Search This Blog

6.2.09

தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லையா?
இலங்கைத் தமிழனே; இது கேளாய்!

கலைஞர் கேள்வி-பதில்கள்

(ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தி.மு.க.வின் பங்கு குறித்த விளக்கம் - பட்டியல் இதில் அடங்கியுள்ளது).

கேள்வி: உலகத் தமிழர்களையெல்லாம் நீங்கள் ஏமாற்றி அவர்கள் காதில் பூ சுற்ற முயலுகிறீர்கள் என்கிறாரே ஒரு தலைவர்?

கலைஞர்: நான் உலகத் தமிழர்களையெல்லாம் ஏமாற்றுகிறேனா இல்லையா என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். உலகத் தமிழர்களுக்காக உழைப்பவர்கள் யார், தியாகம் செய்தவர்கள் யார், செய்பவர்கள் யார், வேடம் போடுபவர்கள் யார், தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் ஆதாயம் தேடிக்கொள்ள முயலுபவர்கள் யார் என்பதையெல்லாம் உலகத் தமிழர்கள் நன்றாகவே உணருவார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபடுபவர்கள் யார் என்பதைப்பற்றி நாவலர் அமிர்தலிங்கம் அவர்களின் துணைவியார் சென்ற வாரம் லண்டனிலிருந்து தொலைபேசிமூலம் என்னிடம் பேசும்போது நன்றாகவே அதனை எடுத்து விளக்கினார். எழுத்தாளர் சோலை இந்த வாரம் எழுதிய கட்டுரையில், ஆஸ்திரேலியாவிலிருந்து தொலைபேசியில் ஈழத்துச் சகோதரர், பத்திரிகையாளர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு, ஈழத்தின் அடிநாதத்தையே மறுப்பவர் ஜெயலலிதா, அதில் அவர் தொடர்ந்து தெளிவாக இருக்கிறார், ஆனால் எம் மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்கிற அரசியல் தலைவர்கள் அந்த அம்மையாரோடு எப்படி அணி சேர்ந்து நிற்கிறார்கள், தயவுசெய்து எம் மக்களை முன்னிறுத்தி உங்கள் உள்ளூர் அரசியலை நடத்தவேண்டாம் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறியதாக எழுதியிருக்கிறார். எனவே, உலகத் தமிழர்கள் காதில் நான் பூ சுற்றுகிறேன் என்று சிலர் சொல்வதால், அவர்களின் ஆத்திரம் எந்த அளவிற்கு பெருகியுள்ளது என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளத்தான் அது பயன்படுகிறதேயல்லாமல் என்னை எதுவும் பாதிக்கவில்லை.

தி.மு.க. தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறதா?

கேள்வி: தி.மு. கழகச் செயற்குழு தீர்மானம் ஏமாற்றம் அளிப்பதாக ஓரிருவர் சொல்கிறார்களே?

கலைஞர்: தி.மு. கழகச் செயற்குழுவிலே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலேயிருந்து விலகிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால், தீர்மானம் திருப்தி தருவதாகச் சொல்லியிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான்கூட அதற்குத் தயாராக இருப்பவன்தான். இலங்கைத் தமிழர்களுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட ஈழத் தந்தை செல்வா அவர்களின் அன்பு மகன் சந்திரஹாசன் எனக்கொரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ஈழத் தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம். ஆயினும் தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகின்றது. தங்கள் உடல்நலத்தைப் போலவே, தமிழகத்தில் தங்களுடைய ஆட்சியும் நலமும் பலமும் பெற்றுத் தொடர்வது இன்றியமையாததாகும். தடாகத்தில் நீர் இருந்தால்தான் தாமரை மலரும், மீன் வளம் பெருகும், பறவைகள் நாடி வரும். அதுபோல் தங்கள் ஆட்சி தொடர்வது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்களுக்கும், எங்குள்ள தமிழர்களுக்கும் இன்றியமையாததாகும். ஈழத் தமிழர் உரிமைகளைப் பாதுகாக்க, அவர்களுக்கு எதிரான போரை நிறுத்த தாங்கள் பதவி துறக்கவேண்டுமென்ற கோரிக்கை அறியாமையில் இருந்து எழுவதாகும். ஈழத் தமிழர்களே அதை விரும்பவில்லை. ஈட்டி இழந்த நிலையில் கேடயத்தையும் தூக்கி எறிய வேண்டுமென்று கேட்பது போன்றதாகும் அது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை எவர் மறந்தாலும், அதனை ஏற்க முடியாது என்று எழுதியிருந்த வாசகங்களும், மருத்துவ மனையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் உள்ளார்ந்த உணர்வோடு கருத்து தெரிவித்த தலைவர்கள், பதவி விலக வேண்டுமென்று கூறுபவர்கள் தாங்கள் அந்த இடத்தைப் பெறலாமா என்ற நப்பாசையோடு கூறுகிறார்கள், அவர்களின் வலைகளில் விழுந்துவிட வேண்டாமென்று எச்சரித்ததும் தான் அத்தகைய தீர்மானத்தை தி.மு.கழகச் செயற்குழு நிறைவேற்றாததற்குக் காரணம். அதனால் ஏமாற்றமடைந்தவர்களுக்கு என் அனுதாபம்!

தி.மு.க. 50 ஆண்டுக்காலம்
பின்னோக்கிப் போய்விட்டதா?

கேள்வி: தி.மு. கழகம் அய்ம்பதாண்டு காலம் பின்னோக்கிச் சென்றுவிட்டது என்றும், 58ஆம் ஆண்டுக்கு முன் எடுத்த முடிவைத்தான் தற்போதும் எடுத்துள்ளது என்றும் ஒரு தலைவர் சொல்லுகிறாரே?

கலைஞர்: அதில் இருந்தே தி.மு. கழகம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இன்றோ நேற்றோதான் அக்கறை காட்டவில்லை என்பதை தெரிந்துகொள்ள முடிகிறதல்லவா? பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவைத்தான் இப்போதும் எடுப்பதாகச் சொல்லுகிறார்கள். நாளைக்கொரு முடிவெடுக்காமல், 50 ஆண்டு காலத்திற்குப் பிறகும், தி.மு.கழகம் அதே முடிவில் இருக்கிறது என்பதில் என்ன தவறு உள்ளது? இவர்கள் மனதைக் குளிர வைப்பதற்காக தி.மு.கழகம் ஒரு முடிவை எடுக்க முடியுமா என்ன?

தி.மு.க. - போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லையா?

கேள்வி: தி.மு.க. தீர்மானத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த தவறிவிட்டது என்றும், அதனால் தமிழர்கள் வெட்கப்படுகிறார்கள் என்றும் ஒருவர் கூறியுள்ளது பற்றி?

கலைஞர்: இதே கேள்வியை செய்தியாளரைவிட்டு, என்னிடம் கேட்கச் சொன்ன போதே, தீர்மானத்தில் போர் நிறுத்தம் குறித்து எழுதப்பட்ட வாசகங்களைப் படித்தே காட்டினேன். போர் நிறுத்தம் பற்றி குறிப்பிடவே இல்லை என்பவருக்குச் சொல்லுகிறேன்; தீர்மானம்பற்றி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்திக்கான தலைப்பு என்ன தெரியுமா? “D.M.K. Resolution calls for Permanent Ceasefire” என்பதுதான். ஆனால் பேட்டியில், போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு வார்த்தைகூட வலியுறுத்தப்படவில்லை என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள் என்றால், எந்த அளவிற்கு உண்மையை மூடி மறைக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா?

தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்கு
ஒன்றுமே செய்யவில்லையா?

கேள்வி: தி.மு.க. அரசுப் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றதும் ஆத்திரப்பட்டு உங்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறார்களே, தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லையா?

கலைஞர்: இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. எந்தெந்த வகையில் போராடியிருக்கிறது, என்னென்ன தியாகங்களைச் செய்திருக்கிறது என்பதையும் ஆட்சியையே இழந்ததையும் இலங்கைத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், ஏன் இந்தியத் தமிழர்களும் நன்கறிவார்கள். ஆனால் தமிழர்களுக்காக தாங்கள்தான் போராடப் புறப்பட்டிருக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். அவர்களும் தெரிந்து கொள்வதற்காக இதோ ஒரு பட்டியல்!

1956 முதல் தி.மு.க.வின் செயல்பாடுகள்

1956ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிதம்பரம் கழகப் பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக நான் முன்மொழிந்த தீர்மானம், 1958ஆம் ஆண்டு இலங்கையில் உரிமைகள் பறிக்கப்படுகின்ற தமிழின மக்களுக்காக பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஒரு மாபெரும் பேரணியை தி.மு.க. நடத்தியதைத் தொடர்ந்து இந்தப் பட்டியல் இங்கே இடம் பெறுகிறது.

* 24.8.1977 அன்று சென்னையிலே 5 லட்சம் பேர் கலந்துகொண்ட பேரணி. கோரிக்கை வைக்காமலே அனைத்துக் கடைகளும் அன்று சென்னையில் மூடப்பட்டன.

* 13-8-1981 அன்று பிரதமருக்கு இலங்கையிலே நடைபெறும் கொடுமை குறித்து தந்தி அனுப்பினேன்.

* 18.8.1981 அன்று பிரதமருக்கும், வெளி உறவுத் துறை அமைச்சருக்கும் தந்தி கொடுத்தேன்.

* 21.8.1981 அன்று சட்டசபையில் அரசின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினேன்.

* 29.8.1981 அன்று தி.மு.க. கண்டனப் பேரணி - அரசு தடை. தடையை மீறி ஊர்வலம் - 250 பேர் கைது.

* 2.9.1981 அன்று சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்.

* 3.9.1981 முதல் சென்னையில் அன்றாடம் தடை மீறி ஊர்வலம் - இலங்கைத் தூதுவரது அலுவலகம் முன்பு மறியல்.

* 15.9.1981 அன்று தடையை மீறி ஊர்வலம் புறப்பட்ட நான் கைது.

* 27.7.1983 சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி

* 28.7.1983 தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி.

* 2.8.1983 அனைத்துக் கட்சிகள் நடத்திய முழு அடைப்பு.

* 4.8.1983 மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் கறுப்புச் சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம். தமிழர் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழிலகங்கள், வாகனங்கள் அனைத்திலும் கறுப்புக்கொடி.

* 5.8.1983 அன்று தமிழகம் முழுவதும் ரயில் நிறுத்த அறப் போராட்டம்.

கண்டனங்கள் - கூட்டங்கள்

* 11, 12, 13, 14.8.1983 தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள்.

* 10.8.1983 நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.

* 1983 ஆகஸ்ட் முதல் - இரண்டு கோடி கையெழுத்துக்கள் பெற்று அய்.நா. மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

* 8.8.1983 டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாநோன்பு.

* 85ஆம் ஆண்டு மார்ச் 29 முதல் ஒருமாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் சென்று இலங்கைத் தமிழர் இன்னல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஒருமாத காலத்திற்கு விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

நாடெங்கும் மறியல்கள்

* ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.கழகப் பொதுக்குழு முடிவின்படி 29.4.1985 அன்று சென்னையில் நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30ஆம் தேதி திருச்சியில் 3000 பேரும், மே 3 ஆம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6 ஆம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7 ஆம் தேதி தஞ்சையில் 6000 பேரும், 8 ஆம் தேதி வட ஆர்க்காட்டில் 2500 பேரும், 13 ஆம் தேதி தென் ஆர்க்காட்டில் 3000 பேரும், 15 ஆம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16 ஆம் தேதி செங்கை அண்ணா மாவட்டத்தில் 3000 பேரும், 17 ஆம் தேதி கோவை நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும்,18 ஆம் தேதி ராமநாதபுரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20 ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் 5000 பேரும், 22 ஆம் தேதி நெல்லை, குமரி, புதுவையில் 5500 பேரும் ஈடுபட்டு கைதாகினர்.

* 16.5.1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.

* 23.8.1985 அன்று சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் பேரணி. பேரணி முடிவில் நாடு கடத்தும் காரியம் நிறுத்தப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது.

* 30.8.1985 அன்று தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டம். ஆயிரக்கணக்கானவர்கள் கைது.

நாடெங்கும் பேரணிகள்

* டெசோ அமைப்பின் சார்பில் அக்டோபர் 3 ஆம் தேதி கோவையிலும், 4 ஆம் தேதி திண்டுக்கல்லிலும், 5 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 6 ஆம் தேதி திருச்சியிலும், 7 ஆம் தேதி சேலத்திலும், 13 ஆம்தேதி வேலூரிலும் மிகப் பிரமாண்டமான பேரணிகளும், கூட்டங்களும் நடைபெற்றன.

* 4.5.1986 அன்று மதுரையில் டெசோ அமைப்பின் சார்பில் அகில இந்தியத் தலைவர்களையெல்லாம் அழைத்து மாநாடு, பொதுக்கூட்டம்.

* 31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு கறுப்புச் சின்னம் அணிந்து கண்டன ஊர்வலங்கள் - பொதுக் கூட்டங்கள்.

* 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டு, போராளி இயக்கங்களுக்காக உண்டியல் மூலம் நிதி வசூலித்துக் கொடுத்த நிகழ்ச்சி. * 1987ஆம் ஆண்டு அக்டோபரில் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் கொடுக்கப்பட்டன.

* 1987ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தி.மு.க. நடத்திய பேரணி

* 16.10.1987 அன்று தளபதி கிட்டுவைக் காணச் சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக்கை.

* இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல் அமைச்சர்களுக்கும் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன்.

கிட்டுவைச் சந்திக்கச் சென்றபோது...


* 17.10.1987 அன்று கிட்டுவைச் சந்திக்கச் சென்ற ஆர்க்காடு வீராசாமி, என்.வி.என். சோமு கைது.

* 22.10.1987 அன்று சென்னையில் இந்தியாவின் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம்.

* 24.10.1987 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம். தொடர்ந்து மறியல் போராட்டம் - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது.

* 6.11.1987 அன்று சென்னையில் ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப்புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச்சங்கிலி.

தமிழகம் முழுவதும் மனிதச்சங்கிலி

* 11.11.1987 தமிழகம் முழுவதும் மனிதச்சங்கிலி.

* 15.3.1989 டெல்லியில் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களை இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தேன். 2.5.1989 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி முரசொலி மாறனுக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து நீண்ட கடிதம். 15.5.1989 அன்று முரசொலி மாறன் - பிரதமர் ராஜிவ் அவர்களுக்குப் பதில் கடிதம்.

* 15.6.1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜிவ் காந்தியுடன் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசினேன்.

* 15, 16.12.1989 ஆகிய நாட்களில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளான பாலசிங்கம், யோகி ஆகியோருடன் சந்திப்பு. 20.12.1989 அன்று பிரதமருடன் சந்திப்பு.

* 4.1.1990 பல்வேறு போராளிக் குழுவினருடன் பிரதமர் கூறியதின் பேரில் சந்திப்பு.

1991 இல் கழக ஆட்சி கலைக்கப்பட்டதே! 1991ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கழக ஆட்சி கலைக்கப்பட்டது.

* 17.7.1995 அன்று ஒவ்வொரு நகரத்திலும் கழகத்தினர் கறுப்புச் சின்னம் அணிந்து உண்ணா நோன்பு.

* 2.11.1995 அன்று சென்னையில் கறுப்புக் கொடி ஏந்திய பேரணி

* 3.11.1995 அன்று மாவட்ட தலைநகரங்களில் கறுப்புக் கொடி பேரணி

* தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் 25 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க நிதி.

* 30.11.1995 முழு அடைப்பு.

இவ்வாறு இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் இதனையெல்லாம் தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நம்மீது களங்கம் கற்பிக்க நினைத்தால், அது நிச்சயமாக நிறைவேறாது.

----------------- நன்றி;-"விடுதலை" 6-2-2009

19 comments:

தமிழ் ஓவியா said...

:)

மேற்கண்ட குறியீட்டுக்கு என்ன பொருள் ஜோதிபாரதி?
தங்களின் வருகைக்கு நன்றி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கலைஞரின் சமீபத்திய அறிவிப்புகள்,கடிதங்கள்,அறிக்கைகள் நகைச்சுவையை ஏற்படுத்தவில்லையா?
உளபூர்வமாக சொல்லுங்கள்!

தமிழ் ஓவியா said...

ஒரு உண்மையைத் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
ஜெயலலிதா காலத்தில் ஈழத்தமிழர்களைப் பற்ரி பேசினாலே குற்றம் என்ற அடட்டுமுற இருந்தது.

வை.கோ. நெடுமாறன், சுபவீ. போன்றோர் பல நாடகள் பிணை எதுவும் இன்ரி சிறையில் வாஅடினார்கள். இதனால் மக்கள் ஈழத்தமிழர்கள் பற்றி வெளிப்படையாக பேசவே தயங்கினார்கள்.

7 ஆண்டுகள் என்ன 710 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தாலும் கவலி இல்லை என்று வீராவேசமாகப் பேசியவர்கள் கூட மூச்சில்லாம் இருந்தார்கள்.
ஆனால் இப்போது அனைத்து தமிழர்களும் தங்கள்து உணர்வை வெளிப்படுத்தி பேசி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் கலைஞர் ஆட்சி.
தமிழ்செல்வன் இறப்பிற்கு கவிதை எழுதியதற்காக கலைஞர் பட்ட அனுபங்களை நினைத்துப் பாருங்கள்

நகைச்சுவை என்று சொல்லும் உங்களைப் பார்த்து வேதனைப் படத்தான் முடிகிறது.

குறைந்த பட்சம் நியாயமான உணர்வை வெளிப்படுத்த முடியாத சூழலை மாற்றி அமைத்ததே போதும் என்பது எனது கருத்து.

களத்தில் இருப்பவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும் புரியும்,

உங்களைப் போல் வெளிநாட்டில் இருந்து கொண்டு பேசுவது வெகு சுலபம்.
நடுநிலையுடன் யோசியுங்கள். உண்மை புரியும்.

நன்றி ஜோதிபாரதி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

செயலலிதா போரின் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது இயற்கை என்று அவருடைய ஆழ்மனதை வெளிக்காட்டிவிட்டார்.

வைகோ,பழ நெடுமாறன் ஐயா, சுப.வீ, திருமா,ஆசிரியர் ஐயா, கலைஞர் இவர்கள் எல்லாம் மேடை போட்டு வாய் கிழிய பேசினால் மட்டும் ஈழமக்கள் மீது குண்டு விழாதா? அதை எப்படித் தடுக்கமுடியும் என்பதை பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்க்காமல் வேறு யாரிடம் எதிர்பார்க்கச் சொல்கிறீர்கள்?

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்கிறீர்கள். சரிதான்.
அதற்கு வெற்று அலைச்சல் அலைக்கழிப்புகள், அறிக்கைகள்,மனிதச் சங்கிலி இதெல்லாம் எதெற்கு?
களத்தில் இருப்பதாகக் கூறுகிறீர்கள், யார் காலத்தில் இருக்கிறார்கள்? ஈழத் தமிழர்களா? அல்லது வேறு யாருமா?
வெளிநாட்டில் இருந்தால் உணர்வற்று இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?
எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாமே?

Anonymous said...

It is true after the Rajiv Incident, Indian and TN govt. headed by Jeyalaalitha acted against Tamil Eelam Interests. But before that, MU. KA and DMK was partly responsible for creating the rift among tamil movements; for example supporting only Seeri.sabarathinam, just because MGR supported Pirabakaran group. Even now, he is towing the similar 'dividing others policy' for projecting him and his party as champions of the tamil struggle. WHy not support others who are starting Pro-tamil movements? why only DMK should lead all the time? As other commentator pointed out, it is not going to impact much shouting for an issue when out of power; when in power he and the DMK should have shown some leadership on this issue. They did not talk about this issue until now, even after the crisis have reached a point of complete annihilation of tamils, he is celebrating the alliance with congress party (in other words, cricket game organized by center to fool the population).

Senthil

தமிழ் ஓவியா said...

//வைகோ,பழ நெடுமாறன் ஐயா, சுப.வீ, திருமா,ஆசிரியர் ஐயா, கலைஞர் இவர்கள் எல்லாம் மேடை போட்டு வாய் கிழிய பேசினால் மட்டும் ஈழமக்கள் மீது குண்டு விழாதா? அதை எப்படித் தடுக்கமுடியும் என்பதை பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்க்காமல் வேறு யாரிடம் எதிர்பார்க்கச் சொல்கிறீர்கள்?//

பேசினாலே தடா பொடா சட்டங்கள் அதுவும் தலைவர்கள் மீதே பாயும் போது அப்பாவி உணர்வு உள்ள தமிழர்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்த மாட்டார்கள் என்பதுதான் நான் சொல்ல வந்த செய்தி.

வெளிப்படுத்தினால் தங்களின் மீதே சட்டங்கள் பாயும் என்ற நிலையில் உணர்வை எல்லாம் அடக்கி வைத்து இப்போது கலைஞர் ஆட்சி இருப்பதால் குறந்த பட்சம் அதை வெளிப்படுத்த முடிகிறது என்பதுதான் நான் சொல்லும் செய்தி.

வாய்கிழிய பேசினால்தான் மக்களிடம் உண்மையை எடுத்துக் கூற முடியும். அதையும் நீங்கள் கொச்சைப் படுத்துகிறீர்கள்.

சட்டமன்றத் தீர்மானம், டில்லியில் அனைத்துக் கட்சி வலியுறுத்தல் முதல்வர் தலமையில். எல்லாம் செய்தாகிவிட்டது. ஆனால் இந்திய அரசு கேளாக் காதாக இருக்கிறது.

கடந்த ஆட்சியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினாலே தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு காவல்துறையால் அலைக்கழிக்க படும் தோழர்களுக்குத்தான் அந்த வழி என்ன என்று தெரியும்.


உங்களுக்கு உணர்வு இல்லை என்று எப்போது சொன்னேன்.

அதுவும் அத்திவெட்டிக் காரர்களுக்கு உணர்வு கொஞ்சம் அதிகம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

உங்கள் எழுத்தில் உண்மைத் தன்மையை உனராமல் நம்மை விட யார் இருக்கிறார்கள் என்ற கர்வம் கொஞ்சம் அதிக்மாகத் தெரிகிறது. அதை கொஞ்சம் குறைத்துக் கொண்டு நடுநிலையுடன் சிந்திக்க வேண்டுகிறேன்.
இயலுமானால் உங்கள் மின்னஞ்சல் முகவரி தரவும்.
நன்றி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஏறக்குறைய நீங்கள் சொல்வதை சீர்தூக்கிப் பார்த்தேன். எழுவாய்,பயனிலை மட்டும் இருந்தால் போதும் செயற்படுபொருள் அவசியமில்லை என்பதைப் போன்ற தோற்றம் தெரிகிறது. ஏழுவாய்க்கே செயலலிதா ஆட்சியில் வேலை இல்லை என்று சொன்னீர்கள். அதை நான் மட்டும் அல்ல எல்லா தமிழின உணர்வாளர்களும் அறிந்திருக்கிறார்கள்.
நான் சொல்ல வருவது செயற்படுபொருள் அவசியம் என்பதை.
இருப்பினும் என்னுடன் விவாதம் செய்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய மின்னஞ்சல் முகவரி இதோ!
athivetti@gmail.com

தமிழ் ஓவியா said...

//நான் சொல்ல வருவது செயற்படுபொருள் அவசியம்//

செயல்கள் செய்து வருகின்றனர். ஆனால் இந்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. இந்த தள்ளாத வயதிலும் டில்லிவரை சென்று பிரதமர், சோனியாவைச் சந்தித்தும் பேசி விட்டார் கலைஞர்.

இந்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

செயலபாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் விளைவுகள் தான் ஏற்படவில்லை. இதை அனைவருமே உணருகிறோம்.

முயற்சி செய்து கொண்டே இருப்போம்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜோதிபாரதி.விரைவில்
மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.

தறுதலை said...

எதிரிக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று துரோகிக்கு துணை போகக் கூடாது.
கயவன் கருணானிதி - துரோகி
வப்பாட்டி ஜெயலலிதா - எதிரி

இதுல சந்துல சிந்து பாடுற சோமாறிகள், கொட்டைதாங்கிகள் தொல்லை வேற

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)

தமிழ் ஓவியா said...

எழுத்தில் நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டுகிறேன்.
"தறுதலை" யாகச் செயல்படாமல் நல்ல மனித்னாகச் செயல்படவும்.
நன்றி

Suresh Kumar said...

கலைஞரின் இப்போதைய பேட்டிகளும், அறிக்கைகளும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக எழும்பிய மக்கள் எழுச்சியை தடுக்கும் விதமான நயவஞ்சக பேச்சாக தான் இருக்கிறது . நேற்று வரை கற்போடு இருந்தார் என சொல்லுகிறார் . அது கூட உண்மையா என யோசிக்க வைக்கிறது அவருடைய நடவடிக்கைகள்.

Unknown said...

DMK is part and parcel of the central govt. Yet Karunanidhi is behaving as if the central govt. is something in which DMK is not involved.He can withdraw the support or ask the ministers to
resign. He can exert pressure in many ways. Or she should acknowledge that he cannot do
anything and DMK should quit the central govt. in protest. Meetings, statements and other gestures are made to fool the public. The SriLankan
Tamils know the reality. DMK is more worried about being in
power than anything else. They will
do anything to be in power.
Jayalalitha or Karunanidhi - what
difference it makes to the affected
people. Nothing.

Unknown said...

குறைந்த பட்சம் நியாயமான உணர்வை வெளிப்படுத்த முடியாத சூழலை மாற்றி அமைத்ததே போதும் என்பது எனது கருத்து.

களத்தில் இருப்பவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும் புரியும்.

Yes, DK is fighting the SriLankan
army with Veeramani leading in
the front :).

தறுதலை said...

உமக்கு நாகரிகம் என்பவை எனக்கு அநாகரிகமாகத் தோன்றலாம். இஃது உமது இடம். என் எழுத்து உமக்கு அநாகரிகமாகத் தோன்றினால் நீக்குதல் தகும்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)

தமிழ் ஓவியா said...

ஒவ்வொருவருவருக்கும் அவரவர் கருத்தை சொல்ல உரிமை உண்டு. கருத்தைச் சொல்லக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

ஆனால் சொல்லும் கருத்துக்க்கள் நாகரிகமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையான பண்புகளில் ஒன்று.

தமிழ் ஓவியா said...

//Yes, DK is fighting the SriLankan
army with Veeramani leading in
the front :).//

இலங்கை ராணுவத்தை எதிர்ப்பதில் முண்ணனில் உள்ளவர் வீரமணி தான். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

ஆஅரம்காலம் தொட்டு இன்று வரை இதில் வீரமணி அவர்கள் சரியாக வே செயல் பட்டு வருகிறார்.
"அடைந்தே தீருவோம் தமிழீழம்" என்ற நூல் 1983 இல் வெளிவந்துள்ளது. அதில் வீரமணி அவர்கள் எழுதிய பேசிய ச்ய்திகள் எல்லாம் தொகுத்து தந்துள்ளார்.

ஒரு முறை அதைப்படித்துப் பாருங்கள் ஈழத்தமிழர்களுக்கு பாடுபடுவதில் எப்போதும் முன்னணியில் இருப்பவர் வீரமணிதான் என்ற உண்மை புரியும்.

தமிழ் ஓவியா said...

ஈழத்தமிழர்களுக்கு பாடுபடுவதில் எப்போதும் முன்னணியில் இருப்பவர் வீரமணிதான் என்ற உண்மை புரிய அடுக்கடுக்கான ஆதரம் இதோ:

"ளைய வீரமணி அவர்களும் திராவிடர்கழகமும் பாடுபட்டதின் விபரங்கள் வருமாறு:

"பற்றி எரியும் ஈழமும் திராவிடர் கழகத்தின் பணிகளும்!
- தொகுப்பு: கவிஞர் கலி.பூங்குன்றன்,
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

ஈழத் தமிழர்கள் நெடுங்காலமாக சிங்கள வெறியர்களின் குரூரத் தாக்குதல்களுக்கு ஆளாகி வந்துள்ளார்கள் என்றாலும் 1983-ல் புதிய சக்தியுடன் அந்தத் தாக்குதல்கள் தீவிரமாகத் தொடங்கின. சிங்கள வெறியர்கள் மட்டுமல்ல - அரசு பயங்கரவாதமும் சேர்ந்து தமிழின மக்கள்மீது கொடிய தாக்குதல் போர் தொடங்கியது.

அந்தக் கால கட்டத்தில் திராவிடர் கழகம் இப்பிரச்சினையின்மீது கண்களை வைத்து தொடர்ந்து விடாமுயற்சியுடன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதனுடைய ஒரு தொகுப்பை இங்குக் காணலாம்.

1. 18.6.1983 சனி மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி தமிழின மக்களின் உணர்வை வெளிப்படுத்தியது. 2.7.1983 அன்று சென்னை அண்ணா நகரில் புல்லா ரெட்டி அவின்யுவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட பிரமாண்ட எழுச்சிப் பொதுக் கூட்டத்தை நடத்தியது. அநேகமாக அக்கால கட்டத்தில் இப்பிரச்சினைக்காகத் துவக்கப்பட்ட ஒரு முக்கிய நிகழ்ச்சி இது என்றே குறிப்பிட வேண்டும்.

2. 23.7.83 அன்று பிரதமர் இந்திரா காந்திக்கு மடல் எழுதப்பட்டது. தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமரைச் சந்தித்து ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண வற்புறுத்துமாறு கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி கடிதம் எழுதினார்.

3. 1983 ஆகஸ்டு 15-ஆம் நாளைத் துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் அன்று கறுப்புச் சின்னம் அணிந்தும் வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிட்டும், பொது இடங்களில் கறுப்புக் கொடி ஏற்றியும் நமது துக்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும் 8.8.1983-இல் சென்னையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூட்டம் முடிவு செய்தது.

தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்டு 15-இல் நடைபெறும் விழாக்களில் பங்கு கொள்ள வேண்டாம் என்று அவர்களுக்குத் தனித்தனியே கழகத்தின் சார்பில் மடல் எழுதப்பட்டது. முதலமைச்சருக்கும் அன்று கோட்டையில் கொடி ஏற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

4. 16.8.1983 அன்று ஈழ அகதிகளாகத் தமிழகம் வந்து சேரும் குழந்தைகளுக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் கல்வி உதவிகள் வழங்கப்படும் என்று பொதுச் செயலாளர் அறிவித்தார்.

5. இலங்கைத் தமிழர்க்காகத் துப்பாக்கி ஏந்துவோம் என்று சொன்ன இனமான மதுரை ஆதீன கர்த்தர்மீது தமிழக அரசு ஏவிய வழக்கைக் கழகம் சந்தித்தது.

6. தமிழன் இறைச்சிக் கடைகளைத் திறந்திருக்கும் ஜெயவர்த்தனே டில்லிவந்த பொழுது, எதிர்த்துக் கறுப்புக் கொடி! கழகப் பொதுச் செயலாளரும், கழகத் தோழர்களும் பங்கு கொண்டு கைது செய்யப்பட்டனர் (23.11.1983).

7. ஈழத் தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர்கள் உணர்ச்சி எரிமலையாக விண்ணில் ஒரு காலும் - மண்ணில் ஒரு காலும் வைத்து கிளர்ந்து நிற்கின்றனர். என்பதை உலகுக்குக் காட்டும் மாநாடுகள் மதுரை மாநகரில் (17,18-12-1983) நடத்தப்பட்டன.

ஈழ விடுதலை மாநாடு என்றே நடத்தப்பட்டது. எழுச்சி மிக்க பேரணி - மதுரை வரலாற்றில் நெருப்புக் கொப்பளமாக வெடித்தது. ஈழ விடுதலைக் கொடியை தோழர் குமரிநாடன் ஏற்றினார்.

ஈழத் தமிழினத் தலைவர்களும், தமிழ்நாட்டுத் தலைவர்களும் பங்கேற்றனர்.

உலகத் தமிழர்கள் மத்தியில் என் இளவல் வீரமணி உயர்ந்து நிற்கிறார் என்பது அறிந்து பெருமிதபடுவதாக அம்மாநாட்டில் கலைஞர் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த அளவு எழுச்சி மிக்க மக்கள் கடல் திரண்ட மாபெரும் இன எழுச்சி மாநாடு அது.

8. அமெரிக்காவில் நியூயார்க்கில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் பொதுச் செயலாளர் கி. வீரமணி கலந்துகொண்டார்.

(ஜூன் 3 முதல் ஜூலை 2 வரை) லண்டனில் நடைபெற்ற ஈழப் போராளிகள் வீர வணக்க நாளிலும் பங்கேற்றார் (24.7.1984).

9. இங்கிலாந்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினையில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, அவர்கள் கையொப்பமிட்டு கூட்டு அறிக்கை வெளியிடச் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் கி. வீரமணி, ப. நெடுமாறன், எல். கணேசன் எம்.பி., ஆகியோர் இப்பணியில் முன் நின்றனர் (29.7.84).

10. ஈழத் தமிழர் பிரச்சினை-யில் இந்திய நடுவணரசு காட்டி வரும் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து ஆகஸ்டு 15 சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்து நாடெங்கும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. திருச்சியில் பொதுச் செயலாளர் அதற்காகக் கைது செய்யப்பட்டார். நாடெங்கும் அய்யாயிரம் தோழர்கள் கைதாயினர்.

11. இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பச் சொல்வது முட்டாள்தனம் என்று சொல்லி தமிழினத் தலைவர்களை இழித்தும், ஈழத் தமிழர்களுக்குத் துரோகமும் செய்த இராணுவ அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் துணைக் குடியரசுத் தலைவராகப் பதவி-யேற்று முதன் முதலாகத் தமிழகத்தில் சென்னைக்கு வந்தபொழுது, அவருக்குக் கறுப்புக்கொடி காட்டிட முனைந்து கழகப் பொதுச் செயலாளர் உள்பட திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

12. ஈழத் தமிழர் பிரச்னையைக் கொச்சைப்படுத்தி, இந்தியா டு டே இதழுக்குப் பேட்டி கொடுத்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் கொடும்பாவி கழகத்தின் சார்பில் எரியூட்டப்பட்டது. (6.10.1984)

13. இராமேசுவரம் தீவைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்களை சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். அதற்கு எந்தவித எதிர்ப்பு நடவடிக்கையையும் எடுக்காத இந்திய அரசே செயல்படு! தமிழக அரசே தூங்காதே! என்று கழகப் பொதுச் செயலாளரும் மதுரை ஆதீனமும் மதுரையில் முகவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முன் மறியல் செய்து கைது. (3.12.1984)

பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்குக் கழக சார்பில் நிதியும் வழங்கப்பட்டது.

14. ஈழப் பிரச்சினை என்ற முறையில் டெசோ உருவாக்கப்பட்டது. (TESO - TAMIL EALEM SUPPORTERS ORGANISATION) உருவாக்கப்பட்டது. (13.5.1985)

டாக்டர் கலைஞர் தலைவராகவும், பேராசிரியர் க. அன்பழகன், கி. வீரமணி, மதுரை நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் கொண்டு தனி ஈழம் உருவாக உருப்படியான பணிகளில் ஈடுபட உறுதி எடுத்துக் கொண்டு பிறந்த அமைப்பு இது!

தமிழ்நாட்டில் இருந்து தமிழீழத் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள் என்ற செய்தி வந்ததும் - வராததுமாக இது கொடுத்த 24 மணி நேரம் அழைப்பினைச் செவிமடுத்து இலட்சோப லட்சம் தமிழினத்தார் தலைநகரிலே அணி வகுத்து அரிமாக் குரல் கொடுத்தனர் (25.8.1985)

15. டெசோ சார்பில் இரயில் நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து தமிழ்நாட்டையே வெறிச்சோடச் செய்யப்பட்டது. (30.8.1985).

16. விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கிட திராவிடர் கழகத்தின் சார்பில் நிதி வசூலும் உணவுப் பொருள்களும் வசூல் செய்து கொடுக்கப்பட்டது.

17. தமிழ் ஈழப் பகுதிகளில் உயிரைப் பணயம் வைத்து வீரப்பயணம் நடத்தி, கண்ட கொடுமைகளை வீடியோவாக்கித் தமிழகம் திரும்பிய மாவீரன், ப. நெடுமாறனை பிரதமர் ராஜீவ்காந்தி சந்திக்க மறுப்பது ஏன்? அசாம், பஞ்சாப் தலைவர்களுடன் பேச்சு நடத்தும் ராஜீவ் - தமிழர்களை மதிக்கும் லட்சணம் இதுதானா? என்று மயிலைப் பொதுக் கூட்டத்தில் (3.3.1986) பொதுச் செயலாளர் கி. வீரமணி வினா எழுப்பினார்.

18. 7.3.1986: திருச்சி மேற்கு மாவட்டக் கழகத் துணைத் தலைவர் கரூர் பழ. இராமசாமி விடுதலைப்புலிகளுக்கு ஜீப் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கினார்: ஜீப் சாவி, தமிழர் தளபதி மூலம் விடுதலைப்புலித் தோழர் ஒருவரிடம் தரப்பட்டது.

இடையாற்றுமங்கலத்தில் (8.3.1986) நடந்த இ.ச. தேவசகாயம் மணவிழாவில், திருச்சி கிழக்கு மாவட்ட திராவிடர் தொழிலாளரணி அமைப்பாளர் முத்துச்செழியன் புலிகளுக்காக தமிழர் தளபதி மூலம் சுவேகா மோட்டார் சைக்கிள் ஒன்றினை அன்பளிப்பாக அளித்தார்.

19. 20.5.1986: சிங்கள ராணுவம் விமானத்திலிருந்து குண்டு வீசும் போக்கை தடுத்து நிறுத்தவலியுறுத்தி பிரதமருக்கு கழகப் பொதுச் செயலாளர் இன்று தந்தி தந்தார்.

20. இல்லினாய்ஸ் கருத்தரங்கில் 15.7.1986: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரின் இல்லியனாய்ஸ் பல்கலைக் கழக மண்டபத்தில் ஈழத் தமிழர் குறித்த கருத்தரங்கம் - டாக்டர் இளங்கோ ஏற்பாட்டில் நடந்தது. இதில் 25 நிமிடங்கள் ஆங்கில உரையாற்றிய தமிழர் தளபதி - இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழமே தீர்வு என வலியுறுத்தினார்.

18.7.86: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வாஷிங்டன் ஏரியா உயர்நிலைப் பள்ளியில் தமிழர் தளபதிக்கு நிகழ்த்திய வரவேற்புக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து உரை நிகழ்த்தினார்.

தமிழர் பிரச்சினை பற்றி தமிழர் தளபதியை அமெரிக்க வானொலி (வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா) பேட்டி கண்டது.

21. பெங்களூர் சார்க் மாநாட்டிற்கு இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே வந்தபோது நமது எதிர்ப்புணர்வைக் காட்டும் வகையில் தமிழ்நாடெங்கும் ஜெயவர்த்தனே கொடும்பாவி கழகத் தோழர்களால் எரியூட்டப்பட்டது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர் (17.11.1986).

22. ஈழப் போராளிகளின் தொலைத் தொடர்பு கருவிகளைத் தமிழக அரசு பறிமுதல் செய்தபோது கழகம் கடுமையாக கண்டித்தது. அரசின் நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகளின் தளபதி தம்பி பிரபாகரன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதத்தை பொதுச் செயலாளர் கண்டித்து எழுதினார். மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அன்றே பொதுச் செயலாளர் நேரில் வீட்டுக்குக்கூட செல்லாமல் உண்ணா விரதத்தை முடித்து வைத்தார் (23.11.1986).

23. யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு உணவை அனுப்பாமல் முற்றுகையிட்டுக் கொன்ற கொலைகார சிங்களவெறி அரசுக்குத் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இந்திய அரசு கப்பல் மூலம் உணவு ஏற்றுமதி செய்த கொடுமையைக் கண்டித்து திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரசும் இணைந்து கப்பல் மறியல் போராட்டம் நடத்தியது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். (20.2.1987).

24. யாழ் மருத்துவமனையை மூடி தமிழீழ மக்களை அவதிக்குள்ளாகக் திட்டமிட்டிருந்த ஜெயவர்த்தனே அரசை எதிர்த்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன் திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரசும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின (8.5.1987). இதன் காரணமாக யாழ் மருத்துவமனை மூடாமல் தடுக்கப்பட்டது.

25. சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இரண்டு தமிழர்களின் குடும்பத்தினரை சேது பாவா சத்திரத்திற்கு உடனடியாக கழகப் பொதுச் செயலாளர் சென்று அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி கழகத்தின் சார்பில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக அளிக்கப்பட்டது. (26.5.1987)

26. சென்னை சைதாப்பேட்டையில் தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் தனது எடைக்கு ஈடாக அளிக்கப்பட்ட ரூபாய் நாணயங்களையும் (10 ஆயிரம் ரூபாய்) அதோடு கழகத்தால் வசூல் செய்யப்-பட்ட நிதியையும் சேர்த்து ரூ.25,684-57 தொகையையும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகளையும் விடுதலைப்புலிகளுக்குப் பொதுச் செயலாளர் அவர்கள் கடற்கரை விழாவில் (1.5.1987) வழங்கினார்கள்.

27. ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு காட்டிவரும் அலட்சியத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இரயில் மறியல் போராட்டம் நடத்தியது. திராவிடர் கழகத்துடன், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தோழர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள நாடெங்கும் தோழர்கள் கைது செய்யப்பட்டனர் (1.6.1987)

28. சென்னையில் உள்ள இலங்கைத் தூதர் திசா ஜெயக்கொடி என்பவரின் நடவடிக்கைகள் இந்தியப் பாதுகாப்புக்கு ஆபத்தானவை - அவரை வெளியேற்ற வேண்டும் என்று வீரமணி அவர்களும் நெடுமாறன் அவர்களும் விட்ட அறிக்கையைத் (5.6.1987) தொடர்ந்து 2.7.1987 அன்று மத்திய அரசால் அவர் வெளியேற்றப்பட்டார்.

29. ஈழத் தமிழர்கள்மீது சரித்திரம் காணாத துரோக ஒப்பந்தத்தைத் திணித்த இந்திய அரசைக் கண்டித்தும், ஒப்பந்தத்தை எதிர்த்தும், ராஜீவ்காந்தி -ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எரித்து அதன் சாம்பல் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது (2.8.1987) திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரசும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தின. நாடெங்கும் பல்லாயிரக்கணக்கில் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

30. நாடாளுமன்றத்தில் கொழும்பு ஒப்பந்தம்பற்றி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கும் நோக்கத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்களும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் அவர்களும், டெல்லி சென்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் சந்தித்து, கொழும்பு ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள துரோகத் தனங்களைத் தோலுரித்துக் காட்டினர் (13.8.1987). அதன் எதிரொலியை நாடாளுமன்றத்தில் கேட்க முடிந்தது.

31. கொழும்பு ஒப்பந்தத்தின் நயவஞ்சகத்தை தமிழ்நாட்டு மக்களிடத்திலே எடுத்துரைக்கும் கட்டுப்பாட்டுடன் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்களும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் அவர்களும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு கட்டமாகச் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்கள் (16-6-1987 முதல் 21.6.1987 முடிய 7.9.87 முதல் 11.9.1987 முடிய)

32. 1.10.1987-இல் மறைந்த மாவீரன் திலீபனுக்காக இரங்கல் ஊர்வலம்.

33. 9.10.1987 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் பார்ப்பன உணர்வோடு செயல்படும் இலங்கைத் தூதர் தீட்சத்துக்குப் பதில் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டுகோள் விடப்பட்டது.

34. 14.10.1987, 19.10.1987 ஆகிய இரு நாள்களிலும் சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு.

17.10.1987 அன்று தமிழ்நாடெங்கும் அரைநாள் கடையடைப்புப் போராட்டம்.

26.10.1987 அன்று தமிழ் நாடெங்கும் உள்ள வானொலி நிலையங்கள் சென்னைத் தொலைக்காட்சி நிலைய முன் மறியல் - பொதுச் செயலாளரும் தலைவர்களும் தொண்டர்களும் கைது - சிறை.

நாடெங்கும் நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தில் பங்கேற்பு (6.11.1987).

21,22.12.1987

தமிழ்நாடு வந்த பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் ஆங்காங்கே கறுப்புக் கொடி காட்டப்பட்டது.

25.1.1988

இந்தியக் குடியரசு நாள் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் அழைக்கப்பட்டார். அதனைக் கண்டிக்கும் வகையில் சனவரி 26 அன்று கருப்புக் கொடி ஏற்றவும் - ஜெயவர்த்தனேயின் கொடும்--பாவியைக் கொளுத்தவும் திராவிடர் கழகம் அறிவித்தது. எங்கெங்கும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கொடும்பாவியைக் கொளுத்த முயன்றபோது காவல்துறையினர் தடியடி நடத்தினர். கழகப் பொதுச் செயலாளர் உட்பட கழகத் தோழர்கள் பலரும் காயம் அடைந்தனர். கழகப் பொதுச் செயலாளர் உள்பட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

(22-ஆம் முறையாகக் கழகப் பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டார்)

21.3.1988

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் உள்பட தோழர்கள் கைது.

7.6.1988

பிரபாகரன் உயிருக்குக் குறி வைக்காதே! என்று குரல் கொடுத்து சென்னையில் உள்ள தென் மண்டல இராணுவம் தலைமையகம்முன் ஆர்ப்பாட்டம்

29.7.1988

ராஜீவ் - ஜெயவர்த்தனே துரோக ஒப்பந்தத்திற்கு ஒரு வயது ஆனதை முன்னிட்டு அந்நாளில் நாடெங்கும் கண்டன ஊர்வலங்கள்.

28.7.1988 - 22.8.1988

உலக அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் சக்திகளின் முகத்திரைகளைக் கிழித்தெறிந்திட கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கனடா, அமெரிக்கா சுற்றுப் பயணம்.

31.7.1988

அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் குடியரசுத் தலைவரின் வெள்ளை மாளிகைமுன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மானமிகு கி. வீரமணி கலந்து கொண்டார்.

18.8.1988

தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த விடுதலைப்புலிகளை சிறையில் அடைத்தமையைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு.

மாநாடுகள்

விடுதலைப்புலிகளின் கைதைக் கண்டித்து நாட்டின் பல முக்கிய பகுதிகளில் கண்டன மாநாடுகள் மதுரை -2.9.1988, தஞ்சாவூர் - 8.9.1988 சேலம் - 14.9.1988

10.9.1988

கால் ஊனமுற்று வீட்டில் இருந்த விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவைச் சந்திக்கச் சென்ற திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் கைது.

19.9.1988

தமிழகத்தில் இருந்த ஈழப் போராளிகளைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தபோது அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் விடுதலைப்புலிகளை அழைத்துப் பேச வேண்டியும் பிரதமர் ராஜீவ்காந்திக்குக் கழகப் பொதுச் செயலாளர் தந்தி கொடுத்தார். 26.9.1988

பாதுகாப்புச் சட்டத்தின் பேரால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை விடுதலை செய்யக் கோரி திலீபன் நினைவு நாளில் சென்னை, மதுரை மத்தியச் சிறைச்சாலைகள் முன் ஆர்ப்பாட்டம். பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட போராளிகள் பிரச்சினைமீது நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழுமுன் கழகத்தின் சார்பில் போராளிகளுக்காக வாதாடப்பட்டது.

14.5.1989

இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் கலந்து கொள்ளல் (29,30.4.1989) வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்புப் பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பங்கேற்பு (14.5.1989).

24.7.1989

மாவீரன் பிரபாகரன் சுட்டுக்கொலை என்று கோழைத்தனமாகக் கிளப்பப்பட்ட புரளியை எதிர்த்து உலகிற்கு உண்மையை எடுத்துரைத்த முதல் தலைவர் வீரமணி. முதல் ஏடு விடுதலை (24.7.89).

29.7.1989

ஈழத்தைவிட்டு இந்திய இராணுவம் வெளியேறக் கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன் தமிழ் நாடெங்கும் ஆர்ப்பாட்டம் தமிழர் தேசியக் கட்சியுடன் இணைந்து நடத்தப்பட்டது.

12.7.1990

ஈழத்தில் தமிழினப் படுகொலை புரியும் இலங்கை அரசை எதிர்த்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் அலுவலக முன் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

26.9.1990

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் எல்லாம் கண்டனப் பேரணிகள் - திராவிடர் கழகத்தின் சார்பில்.

13.7.1992

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் ஈழ அகதிகள் கல்விப் பாதுகாப்பு மாநாடு

6.6.1995

ஈழத்தில் இந்திய ராணுவத் தலையீடு கூடவே கூடாது என்ற பொருளில் தியாகராயர் நகர் சங்கர்தாஸ் கலையரங்கில் பழ. நெடுமாறன் தலைமையேற்க திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி பங்கேற்று கருத்துரையாற்றினார்.

17.7.1995

ஈழத்தில் முப்படைகளைக் கொண்டு தமிழர்களை அழிக்கும் சிங்கள அரசின் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் இலங்கைத் துணைத் தூதர் அலுவலகத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூதரக அதிகாரியிடம் - போரை நிறுத்தக் கோரி மனுவும் அளிக்கப்பட்டது. முன்னதாக சென்னை பெரியார் திடலிலிருந்து கண்டன ஊர்வலம் புறப்பட்டு, கல்லூரி சாலையில் உள்ள தூதர் அலுவலகத்திற்கு முழக்கமிட்டு ஊர்வலமாகச் சென்றனர் கழகத் தோழர்கள்.

29.7.1995

ஈழத்தில் இனப் படுகொலை என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் எழுச்சியுரை ஆற்றினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி.

1.8.1995

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்த அய்.நா.விடம் கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை திராவிடர் கழகம் இன்று தொடங்கியது. 31.9.1995 அன்றுவரை இப்பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

10.8.1995

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், கையெழுத்து இயக்கம் நடத்திடவும் தென் சென்னை மாவட்டத்தில் இன்று துவங்கி நூறு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

6.11.1995

ஈழத் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய இடங்களில் கண்டனப் பேரணி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி பங்கேற்றார்.

கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு அனைத்துத் தரப்பினரும் எரியும் தீயை அணைப்போம் வாரீர்! என்று வேண்டுகோள் விடுத்தார் கழகப் பொதுச் செயலாளர்.

9.11.1995

ஈழத்தில் நடைபெறும் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்திட திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்டது. 23.2.1996

சென்னை பெரியார் திடலில் ஈழத் தமிழர்களுக்கெதிரான இந்தியத் தலையீடு பற்றி கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, பழ. நெடுமாறன், பழ. கருப்பையா, சேவியர் அருள்ராஜ் ஆகியோர் பேசினர்.

30.4.1996

ஈழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்-களில் மனிதச் சங்கிலி அறப்போர் நடைபெற்றது.

20.8.1996

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை மே தினப் பூங்கா அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து பேரணி புறப்பட்டு, ஆதித்தனார் சாலை பாந்தியன் சாலை, கல்லூரி சாலை வழியாக இலங்கைத் துணைத் தூதரகத்தின்முன் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்-பட்டது.

28.5.1997

சென்னைப் பெரியார் திடலில் ஈழத் தமிழர்ப் பிரச்சினைபற்றி முடிவு எடுக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை திராவிடர் கழகம் கூட்டியது.

6.6.1997

ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்காக தமிழகம் தழுவிய அளவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. ஆயிரக்-கணக்கில் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

17.6.1997

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில், தமிழர் தலைவர் கி. வீரமணி, பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, பழ. நெடுமாறன் ஆகியோர் உரையாற்றினர்.

26.7.1997

தமிழக மீனவர் பாதுகாப்பு, கச்சத் தீவு மீட்புரிமை மாநாடு இராமேசுவரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி. வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு, மருத்துவர் ச. இராமதாசு, பழ. நெடுமாறன், கா. ஜெகவீரபாண்டியன், டாக்டர் இரா.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து-கொண்டனர்.

29.7.1997

கச்சத்தீவு உரிமை தமிழக மீனவர் பாதுகாப்பு கோரி திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. (வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

14.12.1997

ஈழத் தமிழர் ஆதரவு பன்னாட்டு மாநாடு டில்லி-யில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களை அமைப்பாளராகக் கொண்ட அம்மாநாட்டில் தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் பங்கு கொண்டனர். அரங்கில் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜார்ஜ் பெர்னாண்டசு இல்லத்தில் நடத்தப்பட்டது. நடுநிலையாளர்கள் முன்னிலையில் விடுதலைப்புலிகள் - இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

25.2.1998

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தீர்ப்பு குறித்து சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோர் உரையாற்றினர். ராஜீவ் கொலை வழக்கில் மறு விசாரணை தேவை என்றார் திராவிடர் கழக பொதுச் செயலாளர்.

7.1.2006

இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மா.வை. சேனாதி ராஜா, மலைவாழ் மக்கள் முன்னணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பொ. சந்திரசேகரன் ஆகியோர் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினர்.

1.6.2006

சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். பாவலர் அறிவுமதி, பா.ம.க., தலைவர் கோ.க. மணி (எம்.எல்.ஏ.,) ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

12.11.2006

நாள்தோறும் ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவத்-தால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்தும், பட்டினியால் சாகடிக்கப்படும் கொடுமையைக் கண்டித்தும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலை-நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கி நடத்தினார். சென்னையில் திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை தலைமை தாங்கினார்.

19.12.2006

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்திட இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்று கோரி தந்தி அல்லது தொலைப்பதிவி மூலம் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரசு தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு அனுப்பி வைக்குமாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர்களுக்கு வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார்.

22.12.2006

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்புக் கோரி தமிழ்நாடெங்கும் மனிதச் சங்கிலி அறப் போராட்டம் திராவிடர் கழகத்தால் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. திமுக., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியினர் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், மதிமுக சார்பில் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு அணி வகுக்கப்பட்டது.

5.2.2007

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கம், பத்மநாபன் அரியநேத்திரன் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை சென்னைப் பெரியார் திடலில் இன்று சந்தித்து உரையாடினர். உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளர் டாக்டர் இரா. ஜனார்த்தனமும் உடன் வந்தார்.

6.3.2007

ஈழத்தில் நடைபெறுவது என்ன? என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டத்தில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் உரையாற்றினர்.

20.7.2007

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை கோரி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் மெமோரியல் ஹால் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையேற்றார்.

31.12.2007

இலங்கை சுதந்திர தினவிழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் கலந்து கொள்வதை எதிர்த்து சென்னை மெமோரியல் ஹால் முன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. அதன் காரணமாக பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

4.8.2008

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை கோரியும், தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கோரியும் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை மெமோரியல் ஹால்முன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

22.9.2008 ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை சென்ட்ரலில் இரயில் மறியல் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் - திருமாவளவன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளரும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்-கில் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

20.10.2008 பற்றி எரிகிறதே ஈழம் என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பொதுக் கூட்டத்-தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.

24.10.2008 தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி இன்று சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலிப் பேரணியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கொட்டும் மழையில் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

6.11.2008 பற்றி எரியும் ஈழமும் பார்ப்பனப் பத்திரிகைகளும் என்ற தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரை நிகழ்த்-தினார். திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை தலைமை தாங்கினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் வரவேற்-புரையாற்றினார்.

1983 முதல் இந்நாள் வரை ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தொய்வின்றித் தொடர்ச்சியாக ஒரே நிலையில் (Consistency) நின்று குரல் கொடுத்தும், போராடியும் வரும் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு வரலாற்றில் என்றும் நின்று பேசக் கூடியதாகும்.

பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் எழுச்சியூட்டும் தொடர் பயணங்கள் மாநாடுகள், பேரணிகள், போராட்டங்கள் மட்டுமல்ல தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்கும் கண்காட்சிகளையும் கழகம் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்."

ராவணன் said...

ஆண்டாண்டு காலமாக இசுடாலினை இளைஞர் அணித்தலைவராக வைத்துள்ளது இலங்கைத் தமிழருக்காகத்தான்.

கனிமொழி அம்மையாரை எம்பி ஆக்கியுள்ளது இலங்கைத் தமிழருக்காகத்தான்.

அழகிரியை தென் மண்டல அதிபராக ஆக்கியுள்ளது இலங்கைத் தமிழருக்காகத்தான்.

தயாநிதியை இந்திய மந்திரி ஆக்கியது இலங்கைத் தமிழருக்காகத்தான்.

இது போன்று பற்பல சாதனைகளை திமுக,இலங்கைத் தமிழர்களுக்குச் செய்ததை மானமுள்ள தமிழன் மறக்கமாட்டான்.

நம்பி said...

//ஆண்டாண்டு காலமாக இசுடாலினை இளைஞர் அணித்தலைவராக வைத்துள்ளது இலங்கைத் தமிழருக்காகத்தான்.//

இதுவும் தமிழக திமுக இளைஞர் அணிக்காக..தமிழக இளைஞர் அணி நேர்ந்தெடுத்தது..இலங்கைத் தமிழ் மக்கள் இளைஞரணி அல்லவே....

//கனிமொழி அம்மையாரை எம்பி ஆக்கியுள்ளது இலங்கைத் தமிழருக்காகத்தான்.//

இதுவும் தமிழகத் தொகுதி மக்களின் நன்மைக்காக தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை மக்கள் அல்லவே....

//அழகிரியை தென் மண்டல அதிபராக ஆக்கியுள்ளது இலங்கைத் தமிழருக்காகத்தான்.//

இதுவும் தமிழக மக்கள் தான்...

//தயாநிதியை இந்திய மந்திரி ஆக்கியது இலங்கைத் தமிழருக்காகத்தான்.//

இதுவும் தமிழக, இந்திய மக்களுக்காகத்தான்...இலங்கை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லையே...

//இது போன்று பற்பல சாதனைகளை திமுக,இலங்கைத் தமிழர்களுக்குச் செய்ததை மானமுள்ள தமிழன் மறக்கமாட்டான். //

சாதனையா? வேதனையா? என்பதை பற்றி முடிவு செய்யவேண்டியது வாக்களித்த தொகுதி மக்கள் தானே...வாக்களிக்காத வேறு நாட்டு மக்களா? தமிழக மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லையா....? விவசாயிகள் தற்கொலை புரிந்து கொண்டால் பரவாயில்லையா? (1 லட்சம் விவசாயிகள் தற்கொலை புரிந்து கொண்டுள்ளனர் கடந்த 10 ஆண்டுகளில்) கஞ்சித் தொட்டிதிறந்தாலும் பரவாயில்லையா....? தமிழக மக்களுக்கு ஏதாவது நாட்டில் இருந்து நிவாரணம் ஏதாவது அல்லது நன்கொடைகள் வருகிறதா....எல்லாம் அரசின் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டும்...அதற்குத்தான் வாக்களித்தோம்...சரிதானே...இதை
மட்டும் மானமுள்ள, சுயமரியாதையுள்ள, தமிழர்கள் அனைவரும் உறவுகள் என்ற அக்கரையுள்ள எந்த தமிழனாவது மறப்பானா...? மறக்கத்தான் முடியுமா...?