Search This Blog

15.2.14

அபிஷேகம் செய்வித்தால் பலா பலன்கள் கிட்டுமா?பிப்ரவரி 4- உலகப் புற்று நோய் விழிப் புணர்வு நாள். அந்த நாளில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மாணவியர் கள் 150 பேர் செய்த ஒரு செயல் வரவேற்கத்தக்கது.

புற்று நோயால் பாதிக் கப்பட்டவர்களுக்கு கீமோ சிகிச்சை செய்யப் படும் பொழுது முடி உதிர்ந்து விடும். அப்படி முடி இழந்த பெண்கள் மத்தியில் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடக் கூடாது என்பதற் காக விக் செய்வதற்காக சென்னை கிறித்துவக் கல்லூரி மாணவிகள் 150 பேர் தங்கள் முடியைக் காணிக்கையாகக் கொடுத் துள்ளனர். திருப்பதி கோயிலுக்குச் சென்று முடி காணிக்கை கொடுப்பார்கள்; அதன் நோக்கம் அப்படி முடியைக் காணிக் கையாகக் கொடுத்தால் ஏழுமலையான் கிருபை கிடைக்கும் என்ற சுயநலமே! உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுப்பது என்பது ஒரு பழமொழியாகவே நாட் டில் உலா வருகிறது.

ஒன்றைக் கொடுத்தால் தான் அதற்குப் பதிலியாக இன்னொன் றைக் கொடுப்பார் கட வுள் என்பதைவிடக் கேவலம் வேறு எதுவாக இருக்க முடியும்? கடவுள் என்ன தரகு வியாபாரியா? பிரதோஷ காலத்தில் எந்தெந்த அபிஷேகப் பொருள்களைக் கொடுத் தால் என்னென்ன பலன்கள் கிட்டும்?

இதோ ஒரு ஜாபிதா; நல்ல எண்ணெய் - பக்தி, சுகம் நலம் தரும்; திரவியப் பொடி (கதம்பப் பொடி) - கசடுகள் நீங்கி நறுமணம் உண்டாகும்; தண்ணீர் (கங்கா) - மனத் தூய்மை; பச்சரிசி மாவு பொடி - கடன் தீரும்; குபேர சம்பத்து கிடைக்கும்.

தேன் - குரலினிமை; கற்கண்டு - ஒற்றுமை; கரும்புச் சாறு - தோஷம், பிணி நீங்கும்; சர்க்கரை - பகை, எதிரிகள் ஒழிவர்; பழ வகைகள் - வியாபார முன்னேற்றம்; பஞ்சா மிர்தம் - நீண்ட ஆயுள், உடல்பலம், வெற்றி; நெய் - சக்தி, சுகவாழ்வு; பால் - ஆயுள் விருத்தி; தயிர்- குழந்தை பாக்கியம் உடல் வலு; இளநீர் - ராஜ யோகம், நன்மக்கட் பேறு; எலுமிச்சை, நாவற்பழம், ஜாதிக்காய் - மரண பயம் நீங்கும்; விபூதி - சகல ஞானமும் கைகூடும்; சந்தனம் -குளிர்ச்சி உண் டாகும்; பன்னீர் - சரும நோய்கள் தீரும்; ஸ்வர் ணாபிஷேகம் - ஆபர ணம் அணிகலன்கள், லட்சுமி கடாட்சம் உண் டாகும்.  (தினத்தந்தி குடும்ப மலர் 2.5.2004)

- இப்படி சிவனுக்கு அபிஷேகம் செய்வித்தால் இவ்வளவு பலா பலன்கள் கிட்டும் என்று அறிவித்திருப்பது எல்லாம் மூடத்தனத்தை யும், தன்னல வெறியை யும் வெளிப்படுத்தக் கூடியதுதானே;  ஒரு பொம்மை மீது. இந்தப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்தால் இந்தப் பலன் கள் கிடைத்திடுமா?

அதே நேரத்தில், கிறித்துவக் கல்லூரி மாணவிகள் தன்னலம் பாராது புற்றுநோய் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு, முடி காணிக்கை  செய்த  பெரு நிலையை எண்ணிப் பாரீர்!

----------------- மயிலாடன் அவர்கள் 15-2-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

Read more: http://viduthalai.in/e-paper/75335.html#ixzz2tOVRs8nZ

32 comments:

தமிழ் ஓவியா said...


எதிலும் லேட் தான்

எதிலும் லேட் தான்

கேள்வி: ஜெயலலிதா பிரதமர் ஆவாரா?

டி.கே. ரெங்கராஜன் எம்.பி: மாநில முதல் அமைச் சராக இருப்பவர் பிரதமராக வர முடியும். அப்படி அவர் பிரதமராக வந்தால் மாநிலங் களில் கஷ்டத்தை உணர்ந்தி ருக்கும் காரணத்தால் அவர் சார்ந்த மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், எல்லா மாநிலங்களுக்கும் நன்மை செய்வார். ஆனால் யார் பிரதமர் என்பதை இப்போதே யாராலும் தீர்மானிக்க முடி யாது. (ஜுனியர் விகடன் 12.2.2014 பக்கம் 7)

ரொம்ப சரி.. இந்த ஞானோ தயம் சில ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தால் கால் நூற்றாண்டுக்காலம் மேற்கு வங்க முதல் அமைச்சராக இருந்த ஆளுமை மிகுந்த ஜோதிபாசு பிரதமராக வந் திருக்க முடியுமே - அந்த முடிவை எடுக்கத் தவறியது ஏன் காம்ரேட் என்று ஒரு கேள்வி நறுக்கென்று தோன் றுகிறது. எதிலும் இவர்கள் லேட்தான்!

கேடு கேடுதான்

வாசிங்டனில் ஒருவர் 87 மணி நேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து கின்னஸ் சாதனை படைத்ததாக ஒரு செய்தி.

இந்தச் செய்தியால் என்ன பயன்? இது ஒரு சாதனை என்று விளம்பரப்படுத்துவ தால் நல்லதைவிட கெட்டது தான் அதிகம் நடக்கும். லண்டனில் ஒருவன் 87 மணி நேரம் தூங்கினான். ருசியா வில் ஒருவன் 87 மணி நேரம் சாப்பிட்டுக் கொண்டே இருந் தான்; டோக்கியோவில் ஒரு வன் 87 மணி நேரம் சிரித்துக் கொண்டே இருந்தான்; சிறீ ரங்கத்தில் ஒருவன் 87 மணி நேரம் சாமி கும்பிட்டுக் கொண்டே இருந்தான் என்றே வைத்துக் கொள்வோம் அவற் றால் ஏற்படும் பலன் என்ன? படிப்பவனுக்கு நேரக்கேடு - நம்புகிறவனுக்கு அறிவுக் கேடு - கடைப்பிடிக்கிறவ னுக்கு எல்லாமே கேடுதானே!

நீடோ சாகவில்லை

அருணாசலப்பிரதேச காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் நீடோ பவித்ரா வின் மகன் நீடோ டானியா. டெல்லியில் பி.ஏ. படித்து வந்தார். கடந்த மாதம் 30ஆம் தேதி டெல்லி லஜ்பத் நகரில் தனது தோற்றத்தைக் கேலி செய்தவருடன் நடத்திய வாக்கு வாதத்தில் கொல்லப் பட்டார் என்பது எத்தகைய கொடுமை! கொல்லப்பட்ட நீடோவின் குடும்பத்தினர் பிரதமரைச் சந்தித்துத் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பரிகாரம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மனிதனுக்குப் பகுத்தறிவுச் சிந்தனை இல்லை என்றால், குரோதம், இன வெறுப்பு, துவேஷம், அடுத்தவரை சீண்டும் கீழ்க் குணம் என்னும் அருவருப் பான மிருகத்தின்மீது தான் சவாரி செய்வான். நீடோவின் தந்தையார் பிரதமரிடம் வைத்த வேண்டு கோள் நீடோவின் சிலை ஒன்றை நிறுவ வேண்டும் என்பது. அப்படி நிறுவப்படும் சிலையின் பீடத்தில் வரலாற் றுக் குறிப்பை பொறிக்க வேண்டும். அப்பொழுதாவது புதிய சிந்தனைகள் பூக்கின் றனவா என்று பார்க்கலாம். அதன் மூலம் அவன் சாக வில்லை. சகலருக்கும் பகுத் தறிவு - மனிதநேயத்தின் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டு இருப்பானே!

Read more: http://viduthalai.in/e-paper/75347.html#ixzz2tOYb7eyq

தமிழ் ஓவியா said...


என்னாகும்?


சகுனம் பார்க்கிறோமே! சாப்பிடும்போது சகுனமோ, ராகு காலமோ பார்க்கிறோமா? நீதிமன்றத்தில் ராகு காலம் பார்த்தால் என்ன ஆகும்? - (விடுதலை, 21.12.1954)

Read more: http://viduthalai.in/page-2/75325.html#ixzz2tOZ7A3rE

தமிழ் ஓவியா said...


இந்தியாவின் இறையாண்மையை இலங்கை மதிப்பதில்லை!


கச்சத்தீவு முழுக்க முழுக்க இந்தியாவுக்கே சொந்தம்

இந்தியாவின் இறையாண்மையை இலங்கை மதிப்பதில்லை!

மதிக்கக் கூடிய ஏற்பாட்டினை இந்தியா செய்ய வேண்டும் நாகர்கோவிலில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி

நாகர்கோயில் பிப்.15- தமிழக மீனவர்களை இலங் கைக் கப்பல் படை தொடர்ந்து கைதுசெய்து வருகிறது. இந்தியாவின் இறையாண்மையை இலங்கை மதிப்பதில்லை. மதிக்கக் கூடிய ஏற்பாட்டினை உரிய வகையில் இந்தியா செய்ய வேண்டும் என்றார் திரா விடர் கழகத் தலைவர்.

நாகர்கோயிலில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

14.2.2014 அன்று நாகர் கோவிலில் திராவிடர் கழ கத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட் டியளித்தார். அப்பேட்டி விவரம் வருமாறு:

பெரியார் உலகம்

தந்தை பெரியார் அவர் களுடைய பெயரில் திருச் சிக்கும் - சென்னைக்கும் இடையில் இருக்கக்கூடிய திருச்சிக்கு மிக அருகில் இருக்கக்கூடிய சிறுகனூர் என்ற ஊரில், சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பெரி யார் உலகம் என்கிற ஒரு உலகத்தைப் புதிதாக நிர்மானிக்கவும், அங்கே 95 ஆண்டு காலம் வாழ்ந்த தந்தை பெரியார் அவர் களின் நினைவாக, 95 அடி வெண்கல சிலையை நிறு வவும், (40 அடி உயரத்தில் பீடம் அமைத்தும், ஆக மொத்தம் 135 அடி) உயரத் தில் முடிவு செய்யப்பட் டுள்ளது.

தமிழ் ஓவியா said...


பெரியாருடைய சமூகப் புரட்சி எத்தகைய தாக் கத்தை உருவாக்கியது என் பதை விளக்குகின்ற வகை யில், பலதரப்பட்டவர் களுக்கும், பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்ற அளவில் ஓவியக் கண்காட்சிகளாகவும், சிற்பங்களாகவும் மற்றும் பல்வேறு வகைகளிலும், அறிவியல் மனப்பான்மை யைப் பரப்புவது, பகுத்தறி வைப் பரப்புவது போன்ற பணிகளுக்கு உள்ளார்ந்த விஞ்ஞான, அறிவியல் கண் காட்சி கேந்திரமாகவும், அதேபோல, வானவியல், மற்ற மூட நம்பிக்கைகளைத் தோலூரிக்கும் விளக்குகின்ற வகையில், பிளானட்டோரியம் போன்ற அமைப்புகளை உருவாக்குவது, எப்படி டிஸ்னி வேர்ல்டு என்று ஒரு அமைப்பு, குழந்தை களுக்குப் பொழுது போக்கு இடமாக இருக்கிறதோ, அதே போல், குழந்தை களுக்கு அறிவியல் மனப் பான்மையை உண்டாக்கக் கூடிய பூங்காக்களையும் அந்தப் பெரியார் உலகத் தில் அமைப்பது போன்ற, பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி, சுமார் 30 கோடி ரூபாய் முதற்கட்டமாக அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதால், அதற்கு மக்களுடைய பங் களிப்பு, இயக்கத் தோழர் கள், பெரியார் பற்றாளர் களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக, நாடெங்கும் நன்கொடை வசூலிக்கின்ற நேரத்தில், ஒவ்வொருவரும் தாராள மாக அவர்களுடைய பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். சற்று நேரத்திற்கு முன்பு கூட தொழிலதிபர் ஒருவர் 25 ஆயிரம் ரூபாயை அளித் தார். 25 ஆயிரம் ரூபாயும், அதற்குமேலும் அளிக்கக் கூடியவர்களுக்கு அவர் களுடைய பெயர் அங்கே இடம்பெறும் என்பதை யும் அறிவித்திருக்கிறோம். எனவே, இந்தப் பணி நாடெங்கும் நடைபெறு கிறது. வெளிநாடுகளில் இருக்கின்ற உணர்வாளர் களும், பற்றாளர்களும்கூட ஆதரவு அளித்து வருகிறார் கள். எனவே, இந்தத் திட் டம், பணி தொடங்கி விட் டது. அதற்காக ஒரு பவுன் என்பது சுமார் 25 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்து, தோழர்கள் என்னு டைய 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தஞ் சையில் நடைபெற்றபொ ழுது 1010 பவுனுக்கு மேலாக அளித்தார்கள். அதற்குப் பிறகு பல்வேறு ஊர்களி லும், பல பகுதிகளிலும் ஆங்காங்கு நிதி திரட்டி தங்கமாகவும் அளிக்கிறார்கள்.

ஆகவே, இன்று மாலை நடைபெறக்கூடிய பொதுக் கூட்டத்தில் தங்கம் வழங் கப்படவிருக்கிறது. அதற் குரிய தொகையை வழங் கப்படவிருக்கிறது. அதற் காகத்தான் நான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாகர்கோவிலுக்கு வந்து உங்களை சந்திக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வும் தமிழக அரசின் அறிவிப்பும்

அதற்கடுத்தபடியாக, குறிப்பாக சொல்ல வேண் டுமானால், இந்த இயக்கம், தந்தை பெரியாருடைய இயக்கமே சமூகநீதிக்காக இருக்கின்ற ஒரு இயக்கம்; அதற்காக போராடிக் கொண் டிருக்கின்ற ஒரு இயக்கம். அந்த சமூகநீதியில், மிக முக்கியமாக அண்மையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் தேர்வு பெற் றார்கள். குறிப்பாக இந்த மாவட்டத்தில் ஏராளமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அப்படிப் பட்ட ஆசிரியர்கள் டிஇடி என்று சொல்லக்கூடிய அந்தத் தேர்வில், மத்திய அரசாங்கத்தினுடைய கல் வித் தரத்தை நிர்ணயிக்கக் கூடிய ஒரு கல்வி அமைப்பை வைத்து, அவர்கள் மனு போடுவதற்கேகூட 60 விழுக் காடு இருக்கவேண்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ள அந்தத் தேர்வுகள் எல்லாம் மிகவும் கடினமாகவும் இருக்கக்கூடிய நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு எழுதி, ஆசிரியர் தகுதிக்கு வந்தவர்கள், பணி கிடைக்காமல் இருக்கக் கூடிய சூழ்நிலையில், மீண் டும் அவர்கள் தேர்வு எழு திய நிலையில், மிகப் பெரிய அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. காரணம் என்னவென்றால், அவர்கள் எல்லோருக்கும் மதிப்பெண் 60 விழுக்காடு என்று வைத்திருந்தார்கள். அது இடஒதுக்கீட்டிற்கு, சமூகநீதி தத்துவத்திற்கு விரோதமானதாகும்.

ஆகவே, அதனை நாங் கள், மற்ற தோழர்கள், பல்வேறு அரசியல் கட்சி கள், ஆசிரியர் அமைப்புகள் எல்லாமே சேர்ந்து, சமூக நீதியில் நம்பிக்கையுள்ள அத்தனைப் பேரும் போரா டியதின் விளைவாக, முத லில் தமிழக அரசு அதிலே பிடிவாதம் காட்டினார்கள். பிகார், ஆந்திரா இன்னும் பல மாநிலங்களில், மதிப் பெண் விழுக்காட்டினை அவரவர்கள் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு, மலை வாழ் மக்களுக்கு, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு தாராள மாகக் குறைக்கலாம். அது அந்த மாநில அரசுகளைப் பொறுத்தது என்கிற வாய்ப்பை மத்திய என்.சி.டி.இ. வழங் கியிருக்கிறது. ஆனால், தமிழக அரசு பிடிவாதமாக, இல்லை, இல்லை நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்று சொன்னார்கள்.

தமிழ் ஓவியா said...

தேர்வு பெற்றவர்களின் விழுக்காடு மிகக் குறைந்த அளவு இருந்தது; வயதான வர்கள் பலர், ஆசிரியர் களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஒரு பக்கம் இருக்கக்கூடிய நிலை; இன் னொரு பக்கம் மாணவர் களுக்கு ஆசிரியர்கள் பற் றாக்குறை நிலை; இப்படி இருந்த நிலையில், நாங்கள் போராடிக் கொண்டிருந்த நிலையில், பிறகு திடீ ரென்று முதலமைச்சர் அவர் கள், கடந்த முறை நடை பெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளில், ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 மதிப்பெண்களைக் குறைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். சமூகநீதி அடிப்படையில் தேர்ந்தெ டுக்கப்பட்டாலும், 2014 ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டாலும், 2013 ஆம் ஆண்டில் தேர்வு எழுதிய வர்களுக்கும் இது பொருந் தும் என்று சொன்னார்கள்.

தமிழக அரசுக்கு வேண்டுகோளாக வைக்கிறோம்

ஆனால், 2012, 2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வினை பல்லாயிரக் கணக்கில் எழுதியருக்கிறார் கள். இந்த ஒரு அறிவிப்பின் மூலமாகவே, சுமார் 13 ஆயி ரம் பேர்களுக்கு மேலாக புது வாழ்வு கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார் கள். எனவே, அவர்களுக் கும் பொருந்தும் என்று ஆக்கவேண்டும் என்று தமி ழக அரசுக்கு உங்கள் மூல மாக வேண்டுகோளாக வைக் கிறோம்.

சமூகநீதிக் கண்ணோட் டத்தில் ஆசிரியர்களுக்கு சமூகநீதி வழங்கவேண்டும். அதேபோல, மற்ற மாவட் டங்களில் தாழ்த்தப்பட்ட வர்கள், பிற்படுத்தப்பட்ட வர்கள் என்று சொல்லப்படு பவர்களில் வித்தியாசம் இருக் கிறது. 5 மதிப்பெண்களைக் குறைத்திருக்கிறோம் என்று சொல்வது முழு சமூகநீதி ஆகாது. ஆகவே, அதனை குறைக்கவேண்டும் என்ப தையும் நாங்கள் தொடர்ந்து முன்னிறுத்தி செல்வோம். முதற்கட்டமாக, தமிழக அரசுக்கு, குறிப்பாக முதல மைச்சருக்கு நாங்கள் வேண் டுகோளாக வைக்கிறோம். அவர்கள் செவிசாய்ப்பார் கள் என்று நாங்கள் நம்புகி றோம். இல்லையானால், இதற்காக பிரச்சாரம், போராட் டம், கிளர்ச்சிகள் அறவழி யில் நடத்தவேண்டிய அவ சியம், நெருக்கடி திராவிடர் கழகத்திற்கும், எங்களோடு ஒத்துவரக்கூடிய, ஏற்கெ னவே இதற்காகப் போரா டிய அமைப்புகளை ஒன்றி ணைத்து நடத்துவோம்.

இது வெறும் ஆசிரியர் கள் பிரச்சினை மட்டுமல்ல; மனிதாபிமானப் பிரச்சினை யாகும்.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணி நியமனம்

அதேபோல், சமூகநீதி கண்ணோட்டத்தோடு இன் னொன்றையும் பார்க்கின்ற பொழுது, புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை சூப் பர் ஸ்பெஷாலிட்டி மருத்து வமனை என்று அறிவித்தார் கள். அதில் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடே கிடையாது; ஓய்வு பெற்ற வர்கள் மட்டுமே வரலாம் என்று சொல்கிறார்கள். அனு பவம் பெற்றவர்களை வேண் டுமானால், அங்கொன்றும், இங்கொன்றுமாக பணி நியமனம் செய்யலாம். ஆனால், இட ஒதுக்கீடே கிடையாது என்றால், அதற் காக திராவிடர் கழகம், திரா விட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை இன்னும் ஒத்த கட்சிகள், அமைப்புகள் எல் லாம் சேர்ந்து, போராட்டம் மற்றவைகள் எல்லாம் நடத் திய பிற்பாடு, திடீரென்று ஆசிரியர் தகுதித் தேர்வு அறி விப்பு போலவே, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை பணி நியமனத்திலும் இட ஒதுக்கீடு பின்பற்றப் பட்டிருக்கிறது; இட ஒதுக் கீடு பொருந்தும் என்று அர சாங்கமும், முதலமைச்சரும் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பு வர வேற்கத்தக்கது என்று சொன் னாலும்கூட, அந்த இட ஒதுக் கீட்டினை முதலிலேயே அறிவித்திருந்தால், இன்னும் பல பேருக்குப் புதிதாக வாய்ப்புக் கிடைத்திருக் குமே. இன்றைய இளைஞர் கள் நிறைய படித்திருக்கிறார் கள். சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லக்கூடிய மருத் துவத் துறையில், நல்ல அள விற்கு ஒடுக்கப்பட்டவர்கள் இன்றைக்கு முன்னேறி இருக் கிறார்கள். ஆகவே, பிற மாநி லத்தவர்களைவிட, இந்த மாநிலத்தவர்களே மனு போட்டிருக்க வாய்ப்பு ஏற் பட்டிருக்கும். பழைய அறிவிப்பு வந்துவிடக்கூடாது!

தமிழ் ஓவியா said...


நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தஞ் சாவூர் மற்றும் சில ஊர்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத் துவமனை உருவாக்கப்ப டும் என்று சொல்லியிருக் கிறார்கள். எனவே, அங்கும் இட ஒதுக்கீடு இல்லை என் கிற பழைய அறிவிப்பு வந்து விடக்கூடாது. ஏனென்றால், இது முதலமைச்சருக்குத் தெரிந்து வருகிறதா? தெரி யாமல் வருகிறதா? என்று தெரியவில்லை.

எப்படியிருந்தாலும், இதனைப் பொறுத்தவரை யில், இட ஒதுக்கீடு 69 விழுக் காட்டினை நடை முறைப் படுத்தியது இந்த அரசு தான். அதற்காகப் பாராட்டு விழா நடத்தியவர்கள் நாங் கள். 69 விழுக்காட்டினை வற்புறுத்தி, சட்டத்தை வடித்துக் கொடுத்தவர்கள் நாங்கள் என்பது பல பேருக்குத் தெரியும்.

இந்த நிலையில், 69 விழுக்காடு என்பது, எல்லா பணிகளிலும் கட்டாயமா கப் பின்பற்றப்படவேண் டும் என்பது சட்ட ரீதியான ஆணையாகும். அதனைப் புறக்கணிக்க முடியாது.

மக்கள் நலப் பணியாளர்கள்

மூன்றாவது, சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இந்த ஆட்சி செய்யவேண்டிய பணி யில், பல்லாயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்கள்; உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றத் தீர்ப்புகள் எல்லாம் மக்கள் நலப் பணியாளர்க ளுக்குச் சாதகமாகவே பணி யினைக் கொடுக்கவேண் டும் என்று சொல்லியிருக் கின்றன.

உச்சநீதிமன்றம் தெளி வாகவே சொல்லியிருக்கிறது; மீண்டும் நீங்கள் உயர்நீதி மன்றத்திற்குச் சென்று, இதற் கான பரிகாரத்தினைத் தேடுங் கள் என்று சொல்லியிருக் கிறது. இன்னும் இதுவரை யில், அதனை தமிழக அரசு செய்யாமல் இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அவர்களுக் குப் பணி வழங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் அவதிப்படுகிறார் கள் என்கிற ஒரே ஒரு கார ணத்தைத்தான் யூகமாகச் சொல்லமுடியுமே தவிர, வேறு நியாயமான காரணம் இல்லை.

மக்கள் நலப் பணியாளர் களில் பெரும்பாலானோர் வயதானவர்கள்; ஊதியமோ மிகக் குறைவானதுதான். கருணையுள்ள முதலமைச் சர் என்று சொல்கிறபொ ழுது, கருணை காட்ட ஏன் அவர்கள் தயங்குகிறார்கள் - ஏன் தவறுகிறார்கள் என்று தெரியவில்லை.

ஆகவே, மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் உடனடியாக, அவர்களில் ஏறத்தாழ 100 பேர்களுக்கு மேல் இறந்திருக்கிறார்கள் என்பது மிகக் கொடுமை யான செய்தியாகும். சாலைப் பணியாளர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. மீண் டும் இப்பொழுது மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே, அந்த மக்கள் நலப் பணியாளர்களை மனித நேயம் கொண்டும், சமூக நீதிக் கண்ணோட்டத்தோ டும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படவேண் டும் என்பதை வலியுறுத்துகி றோம்.

தமிழ் ஓவியா said...

மனிதநேயத்தோடு நளினியை பரோலில் அனுப்பவேண்டும்

அடுத்தபடியாக, நளினி அவர்களுடைய 90 வயது தந்தையார் உடல்நலக் குறைவாக இருக்கிறார் என்று வருகிற பொழுது, நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை சோனியா காந்தி அம்மை யார் அவர்கள் பார்த்து, ஆயுள் தண்டனையாக மாற் றினார். ஆயுள் தண்டனை பெற்று பல ஆண்டுகளாக சிறையில் இருக்கக்கூடிய வர், தன்னுடைய வயதான தந்தை உடல்நலக் குறை வாக இருக்கிறார், அவரைப் பார்க்கவேண்டும் என்று பரோல் கேட்டால், இல்லை இல்லை பாதுகாப்பு இல்லை; சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று சொல்லி பரோலை மறுக்கிறார்கள் என்றால், அது முற்றிலும் மனிதநேயத்தை, மனித உரிமைகளை மறுக்கின்ற செய்தியாகும்.

அதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால், அந்த அம்மையாரை பல பேர் வந்து சந்திப்பார்கள்; பாதுகாப்பு கொடுக்க முடி யாது என்று சொன்னால், ஒரு அரசாங்கம் இப்படி சொல்லலாமா? தூக்குத் தண்டனை கைதிகளுக்குக் கூட பரோல் கொடுக்கப் படுகிறது. காவல்துறையின் கடமையைப் பொறுத்ததை தவிர, இல்லை இல்லை, எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்பது, இதுவே காவல்துறையின ரின் பலகீனத்தை சுட்டிக் காட்டுவதுதான்; இது காவல் துறையினருக்குப் பெருமை தரக்கூடிய செய்தியல்ல.
ஆகவே, மனிதநேயத் தோடு நளினி அவர்களை பரோலில் அனுப்பவேண் டும் என்று கேட்டுக்கொள்கி றோம்.

அலை இல்லை; அலைச்சல் இருக்கிறது

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அலை ஒன்றும் இல்லை. அப்படி அலை இருந்திருந்தால், டில்லியில் அந்த அலை அடித்திருக்க வேண்டும்; இப்பொழுது டில்லியில் வேறு அலை அடித் துக் கொண்டிருக்கிறது.

அலைகிறார் எங்கே பார்த்தாலும்; காலையில் திருச்சியில் இருக்கிறார்; மாலையில் வடகிழக்கில் இருக்கிறார்; அடுத்து வண்ட லூரில் இருக்கிறார்; அதற் கடுத்து டில்லிக்குப் போகி றார்; அலைகிறார் என்ப தைத்தான் சில பேர் அலை அலை என்று சொல்கிறார் கள். மோடி அலைகிறார்; ஆகவே, அதில் பாதி உண்மை. அலை வீசுகிறது என்பதைவிட, அலைகிறார் என்பதுதான் உண்மை. அலை இருக்கிறது; அலைச் சல் இருப்பதால், அலை இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

தே.மு.தி.க. - தி.மு.க. கூட்டணிபற்றி...

இதனை தி.மு.க. முடிவு செய்யவேண்டிய விஷயம். இதற்குப் பதில் நாங்கள் சொல்ல முடியாது. இதைப் பற்றி நேற்று கலைஞரிடம் செய்தியாளர்கள் கேட்டார் கள். அதற்குப் பதிலை சொல்லியிருக்கிறார்; அறி விக்கவேண்டிய நேரத்தில் அறிவிப்போம் என்று சொல் லியிருக்கிறார். திராவிடர் கழகம் அரசியல் கட்சியல்ல; நாங்கள் தேர்தல் கூட்டணி நண்பர்கள் அல்ல; எங்களுக் கும், தி.மு.க.விற்கும் உள் ளது உறவு - தோழமையே தவிர, கூட்டணி அல்ல.

தமிழக நிதிநிலை அறிக்கைபற்றி...

கடன் 58 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் சென்றிருக் கிறது என்று சொல்கிறார் கள்; அந்த நிதிநிலை அறிக் கையில் மத்திய அரசினை குறை சொல்லியிருக்கிறார் கள். வரியில்லை, வரியில்லை என்பது எதனைக் காட்டு கிறது என்றால், தேர்தல் வரப் போகிறது என்பதைத் தான்.

தமிழர்கள் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து...

முதலில் மத்திய அரசு ஒரு திடசித்தத்தோடு இலங்கை அரசிற்கு நிபந் தனை போட்டு வலியுறுத் தக்கூடிய ஒரு உணர்வு இருக்கவேண்டும். இது வரையில் அந்த உணர்வு இல்லை. இனிமேல் வந் தால் பரவாயில்லை. டெசோ போன்ற அமைப்புகள், மற்ற அமைப்புகள், தனித் தனி அமைப்புகள், தமிழக அரசின் குரல் ஆகியவை வந்த பிற்பாடு, இப்பொ ழுது கொஞ்சம் அசைந் ததுபோல் தெரிகிறது. இன்று காலையில் வந்த செய்தியில், மனித உரிமை பிரச்சினை யில், இலங்கை அரசு சரியாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

மீனவர்கள் பிரச்சி னையை பொறுத்தவரை யில், அன்றாடம் இந்தத் தொல்லைகள் இருக்கின் றன. ஒரு பக்கம் இந்திய அரசை மதித்து, அவர்கள் கொடுக்கின்ற வாக்குறுதி களைக் காப்பாற்றுகின்ற மாதிரி தெரியவில்லை. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடை பெறுகிறது; மறுபக்கம் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் நிலை தொடரு கிறது.

ஆகவே, இதனை மிகப் பெரிய அளவிற்கு, இந்திய அரசினுடைய இறையாண் மையைப் பொறுத்தது என்ற அளவிற்கு வரவேண்டும். அதற்கு திட்டவட்டமான ஏற்பாட்டினை செய்ய வேண்டும். கச்சத்தீவு மீண் டும் இந்தியா பெறவேண் டும். எங்களுக்கு உரிமை இல்லை என்று இந்திய அரசு சொல்வது பொறுப்பற்ற பேச்சாகும். கச்சத்தீவு முழுக்க முழுக்க ராமநாத புரம் அரசருக்குச் சொந்த மானது என்பது வரலாற்று உண்மையாகும். வழக்கு கள் உச்சநீதிமன்றத்தில் இருக் கின்றன. உயர்நீதிமன்றத்தில் நாங்கள் போட்ட வழக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக் கிறது.

ஆகவே, கச்சத்தீவை திரும்பக் கொண்டு வருவது; அதன்மூலம் நம்முடைய மீனவர்கள் அங்கே சென்று இளைப்பாறுதல், வலை களை உலர்த்துவதற்கு ஏது வாக இருக்கும்.

இந்தியாவின் இறை யாண்மையை இலங்கை மதிப்பதாகத் தெரியவில்லை

அடுத்தபடியாக, கடல் எல்லைப் பிரச்சினை என் பது மீனவர்களைப் பொறுத்த வரையில், நமக்கு மட்டு மல்ல; குஜராத்தில் உள்ள வர்கள் வருகிறார்கள்; இது சாதாரணமாக நடைபெறக் கூடியதுதான். இன்னுங் கேட்டால், ராஜபக்சே ஆட் சிக்கு முன்பு, இலங்கையில் எத்தனையோ ஆட்சியா ளர்கள் இருந்தார்கள்; அப் பொழுதெல்லாம் இந்த எல்லைப் பிரச்சினை ஏற் படவில்லை. சிங்கள வெறித் தனமாக இருக்கக்கூடிய ராஜ பக்சே ஆட்சி உச்சகட்டமாக நடைபெறுகின்ற இந்தக் காலகட்டத்தில்தான் எல்லைப் பிரச்சினை ஏற்படு கிறது.

எனவே, இந்த எல்லைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படவேண்டுமானால், இந்திய அரசினுடைய கப் பற்படையில், இதற்காக தனி பிரிவை ஏற்படுத்தி, நம்முடைய மீனவர்கள் தொல்லையில்லாமல், மீன் பிடி தொழிலை நடத்தக் கூடிய வாய்ப்பினை ஏற் படுத்தித் தரவேண்டும். தரையில் கோடு போடுவது போன்றதல்ல; கடலில் வேலி போடவும் முடியாது. காற்றடித்தால், நம் மீன வர்கள் அந்தப் பக்கத்திற்கு செல்லக்கூடிய நிலை சாதா ரணமாக ஏற்படும்; அதற் காக எங்கள் எல்லையில் வந்துவிட்டார்கள் என்று அவர்களைக் கைது செய்வது என்பது ஒரு தவறான நிலை.

இந்தியாவின் இறை யாண்மையை இலங்கை மதிப்பதாகத் தெரியவில்லை; மதிக்கக்கூடிய ஏற்பாட் டினை இந்திய அரசு செய்ய வேண்டும்; இது காலத்தின் கட்டாயமாகும்.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் கூறி யிருப்பது பற்றி...

இதைவிட பெரிய நகைச் சுவை - இந்த ஆண்டின் நகைச்சுவை வேறில்லை. இது எல்லோருக்கும் தெரி யும். தொலைக்காட்சிகளில் வரும் அன்றாட செய்திகள் அதற்கு சாட்சியாகும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/75344.html#ixzz2tOZVqXMV

தமிழ் ஓவியா said...


48 நாள் மண்டல ஆட்சி


ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடிய வில்லை என்ற காரணத்தைச் சொல்லி டில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகி உள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால். ஊழல் என்கிற ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அன்னா ஹசாரே துவக்கிய போராட்டத்தின் பயனை, கெஜ்ரிவால் அறுவடை செய்தார்.

ஆம் ஆத்மி கட்சியை துவக்கி, டில்லி ஆட்சியைக் கைப்பற்றினார். பதவி ஏற்ற நாள் முதல், கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் அரசாங் கத்தை நிர்வகிக்கும் முறை கடும் விமர்சனத்துக்குள்ளானது. டில்லி காவல்துறை அதிகாரிகளை நீக்கம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்றம் முன்பாக முதல்வர் கெஜ்ரிவால் மூன்று நாட்கள் மறியல் நடத்தி, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக் காரணமானார்.

கட்சி நடத்த வேண்டிய போராட்டத்தை, மாநிலத் தின் முதல்வர் என்ற தகுதியில் நடத் தினார். கட்சியின் சட்ட மன்ற உறுப் பினர் வினோத் பின்னி, தனக்கு அமைச்சர் பதவி தரவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தினார்; அரவிந்த் கெஜ்ரிவால்மீது விமர்சனம் செய்து, இறுதியாக கட்சி நடவடிக்கைக்கு ஆளானார்.

சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்த பெண் கள் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடு பட்டு, கடும் கண்டனத்திற்கு உள்ளா னார். மக்கள் தம் குறைகளை நேரில் அளித்திடலாம் எனக்கூறியதும், கட்டுக் கடங்காத கூட்டம் கூடியதால், அந்த மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியை முற்றாக ரத்து செய்தார் கெஜ்ரிவால். இந்த செயல் அர்விந்த் கெஜ்ரிவாலின் நிர்வாகத் திறமையின்மையை காட்டி யது. இறுதியாக, லோக்பால் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவேன் என சபதம் செய்தார்.

மத்திய அரசின் ஒப்புதலோடு தான் டில்லி சட்ட மன்றத்தில் லோக்பால் சட்டத்தை அறி முகப்படுத்த முடியும் என ஆளுநர், அரசியல் சட்ட விதிமுறைகளைக் கூறியும், அதனை சட்ட ரீதியாக சந்திக் காமல், சட்டமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்த முயன்று, அதில் தோல்வி கண்டவுடன், முதல்வர் பதவியிலிருந்து விலகி உள்ளார்.

அரசாங்கம் நடத்துவதற்கு, ஊழல் எதிர்ப்பு எனும் ஒற்றை முழக்கம் மட்டுமே போதாது என்பதை 48 நாள்கள் மண்டல ஆட்சி நடத்திய கெஜ்ரிவாலும் அவரது கட்சியினரும் இப்போதாவது உணர்ந்தால் அவர் களுக்கும், நாட்டிற்கும் நல்லது.

- குடந்தையான்

Read more: http://viduthalai.in/page-2/75334.html#ixzz2tOaBnqHI

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகத்திற்கு இதுவரை 17 சவரன் அளித்துச் சாதனை!


தமிழக இளைஞர்கள் வரலாற்றை மறந்து விட்டு, மதவாதியின் பின் போகக் கூடாது!

நாகர்கோவிலில் தமிழர் தலைவர் கருத்துரை

நாகர்கோவில் பிப்.15- தமிழக இளைஞர்கள் வரலாற்றை மறந்து விட்டு, மதவாதிகள் பின் போகக் கூடாது என்ற கருத்தை முன் வைத்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நாகர்கோவிலில் (14.2.2014) நேற்று நடை பெற்ற விழாவில் பெரியார் உலகிற்கு ஏற் கெனவே 12 சவரனுக்கான தொகையை வழங்கிய தோடல்லாமல், நேற்றைய விழாவில் மேலும் 5 சவரனுக் கான தொகையாக ரூ.1,25,000 நிதியை கழகத் தலைவரிடம் வழங்கிச் சாதனை படைத்தனர். அவ்விழாவில் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பேருருவ சிலைக்கு நன்கொடை வழங் கும் விழா தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 81ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 14.2.2014 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் எழுச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்க மாக சுடர்வேந்தனின் மந்திர மா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு செயல்களை செய்து காட்டி இது மந்திரமல்ல! தந்திரமே என்று விளக்கினார். தி.க. மாநில பொதுக்குழு உறுப் பினர் ம.தயாளன் வர வேற்று உரையாற்றினார். தி.க. மாவட்ட தலைவர் ப.முருகபதி தலைமை தாங்கி உரையாற்றினார். தி.க. மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் தி.க மாவட்ட முன்னாள் செய லாளர் சி. கிருஷ்ணேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தி.க. நெல்லை மண்டல தலைவர் பொறியாளர் சி. மனோகரன் தொடக்கவுரையாற்றினார்.

திராவிடர் கழக செயல வைத் தலைவர் சு. அறிவுக் கரசு, தி.க. தலைமைச் செயற் குழு உறுப்பினர்கள் ப. சங்கர நாராயணன், தே. எடிசன் ராஜா, தி.க. பொதுச் செய லாளர் உரத்தநாடு இரா. குண சேகரன், தி.க. தென் மண்டல அமைப்புச் செயலாளர் வே. செல்வம், தி.க. பொதுக் குழு உறுப்பினர் ம.ப. நூர் தீன், தி.க. மண்டல மகளிரணி செயலாளர் ச.ச.மணி மேகலை, தி.க. மகளிரணி அமைப்பாளர் த. சிறீவள்ளி, தி.க. நகர அமைப்பாளர் ச. நல்லபெருமாள் ஆகியோர் கருத்துரை யாற்றினர்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். தந்தை பெரியார் அவர்கள் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்திய ஊர் கன்னியாகுமரி சுசீந்திரம், இன்ற தீண்டாமை ஒழிந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் அரசுப் பணிக்கு வந்துள்ளார்கள் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார் . இன்றைய இளைஞர்கள் பழைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். மோடிதான் அலைகிறாரே தவிர மோடி அலை வீசவில்லை 18 வயது இளைஞர்கள் வரலாற்றை மறந்து விடாமல் மத வாதிகள் பின்பு போய் விடக் கூடாது. வரலாறு எழுதும் போது கங்கையில் தொடங்கு கிறது என்று எழுதாமல் காவிரியில் தோன்றுகிறது என்றுதான் எழுத வேண்டும்.


தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழனின் நீண்ட கால கனவுத் திட்டம். அதிமுக தேர்தல் அறிக்கை களில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்று வோம் என்று கூறிவிட்டு! இப்போது அங்கு ராமன் பாலம் உள்ளது அதனால் அந்தத் திட்டத்திற்கு முட்டுக் கடைபோடுவது எந்த வகையில் நியாயம்? தென் மாவட்டங்களில் தொழில் வளம் பெருக வேண்டும் என்றால் சேது சமுத்திரத் திட்டம் நிறை வேற்றப்பட வேண்டும் என்றும் இன் னும் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறி விரிவாக எழுச்சி யுடன் தமிழர் தலை வர் அவர்கள் சிறப்புரை யாற்றினார்கள்.

பெரியார் உலகத்திற்கு

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் முதல் தவணையாக 12 பவுன் வழங்கிய நிலையில் இரண் டாம் தவணையாக 5 பவுனுக் கான தொகை ரூ.1,25,000 -அய் பெரியார் உலகத்திற்கு கழக தோழர்கள் பலத்த கரவொலி களுக்கு இடையே தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

தி.க. மாவட்ட அமைப் பாளர் ஞா. பிரான்சிஸ், பெரியார் வீர விளையாட்டுக் கழக தலைவர் பேரா பி. சுப்பிர மணியம், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பொறி யாளர் ஜே.ஆர். ஜூலி யஸ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவ தாணு, செயலாளர் நா. இரத் தினசாமி, தி.க. நெல்லை மண்டல இளைஞரணி செய லாளர் த.வீரன், தி.க. பொதுக் குழு உறுப்பினர் மா.மணி, தி.க. இளைஞரணி முன்னாள் தலைவர் ச.ச. தமிழரசன், தி.க.தொழிலாள ரணி செய லாளர் ச.ச. கருணாநிதி, தி.க. மாவட்ட இளைஞரணி செய லாளர் த.சுரேஷ், அமைப் பாளர் அய். மணிகண்டன், துணைச் செயலாளர் தா. பச்சைமால், தி.க. நகர துணைத் தலைவர் கவிஞர் எச். செயக்முகமது, தி.க. திருவட்டார் ஒன்றிய செய லாளர் பா. முருகேசன், தி.க. நகர இ. அணி அமைப்பாளர் மு. சேகர், தி.க. குளச்சல் நகர தலைவர் தோழர் எஸ்.எம். சாகுல் அமீது, தி.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இல. செந்தமிழ் விடுதலை வாசகர் வட்ட துணைத் தலைவர் எஸ்.கே. அகமது, அமைப்பாளர் இரா. லிங்கே சன், தி.க அகஸ்தீஸ்வரம், ஒன்றிய தலைவர் தியாகி சி. குமாரசாமி, தி.க. நகர செயலாளர் செ. ஆனந்தன், பெரியார் வீர விளையாட்டு கழக அமைப்பாளர் ஆ. சிவக்குமார், தி.க. குருந்தன் கோடு ஒன்றிய தலைவர் பெ. சுப்பிரமணியம் ப.க. ஒன்றிய அமைப்பாளர் செ. செல்வன், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய பொறுப்பாளர் செந் நிலவன், திராவிடர் கழக தோழியர்கள் இந்திரா அமலா, சியாமளா, சத்யா ராணி, திராவிடர் கழக தோழர்கள் சி. இளங்கோ, இரா. ஸ்டாலின், பாபு, ப.வேலாயுதபெருமாள, கோபாலகிருஷ்ணன், கணேசன் மண்டல ஒருங்கிணைப்பாளர் த. பன்னீர்செல்வம், இளவ ரசன், வெற்றி, ஒளிப்படக் கலைஞர் சிவக்குமார், புத்தக நிலைய மேலாளர் பூமி நாதன், பி.லார்சன் பின்றோ, பாரூக், பா.பொன்னுராசன் மற்றும் ஏராளமானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண் டனர். தி.க. மாவட்ட துணைச் செயலாளர் சோ. பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.

சந்தாக்கள் அளிப்பு

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 10ஆவது முறையாக முதல் தவணையாக 30 உண்மை சந்தாவிற்கான தொகை ரூ.10,500-அய் தி.க. குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங் கினர்.

Read more: http://viduthalai.in/page-3/75355.html#ixzz2tOaPdjzW

தமிழ் ஓவியா said...


லோகோபகாரியின் மயக்கம்


31-05-1928 தேதி லோகோபகாரியின் தலையங்கத்தில் மணவயது மசோதாவைப் பற்றி எழுதுகையில் குழந்தை களுக்கு மணம் செய்து வைக்கும் முறையைக் கண்டித்து சில ஆண்டுகளாகவே நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டிருக் கின்றது. இது நன்று, ஆனால் இது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு அறிஞர்களின் பிரச்சாரத்தால் நல்லறிவு தோன்றுமாறு செய்தலே நல்வழியாகும். தற்காலத்தில் இதுமுடியாத காரியமாகத் தோன்றுகிறது. ஆயினும் இவ்விஷயத்தில் அரசாங்கத்தார் சட்டம் போடுதல் பொருத்தமுடைய செயலல்லவென்று நமக்குத் தோன்றுகிறது, என்று எழுதி விடு கின்றது. இப்படி எழுதி இருப்பதானது சீர்திருத்தக்காரருக்குத் தலையையும் அதன் விரோதிகளான பார்ப்பனர்களுக்கு வாலையும் காட்டுவது போல் இருக்கின்றது.

குடிகளால் சரி செய்து கொள்ள முடியவில்லை என்று தன்னாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டதும் உண்மையிலேயே மனித சமூகத்துக்குக் கேடு உண்டாக்குவதுமான விஷயம் சர்க்காரால் சரி செய்யப்பட நேருவதில் லோகோபாகாரிக்குக்கு உள்ள கஷ்டம் இன்னது என்பது நமக்கு விளங்கவில்லை.

கடைசியாக இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது வயது நிர்ணயம் முதலிய விஷயங்களில் பலவித தொல்லை விளையும் என்று எழுதுகின்றது. மனிதன் தன் சொத்தை அடையும் விஷயத்திலும், உத்தியோகம் பெறும் விஷயத் திலும் மற்றும் அனேக விஷயத்திலும் வயது நிர்ணயம் குறிக்கப் பட்டிருக்கின்றது. இவைகளில் என்ன தொல்லைகள் விளைந்து மக்களைக் கெடுத்துவிட்டது என்பது விளங்க வில்லை. வேறு மதஸ்தர்கள் என்பவர்களுக் காகிலும் வயது கண்டு பிடிக்கும் விஷயம் சற்று கஷ்டமாக இருக்கலாம்.

இந்துக்கள் என்போர்களுக்கு அதிலும் பார்ப்பனர்கள் என்போர்க்கு வயது கண்டுபிடிப்பதில் தொல்லை விளைய காரணமில்லை என்றே சொல்வோம். ஏனெனில், அவர்கள் ஜோசியம், ஜாதகம் என்னும் ஒரு வித மூடநம்பிக்கை யுள்ளவர்களானதால் கண்டிப்பாய்க் கணக்கு வைத்திருக்க முடியும். அதோடு சர்க்கார் பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்து வருவதால் ஜாதகத்தைப் புரட்டி விடுவார்கள் என்கின்ற பயமும் வேண்டியதில்லை.

எனவே இனியாவது லோகோபகாரிச் சீர்திருத்த விஷயங்களில் இம்மாதிரி வழவழப்பையும், இரண்டு பேருக்கும் நல்லவராகப் பார்க்கும் தன்மையையும் விட்டுத் தைரியமாய் ஒரு வழியில் நின்று மக்களுக்கு உதவ வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 10.06.1928

Read more: http://viduthalai.in/page-7/75361.html#ixzz2tOaxFC3l

தமிழ் ஓவியா said...


அருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை


அருப்புக்கோட்டையில் சுகாதார வாரக் கொண் டாட்டம் நடைபெற ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ஒரு பார்ப்பனர் தன்னைத்தானே அக்கிராசனாதிபதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆசனத்திலமர்ந்து நடவடிக்கை ஆரம்பிப் பதற்காக முதலில் ஒரு பார்ப்பனரல்லாத வாலிபர் பாட ஆரம்பித்தவுடன் அக்கிராசனத்திலிருந்த பார்ப்பனர் கோபம் கொண்டு முதல் முதல் சூத்திரன் பாடக் கூடாது; பிரா மணன் தான் பாட வேண்டும் என்று சொல்ல, உடனே அங்கி ருந்த கூட்டம் சூத்திரன் என்று சொன்னதற்காக அக்கிரா சனரை மன்னிப்புக் கேட்கும்படி கேட்கவே, அக்கிராசனர் மன்னிப்பு கேட்காததால் கூட்டத்தார் அத்தனை பேரும் சுய மரியாதைக்கு ஜே! ராமசாமி நாயக்கருக்கு ஜே! என்று சொல்லிக் கொண்டு கலைந்து போய்விட்டார்கள். பிறகு எவ்வளவு தூரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டும் கூட்டம் கூடவே இல்லை. இதனால் ஆத்திரம் கொண்ட ஒரு பார்ப்பன சுகாதார இன்ஸ்பெக்டர் பார்ப்பன போலீசின் உதவி பிடித்து, பல பார்ப்பனரல்லாத வாலிபர்களின் மேல் கேஸ் தொடுத்து, அதாவது அரசாங்க உத்தியோகஸ்தரின் வேலையை செய்ய வொட்டாமல் தடுத்ததாகவும் மற்றும் சிலகுற்றங்களும் சுமத்தி அரஸ்டு செய்து ஜாமினில் விடவும் மறுத்து சிறைச் சாலையில் இரவெல்லாம் அடைத்து வைத்து கேஸ் தொடர்ந்தார்கள். கேசுக்கு மதுரையிலிருந்து வக்கீல்கள் பீசில்லாமல் போய் பல வாய்தாக்கள் ஆஜராகி கேஸ் நடத்தினார்கள். கடைசியில் குற்றவாளிகள் இன்னார் என்று சரிவர அடையாளம் காட்டவே முடியாமல் போய் விட்டது. அப்படி இருந்தும் அதிகாரிகளின் மனப்பான்மையை அறிந்த மேற்படி வாலிபர்கள் கேஸை வேறு கோர்ட்டுக்கு மாற்ற ஆசைப்பட்டார்கள். கடைசியாய்க் கேசு தள்ளுபடியாகி விட்டதாக அருப்புக்கோட்டையிலிருந்து தந்தி வந்திருக்கின்றது.

அனாவசியமாய் ஒரு இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்ததற்காக போலீசு அதிகாரிகள் மீது நஷ்டத்திற்கு விவகாரம் தொடர வேண்டும் என்கின்ற எண்ணம் அவ்வூராருக்கு இருப்பதாகத் தெரிய வருகின்றது. அதற்காகப் பலர் பொருளுதவி செய்ய முன் வருவதாகவும் தெரிய வருகின்றது. என்றாலும் விடுதலை அடைந்த விஷயத்திற்காக வாலிபர்கள் பதினொரு வரையும் பாராட்டுவதுடன் இந்த கேசுக்குப் பொருள் கருதாது தங்கள் கஷ்ட நஷ்டத்தையும் கருதாது வந்து உதவி செய்த மதுரை வக்கீல்களுக்கு நமது நன்றியறிதலைத் தெரிவித்து கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 10.06.1928

Read more: http://viduthalai.in/page-7/75362.html#ixzz2tObCY3eK

தமிழ் ஓவியா said...


மகிழ்ச்சியில் திளைத்தேன்!சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு முன் கடவுளை மற மனிதனை நினை கடவுள் இல்லை என்ற பகுத்தறிவு வாசகங்களுடன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பெரியார்'.பக்தியின் பெயரால் ஏமாற வருபவர்களுக்கு புத்தி தெளியவைக்க பெரியாரை அமரவைத்த தி.க.வினருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..... (கடந்த வாரம் சிறீரங்கம் தொகுதிக்கு சென்ற போது துணிச்சல் பெரியாரை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தேன்.)

- வினிஷர்பனா

Read more: http://viduthalai.in/page2/75370.html#ixzz2tRBiTdMF

தமிழ் ஓவியா said...


எது தமிழ்த் தேசியம்?சாதியை வளர்க்கும் தேசிய மெதுவும்
தமிழ்த் தேசிய மில்லை - சங்கத்
தமிழ்த் தேசிய மில்லை - இந்து

சாதியைக் காக்கும் எந்தத் தேசியமும்
செந்தமிழ்த் தேசியமில்லை - அதைத்
தமிழர் நேசிப்பது மில்லை!

பாக்கித்தான் வங்கமுள்ளடக்கிய இந்தியா
பழைய தமிழ்மொழியின் வீடு - அதைத்
திராவிட மென்றது வேத ஏடு - அன்றைய

திராவிட மென்ற தனித் தமிழ்ப் பாண்பாட்டை
திரும்பவும் மலரச் செய்வோமே - அதைத் தமிழ்த்
தேசிய மெனவும் சொல்வோமே!

ஆரியர்க்கு முந்திய, ஆரியக் கலப்பற்ற, அதனினு முயர்ந்த நாகரிகம் - அதுவே
உலகத்தின் முதல் நாகரிகம்- என்று

வரலாற்றாளர்கள் வாயாரப் புகழ்ந்த
சிறப்பினையுடைய நாகரிகம் சிந்து வெளித்
தமிழர்கள் வளர்த்த நாகரிகம்!

தமிழை வடக்கே அழித்தபின் ஆரியர்
தென்னகம் நோக்கி வந்தார் - அவர்க்கு
மன்னர்கள் புகலிடம் தந்தார் - இங்கே

தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம்
தமிழில் கிளைத்திடச் செய்தார் - தமிழர்மேல்
சாதிமத நஞ்சையும் பெய்தார்!

சாதிமதங்கள் தமிழர்கள் நம்மை
தனித்தனிக் குழுவாய் பிளக்கும் - தினமும்
சண்டை சச்சரவை வளர்க்கும் - அத்தீய

சாதி மதங்களைத் தேசியமெனில் அவை
தமிழரை அடிமையாக்கும் - தமிழ்
நாட்டையும் அழித்துத் தீர்க்கும்

திருத்தணி - குமரி சிறுநிலப் பகுதிக்குள்
தமிழகம் சுருங்கிய தெவரால்? - சாதி
மதங்களை வளர்த்தவர் தவறால்! - அதைத்

தேசிய மென்று கூறுவோர் இன்று
தமிழர்கள் ஒற்றுமை அழிப்போர் - தமிழர்
மொழியையும் பெயரையும் ஒழிப்போர்!- வீ. இரத்தினம், பெங்களூரு

Read more: http://viduthalai.in/page3/75372.html#ixzz2tRC9gGD8

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்புவோர் எத்தனை பேர்?

மக்கள் எந்த அளவுக்குக் கடவுள், மத நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது பற்றிய ஒரு கருத்துக் கணிப்பு வெளி யானது. அதில், நீங்கள் எந்த அளவு மதப் பற்றாளராக இருக் கிறீர்கள்? என்ற கேள் விக்கு, ஓரளவு பற்று கொண்டுள்ளேன் என 49 சதவிகிதம் பேரும், எனக்கு மதப் பற்று இல்லை என 14 சதவிகிதம் பேரும், அதிக பற்று கொண்டுள்ளேன் என 45 சதவிகிதம் பேரும் பதிலளித்துள்ளனர்.

வழிபாட்டிடத்திற்கு அவ்வப்போது செல்வீர்களா? என்ற கேள்விக்கு, வாரத் தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செல்வேன் என 31 சதவிகிதம் பேரும், வாரம் ஒரு முறை செல்வேன் என 38 சதவிகிதம் பேரும், மாதத்திற்கு ஒரு முறை செல்வேன் என 18 சதவிகிதம் பேரும் மாதம் ஒரு முறையாவது செல்வேன் என 9 சதவிகிதம் பேரும், இரு வாரத்திற்கு ஒரு முறை செல்வேன் என 4 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.

இன்றைய நாள்களில் இளைஞர் களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா? என்ற கேள்விக்கு, சிலருக்கு உள்ளது என 45 சதவிகிதம் பேரும், அதிக மானவர் களுக்கு உள்ளது என 34 சதவிகிதம் பேரும், மிகச் சிலருக்கே உள்ளது என 21 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
18 வயது முதல் 45 வயது வரை யுள்ள இருபாலரையும் சேர்த்து 220 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி களுக்கான பதில் இது.

- ஆதாரம்: தி இந்து, 16.9.2005

Read more: http://viduthalai.in/page5/75377.html#ixzz2tRDGiA4v

தமிழ் ஓவியா said...


கொய்யாசாப்பிடலாமே!


கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறு கின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது.

இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங் களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல் முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை,களில் மருத்துவகுணங்கள் அடங்கி யுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப் படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page5/75380.html#ixzz2tRDpQCfs

தமிழ் ஓவியா said...


புதிய பெயர் - பழைய கொடுங்கோல்

1935 வரை அகில இந்தியா என்று பேசி வந்த நான், வடநாட்டார் ஆதிக்கத்தை உணர ஆரம்பித்ததும் 1938-ல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை முக்கியக் கொள்கையாகக் கடைபிடிக்க ஆரம்பித்தேன். 1950 ஜனவரி 26ஆம் தேதிய பலம் 1947ஆகஸ்ட் 15ஆம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான், அதே பணப் பெட்டிதான்; அதே தராசுதான்; அதே படிக்கல்தான், அதே சரக்குதான். அதே பித்தலாட்டம் தான். ஆனால், விலாசம் அதாவது டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடிஅரசு ஆட்சி என்கிற புதுப்பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதிக பலத்துடனும், மேலும் அதிகப் பாதுகாப்புடனும் 26ஆம் தேதி முதற்கொண்டு நடைபெறப் போகிறது. இந்த உண்மையைத் தெளிவாக உணரும் நாம் இதை ஏன் புரட்டு என்று எடுத்துச் சொல்லக் கூடாது? உண்மையை எடுத்துச் சொல்ல நாம் ஏன் பயப்பட வேண்டும்? அக்கிரமத்தை எடுத்துச் சொல்ல நமக்கேன் அச்சம்?
- தந்தை பெரியார் விடுதலை 20.01.1950

Read more: http://viduthalai.in/page5/75381.html#ixzz2tRE6Lx6d

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூரில் இவைகள் இல்லை...


காற்றை கெடுக்கும் தூசியில்லை
நாற்றம் அடிக்கும் கூவமில்லை
புவியை அழிக்கும் புகையில்லை
பொறாமை தழைக்கும் பகையில்லை
எங்கும் எதிலும் ஈ இல்லை
இங்கும் அங்கும் குப்பையில்லை
அடிமை எண்ணம் இங்கில்லை
அடிமைப் படுத்திட வாய்ப்பில்லை
முதுமக்கள் யார்க்கும் கவலையில்லை
எத்துயர் வந்தாலும் பயமில்லை
பேருந்து வாகனத்தில் நடத்துநரில்லை
வாகனச் சத்தம் கேட்கவேயில்லை
மாட்டு வண்டி பேருக்குமில்லை
ஆட்டோ ரிக்சா அறவேயில்லை
ஏசி இல்லாப் பேருந்தே இல்லை
ஓசிப் பயணம் இல்லவே இல்லை
எப்பொருளும் இங்கே விளைந்திடவில்லை
எதற்கும் இங்கே பஞ்சமேயில்லை
பிச்சைக்காரர் தொல்லையே இல்லை
பிக்பாக்கெட்காரன் பிரச்சினை இல்லை
அடையாளச் சீட்டின்றி நடமாட்டமில்லை
அணுகுண்டே விழுந்தாலும் உயிர்க்கழிவில்லை
ஆண்களின் ஆதிக்க வாலாட்டமில்லை
பெண்கள் உரிமைக்கு எத்தடையுமில்லை
தெருநாய்கள் தொந்தரவு இல்லை
கோமாதாக்கள் நடமாட்டம் இல்லை
ஆர்ப்பாட்டம் ஊர்வலம் நடப்பதேயில்லை
மறியல் உண்ணாநிலை ஒருபோதுமில்லை
கடையடைப்பு கண்ணீர்ப் புகை கண்டதேயில்லை
வேலை நிறுத்தம் வெட்டிப்பேச்சு நினைப்பேயில்லை
மின்கம்பி இணைப்புகள் புவிக்கு மேல் இல்லை
வரிசை ஒழுங்கை மீறுதலில்லை
வாழ்க்கைப் பயணம் கசந்திடவில்லை
படிக்காத மக்கள் எங்குமில்லை
உழைக்காது வாழ்ந்திட வழியேயில்லை
மனிதனை பிரிக்கும் பேதமில்லை
மதத்தின் ஆட்சி மகுடமில்லை
மந்திரி வந்தாலும் பாதை மூடவில்லை
அதிபர் ஆனாலும் ஆடம்பரமில்லை
சட்டத்தின் ஆட்சிக்கு தடையேயில்லை
சட்டத்தை மீறினால் மன்னிப்பேயில்லை
வாழ்க சிங்கப்பூர் - வளர்க சிங்கப்பூர்

- டாக்டர் க.அன்பழகன்

துணை இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

Read more: http://viduthalai.in/page5/75382.html#ixzz2tREIqVQg

தமிழ் ஓவியா said...


உலகெங்கும் நாறும் மோடி பித்தலாட்டம்


பாஜக பிரதமர் வேட்பாளர் என்று நாட்டை வலம் வரும் மோடியின் பேச்சை அமெரிக்க அதிபர் ஒபாமா கவனிப்பது போல் மோடியின் படத்தைப் போட்டு மோசடியில் ஈடுபட்ட வெட்கக்கேடான செயலை இலண்டன் பிபிசி தோலுரித்துக் காட்டி உள்ளது. ஏற்கெனவே இந்நாட்டில் உள்ள ஊடகங்களில் மட்டுமே வெளிவந்த தகவலாக இருந்தது. தற்போது உலகே கேலிக்குறியுடன் மோடியை நோக்கும் வண்ணம் பிபிசி ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

28 சனவரி 2011 இல் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பேச்சை கவனிக்கும் போது எடுக்கப்பட்டு வெளியான ஒபாமா படத்தை தற்போது மோடியின் பேச்சை கவனிப்பதுபோல் சித்தரித்து போலிப் படத்தை முகநூல்மூலம் வெளியிட்டு பலரும் உண்மை என நம்பி பகிர்தலும் நடந்துள்ளது. இந்த மோசடியை இலண்டன் பிபிசி நிரூபித்து உள்ளது.

இதே தகவலை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சிஆர் பாட்டீல் மோடியின் ஆதரவாளரான இவர் படத்தின் தன்மை உண்மை என நினைத்து முகநூலில் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி குறித்து என்டிடிவி, இந்தியா டுடே உள்ளிட்ட இந்திய ஊடகங் களும் வெளிச்சம்போட்டுக்காட்டி உள்ளன.

படத்தின் உண்மையும், பொய்மையும் மேலே தரப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page8/75384.html#ixzz2tREpNcpP

தமிழ் ஓவியா said...


தண்ணீர் ஒரு தகவல்

உண்ணத் தொடங்கியதுமே வயிற்றில் உணவை சீரணிக்கும் திரவம் சுரக்க ஆரம்பமாகி விடும். அத்தருணத்தில் நீர் அருந்தினால் அது சீரணத் திரவத்துடன் சேர்ந்து சீரணப் பணியைப் பாதிக்கச் செய்யும். சாப்பாட்டுக்கிடையே நீர் அருந்துவதைக் கூடுமான வரை தவிர்ப்பதே நல்லது.

Read more: http://viduthalai.in/page8/75385.html#ixzz2tRF0h4Wx

தமிழ் ஓவியா said...


பேய் மூடத்தனத்தை விரட்டு பி.சி. சர்க்கார் மகள் நடித்த திரைப்படம்


பேயை விரட்டுங்கள் (பூட்அட்ப்ஹாட்) என்கிற வங்க மொழிப்படத்தை இயக்குநர் அனுபிரட்டா தத்தா இயக்கி உள்ளார். மவ்பானி சர்க்கார் பகுத்தறிவாளராக நடித் துள்ளார். மெட்ராஸ் கபே படத்தின் நாயகன் அரிஜித் தத்தா சுவையான பாத்தி ரத்தில் நடித்துள்ளார். இப் படம் வெறுமனே மூடத் தனத்தைப்பரப்பும் பேய்க்கதை சொல்லும் படமன்று என்றும், வெகு மக்களை சிந்திக்கத்தூண் டும் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்றும்கூறப்படுகிறது.

பேங்கியோ பிக்ஞான் ஜுக்திபடி சமிதி வங்காள பகுத்தறிவாளர் அமைப் பின் முன் னோடி பிரபிர் முகர்ஜி. இவர் பல நேரங்களில் மூட நம்பிக்கையாளர்களுடனான நேரடி விவாதத்தில் பங் கேற்று மூடநம்பிக்கை யினை தோலுரித்துக்காட்டி உள்ளார். இத்திரைப் படம் குறித்து பிரபிர் முகர்ஜி கூறும்போது, இந்த படம் நம்பிக்கையையும், தொழில் நுட்பத்தையும் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

படத்தில் இயக்குநர் அனுபிரட்டா தத்தா கூறும் போது இந்த படம் வழக்க மான பேய் படம்போல் எடுக்கப்படவில்லை. பேய் குறித்த நம்பிக்கை உள்ள வருக்கும், பகுத்தறிவாளருக் கும் இடையே உள்ள வாதங்களை உள்ளடக்கி முற்றிலும் புதுமையான முயற்சியாக இப்படத்தை எடுத்துள்ளேன்.

இளமைக் காலந்தொட்டே பகுத்தறி வாளர் பிரபிர் முகர்ஜி எழுதிய பேய் என்று சொல் லப்படுவது ஒன்றும் இல்லை(“Bhoot Bole Kichhu nei”) என்கிற புத்தகம் உள் ளிட்ட ஏராளமாக அவரு டைய புத்தகங்களையும், கட்டுரைகளையும் படித் துள்ளதாலும், வேடிக்கை யான பேய் படங்கள், சஸ் பென்ஸ், சாகச படங்களைப் பார்த்தும் சாதாரண பேய்க் கதை சொல்லும் படமாக இல்லாமல் மாறுபட்ட கோணத்தில் எடுத்துள்ளேன் என்று கூறுகிறார்.

படத்தின் பகுத்தறிவாள ராக பாத்திரம் ஏற்று பேய் மாயையை உடைத்து எறி யும் மவ்பானி மேஜிக் நிகழ்ச் சிகளில் செய்ததுபோல் பற் பல இடங்களில் திடீரென தெரிவதும், பின் மாயமா வதுமான காட்சிகள் படத் தில் அவருக்கு கைகொடுத் துள்ளன. இந்த படத்தில் பகுத்தறிவாளர்களின் வாதத்தில் நின்று மதக் கருத்துக்களைத் தகர்க்கும் வண்ணம் என் பாத்திரம் அமைந்துள்ளது.

நான் நினைப்பது என்னவென் றால், பேய்கள் குறித்த எண் ணத்தை காண்பதைவிட அறிவைக் கொண்டே எண் ணிப்பார்க்க வேண்டும் என் கிறார் மவ்பானி.

பல்வேறு அதிசய படங்களை இயக்கிய பரன் பண்டியோபாத்யா கூறும் போது, இந்த படம், வங் காளத்திரைப்படங்களெல் லாம் காதல் படங்கள் என் பதை முறியடித்துள்ளது என்கிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/75443.html#ixzz2tXLPVtnh

தமிழ் ஓவியா said...


மோடீயில் பாசிசம்


- குடந்தையான்

தேநீருடன் அரட்டை என்கிற முறையில் இந்தியா முழுவதும் ஆயிரம் இடங்களில் தேநீர் கடைகளின் வாயிலாக மோடி பிரச்சாரம் துவக்கினார். ஆனால், தமிழ் நாட்டில் அதற்கு எந்தவித வரவேற்பும் இல்லை என டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் குடி அரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட் பாளர்கள் ஆங்காங்கே விவாதம் செய்வதைப்போல், இங்கேயும் அது போன்ற ஒன்றை தனியார் ஏஜென்சி மூலம் பாஜகவும் மோடியும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் செய்யத் துவங்கி உள்ளனர். இதற்கு யாரிடமிருந்து பணம் வருகிறது என்ற தகவலை பாஜகவும் சொல்வதில்லை; மற்றதற்கு எல்லாம், கேள்வி கேட்கும் ஊடகங்கள், இதைப் பற்றி எந்த கேள்வியும் கேட்பதும் இல்லை.

இந்த தேநீர் அரட்டையில், மோடியிடம் காணொலி மூலம் கேள்வி கேட்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், எந்த மாதிரியான கேள்வி கேட்கப்பட வேண் டும் என்பதை, அந்த கடையில் உள்ள பாஜகவினர் தேர்வு செய்த பின்னர் தான், கேட்க முடியும்.

இது மட்டுமல்ல; ஊடக நிருபர்கள், மோடியை சங்கடப்படுத்தும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்றும், மீறி கேட்பவர்கள் உரிய வகையில் கவனிக் கப்படுவர் என்றும், அத்தகையவர்களின் பெயர் களங்கப்படுத்தப்படும் என்றும் மிரட்டப்பட்டுள் ளார்கள் என மத்திய அமைச்சர் மனீஸ் திவாரி செய்தி வெளியிட்டுள்ளார்.

அண்மையில் வெண்டி டோனிகர் எழுதிய புத்தககம் இந்துக்கள்; ஒரு மாற்று வரலாறு எனும் ஆங்கில நூல் (Wendy doniger’s the hisdus an alternative history) பென்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட் டது. அந்த நூல் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவ தாக ஆர்ப்பாட்டம் செய்து, புத்தகத்தை திரும்பப் பெற வைத்துள்ளனர்.

மோடிக்கு எதிராக கட்டுரைகளை எழுதும் கட்டுரையாளர்கள், அந்த நிறுவனங்களிலிருந்து விலக்கப்பட்டு வருகின்றனர். வித்யா சுப்ரமணியன், சித்தார்த் வரதராஜன், சகரிகா கோஸ், நிகில்வாக்லே, ஹர்தோஸ் சிங் போல் என சிறந்த செய்தியாளர்கள், சிலர் நீக்கப்பட்டுள்ளனர்; சிலர் மிரட்டப்பட் டுள்ளனர்.

தங்களது கருத்துக்கு மாறான கருத்தை கூறுபவர் களுக்கு, பதில் கருத்து சொல்லாமல், அவர்களை தாக்குவது, கொல்வது என்பது ஆர்.எஸ்.எஸ். வழிமுறை. இந்த பாசிச முறையைத் தான் மோடியின் தேநீர் அரட்டையும் செய்து வருகிறது.

Read more: http://viduthalai.in/page-2/75437.html#ixzz2tXLuHYGf

தமிழ் ஓவியா said...


மோடியின் ராஜ்ஜியத்தில் காதலர்கள் பட்டபாடு பஜ்ரங்தள வெறியர்களின் அட்டூழியம்

அகமதாபாத்,பிப்.16- பஜ்ரங்தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்(வி.எச்.பி) அமைப் பினர் கடந்த 14.2.2014 அன்று காதலர் தினத்தை கொண்டாடிய காதலர்கள் மீது அழுகிய தக்காளிகளை எறிந்தார்கள்.

குஜராத்தின் அகமதா பாத்தில் உள்ள சபர்மதி ஆற்றின் அருகே வெறியர் கள் இவ்வாறு செய்தனர். அப்போது காதலர்கள் தங் களைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஒடினர்.

அப்போது பெருமளவில் திரண்ட பஜ் ரங் தள அமைப்பினர் காத லர்களின் வாகனங்களைப் பறிக்க முயன்றனர். இந்த அட்டூழியம் குறித்து காவல் நிலையத்தில் ஏதும் புகார் செய்யப்படவில்லை. சபர் மதி ஆற்றில் நூற்றுக்கணக் கான காதலர்கள் குவிந்தி ருந்தனர். அவர்கள் காதலர் தினத்தை கொண்டாடுவதற் காக அங்கு வந்திருந்தனர்.

காதலர் தினத்தை எதிர்த்து பஜ்ரங்தளம் அமைப்பின ரும் வி.எச்.பி.யினரும் அக மதாபாத் நகரில் போராட் டம் நடத்தினர். நகர பஜ்ரங் தள தலைவரான ஜ்வாலித் மேத்தா காதலர்களைக் கடு மையாக வசை பாடினார். காதலர் தினத்தை பல மாண வர்கள் வரவேற்றனர்.

சில மாணவர்கள் மட்டும் பஜ் ரங்தள அட்டூழியத்திற்கு பயந்து அவர்களுடன் வந் திருந்தனர். இதுகுறித்து அந்த வெறி யர்கள் கூறுகையில், எங்களது போராட்டத் திற்குச் சில மாணவர்கள் ஆதரவு தந்தார்கள் என்று பெருமை பொங்க கூறிக் கொண்டனர்.

இந்த வெறியர்கள் தாக் குதல் நடத்தியபோதும் பல காதலர்கள் சபர்மதி ஆற்றில் குவிந்து தங்களது துணை யோடு பேசி மகிழ்ந்தனர். காதலர்களை தாக்கிய பஜ்ரங் தள வெறியர்களும், வி.எச். பி.யினரும் பின்னர் தங்களது வெறி அடங்காமல் காதலர் தின அட்டைகளை தாக்குதல் நடத்திய இடத்திலேயே எரித்தனர்.

காதலர்கள்மீது தாக்குதல்

அகமதாபாத் மட்டு மின்றி, ஜம்மு, அய்தராபாத் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் பஜ்ரங்தளம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரி வார அமைப்பினர் காதலர் கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.

Read more: http://viduthalai.in/page-8/75424.html#ixzz2tXNc1Ssq

தமிழ் ஓவியா said...


பேராசிரியரின் இன முழக்கம்


- குடந்தைக் கருணா

திமுகவின் 10-ஆவது மாநில மாநாட்டினை துவக்கி பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையில், இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணை யற்ற சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரைப் பற்றி, இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், கூறிய கருத்துகள், சிறப்பானவை; இன்றைய கால கட்டத்திற்கு தேவை யானவை.

பெரியாரின் சுய மரியாதை இயக் கம் துவங்கி, அந்த உணர்வை நமக் குத் தரவில்லை என்றால், அண்ணா இல்லை; கலைஞர் இல்லை; நாமெல் லாம் இல்லை என்றாரே பேராசிரியர், அது அங்கே கூடியிருந்த லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு மட்டு மல்ல; தமிழகத்திலே வாழும் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களாக இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

பெரியாரின் சுயமரியாதை இயக் கம், இன விடுதலை, வர்ணாசிரம எதிர்ப்பு, மனித நேயம் அனைத்தும் மனிதனை, மனிதனாக ஆக்கும் செயல்பாடு என்பதை பேராசிரியர் வரிசைப்பட எடுத்துக்கூறி, மாநாட் டிற்கு ஒரு புதிய சிந்தனையை விதைத் தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்த லில், நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தைவிட, சமுதாய நோக்கில் தான் எனப் பேராசிரியர் கூறியது பதவியை நோக்கி மட்டும் கட்சியில் சேரும் பலருக்கும் ஓர் எச்சரிக்கை! தமிழ் நாட்டின் அரசியல் நட வடிக்கைகள், கட்சிகளுக்கிடையே யான போட்டியாக அல்லாமல் ஆரியர் திராவிடர் போராட்டமாகத் தான் நடைபெற்று வருகிறது.

அதனால் தான், திமுகவை அழித் திட ஊடகங்களும், பார்ப்பனர் களும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியை, தனது பேச்சின் மூலம், இனமானப் பேரா சிரியர் அன்பழகன், திமுகவின் தொண்டர்களுக்கு, குறிப்பாக, இளை ஞர்களுக்கு, வகுப்பு எடுத்தது போல், கூறியுள்ளார்.

பெரியாரின் சிந்தனைகளை நெஞ் சில் ஏந்தி, பேராசிரியரின் இன முழக்கம் செயல்படுத்திட இளைஞர் கள் திரளட்டும்.

Read more: http://viduthalai.in/page-2/75465.html#ixzz2tdADox97

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடந்த போர்க்குற்றம் சர்வதேச அளவில் விசாரணை


அய்.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை பரிந்துரை

கொழும்பு, பிப்.17-இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் - இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போரில் பெரும் அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. அப்பாவி தமிழர்களை கொத்துக் கொத்தாக ராணுவம் சுட்டுக் கொன்றது. சித்திரவதை செய்தும் கொன்றுள்ளது. இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றம் பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. இந்த கோரிக்கையை அய்.நா மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை பரிந்துரை செய்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே இறுதி கட்ட போர் நடைபெற்றது. இதில், குழந் தைகள், பெண்கள் உள்பட ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் மீறப்பட்டு, போர்க்குற்றம் புரிந்ததாக இலங்கை மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் குற்றம் சாட்டின.

இது குறித்து அய்.நா மனித உரிமை கள் ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை 74 பக்க அறிக்கையை அய்.நா. சபைக்கு அனுப்பியுள்ளார். அதில், இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச அளவில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

இலங்கையில், தீவிரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காணா மல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். சிறுபான்மையினரான தமிழர்களை கொன்று குவித்தவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்று பரிந் துரை செய்துள்ளார்.

ஏற்கெனவே, இறுதி கட்ட போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டதாக, இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களை அய்.நா. சபை கண்டித்து இருந்தது. ஆனால் இதை இலங்கை மறுத் தது. உள்நாட்டு விவகாரத்தில் வெளி நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. நாட்டில் அமைதியை ஏற் படுத்தும் முயற்சிக்கும் மறுகுடியமர்த் தும் பணிக்கும் இது பாதிப்பை ஏற் படுத்தும் என்றும் இலங்கை கூறுகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் அய்.நா மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக மூன் றாவது தீர்மானத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இலங்கையில் மனித உரிமைகள் விஷயத்தில் முன்னேற்றமின்மை. உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், செய்ய வேண்டிய மறுசீரமைப்பு வேலைகள் சரியாக நடைபெறாதது குறித்து இலங்கையை கண்டிக்கும் என தெரிகிறது. இந்த இரண்டு தீர்மானங் களுக்கும் இந்தியா ஆதரவு தெரிவித்து இருந்தது.

இலங்கை சென்ற இங்கிலாந்து பிரதமர் போர்க்குற்றத்திற்கு எதிரான இலங்கையின் உள்நாட்டு விசாரணை தோல்வி அடைந்ததாக குற்றம் சாட் டினார். இந்நிலையில் நவிபிள்ளையின் அறிக்கை இலங்கை அரசுக்கு நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் உடன டியாக எந்தவித பதிலையும் தரவில்லை. போர்க்குற்றத்தை விசாரிக்க பன்னாட்டு சுதந்திர விசாரணை குழு அமைந்து விடுமோ என்று இலங்கை அரசு அச்சப்படுகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே வேற்றுமைகளை அகற்ற அதிக காலம் வேண்டும் என்று அமெரிக் காவின் ஆதரவை கோரியுள்ளது. மேலும், அய்.நா மனித உரிமைகள் தீர்ப்பாயம் மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் விடு தலைப்புலி ஆதரவாளர்களின் கட்ட ளைக்கு ஏற்ப இலங்கைக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி யுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/75462.html#ixzz2tdB0IIqV

தமிழ் ஓவியா said...

ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம்

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந3) துறை அரசு ஆணை (நிலை) எண் 92 நாள் 11.9.2012இன்படி, +2 படித்து முடித்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிருத்துவமதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் மாணவியர்களுக்கு முழுக் கட்டணத்தையும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும். இது 2011_-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் பெற்றோர்களின் வருமானம் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நிபந்தனை.

இத்தகு நிதி உதவியின் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் உட்பட படித்துப் பயன்பெற்றனர்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தீண்டத்தகாத மக்களாக வெறுக்கப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புப் பெற்றால்தான் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்பது யதார்த்தமானதாகும்.

இந்நிலையில் ஏற்கெனவே உள்ள அரசாணை 92-க்குப் பதிலாக அரசாணை எண் 106 மற்றும் 107 என்று இரு ஆணைகள் 4.12.2013 நாளிட்டு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஆணைகளின்படி ஏற்கெனவே சுயநிதிக் கல்லூரிகளுக்கான முழுக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்பதற்குப் பதிலாக, அரசு கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரி ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.70 ஆயிரம் என்ற நிலையில் இதுவரை 70 ஆயிரம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக அரசு ஒதுக்கீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வெறும் ரூ.40 ஆயிரம் மட்டும்தான் தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்கப்படும் என்பதுதான் புதிய ஆணையின் சாரமாகும்.

இந்தப் புதிய ஆணையின் காரணமாக அரசு செலுத்தும் தொகை போக மீதியை மாணவர்களே கட்டும் நெருக்கடியும், சுமையும் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவும், போக்கும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இவ்வளவுக்கும் மத்திய அரசால் அளிக்கப்படும் உதவி நிதி இது.
மாநில அரசு மூலமாக, மத்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக்காக நிதியை வழங்குகிறது. இடையில் நந்தியாக இருந்து தமிழ்நாடு அரசு தடை செய்வது ஏன்? மத்திய அரசு கொடுக்கும் முழு நிதியையும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்காமல், அந்த நிதியை வேறு துறைகளுக்குச் செலவிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கும்போது கால்களைத் தட்டிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். ஆச்சாரியார்தான் (ராஜாஜி) கல்வியில் கைவைத்தவர் என்ற கெட்ட பெயர் உண்டு. அந்த ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம். முறையான வேண்டுகோளுக்குத் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இல்லையெனில், இது குறித்துக் களம் அமைக்க கழகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, பார்ப்பனர் திரு வேங்கடாச்சாரியாரை நியமிக்கும்படி பிரதமர் நேரு கூறியும் ஏற்காமல், தமிழர் என்.சோமசுந்தரத்தை நியமித்த முதல்வர் ஓமாந்தூரார் ராமசாமி (ரெட்டி)யாரை தாடியில்லாத ராமசாமி (நாயக்கர்) என்று பார்ப்பனர்கள் பட்டங் கட்டியது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

குண்டுவெடிப்பும் ஆர்.எஸ்.எஸ்.தலைவரும்


இந்தியாவில் நடைபெற்ற சில பயங்கரமான குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பு வழக்கில் காவித் தீவிரவாதிகளின் நேரடித் தொடர்பு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு சாது பிரஞ்யா தாக்கூர் என்ற பெண் சாமியார், அசிமானந்தா, இந்திய ராணுவப் படையில் உயரதிகாரியாகப் பொறுப்பு வகித்த சிறீகாந்த் புரோகித் மற்றும் தயானந்த் பாண்டே போன்றோர் கைதாகி சிறையில் உள்ளனர்.இவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்.சின் நேரடித் தொடர்பிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம்பாலா சிறையில் உள்ளார்.

அசிமானந்தா சாமியார், இன்று மத்தியில் ஆட்சி அமைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமானவர் என்று பேட்டி கொடுத்துள்ளார். வழக்கம்போல இது ஒரு பொய்யான ஆதாரமில்லாத செய்தி என்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்து கொடுக்கும் கட்சிகளின் சதிச் செயல் என்றும் பா.ஜ.க. கூறியது. இந்தச் செய்தி பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், காரவான் இதழுக்காக இந்தச் செய்தியைச் சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியபோது,``இந்தச் செய்தி அனைத்தும் உண்மையே. இது அவரிடம் இருந்து வாய்மொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த விசாரணைக்கும் இந்தக் குரல் பதிவைக் கொடுக்கத் தயார் என்றார். ஹரியானாவில் அம்பாலா சிறையில் உள்ள அசீமானந்தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்துப் பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதியின் பேரில்தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார். காரவன் இதழ் அசிமானந்தாவின் குரல் பதிவை 7.2.2014 அன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் ஓவியா said...

பால்நெஞ்சு பதறலையா?


- ந.தேன்மொழி

சாணிக்குப் பொட்டிட்டு
சாமியென்று கூத்தாடி
வாசலிலே குத்தவைச்சு
வாழை இலையிட்ட
எனதருமைச் சகோதரியே!

சாணியதை நீமிதித்தால்
சாமியென்று சொல்வாயா?
சாணமென்று சொல்வாயா?
மலையுடைத்துப் பாறையாக்கி
சிலைவடித்து சாமியென்றாய்

நட்டகல்லையும் விடவில்லை
நெடுமரமாய் விழுந்திட்டாய்
அம்மன்தாலி அறுந்ததென
அய்யன் சொன்னான் கோவிலிலே
ஆளுக்கொரு புதுத்தாலி
அணிந்தீர் அவசரமாய்
தன்தாலி அறுமென
தெரியாத சாமியிடம்
அடகு வைத்தாய்
உன்தாலியை சகோதரியே!

காவியுடைக் கயவர்கள்
காலடியில் சரணம்
சாமியென்று சொல்லி
அம்மணமாய் அவனாட
அவன்முன்னே மண்டியிடும்
மானமிழந்த சகோதரியே

பக்தியோடு பாம்புக்குப்
பால்வார்க்கும் பெண்ணினமே
பச்சிளம் குழந்தையை
பக்தியென்ற பேராலே
பாவியவன் ஏறிமிதிக்க
பால்நெஞ்சு பதறலையா?
பார்த்தவிழி துடிக்கலையா?
இப்படியொரு வேண்டுதலை
சாமியவள் கேட்டாளா?
கேட்கும் அவளுன்
சாமியா சகோதரியே?
எத்தனை சாமிகள்
எத்தனை ஆயுதங்கள்
பெண்மானம் தனைக்காக்க
எந்தசாமியும் வரவில்லை

எத்தனை ஆயுதங்கள்
இருந்தாலும் என்ன
எந்தசாமியும் நம்மைக்
காப்பாற்ற வாராது
சாமிக்கே காவல்
நாம்தானடி சகோதரியே
உணர்ந்து கொள்ள
இன்னும் எத்தனை
பெரியார் தேவை
சொல்லடி சகோதரியே!

தள்ளுபடி
வியாபாரம்

அர்ச்சகர்
ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!
ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும்
மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி
கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு....ஹி ஹி
என்று சொல்லி ஆட்டையப் போட்டு
அதை கர்ப்பக் கிரகத்தில்
போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது...
அர்ச்சகர் கேரியர் !

- க.அருள்மொழி, குடியாத்தம்.


கடவுள் எதற்கு?

காலைக் கடன்களைக்
கழிப்பது முதல்
இரவு படுக்கை விரித்து
இல்லாளுடன் இணைவது வரை
எல்லா வேலைகளையும்
நானேதான் செய்கிறேன்!
இடையில் எனக்கு
கடவுள் எதற்கு?

- கு.நா.இராமண்ணா, சீர்காழி


ராசிக்கல்

சாலையில்
வாகனப் புழுதியினூடே
தார்ப்பாய் விரித்து
ராசிக்கல் விற்பவருக்கும்,
தொலைக்காட்சி நிறுவனத்தின்
குளிர்சாதன அறையிலமர்ந்து
கேமராவுக்கு முன்
ராசிக்கல் விற்பவருக்கும்,
இடையே உள்ள
பொருளாதார இடைவெளியில்
நழுவி விழுகிறது
ராசிக்கல் மீதான நம்பிக்கை.

- பா.சு.ஓவியச்செல்வன், சென்னை


அவன் கடவுளாம்!

மண்ணைத் தின்பானாம்!
வெண்ணை தின்பானாம்!
பெண்ணைத் தின்பானாம்!
அவன் பெயர் கண்ணனாம்!
அவன் கடவுளாம்! நான் சொல்லல...
நான் சொல்லல...
நான் சொல்லவே இல்லை!

- ஞா.சந்திரகாந்த், திருச்சி

தமிழ் ஓவியா said...

புதிய முறையில் சிக்கன மின்சாரம்


இன்றைய உலகில் மின்சாரத்தின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அதற்கான உற்பத்தித் திறனோ மிகவும் குறைவாக உள்ளது. இத்தகு நிலையில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரித்தனர். இதில், கிரிஸ்டலைன் சிலிகான் என்ற விலை உயர்ந்த பொருளும், பிளாட்டினத்தைவிட 10 மடங்கு அதிக விலை கொண்ட SpiroOmeTAD என்ற பொருளும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றுப் பொருளாக கேட்மியம் சல்பைட் பயன்படுத்தி குறைந்த விலையில் தயாரிக்கப்படும் சோலார் பேனல்களின் உற்பத்தித் திறனோ மிகவும் குறைந்த அளவில் உள்ளது.

தற்போது பெரோஸ்கைட் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது, பூமியில் அதிக அளவில் கிடைப்பதுடன், விலையும் மிகவும் குறைவு. பெரோஸ்கைட்டைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் சோலார் பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் பெரிய கட்டிடங்களில் வெயிலை மறைக்கப் பொருத்தப்படும் கருப்புக் கண்ணாடிக்குப் பதில் இதனைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சாதாரண சோலார் பேனல்களைவிட இரு மடங்கு மின்சாரத்தை உருவாக்கி நீண்ட தூரத்துக்கு எந்தவிதப் பாதிப்புமின்றிக் கடத்தும் சிறப்பினை பெரோஸ்கைட் பேனல்கள் பெற்றுள்ளமை இதன் தனிச்சிறப்பு.

ஒரு வாட் மின்சாரத்துக்கு 46 ரூபாய் என்ற இன்றைய சோலார் பேனல்களின் விலையினை 31 ரூபாய்க்குள் கொண்டு வந்தால் உலகில் உள்ள அனைத்துக் கார்களும் பெட்ரோலை விட்டுவிட்டு சோலார் கார்களாக மாறிவிடும்.

இன்ஹேபிடேட் என்ற அறிவியல் பத்திரிகை பெரோஸ்கைட் பேனல்கள் விற்பனைக்கு வந்தால் ஒரு வாட் மின்சாரம் 6 ரூபாயாகிவிடும் என்றும், சயின்ஸ் டெக் டெய்லி என்ற தொழில்நுட்பப் பத்திரிகை நாம் நினைத்துப் பார்க்க முடியாத மின்சாரப் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன.

ஒரு ஃபிலிம் போன்ற தகட்டில் பெயிண்ட் அடிப்பது போல இதனை உருவாக்கிவிடலாமாம். அடுத்தகட்ட வளர்ச்சியில், இது பேனலாக விற்பனை செய்யப்படாமல் சோலார் பெயிண்ட்டாக மாறவும் வாய்ப்பு உள்ளதாம். காருக்குப் புதுசா பெயிண்ட் அடித்தாலே போதும்..., பின்னர் பெட்ரோல் போடும் வேலையே இருக்காதாம்.

தமிழ் ஓவியா said...

பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கா?

- திராவிடப்புரட்சி

பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கு_ கடவுளுக்கு எப்படித் திருமணம் செய்துவைக்கப்படுகிறாள் என்பதைக் கீழ்கண்ட செய்திகள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். இளகிய மனம் கொண்டோர் படிக்கக்கூடாத கொடுமை இது. பல பெண்கள் தமது மூடநம்பிக்கைகளின் காரணமாக தங்கள் மகள்களுடைய கன்னிமையை தமது கடவுளர் விக்கிரகங்களுள் ஒன்றுக்குத் தாரை வார்த்துத் தந்து அர்ப்பணிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்குப் பன்னிரெண்டு வயது ஆன உடனேயே, அந்த விக்ரகம் இடம் பெற்றுள்ள வழிபாட்டுத் தலம் அல்லது மடத்துக்கு அவளை அழைத்துக்கொண்டு சகலவிதமான மரியாதைகளுடன் போவார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்விக்கப்படுவதற்கு முந்தைய நல விழாவொன்றை அவளது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றுகூடி எடுக்கின்றனர்.

அவ்விடத்தின் கதவுக்கு வெளிப்பக்கமாக, மிக கடினமான கருங்கல்லால் ஆன ஒரு சதுரமான பீடம் ஓர் ஆள் உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும். அதைச் சுற்றிலும் மரப்பலகைகளினால் ஆன தட்டிகள் வைக்கப்பட்டு அதனுள் பீடம் கண் மறைவாக இடம் பெற்றிருக்கும். இவற்றின் மீது பல எண்ணெய் விளக்குகள் வைக்கப்பட்டு அதனுள் அவை இரவில் எரிக்கப்படும். விழாவுக்காக மரப்பலகைகளை பட்டுத் துணித் துண்டுகளால் அலங்கரித்திருப்பார்கள். வெளியே உள்ள மக்கள் உட்புறம் நடப்பவற்றைக் காணமுடியாதபடி அத்துணிகள் உட்புறம் செருகப்பட்டு மறைப்பாக அமைக்கப்பட்டிருக்கும். மேலே சொல்லப்பட்ட கருங்கல்லின் மேல், குனிந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் உயரத்திற்கு மற்றொரு கல் இருக்கும். அதன் நடுவே உள்ள துளையில் கூர்முனையுள்ள ஒரு குச்சி செருகி வைக்கப்பட்டிருக்கும்.

அக் கன்னிப்பெண்ணின் தாயார், தனது மகளையும் உறவுக்காரப் பெண்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு மரப்பலகைகளால் ஆன அந்த இடத்திற்குள் போய்விடுவாள். பிரமாதமான பூசைகளுக்குப் பின் உள்ளே நடந்த நிகழ்வு பார்வையில் படாததால் எனக்குச் சொற்பமான அறிவே உள்ளது, அந்தப் பெண், கல் துளையுள் செருகப்பட்டிருந்த கூர்முனையுள்ள குச்சியைக் கொண்டு தனது கன்னித்திரையை தானே கிழித்துக்கொள்வாள். கசியும் குருதியை அந்தக் கற்களின் மேல் சிறிய துளிகளாகத் தெளித்துவிடுவாள். அத்தோடு அவர்களின் விக்கிரக ஆராதனையும் நிறைவடையும்.

கண்ணால் கண்ட விவரங்களை இவ்வாறு பதிந்திருப்பவர் துவார்த்தே பார்போசா.

மேற்கண்ட செயல் மூலம் நமக்குத் தெரியவருவது, கடவுளான சிவனின் பிரதிநிதிக்கு, பூப்பெய்துவதற்கு முன்னரே அப்பெண் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதே. இது வெளிப்படையாக ஆண்குறி (லிங்க) வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. சிவனுக்கு இத்தகைய பெண்களைத் திருமணம் செய்து வைப்பதற்குச் சமமான ஒரு சடங்காக இது கருதிக்கொள்ளப் பட்டிருக்கக்கூடும் என்று துவார்த்தே பார்போசா தெரிவிக்கிறார்.

பிற்காலத்தில், ஒரு சுபயோக சுபதினத்தில், இதர ஆலய ஊழியர்கள் அனைவரின் முன்னிலையிலும் இந்தச் சடங்கு நிகழ்த்தப்பட வேண்டும் என்று காட்டாயமாகியிருக்கிறது.

ஆயிரக்கணக்கான பருவமெய்தாத சிறு குழந்தைகளைப் பாலியல் வல்லுறவு கொள்ளவைத்துள்ள இந்துக் கடவுள்களை நினைத்தால் இவற்றைக் கடவுள்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா? நாகரிகமடைந்த இந்தக் காலத்திலும், இந்து மதம் குறித்த புரிதல் இல்லாமல், தன்னை இந்துவாக _ பெருமையாகக் கருதும் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! முகநூலில் இந்தக் கொடூர செய்தியைப் பதிவு செய்திருந்தேன். அதனைப் படித்த சில தோழர்கள் இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்!

இதற்கான ஆதாரம், முனைவர் கே.சதாசிவன் அவர்களின் ஆய்வு நூலான தமிழகத்தில் தேவதாசிகள் என்ற நூலில் உள்ளது.

அந்த நூலை அவர் சாதாரணமாக கதை வடிவில் வெளியிடவில்லை என்பது கூடுதல் சிறப்பு. நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அள்ளிக் கொடுத்துள்ளார் நூலில். இந்த நூலை எழுதியுள்ள கே.சதாசிவன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை மேனாள் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், கலைப்புல ஆசிரியர் குழு. இவருடைய எம்.ஃபில் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் தேவதாசி முறை பற்றியவை. சமூகவியல் மற்றும் புதைபொருள் இயல் ஆகியவற்றிலும் இவர் கல்விபுல பட்டங்கள் பெற்றவர்.

தேவதாசிகள் தொடர்பாக 145 கட்டுரைகள் எழுதியுள்ளார். 20ஆ-ம் நூற்றாண்டின் படைப்புத்திறன் படைத்த அறிவுஜீவிகள் 2000 பேரில் ஒருவர் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் 2001ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்.