Search This Blog

25.2.14

சாவுக்கு பின்னும் ஜாதியை நிலைநாட்டும் சடங்குகள் - பெரியார்

மனிதன் தன் வாழ்க்கையில் குழந்தைப் பருவம் முதல் கிழப்பருவம் வரை அடையும் தன்மையும் இயற்கை யின் தத்துவமேயாகும். அவனுடைய அங்கங்கள் (உறுப்புகள்) குழந்தைப் பருவம் முதற் கொண்டு சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே வருகின்றன. அந்த வளர்ச்சி அவன் உண்ணும் ஆகாரங்களையும் மன நிம்மதியான வாழ்க்கையையும் பொறுத்ததாகும். இப்படி வளர்ச்சியடையும் உடல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வந்தவுடன், அதன் பிறகு வளருவது நின்று விடுகிறது. பிறகு அவ்வுறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் சக்திகளுக்கு ஏற்றவாறு இயங்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. 

அந்த உறுப்புகள் எத்தனை நாளுக்குத்தான் அப்படியே இருக்க முடியும்? அவையும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இயங்கும் சக்தியைக் கொண்டவைகளாக இருக்கின்றன. நாளடைவிலேயே அங்கங்களுக்குள்ள சக்தி சிறிது சிறிதாகக் குறைவதற்கு ஆரம்பிக்கிறது. இப்படியே ஒவ்வொரு அங்கமும் பலவீனம் அடைந்து வரும் காலத்தில் மனிதன் கிழப் பருவத்தை அடைந்து கொண்டே வருகிறான். கிழப்பருவம் வளர்ச்சியடைந்து கொண்டே வந்து, முற்றிலும் கிழத்தன்மை அடைந்தவுடன், உடலின் உறுப்புகள் யாவையும் ஒருவித சக்தியும் இன்றி அங்கும் இங்கும் அசையக்கூட போதிய சிறிதளவு பலம்கூட இல்லாமல் போய்விடுகின்றன. 

அத்தன்மை வந்தவுடன் மனிதன் உடலினுள் இருக்கும் உறுப்புகளும் அதே தன் மையை அடைந்து உண்ணும் உணவை ஜீரணிக்கவும், அதைப் பக்குவம் செய்து, சத்தைக் கிரகிக்கும் உறுப்புகள் போதிய பலமும் இன்றிப் போய், உணவும் செல்வதற்கும் இல்லாமல் போய்விடுகிறது. பின்பு மனிதனுக்கு இறுதியில் எஞ்சி நிற்பது காற்று ஒன்று தான். அக்காற்று மூக்குக்கும் சுவாச உறுப்புகளுக்கும் இடையில் உள்ள துவாரத்தின் வழியே போய்வந்து கொண்டிருக்கிறது.

சுவாசிக்கும் காற்றில் மனிதன் பிராணவாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுகிறான். அந்த ஆராய்ச்சிப்படி இதுவரை அவன் பிராண வாயுவைக் கிரகித்து, கரியமிலவாயுவை வெளியிட்டு வருகிறான். இந்தத் தன்மையும் ஏற்பட சுவாச உறுப்புக் கள் பலமுடன் இருந்து இயங்கினால்தானே முடியும்? ஆனால் இயற்கையின்படி எல்லா உறுப்புகளும் பலவீனம் அடைந்தது போல் சுவாச உறுப்புகளும் பலவீனம் அடைய ஆரம்பிக்கின்றன. அவைகளுக்குப் போதிய அளவு அதாவது ஒரு சிறிது அளவு காற்றையாவது இழுத்து கிரகிக்கும் பலம் உள்ள வரை மனிதன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறான் என்று கூறுகிறோமே அந்த நிலையை அடைகிறான்.

இறுதியில் அந்தப் பலம் கூட இல்லாமல் சுவாச உறுப்புகள் முற்றிலும் பலவீனம் அடைந்து விடுவதால் சிறிது கூட காற்றைச் சுவாசிக்க முடியாமல் போய் விடுகிறது. அப்போதுதான் மனிதன் இறந்து விடு கிறான் என்று சொல்லப்படுகிறது. அவன் உடலில் காற்று போய், உடல் உறுப்புகளையும், இரத்தத்தையும் சுத்தம் செய்து கொண்டு வந்ததன் காரணமாக உடலில் எந்தவிதக் கெடுதலும் ஏற்படுவதில்லை. சுவாசிக்கப் பட்ட பிராணவாயு உடம்பில் உள்ள இரத்தத்தைச் சுத்தம் செய்வதனால் செய்யப்பட்ட இரத்தம் பரவிய உடலின் தசைகள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன.

ஆனால் மனிதன் இறந்தவுடனோ சுவாசம் இல்லை. அதனால் உடலின் தசைகள் கெடுவதற்கு ஆரம்பிக் கின்றன. அந்தப் பிணம் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி கெட்டுப் போய்விடும். அதைத் தகுந்தபடி எரித்துவிடாமலோ இருக்கப்பட்டு விடு மானால் அந்த உடல் அழுகிக் கொழகொழத்துப் போய் சகிக்க முடியாதபடி துர்நாற்றமடிக்க ஆரம்பிக்கிறது. அதற்கென்றே உடலைப் புதைத்தோ அல்லது எரித்தோ விடுகிறார்கள். இப்படி மனிதன் பிறந்தது முதல் இறந்ததுவரை உண்டாகும் சம்பவங்கள் அத்தனை யையும் நேரில் காணுகிறோம். சுவாசிக்கும் காற்று நின்றவுடன் உடலை அடக்கம் செய்கிறார்கள்.

இத்தன்மை மனிதன் என்று சொல்லப்படுபவர்கள் அத்தனை பேருக்கும் அவ்வித முடிவுதான். தாழ்ந்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இதே நிலைதான், மேல்ஜாதி கடவுளுக்கும், அடுத்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்நிலைதான். அவன் யோக்கியனானாலும், முனிவரானாலும், சித்தரானாலும், மகாபக்திமான் ஆனாலும், கடவுள் அவதாரம் ஆனாலும், தியாகி ஆனாலும், மற்றும் மந்திரியானாலும் நாட்டின் தலைவன் என்பவன் ஆனாலும். இன்னும் புலவன், சிற்பி, பாடகன், ஓவியன், மற்றும் எப்பேர்பட்ட வெங்காயமா னாலும், இந்த நிலையை அடைந்தே தீரவேண்டும்; இது இயற்கையே ஆகும். இப்படி மனிதனுக்கு மட்டுமல்ல; உயிர் உள்ளது என்று எவை எவை சொல்லப்படுகின்றனவோ அவைகள் அத்தனையும் இப்படிப்பட்ட இயற்கைத்தன்மையை அடைந்தே தீருகின்றன - மரம் பட்டுப் போய் விட்டது என்றால், அது வளர்ச்சி இன்றிப் போய்விட்டது என்பது பொருள். அதுமுதல் அந்தப் பட்டுப்போன மரம் காய்ந்துபோக ஆரம்பிக்கிறது; ஒருவித ஈரப்பசையும் இன்றி வெற்றுக்கட்டையாக ஆகிவிடுகிறது, இப்படியே உயிருள்ளது என்பவைகள் அத்தனையும் செத்துப் போகும் நிலையை அடைகின்றன.

செத்துப்போகுதல் என்பது சத்துப் போய்விடுதல் என்பது பொருள். வளருவதற்கு வேண்டிய சத்துக்கள் என்னென்னவோ அத்தனையும் இல்லாமல் போய்விட்ட பிறகு, அதாவது சத்துப்போய்விட்ட பின் அதை சத்துப் போகுதல் என்பது செத்துப் போகுதல் என்று ஆகி இருக்கிறது.
மரம் செத்துப் போனவுடன் அதை அடுப்பு எரிக்க உபயோகிக் கிறோம். நாய் மாடு, கழுதை செத்தவுடன் புதைக்காவிடில் அழுகிப் புழு, பூச்சி பிடித்து விடுகிறது. இறுதியில் அதுவும் மண்ணுடன் மக்கிப் போய்விடுகிறது. செத்துப்போனது என்ற பிறகு அதைப் பற்றி ஒன்றுமே கிடையாது. அதன் முடிவு அத்துடன் சரியாகிவிடுகிறது. இதை நாம் கேள்விப்படவில்லை; சாஸ்திரத்தில் படிக்கவில்லை. கடவுளும், வெங்காயமும் கூறியதாக நான் உங்களிடம் கூறவில்லை. நேரில் கண்டவை; நீங்களும் நேரில் காணுகிற விஷயமே அன்றி, நான் அவன் சொன் னான், இவன் சொன்னான் என்று சொல்லவில்லை; எனவே இந்த முடிவுக்குப் பிறகு என்ன இருக்க முடியும்? ஒன்றுமே கிடையாது. அத்துடன் வாழ்க்கை இறுதி யடைந்து போய் விடுகிறது.

பார்ப்பனன் தங்கள் வாழ்க்கைக்குச் சாதகமாகப் பலவழிகளைக் கையாளுகின்றான். மனிதன் இறந்தவுடன் அந்த உடலை அவரவர் மதப்படி, அதிலும் மதத்தின் உட் பிரிவாக அமைக்கப்பட்டுள்ள ஜாதிமுறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறான். அதன்படி மக்களும் இது எங்கள் ஜாதி வழக்கம் என்று கூறிக்கொண்டு, புதைப்பவர்கள் புதைப்பதும், எரிப்பவர்கள் எரிப்பதுமாக இருக்கின்றனர்.

இதனால் என்னவென்றால் அந்தந்த ஜாதிக்காரன் அவனுடைய பின்சந்ததிகள் இன்னஜாதியைச் சேர்ந்த வர்கள் அவர்களும், அதே முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற முறையை நிலைநாட்டுவதன் மூலம் நடத்தப்படு கின்றன. எனவே மனிதன் இறந்த பின்னும் கூட பார்ப்பான் மதப்பிரச்சாரத்திற்கென்று இன்னின்ன பழக்க வழக்கம் என்று ஏற்படுத்தி இருக்கிறான்.

அத்துடன் விடவில்லை. செத்துப்போனவுடன் உடலிலிருந்து ஆத்மா என்று ஒன்று பிரிந்துவிடுகிறதாம். அது இங்கே தங்காமல் நேராக மேல்லோகம் போகிறதாம்! இவ்வளவு இயற்கைத் தன்மைகளையும் கண்டபின் ஆத்மா என்பது எங்கே இருக்கிறது? அது எப்படிப் பிரிகிறது? என்றால் அது உருவம் அற்றது, கண்ணுக்குத் தெரி யாதது என்று கூறினார்கள். அந்த ஆத்மா நேராக மேல் உலகம் சென்று அங்கு அது, இங்கு செய்த பாவபுண்ணி யத்துக்கு ஏற்றபடி தண்டனை பெறுகிறதாம். பாவம் செய்த ஆத்மா நரகத்தில் தள்ளப்படுகிறதாம். புண்ணியம் செய்த ஆத்மா மோட்சத்தில் தள்ளப் படுகிறதாம். இங்கேதான் உடல் நம் கண்முன்பாகவே எரிக்கப்பட்டது அல்லது புதைக்கப்பட்டது. உருவம் அற்ற ஆத்மா எப்படி அங்கே தண்டனை பெறும்? என்று கேட்டால் அந்த ஆத்மாவுக்கு வேறொரு உடலை மேல் உலகத்தில் கொடுக்கிறார்களாமே! அந்த உடலை இந்த ஆத்மா உடுத்திக் கொண்டவுடன் மனித உருவம் அடைகிறதாம். அதே உடலுக்கு அங்கே தண்டனை கிடைக்கிறதாம். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும். பாவமோ புண்ணியமோ செய்த உடல் நம் கண்முன் இங்கே இருக்க, அங்கே வேறொரு உடல் பாவத்தின் தண்டனையையோ, புண்ணியத்தின் சுகத்தையோ அனுபவிக்கிறதாம். அப்படியானால் உண்மையில் பாவம் செய்த உடலைத் தண்டிக்க வேண்டும்; உண்மையில் புண்ணியம் செய்த உடல் சுகமடைய வேண்டும். இதை விட்டு விட்டு, ஏதும் அறியாத வேறொரு உடலை வதைப்பதும், சுகப்படுத்துவதும் என்ன நியாயம் என்று கேட்டால் உடனே இவன் நாத்திகம் பேசுகிறான் என்றுதான் சொல்லத் தெரியுமே தவிர, தக்க பதில் ஒன்றும் கூற முடியாது.

மறுபடியும் அந்த ஆத்மா உலகில் உருவம் எடுத்து வருகிறதாம்! அந்த உருவம் பாவ புண்ணியத்திற்கு ஏற்றபடித் தக்க உருவம் அடைகிறதாம். அதில் ஃபஸ்ட் கிளாஸ் (முதல்தரம்) உருவம் என்று சொல்லப்படுவது பார்ப்பன உருவம். மற்றவை எல்லாம் அதற்குக் கீழ்ப்பட்டவை. மனித உருவத்திலேயே பார்ப்பான் தவிர்த்த மற்ற கீழ்ஜாதி உருவங்கள் தரம் பிரித்து உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதற்குத் தகுந்தபடி அமைக்கப்பட்டிருக் கின்றன. மனித உருவத்துக்குக் கீழ் மிருக உருவம்! அதிலும் தரம் பிரித்து அமைத்து மற்றப்படி மரம், செடி, கொடி இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் அயோக்கியப் பார்ப்பனர்கள் தங்களை மட்டும் பெரும் புண்ணியாத் மாக்கள், மற்றவர்கள் எல்லாரும் பெரும் சண்டாளர்கள் என்பதை வாய்விட்டுக் கூறுவதற்குப் பதிலாக இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூறவேயாகும். இப்படி நம்மை எந்த விதத்தில் இழிவு படுத்தவேண்டுமோ அம்முறைகளில் எல்லாம் இழிவுபடுத்தி இருக்கிறார்கள்.

அந்த ஆத்மாதான் மேல்லோகத்தில் புண்ணியத்திற் கேற்றபடி மோட்சத்திலேயோ அல்லது பாவத்திற்கேற்றபடி நரகத்திலேயோ தள்ளப்பட்டிருக்கிறதே, பிறகு இங்கே எப்படி வந்தது? அதனதன் நல்வினை தீவினைக்குத் தகுந்தபடி மோட்சம்- நரகத்தில் போய்ச்சேருகிறது என்ற பிறகு இங்கே எப்படிக் குதித்து வரமுடியும்? அப்படி யானால் மோட்சத்திலிருந்து தப்பி ஓடிவந்ததா? நரகத்தை விட்டு ஓடிவந்து விட்டதா? அப்படி அங்கு போய்ச் சேருகிற ஆத்மா சாந்தியடைய இங்கே பார்ப்பானுக்குத் தானதர்மம் செய்தால் போதுமாம்! உடனே அது அவர்களுக்குப் போய்சேருகிறதாம்! அதை அடைந்த அவர்கள் சுகம் அடைகிறார்களாம்! என்ன முட்டாள் தனம் என்பதைச் சிந்திப்பதே இல்லை. 100-க்கு 100 முட்டாள்களாக இருப்பவர்கள்தான் இன்னமும் இதை நம்பிக்கொண்டு பார்ப்பானுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். கையில் பணம் காசு இல்லை என்றால் கூட கடன் வாங்கியாவது திவசமும், கருமாதியும் செய்கிறான்.

இப்படித் திவசம் செய்வது குறிப்பிட்ட நாள் வரையிலும் என்று கூட இல்லை. இவன் உயிர் இருக்கும்நாள்வரை அவன் தகப்பனுக்குத் திவசம் செய்கிறான். பார்ப்பான் கூறி இருக்கிறபடி மேலே சென்ற ஆத்மா பிறகு என்ன உருவம் எடுத்ததோ தெரியவில்லை. அந்த உருவம் எடுத்த பிறகும் இவன் திவசம் செய்தானாகில், பார்ப்பான் கூறுகிறபடி அந்த ஆத்மா எங்கே இருந்தாலும் அந்த தானப் பொருள்கள் போய்ச்சேர வேண்டும். அப்படி இது வரை யார் அடைந்திருக்கிறார்கள்?

அப்படியே அவன் கூறுவது உண்மை என்றாலும் இக்கூட்டத்தில் உள்ள அத்தனை பேரும், ஏன் இவ்வூரில் உள்ள அத்தனை பேரும் மற்றும் இந்நாட்டு மக்கள் அத்தனை பேரும் இதற்கு முன் ஏதாவது ஒரு பிறவியில் இருந்திருக்க வேண்டும்; நாம் இல்லை என்றாலும் மற்ற சீவராசிகளாவது முதலில் மனித உருவத்தில் இருந்திருக்கவேண்டும். அவைகள் இறந்தவுடன் அதனதன் பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள். அத்தனை பேருக்கும் இல்லை என் றாலும் ஒருசிலருக்காவது தன்னுடைய பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள்; அப்படிக் கொடுப்பது இப்போது இவர்களுக்கு வந்து சேரவேண்டும். நியாயப்படி அதுதான் முறையாகும் - ஆனால் இதுவரை அப்படி யாரும் அடைந்ததாகக் கிடையாது. கேள்விப்பட்டது கூட இல்லை. எனவே பார்ப்பானுக்குக் கொடுத்த பின் அதை ஜீரணித்துவிடுகிறான். பிறகு எங்கே இவன் அப்பனுக்கு மேல்உலகத்துக்கு? போகமுடியும்? அப்படியே பார்ப்பான் மேல் உலகத்துக்கு அனுப்பும் சக்தி கொண்ட மந்திரம் கொண்டவனாக இருந்தால் இன்றைக்கு எவ்வளவோ காரியத்துக்குப் பயன்படும். ஆனால் அத்தனையும் புரட்டு என்பதற்கு நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு பார்ப்பனனிடம் ஒரு மடையன் திவசம் கொடுத்துக் கொண்டிருந்தானாம். அப்போது பார்ப்பனன் சொல்படி அந்த மடையன் ஆற்றில் உள்ள தண்ணீரைக் கையால் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தான். அதன் காரணம் என்ன வென்றால் இவன் இறைக்கும் தண்ணீர் மேல் உலகத்திற்குப் போய் இவனுடைய முன்னோர்களுக்குப் பயன்படு கிறது என்பதாகும். அந்த அடிப்படையில் புரோகிதன் மந்திரம் கூற இவன் தண்ணீர் இறைக்கிறான்.

அப்போது அதைப் பார்த்த ஒருவன், தானும் தண்ணீரைக் கரையின் மேல் வாரி இறைத்தான். அதைக் கண்ட புரோகிதன் நீ ஏன் தண்ணீர் இறைக்கிறாய் என்றதற்கு நான் என்னுடைய ஊரில் உருளைக் கிழங்குத் தோட்டம் வைத்திருக்கிறேன். அதற்குத் தண்ணீர் இறைத்து அதிக நாள்கள் ஆகின்றன. இப்போது நீங்கள் மந்திரம் சொல்லும் போது இறைத்தால் இந்தத் தண்ணீர் என்னுடைய உருளைக்கிழங்குத் தோட்டத்துக்கு போய்ச்சேரும், என்றானாம்.

அதற்குப் புரோகிதன் அது எப்படி அவ்வளவு தூரம் போய்ச் சேரும்? என்று கேட்க அதற்கு இவன் நீங்கள் இன்றைக்கும் தண்ணீர் எங்கேயோ கண்ணுக்குத் தெரியாமல் ஒருவரும் காண முடியாத அவ்வளவு உயரத்தில் இருக்கும் மேல் உலகத்திற்குப் போகிற பொழுது இது இங்கே அடுத்த ஊரில் உள்ள என் தோட்டத்திற்குப் போகாமல் இருக்க முடியுமா? என்று கேட்டானாம். பிறகு புரோகிதன் நம்முடைய சாயம் வெளுத்தது என்று நினைத்து தலைகுனிந்து போய்விட்டானாம்.

                                  ----------------------------------தந்தைபெரியார் - “விடுதலை”, 21.2.1956

15 comments:

தமிழ் ஓவியா said...

குஜராத் பா.ஜ.க. ஆட்சியில் ஊழலோ ஊழல்! பல்லாயிரக்கணக்கில் வேலை இழக்கும் அவலம்!


அகமதாபாத், பிப். 24- பி.ஜே.பி. ஆளும் குஜராத் மாநிலத்தில் இலஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பி.ஜே.பி. முன்னணியினர் பணம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளில் வேலைய மர்த்தம் செய்வது சர்வ சாதா ணமாகி விட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முற்றிலு மாக ஒழித்திட முடிவு செய் யப்பட்டுள்ளது.

இதன் காரண மாக 13,000 பேர்களின் வேலை வாய்ப்புப் பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் செல் வாக்கு மிக்க பாஜக தலை வர்கள் இளைஞர்களிட மிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு அரசு வேலையை வழங்கி வருவது சமீபத்தில் வெளி யாகியுள்ளது.

கைது செய் யப்பட்ட பாஜக தலைவ ரிடமிருந்து ரூ.1.43 கோடியை உள்ளூர் குற்றப் பிரிவு காவல் துறையினர் பறி முதல் செய்தனர். 16ஆவது நாடாளுமன் றத்திற்கான தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியைப் பெற முடியாத பாஜக இம்முறை எப்படி யாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பாஜகவின் பிரதம வேட்பாளராக நியமிக்கப் பட்டுள்ள நரேந்திர மோடி நாடுமுழுவதும் சுற்றி பிரச் சாரத்தில் ஈடுபட்டு வரு கிறார். செல்லும் இடங் களுக்கெல்லாம் அந்தப் பகுதியில் உள்ள உள் பிரச்சினைகளைப் பேசும் மோடி, நாட்டின் வளர்ச்சிக் கென்று எந்த ஒரு உருப்படி யான திட்டத்தையும் தெரி விப்பதில்லை.

ஆனால், தான் ஆளும் குஜராத் மாநி லம் அனைத்து விதத்திலும் முன் மாதிரியாக உள்ளது. இளைஞர்கள் அதிகார மிக்கவர்களாக உள்ளனர். வேலைவாய்ப்பு செழிப் பாக உள்ளது. தொழில் வளர்ச்சியடைந்துள்ளது என்று போலியான தகவல் களைக் கூறி வருகிறார். இதேபோன்று, அகமதா பாத்தில் வியாழனன்று நடைபெற்ற இளைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி, காங்கிரஸ் செய்வதாக ஆவேசமாகப் பேசிக் கொண் டிருந்தார்.

அதேநேரம், குஜராத் தில் அரசு வேலை வாங்கித் தருவதாக இளைஞர் களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்ற பாஜக தலைவரை காவல்துறை யினர் கைது செய்து கொண் டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

குஜராத் மாநிலத்தில் மூத்த எழுத்தர் பல்நோக்கு சுகாதார ஊழி யர் போன்ற மூன்றாம் நிலைப் பணிகளுக்கு அரசு துறைகளில் காலியாக உள்ள 1200 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடந் தது, சமீபத்தில் வெளிச்சத் திற்கு வந்தது. இந்தப் பணி களை அரசுடன் நெருங்கிய தொடர்புள்ள பாஜக தலை வரான கல்யாண்சிங் சம் பவாத் என்பவர் லட்சக் கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு விற்ப னை செய்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

அரசுப் பணியிடங்களைப் பெறு வதற்கு ஆர்வமாக இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர் களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கப்பட்டுள் ளது. இதற்கு சில இளை ஞர்கள் ஒப்புக் கொண்டுள் ளனர். அவர்களை காந்தி நகரில் உள்ள ஸ்மார்ட் அகாடமி மற்றும் பெர்சனா லிட்டி டெவலப்மெண்ட் என்ற பயிற்சி மய்யத்திற்கு அழைத்துள்ளனர்.

விடைத்தாள்களில் ரகசியக் குறியீடு

பின்னர், அவர்களிடம் பணம் பெற்றுள்ளனர். பணத்தைக் செலுத்திய மாணவர்கள் எழுத்துத் தேர் வில் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்தும் வகை யில், அவர்களது விடைத் தாளில் ரகசிய குறியீட்டை குறிக்கும்படி அறிவுறுத்தி யுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு பல் வேறு புகார்கள் வந்திருக் கிறது. புகாரை கண்டு கொள் ளாமல் இருந்த நிலையில், ஒரு பகுதியினர் இந்த முறைகேட்டை எதிர்த்து போராடவும் முடிவு செய் திருந்தனர்.

பலர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தணிக்கைக்கு உட்ப டுத்தி அம்பலப்படுத்தவும் தயாராகி வந்தனர். இது குறித்து தகவலறிந்த குற்றப் பிரிவு காவல்துறையினர் பயிற்சி மய்யத்தில் அதிரடி யாக சோதனை நடத்தினர். அப்போது கல்யாண்சிங் சம்பவாத் கையும் களவு மாக பிடிபட்டார்.

அவரு டைய உதவியாளர் நிஷால் ஷா என்பவரையும் காவல் துறையினர் கைது செய் தனர். இவர்களிடம் பணம் கொடுத்ததாக சுமார் 20 மாணவர்கள் ஒப்புக் கொண் டுள்ளனர். இவர்களிட மிருந்து ஒரு கோடி ரூபாய்க் கும் மேல் பணம் வசூலிக் கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

பின்னர் கல்யாண் சிங்கை காவல்துறை பொறுப்பில் எடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அனில் மேவதா மற்றும் நைனேஷ் ஜெய்ஸ்வால் என்ற இருவரின் பெயரைத் தெரிவித்துள்ளார். விசார ணைக்குப் பின்னர் இது போன்று பல்வேறு ஊழல் களில் கல்யாண்சிங்கிற்கு தொடர்பிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள் ளனர்.

கைது செய்யப் பட்டவர்களிடமிருந்து ரூ.ஒரு கோடியே 43 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக குஜராத் தில் நிரப்பப்பட்ட காவலர் பணியிடங்கள் உள்பட பல் வேறு அரசுப் பணியிடங் கள் நிரப்பப்பட்டதில் பல்வேறு ஊழல்கள் நடை பெற்றுள்ளதாக குற்றச் சாட்டு எழுந்திருக்கிறது.

நாட்டின் அனைத்து மாநி லங்களிலும் நடைபெற்று வரும் ஊழல்களை சகித் துக்கொள்ள முடியாத மோடி, தன் மாநிலத்தில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் அரசுத் தேர்வு களில் பாஜகவினரின் தலை யீடுகள் பற்றி மக்களிடம் பேசாதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப் பியுள்ளனர்.

ஆயிரக்கணக்கில் வேலை இழப்பு

கிராமப்புற மக்களின் வேலையை உறுதிப்படுத் தும் வகையில் மத்திய அரசு ஏற்படுத்திய மகாத்மா காந்தி ஊரக வேலை உறு தித் திட்டப் பணியாளர் களை மொத்தமாக வீட்டிற்கு அனுப்ப மோடி அரசு முடி வெடுத்துள்ளது. இத்திட் டத்தின் கீழ் 13 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில், 10 ஆயிரத் திற்கும் மேற் பட்டோரை வீட்டிற்கு அனுப்பவுள்ள தாக அரசு சமீபத்தில் சுற் றறிக்கை விட்டுள்ளது.

இது இந்த மாதம் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதா கவும் அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் அரசு வேலை கள் பணமயமாகிப் போன சூழலில், ஆயிரக்கணக் கான இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படு வது கிராமப்புற இளைஞர் களின் வாழ்வை மேலும் சிர மத்திற்குள்ளாக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/75859.html#ixzz2uID74x8Y

தமிழ் ஓவியா said...


முத்துராமலிங்க தேவர் பேசுகிறார்

காவ்யா வெளியீடான, பசும்பொன் களஞ்சியம் என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் 12.6.1949-இல் தேவர் உரை (பக்கம் 61) என்ற பகுதி அவரு டைய பேச்சு, ஆச்சரியத்தைக் கொடுத்தது - அதில் அவர் குறிப்பிடுவது இதுதான்:

ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுய நலமிகள் கோயில் கட்டுவதும், கும்பாபி ஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சங்கள் அணிவதும், விபூதி, காவியாடை தரிப்பதும் மொட்டையடித்துப் பண்டாரமாகி, பண் டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் திரவிய ஆசை,

பெண் ஆசை இவை போன்ற ஆசைகளில் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்துபோய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்த காலமிது! என்று குறிப்பிட்டுள்ளது.

தந்தை பெரியாரின் காலத்தாலழியாத கருத்துக்களை முத்துராமலிங்க தேவரும் பேசியிருப்பதைக் கண்டு அய்யாவின் கருத்து ஆன்மீகவாதிகளின் போக்கையும் எப்படி மாற்றி இருக்கிறது என்பதை எண்ணி எண்ணி உள்ளம் மகிழ்ந்தேன்.

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர், குடந்தை

Read more: http://viduthalai.in/page-2/75867.html#ixzz2uIDXodcl

தமிழ் ஓவியா said...


மோடியின் வீராப்புப் பேச்சு


- குடந்தை கருணா

அருணாசலப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும். இல் லையெனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அருணாச்சல பிரதேசம் மறைந்து போகவோ, உடைந்து போகவோ, பணிந்து போகவோ, நான் அனுமதிக்க மாட்டேன். இது திரைப்படத்தில், கதாநாயகன் பேசும் வசனம் அல்ல; நேற்று முன்தினம், அருணாசலப் பிரதேச மாநிலம் பாஸிகட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நரேந்திர மோடி பேசிய வீர உரை. சீன ஆக்கிரமிப்பைப் பற்றி வீர முழக்கமிடும் மோடி, அவர் சார்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்கம், அகண்ட பாரதம் என்று சொல்கிறதே.

அது என்ன? பாகிஸ்தான், பங்களா தேசம், மற்றும் ஆப்கானிஸ்தான் வரை உள்ள பகுதிகளை இந்தியா வோடு இணைத்து அகண்ட பாரதம் அமைக்க வேண்டும் என்பது தானே, ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை. அதற்குப் பெயர் ஆக்கிரமிப்பு இல்லையா? ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெச்.வி. சேஷாத்திர் எழுதிய பிரிவினையின் துயரக்கதை (Tragic Story of Partition) எனும் நூலில், அகண்ட பாரதம் உரு வாக வேண்டியதன் அவசியம் என எழுதி உள்ளாரே? அது பற்றி மோடி யின் கருத்து என்ன?

ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆர்கனைசர் பத்திரிகையில், தற் போதைய தலைவர் மோகன் பகவத், அகண்ட பாரதம் அமைந்தால் தான், இந்திய மக் களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என கருத்து தெரிவிக்கிறாரே. இதற்கு, மோடியின் பதில் என்ன? ஆர்.எஸ்.எஸ்-ன் இந்த கொள்கை தவறானது என மோடி பகிரங்கமாக கூறுவாரா?

ஆர்.எஸ். எஸ். பாசிச பட்டறையில் பயிற்சி பெற்ற, அகண்ட பாரதம் உருவாக வேண் டும் என கொள்கையுடைய ஒரு அமைப்பின் சீடர், சீன ஆக்கிர மிப்பு பற்றி பேசுவது, அம்மாநில மக்களை உணர்ச்சி வயப்படுத்தி வாக்கு வாங்கலாம் என்கிற அப்பட்ட அரசியல் சூழ்ச்சி தானே.

தற்போ தைய உலக சூழலில், ஒரு நாட்டை இன்னொரு நாடு, பொருளாதார நட வடிக்கை மூலம்தான் ஆக்கிரமிப்பு செய்ய முடியுமே தவிர, படை யெடுத்து ஆக்கிரமிப்பு செய்ய இய லாது என்பது அருணாச்சலப் பிரதேச மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றாகவே புரியும். மோடி கும்பல் களின் அகண்...ட பாரத கனவு பற்றி யும் நன்றாகவே தெரியும்.

Read more: http://viduthalai.in/page-2/75871.html#ixzz2uIDqsnd1

தமிழ் ஓவியா said...


பா.வே.மாணிக்க நாயக்கர் 1871- 1931


பா.வே. மாணிக்கநாயக் கர் என்னும் பெயர் தமிழ் உலகம் அறிந்த ஒன்றாகும் அடிப்படையில் அவர் பொறியாளர் என்றாலும் தமிழ் ஆய்வில் இலக்கிய விமர்சனத்தில் வித்தகராக விளங்கியவர். சேலம் அருகே உள்ள பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்த வர். பா. என்னும் எழுத்து பாகல்பட்டியையும் வே. என்ற எழுத்து அவரது தந்தை யார் வேங் கடசாமி நாயக்கரையும் குறிக்கும்.

சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று நான்கு சவரன் எடையுள்ள தங்கப் பதக்கத்தைப் பெற்றார். பொதுப் பணித் துறையில் கட்டுமான பொறியாள ராகப் பணியாற்றினார்.

மேட்டூர் அணை உள்ள வரைக்கும் இவர் பெயரும் நிலைத்திருக்கும்; காரணம் மேட்டூர் அணையை நிர் மாணிப்பதற்கான இடத் தைத் தேர்வு செய்து கொடுத் தவரே இவர் தானே! ஆனால் மேட்டூர் அணை கட்டு மானப் பணி அவரிடம் அரசு ஒப்படைக்காதது அவருக் குப் பெரிய ஏமாற்றம்தான்

அவர் பட்டாளம் (படை) வீரர் மரபு வழி வந்த குடும்பத்தில் வந்ததால் அந்த நாயக்கர் என்பது குடும்பப் பெயரோடு ஒட் டிக் கொண்டது. அவரது காலத்திலேயே திருமண முறையில் பல்வேறு ஜாதி கள் அவர்தம் குடும்பத் தோடு கரைந்து விட்டன. பொறியாளர் ஒருவ ருக்கு எப்படி இத்தகு தமிழ் ஆய்வு என்று திரு.வி.க. மறைமலை அடிகள் போன் றவர்களேகூட வியந்த துண்டு. 1919இல் திருச்சியில் தமிழ்ப் புலவர் மாநாடு கூட்டப் பெற்றதில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க தாகும். கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் எனும் தலைப்பில் மறை மலை அடிகள் முன்னிலை யில் பல்லாவரத்தில் அவர் ஆற்றிய ஆய்வுரை பிர சித்தி பெற்ற ஒன்றாகும்.

ஈரோட்டில் தந்தை பெரியாருக்குச் சொந்த மான வீட்டில் இவர் குடி யிருந்தார் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள் - விவாதம் செய்து கொள்வார்கள்.

அவரைப்பற்றி தந்தை பெரியார் கூறும் தகவல் அனைவருக்கும் பயன் படக் கூடியதாகும். ஈரோட் டில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இரண்டு கொல்லர்கள் வேண்டும் என்று பெரியா ரிடம் கேட்டுக் கொண்டார், கெட்டிக்கார இருவர்களை அழைத்துவர தனது குமாஸ்தாவிடம் பெரியார் சொன்னார். கெட்டிக்காரக் கொல்லர்கள் வேண்டாம்; நான் சொல்கிற வேலை செய்பவராக இருந்தால் போதும்; கெட்டிக்காரனை அழைத்து வந்தால் அவன் நமக்கு யோசனை சொல் லத்தான் பார்ப்பான் என் றாராம். இதனை எடுத்துக் காட்டி என்னைப் பின்பற் றுபவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூடக் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்று தூத்துக் குடி மாநாட்டில் தந்தை பெரியார் கூறியுள் ளதை நினைவூட்டுகிறோம். (குடிஅரசு 29.5.1948).

- மயிலாடன்

குறிப்பு: இன்று பா.வே. மாணிக்க நாயக்கரின் பிறந்த நாள். (1871)

Read more: http://viduthalai.in/e-paper/75936.html#ixzz2uOI431IH

தமிழ் ஓவியா said...


அதிர்ச்சியூட்டும் கொலை!


சென்னை - கேளம்பாக்கத்தையடுத்த சிறுசேரியில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றிய உமா மகேஸ்வரி படுகொலை செய்யப் பட்டுள்ள சேதி - நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதாக உள்ளது.

டில்லியிலே மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது டில்லிப் பெரு நகரமே பற்றி எரிந்தது. தலைநகர மக்கள் எல்லாம் திரண்டு எழுந்தனர். சட்டம், ஒழுங்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்ந்து பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2013 டிசம்பர் வரை தமிழ்நாட்டில் பாலியல் கொடூரங்கள் 584 பாலியல் சீண்டல் 721 கடத்தல் 1379 இன்னும் பல; இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் வழக்குகள் 5861 இதில் பாலியல் வன்முறை 1751 என்று நீள்கிறது. ஆனால், நம் நாட்டு ஊடகங்கள் ஊமைகளாகி விட்டன; தொலைக்காட்சிப் பெட்டிகளும் ஓசையற்றுப் போயின. இந்த இலட்சணத்தில் உள்ள இந்த ஊடகங்கள் தான் உலகத்துக்கே உபதேசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது எத்தகைய வெட்கக்கேடு!

மென் பொருள் நிறுவனத்தின் அருகிலேயே கொலை செய்யப்பட்ட பெண் பொறியாளரின் உடல் அழுகிய நிலையில், கண்டுபிடிக்கப்படுவதற்கே ஒன்பது நாட்கள் தேவைப்பட்டுள்ளது காவல்துறைக்கு.

நம் சமுதாயப் பெண்கள் கல்வி பெறத் தலைப்பட்டதே அண்மைக் காலம்தான். அதுவும் பொறியியல் பட்டதாரி ஆகி, வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு நிறு வனத்தில் பணியாற்றுவது என்பதெல்லாம் நல்ல முன்னேற்றம் - வளர்ச்சிப் போக்கு என்று கருதும் நிலை யில் பெண்களை இப்படி வக்கிர புத்தியோடு கொடூரத் திற்கும் ஆளாக்குவதை எப்படி தான் பொறுத்துக் கொள்வது!

புதிய பொருளாதாரக் கொள்கை, உலகமயம், தவறாகப் பயன்படுத்தும் அறிவியல் சாதனங்கள், நுகர்வோர் கலாச்சாரம், சினிமாக் கலாச்சாரம் உள்ளிட்ட ஊடகங்கள் பரப்பும் கீழ்த்தர வக்கிரங்கள்தான் இவற்றிற்கு மூலாதாரங்களா! மனித குலத்தின் மேன்மைக்கு ஊடகங்கள் பயன்படுமேயானால் இருகரம் குவித்து கனிவுடன் வரவேற்கச் செய்யலாம். ஆனால் எல்லாம் தலைகீழாக அல்லவா, அநாகரிகமாக அல்லவா தடம் புரண்டு குப்புற அல்லவா வீழ்ந்து கொண்டு இருக்கின்றன. மருத்துவக் கல்லூரி மாணவியும், மாணவனும் திருடு கிறார்களே! கல்வி முறை மாற்றப்பட வேண்டாமா? தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் வெட்டு, குத்து, கொலை என்பது அன்றாட வானிலை அறிக்கை போல நடந்து கொண்டு இருக்கிறது. ஊராட்சித் தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள் போன்ற வர்கள் எல்லம்கூட பட்டப் பகலிலேயே படுகொலை செய்யப்படுகிறார்களே! பட்டப் பகலிலே பணப் பறிப்பு, நகைகள் பறிப்பு என்பது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டே இருக்கிறதே!
பெரும்பாலும் தனியே வாழும் மூதாட்டிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கழுத்து அறுக்கப்படுகிறார்கள் என்னே கொடுமை! பெண்கள் பாதுகாப்பற்று வாழும் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்றால், அதில் தமிழ்நாடு முதலிடத்தில் நின்று தலைமை தாங்கும் தகுதியைப் பெற்று விடும்போலும்!

அரசியல் நிலைப்பாடு காரணமாக அரசியல் தலைவர்கள் கூட பெரும்பாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்வதில்லை. ஏடுகள், அரசு விளம்பரங்கள் என்ற இலஞ்சக் குளியலில் மூழ்கிக் கிடக்கின்றன.

நமது முதல் அமைச்சர் ஏதோ புள்ளி விவரங்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

கடந்த ஆட்சியைவிட எனது ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளதாக மனதறிந்து உண்மைக்கு மாறாகத் தகவல்களை வெளி யிடுகிறார். அப்படிப்பட்ட செய்திகளை மட்டுமே முக்கியத் துவம் கொடுத்து நமது ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன.

காவல்துறைக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஏராள மான வகையில் சலுகைகள் எல்லாம் வாரி வழங்கப்படு கின்றன. வாகனங்கள் தொழில் நுட்ப வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்படுவதாகச் செய்திகள் கூறுகின்றன. காவல்துறைக்கு நேரிடையாகத் தேவைப்படுகின்ற பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமிக்காமல் காவல் துறைக்குத் துணை புரிவதற்காக பல்லாயிரக்கணக்கில் சிறப்புக் காவல் இளைஞர் படை உருவாக்கப்பட்டுள்ளது (10099) (கட்சிக்காரர்களுக்கு ஏதாவது செய்து தர வேண்டாமா?)

ஒரு பக்கத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள் - சற்றும் மனிதாபிமானமின்றி.

மக்கள் நல அரசு என்பது போய், கட்சி நல அரசு என்ற மகுடம் என்னும் பாட்டையில் அரசு நடைபோடுமே யானால், அதனை வெகு விரைவில் மக்கள் புரிந்து கொள் வார்கள். கடந்த கால அரசியலை சரி வரக் கணிப்பவர் களுக்கு இதுமிக நன்றாகவே தெரியும்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்த நேரத்தில் இதெல்லாம் தெரியா மல் இருக்கலாம் - கண்களை மறைக்கலாம் - போகப் போகத்தான் புரியும்; காலம் கடந்து தெரிந்து கொள்வதால் என்ன பயன்?

Read more: http://viduthalai.in/page-2/75948.html#ixzz2uOIPXhcR

தமிழ் ஓவியா said...


இழிநிலைஉலகெங்கும் உள்ள மக்கள் விஞ் ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட் சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

- (விடுதலை, 10.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/75947.html#ixzz2uOIWuKqX

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு -3


- குடந்தை கருணா

சென்ற ஆண்டு 2013 ஜூன் மாதத் தில், கேதார்நாத்தில் வெள்ளத்தினால் நிலச்சரிவு ஏற்பட்டு, சுற்றுலா சென்ற பல்லாயிரணக்கான மக்கள் இறக் கவும், பலர் மீள முடியாமல் தவிக்க வுமான நிலை ஏற்பட்டது. அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள், (தமிழ்நாடு உட்பட) பாதிக்கப்பட்ட மக்களை மீட்க உரிய நடவடிக்கை களை எடுத்தன.

ஆனால் குஜராத் மாநில அரசு சார்பில், அதன் முதல்வர் நரேந்திர மோடி நேரடியாக அங்கே சென்று ஏறத்தாழ 15000 குஜராத் மக்களை இரண்டொரு நாள்களில் விரைந்து காப் பாற்றினார் என செய்தி பரப்பினர், மோடி புகழ் பாட, பல கோடிக் கணக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அப்கோ ஏஜென்சி (கிஜீநீஷீ கீஷீக்ஷீறீபீஷ்வீபீமீ) கஜகஸ்தான் சர்வாதிகாரிக்கும், அமெ ரிக்கப் புகையிலை அதிபர்களுக்கும் சேவை செய்யும் அமெரிக்க நிறுவன மான இந்த அப்கோ ஏஜென்சிதான், மோடிக்கு அமெரிக்க விசா கிடைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதையும் மனதில் கொள்க. மற்ற மாநிலங்கள் பத்து நாட் களுக்கு மேல் போராடியும் வெள் ளத்தில் சிக்கித் தவித்த 40000 மக்களை காப்பாற்ற முடியாமல் திணறின, கேதார்நாத்பகுதி முழுவதும் வெள் ளத்தின் காரணமாக சாலைகள் முற்றாக சேதமடைந்த நிலையில், மோடியால் 15000 மக்களை எப்படி காப்பாற்ற முடிந்தது? மோடி இந்த சூப்பர் மேன் செயலுக்கு 80 இன்னோவா கார்களை பணியில் அமர்த்தி இரண்டு நாள் களில் 15000 பேரை காப்பாற்றினார் என கதை அளந்தது அப்கோ நிறுவனம்.

கேதார்நாத் பகுதியிலிருந்து பக்கத்தில் உள்ள டேகராடூன் என்ற ஊருக்கு சென்றால் தான் அங்கிருந்து ரயில் அல்லது விமானம் மூலம் புதுடில்லி சென்று அங்கிருந்து குஜராத் செல்ல முடியும். கேதார் நாத்திற்கும் டேகராடூனுக்கும் உள்ள தூரம் 221 கி.மீ. மலைப் பகுதி என்பதாலும், வெள்ளத்தால் சாலை கள் பாதிக்கப்பட்டதாலூம், 40 கி.மீ. வேகத்தில் செல்வதே கடினம். ஒரு முறை செல்ல 6 மணி நேரம் ஆகும். திரும்ப வர 6 மணி நேரம் ஆகும். 24 மணி நேரத்தில், காரை நிறுத்தாமல் சென்றால், இரு முறை தான் செல்ல முடியும். மோடி ஏற்பாடு செய்திருந்த 80 இன்னோவா கார்களும் ஒரு பயணத் திற்கு 720 மக்களை ஏற்றிச் செல்ல முடியும். 15000 மக்களை அழைத்து செல்ல 21 முறை செல்ல வேண்டும். ஆனால், 15000 மக்களை இரண்டு நாட்களுக்குள்ளாக 80 இன்னோவா கார்களில் ஏற்றிச் சென்று மோடி காப்பாற்றினார் என மோடி ஏற்பாடு செய்திருந்த அப்கோ நிறுவனம் மூலம் செய்தி பரப்புகிறார்கள் என்றால் இதற்குப் பெயர் தான் மோடி புளுகு. அப்பட்டமான மோசடிப் புளுகு.

Read more: http://viduthalai.in/page-2/75955.html#ixzz2uOIef3IZ

தமிழ் ஓவியா said...

ஏமாற்று வேலை!

எப்பொழுதாவது எங் கேயாவது எங்கள் தரப்பில் தவறுகளோ, குற்றங்களோ இருந்தால் அதற் காக நான் தலைவணங்கி மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன் என்கிறார் பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத்சிங்!

மன்னிப்புக் கேட்க வேண்டியவர் மோடி யல்லவா!

Read more: http://viduthalai.in/e-paper/75978.html#ixzz2uTtoRCiF

தமிழ் ஓவியா said...


வரலாற்றுப் பிழைகளின் குப்பைத் தொட்டியான மோடி ராஜ்ஜியம்

காந்திநகர், பிப்.26- வர லாற்று விவரங்களை தப் புத்தப்பாக குஜராத் முதல் வர் நரேந்திரமோடி பேசி வருவது ஒன்றும் தற்செய லான விஷயமல்லவோ என்று சந்தேகம் கிளம்பு மளவுக்கு அம்மாநிலப் பள்ளிப்பாடங்கள் அமைந் துள்ளன. இமாலயத்தவறு என்று சுட்டிக்காட்டுகிறார்கள்

ஆங்கில மொழி வழியில் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகம் மொத்தம் 124 பக்கங்களைக் கொண்டதாகும். இதில் 59 பிழைகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வெறும்மாதிரிதான் என்றும், கிட்டத்தட்ட ஆங் கில மற்றும் குஜராத்தி வழிக் கல்வி ஆகிய இரண்டிற்கு மான பாடப்புத்தகங்களில் இப்படித்தான் நிலைமை உள்ளது என்று குற்றம் சாட் டுகிறார்கள் கல்வியாளர்கள். அதோடு நிற்கவில்லை, இவையெல்லாம் பிழைகள் என்று சொல்வது பிரச்சி னையைக் குறைத்து மதிப் பிடுவதாகும். இமாலயத் தவறு என்று சுட்டிக்காட்டு கிறார்கள் அந்தக் கல்வி யாளர்கள்.

யார் சுட்டுக் கொன்றது?

சில எடுத்துக்காட்டுகள், இரண்டாம் உலகப் போர் நிறைவடையும் தருணத்தில் அமெரிக்கா மீது ஜப்பான் அணுகுண்டு வீசித்தாக் கியது. நாட்டின் தந்தை என அழைக்கப்படும் காந்தி யார், அக்டோபர் 30, 1948 அன்று சுட்டுக் கொல்லப் பட்டார். (தேதியைத் தவ றாகக் குறிப்பிடும் பாடப் புத்தகத்தில் யார் சுட்டுக் கொன்றது என்ற விபரம் கவனமாக நீக்கப்பட்டிருக் கிறது).

தாதாபாய் நவ்ரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோர் தீவிர வாதிகள் என்று அழைக்கப் பட்டனர். 1947 இல் நாடு பிரிந்த போது, இஸ்லாமிய இஸ்லா மாபாத் என்கிற புதிய நாடு உருவானது.

அதன் தலை நகராக இந்துகுஷ் மலைத் தொடரிலுள்ள கைபர்காட் அமைந்தது. ஆயிரக்கணக்கான மாண வர்கள் இவற்றை மனப் பாடம் செய்து தேர்வு எழு தத் தயாராகியுள்ள நிலை யில், ஆம்! தவறுகள் நேர்ந் துள்ளன. அவற்றைப் பட்டி யலிட்டு இணையதளத்தில் வெளியிடப் போகிறோம் என்கிறார் பள்ளி நூல்களுக் கான வாரியத் தலைவர் நிதின் பேதானி.

Read more: http://viduthalai.in/e-paper/75981.html#ixzz2uTuI00cm

தமிழ் ஓவியா said...


செய்திக் கொத்துஎன்ன சந்தோஷமோ?

எந்த ஒரு நல்ல திட்டமாக இருந்தாலும் சரி - அது தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டால், அதற்கு மூடுவிழா செய்வதுதான் இந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் சாதனை!

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையில் பறக்கும் சாலைத் திட்டம் தி.மு.க. ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டு, குறிப்பிட்ட அளவுக்கு முடிக்கவும் பட்டன. இந்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலை யில், அந்தத் திட்டம் முடக்கப்பட்டது. அதனை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திட்டத்தை நிறைவேற்று மாறு தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளது செல்வி ஜெயலலிதாவின் தலை மையிலான இவ்வாட்சி.

இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள தினமலர் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு? துறைமுகம் - மதுரவாயல் மேம் பால சாலைத் திட்டத்தில் திருப்பம் என்று தலைப் பிட்டு மகிழ்ந்துள்ளது. இதில் என்ன திருப்பம் வேண்டிக் கிடக்கிறது? வேண்டுமானால், குதர்க்கம் என்று போட்டிருக்கலாம்.

ரூ.1816 கோடியில் மேற்கொள்ளப்பட்ட, மக்கள் நலன் சார்ந்த - போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு காணக்கூடிய ஒரு திட்டத்தை ஓர் அரசு முடக்குகிறது என்றால், இதற்குப் பெயர் மக்கள் நல அரசா? இதுபற்றி எல்லாம் இந்த நாட்டு ஊடகங்கள் வாயைத் திறக்கவே திறக்காது!

இதில் அமைதி - வளம் - வளர்ச்சி என்ற தேர்தல் கோஷம் வேறு!

இத்தாலி

கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் இருவரை இத்தாலி கடற்படையினர் 2012 இல் இந்தியக் கடல் எல்லைக்குள் சுட்டுக் கொன்றனர்; அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீனில் வெளியில் வந்தனர். இப்பிரச்சினையில் இந்தியா - இத்தாலி ஆகிய நாடு களிடையே உரசல் ஏற்பட்ட சூழலில், குற்றவாளிகளை மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் வகையில், கடற்கொள்ளைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கைப் பதிவு செய்யாமல் வேறு பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்ய இந்தியா முடிவெடுத் துள்ளதாம்.

குற்றம் ஆளுக்கு ஆள், நாட்டுக்கு நாடு மாறு படக்கூடிய நிலவரத்தை இதன்மூலம் உணர முடி கிறது.

ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் விடயத்தில் மட்டும் மத்திய அரசுக்கு மாற்றுக் கண் ணோட்டம் ஏனோ?

ஞானோதயம்!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் ஊழலைவிட மதவாதம் ஆபத்தானது என்று திரு வாய் மலர்ந்துள்ளார்.

காலங்கடந்த ஞானோதயம் என் றாலும், வரவேற்கக்கூடிய கருத்துத்தானே!

நமோ மீன்கடை

பி.ஜே.பி.யைச் சேர்ந்த திருவாளர் இல.கணேசன் அய்யர்வால் நமோ மீன்கடைகளைத் திறந்து வைத் துள்ளார். டீக்கடை திறந்தாச்சு - மீன் கடையைத் திறக்க வேண்டாமா? ஆமாம், திருவாளர் இல. கணேசன் வால் எப்பொழுது அசைவத்துக்கு மாறினார்?

இனிமேல் பார்த்தசாரதி அய்யங்கார் மிலிட்டரி ஓட்டல், கணேசய்யர் மீன் ஸ்பெஷல் கடை என்றெல்லாம் வந்தால் கூட ஆச்சரியமில்லை.

அடடே! தேர்தல் ஸ்டண்டைஎப்படி எப்படியெல் லாம் செய்யலாம் என்று கற்றுத்தருவதற்கு பி.ஜே.பி. ஒரு பல்கலைக் கழகத்தையே ஏற்படுத் தலாம். அதற்கு மோ(ச)டிப் பெயரையும் சூட்ட லாமே!

Read more: http://viduthalai.in/e-paper/75983.html#ixzz2uTuTGbaM

தமிழ் ஓவியா said...


எது குற்றம்?


குற்றம் என்பது நிர்ப்பந்தமில்லாமலே ஒரு மனிதன் தான் எதை எதைச் செய்யப் பயப்படுகிறானோ--மறுக்கிறானோ அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றமாகும்.
_ (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/75985.html#ixzz2uTug0YrX

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு -4


- குடந்தை கருணா

அண்மையில் புதுடில்லியில் பேசிய நரேந்திர மோடி, விவசாயி களின் முன்னேற்றத்திற்காக குஜராத் தில் நிறைய வசதிகள் செய்யப்பட் டுள்ளன. அதேபோன்று நாடு முழு வதும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பிஜேபி பாடுபடும் எனப் பேசினார்.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோலிரா கிராமத்தில், மோடியின் பிரியத்துக்குரிய திட்டமான சிறப்பு முதலீடு பிராந்தியம் (Special Investment Region SIR) துவக்கப்படுகிறது.

இதற்காக விவசாயிகளின் விளை நிலங்களைக் கையகப்படுத்தி, பெரு முதலாளி நிறுவனங்களுக்கு கொடுக் கப்பட உள்ளது. இதற்கு அங்குள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரி வித்து வருகின்றனர். தோலிரா கிராமம் மட்டுமல்லாது, குஜராத் தலைநகர் காந்தி நகரிலும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்தக் கிராம மக்கள் நர்மதா பாசனத் திட்டம் மூலம் தங்களது விவசாய நிலங்களான ஏறத்தாழ முப்பதாயிரம் ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் பெற்று வந்தனர்.

இப்போது, இவர்களது நிலங்களை கையகப் படுத்துவதற்காக, அந்த பாசனத் திட்டத்தையே மோடி அரசு நிறுத்தி விட்டது. விவசாயிகள் நிலங்களை விற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மோடி அரசு, இதுபோன்று விவ சாய நிலங்களை கையகப்படுத்த முயல்வது புதிதல்ல; சில ஆண்டு களுக்குமுன், பாவ் நகர் பகுதியில், சிமெண்ட் ஆலை அமைத்திட, விவ சாய நிலங்களைக் கையகப்படுத்திட மோடி அரசு முயன்று, விவசாயிகள் உச்சநீதிமன்றம்வரை சென்று தடுத்து விட்டனர். சென்ற ஆண்டு, வட குஜ ராத்தில், சிறப்பு முதலீடு பிராந்தியம் துவக்கப்பட, மோடி அரசு முனைந்த போது, விவசாயிகள் போராட்டம் காரணமாக, நிறுத்தப்பட்டது.

தற்போது, தோலிரா கிராமப் பகுதிகளில் 920 சதுர மீட்டர் விளை நிலங்களை ஏறத்தாழ 15000 விவசாய குடும்பங்களை விரட்டி, கையகப் படுத்திட மோடி அரசு முனைந்து, அதற்கான சட்ட அறிவிப்பையும் செய்துள்ளது. மாற்றாக, வேறொரு பகுதியில் நிலங்கள் விவசாயிகளுக்கு தரப்படும் எனவும் மோடி அரசு கூறுகிறது. அண்மையில் மத்திய அரசு நிறை வேற்றியுள்ள, நில கையகப்படுத்தும் சட்டம் 2013, நிலங்களுக்கு, சந்தை விலையைக் காட்டிலும் நான்கு மடங்கு, பணம் தர வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், இந்த சட்டத்திற்குப் புறம் பாக, 2011 சந்தை விலையை மட்டுமே தர முடியும் என மோடி அரசு, விவ சாயிகளை அச்சுறுத்துகிறது. இத்தகைய, விவசாயக் கொள் கையை நிலை நாட்டும் மோடி தான், விவசாயிகளின் நலனுக்காக பாடு பட்டு வருவதாக, புதுடில்லியில் கதைக்கிறார்.

Read more: http://viduthalai.in/page-2/75991.html#ixzz2uTv5PkME

தமிழ் ஓவியா said...


உண்டியலில் காணிக்கை ஏன்? வருமான வரிகட்டுவது நல்லது: கமல்சென்னை, பிப்.26-வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாள் கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக- புதுவை மாநில வருமான வரித் துறை முதன்மை ஆணையர், ரவி தலைமை தாங்கினர். இயக்குநர் ஜென ரல் ஜெய்சங்கர், முதன்மை ஆணையர்கள் பிரதீப் ஆர் சேத்தி, மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சிறப்பு விருந் தினராக பங்கேற்ற, நடிகர் கமல்ஹாசன் பேசியபோது,

கடவுளுக்கு, உண்டிய லில் காணிக்கை செலுத்து வதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்க ளுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மை யாக வரி செலுத்தி வருகி றேன். சிலர், வரிகட்டும் போது மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர்.

வரியினால், நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்க ளால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால், வரி யின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்து வோரின் பங்கும் தெரியும் வரும்என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/76024.html#ixzz2uTvUUyKA

தமிழ் ஓவியா said...


குஜராத் மதுவிலக்கின் லட்சணம் மனைவியை எரித்துக் கொன்ற குடிகாரன்

அகமதாபாத், பிப். 26- குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் உள்ள சுனாராவாட் பகுதியில் திங்கள் அன்று இரவு குடிக்கப் பணம் தராத மனைவியை உயிருடன் எரித் துக் கொலை செய்தான். சுனாராவாட் பகுதியைச் சேர்ந்த அமித் வசானி, இவ ரது மனைவி பூனம், இவர் களுக்கு இரண்டு குழந்தை கள் உள்ளன. குடிப்பழக்கம் உள்ள அமித் அன்றாடம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சண் டையிடுவார். கடந்த ஞாயிறு மாலை தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் இல்லை என்று கூறி யுள்ளார். இந்நிலையில் இரவு முழுவதும் சண்டையிட்ட அமித், திங்கள் கிழமையன்று காலை, தூங்கிக்கொண்டு இருந்த தனது மனைவி மீது, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் அலறிக் கொண்டு இருந்தவரை அரு கில் உள்ள உறவினர்கள் மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை யில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார். பூனம் தனது மரண வாக் குமூலத்தில் கூறியிருப்பதா வது நீண்ட காலமாகவே அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட் டிற்கு வந்து துன்புறுத்துவார். வேலைக்குச் செல்வதும் கிடை யாது நான் அவ்வப்போது கூலிவேலைக்குச்சென்று கொண்டுவரும் பணத்தை யும் பிடுங்கிக்கொண்டு குடித் துவிட்டு வருவார். ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை இல்லா ததால் என்னிடம் பணம் இல்லை, இந்த நிலையில் மாலை என்னிடம் வந்து குடிக்க பணம் கேட்டார். நான் இல்லை என்று கூறியும் கேட்காமல் என்னை அடித்து துன்புறுத்தினார். பிறகு வெளியே சென்று விட்டார். திங்கள் கிழமை காலை வீட் டிற்கு வந்தவர் திடீரென மண்ணெண்ணெய் பாத்தி ரத்தை எடுத்து என்மீது வீசி னார், என் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் பரவியது.

உடனே தீக்குச்சியை பற்றவைத்து என்மீது வீசி விட்டு ஓடிவிட்டார், தீப்பற்றி யதும் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை, அதற்குள் என்மீதிருந்த ஆடைமீது பற்றிக்கொண்டு என் உடல் முழுவதும் தீ பர வியது. அதற்குள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என் அலறல் ஒலி கேட்டு என்னை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். என்று காவல்துறையினரிடம் மரண வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/76027.html#ixzz2uTvcWTMA