Search This Blog

6.2.14

காங்கிரசும் சுயமரியாதையும் - பெரியார்

காங்கிரசும் - சுயமரியாதையும்

அன்புள்ள தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!

இன்று, இங்கு சுயமரியாதை வாசகசாலை ஆண்டுவிழாவை உத்தே சித்து நடைபெறும் உபந்யாசங்களில் நான் “காங்கிரசும் சுயமரியாதையும்” என்பதுபற்றி பேசவேண்டும் என்பதாய் குறிக்கப்பட்டிருக்கின்றது.

இது விஷயமாய் எனது அபிப்பிராயங்கள் அனேகமாக தமிழ்நாடு முழுவதும் அறிந்ததேயாகும். எப்படியெனில் “குடி அரசு” பத்திரிகை வாயிலாகவும் அனேக உபந்யாசங்கள் மூலமாகவும், சுமார் 5, 6 வருஷங்க ளாக வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றேன். அவற்றில் இருந்து மாறும்படியான நிலைமை இப்போது ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை.

சமீபகாலத்தில், அதாவது இந்த ஒருவருஷ காலத்தில் காங்கிரசிற்கு செய்யப்பட்ட விளம்பரத்தின் காரணமாய் பொது ஜனங்களில் பலருக்கு ஒரு உணர்ச்சி தோன்றி அதைப்பற்றி பேசப்படுகின்றது என்பதை தவிர வேறில்லை. ஒரு நாட்டில் புதிதாக ஏதாவது விஷயம் தோன்றினால் அதைப் பற்றி எங்கும் பேச்சாய் இருப்பது சகஜமேயாகும். அதுபோல்தான் இப்போது காங்கிரசைப் பற்றியும் பேசப்படுகின்றது. ஆதலாலேயே தான் நீங்களும் என்னை அதைப்பற்றியே பேசக்கேட்டு இருக்கின்றீர்கள் என்று கருதுகின்றேன். காங்கிரஸ் ஏற்பட்டு சுமார் 45 வருஷமானபோதிலும், அது எதை உத்தேசித்து, எப்படிப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பது காங்கிரஸ் அனுபோகம் பெற்ற யாவரும் அறிந்ததேயாகும். அது இராஜ விசுவாசப் பல்லவியைப் பாடி உத்தியோகம் பெற ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனமேயாகும். உதாரணம் வேண்டுமானால் நமது நாட்டில் இதுவரை யிலும், இப்போதும் பெரிய உத்தியோகஸ்தர்கள், பெரிய வக்கீல்கள், பெரிய பட்டதாரிகள் முதலியவர்கள் எல்லாம் காங்கிரசினாலேயே பெரிய மனிதர்களானவர்கள் என்பதை கவனித்துப் பார்த்தால் விளங்கும். நானும் 10 15 வருஷங்களுக்கு முன்பு இரண்டொரு பழைய காங்கிரசுகளுக்கும் சென்றிருக்கிறேன்.

இராஜ விசுவாசம்

அப்பொழுதெல்லாம் காங்கிரசின் முதல் தீர்மானம் இராஜவிசுவாசத் தீர்மானமேயாகும். உதாரணமாக 1914-ம் வருஷம் சென்னையில் கூடிய காங்கிரசுக்கு நான் சென்றிருந்தபொழுது கல்கத்தா திருவாளர் பூபேந்தரநாத் போஸ் தலைமை வகித்திருந்தார். காங்கிரசு நடவடிக்கை நடந்து கொண்டி ருக்கையில் சென்னை கவர்னர் லார்ட் பெண்ட்லண்ட் துரையவர்கள் காங்கிர சுக்கு விஜயமானார். அவர் விஜயமானதும் மற்ற நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு திருவாளர் சுரேந்திரநாத் பானர்ஜீ அவர்கள் உடனே எழுந்து ஒரு இராஜவிசுவாசத் தீர்மானத்தை பிரேரேபித்து, வெகு அழகாக அதாவது “இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கடவுளால் அனுப்பப்பட்ட” தென் றும், “இந்திய மக்கள் தலைமுறை தலைமுறையாய் இராஜவிசுவாசிகளா யிருக்க வேண்டு”மென்றும் பேசி முடித்தார். பலர் ஆமோதித்துப் பேசிய பின், 5 நிமிஷ நேர கரகோஷத்துடன் அது (இராஜவிசுவாச தீர்மானம்) நிறைவே றிற்று. சென்னை “அமிதவாத தேசியவாதி ” களான அய்யங்கார் கூட்டத்தினர் கள் சமீபகாலம் வரை எட்வார்ட் மன்னரும், ஜார்ஜ் மன்னரும் விஷ்ணு அம்சமென்றே பேசி வேதங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந் தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்டி வந்தார்கள். (அதாவது அரசர்கள் விஷ்ணு அம்சமென்று வேதம் கூறுவதாக உரைத்துக்கொண்டு வந்தார்கள்.)

ஒத்துழையாமை

கடைசியாக சமீப காலந்தொட்டுதான் அதாவது காங்கிரசின் பலனை (உத்தியோகங்களை) ஒரே கூட்டத்தார் (பார்ப்பனர் மாத்திரம்) அனுபவிப் பதில் “பொறாமைப்” பட்ட சென்னை மாகாண பார்ப்பனரல்லாதார் “காங்கிரசின் பலன் எல்லோருக்கும் கிரமமாய் பங்குகிடைக்க வேண்டு” மென்று கேட்க ஆரம்பித்தது முதல் அதுபோலவே காங்கிரசு பலனும் எல்லோருக்கும் பங்குபோக ஆரம்பித்த பிறகே இராஜவிசுவாசம் போய்ஒத்துழையாமையாகி இராஜவிசுவாசமாய் இருப்பவர்களை “தேசத் துரோகிகள்” என்றும், “சுயநலக்காரர்கள்” என்றும், “வகுப்பு வாதிகள்” என்றும் சொல்ல வேண்டியதாகி வழக்கமாய் அனுபவித்து வந்த பலனை அடைய முடியாமல் போனவுடன் காங்கிரஸ்வாதிகள் (பார்ப்பனர் தேசிய வாதிகளாக பரிணமிக்கத் துடங்கி விட்டார்கள். ஜஸ்டிஸ் கக்ஷி என்ப தாகவும், முஸ்லீம்லீக் என்பதாகவும் மற்றும் வகுப்புச் சங்கங்கள் என்பதா கவும் சில ஸ்தாபனங்கள் தோன்றி காங்கிரஸ் பலனில் (உத்தியோகங்களில்) பங்கு கேட்காது இருந்திருக்குமானால் இன்றையதினம் இந்தியாவில் இராஜவிசுவாசம் என்பது காங்கிரசுக்கே சொந்தமான ரிஜிஸ்டர் செய்யப் பட்ட (டிரேட் மார்க்காய்) அதாவது உரிமை செய்த வியாபாரக்குறியாய் இருந்து வரும். சென்னபட்டணம் ஜார்ஜ் டவுன் ஆனதுபோல் பார்ப்பனர் மக்கள் பெயரும் ஜார்ஜ் அய்யர், ஜார்ஜ் சாஸ்திரிஆயிருக்கும். உதாரணமாக,

ராஜா விஷ்ணு அம்சம் என்பது கூட பார்ப்பனர் சொல்லி இருக்கா விட்டால் இன்று மற்ற யாருக்குமே தெரிந்திருக்காது என்பதேயாகும். அவர் கள் அப்படிச் சொன்னதிலிருந்து இன்னும் பலர் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிற்க,

காங்கிரஸ் யாருக்கு?

இன்றும் காங்கிரஸ் என்பதற்கும் ஆறரைக்கோடி தீண்டாதார் என்ப வர்களுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. அவர்கள் இராஜவிசுவாசிகள். மேலும் 8 கோடி மகமதியர் என்பவர்களுக்கும் காங்கிரசுக்கும் சம்பந்த மில்லை.இவர்களும் இராஜவிசுவாசிகள். வருணாச்சிரமம் பேசும் பார்ப்பனர் களும் தங்களை இராஜவிசுவாசிகள் என்றே சொல்லிக் கொள்ளுகிறார்கள். இந்த இரண்டு மூன்று கூட்டத்திலும் 100-க்கு ஒருவர் இருவர்கூட காங்கிரஸ் காரர்களாய் இருக்கிறார்கள் என்று தைரியமாய்ச்சொல்ல முடியாது. ஒரு சமயம் மகமதியர்களில் ஒருவர், இருவர் என்கின்ற எண்ணிக்கை இருந்தா லும் கூட தீண்டப்படாதார் என்பவர்களில் சுத்தமாய் “தேசீயவாதிகள்” இல்லை யென்பதை யாரும் மறுக்க முடியாது. கிறிஸ்தவர்களிலும் மிகச் சிலரே இருக்கக்கூடும். அவர்களும் வயிற்றுப்பாட்டிற்கு சர்ச்சுகளில் இராஜ வாழ்த்துப்பாடிவிட்டு வெளியில் வந்து வேடிக்கை கூட்டத்தில் “ஜே! போடு பவர்களாகத்தான் இருக்க முடியுமேயொழிய “இராஜா வேண்டாம்” என்கின்றவர்கள் இல்லை என்றேசொல்லலாம். மற்றபடி சென்னை மாகாணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் தவிர பார்ப்பனரல்லா தார்களில் வயிராரக் கஞ்சி குடிக்கும் 100 க்கு 95 பேருக்கு மேலாகவே காங்கிரசினிடம் கவலை யில்லாதவர்களும் அதை ஒப்புக்கொள்ளாதவர் களுமே இருப்பார்கள். வேண்டுமானால் தேர்தலில் ஓட்டுப்பெற வேண்டி யவர்கள் இரண்டுக்கும் நல்லபிள்ளைகள் போல காட்டிக்கொள்வார்கள். மற்றும் இதை ஒரு வியாபாரமாய் கருதுகிறவர்கள் அதுவும் லாபநஷ்டம் பார்த்து இதை பயன்படுத்திக் கொள்ளுபவர்களாகவே இருப்பார்கள். இவற்றைத்தவிர வகுப்பு மாநாடுகள் என்பவைகள் பெரிதும் இராஜ விசுவாசப்பல்லவி பாடிக்கொண்டுதான் வருகிறது என்றாலும் ஒரு சில வாலிபர்கள் பார்ப்பனரல்லாதாரிலும் காங்கிரசை பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நான் மறக்கவில்லை. அதுவும் அப்படிப்பட்ட வாலிபர்களும் ஒரே கொள்கையாய் தொடர்ந்து அதில் இருக்கின்ற வாலிபர்கள் என்பவர்கள் பூதக்கண்ணாடி வைத்து பார்க்கவேண்டியவர் களாகவே இருப்பார்கள். எந்த ஸ்தாபனமானாலும் அது ஒரு சம்பளம் கிடைக்கும் ஸ்தாபனமாகவும் வாழ்வுக்கு சௌகரியமான ஸ்தாபனமாகவும் விளம்பரத்துக்கு அனுகூலமானதாகவும் ஏற்பட்டுவிட்டால் பிறகு அதில் கலந்து கொள்ளும் மக்கள் ஏராளமாகி விடுவார்கள் என்பதையும் அந்த ஸ்தாபனத்தைப்பற்றி புராணம் பாடுவார்கள் என்பதையும் நான் உங்களுக்கு எடுத்துச்சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. ஆதலால் அதைப்பற்றியே காங்கிரசின் யோக்கியதையை நிர்ணயித்து விடமாட்டீர்கள்.

காங்கிரஸ் கொள்கை

ஆகவே இவை ஒருபுறமிருக்க காங்கிரசின் கொள்கைகள்தான் என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்.

எந்தக்காரணங்களால் இந்த நாடு‘அன்னியநாட்டார்’ என்பவர்களின் ஆட்சிக்கு ஆளாக நேரிட்டதோ, அதிலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் தலை சிறக்க நேரிட்டதோ அந்தக்காரணங்களை இல்லாமல் செய்ய இந்தக்காங்கிர சில் ஏதாவது ஒரு கொள்கை இருக்கின்றது என்பதாக யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றேன். இந்தியாவின் பெருமையைப்பற்றி யார் என்ன பேசுவதாயிருந்தாலும் இந்தியாவில் பலமதம், பலஜாதி, பலவித உயர்வு தாழ்வு என்பவைகள் இருந்து வருகின்றதை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவில் தெருவில் நடக்காத, கண்களில் தென்படாத ‘இழிமக்கள்’ இருந்துவருவது இரகசியமல்ல. இந்தக் காரணங்களே இன்று அன்னிய ஆட்சி இந்த நாட்டில் இருந்து வருவதற்கும், பார்ப்பனன் பாடு படாமல் வாழ்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதற்கும் காரணம் என்பதையும் ஒப்புக் கொள்ளாதவர்கள் இல்லை. இதைச்சரிப்படுத்த யார் என்ன செய்தார்கள்? எந்தக்கொள்கையை காங்கிரஸ் திட்டத்தில் ஏற்படுத்தி இருக் கின்றார்கள்? அல்லது அன்னிய ஆட்சியை ஒழித்த பிறகாவது இதற்கு என்ன மார்க்கம் செய்வதாகக் காங்கிரஸ் தலைவர்கள் சொல்லியிருக் கிறார்கள்? என்பதை கவனித்துப் பாருங்கள்.

சுயராஜ்ய உரிமை

சுயராஜ்யத்தில் “மதங்கள் ஒழிக்கப்படும்” என்றாவது “மத ஆதிக் கங்கள் ஒழிக்கப்படும்” என்றாவது அல்லது அதுதான் இல்லாவிட்டாலும் “ஜாதிகள் ஒழிக்கப்படும்” என்றாவது “ஜாதிப்பாகுபாடுகள் ஓழிக்கப்படும” என்றாவது எங்காவது தீர்மான ரூபமாகவாவது எழுதப்பட்டிருக்கின்றதா? எங்காவது யாருடைய வாயினாலாவது சொல்லப்பட்டிருக்கின்றதா? என்று கேட்கின்றேன். மற்றும் மதங்களையும் ஜாதிப் பாகுபாடுகளையும் காப்பாற் றப்படும் என்று உறுதிகூறப்படுகிறதா? இல்லையா? என்றும் கேட்கின்றேன்.

அதாவது மதத்தில் நடுநிலைமை வகிப்பதாகவும், வருணாச் சிரமம் காப்பாற்றப்படும் என்பதாகவும், ஜாதியில் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பாருடைய உரிமைக்கும் பங்கம் விளைவிக்கப்பட மாட்டாது என்பதாகவும் எந்த மனிதனுடைய மாறுபட்ட அபிப்பிராயத்தை யும் புண்படுத்தப்பட மாட்டாதென்பதாகவுமல்லவா ஒவ்வொரு ஜாதி மத ஆதிக்கக்காரனுக்கும் உறுதி கூறப்பட்டு வருகின்றது. பிரஜா உரிமைத் திட்டத்தில் 14வதாக “மத விஷயங்களில் சர்க்காரார் தலையிடமாட்டார்கள்” அதாவது மதக் கொள்கைகளை மாற்ற முயற்சிக்க மாட்டார்கள் என்றும், 17வதாக “மாறு பட்ட அபிப்பிராயங் கொண்டோர் மனது புண்படும்படியாக எந்த காரியமும் செய்ய மாட்டார்கள்” என்றும், அதாவது “பிராமணர்கள்” மனம் புண்படும்படி எதுவும் செய்யப்பட மாட்டாது என்றும் ஸ்பஷ்டமாகக் குறிக்கப்பட்டிருக்கின்றதா?இல்லையா?

ஆதியிலும், இந்தக் கொள்கைகளையேதான் நமது பார்ப்பனர் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டையும் ஒப்புக்கொள்ளச் செய்து இதையே அரசி யலிலும் அனுசரிக்கும்படி சட்டமாக்கி கட்டாயப்படுத்தியதன் பயனாகத்தான் இதுவரை இந்தக் கவர்ன்மெண்டில் சரியான சீர்திருத்தம் ஏற்படுத்த முடியாமலேயே இருந்து வருகின்றது. உதாரணமாக, சாரதா சட்டம் எடுத்துக் கொள்ளுங்கள். விவசாரிகள் சட்டம் எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்காரால் சட்டமாக்கப்பட்டும் ஒரு சில ஜனங்கள் மனம் புண்படுகின்றதென்ற காரணம் கொண்டு அவர்களது முட்டுக்கட்டை யாலேயே எதுவும் சரிவர அமுலுக்கு வரமுடியாமல் இருந்துகொண்டு வருகின்றது. பார்ப்பனீயத்தொல்லை இல்லாதிருக்குமானால் அவை தானாக அமுலில் இருக்கும். இவ் விஷயத்தில் இன்றும் சட்டத்தை மீறுகின்றவர்கள் ஜனங்களா? சர்க்காராரா என்று கேட்கின்றேன். இந்த நிலைமை புதிய அரசாங்கத்திலும் 14, 17 பிரிவுகளை வைத்துக்கொண்டு எப்படி மாற்றக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். பாமரமக்கள் - பகுத்தறிவற்ற மூடமக்கள் ஏமாறும்படி பேசிவிட்டால் போதுமா? உண்மையை பகுத்தறிவுடன் யோசித்துப் பார்க்க வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

மனம் புண்படாது

மத நடு நிலைமை வகிக்கும் சர்க்காரால் - எந்த மனிதனுடைய மனதும் புண்பட சகியாத சர்க்காரால் அது தன்னை எவ்வளவுதான் பூரண சுயேச்சை உடையது என்று சொல்லிக் கொண்டாலும் அதனால் நமக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? வேண்டுமானால் பார்ப்பான் இன்றைய வாழ்வைவிட இன்னம் பலமடங்கு மேலாகவே வாழக்கூடும். ஆனால் தெருவில் நடக்க உரிமையில்லாத “பறையன்” நிலைமையும் சரீரத்தில் பாடுபட்டாகவேண்டிய “சூத்திரன்” நிலைமையும் என்னவாகும்? என்றுதான் கேட்கின்றேன். இப்பொழுதும் பறையன் வீதியில் நடந்தாலே எத்தனை பார்ப்பனர் மனம் புண்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் மனமும் புண்பட சகிக்காத சுயராஜியம் யாருக்குப் பயன் படக்கூடும்?

கோவில் பறிமுதல்

மற்றும் ஒரு சமயம் திரு ஜவஹர்லால் அவர்கள் பார்ப்பனரிடையே பேசும்போது “யாவருடைய எந்த வகுப்பாருடைய உரிமையும் சுயராஜ்யத் தில் பரிக்கப்பட மாட்டாது” என்று சொன்னார். ஆனால் உடனேயே மற்றொரு கூட்டத்தில் பேசும்போது “தீண்டாதாரை அனுமதிக்காத கோவில் பறிமுதல் செய்யப்படும்” என்று சொன்னார். இவற்றை திரு காந்தியவர்களும் ஆமோதித்து வருகிறார்.

அப்படியானால் மக்களின் மத, சாஸ்திர பழக்க வழக்க சம்பந்தமான உரிமைகளை எல்லாம் என்ன செய்வது? அவற்றை ஒழிக்க ஆரம்பித்தால் யாருடைய மனதும்புண்படாதா? எந்த வகுப்பாருடைய உரிமையாவது இதனால் பாதிக்கப்படாதா? என்று யோசித்துப்பாருங்கள். இன்றைய நமது நாட்டு வாழ்க்கையே மேல்கண்ட மதம், சாஸ்திரம், புராணம், பழக்க வழக் கங்களை ஆதாரமாகக் கொண்டுதானே இருந்து வருகின்றது? எனவே, இதிலிருந்து ஒருவனுடைய உரிமை என்றால் என்ன என்பதைக் கவனித்து முடிவு செய்ய வேண்டாமா? காங்கிரசில் மனித உரிமை என்பது மதக் கொள்கைப்படி ஏற்பட்ட உரிமையா? சாஸ்திரத்தில் ஏற்பட்ட உரிமையா? அல்லது இதுவரை அனுபவத்தில் பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட உரிமையா? அல்லது தேச ஆதாரத்திற்கு ஏற்பட்ட உரிமையா? மனித இயற்கைக்கு ஏற்பட்ட உரிமையா? எதைக் குறிக்கின்றது என்று கேட்கின்றேன்.

மத உரிமை என்றால் இந்து மதத்தின்படி மேளமடிக்க வேண்டும். இஸ்லாம் மதத்திற்கு மேளம் கூடாது என்பது போன்ற உரிமைகளில் எதைக் காப்பாற்றுவது?

பார்ப்பனனுக்கும், பறையனுக்கும் உள்ள மதக்கொள்கை உரிமை, சாஸ்திர உரிமை, பழக்க வழக்க உரிமை ஆகியவைகள் என்ன ஆவது? மக்களுக்கு மக்கள், ஜாதிக்கு ஜாதி, ஊருக்கு ஊர் மாறுபட்ட தேசாச்சார உரிமை என்ன ஆவது? மனித இயற்கை உரிமை என்றால் பழக்க வழக்க மத உரிமை என்ன ஆவது? முதலாளி பாதுகாப்பும், ஜமீன்தாரன் பாது காப்பும், வருணாச்சிரம பாதுகாப்பும் என்ன ஆவது?

ஆகவே, இவர்கள் இருவரும் இதைக்கேட்கும் மக்களை முழு மூடர் கள் என்று கருதிக் கொண்டே இந்தப்படி அதாவது யாருடைய உரிமையும் காப்பாற்றப்படுமென்று ஒருபுறமும், பறிமுதல் செய்யப்படும் என்று மற்றொரு புறமும் பேசுகின்றார்கள் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில்,

ஜன நாயகமா? ஏக நாயகமா?

முதலாவது திரு. காந்தியும், திரு. ஜவஹர்லாலும் கேட்கும் சுயராஜி யம் ஜனநாயக சுயராஜியமா? ஏகநாயக சுயராஜியமா என்பதை முதலில் விளக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஜனநாயகமானால் தீண்டாதவர்களை “கோவிலுக்குள் விடமாட்டேன், குளத்தில் விடமாட்டேன்” என்று சொல்லு கின்றவர்கள் யார்? பிறகு அந்தக் கோவிலையும், குளத்தையும் பரிமுதல் செய்கின்றவர்கள் யார்? என்று யோசித்துப்பாருங்கள். ஜனங்கள் விடமாட் டேன் என்று சொன்னால் அந்த ஜனப்பிரதிநிதி சர்க்கார், யார் மனதையும் புண் படுத்தாத சர்க்கார் கோவிலை எப்படி பரிமுதல் செய்ய முடியும்?

கோவிலுக்குள் பறையனை விட இஷ்டப்படாத ஜனங்கள் இஷ்டப்படும் பிரதிநிதியை தெரிந்தெடுப்பார்களா? என்பதை யோசித்துப்பாருங்கள். ஜனங்கள் இஷ்டத்திற்கு விரோதமாய் நடக்கும் இராஜியபாரம் ஜனநாயக ராஜியபாரமாகுமா? மற்றும் இந்திய ஜனங்கள் தங்களுக்குள் இருக்கும் ஜாதி வித்தியாசத்தையும், தீண்டாமையையும் ஒழிப்பதற்கு ஜனநாயக சுயராஜியம் வேண்டுமென்றால் இது பித்தலாட்டமா? அல்லவா? என்று யோசித்துப் பாருங்கள். இன்றைய தினம் தீண்டாமை ஒழிப்பதை யார் வேண்டாமென் கின்றார்கள்? இஸ்லாமானவர் ஆnக்ஷபிக்கின்றார்களா? கிறிஸ்துவர்கள் ஆnக்ஷபிக்கின்றனர்களா? அல்லது கிருஸ்துவ அரசாங்கம் ஆnக்ஷபிக் கின்றதா? ஆரம்பித்திலேயே புரட்டு பேசும் சுயராஜியம் அதிகாரம் வந்தால் கொடுமை செய்யுமா? நன்மை செய்யுமா? இன்று தீண்டாமை அனுசரிக்கும் ஜனங்களுக்கு சர்வ அதிகாரம் தந்தால் தீண்டாமையை பலப்படுத்துவார் களா? தளர்த்துவார்களா? எந்த அரசாங்கத்தில் தீண்டாமை இருந்தாலும் தீண்டாமையை அனுசரிக்கின்றவர்கள் இன்று சுயராஜியம் கேட்கும் இந்துக்களே யொழிய வேறல்ல.

ஆகவே இந்தமாதிரி வார்த்தைகள் மக்களை ஏய்க்கும் தந்திர வார்த்தை அல்லவா என்பதை யோசித்துப் பாருங்கள்.

எனது அனுபவம்

சகோதரர்களே! காங்கிரசில் நான் இருக்கும்போது “காங்கிரசில் ஜாதி வித்தியாசம் பாராட்டக் கூடாது” என்று ஒரு தீர்மானம் காங்கிரஸ் கமிட்டியில் நானும் திரு. எஸ். இராமநாதனும் சேர்ந்து எங்கள் சொந்த செல்வாக்கில் நிறைவேற்றி வைத்தோம். ஆனால் உடனே திருவாளர்கள் சி.இராஜகோபாலாச்சாரி, டாக்டர் இராஜன், டி.வி.எஸ். சாஸ்திரி, என்.எஸ். வரதாச்சாரி, கே.சந்தானம் முதலாகிய காங்கிரஸ் தலைவர்கள் என்கின்ற பார்ப்பனர்கள் இராஜினாமாச் செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? என்று கேட்கின்றேன். காங்கிரஸ் பணத்தில் காங்கிரஸ் பக்தரால் நடத்திய குருகுலத்தில்தானே “எல்லோரையும் சமமாய் வைத்து சாப்பாடு போட வேண்டும்”என்று நாங்கள் சொன்னதற்கு மேற்கண்ட தலைவர் களேதான் “அது அவரவர்கள் இஷ்டமேயொழிய யாரையும் கட்டாயப் படுத்தி யாருடைய மனதையும் புண்படுத்தி யாருடைய உரிமையையும் பறிக்கக் கூடாது” என்று பதில் சொன்னதோடு அதற்காக அந்த குருகுலமே கலைக் கப்பட்டு இப்போது அதை ஒரு பார்ப்பனர் தனது சொந்த சொத்தாக அனுபவிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்கின்றேன். இந்த விஷயத்தை திரு காந்தியும் ஒப்புக்கொண்டு அது அவரவர் தனி அபிப்பிராயம் என்று செட்டிமார் நாட்டு சுற்றுப்பிரயாணத்தில் சமாதானம் சொல்ல வில்லையா? என்று கேட்கின்றேன்.

இந்த மகாத்மாக்களும், தியாகிகளும், தலைவர்களும் இதற்குள்ளாக இப்போது புடம் போட்ட தங்கமாய் விட்டார்களா? அல்லது சலவை செய்த மக்களாய் விட்டார்களா? என்று கேட்கின்றேன். அல்லது இந்த விஷயங்கள் பொய்யா? என்று கேட்கின்றேன். அல்லது இன்றைய சுயராஜ்ய திட்டத்தில் பார்ப்பனருக்குள்ள இந்த உரிமை பறிக்கப்பட்டு விட்டதா? அல்லது இந்த யாருடைய மனமும் புண்படக்கூடாது என்கின்ற “தர்ம நீதி” எடுத்தெறியப் பட்டு விட்டதா? என்று கேட்கின்றேன்.

காங்கிரஸ் அங்கத்தினரில் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்ட தில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். என்னுடைய சொந்த அனு போகத்தை இங்கு எடுத்துச்சொல்லுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதாவது நானும் உயர்திரு எஸ்.சீனிவாசய்யங்காரும் காங்கிரஸ் பிரசார விஷயமாய் திண்டுக்கல்லுக்குப் போன போது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக்காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப்பட்டேன். ஆனாலும் பகலில் சாப்பிட்ட எச்சிலை அப்படியே இருக்க அதன் பக்கத்தில் தான் இரவும் இலை போடப்பட்டு சாப்பிட்டேன்.

இது இப்படியிருக்க, மற்றொரு சமயம் நானும் தஞ்சை திரு. வெங்கிடுசாமி பிள்ளையும் காங்கிரஸ் பிரசாரமாக பெரிய குளத்திற்குப் போனபோதும் ஒரு காங்கிரஸ் பார்ப்பனர் வீட்டில் இறக்கப்பட்டோம். அப்போது காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்தில் பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு சாப்பிட்ட எச்சிலைக்குப் பக்கத்திலும், காலை பலகாரம் சாப்பிட்ட எச்சிலைக்குப் பக்கத்திலும் இராத்திரி சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு எறும்புகளும், பூச்சிகளும், ஈக்களும் ஊரிக் கொண்டி ருக்கவே சாப்பிட்டு வந்தோம். இவற்றையெல்லாம் லட்சியம் செய்யாமல் தான் காங்கிரசில் உழைத்தேனானாலும் காங்கிரசில் ஜாதிவித்தியாசம் பாராட்டப்படுவதில்லை என்பதை நான் ஒப்ப முடியாது என்பதற்காக இதை சொல்லிக்கொள்ளுகின்றேன்.

ஜாதி போய் விட்டதா?

இவ்வளவு தூரம் போவானேன்? இன்றும் காங்கிரசிலுள்ள காங்கிரசை ஆதரித்துப் பிரசாரம் செய்யும் மற்றும் “காங்கிரசும் மகாத்மாவும் தான் இந்தியாவுக்கு விடுதலை, சமத்துவம் வாங்கிக் கொடுப்பவர்?” என்று சொல் லும் பார்ப்பனரில் 100க்கு 5 பேராவது ஜாதி வித்தியாசம் விட்டவர்களா? விடத் தயாராயிருக்கின்றவர்களா? என்று கேட்கின்றேன். பார்ப்பனரல்லா தார்களில் 100க்கு 10 பேராவது ஜாதி வித்தியாசம் விட்டவர்களா? என்று கேட்கின்றேன். மூடிவைப்பதில் பயனென்ன? ‘வாயிக்கு உருசியான சாப்பாடு எங்கு கிடைத்தாலும் சாப்பிடலாம்’ என்கின்ற ஒன்றிரண்டு “துறவி” களைப் பார்த்து முடிவு கட்டலாமா? என்று கேட்கின்றேன்.

சுயராஜ்யம் வந்த காலத்திலும் இந்த மனிதர்கள் தானே இந்த நாட்டு மக்களாயிருக்க முடியும்? இவர்களது பிரதிநிதிகள் தானே ஜனநாயக ஆட்சி செலுத்துவார்கள். ஆகவே இந்த நிலையில் என்ன மாறுதலை ஏற்படுத்திவிட முடியும்?

பொருளாதாரம்

மற்றும் பொருளாதாரத் துறையில் செல்வவான்களுக்கும், உத்தியோ கஸ்தர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தவிர மற்றவர்களுக்கு என்ன நன்மை செய்ய சுயராஜ்யத்தில் திட்டமிருக்கின்றது என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். பணக்காரன் பணத்தைப் பிடுங்கி மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. தேசத்துப் பணமெல்லாம் சர்க்காருடையதானதானால் ஆகட்டும் . இல்லையானால் பணம் ஒரே பக்கம் போய்ச் சேருவதற்கு மார்க்கமில்லாமலிருக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன். இன்றையதினம் பணக்காரன் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பங்கு போட்டுக்கொடுத்து விட்டால் இந்த ஏழை நாளைக்கு கயா சிரார்த்தமும், மதுரைவீரன் பூஜையும், காவடி அபிஷேகமும், பண்டிகையும் செய்து வீட்டில் உட்கார்ந்து கொண்டேபணத்தைத் துலைத்து விடுவான் என்பதும், பிறகு பழையபடி புரோகிதனும், தந்திரக்காரனும், ஏமாற்றுக்காரனும்தான் மறுபடியும் பணக்காரன் ஆய்விடுவான் என்பதும் எனக்குத்தெரியும். ஆதலால் தான் நாட்டுச் செல்வம் ஒரு பக்கமே போய் குவியாமல் இருக்கும் திட்டமே போட வேண்டும் என்றும் யாருக்கும் எந்தத்தொழிலும் செய்யவும் எல்லோரும் எதையும் படிக்கவும் சௌகரி யமும், அனுமதியும் இருக்க வேண்டும் என்றும் தான் சொல்லுகின்றேன்.

வருணாச்சிரம சுயராஜ்யத்தில் - யார் மனதையும் புண் படுத்தாத சுயராஜியத்தில் இது முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

மதமும் கோவிலும்

மற்றும் இன்றைய இந்தியா நாட்டின் அடிமைத்தனத்துக்கும், தரித்திரத்திற்கும் ஆதரவாயிருப்பது மதமும் கோவில்களும் என்பது நீங்கள் எல்லோருமே ஒப்புக்கொண்ட விஷயமாகும். ஆகவே காங்கிரசினால் இந்த மதமும் கோவில்களும் ஒழியுமா? என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இன்று நமது நாட்டில் காங்கிரசில் இருப்பவர்கள் பெரிதும் மதப்புரோகிதக் கூட்டத்தாரும் அவர்களது மக்களும், கோவில் பூசாரி மக்களும் அல்லவா? என்று கேட்கின்றேன். காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் இவற்றை ஆதரிக்கின்றவர்கள் அல்லவா? என்று கேட்கின்றேன். மதமும் கோவிலும் போய் விடுவது உண்மையானால் இந்த ஆட்கள் “காங்கிரசுக்கு ஜே!” “காந்திக்கு ஜே!!” என்று கத்துவார்களா? என்பதையும் யோசித்துப்பாருங்கள். ஏதோ பார்ப்பனருக்கு கையாளாய் இருப்பதின் மூலம் ஏதோ ஒருவிதத்தில் வாழ்க்கை நடைபெறுகின்றது என்பது தவிர காங்கிரசின் யோக்கியதை அறியாத காங்கிரஸ் பக்தர்கள் யார் இருக் கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே சகோதரர்களே! காங்கிரசு பைத்தியம் என்கின்ற பார்ப்பன ஆட்சியில் இருந்து விலகி மக்களுக்கு உண்மை சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டாலொழிய இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை என்பது தான் எனது உறுதி.

-------------------04.07.1931 ஆம் நாள் நாகர்கோயிலில் நடைபெற்ற நாகர் கோயிலைச்சேர்ந்த கோட்டாறு சுயமரியாதை வாசக சாலையின் இரண்டாம் ஆண்டு விழாவில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை. "குடி அரசு" - சொற்பொழிவு - 12.07.1931

32 comments:

தமிழ் ஓவியா said...


பாம்புப் பெண்


சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து நாட் டின் தலைநகரான பாங் காக்கில் மார்பகப் பகு திக்கு மேலே பெண் ணாகவும், கீழ்ப் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக் கும் விசித்திர சிறுமி வாழ்வதாகவும் அந்தப் பெண்ணைக் காண நாள் தோறும் ஆயிரக்கணக் கான மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன.

மேலும் 8 வயதான மய் லி ஃபே என்ற அந்தச் சிறுமி பிறந்த போதே அவளது உடலின் கீழ்ப் பகுதி பாம்பின் தோற்றத் துடனும், தலை முதல் மார்பகம் வரையிலான பகுதி, மனித தோற் றத்துடனும் இருந்ததாக அவருடைய பெற்றோர் கூறுகின்றனர். இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உல கில் தோன்றுவது மிக, மிக அரிது எனக் குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுநர் கள், இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்து வக் குறியீட்டின்படி, 'செர் பெண்டொசிஸ் மெலிய னார்கிஸ் அல்லது 'ஜிங் ஜிங் நோய் என்றும் இயற் கைப் படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த் திக்க இதுவரையில் எவ் வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்பட வில்லை எனவும் தாய் லாந்து நாட்டின் மருத்துவ வல்லுநரான மருத்துவர் பிங்லாவ் என்பவர் கூறி யுள்ளதாகவும் கூறுகின் றனர். கதைக்கு கால் முளைத்தாகி விட்டது; இறக்கைகளும் கட்டப் பட்டு விட்டன - இனி அதனைக் காசாக்க வேண் டியதுதானே பாக்கி. ஆரம்பமாகி விட்டது - மூட நம்பிக்கை என் னும் சுரண்டல் தொழில். பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-வையின் உட லைத் தொட்டு, கண்களில் ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த மதத்தினர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான மக்கள் நாள்தோறும் அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக் கிடக் கின்றனராம் இதனைப் பெரிதுபடுத்தி,

தாய்லாந்து தொலைக் காட்சி ஒன்று தன்னு டைய இணையதளத்தைப் பிரபலமாக்கியுள்ளது பிள்ளையார் பால் குடித்தார் என்று நம் நாட்டில் பரப்ப வில் லையா? தோற்றத்தில் அய்ந்து தலை பாம்பு போல் காய்ந்த தாவரங் கள் மீது, கடவுள் மதச் சாயம் ஏற்றி, மக்களிடம் பணம் பறிக்கலாம் என்று சாணக்கியப் பார்ப்பான் இங்கு கூறியது இப்பொ ழுது தாய்லாந்திலும் குடியேறி விட்டதோ!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/74776.html#ixzz2sdOllkgA

தமிழ் ஓவியா said...


கல்கிகளின் கரிசனங்கள்

கேள்வி: குஜராத் கல வரத்தில் மோடிக்குத் தொடர் பில்லை என்று சொல்லி விட்டதே அகமதாபாத் கோர்ட்?

பதில்: ஜாகியா ஜாஃப்ரி மேல்முறையீடு செய்ய எல்லா வாய்ப்பு களும் உண்டு. குஜராத் கலவரத்தின்போது மோடி அலட்சியமாகவோ அல் லது தூண்டி விடும் விதத் திலோ நடந்து கொண்டதற் கான ஆதாரம் ஏதும் இல்லை என்பதை இத்தீர்ப்பு உறு திப்படுத்தி இருப்பது உண்மை. ஆனால், பெரும் பாலான இஸ்லாமியர் மனதில் இன்னமும் மோடி குறித்த அச்சம் தொடர்வது நல்லதல்ல. அவர் இஸ்லா மியர்களுக்கு நம்பிக்கை யூட்டும் விதமாகப் பேசுவ தும் நடந்து கொள்வதும் நல்லது. போதாக்குறைக்கு இளம்பெண்ணை வேவு பார்த்த விஷயத்தை மத்திய அரசு கிளறி, மோடி மீது விசாரணைக் கமிஷன் போட்டு அவநம்பிக்கையை வளர்க் கிறது. (கல்கி 12.1.2014)

நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விட்டது என்ற திரைமறை வில் கல்கிகள் ராமனைப் போல மரத்தின் பின் ஒளிந்து கொண்டு மோடியைக் காப் பாற்ற முயற்சிக்கின்றன.

கல்கிகளுக்கு மிகவும் நெருக்கமான திருவாளர் சோ ராமசாமி இது போன்ற தீர்ப்புகள் பற்றிக் கூறியதை எடுத்துக் கூறி னால் கல்கி கனபாடிகளின் குளிருக்குக் கொஞ்சம் கணப் புச் சட்டியாக இருக்கும்!

இப்போது டான்சி உட்பட அய்ந்து வழக்கு களில் ஜெயலலிதா விடு தலை செய்யப்பட்டிருக் கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். - 1991 - 1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின் போது ஊழல் நடந்தது உண்மையே! திமுக ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்த வழக்குகளை பொய் வழக்கு என்று கூற மாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றஞ்சாட்டியதில் எந்தத் தவறும் இல்லை; குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான்! (துக்ளக் 14.1.2002) என்று திருவாளர் சோ சொன்னதுதான் கல் கிக்கும் பதில்.

பாபர் மசூதி பிரச்சினை யில் நீதிமன்றம் சொன் னாலும் ஏற்க மாட்டோம். காரணம் இது எங்களின் நம்பிக்கைப் பிரச்சினை என்று அரட்டை அடிப்ப வர்கள், மோடி விடயத்தில் நீதிமன்றத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குவதை ஒப்பிட்டுப் பார்க்க வேண் டும்.

இதே மோடியை உச்ச நீதிமன்றம் நீரோ மன்ன னுக்கு ஒப்பிட்டுச் சொன் னதை மிக வசதியாக மறந்து விடுவார்கள் - ஏன் மறைக் கவும் முயலுவார்கள். குஜ ராத்தில் இரண்டாயிரத்துக் கும் மேற்பட்ட முசுலிம் கள் கொல்லப்பட்டபோது ஆட்சியில் முதல் அமைச்ச ராக இருந்தவர் நரேந்திர மோடி இல்லை என்று கூடச் சொன்னாலும் சொல் வார்கள் - யார் கண்டது?

பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத் கலவரத்தின்போது முதல்வர் மோடி எப்படி எல்லாம் எங்களுக்குக் கட்டளையிட்டார் என்று தெகல்காவிடம் கூறியது வீடியோ காட்சிகளாக வெளி வந்ததே - மறுக்க முடியுமா?

மோடி ஆட்சியில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்த காவல்துறை அதிகாரிகளே குஜராத் கலவரத்தில் மோடி யின் பங்கை விலாவாரி யாகக் கூறி இருக்கிறார்களே - அப்படி உண்மையைச் சொன்ன அதிகாரிகளைக் கூட பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளிய புண்ணியவான் ஆயிற்றே மோடி.

அரியலூரில் ரயில் கவிழ்ந் ததால் ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரியும், இணை அமைச்சர் ஓ.வி. அழகேசனும் பதவிகளை ராஜினாமா செய்தார்களே! காரணம் என்ன? இந்த இரண்டு பேர்களுமா அந்த ரயிலை ஓட்டினார்கள்?

குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஆட்சியில் முதல மைச்சராகவிருந்த மோடி பொறுப்பு ஏற்க வேண் டாமா? ராஜினாமா செய்ய வேண்டும் முதல் அமைச் சர் மோடி என்று பிரதம ராக இருந்த வாஜ்பேயி சொன்னதாக அத்வானி கூறியது ஏன்?)

நாணயமான - நேர்மை யான மனிதராக மோடி இருந்தால் குஜராத் கலவ ரத்திற்கான பொறுப்பை ஏற்று அன்று ராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லது இப்பொழுதா வது அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

குஜராத்தில் முசுலிம் கள் கொல்லப்பட்டதை யும் காரில் பயணம் செய் யும் பொழுது நாய்க் குட்டி அடிபடுவதையும் சமமாக ஒப்பிட்டு இப்பொழுது கூடச் சொல்லுகிறார்கள்! என்றால் - இத்தகையவர் களைக் காப்பாற்ற கல்கி கூட்டங்கள் கனைக்கின் றன என்றால் அவாளின் குரூரக் குணத்தையும், மத வெறியையும் கணக் கிட்டுக் கொள்ளலாமே!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/page1/74778.html#ixzz2sdPVPyhc

தமிழ் ஓவியா said...


இதோ இன்னொரு மோ(ச)டி!


ஒபாமா கூட மோடி பேச்சை கேட்கிறார்: ஃபேஸ்புக்கில் பரவும் போலி போட்டோ

அமெரிக்க அதிபர் ஒபாமா - இந்தியப் பிரத மருக்கான ஆர்.எஸ்.எஸின் சிபாரிசு தாரர் நரேந்திர மோடியின் மேடைப் பேச்சை தொலைக்காட்சி யில் கண்டு ரசிப்பது போன்று சித்தரிக்கப் பட்ட படம் வலைக்காட்சி யில் உலவ விடப்பட்டுள் ளது. (பேஸ் புக்) குஜராத் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் நவசாரி என்பவரின் பேஸ் புக்கில் இந்தப் பித்தலாட் டப் படம் பதிவு செய்யப் பட்டுள்ளது.

உண்மை என்ன தெரி யுமா? 2011இல் எகிப்து அதிபர் முபாரக்கின் உரையை டி.வி.யில் ஒபாமா பார்ப்பது போன்ற காட் சியை உல்டா பண்ணி இந்த மோசடியைச் செய் துள்ளனர்.

இதுகுறித்து நவசாரி எம்.பி.யிடம் கேட்டபோது இதற்கும் தனக்கும் சம்பந்த மில்லை என்று கழற்றிக் கொண்டார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பது பழமொழி.

Read more: http://viduthalai.in/page1/74781.html#ixzz2sdPd3TaD

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.

- (விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


மோடியின் கொல்கத்தா பேச்சில், வங்காளிகளின் மூக்கைச் சொறிகிறாராம் மோடி?


மோடியின் கொல்கத்தா பேச்சில்,
வங்காளிகளின் மூக்கைச் சொறிகிறாராம் மோடி?

- ஊசி மிளகாய்

இவர் நிலை என்ன?

கொல்கத்தாவில், பேசிய நரேந்திரமோடி, பெரிய தேசீயவாதி என்றும், ஆர்.எஸ்.எஸ். குறுகிய ஜாதி, மாநில பிரிவுகள் எண்ணங்களிலிருந்து விடுபட்டு தேசீய பார்வை மக்களுக்கு அளிக்கவே அவதாரம் எடுத்ததாகச் சொல்லி பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.ஆல் பி.ஜே.பி.யின்மீது திணிக்கப்பட்ட பிரதமர் வேட்பாளராக ஆங்காங்கே பெருங் கூட் டத்தை அழைத்து வந்து, மீடியாக்கள், பெரு முதலாளி கள் தயவுடன் விளம்பர வெளிச்சத்தில் உலா வருகிறாரே! குஜராத் மக்களிடத்தில் பேசும்போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக உருகுகிறார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை என்ற வித்தையில் இறங்கி அதனை அரசியல் யுத்தியாக்கி நேருவைத் தாக்கி, பட்டேலை உயர்த்துகிறார்!

மேற்கு வங்காளத்திற்குச் சென்றால், அங்கே பிரணாப் முகர்ஜியைத் தூக்கி அவரையல்லவா மன்மோகன்சிங்க்குப் பதில் பிரதமராக்கி இருக்க வேண்டும்? என்று வங்க வாக்கு வங்கியைக் குறி வைக்கிறார்! பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் இருக்க இவர் எப்படி பிரதமர் என்றார்! அது காங்கிரஸ் கட்சியும் தலைமையும் தீர்மானிக்க வேண்டிய உள் விஷயங்கள். அதே கேள்வியை மோடியைப் பார்த்து மற்றவர் களும் கேட்கலாமே!

மூத்த தலைவர் அத்வானி,
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ்,
மூத்த மற்ற தலைவர் ஜஸ்வந்த் சிங்,
முரளி மனோகர் ஜோஷி இப்படிப் பலரைப் பின் தள்ளி மோடி எப்படி - ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி இப்படி ஒரே அடியில் ஜாக்பாட் பெற்றார்?

அதற்குச் சில வாரங்களுக்குமுன் நான் குஜராத் முதல் அமைச்சராக மட்டுமே நீடிப்பேன் என்றாரே அது ஏன் காற்றில் பறந்தது?

Read more: http://viduthalai.in/e-paper/74820.html#ixzz2sgnr8ekz

தமிழ் ஓவியா said...

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பளிங்குகல்லிலான பிள்ளையார் சிலை

கரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகம் முன்பு பளிங்குகல்லிலான விநாயகர் சிலை அரச மரம், வேப்ப மரம் ஒருங்கே அமைந்துள்ள இடத்தில் செங்கற்களை அடுக்கி அதன் மேல் விநாயகர் சிலையை வைத்தும், அரளி பூ மாலை போட்டும் விளக் கேற்றியும், பூலப்பூ மரத் தில் சூட்டியும், குங்குமம், மஞ்சள், சாம்பல் (திருநீறு) கொண்டும் தினமும் அங்கு பூசை செய்து வருவதாக அலுவலக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

அரசு அலுவலக வளா கங்களில் மதவழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்னும் அரசா ணை படி எந்த அரசு அலுவலகங்களிலும், ஒரு குறிப்பிட்ட மத சம்பந்த மான கடவுள் சிலை வைத்து வழிப்படக் கூடாது என் றும் அரசாணையை மதிக் காமல் செயல்படும் நபர் கள்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. ஜெயந்தி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக அந்த கோயில் சிலை பகு தியை அகற்ற உத்தரவிட வேண்டும்.

சமூக விரோ திகள்மீது தக்க தண்டனை வழங்க வேண்டும். இல்லை யேல் கரூர் மாவட்ட திராவி டர் கழக தோழர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களைத் திரட்டி பெரிய போராட் டம் நடைபெறு வதை தவிர்க்க வேண்டுகிறோம். தகவல்: தே. அலெக்சாண்டர், கரூர் மாவட்ட செய்தியாளர்

Read more: http://viduthalai.in/e-paper/74825.html#ixzz2sgoR5PLc

தமிழ் ஓவியா said...


எதிலும் எல்லையுள்ள இலக்குடன் வாழுங்கள்!


வாழ்க்கையில் பலரும் தங்களது மகிழ்ச்சியைத் தாங்களே தொலைத்து விட்டு, அல்லற்படுகிறார்கள். மகிழ்ச்சி- இன்பம் - இவை எல்லாம் எட்டாக் கனிகள் அல்ல; கிட்டா நிலைகள் அல்ல. எளிமை நிறைந்த வாழ்க்கை இன்ப வாழ்க்கையாகும்.

இன்பம் - மகிழ்ச்சி, என்பதை அடைய வெறும் பணம் சம்பாதிப்பது மட்டும் வழிமுறையாகி விடுமா? எத்தனை பணக்காரர்கள் மகிழ்ச்சி யோடு வாழுகிறார்கள்? எத்தனை செல்வந்தர்கள், கோடீசு வரப் பிரபுக்கள் இன்பத்தை அனுப வித்து வாழுபவர்களாக உள்ளார்கள்?

கணக்கெடுத்துப் பாருங்கள், ஏமாற்றம்தான் மிஞ்சும்!

ஒரு வகையான தவறான எண்ணத் தால் பணம் இருந்தால் நமக்கு எல்லாமே கிட்டிவிடும் என்ற தப்புக் கணக்கால் - பலர் மாய்ந்து மாய்ந்து குறுக்கு வழிகளில், கோணல் வழிகளில், பிறரைக் கசக்கிப் பிழிந்து, ஈத்துவக்கும் இன்பம்கூட என்னவென்றே தெரியாது வைக்கோல் போரைக் காத்த நாய்களாக வாழ்ந்து, நொந்து நூலாகி வாடி வதங்கி, தான் பெற்ற செல்வத்தைக்கூட நுகராமல் மாண்டு மடிகிறார்கள்!
ஒரு சாதாரணமான கல்லூரி விரிவுரையாளர்; பிறகு பேராசிரியர் - எப்படியோ அவருக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது; அவ்வளவு அரசு ஏற்றுமதி உலகில் இவர் மன்னரானவர்; மற்றவர்களுக்கு உதவிடவில்லை. கோடிக் கணக்கில் அந்நியச் செலாவணி உட்பட புழங்கியது.

பிள்ளை குட்டிகள்கூட கிடையாது! கணவன் மனைவி இருவரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் - பணம் சேர்த்து, அதன்மீது அமர்ந்தார், எரிமலை வெடித்ததைப் போல, ஓர் நாள் ஒரு கொடுமையான செய்தி - வேலைக்காரியோ; வேலைக்காரரோ, திட்டமிட்டு கொலை செய்தனர் உறவினர் சொத்தை அனுப விக்க. இப்படி ஒரு கொலைத் திட்டம்! வாழ்க்கை முடிந்தது; சேர்த்த பொருள்... கேள்விக்குறிதான்

அதுவே உயிர்க்கொல்லி ஆகிவிட்டது! சொத்து இல்லாதவரை இருந்த சுதந்திரம் நிம்மதி. சொத்துகள் கோடிக்கணக்கில் சேர்ந்த தும் பறிபோனதுடன், இரு உயிர்களும் அல்லவா பறிக்கப்பட்ட கொடுமை நடை பெற்றது?

என்னே பரிதாபம்!

மனிதர்கள் துன்பப்படாமல் வாழப் பணம் - செல்வம் (ஓரளவு) தேவை; அதற்காக அதை எல்லையற்று சேர்த்தால் அதுவே அவர்கள் உயிர்க்கு இறுதியாகி விடுகிறதே!
ஏனோ ஆறறிவு படைத்த மனிதர்கள் இது புரியாமல் நடக்கிறார்கள்!

படிப்பு, பட்டம், பதவி, எதுவும் இவர் களுக்கு இதனைப் போதிக்கவில்லையே!

எல்லையுள்ள இலக்கு- விரும்பத் தக்கது எளிதில் - உழைப்பால் - அடையத் தக்கது.
ஆனால் எல்லையற்ற இலக்கு விரும்பத்தகாது மட்டுமல்ல; எவராலும் அடைய முடியாதது; காரணம், ஆசை பேராசையாக மாறுகிறபோது அதன் இலக்கை அடைய நேர்வழிகள் விடை பெறுகின்றன. குறுக்கு வழிகளும் கோணல் புத்திகளும் வழி தவறி நடக்க வருக வருகவென்று அழைத்துச் சென்று அதல பாதாளத்தில் - ஆழ்குழியில் விழுந்து வாழ்க்கையை முடிக்கவே முயலுகிறது.

எனவே எச்சரிக்கையுடன் வாழுங்கள்.

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/74831.html#ixzz2sgpBW4ac

தமிழ் ஓவியா said...


நீதி கெட்டது யாரால்?

- குடந்தையான்

ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒடுக் கப்பட்ட மக்களுக்கு மதிப்பெண் தளர்த்தப் பட வேண்டும் என்ற மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்ற காரணத்தைச் சொல்லி தள்ளுபடி செய்துள்ளது.

நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு சரியா? கொள்கை முடிவுகளில் நீதி மன்றங்கள் தலையிட்டது இல்லையா?

தமிழ் நாட்டில், பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கு, எந்த அடிப்படையில் உச்ச நீதி மன்றம் தடை விதித்தது?

அரசியல் சட்டம் 340-இன் படி அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைப்படி, விபி சிங் அரசு, பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்கிய ஆணையை, மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவித்த தற்கு, உச்சநீதிமன்றம் எந்த அடிப் படையில் முதலில் தடை விதித்தது? 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்றும், பிற்படுத் தப்பட்டோரில் முன்னேறிய பிரி வினரை நீக்க வேண்டும் என்றும், அரசின் கொள்கை முடி வுக்கு எதிராக, அரசியல் சட்டத்தின் பிரிவுகளுக்கு எதிராக, எந்த அடிப் படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது?

ஆக, பெரும்பான்மை ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, அரசு கொள்கை முடி வினை எடுத்தால், நீதி மன்றங்கள் எதிராகவும், இந்த மக்களுக்கு எதிரான ஒரு முடிவை எடுத்தால், நீதி மன்றங்கள், கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், தீர்ப்பு அளிப்பது, நீதி கெட்டது யாரால் என்ற வரலாற்றுப் பதிவினை, புரட் சியாளர் பெரியார் நீதி மன்றத்தில் பதிவு செய்ததை, நினைவுப்படுத் தவும், இன்றளவும் நீதிமன்றங் கள் மாறவில்லை என்பதாகவும் தான் நாம் கருத வேண்டியுள்ளது. ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிரான பாசிச ஆட்சி யின் முன்னோட்டமாக, நீதி மன்றங் களும், ஊடகங்களும், அண்மைக் காலமாக தங்களது கருத்து களை பதிவு செய்து வருகின்றன என்பதை யும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது.

Eternal vigilance is the price of liberty. உரிமைக்கான விலை, நாம் என்றும் விழிப்புணர்வோடு இருத்தலே.

Read more: http://viduthalai.in/page-2/74833.html#ixzz2sgpdtDms

தமிழ் ஓவியா said...


குண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவு பேரில் குண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே!

செய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனாகீதா ரகுநாத் தகவல்


புதுடில்லி, பிப்.7- ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவின் பேரில் குண்டு வெடிப்புகள் நடத்தப் பட்டன என சிறையில் இருக்கும் இந்து தீவிரவாத சுவாமி அசீமானந்த் அளித்த தகவல் அனைத்தும் உண் மையே என்றும் அவர் குரல் பதிவை கொடுக்கத் தயார் என்றும் செய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனா கீதா ரகுநாத் இன்று தனியார் தொலைக்காட்சி நேர் காணலில் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடந்த சில பயங்கரமான குண்டுவெடிப் பில் நூற்றுக்குக்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்ட னர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் காவித்தீவிரவாதி களின் நேரடி தொடபை ஆதாரத்துடன் நிறுபிக்கப் பட்டு சாது பிரஞ்யா தாக்கூர் என்ற பெண் சாமியார், அசி மானந்தா, இந்திய ராணுவப் படையில் உயரதிகாரி பொறுப்பு வகித்த சிறீகாந்த் புரோகித் மற்றும் தயானந்த் பாண்டே போன்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆர் எஸ் எஸின் நேரடி தொடர்பில் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம் பாலா சிறையில் இருந்து வருகிறார். இவரிடம் காரவன் என்ற ஆங்கில மாத இதழ் நேரடி பேட்டி ஒன்று எடுத்தது. இந்த பேட்டியின் போது பல முக்கிய திடுக்கிடும் தகவல் களைக் கூறினார். அதில் முக்கியமானது இன்று மத்தியில் ஆட்சி அமைக்க துடித்துக்கொண்டு இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக்கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் இத் தனை தீவிரவாதத் தாக்கு தலுக்கும் காரணமானவர் அவரின் ஆணைப்படிதான் குண்டுகள் வைக்கப்பட்டது என்ற தகவல்.

இந்த செய்தி வெளிவந்த உடனே டில்லியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்துவங்கியது. எப்போதும் போல் பாரதிய ஜனதா இது பொய்யான ஒரு செய்தி என்றும் ஆதார மில்லாத இந்த செய்தியை பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடி பதவிக்கு வரவிடாமல் செய்ய காங்கிரஸ் மற்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்துகொடுக்கும் கட்சிகளின்\இயக்கங்களின் சதிச்செயல் என்று கூறியது. இந்த செய்தி குறித்து தனியார் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலில் கார வான் இதழுக்காக இந்த செய்தியை சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியதாவது. இந்த செய்தி அனைத்தும் உண்மையே.

இது அவரிடம் இருந்து வாய் மொழியாக பதிவுசெய்யப் பட்டுள்ளது, எந்த விசா ரணைக்கும் இந்த குரல் பதிவை கொடுக்கத்தயார் என்று கூறினார். ஹரியா னாவில் உள்ள அம்பாலா சிறையில் உள்ள அசீமானந் தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்து பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதி யின் பேரில் தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறினார். காரவன் இதழ் அசிமானந் தாவின் குரல் பதிவை (இன்று)வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது.

Read more: http://viduthalai.in/page-3/74811.html#ixzz2sgpzkdBK

தமிழ் ஓவியா said...


உடுமலையாரின் பாடல்!

ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற காலம் மாறிப் போச்சு... இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற உண்மை தெரிஞ்சு போச்சு

பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும் எல்லாம் நடக்குதுங்க - அதை
எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு ஏமாந்து போகாதீங்க!

ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால் அடுப்பை மூட்டுறாங்க
ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக
ஆளையே மாத்துறாங்க - இங்கே ஆளையே மாத்துறாங்க.

பெண்: அது... ஆயிரங்காலத்துக் கப்பாலே நடக்கிற
ஆராய்ச்சி விசயமுங்க... மூளை
ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம அறிவுக்குப் பொருத்தம் ஆறு, கோயில், அரசமரந்தானுங்க!

ஆண்: கோழியில்லாமெ தன்னால முட்டைகளில்
குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்
கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த
கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக்
கோளாறைக் கண்டு பிடிச்சார்!

பெண்: அந்தக் குஞ்சுகள் பொரிக்க வச்ச கோளாறுக் காரனை
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்
கூசாமல் எதையும் யோசனை செய்யாமே பேசுவது தப்பித முங்க

ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால்
இயற்கை யெங்குறாங்க - இனிமேல்
இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும் முயற்சியும் பண்ணுறாங்க!

- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப்பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/74850.html#ixzz2sgquEJDJ

தமிழ் ஓவியா said...

கடவுளை நம்புகிறாயா?

ருஷ்ய நாட்டு பிரஜை ஒருவன் வேலை தேடுகிறான் என்றால் அவனைப் பார்த்து ஒரு பேட்டியாளர் நீ கடவுளை நம்புகிறாயா?

என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது இல்லை. அவ்வாறு கேட்பதை சட்டம் தடை செய்கிறது.

- ருஷ்ய வெளியீடு: 100 வினாக்களும் விடைகளும் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 48.
தகவல்: ந.சுப்ரமணியன், கோவை.

Read more: http://viduthalai.in/page-8/74850.html#ixzz2sgr2dIg5

தமிழ் ஓவியா said...

கே.எம்.பணிக்கர் கூற்று!

ஜாதி உணர்ச்சி பற்றி குற்றம் சாட்டும் பெரும்பாலோர் ஜாதிகளின் பிரதிநிதிகளாகவே இருந்தவர்கள்!

ஒரு காலத்தில் அவர்கள் தங்கள் பகுதிகளில் அரசியல் ஆதிக்கத்தை ஏக போகமாக அனுபவித்து வந்தவர்கள். இன்று வயது வந்தோர்க்கு வாக்குரிமை என்பதன் அடிப்படையில் உள்ள மக்கள் ஆட்சியில் இதுவரை சமுதாயத்தில் செல்வாக்கும் அரசியல் ஆதிக்கமும் இழந்திருந்த மக்கள் தங்களுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்ந்து விட்டனரே என்பதால்தான் ஜாதி உணர்ச்சி ஓங்கி விட்டது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஜனநாயக வழிமுறைகளினால் கீழ் ஜாதிக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் வகிக்கும் அளவுக்கு முன்னேறி வருவது இந்திய ஜனநாயகத்தில் மிகவும் வரவேற்கத்தக்கதொரு அம்சமாகும்.

- ஜம்மு - காஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.எம்.பணிக்கர், கருநாடகப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 1962ஆம் ஆண்டு உரையாற்றியது.

Read more: http://viduthalai.in/page-8/74851.html#ixzz2sgrMUhLG

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு: இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயம்


சென்னை, பிப்.7- ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 விழுக்காடு மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ண யிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடி யினர், பிற்படுத்தப்பட் டோர், பிற்படுத்தப்பட் டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண் பெற் றாலே தேர்ச்சி பெறலாம்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணை யின் விவரம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் (60 விழுக்காடு) 150-க்கு 90 ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்த முதல்வர், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங் கப்படும் என அறிவித்தார்.

இந்த மதிப்பெண் சலு கைக்குப் பிறகு இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82.5 ஆகக் குறைகிறது. இந்த மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்று வதற்காக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 என நிர்ண யம் செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவி னர் 150-க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும்.

இந்த மதிப்பெண் சலுகையையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் 82 ஆக நிர்ண யிக்கப்படுகிறது.

இனி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு களிலும் பொதுப்பிரிவினருக் கான தேர்ச்சி மதிப்பெண் 90 எனவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப் பெண் 82 எனவும் நிர்ணயிக் கப்படுவதாக அந்த அரசா ணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

10 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கலாம்: இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 82.5-க்குப் பதில் 82 என நிர்ணயித்துள்ளதால் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.

எனவே, 82.5 என்ற மதிப் பெண்ணுக்குப் பதிலாக 82 அல்லது 83 என்ற முழு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக் கீட்டுப் பிரிவினர் கணக் கெடுக்கப்பட்டு, அவர்களுக் கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடை நிலை ஆசிரியர் பணி நிய மனம் இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more: http://viduthalai.in/page-8/74846.html#ixzz2sgrlIwCv

தமிழ் ஓவியா said...


சைவரும் - வைணவரும்!


வைணவதாசன்: என்ன தேசிகர்வாள்! உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல்? விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவபண்டாரம்: அசிங்கம் என்னய்யா வந்தது? ஒரு சிம்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய் சேர்ந்து விடும் என்பதாக விபூதி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போக முடியாத படி சைவ நெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால் விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாம் என்றால், இதில் உமக்கேன் இத்தகைய பொறாமை?

வைணவர்: மோட்சத்திற்குப் போங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.

சைவர்: என்ன சந்தேகம்?

வைணவர்: ஒரு சிம்டா சாம்பல்பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போய்விடும் என்கிறீர்களே! மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய் இருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த இழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்!

-சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/74849-2014-02-07-12-27-41.html#ixzz2sjAYJKBf

தமிழ் ஓவியா said...

எலி ஒழிப்பிலும் மதம்!

நிருபர்: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து விடுகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தானாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள் அந்த நகர சபையின் எலி ஒழிப்புத் திட்டத்துக்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது?

நிருபர்: ஆம்; பம்பாயில் தான்.

பிரதமர்: எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?
நிருபர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.

பிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி?

நிருபர்: ஆமாம்; எலி ஒழிப்பில்தான் மத உணர்ச்சி. இது அங்கு நிறைய இருக்கிறது ; இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.

பிரதமர்: இது மிகவும் வருத்தத்திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன; இவர்கள் இப்படியெல்லாம் எதிர்ப்புத் தெரிவிப்பதினால்தான் எந்தப் பிரச்சினைகளையும் வெல்லமுடியவில்லை.

- பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் அளித்த பேட்டி, 26.2.1977 இதழிலிருந்து

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/74849-2014-02-07-12-27-41.html#ixzz2sjAiYSdI

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்ட மக்களுடைய கல்வியின் தலையில் கை வைப்பதா?


திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந3) துறை அரசு ஆணை (நிலை) எண் 92 நாள் 11.9.2012இன்படி +2 படித்து முடித்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிருத்துவமதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் மாணவியர்களுக்கு முழுக் கட்டணத்தையும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும். இது 2011-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் பெற்றோர்களின் வருமானம் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் நிபந்தனை.

இத்தகு நிதி உதவியின் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் உட்பட படித்துப் பயன் பெற்றனர்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தீண்டத்தகாத மக்களாக வெறுக்கப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புப் பெற்றால்தான் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்பது யதார்த்தமானதாகும்.

இந் நிலையில் ஏற்கெனவே உள்ள அரசாணை 92-க்குப் பதிலாக அரசாணை எண் 106 மற்றும் 107 என்று இரு ஆணைகள் 4.12.2013 நாளிட்டு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஆணைகளின்படி ஏற்கெனவே சுயநிதிக் கல்லூரிகளுக்கான முழுக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்பதற்குப் பதிலாக, அரசு கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக அரசு கல்லூரியில் ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.70 ஆயிரம் என்ற நிலையில் இதுவரை 70 ஆயிரம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட வெறும் ரூ.40 ஆயிரத்தை மட்டும்தான் தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்கப்படும் என்பது தான் புதிய ஆணையின் சாரமாகும்.

இந்தப் புதிய ஆணையின் காரணமாக அரசு செலுத்தும் தொகை போக மீதியை மாணவர்களே கட்டும் நெருக்கடியும், சுமையும் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவும், போக்கும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இவ்வளவுக்கும் மத்திய அரசால் அளிக்கப்படும் உதவி நிதி இது.

மாநில அரசு மூலமாக, மத்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக்காக நிதியை வழங்குகிறது. இடையில் நந்தியாக இருந்து தமிழ்நாடு அரசு தடை செய்வது ஏன்? மத்திய அரசு கொடுக்கும் முழு நிதியையும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்காமல், அந்த நிதியை வேறு துறைகளுக்குச் செலவிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கும்போது கால்களைத் தட்டிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். ஆச்சாரியார்தான் (ராஜாஜி) கல்வியில் கைவைத்தவர் என்ற கெட்ட பெயர் உண்டு. அந்த ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம். முறையான வேண்டுகோளுக்குத் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

இல்லையெனில், இது குறித்துக் களம் அமைக்க கழகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.கி.வீரமணி
தலைவர் , திராவிடர் கழகம்

சென்னை
8.2.2014

Read more: http://viduthalai.in/e-paper/74856.html#ixzz2smne5iu4

தமிழ் ஓவியா said...


ஆகா, அவாளின் சமத்தோ சமத்து!

கேள்வி: ஜெயலலிதா ஊழல் குற்றம் புரிந்தவர் என்றும், அ.தி.மு.க. ஆட்சி ஊழல் ஆட்சி என்றும் சாடிய அதே நண்பர் சோ தான், இன்றைக்கு ஜெய லலிதாவுக்கு வக்காலத்து வாங்கி அ.தி.மு.க. ஆட்சிக் குப் புகழ் பாடுகிறார் என்று கலைஞர் ஆதங்கப் பட்டிருக்கிறாரே?

பதில்: ஜெயலலிதா வின் 1991-96 அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தவன்தான் நான். ஆனால் 96-ல் வந்த தி.மு.க. அரசு செயல்பட்ட விதம் தவறாக இருந்ததால், 2000 ஆண்டு வாக்கில் அதே ஜெயலலிதாவை நான் ஆதரிக்க ஆரம்பித்தேன். 2001 தேர்தலில் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகச் சில முயற்சிகளைச் செய்தேன். அதிலிருந்து தொடர்ந்து அ.தி.மு.க.வை ஆதரித்துத் தான் எழுதி வருகிறேன். அதற்கு முக்கியக் காரணம் தி.மு.க.வின் சீர்கேடுகள் தான்.
(துக்ளக் 12.2.2014 பக்கம் 9)

கலைஞர் அவர்கள் முர சொலியில் (18.1.2014) கலை ஞர் பதில்கள் பகுதியில் எழுதிய ஒரு பகுதிக்கு மட் டும் தான் பதில் சொல்ல முயற்சி செய்துள்ளார். கலைஞர் அவர்கள் அந்தப் பதிலில் சோவின் ஒரு குலத்துக்கொரு நீதி சோ சொல்லும் சோவின் மனு தர்மப் புத்தியையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

14.1.2002 சென்னையில் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் நண்பர் சோ ராமசாமி அவர்கள்.

இப்போது டான்சி உட் பட அய்ந்து வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். 1991-1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஊழல் நடந்தது உண்மையே. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்த வழக்குகளை பொய் வழக்குகள் என்றும் கூற மாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றம் சாட்டியதில் எந்தத் தவறும் இல்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய் யப்பட்டிருக்கிறார் அவ் வவளவுதான் என்று துக்ளக்கில் திருவாளர் சோ ராமசாமி எழுதியதை கலைஞர் அவர்கள் எடுத் துக்காட்டியுள்ளார். நரேந்திரமோடிபற்றிய பிரச்சினை வரும் போதெல் லாம் என்ன எழுதுகிறார் சோ! நீதிமன்றம் குற்றம் செய்யவில்லை என்று சொல்லிவிட்டதே என்று மோடியைக் காப்பாற்ற முயலுகிறார். அன்று ஜெய லலிதா மீதான தீர்ப்பைக் குறித்து சோ வெளியிட்ட கருத்து மோடிக்கு மட்டும் பொருந்தாதா? விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே நிரபராதி என்று சொல்ல மாட்டேன் என்று எழுதினாரே -

அந்தப் பகுதியை வசதி யாக இருட்டடிப்பார் சோ மதிமுக பொதுச் செயலாளருக்குச் சமர்ப்பணம்

கேள்வி: ஈழத் தமிழர் கள் பிரச்சினையில் காங் கிரஸ் செய்த துரோகத்தை பா.ஜ.க., செய்யாது என்ப தால், அவர்களுடன் கூட் டணி அமைக்கிறோம் என்று வைகோ கூறியுள்ளது பற்றி?

பதில்: கூட்டணி நிர்பந் தத்தினால் அவர் இப்படிப் பேசியிருக்கலாம். ஆனால், வைகோ மிகவும் வற்புறுத் துகிற தனி ஈழம் பா.ஜ.க. வினால் ஏற்கப்படவில்லை. இலங்கை பிளவுபடுவதை பா.ஜ.க.வும், காங்கிரஸைப் போலவே எதிர்க்கிறது.

அதைத் தவிர விடு தலைப்புலிகளை வைகோ ஆதரிப்பதைப் போல பா.ஜ.க. ஆதரிப்பதில்லை. மாறாகக் கடுமையாக எதிர்க்கிறது. ஆகையால் இலங்கைப் பிரச்சினை யில் வைகோ நிலையி லிருந்து பா.ஜ.க.வின் நிலை மாறுபட்டது. அதை மூடி மறைப்பதற்காக நீங் கள் சுட்டிக் காட்டியிருப் பதைப் போல வைகோ பேசியிருக்கலாம். - (துக்ளக் 12.2.2014 பக்கம் 12)

பி.ஜே.பி.பற்றி வைகோ அவர்களைவிட திருவா ளர் சோ ராமசாமிக்கு மிக நன்னாவே தெரியும்.

சோவின் கூற்றுக்கு மறுப்புச் சொல்லுவாரா அல்லது உண்மையைச் சொல்லி நம்மை தர்ம சங் கடத்தில் தள்ளி விட்டாரே என்று உள்ளுக்குள் பொரு முவாரா மறுமலர்ச்சி வைகோ?

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/74882.html#ixzz2smnq1K6F

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்


உடைந்தது 108 தேங்காய்கள்!

சென்னை - எழிலகத் தில் பொதுப் பணித் துறை யில் பணியாற்றும் அலு வலர் ஒருவர் 108 தேங் காய்களை உடைத்திருக் கிறாராம் - எதற்குத் தெரி யுமா? பொதுப் பணித்துறை மேலும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமாம்.

ஒரு துறை வளர்ச்சி அடைவதற்கான ஒரு குறுக்கு வழியை இந்தத் துரை கண்டுபிடித்துவிட்டாரோ!

நீதிக்கட்சியின் முக்கிய தலைவரான டாக்டர் டி.எம். நாயர் உடல் நலம் பாதிக் கப்பட்டபோது திருவல்லிக் கேணிப் பார்ப்பனர்கள் பிள்ளையாருக்குத் தேங் காய் உடைத்தபோது டாக் டர் நாயர் சொன்னார். நீங்கள் தேங்காய்களை உடைப்பதால் கேரளாவில் உள்ள ஏழை மக்கள், தென்னை மரங்களை நம்பி வாழும் அவர்களுக்குப் பயனாய் முடியும் என்றார். அதுதான் இப்பொழுதும் நினைவிற்கு வருகிறது.

ஒரு துறை வளர்ச்சி அடைவது அத்துறையின் ஊழியர்களின் உழைப்பை யும், திறனையும், நாணயத் தினையும் பொறுத்தது என் கிற அடிப்படைக் கூடவா தெரியாது?

பொதுத் துறைப் பொறி யாளர்கள் மைல் கல்லுக்குப் பூஜை செய்தனர் என்பதை நினைவு கூர்ந்தால், நம் நாட்டுப் படிப்பு என்பது - வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் என்று தந்தை பெரியார் சொன்னதுதான் நினைவிற்கு வரும்.
...ம் என்ன செய்வது அரசன் எவ்வழி அவ்வழி குடி மக்கள்!

கொடிகளின் கதை

காங்கிரஸ், சரத்பவர், மம்தா கட்சிகளின் கொடி கள் தேசியக் கொடியைப் போன்று இருப்பதாகக் கூறி, அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது; அது சரி, அத்தோடு இந்தியாவின் தேசிய மலரான தாமரையைத் தேர்தல் சின்னமாகக் கொண்டுள்ளதே பி.ஜே.பி. அதனையும் வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண் டியதுதானே!

அடுத்த பல்டி....

காஞ்சி சங்கராச்சாரி யார்கள் மீதான கொலை வழக்கில் 70-க்கும் மேற் பட்டவர்கள் பிறழ்சாட்சியா னார்கள்; அது எப்படி நடந் திருக்க முடியும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்தாலே எளிதில் புரிந்து விடும்.

அதே காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயேந்திரர் மீது - ஆடிட்டர் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்டது - அரிவாளால் வெட்டப்பட் டது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் அரசு சாட்சியான காஞ்சி சங்கர மடத்தின் காசாளர் நாகராசன் பிறழ் சாட்சியாகப் பல்டி அடித் துள்ளார் - இப்பொழுது அந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பணமும் பதவியும் பாதாளம் வரை பாயும் என்பார்கள் அவற்றைத் தான் கண்ணெதிரில் யதார்த் தமாகப் பார்த்துக் கொண்டி ருக்கிறோமே!

Read more: http://viduthalai.in/e-paper/74881.html#ixzz2smo0ACOp

தமிழ் ஓவியா said...

தெல்லாம் பெருமையா என்ன?

நம்ம கடமை..

திருச்சி, பிப்.8 சென்னை நெடுஞ்சாலையில் அமைய விருக்கும் பெரியார் உல கம் - ஒரு சமூக அறிவியல் உலகமாக வரும் தலை முறைக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் பெரியார் மேலுள்ள பற்றால் இன்று ரூ.25,000 அனுப்பி வைத்து விட்டு வந்து எழுது கிறேன். வேல்கம்பும் வீச்சரிவாளையும் தூக்கிச் சுமந்த ஒரு இனத்தை அறி வாயுதம் தூக்கச் சொல்லி , அதற்காக மூத்திரச் சட் டியைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராய் அலைந்த மாமனிதர் பெரியார். சும்மா மேடைகளில் மட்டும் சொல்லாமல் அதற்காக அரசியல் சட்டத்தை திருத்தச் சொல்லி முதல் அரசியல் சட்டத் திருத்தம் செய்ய வைத்து இடஒதுக் கீடு வாங்கிக் கொடுத்து.. படிங்கடா முட்டாளுங்களா என்று சொன்னவர் அவர் கிழவர் அல்ல.. தமிழர் களின் கிழக்கு திசை..

பிற்படுத்தப்பட்ட தமி ழினம் ஒரு அறிவுடைய சமுதாயமாக மாற்ற, ஒரளவு மாற்றிக் காண்பித்த தந்தை பெரியாருக்கு அவ ரால் பலன் பெற்ற கோடானுகோடி தமிழ் உள்ளங்கள் சார்பாக கடைசி மூச்சு வரை நன்றி யுடன் இருக்க விழையும் ஒரு சாதாரண தமிழன். உங்களால் முடிந்த அளவு நன்கொடை அளித்து அந்த மய்யம் ஒரு அறிவுடைக் கருவூலமாக மாற்ற தமிழர் களுக்கு வேண்டுகோளுடன்.

அய்யா.. உங்கள் ஆணைப்படி பணி முடிப் போம்.. இதெல்லாம் பெரு மையா என்ன நம்ம கடமை..

-அ. வெற்றிவேல்
(முகாம்: சவுதி அரேபியா)

Read more: http://viduthalai.in/e-paper/74878.html#ixzz2smoBP73q

தமிழ் ஓவியா said...


அப்படி என்ன பெரிய அப்பா டக்கரா ஜனார்த்தன் திவேதி

- குடந்தையான்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி, இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் கூடாது; பொருளாதார அடிப்படை யில் இருக்க வேண்டும் என கூறியதற்கு, சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசியல் கட்சித் தலைவர் கள் கடும் கண்டனத்தைத் தெரிவித் ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ஜாதி அடிப்படையில் தற்போது நடை முறையில் உள்ள இட ஒதுக்கீடு தொடரும் என அறிவித்துள்ளார்.

ஜனார்த்தன் திவேதி காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவு எடுக்கும் குழுவில் உள்ளவர். இப்படி ஒரு கருத்தை சொல்வதால் வரும் பிரச் சினைகளைப் பற்றி அறியாதவர் அல்ல;

தேர்தலை சந்திக்க உள்ள நிலை யில் இத்தகைய முரண்பாடான கருத்தை ஏன் சொல்ல வேண்டும்?

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்கிற கூப்பாட்டை, பார்ப்பனர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். கம்யூனல் ஜிஓ தமிழ் நாட்டில் ஒழிக்கப்பட்ட நிலையில் இந்த கருத்தை முன் வைத்துத் தான் செண்பகம் துரைராசன் பெயரில் வழக்கு தொடர்ந்தனர் பார்ப்ப னர்கள்;

அரசியல் சட்ட முதல் திருத்தம் 15(4) வரும் நிலையில், நாடாளு மன்றத்தில் பார்ப்பனர்கள் இந்த கருத்தை முன் வைத்து வாக்கெடுப்பு நடத்தி தோற்றனர். ஜாதி அடிப் படையில் இட ஒதுக்கீடு என்பதற்கு ஆதரவாக 245 வாக்குகளும், வரு மான அடிப்படைக்கு 5 வாக்கும் தான் கிடைத்தன.

1990-இல் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் 27 விழுக்காடு இட ஒதுக் கீட்டை மண்டல் குழு அடிப்படை யில் ஆணை பிறப்பித்த நிலையில், உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணையினை பார்ப்பனர்கள் பெற் றனர். அப்போதும், ஜாதி அடிப் படையில் கூடாது என வாதம் செய் தனர். உச்ச நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்பில், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லும் என்றும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லாது என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

2005-இல் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் 27 விழுக்காடு வழங் கிய நிலையில், மீண்டும் பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றத்தில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என வாதிட்டனர். உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில், ஜாதி அடிப் படையில் கல்வியில் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

இத்தனையும் அறிந்தவர்தான் ஜனார்த்தன் திவேதி.

தற்போது, அரசு வேலை வாய்ப்பு மட்டுமல்லாது, தனியார் துறை யிலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் சூழ்நிலையில், ஜாதி அடிப் படையில் வேண்டாம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தந்தால், பார்ப்பனர்களுக்கு என்றைக் கும் பாதிப்பு இருக்காது என்கிற ஒரு நோக்கில், கருத்தினை, ஜனார்த்தன் திவேதி மூலமாக வெளியிட்டிருக் கிறார்கள் என்று தான் நாம் கருத வேண்டியுள்ளது.

தனி மனிதனாக கருத்து சொல் லும் அளவுக்கு, ஜனார்த்தன் திவேதி அவ்வளவு பெரிய அப்பா டக்கர் இல்லை

Read more: http://viduthalai.in/page-2/74893.html#ixzz2smodhUAl

தமிழ் ஓவியா said...


பெரிய அக்கிரமம்!


பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது,

ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல் போட்டு உபநயனம் செய்யப்பட்டதாம். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டனவாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.

ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத்தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்மவர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயனத்தாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின்றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும்.

எனவே இந்தப் பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய் யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார் களாகவும் விபூதி பூசினார்களானால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே. நடராஜன் போன்றவர்களாகவும், கோபி சந்தனம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் மதனமோகன மாளவியாவாகவும் தோன்றப்போகிறார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை.

இவைகளுக்குச் சற்று தாமதமானாலும் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியாராகவாவது வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக்கணக்கான பேருக்குப் பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்!! பெரிய அக்கிரமம்!!!

எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களைப் பார்ப்பன மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்குப் பறிகொடுக்காமல் அவர்களுக்குச் சகல உரிமைகளும் கொடுக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய கடமையாகும்.

- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/e-paper/74908.html#ixzz2smpwt7J0

தமிழ் ஓவியா said...


யார் வார்த்தைகள் கடினம்?


பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லாத மந்திரிகளைக் கண்டிப்பதற்கு என்று பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் கோகலே ஹாலில் ஸ்ரீ பெசண்டம்மையின் தலைமையில் ஒரு கூட்டம் கூடியபோது ஒருவர் பேசுகையில் மந்திரிகள் தங்கள் பெண் ஜாதிகளை விட்டுக்கொடுத்து மந்திரி வேலைகளைச் சம்பாதிப் பார்கள் என்று சொன்னாராம்.

இது யோக்கியமான வார்த்தையா என்று கேட்கின்றோம். இவ்வார்த்தைகளை எந்த யோக்கியர்களாவது கண்டித்தார்களா என்று கேட்கின்றோம். ஸ்ரீ வரதராஜுலுவாவது அவரது பத்திரிகையாவது தமது தலைவர்களுடைய இம்மாதிரி வார்த்தைகளை கண்டித்தாரா என்று கேட்கின் றோம்.

ஸ்ரீமான் குழந்தை கடற்கரையில் மந்திரிகளைக் கொடும்பாவி கொளுத் தியதற்கு கோபித்துக்கொண்டதாக வேஷம் போட்ட ஸ்ரீவரதராஜுலுவுக்கும் தமிழ்நாடுக்கும் பெண்ஜாதிகளை விட்டுக் கொடுப்பார்கள் என்று சொன்ன வார்த்தை அவ்வளவு கடினமானதாக தோன்றவில்லைபோல் இருக்கின்றது. இதனால் அக்கோஷ்டியின் அற்பத்தனமும் காலித்தனமும் எவ்வளவு என்பது விளங்கவில்லையா?

சாதாரணமாக ஹைகோர்ட் ஜட்ஜுகளில் யாருக்காவது மேகவியாதி இருக்குமானால் அது மைலாப்பூர் காங்கிரஸ்வாதிகள் தேசியவாதிகள் உபயமேயாகும். இம்மாதிரி யோக்கியர்கள் மிகுதியும் நிறைந்த சென்னை காங்கிரஸ்வாதிகள் தங்கள் யோக்கியதைகளை மறைத்துக் கொண்டு இம்மாதிரிப் பேச அயோக்கியர்களைத் தூண்டிவிடுவதும், அதை கண்டிக்காமல் இருக்கச் செய்வதும் ஒரு ஆச்சரியமல்ல.

தவிர, வேறு ஒரு காங்கிரஸ் தலைவராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களும், அவரது ஆயுளில் இம்மாதிரியாக அநேக தடவைகளில் அதிகப்பிரசங்கித் தனமாய்ப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டதானது ஸ்ரீவரதராஜுலு மன்னிப்பு கேட்டுக் கொண் டதைவிட நூறு பங்கு அதிகமாகவே இருக்கும்.

ஆகவே யாருடைய வார்த் தைகள் கடினமானதென்பதும் முழுவதும் அக்கிரமமானதும், பொய்யானதும் என்பதும் இழிவானது என்பதும் இதிலிருந்தாவது பொது ஜனங்கள் உணர வேண்டுமாய் எதிர்பார்க்கின்றோம்.

அன்றியும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமான, உத்தியோகங்கள் என்ன வேலை செய்து யார் பெற்றாலும் பத்திரிகைகள் என்ன வேலை செய்து யார் நடத்தினாலும் அவைகள் எல்லாம் யோக்கியமான தேசியமென்பதும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லையானால் அவைகளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுமே தேசியமாகவும் காங்கிரஸ் சட்டமாகவும் இருக்கின்றது என்பதையும் உணரவேண்டுமாய் விரும்புகின்றோம்.

- குடியரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/e-paper/74907.html#ixzz2smqDs6tR

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனிதன் சமூகப் பொருளாதார வாழ்வில் மற்றவனுக்குத் தாழ்ந்தவனல்லன் என்ற எண்ணம் உதித்து, அது கைகூடிவிட்டால் அதுவேதான் விடுதலை யாகும். விடுதலை என்பதற்கு இதுவே தகுந்த பொருளாகும். உங்களுக்கு மேல் - உயர்ந்த ஜாதியார், செல்வந்தன் - அதிகாரி ஆகிய இவர்களிருந்தால் அது ஒரு நாளும் விடுதலை என்பதாகாது.

Read more: http://viduthalai.in/e-paper/74907.html#ixzz2smqLuWoY

தமிழ் ஓவியா said...


ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்


நான் அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் காரியமாக நான் அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் காரியமாக எனது மேஜையை ஒழுங்குபடுத்து வதில் 10 நிமிடங்கள் செலவிடுவேன். எல்லாத் தாள்களையும் விரைவாகத் துருவிப் பார்த்து வகைப்படுத்திக் கொள்வேன். உடனடியாக கவனம் தேவைப்படுபவை; குறைந்த முக்கியத்துவம் கொண்டவை; படிப்பதற்கான விஷயங்கள் என்று பகுத்துக் கொள்வேன். அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய தாள்களை மட்டும்தான் மேஜையில் வைத்துக் கொள்வேன். வேறெதும் அதில் இருக்காது''.

- ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

Read more: http://viduthalai.in/page2/74924.html#ixzz2smrDWc3l

தமிழ் ஓவியா said...


கடவுளும்ஜாதியும்!

- அ.கருப்பையா

சிவபெருமானின் திருவீதி உலாவைப் பாட எண்ணினார் கவி காளமேகம். இறைவனின் ஊர்வலம் வரும்போது தெருவெங்கும் மக்கள் ஜாதி வேறுபாடின்றி வழிபட்டு மகிழ்வது வழக்கம். சிவபெருமானே முழுமுதற் பொருள் என்னும் கருத்தில், பிற தெய்வங்களை எல்லாம் இணைத்துப் பாடுகிறார் புலவர். அவர்களை எல்லாம் ஜாதிகளின் பெயரால் குறிப்பிடுகிறார்.

சிவபெருமானின் திருக்கோலத்தைப் பிறர் காணவும், தரிசிக்கவும் உற்சவ மூர்த்தியாக தெருவில் தூக்கிச் செல்லும் கடப்பாடுடையவர்கள் சிலர் ஊர்தோறும் உள்ளனர். அவர்களும் பல்வேறு இனத்தைச் சார்ந்தோராவர். ஆனால், புலவர் இறைவன் முன்னர் அனைவரும் சமம் என்பதைக் குறிப்பால் உணர்த்தி, அவரவர் சார்ந்த குலத்தொழிலைத் தவறாமல் செய்ததாகக் கூறுகிறார்.

வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி
சேணியன் போற்ற, கடல்பள்ளி தொழ, தீங்கரும்பைக்
கோணியன் வாழ்த்த, கருமான் துகில்தனைக் கொண்டணிந்த

வேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே! பிரமன் பாட்டுப்பாட, நந்திதேவர் உருவத்தைச் சுமக்க, பைரவர், முருகன், இந்திரன் ஆகியோர் மந்திரம் முழங்க, திருமால் பணிவுடன் முன்னே வணங்கிச் செல்ல, மன்மதன் வாழ்த்துக்கூற, கரிய யானையின் தோலை ஆடையாக அணிந்தவனும், சடைகளைத் தாங்கியவனும், எவர் கண் ணுக்கும் புலப்படாதவனுமாகிய சிவ பெருமானின் ஊர்வலம் புறப்பட்டதாம்'!
இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள ஜாதிப் பெயர்களும், குலத்தொழில்களும் கடவுளர்களும், அவர்கள் ஊர்வலத்தில் செய்துவந்த செயல்களுக்கும் காரண-காரியப் பெயர்களாக அமைந்துள்ளது தான் பாடலின் தனிச் சிறப்பாகும்.
1. வாணியன் - கலைமகளை நாவில் உடைய பிரமன் பாடினான் (எண்ணெய் ஆட்டுபவன் - செக்கில் எண்ணெய் ஆட்டும்போது ராகம் பாடுவதுபோல் சப்தம் வரும்), 2. வண்ணான் - வெண்மை யான நிறம் பொருந்திய நந்திதேவர் சிவனின் உருவத்தை வாகனமாகச் சுமந்தார் (துணிகளை வெண்மையாகத் துவைத்துத் தோளில் சுமத்தல்), 3. வடுகன், 4. செட்டி, 5. சேணியன் - பைரவர், முருகன், இந்திரன் மந்திரச் சொற்களை ஓதிக் கொண்டு வந்தனர். (மாயா ஜாலம் செய் யும் கருநாடக தேசத்தவர், பொருள் களைக் கூவி விற்பவர், யாகம் நடத்து பவர் இவர்கள் அனைவரும் வாய்விட்டு ஒலி எழுப்புபவர்கள்), 6. கடல் பள்ளி - கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால், சிவபெருமானைத் தன் மைத்துனன் என எண்ணி வணங்கினான் (தாழ்த்தப்பட் டோர் தமக்கு மேலான இனத்தவரைத் தொழுது வணங்குவர்), 7. தீங்கரும்பைக் கோணியன் - சுவையான கரும்பை வில் லாக வளைத்துக் கையில் கொண்டு மலரம்பு வீசும் மன்மதன் வாழ்த்தினான் (கோனார் எனப்படும் இடையர் குலத்தைச் சார்ந்தோர், தம் தெய்வமாகிய திருமால் வணங்குவதால் தாமும் வணங்கி வாழ்த் துவர்).

இவ்வாறு உலாவந்த சிவபெருமா னின் செயலையும், பெயரையும் மூன்று ஜாதியின் பெயரால் குறிப்பிட்டுச் சிறப்பி த்துள்ளார் காளமேகம். கருமான் துகில் அணிந்தவன் - கரிய உடல் பொருந்திய விலங்கான யானையைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடையவன். (கரிய புகைபடிந்த ஆடையணிந்து, இரும்புத் தொழில் செய்யும் கொல்லர்); வேணியன் - அடர்ந்த சடைகளைத் தலையில் கொண்டு விளங்குபவன் (ஆடை நெய் பவர் உயிரையும் உடலையும் இணைப் பதுபோல் இரு நூல்களை இணைத்து நெருக்கி ஆடையை உருவாக்குவர்); தட்டான் - புலன்களுக்குக் குறிப்பாகக் கண்களுக்குத் தட்டுப்படாதவன் (பொற் கொல்லர் பொன்னைத் தட்டித் தட்டித் தொழில் செய்வர்).

காளமேகம், எல்லாக் கடவுளர்க்கும் ஜாதிப்பெயர்களை பொருத்திப் பொருள் கொள்ளும் வண்ணம் இருபொருள்படக் கூறிய சொல்லாட்சி போற்றத்தக்கது. மனிதர்களில் ஜாதிப் பிரிவு இருப்பதாகக் கருதினால், அதற்குக் கடவுளரும் விதி விலக்கல்லர் என்பதை நகைச்சுவையாகக் கூறியுள்ளார். அதனால்தான்,

சிவபெருமானின் திருவீதி உலாவை வேடிக்கை எனக்கூறி முடித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page3/74926.html#ixzz2smrQzhnm

தமிழ் ஓவியா said...


மக்கள் சிந்தனைக்கு

அசுர குருவான சுக்கிரன் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் (தமிழர்) ஏற்பட்ட போரில் இறந்த அசுரர்களை உயிர்பெற செய்துள்ளான்.

சிவபெருமான் கொடுத்த வரத்தை தவறான வழியில் பயன்படுத்தியதால் சுக்கிரனை சிவன் விழுங்கி விட்டான். அசுரர்களின் வேண்டுதலுக் கிணங்க சுக்கல வழியாக வெளியே வந்தான். வெள்ளி என்று பெயர் வந்ததாம்.

மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்க கமண்டலத்தில் உள்ள நீர் வெளியே வராமல் சுக்கிரன் வண்டு வடிவத்தை எடுத்து துவாரத்தை அடைத்து விட்டானாம். திருமால் தர்ப்பையால் குத்த சுக்கிரன் கண் குருடானது.
நாம் பிறக்கும் போதே நம் சாதக கட்டத்தில் நம் கண்ணுக்கு தெரியாமலே இறைவன் எழுதி விடுகிறான். இது விவரம் தினகரன் வார (8.1.2014) இதழில் வந்துள்ளது.

இந்த கதையின்படி கடவுள் மனிதனின் சாதக கட்டத்தில் எழுதிவிட்ட பின்பு சுக்கிரனுக்கு என்ன வேலை? இந்த பித்தலாட்டத்தை எழுதிய வனுக்கு எப்படி தெரியும் கடவுளும் சுக்கிரனும்.

###

வீடோ, நிலமோ வாங்க முற்படுகிறவர்கள் வடக்கா அல்லது கிழக்கா என திசையை கேட்கும் வாஸ்து ராசி பலனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமெனவும் கேட்கிறார்கள் இவர்களுக்கு ராசி பலனும் வாஸ்து சாஸ்திரமும் தெரியாது. யாருக்கோ யாரோ சொன்னதை வைத்து கிழக்கு வடக்கு திசையாக வீடு வாங்க கேட்பதே வழக்க மாகி விட்டது. அப்படியே ராசி பலன்படி வீடு வாங்கட்டும். கழிப்பிடம் இல்லாமல் வீடு இருக் குமா? வாஸ்துபடி வீட்டில் கழிப்பிடம் (ஜிஷீவீறீமீ) இருக்கக் கூடாதே. ஜாதகம், சாஸ்திரம் என்ன ஆனது.

ஆனால் இவர்களுக்கு பின்னர் வரும் வாரிசுகள் இவர்களின் ராசிபடியே அல்லாமல் எதிர்மறையாக தெற்கு மேற்கு ராசிபலன் உள்ள வர்களாக பிறந்தால் இவர் கட்டிய வீட்டை இடிக்கவா? விற்கவா? எண்ணில் அடங்கா உதாரணங்கள் பல இருந்தாலும் சிந்திக்க வேண்டியது நீங்கள்தான். 21ஆம் நூற்றாண்டில் வாழும் நாம் வெளி நாட்டான் கண்டுபிடித்த மின்சாரம், தொலைப்பேசி, ரேடியோ, டி.வி. என பலவற்றையும் பயன்படுத்துகிறோம். 20ஆம் நூற்றாண்டு வரை நமக்கு கல்வி கொடுக்க சரஸ்வதிகூட வரவில்லையே. சுதந்திரம் பெற்ற பின்பும் கல்வி கொடுக்க மறுக்கப்பட்டது. தந்தை பெரியாரின் கருத்தை ஏற்ற காமராஜர் வந்த பிறகுதானே படிப்பு அனைவருக்கும் கிடைத்தது. சமஸ்கிருதம் படித்ததால் மட்டுமே மருத்துவ சீட்டு என்று நிபந்தனை வைத்திருந்தார்கள். நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் படிப்பில்லாமல் மூடநம்பிக்கை கொண்டு வாழ்ந்தார்கள். கால நேரத்தை வீணாக்காமல் மூடநம்பிக்கைகளை கைவிட்டு பகுத்தறிவு கொள்கையை கடைபிடிப்போமாக.

-_- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page4/74928.html#ixzz2smriw3yl

தமிழ் ஓவியா said...


இதழ ஒனறன இருவேறு பககஙகள!

- சிவகாசி மணியம்

கேளவ: பெருமபாலான குடுமபஙகளல பரச சனைககுக காரணமாக அமைவது எது?
பதல: கணவன மனைவககடையே 20-ம பககததல (அரசு பதல) இபபடி நோமையான, அறவாததமான பதல இது எனறால, மூடததனததன மூலததை அடைய வழகாடடும முரணபாடு அதே இதழன 50-ஆம பககததல! செனனை 108-லருநது ஒரு பகதை எழுபபும கேளவ இது:

எனககுத தருமணமாக 8 ஆண்டுகள ஆக வட டது. ஒரு பெண குழநதையும உணடு. தனமும என கண வருககும எனககும எதறகாவது சணடைதான நாஙகள ஒறறுமையுடன வாழ எநதக கோவலுககுச செலல வேணடும?

கணவன மனைவ உறவு பலம பெற எனும கடடு ரையல பயா கலயாணராமன எனபவான வழ காடடுதலைப பாருஙகள.

குடுமப ஒறறுமை உணடாக மடடுமலல, எலலா நலனும நஙகள பெற நமமத பெற நமமதயாக நஙகள படுததுறஙக சுருடடபபளள பளளகொணடேசுவரரை கடடாயம ஒரு முறை தாசனம செயது பாருஙகள, பலனகளை உடனடியாக உணாவகள. இது சததயம எனறவா அநதக கோவல எஙகே இருககறது, எபபடிச செலவது எனபதையும வவாககறா. ரொமப சமபள, செனனை கோயமபேடடிலருநது புததூ வழயாகச செலலும எலலா பஸகளும இநதக கோவல வாசலல நறகும. அலலது ஊததுககோடடைச செனறு அஙகருநது ஷோ ஆடடோ (ரூபாய 5) அலலது பஸஸல செலலலாம. தமழக ஆநதர எலலையல அமைநதுளளது. செனனையலருநது 35 ரூபாய. சாபபட ஊததுககோடடை வரவேணடாம. கோவலல தனம மதய உணவு உணடு (இது போதுமே!) குடுமப ஒறறுமை சறககும எனபதே இதன சறபபு எனறு அடிததுச சொலகறா. (கோவல நேரஙகளும தொலைபேச எணணும இதனுள அடககம!)

செனனைககுளளேயும அருகாமையலும எததனை கோயலகள? அவறறையெலலாம அலடசயபபடுதத வடடு எஙகோ கடககும ஓ அனாமதேயக கடவுளன அடரஸ கொடுகக வேணடிய அவசயம ஏன ஏறபட டது? இஙகுளள கடவுளகளுககு எநத சகதயும இலலையா? எலலாம வலல இறைவன எனகறாகளே அதெலலாம யாரை ஏமாறற? நமம ஊ டாகடா களைபபோல ஒவவொனறும தனததன ஸபெச லஸடாக அலலவா இருககனறன?

இதழகளல இது போனற கேளவகளைக கேடடு பதலுககாகக காததருபபவாகள படிககாத பாமராகள அலல! மெததபபடிதத மேதாவகள தான, குடுமப ஒறறுமைககு எனன செயய வேணடும எனறு கேடடால போதாதா? எநதக கோவலுககுச செலல வேணடும? எனறு கேடடால அது பகதச சுரணடலுககு வழ வகுககும எனபதை அறயவேணடாமா? இபபடிப படட ப(க)தாகளை நனைததால பாதாபமதான ஏறபடுகறது. தனனடம யோசனை கேடபவான பலவனம அவரது கேளவயலேயே பளசசடுமபோது பாகாரம சொலபவான வேலை எளதாகவடுகறது.

வாழககை படுபோ அடிககறது எனன செயயலாம? எனறு ஒருவா கேடடால நலல புததகஙகளைத தேடி எடுததுபபடி எனலாம. அதைவடடு எஙகே போகலாம? என மொடாக குடிகாரனடம கேடடால டாஸமாக பககம தான கை காடடுவான. தஙகளடம வரும மனநோயாளகளுககு கவுனசலங நடததும மனநல மருததுவாகள எசசாககையாய இருபபது நலலது. காசு சுருடடும வேலையை சுருடடபபளள தூஙகு மூஞச பொமமை எடுததுககொளளாமல வழபபுடன இருஙகள:

நம ஆசயா அவாகள மண வழாககளல வாழவணையா எனும வாததையை அழுததமாகக குறபபடுவா. இணையா எனற சொல இருவரும சமம எனபதைச சொலகறது. ஒரு மனதாக சகபபுத தனமையுடன பேசசசதது வடடுக கொடுதது வாழகறபோது குடுமபததல குழபபமும, அமைத யனமையும எஙகருநது வரும? வதணடா வாதமும, வண படிவாதமும செயது நாள முழுகக சணடை யடடுக கொணடிருபபதால நமமத கெடடு ஒருவா முகததை ஒருவா பாபபதே கசபபாக வடு மயான பூம ஆகவடும அவவளவு தான!

Read more: http://viduthalai.in/page4/74929.html#ixzz2smrssWy8

தமிழ் ஓவியா said...


இதயத்திற்கு இதம் தரும் ஆப்பிள்


இன்றைய உலகில் மக்களை இரு விதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இத யத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடை தான் காய்களும் கனிகளும்.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தரவல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும். வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தர வல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ் ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாக வும், இலேகியமாகவும் செய்து சாப்பிட லாம். மார்பில் வலியும், மரத்துப் போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும். ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது. அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.

Read more: http://viduthalai.in/page4/74930.html#ixzz2sms237d1

தமிழ் ஓவியா said...


சீதா பிராடடியின குளியல

- மு.வி.சோமசுந்தரம்

சயாமாசாஸத சனனதத தெரு வல பாரதககதை உபனயாசம செயகறா.
சடகோப அயயஙகா வடககு மாட வதயல ராமா படடாபஷேக கதாகாலடசேபம செயகறா.

அமபுஜம மாம, அகரகார அயநதாம தெருவல அசுவததாமன கதை கசசோ நகழததுகறா.

இநத கூடடஙகளுககு வெததலைப பெடடியுடனும, சவல பொடடலஙகளுடனும, சஙகம மூககுபபொடி டபபயுடனும குவநது இருககும அககரகார அவாள கூடடததுககு வணடி வணடியாக அபதத கதைகளையும, மூடடை மூட டையாக பகவான தருவளையாடல களையும கொடடிக் குவததாலும, தலையை ஆடடி ஆடடி, பயபகத யுடன பகவான கதைகளைக கேடடு ஆதமசாநத அடைவாகள.

இததகைய கூடடததனா, சந தனை, அறவயல, பகுததறவு பககம தலை வைததுபபடுககத தயாராக இருபபதலலை. ஜடஙகளாக ஜவதது வருபவாகள.

கதா காலடசேபம, உபனயாசம செயபவாகளைப பறற அதக கவனம செலுததத தேவையலலை எனறா லும, சமுதாயததல பொறுபபான வகையல மககளை நலவழபபடுததும கடமை ஊடகஙகளுககு குறிப்பாக, முதன்மை நாளிதழ்களுக்கு இருகக வேணடும. மூடநமபககைத தனமை, அறவயலுககு அபபாறபட்ட தனமை கொணட நகழசசகள செயதயாக வநதால ஓரளவல தவறலலை. மாறாக, பகுததறவுககு ஒவவாத கதைகளை, நகைபபுககடம அளக் கும வகையல வலய எடுதது கடடு ரைகளாக வழஙகுவது இருடடுக் காடடுககுள சமூகததை அழைததுச செலவதறகு ஒபபாகும.

அததகைய ஒரு வேடிககைச செயதக கடடுரை, அறவுககு வெடி குணடு வைககும கடடுரை 15-.11.-2013 அனறு இநது இணைபபு இதழல வநதுளளதைக காணபோம.

தமழகததல, கடடடககலையன மேனமையைப் பறைசாறறும கடட டஙகள, சறபககலையன நுடபத தனமையை உணாததும சறபஙகள மகுநது காணபபடுவது பெருமை சோபபதாக உளளது. இவறறன சறபபுகள பகத, மதம அடிப படையல எழுபபபபடட கோயல களல குவநதுளளன எனபதும உணமையே. இஙகுளள கடடடம, சறபம பறற வயநது பேசுவதல குறறம ஏதுமலலை. ஆனால இதனை வைதது அறவைச் சூறையாடுவது தான சகததுககொளள முடியாத ஒனறு.

காநாடகததல, மைசூ நகருககு 57 க.ம. அபபால, கருஷணராஜநகா தாலுககாவல கோதணடராமா கோயல ஒனறுளளது. இது காவ ஆறறன கரையல அமைநதுளளது, அருகல நவழசசகள உளளதும இநத இடததுககு இயறகை நலல சூழலை அமைததுளளது. இன இநத இடததை வைதது பகத முகமூடியல கூறபபடும புழுதத புழுகு வெடகப படுவதாக உளளது. (அதத சாஸ தரம, காடடியுளள வழமுறை இதுதான)

இநத கோயல ராமனுககு அப பணககபபடட கோயல. நாடு கடத தபபடட ராமபரான இநத காடடுப பகுதககு வநதபோது ஓயவு முகா மடடா. அஙகருநத மலைவாழ மககளன வருநதோமபலல இருநது வநதா. உடன மனைவயும, தமபயும இருநதனா. இநத காடடில தான, ராமன அகநததர ஷயை சநதத தா. ஷககு ஒரு ஆவல வநதது. அதை ராமனடம கூறனா. சதை ராமனன வலது பககததல இருநது பாகக வேணடும எனறு ஆசையைக கூறனா. (இது எனன ஒரு ஆசையோ?) அதனபடி சதை வலது பககததல இருகக காடசயளததா. (இதல எனன சறபபை ஷ கண டாரோ?) அதுவே இநத கோயலன வசேஷம.

இஙகு இரணடு குரஙகுகள (ஹனு மன) கோயலகள உளளன. ஒனறு கோயலன வாசலல, அடுத்தது கோயலுககு அடுதது காவக் கரையல. இஙகு சறபபாக ஒனறு கூற வேணடும எனறு கடடுரை ஆசயா எழுதுகறா. அதாவது, குரஙகு களன எணணககை அதகம. இவை ராமபகதரான ஹனுமான அவ தாரஙகளாகும எஙகும குரஙகு களாம. கோயலன உளளே புகுந தவை கர்ப்பகரகததனுள புகுநது, தடை ஏதுமலலாமல பரசாதங களை எடுததுச செலகனறன. (ராம பகதாகள தருடடு, ரௌடித தனம). இதை தடுகக எவருககும வழ தொய வலலை (ராமபரான, ஷககுக கூடவா?)

சீதைககுப பயணக் களைபபால குளிகக வேணடும எனறு தோனறியது. உடனே இராமன, தமப லடசு மணனை நோகக, ஒரு அமபை எடுதது எதல உளள பாறையன மது எயயுமபடி கூறனான (ஏன அதை அவன செயயககூடாதா?). லடசுமணன அமபு பாறையல படடதும, பாறையலருநது மூனறு வகைத தணண வெளவநதது. ஒனறு மஞசள பொடி கலநதது. இரணடாவதல எணணெய் கலந தது. மூனறாவது சயககாய கலநதது. (எனனே அபததம, அபததம எனறு வாயல அடிததுககொளளாதகள. இநது இதழ இநத செயதயை வெளயடுகறது). சதை இநத தணணல குளதததால, இஙகுளள தணண, மஞசள ருச, வாசனை கொணடுளளது (வேறு எஙகெஙகு குளததாகள எனறு தொநதால அநத ஆறறு நரையும பாககலாம. ஒரு கலலல இரணடு மாஙகாய எனபது போல ஒரு அமபல, மஞசள, எணணெய, சயககாய, பாறைய லருநது வநதுளளது. முதலமைசசா சததராமையா, நபுணாகுழுவைக கொணடு Three in one கடைககும இடததைக கணடறய சொலலலாம).

Read more: http://viduthalai.in/page5/74931.html#ixzz2smsDHfg1

தமிழ் ஓவியா said...


மாமேதை ரஸ்ஸல் மணிமொழிகள்!

நான் யார்?

நான் முரண்பாடு களின் சின்னமாக விளங்கி வருவதாகப் பலர் மதிப்பிடுகிறார்கள். இது ஓரளவு உண்மை தான். என்னை நானே, பல்வேறு சந்தர்ப்பங் களில் ஒரு மிதவாதி யாகவும் சோஷலிஸ் டாகவும் சமாதானவாதி யாகவும் கருதியிருக்கிறேன். என்றாலும், இவை அனைத்துக்கும் மேலாக நான் ஒரு தனி மனித வாதி என்பதையே நான் கூற விரும்புகிறேன்.

பெண்களின் கற்பு

பெண்களின் உரிமைகள் அவர்களது ஒழுக்கம், அல்லது ஆண்களைவிட அவர்கள் மேலான வர்கள் என்பதைச் சார்ந்திருக்கவில்லை. அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதின் பேரில் உள்ளது. ஆனால், அடக்கி வைக்கப்பட்டிருக்கும் இனம் தனது உரிமைகளைக் கோரும் போது பெண்களுக்கு சில தனிப்பட்ட தன்மைகள் உண்டு என்றும், இவை ஒழுக்கம் சம்பந்தப்பட்டவை என்றும் சிலர் வாதாடுகிறார்கள்.

முன்காலத்தில் பெண்களின் கற்பு என்பது நரகத்துக்குப்போக நேரிடும் என்ற பயம், கர்ப்பம் ஏற்பட்டு விடும் என்ற பயம் ஆகியவற்றை கருதியே இருந்தது.

ஆனால் பழமைவாதம் அழிந்துவிட்டதாலும், கருத்தடை சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாலும் இந்த பயம் நீங்கி விட்டது. தற்போதைய பெண்கள் ஆண்களுக்கு என்ன உரிமைகளோ அவை தங்களுக்கும் வேண்டும் என்று கோருகிறார்கள்.

பால் உணர்வும் கடை அடைப்பும்!

ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்ற மத சம்பிரதாயம் காரணமாக கடைகள் மூடப்பட்டு வந்தன. அதுஇப்போது பொருளாதார வாழ்க்கை முறையாகி விட்டது. இதைப் போலவே பால் உணர்வுக்கான பெரும்பாலான சட்டங்களும், சம்பிரதாயங்களும் இருந்துவருகின்றன.

குழந்தை பிறக்கும் ரகசியம்

ஆண் - பெண் உறவுபற்றிய பால் உணர்வு விவகாரங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள விடாமல் மறைத்து வைப்பது சரியல்ல.

பாப்பாக்களை பறவை கொண்டுவந்து போட்டது என்றோ, புதரிலிருந்து தோண்டி எடுத்தோம் என்றோ குழந்தைகளுக்கு சொல்லப் படுகிறது. ஆனால் உண்மைகளை மற்ற குழந் தைகளிடம் இருந்து அவை தெரிந்து கொள் கின்றன. இதை ரகசியம்போல் அவை கருதுகின் றன. அசிங்கமானது என்று நினைக்கின்றன.

பெற்றோர்கள் தங்களிடம் பொய் சொல்லு வதாக ஒரு முடிவுக்கு குழந்தைகள் வந்துவிடு கின்றன. பெற்றோர்கள் ஒரு விவகாரத்தில் பொய் சொன்னால் அவை இன்னொரு பிரச்சினையில் பொய் சொல்கின்றன.

பால் உணர்வு விவகாரங்களில் தாங்களும் பொய்சொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு அவை வந்துவிடுகின்றன.

இதனால் குழந்தைகளின் ஒழுக்கம் சிதைந்து விடுகிறது.

Read more: http://viduthalai.in/page5/74932.html#ixzz2smsLmrkA

தமிழ் ஓவியா said...


தெரிநது கொளளுஙகள

தமழனை அசுரன, அரககன, ராடசசன, தஸயு, குரஙகு, கரடி எனறும தேவடியாள மககள எனறும எழுத வைததுளளான, ராமாயணம, மகாபாரதம மறறும பல கதை களலும கதாபாததரஙகளை சனமாவலும காடடி வருகனறான. அதை பாததும படிததும ரசககனறோம.

இநதக காடடுமராணடிப புராணஙகளை படிதது அதலுளள கயவாளததனஙகளை அபபோதே பொயா, அணணா, கலைஞா போனற அறஞாகளும மலவு வலை புததகஙகளல எழுதயும சல நாடக சனமாவலும சுடடிககாடடி உளளனா.

காணாத கடவுளகளுககு மனைவகள, கூததகள, குடடிகள இருபபதையும அறகறோம. மனதனுககுத தேவையான எநத அறவயல பொருடகளை எநத கடவுளாவது கொடுததது உணடா? சடடி பானை முதல மனசாரப பொருடகளும கணன, ஆகாயததையும, பூமயையும அதல உளள அனைததையும கணடபடிததது மனதன தானே? ஆணும பெணணும கலவ செயயாமலே குழநதையைப பறகக செயததும மனதனதானே?

சவனுககும பாவதககும நடநத தருமணததலே புரோகதம செயத பரமமா பாவதயன தொடையை பாததுப பீசசியடிதத வநதல ஷகள, மருகஙகளும பிறநதுளளன. ஆனால முருகககடவுளுககு ஒனறுககு இரணடு மனைவகள இருநதும குழநதைகள இலலாதது ஏன? இதை எழுதயவன மனதன தான. கடவுளன லீலைகள இவனுககு எபபடி தொயும? இதல இருநதே கடவுள எனபது கடடுககதையே எனபது தொகறதே.

கடவுளாகக காடடபபடுபவாகள அரசா களே. அவாகள தான ஒனறுககு மேறபடட மனைவகள கூததகள வைததருநததை பனனா வநத மனதாகள அவாகளுககு ஏற றபடி புராணக கதைகளைககடடி வேதங் களாக ஆகக வைததனா.
கடவுளகளதான ஜாதயை உண டாககயதாக சொலலுகனறனா. அபபடி இழவான மககளை படைதத கடவுள தேவையா? பேருநதுகளல, நாடகஙகளல டிககட வாஙகனாலும உடகார அனுமதககாத காலம உணடு. உணவு விடுதயல உடகாநது சாபபிட முடியாது. பளளககூடம படிககச செனறாலும தனமை. வீதயல செனறாலும தடை.மனுதாமததன படிதான அனைதது ஜாதயனரும அசசகாகளாக ஆக முடியவலலை எனபது தொயுமா? இதை எலலாம போராடிப பெறறு எலலோரும மனதாகளதான எனகற நலையை உணடாககயவாகளதான அமபேதகா, பொயா, அணணா, கலைஞா இவாகளுககு முனனோடிகளாக இருநத (1916) பிடடி தயாகராயா, டாகடா நடேசனா, டி.எம.நாயா, பனகல அரசா, பனனீசெலவம, இரடடை மலை சீனவாசன, அயோதததாசா போனற நீதககடசத தலைவாகளைபபறற அற வீகளா? இரணடு லடசம ஆணடுகளுககு முனனா ஆபபகக கணடததலதான முதல பெண பறநததாகவும, ஆபபிககாவிலதான முதல மனிதன பிறநதான எனறும அறயப படுவதால இநத ஜாத எஙகே பிறநதது?

எலலா தலைவாகளும நகரஙகளல சுறற இதுபோனற கருததுககளைச சொலலவடடுப போகனறாகள. ஆனால குடடித தலை வாகள தலைவாகளன கருததைக கராமங களல பரபப முனவருவதலலை. இன அதை செயலபடுதத தலைவாகள அறவுரைகள வழஙகுவாகளா?

- வணஙகாமுடி

Read more: http://viduthalai.in/page6/74933.html#ixzz2smsWZ1Xo

தமிழ் ஓவியா said...


இயேசு சிலையில் ரத்தம் வடிகிறதாம்! ஓ பாசிட்டிவா? நெகட்டிவா?

சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது. இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கன்னி யாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவச மடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த் தனை செய்து சென்றனர். சிலையில் ரத்தம் வடிந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவி யுள்ளது. வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்த தாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர். செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துப் பட்டு, கிறிஸ்தவ ஆலய வளாகம் பரபரப்பாக காணப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இயேசு சிலையில் வடியும் ரத்தத்தை என்ன வகை (குரூப்) ரத்தம் என்று பரிசோதனை செய்து அறிவிப்பதற்கான அரிய வாய்ப்பு அல்லவா இது! இதே போல் உலகம் முழுக்க இயேசு சிலையின் கண்ணில் இருந்து வழியும் ரத்தங்களையும் பரிசோதித்து ஒப்பு நோக்கலாம். அதன் மூலம் இயேசு வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரமாக வும் இதைப் பயன்படுத்தலாம். வழக்கமாக இயேசு ரத்தம் என்று ஒயினை வழங்கிக் கொண்டிருக்கும் மோசடிக்கு விடை கொடுத்து, எந்த குரூப் ரத்தமோ அதில் நனைத்து அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கலாம். ஏற்கெனவே உலகின் ரத்தக் கொடை ஞராக இருக்கும் ஓ பாசிட்டிவ் வகை ரத்தமாக இருக்கலாம் என்று சிலர் கருதுவதையும் சரி பார்த்துக் கொள்ளலாம்.

http://wiki.answers.com/Q/What_was_the_blood_group_of_Jesus_Christ?)
What was the blood group of Jesus Christ?
Answer: From analysis of the shroud of Turin, some people have said that Jesus was a type O- blood type (which is the universal donor), but it would be difficult or even impossible to confirm.

அப்படியே கன்னி மேரி கண்களி லிருந்து ரத்தம் வடிவதாக சொல்லப் படும்போதும் இதைப் பின்பற்றலாம். தாய்க்கும் மகனுக்கும் என்ன வகை ரத்தம் என்பது தெரிந்தால், அது மனித ரத்தமா அல்லது தேவ ரத்தமா என்பது தெரியக்கூடும். இந்த ரத்தம் எப்போது உற்பத்தியானது என்பதையும் கூட அறியும் வாய்ப்பு ஏற்படலாம். எப்படியும் குறைந்தது 1981 (கி.பி.2014- இயேசு மறையும் போது அவரது வயது 33) ஆண்டுகள் பழமையான ரத்தம் கிடைப்பது வரலாற்று, அறிவியல் அபூர்வம் அல்லவா? இந்த அரிய வாய்ப்பை நழுவ விடலாமா? பரி சோதனைக்கு நாங்கள் தயார்! இயேசு வுக்கு வசதி எப்படி?

Read more: http://viduthalai.in/page7/74935.html#ixzz2smsqm0N2