Search This Blog

8.2.09

தீட்சிதர்வாள் "சவுக்கியமா?"






பல நூறு ஆண்டுகளாக தீட்சிதர்கள் பிடியில் இருந்து வந்த சிதம்பரம் நடராஜர் கோவிலில், அய்க்கோர்ட் உத்தரவுக்குப் பிறகு நேற்று முன்தினம் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் பொறுப்பேற்றனர். 3.2.2009 திருச்சிற்றம்பல மேடையில் ஆறுமுகசாமி சுதந்திரமாக தேவாரம் பாடினார்.

சோழ மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிதம்பரம் நடராஜர் கோவில், அவர்களது வம்ச வழிகளால் நிர்வகிக்கப்பட்டது. படிப்படியாக, கோவிலில் பூஜைகள் நடத்தி வந்த தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது.

கோவில் எங்கள் சமூகத்திற்கே உரிமையானது. நடராஜர் எங்களில் ஒருவர். இறைவனோடு பூலோகத்தில் இருந்து வந்த அந்தணர்கள் நாங்கள் எனக் கூறி, தீட்சிதர்கள் ராஜ்ஜியம் நடத்தினர். உலகிலேயே சிதம்பரத்தில் மட்டுமே உள்ள தீட்சிதர் சமூகத்தினர் இவர்கள்; தற் போது 400 குடும்பத்தினர் உள்ளனர்.

கோவிலில் ஆகம விதிகளின்படி ஆறு கால பூஜைகள் தற்போதும் நடந்தாலும், தீட்சிதர்களின் இளைய சமுதாயத்தினரின் விரும்பத்தகாத செயல்கள் பக்தர்கள் மனதைப் பெரிதும் புண்புடுத்தி வந்தன.

கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விரட்டி பணம் வசூல் செய்வது, சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பணம் பிடுங்குவது, பக்தர்களை வாயில் வந்த வார்த்தை களால் திட்டுவது, பக்தர்களைத் தாக்குவது என்பன போன்ற செயல்களால் அவர்கள் மேல் பொது மக்களுக்கு வெறுப்பு அதிகமானது.

இளைய தலைமுறை தீட்சிதர்களின் செயல்களால் கோவிலை அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க வேண்டும் என பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள், இந்து அமைப்புகள் எனப் பல தரப்பினரும் விரும்பினர்.

பல்வேறு தரப்பு கோரிக்கையை தமிழக அரசு, 1987-ஆம் ஆண்டு (ஜனவரி 31) ஏற்றது. அப்போது இந்து அறநிலையத்துறை அமைச்சராக ஆர்.எம். வீரப்பன் இருந்த காலத்தில் கோவிலை இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், கோவிலுக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் சென்னை அய்க்கோர்ட்டில் அப்போதே தடை பெற்றனர். இந்த வழக்கு மீண்டும் 1997-ம் ஆண்டு அய்க்கோர்ட் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதியாக இருந்த வெங்கடாசலம், தீட்சிதர்கள் வாங்கிய தடை உத்தரவை ரத்து செய்தார்.

அதையடுத்து, கோவிலுக்கு செயல் அலுவலர் பதவியேற்க இந்து அறநிலையத் துறை முயற்சித்தது.

ஞானகுரு என்பவர் மறுநாளே கோவில் செயல் அலுவராக பொறுப்பேற்றார்.

அலுவலகத்திற்கு போர்டும் வைக்கப்பட்டது. அன்றிரவே அலுவலக போர்டு மற்றும் மேசை, நாற்காலிகளை தீட்சிதர்கள் வெளியில் வீசி எறிந்தனர்.

இதுகுறித்து, செயல் அலுவலரால் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு ஒரு வழியாக முடிந்தும் விட்டது.

இந்நிலையில், 2006-ம் ஆண்டு செயல் அலுவலர் நியமனத்திற்கு அய்க்கோர்ட்டில் பொது தீட்சிதர்கள் தடை பெற்றனர்.

இந்தப் பிரச்சினை ஒருபுறம் இருக்க, சிவனடியார் ஆறுமுகசாமி என்பவர் கோர்ட் உத்தரவுப்படி திருச்சிற்றம்பல மேடையில் பாடச் சென்றார். அவரரை தீட்சிதர்கள் தாக்கினர். அதிலிருந்து பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

கடந்த 2004-ஆம் ஆண்டு சிற்றம்பல மேடையில் பாட மயிலாடுதுறை இணை ஆணையர் தடை விதித்தார். அதை வைத்து தீட்சிதர்கள் சிதம்பரம் முன்சீப் கோர்ட்டில் நிரந்தர தடை பெற்றனர்.

இந்நிலையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என அரசு உத்தரவிட்டது.

அதன்பின், மனித உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பல அமைப்புகள் போர்க் கொடி தூக்கி 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி கோவில் சிற்றம்பல மேடையில் அனைவரும் பாடலாம் என இந்து அறநிலையத் துறை ஆணையர் பிச்சாண்டி உத்தரவிட்டார். அதன்படி, பாடச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, 2008-ம் ஆண்டு பிப்ரவரி 29-ஆம் தேதி ஆணையர் சந்தானம், கோவிலில் பாட உத்தரவிட்டார். அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் சிவனடியார் கோவிலில் சென்று பாடினார். இது தீட்சிதர்களுக்கு முதல் அடியாக இருந்தது.கோர்ட் தடையை நீக்க அரசு தரப்பில் ஐகோர்ட்டில் மனு செய்திருந்த நிலையில், வழக்கைத் துரிதப்படுத்த மனித உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளும், வழக்கில் முக்கிய தரப்பினராக தன்னையும் சேர்த்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர்.

இது தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் சனவரி 2009 20,21,22 ஆகிய மூன்று நாட்கள் நடந்து முடிந்தது. விசாரணை முடிந்த நிலையில் 2.2.2009 அன்று நடராஜர் கோவில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர விதித்த தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவிட்டது.

இரவோடு இரவாக கோவிலை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தது. 3.2.2009 அன்று காலை அரசு தரப்பில் செயல் அதிகாரி முறைப்படி கோவிலின் முழு பொறுப்பை ஏற்றார். வழக்கம்போல் சிவனடியார் ஆறுமுகசாமி மகிழ்ச்சியுடன் சுத்நதிரமாக திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடினார்.

இணை ஆணையர் திருமகள் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவிலை அரசு ஏற்றதையடுத்து, அலுவலகம் அமைக்க (விழாக் காலங்களில் சமைக்கும் இடமாக இருந்தது) தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் புதிதாக 10 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உடனடி சீரமைப்புப் பணிக்காக ஐந்து லட்சம் ரூபாய் அரசிடம் கேட்டுள்ளோம்.

கோவிலின் சாவியைப் பெறுவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. தீட்சிதர் சார்பில் நிர்வாகப் பணிகளைக் கவனிப்பவர் ஊரில் இல்லாததால், கணக்குக்கு ஒப்படைக்கவில்லை. தீட்சிதர்களிடம் பேசி முடிவெடுத்து, அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். கோவிலின் பூஜை முறையில் எந்த மாற்றறும் இல்லாமல் தீட்சிதர்கள் முன் போலவே நடத்துவர்.

நடராஜர் கோவிலில் உள்ள பெருமாள் கோவில் உற்சவம் நடக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு திருமகள் கூறினார்.

தினமலரில் (4.2.2009) வெளிவந்த செய்திதான் மேலே காணப்படுவதாகும்.

தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த கதையாகி விட்டது. தமிழ் அரசர்கள் கோயிலாக்காக விட்ட தானங்களை, நிலங்களை தீட்சதப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்து விட்டனர்.

இந்தப் பார்ப்பனர்கள் கைலாசத்திலிருந்து நேரே இறங்கி வந்தவர்களாம். மூவாயிரம் பார்ப்பனர்களில் தலைமை எண்ணும்போது ஒரு தலை குறைந்ததாம் அந்த ஒரு ஆசாமி நான்தான் என்று சிவனே சொன்னதாகக் கதையளந்து வைத்துள்ளனர்.


தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று பரமசிவன் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அடி எடுத்துக் கொடுக்க திருத்தொண்டத் தொகையை சுந்தரர் பாடினாராம். தில்லையில் வாழும் பார்ப்பனர்களின் அடியார்களுக்கும் அடியாராம் சிவபெருமான்! பார்ப்பனர்களின் கட்டுக்கதைகள்.

இந்தத் தில்லைத் தீட்சதப் பார்ப்பான் கையிலிருந்த இந்தக் கோயில் இந்து அறநிலையத்துறையின் நிருவாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. சாதாரணமல்ல தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிகச் சரியாகக் குறிப்பிட்டதுபோல இது ஒரு அமைதிப் புரட்சியாகும்.

பார்ப்பன ஆதிக்கக் கோட்டையைத் தவிடு பொடியாக்கிட கலைஞர் அரசின் இந்தச் செயல் வரலாற்றுக் கல்வெட்டாக காலக் காலத்திற்கும் ஒளிர மனித உரிமைப் பாதுகாப்பு மையர் என்ற அமைப்பு வழக்கறிஞர் விருத்தாசலம் ராஜீ அவர்களை அமைப்பாளராகக் கொண்டது இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது - பல்வேறு போராட்ட நடவடிக்கைகளும் ஈடுபட்டது. சிதம்பரத்தில் நடைபெற்ற அத்தனைப் போராட்டங்களிலும் திராவிடர் கழகம் தன் பங்கை முக்கியமாகச் செலுத்தி வந்திருக்கிறது.

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலை அறிக்கையில் எச்சரித்தது போலவே (3.2.2009 விடுதலை) நீதிமன்றத்திற்கும் படையெடுத்துள்ளனர்.

பார்ப்பன சொரூபமான சுப்பிரமணியசாமியும் முண்டா தட்டி கோதாவுக்குள் குதித்துள்ளார்.

இதுபற்றி தினத்தந்தியில் (5.2.2009) வெளிவந்த செய்தி வருமாறு:

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக சென்னை அய்கோர்ட் நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, பொது நலன் கருதி அய்க்கோட்டில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளேன்.

இந்து மத நிறுவனங்களை அரசு நிர்வகிப்பதை எதிர்க்கும் மக்களின் நலன் கருதியே மேல் முறையீடு செய்யப்படுகிறது. இந்துமத நிறுவனங்கள் கோவில்களை நிருவகிப்பதில் தகுந்த ஒழுங்கு முறைக் கொண்டு வரப்பட வேண்டியதை வரவேற்கிறோம். ஆனால் அவற்றை அரசே நிர்வகிப்பது என்பது மதச் சார்பின்மைக்கு முரணானது. ஏனென்றால் மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றை நிர்வகிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் அரசிடமிருந்து விலக்களிக்கப்பட்டு இருக்கிறது.

ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியசாமியின் அறிக்கைதான் மேலே காணப்படுவது அடுத்த கட்டமாக தில்லைக் கோயில் தீட்சதர்கள், தன்னை ஒரு பாப்பாத்தி என்று தமிழகச் சட்டப் பேரவையிலேயே பிரகடனப்படுத்திக் கொண்ட செல்வி ஜெயலலிதாவை நேரில் கண்டு தங்களுக்கு உதவிமாறு கோரிக்கை வைத்துள்ளனர் இனம் இனத்தோடு சேருவதில் என்ன ஆச்சரியம்.

அதே நேரத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஒன்றை மறந்து விடக் கூடாது. எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இருந்தபோதுதான் (1987) சிதம்பரம் கோயிலின் நிருவாகத்தை தீட்சதர்களிடமிருந்து பறித்து இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது. எம்.ஜி.ஆரையும் தாண்டி அம்மையார் தன் பார்ப்பன உண்மை வெளிப்படுத்தும் வகையில், தீட்சதர்களுக்கு உதவிக்கரம் நீட்டுபாரேயானால் விஷயம் வீதியில் பந்தாட்டமாக மாறிவிடும்.

இந்து அறநிலையத்துறை என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் அவர்கள் பிரதமராக இருந்த கால கட்டத்தில்தான் இந்துக் கோயில்கள் பார்ப்பனப் பெருச்சாளிக் கூட்டத்திடமிருந்து காப்பாற்றிட, இத்துறையைச் சட்ட ரிதியாகக் கொண்டு வந்தது (27.1.1925).

பார்ப்பனர்கள் வழக்கம்போல குய்யோ முறையோ வென்று குதியாட்டம் போட்டுப் பார்த்தனர். மகாமகா ராஜதந்திரி என்று பார்ப்பனர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட பனகல் அரசரிடமோ (ராமராயநிங்கர்) இவர்களின் பருப்பு வேகும்?

இன்றைக்குக்கூட அன்றைய சென்னை மாநிலமாக இருந்த தென் மாநிலங்களில்தான் இந்த துறையும் சட்டமும் கிடையாது. அங்கெல்லாம் அவாள் வயிற்றில்தான் கோயில் சொத்துகள் இன்றுவரை அறுத்து வைக்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறது.

சிதம்பரம் பொதுக் கூட்டத்தில் 15.4.1982 இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பேசிய எழுச்சியுரை சிதம்பர ரகசியம்? என்ற தலைப்பில் தனி நூலாகவே வெளிவந்துள்ளது.

அதற்கு முன்னதாகவே இதே சிதம்பரத்தில் 1925-ஆம் ஆண்டிலேயே பேசியிருக்கிறார் என்றால் பலருக்கும் ஆச்சரியமாகவிருக்கலாம் ஆம் பேசினார்!

வானம் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார்? அதன் உச்சிக்கெல்லாம் தங்க மூலாம் பூசியவர் யார்? தில்லை நடராசருக்குத் தங்கக்கூரை வேய்ந்து தந்தவர் யார்? சத்திரம், சாவடி கட்டியவர் யார்? அன்றாடம் ஆறுகால பூஜைக்கு உதவி வருபவர் யார்? எல்லாம் நாம் தானே? நாம் போட்டுக் கொடுத்த செல்வம் தானே இவை யாவும்? ஒரு பார்ப்பானாவது, ஒரு செல்லாக் காசாவது கோவில், குளம், தானம் தருமம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா? அப்படியிருக்க இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாயிருக்க வேண்டும்? அவர்கள் மட்டும் ஒன்றும் செய்யாமலேயே நம்மை ஏமாற்றி உண்டு, பிராமணர்களாக வாழ வேண்டும் (விடுதலை 5.10.1948)

1948 செப்டம்பர் 29-இல் இதே சிதம்பரத்தில் தந்தை பெரியார் தன்மான முரசு கொட்டினார். 2009-இல் 61 ஆண்டுகளுக்குப்பின் அய்யாவின் சீடர் மானமிகு கலைஞர் அவர்கள் அதனைச் சாதித்துக் காட்டிவிட்டார். கிருபானந்த வாரியாரைத் தாக்கிய, ஓதுவார் ஆறுமுகசாமியை அடித்துத் துவைத்த அந்த இறுமார்ப்புப் பிடித்த பார்ப்பனர்களின் ஆதிக்க முரட்டுக்கரங்களிலிருந்து சிதம்பரம் நடராசன் கோயில் மீட்கப்படுகிறது என்றால் அது என்ன சாதாரணமா?

பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அனைத்து முக்கியக் கோயில்களும் அர்ச்சராகவும் பணிப் பொறுப்பு ஏற்கும் காலம் விரைவில் வெளிவரும் - ஆம் அது ஒரு ஆனந்த சுதந்திர நாள் - அக்கிரகாரச் சாம்ராஜ்ஜியத்துக்கான அஸ்தமான நாள்!


அந்த நாள், அடடா, இப்பொழுது நினைத்துப் பார்ப்பதற்கே இதமாக இருக்கிறது. இன்பத் தேன் மழையில் குளிப்பது போலிருக்கிறதே!
-----------------------------------------------------------------------------------------

கலைஞர் ஆட்சியில் காலத்தின் கல்வெட்டுகள்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு, வடலூர் இராமலிங்க அடிகளாரின் சத்திய சபையிலிருந்து பார்ப்பனர்கள் வெளியேற்றம், சிதம்பரம் நடராஜன் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாட உரிமை அக்கோயிலை இந்து அறநிலையத்துறையின் நிருவாகத்தின்கீழ் கொண்டு வந்தது, தமிழ் செம்மொழி என்ற அங்கீகாரம் பெற்றது - இந்த ஆறு சாதனைகளில் இந்த முறை மானமிகு கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாறு மெச்சும் வானளாவிய மகத்தான சாதனைகள் என்பது காலத்தின் கல்வெட்டுகளாகும்.

------------------------------------------------------------------------------------

பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் மோர் கொண்ட வேந்தர்க்கும் பொல்லா வியாதியாம்

பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாமென்றே

சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே

- திருமூலர்

-------------------------------------------------------------------------------------


---------------- மின்சாரம் அவர்கள் 7-2-2009 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

11 comments:

Anonymous said...

Having quoted the work of Thirumular, do you agree there is a different strand of tamil philosophical and spiritual works of literature that stands the test of time and deserve special attention and practice among tamils. Sir, such a stream of work exists right from the days of upanishads, buddhas, Thiruvalluavar. Of course brhamanical rituals and rigid varnasharrma dharms reinforced inhuman practices. Those should be neglected and power must be brought to people even in spiritual and religious practices. Periyar's Iconclastic shock therapy cannot be taken as a final say for settling all the political issues in Tamilnadu and India. There were great siddha and atheistic thinkers sharper than Periyar lived in tamil lands sir. You see, now you are discoloring the CPI's genuine intent on eelam issues with brhamanicla paint. This kind of branding will only help opportunistic politicians.

Unknown said...

பகுத்தறிவுவாதிகளுக்கு...
http://ennacchamayal.blogspot.com/2009/02/blog-post_6257.html

தமிழ் ஓவியா said...

இந்த இடுகைக்கும், நீங்கள் கொடுத்துள்ள சுட்டிக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை.

இருப்பினும் நீங்கள் கொடுத்த சுட்டியைப் படித்தேன். ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். ஆனால் ஓட்டுப் பொறுக்கும் கட்சிகள் "கூட்டணி" என்று பிரிந்து கிடப்பது வேதனையளிக்கிறது.

அருள்கூரிந்து எமது வலைப்பதிவில் உள்ள கட்டுரைகளை ஒரு முறை படியுங்கள் உண்மை புரியும்.

உங்களின் வயதைப் பார்த்தேன். இந்த வயதில் வேகம் இருக்கும். இந்த வேகத்துடன் விவேகமும் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும். நிறையாப் படியுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.

நன்றி

Unknown said...

Those trained by the govt. to become Archakas are unemployed.Who is responsible for this.DMK govt. started the training schools even when there was a stay. Till the court decides the issues they cannot be appointed. So Veeramani can erect a Kalvettu for this great acheivement.Why cant DK give them some jobs.
Dikshitars have appealed against
the single judge order. The court may grant a stay and this issue will go to Supreme Court. So the end is not in sight.
Yet Veeramani is keen on Kalvettu to please Karunanidhi.
Sethusamudram Project is under review and despite all the efforts
it did not materialise. The stay
continues and the project may be
shelved if the panel suggests so.
There are limits to the power of DK and DMK.Understand that first
becoming making so much noise.

Unknown said...

Understand that first
becoming making so much noise.

should be
Understand that first
before making so much noise.

தமிழ் ஓவியா said...

தமிழில் பின்னூட்டம் அளிக்கவும்.
நன்றி.

Unknown said...

இந்த இடுகைக்கும் என் பதிவிற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் யார் மூலமாவது இந்த செய்தி தமிழுணர்வாளர்களுக்கு போய் சேரட்டும் என்ற எண்ணத்தில் இங்கு பதிந்தேன். ஓட்டுப்பொருக்கும் அரசியல்வாதிகளை நான் ஈழ விவகாரத்தில் நம்பவில்லை. என் ஆதங்கங்கள் எல்லாம், பிரிந்து கிடக்கும் தமிழுணர்வாளர்கள் பற்றி மட்டுமே. மறுபடியும் இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாத செய்தியை இங்கு பதிவதற்கு மன்னிக்கவும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நளன்.

தமிழ் ஓவியா said...

நன்றி நளன்

Anonymous said...

Iyya:
You have not replied to my question? Is Periyar relevant today? Kadavul is just a metphorical word to describe the forces of the nature that are omnipresent. (even as per the works like Thirumanthiram); it has nothing to do with what we inherited in the name of organized religion. In that light it is important to reread the classiical literature.

Senthil

Unknown said...

செந்தில், பெரியாரின் கருத்துகள் இன்றும், என்றும் ஏற்புடையதே. When you say, about "Metphorical Word" it applies to all the priyars principles aswell. When you want to reread the literature and dig to find out the actual meaning of it, you do so with periyar also. I would say, you are impartial. When you read periyar, he did not start with "no god" concept. "Humanity" and "Equality" these are the fundamental thoughts of periyar. When seeing the present community structure, the major cause of non-humanitic and unequal hierarchy was established by the arians, using the "God" concept. To break this he had to break the "God" concept aswell.

So periyar is absolutely relevent today. I hope I have answered your question.