ப் பனர்களும் திராவிடர் களுக்குமிடையே இனப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது என்றார்.

சிவாஜிலிங்கம் எம்.பி.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஒரு இனப்படு கொலையை நடத்திவருகின் றார். ஒட்டுமொத்த தமிழர் களையும் அழித்து விடலாம் என்று இராணுவத்தை ஏவியுள்ளார்.

சமீபத்தில் ஒரு கொடுமை தொடங்கியுள்ளது. தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழு கிறார்களோ, அங்கெல்லாம் நச்சுப் புகையை வீசிக் கொல்ல காரியங்கள் நடக்கிறது.

இலங்கை ராணுவத்தினர் முகமூடி அணிந்து நச்சுப் புகையை வீசுகிறார்கள். கம் பள விரிப்புபோல நாள் தோறும் சிங்கள விமானப் படை தமிழ்மக்கள்மீது குண்டு வீசி அழித்து வருகிறது.

தமிழ் ஈழம் மலர்வதை யாராலும் தடுத்து விட முடி யாது. திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் நடத்து கின்ற இந்தப் போராட்டம் எங்களுக்கு மன உறுதியை அளித்திருக்கிறது. மனத் தெம்பை அளித்திருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள், உலக மக்கள் உங்களைப் பார்க்கிறார்கள். உங்களைப் பாராட்டுகிறார்கள்.

உலகில் சர்வதேச நாட்டில் தமிழ் ஈழக் கொடி பறந்தே தீரும் என்றார்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

நம்முடைய தமிழர் தலை வர் அவர்கள் இங்கு வைத் துள்ள 3 கோரிக்கைகளும் முக்கியமானவை; தமிழர்களி டையே ஒரு எழுச்சி ஏற்பட் டிருக்கிறது. இதைப் பார்த்து மத்திய அரசு ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றார்.

தொல் திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது உரை யிலே குறிப்பிட்டதாவது:

நாம் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வாழ்த்தி வழி அனுப்ப இங்கு வரவில்லை.

அவரைப் பின்பற்றி அவர் வழி நடக்க இங்கு வந்திருக் கின்றோம்.

ஆசிரியர் அய்யா அவர்களோடு கைகோத்து களம் இறங்கி சிறை செல்ல வந்திருக்கின்றோம் என்று கூறினார்.

இறுதியாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நிறை வுரையாற்றுகையில்,

முதல் அத்தியாயம் தான் இப்பொழுது துவக்கப்பட்டிருக்கின்றது. தமிழர்களை பிரித்தாளலாம் என்று யாரும் தப்புக் கணக்கு போடாதீர்கள். தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பதை இந்த ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளது. முடிவுரை இன்னும் எழுதப் படவில்லை என்றார்.

ஆயிரக்கணக்கில் கைது

பெரியார் திடலிலிருந்து தமிழர் தலைவர் தலைமையில் போராட்ட வீரர்கள் அணி வகுத்து முழங்கமிட்டு ஈ.வெ.கி. சம்பத் சாலை வழியாக உரிமை முழக்கமிட்டுச் சென்றனர். அவர்களை வழிமறித்து காவல் துறையினர் கைது செய்தனர். சரமாரியாகக் கருஞ்சட்டைத் தோழர்கள் காவல் துறையினர் கொண்டு வந்த வாகனங்களில் ஏறிச் சென்று வழி நெடுக முழக்கமிட்டுச் சென்றனர். கொண்டு வந்த வாகனங்கள் போதாமையால் திருப்பித் திருப்பி வாகனங்களைக் கொண்டு வந்து ஏற்றிச் செல்ல நேரிட்டது கண்ணப்பர் திடலில் ஒரு திருமண மண் டபத்தில் வைக்கப்பட்டனர். மண்டபம் கொள்ளாமல் தோழர்கள் நிரம்பி வழிந்தனர்.

தமிழர் தலைவர் மற்ற தலைவர்கள் கைது

இறுதியாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், பாவ லர் அறிவுமதி, இயக்குநர் சீமான், அன்பு தென்னரசன், பேராசிரியர் தெய்வநாயகம், வா.மு. சேதுராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு மாநில பகுத்தறிவு இலக்கிய அணிச் செயலாளர் செ.வை.ர. சிகாமணி, ஆவடி மாவட்டத் திராவிடர் கழக செயலாளர் இரா. மனோகரன் ஆகியோர் ஒலி முழக்கங்களை எழுப்பினர். தோழர்கள் பின் பற்றி ஓங்கி முழக்கமிட்டனர்.

பொறுப்பாளர்கள் கைது

திராவிடர் கழக பொரு ளாளர் வழக்கறிஞர் கோ. சாமி துரை. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு, செயலவைத் தலைவர் ராஜகிரி கோ. தங்கராசு. திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், இரா. குணசேக ரன், டாக்டர் பிறை நுதல் செல்வி, மாநில இளைஞரணி அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன், மாநில மாணவரணி அமைப்பாளர்கள் கா. எழி யரசன், ரஞ்சித்குமார், தலை மைச் செயற்குழு உறுப்பினர் க. பார்வதி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் க. திருமகள், மாநில மகளிரணி அமைப்பாளர் தஞ்சை கலைச்செல்வி, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் கலை வாணி மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த திராவிடர் கழகத் தோழர்கள் தோழியர்கள் கைது செய்யப்பட்டனர்."


----------"விடுதலை" 23-9-2008