Search This Blog

27.2.14

வைகுண்ட ஏகாதசிக்கு போட்டி மகாசிவராத்திரி?


இந்து மதக் கடவுள் களுக்குள் போட்டிகள் உண்டு. யார் பெரியவர் என்ற மோதல்கள் எல் லாம் உண்டு. விஷ்ணுவைக் கும்பிடும் வைணவர்கள் சிவனை ஏற்க மாட்டார்கள். சிவனைக் கும்பிடும் ஸ்மார்த்தர்கள் வைணவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

வைணவர்கள் தங்கள் கடவுளைத் தூக்கிப் பிடிக்க வைகுண்ட ஏகாதசி என்பார்கள்; விரதம் இருப்பார்கள். விடியற்காலை ரெங்கநாதர் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.

அதற்குப் போட்டிக் கடை சிவ பக்தர்கள் வைக்கவேண்டாமா? அதுதான் சிவராத்திரி அன்று விரதம் இருப்பார்கள். சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்து வார்கள். அன்று சுடுகாடு சென்று மயானக் கொள்ளை என்ற பெயரால் அங்குச் சிதறிக் கிடக்கும் எலும்பு களை எடுத்துக் கடிப்பார்கள் 

(கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் ஏன் கூறினார் என்பதற் கான அடையாளம் இது).

சிவனைப்பற்றி தந்தை பெரியார் பின்வருமாறு கணிக்கிறார்:

புலித்தோல் அரைக்கு இசைத்து வெள்ளெருக்கம்பூ சடைக்கு முடிந்து சுடலைப் பொடிப்பூசி
கொன்றைப் பூச்சூடி
தும்பை மாலை அணிந்து
மண்டை ஓடு கையேந்தி
எலும்பு வடம் தாங்கி
மான், மழு, ஈட்டி, சூலம் கைபிடித்து
கோவண ஆண்டியாய் விடை (மாடு) ஏறி
ஒரு காலைத் தூக்கிக்கொண்டு
பேயோடு ஆடுகிறவன்
காட்டுமிராண்டியாய் இல்லாமல்
நகரவாசி, நாகரிகக்காரனாக இருக்க முடியுமா?
லம்பாடி நரிக் குறவனுக்கும், இந்தச் சிவனுக்கும் என்ன மாற்றம்?
சைவர்களே!
சைவப் புலவர்களே!
அருள்கூர்ந்து கூறுங்கள்.
- ஈ.வ.ரா.

                 ------------------(விடுதலை, 18.7.1956)

இந்தக் காட்டுமிராண்டிக்கால சிவனுக்குத்தான் இன்று மகா சிவராத்திரியாம்.

இவன் யோக்கியதை என்ன தெரியுமா? தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறை யாடியதால், ரிஷிகள் கொடுத்த சாபத்தினால் அவன் சிசுனம் (ஆண் குறி) அறுந்து வீழ, அதனைப் பார்வதி தாங்கிக் கொண்டாளாம் - அது தான் சிவலிங்க உருவம் என்பது!

--------------------- மயிலாடன்  அவர்கள் 27-02-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

34 comments:

தமிழ் ஓவியா said...


அரசியல் என்றால்..


அரசியல் என்பதே சமுதாயக் கோளாறுகளைஒழிப்பதற்காக ஏற்பட்டுள்ள ஒரு சாதனம் என்பதுதான்நம்கொள்கை.சமுதாய வேலையைக் கலக்காதஓர்அரசியல் மனிதசமுதாயத்திற்குஎதற்காக வேண்டும்?
_ (குடிஅரசு, 29.6.1946)

Read more: http://viduthalai.in/page-2/76043.html#ixzz2uZbOdDNx

தமிழ் ஓவியா said...


தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் ஆர்ப்பாட்டம்

சோதிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள மூடத்தனங் களும், ஆபாசங்களும் கொஞ்சநஞ்சமல்ல. கிருத்திகை இராசியில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் ஏழு முனிவர் களின் மனைவிகளாம். அம்பா, துலா, நிதத்நி, அய்யந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி, சுபினிகா என்ற அந்த மனைவி மார்களின் பெயர்களாம்.

இந்தப் பெயர்களைப் பார்த்தாலே தமிழுக்கும், இவற் றிற்கும் எவ்வித உறவும் இல்லை. இவற்றின் வேர் என்பது ஆரியம் என்பது சொல்லாமலே விளங்கும்.

இன்னும் சில அபத்தங்கள் உண்டு. சூரியனுக்குப் பகை சனிக்கிரகம், சந்திரனுக்குப் பகை ராகு, கேது (இவை இரண்டும் பாம்புகளாம்; சந்திரனை விழுங்குகின்றனவாம் - அதுதான் சந்திர கிரகணமாம்!).

குருவுக்குப் பகை புதன் கிரகமாம்; புதனுக்குக் குரு கிரகம் பகையாம்! இவை மட்டுமா?
கிரகங்களிலும் ஆண், பெண் வேறுபாடாம். சூரியன், செவ்வாய், குரு ஆண் கிரகங்களாம். சந்திரன், சுக்கிரன், ராகு பெண் கிரகங்களாம். அதோடு விட்டார்களா? அலி கிரகங்களும் உண்டாம்.

அவை - புதன், சனி, கேது ஆகிய மூன்றுமாம்!

கிரகங்களோடு இந்தக் கட்டுக்கதைகளை முடித்தார் களா? அதுதான் இல்லை; நட்சத்திரங்களிலும் பால் இன வேறுபாடாம்.

ஆண் நட்சத்திரங்கள் 8; பெண் நட்சத்திரங்கள் 16; அலி நட்சத்திரங்கள் 3.

வானியல் ஆய்வுப்படி 25 ஆயிரம் கோடி நட்சத் திரங்கள் இருக்கும்பொழுது, வெறும் 27 நட்சத்திரங்களை மட்டும் கணக்கில் கொண்டு கதையளக்கும் அறியா மையை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் விலாநோகச் சிரிப்புதான் வெடிக்கும்.

சோதிடத்தில் பெண் அடிமைத்தனம் என்பது ஆணி அடித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாதாம்; ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் மாமியார் மண்டையைப் போட்டு விடுவாராம். கேட்டையில் பிறந்தால் கணவனின் மூத்த சகோதரன் மூச்சை விட்டு விடுவார்... விசாக நட்சத்திரத்தில் பிறந்தால் கணவனின் இளைய சகோதரனுக்கு ஆபத்தாம்.

இதில் என்ன கொடுமை என்றால், இந்த நட்சத்திரங் களில் பெண் பிறந்தால்தான் இந்தத் தீய விளைவுகளாம்! ஆண்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் அதனால் பாதிப்புக் கிடையாதாம். ஆரியக் கலாச்சாரம் என்கிறபோது அங்கு பெண் அடிமை என்பதுதானே அடிப்படை!

1955 ஆம் ஆண்டில் பிரதமர் நேரு அவர்கள் மத்திய அரசு சார்பில் மேனக்ஷா என்ற விஞ்ஞானியின் தலைமை யில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பஞ்சாங்கம், சோதிடம் பற்றி ஆய்வு செய்வது அக்குழுவின் நோக்கமாகும்.

இந்து காலண்டர் பஞ்சாங்கம் என்பது மனிதர் கள் தங்கள் சிந்தனையில் கற்பனையில் உருவாக்கப் பட்டதால், அதில் ஏராளமான மூட நம்பிக்கைகளை யும், அரைகுறையான உண்மைகளையும், இடைக் காலத்தில் இணைத்து விட்டார்கள் - அதில் பல குளறு படிகளும், குழப்பங்களும் உள்ளன. 23 நாள்கள் இடைவெளி வித்தியாசத்தில் இந்துப் பஞ்சாங்கம் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 1400 ஆண்டு களாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட கால இடைவெளி நீண்டு 23 வித்தியாசத்தில் நிற்கிறது என்று அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளதே!

இந்த விவரங்கள் எல்லாம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள கற்றறிந்த மக்களுக்குத் தெரியாதா? அவர்கள் என்ன கற்காலத்திலா வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்?

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த விஞ் ஞானி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளாரே!

சூரியக் குடும்பத்தில் வெகுதொலைவிலுள்ள கிரகங் கள்மீது மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது. அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்துகொள்ள முடியவில்லை.

அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு, சோதிடத்தை ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கிரகங்களின் இயக்கங்கள்பற்றிய சிக்கலான கணிப்பு களைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து தங்கள் வாழ்க் கையை கிரகங்கள் ஆட்டிப்படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள்? என்கிறார் அப்துல்கலாம்.

சோதிடத்தின் பித்தலாட்டத்தைத் தனது வாழ்க்கை யிலிருந்தே எடுத்துக்காட்டினார் தந்தை பெரியார்.

என் சோதிடத்தில் எனக்கு 67 வயது என்று குறித்து என் பெற்றோர்கள் அச்சுப் போட்டிருக்கிறார்கள். ஆனால், நான் இன்று 94 வயதில் சவுக்கியமாக இருக்கிறேன். என் ஜோதிடம் இன்னமும் இருக்கிறது - ஆனால், பொய்யாகி விட்டது - அந்தக் காலத்தில் 100 வயது இருப்பது என்பது அதிகம் என்று கருதி எனக்கு 67 வயது என்று ஜோதிடன் கணித்தான். இப்போது சராசரி வயது 52. இப்போது அப்படி எழுதமாட்டான் (பெரம்பலூரில் பெரியார் பேச்சு, 13.7.1973).

உண்மைகள் இவ்வாறு இருக்க, அறிவியலுக்கு விரோதமான சோதிடத்தை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் சேர்த்திருப்பதை கைவிட வேண்டும் :என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் 3.3.2014 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் கழகம், மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திரளுங்கள் தோழர்களே!


தமிழ் ஓவியா said...

காசு கொடுத்தால் சாதகமான கருத்துக் கணிப்புகள் மோசடி நிறுவனங்களை அம்பலப்படுத்திய நியூஸ் எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சி நிறுவனம்


புதுடில்லி, பிப்.27- காசு கொடுத்தால் போதும், உங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக கருத்துக் கணிப்புகளை விலை கொடுத்து வாங்க முடியும் என்று ஒரு தொலைக்காட்சி நிறு வனம் 11 கருத்துத் திணிப்பு நிறுவனங் களின் முகமூடியை கிழித்துள்ளது தனது ஸ்டிங் ஆபரேஷன் மூலம். அது ஒரு இந்தி செய்தி தொலைக் காட்சி நிறுவனமாகும். நாட்டில் உள்ள 11 முக்கியமான கருத்துக் கணிப்புகளை நடத்தும் நிறுவனங்கள் எப்படியெல் லாம் மோசடியாக செயல்படுகின்றன என்பதை இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தனது ஸ்டிங் நடவடிக்கை மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. இத னால் இதுவரை வந்த அத்தனைக் கருத் துக் கணிப்பு முடிவுகள்மீதும் சந்தேகம் வந்துள்ளது மக்களுக்கு. நியூஸ் எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சி நிறுவனம்தான் இந்த அதிரடி நடவடிக் கையை எடுத்து நாட்டையே உலுக்கி யுள்ளது. ஆபரேஷன் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் இந்த ஸ்டிங்கை நடத்தி யுள்ளது நியூஸ் எக்ஸ்பிரஸ். இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி யில், கருத்துக் கணிப்புகள் உண்மையான மக்கள் மன நிலையைப் பிரதிபலிப்பதாக இல்லை. அனைத்துமே கருத்துத் திணிப் புகளாக உள்ளன, திரித்துக் கூறப்படும் தகவல்களையே கொண்டுள்ளன. மேலும் ஒரு விலை கொடுத்தால் குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக உயர்த்திக் காட்டி கருத்துக் கணிப்புகளை இந்த நிறுவனங்கள் கொடுக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

11 கருத்துக் கணிப்பு நிறுவனங்களை...

மொத்தம் 11 கருத்துக் கணிப்புகளை நடத்தும் நிறுவனங்களை இந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள் ளது. அதில் பல முன்னணி நிறுவனங்கள் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இவர்களின் கருத்துக் கணிப்புகளைத்தான் பல முக்கிய செய்தி நிறுவனங்கள், ஊட கங்கள், தொலைக்காட்சி தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து வருகின்றன. இதன் காரணமாக இது வரை நாம் பார்த்து வந்த, படித்து வந்த, கேட்டு வந்த அத்தனை கருத்துக் கணிப்பு களுமே சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. அதிலும் ஒரு முக்கியமான, பெரிய கருத்துக் கணிப்பு நிறுவனம்தான் மிகப் பெரிய அளவில் மோசடி செய்கிறதாம். இந்த நிறுவனத்தின் கருத்துக் கணிப்புகள் பல முன்னணி ஊடகங்களில் வெளியாகி யுள்ளன. இந்த நிறுவனம், தனக்கு கூடுதலாக பணம் கொடுத்தால், மார்ஜின் ஆப் எர்ரரை, வழக்கமான 3 சதவீதம் என்பதிலிருந்து 5 சதவீதமாக உயர்த்த முன்வருமாம்.

இப்படி எர்ரர் மார்ஜினை உயர்த்து வதால் ஒட்டுமொத்த முடிவும் தாறு மாறாக மாறிப் போய்விடும். அதாவது உண்மையான கருத்து அதில் இருக்காது. மாறாக நாம் விருப்பப்படும் கட்சிக்கு சாதகமாக முடிவுகளைத் திருப்ப முடியும். இதுகுறித்து அந்த கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் பிசினஸ் டெவலப்மென்ட் மேலாளர், ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய வரிடம் கூறுகையில், முடிவுகளைத் திரித்துக் கூற தனித் தனியாக ரேட் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த மார்ஜின் ஆப் எர்ரர் மாற்றம். அதனால் நமக்குச் சாதகமானவர்களுக்கு ஆதரவாக முடிவை மாற்றிக் கூற முடியும் என்று கூறியுள்ளார். இந்த மேலாளர் ஒரு பெண் அதிகாரி ஆவார். நியூஸ் எக்ஸ்பிரஸ் சானலின் எடிட் டர் வினோத் கப்ரி இந்த ஸ்டிங் குறித்துக் கூறுகையில், கருத்துக் கணிப்புகள் குறித்த உங்களது கருத்துக்களைக் கூறுங்கள் என்று கடந்த ஆண்டு கட்சிகளிடம் கேட் டிருந்தது தேர்தல் ஆணையம். இதுதான் எங்களை இப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபட ஊக்குவித்தது. பல கருத்துக் கணிப்புகளில் முடிவு கள் திரித்துக் கூறப்படுவதாகத் தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்திருந்தது. இது வாக்காளர்களின் மனதைப் பாதிக் கும் செயலாக அமையும் என்றும் அது கவலை தெரிவித்திருந்தது. இதுதான் எங் களைத் தூண்டி இதில் ஈடுபட வைத்தது. மோசடி...

எங்களது ஸ்டிங் நடவடிக்கையில் நாங்கள் தெரிந்து கொண்டது, ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் இந்த கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் மோசடி செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள் என் பதுதான். 11 நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் திரித்துக் கூறப்படுபவையே. ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனம், சாத கமான கட்சி அல்லது வேட்பாளருக்கு சாதகமாக நடக்க,தேவையில்லாத, பாதக மான தகவல்களையே நீக்க முன்வந்தது. ஒரு நிறுவன மூத்த அதிகாரி கூறுகை யில், பிராந்தியக் கட்சி ஒன்றுக்கு அவர்கள் ரூ. 4 கோடிக்கு கருத்துக் கணிப்பு நடத்திக் கொடுத்தனராம். அப்போது வெள்ளை யாக ரூ.12 லட்சம் மட்டுமே வாங்கி யுள்ளனர். மற்றவற்றை கருப்புப் பண மாகவே வாங்கியுள்ளனராம். மேலும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை நாட்டின் பிரபலமான சானல்களில் வெளி வரச் செய்வதாகவும் அந்த நிறுவனம் உறுதியளிக்கிறது. அதேபோல உ.பியைச் சேர்ந்த ஒரு முக்கியமான கட்சிக்கு சாதகமாக மிகப் பெரிய வேலையில் ஒரு நிறுவனம் ஈடுபட்டதாம். அதாவது அந்தக் கட்சியின் முக்கியமான தலைவரின் மச்சான் இந்த நிறுவனத்தை அணுகி தங்களுக்கு சட்ட சபைத் தேர்தலில் 200 சீட் கிடைக்கும் என்று கூறுமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் அக்கட்சிக்கு 80 சீட்டுக்கு மேல் கிடைக்காது என்று தெளிவாகத் தெரிந்தும் கூட துணிந்து பச்சைப் பொய் சொன்ன தாம் அந்த நிறுவனம். எலலாம் காசு வாங்கிக் கொண்டுதானாம்.

ஆபரேஷனுக்காக அணுகப்பட்ட நிறுவனங்களில் சில - சி வோட்டர், கியூ ஆர்எஸ், இப்சாஸ் இந்தியா, எம்எம்ஆர், டிஆர்ஸ். மக்களை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள்... பாருங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/76046.html#ixzz2uZbtsJBD

தமிழ் ஓவியா said...


சமூகநீதிக்குச் சவக்குழி!

- குடந்தை கருணா

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தற் போது உள்ள இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, பொருளா தார அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானத்திற்கும் குறைவாக உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின ருக்கு மட்டும், இட ஒதுக்கீடு வழங்கிட பாஜக ஆட்சிக்கு வந்தால் உரிய சட்டம் கொண்டு வரும் என, பாஜக தாழ்த்தப் பட்டோர் அமைப்பின் தலைவர் சஞ்சய் பஸ்வான் கூறி உள்ளார். அது மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தில் கண வன், மனைவி இருவரும் இரண்டாம் நிலை பதவியில் இருந்தாலும், அல்லது கணவனோ அல்லது மனைவியோ, முதல் நிலை பதவியில் இருந்தாலும், அவர் களின் பிள்ளைகளுக்கு. இட ஒதுக்கீடு முறையில் அரசு பணிகள் கிடையாது என்றும் சட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறி உள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல; பாஜகவின் கருத்து என அழுத்தம் திருத்தமாக கூறி உள்ளார் சஞ்சய் பஸ்வான். 1990 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக் காடு இடஒதுக்கீடு வழங்கிடும் ஆணையை எதிர்த்து, அத்வானி ரத யாத்திரை நடத்தி, வட நாட்டில் கலவரம் உருவாகக் காரணமாக இருந்தது பாஜக. தற்போது, ஆட்சிக்கு வந்தால், தாழ்த் தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டிலும், பொருளாதார அடிப் படையை புகுத்திட திட்டமிட்டுள்ளனர்.

மோடி பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர்; அவர் பிரதமரானால், அம்மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும் என ஆர்.எஸ்.எஸ். உத்தரபிரதேசத்தில் மாநாடு நடத்திக் கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம், ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டு முறையை அரசியல் சட்டத்திற்கு மாறாக மாற்றிட முடிவு செய்துள்ளனர். இதுதான் பாஜக ஆர்.எஸ். எஸ்.-இன் இரட்டை வேடம். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் ராம் தாஸ் அதாவ்லே, உதித்ராஜ், ராம்விலாஸ் பஸ்வான் போன்றோர் இப்போது பாஜக அணியில் தங்களை இணைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்திற்கு எதி ரான நிலையை மேற்கொள்ளும் பாஜக வோடு கூட்டணி சேரும் கட்சி களுக்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக் கள் வரும் தேர்தலில் தக்க பாடம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், போராடி பெற்ற சமூகநீதி, சவக்குழிக்கு சென்றி டும், ஜாக்கிரதை!

Read more: http://viduthalai.in/page-2/76047.html#ixzz2uZc9zEWN

தமிழ் ஓவியா said...

அமைதி, வளம், வளர்ச்சி இதுதானா?

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழக ஆளுங் கட்சித் தலைவர், அம்மையார் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை அ.இ.அ.தி.மு.க. சார்பில் வெளியிட்டு உள்ளார். அமைதி, வளம், வளர்ச்சி இந்தியா மேன்மையுற செயல்திட்டம் என்று கூறியுள்ளது கவர்ச்சியான வாசகங்கள் தான்.

தமிழகத்தில் மதுரை உள்பட நெல்லை நகரங்களில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளது.

எனவே அமைதி - எங்கே?

வளம் - யாருக்கு?

கடன் தொல்லையால் மாண்ட விவசாயிகள், பயிர்கள் வாடியதால் மரித்த விவசாயிகள், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டினால் பலி! நாடு கண்ட வளம் இதுதானா?

வளம் கண்டவர்கள் யார்?

விழிகளில் குளம் கண்டவர்கள் எண்ணிக்கையில் குறைந்தால்தான் வளர்ச்சி! வளர்ச்சி எங்கே? கோடிகளில் செலவழிப்பேன் எனக்கூறும் வேட்பாளர்கள் வாழ்விலா?

வேடிக்கை விசித்திரம்

தென்மாவட்டங்களில் வாழும் மக்கள் அமைதியாக முன்னேற்றம் காண வழிசெய்யவே 2000 கோடி ரூபாய் செலவு சேதுசமுத்திரத்துக்கான நலத் திட்டத்தை வளமைக்கு வழிவகுக்கும் திட்டத்தை இராமர் பாலம் என்று கூறி கிடப்பில் போட நீதிமன்றம் மூலம் தடை செய்து, இலங்கைக்கு வருவாய்த் தேடி தருவது மூலம் கிடைத்தது அமைதியா?

வளமா? அதனால் ஏற்பட்ட வளம் யாருக்கு?

நாட்டு வளர்ச்சிக்கு இதுவா அடையாளம்? மதுரவாயல் திட்டம் உயர்நீதிமன்றத்தில் ரூ.1800 கோடி பெருவழிச் சாலைக்கு அடிக்கட்டுமான வசதியை தடுத்து உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வதுதான் வளர்ச்சியா?

தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்க மாட்டார்களா?

- போடி நாயக்கனூர் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் உரையின் ஒரு பகுதி (26.2.2014)

Read more: http://viduthalai.in/page-2/76055.html#ixzz2uZd3nuvH

தமிழ் ஓவியா said...

நாமம்! - கலைஞர் பதில்

தொகுதி நிர்ணய கமிஷன் சென்னை வருவது குறித்து தமிழக முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்களிடம் நிருபர்கள் சில கேள்விகளைக் எழுப்பினர். ஒரு நிருபர், வைஷ்ணவகோயில் உள்ள பகுதிகளாகப் பார்த்து தாழ்த்தப்பட்டோர் தொகுதி ஒதுக்கப்படுகிறதே என்று கேட்டார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு நாமம் போட்ட பகுதிகள் அவர்களுக்குத் தொகுதிகளாக இயற்கையாகவே அமைந்து விட்டது என்று பலத்த சிரிப்புக்கிடையே முதல்வர் பதில் அளித்தார். (18.11.1974)

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufWyHjzu

தமிழ் ஓவியா said...

மாயாஜாலங்கள் பற்றி
சங்கராச்சாரியார்!

கல்கத்தாவில் தங்கியிருந்த காஞ்சி சங்கராச் சாரியாரிடம் மந்திர மாயாஜாலங்கள் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஆச்சாரியார் அளித்த பதிலாவது:

மந்திரங்கள், மாயாஜாலங்கள் மதத் துறையை பிடித்த ஒரு சாபக்கேடு. ஆன்மீக உலகில் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும் தந்திரங்களும் சமயத்துறையின் அங்கங்களாகப் பாவிக்கப்படுவது பெருந் தவறு. இந்து மதம் வெறும் மாய வித்தைகளைக் கொண்டது அல்ல. (23.10.74 செய்தித்தாள்களில்)

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufX69hpZ

தமிழ் ஓவியா said...

இந்தியில் ஒரு சிறுகதை

சிறீராமச்சந்திரன் அயோத்தி நகருக்கு திரும்பி வந்த போது பொதுத்துறையிலும் தனியார் துறையிலும் சீரும் சிறப்பு மிக்க வரவேற்பு விழாக்கள் நடத்தப்பட்டன. உள்ளூர் பத்திரிகைகளும் வெளியூர் பத்திரிகைகளும் பல நாட்கள் இது பற்றி செய்திகளை வெளியிட்டன.

ஒரு நாள் சிறீராமன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அவரது தம்பி பரதன் மிகுந்த பரபரப்புடன் அவரை நோக்கி வந்து, மதிப்புக்குரிய அண்ணா; இன்றைய பத்திரிகை பார்த்தீர்களா? என்று வினவினான்.

ராமன், பார்க்கவில்லையே என்று பதிலளித்தார். பரதன் பல்வேறு பத்திரிகைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காகிதக்கட்டை காண்பித்து விட்டு சொன்னான்; நம் நாட்டைச் சேர்ந்த ஒரு சாதாரண பிரஜையான ரஜகன் என்ற சலவைத் தொழிலாளி தங்கள் அரசியல் வாழ்க்கையில் களங்கம் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறான்.

மதிப்புக்குரிய சீதை அண்ணிக்கு ராவணன் விருந்தளித் தாரல்லவா; இதை மய்யமாக வைத்து உங்கள் இருவர் மீதும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவன் பத்திரிகைகளில் அறிக்கை விடுத்துள்ளான் என்றதும், சிறீராமன் பத்திரிகைச் செய்திகளைப் படித்து பார்த்தார். அவர் முகத்தில் இருட்டு ஏறியது. பரதனைப் பார்த்து அவர் சொன்னார். தம்பீ, உனக்குத் தெரியுமல்லவா இது விஷமிகளின் கற்பனை என்று. பரதன் மிகப் பணிவுடன் பதில் அளித்தான்: மதிப்புக்குரிய அண்ணா, நான் தங்களது அந்தரங்கச் செயலாளனல்லவா! எனக்கு அனைத்தும் கட்டுக்கதைகள் என்பது தெரியாதா? இவற்றை நாம் காரி உமிழ்ந்து புறக்கணிக்க வேண்டும். இருப்பினும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டுமல்லவா... இப்படிப்பட்ட சாதாரண பிரச்சினைகள் பெரும் குற்றச்சாட்டுகளாக மாறலாம்..

கடவுளே! அப்படியானால் நாம் என்ன செய்வது? தேர்தல் நெருங்குகிறது. எனது பப்ளிக் இமேஜ் போய் விடுமே ராமன் ஆழ்ந்த கவலையுடன் கூறினார்.

அண்ணி, அக்னி பரீட்சை நடத்தட்டும் - பரதன் ஆலோசனை வழங்கினான்.

டாம்ஃபூள்! புதிய சட்டப்படி அது தற்கொலை முயற்சி என்பது உனக்குத் தெரியாதா? ராமன் கோபத்துடன் கத்தினார். சகோதரர்கள் இருவரும் சிந்தனையில் மூழ்கினர். திடீரென்று பரதன் ஆரவாரத்துடன் அளவற்ற மகிழ்ச்சி கலந்த குரலில், ஒன்டர்ஃபுள், நானும் உலகத்தைப் புரிந்து கொண்டிருக்கிறேன். இதற்கு சரியான பரிகாரம் கிடைத்துவிட்டது என்று சத்தமிட்டு துள்ளிக் குதித்தான்.

அடுத்த நாள் பத்திரிகைகளில் தனது பெயரில் வெளியாகியிருந்த ஒரு அறிக்கைக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை யென்றும், தான் அப்படி ஒரு அறிக்கை விடுவது பற்றி கனவில் கூட எண்ணவில்லையென்றும் சொல்லி, தான் சிறீராமன் மீதும் அவர் துணைவியார் மீதும் வைத்திருக்கும் மதிப்பை விளக்கியும், அவர்களது ஆட்சி சிறப்பை வர்ணித்தும் ரஜகன் விடுத்திருந்த அறிக்கை முதற் பக்கங்களிலேயே வெளியாகியிருந்தது.

அதற்கு அடுத்த நாள் பத்திரிகை ஒன்றின் ஒருமூலை யில், ரஜகன் என்பவர் சர்க்கார் கணக்குப் பிள்ளையாக நியமனம் செய்யப்பட்ட செய்தி அச்சிடப்பட்டிருந்தது.

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXL6NPg

தமிழ் ஓவியா said...

விதவைத் துயரம்

என்னைக் கேட்டால் இந்தக் கொடிய நாட்டில் விதவைகளுக்குத் துன்பத்தை இழைத்தவர் நமது இராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே எனது அபிப்ராயம். ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும், கஷ்டப்படவும் ஏற்பட்டு விட்டது. எப்படி என்றால், மோகன்ராய் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தா திருப்பாரானால் ஒவ்வொரு பெண்டும் புருஷன் இறந்தவுடனே அவனோடு கூடவே அவன் பக்கத்தில் மாங்கல்ய ஸ்திரீ யாகவே உயிருடன் கட்டையில் வைத்துச் சுடப்பட்டுக் கற்பு லோகத்தை அடைந்து, மோட்ச லோகத்திலிருப்பாள்!

கற்புலோகமும், மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந் தாலும் - ஒன்று மாத்திரம் நிச்சயம். அதாவது, உயிருடன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரந்தான் கஷ்டம் இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தப்படி நடவாமல் காப்பாற்றப்பட்ட விதவைப் பெண்ணுக்கு அவள் ஆயுள் காலம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சித்திரவதை செய்வது போன்ற கஷ்டத்தை விநாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா-இல்லையா என்றுதான் கேட்கிறேன்.

இப்போதும் விதவைகளுக்கு உடனே மணம் செய்யவேண்டும்; மணமில்லாத பெண் இருக்கக்கூடாது என்ற நிர்பந்தம் கொஞ்ச காலத்திற்காவது இருக்க வேண்டும். இல்லையானால் உண்மையான ஜீவகாருண் யத்தை உத்தேசித்துப் பழைய உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தையாவது புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் எனது அபிப்பிராயம். ஏனெனில், விதவைத் தன்மையை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது; நெஞ்சம் கொதிக்கிறது. மனிதனுக்குத் தன் பெண்சாதி சமீபத்தில் இல்லாத காலங்களில் போக இச்சை ஏற்பட்டால் உடனே போக மாதர்களைக் கொண்டு அவ்விச்சையைத் தணிக்க வேண்டியதும்;

மிருகங்களுக்கு ஏற்படும் தினவைத் தீர்த்துக் கொள்ள மைதான வெளியில் சொறிக்கல் நட்டு வைக்க வேண்டியதும் 32 தர்மங்களில் 2 தர்மங்களாகக் கொண்டு - கோயில்களில் தாசிகளை வைத்தும், கிராமங்கள்தோறும் நத்தங்களில் ஆனால், இப்பேர்ப்பட்ட ஜீவகாருண்ய அறிவு - நமது பெண் மக்களிடம் மாத்திரம் ஏன் காட்ட முடியாமல் போய்விட்டது என்பதை நினைக்கும்போது, ஜீவகாருண்யப் புரட்டும் 32 தர்மங்களின் புரட்டும் நன்றாய் விளங்கும்.

- (குடிஅரசு, 27.10.1929)

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXSfHBe

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துணுக்குகள்


எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,
2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக,

ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா? -சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXaQKtS

தமிழ் ஓவியா said...

அரசர்களும்-புரோகிதர்களும்!

தலைமைப் பதவியிலும், பிறருடைய உழைப்பைச் சுரண்டுவதிலும், கொள்வினை கொடுப் பினையிலும் பிறப்பினாலுங்கூட அரசர்களும், புரோகிதர்களும் ஒரே இனத்தவர்கள் தாம்.
ஆயினும் அவர்கள் சத்திரியர்கள், பிராமணர்கள் என்று தனித்தனியே அழைக்கப்படுகிறார்கள்.

-ராகுல சாங் கிருத்தியாயன்

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXgwXd9

தமிழ் ஓவியா said...


சுப்பிரமணியசாமிக்குத் தங்கப் பூணூலாம்!


திருப்பரங்குன்றம் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு உபயமாக வந்த தங்கப் பூணூல்
(தினமணி, 27.2.2014, பக்கம் 2)

இதற்கு முன்பு காஞ்சி ஜெயேந்திரர் மூன்று கிலோ எடையுள்ள தங்கத்தினாலான பூணூலை திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவித்தார்.

கடவுள்களே, இந்த நாட்டில் ஒரு ஜாதியைச் சேர்ந்ததாக இருக்கிறது. உலகத்தில் இதுபோன்ற நிலை உண்டா? கடவுள் பார்ப்பன ஜாதியைச் சேர்ந்துவிட்டது. பார்ப்பனர்கள் கடவுளைக் காப்பாற்ற நினைப்பது தங்கள் ஜாதியின் உயர்வைக் கட்டிக் காப்பாற்றத்தான் என்று தந்தை பெரியாரும், திராவிடர் கழகத்தினரும் கூறுவதன் பொருள் இப்பொழுது புரிகிறதா?

தேவாதீனம் ஜகத்சர்வம்
மந்திரா தீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிராமணாதீனம்
பிராமண மம தேவதா

என்பது இருக்கு வேத சுலோகம் (ரிக் வேதம், 62 ஆவது பிரிவு, 10 ஆவது சுலோகம்).

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிரா மணர்களுக்குக் கட்டுப்பட்டது. எனவே, பிராமணனே நமது கடவுள் என்பது இதன் பொருள்.

கடவுளைக் கும்பிடும் சூத்திர, பஞ்சம சகோ தரர்களே, ஒரு கணம் சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/e-paper/76095.html#ixzz2ufYE9OxM

தமிழ் ஓவியா said...


பாரு... பாரு... மோடி வித்தை பாரு!

புதுடில்லி.பிப்.28- மோடி வித்தைகளை அரங்கேற்ற விதம்விதமாகத் திட்ட மிட்டு பிரச்சாரம் செய்கி றார்களாம். தேநீர்க் கடை களில் காணொலிக் காட்சி, மீன் கடைகளில் பிரச்சாரம் என்று பல வடிவங்களில் பிரச்சாரம் அரங்கேற்றப் படுகின்றது.

அந்த வகையில் மிகவும் திட்டமிடப்பட்டு கவிஞர் களின் சம்மேளனம் கவிஞர் களைக் கொண்டு பாடல்கள் எழுதப்பட்டு நமோ பஜனை நிகழ்ச்சிகள்மூலம் மோடியை நாட்டைக் காக் கும் இரட்சகர் என்றும், எல் லாம் செய்யவல்ல தலை வர் என்றும் வருணித்துத் துதி பாடுகிறார்களாம்.

பாஜகவின் செயல்பாடு, ஒருங்கிணைப்புக்குழு ஏற் பாட்டாளர் ஹரி ஓம் பன் வார் என்பவரின் தலைமை யில் கவி சம்மேளனம் செயல்பட உள்ளது.

30 முதல் 35 கவிஞர் களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல் வேறு நிகழ்ச்சிகள் கிராமங் களை முன்னிறுத்தி மோடி பஜனை அரங்கேற்றப்பட உள்ளது. சுமார் 300 மக்கள வைத் தொகுதிகளை இலக் காகக் கொண்டு நடத்தப் படும் நிகழ்ச்சிகளில் பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இக்கலை நிகழ்ச் சிகளில் பாஜக தலைவர்கள் யாரும் பங்கேற்க மாட் டார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சிக் கென்றே மோடியின் பேச்சு பதிவு செய்யப்பட்டு 3-டி பெரிய திரைகளைக் கொண்டு கிராமப்புறங் களில் திரையிடப்பட உள் ளது.

மோடி நேரில் செல்ல முடியாத பகுதிகளை அடை யாளம் கண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள் ளது. தேவைப்பட்டால் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படலாம் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக தலைவர்.

மேலும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தனி யாக 30 குழுக்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வீதி நாட கங்கள் மூலம் மோடியின் செய்திகள் பிரச்சாரம் செய் யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/76093.html#ixzz2ufYSlAmE

தமிழ் ஓவியா said...


அரசியல் இலாபம்


அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும், தேசத்தையும், சமூகத்தையும் காட்டிக் கொடுக்காமலும் வாழும்படி செய்யவே செய்யாது. - (குடிஅரசு, 31.7.1927)

Read more: http://viduthalai.in/page-2/76098.html#ixzz2ufYdshp2

தமிழ் ஓவியா said...


ராஜீவ் கொலை வழக்கு: விடுதலைபற்றி உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி, பிப்.28- ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது.

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந் தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந் தனர்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மூவரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்தது. மேலும் அவர்களை விடு விப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கில் தொடர்பு டைய முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச் சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதில், முதல் மூன்று பேரையும் விடுதலை செய் வதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து கடந்த 20 ஆம் தேதி உத்தர விட்டது.

இந்நிலையில் நளினி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்வதை எதிர்த்தும், மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை புதிதாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி பி.சதா சிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி ஆஜரானார். அவர் வாதாடியபோது, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ரிட் மனு ஏற்புடையது அல்ல. 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரை கடி தம் அனுப்பியுள்ளது. அதற்கு பதில் அளிக்காமல் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சொலி சிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக் கில் குற்றவாளிகள் தொடர்பாக முடி வெடுக்க மத்திய அரசுக்குத்தான் அதி காரம் உண்டு. மாநில அரசுக்குக் கிடை யாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறிய தாவது:

எங்களது தீர்ப்பில், மூன்று குற்றவாளி களின் மரண தண்டனை ஆயுள் தண்ட னையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர் களை விடுதலை செய்வது தொடர்பாக நாங்கள் எதுவும் கூறவில்லை. சம்பந் தப்பட்ட மாநில அரசு வழக்கமான சட்ட நடைமுறைகளை பின்பற்றலாம் என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம்.

அந்த நடைமுறைகளின்படி குற்ற வாளிகள் முறைப்படி கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதன் பின் மாநில அரசு சம்பந்தப்பட்ட விசாரணை நீதி மன்றத்திடம் அறிக்கை கோரவேண்டும். அதன் பின்னரே உரிய முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு வாரத்தில் தீர்வு

குற்றவாளிகள் விடுதலை செய்யப் படக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. எல்லாவற்றுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதைத்தான் பின்பற்ற வேண்டும். குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்கவேண் டும். இந்தப் பிரச்சினைக்கு காரணம் நாங்கள்தான். இதற்கு இன்னும் ஒரு வாரத்தில் தீர்வு காண்போம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசின் மனு தொடர் பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை 4 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-2/76102.html#ixzz2ufZIEcyI

தமிழ் ஓவியா said...

என் கருவறை பெரியார் திடல்தான்! கவிஞர் கனிமொழி எம்.பி. உரை


சென்னை.பிப். 28- சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத் தில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் திமுக நாடாளு மன்றஉறுப்பினர் கவிஞர் கனிமொழி எழுதிய நூல்க ளுக்கான விமர்சனக் கூட்டம் நேற்று (27.2.2014) மாலை நடைபெற்றது.

கவிஞர் கனிமொழி எழு திய கட்டுரை நூல்கள், கவிதை நூல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர், எழுத்தாளர் க. திருநாவுக்கரசு விமர்சனம் செய்துபேசினார்.

கவிஞர் கனிமொழி ஏற் புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்துவதுபெரிய விஷ யம்.கட்சிக் கூட்டங்கள் நடத் திடலாம். தமிழகத்தில் வாசிப்பு அந்த நிலையில் உள்ளது. பல நூல்விமர்சனக் கூட்டங்களுக்கு நான் சென் றுள்ளேன். பெரியார் திடல் எனக்கும் கருவறைதான். என்னுடைய எழுத்துக்களில் எந்த இடத்தில் மோதல் வரும் என்பது எனக்குத்தெரி யும். உங்களைப் போன்றவர் களிடம் பேச நேரம் கிடைக் காதா என்று ஏங்குகிறேன். உங்களுக்கு நேரம் இருக்க வேண்டும். ஏனென்றால், உங்களிடம் பேசும்போது கிடைக்கும் அனுபவம் ஒரு புத்தகத்தைப் படித்தால் கூடக்கிடைக்காது. நீங்கள் ஒதுக்கித் தரும்அந்த நேரத் திற்காகக் காத்திருக்கிறேன்.

கவிதையில் பிடிபட வில்லை, பொய் இருக்கிறது என்கிறீர்கள். நான் மிகவும் உண்மையாக இருப்பது கவிதையில்தான். ஒரு கவிதை எழுதும்வரைதான் அது என் கவிதை. எழுதி முடித்தபின் அது வாசகரு டையது. வாசிப்பவர் தன் அனுபவத்தைக் கவிதையின் பின்னால் வாசகரின் அனு பவம்இருக்கும்.கவிதை ஒரு நிலைக்கண்ணாடிமாதிரி. அனுபவத்தைத் தாண்டி வந்தால்தான் புரியும்.

மொழிபெயர்ப்பில் பல விஷயங்கள் தொலைந்து விடும். ஒரு கவிதை தமிழில் எழுதப்பட்டு, நமக்கென்று இருப்பது கவிதை, அதையே நமக்கு தொடர்பில்லாத வேறு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, மீண்டும் தமிழில் மொழிபெயர்க்கப் படும் போது பல விஷயங் கள் தொலைந்து போகும்.

தமிழ் ஓவியா said...


மோடியின் மூக்கை மீண்டும் மீண்டும் அறுக்கும் அமெரிக்கா

புதுடில்லி, மார்ச் 1- குஜ ராத் கலவரம் தொடர்பாக பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி விவகாரத்தில் இறங்கி வரவில்லை என்று அமெ ரிக்கா தெரிவித்துள்ளது. முந் தைய ஆண்டுகளைப் போன்று இல்லாமல் இந்த ஆண்டு இந்தியாவில் இருக் கும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள 2013 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நடைமுறைகள் அறிக்கை யில் குஜராத் முதல்வர் மோடியின் பெயர் இல்லை. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஜென் ப்சாகி கூறுகையில்,

மோடி விவகாரத்தில் அமெரிக்கா இறங்கி வர வில்லை. இந்தியாவில் நடக் கும் சமூக வன்முறைச் சம் பவங்கள் குறித்த எங்களின் நிலை தெளிவாக உள்ளது. எங்களிடம் புதிய கொள் கையோ அல்லது கொள் கைத் திருத்தமோ இல்லை. மோடியின் விசா விவகாரம் குறித்து உங்களுக்கு தெரி விக்க ஒன்றும் இப்போ தைக்கு இல்லை. மோடியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் சந்தித்து பேசியதை வேறு எதனு டனும் தொடர்புபடுத்த வேண்டாம். வரும் மே மாதம் இந்தியாவில் தேர்தல் நடக்கவிருப்பதால் பல் வேறு அதிகாரிகளை நாங் கள் சந்தித்து வருகிறோம் என்றார். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக அமெரிக்கா மோடிக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் விசா கொடுக்க மறுத்து வருகிறது. அதில் இருந்து மோடியும் விசா கேட்டு விண்ணப்பிக்க வில்லை. இந்நிலையில் அமெரிக்க செயலாளர் ஜான் கெர்ரி வெளியிட்ட மனித உரிமை அறிக்கையில் கூறி யிருப்பதாவது, இந்தியா வில் மனித உரிமைகள் பிரச் சினை என்றால் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை யினரின் அத்துமீறல்கள், அதில் கொலை, சித்திர வதை, பாலியல் வன்முறை அடங்கும், அரசின் அனைத்து தரப்பிலும் பரவியுள்ள ஊழல், இதனால் நீதி மறுக்கப்படுகிறது. திடீர் என்று மாயமாவது, சிறை யில் போதிய வசதி இல் லாதது உள்ளிட்டவை பிற மனித உரிமை பிரச்சினை கள் ஆகும். சில மாநிலங் களில் மதமாறுதலை சட்டம் அனுமதிப்பதில்லை. இது தொடர்பாக கைது நடவ டிக்கைகள் நடந்ததாக தக வல் கிடைத்துள்ளது. ஊழல் எங்கும் உள்ளது. பாலியல் வன்கொடுமை, வரதட் சணை கொலைகள், கவுர வக் கொலைகள், பாலியல் அத்துமீறல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து முக்கிய பிரச்சி னைகளாக உள்ளன. 2002 ஆம் ஆண்டில் குஜ ராத் கலவரத்தின்போது குற் றங்கள் செய்த காவல்துறை யினர் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் குறித்த வழக்கில் அரசு சில முன் னேற்றத்தை கண்டுள்ளது. இருப்பினும் கலவரத்தின் போது மக்களை குஜராத் மாநில அரசு காக்கத் தவறி யது சமூக ஆர்வலர்களின் தொடர் அக்கறையாக உள் ளது. அரசு மக்களைப் பாது காக்க தவறியதால் 1,200-க் கும் மேற்பட்டோர் கொல் லப்பட்டனர். அதில் பெரும் பாலானோர் முஸ்லிம்கள் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/76155.html#ixzz2ulKdF24v

தமிழ் ஓவியா said...


பஸ்வான் இப்படி நடந்துகொள்ளலாமா?

லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் இந்தியா அறிந்த - ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக, சமூகநீதிக்காக, வருணாசிரம எதிர்ப்புக்காகக் குரல் கொடுக்கும் சிறந்த போராளி - தலைசிறந்த அம்பேத்காரிஸ்டு என்று அறியப்பட்டவர்.

இளைய வயதிலேயே மக்களவையில் புகுந்த - அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குரியவர்.

மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம் முன்னின்று நடத்திய 42 மாநாடுகளில் பெரும்பாலும் கலந்துகொண்டவர். மண்டல் காற்றின் காரணமாக நாடு தழுவிய அளவில் அறியப் பட்டவர்.

குறிப்பாக திராவிடர் கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வமோடு பங்குகொண்டு சங்கநாதம் செய்த இளம் துருக்கியார்.

காரைக்குடியில் திராவிடர் கழகம் நடத்திய இராமாயண எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று எரியீட்டியாக சனாதனத்தின் மீது பாய்ந்தவர்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர். சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் டெசோ நடத்திய மாநாட்டிலும் பங்குகொண்டு இலங்கை சிங்கள அரசின் இனப் படுகொலைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்.

இவ்வளவு முற்போக்குச் சிந்தனையில் வளம் கொண்டவர்.

பி.ஜே.பி. தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது எளிதில் சீரணிக்கப்பட முடியாத ஒன்றே!

பதவி அரசியல் என்று வந்துவிட்டால் எந்த எதிர் முனைக்கும் தாவக் கூடியவர்களின் பட்டியலில் பஸ்வான் போன்றவர்கள் இடம்பெறுவது வருந்தத்தக்கது- கண்டிக்கத்தக்கது.

இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவதற்கு மாறாக, பதவிக்காக அரசியலுக்காக, வெறும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான சீட்டுக்கட்டாக எதையும், யாருடனும் சமரசம் செய்து கொள்ளலாம் என்ற பிற்போக்குத்தனத்துக்கு ராஜப் பாட்டையைத் திறந்துவிடக் கூடிய ஆபத்து இதில் பதுங்கி இருக்கிறது.

பி.ஜே.பி. கூட்டணியில் அமைச்சராக இருந்தபோதே பஸ்வான் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்ததுண்டு; ஒரு கட்டத்தில் குஜராத் கலவரத்துக்குப் பிறகு, அந்த அணியிலிருந்து விலகியதன்மூலம் பொது மக்கள் மத்தியில் பஸ்வானுக்குப் பொது மன்னிப்புக் கிடைத்தது என்று சொல்லலாம்.

இப்பொழுது மீண்டும் பி.ஜே.பி.யோடு கைகோத்துக் கொண்டுள்ளாரே - இதற்கு என்ன சமாதானம் கூறப் போகிறார்?

குஜராத் கலவரத்திற்கும், மோடிக்கும் சம்பந்தமில்லை என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது என்ற ஒற்றை வரித் தீர்ப்பின் படுதாவுக்குள் பதுங்கிக் கொள்ளப் பார்க்கிறார்.

அப்படியென்றால், குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டனரா?

பி.ஜே.பி.யின் சட்டமன்ற உறுப்பினர்களே முதல்வர் மோடிதான் எங்களுக்கு வழிகாட்டினார்; அவரின் கட்டளைப்படித்தான் நாங்கள் செயல்பட்டோம் என்று பேட்டி கொடுத்ததை தெகல்கா வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டதே மறுக்க முடியுமா?

குஜராத் மாநில அரசின் உயர்காவல் துறை அதிகாரி களே மோடிக்கும், குஜராத் கலவரத்திற்கும் இடையே உள்ள இணைப்பை விலாவாரியாக எடுத்துக் கூற வில்லையா?
அதையும் தாண்டி ஒரு கேள்வி இருக்கிறது. மோடியை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு வினா உண்டு. பி.ஜே.பி.யின் அடிப்படைக் கொள்கையே இந்துத்துவாதானே. மோடியைப் பிரதமராக நிலை நிறுத்தப்பட்டது ஆர்.எஸ்.எஸின் கட்டளையின் அடிப்படையில்தானே.

பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்தில் ராமன் கோவில் கட்டப்படும்; தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று பி.ஜே.பி. மாநிலங் களவையின் தலைவர் அருண்ஜெட்லி கூறியதற்கு என்ன பதிலை வைத்துள்ளார் பஸ்வான்?

ஒடுக்கப்பட்ட மக்களின் - சிறுபான்மை மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டாரே பஸ்வான்!

ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்க்குரல் பஸ்வானை நோக்கிப் பாயுமா?

Read more: http://viduthalai.in/page-2/76161.html#ixzz2ulKts8FO

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவாளர் கடமை

நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன், அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.
_ (உண்மை, 15.9.1976)

Read more: http://viduthalai.in/page-2/76160.html#ixzz2ulL9HWd4

தமிழ் ஓவியா said...

அரசியலும், சத்தியமும்

திரு. சீனிவாசய்யங்கார் அவர்களை திரு. லாலா லஜபதிராய் அவர்கள் பூரண சுயேச்சையே வேண்டு மென்று கேட்பவர்களான தாங்கள் ராஜ பக்திப் பிரமாணம் செய்யலாமா என்று கேட்டபொழுது அதற்கு பதில் திரு. அய்யங்கார் நான் அந்த பிரமாணத்தை மனதில் வேறு ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு கபடமாக பிரமாணம் செய்தேனே ஒழிய உண்மையாக செய்யவில்லை என்று சொன்னாராம் இதை பச்சை தமிழில் சொல்வதானால் பொய்ச் சத்தியம் செய்தேனே ஒழிய உண்மையான சத்தியம் செய்யவில்லை என்று சொன்னாராம்.

உடனே திரு. லாலாஜி அப்படியானால் மற்றபடி நீர் இப்போது என்னிடம் பேசிய தாவது உண்மைதானா அல்லது இதிலும் ஏதாவது ஒன்றை மனதில் நினைத்துக் கொண்டு, வேறு ஏதாவது வாயில் பேசுகிறீரா என்ன வென்று கேட்டராம். திரு. அய்யங்கார் வெட்கித் தலைகுனிந்து கொண்டாராம்.

நமது தென்னாட்டுப் பார்ப்பனர்களின் தலைவர் களானவரிடத்தில் சத்தியத்திலேயே இரண்டு அதாவது பொய் சத்தியம் நிசமான சத்தியம் என்பதான வித்தி யாசங்கள் இருந்தால் இது சாதாரணமாக அதாவது சத்தியம் என்று எண்ணாமல் பேசும் விஷயங்களில் எத்தனைவித வித்தியாசங்கள் இருக்கும் என்பதை கண்டுபிடிக்க வல்லவர்கள் யார் என்பது நமக்கு விளங்கவில்லை.

ஆனபோதிலும் இந்த பொய் சத்தியமுறை தற்காலத்தில் அநேக கனவான்களுக்கு மிகவும் யோக்கியமான முறையென்றேற்பட்டு திரு. அய்யங்காருக்கு நற்சாட்சிப் பத்திரங்கள் கொடுக்க முன் வந்திருக்கின்றார்கள்.

அதாவது திருவாளர்கள் சத்தியமூர்த்தியும் வரதராஜுலு வும் முறையே இந்தியாவின் அரசியலை நடத்த திரு. சீனிவாசய்யங்காரே தக்க பெரியாரென்றும் இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களும் இந்த திரு. சீனிவாசய்யங் காரையே நம்பி இருக்கின்றார்கள் என்றும் சொல்லி அய்யங்காரை குஷால் படுத்தினார்கள்.

போதாக் குறைக்கு திருவாளர் சி. ராஜகோபாலாச்சாரி என்கின்ற சத்தியகீர்த்தியும், திரு. சீனிவாசய்யங்காரை விட்டால் சென்னை மாகாணத்தில் காங்கிரசை நிர்வகிக்க வேறு தக்க நபர் கிடையாது என்று பம்பாயில் சொன்னார். இவர்களே இப்படி சொல்லியிருக்க மற்றபடி இதே கூட்டத்தில் இருக்கும் திருவாளர்கள் குழந்தை குப்புசாமி அண்ணாமலை, கந்தசாமி அமித்கான் முதலான தலைவர்கள் சொல்லுவதைப் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டுமா என்று கேட்கின்றோம்.

எனவே அரசியல் என்பது எவ்வளவு அயோக்கியத் தனம் என்பதையும் எந்த விதத்திலும் இந்த அரசியல் ஸ்தாபனங்கள் மானம் வெட்கம் ஒழுக்கம் நாணயம் முதலியவை இல்லாதவர்களுக்கு சொந்தமாக இருக் கின்றது என்பதையும் பொது ஜனங்கள் உணருவதற் காகவே இதை எழுதுகின்றோமேயல்லாமல் மேற் கண்ட கனவான்களின் யோக்கியதையை பொது ஜனங்களுக்கு எடுத்துக்காட்டு வதற்காக எழுதவில்லை.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 18.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76182.html#ixzz2ulM9g8Be

தமிழ் ஓவியா said...


மூடர்கள் இந்தியாவுக்கு மாத்திரந்தான் சொந்தமா?


மேல்நாட்டில் கூட இவர் சுவாமி என்றும் மோட்சம் என்றும் நரகம் என்றும் சூட்சம சரீரம் என்றும் சொல்லு கின்றார்களென்றும் ஆதலால் அவைகள் நிஜம் என்றும் ஒரு சூட்சம சரீரக்காரர் தனது பத்திரிகையில் எழுதுகிறார்.

நாம் இதற்கு ஒரு பதில் தான் சொல்லக்கூடும். அது முட்டாள்களுக்கும் தம் அயோக்கியர்களுக்கும் இந்தி யாவும் சிறப்பாக தமிழ்நாடும் மாத்திரம் சொந்தமா? என்பதுதான்.

கார்பொரேஷன் தலைவர்

சென்னை கார்ப்பரேஷன் தலைவர் தேர்தலில் திரு. ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் வெற்றி பெற்றார் என்ற சேதியைக் கேட்டு மகிழ்ச்சியடையாத உண்மைத் தமிழ் மக்கள் இந்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றோம். தவிர இந்த முடிவானது சென்ற வருஷம் முதலே உறுதியாய் எதிர்பார்த்த முடிவாகும்.

மேலும் இந்த முடிவானது சென்னை பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளாக வோ தங்கள் அடிமைகளுக்குள்ளாகவோ காங்கிரஸ் வேஷத்தாலோ தேசிய வேஷத்தாலோ யாரையும் நிறுத்த முடியாமல் போனதைப் பொருத்த வரையில் பார்ப்பனரல் லாதாருக்கு ஒரு பெரிய வெற்றியானாலும் ஜஸ்டிஸ் கட்சியில் கட்சிப் பிளவை உண்டாக்கும் வேலையில் கரும் பார்ப்பனர்களும் வெள்ளைப் பார்ப்பனர்களும் ஒருவாறு வெற்றிபெற்று விட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

திரு. ராமசாமி முதலியாருக்கு ஏற்பட்ட வெற்றியின் சந்தோஷத் தைவிட ஒரே கட்சியில் ஏற்பட்ட அபிப்பிராய பேதம் வருந்த தக்கதேயாகும். என்றாலும் திரு. ராமசாமி முதலியார் அவர் களைத் தலைவராகக் கொண்ட சென்னை கார்ப்பரே ஷனை நாம் பாராட்டாமலிருக்க முடியாது.

சென்னை கார்ப்பொரேஷனுக்கு இதுவரை இருந்த கெட்ட பெயரும் இழிவும் திரு முதலியார் காலத்தில் மாறி அதற்கு ஒரு கௌரவம் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

லாலா லஜபதி

திருவாளர் பஞ்சாப் லாலா லஜபதிராய் அவர்கள் தமிழ்நாட்டை வந்து நேரில் பார்த்து விட்டு போன பிறகு சென்னை உலகம் என்று தியாகபூமியில் ஒரு வியாசம் எழுதியதை சோழவந்தான் திரு. முனகால பட்டா பிராமய்யா அவர்கள் மொழிபெயர்த்து பிரசுரித்து அனுப்பியிருந்ததை எளிய நடையில் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம்.

அதில் சென்னை அரசியலைப் பற்றியும் கோயில், குளம், புராணம், பண்டிதர்கள், தலைவர்கள் ஆகியவைகளின் யோக்கி யதைகளைப் பற்றியும் நன்றாய் விளக்கியிருக் கின்றார். எனவே வாசகர்கள தயவு செய்து பொறுமையுடன் முழுவதையும் படித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 18.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76186.html#ixzz2ulMPgZLj

தமிழ் ஓவியா said...

கோவையில் சர்வ கட்சி மாநாடு

கோயமுத்தூரில் இம்மாதம் 23ஆம் தேதி அகில இந்திய சர்வ கட்சி மகாநாட்டு அரசியல் திட்டம் என்பதைப் பற்றி யோசிக்க ஒரு சர்வ கட்சி மகாநாடு கூடப் போகின்றது. அதற்குக் காரியதரிசி திரு. R.K. ஷண்முகம் செட்டியார் MLA அவர்களாவார்கள். அதன் வரவேற்புத் தலைவர் திரு. C.S.இரத்தின சபாபதி முதலியாரவர்கள் MLA ஆவார்கள். மகாநாட்டு தலைவர் சென்னை திரு. சாமி வெங்கிடாசலம் செட்டியார் MLC ஆவார்கள்.எனவே மேல் கண்ட மூன்று கனவான்களும் பார்ப்ப னரல்லாதார் என்பதில் நாம் எவ்வித ஆட்சேபனையும் சொல்ல முடியாது. ஆனால் பார்ப்பனர்களுக்கும் பாமர ஓட்டர்களுக்கும் பயப்படாமல் தைரியமாய் தங்கள் சமுகத் திற்கும் தங்கள் நாட்டின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமுகத்திற்கும் உண்மையான யோக்கியமான பிரதிநிதிகளாய் இருந்து அவர்களின் கஷ்ட நஷ்டம் முதலிய கொடுமைகளைத் தைரியமாய் எடுத்துச் சொல்லி அதற்கு வேண்டியதை வலியுறுத்துவார்களா?

என்பவைகளை மாத்திரம் மகாநாட்டின் நடைமுறை களுக்குப் பின் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது என்றாலும் இன்னிலையில் அம்மூன்று கனவான்களை யாவது உத்தேசித்து மகாநாட்டுக்கு எல்லோரும் போய் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தைத் தாராளமாய்ச் சொல்வ தற்கும் வலியுறுத்துவதற்கும் முடியாமல் போனாலும் கூட சாட்சியினராகவாவது சென்று அக்கனவான்களைக் கவுரவப்படுத்த வேண்டுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 18.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76186.html#ixzz2ulMgXBYH

தமிழ் ஓவியா said...

பிரச்சாரப் பள்ளிக்கூடம்

ஈரோட்டில் ஏற்படுத்தப் போவதாய் தெரிவித்திருந்த சுயமரியாதைப் பிரச்சாரப் பள்ளிக்கூடம் சென்ற மாதம் 31 தேதியில் ஆரம்பிப்பதாய் தீர்மானித் திருந்ததில் அந்த ஆரம்ப விழாவை நடத்தித்தர கேட்டுக்கொள்ளப்பட்ட திருவாளர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் வேறு அவசரத்தினால் அந்த தேதிக்கு வர சவுகரியப்படவில்லை என்றும் ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதின் பேரில் தள்ளிவைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.ஆனாலும் அந்தப்படி ஒரு வாரத்தில் வைத்துக் கொள்வதில் தீபாவளி என்கின்ற பண்டிகை ஒன்று சமீபத்தில் வரப்போவதால் பள்ளிக்கூடத்திற்கு வருபவர் களில் சிலராவது தீபாவளிக்காக என்று மத்தியில் ஒருசமயம் ஊருக்குப்போக நேரிட்டாலும் நேரிடலாம் என்றும் அதன்மூலம் அவர்களுக்கு போக்குவரத்துச் செலவும் அசௌகரியமும் ஏற்படக்கூடும் என்றும் தோன்றியதால் தீபாவளி கழிந்த பிறகு ஏற்படுத்த தீர்மானிக்க வேண்டிய தாயிற்று.

திருவாளர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் பள்ளிக்கூட ஆரம்ப விழா நடத்துவார். எனவே அப்பள்ளிக்கூடத்திற்கு வர இஷ்டப்பட்டு முன் தெரி வித்துக் கொண்டவர்கள் கடிதம் பார்த்தவுடன் வரத் தயாராயிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 04.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76186.html#ixzz2ulMnPk48

தமிழ் ஓவியா said...


செயற்கை இதயம்


பிரான்சில் மருத்துவர்கள், இதயம் செயலிழந்த முதியவர் ஒருவருக்கு ஒரு கிலோ எடையுள்ள செயற்கை இதயத்தை பொருத்தியுள் ளனர். இந்த இதயம் லித்தியம் அயனிகளைக் கொண்ட மின்கலன்கள் மூலம் இயங்குகிறது. இதைப் பொருத் தியதன் மூலம் அம்முதியவர் ஐந்து ஆண்டுகள் வாழ்நாள் பாதுகாப்புடன் வாழலாம். செயற்கை இழைகள் இன்றி மாட்டின் திசுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால் இதனை உடல் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வாய்ப்புகள் குறைவு. பல உணரிகள் (ஷிமீஸீஷீக்ஷீ), நுண்செயலிகள் (Micro Processors) கொண்ட இதன் எடை ஒரு கிலோ. மருத்துவத்துறையில் இது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

பிரான்சில் உள்ள கார்மட் என்ற நிறுவனத்தால் இது உருவாக்கப்பட்டுள்ளது. பாரிசில் உள்ள ஜார்ஜ் பொம்பிடௌ ஐரோப்பிய மருத்துவமனையில் இந்த இதயத்தை அந்த முதியவருக்குப் பொருத்த சுமார் 10 மணி நேரம் செயல்பட்டனர். இது முதல் முயற்சி என்பதால் இதயம் பொருத்தப்பட்ட முதியவர் ஒரு மாதம் தொடர்ந்த கண்காணிப்பில் வைக்கப்பட்டு பிறகு ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட இயலும் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
- அறிவியல் ஒளி - ஜனவரி 2014 - பக்கம் 29

Read more: http://viduthalai.in/page2/76206.html#ixzz2ulNQBCMp

தமிழ் ஓவியா said...


இங்கர்சால் பொன்மொழிகள்

உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம்

உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில்.

ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூபியாகவும் இருப்பது உண்மையே.

உண்மை ஆனந்தத்தின் தாய். உண்மை மக்களை நாகரிகப் படுத்துகிறது; உண்மை மக்கள் உள்ளத் திலே உன்னத லட்சியத்தைத் தோற்று விக்கிறது; மக்கள் உள்ளத்தைப் புனிதப்படுத்துகிறது.

உண்மையை அறிவதைவிட உயர்வான லட்சியம் மக்களுக்கு இல்லவே இல்லை.

நன்மை செய்வதற்கான அபார சக்தியை உண்மை மனிதனுக்குக் கொடுக்கிறது.

உண்மையே கட்கமும் (வாள்) கவசமும்.

உண்மையே ஜீவியத்தின் புனித ஒளி.

உண்மையைக் கண்டுபிடிக்கும் மனிதன் வாடா விளக்கு ஏற்று கிறான்.

பகுத்தறிவின் உதவியால் ஆராய்ச்சி செய்து, சோதனை நடத்தி, உண்மையைக் கண்டுபிடிக்க வேண் டும்.

அவரவர் ஆற்றலுக்கும், விருப் பத்துக்கும் தக்கபடி உண்மையைக் கண்டுபிடிக்க ஒவ்வொருவருக்கும் வசதி அளிக்க வேண்டும்.

உலக இலக்கியங்களெல் லாம் மக்களுக்குப் பொது. அவற்றை எல்லோரும் படிக்க வசதியிருக்க வேண்டும்; எத்தகைய தடையும் இருத்தல் கூடாது.

சாமானிய மக்களால் அறிய முடியாதபடியான எந்த விஷயமும் அவ்வளவு உயர்வானதல்ல - புனித மானதல்ல.

நூல்களைச் சுயமாக வாசித்து அவரவருக்கு விருப்பமான முடிவுக்கு வர ஒவ்வொருவருக்கும் வசதியும் சுதந்தரமும் அளிக்க வேண்டும்.

அவனவனுக்குத் தோன்றும் உண்மையான அபிப்பிராயங்களை வெளியிடவும் தடையேற்படுத்தக் கூடாது.


Read more: http://viduthalai.in/page4/76210.html#ixzz2ulO2RNVD

தமிழ் ஓவியா said...


இராமாயண கால மது வகைகள்


டில்லியிலிருந்து வெளியாகும் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் 15.8.1954-ஆம் தேதிய இதழில் இராமாயணத்தில் மதுக்குடி என்ற தலைப்பில் டாக்டர் எஸ்.என். வியாஸ் என்பவர் எழுதியுள்ள கட் டுரையில் காணப்படுவதாவது:

1. கிதைசுரா: இது காய்ச்சி இறக் கப் படும் சாராயத்துக்குப் பெயர்.

2. மைரேயா: வாசனையூட்டப் பட்ட பானம்: சர்க்கார் மதுவென் றும் கூறுவர்.

3. மத்யா: போதை தரும் பானகம்.

4. மந்தா: இது சாதாரண சாராயத் திலுள்ள அமித போதை தணிக்கப்பட்டது. இதற்குப் பிதாமந்தா என்றும் பெயர். போதை இருக்காது; எனவே இதனை யாரும் குடிக்க விரும்பார்.

5. சுராபானம்: கிதை சுராவுக்கு மாறானது. கிதை சுராபானம் செயற் கையால் செய்யப்படுவது. சுரா என்பது இயற்கைச் சாராயம் இயற்கை முறையில் வடித்தெடுக் கப்படுவது. இது சாதாரண மக் களின் பானம். இதைப் பற்றித் தான் புராணங்களில் அதிகமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.

6. சிந்து: கழிவு வெல்லப் பாகி லிருந்து வடித்தெடுக்கும் பானம்.

7. சௌவீரகா: மட்டரகப் பானம்.
bv8. வாருணி: அக்காலத்தில் உப யோகிக்கப்பட்ட மது வகைகளில் மிகவும் காட்டமானது (போதை அதிகமானது) இந்த பானம், இதனைக் குடித்த அதே நொடியில் போதையுண்டாகித் தள்ளாடி விழச் செய்து விடுமாம்.

Read more: http://viduthalai.in/page4/76211.html#ixzz2ulOCogl8

தமிழ் ஓவியா said...


மனிதன் செத்தால்... பிறகு? - தந்தை பெரியார்


மனிதன் செத்துப் போனான் என்பதற் குப் பொருள் மனிதன் இயங்குவதற்கு ஆதாரமாகவுள்ள சுவாசம் அதாவது மனி தன் மூக்கால், வாயால் உள்ளே இழுத்து வெளியே விடும் காற்றுப் போக்குவரத்து நின்று விட்டால், அதாவது அந்தக் காற்றை இழுக்கும் சக்தி அந்த உடலுக்கு இல் லாமல் போனால் செத்துப் போனான் என்பது பொருள். உடனே மனிதன் பிண மாகி விடுகிறான். இந்தக் காற்றுப் போக்கு வரத்திற்குக் காரணமான உடலிலிருக்கும் சக்தி வேலை செய்யச் சக்தியற்றுப் போய் விட்டால் சுவாசம் நின்று விடுகிறது.

இந்த நிலையைத் தான் மதவாதிகள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து போய் விட்டது என்று சொல்லுகிறார்கள். ஆத்மா என் றாலே சுவாசம் (காற்று) என்றுதான் பொருள் அது பிரிவதும் இல்லை. பிரிந்து எங்கும் போவதுமில்லை.

உதாரணமாக, ஒரு மனிதனின் மூக்கை யும், வாயையும் காற்றுப் போகாமல் வரா மல் மூடி அழுத்திப் பிடித்துக் கொண்டோ மானால் அந்த மனிதன் துள்ளிக் குதித்து ஆடி அமர்ந்து செத்தே போகிறான். இப்படி ஆகி விடுவதில் ஆத்மா பிரிகிறது? எங்கே இருக்கிறது? ஆத்மாவைச் சொன்ன வன் ஆத்மாவிற்கு உருவமில்லை. அரூ பம் கண்ணுக்குத் தெரியாதது. சூட்சமம், கண்டுபிடிக்க முடியாதது என்றுதான் சொன்னானேயொழிய அதை ஒரு வஸ்து வாக்கவில்லை.

இந்தப்படி முடித்து விட்டுப் பிறகு அது மேல் லோகத்திற்குப் போய் உரு வெடுத்து அதே மனிதனாகிக் காமத்தை அனுபவிக்கிறது என்று புளுகி இருக் கிறான். கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இதில் கொஞ்சம் மாற்றம் செய்து சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்தாலும் விசாரணை - தீர்ப்புக்காலம் வந்தவுடன் பிரிந்த ஆத்மா மறுபடியும் சரீரத்திற்குள் வந்து, புகுந்து தீர்ப்பை ஏற்கிறது (ஜட்ஜ் மென்ட் டே) என்பதாகக் கருதுகிறார்கள்.

இப்படி எல்லாம் மதக்காரர்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால் கடவுளுக்கு மனிதன்மீது ஒரு அதிகாரம் (வேலை வேண்டுமென்பதற்காகவேயாகும்.

மனிதன் செத்த பிறகு கடவுள் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்றாகி விட் டால் கடவுளை எவன்தான் சட்டை செய் வான்? ஏன் எதற்காக? சட்டை செய்வான்?

ஆனதினாலேயே கடவுள் பெயரால் முட்டாள்களும் பிழைக்க வேண்டிய அயோக்கியர்களும் இந்த ஏற்பாடு செய்து விட்டார்கள். சரீரத்தை விட்டு ஆத்மா பிரித்தால் அது மோட்சத்திற்குப் போவதா? நரகத்திற்குப் போவதா? மறு ஜன்மம் எடுப்பதா? பிதிர் லோகத்தில் வாழ்வதா? பேயாய் அலை வதா? செத்தவனுக்காகச் செய்யப்படும் காரியங்களை அனுபவிப் பதா? இவற்றில் எந்தக் காரியத்திற்குச் செத்தவன் ஆளாவது?

செத்தவனைப் புதைத்தால் உடல் முழுவதும் நிராகர மண்ணாக ஆகி விடு கிறது. நெருப்பில் கொளுத்தினால் சரீரம் முழுவதும் சாம்பலாக ஆகிக் காற்றில் பறந்து மறைந்து விடுகிறது. இரண்டு மில்லாமல் பூமியில் கிடந்தால் கழுகு, காக்கை, நரி, நாய், மற்றும் மாமிச பட்சிணி ஜீவன்கள் தின்று தீர்த்து விடுகின்றன.

ஆகவே செத்த மனிதன் எப்படி இருப் பான் எதை அனுபவிப்பான் எங்கே இருப் பான் என்பவற்றையும் இந்த அனுபவம் எல்லாம் மனிதனுக்கு மாத்திரம்தானா மற்ற ஜீவன்களுக்கும் மற்றும் செத்துப் போன பட்டுப் போன மரம், செடி, கொடி புல், பூண்டுகளுக்கும் உண்டா என்பதை யும் ஆறறிவுள்ள மனிதன் சிந்தித்துப் பார்ப்பானாக.

Read more: http://viduthalai.in/page4/76212.html#ixzz2ulOMQrGH

தமிழ் ஓவியா said...


சோதிடம்பற்றி கிருபளானி

இங்கு ஜனநாயகமும் இல்லை. சோஷலிசமும் இல்லை. எனக்குத் தெரியும், ஒவ்வொரு மந்திரியும் ஜோதிடரிடம் சென்று ஆலோசிக்கத் தவறுவதே இல்லை. அவர்கள் (அமைச்சர்கள்) உடுத்தும் துணியின் நிறங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக்கூட ஜோஸ்யர்கள் தீர்மானிக்கிறார்கள்! இத்தகையவர்கள் சோஷலிசம் என்றும், ஜன நாயகம் என்றும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சிறிய உள்ளங்கள், பெரிய வார்த்தைகள் என்ற ரகத்தில்தான் இவர்கள் சேர்க்கப்பட வேண்டியவர் களாவார்கள். - ஜே.பி. கிருபளானி

Read more: http://viduthalai.in/page4/76213.html#ixzz2ulOaLXJp

தமிழ் ஓவியா said...


சிந்துவெளி நாகரிகம்உலகின் பண்டைய நாகரிகங்களுள் சிறந்து விளங்கிய நாகரிகம் சிந்துவெளி நாகரிகம். இந்நாகரிகத்தின் சிறப்பு, அம்மக்கள் பிறரிடம் கொண்டிருந்த வணிகத் தொடர்பு, கட்டடக் கலையில் அவர்களின் நுண்கலையறிவு, உற்பத் தித்திறன் மற்றும் அந்நாகரிகத்தின் பரப்பு போன்ற பலவும் வியக்கத்தக்க வகையில் இருந்தன. இவற்றை அப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ் வாய்வுச் சான்றுகள் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். இச்சிறப்பின் காரண மாக வரலாறு, தொல்லியல், மானுடவி யல், மொழியியல், கணிதவியல், புள்ளி யியல் வானவியல், கணினி அறிவியல், கட்டடக் கலை என பல்துறைசார்ந்த அறிஞர்களும் இத்துறையில் ஈடுபட் டுள்ளனர்.

இப்பெரும் நாகரிகத்தின் வீழ்ச்சிக் கான காரணம் இன்னும் முழுமையாக ஆராயப்படாத நிலையில் உள்ளன. அதே போன்று சிந்துவெளி எழுத்துக் களும் முழுமையாகப் படிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இவ்விரு கார ணங்களும் ஆய்வாளர்களின் கவனத்தை அதன் பக்கம் ஈர்த்துள்ளது. ஆகையால் அவ்வெழுத்துகளைப் படிப்பதற்கான முயற்சிகள் உலகின் பல்வேறு இடங் களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிந்துவெளி நாகரிகம் அழியாமல் இன்றுவரை நம்மிடையே நீடித்திருக் கிறது என்பதற்குப் பல சான்றுகள் உள் ளன. உதாரணமாக அவை நடை முறை யில் தொன்மக் கதைகளாகக் குறியீட்டு வடிவில் காணப்படுகின்றன. சிந்துவெளி மக்கள் பேசிய மொழி, பண்டைய திராவிட மொழி என்பதற்கான நம்பத் தகுந்த சான்றுகள் உள்ளன. சிந்து வெளிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து அய்ராவதம் மகா தேவன், அஸ்கோ பர்போலா போன்ற ஆய்வறிஞர்கள் தங்களின் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளனர். மேலும் இவ் விரண்டு நிலப் பரப்பிற்குமான பண் பாட்டுத் தொடர்புகளையும் சுட்டிக் காட்டியுள்ளனர். மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் இத்தொடர்புகளை அடையாளம் கண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான சின்னத் தில் சிந்து வெளிக் கூறுகளை இணைத் துள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பையும் பண்டைய நாகரிகங்களான திராவிட நாகரிகத்திற்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் இடையே உள்ள பண்பாடு மற்றும் மொழியியல் தொடர் பையும் இக்கண்காட்சி மூலம் காட்டுவ தற்கான வாய்ப்பை நல்கியுள்ளது.

Read more: http://viduthalai.in/page5/76214.html#ixzz2ulOormdp

தமிழ் ஓவியா said...


வயிறு நிரம்புமா?


மகாவிஷ்ணு மீது அளவற்ற பக்தி கொண்ட பிருகு முனிவருக்கு ஓர் ஆவல். எப்படியாவது லிங்க வடிவில் சிவ-சக்தியைத் தரிசிக்க வேண்டும். எனவே அத்திரிமலைக்கு வந்து தவம் புரிந்தார். அவரின் தவத்தை மெச்சிய சிவன் அவர் முன்பு தோன்றினார். சிவபெருமானை தாங்களும் அம்மையும் ஒன்றாகத் தோன்ற வேண்டும். தங்களை வணங்கும் எங்களுக்கு அஷ்டமா சித்திகளும் அருள வேண்டும்! என்று கேட்டுக் கொண்டார் பிருகு முனிவர். என்ன ஆச்சரியம் அவர் கேட்ட உடனேயே சிவபெருமானுடன் ஆறு பட்டைகள் கொண்ட லிங்கத் திருமேனியாக சிவசக்தி சொரூபமாக காட்சி அளித்தார். அய்யனே எனக்கு அருள் புரிந்தது போலவே இம்மலைக்கு வரும் அனைவருக்கும் இதே கோலத்தில் அருள் வழங்க வேண்டும் (தினகரன் வார இதழ்: 25.1.2014)

பிருகு முனிவர் மகாவிஷ்ணு மீது அள வற்ற பக்தி கொண்டவர். சிவ சக்தியை லிங்க வடிவத்தில் காண விரும்பியது ஏன்? லிங்க வடிவம் என்பது அம்மணமாக பார்க்க விழைந்தது ஏன்? கேட்டவுடன் காட்சி அளித்தார் ஆனால் எத்தனை பக்தர்கள் வேண்டுகிறார்கள்? ஏன் நாளது வரை காட்சி தரவில்லை? காட்சி தந்தாலே வயிறு நிரம்புமா? பிரச்சினைகள் தீருமா? பிருகு முனிவருக்கு பிறகு யாருக்கும் 2000 நூற்றாண்டுவரை காட்சி தரவில்லையே ஏன்? சிவபெருமான் இருக்கிறாரா இல் லையா? இதை விளம்பரம் செய்யும் முன் சற்றாவது கவனம் பெறல் வேண்டும். உண்மைத் தன்மை அறியாமல் பணத் திற்காக பதிப்பு தரலாமா?
- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page5/76215.html#ixzz2ulOyhgIj

தமிழ் ஓவியா said...


மூக்கின் வழி மூடநம்பிக்கை


அது ஒரு வைதீகத் திருமணம், நட்புக் காக தோழர் ஒருவருடன் சென்றிருந்தோம். நிகழ்ச்சியுடன் ஒன்றிய புகை மூட்டமும் எழுந்தது. கெட்டி மேளம் கொட்டும் வேளை வந்தது. உடன் வந்த தோழர் விர் என்று எழுந்து வெளியே சென்றார். மாங்கல்யம் கட்டி முடித்த பிறகு வந்தார். என்ன அப்படி அவசரம்? என்றேன், தும்மல் வந்தது, தாலி கட்டும் நேரத்தில் தும்மல் எற்பட்டு திருமண வீட்டார் என்னை முகம் திரிந்து நோக் குவரே என்ற அச்சத்தினால் வெளியே சென்றேன் என்றார். புகைச்சல் நெடி, என்ன செய்வது! என்றார். மூட நம்பிக்கை முகாமிட்டிருக்கும் இடத்தில் பண்போடு நடந்து கொண்ட நண்பரைப் பாராட்டினேன். இந்த தும்மலைப்பற்றி சில கருத்தோட்டம், உடலில் ஏற்படும் சளி, தூசு, காற்று போன்ற பல காரணங்களி னால் தும்மல் ஏற்படுவது இயற்கை. எங்கள் வீட்டில் எவரேனும் தும்மினால், என் பாட்டி நூறுவயது என்று உடனே சொல்வார். காரணம் பற்றி சிந்தித்த தில்லை, இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

மேலை நாட்டு மக்களிடையேகூட இதைப் போன்ற பழக்கம் இருந்து வருகிறது. அனைத்தும் பழக்கத்திலிருந்து வரும் மூட நம்பிக்கையே. மேலை நாட் டில் ஒருவர் தும்மினால் ஆசிர்வதிக் கிறேன் ஙிறீமீ சீஷீ என்று பக்கத்தில் இருப்பவர் கூறுவதுண்டு, காரணம்? ஒருவர் தும்மும் போது மூச்சின் வழியாக அவரின் ஆவி - உயிர் வெளிவந்து இறப்பை ஏற்படுத்தும். இந்த இறப்பைத் தடுக்க கடவுளின் ஆசிர்வாதத்தை வேண்டி, மூக்கின் வழி உயிர் வெளியேறுவதைத் தடை செய்வதே நோக்கம், ஒரு மூடநம்பிக்கை.

பாட்டியின், நூறு வயது என்பது பெயரனுக்கு வாழ்த்து கூறும் வகையில் அமைவதாக உள்ளது என்பதாக எடுத்துக் கொள்வோம்.
- மு.வி. சோமசுந்தரம்

Read more: http://viduthalai.in/page7/76225.html#ixzz2ulPTx4Oy

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைச் சுடர் மொழிகள்

1. அறிவைக் கொடுப்பது ஆத்திக மதமே.
ஆலயம் தன்னை அப்புறப்படுத்து.
இந்து மதத்தால் இடுக்கண் விளையும்.
ஈசன் என்பது மோசம் செய்வது.
உண்மைத் தெய்வம் உலகுயிராகும்.
ஊக்கம் என்பது உயிரினும் பெரிது.
என்றும் மக்களை ஒன்றாய்க் கருது.
ஏழை மக்களை ஏறிட்டு நோக்கு.
ஐயம் தெளிந்து செய்வன செய்க.
ஒற்றுமை இருப்பின் உலகு செழிக்கும்.
ஓதியுணர்ந்து நீதியைக் கைக்கொள்.
ஔவை வாக்கிலும் ஆராய்ந்து செய்க.

2. கல்லுத் தெய்வம் பொல்லாங்கு செய்யும்.
காசை வீணாய்க் கரியாக் காதே!
கிழிந்த பஞ்சாங்கம் ஒழிந்தால் நன்று.
கீழ்மைக் குணத்தை வாழ்வி லகற்று.
குற்றம் களைவர் கற்றுணர்ந்தவர்கள்.
கூற்றுவர் நமக்குக் கொடும் பார்ப்பனரே.
கெதியிழந்தாலும் மதியிழக்காதே
கேள்வி ஞானம் வாழ்வில் நல்லது.
கைம்பெண் துயரம் கடிதி லகற்று.
கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளு.
கோவில் நாட்டைக் கேவலமாக்கும்.

3. சமத்துவம் நிறைந்தால் சமூகம் முன்னேறும்.
சிக்கன வாழ்வைக் கைக்கொள்வாயே.
சீற்ற மொழிந்தால் ஏற்றமுறலாம்.
சுயமரியாதையே சுதந்திர வாழ்வு.
சூது நிறைந்தது வேதமென்ற றிந்து கொள்.
செத்தவருக்குத் திதி கொடுக்காதே.
சேத்திரமென்று செலவு செய்யாதே.
சொர்க்கமென்பது தட்டிப் பறிப்பதே.
சோதிட மகற்றின் நீ திடம் பெறலாம்.

4. தண்ணீர் யார்க்கும் தரணியில் சொந்தம்.
தாழ்ந்தவரென்று ஜாதியில்லை
திருவிழா மனிதரைத் தெருவில் விடுவதே.
தீர்த்தமென்று நீ திரிந்தலையாதே
துக்க மென்பதை இக்கண மகற்று
தூய மனத்தால் தீயவை அகற்று
தெய்வத்தை நினைத்து உய்வது கெடுதி.

Read more: http://viduthalai.in/page7/76224.html#ixzz2ulPfzstv

தமிழ் ஓவியா said...


புற்றுநோய்க்கு மருந்தாகும் தாய்ப்பால்


சிசுக்களுக்கு ஊட்டச்சத்தாக விளங் கும் தாய்ப்பால் புற்றுநோய்க்கு எதிரியாக விளங்கக்கூடும் என்று ஒரு ஆய்வு கூறு கிறது. மனித முலைப்பாலில் காணப் படும் லாக்டாப்டின் என்ற புரோட்டின் புற்று நோயைக் குணப்படுத்தக்கூடும் என்று மேலாண்டின் விளாசோவ்ஸ் என்ற புரோட்டின் புற்று நோயைக் குணப்படுத் தக்கூடும் என்று வேலண்டின் விளா சோவ்ஸ் தலைமையிலான குழு நடத் திய ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுகள் சைபீரியா மருத்து வக்கழகத்தில் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில் லாக்டாப்பின் ஆரோக்கியமான செல்களை பாதிக்காமல், புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. பலவகை புற்று நோய்களில் சோதிக்கப்பட்டதில் ஈரல் மற்றும் நுரையீரல் புற்று நோய்களுக்கு இது சிறப்பாகச் செயல்படுவதாக அறியப் பட்டுளளது. தாய்ப்பாலை ஆராய்ந்த போது ஒரு குறிப்பிட்ட புரதக்குறை கண்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. அந்த புரதக்கூறு புற்றுநோய் செல்களை பாதிக் காமல் இருப்பதையும் காணமுடிந்தது என்றும் இந்த கண்டுபிடிப்பு அனைத்து வகையான சோதனைகளுக்கும் ஆளாக் கப்படும் என்று வேலண்டைன் விளா சோவ்ஸ் கூறுகிறது. முலைப்பால் குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கூட்டுகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. குழந்தைக்கு ஏற்படும் தொற்றுகளை எதிர்ப்பதுடன் நெடுநாள் வியாதிகள் தாக்காமலும் தாய்ப்பால் பார்த்துக் கொள்ளுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப் பால் ஊட்டுவதன் மூலம் தாயாரும் உடல்நலம் பெறுகிறார். மார்பக புற்று, கருப்பைப் புற்று ஆகியவை தாக்கும் வாய்ப்புகள் குறைகின்றன.

- அறிவியல் ஒளி - ஜனவரி 2014 - பக்கம் 18

Read more: http://viduthalai.in/page8/76228.html#ixzz2ulQ20pAX