Search This Blog

19.2.14

ஏழு பேர் விடுதலை வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கது! - கிவீரமணி

ராஜீவ் காந்தி கொலை  தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று வரலாற்றுச் சிறப்பான தீர்ப்பினை வழங்கியது.

இத்தீர்ப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த பல்வேறு கட்சித் தலைவர்களும் நாமும் தீர்ப்பினை வரவேற்றதோடு, அத்தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதற்கிணங்க, கடந்த 23 ஆண்டுக் காலமாக சிறையில் வாடும் அம்மூவரையும் தனக்குள்ள சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டோம்.

அந்த மூவரோடு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுச் சிறையில் வாடும் மற்ற நால்வர்களான நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோர் உட்பட விடுதலை செய்யப்படுவதாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழக முதல் அமைச்சர் இன்று உடனடியாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

மற்ற பல்வேறு பிரச்சினைகளில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் நமக்குக் கருத்து மாறுபாடுகள் உண்டு என்றாலும், சிறையில் 23 ஆண்டு காலம் வாடியவர்களை விடுதலை செய்யும் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முழு வடிவம் கொடுத்து, உடனடியாக முடிவெடுத்து, முதல் அமைச்சர் செயல்படுத்தியது பாராட்டத்தக்கதாகும்.


-----------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் 
சென்னை  - "விடுதலை" 19.2.2014

26 comments:

தமிழ் ஓவியா said...


சட்டமன்றத்தில் இன்று:


சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை செய்யப்படுவர்
முதலமைச்சரின் அறிவிப்புக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு


சென்னை, பிப்.19- ராஜீவ்காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் குற்றவாளி களாக ஆக்கப்பட்ட பேரறி வாளன், முருகன், சாந்தன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவதாக சட்ட மன்றத்தில் இன்று முதல மைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை சட்டமன்றத் தில் அனைத்து கட்சிகளும் வரவேற்றன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கண்டித்து வெளி நடப்பு செய்தனர்.

சட்டமன்றத்தில் இன்று (19.2.2014) காலை 10 மணி யளவில் அவை கூடியதும் கேள்வி - பதில் நிகழ்வு நடைபெற்று முடிந்ததும், சிறப்புக் கவன ஈர்ப்பு தீர் மான அடிப்படையில் முத லமைச்சர் விதி 110- இன் கீழ் ஒரு அறிவிப்பை வாசிப் பார் என பேரவைத் தலை வர் ப. தனபால் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கீழ்க்கண்ட அறி விப்பை வாசித்தார்:

இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண் டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-இன்படி தமிழ் நாடு அமைச்சர வையின் முடிவு குறித்து மத்திய அர சுடன் கலந்தாலோசிக்கப் பட வேண்டும். எனவே, மத்திய அரசின் கருத்தி னைப் பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ் நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடி யாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாள் களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக் கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச் சரவைக் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகி யோர் விடுவிக்கப்படுவார் கள் என்பதை இந்த மாமன் றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்ட மன்றத்தில் இன்று முதல மைச்சர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/75554.html#ixzz2tp0Y8xpJ

தமிழ் ஓவியா said...


கல்கிகளின் ஆசை

கல்கிகளின் ஆசை

கேள்வி: மோடி அலை வெறும் மாயை என்கிறாரே திருமாவளவன்?

பதில்: வண்டலூர் மாநாட் டுக்குத் திரண்டவர்களின் எண்ணிக்கையை தினமலர் பத்து ல,ட்சம் என்றது; தின மணி ஒரு லட்சம் என்றது; எண்ணிக்கை எதுவானலும் கூட்டம் பிரியாணி பொட் டலத்துக்கும், குவார்ட்டர் பாட்டிலுக்கும், ரூபாய்க்கும் திரண்ட கூட்டமல்ல; மோடி மீது நம்பிக்கை கொண் டோரின் கூட்டம். யதார்த்தம் எடுத்துரைக்கும் உண் மையைக் கண்டறிந்தும் மாயாஜாலமாகப் பேசுவது எதிர் அணி அரசியல்வாதிக்கு அவசியமாகி விடுகிறது.

இப்படி எழுதுவது ஆர். எஸ்.எஸின் விஜயபாரதம் அல்ல கல்கி தான் (23.2.2014 பக்கம் 43).
வண்டலூரில் மோடி கூட்டம் பேசிய அன்று (8.2.2014) அங்கு டாஸ்மாக் விற்பனை புதிய சாதனை படைத்ததாம் - ரூ.4.9 கோடி விற்பனையாம் - இந்தக் குவார்ட்டர்களை சொந்த மாகப் பணம் கொடுத்து வாங்கியதுதான் என்று கல்கி கூறுகிறதோ?

கோயம்பேட்டில் தனி யார்ப் பேருந்துகளை நிறுத்தி, கூவிக் கூவி மக்களை அழைத்த கதை ஊர் சிரிக்க வில்லையா? ஆகா! கல்கி களுக்குத்தான் மோடியைச் சிம்மாசனத்தில் உட்கார வைக்க எவ்வளவுப் பெரிய ஆசை!

நற்குடி மக்களா?

ஏடுகளில் அன்றாடம் ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. டாஸ்மாக் கடையை இங்கே வைக் காதே! பெண்கள் நடமாட முடியவில்லை! என்று பொது மக்கள் குறிப்பாகப் பெண்கள் வீதிக்கு வந்து போராடுவதை அறிய முடிகிறது. இதில் உள்ள நியா யத்தைப் புரிந்து கொள்ள வேண்டமா? குடிகுடியைக் கெடுக்கும் என்ற விளம்பரப் பலகையையும் ஒரு பக்கத் தில் மாட்டிக் கொண்டு - இன்னொரு பக்கத்தில் - மக்கள் அதிகமாகப் புழங் கும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை வைப்பது சரி தானா? இந்த மதுபானக் கடைகளை இழுத்து மூடி விட்டு, கள்ளுக் கடைகளைத் திறப்பது பற்றி அரசு யோசிக் கலாமே! திராவிடப் பெருங் குடி மக்கள் நற்குடி மக்க ளாக வாழ ஒரு வழி செய்யக் கூடாதா? மதுவை ஒழிக்க வேண்டும் என்று போடப் படுகின்ற மாநாட்டுத் திடலில், பொழுது விடிந்து பார்க்கும் பொழுது தான் உண்மை புரி கிறது - எங்குப் பார்த்தாலும் காலி மதுப்பாட்டில்களின் அணி வகுப்பு!

பேஷ், பேஷ்!

தாம்பரத்தையடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பட்டப் பகலில் படுகொலை செய் யப்பட்டுள்ளார். இதற்கு முன்புகூட அவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இப் படியே படுகொலை செய் யப்பட்டுள்ளனர். பேஷ், பேஷ்! சட்டம் ஒழுங்கு மிக நன்னாயிருக்கு...

வாராக்கடன்

வங்கிகளின் மொத்த வாராக் கடன் நடப்பு நிதி யாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 35.2 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/75561.html#ixzz2tp0fsfAc

தமிழ் ஓவியா said...

7பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி : கலைஞர்


சென்னை, பிப்.19- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முரு கன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண் டனையை ஆயுள் தண் டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப் பளித்தது. அவர்களை விடு தலை செய்யும் முடிவை மாநில அரசு மேற்கொள்ள லாம் எனவும் அந்த தீர்ப் பில் கூறியிருந்தது.

எனவே, இன்று சட்ட சபையில் முதல்வர் ஜெய லலிதா முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் உட னடியாக விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்க வேண் டும் என்று மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள் ளார். இதுகுறித்து திமுக தலைவர் கலைஞர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி அளிக் கிறது. 7 பேரையும் விரை வில் விடுதலை செய்ய மத் திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மகிழ்ச்சி என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/75557.html#ixzz2tp0oJKMu

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கவனச் சிதைவோ!

செய்தி: காஞ்சிபுரம் உலக ளந்த பெருமாள் கோயில் தேர் சக்கரம் உடைந்தது! சிந்தனை: உலகை அளந்த வருக்கே இந்தக் கதியா? ஒருக்கால் உலகை அளந்து கொண்டிருந்தபோது கவ னச் சிதைவால் இது நடந்து விட்டதோ!

Read more: http://viduthalai.in/e-paper/75555.html#ixzz2tp15lop7

தமிழ் ஓவியா said...


உலகளந்த பெருமாள் தேர் உடைந்து போனதே!


வாலாஜாபாத், பிப்.19- காஞ்சீபுரம் உலகளந்த பெரு மாள் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் தேர் சக்கரத் தில் விரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந் தனர். காஞ்சீபுரத்தில் உலக ளந்த பெருமாள் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 6 நாட்களாக நடை பெற்று வந்தது.

7-ஆம் திருநாளான நேற்று காலை திருத்தேர் உற்சவம் நடந்தது. முன்ன தாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனை யும் நடந்ததாம். பின்னர் திருத்தேரில் எழுந்தருளினா ராம். திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். காஞ்சீபுரத்தில் உள்ள ராஜ வீதிகளில் தேர் வலம் வந்தது.

செங்கழுநீரோடை வீதி யில் வந்தபோது திடீரென தேரின் முன்சக்கரத்தில் லேசான சத்தம் வந்தது. உடனே தேரை நிறுத்தி பார்த்தனர். அப்போது சக்கரத்தில் லேசான விரிசல் ஏற்பட்டு இருந்தது. இத னால் தேர் நிறுத்தப்பட்டு முன்பக்க சக்கரத்தை கழற்றி பின்பக்கமும், பின்பக்க சக் கரத்தை கழற்றி முன்பக்கத் திற்கும் மாற்றி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பூக்கடை சத்திரம் என்ற இடம் அருகே வந்தபோது சக்கரத்தில் திடீரென விரிசல் அதிகம் ஆனது. பின்னர் தேரை உடனடியாக நிறுத்தி சக்கரத்தை சீரமைக்கும் பணியை கோவில் நிர்வாகத் தினர் மேற்கொண்டனர். இதனால் அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக் குவரத்து பாதிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் கூடி விட்டனர். பின்னர் சக் கரத்தை தற்காலிகமாக சரி செய்து தேரை கோவில் நிலைக்கு பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர்.

திருத்தேர் உற்சவம் நடத் துவதற்கு அறநிலையத் துறை சார்பில் நேற்று முன் தினம் தான் திருத்தேர் நல்ல நிலையில் உள்ளது என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/75559.html#ixzz2tp1Ce2Z9

தமிழ் ஓவியா said...


மோடி ஸ்வாமிகளின் தனிமை உபதேசம்


- குடந்தை கருணா

இமாச்சல பிரதேசத்தில் பேசிய மோடி, தனக்கு குடும்ப வாழ்க்கை இல்லாததால், தான் ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், குடும்ப சூழல் இல்லாதவர் மட்டுமே,ஊழலை ஒழிக்க முடியும் என ஊழல் ஒழிப் புக்கு புதிய இலக்கணத்தை உதிர்த் துள்ளார் மோடி ஸ்வாமிகள்.

மோடி ஸ்வாமிகளிடம் சில கேள் விகளை கேட்கும் விரும்புகிறோம்.

1. ஊழலை ஒழிக்க குடும்ப ஸ்தர்களால் முடியாது என்பதால் தான், அத்வானியை பிரதமர் வேட் பாளராக பாஜக அறிவிக்கவில்லையா?

2. பிரதமர் மட்டுமே முடிவு செய்து, ஊழலை ஒழிக்க முடியுமா?

3. ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், என அனைவரும் குடும்ப சூழல் இல் லாதவர்களாக இருக்க வேண்டுமா?

4.மோடி ஸ்வாமிகளின் கருத்தை, பாஜக ஏற்றுக் கொள்கிறதா?

5. இல்லற வாழ்க்கை இல்லாத வர்களுக்குத்தான் இம்முறை பாஜக சார்பில் வேட்பாளராக வாய்ப்பு தரப்படுமா?

6. அத்வானி, சுஸ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்றோர் இம்முறை வேட்பாளர்களாக போட் டியிடுவார்களா?

7. எந்த ஆய்வின் அடிப்படையில் மோடி ஸ்வாமிகள் இந்தக் கருத்தை உபதேசிக்கிறார்?

8. எனக்கு குடும்ப வாழ்க்கை கிடையாது, முதல்வர் பதவியில் மாத ஊதியமாக ஒரு ரூபாய் தான் பெறு கிறேன் எனக் கூறியவர் தான்,கடந்த பதினேழு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றப் படிகளில் ஏறி வருகிறார். அதற்கு மோடி ஸ்வாமிகளின் விளக்கம் என்ன?

9. யோகேந்திர யாதவ் மோடி ஸ்வாமிகளிடம் கேட்ட கேள்வியான, அதானி குழுமத்திற்கு அதிகப்படி யான சலுகைகள் அளிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதற்கு மோடி ஸ்வாமிகளின் பதில் என்ன?

அண்மையில் ஒரு திரைப் படத்தில் ஒரு வசனம் வரும். வெள் ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வசனம் வரும். அது போலத்தான் இருக்கிறது மோடி ஸ்வாமிகளின் பேச்சு.

Read more: http://viduthalai.in/page-2/75567.html#ixzz2tp1ss9mW

தமிழ் ஓவியா said...


மதம் தேவையா?


மதத்தைக் காப்பாற்றவே கோவில்களும், சொத்துக்களும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா?அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்கவேண்டும். - (விடுதலை, 3.12.1962)

Read more: http://viduthalai.in/page-2/75562.html#ixzz2tp2xh2L1

தமிழ் ஓவியா said...


மோடியின் மோசடிப் பிரச்சாரத்திற்கு பெரும் செலவில் பின்னணிப் பாடகர்கள்! எக்னாமிக் டைம்ஸ் அம்பலப்படுத்துகிறது


புதுடில்லி, பிப்21- மக்கள் மத்தியில் போலி யான மலிவுப் பிரச்சாரத் தைச் செய்வது எப்படி என்பதற்கு மோடியின் பின் னால் உள்ள நிபுணர்கள் குழுவை ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.

தேர்தல் காலம் நெருங்க நெருங்க பாஜக-வினால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி எந்த எந்த வகையில் புதிய புதிய அறிக்கைகளை விட்டு மக்களை ஏமாற்ற முடியும் என அனைத்துத் துறை நிபுணர்களிடமும் ஆலோசனை கேட்டு வரு கிறார்.

தேர்தலை மய்யமாக கொண்டு மூன்று நிலையில் மோடி கவனம் செலுத்தி வருகிறார்.

அது 1. மக்களை ஏமாற்றும் புதிய திட்டங் கள்,

2. அதை மய்யமாக வைத்து பொதுக் கூட்டங் களில் உரையாற்றுவது,

3. அவற்றை அப்படியே ஊட கங்களின் மூலம் மக்களி டம் கொண்டு சேர்ப்பது;

இதுதான் மோடியின் தேர் தல் மோசடித் திட்டம். மோடியின் இந்த மோசடித்திட்டத்திற்கு வலு வூட்ட பல நிபுணர்கள் கொண்டகுழு உள்ளது. இக்குழுவில் பொருளாதார நிபுணர் கொலம்பிய பல் கலைக்கழக பேராசிரியர் அரவிந்த பங்கரியா, பிரபல பங்குவர்த்தக முதலீட்டு ஆலோசகர் குரு ரவி மந்தா, கொள்கை ஆய்வு மய்யக் குழுவில் உறுப்பினராக இருந்த ஜெகதீஷ் திபோராய், மனீஷ் சபர்வால் போன் றோர் உள்ளனர்.

இந்தக்குழுவின் தலை வர் போல் செயல்படும் ஜகதீஷ் பகவதி, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மீது மதிப்பு கொண் டவர். ஆனாலும், அவரது சிந்தனைக்கு மாற்றுக் கருத்து கொண்டவர். இதில் பங்கரியா பாது காப்பு மற்றும் அயலுறவுத் துறை விவாகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராம். இந்தக்குழு தொடர்ந்து இந்தியப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மோடிக்கு ஆலோசனை அளித்து வருகிறது. இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ஒருவர் இந்தக் குழுவின் ஆலோச னையின் பேரில் நரேந்திர மோடியின் உரைகள் தயா ரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் அனைவரும் மோடியின் தேர்தல் களத் தின் பின் புலத்தில் உள்ளனர்.

இந்தக் குழு தற்போது நாடு எதிர்நோக்கி இருக் கும் முக்கிய பிரச்சினை யான மின்சாரத்தை முதன் மையாக எடுத்துள்ளது.

24 மணி நேரம் மின்சாரம் என்பது சாமானியர்களின் கனவாகும். இதை மனதில் கொண்டு மின்சாரம் மற் றும் இந்த பிரச்சினையை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது, இதன் மூலம் தன்னை பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடப் போகும் ஒருவராக காட்டிக் கொள்ள நரேந்திர மோடிக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். நிறைவேற்ற இயலாதவை! மேலும் இது குறித்து ஆங்கிலப் பத்திரிகை கூறு வது மோடியின் வளர்ச்சி பற்றிய பேச்சுக்களின் பின் புலத்தில் பொருளாதார, தொழில்வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து மிகப் பெரிய ஆலோசனைக்குழு வின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இவர்களின் ஆலோ சனைப்படியே நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்த உரையை அனைத்து மேடை களிலும் பேசி வருகிறார்.

பொருளாதார நலிவில் சிக்கியுள்ளதாக மாயையை முதலில் தனது பேச்சால் உருவாக்கி, அதன் பிறகு அதற்கான திட்டங்கள் இவை என்று மக்களிடம் கூறி வாக்காளர்களை கவர்ந்து (ஏமாற்றி) வருகிறார். உண்மையில் மோடிக்கு பின்புலத்தில் நிற்கும் நிபு ணர்களின் ஆலோசனைகள் பெரும்பாலானவை நிறை வேற்ற இயலாதவையா கவே உள்ளன .

- (நன்றி: எக்னாமிக் டைம்ஸ் நாள்:19.2.2014)

Read more: http://viduthalai.in/e-paper/75683.html#ixzz2u0MywW4H

தமிழ் ஓவியா said...


முடியாது


மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது.

(குடிஅரசு, 7.5.1933)

Read more: http://viduthalai.in/page-2/75675.html#ixzz2u0NcsguV

தமிழ் ஓவியா said...


மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றம் இந்தியாவின் 29-ஆவது மாநிலம் ஆனது


தெலங்கானா புதுடில்லி, பிப்.21- கடும் அமளிக்கு இடையே, மாநிலங்களவையில் தெலுங் கானா மசோதா நேற்று நிறைவேற்றப் பட்டது.

மாநிலங்களவை நேற்று கூடியதும் பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அவரவர் மாநில பிரச்சினைகளை எழுப்பி அமளி யில் ஈடுபட்டனர்.

ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக் கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங் கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட னர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

தெலுங்கு தேச எம்.பி.க்கள், ஆந்தி ராவை பிரிப்பதற்கு எதிராக பதாகைகளை பிடித்து முழக்கமிட்டனர்.

இந்த அமளிக்கிடையே, தெலங்கானா மசோதாவை மத்திய உள்துறை அமைச் சர் சுஷில்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். அப்போது, அவரைச் சுற்றிலும் தெலங் கானா ஆதரவு எம்.பி.க்கள் மனித வளையம் போல் நின்று கொண்டனர். அவர்களை தெலங்கானா எதிர்ப்பு எம்.பி.க் கள் தாக்க முற்பட்டனர்.

அமளி காரணமாக, பிற்பகல் 2 மணியில் இருந்து 4.30 மணிக்குள் 5 தடவை சபை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நடந்த விவாதத்தின்போது, தி.மு.க. வெளிநடப்பு செய்தது. தெலங் கானா மசோதா, இந்தியாவின் கூட்டாட்சி முறை பற்றிய கவலையை எழுப்புகிறது. ஆந்திராவை பிரிப்பதை நாங்கள் எதிர்க் கிறோம். ஆகவே, வெளி நடப்பு செய் கிறோம் என்று தி.மு.க. உறுப்பினர் கனி மொழி கூறினார்.

பிரதமர் மன்மோகன்சிங் திடீரென சபைக்கு வந்தார். அவர் முன்னிலையில், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி, தெலங்கானா தனிமாநிலம் உருவாக்குவதற்கு எதிராக பேசினார். கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்படுவது தனக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

பா.ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், சீமாந்திரா பகுதிக்கு ரூ.10 ஆயிரம் கோடி சிறப்பு நிதிஉதவி அறிவிக்க வேண்டும் என்றார்.

பிரதமர் மன்மோகன்சிங் குறுக்கிட்டு பேச எழுந்தபோது, அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மசோதாவை கிழித்து வீசு என்று கூச்சலிட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள், மன்மோகன்சிங் முன்பு காகிதங்களை கிழித்து வீசினர்.

மன்மோகன்சிங் பேசுகையில், சீமாந் திரா பகுதியின் பின்தங்கிய மாவட் டங்களுக்கு சிறப்பு நிதிஉதவி திட்டம் அறிவிக்கப்படும். வரிச்சலுகை அளிக்கப் படும். சீமாந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் 6 அம்ச வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். போலா வரம் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, சீமாந்திராவுக்கு 5 ஆண் டுகளுக்கு சிறப்பு தகுதி அளிக்கப்படும் என்று கூறினார்.

இதையடுத்து, தெலங்கானா மசோ தாவை திருத்தம் இன்றி ஆதரிக்க பா.ஜனதா முன்வந்தது. ஓட்டெடுப் பின்போது, காங்கிரஸ், பா.ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் மசோதாவை ஆதரித் தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தெலுங்கு தேசம், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

கடுமையான கூச்சல்-குழப்பத்துக்கு இடையே, குரல் ஓட்டெடுப்பு மூலம், மசோதா நிறைவேறியது. இரவு 8.30 மணியளவில்தான் மசோதா நிறைவேற் றப்பட்டது.
திருத்தம் இல்லாமல் மசோதா நிறை வேற்றப்பட்டதால், அதை மறுபடியும் மக்களவைக்கு அனுப்ப வேண்டியது இல்லை. குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்கு நேரிடையாக அனுப்பி விடலாம்.
எனவே, நாட்டின் 29-ஆவது மாநில மாக தெலங்கானா உதயம் ஆனது.

Read more: http://viduthalai.in/page-2/75677.html#ixzz2u0NpCQAj

தமிழ் ஓவியா said...


மதத்தைப் பற்றி மதவாதி!


இந்துமதம் பாசிசத் தன்மை கொண்டது. அய்யாயிரம் ஆண்டுகளாக இந்துமதம் மக்களை அடிமைப்படுத்தியே வந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத் தகாதவர்களாகக் கருதி, அவர்களை மனிதனைவிட மிகக் கேவலமாக நடத்தி வருகிறது.

ஜாதிஇந்து என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்தினர். இன்றும் அவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது.

ஜாதி இந்துக்களின் தெருவிலுள்ள கிணற்றிலிருந்துகூட தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றுங்கூட தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. இந்துமதம் பெண்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி வருகிறது. இவற்றை யெல்லாம் நான் எதிர்க்கிறேன். ஆண்களைப் போன்று பெண்களையும் சமமாக கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை பார்ப்பானும் தாழ்த்தப்பட்டவனும் ஒன்றே.

மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற அனைத்து கலாச்சாரத்தையும், இதிகாசங்களையும் அழிக்க வேண்டும்; அவற்றிற்குத் தீயிட வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளவர் புனேயில் யோகா நிலையம் வைத்து நடத்தி வரும் ரஜனீஷ். அவரும் ஒரு மதவாதியே என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: ஆன் லுக்கர், டிசம்பர் 15 (1970

Read more: http://viduthalai.in/e-paper/75712.html#ixzz2u0OaWbbg

தமிழ் ஓவியா said...


நாஸ்திக வாதம்! (கிளிக்கண்ணி மெட்டு)


1. கடவுள் எனும் சொல் வெறும்
கற்பனைச் சொல் ஆகுமடா
திடமுடன் டுடுட்டு வென்றால் - மனிதா!
தெரியும் பொருளே தடா!

2. கல்லில் ஒரு கடவுள்
கருத்தில் ஒரு கடவுள்
சொல்லில் ஒரு கடவுள் - மனிதா!
தொட்டதெல்லாம் கடவுள்

3. அர்த்தமில்லாக் கடவுள்
அனர்த்தஞ் செய்யுங் கடவுள்
மெத்த இம் மேதினியில் - மனிதா!
வீண் வீணென்றே உமிழடா

4. எட்டாக் கடவு ளென்று
எட்டிப் பிடிப்ப தன்றோ?
முட்டாள் ஆஸ்திகர்கள் - மனிதா!
முற்றும் முரண் பேசுவரே

5. உழைப்பு செல்வம் காலத்தை உண்டு சும்மா இருந்திடும்
பிழைப்புத்தான் கடவுட்கென்றால் - மனிதா!
பிசகென்ன நாஸ்திகத்தில்!

6. ஏழையுலகை வாட்டிடும்
ஈனக் கடவுளைத்தான்
ஆழக்குழி வெட்டியே - மனிதா!
ஆழ்த்திப் புதைத்திடடா

7. அறிவியல் அன்றும் இன்றும்
ஆத்திகம் காத்ததில்லை
குறி, சட்டம், ஸ்தாபனத்தால் - மனிதா!
கொடும் மதம் காத்ததடா

8. அரி சிவன் அல்லா பிரம்மம்
அருஞ் சமரிட்டதாலே
சொரிந்தனர் மக்கள் ரத்தம் - மனிதா!
சொல்லவும் கொதிக்குதடா

9. அடிமை வறுமை பஞ்சம்
அநியாயம் மோசம் நாசம்
மிடிமையும் கடவுள் மேலே - மனிதா
வேர்க் கொள்ளக் கண்டோமடா

10. மனிதன் மனிதனாக!
மதங்கள் கடவுள் வீழ்க!
புனிதப் பொதுவுடமை - மனிதா!
புது உலகம் வாழ்ந்திடவே.

Read more: http://viduthalai.in/e-paper/75711.html#ixzz2u0P5WXzY

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலின் பொன்மொழிகள்

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியை பிரித்து எடுத்துவிடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட் பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.
அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத் தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங் குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.


Read more: http://viduthalai.in/e-paper/75711.html#ixzz2u0PJdH4u

தமிழ் ஓவியா said...


மெய்ஞானம் எது? பகுத்தறிவு எது?


ஞானம் - மெய்ஞானம் என்றிடில் கடவுளைப் பற்றிய அறிவு என்றும், மோட்சம் அடைவதற்கான வழிகளை அறிதல் என்றும் கூறுவர் மதத்தினர்.

அதாவது, உலக நல்வாழ்வுக்கல்லாததும், இல்லாத ஒன்றிற்கான அறிவு பெறுதல் என்பர்.

இல்லாததைப்பற்றி அறிந்து கொள்வதால் நற்பயன் பயக்குமோ? பலனுக்காகாத கற்பனை கனவு போன்றில்லையா இக்கூற்று? மெய்ஞானம் - பலன் பயக்கும் உண்மையறிவு எது என்று திருத்தக்கத் தேவர் சிந்தாமணியில் விளக்குகிறார்;

மெய்வழி தெரிதல் ஞானம்
விளங்கிய பொருள்கள் தம்மை
பொய்வகையின்றித் தேறல் காட்சி
அய்ம்பொறியும் வாட்டி
உய்வகை உயிரை தேயாதொழுகுதல்
ஒழுக்கம் மூன்றாம்

நல்லது கெட்டதைப் பகுத்தறியும் உண்மை வழியைக் கண்டறிதலே ஞானம் (உண்மை - நல்லறிவு).

பொருள்களின் உண்மையை பொய் வகையில்லாத வகையில் கண்டறிதலே நற்காட்சி. அதாவது, ஒரு பொருளை நல்லதா கெட்டதா என்று தெளிந்து அறிதலே அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியும் காட்சிப் பிரமாண மாகும்.

தகாத வழிகளில் வாழ்த்தும் உடலின் அய்ம்பொறி களையும் (பட்டினியால் தவத்தால்) வாட்டி, வாழ்க்கைச் சக்தியான உயிரைச் சிறுகச் சிறுக நலிவிக்காமல், உயிரையும் அவ்வழி உடலையும் பேணி வாழ்தலே நல்லொழுக்கமாகும். அதாவது, தகாத முறைகளை விடுத்து, நல்ல முறைகளில் சம்பாதித்து வாழ்தலே நல்லொழுக்கம் (நற்சீலம்)ஆகும்.

கடவுள் என்பதன் அருளைப் பெற என்று கூறிக் கொண்டு தவம் செய்தலையும், உண்ணா விரதமிருப்பதையும், கண்டிக்கிறார். இவை பயனற்றவை. உயிரையும் உடலையும் சிறுகச் சிறுக நலிவித்து விரைவில் சாவைத் தேடிக் கொள்ளும் இயற்கை முரண் செயல் இவை என்பதே இதன் தெளி பொருள்.

ஊன் வாட, உயிர் வாட மெய்க் காவலிட்டு தான் வாட வாட தவம் செய்ய வேண்டாம் என்று திருமங்கையாழ்வாரும் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்.

மெய்ஞானம் (நல்லறிவு, பகுத்தறிவு), நற்காட்சி (நல்ல பொருள்களைக் கண்டறிதல்), நல்லொழுக்கம் ஆகிய மூன்றுமே மக்கள் நல்வாழ்வு - இன்ப சுகவாழ்வு எய்துவதற்கு முக்கிய மூன்று பண்புகள். இவற்றை புத்தர் முத்திரையம் என்றும், சமணர் ரத்தினத்திரையும் என்றும் கூறுவர்.

இந்தப் பகுத்தறிவு மெய்ஞானத்தை நன்ஞானம், மதி ஞானம், சுருதி ஞானம், அவதி ஞானம், மன மெய்ஞானம், கேவல ஞானம் என்று அய்ந்தாக விரித்துக் கூறுவர்.

அதாவது, பொதுப்படையான நல்லறிவு (பகுத்தறிவு) புத்தியைக் கொண்டு, நல்லது கெட்டதைத் தெளிந்தறியும் ஆககம் அறிவு - தெளிந்த மதிநுட்பம் ஒரு பொருளோ, விஷயமோ பொருந்துமா, பொருந்தாதா என்று கண்டறியும் அறிவுத் தொல்லைகளை - கெடுதிகளைக் கண்டறியும் அறிவு - மனதால் உண்மையைக் கண்டறியும் சிந்தனை அறிவு (சிந்தனைச் சக்தி) இழித்தன்மையைக் கண்டறியும் அறிவு என்பவனவாம். இதன் ரத்தினச் சுருக்கக் கருப் பொருள்; பகுத் தறிவு பெறு என்ற தந்தை பெரியார் அவர்களின் நல்லுரை யேயாகும் - பகுத்தறிவே நல்வாழ்வளிக்கும் என்பதாகும்.

- விசித்திர சித்தன்

Read more: http://viduthalai.in/e-paper/75710.html#ixzz2u0PVtmMg

தமிழ் ஓவியா said...

மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே!

இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது. எல்லா மதங்களும் செத்துப் போய்விட்டன. செத்த பிணங்களே சடங்கு ரூபமாகவும் நாற்றமெடுத்து அதனால் மனித சமூகத்திற்கு பிற்போக்கு என்னும் வியாதியைக் கொடுத்ததுடன், அதைப் பெருக்கிக் கொண்டே வருகிறது.

உண்மையில் எந்த மதக்காரனும் அந்தந்த மதக் கட்டளைப்படி நடந்து கொள்ளுவதில்லை; நடந்து கொள்ள முடிவதில்லை. உதாரணமாக, பவுத்தர்கள், கிருஸ்தவர்கள், இஸ்லா மியர்கள், இந்துக்கள் என்பவர்களான சமூகங்களில் எந்த ஒரு மனிதனையாவது மதக் கட்டளைப்படி கண்டிப்பாய் நடக்கின்றவனைக் காணமுடிகின்றதா?

முதலாவதாக, வேஷத்திலும் சடங்கிலுமே சரியாக நடந்து கொள்ள முடிவதில்லை. மற்ற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்திலும், வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய நிபந்தனையிலும் நூற்றுக்கு ஒரு சதவிகிதம் கூட நிர்ணயத்துடன் நடக்கவோ, ஆசைப்படவோ கூட முடிகின்றவர் காணப்படுவது இல்லை.

இந்த நிலையில் உள்ள மக்களே தான் இன்று தங்கள் மதங்களைக் காப்பாற்ற வேண்டும், மதத்திற்கு ஆபத்துவந்து விட்டது; தவிர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு செத்த பிணத்தை எடுத்துப் போட்டு குழிதோண்டிப் புதைக்காமல், நாற்றத்தில் அழுந்திக் கொண்டிருக்கிறார்கள்.

மலத்தில் இருக்கிற புழுக்கள் எப்படி மலத்தின் நாற்றத்தை வெறுக்க முடியாமலும், உடலிலுள்ள மற்ற புழுவை இழிவாய்க் கருத முடியாமலும் இருக்கின்றனவோ அதே போல் எல்லா மனிதர்களுமே மதப் பிண நாற்றத்தில் புரளுகின்றனர். இதனால் உண்மை உணரமுடியாமல் அழுந்திக் கொண்டிருக்கின்றனர்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/75710.html#ixzz2u0PkQdt3

தமிழ் ஓவியா said...


கட்டிப்பிடி சாமியார் அமிர்தானந்தமயி திடுக்கிடும் தகவல்கள்!


கேரளாவைச் சேர்ந்த கட்டிப்பிடி சாமியார் அமிர் தானந்தமயியிடம் உதவியாள ராக இருந்த கெயில் ட்ரெட் வெல் என்ற காயத்ரி, ஹோலி ஹெல் (Holy Hell) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளி யிட்டுள்ளார்.

அந்த புத்தகத் தில் அமிர்தானந்தமயியின் தகிடுதத்தங்கள் பலவற்றை யும் அம்ப லப்படுத்தி யுள்ளார். அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் பணத்தை தங்க மாக மாற்றி அவரது உற வினர்கள் எப்படியெல்லாம் செல் வச் செழிப்புடன் இருக்கின்றனர் என்றும், ஏதேனும் தவறு செய்தால் அமிர்தானந்தமயி அடிப்பது, கடிப்பது போன்ற தண்டனைகள் கொடுப்பார் என்றும் காயத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் அமிர்தானந்தமயியின் ஆண் சீடர்களால், தான் பாலியல் வன்கலவிக்கு உள்ளான தாகவும் கெயில் ட்ரெட் வெல் என்ற காயத்ரி தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Read more: http://viduthalai.in/page1/75661.html#ixzz2u0jq4yFP

தமிழ் ஓவியா said...


குற்றஞ்சாட்டப்பட்டோர் விடுதலைக்கு எதிர்ப்பு காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் வேறுபாடு கிடையாது

தமிழக முதல்வரின் முடிவு அபாய கரமானது, எனக் கூறி தமிழக அரசின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி, நீதிமன்றம் செல்லுமாம். ராஜீவ்காந்தி படு கொலைக்கு தொடர்புள் ளவர்கள் என்று கூறி தூக்குத்தண்டனை விதிக் கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் உட்பட ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யும் முடிவை நேற்று தமிழக முதல்வர் சட்டமன்றத் தில் வெளியிட்டார். இதுகுறித்து மத்திய அரசின் உள்துறை அமைச் சகத்திற்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். தமிழக அரசின் முடிவை காங் கிரஸ் கடுமையாக எதிர்த் துள்ளது.

அபிஷேக் சிங்வி தமிழக அரசின் இந்த முடிவு பற்றி காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கூறியதாவது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அனைத்து மாநிலத்திற் கும் உரிமை உள்ளது, ஆனால் இந்த உரி மையை தவறாக பயன்படுத்தி கொலைக் குற்ற வாளிகளை விடுதலை செய்வது என்பது அரசி யல் சாசனத்திற்கும் அதன் மாண் பிற்கும் விரோத மானதாகும். மேலும் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை அரசியல் அனுபவ மில்லாத பொறுப்பற்ற விளம்பரத் திற்காக செய்யும் ஒரு காரியமாகும். ஜெயலலிதாவின் இந்த நடவடிக் கையை எதிர்த்து நாங்கள் நீதிமன் றத்தை நாடுவோம், இந்த தீவிர வாத கொலைச் சம்பவம் மூலம் ராஜீவ் காந்தி மாத்திரம் மரணமடையவில்லை, பல தமி ழர்களும் உயிரிழந்தனர், உயிரிழந்த குடும்பத்தின ருக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகி றது என்றார். அஜய் மக்கன்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கன் தமிழக அரசின் முடிவிற்கு கண்டனம் தெரிவித்துள் ளார். தமிழக அரசின் இந்த முடிவு நீதிக்கு புறம்பானது மாத்திரமல்ல, ராஜீவ்காந்தியுடன் மரணமடைந்த அனை வரின் குடும்பத்திற்கு அநீதி இழைப்பதாகும். இந்த செயல் இந்திய நாட்டின் சட்டத்தின் மீது முழு நம் பிக்கை கொண்ட அனை வரின் நம்பிக்கைக்கும் முரணாக அமைந்து விடும். மேலும் தீவிரவாதத்தின் மீது எடுக்கும் நடவடிக் கைக்கு பெரிதும் பாதகம் ஏற்படுத்தும் என்றும் கூறி னார்.

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்

தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது, இதில் என் னுடைய சொந்த கருத்து என்று எதுவும் சொல்வ தற்கில்லை. காங்கிரஸ் கட்சி இந்த முடிவு குறித்து கண்டனம் தெரிவித்துள் ளது என்றார். இந்த விவகாரத்தில் பாரதீய ஜனதா ஏன் அமைதி காக்கிறது என்று தெரிய வில்லை, அப்சல் குருவை தூக்கிலிட கூக்குரலிட்ட பாரதிய ஜனதா ராஜீவ் காந்தி விவகாரத்தில் மவுனம் காப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் குறிக் கிறது என்று காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிஜேபி என்ன கூறுகிறது?

ஜெயலலிதாவின் முடிவு விடு தலைப்புலிகளுக்கு சாதகமானதாக அமையும் என்று பார தீய ஜனதா கட்சி தலை வர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்தார். தமிழக அரசின் எழுவர் விடுதலைக்கான தமிழக அமைச் சரவை முடிவு பற்றி பிரதான எதிர் கட் சியான பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான அருண்ஜெட்லி கூறும் போது தமிழக அரசின் இந்த விபரீத முடிவு அரசியல் முதிர்ச்சியற்ற தன் மையைக் குறிக்கிறது.

தமிழக அரசின் இந்த முடிவு உண்மையில் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புப் பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை, இது முழுக்க முழுக்க தூக்குத் தண் டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி கருணை மனு தாமதத் தினால் ஏற்பட்ட ஒன்றாகும். இருப் பினும் தமிழக அரசு அரசியல் கார ணங்களுக்காக எடுத்திருக்கும் இந்த நடவ டிக்கையை பாரதீய ஜனதா கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/75659.html#ixzz2u0k67s74

தமிழ் ஓவியா said...


கா. நமச்சிவாயனார்


தமிழ் உலகில் பெரும் புலமைக்குச் சொந்தக் காரர் வரிசையில் கா. நமச்சிவாயனார் அவர் களுக்குப் பெருமை மிக்க இடம் உண்டு.

திராவிடர் இயக்கம் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியும் திராவிடர் திரு நாள் பொங்கல் என்றும் மக்களிடையே பரப்பி தமிழர் பண்பாட்டுத் திசை யில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தாகும்

அந்தக் கால கட்டத் தில் (1934இல்) தமிழின் உயர்வினை கா. நமச் சிவாயனார் கீழ்க்கண்ட வாறு பாடுகிறார்.

தேனினும் இனிய நாத செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குதென் மொழியே
தானியல் சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!
என்று தமிழுணர்வின் பெருமையைப் பாடினார் கா. நமச்சிவாயனார்.

அவர் குறித்துத் தந்தை பெரியார் கூறும் ஒரு தகவல் - அந்தக் கால கட்டத்தில் தமிழின் - தமிழரின் நிலை எப்படி இருந்தது என்பதனை விளக்கவல்லதாகும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ் கிருத புரொஃபசர் வாங் கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரொஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியா சம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ் கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ் கிருத புரொஃபசருக்கு ரூ.350 சம்பளம்.

தமிழ்ப்பண்டிதருக்கு 75 ரூபாய்தான்சம்பளம் சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர்- புரொஃபசர்; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு கா.நமச்சிவாய - முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்த போது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத் தான் ஞாபகம் - அதே நேரத்தில் அங்கு சமஸ் கிருத புரொஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கிய சம் பளம் சுமார் ரூ.300க்கும் மேல்; ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு பனகல் ராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்! என்றும் சொன்னார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன் மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார் என்று தந்தை பெரியார் எழுதினார்.

(விடுதலை 15.2.1960)

இது ஒரு பானை சோற் றுக்கு ஒரு பருக்கைப் பதம்!

குறிப்பு: இன்று பெரும் புலவர் கா.நமசிவாய (முதலி யார்) பிறந்த நாள் (1876).

- மயிலாடன் -20-2-2014

Read more: http://viduthalai.in/page1/75655.html#ixzz2u0kQ3QPl

தமிழ் ஓவியா said...

வைரம் எவ்வளவு ஆழத்தில் இருந்து கிடைக்கிறது?

வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா? ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப் போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.

ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக் கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மைல் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.

ஆனால் பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மைல் தொலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.

Read more: http://viduthalai.in/page1/75626.html#ixzz2u0lypyFZ

தமிழ் ஓவியா said...


கல் மீனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?


கல் மீன் எதிரியின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக தரைமட்டத்தில் வாழும். இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாது. மிகவும் சோம்பேறி மீன். அசைவற்றுக் அப்படியே கல்லு மாதிரி இருப்பதால் இப்பெயர் வந்தது.

இந்தக் கல் மீன் மிகவும் சாந்தமானது. ஆனால் இதுகல் மாதிரி இருப்பதால் அடையாளம் தெரியாமல் யாராவது இதை சீண்டி விட்டால் நைசாக தன் முதுகுப்புற முள்ளை அப்படியே விரிக்கும். இந்த முள் நாம் உடலில் குத்தும் போது விஷத்தை உடலில் பாய்ச்சிவிடும். விஷம் உடலில் ஏறியதும் பொறுக்க முடியாத வலி ஏற்பட்டு பயங்கரமாக கத்துவர்.

வாயில் நுரை தள்ளும். பனிரெண்டு மணி நேரம் இந்த வலி நீடிக்கும். தூக்க மருந்து வலி நிவாரண மருந்து எது கொடுத் தாலும் பலன் இருக்காது. கடித்த இடம் பயங்கரமாக வீங்கிவிடும். கடிபட்டவர் நிச்சயமாக இறந்துவிடுவார்.

Read more: http://viduthalai.in/page1/75630.html#ixzz2u0noA8sU

தமிழ் ஓவியா said...

அதென்ன? ரோச்சி எல்லை!

ஒரு கோளினுடைய துணைக் கோளானது, அந்த கோளைக் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே நெருங்க முடியும் என்பதை 1850ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டு கணிதவியல் அறிஞர் எட்வர்டு ரோச்சி இதை கணிதவியல் ரீதியாக நிரூபித்தார். இது ரோச்சி எல்லை என அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு கோளிற்கும் ரோச்சி எல்லை உண்டு. அது அந்தந்தக் கோளின் சுற்றுவட்டத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கும். சனிக் கோளின் ரோச்சி எல்லை அதன் மய்யத்தி லிருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த தூரத்தைக் கடந்து உள்ளே செல்லும் துணைக் கோள்கள் வெடித்துச் சிதறி, ஒரு வட்டத்தை உருவாக்கு கின்றன. ஆனால் புவியிலிருந்து செல்லும் செயற்கைக் கோள்களுக்கு ரோச்சி எல்லை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page1/75630.html#ixzz2u0nwigtX

தமிழ் ஓவியா said...

மனித குருதி நிறம் என்ன?

மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்லது அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

Read more: http://viduthalai.in/page1/75628.html#ixzz2u0o8kLVw

தமிழ் ஓவியா said...


உலகின் மிகக் கொடிய விஷமுள்ள பூச்சி!


உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி என்றதும் அது எங்கோ அடர்ந்த ஊசியிலைக்காடுகளிலோ, மலை களிலோ இருக்கும் என்று உங்கள் எண்ணம் ஓடினால்.. உங்கள் ஊகம் தவறு ! மிகக் கொடிய விஷமுள்ள பூச்சியினம் உங்கள் வீட்டு கொல்லைப்புறத்திலும் இருக்க வாய்ப்புள்ளது ! முதலில் பூச்சி என்றால் என்ன ?

6 கால்களும் 3 உடல் பாகங்களும் உடையதுதான் பூச்சி என்றழைக்கப்படுகிறது ! சரி, அந்த மிகக் கொடிய விஷமுள்ள பூச்சி எது தெரியுமா ? எறும்பு ?!

ஆம் எறும்பேதானாம் ! ஆனால் நாம் சாதாரனமாக பார்க்கும் இந்த எறும்பு இல்லை. அதன் பெயர் ஹார்வஸ்ட் ஆண்ட் என்றழைக்கப்படும் அறுவடை எறும்பு ஆகும்.

உருவத்தோடு சதவீத அடிப்படையில் ஒப்பிடுகையில் ஒரு தேனீக்கு இருக்கும் விஷத்தை விட இவ்வகை எறும்புகளுக்கு அதிக விஷம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

எறும்புகள் கடிப்பதும்,கொட்டுவதும் இரு வெவ்வேறு நடவடிக்கைகளாக இருப்பது கவனிக்கத்தக்கது. சில எறும்புகள் கடிக்கும் ஆனால் கொட்டுவதில்லை; சில எறும்புகள் கடித்து விட்டு கடித்த இடத்தில் விஷத்தை பீய்ச்சியடிக்கின்றன.

சில எறும்பு வகைகள் கொடுக்கு களால் கவ்விப்பிடித்துக்கொண்டு கடித்த பாகத்தில் தொடர்ச்சி யாக விஷத்தை செலுத்தும் பழக்கம் கொண்டவையாக இருக்கின்றன.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்: சுமார் இரண்டு கிலோ எடையுள்ள ஒரு எலியை இவ்வகை எறும்புகள் பன்னிரண்டு முறை கொட்டினால் இறந்து விடுமாம்.

Read more: http://viduthalai.in/page1/75628.html#ixzz2u0oEnYAL

தமிழ் ஓவியா said...


விண்வெளிக்கு எளிய வழி! ஏழு மணி நேரத்தில் செல்லலாம்


சற்று தொலை தூர ஊர் என்றால் பேருந்து, ரயில் பயணத்திலேயே 7,8 மணி நேரம் ஆகும்.

ஆனால் சமீபத்தில் பூமியில் இருந்து விண்வெளியில் வீரர்கள் வெறும் 6 மணி நேரப் பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து சாதனை படைத்து இருக்கிறார்கள். இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள், ஓர் அமெரிக்க விண்வெளி வீரர்தான் அந்தச் சாதனை யாளர்கள்.

கஸகிஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இவர்களின் சோயூஸ் காப்சூல்ஸ்' விண்வெளிச் சுற்றுப்பாதை அவுட் போஸ்ட்டான சர்வதேச விண்வெளி நிலையத்தை 6 மணி நேரத்துக்குள்ளாக அடைந்து விட்டது. வழக்கமான இந்த விண்வெளிப் பயணத்துக்கு ஆகக்கூடியது 51 மணி நேரம்.ஆனால் ஒரு குறுக்கு வழி'யில் சென்றதன் மூலம் 45 மணி நேரத்துக்குள் முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தை வீரர்கள் அடைந்துவிட்டனர்.

எக்ஸ்பிரஸ் ரூட் என்ற புதிய வழியின் மூலம்,அமெரிக்க விண்வெளி வீரர் கிரிஸ் காஸ்டி,ரஸ்ய விண்வெளி வீரர்கள் பாவல் வினோகி ரடோவ்,அலெக்ஸ்சாண்டர்,மிருஸ்கின் குழுவின் சோயூஸ்கேப்சூல்ஸ்,வெறும் 5 மணி நேரம் 45 நிமிடங்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தைத் தொட்டது. அங்குள்ள பாய்ஸ் மாட் ஊளில் பார்க்' ஆனது. அய்ந்தரை மாத விண்வெளி ஆய்வு பயணமாக இக்குழு சென்றுள்ளது.

இதற்கு முந்தைய விண்வெளிப் பயணக் கலங்கள் அனைத்துமே -தோது நாசாவின் ஓய்வு பெற்ற' ஸ்பேஸ் சட்டல்களாக இருக்கட்டும்-சர்வேதேச நிலையத்தை எட்ட குறைந்த பட்சம் இரண்டு நாள்கள் எடுத்துக் கொண்டி ருக்கின்றன.

இப்படி விரைவாக சர்வதேச விண்வெளி நிலையத்தை எட்டியதால்,நெருக்கடியான விண்கலத்தில் இரண்டு நாள்களுக்கு அடைபட்டுக் கிடக்கும் சிரமத்தில் இருந்து விடுதலை என்று நிம்மதி பெருமூச்சு விடு கிறார்கள், இந்த விண்வெளி வீரர்கள்!

Read more: http://viduthalai.in/page1/75627.html#ixzz2u0oPfxww

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக இ-மெயில் செய்ய வசதி

புதுடில்லி, பிப்.20- பாலி யல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்கள் இனி உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக இ-மெயில் அல் லது கடிதம் மூலமாக தங் களது புகார்களை பதிவு செய்யலாம்.

நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வரும் பெண் களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் இது தொடர்பான புகார்களை பெற உச்சநீதிமன்ற பெண் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 6 பெண் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை சாராத 2 வெளி நபர்கள் கொண்ட குறை தீர்ப்பு குழு ஒன்றை சமீ பத்தில் ஏற்படுத்தினார்.

பணியிடங்களில் பெண் களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடர்பாக விஷாக்கா வழக்கில் உச்சநீதி மன்றம் வழிகாட்டி நெறி முறைகளின்படி இந்த குழு செயல்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த குழு வுக்கான உறுப்பினர்கள் அனைவரும் நியமிக்கப்பட் டுள்ள நிலையில் இந்த குறை தீர்ப்பு மய்யம் முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள் ளது.

தங்களுக்கு நேர்ந்த பாலி யல் வன்கொடுமை பற்றி புகார் தெரிவிக்க விரும்பும் பெண்கள், இனி நேரடியாக இந்தக் குழுவுக்கு இ-மெயில், பதிவு தபால், விரைவு தபால் (ஸ்பீட் போஸ்ட்) அல்லது கொரியர் மூலமாக புகார் தெரிவிக்கலாம். நேரில் சென்று புகார் அளிக்க விரும் புபவர்கள் உச்சநீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் குழுவின் அலுவல கத்தைத் தொடர்பு கொள்ள லாம்.

இ-மெயில்

பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக ரகசியாக மாகவும், நியாயமான முறை யிலும் உரிய விசாரணை நடத்தப்படும். புகார் அளிப் பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முக வரி: gupta.rachna@indian judiciary.gov.in

மேற்கண்ட இ-மெயில் முகவரியில் வன்கொடுமை யால் பாதிக்கப்படும் பெண் கள் தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம்.

Read more: http://viduthalai.in/page1/75613.html#ixzz2u0ogZRHZ

தமிழ் ஓவியா said...

அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்


இந்தியாவின் நிலைப்பாடு என்ன? மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி கேள்வி

புதுடில்லி, பிப்.20- அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப் பாடு என்ன என்று கவிஞர் கனிமொழி, மாநிலங்கள வையில் உரையாற்றுகை யில் கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி உரை யாற்றுகையில், தமிழக மீன வர்களை இலங்கைக் கடற் படையினர் நடுக்கடலில் இந்திய எல்லையில் தாக் கப்பட்டு வருவது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக இந்த அவையில் இந்தக் கூட்டத் தொடர் முழுவதுமே நாங் கள் பேசவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அனு மதி கேட்டு வருகிறோம்.

ஆனாலும், இது குறித்து பேச எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதம் அய்க்கிய நாட் டின் மனித உரிமை கவுன் சிலில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர் மானம் கொண்டு வரவிருக் கிறது. அதுகுறித்து இந்தியா வின் நிலைப்பாடு என்ன? என்பதைப்பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

இவ்வாறு குறிப்பிட்ட கவிஞர் கனிமொழி அவர் கள், மேலும் உரையாற்று கையில், தெரு வியாபாரி கள் மசோதா உள்ளிட்ட இரண்டு மசோதாக்களை தி.மு.க. ஆதரிக்கிறது என்றும், அதே நேரத்தில் மாற்றுத் திறனாளி கள் மசோதாவை எதிர்க்கி றோம் என்றும் அந்த மசோ தாவை நிலைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என் றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் கமல் நாத் இதற்கு பதிலளித்து உரையாற்றுகையில், உறுப்பினர் கவிஞர் கனி மொழி, பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப் பட்டு வருவதாக தெரிவித் தார். மேலும் அய்.நா. மன் றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசு தனது நிலையை தெரிவிக்கவேண்டும் என் றும் வலியுறுத்தினார்.

தமிழக மீனவர்கள் தாக் கப்படுவது குறித்து உறுப் பினர்களின் வேதனையை தாமும் பகிர்ந்து கொள்வ தாக நாடாளுமன்ற விவாக ரத்துறை அமைச்சர் கமல் நாத் கூறினார்.

மீனவர்கள் தாக்கப்படு வதை தடுக்கவும், சிறையி லிருந்து மீனவர்களை விடு விப்பதற்கும், இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் கமல்நாத் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/75613.html#ixzz2u0opAM6Y