Search This Blog

3.2.14

அண்ணா நினைவு நாள் சிந்தனை


இன்று அறிஞர் அண்ணா நினைவு நாள் (1969) உலக நாத்திகச் சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரசல் மறைந்ததும் இதே நாளில்தான் (1970).

அண்ணா அரசியலுக்குச் சென்றார்; ஆனால் அடிப்படையில் திராவிடர் இயக்கத்தின் சிந்தனை-  தந்தை பெரியார் அவர்களிடமிருந்து வாலிப வயதில்  அவர் வரித்துக் கொண்ட கொள்கைகள் நிலை பெற்றவை.

அந்தக் காலத்தில் எம்.ஏ., படித்து நம் இயக்கத்திற்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வருவது என்பது அரிதினும் அரிது; ஒரு அண்ணா துரை, ஒரு ஏ.பி. ஜனார்த்தனம் என்றுதான் சொல்லப்பட்ட கால கட்டம் அது.

திருப்பூரில் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்த நாள் தொட்டு, இந்த இயக்கத்தின் பால் தன்னை சங்கமித்துக் கொண்டார்.
 
அவர் எழுத்துகள் மணம் வீசக் கூடியவை. மனங்களைக் காந்தம் போல் ஈர்க்கக் கூடியவை; அவர் பேச்சு வசீகரமானது; கேட்டாரைக் கைபிடித்து இழுத்து வரும் ஈர்ப்பைக் கொண்டவை.

கருத்து - தந்தை பெரியார்; அதன் பிரச்சாரம் அண்ணாவுடையது. அந்தக் கால கட்டத்தில் டாக்டர் இரா.பி. சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் எல்லாம் அறிஞர் அண்ணாவிடம் வாதிட்டு தோற்றேன்! தோற்றேன்!! என்று கூறிக் கொண்டு பின் வாங்கியதெல்லாம் சாதாரணமானவைகளா?

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையிலும் இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை! என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் பதிவு செய்தாரே  - என்றென்றும் வரலாற்றில் ஒளிக்கற்றைகளை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பரிய பிரகடனம் அல்லவா அது!

1) சுயமரியாதைத் திருமணச் சட்டம், 
2) சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல் 
 3) இந்திக்கு இடம் இல்லை, இரண்டே மொழிகள் தான் தமிழ்நாட்டில் (தமிழ், இங்கிலீஷ்) என்பனவற்றைச் சட்டமாக்கி தம்மை நிரந்தர நாயகராக நிலை நிறுத்திச் சென்றவர் அண்ணா.

அண்ணாவுக்குப்பின் தம் தலைமையில் ஆட்சியைத் தொடங்கிய மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இது சூத்திரர்களின் ஆட்சி! என்றே பிரகடனப்படுத்தி, வரலாற்றில் அழியாப் பதிவைச் செய்து அழியாப் புகழ் பெற்றாரே!

பெண்களுக்குச் சொத்துரிமை முதல் பெண்கள் மறுமலர்ச்சியில் பெரும் பாய்ச்சல் போன்ற அத்தியாயங்களை உருவாக்கியதால் மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர் எனும் வீறுமிக்க விருதுக்குச் சொந்தக்காரர் ஆனார்.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு, தமிழுக்குச் செம்மொழித் தகுதி, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என்று சமுதாயப் புரட்சியை நடத்திக் காட்டியவர் மானமிகு கலைஞர் அவர்கள்.

திராவிட இயக்கச் சித்தாந்தம், தந்தை பெரியார் ஊட்டிய உணர்வுகள் - இவற்றின் செயல் வடிவங் களாக அண்ணா, கலைஞர் ஆட்சிகள் மலர்ந்தன.
இன்று... இன்று.. அண்ணாவின் பெயரையும் தீரமிக்க திராவிட என்ற இன அடையாளக் கலாச் சாரங்களையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, அவற்றின்மீது ஆரியக் கலாச்சாரம் என்ற கள்ளிகளை விளைவிக்கும் ஆபத்தான போக்கு!

புத்தர் இயக்கத்தில் ஆரியம் புகுந்து சிதைத்தது போல, திராவிட இயக்கத்தில் ஆரியம் ஊடுருவி உருக்குலைக்கும் ஒரு வேலை துரிதமாகத் திட்டமிட்டு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

திராவிட பெயரைச் சொல்லிக் கொண்டே பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டே ஒரு பிரிவினர் மதவாதத்திற்கும், ஜாதீய வாதத்திற்கும் நடை பாவாடை விரிக்கிறார்கள். அண்ணா நினைவு நாளில் அவர்  கட்டிக் காத்த தந்தை பெரியார் தத்துவங்களை திராவிட இயக்க சித்தாந்தங்களை முன்னெடுத்துச் செல்ல உறுதி கூறுவோம்! மூடுதிரை போட்டு வருவோர்களை அம்பலப்படுத்துவோம் - வாழ்க தந்தை பெரியார்! வாழ்க அறிஞர் அண்ணா!

                     -----------------------------”விடுதலை”  தலையங்கம் 3-2-2014

25 comments:

தமிழ் ஓவியா said...


ஓமாந்தூரார்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஓமாந்தூரார் என்ற ஊரின் பெயர், ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களையே குறிக்கும். அவரின் பார்ப்பனர் அல்லா தார் உணர்ச்சியைக் கண்டு அவரை தாடியில்லாத இராமசாமி நாயக்கர் என்று பார்ப்பனர்கள் கூறிய துண்டு.

சென்னை திருவல்லிக் கேணியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது தந்தை பெரியார் ஒரு தகவலைச் சொன்னார்.

ஈரோடு ராமசாமியா வது நாஸ்திகம் பேசித் தொல்லை கொடுக்கிறான்; ஆனால் ஓமாந்தூர் ராம சாமியோ விபூதி பூசிக் கொண்டே தொல்லை கொடுக்கிறான் என்று பார்ப்பனர்கள் கூறியதை தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில் அடையாளப் படுத்தினார்.

சென்னை உயர்நீதிமன் றத்தில் முதன் முதலாகப் பார்ப்பனர் அல்லாத நீதிபதி சோமசுந்தரம் வருவதற்கு முதல் அமைச்சர் ஓமாந் தூரார் பரிந்துரை செய்தார்; பார்ப்பனர் ஒருவரை அந்த இடத்துக்குக் கொண்டு வர பார்ப்பன சக்திகள் அழுத் தம் கொடுத்தன. (ராஜாஜி உட்பட).

பிரதமர் நேரு அவர்கள் முதல்வர் ஓமாந்தூராரைத் தொடர்பு கொண்டு, விட்டுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஓமாந்தூரார் என்ன செய்தார் தெரியுமா? பிடியுங்கள் என் ராஜி னாமாவை! என்பதுதான் பதிலாக இருந்தது.

வேறு வழியின்றி பிரத மர் நேரு ஓமாந்தூரார் உறு திக்கு இணங்க நேர்ந்தது.

1948இல் ஓமாந்தூரார் காலத்தில் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் இந்தித் திணிப்பை முன் வைத்தார் தந்தை பெரியார் போர்க் கொடி தூக்கினார். அந்த சூழலில் தந்தை பெரியார் முதல்வர் ஓமாந்தூராரைச் சந்திக்க நேர்ந்த சமயத்தில் ஓமாந்தூரார் கூறியதை தந்தை பெரியார் வெளியிட் டுள்ளார் (விடுதலை 2.11.1948)

நீங்கள் காங்கிரஸில் இருந்திருந்தால் நீங்கள் அல்லவோ இந்த ஸ்தானத் தில் இருந்திருக்க வேண் டும் என்றார் ஓமாந்தூரார்.

அந்த ஸ்தானத்தில் நான் இருந்தால் இப்பொழுது நான் செய்யும் வேலையைச் செய்ய முடியாதே என்று தந்தை பெரியார் பதில் கூறினார். உண்மைதானே!

சேரன்மாதேவி குரு குலத்தில் படித்த மாணவர் களுள் ஒருவர் ஓமாந்தூரார் மகன். குருகுலத்தில் அங் குப் பார்ப்பனர் அல்லாதார் பாதிக்கப்பட்டதை ஓமாந் தூரார் மகன் மூலம்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது என்பதும் கூடுதல் தகவலாகும். இன்று ஓமாந்தூரார் பிறந்த நாள் (1895).

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/74573.html#ixzz2sJMInJDT

தமிழ் ஓவியா said...


ரசல்


உலக நாத்திகச் செம்மல் பெட்ரண்ட் ரசல் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1970) 98 ஆண்டுகள் 8 மாதம் 15 நாள்கள் வாழ்ந்து இன்ஃ புளூயன்சா காய்ச்சலால் மரணம் அடைந்தார். Why I am not a Christian என்ற அவரின் புகழ் பெற்ற ஆங்கில நூலை நான் ஏன் கிருத்துவன் அல்ல என்று தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்.

குத்தூசி குரு சாமி அவர்கள் அதனை மொழி பெயர்த்தார். 1927ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இலண்டன் லோகாயத சங்கத்தின் (National Secular Society) சார்பில் பாட்டார்சி நகர மன்றம் ஒன்றில் இந்தத் தலைப்பில் ரசல் உரையாற் றினார். நான்கு ஆண்டு களுக்குள் 7 பதிப்புகள் வெளியிடப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் 24 ஆயிரம் நூல்கள் விற்பனையாயின என்பது சாதாரணமானதல்ல.

தனது மூன்றாவது வயதிலேயே ரசல் பெற் றோர்களை இழந்தார்.

ஆனாலும் அவர்தம் பெற்றோர்கள் தம் பிள்ளை மத மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தனர். அதற்காக இருவரை, குழந்தை ரசலுக்குப் பாதுகாவலர் களாக நியமித்தனர் என் பது அந்தக் கால கட்டத்தில் ஆச்சரியமான தகவல்தான்.

11 வயது முதல் 38 வயது வரை கணிதம்தான் அவ ருக்கு எல்லாமுமாக இருந் தது. அதன் பிறகு சமு தாயச் சிந்தனைகள் அவரி டம் வேர்விட ஆரம்பித்தன. முதல் உலகப் போர் நடந்த போது அதன் தீய அம்சம் குறித்து எதிர்த்து எழுதி னார். அதன் காரணமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வேலை பறிபோயிற்று - சிறையும் அவரை வா என்று வரவேற்றது.

1910ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட ஒரு முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அக்கட்சியின் கூட் டத்தில் ரசல் பேசியபோது சில வினாக்கள் அவரிடம் தொடுக்கப்பட்டன.

கேள்வி: கடவுளைப் பற்றி நீங்கள் கவலைப் படாதவரா? ரசல்:ஆம்!

கேள்வி: சர்ச்சுக்குப் போவதுண்டா? ரசல்: நிச்சயமாகப் போக மாட்டேன். கேள்வி: இந்தக் கருத்தை இரகசியமாக வைத்துக் கொள்வீர்களா? ரசல்: இல்லை. வெளிப் படையாகவே கூறுவேன் என்றார் ரசல். விளைவு - அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பு மறுக்கப் பட்டது.

தந்தைபெரியார் போல பெண்ணுரிமைக் கருத்தில் முற்போக்கு எண்ணம் கொண்டவர்; அவர் எழுதிய திருமணமும் ஒழுக்கமும் (Marriage and Moral) எனும் நூல் தடை செய்யப் பட்டது.

குறிப்பு: மேலும் விவரங் களுக்கு ஆசிரியர் மான மிகு கி.வீரமணி அவர்கள் உண்மை இதழில் மார்ச்சு, ஏப்ரல் 1970, விடுதலை 15.2.1970 கட்டுரைகளைக் காண்க)

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74602.html#ixzz2sJMa4tIW

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' என பெயர் மாற்றம் சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத்தல்


மதுரை, பிப். 2- சென்னை உயர்நீதி மன்ற என்பதை 'தமிழ் நாடு உயர் நீதிமன்றம்' என பெயர் மாற்ற வேண்டும். உயர் நீதிமன் றங்களில் தமிழில் வாதிட கட்சி பாகு பாடின்றி தமிழக எம்.பி.,க்கள் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும்,'' என மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத் தினார்.

சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதிட வழிகாண வேண்டும் என மதுரை வந்த சுதர்சன நாச்சியப்பனிடம், உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். சுதர்சன நாச்சியப்பன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மூன்று திராவிட மொழிகளுக்கு செம்மொழி தகுதி வழங்கியவர் சோனியா.

இதன்படி, தமிழ் மொழி, செம்மொழியானது. இந்நிலையில் சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதிட வலியுறுத்தி வழக்குரைஞர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பட்டினிப் போராட்டமும் இருந்துள்ளனர். உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி, தமிழக உயர்நீதி மன்றங்களில் தமிழில் வாதிட தடை எதுவும் இல்லை. இதை நடைமுறைப்படுத்தும்படி, பிரத மரிடம் வலியுறுத்துவேன். சென்னை உயர்நீதி மன்றம் என்பதை, தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தமிழக உயர்நீதிமன்றங்களில், தமிழில் வாதிடுவதற்கு ஏற்ப, கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.பி.,க் களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என்றார்.

Read more: http://viduthalai.in/page1/74546.html#ixzz2sJN6vUHg

தமிழ் ஓவியா said...


அறிஞர் அண்ணா நினைவு நாள்: நாமாவளி பாடிடும் நாளல்ல!


செயற்கரிய செய்த தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணாவின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. (3.2.2014)

இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாளே தவிர, வைதீகபுரி அகராதியில் உள்ள திதியோ, சிரார்த்தமோ, திவஷமோ அல்ல.

நம் சிந்தனைகளைக் கூர் தீட்டிக் கொள்ளும் ஒரு வாய்ப்பு நாள்!

அண்ணா இன்று பலருக்குப் படம் மட்டுமே! உண்மையில் அவர் பாடம் ஆக வேண்டும்.

- படமல்ல! இது ஒரு விசித்திர வேடிக்கை, நமக்கு வேதனை!

அண்ணா பெயர் சொன்னால் போதுமா?
அண்ணா என்றால் யார்? எதைச் செய்தவர்?
அண்ணா என்றால் பகுத்தறிவு,
அண்ணா என்றால் சமூகநீதி,

அண்ணா என்றால் அடக்கம், எளிமை, ஆடம்பரமின்மை!
அண்ணா என்றால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
ஆகியவைகளைப் போற்றிப் பின்பற்றிய பண்பாளர்!

இவைகளை மறந்துவிட்டு அண்ணாவைப் புறந்தள்ளி பூஜை செய்வது போல சடங்கு நிகழ்வு களை நடத்துவது - அண்ணாவைக் கொச்சைப் படுத்தும் கோணல் நடவடிக்கைகளேயாகும். நான் கண்ட, கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று கூறி இறுதி மூச் சடங்கும் வரை பெரியாரைத் துணைக் கொண்ட பெம்மான்!
எனவே அண்ணாநினைவு நாளில் அவர்தம் லட்சியங்களை நெஞ்சில் ஏந்தி, பீடு நடைபோட உறுதி ஏற்று, அவர் காண விரும்பிய பெரியார் உலகத்தைப் படைப்போம்!

அது - வெறும் தேர்தலை மட்டும் பொறுத்ததல்ல,

அடுத்த தலைமுறைகளின் மானவாழ்வைப் பொறுத்த மகத்தான நிலைப்பாடு;

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!

கி.வீரமணி

தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 3.2.2014

Read more: http://viduthalai.in/e-paper/74605.html#ixzz2sJO8yrqi

தமிழ் ஓவியா said...


இந்து அற நிலையத் துறையின் வேலை இதுதானா?


அண்ணா நினைவு நாளில் சிறப்பு வழிபாடா?

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று இந்து அறநிலையத் துறையின் சார்பில் 34 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு என்று அ.இ.அ.தி. மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான னுச. நமது எம்.ஜி.ஆர் இதழில் இன்று வெளி யாகியுள்ளது. இதைவிட அறிஞர் அண் ணாவைக் கொச்சைப்படுத்துவது வேறு ஒன்றும் இருக்க முடியுமா?

கோயிலைப்பற்றி, வழிபாடு பிரார்த் தனைபற்றி அண்ணாவின் கருத்தென்ன? இதோ அண்ணா பேசுகிறார் கேளுங்கள்! கேளுங்கள்!! இராபர்ட் கிளைவ் வந்த காலத்தில் இலட்சக்கணக்கான அபிஷே கங்கள் ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன? கிளைவ் கல்லறையின் மீது இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.

இன்று ஜப்பான் சில இடங்களில் தோற் கடித்தது. அர்ச்சனைகளின் பலனா? யாகம், யோகம் செய்தா? (திராவிட நாடு 5.3.1942) என்றாரே அறிஞர் அண்ணா. அத்தகைய அண்ணாவின் நினைவு நாளுக்காக கோயில்களில் வழிபாடா?

தூத்துக்குடி துறைமுகத் திட்டப் பேச்சு வார்த்தையில் சுமூக உறவு ஏற்பட்ட தன் நன்றியாக காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு முதல் அமைச்சர் அண் ணாவை மத்திய நீர்ப் பாசன அமைச்சர் வி.கே.ஆர்.பி. ராவ் அழைத்த போது, (19.9.1967) நான் வரவில்லை; உங்களுக்கு வேண்டுமானால் ஒருவரை உங்களோடு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்ன அண்ணா என்னும் பகுத்தறிவுவாதியைக் கொச்சைப்படுத்த லாமா அதிமுக அரசு?

அண்ணாவைக் கொச்சைப்படுத்து வதற்கென்று அண்ணா பெயரில் ஒரு கட்சியா! ஒரு ஆட்சியா!

Read more: http://viduthalai.in/e-paper/74608.html#ixzz2sJOLIVGO

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


அண்ணா சொன்னது...

செய்தி: நாங்கள் பா.ஜ.க., கூட்டணியில் இருந்தாலும் சிறுபான்மை யினருக்குப் பாதுகாப்பாக இருப்போம்.
- வைகோ

சிந்தனை: குஷ்டரோகி யின் கையில் இருக்கும் வெண்ணெய்ப்புட்டு என்று அறிஞர் அண்ணா சொன் னதுதான் நினைவிற்கு வருகிறது. அது சரி! பா.ஜ.க., கூட்டணியில் இருந்தாலும்... என்று ஏன் சொல்லுகிறார்... அங்கே தான் அவருக்கே இடிக்கிறதோ!

Read more: http://viduthalai.in/e-paper/74607.html#ixzz2sJOaO1dP

தமிழ் ஓவியா said...


இந்துத்துவம் குறித்து அளித்த தீர்ப்பு: ஏழு நீதிபதிகள் கொண்ட மறு விசாரணை


புதுடில்லி,பிப்.3- இந்துத்துவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஜே.எஸ்.வர்மா அளித்த தீர்ப்பு குறித்து 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விரைவில் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க உள் ளது.

பாரதீய ஜனதா கட்சி யின் தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, மகாராஷ்டிராவில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, மகாராஷ்டிரா வில் முதல் இந்து அரசு அமைய உள்ளது என்று பிரச்சாரத்தின் போது கூறினார். இது மத உணர்வு களைத் தூண்டும் செயல்.

அதனால், முரளி மனோகர் ஜோஷி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி என்.பி.படேல் என்பவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.எஸ். வர்மா, இந்துத்துவா அல்லது இந்துமதம் என்பது ஒன்றுதான். அது மதத் தின் பெயரை குறிப்பது அல்ல. இந்திய துணை கண்டத்தில் வாழும் மக் களின் வாழ்க்கை முறையை தெரிவிக்கும் சொல் என்று கூறி, ஜோஷிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதேபோல், மகா ராஷ்டிரா பேரவைக்கு 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பா.ஜ. சார்பில் அபிராம் சிங் என்பவர் வெற்றி பெற்றார். தேர் தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வு களைத் தூண்டும் வகை யில் இந்துத்துவா பற்றி அபிராம்சிங் பேசினார் என்று கூறி அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப் பட்டது.

இந்த வழக்கை விசா ரித்த மும்பை உயர் நீதி மன்றம், அபிராம்சிங் வெற்றி பெற்றது செல் லாது என்று அறிவித் தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அபி ராம்சிங் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்டஅமர்வு, இது அரசியல் சட்டம் சம் பந்தப்பட்ட விவகாரம் என்பதால், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த மனுவை அனுப் பியது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆம்.எம் லோதா, ஏ.கே. பட்நாயக், முக்கோபாத் யாயா, தீபக் மிஸ்ரா, கலிபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு விசா ரித்து வருகிறது.

இதேபோல் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ., தலைவர் சுந்தர்லால் பட்வா மீது நாராயண் சிங் என்பவர் தொடர்ந்து வழக்கை விசாரித்த 5 நீதி பதிகள் கொண்ட அமர்வு, மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசா ரிக்கப் பரிந்துரைத்துள் ளது.

இந்நிலையில், அபி ராம் சிங் மேல்முறையீடு மனு மீதான விசாரணை கடந்த 30 ஆம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் நடந்தது. அப்போது, சுந்தர்லால் பட்வாவுக்கு எதிராக தொடரப்பட்ட இதேபோன்ற வழக்கு, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட் டுள்ளது என்று நீதிபதி களுக்கு தெரிவிக்கப்பட் டது.

இதையடுத்து, இந்த வழக்கையும் அந்த வழக்குடன் சேர்த்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க 5 நீதி பதிகள் கொண்ட அமர்வு பரிந்துரைத்தது. அத்துடன், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த மனுக்களை விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங் கவும கேட்டு கொண் டது.

இதையடுத்து, 7 நீதி பதிகள் கொண்ட அமர்வை அமைக்கக் கோரி தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு உச்ச நீதிமன்ற பதிவாளர் அறிக்கை அனுப்புவார் என்றும், அதன்பின், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதி பதி அமைப்பார் என் றும் உச்சநீதிமன்ற வட் டாரங்கள் தெரிவித்தன.

Read more: http://viduthalai.in/page-5/74588.html#ixzz2sJQMRBUg

தமிழ் ஓவியா said...

இதயத்திற்கு இதம் தரும் கனிகள்

இன்றைய உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம். மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம்.

இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும். ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.

Read more: http://viduthalai.in/page-7/74596.html#ixzz2sJQhWCLe

தமிழ் ஓவியா said...

இதயத்திற்கு இதம் தரும் கனிகள்

இன்றைய உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம். மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம்.

இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும். ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு

Read more: http://viduthalai.in/page-7/74596.html#ixzz2sJRO3T4S

தமிழ் ஓவியா said...கேள்வி: ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது, திரைத்துறையில் என்னவிதமான சிரமம், சங்கடத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது?

பதில்: நிறைய விஷயங்கள் இருக்கு. ஒன்னு ரெண்டை மட்டும் சொல்றேன். தேங்காய்ல சூடத்தை வெச்சுக் கொளுத்தி கேமராவுக்குச் சுத்தி எடுத்துட்டு வருவாங்க, நான் எடுத்துக்க மாட்டேன்னு சொல்வேன். அப்ப சிலர், எங்க மனசு புண்படுமேனு நினைச்சாவது இந்தக் கற்பூரத்தைத் தொட்டு கண்ல ஒத்திக்கலாம்லனு கேப்பாங்க. உடனே, என் மனசு புண்படும்கிறதுக்காக நீங்க தேங்காய் சுத்தாம இருக்கலாம்லனு திருப்பிக் கேட்டுடுவேன்.

இதேபோல சினிமாவுல இன்னொரு மிகப் பெரிய காமெடி இருக்குது. ஒரு காட்சியில செத்துப்போற மாதிரி நடிச்சா, அப்படி நடிச்சு முடிச்ச பிறகு கேமராவை ஒருமுறை பார்த்து சிரிக்கச் சொல்வாங்க. அதாவது, ஆள் சாகலை... திரும்ப எந்திரிச்சுச் சிரிச்சுட்டார்னு விதியை ஏமாத்துறோமாம். ஆனா, நான் சிரிக்க மாட்டேன்னு சொல்வேன். இல்ல சார் சிரிச்சிடுங்கனு விடாப் பிடியா நிப்பாங்க. சிரிக்காட்டி நான் நிஜமாவே செத்துடுவேன்னு பயப்படுறீங்களா?னு கேட்பேன். யார் என்ன சொன்னாலும் சிரிக்க மாட்டேன்னு உறுதியா இருப்பேன். எங்க போனாலும் எனக்கு இது பெரிய போராட்டமா இருக்கும். அதே மாதிரி ஈழப் பிரச்சினையில், மனசுல அவ்வளவு ஆதங்கம், கோபம், சோகம் இருக்கு. அதை எல்லாத்தையும் மேடையில் கொட்டித் தீர்த்தால் கண்டிப்பா எனக்கு ஜெயில்தான். அப்படி நான் ஜெயில், கோர்ட், கேஸ்னு அலைஞ்சேன்னா தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவாங்க. அதாவது மனசுல இருக்கிறதைக் கொட்டித் தீர்க்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல். அது என் மனச்சாட்சியை ரொம்ப உறுத்தும்!

தமிழ் ஓவியா said...

கேள்வி: பெரியார் அணிந்த மோதிரம் உங்களிடம் எப்படி வந்தது?

பதில்: பெரியார் படத்தில் நடிச்சதுக்குச் சம்பளம் வேண்டாம்னு சொல்லிட்டேன். 60 நாட்கள் அந்தப் படத்துல நடிச்சேன். படத்தின் 100_ஆவது நாள் விழாவில், இந்த மோதிரம் பெரியார் தன் 19_ஆவது வயசுல விரல்ல போட்டுக்கிட்டது. இன்னைக்குக் கணக்குப் போட்டா மோதிரத்துக்கு சுமார் 110 வயசு. இதை சத்யராஜுக்குப் பரிசளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்னு சொல்லி, கி.வீரமணி அய்யா கலைஞர் கையால் எனக்கு அணிவிச்சார். இந்த மோதிரத்தின் மீது பலருக்கும் கண் உண்டு. நானும்கூட ஒரு கண் வைத்திருந்தேன். ஆனாலும், இந்த மோதிரம் தம்பி சத்யராஜ் கைக்குப் போனதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சினு தலைவர் கலைஞரும் சொன்னார். அப்படிப் பார்த்தா ஹாலிவுட் நடிகர்கள் பிராட் பிட், டாம் குரூஸைவிட உலகத்திலயே அதிக சம்பளம் வாங்கிய நடிகன் நான்தான். ஏன்னா, பெரியாரின் மோதிரம் அந்த அளவுக்கு விலை மதிப்பில்லாதது!

- நன்றி: ஆனந்த விகடன், 15.1.2014

தமிழ் ஓவியா said...

கெடுவான் கேடு நினைப்பான்


கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கட்சியாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

எந்தெந்த இரு கட்சியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத் தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட மெடீரியலிஸ்ட் (Materialist) என்னும் கட்சியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட ஸ்பிரிச்சுவலிஸ்ட் (Spiritualist) என்னும் கட்சியாரும் ஆகிய இரு கட்சிக்காரர்களும், அதாவது நாஸ்திகர்களும், ஆஸ்திகர்களும் ஆகிய இரு கட்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோம் என்றால், அன்னியருக்குக் கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டுமென்றோ நினைப்பவன் கெட்டுப் போவான் என்பதாகும்.

இதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்குச் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடு நினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதி செய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப் போவான் என்றும் கருதுகிறார்கள். நாஸ்திகர்கள், அதாவது சர்வசக்தியும் சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ அல்லது ஒரு வஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்து கொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர்களுக்குக் கொடுத்து வருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம், இந்த கெடுவான் கேடு நினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும், கேடு நினைக்கின்ற மனிதனும் பிற மனிதர்களால் கேடு செய்யப்படுவதும், மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட, கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா? ஆகவே, பிறருக்குக் கேடு செய்ய நினைத்து, பிறரால் வெறுக்கப்படவும், துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் பகட்டிற்கு ஆளாவதும் சகஜமாகும்.

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்ற பிரத்தியட்ச பழமொழிப்படியே நன்மையும் தீமையும் தான் தர வருமே என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

- குடிஅரசு 12.11.1933

தமிழ் ஓவியா said...

கெடுவான் கேடு நினைப்பான்


கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கட்சியாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

எந்தெந்த இரு கட்சியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத் தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட மெடீரியலிஸ்ட் (Materialist) என்னும் கட்சியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட ஸ்பிரிச்சுவலிஸ்ட் (Spiritualist) என்னும் கட்சியாரும் ஆகிய இரு கட்சிக்காரர்களும், அதாவது நாஸ்திகர்களும், ஆஸ்திகர்களும் ஆகிய இரு கட்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோம் என்றால், அன்னியருக்குக் கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டுமென்றோ நினைப்பவன் கெட்டுப் போவான் என்பதாகும்.

இதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்குச் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடு நினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதி செய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப் போவான் என்றும் கருதுகிறார்கள். நாஸ்திகர்கள், அதாவது சர்வசக்தியும் சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ அல்லது ஒரு வஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்து கொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர்களுக்குக் கொடுத்து வருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம், இந்த கெடுவான் கேடு நினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும், கேடு நினைக்கின்ற மனிதனும் பிற மனிதர்களால் கேடு செய்யப்படுவதும், மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட, கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா? ஆகவே, பிறருக்குக் கேடு செய்ய நினைத்து, பிறரால் வெறுக்கப்படவும், துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் பகட்டிற்கு ஆளாவதும் சகஜமாகும்.

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்ற பிரத்தியட்ச பழமொழிப்படியே நன்மையும் தீமையும் தான் தர வருமே என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

- குடிஅரசு 12.11.1933

தமிழ் ஓவியா said...

திருப்பதி நாமக் கடவுளின் இருப்பு

நிலம் : ரூ.15,000 கோடி

கட்டடங்கள் : ரூ.1,500 கோடி

நகைகள் : ரூ.30,000 கோடி

நிதி : ரூ.20,000 கோடி

- இந்தியா டுடே 4.10.2006

2006இல் இந்த மதிப்பு என்றால் 2014இல் எத்தனை மடங்கு? கணக்குப் போட்டுப் பாருங்கள்.

தமிழ் ஓவியா said...

திருப்பதி நாமக் கடவுளின் இருப்பு

நிலம் : ரூ.15,000 கோடி

கட்டடங்கள் : ரூ.1,500 கோடி

நகைகள் : ரூ.30,000 கோடி

நிதி : ரூ.20,000 கோடி

- இந்தியா டுடே 4.10.2006

2006இல் இந்த மதிப்பு என்றால் 2014இல் எத்தனை மடங்கு? கணக்குப் போட்டுப் பாருங்கள்.

தமிழ் ஓவியா said...

நுனிப்புல்லர்களுக்கு ஆதாரங்கள் தரும் ஆய்வு நூல்!


நூல்: திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே!
தந்தை பெரியார் கருத்துகள் பற்றி ஓர் ஆய்வு
ஆசிரியர்: சு. அறிவுக்கரசு
வெளியீடு: விழிகள் பதிப்பகம், சென்னை - 600 041.
செல்பேசி: 94442 65152 / 94442 44017
பக்கங்கள்: 256 விலை: ரூ.160/-

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டுள்ள தந்தை பெரியாரின் வரலாறு _ ஒரு புதிய நோக்கு என இந்த நூலைச் சொல்லலாம். திராவிடர் என்னும் பெயரைத் தந்தை பெரியார் தேர்ந்தெடுத்ததன் காரணத்தை தொடங்கும் முன் விளக்கும் நூலாசிரியர் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமைகளை, மூட நம்பிக்கைகளை விளக்கமாக எடுத்துரைத்து, சகுனம் பார்ப்பதான நிமித்தம் முதல் பூதம், பேய் நம்பிக்கை வரை தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் இவை சுட்டப்பட்டுள்ளன என்பதனைப் பட்டியலிடுகின்றார். தமிழர்தம் அடையாளத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை மீட்டெடுக்க வேண்டாமா? அதற்கான முன்முயற்சிதான் பெரியார் கண்ட திராவிடர் கழகம் (பக்கம் 56) என்பதனை நிறுவுகின்றார். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை, மொழியின் தாழ்ச்சியை, இனத்தின் வீழ்ச்சியை தமிழர் வீட்டு வாழ்க்கை நிகழ்வுகளில், திருமணம், நினைவு நாள் போன்றவற்றில் தமிழ் இடம் பெறா நிலை எப்படி ஏற்பட்டது என்பதனை ஆய்வு நோக்கில் எடுத்து வைக்கின்றார்.

வீழ்ச்சி அடைந்த தமிழ் இனம், தனது மொழியையே தாழ்ச்சியாக நினைத்த தமிழ் இனம் தந்தை பெரியாரின் வருகையால் எப்படித் திருப்பம் அடைந்தது? என்பது குறித்தும் பொது வாழ்க்கையில் எந்தக் கொள்கைகளுக்காக 1917இல் நுழைந்தாரோ அந்தக் கொள்கைகளைக் (றிக்ஷீவீஸீநீவீஜீறீமீ) கடைசி வரையில் கைவிடாமல் உழைத்தவர், கழகத்தவரை உழைக்கச் செய்தவர் பெரியார். அந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது நடைமுறைகளை, அணுகு முறைகளை, செயல்திட்டங்களை (றிஷீறீவீநீவீமீ) சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் போராடியவர் பெரியார். அன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலையை உயர்த்திட இந்தத் தந்திர உபாயங்களைக் கையாண்டார். சமூக நீதிக்காக- _ பார்ப்பனர் அல்லாதார் சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்காக அவர்தம் செயல்முறைகள் மாற்றப்பட்டனவே தவிர -_ உயர்வுகளை நோக்கிப் பார்ப்பனர் அல்லாத திராவிடர்களை அழைத்துச் செல்வதற்காக மாற்றினாரே தவிர- _ அவர் மாறவே இல்லை! என நூலாசிரியர் சொல்லும் உண்மையை விளக்கும் நோக்கத்தில் அமைந்த அற்புதமான ஆய்வேடாக, கருத்துப்பெட்டகமாக இந்த நூல் அமைந்துள்ளது.

திராவிடர் கழகம் ஆட்சிக்கு வருபவர்களையெல்லாம் ஆதரிக்கும் ஒரு கட்சி என்று நுனிப்புல் மேய்வோரின் குற்றச்சாற்றுகளை மறுதலித்து, தந்தை பெரியார் இலட்சிய இலக்கிலேயே குறியாய்க் கொண்டதன் விளைவாகத்தான், இரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி அறிவுப் புரட்சியாகி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மனித சமூகம் நம் நாட்டில் மனிதத்தன்மை, மனித உரிமைகளைப் பெற்றுத் தலைநிமிர்ந்தனர் என்பதைப் பல்வேறு கடந்த கால -_ மிகவும் javascript:void(0)அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்களை அடுக்கடுக்காகத் தந்து வாசகர்களை மிகவும் சிந்திக்க வைக்கிறார். ஆழ்ந்த ஆய்வுப்பார்வை தெளிவான வெளிச்சத்தை, குழப்புபவர்களுக்கும் கும்மிருட்டில் தடுமாறுவோருக்கும் தருவதாக அமைந்துள்ளது.

- முனைவர் வா.நேரு

தமிழ் ஓவியா said...

மருத்துவ வசதியற்ற குஜராத்


கலை, நிச்சயம் மனிதனைச் சாந்தப்படுத்தக் கூடியது; சந்தோசமளிக்கக் கூடியது. மறுக்கவில்லை. ஆனால், சினிமாவுக்கு மட்டும் ஏன் நம் நாடு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாம் விவாதிக்க எத்தனையோ உண்மையான பிரச்சினைகள் காத்துக்கிடக்க, அமீர் கானா, ஷாரூக் கானா, சல்மான் கானா... இந்த மூன்று கான்களில் யார் சிறந்தவர்? என்றே விவாதித்துக் கொண்டிருக்கிறோமே... ஏன்? நாம் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும்!

குஜராத்தில், புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன; நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள்; கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இவற்றை மட்டும் வைத்து அளவிட முடியாது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனை குழந்தைகள் குஜராத்தில் இறந்து போகின்றன என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும் அது கேரளா, தமிழ்நாடு... ஏன் இமாச்சலப் பிரதேசத்தைவிடவும் பின்தங்கித்தான் இருக்கிறது.

மோடி, பிரதமரானால் சிறுபான்மை யினருக்குப் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். அத்தகைய ஒருவர், நாட்டின் பிரதமராக வருவதை நான் ஏற்க மாட்டேன்!

--- அமர்த்தியா சென்,
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

மும்பையில் மூடநம்பிக்கையின் உச்சநிலை

உலகத்தின் மிக அதிகமான செலவில் கட்டப்பட்ட வீடு, பயன்படுத்தப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி கட்டியுள்ள அந்த வீட்டில் குடியேறினால் அவர்களுக்குக் கெடுதல் வரக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.

27 மாடிகளைக் கொண்டு பலநூறு கோடிகளை முழுங்கியுள்ள அந்தக் கட்டிடத்திற்கு அன்டில்லா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சீனத்து ஃடெங் சூயி என்று சொல்லப்படும் மனையடி சாத்திரம் போன்றுள்ள இந்திய வாஸ்து சாத்திரத்தின்படி அந்தக் கட்டிடம் அமையவில்லையாம்.

சென்ற ஆண்டு நிறைவெய்திய அந்த வீடு மும்பையில் விண்ணை முட்டி நிற்கும் அளவிற்கு ஆக்கிரமித்து அழகு செய்கிறது. 29 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டு கட்டப்பட்ட அந்த வீடு, உலகின் ஒன்பதாவது பணக்காரர் என்று ஃபோபர்ஸ் பத்திரிகையால் கணிக்கப்பட்ட, இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியால் கட்டப்பட்டதாகும்.

ஆடம்பரம் நிறைந்த அந்தப் புது வீட்டில் அம்பானியும் அவரது மனைவி நீடாவும் இரண்டு குழந்தைகளும் ஏன் இன்னும் குடியேறவில்லை என்பது பற்றி பல யூகங்கள் முளைத்து வந்துள்ளன.

அந்த ஆடம்பர சொகுசு மனையில் ஹெலிகாப்டர்கள் இறங்கக்கூடிய மூன்று தளங்களும் ஆறு மாடிகளில் கார் நிறுத்தும் வசதிகளும் பல நகரும் தோட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

வாஸ்து சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள இந்தியக் கட்டுமான வழிகாட்டுதல்களை மீறி இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக அம்பானி குடும்பத்தினர் கருதுவதால், அந்த வீட்டில் குடிபுகுந்தால் அவர்கள் அதிர்ஷ்டம் (நல்வாய்ப்பு) சாபத்திற்கு ஆளாகும் என அஞ்சிக் குடிபுக மறுப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை, பிப். 4- ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக் குரைஞர்கள் பழனிமுத்து, ஏ.ரமேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப் பதாவது:

தேசியக் கல்வி ஆணைய விதி முறைப்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு மதிப்பெண் சலுகை அளிக்கவேண்டும். தமிழக அரசு எந்த சலுகையும் அளிக்கவில்லை. இது சட்டவிரோதமானது. எனவே உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வழக்கில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர். இந்த நிலையில் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையை இடஒதுக்கீடு அடிப்படையின் கீழ் தமிழக அரசு அளித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக் கிறது, இருந்தாலும் தேசியக் கல்வி ஆணைய விதிமுறை முழுவதுமாக அமுல்படுத்த வேண்டும் என்று வழக்குரைஞர்கள் பழனி முத்து, ரமேஷ் ஆகியோர் கூறினர்.

Read more: http://viduthalai.in/page-2/74671.html#ixzz2sOf0JiY0

தமிழ் ஓவியா said...


ஒற்றைப் பத்தி பற்றி


ஆசிரியருக்குக் கடிதம் >>>

ஒற்றைப் பத்தி பற்றி

30.1.2014 ஆம் நாளில் கலைஞர் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப் பாகும் பேராசிரியர் சுப.வீரபண்டியன் உரையாற்றும் நிகழ்ச்சியான ஒன்றே செய் நன்றே செய் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் ஒற்றைப் பத்தி எனும் தொகுப்பு வெளியீட்டின் சிறப்புகளைப் பற்றிய 2, 3 கருத்துக்களை மேற்கோள் காட்டிப் பாராட்டினார்.

இந்திய ராணுவ தளபதி பத்மநாபன் அவர்கள் இராகுகாலம் பார்த்த நிகழ்வுக்கு கவிஞர் அவர்கள் எடுத்துக் காட்டியுரைத்த கேள்வி என்னை மிகவும் நெகிழ வைத்தது. மெல்ல எறிந்து கடிதோச்சலாக இதை கொள்ளலாம்.

அதேபோல் நாள்தோறும் விடுதலை இதழ் அஞ்சலில் வத்தவுடன் ஒற்றைப் பத்தியைப் படிக்கத் தவறுவதேயில்லை. இதே இராகு வேளை செய்தியை இந்திய நாடு சுதந்திரம் வந்த புதிதில் நேரு அவர்கள் எப்படி கையாண்டார் என்பதை நினைக்கும் போது நேரு அவர்கள் பகுத்தறிவுக் கொள்கையை பாராட்டத் தோன்றுகிறது. இந்திய நாடு முதல் முதல் தயாரித்த கப்பலின் பெயர் ஜலஉஷா என்பது அதை கடலில் மிதக்க விடும் நிகழ்ச்சி விசாகப்பட்டினம் கப்பல் தளத்தில் நேரு அவர்களால் மிதக்கவிடப்பட ஏற்பாடு. ஏற்பாட்டாளர்கள் விழாவினை துவக்காமல் மெத்தனம் காட்டுவதாக நேருவுக்கும் படுகிறது. ஏன் தாமதம் என அருகிலிருப்பவரை கேட்கிறார். அவர்கள் மெல்லிய குரலில் இராகுவேளை தீரட்டும் என்று காத்து இருக்கிறார்கள் சில நிமிடங்களில் முடிந்துவிடும் என்றார்கள். ஆனால் நேருவோ நல்ல பணிகள் செய்வதற்கு இராகு வேளை குறுக்கிடுமா னால் அந்த இராகு வேளையையே தள்ளுங்கள் என்று கூறி கப்பலை மிதக்க விடுகிறார்.

ஆனால் விண்வெளிக்கு அனுப்பும் ஏவுகணைகளை சந்திராயன் ஆகியவற்றை அனுப்ப திருப்பதி கோயிலுக்கு மட்டும் போனால் சைவர்கள் கேள்வி கேட்க கூடும் என்ற காரணத்தால் காளஹஸ்தி கோயிலுக் கும் போய் அர்ச்சனை செய்கிறார்கள்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால் இந்துமதச் சார்பான கோயில்களுக்கு மட்டும் ஏன் போக வேண்டும்? நாம் தர்காவுக்கும், வேளாங்கண்ணி கோவிலுக்கும் போகாதது ஏன் என்று கேள்வியும் எழுந்தால் பதில் என்னவாக இருக்கும்?.

இதுபோல் தான் அப்போது எல்லாம் பள்ளிகளிலும், அரசு நிகழ்ச்சியிலும் கடவுள் வணக்கம் என்று பாடுவார்கள். பாடுபவர் தன்னுடைய சார்பு கடவுளைப் பற்றி தான் பாடுவது வழக்கமாக இருந்த நிலை. இது பலருக்கும் சரியாகப் படாத காரணத்தால் தான். கலைஞர் அவர்கள் இறை வணக்கம் என்பதையே மாற்றி தமிழ்த் தாய் வாழ்த்து என்று நீராரும் கடலுடுத்த என்ற அற்புதமான திராவிட என்ற சொல் இடையில் வரும்படியான பாடலைத் தேர்வு செய்து ஆணை பிறப்பித்தார் ஆக மொழி வாழ்த்தலும் கூட நாட்டு வாழ்த்தான ஜனகனமன பாடலில் வரும் திராவிட என்ற சொல்லை அழுத்தம் தரும் வண் ணம் ஆணையிட்ட கலைஞரின் ஆட் சியை இந்த சந்தர்ப்பத்தில் மனதில் நினைத்து மகிழ்வுறும்போது, இன்று நடப் பதைப் பார்த்து................. - வேலை.பொற்கோவன்

Read more: http://viduthalai.in/page-2/74675.html#ixzz2sOfKK2Zi

தமிழ் ஓவியா said...


புறப்படுகிறார்கள் கோயபெல்சுகள் உஷார்!

இணைய தளத்தில் நரேந்திர மோடியின் செல்வாக்கை அதி கரிக்கச் செய்ய புதிய திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்பட விருக்கின்றனர். இதற் கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சென் னையில் நடத்தப்பட் டுள்ளது. தொழில் நுட்பப் பொறியாளர் கள் 350 பேர் கூட்டப் பட்டுள்ளார்கள். பி.ஜே. பி.யின் சென்னைத் தலைமை அலுவலகத் தில் இதற்காகத் தனி அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.

சுருக்கமாகச் சொல் லப்போனால், புளுகு களைக் கட்டவிழ்த்து விட கோயபல்சுகள் திட்டம் தீட்டிவிட்ட னர் என்றே கருதவேண் டும்.

இதற்கு முன்பேகூட இணைய தளத்தில் மோடியுடன் தொடர்பில் உள்ளவர்கள் 19 லட்சம் என்று ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.

இந்தியாவின் முன் னணி செய்தித் தொலைக் காட்சி நிறுவனமான ஹெட் லைன்ஸ் டுடே - மோடியின் டுவிட்டர் சமூக வலை தளக் கணக் கில் இணைந்துள்ளவர் களில் 70 சதவிகிதப் பெயர்கள் போலியானவை என்று அம்பலப்படுத்தி விட்டதே!

2013 ஜூன் மாதத்தில் உத்தரகாண்ட் வெள்ள அபாயத்தில் சிக்கிய 15,000 குஜராத்திகளை வெள்ளத் திலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றிவிட் டார் என்று கிளப்பி விடவில்லையா?

இராணுவத்தினரே மீட்புப் பணியில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந் தித்த நிலையில், 80 இன்னோவா கார்களைப் பயன்படுத்தி 15 ஆயிரம் பேர்களை மோடி காப் பாற்றினாராம், நம்புங்கள், கேழ்வரகில் நெய் வடி கிறது!

அதிகபட்சமாகப் போனால், ஓர் இன் னோவா காரில் 7 பேர் களை ஏற்றலாம்; வேண்டு மானால், இரண்டு பேர் களை அதிகமாக ஏற்றிச் செல்லலாம். 80 கார்கள் டேராடூனிலிருந்து ஒரு தடவைக்கு 720 பேர் களைத்தான் கொண்டு செல்ல முடியும். 15 ஆயி ரம் பேர்களை மலைப் பகுதியிலிருந்து கீழே கொண்டு போகவும், வரவும் 21 தடவைகள் பயணிக்கவேண்டும்.

கேதார்நாத்திலிருந்து டேராடூன் 221 கிலோ மீட்டர் தூரமாகும். 21 முறை என்று கணக்கிடும் பொழுது ஒவ்வொரு காரும் சுமார் 9300 கிலோ மீட்டர் பயணிக்கவேண் டும், அதுவும் மலைப் பகுதிகளில்.

சராசரியாக மணிக்கு 40 கிலோ மீட்டர் என்று வைத்துக்கொண்டாலும் கூட 233 மணிநேரம் பயணம் செய்யவேண்டும்.

இந்தச் சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான அள வில் அல்லாடிக் கொண் டிருக்கும் மக்களில் குஜ ராத் மக்களை அடை யாளம் கண்டு, தேடிக் கண்டுபிடித்துப் பத்திர மாகக் கொண்டு வந்து சேர்த்தாராம், மற்ற மாநில மக்களைப் பார்த்து எப் படியோ தொலைந்து போங்கள் என்று சொல்லி அவர்களை விட்டுவிட்டு வந்துவிட்டாரா மோடி என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (23.6.2013) அம்பலப்படுத்தியதை நினைத்துப் பாருங்கள். ஒரே நாளில் 15,000 பேர் களை மீட்டதாகக் கூறு வது அண்டப் புளுகு ஆகாயப் புளுகுதானே!

இப்பொழுது இளைஞர்களை மயக்க, ஈர்க்க இணையதளத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்; அதற்காகக் கைதேர்ந்தவர்களை வலை போட்டுத் தேடிப் பிடிக்கிறார்கள்.

சீனாவில், குவாங்ஜோ என்னும் நகரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள தாக இணைய தளத்தில் வெளியிட்ட கோயபல்சு கள் வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டுவிட் டனர்!

உஷார்!! உஷார்!!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/74713.html#ixzz2sUm2V3Ab

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்றத்தை நடத்தவிடுக!


இன்று (5.2.2014) நாடாளுமன்றம் கூடுகிறது. 15 ஆவது நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம் இது. 16 ஆவது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அடுத்து நாடாளுமன்றம் கூடும். இன்று கூடும் நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறும் - நிறைவேறவும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்துகளை எடுத்து வைக்கவும், விவாதிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். அதற்கு மாறாக தங்களுக்கு மாறுபாடானது என்பதற்காகவோ, உகந்ததாக இல்லை என்பதற்காகவோ நாடாளுமன்றத் தையே நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுவது ஜன நாயகப் பண்பிற்கு உகந்ததல்ல. பல கூட்டத் தொடர்கள் முற்றிலும் முடக்கப்பட்ட மோசமான நிலைகள் எல்லாம் உண்டு. நாடாளுமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எடுத்துக் கூறுவதற்கான மன்றம் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக் கூடாது.

நாடாளுமன்றம் முடக்கப்படுவதால், பொன்னான நேரம் மட்டுமல்ல, மக்கள் பணமும் விரயமாக்கப்படுகிறது என்பதையும் புறந்தள்ளக்கூடாது. 15 ஆவது நாடாளுமன்றத்தின் இந்த இறுதிக் கூட்டத் தில் பல முக்கியமான பிரச்சினைகள் பேசப்பட்டாக வேண்டும்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

1. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம்

2. பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு

3. ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவர விருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதோடு இந்தியாவே தனியொரு தீர்மானத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதுபற்றி முடிவு செய்தல்

4. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற் படையால் தாக்கப்படுவதற்கு நிரந்தர முடிவு

5. கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான அடிப்படை உரிமைக்கான உத்தரவாதம்

6. தனித் தெலங்கானா பிரச்சினை

7. உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு என் பதற்கான சட்டத் திருத்தம் என்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

இதில் பெரும்பாலானவை பெரும்பான்மையான கட்சி களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைதான். இதில் உடன்பாடில் லாத கட்சிகள் விவாதங்களை முன்வைத்து வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கலாமே தவிர, நாடாளுமன்றத்தையே முடக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப் படுகின்றன. வாக்களிக்கும் வெகுமக்களும் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக் கூடாது.

நாடாளுமன்றத்தில் எவ்வளவுதான் ரகளைகள் நடந்தாலும், பேரவைத் தலைவராக இருக்கக் கூடியவர்கள் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில்லை. உறுப்பினர் களை வெளியேற்றுவதில்லை; தொடர் முழுவதும் அவைக்கு வரக்கூடாது (Suspension)என்று கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதில்லை. இவையெல்லாம் சர்வசாதாரண மாகக் காணப்படும் ஒரு மாநில சட்டமன்றம் உண்டு என்றால், அது தமிழ்நாட்டுச் சட்டமன்றம்தான் - அதுவும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடக்கும்போதுதான்.

ஆளும் கட்சியைப்பற்றி ஒரு வார்த்தை குறை கூறினால்கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு மனநிலை ஆளும் கட்சியிடம் இருப்பதை அனேகமாக நாட்டு மக்கள் பெரும்பாலும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் எடுக்கும் நடவடிக்கை அளவுக்குச் செல்லாவிட்டாலும், அளவுக்கு மீறி, அவையையே நடத்த முடியாத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்மீது குறைந்தபட்ச நடவடிக்கைகளையாவது எடுத்து, மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எட்டப்பட தனது அதி காரத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் பயன்படுத்துவதுபற்றி யோசிக்கலாமே!

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கலந்து ஆலோசித்து, அவர்கள் ஒத்துழைப்புத் தருவதாகக் கூறும் வாக்குறுதிகளை நம்பி, மக்களவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தாலும், அமளி என்பது அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் என்பவர்களிடத்திலேயே ஒழுங்கு, கட்டுப் பாடு இல்லையென்றால், பொதுமக்களிடம் அவற்றை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

Read more: http://viduthalai.in/page-2/74718.html#ixzz2sUmhswuc

தமிழ் ஓவியா said...


செய்தியாளர்களிடம் கலைஞர் திருப்பிக் கேட்ட கேள்விசென்னை, பிப்.5 தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை செய்தி யாளர்கள் நேற்று சந்தித்து கேள்வி கேட்ட போது, அவர்களிடம் கலைஞர் திருப்பிக் கேட்ட கேள்வி. சுவையானது. பேட்டி இதோ: கலைஞர் :- உங்களுக்கு என்ன வேண்டும்?
செய்தியாளர் :- இன்று ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பிரசாந்த் பூஷன் அவர்கள் அளித்த பேட்டி யில், காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் பேசிய டேப்பை வெளியிட்டிருக் கிறார். கலைஞர் தொலைக் காட்சியின் எம்.டி. சரத்கு மார் ரெட்டி, ஆவணங் களையெல்லாம் திருத்தி யிருக்கிறார் என் றெல்லாம் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- எல்லாம் பொய்! நீங்களும் செய்தி யாளர்கள் தானே?

செய்தியாளர் :- உங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லி யிருக் கிறாரே?

கலைஞர் :- நீங்கள் எல்லாம் செய்தியாளர்கள் தானே? சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று நடைபெறு கிறதே! அதிலே சம்பந்தப் பட்டவர்களிடம் சென்று நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்க முடியுமா? முதல் அமைச்சரைச் சென்று இதைப் போல நீங்கள் காண முடியுமா? பவானி சிங் என்ற வழக் கறிஞரே தொடர வேண்டு மென்று கேட்பது முறையா என்று யாராவது கேட்டீர்களா? அவர் குற்றவாளிக்கு எதிராக வாதாட வேண்டி யவர், ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே, அதைப் பற்றியெல்லாம் யாராவது கேட்டீர்களா? ஜெயா தொலைக் காட்சி செய்தியாளர் :- உங்கள் மீது ஒரு குற்றச் சாட்டு கூறும்போது, மற்ற வர்கள் மீது குற்றஞ் சாட்டுவது சரியா?

கலைஞர் :- தமிழ் நாட்டில் ஒரு சில செய்தி யாளர்கள் இப்படி நடந்து கொள்கின்ற காரணத் தினால் - அவர்களின் கலாச் சாரம் இந்த அளவிற்கு ஆகி விட்டதால் நான் இதைக் கேட்க நேர்ந்தது.

ஜெயா தொலைக் காட்சி செய்தியாளர் :- நீங்களும் ஒரு நிருபராக இருந்தவர் ஆயிற்றே, இப்படி சொல்லலாமா?

கலைஞர் :- அதனால் தான் இதுவரை உங்களை மதித்து நடந்து கொண்டு வருகிறேன். இப்போதும் மதிக்கிறேன். அதனால் தான் அங்கே நின்று கொண்டிருந்த உங்களை யெல்லாம் அருகே அழைத்துப் பேசுகிறேன்.

செய்தியாளர் :- தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் அவர் களின் பதவிக்காலத்தை நீட்டித்திருக்கிறார்களே, என்ன காரணம்?

கலைஞர் :- அது பற்றி எனக்குத் தெரியாது.

செய்தியாளர் :- மூன் றாவது அணியின் சார்பில் ஜெயலலிதா இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அவர் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார் என்றும் சொல்லப் படுகிறதே?

கலைஞர் :- ஆனால் சந்தோஷம்!

Read more: http://viduthalai.in/page-3/74750.html#ixzz2sUn8lZvQ

தமிழ் ஓவியா said...


தினமலருக்குப் பதிலடி

சக மனிதனை தொட்டால் தீட்டு என, சொன்னவர்களும்; செருப்புப் போட்டு கீழ் ஜாதிக்காரன் நடக்கக் கூடாது என, சொன்னவர்களும்; ஆத்திகரா, நாத்திகரா? அனைவருக்கும் பொதுவானவர் கடவுள்' எனக் கூறிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களை, கோவிலுக்குள் விடாமல் தடுத்தவர்கள், ஆத்திகரா, நாத்திகரா? கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையப் போராட்டம் நடத்தியவர்கள் ஆத்திகரா, நாத்திகரா? இதிகாசம், புராணங்களை மட்டும் வைத்துக் கொண்டுள்ள தமிழை, காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ரா. பெரியார் அவர்தான் கணினியில் தமிழைப் பயன்படுத்தும் அளவுக்கு எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்.

வைக்கம் போராட்டத்தை நிறுத்தி விடுங்கள் என, ஈ.வெ.ரா., பெரியாருக்கு கடிதம் எழுதியவர் காந்தியடிகள். ஆனால், அதை ஏற்காமல் போராட்டத்தைத் தொடர்ந்து, வெற்றி கண்டார் ஈ.வெ.ரா. பெரியார், 'வைக்கம்' போராட்ட வரலாறு அறிந்தவர்களுக்கு தான், இது தெரியும். நாட்டில் உள்ள அனைத்து ஜாதிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தது. ஆனால், சண்பகம் துரைசாமி என்ற பார்ப்பான், தன் மகளுக்கு அனைத்து தகுதியும் இருந்தும், மருத்துவக் கல்வி சேர்க்கை கிடைக்கவில்லை என, பொய்யான வழக்கை, தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மூலம் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டது. இதன்பின், ஈ.வெ.ரா., நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இடஒதுக்கீடு என்பது, செயினை பறித்துச் செல்லும், திருடனிடம் அதை மீட்பது போன்றது.

குறிப்பிட்ட சமூகங்களுக்குக் கல்வியும், வேலைவாய்ப்பும் பல ஆண்டுகாலம் மறுக்கப்பட்டதால், அவர்களையும், பிற சமூகத்தினரைப் போல, சமத்துவப்படுத்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், சமூகநீதியை நிலைநாட்டி, சமூகங்களுக்கு இடையே உள்ள இழிவைப் போக்குவதே நோக்கம். இதைத் தான் ஈ.வெ.ரா. பெரியார் செய்தார்.

பாமரன், எழுத்தாளர்
(தினமலர், 5.2.2014, பக். 4)

Read more: http://viduthalai.in/page-4/74732.html#ixzz2sUoAf6sO

தமிழ் ஓவியா said...


வீரமா முனிவர் (1680-1747)


இத்தாலி நாட்டுக்கா ரர்- இயற்பெயர் கொன்ஸ் டான் டைன்; ஜோசப் பெஸ்கி பாதிரியார் என் றும் அழைக்கப்படுவார். கொன்ஸ்டான்ஸ் என் றால் தைரியசாலி என்று பொருள் - பின்னர் வீரமா முனிவர் என்று தனித் தமிழ் ஆயிற்று.

1710இல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழ் மொழி பயின்றார் - இலக்கிய இலக்கண நூல் களைப் பழுதறப் பயின் றார். இவர் படைப்புகளுள் இறவாப் புகழப் பெற்றது சதுர் அகராதியாகும். நான்கு வகைப்பட்ட அக ராதி என்று இதற்குப் பொருள்.

1) பெயர் அகராதி 2) பொருள் அகராதி 3) தொகை அகராதி 4) தொடை அகராதி ஆகும்.

தமிழில் தோன்றிய முதல் அகர முதலி இதுவே யாகும். அவரின் பரமார்த்த குருவின் கதைகள் - தமிழுலகிற்குக் கிடைத்த நகைச்சுவை மணம் வீசும் இலக்கியக் கருவூலமா கும். மதத்தைப் பரப்ப வந்தவர் தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுத்தார். தனது மேலை நாட்டுத் தோற்றத்தைக் தூக்கி எறிந்து தமிழ்ப் பண்பாட் டுக்கு ஏற்ப நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொண்டார்.

இவரது வாழ்க்கை வரலாற்றினை எழுதிய முத்துசாமிப் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார் (1822). நெற்றியில் சந் தனம், தலையில் பட்டுக் குல்லா, இடுப்பில் காவி திருநெல்வேலி கம்பிச் சேர்மன் போர்வையைத் தலையிலிருந்து தோள் வழியாக உடலை மூடிய படி பாதக்குறடு அணிந்து நடமாடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அறத் துப்பாலையும், பொருட் பாலையும் இலத்தின் மொழிக்குக் கொண்டு சென்றார்.

திராவிட மொழியியல், அறிஞர்களுள் முதன்மை யானவர் வீரமா முனி வரே என்று ஆய்வாளர் கமில் சுவலபில் கணித்துக் கூறுகிறார்.

கிறித்தவர்கள் வெளி நாடுகளில் இருந்து மதம் பரப்ப இந்தியாவுக்கு வந்ததுண்டு. அத்தோடு கல்வி, மருத்துவம் இவை இந்தி யாவுக்குக் கிடைப் பதில் அவர்களின் பங்க ளிப்பை உதறித் தள்ளி விட முடியாது.

அதிலும் சிறப்பாக தமிழுக்குத் தொண்டு செய்ததில் வீரமா முனிவர், கால்டுவெல் போன்றவர் களின் அருந்தொண்டுகள் அருந்தமிழ் வாழு மட்டும் வாழ்த்திக் கொண்டே இருக்கும்.

வாழ்க வீரமா முனிவர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/74651.html#ixzz2sUoVZbOf