Search This Blog

2.2.14

அண்ணாவின் கடவுள் கொள்கை என்ன?(இவ்வினாவை விடுத்திருக்கம் நண்பர் வேல்சாமி ஆடுதுறையைச் (தஞ்சை மாவட்டம்) சார்ந்தவர். கடவுள் பிரச்சினையில் அண்ணாவின் கொள்கை எப்படி இருந்தது என்று வீணாக நாம் ஆராயத் தேவை இல்லை. 2.1.1949 திராவிட நாடு இதழில் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரை அப்படி தந்து விட்டால் விவரம் புரிந்து விடும் என்று கருதி அக்கட்டுரையை இதோ தருகிறோம். - ஆ.ர்)
மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு நின்று இவ்வுலகத்தை இயக்குகின்றதென்பது மத நூலார் கொள்கை.
மத நூலார் இலக்கணப்படி கடவுள் உண்டு என்று கூறுவதே அவர்கள் கொள்கைக்குத் தவறு உண்டாக்கு வதாகும். அப்படியென்றால், ஓசை ஓலி எல்லாம் ஆனாய் நீ என்ற பின்னர் பேச இரண்டுண்டோ? என்பது மத நூற்றுணிவாகும்.
எனவே, உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாயும், தந்தையாயும், எல்லாமாயும், எங்குமாயும் உள்ள ஒரு பொருளை உண்டென்று கூறுவது போன்ற அறியா மையும் அதன் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும்; அதற்குச் சட்டமியற்ற வேண்டுமென்ற நெட்டுயிர்ப்பும் வேடிக்கையாகவே இருக்கிறது.
கடற்சிப்பியில் முத்து இருக்கிறது என்று ஒருவன் கூறுவது வியத்தற்குரியதும் இயற்கைக்கு மாறு படாததுமாகும்.
கடவுள் மறைந்து இருப்பவர் அல்ல
ஆனால், நமது கடவுள் அப்படிப்பட்டவரன்று; கடற் சிப்பி முத்துபோல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைந்து இருப்பவருமன்று.
ஒரு இடத்தில் இருப்பதும், மற்றைய இடங்களில் இல்லாததுமான ஒன்றைத்தான் அது இன்ன இடத்தில், இன்ன தன்மையோடு இருக்கிறதென்று அறியுந் தன்மையில் ஒருவன் அதனை அறியாதார்க்கு அறிவிக்க வேண்டும். அங்ஙனமின்றி, எல்லாமாய், எங்குமாய் அணுவுக் கணுவாய், அகண்டமாய், எதிலும் பிரிவற நிற்பதாகச் சொல்லப்படும் ஒன்றை ஒருவன் உண்டென்று கூறும் அறியாமையை அளப்பதற்குக் கருவியே இல்லை.
ஒருவனால் உண்டென்று கூறப்படும் ஒரு பொருள், யாதொரு கருவியாலோ, அறிவாலோ அளந்தறிந்து உணரக் கூடியதாயும் இருத்தல் வேண்டும்.
ஆனால், கடவுள் அளப்பரும் இயல்பினதாய் - மறைமுதல் சொல் ஈறாக உள்ள எந்தக் குறைவிலா அறிவினாலும் அளந்தறிய முடியாதென்று முழங்கிய பின், ஒருவன் அதனைக் கண்டறிந்து அளந்தவனா வானா? அதன் கவுரவத் தைக் காப்பாற்றத்தான் முயல்வானா? முடியுமா?

கண்டதையே உண்டு எனக் கூறல் வேண்டும்
அன்றி, அப்பொருள் ஒருவனால் அளந்தறியப் படுவதற்கு அது எங்காவது ஒரு இடத்தில் தனித்திருந் தாலன்றி முடியுமா?

ஒருவன் ஒரு பொருளை உண்டென்று கூறுவா னாயின், அவன் அப்பொருளைக் கண்டிருத்தல் வேண்டு மன்றோ!
எனவே, ஒருவனால் காணப்பட்டு, மற்றவர்களால் காணப்படாத ஒன்றைக் கடவுள் என்பது மத நூலார் கொள்கைக்கே மாறுபட்டதாகும். எப்படியென்றால், காண முடியாதது எதுவோ அதுவே கடவுள் மதநூலார் கொள்கை. எனவே, காணமுடியாதது எது என்று ஆராயுமிடத்து, எது இல்லாததோ அதுவே காண முடியாததுமாகும் என்ற உண்மை பெறப்படுகின்றது.
அன்றியும், மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கடற்சிப்பி முத்து போல கடவுளும், எங்காவது ஒரு மறைவிடத்தில் தனியாக இருப்பதாகக் கொள்ளவும் மத நூல்கள் இடந்தருவதில்லையே!
கடவுள் இல்லாத இடமே இல்லை என்பதுதான் அந்த நூல்களின் முடிந்த முடிவாகும்.
எனவே, கடவுளை அறிந்ததாகக் கூறுபவனும், கடவுளைக் காப்பாற்றாவிட்டால் அதன் கவுரவம் குறைந்துவிடுமென்றும் கருதும் நிறைமதியாளனும் மணற்சோற்றில் கல் ஆராய்பவனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களேயாவார்கள்.

முன்னுக்குப்பின் முரண்
இனி, மத நூல்கள் சிலவற்றில் கூறியுள்ளபடி, தேடினால் கிடைப்பர்! என்ற முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளை நம்பி, அவ்வழிச் சென்றோர் எல்லாம் அத்துறையைக் காணாது சலிப்படைந்து, தங்கள் ஏமாந்த இயல்பினை இனிதியம்பியுள்ளனர்.
பட்டினத்தார், நாவுக்கரசர், புத்தர் முதலானோர் அவ்வழிப்போய் மீண்ட பலருள் சிலராவர்.
ஈனா வாழை மரத்தின் மட்டைகளை ஒவ்வொன்றாக உரித்துப் பார்த்தால், உரிக்கப்பட்ட அம்மட்டைகளை தவிர, அதனுள்ளே வேறொன்றும் இல்லாமை புலப்படுவது போல், மத நூல்கள் கூறிய வழிகளிலே சென்றவர்கள் தாங்கள் கருதிப் போன கடவுள் காணப்படாமையைக் கருத்தோடு திருத்தமாகக் கூறியுள்ளார்கள்.
எனவே, இல்லாத ஒன்றை உண்டென்னும் கொள்கை என்றைக்குத் தோன்றியதோ அன்றிருந்தே அக்கூற்று மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது - வருகிறது.
உண்மையை அறிய மதம் தடை
 
ஆனால், உண்மைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு மதக் கொள்கைகளால் பிரித்துப் பிளவுபட்டிருப்பதால் பொய்யைப் பொய்யெனக் கொள்ளும் பேதமையே பெருமை பெற்று வருகிறது. இதனால், உண்மைகளை உருவாக்கு வதற்குப் பெரு முயற்சியும், பேருழைப்பும், பெருந்துணிவும், இடுக்கண் வந்தால் ஏற்கும் இயல்பும் இன்றியமையாது வேண்டப்படுகின்றது. இஞ்ஞான்றை உலகம் ஓரளவு வெற்றி பெற்றுவருவது கண் கூடு.
காரணம், மக்களிடையே மங்கிக் கிடந்த பகுத்தறிவு வென்னும் பகலவன் தன் ஒளி அலைகளால், விரிந்த உலகின் சரிந்த கொள்கைகளை வீழ்த்தும் ஆராய்ச்சித் துறையின் அணிகலனாக விளங்குவதால் என்க.

52 comments:

தமிழ் ஓவியா said...


என்ன செய்யப் போகிறது இந்தியா?

- மின்சாரம்

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா சுண்டைக்காய் நாடான இலங்கைக்கு எந்த அளவு இளக் காரமானது!

இலங்கைக்கான இந்திய தூதர் கரியவாசம் என்ன பேசினார் என்பதில் விடை விளக்கமாகவே இருக்கிறது.

காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகப் பொருள்.

இந்தியாவின் பிரதமர் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிட்டால், அதனால் யாருக்குப் பாதிப்பு என் பதை நினைத்துப் பார்க்க வேண்டும்? என்ற ஒரு சுண்டைக்காய் இமய மலையைப் பார்த்து எள்ளி நகை யாடியது.

ராஜபக்சே இனப்பிரச்சினையில் மிகவும் தெளிவாகவேயிருக்கிறார்.

எதிர் காலத்தில் இலங்கையில் இருக்கப் போவது இரண்டே இனங் கள்தான்; ஒன்று சிங்களவர் இனம் இன்னொன்று சிங்கள கலப்பினம் தான் என்று ஊர் சிரிக்க, உலகம் சிரிக்க அம்மணமாகவே கூறிவிட்டார்.

சிங்களவர்களே, தமிழ்ப் பெண் களைச் சூறையாடி அவர்களின் கருப்பையில் சிங்கள விதையைத் தூவுங்கள் - பிறக்கும் சந்ததி சிங்களக் கலப்பினமாக வழி செய்யுங்கள் என்று இதைவிட வேறு எப்படி பச்சையாகச் சொல்ல முடியும்? (இந்து ஆண்களே! முஸ்லீம் பெண்களைக் கர்ப்பிணி ஆக்குங்கள். அவர்கள் வயிற்றில் இந்துக் கரு ஜெனிக்கட்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சந்நியாசி சாத் விரிதம்பரா என்ற அம்மையார் பொன் மொழியாக உதிர்க்கவில்லையா? பாசிஸ்டுகள் எங்கும் ஒரே மாதிரியாக ஒரே மொழியில் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள்)

ராஜபக்சேயின் இந்த வெறியின் எரிமலை வெடிப்பின் வீச்சைக் கேட்டதற்குப் பிறகும், ஈழத் தமிழர்களின் சுயமரியாதைக்காக, வாழ்வுரிமை மீட்புக்காக விண்ணப்பம் போட்டால் மயிலே மயிலே, இறகு போடு! என்றால் சொல்பவன் தான் சுத்த மடையனாக இருக்க முடியும்.

ஜெனிவா மனித உரிமை ஆணை யம் தீர்மானம் போட்டுக் கொடுத்ததே -_ இலங்கை அரசு தனக்குத்தானே விசாரித்து (LLRC)அறிக்கை கொடுக்க வேண்டும் என்று சொன்னதே! காது ஒடிந்த ஊசி முனை அளவுக்காவது பயன் ஏற்பட்டதா? (குற்றவாளியையே நீதிபதியாக்கிய பைத்தியக்காரத் தனமான தீர்மானம் அது!)

இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்ச்சுகி தாருஸ்மான் தலைமையில் அமெரிக் காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னர், தென்னாப்பிரிக்க அறிஞர் யாஷ்மின் சூங்கா ஆகிய இருவர் அடங்கிய குழு அய்.நா.வால் அமைக் கப்பட்டது. அந்தக் குழு நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கெல்லாம் சென்று உண்மை நிலைகளைக் கண்டறிந்து அய்.நா. பொதுச் செய லாளர் பான்கீ மூனிடம் அறிக்கையாக அளித்து விட்டது (13.4.2011).

தமிழர்களுக்கு எதிராகக் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அய்.நா.வால் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த உணவு வழங்கப்படும் மய்யங் கள்கூட இராணுவத் தாக்குதலுக்குத் தப்பிடவில்லை. மருத்துவமனைகளும் தாக்கப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு ஊடகக்காரர்கள் அனுமதிக்கப்பட வில்லை என்று அந்த மூவர் அறிக்கை பட்டியலிடவில்லையா?

இதற்கு மேலும் அய்.நா. எடுத்த நடவடிக்கை என்ன?

2009 மே 25இல் ஜெனிவாவின் மனித உரிமை ஆணையத்தில் அய்ரோப்பிய ஒன்றிய 17 நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி, இலங்கை அதிபர் ராஜபக்சேமீது விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப்பட் டுள்ளவர்களுக்கு வாழ்வுரிமைக்கான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. இந்த முக்கிய தீர்மானத்தை சீனா, ருசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளோடு கைகோர்த்துக் கொண்டு இந்தியா முன்னின்று தோற்கடித்த வெட்கக்கேட்டை என்ன சொல்ல!

இந்தத் தீர்மானம் (A/HRC/8-11/LI(Rev2) மாற்றியமைக்கப்பட வேண் டும் என்று அய்.நா. அமைத்த மூவர் ஆய்வுக்குழு சொன்னதுண்டே!

அய்ரோப்பிய ஒன்றிய 17 நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது இந்தியாவின் பிரதிநிதி அச்சங்குளங்கரே பேசியது என்றென்றைக்கும் துரோகப் பட்டியலில் பத்திரமாக இருக்கக் கூடியதாகும்.


தமிழ் ஓவியா said...

இந்தக் கூட்டமே தேவையற்றது; உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பை போரில் தோற்கடித்த தற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, இலங்கை அரசைத் தண்டிக்க, கண்டிக்க முயற்சிக்கக் கூடாது என்றாரே!

இவற்றையெல்லாம் கடந்துதான் வந்திருக்கிறோம். அமெரிக்கா இந்தப் பிரச்சினையில் தலையிட்ட பிறகு - உலக நாடுகள் மத்தியில் கொஞ்சம் அலைகளை ஏற்படுத்தியது.

2013 பிப்ரவரியில் ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர் மானத்தை இந்தியாவை ஆதரிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அய்க்கிய முறபோக்குக் கூட்டணியில் இருந்த திமுக கொடுத்த அழுத்தம் இதில் அபரிமிதமானது.

அந்த நிலையிலும்கூட அமெரிக் காவின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ததில் இந்தியாவின் கைக்கு முக்கிய இடம் இருக்கிறது.அந்தரங்க சுத்தியோடு இந்தியா இப்பிரச்சினையில் இல்லை என்று தெரிந்த நிலை யில் திமுக முக்கிய முடிவை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தி.மு.க.வின் முடிவு

அய்.நா. மன்றத்திலும் அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும் இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்குக் கதவு களைத் திறந்து விட்டிருப்பதை இனவுணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் ஓவியா said...


எனவே, குதிரை குப்புறத் தள்ளியதும் அல் லாமல், குழியும் பறித்த கதையாக அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போகச் செய்து விட்டதோடு; திராவிட முன் னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. எனவே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்ட நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது. தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம், மத்திய அமைச்சரவையிலிருந்தும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்கிறது என்று திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார் (முரசொலி 22.3.2013).

அதனைத் தொடர்ந்து டெசோ தீவிரமான முயற்சிகளில் எல்லாம் ஈடுபட்டது.

இதற்கிடையே இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைபற்றி சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும். இலங் கையில் நடைபெற்றது போர்க் குற்றமல்ல; அது ஒரு திட்டமிட்ட இனபடுகொலை இந்தியா, இங்கி லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஒத்து ழைப்பும் உதவியும் இல்லாமல் இந்த இனப்படு கொலை நடந்திருக்க முடியாது என்று தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையம் கூட உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்சு ஆகிய பெரும் நாடுகளும் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டு வரவிருக்கின்றன.

இதில் இந்தியா என்ன செய்யப் போகிறது? 16ஆவது மக்களவைத் தேர்தல் இந்தியாவில் நடைபெறுவதற்கு முன் நடக்கவுள்ள உலக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இது. இந்தியா மீண்டும் தன் முகத்தில் கரியைத் தடவிக் கொள் ளப் போகிறதா? கம்பீரமாக வீறு நடைபோடுகிறதா என்பது முக்கியம் ஆகும்.

இந்தக் கால கட்டத்தில் தான் பிப்ரவரி முதல் தேதி டெசோவின் கூட்டம் செனையில் அண்ணா அறிவாலயத்தில் கூடுகிறது?

டெசோ வீரன் வருகிறான், கம்பீரமாகவே வருகிறான்.

Read more: http://viduthalai.in/page-1/74466.html#ixzz2s7X6P5Op

தமிழ் ஓவியா said...


குடிஅரசு கருவூலத்திலிருந்து திராவிட மாணவர் மாகாண மாநாடு

திராவிட மாணவர் மாகாண மாநாடு இதுவே முதல் மாநாடு எனலாம்.

மாநாட்டுக்கு தமிழ் நாட்டின் பல்வேறு பக்கங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள்சுமார் 5000 பேர்களுக்கு மேலிருந்தாலும் காலேஜ் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்கள் தொகை 2000 பேர்களுக்குக் குறையாது என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் கருப்புச் சட்டையுடன் வந்தவர்கள் எண்ணிக்கை 1500 இளைஞர்களுக்கு மேலேயே இருக்கும்.

இதில் மாணவிகளும் வந்து கலந்து கொண்டி ருந்தது குறிப்பிடத் தகுந்ததாகும்.

மாநாடு, சேலம் காலேஜ் பிரின்சிபால் அறிஞர் எ. இராமசாமி கவுண்டர் அவர்கள் தலைமையில் நடந்தது என்பதோடு மற்றும் பல ஆசிரியர்களும் வந்து கலந்து கொண்டதானது மாநாட்டுக்கு மிகவும் பெருமையும், உற்சாகமும் ஊக்கமும் அளித்தது.

இரண்டு நாளும் மாநாடு ஒரு மாபெரும் கொண்டாட்டமாக இருந்தது.

மாநாட்டில் கலந்து கொண்ட மாணவர்களில் பெரும்பாலோர் நம் நாடும் இனமும், இன்று இருக்கும் நிலையில், நாம் நம் வாழ்நாளில் நல்ல நாட்களை பயனற்ற பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கழித்து அடிமைத்தனம் கற்றுக் கொண்டு இருப்பது பெரியதொரு நாட்டுத் துரோகமும், இனத் துரோகமுமான செய்கை என்று கருதித் துயருற்ற வண்ணம் காணப்பட்டதானது மிகவும் குறிப்பிட வேண்டிய காரியமாகும்.
அடுத்தாற் போல் அங்கு தாண்டவமாடிய உணர்ச்சி என்னவென்றால் இந்த மாநாடு முடிந்த வுடனே தங்களுக்கு ஏதாவது ஒரு பணி ஆற்றத் தலைவர் அனுமதி அளிக்க மாட்டாரா? என்கின்ற ஆர்வமும் எழுச்சியும் பொங்கி வழிந்ததேயாகும்.
(குடிஅரசு தொகுதி 34 பக்கம் 79)


தமிழ் ஓவியா said...

மத விடுமுறை மதமில்லாத சர்க்காரிலா?

மதமில்லாத சர்க்கார் என்று சொல்லிக் கொள்ளும் இந்திய யூனியன் சர்க்கார் மத சம்பந்தமான நாட்களுக்காக விடுமுறை விடுவதானது முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறபடியால், மத சம்பந்தமான நாட்களுக்கு விடுமுறை விடுவதை நிறுத்த வேண்டுமாய் இம்மாநாடு சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.

இராமாயண எதிர்ப்பைத் தீவிரமாகச் செய்!

இராமாயணம் திராவிட மக்களை இழிவுபடுத்தும் புராணம். ஆதலாலும், மதத்தின் பேரால் மக்களிடையே புகுத்தப்பட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கு பல விதங்களிலும் தடையேற்படுத் தியதோடு, மூடப் பழக்கங்கள் மக்களிடையே வளருவதற்கு இராமாயணமே காரணமாயிருப்பதனால் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை நாட்டில் தீவிரமாக நடத்த வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. - (குடிஅரசு தொகுதி 40 131ஆம் பக்கம்)

பகுத்தறிவும், சுயமரியாதையும்!

திராவிடர் கழகம் மற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எவ்விதத்திலும் விரோதமானதல்ல. அவைகளைவிட தீவிரமான கருத்துக்களையும், திட்டங்களையும் கொண்டதுதான் எங்கள் கழகம் என்று எங்கு வேண்டுமானாலும் சொல்வோம்.

சொல்லுவது மட்டுமல்ல, மெய்ப்பித்தும் காட்டுவோம்.

காங்கிரஸ்காரனோ, கம்யூனிஸ்டோ நெருங்கக்கூட பயப்படும் ஆத்மார்த்தத்த் துறையில் நாங்கள் அஞ்சாது குதிக்கிறோம்.

ஆத்மார்த்தக்காரர்கள் நம்மைக் கண்டு அஞ்சும் அளவுக்கு மக்களுக்குப் பகுத்தறிவு ஊட்டி வருகிறோம்.

புராணக்காரனுக்கு மேலாக தத்துவார்த்தம் பேசுகிறோம்.

அவன் தத்துவார்த்தம் பேசினால் அவனுக்கும் மேலாக வேதாந்தம் பேசுவோம்.

அவன் வேதாந்தத்தை விட்டு ராமகிருஷ்ணரின் சிஷ்யன் என்றால், நாங்கள் அவருக்கும் மேலான இராமலிங்கரின் சிஷ்யர்கள் என்போம்.

அவன் மோட்சத்தைப்பற்றிப் பேசினால், அதற்கும் நாங்கள் குறுக்குவழி காட்டியனுப்புவோம்.

சமுதாயத்தில் உண்மையான சமத்துவம் நிலவ வேண்டுமே என்பது தான் எங்கள் ஆசை. சமத்துவம் என்றால் சமுதாய இயல், பொருளா தார இயல், அரசியல், மொழியியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் சமத் துவ சுதந்திரம் வேண்டுமென்பதுதான் எங்கள் கோரிக்கை.

ஆகவே, எங்களைச் சற்று தீவிரவாதிகள் என்று யாராவது கூறலாமே தவிர, எங்களைப் பிற்போக்கானவர்கள் என்றோ, மத துவேஷி என்றோ கூற இயலாது.
குடிஅரசு தொகுதி 39 207ஆம் பக்கத்தில் இருப்பது

புண்ணிய ஸ்தலங்கள்

இதிகாசங்களைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும், கடவுள்களைப் பற்றியும் தனித்தனி மகுடமிட்டு குடிஅரசில் எழுதிக் கொண்டு வருவதை வாசகர்கள் கூர்ந்து கவனித்து வாசித்து வருகின்றார்கள் என்றே எண்ணுகின்றேன்.

அவற்றை எழுதி வருவதன் நோக்கமெல்லாம், ஒரு சில சயநலக்காரர்கள் தங்கள் நன்மையின் பொருட்டு எவ்வளவு ஆபாசமானவைகளையும், அசம்பாவிதமானவைகளையும் எழுதி வைத்துக் கொண்டு பிரமாதப்படுத்தி,

அவற்றையே மதம் என்றும், பக்தி என்றும், மோட்சத்திற்கு மார்க்கம் என்றும் பாமர மக்களை நம்பும்படியாகச் செய்து, மக்கள் அறிவையும், சுதந் திரத்தையும், சுயமரியாதையையும், ஒற்றுமையையும் கெடுத்து வருகின்றார்கள் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டி, மக்கள் யாவரும் சமம் என்பதை யுணர்ந்து சுயமரியாதையோடு வாழ வேண்டு மென்பதுதான்.

மேற்படி சுயநலக்காரர்கள் சிற்சில இடங்களைப் பெரிய புண்ணிய ஸ்தலம் என்பதாக பெயர் கொடுத்து, அவற்றிற்கு ஏராளமான யோக்கிய தைகளைக் கற்பித்திருப்பதை, பகுத்தறிவற்ற மூட ஜனங்கள் புண்ணிய ஸ்தல யாத்திரை என்பதாகக் கருதி வெகு பணங்களைச் செலவு செய்து கொண்டு வருகின்றனர்.

தொகுப்பு: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page2/74468.html#ixzz2s7XOs1nK

தமிழ் ஓவியா said...


வீதியில் நீதி தேவதை!பார்ப்பான்
சூத்திரனைக் கொன்றால்
சிகைச்சேதம்!
பார்ப்பானை
சூத்திரன் கொன்றால்
சிரச்சேதம்!
பார்ப்பானை
பார்ப்பானே கொன்றால்?
மனுதர்மம்
என்ன சொல்லுவதோ!
நம் நீதிமன்றம்
சொன்ன தீர்ப்பால்...
கையிலிருந்த நியாயத் தராசு
களவாடப்பட்டு...
கருப்புத் துணியால்
கண்கள் கட்டப்பட்டு...
நினைவிழந்து
நிர்வாணமாய்...
வீதியில்
நீதி தேவதை!

- சீர்காழி கு.நா. இராமண்ணா

Read more: http://viduthalai.in/page3/74470.html#ixzz2s7Y9LnfY

தமிழ் ஓவியா said...


அ(வி)ஞ்ஞானம்அஞ்ஞானம்: கார்த்திகை கடைசி வெள்ளி அன்று மக்களின் அமைதியான வாழ்வுக்கு காவல்துறையினரும், பயிர்கள் செழித்து வளர வேண்டும் என வேண்டி பொதுப் பணித் துறையினரும் பால், பன்னீர், புஷ்பகாவடி இரணியலிலிருந்து குமாரகோவிலுக்குத் தூக்கிச் சென்றனர்.

விஞ்ஞானம்: விண்வெளி ஆய்வு மய்யத் தில் உள்ள குளிரூட்டும் சாதனம் பழுதடைந்த தால், அங்கு தங்கி ஆய்வு நடத்தி வரும், அமெரிக்கர், ரஷ்யர், ஜப்பான் விண்வெளி வீரர்கள் ஆய்வு மய்யத்திலிருந்து வெளியில் வந்து அந்த சாதனத்தின் பழுதை சரி செய் தார்கள்.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page6/74477.html#ixzz2s7Yr4kL3

தமிழ் ஓவியா said...


பெரியாரை இழிவுபடுத்தி எச்.ராஜா பேச்சு தமுஎகச கடும் கண்டனம்

மதுரை, ஜன. 31- பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணுரிமை கருத்து களைத் தமிழகத்தில் வலுவாகப் பரப்பிய தந்தை பெரியாரை இழிவு படுத்தும் வகையில் பாஜக தலைவர் எச். ராஜா பேசியிருப்பதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வன்முறையைத் தூண்டும் அந்தப் பேச்சைக் கண்டித்து மாநிலம் முழுவதும் சுவரொட்டி இயக்கம், சென்னையில் கண்டனக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமுஎகச மாநிலச்செயற்குழு கூட்டம் ஞாயிறன்று (ஜன. 26) மது ரையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச் செல் வன், பொதுச்செயலாளர் சு. வெங் கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழகத்தில் சமூகநீதி, பண் பாட்டுப் போராளியாக இறுதிமூச்சு வரை வாழ்ந்த தந்தை பெரியார் அவர்களை பாஜக மாநிலத் துணைத்தலைவர் எச். ராஜா ஒருமையில் பேசுகிற பேச்சு இணையத்தில் வெளிவந்துள்ளது. அந்தப் பேச்சில் அவர் பயன் படுத்தியுள்ள சொற்கள் சுயமரி யாதைக் கருத்துகளையும் பகுத் தறிவுச் சிந்தனைகளையும் பரப்பிய அந்த மகத்தான தலைவரை மிகவும் இழிவுபடுத்துவதாக உள்ளன. இந்தப் பேச்சை எச். ராஜா என்ற தனிமனிதரின் கருத்தாக மட்டும் பார்க்க இயலாது. சமூகத்தில் புரை யோடிப்போயிருந்த மூடநம்பிக்கை களை, அறியாமையை, புராணப் புளுகுகளை அம்பலப்படுத்தி அயராது, சமரசம் செய்து கொள் ளாமல் பரப்புரை செய்தவர் பெரி யார். இப்போதும் சாதிவெறிக்கும் மதவெறிக்கும் எதிராக, பெண் ணுரிமைக்கு ஆதரவாக முன்னெ டுக்க வேண்டிய கருத்தாயுதங் களைப் பெரியாரிடமிருந்து பெற முடிகிறது.

எந்தத் தருணத்திலும் மதவாத பிற்போக்கு சக்திகளால் நெருங்க முடியாத நெருப்பாக பெரியார் திகழ்வதால் காழ்ப்புணர்வு முன் வைக்கப்படுகிறது. புதிய தலைமுறை இளைஞர்களைத் திசைதிருப்புவது, சங் பரிவார இந்துத்துவா சக்தி களுக்கு வெறியேற்றுவது, கருத் துக்களத்தில் விவாதத்தை முன் வைப்பதற்கு பதிலாக மூர்க்கத்தை மூலதனமாக்கி ஆதாயம் தேடுவது என்று முயல்கிறார்கள். எனவே, எச். ராஜாவின் வன் முறையைத் தூண்டும் பேச்சுக்கு தமுஎகச மாநிலச் செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. பெரியாரை இழிவு படுத்தும் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் உடனடியாக சுவரொட்டி இயக்கம் நடத்த வேண்டும் என்றும், சென் னையில் கண்டனக் கருத்தரங்கம் நடத்துவது என்றும் மாநிலச் செயற்குழு தீர்மானிக்கிறது. இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

- (நன்றி: தீக்கதிர் 28.1.2014)

Read more: http://viduthalai.in/e-paper/74493.html#ixzz2s7ZYKusf

தமிழ் ஓவியா said...


கோயில்களில் நடக்கும் கொள்ளைகள்


வைஷ்ணவ தேவி கோவில் காணிக்கையில் 43 கிலோ போலி தங்கம்

ஜம்மு, பிப்.1- வைஷ் ணவ தேவி கோவிலுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கைகளில், 43 கிலோ தங்கமும், 57 கிலோ வெள்ளியும் போலி யானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 5,300 அடி உயரத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தில், வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள் ளது. இந்த கோவிலில், கடந்த ஆண்டு, ஒரு கோடி பக்தர்கள், தரி சனம் மேற்கொண்டுள்ள னர். அவ்வாறு வரும் பக்தர்கள், கோவிலுக்கு, தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை காணிக்கை யாக அளிப்பர். இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனு வுக்கு, கோவில் வாரிய நிர்வாக அதிகாரி அளித்த பதிலில் கூறியிருப்பதா வது: கடந்த, அய்ந்தாண் டுகளில், 193 கிலோ தங்கம் மற்றும் 81 ஆயிரம் கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத் துள்ளது. இதில், 43 கிலோ தங்கம், 57 கிலோ வெள்ளி போலியானது என்பது தெரிய வந்துள் ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.போலி தங்கத்தை, உண்மை யான தங்கம் என, பக் தர்கள் நினைத்து கோவி லில் காணிக்கையாக அளித்தார்களா... என்ற விவரம் தெரிவிக்கப்பட வில்லை.

பூசாரிகள் குற்றச்சாட்டு சிவகங்கை, பிப்.1- தமிழகத்திலுள்ள இந்து கோயில்கள் உண்டியல் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாயில், ரூ.41 கோடியை மட் டுமே அரசு கணக்கு காட்டுவதாக , கிராமக் கோவில் பூஜாரிகள் சங்க மாநில இணைச் செயலாளர் சோமசுந் தரம் குற்றம் சாட்டியுள் ளார்.

சமீபத்தில், சென்னை யில் கிராம கோயில்கள் பூஜாரிகள் சங்க நிறு வனர் வேதாந்தம் மீது சில சமூக விரோத கும் பல் தாக்குதல் நடத் தியது. இதனை கண்டித் தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத் தியும், சிவகங்கையில் நேற்று, கிராம கோயில் பூஜாரி சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கிராம கோயில் பூஜாரி கள் சங்க மாநில இணைச் செயலாளர் சோமசுந்த ரம் பேசியதாவது: தமி ழக இந்துக் கோவில் களில் இருந்து ஆண் டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் கிடைக் கிறது. ஆனால், அரசு ரூ.41 கோடியை மட் டுமே கணக்கு காட்டு கிறது. இதில், 36 கோடி கோயில் சார்ந்த அதி காரி, ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படு கிறது என்ற புள்ளி விவ ரங்களை நம்ப முடிய வில்லை.

தமிழகம் முழுவதும் இந்துக் கோயில்களுக்கென நாலரை லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் தற் போது, சில அரசியல் வாதி மற்றும் அவர் களது பினாமிகளின் கைவசம் உள்ளன. ஏக் கருக்கு ஆண்டுக்கு ரூ.100 அல்லது ரூ.200க்கான வாடகை ரசீதை மட்டும் செலுத்தி விட்டு, கோடிக்கணக்கில் சம்பா தித்து, அரசை ஏமாற்று கின்றனர். கோயில் நிலங் கள் மீட்கப்பட வேண் டும். கோயில்கள் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான வரு வாய் கிடைக்கும் நிலை யில், கிராமப்புறத்தில் பெரும்பாலான இந்துக் கோயில்களில் ஒரு கால பூஜை, விளக்கு போடுவ தற்கு கூட, வழியின்றி, கிராமக்கோயில் பூஜாரி கள் சொந்த செலவில் பூஜை செய்கின்றனர். இது போன்ற நிலை மாற வேண்டும், என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/74490.html#ixzz2s7a0mzlY

தமிழ் ஓவியா said...


டெசோ கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்


இலங்கை மாகாண கவுன்சில் நிர்வாகங்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்க வேண்டும்

கச்சத் தீவுப் பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறைக்குக் கண்டனம்!

இலங்கையில்நடைபெற்றுவரும்இனஅழிப்புகுறித்து சுதந்திரமானசர்வதேசவிசாரணைதேவை!

டெசோ கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

சென்னை, பிப்.1- இலங்கையில் நடைபெற்று வரும் இன அழிப்புக் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும், இதுகுறித்து இந்தியாவே தனித் தீர்மானம் ஒன்றை மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு முக்கிய தீர்மானங் கள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத் தில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், 1-2-2014 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்களான திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர், தமிழர் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், மற்றும் சிறப்பு அழைப் பாளர்களாக திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., ரவிக்குமார், வழக்கறிஞர்கள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், அசன் முகமது ஜின்னா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விரிவான விவாதத்திற்குப் பிறகு பின் வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன :-

தீர்மானம்: 1

இலங்கையில் நடைபெற்று வரும் இன அழிப்பு

குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை

அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் மீண்டும் அமெரிக்கா இலங்கையில் நடைபெற்ற தமிழின

படுகொலை மற்றும் இன அழிப்பு கொடு மைகளைக் கண்டித்து வருகின்ற மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இப்பிரச்சினையில் இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வ தேச விசாரணை வேண்டுமென்று கடந்த 2009லிருந்து உலக தமிழ்ச் சமுதாயம் வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்கா கடந்த காலத்தில் இரண்டு முறை இலங்கைக்கு எதிரான தீர்மா னத்தை அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் முன்னெடுத்துச் சென்று அந்த தீர்மானம் அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் நிறைவேற்றப்பட்டது. இலங்கை யில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட் டில் கலந்துகொண்ட பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கையில் நடந்த இனஅழிப்புக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தி யுள்ளார். அதை பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் என்று உறுதிய ளித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்பு அவை (Amnesty Internatonal) தொடர்ந்து இலங்கையில் நடந்த இனப் போராட்டத்தைக் கண் டித்து குரல் கொடுத்து வருகின்றது. தற்போதும் அங்கு சிங்கள அரசாங்கமே திட்டமிட்டு தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் செய்வது தொடர்ந்து நடை பெற்று வருகிறது என்று ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டியதோடு சுதந்திரமான சர்வதேச விசாரணைதான் இதற்கு தீர்வு என்றும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாண கவுன்சில் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள், அண்மையில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்திலும் இலங்கையில் நடந்த கொடுமைகளை குறித்து விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழ் அரசியல் செயல்பாட்டுக் குழுமம் மற்றும் உலகத் தமிழ் அமைப்பு ஆகிய அமைப்புகள் கடந்த 22.1.2014 அன்று தலைவர் கலைஞர் அவர்களுக்கு எழுதியவேண்டுகோள் கடிதத்தில், சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசை தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளன.


தமிழ் ஓவியா said...

தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் இராஜபக்சேயின் செயலாளர் லலித் வீரதுங்கா அமெரிக்கா வினால் முன்மொழியப்படும் தீர்மா னத்தை முறியடிக்க அய்.நா. உறுப்பு நாடு களிடம் ஆதரவு திரட்ட, தங்கள் நாட்டு பிரதிநிதிகள் வெவ்வெறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறியுள் ளது மனித உரிமையில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடிய தாகும்.

இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசின் நோக் கத்திற்குத் துணை போகாமல், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன் மொழிய உள்ள தீர்மானத்தை ஆதரிப்ப தோடு, சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று இந்திய அரசே தனியா கவும் ஒரு தீர்மானத்தை அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்மொழிய வேண்டுமென்று இக்கூட்டம் இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 2

இலங்கை மாகாண கவுன்சில் நிர்வாகங்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்க வேண்டும்

இலங்கையில் வடக்கு மாகாண கவுன்சில் கூட்டம் கடந்த வாரம் நடை பெற்ற போது முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களும், மாகாண கவுன்சில் உறுப்பினர்களும் - அங்குள்ள மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் வேண்டுமென்றும், 13ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின்படி நியாயமாக வழங் கப்பட வேண்டிய அதிகாரங்கள்கூட மாகாண கவுன்சில்களுக்கு வழங்கப்பட வில்லை என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத் தின் 13ஆவது திருத்தத்தின்படி, தமிழ் மாகாண கவுன்சில்களுக்கு வழங்கப்பட வேண்டிய, நில நிர்வாகம் - காவல்துறை நிர்வாகம் உள்ளிட்ட முக்கியமான நிர்வாக உரிமைகள் வழங்கப் படவில்லை. மேலும், மாகாண கவுன்சிலைக் கூட்டுவ தற்கும், கலைப்பதற்கும் இராஜபக்சே அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்குத் தான் அதிகாரம் உள்ளது. மாகாண கவுன்சில் அமைச்சரவையின் பரிந்துரை களை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும்கூட மாகாண ஆளுநருக்கே அதிகாரம் உள் ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப் போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப் பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும், இடைக் கால நிவாரணமாக முழுமையான அதி காரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில், 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்திடவும் இலங்கை அரசை வலியுறுத்தி தமிழர் களின் விருப்பத்தை நிறைவேற்ற இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் : 3

தமிழக மீனவர்களை பாதுகாக்க
மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவதும் வாடிக்கையாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைவர் கலைஞர் அவர்களும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கக் கோரி தொடர்ந்து மத்திய அரசை வலி யுறுத்தி வருகின்றார். இந்த பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல டெசோ அமைப்பின் சார்பில் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின் அவர்கள் தலைமையிலும் டெசோ உறுப்பினர்கள் முன்னிலையிலும் ராமேஸ் வரம் மற்றும் நாகப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இவ்வாறு தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கடலோர மாவட்ட மீனவர்கள் நாகப்பட்டினத்தில் சாகும்வரை பட்டினிப் போராட்டம் இருப்பதாக அறிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். தலைவர் கலைஞர் அவர்கள் உடனடியாக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களை நாகப்பட்டினத்துக்கு அனுப்பி அவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உண் ணாவிரதப் போராட்டத்தைக் கை விடச் சொன்னதுடன், மத்திய அரசுடன் பேசி ஒரு தீர்வுக்கு வழிகாண அறிவுறுத்திய தோடு, மீனவப் பிரதிநிதிகளை அவரே டெல்லிக்கு அழைத்துச் சென்றார்.

தலைவர் அவர்கள் அறிவுறுத்தியபடி 7-1-2014 அன்று நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு டில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித்தையும், 8-1-2014 அன்று பிரதமரையும் சந்தித்து, இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் பற்றிய தமிழர்களின் மனக் குமுறல்களை வெளிப்படுத்திய தோடு, பொங்கல் திருநாளுக்கு முன்பா கவே மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை யும் டி.ஆர்.

தமிழ் ஓவியா said...


பாலு வலியுறுத்தினார். அப்போது பிரதமர் அவர்களும், வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களும், அந்த மீனவர் பிரதிநிதிகளிடம் ஜனவரி 20ஆம்தேதி வாக்கில் இரண்டு நாட்டு மீனவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுமென்று உறுதி அளித்தனர்.

இறுதியாக, 27.1.2014 அன்று இருநாட்டு மீனவர்களின் கூட்டம் நடைபெற்று எந்த முடிவிற்கும் வராமல் வெறும் விவாதத் தோடு கூடிக் கலைந்தது.

ஒருசில பிரச்சினைகளில் தீர்வு எட்டப் பட்டிருப்பதாக தகவல் வெளிவந்திருந் தாலும் தொடர்ந்து இலங்கை கடற் படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கி வருகிறார்கள். தலைவர் கலைஞர் அவர் களின் முயற்சியால் மத்திய அரசை வலி யுறுத்தி நடந்த கூட்டம் எவ்வித ஆக்கப் பூர்வமான நடவடிக்கையும் இல்லாமல் நடந்தேறியதை மீனவர் சமுதாயத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளதோடு, அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் 30-1-2014 அன்று 38 இந்திய மீனவர்கள் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


எனவே, இந்த பேச்சுவார்த்தையில் மத்திய மாநில அரசுகள் முனைப்பு காட்டி நிரந்தரமான தீர்வுக்கு வழிவகை செய்யா தது வருந்தத்தக்கதும், தமிழக மீனவர் களுக்கு துரோகம் இழைப்பதுமாகும் என இக்கூட்டம் கருதுகிறது.

இந்நிலையில் மத்திய அரசே இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்குரிய விரை வான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 4

கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசின்
அணுகுமுறைக்குக் கண்டனம்

இந்திய நாட்டின் இறையாண்மைக்குக் கட்டுப்பட்ட கச்சத்தீவின் உரிமையை இலங்கை நாட்டுக்கு விட்டுக் கொடுப்பது சம்பந்தமான பிரச்சினை நாடாளு மன்றத்தில் முறைப்படி விவாதிக்கப்பட்டு, அரசியல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட ஒப்பந் தம் அல்ல என்றும், எனவே அந்த ஒப் பந்தம் செல்லாது என்றும் தெரிவிக்க வேண்டுமென்று கோரித்தான் டெசோ அமைப்பின் மூலமாகத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலே இருக்கும்போது, சென்னை உயர்நீதி மன்றத்தில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடை செய்யக் கூடாது என்று தொடர்ந்திருக்கும் வழக்கில் தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக் கின்றது.

திசை திருப்புவோர் யார்?

கேள்வி: தி.மு.க.வின் பிரச்சினைகளைத் திசை திருப்ப திடீர் டெசோ கூட்டமா?

பதில்: பிரச்சினைகளைத் திசை திருப்புபவர்கள் தான் இப்படிக் கூறுகிறார்கள். தி.மு.க.வின் - சூரியன் உதிக்கும் கிழக்குத் திசை மாறாது!

- செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 1.2.2014

Read more: http://viduthalai.in/e-paper/74489.html#ixzz2s7aCVOPa

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம். - (குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


பதவிக்கு வராமலே இந்நிலை....? பிறகு....?


ஊடகப் பத்திரிகைகள், மோடிக்கு எதிரானவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்
அவுட் லுக் ஏடு அம்பலப்படுத்துகிறது


- ஆர்.கே.மிஸ்ரா மற்றும் பிரக்யாசிங்

பா.ஜ. கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக வாக்களிக் கும் முன்னர் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும் என்ற நல்ல கருத்து ஒன்றினை திரு வீரபாண்டியன் வெளிப்படுத்தியபோது, கடந்த 17 ஆண்டு காலமாக சன் தொலைக் காட்சியில் முக்கியமான நேரத்தில் (prime-time) தான் தயாரித்து நடத்தி வந்த நிகழ்ச்சியை இழந்துவிடுவோம் என்று கற்பனை கூட செய்து பார்த்திருக்கமாட்டார். தினந்தோறும் தொலைக்காட்சியில் தான் நடத்தி வரும் விவாத மேடை நிகழ்ச்சியை நடத்துவதற்கு சன் தொலைக்காட்சி நிலையம் தன்னை அழைக்கும் என்று டிசம்பர் 20 ஆம் தேதி முதல் திரு.வீரபாண் டியன் காத்துக் கொண்டிருக்கிறார்.
மோடி அலை வீசுகிறது என்ற ஒரு காரணத்துக்காகவே, வாக்களிப்பதற்கு முன் மக்கள் சிந்திக்கவேண்டும் என்று தான் நான் கூறினேன்; வாக்களிக்கக் கூடாது என்று நான் கூறவில்லை என்று வீரபாண்டியன் கூறுகிறார். மோடிக்கு ஆதர வாக வாக்களித்தால், அந்த முடிவுடனேயே மக்கள் அடுத்த 15 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் நான் கூறினேன் என்று அவர் கூறுகிறார். இந்த கருத்தை அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி எதிலும் வெளிப்படுத்தவில்லை. தொலைக்காட்சி நிறுவனத்துடன் எந்தவித தொடர்பும் அற்ற ஓர் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில், தனிப்பட்ட முறையில் தனது கருத்தைத்தான் அவர் வெளிப் படுத்தினார். முஸாபர்நகர் கலவரங்கள் பற்றிய ஒரு குழு அளித்த அறிக்கையைப் பற்றி நவம்பர் 25 அன்று ஓர் அறைக்குள் மறைவாக மேற்கொள்ளப்பட்ட விவாதம் அது. ஆனால் கணினி வலைதளத்தில் வெளியிடப்பட்ட அதற்கு எதிராக தமிழ் நாட்டு பா.ஜ.கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் செய்ய அது வழி வகுத்தது. திரு வீரபாண் டியன் தெரிவித்த கருத்துகள் பிரிவினையை ஏற்படுத்துவதாக உள்ளன என்றும், வீரபாண்டியன் நடத்தும் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அக்கட்சியின் தலைவர்கள் அச் சுறுத்தியுள்ளனர் என்றும் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் மாநில பா.ஜ.க. செயலாளர் சர்வோத்தமன் புகார் தெரிவித்ததை அடுத்து, திரு. வீரபாண்டியன் நிகழ்ச்சி களை ஒளிபரப்புவதை சன் தொலைக்காட்சி நிலையம் நிறுத்திவிட்டது.

மோடியைப் பற்றி ஏதேனும் தவறுதலாக செய்தி வெளியிட்டு அவரது கோபத்தை எதிர்கொள்ள நேருமோ என்று செய்தி யிதழ்களும், தொலைக்காட்சி நிறுவனங் களும் திடீரென்று அச்சம் கொள்ளத் தொடங்கியிருப்பதாகவே தோன்றுகிறது. ஊடகத்தினருடன் மோடி மிகக் குறைந்த அளவிலேயே தொடர்பு வைத்துக் கொள் கிறார்; அதுவும் தனக்கு ஆதரவாக இருக் கும் ஊடகத்தினருடன் மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்கிறார். என்றாலும், சில ஊடக நிறுவனங்களில் உயர்மட்ட செய்தி ஆசிரியர்களின் மாற்றம் பற்றிய பேச்சுக்களில் மோடியின் பெயர் அடிபட்டு வருகிறது. மோடியைத் தாக்கி அவருக்கு எதிராக செய்திகளை எழுதுவதைக் குறைத்துக் கொண்டு அடக்கி வாசிக்க செய்தியாளர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்; செய்தி ஆசிரியர்கள் தங்கள் பணிகளை இழந்து வருகின்றனர்; முக்கிய மான விவாத நிகழ்ச்சிகளின் ஒளிபரப்புகள் நிறுத்தப்படுகின்றன; மோடியைப் பற்றி எழுதும்போது அவருக்கு எதிராக எழுதும் செய்தியாளர்கள் நீக்கப் பட்டு நடுநிலை செய்தியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு மோடியின் தாக்கம் ஊட கத்தின் மீது ஏற்பட்டுள்ளது. செய்திகளை வெளியிடுவது, தலையங்கம் எழுதுவது ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஊடக முதலாளிகளும் அந்நிறுவனங்களில் முக்கிய முடிவெடுப்பவர்களும் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்வதாகவே சிலர் நம்புகின்றனர். மோடிக்கு எதிரான செய்தி எதுவாக இருந்தாலும் வரவேற்கும் கடுமையான, கொச்சையான ஆன்லைன் மற்றும் வலை தளங்களின் தொடர்ந்த தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி இத்தகைய முடிவுகளை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர். அது மட்டுமன்றி, ஊடகங்கள் பெரும் தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருப்பது வளர்ந்து வரும் நிலையில், அரசியல் சார்பு ஒரு திசைகாட்டியின் முள்ளைப் போல் இல்லாமல் காற்றடிக்கும் திசையில் சாய்வதாகவே உள்ளது.

தமிழ் ஓவியா said...

இயல்பாகவே முதலாளிகள் எந்த வித ஆபத்துக்கும் தங்களை உட்படுத்திக் கொள்ள விரும்பமாட்டார்கள். அப்படி இருக்கும்போது, கடுமையாக விமர்சிக்கும் ஊடகத்தை மோடி வெறுக்கிறார். அதனால், மோடியின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கவே பெரும்பாலான முதலாளிகள் விரும்புவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. செய்திப் பிரிவின் மீதான அதன் தாக்கம் எத்தகையதாக இருக்கிறது என்பது அந் தந்த ஊடகத்தின் தனிப்பட்ட பாரம்பரியத் தைப் பொறுத்ததாக இருக்கும்; சில நேரங்களில் தெளிவான அறிவுரைகளும் அளிக்கப்படும்; அதிக அளவு ஆபத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் சுயகட்டுப்பாடு என்பதும் இருக்கும் என்று கடந்த அக்டோபர் மாதத்தில் இந்து ஆங்கில நாளி தழின் ஆசிரியர் பணியிலிருந்து விலக வேண்டி வந்த திரு. சித்தார்த் வரதராஜன் கூறுகிறார்.

நாளிதழின் புதிய இயக்குநர் குழுவின ரின் ஆதரவையும், நம்பிக்கையையும் வரத ராஜன் இழந்துவிட்டார். வர இருக்கும் நாடா ளுமன்றத் தேர்தலையொட்டி, தனிப்பட்ட அரசியல்வாதிகள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் கடை பிடிக்க வேண்டிய சில விதிகளை வரதராஜன் உருவாக்கினார். மோடி அலை வீசுவதைப் பற்றி பெரிய அளவில் செய்திகளை வெளியிடாமல் அடக்கி வாசிக்கும் கொள்கையை நாளிதழின் புதிய தலைமை ஆசிரியர் திரு என்.ரவி ஏற்றுக் கொள்ள வில்லை என்று தெரிய வருகிறது. தனது நிலையில், கொள்கையில் பொதுவாக திடமாகவும், உறுதியாகவும் இருந்து வரும் இந்து நாளிதழில், இதற்கு முன் எப்போதுமே நடந்திராத இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டு பலரும் வியப்படைகின்றனர். மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக பயன் கருதி கடைபிடிக்கப்படும் இத்தகைய கொள்கையினால் ஏற்பட இயன்ற மோசமான பாதிப்புகளை கூறுபடுத்தி, இந்து நாளிதழ் முறைமன்ற நடுவராக இருக்கும் வாசகர் பகுதியின் ஆசிரியரான திரு.ஏ.பன்னீர் செல்வம் இவ்வாறு கூறுகிறார்: கருத்து வேறுபாடு கொள்வதைப் பற்றிய அச்சத்தை அது உருவாக்குகிறது. வேறு ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டால் வேறு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற கவலையையும், அச்சத்தையும் அது ஏற் படுத்துகிறது. அந்தந்த நேரத்தில் உருவாக் கப்படும் உணர்வுக்கு எதிரான கருத்து களையும், செயல்களையும் மேற்கொள்வதற்கு ஊக்கமளிக்காமல் அது தடுக்கிறது. மோடிக்கு ஆதரவாக பேரலை வீசுகிறது என்ற தகவலை அவர்கள் உண்மையிலேயே நம்பாவிட்டாலும், தாங்கள் தவறான பக் கத்தை ஆதரித்து சிக்கிக் கொள்ளக்கூடாது என்று அது பலரையும் நினைக்க வைக்கிறது.

தமிழ் ஓவியா said...


இந்து நாளிதழில் செய்யப்பட்டுள்ள மாற் றங்களைப் பற்றிய கருத்தைக் கேட்டபோது, எங்களது செய்திப்பிரிவு மோடிக்கு எதிரான நிலையினையே கொண்டதாகும். ஆனால் அது எங்களது செய்தி வெளியீட்டில் எப்போதும் எதிரொலிக்காது. ஊடக செய்தி வெளியீட்டினை திறன் மிக்க ஒரு தொழிலாக நாம் மீட்டெடுக்கவேண்டும். தேசிய அரசியல் காட்சியில் மோடி தோற்றம் பெற்றிருக்கும் செய்தி முறையாக கையாளப்படவில்லை; வெளியிடப்படவில்லை என்பதே எனது கருத்து என்று இந்து நாளிதழின் தலைமை ஆசிரியர் என். ரவி கூறினார்.

தமிழ் ஓவியா said...

திரு ரவி அளித்தது போன்ற விளக்கங் கள் சில நேரங்களில் அளிக்கப்படுவதில்லை. திவ்ய பாஸ்கர் இந்தி நாளிதழ் அக்டோபர் 27 அன்றைய தங்களின் நாளிதழில், படேலின் இறுதிச்சடங்கில் நேரு கலந்து கொள்ள வில்லை - மோடியின் அறிக்கை என்ற தலைப்புச் செய்தியை வெளியிட்டது. உண்மையில் நேரு படேலின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அதனால் மோடியின் புரட்டு பற்றியும் (போக்கிரித்தன மான பொய் என்று சிலர் இதனைக் குறிப் பிட்டனர்), அதனை தலைப்புச் செய்தியாக நாளிதழ் வெளியிட்டது பற்றியும் கடுமையாக கண்டனம் செய்யப்பட்ட விவாதங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மேற்கொள் ளப்பட்டன. இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த நாளிதழ் எந்த வித விளக்கமும் அளிக்காமல் தாங்கள் வெளியிட்ட செய்தி தவறான செய்தி என்று மட்டும் தெரிவித்து விட்டது.

தமிழ் ஓவியா said...

ஓபன் (Open) ஆங்கில பத்திரிகையின் அரசியல் பிரிவு முன்னாள் ஆசிரியராக இருந்த ஹர்தோஷ் சிங் பால், ஏன் தனது வேலையை இழக்க நேர்ந்தது என்பது பற்றியோ, அவரது பணி பற்றி அவரது எஜமானர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ அவருக்கு நேரடியாகக் கூறப்படவில்லை. அவரது கட்டுரைகள் மோடியை விமர்சிப்பது போல இருந்த அதே நேரத்தில்,

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந் தியை வறுத்தெடுப்பவையாகவும் இருந்தன. அரசியல் நிர்பந்தம் காரணமாக நான் நீக்கப்படுகிறேன் என்ற செய்தி எனது ஆசிரியரால் என்னிடம் தெரிவிக்கப்பட்டது என்று பால் கூறுகிறார். மண்டை ஓட்டுக் குவியலின் மீது மோடி நின்றுகொண்டிருப்பது போன்ற படத்தையும், வாரிசு அரசியலைக் குறிப்பது போல, தனது பெற்றோர்களின் தோளில் ஏறி நின்று கொண்டிருப்பது போன்ற ராகுல் காந்தியின் படத்தையும் அட்டையில் போட்டு ஓபன் பத்திரிகை கட்டுரை வெளியிட்டிருந்தது. அதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தவுடன், அதனை நீக்கி விடும்படி கூறப்பட்டது. இதற்கு மோடியின் முகாம் நிர்பந்தம் கொடுத்த செய்தி முணு முணுப்பாக பரவியது. இந்த பத்திரிகையின் செய்திப் பிரிவு ஆசிரியர்கள் இப்போது மாற்றப்பட்டுள்ளனர்.

18 ஆவது நெட்வொர்க்கை முகேஷ் அம் பானியின் ரிலையன்ஸ் குழுமம் வாங்கிவிட்ட பிறகு, அது ஒரு வலதுசாரி ஆதரவு நிலையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மோடியைக் கடுமையாக விமர்சிக்காமல் அவரை ஆதரிப்பது போல மென்மையாக செய்திகளை வெளியிடுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது பற்றி 18 ஆவது நெட் வொர்க்கின் பத்திரிகைகளில் ஒன்றான இந்திய ஃபோர்பீசின் (Forebes -India) முன்னாள் ஆசிரியர்கள் கருத்து தெரிவித் திருக்கின்றனர். மோடியை ஆதரிக்கும் செய்திகளை வெளியிடுமாறும், நிகழ்ச் சிகளை ஒளிபரப்புமாறும் இந்த குழுமத் துக்குச் சொந்தமான அனைத்து தொலைக் காட்சி நிறுவனங்களுக்கும், பத்திரிகைகளுக் கும், கணினி ஈ-இதழ்களுக்கும் அறிவுரை கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதற்கு எதிராக ஏதேனும் குரல் எழும்பியதால், அதன் குரல்வளை நெரிக்கப் பட்டது; எழுப்பியவர்கள் ஊமைகளாக் கப்பட்டனர். கணினி இணையதளங்களில் இந்துத்துவ சக்திகளால் தூண்டப்படும் மோடி ஆதரவு நிலை சமூக ஊடகங்களில் மிகவும் அழுத்தமாக காணப்படுகிறது. இந்தியாவில் உள்ள அரசு, அரசியல், செய்திகளுக்கான டிவிட்டர் அமைப்பின் தலைவர் ரஹீல் குர்ஷீத்தை இலக்காகக் கொண்டு அண்மையில் அவர் மீது இத் தகைய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப் பட்டது. எங்குமே காணமுடியாத அவரது மிகப் பழைய டிவிட்டர் செய்திகள் சில வற்றைத் தோண்டி எடுத்து வெளியிட்டு,

தமிழ் ஓவியா said...

அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. என்டி-டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்குப் பதிலடி கொடுப்பதற்காக பெருமளவு மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மோடி வேடிக்கை பார்த்தார் என்று அவர் கூறியிருந்த டிவிட்டர் செய்தி அவற்றில் ஒன்று. ஹர்தோஷ் சிங் பால் போலவே குர்ஷீத்தும் ராகுல் காந்தியின் அரசியல் குறுக்கீடுகள் காரசாரமற்ற -சுவை யற்றவையாகவும், ஆர்வத்தைத் தூண் டாதவையாகவும் இருக்கின்றன என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவரை ஒரு மோடி எதிர்ப்பாளர் என்று சொல்வதை விட மாற்றத்தை விரும்பாத அதிகார வர்க்கத்துக்கு எதிரானவர் என்று வேண்டுமானால் கூறலாம். 2012 டிசம்பரில் சிறீநகர் தாஹிர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு ஆதரவாக “India banega Kashmir” என்ற டிவிட் செய்தியை குர்ஷீத் வெளியிட்டார். சச்சின் தீச்சித் Sachin Dixit @ India - MSM என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம் 5000 பேர்களின் கையொப்பத்தைப் பெற்று குர்ஷீத்தைப் பதவி நீக்கம் செய்ய வைத்த செயலுக்கு முன்னால் குர்ஷீத்தின் இத்தகைய பணிகள் எதுவுமே எடுபடாமல் போய்விட்டன. அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு குர்ஷீத்தின் கருத்தைக் கேட்டு வந்த செய்திகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

மோடிக்கு ஆதரவாக செயல்படுபவர் களின் செல்வாக்கு தேசிய அளவிலும், ஊடக அளவிலும் இந்த அளவுக்கு இருக் கிறது என்றால், மோடி முதலமைச்சராக இருக்கும் குஜராத் மாநிலத்தில் எதிர்ப்புக் குரலை அடக்கி ஒடுக்கும் முயற்சி அதிகப்படியாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். வணிகத் துறையிலும், தொழில் துறையிலும் குஜராத்தில் மோடி என்னவெல்லாம் செய்துள்ளார் என்று காட்டுவதற்காக குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்ய துடிப்புடன் முன்வரும் உலக முதலீட்டாளர்கள் என்ற இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உச்சி மாநாட்டைப் பற்றி, அட்டைப்பட கட்டுரை எழுதி வெளியிடுவதற்கு, உயர்தர வணிக இதழ் ஒன்றின் குஜராத் மாநில செய்தி யாளருக்கு வரவேற்பு, அனுமதி இல்லை என்று அந்த இதழின் நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த உச்சிமாநாடு என்னும் திரு விழாவில் உலகெங்கிலும் இருந்து முதலீட் டாளர்களைக் கலந்து கொள்ள வைப்பதற்கு குஜராத் அரசு அதிகார வர்க்கத்தினர் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். செய்தி வெளியிடுவது மற்றும் விளம்பரம் தருவது என்ற இரண்டுக்குமிடையே தடையாக உள்ள சுவரை எப்போதுமே இது தகர்த்துவிடும் என்று சொல்ல முடியாத நிலையில், அதன் பாதிப்புகள் வெளிப் படையாகத் தெரியவே செய்கின்றன. மோடிக்கான ஆதரவும், செல்வாக்கும் உயர உயர, ஊடகம் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் மிகுந்த ஒரு களப்பணிப் படையினராக அவர்கள் ஒன்று திரண்டு செயலாற்றுகின் றனர். இதில் உள்ள சோகம் என்ன வென்றால், பத்திரிகை தர்மம் காற்றில் பறக்க விடப்படுவதுடன், சரியான விமர் சனங்கள் செய்யப்படுவதற்குப் பயன்படுத் திக் கொள்ளப்படாமல், திறமை மிக்கவர் களின் தலைகள் இத்தகைய தகவல் பேரலையில் உருட்டப்படுகின்றன.

நன்றி: அவுட்லுக் 03.02.2014

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page-2/74496.html#ixzz2s7aoLPfr

தமிழ் ஓவியா said...


கண்ணோட்டம்: வைகோவின் வாயை அடைத்த மோடி அலை!


கருவாட்டுப் பானையை சுற்றி வரும் கபட பூனையைப் போல தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார் நரேந்திர மோடி. ஏற்கெனவே திருச்சிக்கு வந்து கூட்டிவரப்பட்ட கூட்டத்தில் முழங்கிவிட்டுப் போனார். வேதாரண்யத்திற்கு வ.உ.சி. உப்பு காய்ச்சப்போனார் என்பன உள்ளிட்ட தவறான தகவல்களை கூறி பல ருக்கும் பீதி யூட்டினார். பின்பு அருண்ஷோரி எழுதிய புத்தகத்தை வெளியிடுவதற்காக சென்னை வந்தார். இப்போது மீண்டும் சென்னை வர இருக்கிறாராம். அவரை வரவேற்க வரவேற்புக்குழு ஒன்றை புரட்சி புயல் வைகோ அமைத்துள்ளாராம். பாஜக கூட இப்படியொரு வரவேற்புக் குழுவை அமைத்ததாக தகவல் இல்லை. ஆனால் இன்னமும் எத் தனை இடம் என்று கூட முடிவாகாத நிலையில் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படும் வைகோ வர வேற்புக் குழுவை அமைத்திருக்கிறார்.

விட்டால் இவரே கூட அன்றைக்கு புலி வேசம் போட்டு ஆடுவார் போலி ருக்கிறது. பாஜக விரித்த வலையில் தமிழ கத்தை பொறுத்தவரையில் மதிமுகவை தவிர வேறு எந்தக் கட்சியும் இதுவரை சிக்கவில்லை. தாயகத்தில் ஒருமுறை, கமலாலயத்தில் ஒருமுறை என்று இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. எனினும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தைகளில் காந்திய மக்கள் இயக்க தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தமிழருவி மணியனும் பங்கேற்றாராம், திருமண தரகு வேலை பார்ப்பவர்கள் கூட ஜாதக பரிமாற்றத்தோடு நின்று விடுவார்கள். ஆனால் இவரோ கல்யாண வீட்டில் இலை எடுப்பது வரை இருப்பது போல பாஜகவுக்கு சேவை செய்து வருகிறார். அந்தளவுக்கு மோடியின் மீது `பாசம் பொங்கி வழிகிறது. நான் சென்னையில் கூட்டிய கூட்டத்தில்தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் உறுதியளித்தார். என்னைத் தவிர இந்த திட்டத்திற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது என்று முழங்குவார் வைகோ. ஆனால் பாஜக பக்கம் இவருடைய பாசப்பார்வை திரும்பிய வுடனேயே சேது சமுத்திரத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினை இருப்பதாக பேசத் தொடங்கிவிட்டார். இப்போதுதான் கடலுக்கு அடியில் பவளப்பாறைகளும் பாசிகளும் இருப்பது இவருக்கு தெரிய வந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக மூழ்கினால் ராமர் கட்டிய பாலமும் கூட அவருக்கு தெரியக்கூடும். அண்மைக் காலமாக மோடியை நினைக்கும் பொழுதெல்லாம் வைகோவுக்கு, ஆவேசம் அதிகமாகி வியர்த்துக் கொட்டத் தொடங்கி விடு கிறது. நாடெங்கும் மோடி அலை, வீடெங்கும் மோடி அலை, டீக் கடை கள், காடுகள், கழனிகள், எங்கெங்கும் மோடி அலை வீசுகிறது என்று புல் லரித்து, போர்வையை எடுத்து போர்த்திக் கொள்கிறார். தேர்தல் வர இன்னும் சில மாதங்கள் உள்ளன. அதற்குள் இவ் வளவு புல்லரிப்பு என்றால் இன்னும் போகப்போக என்னாகுமோ தெரிய வில்லை. டீக்கடை பாய்லரில் அடிக்கும் ஆவி கூட இவருக்கு மோடி அலை யாகத் தெரிகிறது.

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா என்பவர் தந்தை பெரியாரை மிகமிக இழிவாகப் பேசியிருக்கிறார். பெரியார் வழி வந்ததாக கூறிக் கொள்ளும் வைகோ இதுகுறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதற்காக கண்டனம் முழங்கும் வைகோ பெரியாரைப் பழித்ததை, இழித்துரைத்ததை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ? நாகரிகமான அரசியலுக்காகவே பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவதாக கூறிக்கொள்ளும் தமிழருவியும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போதைக்கு இவர்களுக்கு பெரி யாரால் ஆகப் போவது ஒன்றுமில்லை. அதிகாலை வேளையில் மோடி பஜனை பாடிக்கொண்டு யாராவது வந்தால் அவர்களை உற்றுப் பாருங் கள். ஒரு வேளை அவர்கள் வைகோ, தமிழருவியாக கூட இருக்கக்கூடும்.

- மதுரை சொக்கன்
(நன்றி: தீக்கதிர் 29.1.2014

Read more: http://viduthalai.in/page-2/74497.html#ixzz2s7bQ1HJr

தமிழ் ஓவியா said...


ஜஸ்டிஸ் கட்சியும் ஸ்ரீவரதராஜுலுவும்


ஜஸ்டிஸ் கட்சியும் ஸ்ரீவரதராஜுலுவும்

ஸ்ரீவரதராஜுலு ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ்நாடு பத்திரிகையில் எழுதியிருப்பதாவது:- ஜஸ்டிஸ் கட்சியார் செய்து வரும் தொல்லை யால் தென்னாட்டு மக்கள் நோயுற்றிருக் கின்றார்கள்... ஜஸ்டிஸ் கட்சியின் ராஜிய நயவஞ்சகத்தை உடைத்தெறிய ஸ்ரீவரதராஜுலு 12 வருஷங்களாகப் பாடுபட்டு வருகிறார்.

நாயக்கர் பிரச்சாரம் இப்போது போலவே நடை பெறுமானால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடமே தெரியாமல் போகும்.

தேசிய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கட்சி ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது...

கேவலம் ஒரு சட்ட மெம்பர் பதவிக்காக தேசத்துரோகம் செய்தது ஒழுங்கா?
பிராமணர்களை தேசியக் கூட்டத் திலிருந்து விலக்கிவிட நாம் ஒரு நாளும் சம்மதிக்க முடியாது...

என்பதும் மற்றும் இது போன்றதுகளும் எழுதி ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுகிறார்.
இவை முழுவதும் வெறும் மிரட்டல்கள் என்று எல்லோரும் நினைப் பார்கள் என்பது ஸ்ரீ வரத ராஜுலுக்கே தெரிந்திருந்தாலும் பார்ப் பனர்களை ஏமாற்றுவதற்காகவும் தான் இப்போது பார்ப்பனர்கள் கட்சிக்கே முழுதும் வந்துவிட்டதாக பார்ப்பனர்கள் நினைக்க வேண்டும் என்றும் நினைக்கும் பேதமை யானது இதையெல்லாம் எழுதச் செய்கின்றது. ஒரு ஒற்றை மனிதனின் வயிற்றுப் பிழைப்பு என்னவெல்லாம் செய்யத் துணிவு கொடுக் கின்றது என்பதை எடுத்துக் காட்டவே இவை களை நாம் எழுதுகிறோம். ஜஸ்டிஸ் கட்சியாரால் தமிழ் மக்களுக்கு என்ன நோவு வந்திருக் கின்றது என்பதை முதலில் காட்டி, பிறகு அக்கட்சியில் வந்த நோவுக்கு அக்கட்சியைக் காட்டிக் கொடுப்பாரானால் அது ஆண்மையும் யோக்கியமும் பொருந்தின காரியமாயிருக்கும்.

தமிழ் ஓவியா said...

ஜஸ்டிஸ் கட்சி என்பதாக ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லாதிருக்குமானால் தமிழ் மக்களின் யோக்கியதை இது சமயம் என்னமாயிருக்கும் என்பதை யோசித்தால் ஒரு அறிவிலிக்கு ஜஸ்டிஸ் கட்சியால் தமிழ் மக்களுக்கு நோய் உண்டாயிற்றா அல்லது ஸ்ரீ வரதராஜுலு போன்றோர் பார்ப்பன வால் களாயிருந்து கொண்டு பார்ப்பன ஆதிக் கத்திற்கு உள்உளவாயிருப்பதால் தமிழ் மக் களுக்கு சுயமரியாதை இல்லாததான நோய் உண்டாகிக் கொண்டு வந்திருந்ததா என்பது விளங்காமல் போகாது.

12 வருஷகாலமாக ஜஸ்டிஸ் கட்சியின் நய வஞ்சகத்தை உடைத்தெறிய ஸ்ரீ நாயுடு வேலை செய்தது என்பது வாஸ்தவமே. ஆனால் அது நாட்டின் நலத்திற்காகவா தனது சுயநலத்துக் காகவா என்பதை அறிய பொது ஜனங்களுக்கே விட்டு விடுகின்றோம். ஆனால் இவர் ஜஸ்டிஸ் கட்சியை வைது அதற்காகப் பார்ப்பனரிடம் கூலி வாங்கிக் கொண்டதல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியின் மீது ஒட்டிய ஒரு சிறு தூசியையாவது அசைக்க முடிந்ததா என்று கேட்கின்றோம்.

அன்றியும் அக்கட்சி ஒன்று இல்லா திருந்தால் ஸ்ரீ வரதராஜுலுவை பூதக் கண்ணாடி கொண்டாவது காணமுடியுமா என்று கேட்கின் றோம்.

நாயக்கர் பிரச்சாரம் இப்படியே இருந்தால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம். போன தேர்தலில் ஸ்ரீ வரதராஜுலுவும் அவர்கள் தலைவர்களும் சேர்ந்தே ஒரு கை பார்த்தார்கள். தமிழ் நாட்டில் இந்த ஒன்றரை வருஷமாய் ஜஸ்டிஸ் கட்சியை எவ்வளவு தூரம் இருந்த இடம் தெரியாமல் செய்துவிட இவர்களால் முடிந்தது என்பதையும் பொது ஜனங்களே யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். ஸ்ரீ வரதராஜுலு போன்றவர்கள் இருந்த இடம் தெரிய காங்கிரசில் சிலர் இராஜினாமா கொடுத்து விட்டு ஜஸ்டிஸ் கட்சிக்கு விண்ணப்பம் போட நேர்ந்ததும் அதை அவர்கள் தள்ளும்படி செய்ததும் பொது ஜனங்களுக்குத் தெரியுமா தெரியாதா என்று கேட்கின்றோம். தவிர நாயக்கர் பிரச்சாரத்தைக் கண்டு பயந்து ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுவது எவ்வளவு இழி தன்மை என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

தேசிய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கட்சி முட்டுக் கட்டையாயிருக்கின்றது என்று சொல்வது தேசியம் என்றால் என்ன? அதற்காக யார் எந்தவிதமான பிரச்சாரம் செய்கிறார்கள்? அதனால் ஏற்பட்ட பலன் என்ன? என்பதைப் பற்றி குடிஅரசு சுமார் ஒரு நூறு, இருநூறு தடவை ஸ்ரீ வரதராஜுலு போன்ற வயிற்றுப் பிழைப்பு தேசிய வீரர்களைக் கேட்டிருக்கும். ஆனால் நாளிது வரை ஸ்ரீ வரதராஜுலுவாவது மற்றும் எந்தப் பார்ப்பனராவது தேசியத்திற்கு வியாக்யானம் சொன்னவர்கள் அல்ல. அப்படியிருக்க ஜஸ்டிஸ் கட்சி தேசியத் திற்கு முட்டுக்கட்டை என்பது ஏமாற்றுப் பிரச்சாரமா அல்லவா? என்று கேட்கின்றோம்.

ஒரு சட்ட மெம்பர் பதவிக்கு தேசத் துரோகம் செய்தது என்பது இதைப் பற்றி இதே மாதிரி பார்ப்பனர்களும் ஸ்ரீ வரதராஜுலுவும் இதற்கு முன்னால் போட்ட கூப்பாட்டிற்கு நீண்ட பதில் எழுதியிருக்கிறோம். அதற்குச் சமாதானம் சொல்லாமல் மறுபடியும் அதை எழுதுவது பொது ஜனங்கள் பைத்தியக்காரர்கள் என்கின்ற எண்ணமே ஒழிய வேறு என்ன என்று கேட்கின்றோம்.

ஸ்ரீ கிருஷ்ணன் நாயர் சட்ட மெம்பர் பதவி ஒப்புக் கொண்டதில் தேசத் துரோகம் என்ன என்றும் திரு. சர் சிவசாமி, சர்.சி.பி., சர் கிருஷ்ணசாமி, சர். ராஜகோபாலாச் சாரி, ஸ்ரீ வெங்கட்டராம சாஸ்திரி ஆகியவர்கள் ஒப்புக் கொண்டதில் உள்ள தேசபக்தி என்ன என்றும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். அப்படிக் கில்லாமல் தேசத் துரோகம் என்று எழுதுவது வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யும் இனத் துரோகமேயல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றோம்.

பிராமணர்களை விலக்க முடியாது என்பது ஸ்ரீ வரதராஜுலுவைப் பார்ப் பனர்கள் சேர்க்காவிட்டாலும் ஸ்ரீ வரதராஜுலுவின் ஆயுள் வரை வரதராஜுலு பார்ப்பனர் களை விட முடியாது என்பது பார்ப்பனர்கள் உள்பட எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆதலால் அதில் ஒன்றும் அதிசயமில்லை என்றே சொல்லுவோம்.
எனவே ஸ்ரீ வரதராஜுலுவின் இவ் வாக்கியங்களிலிருந்து அவர் எவ்வளவு தூரம் தனது சமுகத்தாரின் கேடுக்குத் தயாரா யிருக்கிறார் என்பது முதலியவைகளை விளக்கவே இதை எழுதுகிறோமேயல்லாமல் மற்றபடி இவரது இம்மாதிரி பிரச்சாரத்தில் ஏதாவது விளைந்து விடுமோ என்கின்ற பயத்தினால் நாம் இதற்கு சமாதானம் எழுதவரவில்லை என்பதையும் தெரிவிக் கின்றோம்.
- குடிஅரசு கட்டுரை, 29.04.1928

Read more: http://viduthalai.in/page-7/74522.html#ixzz2s7bwGPO8

தமிழ் ஓவியா said...

தர்மத்தின் நிலை

நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக் காக தர்மம் செய்திருப்பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக் கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத் தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமுகத்தாராகிய பார்ப்பனரல் லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யா விட்டாலும் முழுதும் பார்ப்பனர் களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது. கோவில்கள், வேதபாட சாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலி யவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப்பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ்வரர் களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தப்பட நியாய மிருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமுகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழி யிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார் களோ அந்த சமுகத்தாருக்குத் துரோகம் செய்து பார்ப்ப னரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமுகத் தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை செட்டியார் நன்மையையும் பார்ப்பனரல்லாதார் நன்மையையும் நமது நாட்டின் நன்மையையும் உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு துணைத்தலையங்கம், 08.04.1928

Read more: http://viduthalai.in/page-7/74522.html#ixzz2s7cGncE4

தமிழ் ஓவியா said...


வாலாஜாபேட்டையில் முப்பெரும் விழா:


அரக்கோணம் மாவட்டக் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.4,32,000 தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது

வாலாஜாபேட்டை, பிப்.1- வாலாஜாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் 31.1.2014 மாலை அரக்கோணம் கழக மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 135 ஆவது பிறந்த நாள் விழா, தமிழர் தலைவரின் 81 ஆவது பிறந்த நாள் விழா, பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

மாலை 6 மணிக்கு திராவிடர் கழக வேலூர் மாவட்டத் தலைவர் வி.சடகோபன் உரையுடன் கூட்டம் தொடங்கியது. கழகச் சொற்பொழிவாளர் காஞ்சி கதிரவன் தந்தை பெரியார் உழைப்பால் பயனடைந்த தமிழர்கள் ஜாதி, மத, அரசியல் கட்சி களைக் கடந்து பெரியார் சிலை வைக்க நன்கொடை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் தமிழர் தலைவரின் செயற்பாடுகள் குறித்தும், பார்ப்பனர் களின் சூழ்ச்சிகள் குறித்தும் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் மேடைக்கு வந்ததும் தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வீரமணி வாழ்க! என்ற முழக்கங்கள் உற்சாகமாக முழங்கப்பட்டன.

மாவட்ட தி.க தலைவர் சு.லோகநாதன் தலைமை யுரையாற்றினார், மாவட்ட தி.க செயலாளர் செ.கோபி, கழக மாவட்டக் காப்பாளர் சொ.சீவன் தாஸ், மருத்துவர் அணி பொறுப்பாளர் டாக்டர் பழ.ஜெகன்பாபு, பொதுக்குழு உறுப்பினர் கோ.சூரியகுமார், மாவட்ட தி.க துணைச் செய லாளர் க.தீனதயாளன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பிரேமாசங்கர், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் செ.வெங்கடேசன், காவேரிப் பாக்கம் ஒன்றியச் செயலாளர் பா.இராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக அரக்கோணம் நகர கழகத் தலைவர் பெரியார் நேசன் வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் அவர்கள் தொடக்கவுரை யாற்றினார். திராவிடர் கழக செயலவைத் தலைவர், சு.அறிவுக்கரசு அவர்கள் உலகச் சிந்தனையாளர் களைவிட தந்தை பெரியாருக்கான பெருஞ்சிறப்பு களை விளக்கி உரையாற்றினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் அவர்கள் தந்தை பெரியாரின் சிறப்பு பற்றியும், நன்றியுணர்ச்சியுடன் தமிழர்கள் பெரியார் சிலை நிறுவ நன்கொடை வழங்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கியுள்ளன. திராவிடர் கழகம் தமிழர்களைத் தட்டியெழுப்பிய பெரியாருக்கு சிலை வைக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளது என்றார்.

பெரியார் சிலை அமைக்க மக்கள் நன்கொடை களை ஏராளமாகத் தந்ததை, மாவட்டக் கழக அமைப்பாளர் பாணாவரம் பெரியண்ணன் நெகிழ்ச்சியோடு பட்டியலிட்டு குறிப்பிட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர் கள் புகழேந்தி, இராசன், காவேரிப்பாக்கம் பாண்டுரங்கன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் மற்றும் ஏராளமான தோழர்கள் பயனாடை அணிவித்து தமிழர் தலைவருக்குச் சிறப்பு செய்தனர்.

கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர் களுக்கு பயனாடை அணிவித்தும் தமிழர் தலைவர் பாராட்டினார்.

வேலூர் மண்டல தி.க தலைவர் செய்யாறு பா.அருணாசலம், காஞ்சி மண்டல தி.க தலைவர் அரக்கோணம் பு.எல்லப்பன், செயலாளர் க.ஏ.மோகனவேலு, காஞ்சி மாவட்ட தி.க தலைவர் டிஏஜி அசோகன், செயலாளர் செ.ரா.முகிலன், வேலூர் மாவட்ட தி.க செயலாளர் க.சிகாமணி, தாம்பரம் மாவட்ட தி.க தலைவர் முத்தையன், நாத்திகன், வேலூர் மண்டல இளைஞரணி செயலாளர் சிவக்குமார், மகளிரணி ஈஸ்வரி சடகோபன், காஞ்சி மண்டல இளைஞரணி செயலாளர் அ.அர்ஜூன், பாணாவரம் பெ.வீரமணி, அரக்கோணம் மாவட்ட தி.க இளைஞரணித் தலைவர் து.சுரேஷ், பாணாவரம் கி.தணிகாசலம், மகளிரணி இலட்சுமி கோபி, சிவகாமி இராவணன் முதலிய பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழர் தலைவரின் சிறப்புரையைக் கேட்க ஏராளமானோர் மாநாடு போல் கூடியிருந்தனர். இஸ்லாமியத் தோழர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். தமிழர் தலைவர் பல்வேறு ஆதாரங்களைக் காட்டி சிறப்புரையாற்றி னார். அரக்கோணம் நகர தி.க செயலாளர் கு.சோமசுந்தரம் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

தமிழர் தலைவருக்கு காஞ்சிபுரத்தில் வரவேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட தி.க தலைவர் டிஏஜி அசோகன் தலைமையில் காஞ்சிபுரம் பொன்னேரிக் கரையில் கழக தோழர்கள் புடைசூழ கழகக் கொடியுடன் கழகக் கொள்கை முழக்கமிட்டு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தும், சிற்றுண்டி வழங்கியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அரக்கோணம் கழக மாவட்டக் கழகத்தின் சார்பாக ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி அருகில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஓச்சேரியில் வரவேற்பு

அரக்கோணம் கழக மாவட்டத்தில் ஓச்சேரிப் பகுதியில் தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உரத்தநாடு குண சேகரன் (பொதுச்செயலாளர்), பு.எல்லப்பன், சு.லோகநாதன், பெரியண்ணன், கோபி, தணிகாச் சலம், ராஜேந்திரன், ஜீவன்தாஸ், சோமசுந்தரம், பெரியார் நேசன், ராஜா, கா.கோபி (ச.பேட்டை), சூரியகுமார், சின்னதுரை, ஆட்டோசங்கர், ராஜேஷ் (தலைமை நிலையம்), ரமேஷ் (ச.பேட்டைசிறீ, அண்ணாதுரை, பாபு, உலகநாதன், பொன் வெங்கடேசன், தமிழ்முரசு, முனுசாமி; பனப்பாக்கம் பேரூர் திமுக வி.எஸ்.எ.குலோத்துங்கன் (நகரச் செயலாளர்), க.தண்டபாணி (மாவட்ட பிரதிநிதி), என்.ஆர்.சீனிவாசன் (நகர திமுக), ம.பா.இராஜாராம் (ஒன்றிய பிரதிநிதி), ஆ.மண்ணு (துணைச் செயலாளர்), த.ஜனார்தனம் (இலக்கிய அணி), கே.கே.தாமு (ஒன்றியப் பிரதி நிதி), த.தூ.பாண்டு (அவைத்தலைவர்), கே.வேணுகோபால் (முன்னாள் இளைஞரணி அமைப்பாளர்) ஆகியோர் வரவேற்பு வழங்கி பயனாடை அணிவித்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/74511.html#ixzz2s7cXuvzE

தமிழ் ஓவியா said...


ஓமாந்தூரார்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஓமாந்தூரார் என்ற ஊரின் பெயர், ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களையே குறிக்கும். அவரின் பார்ப்பனர் அல்லா தார் உணர்ச்சியைக் கண்டு அவரை தாடியில்லாத இராமசாமி நாயக்கர் என்று பார்ப்பனர்கள் கூறிய துண்டு.

சென்னை திருவல்லிக் கேணியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது தந்தை பெரியார் ஒரு தகவலைச் சொன்னார்.

ஈரோடு ராமசாமியா வது நாஸ்திகம் பேசித் தொல்லை கொடுக்கிறான்; ஆனால் ஓமாந்தூர் ராம சாமியோ விபூதி பூசிக் கொண்டே தொல்லை கொடுக்கிறான் என்று பார்ப்பனர்கள் கூறியதை தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில் அடையாளப் படுத்தினார்.

சென்னை உயர்நீதிமன் றத்தில் முதன் முதலாகப் பார்ப்பனர் அல்லாத நீதிபதி சோமசுந்தரம் வருவதற்கு முதல் அமைச்சர் ஓமாந் தூரார் பரிந்துரை செய்தார்; பார்ப்பனர் ஒருவரை அந்த இடத்துக்குக் கொண்டு வர பார்ப்பன சக்திகள் அழுத் தம் கொடுத்தன. (ராஜாஜி உட்பட).

பிரதமர் நேரு அவர்கள் முதல்வர் ஓமாந்தூராரைத் தொடர்பு கொண்டு, விட்டுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஓமாந்தூரார் என்ன செய்தார் தெரியுமா? பிடியுங்கள் என் ராஜி னாமாவை! என்பதுதான் பதிலாக இருந்தது.

வேறு வழியின்றி பிரத மர் நேரு ஓமாந்தூரார் உறு திக்கு இணங்க நேர்ந்தது.

1948இல் ஓமாந்தூரார் காலத்தில் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் இந்தித் திணிப்பை முன் வைத்தார் தந்தை பெரியார் போர்க் கொடி தூக்கினார். அந்த சூழலில் தந்தை பெரியார் முதல்வர் ஓமாந்தூராரைச் சந்திக்க நேர்ந்த சமயத்தில் ஓமாந்தூரார் கூறியதை தந்தை பெரியார் வெளியிட் டுள்ளார் (விடுதலை 2.11.1948)

நீங்கள் காங்கிரஸில் இருந்திருந்தால் நீங்கள் அல்லவோ இந்த ஸ்தானத் தில் இருந்திருக்க வேண் டும் என்றார் ஓமாந்தூரார்.

அந்த ஸ்தானத்தில் நான் இருந்தால் இப்பொழுது நான் செய்யும் வேலையைச் செய்ய முடியாதே என்று தந்தை பெரியார் பதில் கூறினார். உண்மைதானே!

சேரன்மாதேவி குரு குலத்தில் படித்த மாணவர் களுள் ஒருவர் ஓமாந்தூரார் மகன். குருகுலத்தில் அங் குப் பார்ப்பனர் அல்லாதார் பாதிக்கப்பட்டதை ஓமாந் தூரார் மகன் மூலம்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது என்பதும் கூடுதல் தகவலாகும். இன்று ஓமாந்தூரார் பிறந்த நாள் (1895).

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/74573.html#ixzz2sJMInJDT

தமிழ் ஓவியா said...


ரசல்


உலக நாத்திகச் செம்மல் பெட்ரண்ட் ரசல் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1970) 98 ஆண்டுகள் 8 மாதம் 15 நாள்கள் வாழ்ந்து இன்ஃ புளூயன்சா காய்ச்சலால் மரணம் அடைந்தார். Why I am not a Christian என்ற அவரின் புகழ் பெற்ற ஆங்கில நூலை நான் ஏன் கிருத்துவன் அல்ல என்று தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்.

குத்தூசி குரு சாமி அவர்கள் அதனை மொழி பெயர்த்தார். 1927ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இலண்டன் லோகாயத சங்கத்தின் (National Secular Society) சார்பில் பாட்டார்சி நகர மன்றம் ஒன்றில் இந்தத் தலைப்பில் ரசல் உரையாற் றினார். நான்கு ஆண்டு களுக்குள் 7 பதிப்புகள் வெளியிடப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் 24 ஆயிரம் நூல்கள் விற்பனையாயின என்பது சாதாரணமானதல்ல.

தனது மூன்றாவது வயதிலேயே ரசல் பெற் றோர்களை இழந்தார்.

ஆனாலும் அவர்தம் பெற்றோர்கள் தம் பிள்ளை மத மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தனர். அதற்காக இருவரை, குழந்தை ரசலுக்குப் பாதுகாவலர் களாக நியமித்தனர் என் பது அந்தக் கால கட்டத்தில் ஆச்சரியமான தகவல்தான்.

11 வயது முதல் 38 வயது வரை கணிதம்தான் அவ ருக்கு எல்லாமுமாக இருந் தது. அதன் பிறகு சமு தாயச் சிந்தனைகள் அவரி டம் வேர்விட ஆரம்பித்தன. முதல் உலகப் போர் நடந்த போது அதன் தீய அம்சம் குறித்து எதிர்த்து எழுதி னார். அதன் காரணமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வேலை பறிபோயிற்று - சிறையும் அவரை வா என்று வரவேற்றது.

1910ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட ஒரு முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அக்கட்சியின் கூட் டத்தில் ரசல் பேசியபோது சில வினாக்கள் அவரிடம் தொடுக்கப்பட்டன.

கேள்வி: கடவுளைப் பற்றி நீங்கள் கவலைப் படாதவரா? ரசல்:ஆம்!

கேள்வி: சர்ச்சுக்குப் போவதுண்டா? ரசல்: நிச்சயமாகப் போக மாட்டேன். கேள்வி: இந்தக் கருத்தை இரகசியமாக வைத்துக் கொள்வீர்களா? ரசல்: இல்லை. வெளிப் படையாகவே கூறுவேன் என்றார் ரசல். விளைவு - அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பு மறுக்கப் பட்டது.

தந்தைபெரியார் போல பெண்ணுரிமைக் கருத்தில் முற்போக்கு எண்ணம் கொண்டவர்; அவர் எழுதிய திருமணமும் ஒழுக்கமும் (Marriage and Moral) எனும் நூல் தடை செய்யப் பட்டது.

குறிப்பு: மேலும் விவரங் களுக்கு ஆசிரியர் மான மிகு கி.வீரமணி அவர்கள் உண்மை இதழில் மார்ச்சு, ஏப்ரல் 1970, விடுதலை 15.2.1970 கட்டுரைகளைக் காண்க)

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74602.html#ixzz2sJMa4tIW

தமிழ் ஓவியா said...

2 கோவில்களில் உண்டியல் உடைப்பு

மதுராந்தகம், பிப். 2- மதுராந்தகம், மொரப்பாக்கம் நெடுஞ் சாலையில் கருணாகர வளாகத்தில் ரேணுகாம்பாள், விநாயகர் கோவில் உள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: http://viduthalai.in/page1/74549.html#ixzz2sJNLyDmt

தமிழ் ஓவியா said...


அறிஞர் அண்ணா நினைவு நாள்: நாமாவளி பாடிடும் நாளல்ல!


செயற்கரிய செய்த தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணாவின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. (3.2.2014)

இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாளே தவிர, வைதீகபுரி அகராதியில் உள்ள திதியோ, சிரார்த்தமோ, திவஷமோ அல்ல.

நம் சிந்தனைகளைக் கூர் தீட்டிக் கொள்ளும் ஒரு வாய்ப்பு நாள்!

அண்ணா இன்று பலருக்குப் படம் மட்டுமே! உண்மையில் அவர் பாடம் ஆக வேண்டும்.

- படமல்ல! இது ஒரு விசித்திர வேடிக்கை, நமக்கு வேதனை!

அண்ணா பெயர் சொன்னால் போதுமா?
அண்ணா என்றால் யார்? எதைச் செய்தவர்?
அண்ணா என்றால் பகுத்தறிவு,
அண்ணா என்றால் சமூகநீதி,

அண்ணா என்றால் அடக்கம், எளிமை, ஆடம்பரமின்மை!
அண்ணா என்றால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
ஆகியவைகளைப் போற்றிப் பின்பற்றிய பண்பாளர்!

இவைகளை மறந்துவிட்டு அண்ணாவைப் புறந்தள்ளி பூஜை செய்வது போல சடங்கு நிகழ்வு களை நடத்துவது - அண்ணாவைக் கொச்சைப் படுத்தும் கோணல் நடவடிக்கைகளேயாகும். நான் கண்ட, கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று கூறி இறுதி மூச் சடங்கும் வரை பெரியாரைத் துணைக் கொண்ட பெம்மான்!
எனவே அண்ணாநினைவு நாளில் அவர்தம் லட்சியங்களை நெஞ்சில் ஏந்தி, பீடு நடைபோட உறுதி ஏற்று, அவர் காண விரும்பிய பெரியார் உலகத்தைப் படைப்போம்!

அது - வெறும் தேர்தலை மட்டும் பொறுத்ததல்ல,

அடுத்த தலைமுறைகளின் மானவாழ்வைப் பொறுத்த மகத்தான நிலைப்பாடு;

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!

கி.வீரமணி

தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 3.2.2014

Read more: http://viduthalai.in/e-paper/74605.html#ixzz2sJO8yrqi

தமிழ் ஓவியா said...


இந்து அற நிலையத் துறையின் வேலை இதுதானா?


அண்ணா நினைவு நாளில் சிறப்பு வழிபாடா?

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று இந்து அறநிலையத் துறையின் சார்பில் 34 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு என்று அ.இ.அ.தி. மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான னுச. நமது எம்.ஜி.ஆர் இதழில் இன்று வெளி யாகியுள்ளது. இதைவிட அறிஞர் அண் ணாவைக் கொச்சைப்படுத்துவது வேறு ஒன்றும் இருக்க முடியுமா?

கோயிலைப்பற்றி, வழிபாடு பிரார்த் தனைபற்றி அண்ணாவின் கருத்தென்ன? இதோ அண்ணா பேசுகிறார் கேளுங்கள்! கேளுங்கள்!! இராபர்ட் கிளைவ் வந்த காலத்தில் இலட்சக்கணக்கான அபிஷே கங்கள் ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன? கிளைவ் கல்லறையின் மீது இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.

இன்று ஜப்பான் சில இடங்களில் தோற் கடித்தது. அர்ச்சனைகளின் பலனா? யாகம், யோகம் செய்தா? (திராவிட நாடு 5.3.1942) என்றாரே அறிஞர் அண்ணா. அத்தகைய அண்ணாவின் நினைவு நாளுக்காக கோயில்களில் வழிபாடா?

தூத்துக்குடி துறைமுகத் திட்டப் பேச்சு வார்த்தையில் சுமூக உறவு ஏற்பட்ட தன் நன்றியாக காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு முதல் அமைச்சர் அண் ணாவை மத்திய நீர்ப் பாசன அமைச்சர் வி.கே.ஆர்.பி. ராவ் அழைத்த போது, (19.9.1967) நான் வரவில்லை; உங்களுக்கு வேண்டுமானால் ஒருவரை உங்களோடு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்ன அண்ணா என்னும் பகுத்தறிவுவாதியைக் கொச்சைப்படுத்த லாமா அதிமுக அரசு?

அண்ணாவைக் கொச்சைப்படுத்து வதற்கென்று அண்ணா பெயரில் ஒரு கட்சியா! ஒரு ஆட்சியா!

Read more: http://viduthalai.in/e-paper/74608.html#ixzz2sJOLIVGO

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துக்களையும், நிகழ்ச்சிகளையும் பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.

_ (விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/74611.html#ixzz2sJOrhcvW

தமிழ் ஓவியா said...


இந்துத்துவம் குறித்து அளித்த தீர்ப்பு: ஏழு நீதிபதிகள் கொண்ட மறு விசாரணை


புதுடில்லி,பிப்.3- இந்துத்துவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஜே.எஸ்.வர்மா அளித்த தீர்ப்பு குறித்து 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விரைவில் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க உள் ளது.

பாரதீய ஜனதா கட்சி யின் தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, மகாராஷ்டிராவில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, மகாராஷ்டிரா வில் முதல் இந்து அரசு அமைய உள்ளது என்று பிரச்சாரத்தின் போது கூறினார். இது மத உணர்வு களைத் தூண்டும் செயல்.

அதனால், முரளி மனோகர் ஜோஷி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி என்.பி.படேல் என்பவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.எஸ். வர்மா, இந்துத்துவா அல்லது இந்துமதம் என்பது ஒன்றுதான். அது மதத் தின் பெயரை குறிப்பது அல்ல. இந்திய துணை கண்டத்தில் வாழும் மக் களின் வாழ்க்கை முறையை தெரிவிக்கும் சொல் என்று கூறி, ஜோஷிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதேபோல், மகா ராஷ்டிரா பேரவைக்கு 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பா.ஜ. சார்பில் அபிராம் சிங் என்பவர் வெற்றி பெற்றார். தேர் தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வு களைத் தூண்டும் வகை யில் இந்துத்துவா பற்றி அபிராம்சிங் பேசினார் என்று கூறி அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப் பட்டது.

இந்த வழக்கை விசா ரித்த மும்பை உயர் நீதி மன்றம், அபிராம்சிங் வெற்றி பெற்றது செல் லாது என்று அறிவித் தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அபி ராம்சிங் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்டஅமர்வு, இது அரசியல் சட்டம் சம் பந்தப்பட்ட விவகாரம் என்பதால், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த மனுவை அனுப் பியது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆம்.எம் லோதா, ஏ.கே. பட்நாயக், முக்கோபாத் யாயா, தீபக் மிஸ்ரா, கலிபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு விசா ரித்து வருகிறது.

இதேபோல் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ., தலைவர் சுந்தர்லால் பட்வா மீது நாராயண் சிங் என்பவர் தொடர்ந்து வழக்கை விசாரித்த 5 நீதி பதிகள் கொண்ட அமர்வு, மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசா ரிக்கப் பரிந்துரைத்துள் ளது.

இந்நிலையில், அபி ராம் சிங் மேல்முறையீடு மனு மீதான விசாரணை கடந்த 30 ஆம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் நடந்தது. அப்போது, சுந்தர்லால் பட்வாவுக்கு எதிராக தொடரப்பட்ட இதேபோன்ற வழக்கு, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட் டுள்ளது என்று நீதிபதி களுக்கு தெரிவிக்கப்பட் டது.

இதையடுத்து, இந்த வழக்கையும் அந்த வழக்குடன் சேர்த்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க 5 நீதி பதிகள் கொண்ட அமர்வு பரிந்துரைத்தது. அத்துடன், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த மனுக்களை விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங் கவும கேட்டு கொண் டது.

இதையடுத்து, 7 நீதி பதிகள் கொண்ட அமர்வை அமைக்கக் கோரி தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு உச்ச நீதிமன்ற பதிவாளர் அறிக்கை அனுப்புவார் என்றும், அதன்பின், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதி பதி அமைப்பார் என் றும் உச்சநீதிமன்ற வட் டாரங்கள் தெரிவித்தன.

Read more: http://viduthalai.in/page-5/74588.html#ixzz2sJQMRBUg

தமிழ் ஓவியா said...


மண் பானை சமையல் நல்லதா?


மண்பானையில் சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். தற்போது தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தி னால் தான் அறிய முடியும். ஆனால் அது போல் இல் லாமல் மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக் கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண்பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது.

இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது. மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது. மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கிய மானதாகும்.

Read more: http://viduthalai.in/page-7/74596.html#ixzz2sJQZIRB1

தமிழ் ஓவியா said...

இதயத்திற்கு இதம் தரும் கனிகள்

இன்றைய உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம். மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம்.

இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும். ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.

Read more: http://viduthalai.in/page-7/74596.html#ixzz2sJQhWCLe

தமிழ் ஓவியா said...

இதயத்திற்கு இதம் தரும் கனிகள்

இன்றைய உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம். மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம்.

இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும். ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு

Read more: http://viduthalai.in/page-7/74596.html#ixzz2sJRO3T4S

தமிழ் ஓவியா said...கேள்வி: ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது, திரைத்துறையில் என்னவிதமான சிரமம், சங்கடத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது?

பதில்: நிறைய விஷயங்கள் இருக்கு. ஒன்னு ரெண்டை மட்டும் சொல்றேன். தேங்காய்ல சூடத்தை வெச்சுக் கொளுத்தி கேமராவுக்குச் சுத்தி எடுத்துட்டு வருவாங்க, நான் எடுத்துக்க மாட்டேன்னு சொல்வேன். அப்ப சிலர், எங்க மனசு புண்படுமேனு நினைச்சாவது இந்தக் கற்பூரத்தைத் தொட்டு கண்ல ஒத்திக்கலாம்லனு கேப்பாங்க. உடனே, என் மனசு புண்படும்கிறதுக்காக நீங்க தேங்காய் சுத்தாம இருக்கலாம்லனு திருப்பிக் கேட்டுடுவேன்.

இதேபோல சினிமாவுல இன்னொரு மிகப் பெரிய காமெடி இருக்குது. ஒரு காட்சியில செத்துப்போற மாதிரி நடிச்சா, அப்படி நடிச்சு முடிச்ச பிறகு கேமராவை ஒருமுறை பார்த்து சிரிக்கச் சொல்வாங்க. அதாவது, ஆள் சாகலை... திரும்ப எந்திரிச்சுச் சிரிச்சுட்டார்னு விதியை ஏமாத்துறோமாம். ஆனா, நான் சிரிக்க மாட்டேன்னு சொல்வேன். இல்ல சார் சிரிச்சிடுங்கனு விடாப் பிடியா நிப்பாங்க. சிரிக்காட்டி நான் நிஜமாவே செத்துடுவேன்னு பயப்படுறீங்களா?னு கேட்பேன். யார் என்ன சொன்னாலும் சிரிக்க மாட்டேன்னு உறுதியா இருப்பேன். எங்க போனாலும் எனக்கு இது பெரிய போராட்டமா இருக்கும். அதே மாதிரி ஈழப் பிரச்சினையில், மனசுல அவ்வளவு ஆதங்கம், கோபம், சோகம் இருக்கு. அதை எல்லாத்தையும் மேடையில் கொட்டித் தீர்த்தால் கண்டிப்பா எனக்கு ஜெயில்தான். அப்படி நான் ஜெயில், கோர்ட், கேஸ்னு அலைஞ்சேன்னா தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவாங்க. அதாவது மனசுல இருக்கிறதைக் கொட்டித் தீர்க்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல். அது என் மனச்சாட்சியை ரொம்ப உறுத்தும்!

தமிழ் ஓவியா said...

கேள்வி: பெரியார் அணிந்த மோதிரம் உங்களிடம் எப்படி வந்தது?

பதில்: பெரியார் படத்தில் நடிச்சதுக்குச் சம்பளம் வேண்டாம்னு சொல்லிட்டேன். 60 நாட்கள் அந்தப் படத்துல நடிச்சேன். படத்தின் 100_ஆவது நாள் விழாவில், இந்த மோதிரம் பெரியார் தன் 19_ஆவது வயசுல விரல்ல போட்டுக்கிட்டது. இன்னைக்குக் கணக்குப் போட்டா மோதிரத்துக்கு சுமார் 110 வயசு. இதை சத்யராஜுக்குப் பரிசளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்னு சொல்லி, கி.வீரமணி அய்யா கலைஞர் கையால் எனக்கு அணிவிச்சார். இந்த மோதிரத்தின் மீது பலருக்கும் கண் உண்டு. நானும்கூட ஒரு கண் வைத்திருந்தேன். ஆனாலும், இந்த மோதிரம் தம்பி சத்யராஜ் கைக்குப் போனதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சினு தலைவர் கலைஞரும் சொன்னார். அப்படிப் பார்த்தா ஹாலிவுட் நடிகர்கள் பிராட் பிட், டாம் குரூஸைவிட உலகத்திலயே அதிக சம்பளம் வாங்கிய நடிகன் நான்தான். ஏன்னா, பெரியாரின் மோதிரம் அந்த அளவுக்கு விலை மதிப்பில்லாதது!

- நன்றி: ஆனந்த விகடன், 15.1.2014

தமிழ் ஓவியா said...

கெடுவான் கேடு நினைப்பான்


கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கட்சியாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

எந்தெந்த இரு கட்சியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத் தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட மெடீரியலிஸ்ட் (Materialist) என்னும் கட்சியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட ஸ்பிரிச்சுவலிஸ்ட் (Spiritualist) என்னும் கட்சியாரும் ஆகிய இரு கட்சிக்காரர்களும், அதாவது நாஸ்திகர்களும், ஆஸ்திகர்களும் ஆகிய இரு கட்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோம் என்றால், அன்னியருக்குக் கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டுமென்றோ நினைப்பவன் கெட்டுப் போவான் என்பதாகும்.

இதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்குச் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடு நினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதி செய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப் போவான் என்றும் கருதுகிறார்கள். நாஸ்திகர்கள், அதாவது சர்வசக்தியும் சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ அல்லது ஒரு வஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்து கொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர்களுக்குக் கொடுத்து வருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம், இந்த கெடுவான் கேடு நினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும், கேடு நினைக்கின்ற மனிதனும் பிற மனிதர்களால் கேடு செய்யப்படுவதும், மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட, கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா? ஆகவே, பிறருக்குக் கேடு செய்ய நினைத்து, பிறரால் வெறுக்கப்படவும், துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் பகட்டிற்கு ஆளாவதும் சகஜமாகும்.

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்ற பிரத்தியட்ச பழமொழிப்படியே நன்மையும் தீமையும் தான் தர வருமே என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

- குடிஅரசு 12.11.1933

தமிழ் ஓவியா said...

கெடுவான் கேடு நினைப்பான்


கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கட்சியாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

எந்தெந்த இரு கட்சியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத் தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட மெடீரியலிஸ்ட் (Materialist) என்னும் கட்சியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட ஸ்பிரிச்சுவலிஸ்ட் (Spiritualist) என்னும் கட்சியாரும் ஆகிய இரு கட்சிக்காரர்களும், அதாவது நாஸ்திகர்களும், ஆஸ்திகர்களும் ஆகிய இரு கட்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோம் என்றால், அன்னியருக்குக் கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டுமென்றோ நினைப்பவன் கெட்டுப் போவான் என்பதாகும்.

இதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்குச் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடு நினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதி செய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப் போவான் என்றும் கருதுகிறார்கள். நாஸ்திகர்கள், அதாவது சர்வசக்தியும் சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ அல்லது ஒரு வஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்து கொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர்களுக்குக் கொடுத்து வருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம், இந்த கெடுவான் கேடு நினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும், கேடு நினைக்கின்ற மனிதனும் பிற மனிதர்களால் கேடு செய்யப்படுவதும், மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட, கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா? ஆகவே, பிறருக்குக் கேடு செய்ய நினைத்து, பிறரால் வெறுக்கப்படவும், துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் பகட்டிற்கு ஆளாவதும் சகஜமாகும்.

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்ற பிரத்தியட்ச பழமொழிப்படியே நன்மையும் தீமையும் தான் தர வருமே என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

- குடிஅரசு 12.11.1933

தமிழ் ஓவியா said...

டீல் ஓகே யா?


சமூக இணையதளங்களில் இருக்கிற பார்ப்பன நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களில் பல பேர் எங்கள் நெருங்கிய நண்பர்களாகவும், பண்பாடு மிகுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான், அதற்காக இன்னும் பன்னெடுங்காலம் பேச எஞ்சியிருக்கிற பார்ப்பன எதிர்ப்பு அரசியலை எங்களால் பேசாமல் இருக்க முடியாது.

வேண்டுமானால் ஒரு உடன்பாடு செய்து கொள்ளலாம். தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் தீட்சதர்களாகவோ, பூசாரிகளாகவோ உங்கள் உறவினர்கள் பலர் இருக்கக்கூடும், அவர்களிடம் நீங்களே பேசுங்கள். "இது எல்லாம் அவா கட்டின கோவில், நம்மவா யாரும் பத்துப் பைசாகூட கைக்காசு போடல, அவாளோட மொழில நாம பூஜை பண்றதும் கிடையாது, அவா நிறையப் பேரு ரொம்பக் கோவமா இருக்கா, நம்மவா எல்லாம் இப்போ நன்னா படிச்சு கையில நாலு காசு சேத்திண்டு ஷேமமா இருக்கா, அவா அபச்சாரம் அபச்சாரமா திட்றத நம்ம அம்பிகள் எல்லாம் கூச்சமா பீல் பண்றா, அதுனால நாம அவா கட்டின கோவில்கள்ல இருந்து வெளியே வந்துடலாம், நாமளே சிதம்பரம் என்ன தஞ்சாவூர் என்ன இன்னும் பெரிசா கோவில் கட்டி அதுல சமஸ்கிருதம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம்_ன்னு வெவ்வேற மொழிகள்ல அர்ச்சனை பண்ணலாம், பூஜை பண்ணலாம்" என்று முடிவு செய்து ஒரு நல்ல நாள் குறித்து எல்லாக் கோவில்களிலும் இருந்து வெளியேறி விடுங்கள். நீங்களும் கூச்சமா உணர வேண்டியதில்லை, நாங்களும் பொசுக்குப் பொசுக்குனு பாப்பான் பாப்பான்_ன்னு திட்ட வேண்டியதுமில்லை.
டீல் ஓகே யா?

...முகநூலில் அறிவழகன் கைவல்யம்

தமிழ் ஓவியா said...

திருப்பதி நாமக் கடவுளின் இருப்பு

நிலம் : ரூ.15,000 கோடி

கட்டடங்கள் : ரூ.1,500 கோடி

நகைகள் : ரூ.30,000 கோடி

நிதி : ரூ.20,000 கோடி

- இந்தியா டுடே 4.10.2006

2006இல் இந்த மதிப்பு என்றால் 2014இல் எத்தனை மடங்கு? கணக்குப் போட்டுப் பாருங்கள்.

தமிழ் ஓவியா said...

நுனிப்புல்லர்களுக்கு ஆதாரங்கள் தரும் ஆய்வு நூல்!


நூல்: திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே!
தந்தை பெரியார் கருத்துகள் பற்றி ஓர் ஆய்வு
ஆசிரியர்: சு. அறிவுக்கரசு
வெளியீடு: விழிகள் பதிப்பகம், சென்னை - 600 041.
செல்பேசி: 94442 65152 / 94442 44017
பக்கங்கள்: 256 விலை: ரூ.160/-

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டுள்ள தந்தை பெரியாரின் வரலாறு _ ஒரு புதிய நோக்கு என இந்த நூலைச் சொல்லலாம். திராவிடர் என்னும் பெயரைத் தந்தை பெரியார் தேர்ந்தெடுத்ததன் காரணத்தை தொடங்கும் முன் விளக்கும் நூலாசிரியர் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமைகளை, மூட நம்பிக்கைகளை விளக்கமாக எடுத்துரைத்து, சகுனம் பார்ப்பதான நிமித்தம் முதல் பூதம், பேய் நம்பிக்கை வரை தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் இவை சுட்டப்பட்டுள்ளன என்பதனைப் பட்டியலிடுகின்றார். தமிழர்தம் அடையாளத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை மீட்டெடுக்க வேண்டாமா? அதற்கான முன்முயற்சிதான் பெரியார் கண்ட திராவிடர் கழகம் (பக்கம் 56) என்பதனை நிறுவுகின்றார். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை, மொழியின் தாழ்ச்சியை, இனத்தின் வீழ்ச்சியை தமிழர் வீட்டு வாழ்க்கை நிகழ்வுகளில், திருமணம், நினைவு நாள் போன்றவற்றில் தமிழ் இடம் பெறா நிலை எப்படி ஏற்பட்டது என்பதனை ஆய்வு நோக்கில் எடுத்து வைக்கின்றார்.

வீழ்ச்சி அடைந்த தமிழ் இனம், தனது மொழியையே தாழ்ச்சியாக நினைத்த தமிழ் இனம் தந்தை பெரியாரின் வருகையால் எப்படித் திருப்பம் அடைந்தது? என்பது குறித்தும் பொது வாழ்க்கையில் எந்தக் கொள்கைகளுக்காக 1917இல் நுழைந்தாரோ அந்தக் கொள்கைகளைக் (றிக்ஷீவீஸீநீவீஜீறீமீ) கடைசி வரையில் கைவிடாமல் உழைத்தவர், கழகத்தவரை உழைக்கச் செய்தவர் பெரியார். அந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது நடைமுறைகளை, அணுகு முறைகளை, செயல்திட்டங்களை (றிஷீறீவீநீவீமீ) சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் போராடியவர் பெரியார். அன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலையை உயர்த்திட இந்தத் தந்திர உபாயங்களைக் கையாண்டார். சமூக நீதிக்காக- _ பார்ப்பனர் அல்லாதார் சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்காக அவர்தம் செயல்முறைகள் மாற்றப்பட்டனவே தவிர -_ உயர்வுகளை நோக்கிப் பார்ப்பனர் அல்லாத திராவிடர்களை அழைத்துச் செல்வதற்காக மாற்றினாரே தவிர- _ அவர் மாறவே இல்லை! என நூலாசிரியர் சொல்லும் உண்மையை விளக்கும் நோக்கத்தில் அமைந்த அற்புதமான ஆய்வேடாக, கருத்துப்பெட்டகமாக இந்த நூல் அமைந்துள்ளது.

திராவிடர் கழகம் ஆட்சிக்கு வருபவர்களையெல்லாம் ஆதரிக்கும் ஒரு கட்சி என்று நுனிப்புல் மேய்வோரின் குற்றச்சாற்றுகளை மறுதலித்து, தந்தை பெரியார் இலட்சிய இலக்கிலேயே குறியாய்க் கொண்டதன் விளைவாகத்தான், இரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி அறிவுப் புரட்சியாகி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மனித சமூகம் நம் நாட்டில் மனிதத்தன்மை, மனித உரிமைகளைப் பெற்றுத் தலைநிமிர்ந்தனர் என்பதைப் பல்வேறு கடந்த கால -_ மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்களை அடுக்கடுக்காகத் தந்து வாசகர்களை மிகவும் சிந்திக்க வைக்கிறார். ஆழ்ந்த ஆய்வுப்பார்வை தெளிவான வெளிச்சத்தை, குழப்புபவர்களுக்கும் கும்மிருட்டில் தடுமாறுவோருக்கும் தருவதாக அமைந்துள்ளது.

- முனைவர் வா.நேரு

தமிழ் ஓவியா said...

மருத்துவ வசதியற்ற குஜராத்


கலை, நிச்சயம் மனிதனைச் சாந்தப்படுத்தக் கூடியது; சந்தோசமளிக்கக் கூடியது. மறுக்கவில்லை. ஆனால், சினிமாவுக்கு மட்டும் ஏன் நம் நாடு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாம் விவாதிக்க எத்தனையோ உண்மையான பிரச்சினைகள் காத்துக்கிடக்க, அமீர் கானா, ஷாரூக் கானா, சல்மான் கானா... இந்த மூன்று கான்களில் யார் சிறந்தவர்? என்றே விவாதித்துக் கொண்டிருக்கிறோமே... ஏன்? நாம் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும்!

குஜராத்தில், புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன; நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள்; கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இவற்றை மட்டும் வைத்து அளவிட முடியாது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனை குழந்தைகள் குஜராத்தில் இறந்து போகின்றன என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும் அது கேரளா, தமிழ்நாடு... ஏன் இமாச்சலப் பிரதேசத்தைவிடவும் பின்தங்கித்தான் இருக்கிறது.

மோடி, பிரதமரானால் சிறுபான்மை யினருக்குப் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். அத்தகைய ஒருவர், நாட்டின் பிரதமராக வருவதை நான் ஏற்க மாட்டேன்!

--- அமர்த்தியா சென்,
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

மும்பையில் மூடநம்பிக்கையின் உச்சநிலை

உலகத்தின் மிக அதிகமான செலவில் கட்டப்பட்ட வீடு, பயன்படுத்தப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி கட்டியுள்ள அந்த வீட்டில் குடியேறினால் அவர்களுக்குக் கெடுதல் வரக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.

27 மாடிகளைக் கொண்டு பலநூறு கோடிகளை முழுங்கியுள்ள அந்தக் கட்டிடத்திற்கு அன்டில்லா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சீனத்து ஃடெங் சூயி என்று சொல்லப்படும் மனையடி சாத்திரம் போன்றுள்ள இந்திய வாஸ்து சாத்திரத்தின்படி அந்தக் கட்டிடம் அமையவில்லையாம்.

சென்ற ஆண்டு நிறைவெய்திய அந்த வீடு மும்பையில் விண்ணை முட்டி நிற்கும் அளவிற்கு ஆக்கிரமித்து அழகு செய்கிறது. 29 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டு கட்டப்பட்ட அந்த வீடு, உலகின் ஒன்பதாவது பணக்காரர் என்று ஃபோபர்ஸ் பத்திரிகையால் கணிக்கப்பட்ட, இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியால் கட்டப்பட்டதாகும்.

ஆடம்பரம் நிறைந்த அந்தப் புது வீட்டில் அம்பானியும் அவரது மனைவி நீடாவும் இரண்டு குழந்தைகளும் ஏன் இன்னும் குடியேறவில்லை என்பது பற்றி பல யூகங்கள் முளைத்து வந்துள்ளன.

அந்த ஆடம்பர சொகுசு மனையில் ஹெலிகாப்டர்கள் இறங்கக்கூடிய மூன்று தளங்களும் ஆறு மாடிகளில் கார் நிறுத்தும் வசதிகளும் பல நகரும் தோட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

வாஸ்து சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள இந்தியக் கட்டுமான வழிகாட்டுதல்களை மீறி இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக அம்பானி குடும்பத்தினர் கருதுவதால், அந்த வீட்டில் குடிபுகுந்தால் அவர்கள் அதிர்ஷ்டம் (நல்வாய்ப்பு) சாபத்திற்கு ஆளாகும் என அஞ்சிக் குடிபுக மறுப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


ஆரியர்கள்தான்


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

_ (விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/74662.html#ixzz2sOeKt4Jf

தமிழ் ஓவியா said...


பேய் பிடித்ததாகக் கூறி கணவன், மனைவியைக் கொன்ற கொடுமைராஞ்சி, பிப். 4-- ஜார்கண்ட் மாநிலத் தின் பல மாவட்டங்களில் பில்லி, சூனி யம், பேய், பிசாசு போன்ற மூட நம் பிக்கைகள் தலைவிரித்து ஆடுகின்றன.

குறிப்பாக, கும்லா மாவட்டத்தின் மக்கள் அனைவரும் அறியாமை இருளில் சிக்கி, மூட நம்பிக்கைகளில் அதிகமாக மூழ்கித் திளைக்கின்றனர். பேய் பிடித்ததாக கூறி பெண்களை அடித்து, உதைத்து, நிர்வாணமாக்கி சித்ரவதை செய்வதும், அவர்களில் சிலரை கல்லால் அடித்துக் கொல் வதும் இங்குள்ள கிராமங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றது.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களை தடுத்து நிறுத்தும் விதமாக, அம்மாநில அரசு கடந்த 2001-ஆம் ஆண்டு மூட நம்பிக்கைகள் தொடர்பான பழக்க வழக்கங்கள் (தடுப்பு) சட்டத்தை அறிமுகப்படுத்தி, இத்தகைய அத்துமீறலான செயல் களில் ஈடுபடுவோரின் மீது வழக்குப்பதிவு செய்து, தண்டிக்க வழி-வகை செய்தது.

இருப்பினும், இதைப் போன்ற வன்செயல்கள் பல கட்டப்பஞ்சாயத்து குழுவினரால் தொடர்ந்து அரங்கேற் றப்படுகின்றன. இவற்றில் பல காவல்துறையினர் மற்றும் அரசு அதி காரிகளின் காதுகளை சென்றடைவ தில்லை. இதற்கான சமீபத்திய எடுத் துக்காட்டாக, பேய் பிடித்திருப்பதாக குற்றம்சாட்டி பவன் காடியா(45), அவரது மனைவி முனி(42) ஆகி யோரை அடித்து கொல்லும்படி கட் டப் பஞ்சாயத்தினர் தீர்ப்பளித்தனர்.

இதனையடுத்து, அந்த இணையர் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஊர் மக்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதேபோல் ஜனவரி 6-ஆம் தேதி புட்டேல் தேவி என்ற பெண்ணும் அடித்துக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதிலும் ஆத்திரம் தணியாத கட்டப் பஞ்சாயத்தினர், பவன் காடியா இணையயரின் மகள் குமாரி மற்றும் அவரது குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைத்து கடந்த வாரம் தீர்ப்பளித்தனர். உள்ளூர் மக்கள் யாரும் அவர்களுடன் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

இந்த சமூகக் கொடுமை தொடர் பாக, சடார் காவல் நிலையத்தில் குமாரி புகார் அளித்துள்ளார்.

இவ்விவகாரம், உள்ளூர் ஊடகங் களின் வழியாக கசிந்ததன் விளைவாக இந்த கொடுங்குற்றத்தில் ஈடுபட்ட பஞ்சாயத்தார் மீது மூட நம்பிக் கைகள் தொடர்பான பழக்க வழக் கங்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்படும் என ஜார் கண்ட் மாநில சமூக நலம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உறுதியளித் துள்ளார்.

'உலக நாகரிகத்துக்கு ஏற்ப வளர்ச்சியடைந்து விட்டோம் என்று பெருமை பேசிவரும் நமது நாட்டில், கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் மூட நம்பிக்கையின் அடிப்படையில் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இதுபோன்ற வகையில் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/74667.html#ixzz2sOefWouO

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை, பிப். 4- ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக் குரைஞர்கள் பழனிமுத்து, ஏ.ரமேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப் பதாவது:

தேசியக் கல்வி ஆணைய விதி முறைப்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு மதிப்பெண் சலுகை அளிக்கவேண்டும். தமிழக அரசு எந்த சலுகையும் அளிக்கவில்லை. இது சட்டவிரோதமானது. எனவே உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வழக்கில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர். இந்த நிலையில் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையை இடஒதுக்கீடு அடிப்படையின் கீழ் தமிழக அரசு அளித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக் கிறது, இருந்தாலும் தேசியக் கல்வி ஆணைய விதிமுறை முழுவதுமாக அமுல்படுத்த வேண்டும் என்று வழக்குரைஞர்கள் பழனி முத்து, ரமேஷ் ஆகியோர் கூறினர்.

Read more: http://viduthalai.in/page-2/74671.html#ixzz2sOf0JiY0

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தகுதித் தேர்வு:
முதலமைச்சர் அறிவிப்பு மனிதநேய மக்கள் கட்சி கருத்து

மனிதநேய மக்கள் கட்சி ஜே.எஸ். ரிபாயீ அவர்கள் வெளியிடும் அறிக்கை:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்குக் கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பேசுகையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் டெட் என்னும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு தேர்வில் மதிப்பெண் சலுகை அளிக்க வேண் டும் என்று 15.11.2011இல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 181இல் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாமல் 2012, 2013 ஆண்டுகளில் டெட் தேர்வுகள் நடத்தப்பட்டன. எனவே இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

நேற்று (3.2.2014) தமிழக முதல மைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவித்து பேசுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து இடஒதுக்கீடு பிரிவினருக்கும் 5 மதிப்பெண் சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள் ளார். இதனை மாற்றி பட்டியலின மக்களுக்கு 40 மதிப்பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 45 மதிப்பெண்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 மதிப்பெண்கள் என்று திருத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. 2013 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய வர்கள் மட்டுமின்றி 2012 ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்துவதாக அறிவிக்க வேண்டும். என்று மனித நேய மக்கள் கட்சி கோருகின்றது.

Read more: http://viduthalai.in/page-2/74671.html#ixzz2sOf8XzX6

தமிழ் ஓவியா said...


ஒற்றைப் பத்தி பற்றி


ஆசிரியருக்குக் கடிதம் >>>

ஒற்றைப் பத்தி பற்றி

30.1.2014 ஆம் நாளில் கலைஞர் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப் பாகும் பேராசிரியர் சுப.வீரபண்டியன் உரையாற்றும் நிகழ்ச்சியான ஒன்றே செய் நன்றே செய் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் ஒற்றைப் பத்தி எனும் தொகுப்பு வெளியீட்டின் சிறப்புகளைப் பற்றிய 2, 3 கருத்துக்களை மேற்கோள் காட்டிப் பாராட்டினார்.

இந்திய ராணுவ தளபதி பத்மநாபன் அவர்கள் இராகுகாலம் பார்த்த நிகழ்வுக்கு கவிஞர் அவர்கள் எடுத்துக் காட்டியுரைத்த கேள்வி என்னை மிகவும் நெகிழ வைத்தது. மெல்ல எறிந்து கடிதோச்சலாக இதை கொள்ளலாம்.

அதேபோல் நாள்தோறும் விடுதலை இதழ் அஞ்சலில் வத்தவுடன் ஒற்றைப் பத்தியைப் படிக்கத் தவறுவதேயில்லை. இதே இராகு வேளை செய்தியை இந்திய நாடு சுதந்திரம் வந்த புதிதில் நேரு அவர்கள் எப்படி கையாண்டார் என்பதை நினைக்கும் போது நேரு அவர்கள் பகுத்தறிவுக் கொள்கையை பாராட்டத் தோன்றுகிறது. இந்திய நாடு முதல் முதல் தயாரித்த கப்பலின் பெயர் ஜலஉஷா என்பது அதை கடலில் மிதக்க விடும் நிகழ்ச்சி விசாகப்பட்டினம் கப்பல் தளத்தில் நேரு அவர்களால் மிதக்கவிடப்பட ஏற்பாடு. ஏற்பாட்டாளர்கள் விழாவினை துவக்காமல் மெத்தனம் காட்டுவதாக நேருவுக்கும் படுகிறது. ஏன் தாமதம் என அருகிலிருப்பவரை கேட்கிறார். அவர்கள் மெல்லிய குரலில் இராகுவேளை தீரட்டும் என்று காத்து இருக்கிறார்கள் சில நிமிடங்களில் முடிந்துவிடும் என்றார்கள். ஆனால் நேருவோ நல்ல பணிகள் செய்வதற்கு இராகு வேளை குறுக்கிடுமா னால் அந்த இராகு வேளையையே தள்ளுங்கள் என்று கூறி கப்பலை மிதக்க விடுகிறார்.

ஆனால் விண்வெளிக்கு அனுப்பும் ஏவுகணைகளை சந்திராயன் ஆகியவற்றை அனுப்ப திருப்பதி கோயிலுக்கு மட்டும் போனால் சைவர்கள் கேள்வி கேட்க கூடும் என்ற காரணத்தால் காளஹஸ்தி கோயிலுக் கும் போய் அர்ச்சனை செய்கிறார்கள்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால் இந்துமதச் சார்பான கோயில்களுக்கு மட்டும் ஏன் போக வேண்டும்? நாம் தர்காவுக்கும், வேளாங்கண்ணி கோவிலுக்கும் போகாதது ஏன் என்று கேள்வியும் எழுந்தால் பதில் என்னவாக இருக்கும்?.

இதுபோல் தான் அப்போது எல்லாம் பள்ளிகளிலும், அரசு நிகழ்ச்சியிலும் கடவுள் வணக்கம் என்று பாடுவார்கள். பாடுபவர் தன்னுடைய சார்பு கடவுளைப் பற்றி தான் பாடுவது வழக்கமாக இருந்த நிலை. இது பலருக்கும் சரியாகப் படாத காரணத்தால் தான். கலைஞர் அவர்கள் இறை வணக்கம் என்பதையே மாற்றி தமிழ்த் தாய் வாழ்த்து என்று நீராரும் கடலுடுத்த என்ற அற்புதமான திராவிட என்ற சொல் இடையில் வரும்படியான பாடலைத் தேர்வு செய்து ஆணை பிறப்பித்தார் ஆக மொழி வாழ்த்தலும் கூட நாட்டு வாழ்த்தான ஜனகனமன பாடலில் வரும் திராவிட என்ற சொல்லை அழுத்தம் தரும் வண் ணம் ஆணையிட்ட கலைஞரின் ஆட் சியை இந்த சந்தர்ப்பத்தில் மனதில் நினைத்து மகிழ்வுறும்போது, இன்று நடப் பதைப் பார்த்து................. - வேலை.பொற்கோவன்

Read more: http://viduthalai.in/page-2/74675.html#ixzz2sOfKK2Zi