Search This Blog

26.2.14

கோயிலில்பாலாபிஷேகமா?குழந்தைகளுக்குஅந்தப்பாலைப்பயன்படுத்துங்கள்!நீதிபதிகளின் உயர்வான தீர்ப்பு



உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உயர்வான தீர்ப்பு
மதுரை,பிப்.26-பாலா பிஷேகத்துக்கு பயன்படுத்தும் பால் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் பலரது பசி யைப் போக்கலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம் பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் முத்துரத்தினம். இவர், மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:

நான், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் உள்ள பகவதி, மாரியம்மன், இளையாண்டி அம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது. இந்த கோவிலில், தாழ்த்தப்பட்ட வர்கள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்து வருகிறோம்.

இந்த நிலையில் ஆடி மாதத் திருவிழாவை யொட்டி வருகிற 27.4.2014 அன்று பால்குடம் எடுத்து ஊர்வல மாகச் சென்று கோவிலுக்குள் உள்ள அம்மன் சிலைகளுக்குப் பாலாபிஷேகம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

அவ்வாறு செல்லும் போது எங்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால், பாலாபிஷேகம் நடத்த அனுமதி கேட்டு இந்து அறநிலையத்துறை அதிகாரி களுக்கு மனு கொடுத்தோம். அவர்கள் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

எனவே, எங்களை கோவிலுக்குள் அனுமதித்து பாலாபிஷேகம் நடத்த அனு மதி அளிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகி யோர் முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் பூமி ராஜன், கண்ணப்பன் ஆகியோர் ஆஜராகி வாதா டினர். மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

நமது நாட்டில் பல் வேறு பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான உணவு, தங்கும் இடம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இளம் குழந்தை கள் பலர், பால் போன்ற சத்தான உணவுகள் கிடைக்காமல் உள்ளனர். பால் ஒரு அத்தியாவசிய உணவுப் பொருள் என்பதை மனு தாரரும், அவருடைய கிரா மத்தினரும் நன்கு அறிவர்.

இதுபோன்ற அத்தியா வசிய உணவுப்பொருளை இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற வர்களுக்கு வழங்கி அவர் களது பசியைப் போக்க லாம் என்பதை மனுதாரர் அறிய வேண்டும். மனுதாரர் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அறநிலையத்துறை அதிகாரி கள் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்தியர்களின் காலை உணவுப் பழக்கம் என்பது பற்றி கொலக்ஸ் நிறுவனம் டில்லி, மும்பை, கொல் கத்தா, சென்னையில் மூவா யிரம் பேர்களிடையே ஒரு ஆய்வினை மேற்கொண் டது. இதில் இந்தியாவில் நான்கில் ஒரு பகுதியினர் காலை உணவைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 72 விழுக் காட்டினர் ஊட்டச் சத்தில்லாத உணவினைச் சாப்பிடுகின்றனர் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. உலகள வில் ஊட்டச் சத்து குறைவினால் பாதிக்கப்படும் இந்தியக் குழந்தைகள் 30 சதவிகிதமாகும். இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு வர வேற்கத்தக்கதே!

                             -----------------------------"விடுதலை” 26-02-2014
Read more: http://viduthalai.in/e-paper/75979.html#ixzz2uR2fBJ4e

9 comments:

தமிழ் ஓவியா said...

ஏமாற்று வேலை!

எப்பொழுதாவது எங் கேயாவது எங்கள் தரப்பில் தவறுகளோ, குற்றங்களோ இருந்தால் அதற் காக நான் தலைவணங்கி மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன் என்கிறார் பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத்சிங்!

மன்னிப்புக் கேட்க வேண்டியவர் மோடி யல்லவா!

Read more: http://viduthalai.in/e-paper/75978.html#ixzz2uTtoRCiF

தமிழ் ஓவியா said...


வரலாற்றுப் பிழைகளின் குப்பைத் தொட்டியான மோடி ராஜ்ஜியம்

காந்திநகர், பிப்.26- வர லாற்று விவரங்களை தப் புத்தப்பாக குஜராத் முதல் வர் நரேந்திரமோடி பேசி வருவது ஒன்றும் தற்செய லான விஷயமல்லவோ என்று சந்தேகம் கிளம்பு மளவுக்கு அம்மாநிலப் பள்ளிப்பாடங்கள் அமைந் துள்ளன. இமாலயத்தவறு என்று சுட்டிக்காட்டுகிறார்கள்

ஆங்கில மொழி வழியில் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகம் மொத்தம் 124 பக்கங்களைக் கொண்டதாகும். இதில் 59 பிழைகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வெறும்மாதிரிதான் என்றும், கிட்டத்தட்ட ஆங் கில மற்றும் குஜராத்தி வழிக் கல்வி ஆகிய இரண்டிற்கு மான பாடப்புத்தகங்களில் இப்படித்தான் நிலைமை உள்ளது என்று குற்றம் சாட் டுகிறார்கள் கல்வியாளர்கள். அதோடு நிற்கவில்லை, இவையெல்லாம் பிழைகள் என்று சொல்வது பிரச்சி னையைக் குறைத்து மதிப் பிடுவதாகும். இமாலயத் தவறு என்று சுட்டிக்காட்டு கிறார்கள் அந்தக் கல்வி யாளர்கள்.

யார் சுட்டுக் கொன்றது?

சில எடுத்துக்காட்டுகள், இரண்டாம் உலகப் போர் நிறைவடையும் தருணத்தில் அமெரிக்கா மீது ஜப்பான் அணுகுண்டு வீசித்தாக் கியது. நாட்டின் தந்தை என அழைக்கப்படும் காந்தி யார், அக்டோபர் 30, 1948 அன்று சுட்டுக் கொல்லப் பட்டார். (தேதியைத் தவ றாகக் குறிப்பிடும் பாடப் புத்தகத்தில் யார் சுட்டுக் கொன்றது என்ற விபரம் கவனமாக நீக்கப்பட்டிருக் கிறது).

தாதாபாய் நவ்ரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோர் தீவிர வாதிகள் என்று அழைக்கப் பட்டனர். 1947 இல் நாடு பிரிந்த போது, இஸ்லாமிய இஸ்லா மாபாத் என்கிற புதிய நாடு உருவானது.

அதன் தலை நகராக இந்துகுஷ் மலைத் தொடரிலுள்ள கைபர்காட் அமைந்தது. ஆயிரக்கணக்கான மாண வர்கள் இவற்றை மனப் பாடம் செய்து தேர்வு எழு தத் தயாராகியுள்ள நிலை யில், ஆம்! தவறுகள் நேர்ந் துள்ளன. அவற்றைப் பட்டி யலிட்டு இணையதளத்தில் வெளியிடப் போகிறோம் என்கிறார் பள்ளி நூல்களுக் கான வாரியத் தலைவர் நிதின் பேதானி.

Read more: http://viduthalai.in/e-paper/75981.html#ixzz2uTuI00cm

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு -4


- குடந்தை கருணா

அண்மையில் புதுடில்லியில் பேசிய நரேந்திர மோடி, விவசாயி களின் முன்னேற்றத்திற்காக குஜராத் தில் நிறைய வசதிகள் செய்யப்பட் டுள்ளன. அதேபோன்று நாடு முழு வதும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பிஜேபி பாடுபடும் எனப் பேசினார்.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோலிரா கிராமத்தில், மோடியின் பிரியத்துக்குரிய திட்டமான சிறப்பு முதலீடு பிராந்தியம் (Special Investment Region SIR) துவக்கப்படுகிறது.

இதற்காக விவசாயிகளின் விளை நிலங்களைக் கையகப்படுத்தி, பெரு முதலாளி நிறுவனங்களுக்கு கொடுக் கப்பட உள்ளது. இதற்கு அங்குள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரி வித்து வருகின்றனர். தோலிரா கிராமம் மட்டுமல்லாது, குஜராத் தலைநகர் காந்தி நகரிலும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்தக் கிராம மக்கள் நர்மதா பாசனத் திட்டம் மூலம் தங்களது விவசாய நிலங்களான ஏறத்தாழ முப்பதாயிரம் ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் பெற்று வந்தனர்.

இப்போது, இவர்களது நிலங்களை கையகப் படுத்துவதற்காக, அந்த பாசனத் திட்டத்தையே மோடி அரசு நிறுத்தி விட்டது. விவசாயிகள் நிலங்களை விற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மோடி அரசு, இதுபோன்று விவ சாய நிலங்களை கையகப்படுத்த முயல்வது புதிதல்ல; சில ஆண்டு களுக்குமுன், பாவ் நகர் பகுதியில், சிமெண்ட் ஆலை அமைத்திட, விவ சாய நிலங்களைக் கையகப்படுத்திட மோடி அரசு முயன்று, விவசாயிகள் உச்சநீதிமன்றம்வரை சென்று தடுத்து விட்டனர். சென்ற ஆண்டு, வட குஜ ராத்தில், சிறப்பு முதலீடு பிராந்தியம் துவக்கப்பட, மோடி அரசு முனைந்த போது, விவசாயிகள் போராட்டம் காரணமாக, நிறுத்தப்பட்டது.

தற்போது, தோலிரா கிராமப் பகுதிகளில் 920 சதுர மீட்டர் விளை நிலங்களை ஏறத்தாழ 15000 விவசாய குடும்பங்களை விரட்டி, கையகப் படுத்திட மோடி அரசு முனைந்து, அதற்கான சட்ட அறிவிப்பையும் செய்துள்ளது. மாற்றாக, வேறொரு பகுதியில் நிலங்கள் விவசாயிகளுக்கு தரப்படும் எனவும் மோடி அரசு கூறுகிறது. அண்மையில் மத்திய அரசு நிறை வேற்றியுள்ள, நில கையகப்படுத்தும் சட்டம் 2013, நிலங்களுக்கு, சந்தை விலையைக் காட்டிலும் நான்கு மடங்கு, பணம் தர வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், இந்த சட்டத்திற்குப் புறம் பாக, 2011 சந்தை விலையை மட்டுமே தர முடியும் என மோடி அரசு, விவ சாயிகளை அச்சுறுத்துகிறது. இத்தகைய, விவசாயக் கொள் கையை நிலை நாட்டும் மோடி தான், விவசாயிகளின் நலனுக்காக பாடு பட்டு வருவதாக, புதுடில்லியில் கதைக்கிறார்.

Read more: http://viduthalai.in/page-2/75991.html#ixzz2uTv5PkME

தமிழ் ஓவியா said...


உண்டியலில் காணிக்கை ஏன்? வருமான வரிகட்டுவது நல்லது: கமல்



சென்னை, பிப்.26-வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாள் கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக- புதுவை மாநில வருமான வரித் துறை முதன்மை ஆணையர், ரவி தலைமை தாங்கினர். இயக்குநர் ஜென ரல் ஜெய்சங்கர், முதன்மை ஆணையர்கள் பிரதீப் ஆர் சேத்தி, மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சிறப்பு விருந் தினராக பங்கேற்ற, நடிகர் கமல்ஹாசன் பேசியபோது,

கடவுளுக்கு, உண்டிய லில் காணிக்கை செலுத்து வதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்க ளுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மை யாக வரி செலுத்தி வருகி றேன். சிலர், வரிகட்டும் போது மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர்.

வரியினால், நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்க ளால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால், வரி யின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்து வோரின் பங்கும் தெரியும் வரும்என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/76024.html#ixzz2uTvUUyKA

தமிழ் ஓவியா said...


குஜராத் மதுவிலக்கின் லட்சணம் மனைவியை எரித்துக் கொன்ற குடிகாரன்

அகமதாபாத், பிப். 26- குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் உள்ள சுனாராவாட் பகுதியில் திங்கள் அன்று இரவு குடிக்கப் பணம் தராத மனைவியை உயிருடன் எரித் துக் கொலை செய்தான். சுனாராவாட் பகுதியைச் சேர்ந்த அமித் வசானி, இவ ரது மனைவி பூனம், இவர் களுக்கு இரண்டு குழந்தை கள் உள்ளன. குடிப்பழக்கம் உள்ள அமித் அன்றாடம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சண் டையிடுவார். கடந்த ஞாயிறு மாலை தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் இல்லை என்று கூறி யுள்ளார். இந்நிலையில் இரவு முழுவதும் சண்டையிட்ட அமித், திங்கள் கிழமையன்று காலை, தூங்கிக்கொண்டு இருந்த தனது மனைவி மீது, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் அலறிக் கொண்டு இருந்தவரை அரு கில் உள்ள உறவினர்கள் மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை யில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார். பூனம் தனது மரண வாக் குமூலத்தில் கூறியிருப்பதா வது நீண்ட காலமாகவே அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட் டிற்கு வந்து துன்புறுத்துவார். வேலைக்குச் செல்வதும் கிடை யாது நான் அவ்வப்போது கூலிவேலைக்குச்சென்று கொண்டுவரும் பணத்தை யும் பிடுங்கிக்கொண்டு குடித் துவிட்டு வருவார். ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை இல்லா ததால் என்னிடம் பணம் இல்லை, இந்த நிலையில் மாலை என்னிடம் வந்து குடிக்க பணம் கேட்டார். நான் இல்லை என்று கூறியும் கேட்காமல் என்னை அடித்து துன்புறுத்தினார். பிறகு வெளியே சென்று விட்டார். திங்கள் கிழமை காலை வீட் டிற்கு வந்தவர் திடீரென மண்ணெண்ணெய் பாத்தி ரத்தை எடுத்து என்மீது வீசி னார், என் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் பரவியது.

உடனே தீக்குச்சியை பற்றவைத்து என்மீது வீசி விட்டு ஓடிவிட்டார், தீப்பற்றி யதும் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை, அதற்குள் என்மீதிருந்த ஆடைமீது பற்றிக்கொண்டு என் உடல் முழுவதும் தீ பர வியது. அதற்குள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என் அலறல் ஒலி கேட்டு என்னை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். என்று காவல்துறையினரிடம் மரண வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/76027.html#ixzz2uTvcWTMA

தமிழ் ஓவியா said...


அரசியல் என்றால்..


அரசியல் என்பதே சமுதாயக் கோளாறுகளைஒழிப்பதற்காக ஏற்பட்டுள்ள ஒரு சாதனம் என்பதுதான்நம்கொள்கை.சமுதாய வேலையைக் கலக்காதஓர்அரசியல் மனிதசமுதாயத்திற்குஎதற்காக வேண்டும்?
_ (குடிஅரசு, 29.6.1946)

Read more: http://viduthalai.in/page-2/76043.html#ixzz2uZbOdDNx

தமிழ் ஓவியா said...


தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் ஆர்ப்பாட்டம்

சோதிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள மூடத்தனங் களும், ஆபாசங்களும் கொஞ்சநஞ்சமல்ல. கிருத்திகை இராசியில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் ஏழு முனிவர் களின் மனைவிகளாம். அம்பா, துலா, நிதத்நி, அய்யந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி, சுபினிகா என்ற அந்த மனைவி மார்களின் பெயர்களாம்.

இந்தப் பெயர்களைப் பார்த்தாலே தமிழுக்கும், இவற் றிற்கும் எவ்வித உறவும் இல்லை. இவற்றின் வேர் என்பது ஆரியம் என்பது சொல்லாமலே விளங்கும்.

இன்னும் சில அபத்தங்கள் உண்டு. சூரியனுக்குப் பகை சனிக்கிரகம், சந்திரனுக்குப் பகை ராகு, கேது (இவை இரண்டும் பாம்புகளாம்; சந்திரனை விழுங்குகின்றனவாம் - அதுதான் சந்திர கிரகணமாம்!).

குருவுக்குப் பகை புதன் கிரகமாம்; புதனுக்குக் குரு கிரகம் பகையாம்! இவை மட்டுமா?
கிரகங்களிலும் ஆண், பெண் வேறுபாடாம். சூரியன், செவ்வாய், குரு ஆண் கிரகங்களாம். சந்திரன், சுக்கிரன், ராகு பெண் கிரகங்களாம். அதோடு விட்டார்களா? அலி கிரகங்களும் உண்டாம்.

அவை - புதன், சனி, கேது ஆகிய மூன்றுமாம்!

கிரகங்களோடு இந்தக் கட்டுக்கதைகளை முடித்தார் களா? அதுதான் இல்லை; நட்சத்திரங்களிலும் பால் இன வேறுபாடாம்.

ஆண் நட்சத்திரங்கள் 8; பெண் நட்சத்திரங்கள் 16; அலி நட்சத்திரங்கள் 3.

வானியல் ஆய்வுப்படி 25 ஆயிரம் கோடி நட்சத் திரங்கள் இருக்கும்பொழுது, வெறும் 27 நட்சத்திரங்களை மட்டும் கணக்கில் கொண்டு கதையளக்கும் அறியா மையை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் விலாநோகச் சிரிப்புதான் வெடிக்கும்.

சோதிடத்தில் பெண் அடிமைத்தனம் என்பது ஆணி அடித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாதாம்; ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் மாமியார் மண்டையைப் போட்டு விடுவாராம். கேட்டையில் பிறந்தால் கணவனின் மூத்த சகோதரன் மூச்சை விட்டு விடுவார்... விசாக நட்சத்திரத்தில் பிறந்தால் கணவனின் இளைய சகோதரனுக்கு ஆபத்தாம்.

இதில் என்ன கொடுமை என்றால், இந்த நட்சத்திரங் களில் பெண் பிறந்தால்தான் இந்தத் தீய விளைவுகளாம்! ஆண்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் அதனால் பாதிப்புக் கிடையாதாம். ஆரியக் கலாச்சாரம் என்கிறபோது அங்கு பெண் அடிமை என்பதுதானே அடிப்படை!

1955 ஆம் ஆண்டில் பிரதமர் நேரு அவர்கள் மத்திய அரசு சார்பில் மேனக்ஷா என்ற விஞ்ஞானியின் தலைமை யில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பஞ்சாங்கம், சோதிடம் பற்றி ஆய்வு செய்வது அக்குழுவின் நோக்கமாகும்.

இந்து காலண்டர் பஞ்சாங்கம் என்பது மனிதர் கள் தங்கள் சிந்தனையில் கற்பனையில் உருவாக்கப் பட்டதால், அதில் ஏராளமான மூட நம்பிக்கைகளை யும், அரைகுறையான உண்மைகளையும், இடைக் காலத்தில் இணைத்து விட்டார்கள் - அதில் பல குளறு படிகளும், குழப்பங்களும் உள்ளன. 23 நாள்கள் இடைவெளி வித்தியாசத்தில் இந்துப் பஞ்சாங்கம் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 1400 ஆண்டு களாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட கால இடைவெளி நீண்டு 23 வித்தியாசத்தில் நிற்கிறது என்று அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளதே!

இந்த விவரங்கள் எல்லாம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள கற்றறிந்த மக்களுக்குத் தெரியாதா? அவர்கள் என்ன கற்காலத்திலா வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்?

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த விஞ் ஞானி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளாரே!

சூரியக் குடும்பத்தில் வெகுதொலைவிலுள்ள கிரகங் கள்மீது மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது. அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்துகொள்ள முடியவில்லை.

அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு, சோதிடத்தை ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கிரகங்களின் இயக்கங்கள்பற்றிய சிக்கலான கணிப்பு களைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து தங்கள் வாழ்க் கையை கிரகங்கள் ஆட்டிப்படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள்? என்கிறார் அப்துல்கலாம்.

சோதிடத்தின் பித்தலாட்டத்தைத் தனது வாழ்க்கை யிலிருந்தே எடுத்துக்காட்டினார் தந்தை பெரியார்.

என் சோதிடத்தில் எனக்கு 67 வயது என்று குறித்து என் பெற்றோர்கள் அச்சுப் போட்டிருக்கிறார்கள். ஆனால், நான் இன்று 94 வயதில் சவுக்கியமாக இருக்கிறேன். என் ஜோதிடம் இன்னமும் இருக்கிறது - ஆனால், பொய்யாகி விட்டது - அந்தக் காலத்தில் 100 வயது இருப்பது என்பது அதிகம் என்று கருதி எனக்கு 67 வயது என்று ஜோதிடன் கணித்தான். இப்போது சராசரி வயது 52. இப்போது அப்படி எழுதமாட்டான் (பெரம்பலூரில் பெரியார் பேச்சு, 13.7.1973).

உண்மைகள் இவ்வாறு இருக்க, அறிவியலுக்கு விரோதமான சோதிடத்தை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் சேர்த்திருப்பதை கைவிட வேண்டும் :என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் 3.3.2014 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் கழகம், மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திரளுங்கள் தோழர்களே!


தமிழ் ஓவியா said...


சமூகநீதிக்குச் சவக்குழி!

- குடந்தை கருணா

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தற் போது உள்ள இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, பொருளா தார அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானத்திற்கும் குறைவாக உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின ருக்கு மட்டும், இட ஒதுக்கீடு வழங்கிட பாஜக ஆட்சிக்கு வந்தால் உரிய சட்டம் கொண்டு வரும் என, பாஜக தாழ்த்தப் பட்டோர் அமைப்பின் தலைவர் சஞ்சய் பஸ்வான் கூறி உள்ளார். அது மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தில் கண வன், மனைவி இருவரும் இரண்டாம் நிலை பதவியில் இருந்தாலும், அல்லது கணவனோ அல்லது மனைவியோ, முதல் நிலை பதவியில் இருந்தாலும், அவர் களின் பிள்ளைகளுக்கு. இட ஒதுக்கீடு முறையில் அரசு பணிகள் கிடையாது என்றும் சட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறி உள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல; பாஜகவின் கருத்து என அழுத்தம் திருத்தமாக கூறி உள்ளார் சஞ்சய் பஸ்வான். 1990 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக் காடு இடஒதுக்கீடு வழங்கிடும் ஆணையை எதிர்த்து, அத்வானி ரத யாத்திரை நடத்தி, வட நாட்டில் கலவரம் உருவாகக் காரணமாக இருந்தது பாஜக. தற்போது, ஆட்சிக்கு வந்தால், தாழ்த் தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டிலும், பொருளாதார அடிப் படையை புகுத்திட திட்டமிட்டுள்ளனர்.

மோடி பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர்; அவர் பிரதமரானால், அம்மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும் என ஆர்.எஸ்.எஸ். உத்தரபிரதேசத்தில் மாநாடு நடத்திக் கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம், ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டு முறையை அரசியல் சட்டத்திற்கு மாறாக மாற்றிட முடிவு செய்துள்ளனர். இதுதான் பாஜக ஆர்.எஸ். எஸ்.-இன் இரட்டை வேடம். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் ராம் தாஸ் அதாவ்லே, உதித்ராஜ், ராம்விலாஸ் பஸ்வான் போன்றோர் இப்போது பாஜக அணியில் தங்களை இணைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்திற்கு எதி ரான நிலையை மேற்கொள்ளும் பாஜக வோடு கூட்டணி சேரும் கட்சி களுக்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக் கள் வரும் தேர்தலில் தக்க பாடம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், போராடி பெற்ற சமூகநீதி, சவக்குழிக்கு சென்றி டும், ஜாக்கிரதை!

Read more: http://viduthalai.in/page-2/76047.html#ixzz2uZc9zEWN

தமிழ் ஓவியா said...

அமைதி, வளம், வளர்ச்சி இதுதானா?

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழக ஆளுங் கட்சித் தலைவர், அம்மையார் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை அ.இ.அ.தி.மு.க. சார்பில் வெளியிட்டு உள்ளார். அமைதி, வளம், வளர்ச்சி இந்தியா மேன்மையுற செயல்திட்டம் என்று கூறியுள்ளது கவர்ச்சியான வாசகங்கள் தான்.

தமிழகத்தில் மதுரை உள்பட நெல்லை நகரங்களில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளது.

எனவே அமைதி - எங்கே?

வளம் - யாருக்கு?

கடன் தொல்லையால் மாண்ட விவசாயிகள், பயிர்கள் வாடியதால் மரித்த விவசாயிகள், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டினால் பலி! நாடு கண்ட வளம் இதுதானா?

வளம் கண்டவர்கள் யார்?

விழிகளில் குளம் கண்டவர்கள் எண்ணிக்கையில் குறைந்தால்தான் வளர்ச்சி! வளர்ச்சி எங்கே? கோடிகளில் செலவழிப்பேன் எனக்கூறும் வேட்பாளர்கள் வாழ்விலா?

வேடிக்கை விசித்திரம்

தென்மாவட்டங்களில் வாழும் மக்கள் அமைதியாக முன்னேற்றம் காண வழிசெய்யவே 2000 கோடி ரூபாய் செலவு சேதுசமுத்திரத்துக்கான நலத் திட்டத்தை வளமைக்கு வழிவகுக்கும் திட்டத்தை இராமர் பாலம் என்று கூறி கிடப்பில் போட நீதிமன்றம் மூலம் தடை செய்து, இலங்கைக்கு வருவாய்த் தேடி தருவது மூலம் கிடைத்தது அமைதியா?

வளமா? அதனால் ஏற்பட்ட வளம் யாருக்கு?

நாட்டு வளர்ச்சிக்கு இதுவா அடையாளம்? மதுரவாயல் திட்டம் உயர்நீதிமன்றத்தில் ரூ.1800 கோடி பெருவழிச் சாலைக்கு அடிக்கட்டுமான வசதியை தடுத்து உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வதுதான் வளர்ச்சியா?

தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்க மாட்டார்களா?

- போடி நாயக்கனூர் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் உரையின் ஒரு பகுதி (26.2.2014)

Read more: http://viduthalai.in/page-2/76055.html#ixzz2uZd3nuvH