Search This Blog

12.2.14

வந்தே மாதரத்தின் தாத்பரியம் என்ன?
சென்னையை அடுத்த வண்டலூரில் கடந்த 8ஆம் தேதி நரேந்திர மோடி பேசினார். அந்தக் கூட் டத்தில் கலந்து கொண்ட திருவாளர் இல. கணேசன் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடினா ராம். அவருக்குப் பாடத் தெரியும் என்பதற்காக தனது திருவாயைத் திறந் தாரா? சங்கீதத்தில் புலி என்பதற்காக தனது சாரீ ரத்தைக் காட்டிக் கொண் டாரா? அதெல்லாம் ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது!

நரேந்திரமோடி இப் பொழுதெல்லாம் முஸ்லீம் களைத் தாக்கிப் பேச மாட் டார் - வேண்டுமானால் தாஜா செய்வார்! அவர் முகத்தில் விழுந்த மத வெறி கரும் புள்ளியைத் துடைத்தெடுக்க படாத பாடுபடுகிறார். இந்த நிலையில் வீண் வம்பை விலைக்கு வாங்க முடியுமா?

அந்தக் குறையைப் போக்குவதற்குத்தான் திரு வாளர் இல. கணேசன் தன் சாரீரத்தை அரங்கேற்றினார்.

வந்தே மாதரம் என்ற பாடலை எழுதியவர் வங்கா ளத்தைச் சேர்ந்த பங்கிம்சந் திர சட்டர்ஜி என்பவர்; 1894இல் வங்காள மொழி யில் எழுதப்பட்ட ஆனந்த மடம் எனும் நாவலில் இடம் பெற்ற பாடல்தான் இந்த வந்தே மாதரம்!

அந்த நாவலில் காணப் படும் கதையம்சமும், உரை யாடலும் இஸ்லாமியர்க ளுக்கு எதிரானவை என்பது மட்டுமல்ல; அவர்களை நாட்டை விட்டே துரத்திய டிக்க வேண்டும் என்பது தான் அந்த நாவலின் அடி நாதம். அந்த நாவலின் எட்டாம் அத்தியாயத்தில் ஒரு காட்சி; ஒரு கிராமமே கொள்ளையடிக்கப்படுகிறது. திடீரென ஒரு முழக்கம்! முஸ்லீம் களைக் கொல்லு! கொல்லு!! என ஒரே ஆர்ப் பரிப்பு! வந்தே மாதரம் எனும் பாடல் பீறிட்டுக் கிளம்புகிறது.

அடுத்து ஒரு குரல்: ஓ சகோதரர்களே! மசூதிகளை யெல்லாம் தரை மட்ட மாக்கி, அந்த இடத்திலே மாதவர் ஆலயத்தைக் கட் டும் நாள் விரைவில் வரும் (பாபர் மசூதி இடிப்பை இந்த இடத்தில் நினைவு கொள்க!) என்றுபிரசங்கம்.

வந்தே மாதரத்தின் தாத்பரியம் என்ன என்பது ஓரளவிற்கு இப்பொழுது புரிந்திருக்குமே!

1937இல் ஒரிசா சட்டப் பேரவையில் வந்தே மாத ரம் தேசிய கீதமாகப் பாடப் பட்டது. சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. சட் டப் பேரவைத் தலைவரி டம் முறையிடப்பட்டது. தேசிய கீதம் பாடும் பொழுது உட்கார்ந்திருப்பதும், எழுந் திருப்பதும் அவரவர்களின் விருப்பம் என்று கூறி விட் டார் சபாநாயகர்.

அதே கால கட்டத்தில் 1938இல் சென்னை மாநிலத் தில் என்ன நடந்தது? சக்ர வர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) அப்பொழுது சென்னை மாநிலப் பிரதமர்.

சட்டப் பேரவைத் தலை வராக இருந்தவர் புலுசு சாம்பமூர்த்தி. சட்டப் பேரவை தொடங்கும் போது வந்தே மாதரம் பாடலைப் பாடச் செய்ய வேண்டும் என்பது அவரின் பேரவா! பாடவும் பட்டது; முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்த னர். இந்துக் கடவுள்களைப் போற்றித் துதிக்கும் பாடலை நாங்கள் எப்படிப் பாட முடி யும்? என்று எதிர்க் கேள்வி வைத்தனர்.

குல்லூகப்பட்டர் பிரத மர் ஆச்சாரியார் ஒரு தந்திரம் செய்தார் (அதுதானே அவ ருக்கே உரிய குணாம்சம்!)

சபை அலுவல் தொடங் கும் நேரம் காலை 11 மணி  -அதற்கு முன்னதாகவே வந்தே மாதரம் பாடி விட லாம், மற்றவர்கள் அதற்குப் பின் அவைக்கு வரலாம் என்று நரியை நனையாமல் குளிப்பாட்டப் பார்த்தார். வேண்டுமானால் வந்தே மாதரத்தோடு வேறு மதப் பாடல்களையும் இணைத் துக் கொள்ளலாம் என்றும் கூறினார். இந்தத் தந்திர வலைக்குள் சிக்கிக் கொள்ள முசுலிம்கள் தயாராக இல்லை; முடிவு வந்தே மாதரம் வராத மாதரமாக ஆக்கப் பட்டு விட்டது.

இதற்குள் இவ்வளவு சரக்குகள் இருக்கின்றன. முஸ்லீம்களை  நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்ற விஷம் அந்தக் குப்பிக் குள் இருக்கிறது.
இந்துத்துவா கூட்டத் தில் இஸ்லாமியர்களைத் தாக்கிப் பேசாமல் இருக்க முடியுமா? சந்தர்ப்பவாத மாக மோடி பேசாவிட்டா லும் நம் உணர்வின் வெறியை வெளிப்படுத்தா மல் இருக்க முடியுமா? இருக்கலாமா? என்ற எண்ணத்தோடுதான் திருவாளர் இல. கணேசன் வாள்(ல்) வந்தே மாதரம் பாடலை, வண்டலூர் கூட் டத்தில் முழுமையாகப் பாடித் தீர்த்திருக்கிறார் புரிகிறதோ!

காந்தியைப் படு கொலை செய்த நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தில் கடைசிப் பகுதியாகக் கூறி முடித்த வரியில்கூட அந்த வந்தே மாதரம் இருக் கிறதே!

அகண்டபாரத் அமர் ரஹே, வந்தே மாதரம் 

                 ------------------------- கருஞ்சட்டை -"விடுதலை” 11-2-2014 யில் எழுதிய கட்டுரை

23 comments:

தமிழ் ஓவியா said...


மூன்றாவது அணிபற்றி நரேந்திர மோடி


பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர மோடிக்கு இப்பொழுது மேலும் சில சிக்கல்கள் சிரங்காக உருவெடுத்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சி ஒருபுறம்; டில்லி தேர்தல் முடிவுகள் மோடியையும் அவரது பரிவாரங்களையும் பாடாகப்படுத்தியுள்ளன. அந்த ஆத்திரம் அவர்களின் அலுவலகத் தைத் தாக்குவது வரை கொண்டு வந்து விட்டுள்ளது.

கடுமையான வார்த்தைகளால் அர்ச்சிக்கவும் ஆரம்பித்து விட்டனர்; இன்னொரு புறம் - மூன்றாவது அணி, அது குறித்தும் திருவாளர் மோடி மூன்றாந்தர அணி என்று மூர்க்கமாகத் தாக்க ஆரம்பித்து விட்டார்.

தொடக்க முதலே அய்க்கிய ஜனதாதளம் - அதன் தலைவர்களும், குறிப்பாக பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் பி.ஜே.பி.மீது கடுமையான விமர்சனத்தை வைத்து வருகின்றார். பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துக் கொண்டி ருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்துக்கு பீகாருக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி வந்துவிடக் கூடாது என்பதிலே தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். கூட்டணியிலிருந்து பிஜேபி விலகியது குறித்து சிறிதும் அவர் அலட்டிக் கொள்ளவும் இல்லை. பிஜேபி என்பது மதவாதக் கோட்பாடுள்ள ஒரு நோய் என்கிற அளவுக்கு படம் பிடித்தும் காட்டி விட்டார்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கும் பி.ஜே.பி.யின் முகத்திரையைக் கிழிக்க ஆரம்பித்துள்ளார். ராமன் கோவில் பிரச்சினையைத் தேர்தல் ஆதாயத்துக்காக பிஜேபி பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்துகிறார்.

இடதுசாரிகள் எப்பொழுதுமே பிஜேபியை விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தான்.

இந்த மூன்றாவது அணியின் முக்கிய பங்குதாரர் யார் என்றால் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. அதன் பொதுச் செயலாளர், செல்வி ஜெயலலிதா தான்; மூன்றாவது அணி வெற்றி பெற்றால், தான்தான் பிரதமர் என்ற கனவில் மிதக்கக் கூடியவர்; தேவேகவுடாவுக்கு அடித்ததுபோல லாட்டரி அடிக்காதா என்று கருதிக் கொண்டிருக்கக் கூடியவர்.

நியாயமாக பிஜேபியையும், அதன் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியையும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தானே கடுமையாகச் சாட வேண்டும்! தோலுரித்துக்காட்டிட வேண்டும். அதுவும் மூன்றாவது அணி என்பது மூன்றாந்தர அணி என்று மோடி விமர்சித்த நிலையில், கடுமையாகச் சாடிய நிலையில், ஜெயலலிதா தரப்பிலிருந்து உக்கிரமான பதிலடிச் சம்மட்டி ஏன் புறப்படவில்லை?

தன்மீது ஒரு துரும்பு அளவு மற்றவர்கள் கிள்ளிப் போட்டால்கூட விட்டேனா பார்! என்று விடுபட்ட அம்புபோல அக்னி அம்புகளால் சரம் தொடுக்கும் பாணியைக் கொண்ட செல்வி ஜெயலலிதா மவுன சாமியாராக இருப்பது - ஏன்?

ஜெயலலிதா பதவியேற்றால் தனி விமானத்தில் மோடி சென்னைக்கு வருவார்; மோடி பதவியேற்றால் தனி விமானத்தில் அகமதாபாத் போய் சேர்வார் ஜெயலலிதா. சென்னைக்கு வந்தால் நாற்பது வகை சிறப்பு விருந்து வைத்து, உபசரித்து திக்கு முக்காடச் செய்யக் கூடியவர்.

ஆனாலும் தனக்குப் போட்டி என்று வந்த நிலையில் நரேந்திர மோடி, ஜெயலலிதாவையும் சேர்த்துத்தான் மூன்றாவது அணியின் மீது மோதிடத் தயாராகி விட்டார்; மோசமான வார்த்தைக் கற்களால் கவண் வீசுகிறார். என்றாலும் தமிழ்நாடு முதல் அமைச்சர் 16ஆவது மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று டில்லிக் கோட்டையில் அமரத் துடிதுடித்துக் கொண்டு இருப்பவர், மோடிக்குப் பதிலடி கொடுக்க மறுப்பது ஏன்?

திருவாளர் சோ ராமசாமியின் அறிவுரையா - வழிகாட்டுதலா? மோடியைத் தாக்க ஆரம்பித்தால் ஊடகங்கள் திசை மாறிப் போய் விடும் என்ற அச்சமா?

தேர்தலுக்குப் பிறகு உருவாகும் - அரசியல் சூழல் (கற்பனையாகத்தான்) கெட்டுப் போய் விடக் கூடாது என்ற கெட்டிக்காரத்தனமான தொலை நோக்கா?

மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் பரிதாப நிலையை எண்ணிப் பரிதாபப்படத் தான் வேண்டியுள்ளது. ஆனாலும், தேர்தலுக்கான நாள்கள் நெருங்க நெருங்க மூன்றாவது அணி - தேசிய ஜனநாயகக் கூட்டணி (மோடி)களுக்கிடையே கத்திகளை இறக்கை களில் கட்டிக் கொண்டு ஆவேசமாக போரிடும் சேவல் சண்டைகளை நாடு காணத்தான் போகிறது.

Read more: http://viduthalai.in/page-2/75087.html#ixzz2t3xA9i5e

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


சிபாரிசு

செய்தி: அரசியல் கட்சி யானது காந்திய மக்கள் இயக்கம்; 2016 தேர்தலில் போட்டியிட முடிவு.

சிந்தனை: கட்சியின் கொடி யில் ஸ்வஸ்திக் தேர்தல் சின் னமாக கோட்சேயின் துப் பாக்கி - இவற்றைச் சிபாரிசு செய்கிறோம்.

Read more: http://viduthalai.in/e-paper/75072.html#ixzz2t3xzNk56

தமிழ் ஓவியா said...


பொறுப்பற்றவர் மோடி! அசாம் முதல்வர் தாக்கு


கவுகாத்தி, பிப். 11-அசாமில் இரண்டு நாட் களுக்கு முந்தைய தனது தேர்தல் பிரச்சாரத்தில் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ள பா.ஜ.க. பிர தமர் வேட்பாளர் நரேந்திர மோடி பொறுப்பற்றவர் என்று அசாம் முதல்-அமைச்சர் தருண் கோகாய் கூறியுள்ளார்.

கவுகாத்தியில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மோடி குறித்து தருண் கோகாய் மேலும் பேசியதாவது:-

இன்று மோடியை பற்றி அம்பலப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. மோடியை போன்ற பொறுப் பற்ற தலைவரை நான் இதுவரை பார்த்ததில்லை. அசாம் மாநிலம் பின்தங்கி யுள்ளதாக மோடி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். தேர் தல் வரும்போதும், கவு காத்தி விமானநிலையத்தில் கால் வைக்கும் போதும் மட்டுமே மோடி அசாம் குறித்து கவலைப்படுகிறார். அசாமை விட்டு சென்ற தும் மறந்து விடுகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவர் அசாமிற்கு எதுவும் செய்யவில்லை. காந்தியாரின் மரணத்திற்கு காரணமான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஈடுபாடுமிக்க தொண்டராக மோடி இருக் கிறார்.

என்னுடைய தொலை நோக்கு பார்வையும் மோடி யின் தொலைநோக்குப் பார் வையும் வேறு. மோடியின் பார்வை எப்படி ஆடைகள் அணிவது? எப்படி பெரிய அமெரிக்க நிறுவனங்களி டம் பேசுவது என்பதை பற்றியது. ஆனால் கிரா மத்து மக்களுக்காகவும், சாதாரண மனிதனுக்காவும் உழைப்பதே என்னுடைய பணியாகும்.

குஜராத்துடன் ஒப்பி டுகையில் அசாமின் மொத் தக் கடன் ரூ.29,200 கோடி, ஆனால் குஜராத்தின் கடன் ரூ.1,76,500 கோடி. 2013இல் அசாமின் தனி நபர் கடன் ரூ.9,368, ஆனால் மோடி யின் மாநிலத்தில் ரூ.29,228. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மோடி முற்றி லும் தவறான புள்ளி விவ ரங்களை தெரிவித்துள்ளார். இருந்தாலும் அசாமைவிட குஜராத் நகர்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகம் செலவிடுகிறது.
ஆரோக்கியம் குறித்த குறியீட்டில் இந்தியா விலேயே அசாம் 3ஆம் இடத்தில் உள்ளது. ஆனால் குஜராத் 13ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது. கல்வி யில் அசாம் 13ஆவது இடத் தில் உள்ளது. ஆனால் குஜ ராத் 20ஆவது இடத்தில் தான் உள்ளது. குஜராத்தை விட அசாம் மாநிலத்தில் குற்றங்கள் நடைபெறுவது குறைவு. அசாம் மாநிலம் சட்டவிரோதமாக இடம் பெயர்தல், வெள்ளம், பொரு ளாதார வளர்ச்சியின்மை, கிளர்ச்சிகள் போன்ற பிரச் சினைகளை சந்தித்து வருகிறது. ஆனால் குஜராத்தில் இது போன்ற பிரச்சினைகள் கிடையாது.

குஜராத் ஒருபோதும் நிதிச்சிக்கலில் இருந்தது கிடையாது. சுதந்திரம் பெற் றது முதல் வசதியாகவே இருந்துள்ளது. ஆனால் அசாமின் பொருளாதாரம் கடனில் உள்ளது. இங்கு ஊதியம் மிக்குறைவு. சட் டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இதற்கு மத்தி யிலும் நாங்கள் நன்மை களை செய்து வருகின்றோம். குஜராத்தைக் காட்டிலும் அசாமில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவு.

உடல்நலம் பாதிக்கப் பட்ட பூபென் ஹசரிகா, பா.ஜ.க நாடாளுமன்ற உறுப் பினராக இருந்தாலும் அவருடைய மருத்துவச் செலவுகளை அசாம் அரசு ஏற்றுக்கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/75075.html#ixzz2t3yIxNdk

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் >>>


சரியான நேரத்தில் சரியான அறிக்கை

நமது தலைவர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை, விடுதலை 5.2.2014 (புதன்) பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சட்டத்திற்கும், சமூகநீதிக்கும், எதிரானது! நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஜனார்த்தன திவேதி களை அடக்கி வைக்க வேண்டும் காங்கிரசு தலைமை; பொருளாதார அடிப்படையில் - இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளதை, தக்க தருணத்தில் கண்டித்திருப்பது மிகவும் உணர வேண்டிய அறிவுரையாகும்.

சமூக நீதிக்கு எதிரானவர்கள்; உயர் ஜாதியினர் பலர், இன்னமும் உள்ளனர் என்பது இவரது அபத்தமானதும், ஆபத் தானதும், அரசியல் சட்ட அடிப்படை உரிமைக்கும்கூட முற்றிலும் எதிரானதாகும் என்பது உண்மையே; காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி அவர்களும் ஜாதி அடிப் படையிலான இடஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும் என்றும் உறுதியளித்தும் இப்போது இடஒதுக்கீடு வழங்குவதில் தீவிரமாக காங் கிரசு செயல்படுகின்றது. திவேதியை காங் கிரசுத் தலைவர் சோனியா காந்தி கண்டித் துள்ளார் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புத் தெரி வித்து அமளிகளில் ஈடுபட்டனர். அவர் களை சமாதானப்படுத்திய மத்திய ராஜாங்க அமைச்சர் ராஜீவ் சுக்லா அவர்கள் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடரும் என்றும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் அறிவித் தார். இருப்பினும் அமளி தொடர்ந்ததால் சபை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.

- ஆ. இனியன் பத்மநாதன், ஈரோடு -11

Read more: http://viduthalai.in/page-2/75092.html#ixzz2t3yklHKH

தமிழ் ஓவியா said...


அமெரிக்க - ஜப்பானிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சாதனை மனித தோலிலிருந்து குருத்தணுக்கள் உருவாக்கும் முயற்சி வெற்றி


லண்டன், பிப். 11- மனித தோலில் உள்ள அணுக் களில் இருந்து குருத்தணுக் களை (ஸ்டெம்-செல்) உரு வாக்கும் நெடுநாள் ஆராய்ச் சியில் அமெரிக்க- ஜப்பா னிய மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் வெற்றியடைந் துள்ளனர்.

பிறந்த குழந்தையின் வயிற்றில் இருக்கும் தொப் புள் கொடியில் தாயின் கருப்பையில் வளர்ந்த ஏரா ளமான குருத்தணுக்கள் தேங்கியுள்ளன. எனவே, இவற்றை சேமித்து வைப் பதன்மூலம் பின்நாள்களில் அந்த குழந்தை முதுமை அடையும்போது ஏற்படும் கொடிய நோயின் தாக் கத்தை எதிர்த்துப் போராட இந்த குருத்தணுக்களை பயன்படுத்த முடியும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் கடந்து, செயற்கை முறையில் குருத் தணுக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் மாசாசூ செட்ஸ் மருத்துவ பல்கலைக் கழகத்தின் முன்னேறிய குருத்தணு ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றும் அமெரிக்கா மற்றும் ஜப்பா னைச் சேர்ந்த மருத்துவர் கள் கூட்டாக ஈடுபட்டி ருந்தனர்.

இதற்காக பரிசோதனை கூடத்தில் வளர்க்கப்படும் எலிகளின் மேல்தோலில் உள்ள உயிரணுக்களை எடுத்து வீரியம் குறைந்த சிட்ரிக் அமிலக் கலவையில் சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து காத்திருந்த போது அந்த வியத்தகு மாற் றம் நிகழ்ந்தது.

அமிலத்தில் ஊறிய அந்த உயிரணுக்களில் இருந்து புதிய கரு முளை (எம்ப்ரியோ) உருவானது. இந்த கரு முளையை வைத்து குருத் தணுவை உருவாக்கும் சோதனை முயற்சியும் வெற்றி பெற்றதால், இதே முறையில் செயற்கை முறை யில் தயாரிக்கப்பட்ட மனித தோலையும் சோதித்து பார்த் தனர்.

இதிலும், எலியின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட உயிரணுவில் நிகழ்ந்த அதே மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ந்தனர்.

இப்படி செயற்கை முறை யில் உருவாக்கி உயிரூட் டப்படும் குருத்தணுக்களை கொண்டு பார்கின்சன் நோய் எனப்படும் முதியோர் களுக்கு உண்டாகும் நடுக்கு வாதம் உள்பட இதய நோய் வரை பல பாதிப்புகளுக்கு நோயாளி யின் தோலைக் கொண்டே சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப் பிடத்தக்கது.

எனினும், இந்த வியத் தகு மருத்துவ முன்னேற் றத்தில் சில பின்னடைவு களும் இருப்பதாக பாஸ் டன் நகரில் உள்ள பிரிகாம் மகளிர் மருத்துவமனையில் திசு பொறியாளராக பணி யாற்றும் மருத்துவர் சார் லஸ் வகண்ட்டி கூறுகிறார்.

இந்த நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் மனித தோலில் இருந்து உயிரணுக்களை சேகரித்து, அதனை குருத்தணுவாக மாற்றி, அந்த குருத்தணு வின் மூலம் கிடைக்கும் கரு முளையை வளர வைத்து, அவற்றை மனித விந்தாக வும், கருமுட்டையாகவும் விரைவில் மாற்றிவிட முடி யும்.

இப்படி தயாரிக்கப்படும் விந்துடன் கருமுட்டையை செயற்கையாக இணைத்து குளோனிங் முறையில் சிலர் மனித உயிர்களை உருவாக்க முயற்சித்தால் அது மனித குலத்துக்கே பெரிய தீங்காக அமைந்து விடும். பலவீனமடைந்து விட்ட மனித திசுக்களுக்கு புத்துணர்வு அளித்து, கொடிய நோய்களை எதிர்த்து போராட உதவும் குருத் தணு மேம்பாட்டு ஆராய்ச் சியானது மரணத்தில் இருந்து உயிர்களை காப்பாற்றி, ஆயுளை நீட்டிக்க உதவும் என்பது உண்மைதான்.

இருப்பினும், இந்த ஆராய்ச்சியின் வெற்றியா னது, எதிர்பார்த்ததற்கு மாறான எதிர்விளைவை யும் ஏற்படுத்தி விடும் ஆபத்தும் உள்ளது என அவர் எச்சரிக்கிறார்.

Read more: http://viduthalai.in/page-8/75113.html#ixzz2t3zTYDdG

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் போதிய சுகாதார வசதிகள் இல்லாததால் ஆண்டுக்கு 78,000 குழந்தைகள் இறப்பு

புதுடில்லி, பிப்.11-இந் தியாவில் போதிய சுகாதார வசதிகள் இல்லாததால் இதய குறைபாடுகளுடன் ஆண்டுக்கு 78,000 குழந் தைகள் இறந்தே பிறக்கின் றன என துறை வல்லுநர் கள் தெரிவிக்கிறார்கள்.

ஆக்ராவில் உள்ள மகாத்மா காந்தி கார்டியாக் அண்ட் கிரிட்டிகல் கேர் சென்டர் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த சென்டரில் பணி புரிந்து வரும் தலைமை இதய அறுவை சிகிச்சை வல்லுநர், முர்தாசா சிஸ்டி கூறுகையில், இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் குழந்தை கள் பிறவியிலேயே இதயம் சம்மந்தமான பிரச்சினை களுடன் பிறக்கின்றன.

இந்த நோய் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத தால் இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதி கரித்து வருகிறது. பணிபுரி யும் இடத்தில் வேலை சம்மந்தமாக ஏற்படும் மன அழுத்தம், இளைஞர்களி டையே மாறிவரும் வாழ்க்கை முறை போன்ற காரணங் களால் 30 வயதிலிருந்து 40 வயதுள்ளவர்கள் வரை இதயம் தொடர்பான நோய் களால் தாக்கப்பகிறார்கள். இதை தவிர்க்க வேண்டு மானால், உணவு கட்டுப் பாடு மிக அவசியம்.

அதோடு, இணையர்கள் தேவையான ஓய்வும் எடுத் துக்கொள்ளவேண்டும். இதுபோன்ற செயல்கள் மூலம் இதய நோய் தாக்கா மல் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றார்.

இந்தியா எஜூகேஷன் சென்டரின் தலைவர் மருத் துவர் சுவர்னாக்கர் குறிப் பிடுகையில், மாரடைப்பி னால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் ஆசியாவி லேயே இந்தியா தான் முன் னணியில் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டுமானால், நாட்டில் அனைத்து வசதி களுடன் கூடிய கார்டியோக் மய்யங்களை அதிக அள வில் உருவாக்கவேண்டும் என தெரிவித்தார்

Read more: http://viduthalai.in/page-8/75113.html#ixzz2t3zX1KgF

தமிழ் ஓவியா said...


தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இலச்சினையில் கடவுளர் படமா?


பாங்க் ஆப் இந்தியா என்னும் தேசிய மயமாக் கப்பட்ட வங்கியின் இலச் சினை அடையாளத்தில் சிங்கம், சூலத்துடன் ஒரு பெண் உருவம் இருப்ப தான படத்துடன் இலச் சினை உள்ளது. நாடு விடுதலை அடை வதற்குமுன் 1906 இல் தொடங்கப்பட்ட வங்கி யில் இந்துமத கடவுள் படத்துடன் தனியாரால் மும்பையில் தொடங்கப் பட்டு, பின்னர் 1969 இல் தேசியமயமாக்கப்பட்டது. மதசார்பற்ற நாட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் இலச்சினையில் இதுபோன்ற ஒரு சார்புள்ள மத சின்னம் இடம் பெற லாமா? வாடிக்கையாளர்கள் ஒரு மதத்தை மட்டும் சார்ந் தவர்களாகவா உள்ளனர்? வங்கி நிர்வாகம், மத்திய அரசு சிந்திக்குமா?

அய்ந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களிலும் கூட இந்து மதக் கடவுள் களின் உருவங்கள் பொறிக் கப்பட்டுள்ளன. இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற அரசாம்!

Read more: http://viduthalai.in/e-paper/75127.html#ixzz2t9q9Iax3

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வும் தினமணியும்!

ஆசிரியர் தகுதித் தேர்வும், சலுகைகளும்! எனும் தலைப்பில் தினமணியில் சிறப்புக் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது (11.2.2014, பக்கம் 8).

தமிழக அரசியல்வாதிகள், ஆந்திராவில் உள்ளது போல ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக 5 சதவிகித மதிப்பெண் சலுகை வழங்கவேண்டும் என அறிக்கை வெளியிடுகின்றனர். ஜாதிகளைத் தாங்கிப் பிடிக்கும் அரசியல்வாதிகள், அதனால் தரமான, நிறை வான கல்வி குறைபட்டுப் போகுமென தெரிந்திருந்தும் வேண்டுமென்றே குரல் கொடுப்பது வேதனையளிப் பதாக உள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் 60 விழுக்காடு மதிப்பெண் வாங்குபவர் 59 விழுக்காடு மதிப்பெண் வாங்குபவரைவிட அறிவாளி, தகுதியானவர் என்று கூறுகிறார்களா?

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுதான் தகுதியின் அளவுகோலா? தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தங்கப்பதக்கம் பரிசு பெறுவோர்தான் நாட்டில் பிரகாசமாக சாதனைகளைப் பொறித்துக் கொண்டு திரிகிறார்களா?

மதிப்பெண் அடிப்படையில்தான் தகுதி -திறமை நிர்ணயிக்கப்படும் என்றால், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒரு அம்பேத்கர் நமக்குக் கிடைத் திருக்கமாட்டார் என்று உச்சநீதிமன்ற நீதிபதி இரவீந்திரன் கூறியதை மறுக்கமுடியுமா?

மதிப்பெண் போடுவது குறித்து இதே தினமணியில் (9.12.2013) ஒரு செய்தி வெளிவந்ததே!
பிளஸ்-2 மற்றும் 10 ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதில் கவனக்குறைவாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த 5600 மாணவர்களில் 4000 மாணவர்களின் மதிப்பெண் மாறியது என்று செய்தி வெளியிட்ட தினமணியில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்தான், தகுதி - திறமைக்கு அடை யாளம் என்று வாதிடப்படுகிறது.

இதில் இடைக்குத்து - ஜாதியைத் தாங்கிப் பிடிக்கும் அர சியல்வாதிகள் தகுதியைப்பற்றிக் கவலைப்படுவதில்லையாம். சமூகநீதி என்பது அவ்வளவு அலட்சியமாகப் போய்விட்டதா?
இப்படி எழுதுகிறவரோ, கட்டுரை வெளிவந்துள்ள தினமணியோ உண்மையிலேயே ஜாதி ஒழிப்பு வீரர்கள் தானா? ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்பதால் தான் ஜாதி காப்பாற்றப்படுகிறதா? ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் மறுநாள் காலையிலேயே ஜாதி ஒழிந்துவிடுமா?

தினமணி ஆசிரியரின் பூணூலைக் கழற்றச் செய்யட் டும் பார்க்கலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதி காப்பாற்றப்படுகிறதே - அதனை நீக்கவேண்டும் என்று தினமணியில் தலை யங்கம்கூட எழுதவேண்டாம் - ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் பிரச்சினையைத் திசை திருப்பி வேறு எங்கோ இழுத்துச் செல்லும் எத்து வேலையை தினமணியின் சிறப்புக் கட்டுரை செய்கிறது.

தாழ்த்தப்பட்டவருக்கும், பிற்படுத்தப்பட்டவருக்கும் தகுதி மதிப்பெண் 60 விழுக்காடு என்பதை மாற்றி 55 விழுக்காடு என்று தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவை யில் அறிவித்தார். அதனை நாம் வரவேற்றோம். அதே நேரத்தில், 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதித் தேர்வுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது என்ன நியாயம் - என்ன நேர்மை?

அதே ஆசிரியர் தகுதித் தேர்வுதானே - அதில் ஏன் பாரபட்சம்? இதனை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? அதைப்பற்றி தினமணியின் சிறப்புக் கட்டுரை மூச்சு விடாமல் வழவழா கொழ கொழா என்று முக்கால் பக்கம் கட்டுரை எழுதுவது ஏன்?

பிளஸ்-2 படித்து அதற்குமேல் ஆசிரியர் பயிற்சி இரண்டாண்டு படித்து பட்டயம் பெற்ற பிறகு, மறுபடியும் ஒரு தகுதித் தேர்வு என்பது போக்கிரித்தனம் அல்லவா!

ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றதற்கான பட்டயம் அளித்து - ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர் என்று சான்று வழங்கிய நிலையில், மறுபடியும் தேர்வு என்றால், அரசு, தான் நடத்திய தேர்வையே, தான் வழங்கிய சான்றிதழையே, தானே கொச்சைப்படுத்துவது ஆகாதா?

இந்தத் திசையில் தினமணிகள் ஏன் சிந்திப்பது இல்லை? கல்வி, வேலை வாய்ப்பு என்றால், அதில் எந்த வகையிலாவது சமூகநீதியை, இட ஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்துவது - குறுக்குச்சால் ஓட்டுவதுதான் பூணூல்களின் வேலை.

அதைத்தான் இப்பொழுதும் தினமணி செய்திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-2/75133.html#ixzz2t9qdT3o0

தமிழ் ஓவியா said...


உங்கள் பயணம் எங்கே செல்கிறது அத்வானிஜி!


- குடந்தையான்ஆர்.எஸ்.எஸ் எனது வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தந்தது; அதன் தொடர்ச் சியாக, 55 ஆண்டுகளாக அரசியல் பயணம் மேற்கொள்கிறேன். அந்த பயணம் இன்னும் முடிவு பெற வில்லை என பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி தனது பிளாக்கில் 9.2.2014 அன்று கருத்து தெரிவித்துள்ளார்.

அத்வானி அவர்களே! உங்கள் பயணத்தின் ஒன்றாக, நீங்கள் ரதயாத் திரை ஒன்றை துவங்கினீர்கள். எதற் காக அந்த பயணம்? யாருடைய நன் மைக்காக? யாரை எதிர்த்து? இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அரசி யல் சட்டம் 340 பிரிவின்படி அமைக் கப்பட்ட மண்டல் குழு பரிந்துரை யின் அடிப்படையில் வேலை வாய்ப் பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் ஆணையை அன்றைய பிரதமர் வி.பி.சிங் அறிவித்தவுடன், உங்களது ரத யாத்திரையை துவக்கி னீர்கள். அயோத்தியில் ராமனுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்பதற் காக அந்த யாத்திரை என்று சொன் னாலும், இட ஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என்பது உங்களது நோக் கம்; ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் நோக்கம். அந்த யாத்திரையின் முடி வில் 400 ஆண்டு கால பழைமைச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப் பட காரணமாக இருந்தீர்கள். நாடு முழுவதும் கலவரம் ஏற்பட்டு, பல்லா யிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். உங்கள் வாழ்வில் என்ன அர்த்தத்தை இந்த ர(த்)த யாத்திரை தந்தது?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீங்களும் குற்றம் சாட்டப்பட்டவ ராக சேர்க்கப்பட்டீர்கள். அதன் பின் மத்தியில் ஆட்சியில் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராக வும் இருந்தீர்கள். குற்றம் சாட்டப்பட் டவரே நாட்டின் உள் துறை அமைச் சராக இருக்கலாமா என உங்கள் மன சாட்சியை எப்போதேனும் கேட்டு, விடை கண்டதுண்டா? சட்டத்தின் ஓட்டையை வைத்து, அந்த வழக்கில் இருந்து எப்படியெல்லாம் தப்பிக்க லாம் என்று தான் கருதினீர்களே தவிர, தைரியமாக, நாங்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்மந்தப்பட்டிருக் கிறோம் என்று உண்மையை சொல் வதற்கு, உங்கள் ஆர்.எஸ்.எஸ். பள்ளி, கற்றுத் தரவில்லையே.

ஆனால் தமிழ் நாட்டிலே, 1957 இல் அரசியல் சட்ட எரிப்பு நடந்தது. ஜாதிப்பிரிவை காப்பாற்றும் அரசி யல் சட்ட பிரிவை எதிர்த்து, அந்த எரிப்பு நடந்தது. பெரியாரின் கட்ட ளையை ஏற்று, ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும், சிறுவர் களும் பங்கேற்று, மூன்றாண்டு வரை கடும் சிறை வாசத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றனர். கைதான ஒரு சிறுவனை எச்சரிக்கை செய்து விடுதலை செய்ய லாம் என நினைத்த நீதிபதி, அந்த சிறுவனிடம், நீ கொளுத்தியது காகி தம் தானே எனக் கேட்கிறார். ஆமாம் என்று சொன்னால், அவனை விடுவிக் கலாம் என்பது நீதிபதியின் எண்ணம். அந்த சிறுவன் என்ன சொன்னான் தெரியுமா அத்வானி அவர்களே! நான் கொளுத்தியது, அரசியல் சட்டத்தில் ஜாதியை காப்பாற்றும் பிரிவுதான் என்று சொன்னான்.

அந்த சிறுவனுக்கு இருந்த தெளி வும், உணர்வும், துணிவும், அறிவு நாணயமும் உங்களிடத்தில் இல்லையே. காரணம், சிறுவன் படித்தது பெரியார் பள்ளியில். நீங்கள் படித்தது ஆர்.எஸ்.எஸ். பள்ளியில்.

உங்களது வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது ஆர்.எஸ்.எஸ். தான் என்று சொல்கிறீர்களே. 2005 இல் பாகிஸ் தான் சென்ற போது, ஜின்னா சிறந்த மதச்சார்பின்மை கொள்கை கொண்ட வர் என்று சொன்னதற்காக, ஆர்.எஸ்.எஸ். உங்களை கடுமையாக சாடி, நீங்கள் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினீர்களே.

2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசும்போது, ஆர்.எஸ்.எஸின் அனுமதி இல்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளப்பட முடியாது என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி உறுதிப் படுத்திவிட்டது என்றும், நாம் கொண் டிருக்கும் இந்தக் கண்ணோட்டத்தி னால், பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது என்றும் சொன்னீர்களே; இதுவும் ஆர்.எஸ்.எஸ்சால் உங்கள் வாழ்க்கையில் கிடைத்த பயன் என எடுத்துக் கொள்ளலாமா?

பின்னர் மே 2009 இல் ஆர்.எஸ்.எஸின் கட்டளையால், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்து, அக்டோபர் 2011-லேயே, நீங்கள் பிரதமர் வேட்பாளாராக பாஜக சார்பில் போட்டியிட முடியாது என ஆர்.எஸ்.எஸ். கட்டளையிட்டு, இறுதில் ஜூன் 2013 இல் கட்சியில் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிவிக்கும் அளவுக்கு, ஆர்.எஸ்.எஸ் உங்களை தள்ளிவிட்டுள்ளதே; இந்தப் பயணம் இன்னும் முடியவில்லை என நீங்கள் கூறுவதைப் பார்த்தால், இந்த பயணத்தில் தாங்கள் எங்கே செல்வீர்கள் என்று தெரிய வில்லை.

ஒரு வேளை, பாஜகவிலிருந்து நீங்கள் விலகுவதற்கும், ஆர்.எஸ்.எஸ். உங்களுக்கு வழிகாட்டும் என நினைத் தால் தவறில்லையே, அத்வானிஜி.

Read more: http://viduthalai.in/page-2/75138.html#ixzz2t9qnAod1

தமிழ் ஓவியா said...


மனித சமூகம் தேய்ந்ததேன்?பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெறவேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது.
(விடுதலை,16.6.1935)

Read more: http://viduthalai.in/page-2/75132.html#ixzz2t9r0J7cD

தமிழ் ஓவியா said...


நடைபாதைக் கோயில்கள்


சென்னை உயர்நீதி மன்ற வாசல் அருகில் நீதி கருமாரியம்மன் கோயில் ஒன்று சட்ட விரோத மாகக் கட்டப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் அவர் குணம் அடைய வேண்டி அந்தக் கோயில் கட்டப்பட்டதாம் (கருமாரி என்ன மிகப் பெரிய டாக்டரா?)

சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட பொது நல வழக் கின் அடிப்படையில் அனுமதியின்றிக் கட்டப் பட்ட அக்கோயிலை உடனே இடித்துவிட்டு 12.2.2014-க்குள் நீதிமன்றத் திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமென்று நீதிபதி கள் அக்னி ஹோத்திரி, சசி தரன் அடங்கிய அமர்வு ஆணை பிறப்பித்தது. இதன்மீது மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய ஆணையை நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி சார்பில் கோரப்பட்டதை ஏற்று நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் கொடுத்துள்ளது.

இதன்மீது மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதே மாநகராட் சியில் இதற்குமுன் மேய ராக வேலூர் நாராயணன் அவர்கள் இருந்த காலத் தில் நடைபாதைக் கோயில் கள் அகற்றப்படவில் லையா? அதற்குப்பின் உள்ளாட்சித் துறை அமைச் சராக ப. உ. சண்முகம் அவர்கள் இருந்த கால கட்டத்தில் (அ.இ.அ.தி. மு.க. ஆட்சியில்) நடை பாதைக் கோயில்கள் இடிக்கப் படவில்லையா? உச்சநீதிமன்ற நீதிபதி கள் டல்வீர் பண்டாரி எம்.கே. ஷர்மா ஆகி யோர் 14.9.2010 அன்று தெளிவாக, திட்டவட்ட மாக ஒரு ஆணையைப் பிறப்பித்தனர். அனுமதி யின்றிப் பொது இடங் களில் கட்டப்பட்டுள்ள கோயில்களை உடனடி யாக அகற்ற வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. பல மாநிலங்கள் இதுபற்றித் தகவல் தெரி விக்கவில்லை. இரண்டு வாரங்கள் மீண்டும் அவ காசம் அளிக்கப்படுகிறது. அதனை நிறைவேற்றாத மாநில அரசுகளின் செய லாளர்கள் உச்சநீதிமன் றத்திற்கு நேரில் வந்து தகவல் தெரிவிக்க வேண் டும் என்று அவ்விரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி இருந்தனர்.

சட்ட விரோத கோயில்கள் அதிகமாகக் கட்டப்பட்டிருக்கிறது தமிழ் நாட்டில்தான். தமிழ்நாட் டில் 77450, குஜராத்தில் 15,000, ராஜஸ்தான் 58,253 கோயில்கள் இந்தப் பட்டியலில் வருகின்றன. அருணாச்சலப்பிரதேசத் தில் சட்ட விரோத கோயில் ஒன்றுகூடக் கிடையாது என்று நீதிபதிகள் பாராட் டவும் செய்தார்கள்.

தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையில் இதுவரை எடுத்த நடவ டிக்கை என்ன? உச்சநீதிமன்றமே தெளிவாக ஆணை பிறப் பித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தற் போது அளித்த ஆணை யைச் செயல்படுத்த வைப்பதில் உறுதியாக இருக்கும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது. - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/75206.html#ixzz2tFW6ulu7

தமிழ் ஓவியா said...


கல் முதலாளி!


திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் கடந்த திங்கள்கிழமை மட்டும் உண் டியல் வசூல் ரூ.2.45 கோடி யாம். மக்களுக்குப் பகுத் தறிவு தேவை என்பதற்கு இது அடையாளம்; பக்தி பெருகிவிட்டது என்று மகிழ்ச்சி அடைவது, மருத் துவமனைகள் (நோய்கள் பெருகியதால்) அதிகரித்து விட்டது என்று மகிழ்ச்சி அடைவது போன்றதாகும்.

எல்லாம் வல்ல கடவுள் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு நிதி கொடுப்பது - கடவுளைக் கேலி செய்வது ஆகாதா? இந்தப் பணத்தால் ஒரு சல்லிக் காசு ஏழுமலை யான் என்ற பொம்மைக்குப் பலன் உண்டா? அது உயிர் உள்ள ஒன்றா? ஆறுகால் கன்றுக்குடி என்று சொல்லி வித்தை காட்டிப் பணம் பறிப்பவனுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?
தினமலர் பக்தி மலரின் கருத்து:

கோவில்களில் கூட்டம் அதிகரித்துவிட்டது; கோவி லில் முக்கிய நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடக் கின்றன... மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது பக்தி நெறி செழித்திருப்பதுபோல தெரிகிறது. இது பொய்த் தோற்றம். இந்நாளில் இருக் கும் பக்தி, வழுக்கல் நிலத் தில் வடித்த மாளிகை என்று கூறியிருப்பதை நினைவூட் டுகிறோம். நாட்டில் உள்ள 10 கோடி ஏழைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3200/- வங்கி மூலம் அளிக்கும் திட்டத்தை - இந்தக் கோவில் நிதிகளிலி ருந்து எடுத்துக் கொடுக்க லாமே! நாட்டில் இருவகை முதலாளிகள் - ஒன்று, தொழில் முதலாளிகள்; இன் னொன்று ஏழுமலையான் போன்ற கல் முதலாளிகள்.

(இன்னொரு கூடுதல் தகவல்: ஏழுமலையான் தன் கலயாணத்துக்காக குபேரனி டம் கடன் வாங்கினானாம் - அதனை அடைக்கத்தான் இந்த உண்டியல் வசூலாம்! கடவுளே கடன்காரனா? பேஷ், பேஷ் நன்னாயிருக்குப் போங்கோ!).

Read more: http://viduthalai.in/e-paper/75215.html#ixzz2tFWVzoOX

தமிழ் ஓவியா said...


தெரிந்து கொள்க!


பல துறைகளில் வசதிகள் இருக்கத்தான் செய் கின்றன. அந்த வசதிகள் இருப்பது எத்தனைப் பேர் களுக்குத் தெரியும்?

“May I Help You” என்று எழுதப்பட்டு இருக்கும்; அங்குள்ளவரிடம் சென்று உதவி கேட்பதற்கு நம் மக்களுக்கோ ஒரு வகை தயக்கம். இந்தச் சபைக் கோழைத்தனத்தைத் தூக்கி எறிய வேண்டும்.

ரயிலில் பயணம் செய்வோர்களுக்குச் சில தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்! குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களோடு தொடர்பு கொள்ளலாம். 044-25353999 மற்றும் 9003161710 இந்த உதவி (Help Line) 24 மணி நேரத்திற்கும் கிடைக்கும் - முதலில் பெண்கள் கைப்பேசியில் இவற்றைப் பதிவு செய்து கொள்ளட்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/75208.html#ixzz2tFWdpSMA

தமிழ் ஓவியா said...


இப்பொழுதே மிரட்டலா?மோடி மற்றும் பிஜேபியின் மதவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்தை பதிவு செய்பவர்கள்மீது சிறிதும் சகிப்புத்தன்மை இல்லாமல் மிரட்டுபவர்கள் உள்ளனர். இவர்கள் சமூக தளங்களான டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் கருத்திடுபவர்களில் குறிப்பிட் டவர்களை மய்யப்படுத்தி தொடர் தாக்குதலும் நடத்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள்மீது சைபர் குற்றச் சட்டப்படி (அய்.டி.) நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும், அண்மையில் மூத்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் எழுதியதற்காக அச் சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். அதேபோல், காங்கிரசு பிரச்சார ஊழியரான அசீபா ஆமின் என்பவர்மீது சமூக ஊடகங்கள்மூலம் ஆபாசமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பாகவே மிரட்டுகிறார்கள். இவர்களை அடையாளம் காணவேண்டும் என்கிறார் காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான்.

Read more: http://viduthalai.in/e-paper/75214.html#ixzz2tFWsPA1s

தமிழ் ஓவியா said...


அய்.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்


இங்கிலாந்து உறுதி

லண்டன், பிப். 13- இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக்கணக் கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித் தது. இந்த போர்க் குற்றம் குறித்து உலக நாடுகளும், அய்.நா.வும் கடும் கண் டனம் தெரிவித்தன.

அதை தொடர்ந்து அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெ ரிக்கா ஏற்கனவே இரண்டு தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட் டன. இந்த நிலையில் அடுத்த (மார்ச்) மாதம் ஜெனீவாவில் அய்.நா.மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடக் கிறது. அதில், அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதி ராக மூன்றாவது தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

அதில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகைகள் மற்றும் ஊட கங்களுக்கு சுதந்திரம் வழங் குவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட் டுள்ளது.

இலங்கைக்கு எதிராக அய்.நா.வில் கொண்டு வரப் படும் இந்த தீர்மானம் நிச் சயமாக நிறைவேற்றப் படும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.

போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த விதமான முன்னேற்ற நடவ டிக்கையும் மேற்கொள்ள வில்லை. எனவே, இங்கி லாந்து அரசு உலக நாடுகளு டன் இணைந்து சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள் ளது. இந்தத் தகவலை தமி ழர்களுக்கான அனைத்துக் கட்சி குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/75211.html#ixzz2tFX1olwB

தமிழ் ஓவியா said...


மனிதன்


மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும். - (விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/75216.html#ixzz2tFXPgHbN

தமிழ் ஓவியா said...


பணியாளர் நியமனக் குழுக்களில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கட்டாய பிரதிநிதித்துவம்


கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது

பணியாளர் நியமனக் குழுக்களில்

பிற்படுத்தப்பட்டோருக்குக் கட்டாய பிரதிநிதித்துவம்

மத்திய அரசு ஆணைபுதுடில்லி, பிப்.14- சமூக நீதிக்கள போராளி களின் நீண்ட நாள் கோரிக் கைகளுள் ஒன்றான பணி யாளர் தேர்வு குழுக்களில் பிற்படுத்தப்பட்டோர் உட் பட அனைத்து சமூகத்தின ருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் புதிய ஆணையை மத்திய பணியாளர் நிர்வாக சீர்திருத்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

1995-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆணையின் படி மத்திய அரசின் சி மற்றும் டி பிரிவில் பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியாளர் தேர் வாணைக் குழுக்கள் மற் றும் ஆணையங்களில் தாழ்த் தப்பட்ட/பழங்குடி/இதர பிற்படுத்தப்பட்ட/பிரிவில் ஒரு பிரதிநிதியும் சிறு பான்மை சமூகத்திலிருந்து ஒரு பிரதிநிதியும் கட்டா யம் இடம் பெறவேண் டும் என அறிவிக்கப்பட்டி ருந்தது அவ்வாறு தேர்ந் தெடுக்கப்படுவர்களில் பெண்கள் இல்லாத பட் சத்தில் பொதுப்பிரிவைச சேர்ந்த ஒரு பெண்ணுக்குக் குழுவில் இணைந்து ஆலோசனை கூற வாய்ப் பளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணை தற் போது மறுஆய்வு செய் யப்பட்டு, புதிய ஆணை நேற்று (13.02.14) மத்திய பணியாளர் மற்றும் நிர் வாக சீர்திருத்த அமைச்ச கத்தால் வெளியிடப்பட் டது.

இந்தப் புதிய ஆணை யின் படி மத்திய அரசின் சி மற்றும் டி பிரிவில் 10 அல்லது அதற்கு மேற் பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்யும் போது தேர்வாணைக்குழுக்களில் தாழ்த்தப்பட்ட/பழங் குடி/இதர பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மை பிரிவினர் ஒவ்வொன்றுக் கும், அனைவரும் கட்டா யம் இடம் பெற்றிருக்க வேண்டும். அவர்களில் பெண்கள் இல்லையெனில், பொதுப் பிரிவில் இருந்து ஒரு பெண் இடம் பெற வேண் டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மேற்கண்ட அறிவிப்பினை பொதுத் துறை நிறுவனங்கள், மத் திய அரசினால் நடத்தப் படும் வங்கிகள், மத்திய அரசின் அலுவலகங்கள், உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம், பிரதம அமைச்சர் அலுவலகம் மற்றும் குடியரசுத் தலை வர் அலுவல கம் உள் ளிட்ட அனைத்திற்கும் பொருந்தும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. குறிப்பு: இதுவரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் இருந்து வந்தது. இப்பொ ழுது அனைத்துப் பிரிவின ருக்கும் பிரதிநிதித்துவம் என்பது வரவேற்கத்தக்க தாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/75254.html#ixzz2tLFNWYTv

தமிழ் ஓவியா said...


வளர்கிறது

நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.
- (விடுதலை, 23.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/75259.html#ixzz2tLFp2cbF

தமிழ் ஓவியா said...


ஓராண்டில் நூறாண்டுச் சாதனை?


- குடந்தையான்

தமிழக அரசின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரியில்லா பட்ஜெட் என பெருமை யோடு கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2012-13 ஆண்டில் 4.14 விழுக்காடு தான்.

இது இந்திய அளவின் 4.9 விழுக் காட்டை விட குறைவு. இதற்கு முன்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்த 2005-06 ஆண்டில் தான் இந்த நிலை இருந்தது.

கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் ஒட்டு மொத்த பொருளா தார வளர்ச்சி (GDP) 2009-10-ல் 10.8 விழுக்காடாகவும், 2010-11-ல் 13.12 விழுக்காடாகவும், நாட்டிலேயே முன்னணி மாநிலமாக திகழ்ந்தது. ஆனால், ஜெயலலிதா தலைமையி லான அதிமுக ஆட்சியில், பொருளா தார வளர்ச்சி 2011-12-ல் 7.42 விழுக் காடாக குறைந்து, தற்போது 4.14 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள் ளது. தமிழகத்தில் நிலவும் மின் வெட்டின் காரணமாக, தொழில் துறை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பிரச்சினையை, அரசு முறை யாக எதிர்கொள்ள வில்லை. அவ்வாறு செய்திருந்தால், குறு, சிறு தொழில் முனைவோருக்கு உதவியாக இருந் திருக்கும்; இந்த அளவுக்கு வீழ்ச்சி இருந்திருக்காது என மத்திய அரசின் திட்டக்குழு உறுப்பினர் அபிஜித் சென் கருத்து தெரிவித்துள்ளார். இத்தகைய பொருளாதார வீழ்ச்சி காரணமாக, தமிழ் நாட்டின் வேலை வாய்ப்பும் பெருமளவு பாதிக்கப்பட் டுள்ளது.

இந்த விஷயங்களையெல் லாம், இங்கே உள்ள ஊடகங்கள் எதுவும் விவாதிப்பது இல்லை; தங் களை நடு நிலை ஊடகங்கள் என கூறிக்கொண்டு, கருத்துத் திணிப்பை அரசுக்கு சாதகமாக வெளியிடுவதில் மிகுந்த அக்கறையோடு செயல்படு கின்றன.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, இந்த அளவுக்கு, இந்தியா வின் மற்ற மாநிலங்களைக் காட்டி லும், மிக மோசமான வீழ்ச்சியை அடைந்துள்ளது பற்றி, தமிழக நிதி அமைச்சர் கண்டு கொள்ள வில்லை; ஆனால் என்ன? ரூ.200 கோடிக்கு, மாடு வாங்கவும், ஆடு வாங்கவும் நிதி ஒதுக்கியுள்ளார். ஆடு, மாடு மேய்த்த நம் திராவிடர்கள், கல்வி கற்று மேம்பாடு அடைய வேண்டும் என பெரியார் போராடினார்.

நீதிக்கட்சியும், காமராசரும், மக்கள் கல்வி கற்று முன்னேறிட திட்டங்கள் தீட்டினர். ஆனால், அம்மையார் ஆட்சியில் மீண்டும் மாடு, ஆடு மேய்த்திடுவது தான் வளர்ச்சி எனக் கருதி, நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. ஓராண்டில், நூறாண்டு சாதனை என்பது இது தானோ?

Read more: http://viduthalai.in/page-2/75269.html#ixzz2tLFxD3bP

தமிழ் ஓவியா said...


சூனியமும் புராதன மதங்களும்!


சூனிய வித்தையை விடுவதென்றால் நமது புண்ணிய புராதன நூல்களைத் தூர எறிவதாகும் என்று சர்.தாமஸ் மோர் கூறினார். என்னுடைய அபிப்பிராயத்தில் அவர் கூறியது முற்றிலும் சரியே.

ஜான் வெஸ்லி என்பவர் பேய் பிசாசுகளிலும், சூனிய வித்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். இது சம்பந்தமான சட்டங்கள் எல்லாம் இங்கிலாந்தில் ரத்தாகி அநேக ஆண்டுகளுக்குப் பின்னும் இவர் தம் நம்பிக்கையை வற்புறுத்தியிருக்கிறார். இந்த ஜான் வெஸ்லி என்பவர்தான் முதன் முதலாக நூதன மாதிரி கோவில் ஸ்தாபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூ இங்கிலாந்தில் ஒரு பெண் சூனிய வித்தைக்காரி என்பதற்காகவும், அவள் நரியாக மாறினாள் என்பதற்காகவும் குற்றம் சாற்றப்பட்டாள். இந்த நிலையில் அவளைச் சில நாய்கள் கடித்துவிட்டன. நியாய ஸ்தலத்தின் உத்திரவின்படி ஏற்பட்ட மூன்று பேர் கூடிய கமிட்டியார் அவளைச் சோதனை செய்தனர்.

அவர்கள் அவளுடைய ஆடையை விலக்கி சூனியக் காரியின் சூட்சம ஸ்தானத்தைத் தேடினார்கள். அதாவது, அந்த விசேஷ இடத்தில் குண்டூசியால் குத்தினால் வேதனை உண்டாகாதாம். அவள் தான் ஒரு போதும் நரியாக மாறின தில்லை என்று மறுத்தாள். கமிட்டியார்கள் செய்த சிபார்சின் பேரில் அவள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப் பட்டாள்.

இவ்வட்டூழியங்கள் எல்லாம் (இங்கிலீஷ் சர்ச்சிலிருந்து பிறந்தவர்களான) ப்யூரிட்டன் பிரதர்ஸ் என்று சொல்லப் பட்ட கடவுளை வணங்க தைரியமாக கடல் கடந்து இங்கிலாந்தி லிருந்து அமெரிக்கா சென்று தம் சகோதரர்களைக் கொடுமைப்படுத்திய கிறிஸ்தவர்களால் செய்யப்பட்டன.

கோடைகாலத்தில் பனியுண்டாக்கியதற்காகவும், மூடு பனியால் விளை பொருள்களைக் கெடுத்ததாகவும், புயல், பீர், சாராயம் முதலியன கசப்படைந்ததற்காகவும், ஒரு பாவமும் அறியாத மனிதர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். எவனும் எந்தக் குற்றத்துக்காவது உள்ளாகி தண்டனை அடையாமல் இருக்க முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் தண்டிக்கப் பட்டனர். எல்லோருடைய ஜீவனும் ஆபத்துக் கிடமான தாகவே இருந்தது.

ஒவ்வொருவனும் மற்றவனுடைய இரக்கத்தை எதிர்பார்த்தவனாக இருந்தான். இந்த நம்பிக்கை பேய், பிசாசு உண்டு; சூனிய வித்தை உண்டு; சூனிய வித்தைக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிக வேரூன்றி இருந்தபடியால் இதன் உண்மையைச் சந்தேகிக்கும் எவன்பேரிலும் அவ நம்பிக்கை வைக்கப்பட்டது. பேய், பிசாசு இல்லை என்று எவன் சொன்னாலும் அவனைத் தெய்வ நிந்தனையுடைய துஷ்டன் என இகழ்ந்து வந்தனர்.

(கர்னல் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய பேய்-பூதம் பிசாசு என்ற நூலில்) தகவல்: குன்னம் ராமண்ணா

Read more: http://viduthalai.in/page-5/75304.html#ixzz2tLGpVO4S

தமிழ் ஓவியா said...


உண்ணாமுலையாம்! ஞானப்பாலாம்!!


கேள்வி: ஒரு பசு மாடு என்ன போட்டால் கறக்கும்?

உண்மை: கறக்காது!...கறக்காது!!... கன்று போட்டால் தான் கறக்கும்! அதாவது கன்றீனாதது எதுவும் பால் கறக்காது! இதுவே உண்மை நிலை.

அப்படியானால், உண்ணாமுலைகளைச் சுமந்ததாகக் கூறப்படும் பார்வதியின் முலைகள் மட்டும் எப்படிச் சுரந்தன? என்ற கேள்வி எழுவது சகஜமே!

பார்வதிக்கு இரு குமாரர்கள் என்பது புராணக்கூற்று. இரண்டும் கர்ப்பத்திலிருந்து பிறவாதவை ஒன்று பார்வதி தம் உடலழுக்கை உருட்டித் திரட்டிப் பிடித்து வைத்ததே பிள்ளையார்! ஆனை முகன்! ஆனை வாய் உண்ணாமுலை! மற்றது பரமசிவனது விந்து தெரித்து அதாவது பார்வதியின் கர்ப்பத்தில் ஊறாமல் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறுமுகங்களுடன் பிறந்தது!

அதற்கும் ஆறு கிருத்திகைக் கன்னியர்கள் தான் பாலூட்டியதாகப் புராணமேயொழிய பார்வதி பாலூட்டினாள் என்பதாக இல்லை! ஆறுமுகமும் உண்ணாமுலை! ஆக, இங்ஙனம் அவதரித்த இரு குமாரர்களும் உண்ணாத முலைகளை யுடைய பார்வதிக்கு உண்ணா முலை என்ற ஒரு பெயரும் வந்தது போலும்!

இவ்விருவருக்கும் ஊட்டக் கிடைக்காத முலைப்பால் பாப்பாரச் சம்பந்தனுக்கு மட்டும் ஞானப் பாலாக ஊட்ட எப்படிச் சுரந்தது? சவுண்டி சம்பந்தன், ஞான சம்பந்தன் ஆனது எங்ஙனம்? தேவாரம் பாடியதும் எங்ஙனம்? ஞானப்பால் உண்டதால் பாடினான் என்றால் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எப்பால் உண்டு தேவாரங்கள் பாடினார்கள்? என்பன போன்ற பகுத்தறிவுக் கேள்வி களுக்கு என்ன சமாதனம்?

இவைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், வயிற்றுப் பிழைப்பாகக் காலட்சேபம் செய்யும் பண்டாரங்கள் ஞானப்பால் உண்டால் பக்திப் பாடல் பாடலாம்; புட்டிப் பால் உண்டால் டப்பா பாட்டுத்தான் பாடலாம்; இக்காலத் தாய்மார்களுக்கு பால் சுரப்பில்லை யென்றும், தாய்க்குலத்திற்கு இழிவையூட்டும் வகையில் உளறித் திரிவதென்றால் எவ்வளவு நெஞ்சுத் திமிர் இருக்கும்? மக்கள் முன்னேற்றத்திற்கு வேண்டிய கருத்துக் களைச் சொன்னால் பயனுள்ளதாகவும், நாடு முன்னேறு வதாகவும் அமையும். பண்டாரங்கள் இனியேனும் அறிவு பெற்றுத் திருந்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-5/75305.html#ixzz2tLGzOheN

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் உருவில் கடவுள்!


தோழர்களே! நான் கூறுகிறேன்! ஜாதி ஒழிந்தால் கடவுள் ஒழியும், பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்கு இனி எந்தத் தமிழனும் போகக் கூடாது.

சாமியும் பார்ப்பானுக்கு அனுகூலமாகத்தான் இருக் கின்றது. எப்படி நாம் பார்ப்பானை தொடக்கூடாதோ அதுபோல சாமியையும் தொடக் கூடாது. எப்படி பார்ப்பான் ஜாதியில் உயர்ந்தவனோ அது போல கடவுளும் உயர்ந்தது. பார்ப்பானும் பூணூல் போட்டிருக்கின்றான். கடவுளும் போட்டிருக்கிறது. பார்ப்பானுக்கும் உச்சிக்குடுமி. கடவுளுக்கும் உச்சிக்குடுமி.

பார்ப்பான் நாம் சமைத்ததை உண்ண மாட்டான்; கடவுளும் நாம் சமைத்ததை உண்பது கிடை யாது. பார்ப்பானும் நம் கண்முன் உண்ணாமல் மறைவாக உண்பான்; கடவுளும் அப்படியே. பார்ப்பானுக்கும் பஞ்சகச்சம், கடவுளுக்கும் பஞ்சகச்சம். பாப்பாத்தி தாருபாச்சி கட்டுகின்றாள், கடவுளச்சியும் அப்படியே கட்டுகின்றாள்.

பார்ப்பான் வீட்டிற்குள் நாம் செல்லக்கூடாது. அதுபோல் கடவுள் கோயிலுக்குள் நாம் செல்லக்கூடாது. இப்போது கூறுங்கள் , கடவுளும் பார்ப்பானும் அழிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா? என்று படித்தவர்களை கேட்கின்றேன்; பக்திமான்களைக் கேட்கின்றேன்; கடவுள் உருவம், குணம் ஒன்றும் இல்லாதவன்;

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருப்பவன் என்றெல்லாம் கூறிவிட்டு குழவிக்கல்லில் கடவுள் மகத்துவம் இருப்பதாக கூறி பெண்டாட்டியும், பிள்ளைக்குட்டிகளும் கற்பித்திருக் கின்றீர்களே இது எவ்வளவு பித்தலாட்டம்? வெள் ளைக்காரனும், சாயபுவும், கிறிஸ்தவனும் கூறுவதுபோல ஒரு கடவுளா உங்களிடத்தில் உள்ளது?

எனவே, இந்த நாட்டில் கடவுளுக்கும், கடவுள் தன்மைக்கும், மதிப்பிருந்தால் கடவுளர்களின் தாலிகள் அறுக்கப்படுமா? நகைகள் களவாடப்படுமா? அதே இடத்தில் அவர்களை ஏன் கடவுள் பிடித்து நிறுத்தக் கூடாது? இவற்றிலிருந்து கடவுளோ, கடவுள் தன்மையோ இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டது என்பதுவும் அத் தனையும் பித்தலாட்டமென்பதுவும் புலனாக வில்லையா?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-5/75306.html#ixzz2tLH9zYra

தமிழ் ஓவியா said...


பால்ய விவாகம்!


குழந்தை: என்னடி அம்மா! நேற்று என் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார் கள்?

தாய்: அடிப்பாவி! அது நகையல்ல; தாலி, அதை ராத்திரி அறுத்தாய் விட்டது.

குழந்தை: எனக்குத் தெரியலையே!

தாய்: ராத்திரி 11 மணி இருக்கும்; நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய்; ஆதலால் உனக்குத் தெரிய வில்லை. குழந்தை: அதை ஏன் அறுத்தார்கள்?

தாய்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்து விட்டானல்லவா? அதனால் அறுத்து விட்டார்கள்!

குழந்தை: அவன் போனால் போகட்டுமே! வேறு யாரையாவது கட்டச் சொல்றதுதானே! அதை ஏன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய்? அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன் ஊ! ஊ!! ஊ!!!

குடிஅரசு, 1-4-1928

Read more: http://viduthalai.in/page-5/75307.html#ixzz2tLHIwQ30