Search This Blog

14.2.14

வைகோ அவர்களுக்கு இதெல்லாம் நல்லதல்ல!

இடித்துச் சொல்லுவது எங்கள் கடமை! 


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் பிஜேபியுடன் கூட்டு சேர்வதற்கு எந்தக் காரணத்தையாவது கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய நெருக்கடியில் இருப்பதாகத் தெரிகிறது.

(1) நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்கிறார். வாதத்துக்காக அப்படியே இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஓர் அலை வீசுவதாலேயே அந்த அலையோடு அடித்துக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று கூறுகிறாரா? அலையோடு போக வேண்டுமே தவிர எதிர்க்கக் கூடாது என்பதுதான் அவரின் கருத்தா?

(2) நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழக அரசியல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என இதுவரை இருந்த பரிமாணம், மோடி அலையால் இம்முறை உடையும், புதிய மாற்றம் துவங்கும் என்று கூறியுள்ளார். உடனே மோடி என்ன  பதில் சொன்னாராம்? நானும் அப்படித் தான் எதிர்பார்க்கிறேன் என்றாராம்.          (தினமலர் 10.2.2014 பக்கம் 3).

ஆக திராவிடர் இயக்கத் தொடர்பான அமைப்புகள் தோற்றுப்போக வேண்டும், இந்துத்துவா கட்சியான பிஜேபி தமிழ்நாட்டில் வேர்ப் பிடிக்க வேண்டும். அதுதான் புதிய பரிமாணம், புதிய  மாற்றம் என்பதுதான் மறுமலர்ச்சி திமுகவின் நிலைப்பாடா? அப்படியானால் அவர் கட்சியிலும் இருக்கும் திராவிட என்பது என்னாவது? அதிலும் மாற்றம் வரும் என்று எதிர்ப் பார்க்கலாமா?.

திராவிடர் இயக்கத்தின் அடிப்படையான கொள்கை ஜாதி ஒழிப்பு - பிறவிப் பேத ஒழிப்பு - சமத்துவ நிலை என்பது பிஜேபியின் இந்துத்துவா கொள்கை என்பது வருணாசிரம தர்மத்தைக் காப்பது - ஜாதியைக் கட்டிக் காப்பது (கோல்வாக்கரின் பஞ்ச் ஆஃப் தாட்ஸ் நூலைப் படித்துப் பார்க்கட்டும்).
இந்த நிலையில் திரு. வைகோ என்ன சொல்லுகிறார்? ஜாதி ஒழிப்புக் கொள்கை என்பது சுத்த மோசம்.

பிஜேபி கூறும் வருணாசிரமம் காப்பாற்றப்பட வேண்டியதுதான் என்று சொல்லுகிறாரா? இதுதான் மறு மலர்ச்சியைக் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டுள்ள ஒரு திராவிடக் கட்சியின் கொள்கைக் கோட்பாடா?

இதே வைகோ அவர்கள் இந்த இந்துத்துவா கூட்டத்தைப் பற்றி என்ன கூறினார்?

பாபர் மசூதியை இடித்து, தகர்த்துத் தரைமட்டமாக்கிய செயல் இந்தியாவின் மதச் சார்பின்மைமீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலாகும்; பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். இயக்கம், விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள அமைப்பு இவை அனைத்தையும் பரிபாலனம் செய்யும் சங்பரிவார் எனும் மத வெறிக் கூடாரத்தின் உத்தரவுகளை அமல்படுத்தக் கூடிய குற்றவாளிகள் என்று எல்.கே. அத்வானியையும், முரளி மனோகர் ஜோஷியையும் குற்றஞ் சாட்டுகிறேன். பாபர் மசூதியின் மூன்று விதானங்களும் உடைக்கப்பட்டபோது எழுந்த சத்தம், காந்தியடிகளின் மெலிந்த தேகத்தின்மீது பாய்ந்த மூன்று தோட்டாக் களின் ஓசையை நினைவூட்டியது (தினகரன் 25.12.1992). என்று பேசினாரா இல்லையா?

இந்த மத வெறிக்கும்பல் நன்னெறி திருக்கூட்டமாக எப்பொழுது மாறியது? வைகோ, மோடிக்குச் சால்வை போர்த்தியவுடன் இந்துத்துவா கூடாரத்தின் கொள்கையும், கோட்பாடும் நிறம்மாறி விட்டனவா? பெரியார், அண்ணா கொள்கைகளை இதோ இக்கணமே ஏற்றுக் கொண்டோம் என்று கூறி விட்டார்களா?

1967ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மாறிமாறி வரும் திராவிட இயக்கப் பரிணாமத்தை உடைக்க இந்துத்துவாவை, வைகோ அவர்கள் அழைத்ததும் - அதற்கு தானும் அப்படிதான் எதிர்ப்பார்ப்பதாக மோடி கூறியதும் - என்றென்றும் வைகோ அவர்களைத்  துரத்தி கொண்டே தான் இருக்கும் என்பதில் அய்யமே இல்லை.

 3) வாஜ்பாய் பிரதமராக  இருந்தபோது இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் கடைப்பிடித்த அணுகு முறையையே நீங்கள் அமைக்கப் போகிற அரசும் பின்பற்ற வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் வைக்க நரேந்திரமோடி அப்படியே செய்வோம் - என்று  கூறியதாக வைகோ அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இது உண்மையா? இலங்கைப் பிரச்சினையாக இருந் தாலும் சரி, வேறு வெளியுறவுப் பிரச்சினையாக இருந் தாலும் சரி, காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் கொள்கை அளவில் வேறுபாடு கிடையாதே! ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இதே வாஜ்பாய் (8.5.2000) சொல்லவில்லையா?

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் மாநிலங்களவையில் அதிகார பூர்வமாக என்ன பேசினார்?

இலங்கையில் நிகழ்ந்து வரும் மாற்றம் எங்களுக்கு வருத்தம் தருவதாக இருக்கின்றது. நாங்கள் இலங்கை யோடு தொடர்பில்தான் இருக்கிறோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமைதியான வழியில் தீர்வையெட்ட இந்திய அரசு முயற்சியை மேற்கொள்ளும்  என்று தெரிவிக்கவில்லையா? (4.5.200).
இதுதானே காங்கிரசின் நிலைப்பாடும்! வாஜ்பேயி அமைச்சராவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர்தானே இப்படிப் பேசினார். வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது ஈழத் தமிழர்களுக்கு ஏதோ நல்லது செய்து விட்டதுபோல பேசலாமா வைகோ அவர்கள்?

திரு வைகோ அவர்களுக்கு இதெல்லாம் நல்லதல்ல; இப்பொழுதுகூட கெட்டுப் போய் விடவில்லை. பிஜேபி உறவைத் துண்டித்துக் கொள்வது நல்லது; இல்லையெனில் இந்தப் பழி, காலா காலத்திற்கும் விரட்டிக் கொண்டே இருக்கும் என்று இடித்துச் சொல்லுவது தாய்க் கழகத்தின் கடமையாகும்.

                      ----------------------------”விடுதலை” 13-2-2014

37 comments:

தமிழ் ஓவியா said...


நடைபாதைக் கோயில்கள்


சென்னை உயர்நீதி மன்ற வாசல் அருகில் நீதி கருமாரியம்மன் கோயில் ஒன்று சட்ட விரோத மாகக் கட்டப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் அவர் குணம் அடைய வேண்டி அந்தக் கோயில் கட்டப்பட்டதாம் (கருமாரி என்ன மிகப் பெரிய டாக்டரா?)

சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட பொது நல வழக் கின் அடிப்படையில் அனுமதியின்றிக் கட்டப் பட்ட அக்கோயிலை உடனே இடித்துவிட்டு 12.2.2014-க்குள் நீதிமன்றத் திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமென்று நீதிபதி கள் அக்னி ஹோத்திரி, சசி தரன் அடங்கிய அமர்வு ஆணை பிறப்பித்தது. இதன்மீது மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய ஆணையை நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி சார்பில் கோரப்பட்டதை ஏற்று நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் கொடுத்துள்ளது.

இதன்மீது மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதே மாநகராட் சியில் இதற்குமுன் மேய ராக வேலூர் நாராயணன் அவர்கள் இருந்த காலத் தில் நடைபாதைக் கோயில் கள் அகற்றப்படவில் லையா? அதற்குப்பின் உள்ளாட்சித் துறை அமைச் சராக ப. உ. சண்முகம் அவர்கள் இருந்த கால கட்டத்தில் (அ.இ.அ.தி. மு.க. ஆட்சியில்) நடை பாதைக் கோயில்கள் இடிக்கப் படவில்லையா? உச்சநீதிமன்ற நீதிபதி கள் டல்வீர் பண்டாரி எம்.கே. ஷர்மா ஆகி யோர் 14.9.2010 அன்று தெளிவாக, திட்டவட்ட மாக ஒரு ஆணையைப் பிறப்பித்தனர். அனுமதி யின்றிப் பொது இடங் களில் கட்டப்பட்டுள்ள கோயில்களை உடனடி யாக அகற்ற வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. பல மாநிலங்கள் இதுபற்றித் தகவல் தெரி விக்கவில்லை. இரண்டு வாரங்கள் மீண்டும் அவ காசம் அளிக்கப்படுகிறது. அதனை நிறைவேற்றாத மாநில அரசுகளின் செய லாளர்கள் உச்சநீதிமன் றத்திற்கு நேரில் வந்து தகவல் தெரிவிக்க வேண் டும் என்று அவ்விரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி இருந்தனர்.

சட்ட விரோத கோயில்கள் அதிகமாகக் கட்டப்பட்டிருக்கிறது தமிழ் நாட்டில்தான். தமிழ்நாட் டில் 77450, குஜராத்தில் 15,000, ராஜஸ்தான் 58,253 கோயில்கள் இந்தப் பட்டியலில் வருகின்றன. அருணாச்சலப்பிரதேசத் தில் சட்ட விரோத கோயில் ஒன்றுகூடக் கிடையாது என்று நீதிபதிகள் பாராட் டவும் செய்தார்கள்.

தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையில் இதுவரை எடுத்த நடவ டிக்கை என்ன? உச்சநீதிமன்றமே தெளிவாக ஆணை பிறப் பித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தற் போது அளித்த ஆணை யைச் செயல்படுத்த வைப்பதில் உறுதியாக இருக்கும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது. - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/75206.html#ixzz2tFW6ulu7

தமிழ் ஓவியா said...

செத்துப்போன சாமியாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பாம்! காரணம் சாமியார் சாக மாட்டாராம்!


ரூ.1,70,000 கோடி சொத்து படுத்தும்பாடு

சண்டிகர், பிப்.13- வாழும் கலை சாமியார் அசு தோஷ் மகராஜ் செத்துப் போன நிலையில் அவர் சாக மாட்டார் - என்று சீடர்கள் கூறினர் - அரசோ செத்துப் போனவருக்கு இசட் பிரிவு பாதுகாப்புக் கொடுக்கிறது - ஏராளமான சொத்துகள் இருப் பதால் பித்தலாட்டங்கள் அரங்கேறுகின்றன.

ஜனவரி மாத இறுதியில் வாழும் கலை சாமி அசுதோஷ் மகராஜ் என்பவர் நுரையீரல் தொடர்பான நோயால் இறந்தார். இது குறித்து சனவரி 29-ஆம் தேதி சண்டிகர் மருத்துவ அதி காரிகள் அடங்கிய குழு வெளி யிட்ட செய்திக்குறிப்பில் நுரையீரல் தொடர்பான தொற்றுநோயால் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட் டதன் காரணமாக சாமியார் இறந்து விட்டார் இது குறித்து சாமியாரின் திவ்யஜோதி ஜகருதி சங்கத்திற்கு அறிக்கை அனுப்பினோம் என்றனர். சாமிகளின் மறைவை அறிந்து ஹரியானா, பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் டில்லியில் இருந்து அவரது பக்தர்கள் கூட்டம் வந்துகொண்டு இருந்தது, இந்த நிலையில், திவ்ய ஜோதி ஜகருதி சங்கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது அதில் குறிப்பிட்டுள்ளதாவது. சுவாமி அசுதோஷ் மகராஜ் நித்திய சமாதிக்கு செல்லும் முன்பு சீடர்களிடம், தான் நித்திய சமாதி அடையப் போவதாகவும் மீண்டும் பக் தர்களுக்கு அருள் பாலிக்க திரும்புவேன் என்று கூறினார். மருத்துவர்கள் அவர் களின் படிப்பின் படி மரணம் என்று கூறினாலும் நமது வேதங்களின் படி அது மரணமல்ல; நித்திய சமாதி தான் ஆகையால் பக்தர்கள் அனைவரும் அவரின் மர ணத்திற்காகத் துக்கம் கொண் டாடவேண்டாம். அவர் மீண் டும் வருவார். அதுவரை அவரது சமாதி முழுமை யான பாதுகாப்புடன் இருக் கும் என்று அவர்கள் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யுள்ளனர். இதனடிப்படையில் சுமார் ரூ 7 கோடி செலவில் இமயமலையின் பனிச்சிக ரத்திற்கு சமமான சூழ்நிலையை அவரது சமாதி வைக்கும் அறையில் உருவாக்கியுள்ள னர். இந்த அறையில் அவர் சமாதியுடன் இருப்பார் என் றும் சமாதி நிலை களைந்து மீண்டும் அவர் எழுந்து வரும் போது அதற்கு தேவை யான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. ஆனால் உடலை பரிசோ தனை செய்த மருத்துவர் ஹர்பால் சிங் கூறியதாவது அவர் உயிருடன் இருப்ப தற்கான எந்த ஒரு அடை யாளமும் அவருடைய உட லில் காணப்படவில்லை இயத்துடிப்பு, நாடித்துடிப்பு மற்றும் நரம்புகளின் மின் னோட்டம் போன்றவையும் காணப்படவில்லை. ஆகை யால் அவர் மருத்துவத்தின் படி இறந்த பிணம்தான் என்றார்.

இறப்பை மறுக்கும் பக்தர்கள்

தமிழ் ஓவியா said...

ஜெர்மனியைச்சேர்ந்த(டச்) அவரது பக்தர் சந்தோஷ் ஒஜ்வால் என்பவர் கூறியதா வது சுவாமி அசுதோஷ் மரண மடையவில்லை, எப்படி ராமகிருஷ்ணபரமஹம்சர் தன்னுடைய பூத உடலுடன் தேவிகாளியை அடைந் தாரோ அதே போல் சுவாமி அசுதோஷ் மகராசும் பூரண சமாதி அடைவார். இதற்கு நமது இதிகாசங்களில் பல உதாரணங்கள் உள்ளன. என்று கூறினார். திவ்ய கிராமம் பஞ்சாப் அரசு, சுவாமி அசுதோஷ் மகராஜ் இருக் கும் இடத்தை திவ்ய கிராம் (புனித கிராமம்) என்று அறிவித்துள்ளது. மேலும் சுவாமிகள் வாழும் போது அவருக்கு அரசே இசட் (Z) பிரிவு பாதுகாப்பு வழங் கியது. அது இப்போதும் விலக்கப்படவில்லை. அதா வது பிணத்திற்கு இசட்(Z) பிரிவு பாதுகாப்பு. இதற்கு காரணமாக ஜலந்தர் காவல் துறை அதிகாரி ஜஸ்பிரீத் சிங்(புறநகர்) SSP Jalandhar (Rural) Jaspreet Singh கூறியதாவது. இதுவரை சுவாமிகள் பற்றிய சரியான தகவல் எங்களுக்கு கிடைக்க வில்லை, ஆகையால் சுவாமி களுக்கு கொடுத்த பாது காப்பு தொடரும் என்றார். அவர் உயிருடன் உள் ளாரா அல்லது இறந்து போனாரா என்று ஏன் பரிசோதிக்கவில்லை? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த காவல்துறை அதிகாரி நாங்கள் மதம் தொடர்பான சர்ச்சையில் தலையிடுவதில்லை, அவர் களின் நம்பிக்கையில் அவர் உயிருடன் இருக்கிறார் என் றால் அது அப்படியே இருக் கட்டும் என்று பதில் கூறினார். மடத்திற்குள் குழப்பம் சுவாமியின் மரணம் குறித்து மடத்திலிருந்து மூன்று விதமான அறிக்கைகள் வந் துள்ளன. மடத்தின் செய்தித் தொடர்பாளர், சுவாமிகள் இறந்துவிட்டார் என்று கூறு கிறார். மதத்தின் தற்காலிக தலைவரோ சுவாமிகள் இன்றும் சமாதி நிலையில் தான் உள்ளார் என்று கூறு கிறார். ஆனால் தலைமைச் சீடர் சுவாமி விசாலந்து மற்றும் பெண் சாமியார் ஜெயபாரதி கூறியதாவது. சுவாமிகள் நித்திய சமாதி அடைந்தது உண்மையே அவர்களின் உயிர் உடலை விட்டுப்பிரிந்து விட்டது.

ஆனால் அது இந்த உடலுக் குள்தான் வரும் என்று சொல் வதற்கில்லை என்று புதுமை யான அறிக்கை விட்டுள்ளனர். ஓட்டுநர் தொடர்ந்த ஆட் கொணர்வு மனு வழக்கு இதனிடையே செத்துப் போன சாமியாரின் ஓட்டுநர் புரன் சிங் என்பவர் சண்டிகர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு (habeas corpus petition) ஒன்று தொடந்தார் அதில் சாமியாருக்கு உலகம் முழுவதும் 110 அமைப்பு களும், ஆயிரக்கணக்கான கிளை அமைப்புகளும் உள் ளன. இதன் மூலம் சுமார் 1,70,000 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது. இந்த சொத்துக்களை அபகரிக்க சாமியாரின் சில சீடர்கள் முயற்சி செய்கின்றனர். அவர் மரணத்திலும் இந்த சீடர்களின் பங்கு உண்டு இது குறித்து நீதிமன்றம் விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று கூறினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.எஸ் பேடி, சந்தேகப்படும் சீடர் கள் மீது அரசு என்ன நட வடிக்கை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள் ளார். மேலும் சீடர்களின் சொத்துக்கள் குறித்து அரசின் நிர்ணயத்தையும் கேட்டுள் ளார். மனுவில் முக்கியமாக அரவிந்தநாத், சோனி, நரேந் தர் சிங் மற்றும் விசாலாந்து ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் இந் திய மற்றும் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்ற வர்கள் என்று கூறப்படு கிறது. இந்த நால்வரிடம் பல கோடி ரூபாய்கள் கருப்புப்பணமாக உள்ளன என மனுவில் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/75207.html#ixzz2tFWLqQpG

தமிழ் ஓவியா said...


கல் முதலாளி!


திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் கடந்த திங்கள்கிழமை மட்டும் உண் டியல் வசூல் ரூ.2.45 கோடி யாம். மக்களுக்குப் பகுத் தறிவு தேவை என்பதற்கு இது அடையாளம்; பக்தி பெருகிவிட்டது என்று மகிழ்ச்சி அடைவது, மருத் துவமனைகள் (நோய்கள் பெருகியதால்) அதிகரித்து விட்டது என்று மகிழ்ச்சி அடைவது போன்றதாகும்.

எல்லாம் வல்ல கடவுள் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு நிதி கொடுப்பது - கடவுளைக் கேலி செய்வது ஆகாதா? இந்தப் பணத்தால் ஒரு சல்லிக் காசு ஏழுமலை யான் என்ற பொம்மைக்குப் பலன் உண்டா? அது உயிர் உள்ள ஒன்றா? ஆறுகால் கன்றுக்குடி என்று சொல்லி வித்தை காட்டிப் பணம் பறிப்பவனுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?
தினமலர் பக்தி மலரின் கருத்து:

கோவில்களில் கூட்டம் அதிகரித்துவிட்டது; கோவி லில் முக்கிய நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடக் கின்றன... மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது பக்தி நெறி செழித்திருப்பதுபோல தெரிகிறது. இது பொய்த் தோற்றம். இந்நாளில் இருக் கும் பக்தி, வழுக்கல் நிலத் தில் வடித்த மாளிகை என்று கூறியிருப்பதை நினைவூட் டுகிறோம். நாட்டில் உள்ள 10 கோடி ஏழைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3200/- வங்கி மூலம் அளிக்கும் திட்டத்தை - இந்தக் கோவில் நிதிகளிலி ருந்து எடுத்துக் கொடுக்க லாமே! நாட்டில் இருவகை முதலாளிகள் - ஒன்று, தொழில் முதலாளிகள்; இன் னொன்று ஏழுமலையான் போன்ற கல் முதலாளிகள்.

(இன்னொரு கூடுதல் தகவல்: ஏழுமலையான் தன் கலயாணத்துக்காக குபேரனி டம் கடன் வாங்கினானாம் - அதனை அடைக்கத்தான் இந்த உண்டியல் வசூலாம்! கடவுளே கடன்காரனா? பேஷ், பேஷ் நன்னாயிருக்குப் போங்கோ!).

Read more: http://viduthalai.in/e-paper/75215.html#ixzz2tFWVzoOX

தமிழ் ஓவியா said...


தெரிந்து கொள்க!


பல துறைகளில் வசதிகள் இருக்கத்தான் செய் கின்றன. அந்த வசதிகள் இருப்பது எத்தனைப் பேர் களுக்குத் தெரியும்?

“May I Help You” என்று எழுதப்பட்டு இருக்கும்; அங்குள்ளவரிடம் சென்று உதவி கேட்பதற்கு நம் மக்களுக்கோ ஒரு வகை தயக்கம். இந்தச் சபைக் கோழைத்தனத்தைத் தூக்கி எறிய வேண்டும்.

ரயிலில் பயணம் செய்வோர்களுக்குச் சில தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்! குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களோடு தொடர்பு கொள்ளலாம். 044-25353999 மற்றும் 9003161710 இந்த உதவி (Help Line) 24 மணி நேரத்திற்கும் கிடைக்கும் - முதலில் பெண்கள் கைப்பேசியில் இவற்றைப் பதிவு செய்து கொள்ளட்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/75208.html#ixzz2tFWdpSMA

தமிழ் ஓவியா said...


இப்பொழுதே மிரட்டலா?மோடி மற்றும் பிஜேபியின் மதவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்தை பதிவு செய்பவர்கள்மீது சிறிதும் சகிப்புத்தன்மை இல்லாமல் மிரட்டுபவர்கள் உள்ளனர். இவர்கள் சமூக தளங்களான டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் கருத்திடுபவர்களில் குறிப்பிட் டவர்களை மய்யப்படுத்தி தொடர் தாக்குதலும் நடத்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள்மீது சைபர் குற்றச் சட்டப்படி (அய்.டி.) நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும், அண்மையில் மூத்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் எழுதியதற்காக அச் சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். அதேபோல், காங்கிரசு பிரச்சார ஊழியரான அசீபா ஆமின் என்பவர்மீது சமூக ஊடகங்கள்மூலம் ஆபாசமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பாகவே மிரட்டுகிறார்கள். இவர்களை அடையாளம் காணவேண்டும் என்கிறார் காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான்.

Read more: http://viduthalai.in/e-paper/75214.html#ixzz2tFWsPA1s

தமிழ் ஓவியா said...


அய்.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்


இங்கிலாந்து உறுதி

லண்டன், பிப். 13- இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக்கணக் கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித் தது. இந்த போர்க் குற்றம் குறித்து உலக நாடுகளும், அய்.நா.வும் கடும் கண் டனம் தெரிவித்தன.

அதை தொடர்ந்து அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெ ரிக்கா ஏற்கனவே இரண்டு தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட் டன. இந்த நிலையில் அடுத்த (மார்ச்) மாதம் ஜெனீவாவில் அய்.நா.மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடக் கிறது. அதில், அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதி ராக மூன்றாவது தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

அதில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகைகள் மற்றும் ஊட கங்களுக்கு சுதந்திரம் வழங் குவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட் டுள்ளது.

இலங்கைக்கு எதிராக அய்.நா.வில் கொண்டு வரப் படும் இந்த தீர்மானம் நிச் சயமாக நிறைவேற்றப் படும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.

போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த விதமான முன்னேற்ற நடவ டிக்கையும் மேற்கொள்ள வில்லை. எனவே, இங்கி லாந்து அரசு உலக நாடுகளு டன் இணைந்து சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள் ளது. இந்தத் தகவலை தமி ழர்களுக்கான அனைத்துக் கட்சி குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/75211.html#ixzz2tFX1olwB

தமிழ் ஓவியா said...


மனிதன்


மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும். - (விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/75216.html#ixzz2tFXPgHbN

தமிழ் ஓவியா said...


கேள்விக்கென்ன பதில்?


- குடந்தையான்

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி எல்லோரையும் கேள்வி கேட் கிறார். ஆனால் மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தராமல் இருப்பது சாமர்த்தியம் என நினைக்கிறார். யோகேந்திர யாதவ், சமூக இயலாளர்; தற்போது ஒரு அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். சில கேள்விகளை தனது டிவிட்டர் வாயிலாக அவர் மோடியை நோக்கி, 10.2.2014 அன்று தொடுத்துள்ளார். 1. அதானி குழுமத்திற்கு, மோடி அரசில் நிறைய சலுகைகள் தரப்பட் டுள்ளன. மோடிக்கும், அதானி குழுமத்திற்கும் உள்ள உறவு என்ன? 2. தற்போது மோடி மேற்கொள் ளும் கோடிக்கணக்கான ரூபாய் விளம் பர செலவுகளுக்கு யாரிடமிருந்து பணம் பெறப்பட்டது? இது குறித்து பிஜேபியிடம் வெளிப்படையான தன்மை இல்லையே? 3. நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட பாபுலால் பொகாரியா இன்னமும் மோடியின் அமைச்சர வையில் நீடிக்கிறாரே.

மோடி எப்படி அரசியலில் குற்றவாளிகள் நுழை வதை தடுப்பேன் எனக் கூற முடியும். 4. விவசாயிகள் தற்கொலை, குழந்தைகள் இறப்பு விகிதம், பள்ளி கல்வி தரம் இவற்றில் குஜராத் மாநி லம் பின் தங்கியுள்ளதே? இந்த கேள்விகளுக்கெல்லாம், மோடியிடமிருந்து எந்த பதிலும் வரப் போவதில்லை. 2007ஆம் ஆண்டு ஆங்கிலத் தொலைக்காட்சியில் கரன் தபார் கேட்டகேள்விக்கு பதில் தர முடியாமல் மோடி வெளியேறினார்.

தற்போது, அகமதாபாத்தில் தேநீர் கடையினை உருவாக்கி, அதில் காணொலி காட்சி முறையினை மிகுந்த பொருட் செலவில் உருவாக்கி உள்ளார் மோடி. நாடு முழுவதும் பல இடங்களிலிருந்து அவரிடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என விளம்பர யுக்தியை புகுத்தியுள்ளார். இந்த முறையில் எந்த ஊரிலும் தேநீர் கடை யாரும் நடத்தவில்லை. மோடி போன்ற கார்ப்பரேட் ஏஜெண்டுகள் தான் இம்மாதிரி கடையை நடத்த முடியும் என்பது வேறு செய்தி. முதலில் யோகேந்திர யாதவ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லட் டும். பிறகு தேநீர் சாப்பிடலாம்.

Read more: http://viduthalai.in/page-2/75221.html#ixzz2tFXay8Rv

தமிழ் ஓவியா said...


மரபுகளை மீறி மன்னர் பங்கேற்ற பெரியார் பிறந்த நாள் விழா


பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உரை

ஊற்றங்கரை, பிப். 13- ஊற் றங்கரையில் ஜனவரி 30ஆம் நாள் நடைபெற்ற விடுதலை வாசகர் வட்ட கூட்டத்தில் ஆப்ரிக்காவில் பெரியார் என்னும் தலைப்பில் திரா விடர் கழக பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் உரையாற் றினார். ஆப்பிரிக்கா கானா நாட்டில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வில் அவர் பங்கேற்றது குறித்து குறிப்பிட்டு உரை யாற்றியதாவது:-

விடுதலை வாசகர் வட்ட கூட்டங்களிலேயே மிகச் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் கூட்டம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட கூட்டமாகும். தமிழகத்தில் வடலூர், தஞ்சை, குமரி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் விடுதலை வாசகர் வட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் இவற்றிற்கெல்லாம் முதன் மையானது ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட மாகும். தொடர்ந்து மாதந் தோறும் பல்வேறு தலைப்பு களின் கீழ் அறிஞர் பெரு மக்களை அழைத்து வந்து கருத்தரங்குகளை நடத்தி இன்றைக்கு 37ஆவது கருத் தரங்கமாய் 4ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்தது மட் டும் அல்ல இந்த பகுதிக்கு சிறப்பு சேர்த்த பெரியவர் களையும் அறிஞர் பெருமக்க ளையும் அழைத்து பாராட்டி 150 உறுப்பினர்களுக்கும் மேல் சேர்த்து வளர்ச்சிய டைந்திருப்பது மிகுந்த மகிழ்ச் சிக்குரியது. வாசகர் வட்ட செயலாளர் சகோதரர் பழ. பிரபு என்னை உரையாற்ற அழைத்தபோது அங்கே ஏதாவது செயலாற்ற வேண் டுமா? வருகிறேன். ஊற்றங் கரையில் வாசகர் வட்டம் எப்படி செயல்படுகிறது அதை போல் மற்ற மாவட் டங்களில் செயல்படுத்த முடி யுமா என்பதைக் காண விரும் புகிறேன்.

ஆகவே உரையாற்ற அல்ல பார்வையாளனா கவே வர விரும்புகிறேன் என்

றேன், அதோடு எனது சில அனுபவங்களை உங்க ளோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதையொட் டியே எனக்கு ஆப்ரிக்காவில் பெரியார் என்கிற தலைப்பு தரப்பட்டிருந்தது.

சென்ற ஆண்டு எதிர் பார்த்திராத வாய்ப்பாக பெரியார் ஆப்ரிக்கன் பவுண் டேசன் தந்தை பெரியார் பிறந்த நாளை கானா நாட் டில் மிக சிறப்பாக கொண் டாட திட்டமிட்டு தலைமை யுடன் தொடர்பு கொள்ளும் போது நீங்கள் வருகிறீர்களா ? எனக் கேட்டார்கள். பயணச் சீட்டு எடுத்து கொடுத்தால் வருவதற்கு எங்களுக்கு என்ன தயக்கம் என்று மிக சாதாரணமாக சொன்னோம். அவர்கள் எல்லா ஏற்பாடு களையும் செய்துவிட்டு தமி ழர் தலைவர் அவர்களின் அனுமதி கேட்டபோது தந்தை பெரியாரை உலக மயமாக்க அயராது உழைத்து கொண்டிருக்கும் என்னை, அனுமதி கொடுத்து சென்று வந்து அதை ஒரு அறிக்கை யாகவும் கொடுக்க கட்டளை இட்டார். ஆப்பிரிக்கா போன பின் தான் தெரிந்தது 4 அல் லது 5 பேர் சேர்ந்து தந்தை பெரியாரை ஆப்பிரிக்கா கண்டத்தில் மிகச் சிறப்பான அளவில் பரப்பி இருக் கிறார்கள்.


தமிழ் ஓவியா said...

கே.சி.எழிலரசனின் பங்கு

இந்த பெருமை எல்லாம் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசனைத் தான் சாரும், அதிலும் குறிப்பாக திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி எழிலரசன் பங்களிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது. முதன் முதலாய் அந்த நாட் டிற்குச் சென்றேன். என் னோடு விமானத்தில் 200 பேர் பயணம் செய்து இருப் பார்கள். ஆனால் அவர்களில் 120 பேர் பெண்கள். விமான நிலையத்தை அடைந்தவு டன் ஒவ்வொரு பெண்களும் யாருடைய உதவியும் எதிர் பார்க்காமல் அவர்களுடைய பெட்டியை அவர்களே சுமந் தனர். ஒரு பெட்டி சுமாராக 20 கிலோ எடை கொண்டதாய் இருக்கும் ஒவ்வொரு பெண் களும் 5 அல்லது 6 பெட்டி களை சுமந்து சென்றனர். நம்மவர்களாக இருந்தால் சுமை தூக்க யாராவது உள்ளார்களா என்று தேடிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் எவருடைய உதவியும் எதிர் நோக்காமல் மூட்டைகளை தூக்கிப் போடுவது போல் பெட்டி களை தூக்கி போட்டு தள்ளிக் கொண்டு சென்றது மிகுந்த ஆச்சரியமாய் இருந்தது. என்னை வரவேற்க வந்த பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் நிறுவன தலைவர் கே.சி.எழிலரசன் அவர்களிடம் இவர்கள் எல்லாம் யார் ? என்று கேட் டேன். அவர் சொன்னார் இன்றைக்கு ஞாயிற்று கிழமை, திங்கள் முதல் வெள்ளி வரை இந்த பெண் கள் கடைத்தெருவில் போட்டு வியாபாரம் செய்வார்கள். வெள்ளி இரவு விமானம் பிடித்து பக்கத்தில் உள்ள துபாய் நாட்டில் அடுத்த வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வரு வார்கள்; இப்படி வாரம் வாரம் சென்று வாங்கி வந்து விற்று அவர்களின் பொரு ளாதாரத்தை நிலைநிறுத்தி குடும்பத்தை காப்பாற்று வார்கள்.

தமிழ் ஓவியா said...

பெரியார் கண்ட புரட்சிப் பெண்கள்

ஆணின் துணை இன்றி தனித்து செயல்பட்டு பெரி யார் காண விரும்பிய புரட்சி பெண்களை அங்குதான் கண்டேன், பெண்கள் அங்கே கடுமையாய் உழைக்கிறார் கள். எல்லா துறைகளிலும், அரசு அதிகார மய்யங்களி லும் 54 விழுக்காட்டிற்கும் மேல் பெண்கள் உள்ளனர். இந்த நிலை இந்தியாவில் கூட கிடையாது. தந்தை பெரியார் காண விரும்பிய சில அங்கே நடைமுறையில் இருப்பதை கண்டு எழிலர சன் அவர்களிடம் பெரியா ருக்கு இங்கு வேலை இருப் பதாக தெரியவில்லையே என்றேன். அவர் இல்லை இல்லை பெரியார் இங்கு நிறைய தேவைப்படுகிறார் என்றார். அங்கே உள்ள சாலைகளில் வைக்கப்பட் டுள்ள விளம்பர பதாகை களில் சுப்ரீம் கோர்டில் உங்கள் வழக்கு வெற்றி பெற வேண்டுமா வாருங்கள் பிரார்த்தனை செய்வோம் உங்கள் குடும்பத்தில் பிரச் சினையா? கடவுளிடம் மன் றாடுவோம் என பல்வேறு கம்பெனிகளின் விளம்பரங் கள் பார்த்த பின் ஆமாம் பெரியார் இங்கே தேவைப் படுகிறார் என்று உணர்ந் தேன். இந்தியாவை போல் அவர்களும் பிரிட்டிஷ் ஆதிக் கத்தின் கீழ் இருந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்து 10 ஆண்டுகள் கழித்து அதா வது 1957இல் அவர்கள் சுதந் திரம் அடைந்தார்கள். அங்கே கேப்டவுன் என்கிற நகரில் நம் சென்னை எலியட்ஸ் கடற்கரையில் அமைக்க பட்டுள்ளதை போல் ஒரு நுழைவாயில் கொண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதை பாயிண்ட் ஆப் ரிட்டர்ன் என்பார்கள். அதாவது இந்த எல்லையை தாண்டி போனவர்கள் திரும்பி வந்ததாக சரித்திரம் இல்லை. முதன் முதலாய் அந்த நாட்டிலிருந்து அடி மைகளை பிரிட்டிஷ்காரர்கள் விலைக்கு வாங்கிய இடம். இங்கிருந்து அந்த மக்களை விலைக்கு வாங்கி வெளி நாட்டிற்கு அழைத்துச் சென்று விட்டால் மீண்டும் அவர்கள் அந்த நாட்டிற்கு திரும்ப வரவே முடியாது. அத்தகைய கொடுமைகளையெல்லாம் தாங்கி கொண்டு இன்றைக்கு முன்னேற்றப் பாதைக்கு வந்து கொண்டுள்ளனர். அந்த நாட்டு மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக அந்த நாட்டு அரசு மட்டு மின்றி அய்.நா சபை, பல நாட்டு தொண்டு நிறுவனங் கள் பொருளாதார உதவி, தொழில் நுட்ப உதவி , கல்வி மற்றும் மருத்துவ உதவி களை செய்து வருகின்றன. அதை அந்த நாட்டு அரசு வரவேற்று அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இப்படிப்பட்ட அமைப்புக் களில் ஒன்றாகத்தான் பெரி யார் ஆப்பிரிக்கன் பவுண் டேசன் முதலில் தொடங்கப் பட்டது.

பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் தொடங்கப் பட்டு அந்த மக்களுக்கான பல பணிகள் செய்யப்பட் டன. குழந்தை பிறந்து தவழ்ந்து நடை போடுவது போல் பெரியார் குறித்த செய்திகள் சிறிது சிறிதாய் பரப்பப்பட்டன. பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் கே.சி. எழிலரசனை எவர் சந்திக்க வந்தாலும் அவர் அலுவல கத்தில் உள்ள தந்தை பெரி யார் படம் காட்டி அய்யா குறித்த செய்திகளை சொல் லியே பேசுவார். இப்படியாக பெரியார் அம்மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அறிமுகப்படுத்தப்பட்டார். இதற்கிடையில் முதலா மாண்டு நிறைவு விழாவை நடத்த திட்டமிட்டனர். அங்கு விழா என்றால் 20 அல்லது 25 பேர் வந்தால் அது பெரிய நிகழ்ச்சி. காரணம் மக்கள் கடும் உழைப்பாளி கள், நேரத்தை வரையறுத்து தான் நிகழ்ச்சியில் கலந்து கொள் வார்கள்.

தமிழ் ஓவியா said...

முதலாமாண்டு நிகழ் விற்கு பலர் வந்திருந்தனர். அந்த நாட்டில் நிகழ்ச்சிக்கு அழைத்தால் நன்கொடை தருவது வழக்கம். இந்த நிகழ்விற்கும் பெரியார் ஆப் பிரிக்கன் பவுண்டேசன் வளர்ச்சிக்கு சிலர் பணத்தை கவரில் போட்டு நன்கொடை யாக எடுத்து வந்திருந்தனர். பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் கே.சி.எழிலரசன் அவர்கள் இது பெரியார் பிறந்த நாள் கொண்டாட நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி, நன்கொடை வேண் டாம் என்று அன்பளிப்புக் களை வாங்க மறுத்து அய்யா குறித்த காணொலிக் காட் சியை ஒளிபரப்பி அய்யா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள். இதன் விளைவாக பலர் வெவ்வேறு காரணங்களுக்காக பெரியார் ஆப்பிரிகன் பவுண்டேசனு டன் ஒன்றிணைய ஆரம்பித் தார்கள். முதலில் கானா நாட்டில் உள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகத்துடன் நமது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இணைந்து செயலாற்ற சில திட்டங்கள் வகுத்து அந்த பல்கலைக்கழக பேராசிரியர் கள் சென்னைக்கும், தஞ்சை வல்லத்திற்கும் வருகை தந் தனர். சில கல்வி ஒப்பந்தங் கள் செய்யப்பட்டன. அதன் விளைவாக மாணவர்கள் பரிமாற்றம் பேராசிரியர்கள் பரிமாற்றம் செய்கிற வாய்ப்பு ஏற்பட்டது.

இது மட்டும் அல்லாமல் புத்தாக்க எரிசக்தி துறை யிலும், அந்த நாட்டின் அரசு டனும், தொண்டு நிறுவனங் களுடனும் இணைந்து செய லாற்றிடும் வாய்ப்பு கிட்டி யது. மருத்துவ முகாம்கள் அமைத்தல், நீர் ஆதாரம் கண்டுபிடித்து கொடுத்தல் போன்ற பணிகள் நடை பெற்று வருகின்றன. நம் முடைய சுயமரியாதைச் சுட ரொளி மாவட்டத் தலைவர் கே.கே.சின்னராஜ் அய்யா அவர்களை பற்றி சொல்கிற போது அவர் பலருக்கு கடன் உதவி அளிப்பார். ஆனால் வட்டி வாங்காமல் ஒரு குறிப்பிட்ட தேதி சொல்லி அந்த தேதிக்குள் பணத்தை முழுமையாய். கொடுக்கச் சொல்வார். பெரும்பாலும் அவர் சொல்கிற தேதி இயக்க சம்பந்தப்பட்ட தேதியாக அதாவது அய்யா பிறந்த நாள், நினைவு நாள் போன்ற வையாக இருக்கும். இதே பணியை அவரது மகன் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் கே.சி.எழிலரசன் கானா நாட்டில் செய்து கொண்டிருக்கிறார். எவருக் கும் இலவசமாய் எதையும் கொடுக்கக் கூடாது வேலை செய்து சம்பாதித்து குறிப் பிட்ட நாளில் கொடுக்கும் பணத்தை திருப்பி தரவேண் டும் என்பார்.

அவர்கள் போற்றும் நாணயம்

ஒரு குறிப்பிட்ட நிகழ்வை உங்களுடன் பகிர வேண்டும். அந்த நாட்டில் அன்னாசித் தோட்டம் அதிகம். பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் அலுவலகத்தில் காலையில் இருந்தே ஒரு அன்னாசி விவசாயி காத்து கொண்டி ருந்தார். பொறுப்பாளர்கள் வந்ததும் பணத்தைக் கொடுத் தார். சொன்ன தேதியில் விவ சாயி பணத்தை கொடுத்ததில் என்ன சிறப்பு என்றால் அதற்கு முந்தைய நாள் இரவு தான் அவரது வாழ்விணை யர் இறந்து விட்டார். மனை வியின் உடலை வீட்டில் வைத்து விட்டு நாணயத்தைக் காப்பாற்ற சொன்ன தேதியில் கொண்டுவந்து பணத்தைக் கொடுத்தார்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் போற் றிய நாணயத்தை அந்த மக் களிடம் கண்டேன். பெரியார் ஆப்பிரிகன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் கே.சி. எழிலரசன் அவர்களும் அவ ரிடம் சொன்னதை போல் அன்று மாலையே அந்த விவசாயி வீட்டிற்குச் சென்று மீண்டும் அடுத்த ஆண்டிற் கான பணத்தைக் கொடுத் தார். பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் மிகச் சிறந்த முறையில் மனிதநேயத்து டன் அங்கேசெயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு மிக முக்கியமானவர்கள் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் கே.சி.எழிலரசன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீரிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார் மீது அளவு கடந்த பற்று கொண்ட பட் டல்ஜி புரவலராக உள்ளார். மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் தூதராக பணி யாற்றிய மிகச்சிறந்த கல்வி யாளர் பென்டன் வில்லி யம்ஸ் இந்த அமைப்பின் மூத்த ஆலோசகராக உள்ளார். இவர் ஆப்பிரிக்கர் ஆனாலும் அய்யாவைப் பற்றிய நூல் களை வாங்கி படித்து சென்னை வந்து தமிழர் தலைவரிடம் பலமணிநேரம் கலந்துரையாடி பெரியார் ஆப்பிரிக்காவில் பிறந்திருந் தால் இன்னும் ஏராளமான பயன்களைஆப்பிரிக்கர்கள் பெற்றிருப்பார்கள் என ஆதங்கப்பட்டு பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் வளர்ச்சிக்கு எத்தகைய உத விகள் வேண்டும் என்றா லும் செய்து தருகிறேன் என் கிற உணர்வுடன் பணியாற்று கிறார். அங்கே கானா நாட்டில் தெற்கு பகுதி வளமான பகுதி ஆனால் வடக்கு பகுதி மிக வும் பின் தங்கியது. கல்வி யிலும், பொருளாதாரத்தி லும் பின் தங்கிய அந்த மக்களுக்கு தந்தை பெரியார் வழி ஒன்றே தீர்வு என்று கூறி ஆப்பிரிக்க தேசிய வள தலை வர் பக்காரி சாஹித் நியாரி அவர்கள் பெரியார் ஆப்பி ரிக்கன் பவுண்டேசனுடன் இணைந்துள்ளார். இப்படி யாக ஒரு சிறப்பான பெரி யாரை போற்றும் குழு அங்கே உருவாகிவுள்ளது.

வெளிநாட்டினர் கலந்து கொண்ட பெரியார் விழா

இரண்டாம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு அந்நாட்டு அமைச் சர் அழைக்கப்பட்டிருந்தார். முதலில் அந்த விழாவிற்கு 25 பேரை அழைக்க திட்டமிடப் பட்டிருந்தது. ஒரு சிலர் தொடர்பு கொண்டு எங்களை அழைக்கவில்லையே எனக் கேட்டனர். அவர்களையும் அழைக்கலாம் என முடிவு செய்து 50 பேருக்கான அரங்கு பதிவு செய்யப்பட்ட நிலை யில் நூற்றிற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். மிக சிறப்பாக அய்யா பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது. அனைவரும் வெளி நாட்டினர், அமைச்சர் பெரு மக்கள், அரசு அதிகாரிகள் பல்கலைக்கழக துணைவேந் தர்கள், அதிபர் தேர்தலில் போட்டி இட்டவர், முன்னாள் அதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் அய்யா வாழ்க்கை, பணிகள், நமது கல்வி நிறுவனங்கள், இயக்க செயல்பாடுகள் குறித்த காணொலி காட்டப்பட்டது. குறிப்பாக அய்யா அவர்க ளின், இனி வரும் உலகம் குறித்து எடுத்து சொல்லப் பட்டது.

மரபுகளை மீறி மன்னர் பங்கேற்பு!

தமிழ் ஓவியா said...

ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கி றோம் அரை மணி நேரம் இந்தநிகழ்ச்சியில் பங்கேற்கி றோம் என்று சொல்லி வந்த பலரும் மூன்று மணி நேரத் திற்கும் மேல்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அய்யா குறித்த செய்திகளை ஆர்வ முடன் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அங்கு ஒவ்வொரு பகு திக்கும் ஒரு மன்னர் உண்டு. மன்னர் என்ன சொல்கி றாரோ அதை அரசுகேட்கும், பெரும்பாலும் மன்னர் பொது நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார். நாம் தான் அவரைச் சந்திக்க வேண்டும் ஆனால் அய்யா பிறந்த நாள் விழாவில் மன்னர் கலந்து கொண்டது மட்டும் அல்லாமல் அவர் உரையாற்றும்போது மரபு களை மீறி, விழாவில் நான் கலந்து கொள்ள காரணம் பெரியார், பெரியாரைப் படித்தேன் இந்த விழாவில் கலந்து கொள்வது எனது கடமை மட்டும் அல்ல அவ ருக்கும் அவரது இயக்கத் திற்கும் ஏதாகிலும் நான் செய்ய முடியுமா என்கிற ஆலோசனையைப் பெற இங்கு வந்துள்ளேன் என்று உரையாற்றினார். நிலமும் சுரங்கமும் தான் அந்த நாட் டின் மிகப்பெரும் வருவாய், அந்த நாட்டு நிலம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொண்டு என்னையும் பெரி யார் ஆப்பிரிக்கன் பவுண் டேசன் உறுப்பினராக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத் ததுடன் மட்டும் அல்லாமல், பத்திரிகையாளர் பேட்டி யில் தென் இந்தியாவில் தோன்றிய இந்த மாமனிதர் மட்டும் நமது நாட்டில் தோன்றி இருந்தால் எத்த கைய புரட்சியெல்லாம் நம் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் என்று புகழாரம் சூட்டினார். ஆப்பிரிக்காவில் அய்யா வைக் கொண்டு போய் சேர்த்த பெருமை நமது பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் கே.சி.எழிலசன், செயலாளர் சாலை. மாணிக் கம் உள்ளிட்ட தோழர்கள் தாங்கள் சந்திக்கின்ற ஒவ் வொரு நபர்களிடத்திலும் பெரியார் பற்றி சொல்லி இன்றைக்கு பெரியார் அனை வராலும் அறியப்பட்டவ ராய் இருக்கிறார். இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம் அப்துல்லா என்னும் பேரா சிரியர் என்னோடு உரை யாடும் போது சொன்னார் இன்னும் கொஞ்சம் நாட் களில் இங்கு பிறக்கும் குழந் தைக்கு பெரியார் என்று பெயர் சூட்டினால் ஆச்சரிய மில்லை என்றார். இரண்டே ஆண்டுகளில் நமக்கு கிடைத்த வெற்றி இது!

தமிழ் ஓவியா said...

ராஜபாளையம் மாநாடு

நான் எப்போதும் ராஜ பாளையம் திராவிடர் கழக மாநாட்டின் வெற்றி குறித்து தோழர்களுடன் பேசுவேன். காரணம் நீண்ட நாட்களுக்கு பின் மிக எழுச்சியுடனும், சிறப்புடனும் நடைபெற்ற மாநாடு அது மாநாட்டினை திட்டமிட முதலில் கலந்து ரையாடல் கூட்டம் நடத்தப் பட்டது. அக்கூட்டத்தில் ஏராளமானனோர் கலந்து கொண்டனர். அவ்வூரைச் சேர்ந்த தோழர்கள் வெறும் நால்வர் மட்டுமே. அந்த நான்கில் தொடங் கிய திட்ட மிடல், உழைப்பு, தன்னம் பிக்கை ஒரு மாபெரும் மாநாட் டின் வெற்றியில் முடிந்தது. அது யாராலும் முடியாது ஒரு தோழர்களால் மட்டுமே முடியும்; ஒரு சில இயக்கத் தால் மட்டுமே முடியும். அது திராவிடர் கழகத்தால் மட் டுமே முடியும், அப்படி உருவானது தான் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் அரவிந்தன், சதிஷ்குமார், பழனிச்சாமி, திருப்பத்தூர் மாவட்ட கழகத் தோழர்கள் அருமையான பணியினை அங்கு செய்கிறார்கள். அந்த நாட்டிற்கு செல்கிற தமிழர் களுக்கு பெரியார் ஆப்பிரிகன் பவுண்டேசன் தான் புகலிட மாய் இருப்பதை கண்டு வியந்து போனேன். அங்கு பெரியார் எல்லோரையும் ஒருங்கிணைக்கிறார். நாமக் கல் மாவட்டத்தில் இருந்து ஒரு தோழரும், ஜெயம் கொண் டம் மாவட்டத்தில் இருந்து ஒரு தோழரும் தொழில் நிமித்தமாக அந்த நாட்டிற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு சில விவரங்கள் தேவைப் பட்டது. அவர்கள் விசாரித் தனர் பெரியார் என்கிற பெயரை கேள்விபட்ட உடன் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் வந்ததுடன் அய்யா பிறந்த நாள் விழா விலும் பங்கேற்று மகிழ் வுடன் தங்கள் பிறந்த நாள் விழா போல் எல்லா வேலை களையும் அவர்களும் இணைந்து செய்தனர். ஆப் பிரிக்காவிலிருந்து புறப்படும் முன் அய்யா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட இந்திய தூதரக அதிகாரி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத் திருந்தார்.

அவரை சந்திக்க சென் றோம். வரவேற்றவர் ஒரு அய்ந்து நிமிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு கணினியில் அவசர அவசரமாய் தட்டச்சு செய்து முடித்தார். பிறகு எங்களுடன் உரையாடினார். அய்யாவின் நூல்கள் ஆங்கில பதிப்பில் வெளிவந்தவைகளை அன்பளிப்பாக வழங்கி னேன், நூல்களை புரட்டிய வர் அய்யாவின் இனி வரும் உலகம் நூலை எடுத்து பார்த்து வியந்தார். 1943 லேயே கம்பி இல்லா சாதனம் மூலம் வகுப்பறைகள் நடத் தப்படவேண்டும் என்று இன்றைக்கு 3ஜி, 4ஜி என்று சொல்லப்படுகின்றவற்றை எல்லாம் அன்றைக்கே சொல்லி இருக்கிறாரே? என்றார்.

இப்போது கூட அது குறித்து தான் தட்டச்சு செய்து அனுப்பினேன். வேறு ஒரு இடத்தில் இதை பற்றி பேச அழைத்திருக்கிறார்கள் இனி நான் பெரியாரை பற்றி மட்டுமே பேசப் போகிறேன் உண்மையில் எனக்கு மிக பயனுள்ள புத்தகம் இது என்றார். இன்னும் இன்னும் பெரியாரை ஆப்ரிக்கா முழு மைக்கும் பரப்புவதற்கான செயல்திட்டம் தயாராகி உள்ளது. தொடர்ந்து அதற் கான பணிகள் நடைபெறும். அதே போல் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் இந்தப் பகுதியில் மிக சிறப்பாக நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000 நிகழ்வுகளை கடந்து சிறப்புடன் நடை பெறுவதை போல் ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட் டம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று வாழ்த்து கிறேன் என்றார். - இவ்வாறு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/75222.html#ixzz2tFXt7r82

தமிழ் ஓவியா said...


வளர்கிறது

நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.
- (விடுதலை, 23.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/75259.html#ixzz2tLFp2cbF

தமிழ் ஓவியா said...


ஓராண்டில் நூறாண்டுச் சாதனை?


- குடந்தையான்

தமிழக அரசின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரியில்லா பட்ஜெட் என பெருமை யோடு கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2012-13 ஆண்டில் 4.14 விழுக்காடு தான்.

இது இந்திய அளவின் 4.9 விழுக் காட்டை விட குறைவு. இதற்கு முன்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்த 2005-06 ஆண்டில் தான் இந்த நிலை இருந்தது.

கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் ஒட்டு மொத்த பொருளா தார வளர்ச்சி (GDP) 2009-10-ல் 10.8 விழுக்காடாகவும், 2010-11-ல் 13.12 விழுக்காடாகவும், நாட்டிலேயே முன்னணி மாநிலமாக திகழ்ந்தது. ஆனால், ஜெயலலிதா தலைமையி லான அதிமுக ஆட்சியில், பொருளா தார வளர்ச்சி 2011-12-ல் 7.42 விழுக் காடாக குறைந்து, தற்போது 4.14 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள் ளது. தமிழகத்தில் நிலவும் மின் வெட்டின் காரணமாக, தொழில் துறை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பிரச்சினையை, அரசு முறை யாக எதிர்கொள்ள வில்லை. அவ்வாறு செய்திருந்தால், குறு, சிறு தொழில் முனைவோருக்கு உதவியாக இருந் திருக்கும்; இந்த அளவுக்கு வீழ்ச்சி இருந்திருக்காது என மத்திய அரசின் திட்டக்குழு உறுப்பினர் அபிஜித் சென் கருத்து தெரிவித்துள்ளார். இத்தகைய பொருளாதார வீழ்ச்சி காரணமாக, தமிழ் நாட்டின் வேலை வாய்ப்பும் பெருமளவு பாதிக்கப்பட் டுள்ளது.

இந்த விஷயங்களையெல் லாம், இங்கே உள்ள ஊடகங்கள் எதுவும் விவாதிப்பது இல்லை; தங் களை நடு நிலை ஊடகங்கள் என கூறிக்கொண்டு, கருத்துத் திணிப்பை அரசுக்கு சாதகமாக வெளியிடுவதில் மிகுந்த அக்கறையோடு செயல்படு கின்றன.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, இந்த அளவுக்கு, இந்தியா வின் மற்ற மாநிலங்களைக் காட்டி லும், மிக மோசமான வீழ்ச்சியை அடைந்துள்ளது பற்றி, தமிழக நிதி அமைச்சர் கண்டு கொள்ள வில்லை; ஆனால் என்ன? ரூ.200 கோடிக்கு, மாடு வாங்கவும், ஆடு வாங்கவும் நிதி ஒதுக்கியுள்ளார். ஆடு, மாடு மேய்த்த நம் திராவிடர்கள், கல்வி கற்று மேம்பாடு அடைய வேண்டும் என பெரியார் போராடினார்.

நீதிக்கட்சியும், காமராசரும், மக்கள் கல்வி கற்று முன்னேறிட திட்டங்கள் தீட்டினர். ஆனால், அம்மையார் ஆட்சியில் மீண்டும் மாடு, ஆடு மேய்த்திடுவது தான் வளர்ச்சி எனக் கருதி, நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. ஓராண்டில், நூறாண்டு சாதனை என்பது இது தானோ?

Read more: http://viduthalai.in/page-2/75269.html#ixzz2tLFxD3bP

தமிழ் ஓவியா said...


உண்ணாமுலையாம்! ஞானப்பாலாம்!!


கேள்வி: ஒரு பசு மாடு என்ன போட்டால் கறக்கும்?

உண்மை: கறக்காது!...கறக்காது!!... கன்று போட்டால் தான் கறக்கும்! அதாவது கன்றீனாதது எதுவும் பால் கறக்காது! இதுவே உண்மை நிலை.

அப்படியானால், உண்ணாமுலைகளைச் சுமந்ததாகக் கூறப்படும் பார்வதியின் முலைகள் மட்டும் எப்படிச் சுரந்தன? என்ற கேள்வி எழுவது சகஜமே!

பார்வதிக்கு இரு குமாரர்கள் என்பது புராணக்கூற்று. இரண்டும் கர்ப்பத்திலிருந்து பிறவாதவை ஒன்று பார்வதி தம் உடலழுக்கை உருட்டித் திரட்டிப் பிடித்து வைத்ததே பிள்ளையார்! ஆனை முகன்! ஆனை வாய் உண்ணாமுலை! மற்றது பரமசிவனது விந்து தெரித்து அதாவது பார்வதியின் கர்ப்பத்தில் ஊறாமல் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறுமுகங்களுடன் பிறந்தது!

அதற்கும் ஆறு கிருத்திகைக் கன்னியர்கள் தான் பாலூட்டியதாகப் புராணமேயொழிய பார்வதி பாலூட்டினாள் என்பதாக இல்லை! ஆறுமுகமும் உண்ணாமுலை! ஆக, இங்ஙனம் அவதரித்த இரு குமாரர்களும் உண்ணாத முலைகளை யுடைய பார்வதிக்கு உண்ணா முலை என்ற ஒரு பெயரும் வந்தது போலும்!

இவ்விருவருக்கும் ஊட்டக் கிடைக்காத முலைப்பால் பாப்பாரச் சம்பந்தனுக்கு மட்டும் ஞானப் பாலாக ஊட்ட எப்படிச் சுரந்தது? சவுண்டி சம்பந்தன், ஞான சம்பந்தன் ஆனது எங்ஙனம்? தேவாரம் பாடியதும் எங்ஙனம்? ஞானப்பால் உண்டதால் பாடினான் என்றால் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எப்பால் உண்டு தேவாரங்கள் பாடினார்கள்? என்பன போன்ற பகுத்தறிவுக் கேள்வி களுக்கு என்ன சமாதனம்?

இவைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், வயிற்றுப் பிழைப்பாகக் காலட்சேபம் செய்யும் பண்டாரங்கள் ஞானப்பால் உண்டால் பக்திப் பாடல் பாடலாம்; புட்டிப் பால் உண்டால் டப்பா பாட்டுத்தான் பாடலாம்; இக்காலத் தாய்மார்களுக்கு பால் சுரப்பில்லை யென்றும், தாய்க்குலத்திற்கு இழிவையூட்டும் வகையில் உளறித் திரிவதென்றால் எவ்வளவு நெஞ்சுத் திமிர் இருக்கும்? மக்கள் முன்னேற்றத்திற்கு வேண்டிய கருத்துக் களைச் சொன்னால் பயனுள்ளதாகவும், நாடு முன்னேறு வதாகவும் அமையும். பண்டாரங்கள் இனியேனும் அறிவு பெற்றுத் திருந்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-5/75305.html#ixzz2tLGzOheN

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் உருவில் கடவுள்!


தோழர்களே! நான் கூறுகிறேன்! ஜாதி ஒழிந்தால் கடவுள் ஒழியும், பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்கு இனி எந்தத் தமிழனும் போகக் கூடாது.

சாமியும் பார்ப்பானுக்கு அனுகூலமாகத்தான் இருக் கின்றது. எப்படி நாம் பார்ப்பானை தொடக்கூடாதோ அதுபோல சாமியையும் தொடக் கூடாது. எப்படி பார்ப்பான் ஜாதியில் உயர்ந்தவனோ அது போல கடவுளும் உயர்ந்தது. பார்ப்பானும் பூணூல் போட்டிருக்கின்றான். கடவுளும் போட்டிருக்கிறது. பார்ப்பானுக்கும் உச்சிக்குடுமி. கடவுளுக்கும் உச்சிக்குடுமி.

பார்ப்பான் நாம் சமைத்ததை உண்ண மாட்டான்; கடவுளும் நாம் சமைத்ததை உண்பது கிடை யாது. பார்ப்பானும் நம் கண்முன் உண்ணாமல் மறைவாக உண்பான்; கடவுளும் அப்படியே. பார்ப்பானுக்கும் பஞ்சகச்சம், கடவுளுக்கும் பஞ்சகச்சம். பாப்பாத்தி தாருபாச்சி கட்டுகின்றாள், கடவுளச்சியும் அப்படியே கட்டுகின்றாள்.

பார்ப்பான் வீட்டிற்குள் நாம் செல்லக்கூடாது. அதுபோல் கடவுள் கோயிலுக்குள் நாம் செல்லக்கூடாது. இப்போது கூறுங்கள் , கடவுளும் பார்ப்பானும் அழிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா? என்று படித்தவர்களை கேட்கின்றேன்; பக்திமான்களைக் கேட்கின்றேன்; கடவுள் உருவம், குணம் ஒன்றும் இல்லாதவன்;

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருப்பவன் என்றெல்லாம் கூறிவிட்டு குழவிக்கல்லில் கடவுள் மகத்துவம் இருப்பதாக கூறி பெண்டாட்டியும், பிள்ளைக்குட்டிகளும் கற்பித்திருக் கின்றீர்களே இது எவ்வளவு பித்தலாட்டம்? வெள் ளைக்காரனும், சாயபுவும், கிறிஸ்தவனும் கூறுவதுபோல ஒரு கடவுளா உங்களிடத்தில் உள்ளது?

எனவே, இந்த நாட்டில் கடவுளுக்கும், கடவுள் தன்மைக்கும், மதிப்பிருந்தால் கடவுளர்களின் தாலிகள் அறுக்கப்படுமா? நகைகள் களவாடப்படுமா? அதே இடத்தில் அவர்களை ஏன் கடவுள் பிடித்து நிறுத்தக் கூடாது? இவற்றிலிருந்து கடவுளோ, கடவுள் தன்மையோ இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டது என்பதுவும் அத் தனையும் பித்தலாட்டமென்பதுவும் புலனாக வில்லையா?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-5/75306.html#ixzz2tLH9zYra

தமிழ் ஓவியா said...


எதிலும் லேட் தான்

எதிலும் லேட் தான்

கேள்வி: ஜெயலலிதா பிரதமர் ஆவாரா?

டி.கே. ரெங்கராஜன் எம்.பி: மாநில முதல் அமைச் சராக இருப்பவர் பிரதமராக வர முடியும். அப்படி அவர் பிரதமராக வந்தால் மாநிலங் களில் கஷ்டத்தை உணர்ந்தி ருக்கும் காரணத்தால் அவர் சார்ந்த மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், எல்லா மாநிலங்களுக்கும் நன்மை செய்வார். ஆனால் யார் பிரதமர் என்பதை இப்போதே யாராலும் தீர்மானிக்க முடி யாது. (ஜுனியர் விகடன் 12.2.2014 பக்கம் 7)

ரொம்ப சரி.. இந்த ஞானோ தயம் சில ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தால் கால் நூற்றாண்டுக்காலம் மேற்கு வங்க முதல் அமைச்சராக இருந்த ஆளுமை மிகுந்த ஜோதிபாசு பிரதமராக வந் திருக்க முடியுமே - அந்த முடிவை எடுக்கத் தவறியது ஏன் காம்ரேட் என்று ஒரு கேள்வி நறுக்கென்று தோன் றுகிறது. எதிலும் இவர்கள் லேட்தான்!

கேடு கேடுதான்

வாசிங்டனில் ஒருவர் 87 மணி நேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து கின்னஸ் சாதனை படைத்ததாக ஒரு செய்தி.

இந்தச் செய்தியால் என்ன பயன்? இது ஒரு சாதனை என்று விளம்பரப்படுத்துவ தால் நல்லதைவிட கெட்டது தான் அதிகம் நடக்கும். லண்டனில் ஒருவன் 87 மணி நேரம் தூங்கினான். ருசியா வில் ஒருவன் 87 மணி நேரம் சாப்பிட்டுக் கொண்டே இருந் தான்; டோக்கியோவில் ஒரு வன் 87 மணி நேரம் சிரித்துக் கொண்டே இருந்தான்; சிறீ ரங்கத்தில் ஒருவன் 87 மணி நேரம் சாமி கும்பிட்டுக் கொண்டே இருந்தான் என்றே வைத்துக் கொள்வோம் அவற் றால் ஏற்படும் பலன் என்ன? படிப்பவனுக்கு நேரக்கேடு - நம்புகிறவனுக்கு அறிவுக் கேடு - கடைப்பிடிக்கிறவ னுக்கு எல்லாமே கேடுதானே!

நீடோ சாகவில்லை

அருணாசலப்பிரதேச காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் நீடோ பவித்ரா வின் மகன் நீடோ டானியா. டெல்லியில் பி.ஏ. படித்து வந்தார். கடந்த மாதம் 30ஆம் தேதி டெல்லி லஜ்பத் நகரில் தனது தோற்றத்தைக் கேலி செய்தவருடன் நடத்திய வாக்கு வாதத்தில் கொல்லப் பட்டார் என்பது எத்தகைய கொடுமை! கொல்லப்பட்ட நீடோவின் குடும்பத்தினர் பிரதமரைச் சந்தித்துத் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பரிகாரம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மனிதனுக்குப் பகுத்தறிவுச் சிந்தனை இல்லை என்றால், குரோதம், இன வெறுப்பு, துவேஷம், அடுத்தவரை சீண்டும் கீழ்க் குணம் என்னும் அருவருப் பான மிருகத்தின்மீது தான் சவாரி செய்வான். நீடோவின் தந்தையார் பிரதமரிடம் வைத்த வேண்டு கோள் நீடோவின் சிலை ஒன்றை நிறுவ வேண்டும் என்பது. அப்படி நிறுவப்படும் சிலையின் பீடத்தில் வரலாற் றுக் குறிப்பை பொறிக்க வேண்டும். அப்பொழுதாவது புதிய சிந்தனைகள் பூக்கின் றனவா என்று பார்க்கலாம். அதன் மூலம் அவன் சாக வில்லை. சகலருக்கும் பகுத் தறிவு - மனிதநேயத்தின் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டு இருப்பானே!

Read more: http://viduthalai.in/e-paper/75347.html#ixzz2tOYb7eyq

தமிழ் ஓவியா said...


என்னாகும்?


சகுனம் பார்க்கிறோமே! சாப்பிடும்போது சகுனமோ, ராகு காலமோ பார்க்கிறோமா? நீதிமன்றத்தில் ராகு காலம் பார்த்தால் என்ன ஆகும்? - (விடுதலை, 21.12.1954)

Read more: http://viduthalai.in/page-2/75325.html#ixzz2tOZ7A3rE

தமிழ் ஓவியா said...


48 நாள் மண்டல ஆட்சி


ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடிய வில்லை என்ற காரணத்தைச் சொல்லி டில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகி உள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால். ஊழல் என்கிற ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அன்னா ஹசாரே துவக்கிய போராட்டத்தின் பயனை, கெஜ்ரிவால் அறுவடை செய்தார்.

ஆம் ஆத்மி கட்சியை துவக்கி, டில்லி ஆட்சியைக் கைப்பற்றினார். பதவி ஏற்ற நாள் முதல், கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் அரசாங் கத்தை நிர்வகிக்கும் முறை கடும் விமர்சனத்துக்குள்ளானது. டில்லி காவல்துறை அதிகாரிகளை நீக்கம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்றம் முன்பாக முதல்வர் கெஜ்ரிவால் மூன்று நாட்கள் மறியல் நடத்தி, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக் காரணமானார்.

கட்சி நடத்த வேண்டிய போராட்டத்தை, மாநிலத் தின் முதல்வர் என்ற தகுதியில் நடத் தினார். கட்சியின் சட்ட மன்ற உறுப் பினர் வினோத் பின்னி, தனக்கு அமைச்சர் பதவி தரவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தினார்; அரவிந்த் கெஜ்ரிவால்மீது விமர்சனம் செய்து, இறுதியாக கட்சி நடவடிக்கைக்கு ஆளானார்.

சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்த பெண் கள் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடு பட்டு, கடும் கண்டனத்திற்கு உள்ளா னார். மக்கள் தம் குறைகளை நேரில் அளித்திடலாம் எனக்கூறியதும், கட்டுக் கடங்காத கூட்டம் கூடியதால், அந்த மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியை முற்றாக ரத்து செய்தார் கெஜ்ரிவால். இந்த செயல் அர்விந்த் கெஜ்ரிவாலின் நிர்வாகத் திறமையின்மையை காட்டி யது. இறுதியாக, லோக்பால் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவேன் என சபதம் செய்தார்.

மத்திய அரசின் ஒப்புதலோடு தான் டில்லி சட்ட மன்றத்தில் லோக்பால் சட்டத்தை அறி முகப்படுத்த முடியும் என ஆளுநர், அரசியல் சட்ட விதிமுறைகளைக் கூறியும், அதனை சட்ட ரீதியாக சந்திக் காமல், சட்டமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்த முயன்று, அதில் தோல்வி கண்டவுடன், முதல்வர் பதவியிலிருந்து விலகி உள்ளார்.

அரசாங்கம் நடத்துவதற்கு, ஊழல் எதிர்ப்பு எனும் ஒற்றை முழக்கம் மட்டுமே போதாது என்பதை 48 நாள்கள் மண்டல ஆட்சி நடத்திய கெஜ்ரிவாலும் அவரது கட்சியினரும் இப்போதாவது உணர்ந்தால் அவர் களுக்கும், நாட்டிற்கும் நல்லது.

- குடந்தையான்

Read more: http://viduthalai.in/page-2/75334.html#ixzz2tOaBnqHI

தமிழ் ஓவியா said...


சைமன் கமிஷன் பகிஷ்காரப் புரட்டு


சைமன் கமிஷன் பகிஷ்காரப் புரட்டு

சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்றும், மற்றும் பல பார்ப்பன தாசர்களின் வயிற்றுப் பிழைப்பு, வியாபாரம் என்றும் பலமுறை தெரிவித்து வந்திருக் கின்றோம். அதற்கிசைந்த வண்ணமாக தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் அடிக்கடி குட்டிக்கரணம் போட்டு வருவதையும் பகிஷ்காரத்திற்கு புது புது வியாக்கியானங்கள் சொல்லி வருவதையும் அவ்வப்போது தெரிவித்து வந்திருக் கின்றோம். திரு. சீனிவாசய்யங்கார் தமது திட்டத்தைத் தூக்கிக் கொண்டு சீமைக்குச் சென்றிருப்பதைப் பற்றியும் தெரிவித் திருக்கின்றோம். இப்போது பார்ப்பனர்கள் பார்ப்பன சமூகத்தின் பேராலும் வருணாசிரம தர்ம சபையின் பேராலும் கமிஷனுடன் ஒத்துழைக்கும் விதமாக தங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பியிருக்கிறார்கள். கமிஷனிடம் சாட்சி சொல்லவும் தயாரா யிருக்கிறார்கள். எனவே பகிஷ்கார உப தேசத்தை இந்தப் பார்ப்பனர்களும் அவர்களது தாசர்களும் இனி யாருக்கு உபதேசம் செய்கின்றார்கள் என்பதைப் பொது ஜனங்களே யோசித்துக் கொள்ள வேண்டுகின்றோம். அன்றி யும் இப்பார்ப்பனர்களையும் அவர்களது அடிமை களையும் நம்பி மோசம் போகாமல் ஒவ்வொரு சமூகத்தாரும் தங்கள் தங்கள் குறைகளை அவசியம் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதாகவும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 24.06.1928

Read more: http://viduthalai.in/page-7/75360.html#ixzz2tOahxt72

தமிழ் ஓவியா said...

இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது

பார்ப்பனர்கள் காங்கிரஸின் பேராலும் தேசியத்தின் பேராலும் ஸ்ரீ வரதராஜுலு போன்ற ஆசாமிகளைச் சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பனரல்லாதாருக்குக் கெடுதி செய்து வருவதைப் பற்றியும் சென்ற சட்டசபைத் தேர்தல் முடிந்த வுடன் காங்கிரசுக்கும் தேசியத்திற்கும் விரோதமாய்ப் பொய்க் கால் மந்திரிகளைச் சிருஷ்டித்ததும், அவர்களை ஆதரித்ததும் பார்ப்பனரல்லாதார்களுக்குக் கெடுதி உண்டாகச் செய்யவே என்பதாகவும் பலமுறை எழுதிவந்திருக்கின்றோம். இதற்கு சரியான ருசு கொடுக்க சமீபத்தில் சென்னை சட்டசபையில் விலக்கப்பட்ட மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்கநாதமுதலியார் சொன்ன வாசகமே போதுமானதென்று நினைக்கின்றோம். அவர் சொன்னதாவது 1926-ல் நாங்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக் கொண்டவுடன் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் எங்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சியாரிட மிருந்து ஒப்பந்தம் வெளியாயிற்று. அந்த ஒப்பந்த நிபந்தனை என்னவென்றால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும், கமிட்டி களுக்கும் மற்ற நியமனங் களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரை நியமிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான், இந்த வாசகம் ஸ்ரீமான் எ. ரங்கநாத முதலியார் அவர்கள் சொன்னதாக 23.03.1928இல் சுதேச மித்திரனிலேயே இருக்கிறது.

இதைக் காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தலைவர்கள் ஸ்ரீமான்கள் சாமி வெங்கிடாசலமும், சத்தியமூர்த்தியும் சட்ட சபையில் மறுக்க வில்லை என்பதினாலேயே இது உண்மை என்பது ஒரு சிறிதும் சந்தேகமில்லை. இப்படி இருக்க ஜனாப் அமீத்கான் சாயபு காங்கிரஸ் கட்சியாருக்கு அம்மாதிரி நிபந்தனை செய்து கொள்ள யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை என்பதினா லேயே ஸ்ரீரங்க நாத முதலியார் சொல்வது பொய்யாகி விடுகிறதா? என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்துத் தேசியமென்பதும், காங்கிரசென்பதும்பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டுகிறேன்.

- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/75360.html#ixzz2tOaqvG00

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

உங்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) தலைமேல் கால் வைத்து ஏறிப் போகிறவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பீர்களானால் உங்கள் கொடுமை சீக்கிரத்தில் கவனிக்கப்படும். இல்லாவிட்டால் நீங்கள் படிக்கல்லாக விழுந்துகிடக்க வேண்டியதுதான்.

Read more: http://viduthalai.in/page-7/75361.html#ixzz2tOb4QJvR

தமிழ் ஓவியா said...


அருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை


அருப்புக்கோட்டையில் சுகாதார வாரக் கொண் டாட்டம் நடைபெற ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ஒரு பார்ப்பனர் தன்னைத்தானே அக்கிராசனாதிபதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆசனத்திலமர்ந்து நடவடிக்கை ஆரம்பிப் பதற்காக முதலில் ஒரு பார்ப்பனரல்லாத வாலிபர் பாட ஆரம்பித்தவுடன் அக்கிராசனத்திலிருந்த பார்ப்பனர் கோபம் கொண்டு முதல் முதல் சூத்திரன் பாடக் கூடாது; பிரா மணன் தான் பாட வேண்டும் என்று சொல்ல, உடனே அங்கி ருந்த கூட்டம் சூத்திரன் என்று சொன்னதற்காக அக்கிரா சனரை மன்னிப்புக் கேட்கும்படி கேட்கவே, அக்கிராசனர் மன்னிப்பு கேட்காததால் கூட்டத்தார் அத்தனை பேரும் சுய மரியாதைக்கு ஜே! ராமசாமி நாயக்கருக்கு ஜே! என்று சொல்லிக் கொண்டு கலைந்து போய்விட்டார்கள். பிறகு எவ்வளவு தூரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டும் கூட்டம் கூடவே இல்லை. இதனால் ஆத்திரம் கொண்ட ஒரு பார்ப்பன சுகாதார இன்ஸ்பெக்டர் பார்ப்பன போலீசின் உதவி பிடித்து, பல பார்ப்பனரல்லாத வாலிபர்களின் மேல் கேஸ் தொடுத்து, அதாவது அரசாங்க உத்தியோகஸ்தரின் வேலையை செய்ய வொட்டாமல் தடுத்ததாகவும் மற்றும் சிலகுற்றங்களும் சுமத்தி அரஸ்டு செய்து ஜாமினில் விடவும் மறுத்து சிறைச் சாலையில் இரவெல்லாம் அடைத்து வைத்து கேஸ் தொடர்ந்தார்கள். கேசுக்கு மதுரையிலிருந்து வக்கீல்கள் பீசில்லாமல் போய் பல வாய்தாக்கள் ஆஜராகி கேஸ் நடத்தினார்கள். கடைசியில் குற்றவாளிகள் இன்னார் என்று சரிவர அடையாளம் காட்டவே முடியாமல் போய் விட்டது. அப்படி இருந்தும் அதிகாரிகளின் மனப்பான்மையை அறிந்த மேற்படி வாலிபர்கள் கேஸை வேறு கோர்ட்டுக்கு மாற்ற ஆசைப்பட்டார்கள். கடைசியாய்க் கேசு தள்ளுபடியாகி விட்டதாக அருப்புக்கோட்டையிலிருந்து தந்தி வந்திருக்கின்றது.

அனாவசியமாய் ஒரு இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்ததற்காக போலீசு அதிகாரிகள் மீது நஷ்டத்திற்கு விவகாரம் தொடர வேண்டும் என்கின்ற எண்ணம் அவ்வூராருக்கு இருப்பதாகத் தெரிய வருகின்றது. அதற்காகப் பலர் பொருளுதவி செய்ய முன் வருவதாகவும் தெரிய வருகின்றது. என்றாலும் விடுதலை அடைந்த விஷயத்திற்காக வாலிபர்கள் பதினொரு வரையும் பாராட்டுவதுடன் இந்த கேசுக்குப் பொருள் கருதாது தங்கள் கஷ்ட நஷ்டத்தையும் கருதாது வந்து உதவி செய்த மதுரை வக்கீல்களுக்கு நமது நன்றியறிதலைத் தெரிவித்து கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 10.06.1928

Read more: http://viduthalai.in/page-7/75362.html#ixzz2tObCY3eK

தமிழ் ஓவியா said...


மகிழ்ச்சியில் திளைத்தேன்!சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு முன் கடவுளை மற மனிதனை நினை கடவுள் இல்லை என்ற பகுத்தறிவு வாசகங்களுடன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பெரியார்'.பக்தியின் பெயரால் ஏமாற வருபவர்களுக்கு புத்தி தெளியவைக்க பெரியாரை அமரவைத்த தி.க.வினருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..... (கடந்த வாரம் சிறீரங்கம் தொகுதிக்கு சென்ற போது துணிச்சல் பெரியாரை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தேன்.)

- வினிஷர்பனா

Read more: http://viduthalai.in/page2/75370.html#ixzz2tRBiTdMF

தமிழ் ஓவியா said...


எது தமிழ்த் தேசியம்?சாதியை வளர்க்கும் தேசிய மெதுவும்
தமிழ்த் தேசிய மில்லை - சங்கத்
தமிழ்த் தேசிய மில்லை - இந்து

சாதியைக் காக்கும் எந்தத் தேசியமும்
செந்தமிழ்த் தேசியமில்லை - அதைத்
தமிழர் நேசிப்பது மில்லை!

பாக்கித்தான் வங்கமுள்ளடக்கிய இந்தியா
பழைய தமிழ்மொழியின் வீடு - அதைத்
திராவிட மென்றது வேத ஏடு - அன்றைய

திராவிட மென்ற தனித் தமிழ்ப் பாண்பாட்டை
திரும்பவும் மலரச் செய்வோமே - அதைத் தமிழ்த்
தேசிய மெனவும் சொல்வோமே!

ஆரியர்க்கு முந்திய, ஆரியக் கலப்பற்ற, அதனினு முயர்ந்த நாகரிகம் - அதுவே
உலகத்தின் முதல் நாகரிகம்- என்று

வரலாற்றாளர்கள் வாயாரப் புகழ்ந்த
சிறப்பினையுடைய நாகரிகம் சிந்து வெளித்
தமிழர்கள் வளர்த்த நாகரிகம்!

தமிழை வடக்கே அழித்தபின் ஆரியர்
தென்னகம் நோக்கி வந்தார் - அவர்க்கு
மன்னர்கள் புகலிடம் தந்தார் - இங்கே

தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம்
தமிழில் கிளைத்திடச் செய்தார் - தமிழர்மேல்
சாதிமத நஞ்சையும் பெய்தார்!

சாதிமதங்கள் தமிழர்கள் நம்மை
தனித்தனிக் குழுவாய் பிளக்கும் - தினமும்
சண்டை சச்சரவை வளர்க்கும் - அத்தீய

சாதி மதங்களைத் தேசியமெனில் அவை
தமிழரை அடிமையாக்கும் - தமிழ்
நாட்டையும் அழித்துத் தீர்க்கும்

திருத்தணி - குமரி சிறுநிலப் பகுதிக்குள்
தமிழகம் சுருங்கிய தெவரால்? - சாதி
மதங்களை வளர்த்தவர் தவறால்! - அதைத்

தேசிய மென்று கூறுவோர் இன்று
தமிழர்கள் ஒற்றுமை அழிப்போர் - தமிழர்
மொழியையும் பெயரையும் ஒழிப்போர்!- வீ. இரத்தினம், பெங்களூரு

Read more: http://viduthalai.in/page3/75372.html#ixzz2tRC9gGD8

தமிழ் ஓவியா said...


தேவை சிந்தனை


உலகம தோனறய பனபே மனதன காடுகளல பசசை மாமசம சாபபடடு வாழநது வநதுளளான எனபதை படிததுளளோம. சககமுககக கல மூலமாக நெருபபை உணடாகக சமைதது சாபபடடனா. சைகை மூலமாகவே கருததுப பாமாறறம செயது வநத மனதன சல நூறறாணடுகளுககுப பனனரே பேசவும எழுதது வடிவைக கணடுபடிததும அசசுகள செயது படிககவும கறறுளளான.

உலகம தோனற பல லடசம கோடி ஆணடு களுககுப பனபே மனதன படிபபறவு பெறறு மனதக கடவுளகளான சவன, கருஷணன, ராமன முதலய வை கறபககபபடடு உளளன. கடவுளதான உலகததை உணடாககனான எனபது பததலாடடம அலலவா?

கடவுளுககு இவனைப போலவே மனைவகள, வைபபாடடிகள, பளளைககுடடிகளை வைதது அவைகளுககுத தனததனயாக இடமும, குடடித தேவாகளை உணடாகக அவைகளடம இவன வைததருநத கதத, வேல, அமபு முதலயவைகளை நடடு மககளைப பயமுறுதத தொழவைததுப பழைபபைத தேடிக கொணடுளளான.

மேலும இவாகளைப போலவே நாமம போடும / போடாத, மாமசம சாபபடும / சாபபடாத கடவுள களைக கணடெடுததுளளான. அதனபடியே இனங களையும பததுளளான. மனதன கடவுளகள பறந தநாளைக கொணடாடுவதால மனதன தான கடவுளைக கறபததுளளான எனபது உறுதயாகறது. மனதன கறபனைக கடவுளகளைக கறபககும முனனா கடவுள எனபதே இலலை. கடவுள ஒருவன இருநதருநதால மனதால இததனை நறம உயரம பணபுகள வேறுபாடுகள இருநதருககுமா? அதே போல நோயநொடிகள கூன, குருடு, செவடு போனற ஊனஙகள வநதருககுமா?

மனதனால கணடுபடிதத மனசாரம, எலகட ரானகஸ, தொலைககாடச, கணன, வமானஙகளை கடவுள அளககவலலை ஏன? ஆண, பெண கலவ செயயாமலேயே குழநதை பறகக வைததுளளான. ஆகவே கடவுளை மனதன தான கறபததுளளான.

காடடில வேடன கருஷணனைக கொனறுளளான. ராமன - லடசுமணன சரயூ நதயல வழுநது தற கொலை செயது கொணடுளளனா. மனதன இவை களை எலலாம தொநது கொணடால தான வாழ முடியாது எனககருதயே 19-ஆம நூறறாணடுவரை மககளுககுக கலவயைக கொடுககவலலை. சுதந தரததுககுப பன பளளகளை மூடியும முதலமைசசா ராஜாஜ காலததல பாதநேரம படிபபும பாதநேரம அபபனன குலததொழலைச செயயச சொனனா. அதுவரை சரசுவத வரவலலை.

தநதைபொயா இலலை எனறால காமராஜா வநது பளளககூடஙகளை தறககவடடிருககமாடடாகள. தறபோதும பறபடுததபபடட தாழததபபடட மககள முனனேறககூடாது எனபதறகாக வேலைவாயபபல தடை. கடவுள சலையை செயதும கோயலகள கடடி யவனை சலையைத தொடடால தடடு, அசசனை செயய கூடாதென மனுநதககதையைச சொலல உசசநதமனறததல தடைபெறறு உளளாகள.

ஓராணடு கோயலுககுப போய கோககை வைதது எதுவும நடவாதபோது மணடும மணடும அஙகு செனறு வருவதால எனன பயன? பணமும நேரமும வரயம, உன வாழநாளல இழபபைததானே பெறுகறாய.

சநத! செயலபடு. -_

- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page4/75373.html#ixzz2tRCWfGfo

தமிழ் ஓவியா said...


கொய்யாசாப்பிடலாமே!


கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறு கின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது.

இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங் களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல் முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை,களில் மருத்துவகுணங்கள் அடங்கி யுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப் படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page5/75380.html#ixzz2tRDpQCfs

தமிழ் ஓவியா said...


புதிய பெயர் - பழைய கொடுங்கோல்

1935 வரை அகில இந்தியா என்று பேசி வந்த நான், வடநாட்டார் ஆதிக்கத்தை உணர ஆரம்பித்ததும் 1938-ல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை முக்கியக் கொள்கையாகக் கடைபிடிக்க ஆரம்பித்தேன். 1950 ஜனவரி 26ஆம் தேதிய பலம் 1947ஆகஸ்ட் 15ஆம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான், அதே பணப் பெட்டிதான்; அதே தராசுதான்; அதே படிக்கல்தான், அதே சரக்குதான். அதே பித்தலாட்டம் தான். ஆனால், விலாசம் அதாவது டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடிஅரசு ஆட்சி என்கிற புதுப்பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதிக பலத்துடனும், மேலும் அதிகப் பாதுகாப்புடனும் 26ஆம் தேதி முதற்கொண்டு நடைபெறப் போகிறது. இந்த உண்மையைத் தெளிவாக உணரும் நாம் இதை ஏன் புரட்டு என்று எடுத்துச் சொல்லக் கூடாது? உண்மையை எடுத்துச் சொல்ல நாம் ஏன் பயப்பட வேண்டும்? அக்கிரமத்தை எடுத்துச் சொல்ல நமக்கேன் அச்சம்?
- தந்தை பெரியார் விடுதலை 20.01.1950

Read more: http://viduthalai.in/page5/75381.html#ixzz2tRE6Lx6d

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூரில் இவைகள் இல்லை...


காற்றை கெடுக்கும் தூசியில்லை
நாற்றம் அடிக்கும் கூவமில்லை
புவியை அழிக்கும் புகையில்லை
பொறாமை தழைக்கும் பகையில்லை
எங்கும் எதிலும் ஈ இல்லை
இங்கும் அங்கும் குப்பையில்லை
அடிமை எண்ணம் இங்கில்லை
அடிமைப் படுத்திட வாய்ப்பில்லை
முதுமக்கள் யார்க்கும் கவலையில்லை
எத்துயர் வந்தாலும் பயமில்லை
பேருந்து வாகனத்தில் நடத்துநரில்லை
வாகனச் சத்தம் கேட்கவேயில்லை
மாட்டு வண்டி பேருக்குமில்லை
ஆட்டோ ரிக்சா அறவேயில்லை
ஏசி இல்லாப் பேருந்தே இல்லை
ஓசிப் பயணம் இல்லவே இல்லை
எப்பொருளும் இங்கே விளைந்திடவில்லை
எதற்கும் இங்கே பஞ்சமேயில்லை
பிச்சைக்காரர் தொல்லையே இல்லை
பிக்பாக்கெட்காரன் பிரச்சினை இல்லை
அடையாளச் சீட்டின்றி நடமாட்டமில்லை
அணுகுண்டே விழுந்தாலும் உயிர்க்கழிவில்லை
ஆண்களின் ஆதிக்க வாலாட்டமில்லை
பெண்கள் உரிமைக்கு எத்தடையுமில்லை
தெருநாய்கள் தொந்தரவு இல்லை
கோமாதாக்கள் நடமாட்டம் இல்லை
ஆர்ப்பாட்டம் ஊர்வலம் நடப்பதேயில்லை
மறியல் உண்ணாநிலை ஒருபோதுமில்லை
கடையடைப்பு கண்ணீர்ப் புகை கண்டதேயில்லை
வேலை நிறுத்தம் வெட்டிப்பேச்சு நினைப்பேயில்லை
மின்கம்பி இணைப்புகள் புவிக்கு மேல் இல்லை
வரிசை ஒழுங்கை மீறுதலில்லை
வாழ்க்கைப் பயணம் கசந்திடவில்லை
படிக்காத மக்கள் எங்குமில்லை
உழைக்காது வாழ்ந்திட வழியேயில்லை
மனிதனை பிரிக்கும் பேதமில்லை
மதத்தின் ஆட்சி மகுடமில்லை
மந்திரி வந்தாலும் பாதை மூடவில்லை
அதிபர் ஆனாலும் ஆடம்பரமில்லை
சட்டத்தின் ஆட்சிக்கு தடையேயில்லை
சட்டத்தை மீறினால் மன்னிப்பேயில்லை
வாழ்க சிங்கப்பூர் - வளர்க சிங்கப்பூர்

- டாக்டர் க.அன்பழகன்

துணை இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

Read more: http://viduthalai.in/page5/75382.html#ixzz2tREIqVQg

தமிழ் ஓவியா said...


உலகெங்கும் நாறும் மோடி பித்தலாட்டம்


பாஜக பிரதமர் வேட்பாளர் என்று நாட்டை வலம் வரும் மோடியின் பேச்சை அமெரிக்க அதிபர் ஒபாமா கவனிப்பது போல் மோடியின் படத்தைப் போட்டு மோசடியில் ஈடுபட்ட வெட்கக்கேடான செயலை இலண்டன் பிபிசி தோலுரித்துக் காட்டி உள்ளது. ஏற்கெனவே இந்நாட்டில் உள்ள ஊடகங்களில் மட்டுமே வெளிவந்த தகவலாக இருந்தது. தற்போது உலகே கேலிக்குறியுடன் மோடியை நோக்கும் வண்ணம் பிபிசி ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

28 சனவரி 2011 இல் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பேச்சை கவனிக்கும் போது எடுக்கப்பட்டு வெளியான ஒபாமா படத்தை தற்போது மோடியின் பேச்சை கவனிப்பதுபோல் சித்தரித்து போலிப் படத்தை முகநூல்மூலம் வெளியிட்டு பலரும் உண்மை என நம்பி பகிர்தலும் நடந்துள்ளது. இந்த மோசடியை இலண்டன் பிபிசி நிரூபித்து உள்ளது.

இதே தகவலை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சிஆர் பாட்டீல் மோடியின் ஆதரவாளரான இவர் படத்தின் தன்மை உண்மை என நினைத்து முகநூலில் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி குறித்து என்டிடிவி, இந்தியா டுடே உள்ளிட்ட இந்திய ஊடகங் களும் வெளிச்சம்போட்டுக்காட்டி உள்ளன.

படத்தின் உண்மையும், பொய்மையும் மேலே தரப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page8/75384.html#ixzz2tREpNcpP

தமிழ் ஓவியா said...


தண்ணீர் ஒரு தகவல்

உண்ணத் தொடங்கியதுமே வயிற்றில் உணவை சீரணிக்கும் திரவம் சுரக்க ஆரம்பமாகி விடும். அத்தருணத்தில் நீர் அருந்தினால் அது சீரணத் திரவத்துடன் சேர்ந்து சீரணப் பணியைப் பாதிக்கச் செய்யும். சாப்பாட்டுக்கிடையே நீர் அருந்துவதைக் கூடுமான வரை தவிர்ப்பதே நல்லது.

Read more: http://viduthalai.in/page8/75385.html#ixzz2tRF0h4Wx

தமிழ் ஓவியா said...


மோடீயில் பாசிசம்


- குடந்தையான்

தேநீருடன் அரட்டை என்கிற முறையில் இந்தியா முழுவதும் ஆயிரம் இடங்களில் தேநீர் கடைகளின் வாயிலாக மோடி பிரச்சாரம் துவக்கினார். ஆனால், தமிழ் நாட்டில் அதற்கு எந்தவித வரவேற்பும் இல்லை என டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் குடி அரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட் பாளர்கள் ஆங்காங்கே விவாதம் செய்வதைப்போல், இங்கேயும் அது போன்ற ஒன்றை தனியார் ஏஜென்சி மூலம் பாஜகவும் மோடியும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் செய்யத் துவங்கி உள்ளனர். இதற்கு யாரிடமிருந்து பணம் வருகிறது என்ற தகவலை பாஜகவும் சொல்வதில்லை; மற்றதற்கு எல்லாம், கேள்வி கேட்கும் ஊடகங்கள், இதைப் பற்றி எந்த கேள்வியும் கேட்பதும் இல்லை.

இந்த தேநீர் அரட்டையில், மோடியிடம் காணொலி மூலம் கேள்வி கேட்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், எந்த மாதிரியான கேள்வி கேட்கப்பட வேண் டும் என்பதை, அந்த கடையில் உள்ள பாஜகவினர் தேர்வு செய்த பின்னர் தான், கேட்க முடியும்.

இது மட்டுமல்ல; ஊடக நிருபர்கள், மோடியை சங்கடப்படுத்தும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்றும், மீறி கேட்பவர்கள் உரிய வகையில் கவனிக் கப்படுவர் என்றும், அத்தகையவர்களின் பெயர் களங்கப்படுத்தப்படும் என்றும் மிரட்டப்பட்டுள் ளார்கள் என மத்திய அமைச்சர் மனீஸ் திவாரி செய்தி வெளியிட்டுள்ளார்.

அண்மையில் வெண்டி டோனிகர் எழுதிய புத்தககம் இந்துக்கள்; ஒரு மாற்று வரலாறு எனும் ஆங்கில நூல் (Wendy doniger’s the hisdus an alternative history) பென்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட் டது. அந்த நூல் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவ தாக ஆர்ப்பாட்டம் செய்து, புத்தகத்தை திரும்பப் பெற வைத்துள்ளனர்.

மோடிக்கு எதிராக கட்டுரைகளை எழுதும் கட்டுரையாளர்கள், அந்த நிறுவனங்களிலிருந்து விலக்கப்பட்டு வருகின்றனர். வித்யா சுப்ரமணியன், சித்தார்த் வரதராஜன், சகரிகா கோஸ், நிகில்வாக்லே, ஹர்தோஸ் சிங் போல் என சிறந்த செய்தியாளர்கள், சிலர் நீக்கப்பட்டுள்ளனர்; சிலர் மிரட்டப்பட் டுள்ளனர்.

தங்களது கருத்துக்கு மாறான கருத்தை கூறுபவர் களுக்கு, பதில் கருத்து சொல்லாமல், அவர்களை தாக்குவது, கொல்வது என்பது ஆர்.எஸ்.எஸ். வழிமுறை. இந்த பாசிச முறையைத் தான் மோடியின் தேநீர் அரட்டையும் செய்து வருகிறது.

Read more: http://viduthalai.in/page-2/75437.html#ixzz2tXLuHYGf

தமிழ் ஓவியா said...


மோடியின் ராஜ்ஜியத்தில் காதலர்கள் பட்டபாடு பஜ்ரங்தள வெறியர்களின் அட்டூழியம்

அகமதாபாத்,பிப்.16- பஜ்ரங்தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்(வி.எச்.பி) அமைப் பினர் கடந்த 14.2.2014 அன்று காதலர் தினத்தை கொண்டாடிய காதலர்கள் மீது அழுகிய தக்காளிகளை எறிந்தார்கள்.

குஜராத்தின் அகமதா பாத்தில் உள்ள சபர்மதி ஆற்றின் அருகே வெறியர் கள் இவ்வாறு செய்தனர். அப்போது காதலர்கள் தங் களைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஒடினர்.

அப்போது பெருமளவில் திரண்ட பஜ் ரங் தள அமைப்பினர் காத லர்களின் வாகனங்களைப் பறிக்க முயன்றனர். இந்த அட்டூழியம் குறித்து காவல் நிலையத்தில் ஏதும் புகார் செய்யப்படவில்லை. சபர் மதி ஆற்றில் நூற்றுக்கணக் கான காதலர்கள் குவிந்தி ருந்தனர். அவர்கள் காதலர் தினத்தை கொண்டாடுவதற் காக அங்கு வந்திருந்தனர்.

காதலர் தினத்தை எதிர்த்து பஜ்ரங்தளம் அமைப்பின ரும் வி.எச்.பி.யினரும் அக மதாபாத் நகரில் போராட் டம் நடத்தினர். நகர பஜ்ரங் தள தலைவரான ஜ்வாலித் மேத்தா காதலர்களைக் கடு மையாக வசை பாடினார். காதலர் தினத்தை பல மாண வர்கள் வரவேற்றனர்.

சில மாணவர்கள் மட்டும் பஜ் ரங்தள அட்டூழியத்திற்கு பயந்து அவர்களுடன் வந் திருந்தனர். இதுகுறித்து அந்த வெறி யர்கள் கூறுகையில், எங்களது போராட்டத் திற்குச் சில மாணவர்கள் ஆதரவு தந்தார்கள் என்று பெருமை பொங்க கூறிக் கொண்டனர்.

இந்த வெறியர்கள் தாக் குதல் நடத்தியபோதும் பல காதலர்கள் சபர்மதி ஆற்றில் குவிந்து தங்களது துணை யோடு பேசி மகிழ்ந்தனர். காதலர்களை தாக்கிய பஜ்ரங் தள வெறியர்களும், வி.எச். பி.யினரும் பின்னர் தங்களது வெறி அடங்காமல் காதலர் தின அட்டைகளை தாக்குதல் நடத்திய இடத்திலேயே எரித்தனர்.

காதலர்கள்மீது தாக்குதல்

அகமதாபாத் மட்டு மின்றி, ஜம்மு, அய்தராபாத் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் பஜ்ரங்தளம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரி வார அமைப்பினர் காதலர் கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.

Read more: http://viduthalai.in/page-8/75424.html#ixzz2tXNc1Ssq