Search This Blog

1.2.09

இந்து ராஷ்ட்ரம் அமைக்க - இசுரேலிடம் உதவி கேட்ட மதவெறியர்கள்
மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதிகாரர்கள் மீது 20.1.2009இல் 4000 பக்கக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாதங்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு - விசாரணை அதிகாரி ஹேமந்த் கார்கரே மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு - குற்றப்பத்திரிகை தாக்கலானது.

சிறீகாந்த் புரோகித் எனும் பார்ப்பன ராணுவ அதிகாரி முதன்மைக் குற்றவாளி. இந்து ராஷ்ட்ரம் அமைக்கத் திட்டமிட்டு, அரசியல் கூட்டம், கொடி போன்றவற்றையும் எழுதி வடிவமைத்து, இதற்கான சதிச் செயல்களில் ஈடுபடுவதற்குத் தேவையான வெடிப் பொருள்களை வாங்கிச் சேமித்தார் அல்லது ராணுவத்திலிருந்து திருடிச் சேமித்தார் என்று குற்றச் சாற்று.

அவருடைய நோக்கம், இசுரேல் நாட்டின் உதவியுடன் போட்டி அரசாங்கம் ஒன்றை இந்தி யாவுக்கு எதிராக அமைப்பது என்றும் இந்தியாவை விட்டு வெளியேறி இசுரேலில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து போட்டி அரசை நடத்துவது என்பது தான்.

37 வயதான சன்னியாசினி பிரதிக்யா சிங் எனும் தாக்கூர் (சத்திரிய) ஜாதிப் பெண் முக்கிய குற்றவாளி.

சுயம்பு சங்கராச்சாரி தயானந்த் பாண்டே எனும் பார்ப்பனர் கூட்டுச் சதிகாரர். இவருடன் இணைந்து சதித்திட்டம் போட்டவர் போர்க்கருவிகள் விற்பனையாளரான ராகேஷ் தாவ்டே என்பவர். 2006இல் நடந்த நாண்டெட் குண்டு வெடிப்பிலும் சம்பந்தப்பட்ட ஆள்.

இந்துமதவெறி அமைப்பான அபிநவ் பாரத் அமைப்பின் பொருளாளர் அஜய் ராஹிர்கர் பணம் திரட்டி உதவியவர். சுமார் 21 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி திரட்டித் தந்துள்ளார்.
இவர்கள் தவிர, சிவ நாராயணன் கல்சங்ரா, ஷியாம்லால் சாகு, ஜகதீஷ் மாத்ரே, சமிர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, ரமேஷ் உபாத்யாயா என்று 11 பேர் குற்றம் செய்யத் தூண்டியோர் என்று குற்றப் பத்திரிகை கூறுகிறது.

சந்தீப் டாங்கே, ராம்ஜிகல் சங்ரா, முத்தாலிக் என்றழைக்கப்படும் பிரவீண் பாட்டில் என்கிற மூன்று குற்றவாளிகளும் பிடிபடாமல் உள்ளனர்.

இவர்களைத் தவிர, சாமி அசீமானந்த் என்ற பெயர் கொண்ட குஜராத்தைச் சேர்ந்த டாங் பகுதியில் இருந்த சாமியார் ஒருவரையும் இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. இந்த ஆளைப் பிடித்தால், பலசதிச் செயல்கள் பற்றிய விவரங்கள் வெளிவரும்.

அத்துடன் அஜ்மீர் தர்காவிலும், அய்தராபாத் மெக்கா மசூதியிலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சதிகள் பற்றிய விவரங்களும் வெளிவரும். ஆனால், இந்த ஆளுக்கு குஜராத்தின் மோடி அரசின் ஆதரவு இருக்கும் காரணத்தால் அவரைப் பிடிக்க முடியவில்லை. மகாராட்டிர மாநிலத்தின் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவுக் காவல் துறைத் தலைவராகக் கூடுதல் பொறுப்பில் உள்ள ரகுவன்ஷி இதுபற்றிக் கூறும் போது, இவர்கள் இந்து ராஷ்ட்ரத்தை அமைத்திட இசுரேல் நாட்டின் உதவியை நாடத் திட்டமிட் டுள்ளனர் என்றும், அதற்கு முன்பாக இங்குள் ளோரின் ஆதரவை முதலில் திரட்டுவது என்றும் தீர்மானித்து விட்டனர் என்கிறார்.

இவர்களது திட்டம், சந்திப்புகள், பேச்சு வார்த்தைகள் எல்லாவற்றையுமே மடிக்கணினியில் பதிவு செய்து வைத்த அல்ட்ரா மாடர்ன் சதிகாரர்கள். காவல் துறை அனைத்தையும் அள்ளிக் கொண்டு வந்து வழக்கில் ஆவணங்களாகத் தாக்கல் செய்துள்ளனர்.

தாலிபான், முஜாகிதீன் போன்ற இசுலாமியத் தீவிரவாதிகளின் செயல்களின் வீடியோ படக் காட்சிகளைப் போட்டுக்காட்டி இந்துமத வெறியைத் தூண்டி இசுலாமியர்களுக்கு எதிரான சதிச் செயல்களின் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர்.

காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட ராணுவத் தினரையும் மதவெறிக் கட்சி ஆள்களையும் வழக்கில் சேர்க்காமல் விட்டுவிட்டனர். விசாரணை அலுவலர் ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டு விட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கில் 400 சாட்சிகள் குறிக்கப்பட்டுள்ளனர். போஸ்லா மிலிட்டரிப் பள்ளியின் உறுப்பினர்களும் சாட்சிகளாக்கப்பட்டுள்ளனர். இந்தப் பள்ளியில் பயிற்சி அளித்து 1000க்கும் மேற்பட்டவர்களை இந்தியாவின் முப்படைகளிலும் சேர்த்து விட்டிருப்பதாகப் பயிற்சியாளர் கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது. ஆயிரத்தில் ஒருவன்தான் அகப்பட்டுள்ளான். மற்றவர்கள் என்ன செய்து மாட்டிக் கொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகளின் படியோ, திட்டமிட்ட சதிச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் படியோ அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெளி நாட்டுக்குத் தப்பி ஓடி அந்நாட்டு ஆதரவைப் பெற்று, இந்திய நாட்டுக்கு எதிராகப் போட்டி அரசை நிறுவிட முயற்சி செய்தவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்ட அரசுத் துரோகக் குற்றச்சாட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? எந்த நடவடிக்கையும் இல்லை! பார்ப்பனர்கள் என்பதால் சலுகையோ?

--------------தரவு: தெகல்கா 31.1.09
------------------நன்றி:- "விடுதலை" 1-2-2009

2 comments:

Unknown said...

உண்மையான பயங்கரவாதிகளில் பார்ப்பனர்கள் தான் முதலிடம் பெறுவார்கள் போல் இருக்கிறது அவர்களின் செய்கைகள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்