Search This Blog

17.2.14

நாய்க்கு டும் டும் நடத்துவோர் சிந்தனைக்கு...


காதலர் தினத்தைக் கண்டித்து சென்னை புளியந்தோப்புப் பகுதியில், புரோகிதர் மந்திரங்கள் முழங்க நாய்களுக்கு இந்து முன்னணியினர் கல்யாணம் கட்டி வைத்தனர் என்பது சேதி.

நாய் விற்றக் காசு குரைக்காது என்பார்கள். காசு கிடைத்தால் பார்ப்பனர்கள் நாய்க்கு என்ன, பன்றிக்கும் கூட மந்திரங் கள் ஓதி கல்யாணம் கட்டி வைப்பார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு

இன்னொரு வகையில் பார்த்தால் - இந்து மதப்படி நாய் என்றால் சாதாரணமா? பைரவனின் வாகனம் ஆயிற்றே! பைரவன் என் றால் சிவமூர்த்தங்களில் ஒன் றாயிற்றே!

பன்றி மட்டும் கேவலமா? இந்து மதப்படி மகாவிஷ்ணுவின் வராக அவதாரம் ஆயிற்றே!

மற்றவர்கள் விமர்சனம் செய்தால் அய்யகோ இந்து மதத்தை இழிவுபடுத்து கிறார்களே! என்று பூமிக்கும் ஆகாயத்துக்கும் குதிக்கும் இந்த இந்து முன்னணி வகையறாக்கள், இப்பொ ழுது கடவுளின் வாகனமான நாயை, காதலைக் கொச் சைப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்தியுள் ளார்களே - இது இந்து மதத்தை அவமதிப்பது ஆகாதா?

ஒரு தகவல் தெரியுமா - இந்தக் கும்பலுக்கு? எங்களு டைய கற்பனையும் அல்ல. இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா எனும் புகழ் பெற்ற இதழிலே (1987 - மே 3-9-பக்கம் 39)  வெளிவந்த ஒன்றுதான். எழுதியவர் சிதானந்த தாஸ் குப்தா.

In ancient sanskrit Literature Including the work of Kalidasa there are frequent references to Madanotsava. A day on which anyman or woman could ask another even a Stranger for Sexual bliss a sort of “Free Love Day”

மதனோத்சவா என்று சொல்லப்படும் குறிப்பிட்ட நாளில் தாராள காதல் நாள் (Free Love Day) எனும் பேரில் எந்த ஒரு ஆணோ, பெண்ணோ யாராக இருந் தாலும் மற்றவரை உடலுற வுக்காக அழைத்துக் கொள்ளலாம்.

இது சமஸ்கிருத இலக்கி யங்களில், காளிதாசன் படைப்புகள் உட்படக் காணக் கிடைக்கக் கூடியது தான் என்று சிதானந்த தாஸ் குப்தா என்பவர் எழுதி யுள்ளதற்கு என்ன பதில்?

பிப்ரவரி 14 காதலர் தினம் என்று உலகம் அறிவிப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இந்து மதம் - காதல் என்ற கட் டையும் உடைத்து காம உணர்வுடன் உடலுறவு வரை செல்ல ஒரு நாளை அனுமதித்துள்ளதே - பதில் உண்டா?

 --------------------- கருஞ்சட்டை  -  “விடுதலை” 16-02-2014 இதழில் எழுதிய கட்டுரை

29 comments:

தமிழ் ஓவியா said...


தி.மு.க. 10ஆவது மாநில மாநாடு சுயமரியாதை இயக்கம் மனிதத் தன்மை தருவதற்காக தோன்றியது


இளைஞர்கள் தந்தை பெரியார் வழியைப் பின்பற்ற வேண்டும்! பேராசிரியரின் இன முழக்கம்

திருச்சி, பிப். 16- பெரி யாருடைய சுயமரியாதை இயக்கம்தான் நமக்கு மனி தத் தன்மை தருவதற்காக தோன்றியது. எனவே இளை ஞர்கள் தந்தை பெரியார் வழியைப் பின்பற்ற வேண் டும் என திருச்சியில் நடை பெற்று வரும் தி.மு.கழகத் தின் 10ஆவது மாநில மாநாட் டில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் இன முழக்கமிட்டார்.

திருச்சியில் நேற்று (15.2.2014) தி.மு. கழக 10ஆவது மாநில மாநாட் டிடைத் திறந்து வைத்து பேசிய தி.மு.க. பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: இந்த சிறப்பான மாநாட் டினை திறந்து வைக்கிற ஒரு அரிய வாய்ப்பினை எனக்கு வழங்கியதற்காக என்னுடைய உளமார்ந்த நன்றியினை கலைஞர் அவர் களுக்கும், கழக நிர்வாகி களுக்கும் வரவேற்புக் குழு வினருக்கும் நான் தெரிவித் துக் கொள்ள விரும்புகி றேன்.


தமிழ் ஓவியா said...

திராவிட இயக்கத்தினு டைய மாநாடுகளில் 1943-ஆம் ஆண்டில் சிதம்பரத் தில் நடைபெற்ற மாநாட் டில் நான் மாணவனாக இருந்து உரையாற்றியிருக்கி றேன். அதற்கு முன்னால் திருவாரூரில் நடைபெற்ற மாநாட்டிலே - நீதிக்கட்சியின் மாநாட்டினை பார்க்க நான் சென்றிருக்கிறேன். அதற் குப் பின்னர் பல திராவிட மாணவர் மாநாடு, திராவிட இளைஞர் மாநாடு, திரா விடர் கழக மாநாடு, திரா விட முன்னேற்றக் கழக மாநாடு - இப்படி ஏறத்தாழ 30, 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளில் நான் பங் கேற்றிருக்கிறேன்.

ஆனால் இன்றைக்கு காண்கின்ற இந்த மாநாட்டினைப் போல இன்னொரு மாநாட்டை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. உள்ளபடியே உங்களுக் குச் சொல்ல விரும்புகி றேன், தோழர்களே, நம் மைவிட தொன்மையான ஒரு சமுதாயம் இந்த உல கத்திலே இல்லை. தமிழ னுக்கு முன்னாலே பிறந்த வன் எவனும் இல்லை. முதல் மனிதன் - மனிதனாக தோன்றிய முதல் மனிதன் லெமுரியா கண்டத்திலே நான்கரை லட்சம் ஆண்டு களுக்கு முன்னாலே வாழ்ந் ததற்கு அடையாளம் இருக் கிறது. அந்த எலும்புக்கூடு ஆராயப்பட்டிருக்கிறது.

அந்த முதல் மனிதனுடைய வழியிலே வந்தவர்கள்தான் தமிழர்கள். ஆரியர்கள் எல் லாம் நேற்று பிறந்தவர்கள். முதல் இனம் தமிழ் இனம். திராவிட இனம். அந்த இனத்தால் பேசிய மொழி தமிழ் மொழி. அந்த மொழி உலகம் எல்லாம் பரவியிருக் கிறது. அந்த தமிழ் நம்மு டைய தாய்மொழி என்பதை விட பெருமையான செய்தி வேறு கிடையாது. உலகத்திலே முதன் முதலாக திருமண வாழ்க் கையைக் கண்டவன் தமி ழன்.

தமிழ் ஓவியா said...

காதலைக் கண்டவன், இல்லறத் தைக் கண்டவன், அதனுடைய சிறப்பைக் கண்டவன் தமிழன். ஆனால் தமிழனுக்கு திருமண உரிமை கிடையாது. சமஸ் கிருத சாஸ்திரத்திலே அவன் எழுதி வைத்ததிலே சூத் திரருக்கு திருமணம் கிடை யாது. சூத்திரன் அடிமை, அடிமையாக இருக்க ஆண்ட வனால் படைக்கப்பட்ட வன் என்று சொல்லப்பட்ட வன்.

எனவே சூத்திரனுக்கு திருமணம் கிடையாது, சூத்திர ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் அந்த சேர்க்கை அமெரிக்காவில் இருந்த நீக்ரோ அடிமை களுக்கு என்ன நிலைமை இருந்ததோ, அதைவிடக் கேவலம். அப்படி தமி ழனை கேவலப்படுத்திய வர்கள். அந்தக் கலாச்சாரம் - அந்தக் கலாச்சாரத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடி யாது என்ற எதிர்ப்புத்தான் திராவிட இயக்கம்.

நான் திராவிட இயக் கத்தைச் சேர்ந்தவன் என்ப தற்காக மற்ற எதையும் வெறுக்கவில்லை. ஆனால், திராவிட இனம் எவ்வளவு

மதிப்பிற் குரியதாக இருந் தது. எவ்வளவு உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றிருந் தது; எப்படி உலக நாடு களெல்லாம் பாராட்டக் கூடிய தகுதியை நாம் பெற் றிருந்தோம். அந்த நாகரிகம் எப்படி வீழ்த்தப்பட்டது, வைதீகம் நம்மை வீழ்த்தி யது. வருணாசிரம தர்மம் நம்மை அடிமையாக்கியது, புரோகிதம் நம்மை முட் டாளாக்கியது. பஞ்சாங்கம் நம்மை பைத்தியக்காரனாக் கியது. அவைகளிலிருந்து நாம் விடுதலை பெற வேண் டும் என்பதற்குத்தான் திரா விட முன்னேற்றக் கழகம், தந்தை பெரியாருடைய சுய மரியாதை இயக்கம், அதற் காகத் தான் துவங்கியது.

உள்ளபடியே இன்று இருக்கின்ற இளைஞர் களுக்கு தந்தை பெரியாரு டைய அருமை தெரியாது. எனக்கும் கலைஞருக்கும் பெரியாரைப் புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு இன்றைய இளைஞர் களுக்கு இருக்காது.

இன்று 40 வயதுக்குட் பட்டவர்கள் பெரியாரைப் பார்த்திருக்க மாட்டார்கள். பெரியார் இல்லை என்றால் இவ் வளவு பெரிய மாநாட்டிற்கு வித்து ஊன்றியிருக்க முடி யாது. இந்த எழுச்சி வந்தி ருக்காது. கலைஞரே ஒரு பெரிய எழுத்தாளராக, ஒரு பெரிய அரசியல் நிர்வாகி யாக, ஒரு பெரிய ராஜதந்திரி யாக வளர்ந்திருக்கமாட்டார். கலைஞருக்கே கூட சுயமரி யாதை உணர்வு அவருக்கு ஏற்படாமலிருந்தால், இந்த இயக்கத்திற்காக தன்னை ஒப்படைத்துக் கொள்ளக் கூடிய ஆர்வம் வந்திருக் காது.

சுயமரியாதை உணர்வு

தமிழ் ஓவியா said...


அந்த சுயமரியாதை எப்படி என்னை உயர்த் தியதோ, எப்படி கலைஞரை உயர்த்தியதோ, அதைப் போல உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். சுய மரியாதை உணர்வு நம்மை உயர்த்தும். சுயமரி யாதை உணர்வு நம்முடைய மனதுக்கு தெம்பைத் தரும். சுயமரி யாதை உணர்வு நம்முடைய மானத்தைக் காப்பாற்றும். சுயமரியாதை உணர்வு நம் முடைய சகோ தரிகளுடைய பெருமை யைக் காப்பாற் றும்.

சுயமரி யாதை உணர்வு நம்மை தமிழனாக்கும். சுயமரியாதை உணர்வு எவன் காலிலும் விழ வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாது. எனவே அந்த சுயமரி யாதை உணர்வை தந்தை பெரியார் நமக்குத் தந்தார். தந்தை பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை. அண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை. கலைஞர் இல்லை என்றால் நாமெல்லாம் இல்லை.

எனவே அதையெல்லாம் எண்ணிப் பார்த்து, ஒரு செய்தியை உங்களிடத்திலே படித்துக் காட்ட விரும்பு கின் றேன். அண்ணா சொன்னார், பெரியார் அறிவார், தாசராக உள்ள தமிழர் தரணி ஆண் டவர் என்பதும், தாசராக உள்ள தமிழர் என்றால் அடிமையாக உள்ள தமிழர் உலகை ஆண்டவர் என்பதும், தரணியாண்ட அந்தக் காலத்திலேயே தன்மானத்தை போற்றுங்கள் என்பதையும் பெரியார் அவர்கள் மிக நன்றாக அறிவார்கள்.

மானத் தையும் உரிமையையும் பெரி தெனக் கொண்ட தமிழர் களை சாதிப்பித்தும், வைதீக வெறி, பிறரை அடக்கி ஆளும் ஆணவம், சுரண்டிப் பிழைக் கும் சூது ஆகியவை அந்தக் காலத்திலே கிடை யாது என்பதும், களத்திலே கடும் போரிடும் வீரர்களான நம் தமிழர்கள் கபடர்களின் பொறியிலே வீழ்ந்தார்கள் என்பதும், கபடர் என்றால் வஞ்சகர். வஞ்சகர்களின் பொறியிலே வீழ்ந்தனர் என்பதும், மீண்டும் தம்மை உணரும் தன்மை பெற்று விட்டால் தமிழினம், தாங்கள் தாசர் ஆனதற்கான காரணத் தை கண்டறிந்து விட்டால், அவர்கள்

கொலை வாளினை எடடா
மிகக் கொடியோர் செயல் அறவே

- என்று முழக்கமிட்டுக் கிளம்புவோர் என்பதும், தமிழரின் இன்றைய நிலை தாழ்வுடையது, இடர் மிகுந் தது என்றபோதிலும், தங்கள் இனத்தைக் கெடுக்கும் கொள்கைகளை அவர்கள் நீக்கி விட்டால் `களை எடுத்த வயலாவர். விழித்தெழுந்த வேங்கையாவர் என்பதும் பெரியார் அறிவார்.

மனிதத் தன்மையை பெற்றுத் தருவதற்காக
தோன்றியது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்!

அதை அறிந்த காரணத் தால், மத நம்பிக்கை எனும் மாசு துடைத்திடுக, பழைமை பாசி போக்கிடுக, வர்ணா சிரமக் களைகளை நீக்கிடுக, கபடரின் பிடியைப் போக் கிடுக என்று கனிவுடன் கூறுகிறார் தந்தை பெரியார். கிளர்ச்சிக்காரர் பெரியார். சிந்தனைச் சிற்பியாக இருப்ப தாலேதான் அரசியல் என் றால் பஞ்சாயத்து போர்டி லிருந்து தொடங்கி பாராளு மன்ற உறுப்பினர் ஆவது என்ற இறுதி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என இடர்மிகுந்த காரியத்திலே இறங்கினார். ஒரு கவிதை படித்தேன்.

அது நினைவிற்கு வந்தது. அதைச் சொல்லுகிறேன். ஒருவரைப் பற்றி, அவர் இறந்துபோன போது, சொல்லுகிறபோது அவர் பஞ்சாயத்து தலைவ ரானார். ஊராட்சி ஒன்றியத் திற்கு தலைவரானார். சட்ட மன்ற உறுப்பினரானார். மந்திரியாகக் கூட ஆனார். ஒரு முறைகூட மனிதராக ஆகாமல் அவர் இறந்து போய் விட்டார். மனிதத் தன்மை இல்லாமலே பதவி கூட வகிக்கிறார்கள். அந்த மனிதத் தன்மை வேண்டும் என்பதை - பெரியாருடைய சுயமரியாதை இயக்கம், அந்த மனிதத் தன்மை நமக்குத் தருவதற்காகத்தான் தோன்றியது.

திருச்சி தி.மு.க. 10ஆவது மாநில மாநாட்டில் வரவேற்புக்குழுத் தலைவரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு வரவேற்புரை ஆற்றினார்.

அந்தப் பெரியார் இல்லையென்றால், நாம் இல்லை. தமிழர்களுக்கு வாழ்வு இல்லை. முன்னேற் றம் என்ற பாதையில் நாம் நடைபோட முடியாது. நம்முடைய காலுக்குக் கூட தெம்பு இருக்காது என்ற அந்த வகை யிலே தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அண்ணா சொன்னதை, அண்ணா அவர்களுடைய எழுத்துக்களை தயவு செய்து படித்துப் பாருங்கள். கலைஞரு டைய பழைய ஏடுகளை, நூல்களை எடுத்துப் படித்துப் பாருங்கள்.

இந்த உலகம் அறிவால்தான் வெல் லப்படுகிறது. அந்த அறிவு நம்மிடத்திலே இருந்ததை நாம் இழந்து விட்டோம். இருந்த ஆற்றலை இழந்து விட்டோம். நாம் பெற்ற வெற்றிகளை இன்றைக்கு தொடர்ந்து பெற முடியாத அளவிற்கு நாம் பலவீன மாகி விட்டோம்.

அதையெல்லாம் மாற்ற வேண்டுமானால் நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கின்றேன். நாம் பெரியார் வழியை மறக்கக் கூடாது. பெரியாரை ஒருநாளும் மறவாதீர்கள். அறிஞர் அண்ணாவை மற வாதீர்கள். கழகத்தை மறவா தீர்கள். கலைஞர் தலை மையை மறவாதீர்கள். தமிழ னாக வாழுங்கள், தமிழனாக வெல்லுவோம் என்று கூறி இந்த மாநாட்டை திறந்து வைத்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு தி.மு. கழகப் பொதுச் செயலாளர் பேராசி ரியர் க. அன்பழகன் அவர் கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/e-paper/75445.html#ixzz2tXKJrsm5

தமிழ் ஓவியா said...


பேய் மூடத்தனத்தை விரட்டு பி.சி. சர்க்கார் மகள் நடித்த திரைப்படம்


பேயை விரட்டுங்கள் (பூட்அட்ப்ஹாட்) என்கிற வங்க மொழிப்படத்தை இயக்குநர் அனுபிரட்டா தத்தா இயக்கி உள்ளார். மவ்பானி சர்க்கார் பகுத்தறிவாளராக நடித் துள்ளார். மெட்ராஸ் கபே படத்தின் நாயகன் அரிஜித் தத்தா சுவையான பாத்தி ரத்தில் நடித்துள்ளார். இப் படம் வெறுமனே மூடத் தனத்தைப்பரப்பும் பேய்க்கதை சொல்லும் படமன்று என்றும், வெகு மக்களை சிந்திக்கத்தூண் டும் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்றும்கூறப்படுகிறது.

பேங்கியோ பிக்ஞான் ஜுக்திபடி சமிதி வங்காள பகுத்தறிவாளர் அமைப் பின் முன் னோடி பிரபிர் முகர்ஜி. இவர் பல நேரங்களில் மூட நம்பிக்கையாளர்களுடனான நேரடி விவாதத்தில் பங் கேற்று மூடநம்பிக்கை யினை தோலுரித்துக்காட்டி உள்ளார். இத்திரைப் படம் குறித்து பிரபிர் முகர்ஜி கூறும்போது, இந்த படம் நம்பிக்கையையும், தொழில் நுட்பத்தையும் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

படத்தில் இயக்குநர் அனுபிரட்டா தத்தா கூறும் போது இந்த படம் வழக்க மான பேய் படம்போல் எடுக்கப்படவில்லை. பேய் குறித்த நம்பிக்கை உள்ள வருக்கும், பகுத்தறிவாளருக் கும் இடையே உள்ள வாதங்களை உள்ளடக்கி முற்றிலும் புதுமையான முயற்சியாக இப்படத்தை எடுத்துள்ளேன்.

இளமைக் காலந்தொட்டே பகுத்தறி வாளர் பிரபிர் முகர்ஜி எழுதிய பேய் என்று சொல் லப்படுவது ஒன்றும் இல்லை(“Bhoot Bole Kichhu nei”) என்கிற புத்தகம் உள் ளிட்ட ஏராளமாக அவரு டைய புத்தகங்களையும், கட்டுரைகளையும் படித் துள்ளதாலும், வேடிக்கை யான பேய் படங்கள், சஸ் பென்ஸ், சாகச படங்களைப் பார்த்தும் சாதாரண பேய்க் கதை சொல்லும் படமாக இல்லாமல் மாறுபட்ட கோணத்தில் எடுத்துள்ளேன் என்று கூறுகிறார்.

படத்தின் பகுத்தறிவாள ராக பாத்திரம் ஏற்று பேய் மாயையை உடைத்து எறி யும் மவ்பானி மேஜிக் நிகழ்ச் சிகளில் செய்ததுபோல் பற் பல இடங்களில் திடீரென தெரிவதும், பின் மாயமா வதுமான காட்சிகள் படத் தில் அவருக்கு கைகொடுத் துள்ளன. இந்த படத்தில் பகுத்தறிவாளர்களின் வாதத்தில் நின்று மதக் கருத்துக்களைத் தகர்க்கும் வண்ணம் என் பாத்திரம் அமைந்துள்ளது.

நான் நினைப்பது என்னவென் றால், பேய்கள் குறித்த எண் ணத்தை காண்பதைவிட அறிவைக் கொண்டே எண் ணிப்பார்க்க வேண்டும் என் கிறார் மவ்பானி.

பல்வேறு அதிசய படங்களை இயக்கிய பரன் பண்டியோபாத்யா கூறும் போது, இந்த படம், வங் காளத்திரைப்படங்களெல் லாம் காதல் படங்கள் என் பதை முறியடித்துள்ளது என்கிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/75443.html#ixzz2tXLPVtnh

தமிழ் ஓவியா said...


மோடீயில் பாசிசம்


- குடந்தையான்

தேநீருடன் அரட்டை என்கிற முறையில் இந்தியா முழுவதும் ஆயிரம் இடங்களில் தேநீர் கடைகளின் வாயிலாக மோடி பிரச்சாரம் துவக்கினார். ஆனால், தமிழ் நாட்டில் அதற்கு எந்தவித வரவேற்பும் இல்லை என டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் குடி அரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட் பாளர்கள் ஆங்காங்கே விவாதம் செய்வதைப்போல், இங்கேயும் அது போன்ற ஒன்றை தனியார் ஏஜென்சி மூலம் பாஜகவும் மோடியும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் செய்யத் துவங்கி உள்ளனர். இதற்கு யாரிடமிருந்து பணம் வருகிறது என்ற தகவலை பாஜகவும் சொல்வதில்லை; மற்றதற்கு எல்லாம், கேள்வி கேட்கும் ஊடகங்கள், இதைப் பற்றி எந்த கேள்வியும் கேட்பதும் இல்லை.

இந்த தேநீர் அரட்டையில், மோடியிடம் காணொலி மூலம் கேள்வி கேட்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், எந்த மாதிரியான கேள்வி கேட்கப்பட வேண் டும் என்பதை, அந்த கடையில் உள்ள பாஜகவினர் தேர்வு செய்த பின்னர் தான், கேட்க முடியும்.

இது மட்டுமல்ல; ஊடக நிருபர்கள், மோடியை சங்கடப்படுத்தும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்றும், மீறி கேட்பவர்கள் உரிய வகையில் கவனிக் கப்படுவர் என்றும், அத்தகையவர்களின் பெயர் களங்கப்படுத்தப்படும் என்றும் மிரட்டப்பட்டுள் ளார்கள் என மத்திய அமைச்சர் மனீஸ் திவாரி செய்தி வெளியிட்டுள்ளார்.

அண்மையில் வெண்டி டோனிகர் எழுதிய புத்தககம் இந்துக்கள்; ஒரு மாற்று வரலாறு எனும் ஆங்கில நூல் (Wendy doniger’s the hisdus an alternative history) பென்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட் டது. அந்த நூல் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவ தாக ஆர்ப்பாட்டம் செய்து, புத்தகத்தை திரும்பப் பெற வைத்துள்ளனர்.

மோடிக்கு எதிராக கட்டுரைகளை எழுதும் கட்டுரையாளர்கள், அந்த நிறுவனங்களிலிருந்து விலக்கப்பட்டு வருகின்றனர். வித்யா சுப்ரமணியன், சித்தார்த் வரதராஜன், சகரிகா கோஸ், நிகில்வாக்லே, ஹர்தோஸ் சிங் போல் என சிறந்த செய்தியாளர்கள், சிலர் நீக்கப்பட்டுள்ளனர்; சிலர் மிரட்டப்பட் டுள்ளனர்.

தங்களது கருத்துக்கு மாறான கருத்தை கூறுபவர் களுக்கு, பதில் கருத்து சொல்லாமல், அவர்களை தாக்குவது, கொல்வது என்பது ஆர்.எஸ்.எஸ். வழிமுறை. இந்த பாசிச முறையைத் தான் மோடியின் தேநீர் அரட்டையும் செய்து வருகிறது.

Read more: http://viduthalai.in/page-2/75437.html#ixzz2tXLuHYGf

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி


பெரியார் விருது தமிழர்களைத் தூக்கி நிறுத்தக் கூடியது! தமிழர் தலைவர் பாராட்டுரை

சென்னை, பிப். 16- நம் கலைஞர்களுக்கு, நம் எழுத் தாளர்களுக்கு தந்தை பெரி யார் முத்தமிழ் மன்றம் அளிக் கும் பெரியார் விருது தமிழர் களை அடையாளம் காட்டும் விருது - தூக்கி நிறுத்தும் விருது என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

18.1.2014 அன்று சென்னை பெரியார் திடல் எம்.ஆர். ராதா மன்றத்தில் முத்தமிழ் மன் றம் சார்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் பொங்கல் விழாவில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட் டுரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

நாமெல்லாம் இதுவரையில் அனுபவித்திராத ஒரு இளைப்பாறுதல்!

மிகுந்த மகிழ்ச்சி, கல கலப்பு முத்தமிழ் மன்றத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு மிகப்பெரிய வாய்ப்பு என்கிற அளவில், நாமெல்லாம் இது வரையில் அனுபவித்திராத ஒரு இளைப்பாறுதல் ரிலாக் சேசன் என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை இளைப்பா றுதல்.

தமிழ் ஓவியா said...

வேலையில் இளைப் பாறிக் கொள்ளும் வகைக ளில், இந்தக் குளிர்காலத் திலும் மிகப்பெரிய அள விற்கு, உணர்ச்சியோடு நாம், நம்மை மறந்திருந்த கால கட்டத்தினை சற்று முன்னர் இந்த அரங்கம் சந்தித்திருந் தது. அவ்வளவு பெரிய வாய்ப்பை உருவாக்கிய இந்த நிகழ்ச்சியின் தலைவர் அய்யா ராஜரத்தினம் அவர் களே,

பாராட்டுக்கும், பெரு மிதத்திற்கும் உரிய பெரியார் விருதாளர்கள் அருமை இத ழாளர் நிழல் திருநாவுக்கரசு சோழநாடன் அவர்களே,

இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி அவர்களே, தோழர் பிரியா பாபு அவர் களே, இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய மான மிகு இறைவி அவர்களே, வரவேற்புரையாற்றிய தெற்குநத்தம் சித்தார்த்தன் அவர்களே, அறிமுக உரை யாற்றிய வழக்குரைஞர் வீர மர்த்தினி அவர்களே, கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களே, செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களே, நன்றியுரை கூற இருக்கக்கூடிய மானமிகு சத் தியநாராயணன் அவர்களே, அரங்கம் முழுவதும் நிறைந் திருக்கக்கூடிய தாய்மார் களே, அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்திற்கு - பதிப்பிக்கப் படவேண்டும்

மிகப்பெரிய அளவிலே இந்த வாய்ப்பினை நாம் பெற்றிருக்கிறோம். தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் தன்னுடைய 20 ஆம் ஆண்டு விழாவில், இப்படி ஒரு அற்புதமான புதையல்கள், நம்முடைய உறவுகள் பெரு மைப்படக்கூடிய ஆற்றலா ளர்கள்; இவர்கள் எல்லோ ரையும் அடையாளம் கண்டு பிடித்து அவர்களுக்கு இந்தப் பெரியார் விருது வழங்கப் படுகிறது என்று சொன்னால், நேற்றுகூட நான் சொன் னேன்; அவர்கள் உயர்ந்தவர் கள்;

மேலும் அவர்களுடைய உயரம் தெரியவேண்டும் உல கத்திற்கு - பதிப்பிக்கப்பட வேண்டும் - அவர்களுடைய உழைப்பினாலே, அவர்களு டைய ஆற்றலினாலே - இங்கே பிரியா பாபு அவர்கள் அழகாக ஒரு முழக்கத்தினை எழுப்பினர். ஒரு புரட் சிப் பெண்மணி; இதுவரை யில்,

நம்முடைய பெண் களைப்பற்றி பேசும்பொழுது கூட, பாரதியார் கண்ட புதுமைப் பெண், புதுமைப் பெண் என்றுதான் பேசுவார் கள்; நாங்கள் அதனை மாற்றி னோம். பாரதியார் கண்டது புதுமைப்பெண்தான்; நாங்கள் அதனை மறுக்க வில்லை. ஆனால், பெரியார் கண்டது புரட்சிப் பெண், அதுதான் மிக முக்கியம். பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணாக இருக்கிறார் பிரியா பாபு அவர்கள்.

தமிழ் ஓவியா said...


ஏன் நாங்கள் முதலாவதாக இருக்கக்கூடாதா?

அவர்கள் இங்கே உரை யாற்றியபொழுது, ஒரு கொட்டு வைத்தார்; தெளி வாக சொன்னார். இந்த மேடைதான் அப்படிப்பட்ட துணிச்சலைத் தருகின்ற பெரியார் மேடை. பிரியா பாபு அவர்கள் அழகாகச் சொன்னார்; நாங்கள் மூன்றாவதாக அல்ல; ஏன் நாங்கள் முதலாவதாக இருக் கக்கூடாதா? ஆண்கள்தான் முதலாவதாக இருக்கவேண் டுமா? இன்னும் ஆண்களின் ஆதிக்கம்தான் தொடரவேண் டுமா? என்று துணிச்சலாகக் கேட்டார். அந்தத் துணிச் சலைத் தந்தவர்தான் தலை வர் தந்தை பெரியார் அவர்கள்.

எனவேதான், பெரியார் உருவமே அவர்களுக்கு நினை வுப் பரிசாக வழங்கப்பட்டி ருக்கிறது. இந்தத் துணிச்சலை மறந்துவிடாதீர்கள். உலகத் தின் எந்த மூலைக்குப் போனா லும், அந்தத் துணிச்சல் உங் களுக்கு வழிகாட்டும். நாம் எல்லாம் நாவினால் பேசுகி றோம்; சிவமணி அவர்கள் விரல்களால் பேசுகிறார். அவரைப் பெற்றெடுத்த தாய் அதனைக் கண்டு மகிழ்கின்ற காட்சி இருக்கின்றதே, வள்ளு வருடைய குறளுக்கு இது இலக்கணம்.

ஈன்றபொழுதிற் பெரிது வக்கும் தன் மகனைச் சான் றோன் எனக் கேட்டதாய்

நம்மையே கைதட்ட வைத்துவிட்டாரே...

நம்முடைய டிரம்ஸ் சிவ மணி அவர்களுடைய தாயார் பெயர் லட்சுமி அம்மாள் அவர்கள். வடசென்னையில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த டிரம்ஸ் சிவமணி அவர்கள், இன்றைக்கு உலகத்தையே தன்னுடைய இசையால் மயங்க வைத்திருக்கிறாரே, இந்த அரங்கத்திலுள்ளவர் களை கைதட்ட வைத்து விட்டார்; நம்மையே கைதட்ட வைத்துவிட்டாரே, நம்மை மறந்தோம்; இதுதான் இசையினுடைய சிறப்பு.

இசை என்றால் புகழ் என்ற ஒரு பொருள் உண்டு. ஈதல் இசை பட வாழ்தல்.

எனவே, இசை, இசை யோடு சேர்ந்திருக்கிறது; புகழோடு சேர்ந்திருக்கிறது. காரணம், அவருடைய ஆற்றல்.

தமிழ் ஓவியா said...

அதேபோல, புதை பொருள்களையெல்லாம் வெளியே கொண்டுவரக் கூடிய பணியைச் சிறப்பாக செய்தவர் சோழநாடன் நிழல் திருநாவுக்கரசு அவர்கள். அவருடைய நூலை நான் படித்திருக்கிறேன். அண்மை யில்கூட நாங்கள் எங்களு டைய வீட்டில் அந்த புத்தகத் தைப் படித்தோம். திருநங் கைகளை எப்படி ஒதுக்கி வைத்திருக்கிறார்களோ, அதுபோல, தேவதாசிகள் என்று சொல்லி, நம்முடைய இன சகோதரிகளையெல் லாம் எவ்வளவு கொச்சைப் படுத்த முடியுமோ,

அவ் வளவு கொச்சைப்படுத்தி இருந்ததை, ஒழித்த இயக்கம் தந்தை பெரியாருடைய இயக்கம். கலை என்ற பெயராலே, தேவதாசிமுறை மீண்டும் உருவாகவேண்டும் என்று இப்பொழுது ஆரியம் ஒரு புது முயற்சியை செய்து கொண்டிருக்கிறது. கலைக் குப் புத்துயிர் வேண்டும்; கலை நசிந்துவிடக்கூடாது என்று. அந்த முயற்சியை நாம் முறியடிப்போம்!

எல்லோருக்கும் சமத்துவம் வழங்கவேண்டும்

திருநங்கை என்று சொல் கிறபோதே, நங்கைகள் என்பதைவிட, இன்னும் தெளிவாக, ஏன் மூன்றாவது? ஏன் தனி ரகம்? அதுபோல் இருக்கக்கூடாது. ஒரே வகை தான். அதில் ஒன்றும் சந்தேக மில்லை. பெண்கள் என்று சொன்னால், இவர்களும் சேர்ந்தவர்களே தவிர, வேறொன்றுமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஆண்கள் - பெண்கள் சமத்து வம் என்று வருகின்ற நேரத் தில், எல்லோருக்கும் சமத் துவம் வழங்கவேண்டும் என்று சொல்கின்ற நேரத்தில், சமத்துவத்தை நடைமுறை யில் காட்டுவதற்கு அடை யாளங்களாக அவர்களைப் பார்க்கவேண்டுமே தவிர, சமுதாயத்தில் அவர்களை ஒதுக்கப்படக் கூடியவர் களாக ஒருபோதும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

அவர்கள் எழுதுவதற்குக் கூட நல்ல ஒரு புனை பெய ரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று இங்கே படித்தார்கள். அர்த்தநாரீஸ்வரர்.

தமிழ் ஓவியா said...

அர்த்தநாரீஸ்வரரை கும்பிடுகின்ற நாட்டில் அரவாணிகள் ஏன் ஒதுக்கப்படவேண்டும்?

கற்களைக் கொண்டு போய் அதற்கு மரியாதை காட்டுகிறான். கல்லாக இருந்தால் தீபாராதனை காட்டுகிறான்; கீழே விழுந்து கும்பிடுகிறான். அர்த்த நாரீஸ்வரரைக் கும்பிடுகின்ற நாட்டில் அரவாணிகள் ஏன் ஒதுக்கப்படவேண்டும்? இந்த இயக்கம் வந்ததினால் தானே திருநங்கை ஆனார் கள். திருநங்கை, வெறு நங்கை, பெருநங்கை எதுவும் தேவை யில்லை. எல்லாம் நங்கைகள் என்று சொல்லக் கூடிய அள விற்கு சமத்துவ வாய்ப்புகள் வரவேண்டும். ஆணுக்கும், பெண்ணுக்குமே பேதம் இருக் கக் கூடாது; அதைத்தான் பெரி யார் சொன்னார்.

தமிழ் ஓவியா said...

இங்கே சுருக்கமாக ஒன்றை சொல்லிக்கொள்கி றேன். இந்த நாட்டில் இருக் கின்ற ஆதிக்கவாதிகள் எல் லாம் தங்களிடம் இருக்கின்ற ஆற்றல் தங்களுக்கு மட்டும் இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள், ஏகபோகம். ஆனால், இது எல்லோருக் கும் கிடைக்கவேண்டும். எல்லாருக்கும், எல்லாமும்; இதுதான் சுயமரியாதை இயக்கம்; பெரியாருடைய இயக்கம். அனைவருக்கும் அனைத்தும்.

வல்லவனுக்கு புல்தான் ஆயுதமாக இருந்தது; ஆனால், எங்களுடைய தோழர்களுக்கு எல்லாமே ஆயுதம்!

உலகளாவிய புகழ்பெற் றவர் டிரம்ஸ் சிவமணி அவர்கள். இங்கே வந்தார், இசையை வாசித்தார்; அவரு டைய திறமையை எல்லோ ரும் வியந்து பாராட்டிக் கொண்டிருந்தோம். பிரியா பாபு அவர்களின் மகள் இங்கே பாடுவதற்கு வந்த வுடன், யாரும் சொல்லவில் லையே, டிரம்ஸ் சிவமணி அவர்களே வந்து, வாசித் தாரே, ஒத்திகை ஒன்றும் பார்க்கவில்லையே. வல்லவ னுக்கு இதுவரையில் புல் தான் ஆயுதமாக இருந்தது; ஆனால், எங்களுடைய தோழர்களுக்கு எல்லாமே ஆயுதம்; அதுதான் மிக முக்கியம். புல் ஆயுதம் ஆகி நாட்டில் மிகக் கோளாறு நடக்கின்றது. ஆனால், இந்த ஆயுதங்களால், நாட்டில் விழிப்புணர்ச்சி வரும், மறுமலர்ச்சி வரும், புதுமை வரும், புத்தாக்கம் வரும்.

தமிழ் ஓவியா said...

முதுகெலும்பு இல்லாதவர்களுக்கெல்லாம் முதுகெலும்பு தந்தவர்தான் தந்தை பெரியார்

ஆகவே, இவர்களுக்குக் கொடுத்த விருதுகள் இருக் கின்றதே, அந்தப் பெரியார் விருது மற்ற விருதுகளோடு சேர்ந்ததல்ல; தூக்கி நிறுத்தக் கூடியது. முதுகெலும்பு இல்லாதவர்களுக்கெல்லாம் முதுகெலும்பு தந்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள். பல பேர் நம் நாட்டில் பிறந் திருக்கிறார்களே தவிர, முது கெலும்பு என்று ஒன்று இருக் கிறது என்பது அவர்களுக்கு ஞாபகம் வரவில்லை. மான மும், அறிவும் உள்ள மக் களாக இந்த மக்களை ஆக்க வேண்டும் என்று சொன்ன வர் தந்தை பெரியார். ஆகவே, அதற்குக் கலை பயன்படவேண்டும். டிரம்ஸ் சிவமணி அவர்கள் இங்கே வந்து அந்தப் பாடலுக்கு வாசித்தது மட்டுமல்ல; நான் அவருக்கு வாய்ப்பு கொடுப் பேன் என்று சொன்னார். இது தான் பரவலாக வேண்டும்.

டிரம்ஸ் சிவமணி அவர் களோடு நான் உரையாடிக் கொண்டிருந்தபோது, உங்க ளுடைய ஆற்றலால் இளை ஞர்களைத் தயாரிக்கவேண் டும் என்று சொன்னேன்.

தமிழ் ஓவியா said...


அதற்கு டிரம்ஸ் சிவமணி அவர்கள் பதில் சொன்னார், நான் மும்பையில் இருந்த பொழுதும் சரி, இங்கே கடற்கரைக்குச் சென்று பயிற்சி எடுக்கும்பொழுதும் சரி, சாதாரண அடித்தட்டு இளைஞர்கள் இருக்கிறார் கள் பாருங்கள், அந்த இளை ஞர்களை எல்லாம் அருகில் வைத்துக்கொண்டு, என்னு டைய கண்களைக் கட்டிக் கொண்டு, நான் பயிற்சி கொடுப்பேன் என்று சொன் னார்.

பெரியார் கொள்கையின் தாக்கம்தானே!

இசை என்றால் உங்களுக் குப் புரியாது என்று சொன் னான்; உங்களுக்கு வராது என்று சொன்னான்; படிக்கக் கூடாது என்று சொன்னான்; ஆனால், அத்தனையையும் உடைத்த பெருமை தந்தை பெரியார் அவர்களுக்குத் தான். பெரியாருடைய வெற் றிகள் பல பரிமாணங்களில் உண்டு. நேரடியாக அவர்க ளுக்குப் பெரியார் கொள் கைகள் தெரிந்தும் இருக் கலாம்; தெரியாமலும் இருக் கலாம். ஆனால், அவர்கள் இன்றைக்கு நடைமுறைப் படுத்துவதே பெரியார் கொள் கையின் தாக்கம்தானே - எல்லாருக்கும் எல்லாமும் என்பது.

ஆகவேதான், எம் இனத்தை இனிமேல் வீழ்த்த முடியாது; சூழ்ச்சிகளால், வஞ்சகத்தால் ஒருபோதும் ஏய்க்க முடியாது.

கொடுக்கப்பட்ட விருது, கைகளில் வழங்கப்பட்டிருக்கின்ற வீரவாள்!

குன்றெடுத்த பெருந் தோளான், கொடைகொடுத்த கையான், அன்று அந்த இலங்கை ஆண்ட வேந்தன் என்று புரட்சிக்கவிஞர் அவர் கள் சொன்னார்களே, அது போல, வேந்தர்களுக்கு வேந் தர்களாக, வித்தகர்களாக வந்திருக்கின்ற மூவரும் இன்றைக்கு விருந்திட்டு இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விருது, கைகளில் வழங்கப்பட்டிருக் கின்ற வீரவாள் என்ற பெரு மையை அவர்களுக்கு எடுத் துச் சொல்லி, நீங்கள் எழுச்சி பெறுவதற்கு இது ஒரு திருப் பம். அந்தத் திருப்பம் வர வேண்டும்.

பாராட்ட வேண்டியவர்களைப் பாராட்டுங்கள்!

அதுபோலவே, இங்கே கருவிகளை வைத்திருக் கின்ற தோழர், அவருடைய இசையை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய அளவில் பாபநாசம் அருகில் உள்ள கபிஸ்தலத்தில் இதேபோன்று பொங்கல் விழாவில், பார்க்கக்கூடிய, சுவைக்கக்கூடிய, கேட்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ஆகவே, அப்படிப்பட்ட அவ ருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைச் சொல்லி, இவர்கள் எல்லாம் உற்சாகம் மிகுந்த அரங்கமாக இந்த அரங்கத்தை ஆக்கி இருக் கிறார்கள்.

இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சோம்பல் என்னவென்றால், கூட்டத் தில்கூட கைதட்டுவது கிடை யாது. எவ்வளவுக்கெவ்வ ளவு கைதட்டாமல் இருக் கிறானோ, அவ்வளவுக்கவ் வளவு அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருக் கிறான். மனிதர்களுக்கு உணர்ச்சி வரவேண்டும் என் றால், உணர்ச்சியோடு மனி தர்கள் வாழுகிறார்கள் என் றால், பாராட்ட வேண்டிய வர்களைப் பாராட்டுங்கள்;

அந்த அளவிற்கு இந்த மூவரும் இன்றைக்கு மூன்று துறைகளில் ஒரு புதுமையை உருவாக்கிய புரட்சியாளர் கள். எனவே அனைவரும் எழுந்து நின்று, மீண்டும் கைதட்டி, அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு மரியாதை யைச் செய்யவேண்டும் என்று கேட்டு, தொடர்ந்து நாம் அனைவரும் கைதட்டி, (எல்லோரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள், கடல் அலைகள்போல) அவர்களுடைய ஆற்றல் பெருகட்டும், பெருகட்டும் என்று சொல்லி, வாழ்க பெரியார்! வளர்க பகுத் தறிவு!! நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/75427.html#ixzz2tXMS5gkJ

தமிழ் ஓவியா said...


அறந்தாங்கி அருகே பள்ளிகளுக்கு பெரியார் படம் வழங்கப்பட்டது


புதுக்கோட்டை பிப். 16- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த எருக் கலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிக்கு தந்தை பெரியார் படம் வழங் கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அறந் தாங்கி ஒன்றியக் குழுத் தலை வர் மெய்யநாதன் தலைமை வகித்தார். பள்ளியின் தலை மையாசிரியை கலைச்செல்வி அனைவரையும் வரவேற் றார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாலதி, புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அறிவொளி சிதம்பரம், கழக அமைப்பாளர் செல்வரெத் தினம், எருக்கலக்கோட்டை அரசு உயர் நிலைப் பள்ளி யின் தலைமையாசிரியர் சிறீ தரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ் ஓவியா said...


எருக்கலக்கோட்டை தொடக்கப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, குருந்திரக் கோட்டை, குன்னக்குரும்பி, சிதம்பரவிடுதி, ஈராசேந்திர புரம், மேற்பனைக்காடு ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் அறந்தாங்கி பெரியார் பெருந்தொண்டர் கு.கண்ணுச்சாமி வழங்கிய பெரியார் படங்களை திரா விடர் கழகத்தின் செயல வைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்கள் பள்ளித் தலை மையாசிரியர்களிடம் வழங்கி வாழ்த்திப் பேசினார்.

அப் போது அவர் ஆசிரியர் என்றால் குற்றம் இல்லாதவர் என்று பொருள். உபாத்தியா யர் என்ற சொல்தான் மருவி வாத்தியார் என்று வந்து விட்டது. ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை என்பதால் கோபம் கொண்டதால்தான் தந்தை பெரியார் அவர்கள் எல்லோரும் ஆசிரியர்களாக இல்லாமல் வாத்தியார்களா கவே இருக்கிறார்கள் என் றார். நம் மூடத்தனத்தைப் போக்க மீண்டும் பெரியார் இம்மண்ணில் பிறக்க வேண் டும்.

அவர் படித்ததே மொத் தம் மூன்று ஆண்டுகள்தான். ஆனால் உலகின் பல நாடு களில் தந்தை பெரியாரின் கருத்துகளையும், பேச்சுக ளையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு வீரியமான கருத்துகளைக் கொண்டது.

அவர் பள்ளியில் படித் துக் கொண்டிருந்தபோது பள்ளியில் இருந்து மூன்று வீடுகள் தள்ளியிருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்தார். அப்போது தண்ணீர் கொடுத்த பெண்மணி இவர் தண்ணீர் குடித்த பாத்திரத்தைக் கழுவி விட்டு வீட்டுக்குள் எடுத்துச் சென்றார். அதே போல் இன் னொரு நாள் ஒரு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்த போது அவர்கள் கழுவ வில்லை. அப்போது சிந்தித் துப் பார்த்தபோது தன் வீட் டில் தன் தாயார் பலருக்கும் தண்ணீர் குடிக்கக் கொடுத்த பிறகு அந்தப் பாத்திரத்தைக் கழுவிச் சென்றதைக் கவனித் திருக்கிறார்.

தன் வீடு உயர்ந்ததென்று நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். மற்ற இடங்களுக் குச் செல்லும்போது அங்கு தாழ்த்திப் பார்க்கிறார்கள். அது இஸ்லாமியர்களிடம் இல்லாமலிருக்கிறது. இந்துக் களிடம் ஜாதி வேறுபாடு ஊன்றியிருக்கிறது. அங்குள் ளதைக் களைய வேண்டும் என்பதைக் கண்டுபிடித்திருக் கிறார்.

அதேபோல் தமிழர் தலை வர் வீரமணி அவர்கள் படித் துக் கொண்டிருந்த காலத்தில் ஆய்வுக்காக அதிகாரி வந் திருக்கிறார். அப்போது திருக் குறள் தெரிந்த மாணவர்கள் சொல்லுங்கள் என்று கேட்ட போது அதை மனப்பாடமாக ஒப்பித்தவர் தமிழர் தலைவர் அவர்கள் மட்டும்தான். அதற் காக அவருக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அதைப் பரிந்துரை செய்தவர் முருகேச முதலியார் என்ப வராவார். இதைச் சொல்லக் காரணம் அந்தக் கால கட்டத் தில் பாடத்திட்டத்தில் திருக் குறள் கிடையாது. அதன் பிறகுதான் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதுவரை திருக்குறள் தெரியாத மாண வர்களாகத்தான் கல்வித்துறை வளர்த்து வைத்திருந்தது.

பெரியாரைப் பற்றி எல் லோரும் அறிந்திருக்கிறோம். அவரைப் பின்பற்றி அவரது கருத்துகள் எல்லாவற்றை யும் எடுத்துக் கொள்ள வேண் டும் என்பதில்லை. அவரது கருத்துகளில் எத்தனை சத வீதத்தை எடுத்துக் கொள்ள முடியுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

எந்தளவுக் குப் பின்பற்ற முடியுமோ அந்தளவுக்குப் பின்பற்றுங் கள். ஒரு காலத்தில் நூல் படிக்க வேண்டும் என்றால் நூல் அணிந்திருக்க வேண்டும். இன்று படித்து அனைவ ரும் உயர்ந்த இடத்தில் உயர்ந்த நிலை யில் இருக்கிறோம். சென்னை ராஜதானியில் 15 பேருக்கு 14 பேர் அவாளா கத்தான் இருந் தார்கள். சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிறகுதான் உயர முடிந்திருக்கிறது.

ஆசிரியர்கள் பெரியா ரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவரது சீர்திருத் தக் கருத்துகள் மட்டுமல் லாது அவரது அனைத்துப் பணிகளையும் அறிந்தால் தான் மாணவர்களுக்குப் போதிக்க முடியும். 1717-ஆம் ஆண்டு சீகன் பால்யு என்ற மதபோதகர் ஏற்படுத்திய பள்ளியில்தான் நாங்கள் பயின்றோம். பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்று நடந்து வருகிறோம்.

அதைப் போல் மாணவர்கள் படிக் கும் பள்ளி எதுவானாலும் நல்ல பகுத்தறிவு வழியில் சிந்திக்க ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். எந்தப் பதவிக்கும் இல்லாத பெருமை ஆசிரியர் பணிக்கு இருக்கிறது என்றால் அதற் குக் காரணம் எந்தப் பதவி யில் இருப்பவர்களும் நான் இந்த ஆசிரியரிடம்தான் படித் தேன் என்று உயிருள்ளவரை நினைவூட்டிக் கொண்டே யிருப்பார்கள்.

அந்தப் பெருமை மற்ற எந்த உயர் பதவிகளில் இருப்பவர் களுக்கும் கிடைப்பதில்லை. எனவே ஆசிரியர்கள், மாண வர்களை அறிவுள்ளவர் களாக நற்பண்புள்ளவர்க ளாக சிந்தனையாளர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அந்தப் பொறுப்பு ஆசிரியர் சமுதாயத்துக்கு உண்டு. இவ்வாறு செயலவைத் தலை வர் சு.அறிவுக்கரசு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இறுதியாக உரையாற்றிய உதவித் தொடக் கக் கல்வி அலுவலர் மாலதி பேசும்போது: நான் பணியில் இருந்தாலும் தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனாலும் பெரியாரின் கொள்கைகளை முழுவதுமாகப் பின்பற்ற வாய்ப்புகள் அமையவில்லை. எனது ஆச்சரியம் இன்னும் அதிகமாகிக் கொண்டு போகி றது. என்னவென்றால் தஞ்சை வல்லத்தில் உள்ள நமது பல் கலைக் கழகத்திற்குப் போயி ருக்கிறேன்.

அங்குள்ள மாண வியரைப் பார்த்திருக்கிறேன். அவர்களது உடையலங்காரம் பண்பு நாகரீகம் எளிமை மற்ற வர்களிடம் நடந்து கொள்ளும் விதம் எல்லாவற்றையும் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். அதே நேரத்தில் பெயர் சொல் லக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்ற போதிலும் சொல்லாமலும் இருக்க முடிய வில்லை. அதே சாலையில் உள்ள சாஸ்த்ரா கல்லூரியில் இருந்து வரும் மாணவியரிடம் இதுபோன்ற குணங்களைப் பார்க்க முடியவில்லை.

அதிலி ருந்தே தெரியும் தந்தை பெரி யாருக்குப் பின் அவரது கொள் கைகளைப் பின் பற்றி வருப வர்கள் இளைய சமுதாயத்தை யும் மாணவ மாணவியரையும் வளர்த்து வரும் விதம். என் போன்றவர்களுக்குக் கொஞ் சம் சிரமமாக இருந்தாலும் பெரியார் வழியே சிறந்த வழி என்பதை மாணவர்கள் மட்டு மல்ல ஆசிரியர்களும் உணர வேண்டும் என்றார்.

அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவர் மெய்யநாதன் பேசும்போது இன்றைக்கு நான் இந்தப் பொறுப்பு வகித்தாலும் பகுத்தறிவுக் கொள்கைகளை எனது மாணவப் பருவத்தி லேயே விதைத்து வளர்த்தவர் அன்றைக்கு எங்களுக்குத் தமிழாசிரியராகவும் இன் றைக்கு புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவராகவும் இருக்கும் அறிவொளி அவர்கள்தான்.

நம்நாட்டில் இருக்கும் மூடக் கருத்துகளைப் போக்கும் பணி நம் அனைவருக்கும் இருக் கிறது. பெரியார் மீண்டும் இந்த மண்ணில் பிறக்க வேண்டும். அவரது தேவை இன்னும் இருக்கிறது என்றார்.

Read more: http://viduthalai.in/page-4/75429.html#ixzz2tXN2FJI0

தமிழ் ஓவியா said...


மோடியின் ராஜ்ஜியத்தில் காதலர்கள் பட்டபாடு பஜ்ரங்தள வெறியர்களின் அட்டூழியம்

அகமதாபாத்,பிப்.16- பஜ்ரங்தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்(வி.எச்.பி) அமைப் பினர் கடந்த 14.2.2014 அன்று காதலர் தினத்தை கொண்டாடிய காதலர்கள் மீது அழுகிய தக்காளிகளை எறிந்தார்கள்.

குஜராத்தின் அகமதா பாத்தில் உள்ள சபர்மதி ஆற்றின் அருகே வெறியர் கள் இவ்வாறு செய்தனர். அப்போது காதலர்கள் தங் களைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஒடினர்.

அப்போது பெருமளவில் திரண்ட பஜ் ரங் தள அமைப்பினர் காத லர்களின் வாகனங்களைப் பறிக்க முயன்றனர். இந்த அட்டூழியம் குறித்து காவல் நிலையத்தில் ஏதும் புகார் செய்யப்படவில்லை. சபர் மதி ஆற்றில் நூற்றுக்கணக் கான காதலர்கள் குவிந்தி ருந்தனர். அவர்கள் காதலர் தினத்தை கொண்டாடுவதற் காக அங்கு வந்திருந்தனர்.

காதலர் தினத்தை எதிர்த்து பஜ்ரங்தளம் அமைப்பின ரும் வி.எச்.பி.யினரும் அக மதாபாத் நகரில் போராட் டம் நடத்தினர். நகர பஜ்ரங் தள தலைவரான ஜ்வாலித் மேத்தா காதலர்களைக் கடு மையாக வசை பாடினார். காதலர் தினத்தை பல மாண வர்கள் வரவேற்றனர்.

சில மாணவர்கள் மட்டும் பஜ் ரங்தள அட்டூழியத்திற்கு பயந்து அவர்களுடன் வந் திருந்தனர். இதுகுறித்து அந்த வெறி யர்கள் கூறுகையில், எங்களது போராட்டத் திற்குச் சில மாணவர்கள் ஆதரவு தந்தார்கள் என்று பெருமை பொங்க கூறிக் கொண்டனர்.

இந்த வெறியர்கள் தாக் குதல் நடத்தியபோதும் பல காதலர்கள் சபர்மதி ஆற்றில் குவிந்து தங்களது துணை யோடு பேசி மகிழ்ந்தனர். காதலர்களை தாக்கிய பஜ்ரங் தள வெறியர்களும், வி.எச். பி.யினரும் பின்னர் தங்களது வெறி அடங்காமல் காதலர் தின அட்டைகளை தாக்குதல் நடத்திய இடத்திலேயே எரித்தனர்.

காதலர்கள்மீது தாக்குதல்

அகமதாபாத் மட்டு மின்றி, ஜம்மு, அய்தராபாத் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் பஜ்ரங்தளம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரி வார அமைப்பினர் காதலர் கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.

Read more: http://viduthalai.in/page-8/75424.html#ixzz2tXNc1Ssq

தமிழ் ஓவியா said...


பேராசிரியரின் இன முழக்கம்


- குடந்தைக் கருணா

திமுகவின் 10-ஆவது மாநில மாநாட்டினை துவக்கி பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையில், இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணை யற்ற சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரைப் பற்றி, இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், கூறிய கருத்துகள், சிறப்பானவை; இன்றைய கால கட்டத்திற்கு தேவை யானவை.

பெரியாரின் சுய மரியாதை இயக் கம் துவங்கி, அந்த உணர்வை நமக் குத் தரவில்லை என்றால், அண்ணா இல்லை; கலைஞர் இல்லை; நாமெல் லாம் இல்லை என்றாரே பேராசிரியர், அது அங்கே கூடியிருந்த லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு மட்டு மல்ல; தமிழகத்திலே வாழும் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களாக இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

பெரியாரின் சுயமரியாதை இயக் கம், இன விடுதலை, வர்ணாசிரம எதிர்ப்பு, மனித நேயம் அனைத்தும் மனிதனை, மனிதனாக ஆக்கும் செயல்பாடு என்பதை பேராசிரியர் வரிசைப்பட எடுத்துக்கூறி, மாநாட் டிற்கு ஒரு புதிய சிந்தனையை விதைத் தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்த லில், நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தைவிட, சமுதாய நோக்கில் தான் எனப் பேராசிரியர் கூறியது பதவியை நோக்கி மட்டும் கட்சியில் சேரும் பலருக்கும் ஓர் எச்சரிக்கை! தமிழ் நாட்டின் அரசியல் நட வடிக்கைகள், கட்சிகளுக்கிடையே யான போட்டியாக அல்லாமல் ஆரியர் திராவிடர் போராட்டமாகத் தான் நடைபெற்று வருகிறது.

அதனால் தான், திமுகவை அழித் திட ஊடகங்களும், பார்ப்பனர் களும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியை, தனது பேச்சின் மூலம், இனமானப் பேரா சிரியர் அன்பழகன், திமுகவின் தொண்டர்களுக்கு, குறிப்பாக, இளை ஞர்களுக்கு, வகுப்பு எடுத்தது போல், கூறியுள்ளார்.

பெரியாரின் சிந்தனைகளை நெஞ் சில் ஏந்தி, பேராசிரியரின் இன முழக்கம் செயல்படுத்திட இளைஞர் கள் திரளட்டும்.

Read more: http://viduthalai.in/page-2/75465.html#ixzz2tdADox97

தமிழ் ஓவியா said...


புகழ்ந்து பேசுவதுதான்ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/75460.html#ixzz2tdAMBuy7

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடந்த போர்க்குற்றம் சர்வதேச அளவில் விசாரணை


அய்.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை பரிந்துரை

கொழும்பு, பிப்.17-இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் - இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போரில் பெரும் அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. அப்பாவி தமிழர்களை கொத்துக் கொத்தாக ராணுவம் சுட்டுக் கொன்றது. சித்திரவதை செய்தும் கொன்றுள்ளது. இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றம் பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. இந்த கோரிக்கையை அய்.நா மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை பரிந்துரை செய்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே இறுதி கட்ட போர் நடைபெற்றது. இதில், குழந் தைகள், பெண்கள் உள்பட ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் மீறப்பட்டு, போர்க்குற்றம் புரிந்ததாக இலங்கை மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் குற்றம் சாட்டின.

இது குறித்து அய்.நா மனித உரிமை கள் ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை 74 பக்க அறிக்கையை அய்.நா. சபைக்கு அனுப்பியுள்ளார். அதில், இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச அளவில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

இலங்கையில், தீவிரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காணா மல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். சிறுபான்மையினரான தமிழர்களை கொன்று குவித்தவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்று பரிந் துரை செய்துள்ளார்.

ஏற்கெனவே, இறுதி கட்ட போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டதாக, இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களை அய்.நா. சபை கண்டித்து இருந்தது. ஆனால் இதை இலங்கை மறுத் தது. உள்நாட்டு விவகாரத்தில் வெளி நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. நாட்டில் அமைதியை ஏற் படுத்தும் முயற்சிக்கும் மறுகுடியமர்த் தும் பணிக்கும் இது பாதிப்பை ஏற் படுத்தும் என்றும் இலங்கை கூறுகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் அய்.நா மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக மூன் றாவது தீர்மானத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இலங்கையில் மனித உரிமைகள் விஷயத்தில் முன்னேற்றமின்மை. உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், செய்ய வேண்டிய மறுசீரமைப்பு வேலைகள் சரியாக நடைபெறாதது குறித்து இலங்கையை கண்டிக்கும் என தெரிகிறது. இந்த இரண்டு தீர்மானங் களுக்கும் இந்தியா ஆதரவு தெரிவித்து இருந்தது.

இலங்கை சென்ற இங்கிலாந்து பிரதமர் போர்க்குற்றத்திற்கு எதிரான இலங்கையின் உள்நாட்டு விசாரணை தோல்வி அடைந்ததாக குற்றம் சாட் டினார். இந்நிலையில் நவிபிள்ளையின் அறிக்கை இலங்கை அரசுக்கு நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் உடன டியாக எந்தவித பதிலையும் தரவில்லை. போர்க்குற்றத்தை விசாரிக்க பன்னாட்டு சுதந்திர விசாரணை குழு அமைந்து விடுமோ என்று இலங்கை அரசு அச்சப்படுகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே வேற்றுமைகளை அகற்ற அதிக காலம் வேண்டும் என்று அமெரிக் காவின் ஆதரவை கோரியுள்ளது. மேலும், அய்.நா மனித உரிமைகள் தீர்ப்பாயம் மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் விடு தலைப்புலி ஆதரவாளர்களின் கட்ட ளைக்கு ஏற்ப இலங்கைக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி யுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/75462.html#ixzz2tdB0IIqV

தமிழ் ஓவியா said...

ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம்

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந3) துறை அரசு ஆணை (நிலை) எண் 92 நாள் 11.9.2012இன்படி, +2 படித்து முடித்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிருத்துவமதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் மாணவியர்களுக்கு முழுக் கட்டணத்தையும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும். இது 2011_-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் பெற்றோர்களின் வருமானம் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நிபந்தனை.

இத்தகு நிதி உதவியின் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் உட்பட படித்துப் பயன்பெற்றனர்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தீண்டத்தகாத மக்களாக வெறுக்கப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புப் பெற்றால்தான் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்பது யதார்த்தமானதாகும்.

இந்நிலையில் ஏற்கெனவே உள்ள அரசாணை 92-க்குப் பதிலாக அரசாணை எண் 106 மற்றும் 107 என்று இரு ஆணைகள் 4.12.2013 நாளிட்டு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஆணைகளின்படி ஏற்கெனவே சுயநிதிக் கல்லூரிகளுக்கான முழுக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்பதற்குப் பதிலாக, அரசு கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரி ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.70 ஆயிரம் என்ற நிலையில் இதுவரை 70 ஆயிரம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக அரசு ஒதுக்கீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வெறும் ரூ.40 ஆயிரம் மட்டும்தான் தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்கப்படும் என்பதுதான் புதிய ஆணையின் சாரமாகும்.

இந்தப் புதிய ஆணையின் காரணமாக அரசு செலுத்தும் தொகை போக மீதியை மாணவர்களே கட்டும் நெருக்கடியும், சுமையும் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவும், போக்கும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இவ்வளவுக்கும் மத்திய அரசால் அளிக்கப்படும் உதவி நிதி இது.
மாநில அரசு மூலமாக, மத்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக்காக நிதியை வழங்குகிறது. இடையில் நந்தியாக இருந்து தமிழ்நாடு அரசு தடை செய்வது ஏன்? மத்திய அரசு கொடுக்கும் முழு நிதியையும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்காமல், அந்த நிதியை வேறு துறைகளுக்குச் செலவிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கும்போது கால்களைத் தட்டிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். ஆச்சாரியார்தான் (ராஜாஜி) கல்வியில் கைவைத்தவர் என்ற கெட்ட பெயர் உண்டு. அந்த ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம். முறையான வேண்டுகோளுக்குத் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இல்லையெனில், இது குறித்துக் களம் அமைக்க கழகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, பார்ப்பனர் திரு வேங்கடாச்சாரியாரை நியமிக்கும்படி பிரதமர் நேரு கூறியும் ஏற்காமல், தமிழர் என்.சோமசுந்தரத்தை நியமித்த முதல்வர் ஓமாந்தூரார் ராமசாமி (ரெட்டி)யாரை தாடியில்லாத ராமசாமி (நாயக்கர்) என்று பார்ப்பனர்கள் பட்டங் கட்டியது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

குண்டுவெடிப்பும் ஆர்.எஸ்.எஸ்.தலைவரும்


இந்தியாவில் நடைபெற்ற சில பயங்கரமான குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பு வழக்கில் காவித் தீவிரவாதிகளின் நேரடித் தொடர்பு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு சாது பிரஞ்யா தாக்கூர் என்ற பெண் சாமியார், அசிமானந்தா, இந்திய ராணுவப் படையில் உயரதிகாரியாகப் பொறுப்பு வகித்த சிறீகாந்த் புரோகித் மற்றும் தயானந்த் பாண்டே போன்றோர் கைதாகி சிறையில் உள்ளனர்.இவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்.சின் நேரடித் தொடர்பிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம்பாலா சிறையில் உள்ளார்.

அசிமானந்தா சாமியார், இன்று மத்தியில் ஆட்சி அமைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமானவர் என்று பேட்டி கொடுத்துள்ளார். வழக்கம்போல இது ஒரு பொய்யான ஆதாரமில்லாத செய்தி என்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்து கொடுக்கும் கட்சிகளின் சதிச் செயல் என்றும் பா.ஜ.க. கூறியது. இந்தச் செய்தி பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், காரவான் இதழுக்காக இந்தச் செய்தியைச் சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியபோது,``இந்தச் செய்தி அனைத்தும் உண்மையே. இது அவரிடம் இருந்து வாய்மொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த விசாரணைக்கும் இந்தக் குரல் பதிவைக் கொடுக்கத் தயார் என்றார். ஹரியானாவில் அம்பாலா சிறையில் உள்ள அசீமானந்தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்துப் பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதியின் பேரில்தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார். காரவன் இதழ் அசிமானந்தாவின் குரல் பதிவை 7.2.2014 அன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் ஓவியா said...

பால்நெஞ்சு பதறலையா?


- ந.தேன்மொழி

சாணிக்குப் பொட்டிட்டு
சாமியென்று கூத்தாடி
வாசலிலே குத்தவைச்சு
வாழை இலையிட்ட
எனதருமைச் சகோதரியே!

சாணியதை நீமிதித்தால்
சாமியென்று சொல்வாயா?
சாணமென்று சொல்வாயா?
மலையுடைத்துப் பாறையாக்கி
சிலைவடித்து சாமியென்றாய்

நட்டகல்லையும் விடவில்லை
நெடுமரமாய் விழுந்திட்டாய்
அம்மன்தாலி அறுந்ததென
அய்யன் சொன்னான் கோவிலிலே
ஆளுக்கொரு புதுத்தாலி
அணிந்தீர் அவசரமாய்
தன்தாலி அறுமென
தெரியாத சாமியிடம்
அடகு வைத்தாய்
உன்தாலியை சகோதரியே!

காவியுடைக் கயவர்கள்
காலடியில் சரணம்
சாமியென்று சொல்லி
அம்மணமாய் அவனாட
அவன்முன்னே மண்டியிடும்
மானமிழந்த சகோதரியே

பக்தியோடு பாம்புக்குப்
பால்வார்க்கும் பெண்ணினமே
பச்சிளம் குழந்தையை
பக்தியென்ற பேராலே
பாவியவன் ஏறிமிதிக்க
பால்நெஞ்சு பதறலையா?
பார்த்தவிழி துடிக்கலையா?
இப்படியொரு வேண்டுதலை
சாமியவள் கேட்டாளா?
கேட்கும் அவளுன்
சாமியா சகோதரியே?
எத்தனை சாமிகள்
எத்தனை ஆயுதங்கள்
பெண்மானம் தனைக்காக்க
எந்தசாமியும் வரவில்லை

எத்தனை ஆயுதங்கள்
இருந்தாலும் என்ன
எந்தசாமியும் நம்மைக்
காப்பாற்ற வாராது
சாமிக்கே காவல்
நாம்தானடி சகோதரியே
உணர்ந்து கொள்ள
இன்னும் எத்தனை
பெரியார் தேவை
சொல்லடி சகோதரியே!

தள்ளுபடி
வியாபாரம்

அர்ச்சகர்
ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!
ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும்
மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி
கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு....ஹி ஹி
என்று சொல்லி ஆட்டையப் போட்டு
அதை கர்ப்பக் கிரகத்தில்
போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது...
அர்ச்சகர் கேரியர் !

- க.அருள்மொழி, குடியாத்தம்.


கடவுள் எதற்கு?

காலைக் கடன்களைக்
கழிப்பது முதல்
இரவு படுக்கை விரித்து
இல்லாளுடன் இணைவது வரை
எல்லா வேலைகளையும்
நானேதான் செய்கிறேன்!
இடையில் எனக்கு
கடவுள் எதற்கு?

- கு.நா.இராமண்ணா, சீர்காழி


ராசிக்கல்

சாலையில்
வாகனப் புழுதியினூடே
தார்ப்பாய் விரித்து
ராசிக்கல் விற்பவருக்கும்,
தொலைக்காட்சி நிறுவனத்தின்
குளிர்சாதன அறையிலமர்ந்து
கேமராவுக்கு முன்
ராசிக்கல் விற்பவருக்கும்,
இடையே உள்ள
பொருளாதார இடைவெளியில்
நழுவி விழுகிறது
ராசிக்கல் மீதான நம்பிக்கை.

- பா.சு.ஓவியச்செல்வன், சென்னை


அவன் கடவுளாம்!

மண்ணைத் தின்பானாம்!
வெண்ணை தின்பானாம்!
பெண்ணைத் தின்பானாம்!
அவன் பெயர் கண்ணனாம்!
அவன் கடவுளாம்! நான் சொல்லல...
நான் சொல்லல...
நான் சொல்லவே இல்லை!

- ஞா.சந்திரகாந்த், திருச்சி

தமிழ் ஓவியா said...

புதிய முறையில் சிக்கன மின்சாரம்


இன்றைய உலகில் மின்சாரத்தின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அதற்கான உற்பத்தித் திறனோ மிகவும் குறைவாக உள்ளது. இத்தகு நிலையில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரித்தனர். இதில், கிரிஸ்டலைன் சிலிகான் என்ற விலை உயர்ந்த பொருளும், பிளாட்டினத்தைவிட 10 மடங்கு அதிக விலை கொண்ட SpiroOmeTAD என்ற பொருளும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றுப் பொருளாக கேட்மியம் சல்பைட் பயன்படுத்தி குறைந்த விலையில் தயாரிக்கப்படும் சோலார் பேனல்களின் உற்பத்தித் திறனோ மிகவும் குறைந்த அளவில் உள்ளது.

தற்போது பெரோஸ்கைட் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது, பூமியில் அதிக அளவில் கிடைப்பதுடன், விலையும் மிகவும் குறைவு. பெரோஸ்கைட்டைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் சோலார் பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் பெரிய கட்டிடங்களில் வெயிலை மறைக்கப் பொருத்தப்படும் கருப்புக் கண்ணாடிக்குப் பதில் இதனைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சாதாரண சோலார் பேனல்களைவிட இரு மடங்கு மின்சாரத்தை உருவாக்கி நீண்ட தூரத்துக்கு எந்தவிதப் பாதிப்புமின்றிக் கடத்தும் சிறப்பினை பெரோஸ்கைட் பேனல்கள் பெற்றுள்ளமை இதன் தனிச்சிறப்பு.

ஒரு வாட் மின்சாரத்துக்கு 46 ரூபாய் என்ற இன்றைய சோலார் பேனல்களின் விலையினை 31 ரூபாய்க்குள் கொண்டு வந்தால் உலகில் உள்ள அனைத்துக் கார்களும் பெட்ரோலை விட்டுவிட்டு சோலார் கார்களாக மாறிவிடும்.

இன்ஹேபிடேட் என்ற அறிவியல் பத்திரிகை பெரோஸ்கைட் பேனல்கள் விற்பனைக்கு வந்தால் ஒரு வாட் மின்சாரம் 6 ரூபாயாகிவிடும் என்றும், சயின்ஸ் டெக் டெய்லி என்ற தொழில்நுட்பப் பத்திரிகை நாம் நினைத்துப் பார்க்க முடியாத மின்சாரப் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன.

ஒரு ஃபிலிம் போன்ற தகட்டில் பெயிண்ட் அடிப்பது போல இதனை உருவாக்கிவிடலாமாம். அடுத்தகட்ட வளர்ச்சியில், இது பேனலாக விற்பனை செய்யப்படாமல் சோலார் பெயிண்ட்டாக மாறவும் வாய்ப்பு உள்ளதாம். காருக்குப் புதுசா பெயிண்ட் அடித்தாலே போதும்..., பின்னர் பெட்ரோல் போடும் வேலையே இருக்காதாம்.

தமிழ் ஓவியா said...

பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கா?

- திராவிடப்புரட்சி

பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கு_ கடவுளுக்கு எப்படித் திருமணம் செய்துவைக்கப்படுகிறாள் என்பதைக் கீழ்கண்ட செய்திகள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். இளகிய மனம் கொண்டோர் படிக்கக்கூடாத கொடுமை இது. பல பெண்கள் தமது மூடநம்பிக்கைகளின் காரணமாக தங்கள் மகள்களுடைய கன்னிமையை தமது கடவுளர் விக்கிரகங்களுள் ஒன்றுக்குத் தாரை வார்த்துத் தந்து அர்ப்பணிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்குப் பன்னிரெண்டு வயது ஆன உடனேயே, அந்த விக்ரகம் இடம் பெற்றுள்ள வழிபாட்டுத் தலம் அல்லது மடத்துக்கு அவளை அழைத்துக்கொண்டு சகலவிதமான மரியாதைகளுடன் போவார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்விக்கப்படுவதற்கு முந்தைய நல விழாவொன்றை அவளது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றுகூடி எடுக்கின்றனர்.

அவ்விடத்தின் கதவுக்கு வெளிப்பக்கமாக, மிக கடினமான கருங்கல்லால் ஆன ஒரு சதுரமான பீடம் ஓர் ஆள் உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும். அதைச் சுற்றிலும் மரப்பலகைகளினால் ஆன தட்டிகள் வைக்கப்பட்டு அதனுள் பீடம் கண் மறைவாக இடம் பெற்றிருக்கும். இவற்றின் மீது பல எண்ணெய் விளக்குகள் வைக்கப்பட்டு அதனுள் அவை இரவில் எரிக்கப்படும். விழாவுக்காக மரப்பலகைகளை பட்டுத் துணித் துண்டுகளால் அலங்கரித்திருப்பார்கள். வெளியே உள்ள மக்கள் உட்புறம் நடப்பவற்றைக் காணமுடியாதபடி அத்துணிகள் உட்புறம் செருகப்பட்டு மறைப்பாக அமைக்கப்பட்டிருக்கும். மேலே சொல்லப்பட்ட கருங்கல்லின் மேல், குனிந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் உயரத்திற்கு மற்றொரு கல் இருக்கும். அதன் நடுவே உள்ள துளையில் கூர்முனையுள்ள ஒரு குச்சி செருகி வைக்கப்பட்டிருக்கும்.

அக் கன்னிப்பெண்ணின் தாயார், தனது மகளையும் உறவுக்காரப் பெண்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு மரப்பலகைகளால் ஆன அந்த இடத்திற்குள் போய்விடுவாள். பிரமாதமான பூசைகளுக்குப் பின் உள்ளே நடந்த நிகழ்வு பார்வையில் படாததால் எனக்குச் சொற்பமான அறிவே உள்ளது, அந்தப் பெண், கல் துளையுள் செருகப்பட்டிருந்த கூர்முனையுள்ள குச்சியைக் கொண்டு தனது கன்னித்திரையை தானே கிழித்துக்கொள்வாள். கசியும் குருதியை அந்தக் கற்களின் மேல் சிறிய துளிகளாகத் தெளித்துவிடுவாள். அத்தோடு அவர்களின் விக்கிரக ஆராதனையும் நிறைவடையும்.

கண்ணால் கண்ட விவரங்களை இவ்வாறு பதிந்திருப்பவர் துவார்த்தே பார்போசா.

மேற்கண்ட செயல் மூலம் நமக்குத் தெரியவருவது, கடவுளான சிவனின் பிரதிநிதிக்கு, பூப்பெய்துவதற்கு முன்னரே அப்பெண் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதே. இது வெளிப்படையாக ஆண்குறி (லிங்க) வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. சிவனுக்கு இத்தகைய பெண்களைத் திருமணம் செய்து வைப்பதற்குச் சமமான ஒரு சடங்காக இது கருதிக்கொள்ளப் பட்டிருக்கக்கூடும் என்று துவார்த்தே பார்போசா தெரிவிக்கிறார்.

பிற்காலத்தில், ஒரு சுபயோக சுபதினத்தில், இதர ஆலய ஊழியர்கள் அனைவரின் முன்னிலையிலும் இந்தச் சடங்கு நிகழ்த்தப்பட வேண்டும் என்று காட்டாயமாகியிருக்கிறது.

ஆயிரக்கணக்கான பருவமெய்தாத சிறு குழந்தைகளைப் பாலியல் வல்லுறவு கொள்ளவைத்துள்ள இந்துக் கடவுள்களை நினைத்தால் இவற்றைக் கடவுள்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா? நாகரிகமடைந்த இந்தக் காலத்திலும், இந்து மதம் குறித்த புரிதல் இல்லாமல், தன்னை இந்துவாக _ பெருமையாகக் கருதும் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! முகநூலில் இந்தக் கொடூர செய்தியைப் பதிவு செய்திருந்தேன். அதனைப் படித்த சில தோழர்கள் இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்!

இதற்கான ஆதாரம், முனைவர் கே.சதாசிவன் அவர்களின் ஆய்வு நூலான தமிழகத்தில் தேவதாசிகள் என்ற நூலில் உள்ளது.

அந்த நூலை அவர் சாதாரணமாக கதை வடிவில் வெளியிடவில்லை என்பது கூடுதல் சிறப்பு. நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அள்ளிக் கொடுத்துள்ளார் நூலில். இந்த நூலை எழுதியுள்ள கே.சதாசிவன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை மேனாள் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், கலைப்புல ஆசிரியர் குழு. இவருடைய எம்.ஃபில் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் தேவதாசி முறை பற்றியவை. சமூகவியல் மற்றும் புதைபொருள் இயல் ஆகியவற்றிலும் இவர் கல்விபுல பட்டங்கள் பெற்றவர்.

தேவதாசிகள் தொடர்பாக 145 கட்டுரைகள் எழுதியுள்ளார். 20ஆ-ம் நூற்றாண்டின் படைப்புத்திறன் படைத்த அறிவுஜீவிகள் 2000 பேரில் ஒருவர் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் 2001ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்.

தமிழ் ஓவியா said...


சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வாழ்க!


தந்தை பெரியாரின் உற்ற தோழராகவும், கொள்கைப் பயணத்தில் சக பயணாளி களில் ஒருவருமான சிந் தனைச் சிற்பி. ம. சிங்கார வேலர் அவர்கள், சுயமரி யாதை சமதர்மத்தைச் செதுக் கிய அரும்பெரும் சிந்தனை யாளர் ஆவார்!

பச்சை அட்டைக் குடி அரசு ஏட்டில் தகத்தகாய பொன்னாக ஒளி வீசும் - கைவல்யம் அவர்களின் சிந்தனைப் பொறியைத் தீட்டும் கட்டுரை ஒருபுறம்.

சிங்காரவேலரின் பொதுவுடைமை, சமதர்ம, மூடநம்பிக்கைகளை எதிர்த்த, அறிவியல் ஆய்வு வெளிச்சத்தைப் பாய்ச்சிடும், காலத்தை வென்ற கருத் துக்கள் மறுபுறம் என்பது சுயமரியாதை இயக்க வரலாறு, பிரபல கம்யூனிஸ்ட் பேராசிரியரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான பேராசிரியர் ஹிரேன் முக்கர்ஜி அவர்கள் எழுதிய ஒரு நூலில், இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்திய வரலாற்றில் பேசப்படும் இருபெரும் இந்தியத் தலைவர்கள் தந்தை பெரியாரும், ம. சிங்காரவேலரும் தான் என்று சரியாகக் கணித்து எழுதியுள்ளார்கள். அவரது 155ஆவது பிறந்த நாளான இன்று அவரது சிந்தனைகளை செயலாக்கிட, ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஓரணியில் திரண்டு ஜாதி, மத, கடவுள் மூடநம்பிக் கைகளை முறியடித்து, புதிய உலகம் காண்போமாக!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

18.2.2014

சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/75493.html#ixzz2tj2d5kEn

தமிழ் ஓவியா said...


கோயில் வழிபடுவதற்காகவா? கொலை செய்யப்படுவதற்காகவா?


உதகை, பிப்.18- உதகை அருகேயுள்ள நஞ்ச நாடு கிராமத்தில் அமைந் துள்ள கோவிலில் முதலில் யார் வழிபாடு நடத்துவது என்ற பிரச்னையில், இரு வர் வெட்டிக் கொல்லப் பட்டனர். இதுதொடர்பாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். உதகை அருகே உள்ளது நஞ்சநாடு கிராமம். இக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு பூர்வீகமாக வசித்து வருவோர் எனவும், இக் கிராமத்திற்கு வெளிப் பகுதி களிலிருந்து வந்து குடி யேறியவர்கள் எனவும் இரு பிரிவினராக அழைக்கப் பட்டு வந்தனர். இந் நிலையில், நஞ்ச நாடு கிராமத்திலுள்ள சிவன் கோவில் யாருக்கு என்பதிலும் பல ஆண்டு களுக்கு முன்பிருந்தே பிரச் சினை இருந்து வருகிறது.

இந் நிலையில், நஞ்சநாடு கிராமத்திலுள்ள கோவி லில் வழிபாடு நடத்துவது தொடர்பாக ஒரு பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றத் தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இரு பிரி வினருக்கும் பூஜை செய்வ தற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் தனித் தனியாக நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. ஆனால், இதை அந்தக் கிராமத்தில் வசித்துவரும் பிரதான மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத் துள்ளனர். இச்சூழலில் நஞ்சநாடு கிராமக் கோவிலில் வழி பாடு நடத்துவதற்காக ஒரு பிரிவினர் பெற்றிருந்த உத் தரவின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண் காணிப்பாளரிடம் உத்தரவு கேட்டும், நஞ்சநாடு கிராமத்திலுள்ள கோவி லின் பொறுப்பாளராக உள்ள செயல் அலுவல ரிடம் அனுமதி பெற்றும் திங்கள்கிழமை காலையில் ஒரு பிரிவினர் பூஜை நடத் தவுள்ளதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இந் நிலையில், இப் பூஜைக்கு எதிர்ப்புத் தெரி வித்த ஒரு பிரிவினர் ஞாயிற் றுக்கிழமை இரவு பேச்சு வார்த்தைக்கு அழைப்ப தாகக் கூறி, ஒரு சிலரை தாங்கள் கூடியிருந்த இடத் திற்கு வரவழைத்து தாக் கினார்களாம்.

இதில், ஆனந்த் (34) மற்றும் ராஜன் (44) ஆகியோர் உயிரிழந் தனர். இதையடுத்து அப்பகு தியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட் டது. இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் பி.சங் கர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர். அப்போது, இப் பிரச்சினை தொடர்பாக இருவர் வெட்டிக் கொல் லப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத் துக் கொளுத்தப்பட்டதாக வும் புகார்கள் தெரிவிக்கப் பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். கோவை சரக காவல் துணைத் தலைவர் கணேச மூர்த்தி உத்தரவின்படி நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையிலான நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட் டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் பாதுகாப்பு பணி களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/75494.html#ixzz2tj2kjBQ2