Search This Blog

19.2.09

பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா? - 4 ---அம்பேத்கர் பார்வையில்...
ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.


தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்


இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)

தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்

---------------------------------------------------------------------------------
அம்பேத்கர் பார்வையில் பார்ப்பனர்கள்...


பார்ப்பனர்கள் ஆளும் வகுப்பு ஆவார்கள் என்பதில் கேள்விக்கு இடமில்லை. மக்களின் மனப்போக்கு என்று எடுத்துக் கொண்டால் பார்ப்பனரின் உருவம் புனிதமானது.

புராதனக் காலத்தில் என்ன குற்றம் செய்திருந்தாலும் அவரைத் தூக்கிலிட முடியாது. அடிமை வகுப்புக்கில்லாத தனிப் பாதுகாப்புகளும் சிறப்புரிமைகளும் புனிதமானவர் என்ற முறையில் அவருக்கு இருந்தன.

அவரே முதற்கனிகளுக்கு உரிமை படைத்தவராய் இருந்தார்.

சம்பந்தத் திருமண முறை வழக்கில் இருக்கும் மலபாரில், நாயர்களைப் போன்ற அடிமை வகுப்பினர் தங்கள் வீட்டுப் பெண்களை பார்ப்பனர்கள் ஆசை நாயகிகளாக வைத்துக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். மன்னர்களும்கூட முதலிரவில் தங்கள் ராணிமார்களைக் கன்னிகழிக்கப் பார்ப்பனர்களை அழைத்தார்கள்!

அடிமை வகுப்பைச் சேர்ந்த எவரும் பார்ப்பனர்களின் பாதங்கழுவிய நீரைக் குடிக்காமல் உணவெடுக்க முடியாத ஒரு காலம் இருந்தது.

கல்கத்தாவில் சாலையோரத்தில் காலை நேரத்தில் அடிமை வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் கையில் கோப்பைத் தண்ணீருடன் வரிசை வரிசையாக பல மணி நேரம் காத்திருப்பதைத் தன் குழந்தைப் பருவத்தில் கண்டிருப்பதாகச் சர். பி.சி. ராய் ஒருமுறை குறிப்பிட்டார்.

ஒரு பார்ப்பனர் அவ்வழியாக வந்து தன் பாதங்களை கழுவுவதற்காக அக்குழந்தைகள் இப்படிக் காத்திருப்பார்களாம். குழந்தைகள் கொண்டு வரும் தண்ணீரை உறிஞ்சி விட்டு உணவெடுப்பதற்காகப் பெற்றோர்கள் காத்திருப்பார்களாம். பிரிட்டிசு ஆட்சியில், அதன் சட்ட வியலின் காரணத்தால் பார்ப்பனர்களின் இந்த உரிமைகளும், பாதுகாப்புகளும் சிறப்புச் சலுகைகளும் இல்லாது போய்விட்டன என்றாலும் அவற்றால் கிடைத்த அனுகூலங்கள் நீடிக்கத்தான் செய்கின்றன.

அடிமை வகுப்புகளின் பார்வையில் பார்ப்பனர் இப்போதும் உயர்ந்த வராகவும் புனிதமானவராகவும் உள்ளார்.

பார்ப்பனீய மெய்யியலின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆறு

1. வெவ்வேறு வகுப்புகளிடையே படிப்படியான ஏற்றத் தாழ்வு

2. சூத்திரர்களையும் தீண்டாதார்களையும் அறவே ஆயுத நீக்கம் செய்தல்;

3. சூத்திரர்களும் தீண்டாதார்களும் கல்வி பெறுவதை அடியோடு தடை செய்தல்.

4. சூத்திரர்களும் தீண்டாதார்களும் அதிகாரம் வாய்ந்த இடங்களைக் கைப்பற்றுவதற்குத் தடை.

5. சூத்திரர்களும் தீண்டாதார்களும் சொத்துடைமை பெறுவதற்குத் தடை;

6. பெண்களை அறவே அடக்கி ஒடுக்குதல்.

ஏற்றத் தாழ்வுதான் பார்ப்பனீயத்தின் அதிகாரப்பூர்வக் கொள்கை, சமத்துவ நாட்டம் கொள்ளும் கீழ்வகுப்புகளை அடக்கி ஒடுக்குவதை அவர்கள் தங்களின் இன்றியமையாக் கடமையாகக் கருதி, எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி அதைச் செய்து வந்துள்ளார்கள்.------------------------ அண்ணல்அம்பேத்கர் நூல்: காங்கிரசும் - காந்தியும் ப.250,260

5 comments:

Unknown said...

//அடிமை வகுப்புகளின் பார்வையில் பார்ப்பனர் இப்போதும் உயர்ந்த வராகவும் புனிதமானவராகவும் உள்ளார்.//

இதைத் தகர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு முற்ப்போக்காளர்களுக்கு உண்டு. அந்தப் பணியை சிறப்பாக செய்து வருகிற உங்களைப் பாராட்டுகிறேன்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
திருநாவு

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு

Anonymous said...

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

**********************************
தங்களுடைய இந்த எடுத்துக்காட்டை வைத்து ஒரு மதவெறியனிடம் வாதம் செய்தேன் .ஆனால் அவன் இப்படி ஒன்றே ரிக் வேதத்தில் இல்லை என்று மறுத்து விட்டான்.ரிக் வேதத்தில் 62 வது பிரிவே இல்லை என்கிறான்.அதற்கு ஆதாரத்தையும் கொடுத்தான் .தயவு செய்து விளக்கவும்
http://www.sacred-texts.com/hin/rigveda/index.htm

உங்களிடம் இதற்கான அதாரபுத்தகம் மற்றும் பெரியார்,அம்பேத்கார் பற்றிய புத்தக்ங்கள் இருந்தால் அனுப்புவீர்களா.கேட்டதில் தவறென்றால் மன்னிக்கவும்.

pstalinprabu@gmail.com

நம்பி said...

பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது இல்லை....கண் இருப்பவர்கள், சுயமரியாதையை விரும்பும் எந்த ஒரு மனிதனும் செய்வது...

கண் இருந்தும் இல்லாது இருப்பவர்களுக்காக செயவது.. 97 சதவீத மக்களை 3 சதவீத ஆரிய வந்தேறிகள் அடிமைப்படுத்த நினைக்கும் வர்க்க பேதத்தை ஒழிக்க நினைப்பது...திராவிடன் (பார்பனரல்லோதோர் அனைவருமே திராவிடர்கள் தான்...பெரியார் குறிப்பிட்டது...பேரா.மா.நன்னன்)கண்டுபிடித்த கருவிகளை (கணினி, இணையம்)கொண்டே பார்ப்பனீயத்தை, வர்ணாசிரமத்தை இணையத்தின் மூலம் ஜகஜோதியாக பிரச்சாரம் பண்ணும் பொழுது இது ஒன்றும் தவறல்ல. இன்னும் மூடநம்பிக்கையை பார்ப்பனர்கள் பண்ணும் பொழுது இது தவறல்ல...இன்னும் ''தாழ்ந்த மக்களுக்கு'' இடஒதுக்கீடு தேவையா? என்று எழுதுகிறான் ஒரு அர்ச்சக பார்ப்பனன்...எல்லாவற்றையும் தாழ்ந்த மக்களுக்கே கொடுத்து விடுகிறார்கள் என்று எழுதும் பார்ப்பனன் இருக்கும் பொழுது...இது இன்னும் அதிகமாக தேவை...இந்த வாசகத்தை கவனிக்க ''தாழந்த மக்கள்'' இது தான் முக்கியம்... அவனே தாழ்ந்த மக்கள் என்று தான் எழுதுகிறான்...அவன் தான் அரசியலைபற்றியும் அலசுகிறான்...தர்மத்தை பற்றி போதிக்கிறான்...கோயிலில் அந்த தாழ்ந்த மக்கள் பிச்சையிடும் காசை வாங்கி வயித்தை கழுவிவிட்டு அவனை தாழ்ந்த மக்கள் என்றும் எழுதுகிறான் ஒரு பார்ப்பனன். இந்த பதிவு முத்தமிழ் மன்றத்தில் இருக்கிறது. அதேபோன்று அந்த பதிவர் இங்கேயும் மூட வாதம் புரிந்திருக்கிறார்....ஸ்பெக்டரம் பற்றி...


இன்னும் இணையத்தில் சாமன்யர்களின், பாட்டாளிகளின் எண்ணிக்கை இணையத்தில் அதிகரிக்கவில்லை..தமிழகத்தை சார்ந்தவர்களின் பங்களிப்பு மிக மிக குறைவு.....போகப்போக வரும்...இது புள்ளியல் தகவல்...பலர் இணையத்தை பற்றி தெரிந்தாலும் தயக்கத்துடன் அகன்றுவிடுகின்றனர்..தெரியாததாலும் அகன்றுவிடுகின்றனர்..... காரணம் இது போன்ற பிரச்சாரங்களால் தான். நாளடைவில்...இன்னும் சில நாட்களில்..மாதங்களில். அவர்கள் ஈடுபாடு, பங்களிப்பு இணையத்தில் அதிகரித்துவிடும்...ஆகையால் இது தேவைதான். நிச்சயம் தேவையான ஒன்று. கைப்பேசி அதிகரிக்கவில்லையா? அனைவரும் கைப்பேசி வைத்து கொண்டிருக்கவில்லையா...?...அது போலத்தான்...கைப்பேசியிலேயே இணையதளம் வந்துவிட்டதே...

தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், ஆசிரியர் வீரமணி....பேரா.சுப.வீ... இவர்கள் எல்லாம் பார்க்காத எதிர்ப்பா...? அதுவும் அன்றைய காலகட்டத்திலேயே...பார்த்துவிட்டனரே....