Search This Blog

22.2.14

உலகத் தாய் மொழி நாள் - இந்தி ஒழிந்த நாள்


உலகத் தாய் மொழி நாளில் இன்னொரு முக்கி யத்துவமும் நமக்கு உண்டு. இந்நாளில்தான் சென்னை மாநிலப் பிரதமராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் அவர்களால் பள்ளிகளில் திணிக்கப் பட்ட (21.4.1938) இந்தி ஒழிக் கப்பட்ட நாள்  (21.2.1940).

இந்தி எதிர்ப்பு என்பது தமிழ், தமிழர், தமிழ்நாட் டின் வரலாற்றில் புதிய மைல்கல் - ஆரியப் பண் பாட்டுப் படையெடுப்பை புறமுதுகிட்டு ஓடச் செய்த ஒப்பற்ற புரட்சிப் போராட் டமாகும்.

சென்னை லயோலா கல்லூரியில் பேசிய பிரத மர் ராஜாஜி (24.1.1937) சமஸ் கிருதத்தைப் படிப்படியா கப் புகுத்தவே இந்தியைப் பள்ளிகளில் கொண்டு வந் துள்ளதாக வெளிப்படை யாகவே கூறினார்.

பள்ளிக் கூடங்களிலி ருந்தும், கல்லூரிகளிலிருந் தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்து விட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற ஸம்ஸ்கிருதம் தெரியாவிட்டால் அது மகா பெரிய விபத்தாகும். அது பணம் இருக்கும் பெட்டி யின் சாவியைத் தொலைத்து விட்டு, சாப்பாட்டுக்குப் பிச்சை எடுப்பதற்கு ஒப் பாகும் என்று பேசினாரே!

இந்தியைப்பற்றி குடி அரசு இதழில் (7.3.1926) தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும் எனும் தலைப்பில் கட்டுரை ஒன் றினை எழுதினார் தந்தை பெரியார். - 91 ஆண்டு களுக்கு முன்பாகவே!

பிராமணரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துக் களில் ஹிந்தியும் ஒன்றாய் முடியும் போலிருக்கிறது.

பொதுவாக ஹிந்தி என் பது வெளி மாகாணங்களில் பிராமண மதப் பிரச் சாரம் செய்யக் கற்பித்துச் செய்யும் வித்தையாகி விட்டது.

இந்த ரகசியத்தை நமது நாட்டுப் பாமர ஜனங் கள் அறிவதேயில்லை. இரண்டொருவருக்கு அதன் இரகசியம் தெரிந் தாலும், பிராமணர்களுக்கு பயந்து கொண்டு தாங் களும் ஒத்துப் பாடி விடு கிறார்கள்.

யாராவது துணிந்து வெளியில் சொன் னால் இவர்களைத் தேசத் துரோகி என்று சொல்லி விடுகின்றார்கள் என்று அந்தக் கட்டுரையில் தந்தை பெரியார் குறிப்பிட்டுள் ளார்.  தந்தை பெரியார் ஆச்சாரியாரின் இந்தித் திணிப்பை எதிர்த்து போர்க் குரல் கொடுத்துக் களம் அமைத்தார் (3.6.1938) இந்தப் போராட்டத்தில் 73 பெண்கள், 32 குழந்தைகள் உட்பட 1269 பேர் கைது செய்யப்பட்டனர். நடரா சன், தாளமுத்து என்ற இரு வீரர்கள் சிறைச் சாலையில் களப்பலியானார்கள்.

இந்த இந்தி எதிர்ப்புக் காலக் கட்டத்தில்தான் சென்னையில் பெண்கள் மாநாடு கூட்டி (13.11.1938) ஈ.வெ.ரா.வுக்குப் பெரி யார் எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பட்டத்தை வழங்கிப் பெருமை பெற் றனர்.

இந்தி எதிர்ப்புதான் தமிழர்களை ஜாதிகளை மறந்து தமிழன் என்ற உணர்வின் கீழ் கொண்டு வந்து நிறுத்தியது. தமிழில் பெயர் சூட்டும் உணர்வு பிறந்தது. நமஸ்காரம் வணக் கம் ஆனது, ஸ்ரீமான் திருவாளர் ஆனதெல்லாம் இதற்குப் பிறகுதானே!

அன்று ஒழிக்கப்பட்ட இந்தி இடை இடையே தலை காட்டும் பொழு தெல்லாம் அதன் வாலை நறுக்கி வருவது திராவிடர் இயக்கம்தான்!

----------------------------- மயிலாடன் அவர்கள் 21-2-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

45 comments:

தமிழ் ஓவியா said...

திருடுவதற்குக் கடவுள் கருணையாம்!

கேள்வி: தற்போது கோயில் திருட்டுகள் அதிகரித் துள்ளனவே? (பொதுவாக திருடர்களும், திருட்டு நல்ல படியாக நடக்க சாமி கும்பிட்டு விட்டுச் செல்வார்களாமே? ஆக திருட்டுக்கு சாமி ஒத்துழைக்கிறது என்று தானே ஆகிறது?)

பதில்: மந்திரிகளும் சிறைச்சாலைகளுக்குச் செல் லுவது, கைதிகளுக்குப் பரிசுகளை அளிப்பது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். கடும் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்கள் உயர் பதவிகளில் இருப்பவர்களால் பரிசீலிக்கப்பட சட்டமே வழி செய்கிறது. இதை எல்லாம் வைத்துக் கொண்டு, பிரதமர், ஜனாதிபதி, மந்திரிகள், முதல் மந்திரிகள் அனைவரும் குற்றங்களை ஊக்குவிக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா? குற்றவாளிக்கும்கூட கருணை காட்ட சட்டத்திலே வழி இருக்கிறபோது, கருணையே வடிவான கடவுளுக்கு அந்தக் கருணை இருக்காதா? அந்தக் கருணை உண்மையாகவே அந்தக் கொள்ளைக்காரனுக்கோ, திருட னுக்கோ கிட்டினால் அவன் தானாகவே அந்த வேலையை விட்டு விடுவான். அதற்கேகூட அந்தக் கருணை உதவும். - (துக்ளக் 26.2.2014 பக்கம் 17)

இப்படி ஒரு கேள்வி பதில். திருவாளர் சோ ராமசாமி அவரையொத்த பார்ப்பனர்களின் கருத்துரைக்கும் முறை, வாதமுறை எவ்வளவு அற்பமானது என்பதற்கு இந்தப்பதிலே போதுமானது. மனிதர்களிடத்தில் பலமும் உண்டு, பலகீனமும் உண்டு, அதே போன்றதுதான் கடவுளுமா? அப்படியென்றால் மனிதனுக்கு மேம்பட்ட சக்தி கடவுளுக்கு ஏதும் கிடையாது என்பதை அவரை அறியாமலேயே திருவாளர் சோ ஒப்புக் கொண்டது ஆகாதா?

திருடர்கள் சாமி சிலையையே திருடிக் கொண்டு போய் விற்று விடுகிறார்களே - அதுவும் கடவுளின் கருணை தானா? திருடனை நீதிமன்றத்தில் நிறுத்தும்போது, நீதிபதியிடம் கடவுளின் கருணை எனக்கு இருந்ததால்தான் திருடினேன் என்று சொல்லலாமா?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் மேலாளர் சங்கரராமன் பட்டப் பகலிலேயே சிறீமான் வரதராஜப் பெருமாள் சன்னதி முன்னாலேயே வெட்டிக் கொல்லப் பட்டாரே - அப்பொழுதுகூட அந்தக் கொலைகாரனுக்கு வரதராஜ பெருமாள் அருள் பாலித்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

சரி, சங்கராச்சாரியார் தான் கொலையாளியில்லை; ஏதோ 61 நாட்கள் லோகக்குரு கம்பி எண்ணினார் - இருக்கட்டும்; சங்கராச்சாரியார் கொலைகாரர் இல்லா விட்டால் உண்மையான கொலைகாரனைக் கண்டுபிடிக்க வரதராஜ பெருமாள் சக்தி பயன்படாதது ஏன்? உண்மை யான கொலைகாரன் கையில் சிக்காமல் இருக்க அந்தச் சாமி அந்தக் கொலைகாரனுக்குக் கருணை காட்டி விட்டதா?

அதே காஞ்சிபுரம் மச்சேந்திரன் கோயில் குருக்கள் தேவநாதன் கோயில் கருவறைக்குள் என்ன செய்தான்? பக்தைகளோடு பாலியல் உறவு கொண்டான்; அந்தச் செயற்கரும் காரியத்தை கைப்பேசியில் படம் எடுத்து, அந்தப் பெண்களிடம் அதைக் காட்டிக் காட்டி, மிரட்டி, மிரட்டி மீண்டும் மீண்டும் அந்தப் பெண்களை அனுபவித்தானே - அதற்குக்கூட அந்த மச்சேந்திரக் கடவுள் உடந்தைதானோ - கருணை தானோ!?

திருவாளர் சோவின் பதிலுக்கு நாம்கூடப் பதில் சொல்லத் தேவையில்லை. அவாளின் ஜெகத்குருவான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தெரிவித்த கருத்தினை எடுத்துச் சொன்னாலே போதுமானது.

கேள்வி: பெரிய மற்றும் சிறிய கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக்களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய் விட்டதா?

ஜெயேந்திரர் பதில்: கொலை, கொள்ளை செய்ய துணிகிறவர்களில் அனேகம் பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற் கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது. பணமுடை அதிகரித்து விட்டது. - (குமுதம் 12.9.1996)

திரு

தமிழ் ஓவியா said...

டுகின்றவர்களுக்கு கடவுள் கருணை புரிவதாக சோ சொல்லுகிறார். அப்படி திருடுகிறவர்கள் பக்தர் களாகவே இருப்பதாக சங்கராச்சாரியும் சொல்லுகிறார்.

கடவுள் கருணை புரிவதாக இருந்தாலும் சரி, பக்தர்கள் திருடுவதாகச் சொன்னாலும் சரி இரண்டுமே ஒழுக்கக் கேட்டிற்கு உறைவிடமாகவும், தூண்டுகோலாகவும் துணை போவதாகவும் பக்தியும், கோயிலும், அதில் வடித்து வைக்கப்பட்டுள்ள சாமிகளும் உள்ளன என்பது விளங்கி விட்டதல்லவா?

திருடுவதற்குக் கடவுளின் கருணை கிட்டினால் அந்தத் திருட்டு வேலையை விட்டு விடுவான், அதற்கேகூட அந்தக் கருணை உதவும் என்கிறார். அது எப்படி உதவும்?

திருடுவதற்குக் கடவுளே கருணை காட்டும் போது, நமது திருட்டுத் தொழிலை ஜாம் ஜாம் என்று நடத்தலாம் என்ற தைரியத்தைத்தானே அது கொடுக்கும்.

கோயில் சிலைகளைத் திருடி விற்றே கோடீஸ்வரர் ஆனவர்களின் பட்டியல் நீளமாக உண்டே! அதுவும் இந்தியாவின் அயம்பொன்னாலான சாமி சிலைகள் வெளிநாடுகளில் கொள்ளை விலைக்குப் போகின்றனவே சாமி -சிலை திருட்டைக் கண்டுபிடிப்பதற்கே காவல் துறையில் தனிப்பிரிவு செயல்படும் அளவுக்கு நிலைமை ஆகி விட்டதே!

கடவுள் சக்தியைக் காப்பாற்றுவதற்கு சோ போன்றவர்கள் என்ன பாடுபட வேண்டியுள்ளது பார்த் தீர்களா? மனிதனைக் கடவுள் காப்பதாகச் சொல்லுவது போய், கடவுளைக் காப்பாற்றிட மனிதர்கள்தான் ( சோ போன்றவர்கள்தான்) பெரும் பாடுபட வேண்டியுள்ளது. அந்தோ பரிதாபம்!

Read more: http://viduthalai.in/page-2/75676.html#ixzz2u0NOEkXG

தமிழ் ஓவியா said...


முடியாது


மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது.

(குடிஅரசு, 7.5.1933)

Read more: http://viduthalai.in/page-2/75675.html#ixzz2u0NcsguV

தமிழ் ஓவியா said...


மதத்தைப் பற்றி மதவாதி!


இந்துமதம் பாசிசத் தன்மை கொண்டது. அய்யாயிரம் ஆண்டுகளாக இந்துமதம் மக்களை அடிமைப்படுத்தியே வந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத் தகாதவர்களாகக் கருதி, அவர்களை மனிதனைவிட மிகக் கேவலமாக நடத்தி வருகிறது.

ஜாதிஇந்து என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்தினர். இன்றும் அவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது.

ஜாதி இந்துக்களின் தெருவிலுள்ள கிணற்றிலிருந்துகூட தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றுங்கூட தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. இந்துமதம் பெண்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி வருகிறது. இவற்றை யெல்லாம் நான் எதிர்க்கிறேன். ஆண்களைப் போன்று பெண்களையும் சமமாக கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை பார்ப்பானும் தாழ்த்தப்பட்டவனும் ஒன்றே.

மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற அனைத்து கலாச்சாரத்தையும், இதிகாசங்களையும் அழிக்க வேண்டும்; அவற்றிற்குத் தீயிட வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளவர் புனேயில் யோகா நிலையம் வைத்து நடத்தி வரும் ரஜனீஷ். அவரும் ஒரு மதவாதியே என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: ஆன் லுக்கர், டிசம்பர் 15 (1970

Read more: http://viduthalai.in/e-paper/75712.html#ixzz2u0OaWbbg

தமிழ் ஓவியா said...

கடவுள்களின் தலைஎழுத்து

முருகனும் - கணபதியும்: (பிரம்மனை நோக்கி) அண்டசராசரங்களையும் படைத்த பிரம்ம தேவரே! யானை முகத்தையும், ஆறு முகத்தையும் தாங்கிக் கொண்டு நாங்கள் படும்பாடு உமக்குத் தெரியாதா? ஏனிந்த சிரமம் எங்களுக்கு?பிரம்மன்: மைந்தர்காள்! உங்களுக்குத்தானா அந்தக் கஷ்டம்? என்னைப் பாருங்கள் - நான்கு தலைகளும் எட்டு கைகளுமாக நானுந்தான்.... என்ன செய்வது? எல்லாம் தலை எழுத்தப்பா, தலை எழுத்து!

- திராவிட நாடு, 17.3.1946

Read more: http://viduthalai.in/e-paper/75712.html#ixzz2u0Oum1cA

தமிழ் ஓவியா said...


நாஸ்திக வாதம்! (கிளிக்கண்ணி மெட்டு)


1. கடவுள் எனும் சொல் வெறும்
கற்பனைச் சொல் ஆகுமடா
திடமுடன் டுடுட்டு வென்றால் - மனிதா!
தெரியும் பொருளே தடா!

2. கல்லில் ஒரு கடவுள்
கருத்தில் ஒரு கடவுள்
சொல்லில் ஒரு கடவுள் - மனிதா!
தொட்டதெல்லாம் கடவுள்

3. அர்த்தமில்லாக் கடவுள்
அனர்த்தஞ் செய்யுங் கடவுள்
மெத்த இம் மேதினியில் - மனிதா!
வீண் வீணென்றே உமிழடா

4. எட்டாக் கடவு ளென்று
எட்டிப் பிடிப்ப தன்றோ?
முட்டாள் ஆஸ்திகர்கள் - மனிதா!
முற்றும் முரண் பேசுவரே

5. உழைப்பு செல்வம் காலத்தை உண்டு சும்மா இருந்திடும்
பிழைப்புத்தான் கடவுட்கென்றால் - மனிதா!
பிசகென்ன நாஸ்திகத்தில்!

6. ஏழையுலகை வாட்டிடும்
ஈனக் கடவுளைத்தான்
ஆழக்குழி வெட்டியே - மனிதா!
ஆழ்த்திப் புதைத்திடடா

7. அறிவியல் அன்றும் இன்றும்
ஆத்திகம் காத்ததில்லை
குறி, சட்டம், ஸ்தாபனத்தால் - மனிதா!
கொடும் மதம் காத்ததடா

8. அரி சிவன் அல்லா பிரம்மம்
அருஞ் சமரிட்டதாலே
சொரிந்தனர் மக்கள் ரத்தம் - மனிதா!
சொல்லவும் கொதிக்குதடா

9. அடிமை வறுமை பஞ்சம்
அநியாயம் மோசம் நாசம்
மிடிமையும் கடவுள் மேலே - மனிதா
வேர்க் கொள்ளக் கண்டோமடா

10. மனிதன் மனிதனாக!
மதங்கள் கடவுள் வீழ்க!
புனிதப் பொதுவுடமை - மனிதா!
புது உலகம் வாழ்ந்திடவே.

Read more: http://viduthalai.in/e-paper/75711.html#ixzz2u0P5WXzY

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலின் பொன்மொழிகள்

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியை பிரித்து எடுத்துவிடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட் பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.
அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத் தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங் குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.


Read more: http://viduthalai.in/e-paper/75711.html#ixzz2u0PJdH4u

தமிழ் ஓவியா said...

மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே!

இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது. எல்லா மதங்களும் செத்துப் போய்விட்டன. செத்த பிணங்களே சடங்கு ரூபமாகவும் நாற்றமெடுத்து அதனால் மனித சமூகத்திற்கு பிற்போக்கு என்னும் வியாதியைக் கொடுத்ததுடன், அதைப் பெருக்கிக் கொண்டே வருகிறது.

உண்மையில் எந்த மதக்காரனும் அந்தந்த மதக் கட்டளைப்படி நடந்து கொள்ளுவதில்லை; நடந்து கொள்ள முடிவதில்லை. உதாரணமாக, பவுத்தர்கள், கிருஸ்தவர்கள், இஸ்லா மியர்கள், இந்துக்கள் என்பவர்களான சமூகங்களில் எந்த ஒரு மனிதனையாவது மதக் கட்டளைப்படி கண்டிப்பாய் நடக்கின்றவனைக் காணமுடிகின்றதா?

முதலாவதாக, வேஷத்திலும் சடங்கிலுமே சரியாக நடந்து கொள்ள முடிவதில்லை. மற்ற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்திலும், வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய நிபந்தனையிலும் நூற்றுக்கு ஒரு சதவிகிதம் கூட நிர்ணயத்துடன் நடக்கவோ, ஆசைப்படவோ கூட முடிகின்றவர் காணப்படுவது இல்லை.

இந்த நிலையில் உள்ள மக்களே தான் இன்று தங்கள் மதங்களைக் காப்பாற்ற வேண்டும், மதத்திற்கு ஆபத்துவந்து விட்டது; தவிர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு செத்த பிணத்தை எடுத்துப் போட்டு குழிதோண்டிப் புதைக்காமல், நாற்றத்தில் அழுந்திக் கொண்டிருக்கிறார்கள்.

மலத்தில் இருக்கிற புழுக்கள் எப்படி மலத்தின் நாற்றத்தை வெறுக்க முடியாமலும், உடலிலுள்ள மற்ற புழுவை இழிவாய்க் கருத முடியாமலும் இருக்கின்றனவோ அதே போல் எல்லா மனிதர்களுமே மதப் பிண நாற்றத்தில் புரளுகின்றனர். இதனால் உண்மை உணரமுடியாமல் அழுந்திக் கொண்டிருக்கின்றனர்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/75710.html#ixzz2u0PkQdt3

தமிழ் ஓவியா said...


சென்னைப் பல்கலைக் கழகத்தில் பாய்ந்த தேனாறு


மறைந்த பேராசிரியர் ந.சு. அவர்களின் தலைமாட்டில், அவருடைய துணைவியார் படமும், ஆசிரியர் - மோகனா வீரமணி ஆகியோர் படம் வைக்கப்பட்டிருந்த காட்சி

சென்னைப் பல்கலைக் கழகம்-தமிழ் இலக்கியத் துறையின் சார்பில் பேராசிரி யர் ந.சுப்பிரமணியம் அறக் கட்டளைச் சொற்பொழிவு - சென்னைப் பல் கலைக்கழக - பரிதிமாற் கலைஞர் வளா கம்-பவள விழாக் கலையரங் கில் நேற்று (20.2.2014) வியா ழன் காலை 11 மணியளவில் தொடங்கப்பட்டது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங் கப்பட்ட அவ்விழாவின் வர வேற்புரையை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக் கியத் துறையின் தலைவர் பேராசிரியர் வீ.அரசு நிகழ்த் தினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் தலைமை வகித்தார்.

தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அவ்வைநடராசன் அறக்கட்டளைச் சொற்பொழி வினை நிகழ்த்தினார். பேரா சிரியர் எழில் அமுதன் மறைந்த பேராசிரியர் ந.சுப்பிரமணி யம் அவர்கள் குறித்து சில அரிய தகவல்களைக் கூறி னார். ஏகாம்பரம் நன்றி கூறிட, பிற்பகல் 12.50 மணிக்கு விழா நிறைவுற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திராவிடர் வரலாற்று மய்யத் தின் செயலாளர் பேராசிரி யர் முனைவர் ந.க.மங்கள முருகேசன், புலவர் பா.வீர மணி மற்றும் கல்வியாளர் கள், மாணவர்கள் ஏராளமா னோர் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

விழாவுக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் ஆற்றிய உரையில் சில சிறப்புத் தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. (முழு உரை பின்னர் வெளிவரும்).

பேராசிரியர் ந.சுப்பிர மணியம் அவர்கள் பிறப்பி னால் பார்ப்பனர். இந்த நிலை யில், அவரோடு நான் நட்பு கொண்டதும், நெருக்கமாகப் பழகியதும் பலருக்கு ஆச்சரி யமாகக் கூட இருக்கலாம் என்று தொடங்கிய விடுதலை ஆசிரியர் அவர்கள்,

இந்த நட்புக்கு என்ன கார ணம் என்ன என்பதையும் விளக்கினார்.

‘Brahmin in Tamil Nadu’ என்ற அவரின் நூலை நான் படிக்க நேர்ந்தது. நூலைப் படித்ததும் எனக்குப் பெரும் வியப்பாக இருந்தது. விருப்பு - வெறுப்புகளுக்கு அப் பாற்பட்டு அந்நூல் எழுதப் பட்டு இருந்ததை அறிந்த போது அவர்மீது எனக்கு ஒரு தனி மரியாதை ஏற்பட்டது.

அந்த நூல் கைவசம் இருக்கிறதா என்று பேராசிரி யர் ந.சு. அவர்களோடு தொடர்புகொண்டபோது, அவர் மகன் சுந்தரேசன் மூலம் எஞ்சியிருந்த நூல் படிகள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவற்றை எங்கள் புத்தக விற்பனை நிலையத்தின் மூலம் மக்களிடத்தில் கொண்டு சென்றோம். அதிலிருந்து அவருடன் எங்கள் தொடர் பும், நட்பும் தொடர்ந்தது. ஆண்டுக்கு இரண்டொரு முறை என் இணையரோடு அவரைச் சந்திக்கும் வாய்ப் புகள் உண்டு.

அக்கிரகாரத் தின் அதிசய மனிதர் வ.ரா. என்று அறிஞர் அண்ணா எழுதினார். அந்த வரிசை யில் வரக்கூடியவர்தான் நமது பேராசிரியர் ந.சுப்பிர மணியன். அவரிடம் பேசிக் கொண்டிருந்தால் ஏராள மான புதிய தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருக் கும். அவை சுவையானதாக வும், சூடாகவும் இருக்கும்.

வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருந் தார்; 99 வயதில் அவர் மரணம் அடைந்தார் என்றாலும், சில மாதங்களுக்கு முன்வரை தம் எழுத்துப் பணியை அவர் தொடர்ந்து கொண்டே தான் இருந்தார். 170 நூல்கள் அவ ரால் எழுதப்பட்டுள்ளன என்பது சாதாரணமானதல்ல.

அவர் முன்னாள் பேரா சிரியர்; அதேநேரத்தில் பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு மாண வராகவே மாறிவிட்டார் என்று வெகு அழகாக நேர்த் தியாகப் படம் பிடித்தார் விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்கள்.


தமிழ் ஓவியா said...

தமது தனித்தன்மையான கருத்துக்களால் தனிமைப் படுத்தப்பட்டவராகத் தம் மைக் கருதினார். அவருக் குரிய அங்கீகாரம் கிடைக்க வில்லை என்ற ஆதங்கமும் அவரிடம் இருந்ததை நான் அறிய முடிந்தது. எங்களின் பெரியார் மணியம்மை பல் கலைக் கழகத்தில் அவரை அழைத்து, கவுரவ டாக்டர் பட்டம் அளித்துப் பாராட்டி னோம் என்று சொன்ன திராவிடர் கழகத் தலைவர் அவர்கள், பேராசிரியர் ந.சு. எப்படிப்பட்ட தனித்தன்மை யாளர் என்பதற்கு ஒரு தக வலைச் சொன்னார்.

காந்தியார் தியாகியா? என்ற ஒரு கேள்வியை எழுப்பி, தனி முத்திரைக் கருத்துகளைப் பொறித்தவர் பேராசிரியர் ந.சு.

தமிழ் ஓவியா said...

காந்தியார் பிரார்த்தனைக் குச் சென்றபோது ஒருவ னால் சுட்டுக் கொல்லப்பட் டார். அது ஒரு விபத்து அவ் வளவுதான். அதற்காக அவரைத் தியாகி என்று கூறிட முடியாது.

அதேநேரத்தில், கிரேக்கத்து சாக்ரட்டீஸ் அப்படியல்ல - சாக்ரட்டீஸின் கருத்து மதத் துக்கு விரோதமானது என் பதற்காக அவரை நஞ்சு கொடுத்துக் கொல்ல ஆணை பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், தன் கருத்தை மாற்றிக் கொண் டதாக சாக்ரட்டீஸ் அந்த மரணம் தழுவும்- அந்தக் காலகட்டத்தில் ஒரு சில சொற்களைச் சொல்லியிருந் தால்கூட அவர் உயிர் பிழைத்திருப்பார்.

ஆனால், சாக்ரட்டீஸ் தன் உயிரைப் பெரிதாகக் கருதவில்லை. கொள்கை தான் பெரிதென்று எண்ணி நஞ்சுண்டு மரணமடைந்தார். உண்மையிலேயே காந்தி யாரைவிட சாக்ரட்டீஸ்தானே தியாகி என்று கூறும் பேரா சிரியர் சுப்பிரமணியன் அவர் கள் தனித்தன்மையான சிந் தனையாளர்தானே என்று ஆசிரியர் அவர்கள் சொன்ன பொழுது, பவளவிழா கலை யரங்கமே கலகலத்தது.

பேராசிரியர் ந.சு. அவர் களின் தந்தையார் பலராமய் யர் தமிழாசிரியர். நான் (என் வரலாறு) எனும் நூலில் பேராசிரியர் சுப்பிரமணியன் தமது தந்தையாரின் வாழ் வில் நடைபெற்ற ஒரு முக் கிய நிகழ்வினை தெரிவித் திருப்பது தெரிந்துகொள்ளப் படவேண்டிய ஒன்றாகும் (பெட்டிச் செய்தி காண்க).

பேராசிரியர் ந.சுப்பிரமணியனும் - தமிழர் தலைவர் குடும்பமும்

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்களிடத்திலும், அவர் தம் இணையரிடத்திலும் எந்த அளவுக்கு மறைந்த பேரா சிரியர் அன்பும், மதிப்பும் வைத்திருந்தார் என்பது ஆசிரியர் அவர்கள் சொன்ன போது மெய்சிலிர்ப்பதாக இருந்தது.

நான் என்ற பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்ட முதல் தொகுப் பின் தொடர்ச்சியாகிய நான் எனும் நூலின் 41 ஆம் பக் கத்தில் கீழ்க்கண்டவாறு பேரா சிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பு: அறிஞர் கி.வீர மணி அவர்களின் நட்பு

சில ஆண்டுகளுக்கு முன்பு தொட்டே சென்னை யிலுள்ள திராவிடர் கழகத் தலைவரான கி.வீரமணி அவர்கள் அவர்தம் குடும் பத்தாரோடு எனது நெருங் கிய உண்மையான நண்ப ரானார். எனக்கு நண்பர் களே சிலர்தாம்; அவர்களி லும் உண்மையான நண்பர் கள் மிகச் சிலரே. அவர் களில் திரு.வீரமணி அவர் கள் முக்கியமானவர். உடுக்கை இழந்தவன் கைபோல் உதவிக்கு வருகிறவர். எனது இரண்டு நூல்களை அவர் செலவில் அச்சிட்டு வெளி யிட்டுள்ளார் என்று குறிப் பிட்டுள்ளார் என்றால், அதன் தன்மையின் நேர்த்தி தான் என்னே!

பேராசிரியர் சுப்பிரமணி யன் அவர்களால் ஆங்கி லத்தில் எழுதப்பட்ட ‘‘Psycho Biography of C.Subramania Bharati’’ எனும் நூலில், கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். Dedicated to Mrs. Mohana Veeramani, a Model Representative of Repected Woman Hood என்று குறிப்பிட்டுள்ளார் என்றால், சாதாரணமானதா?

திராவிடர் கழகத் தலை வர் அவர்களின் மொழியில் சொல்லவேண்டுமானால், அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு நிகழ்வும் உண்டு!

பேராசிரியர் ந.சு. அவர் கள் மறைவுற்றார் என்ற தகவல் அறிந்த நிலையில், திராவிடர் கழகத் தலை வரும், அவரின் இணைய ரும் உடனே புறப்பட்டனர்.

தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த புகைப்படம்

அங்கு சென்றபோது அதிர்ச்சியூட்டும் ஒரு காட்சி காத்திருந்தது.

பேராசிரியரின் உடல் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இருந்தது. அவர் மரணம் அடைவதற்கு முன் அவர் சொன்னபடி, அவர் குடும்பத்தினர் அத னைச் செய்திருந்தனர். அந் தக் கண்ணாடிப் பெட்டியில் பேராசிரியர் உடல் கிடத்தப் பட்டு இருந்தது அல்லவா! அவரின் தலைமாட்டில் மறைந்த அவரின் இணை யர் சிவகாமி சுந்தரி அவர் களின் புகைப்படம் வைக்கப் பட்டு இருந்தது.

இன்னொரு படமும் அவர் தலைமாட்டில் வைக் கப்பட்டு இருந்தது. அந்தப் படம் யார் படம் தெரியுமா? திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களும், அவர்தம் இணையர் வீ. மோகனா அவர்களும் இணைந்திருந்த புகைப்படம் தான் அது.

நம்ப முடிகிறதா?

ஆனாலும், நடந்தது என்பதுதான் உண்மை. இந் தத் தகவலை கழகத் தலை வர் தெரிவித்தபோது அனை வரும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

தமிழ்மீது சங்கராச்சாரியாரின் துவேஷம்!

அக்காலத்தில் சங்கராச்சாரியாராயி ருந்த பெரியவர் (சந்திரசேகரேந்திர சரஸ் வதி) காரைக்குடிக்கு வந்தார். பள்ளிக் கூடத்திற்கு வந்துகூட மாணவர்களி டையே பேசினார். அவரிடம் சென்று தீர்த்தம் வாங்கிக் கொள்ள ஊரிலிருந்து பெரும்பான்மையோர் ஆர்வத்தோடிருந் தனர். பள்ளி ஆசிரியர்கள் பலரும், தலைமை ஆசிரியர் உள்பட, அவரைக் கண்டு தரிசித்தனர்.

ஆனால், என் தந்தை யார் மட்டும் போகவில்லை. பிறகு சில நாள்கள் கழித்துத் தலைமையாசிரியரின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆச்சாரி யாரைக் கண்டு தரிசித்துவிட்டு வந்தார். தொடக்கத்தில் மடத்திற்குச் செல்ல அய்யரவர்கள் ஏன் தயங்கினார்கள் என்பதை அறிய விரும்பிய மாசிலா மணிதேசிகருக்கு அய்யரவர்கள் கீழ்க் காணுமாறு கூறினார்:

தமிழ்நாட்டிலேயே தமிழ் மக் களால் பாராட்டப்படும் பீடத்தினர் அப்படியிருந்தும் பூஜைக்குச் செல்ல நீராடிய பிறகு வடமொழியிலே தான் பேசுவார்களாம். தமிழிலே பேசினால் ஆசாரக் குறைவு என்று கருதினார்கள். பூஜை முடித்துப் போஜனம் ஆனபின் தான் தமிழில் பேசுவார்களாம். ஆத லால், அரிய தமிழை அநாதரவு செய் கிறவர்களை நான் ஏன் பார்த்தல் வேண்டும்? என்றார்.

(நான் எனும் நூலில் பேராசிரியர் ந.சுப்பிரமணியன், பக்கம் 65, 66)

மூன்று முக்கியம்

மூன்று நிறுவனங்கள் இந்துத்துவத்தில் அடிப் படையானவை. இம் மூன்றும் அகற்றப்பட் டால் இந்துத்துவத்தின் தன் மையே மாறிவிடும்.

அவை: (அ) ஜாதி வேறுபாடுகள் (ஆ) கூட் டுக் குடும்பம் மற்றும் (இ) கர்மா, மறுபிறப்பு

இவை மூன்றும் சனா தன தர்மத்தால் தாங்கப் படுகின்றன.

-பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அவர்கள் எழுதிய இந்து முக்காலி, பக்கம் 64

மின்சாரம்

Read more: http://viduthalai.in/e-paper/75715.html#ixzz2u0QBHGui

தமிழ் ஓவியா said...


கட்டிப்பிடி சாமியார் அமிர்தானந்தமயி திடுக்கிடும் தகவல்கள்!


கேரளாவைச் சேர்ந்த கட்டிப்பிடி சாமியார் அமிர் தானந்தமயியிடம் உதவியாள ராக இருந்த கெயில் ட்ரெட் வெல் என்ற காயத்ரி, ஹோலி ஹெல் (Holy Hell) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளி யிட்டுள்ளார்.

அந்த புத்தகத் தில் அமிர்தானந்தமயியின் தகிடுதத்தங்கள் பலவற்றை யும் அம்ப லப்படுத்தி யுள்ளார். அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் பணத்தை தங்க மாக மாற்றி அவரது உற வினர்கள் எப்படியெல்லாம் செல் வச் செழிப்புடன் இருக்கின்றனர் என்றும், ஏதேனும் தவறு செய்தால் அமிர்தானந்தமயி அடிப்பது, கடிப்பது போன்ற தண்டனைகள் கொடுப்பார் என்றும் காயத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் அமிர்தானந்தமயியின் ஆண் சீடர்களால், தான் பாலியல் வன்கலவிக்கு உள்ளான தாகவும் கெயில் ட்ரெட் வெல் என்ற காயத்ரி தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Read more: http://viduthalai.in/page1/75661.html#ixzz2u0jq4yFP

தமிழ் ஓவியா said...


கா. நமச்சிவாயனார்


தமிழ் உலகில் பெரும் புலமைக்குச் சொந்தக் காரர் வரிசையில் கா. நமச்சிவாயனார் அவர் களுக்குப் பெருமை மிக்க இடம் உண்டு.

திராவிடர் இயக்கம் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியும் திராவிடர் திரு நாள் பொங்கல் என்றும் மக்களிடையே பரப்பி தமிழர் பண்பாட்டுத் திசை யில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தாகும்

அந்தக் கால கட்டத் தில் (1934இல்) தமிழின் உயர்வினை கா. நமச் சிவாயனார் கீழ்க்கண்ட வாறு பாடுகிறார்.

தேனினும் இனிய நாத செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குதென் மொழியே
தானியல் சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!
என்று தமிழுணர்வின் பெருமையைப் பாடினார் கா. நமச்சிவாயனார்.

அவர் குறித்துத் தந்தை பெரியார் கூறும் ஒரு தகவல் - அந்தக் கால கட்டத்தில் தமிழின் - தமிழரின் நிலை எப்படி இருந்தது என்பதனை விளக்கவல்லதாகும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ் கிருத புரொஃபசர் வாங் கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரொஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியா சம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ் கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ் கிருத புரொஃபசருக்கு ரூ.350 சம்பளம்.

தமிழ்ப்பண்டிதருக்கு 75 ரூபாய்தான்சம்பளம் சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர்- புரொஃபசர்; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு கா.நமச்சிவாய - முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்த போது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத் தான் ஞாபகம் - அதே நேரத்தில் அங்கு சமஸ் கிருத புரொஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கிய சம் பளம் சுமார் ரூ.300க்கும் மேல்; ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு பனகல் ராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்! என்றும் சொன்னார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன் மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார் என்று தந்தை பெரியார் எழுதினார்.

(விடுதலை 15.2.1960)

இது ஒரு பானை சோற் றுக்கு ஒரு பருக்கைப் பதம்!

குறிப்பு: இன்று பெரும் புலவர் கா.நமசிவாய (முதலி யார்) பிறந்த நாள் (1876).

- மயிலாடன் -20-2-2014

Read more: http://viduthalai.in/page1/75655.html#ixzz2u0kQ3QPl

தமிழ் ஓவியா said...


சூழ்ச்சியே இதுஉண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப்பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது.
(விடுதலை, 28.10.1967)

Read more: http://viduthalai.in/page1/75644.html#ixzz2u0lEbb24

தமிழ் ஓவியா said...

வைரம் எவ்வளவு ஆழத்தில் இருந்து கிடைக்கிறது?

வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா? ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப் போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.

ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக் கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மைல் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.

ஆனால் பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மைல் தொலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.

Read more: http://viduthalai.in/page1/75626.html#ixzz2u0lypyFZ

தமிழ் ஓவியா said...


கல் மீனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?


கல் மீன் எதிரியின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக தரைமட்டத்தில் வாழும். இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாது. மிகவும் சோம்பேறி மீன். அசைவற்றுக் அப்படியே கல்லு மாதிரி இருப்பதால் இப்பெயர் வந்தது.

இந்தக் கல் மீன் மிகவும் சாந்தமானது. ஆனால் இதுகல் மாதிரி இருப்பதால் அடையாளம் தெரியாமல் யாராவது இதை சீண்டி விட்டால் நைசாக தன் முதுகுப்புற முள்ளை அப்படியே விரிக்கும். இந்த முள் நாம் உடலில் குத்தும் போது விஷத்தை உடலில் பாய்ச்சிவிடும். விஷம் உடலில் ஏறியதும் பொறுக்க முடியாத வலி ஏற்பட்டு பயங்கரமாக கத்துவர்.

வாயில் நுரை தள்ளும். பனிரெண்டு மணி நேரம் இந்த வலி நீடிக்கும். தூக்க மருந்து வலி நிவாரண மருந்து எது கொடுத் தாலும் பலன் இருக்காது. கடித்த இடம் பயங்கரமாக வீங்கிவிடும். கடிபட்டவர் நிச்சயமாக இறந்துவிடுவார்.

Read more: http://viduthalai.in/page1/75630.html#ixzz2u0noA8sU

தமிழ் ஓவியா said...

மனித குருதி நிறம் என்ன?

மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்லது அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

Read more: http://viduthalai.in/page1/75628.html#ixzz2u0o8kLVw

தமிழ் ஓவியா said...


உலகின் மிகக் கொடிய விஷமுள்ள பூச்சி!


உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி என்றதும் அது எங்கோ அடர்ந்த ஊசியிலைக்காடுகளிலோ, மலை களிலோ இருக்கும் என்று உங்கள் எண்ணம் ஓடினால்.. உங்கள் ஊகம் தவறு ! மிகக் கொடிய விஷமுள்ள பூச்சியினம் உங்கள் வீட்டு கொல்லைப்புறத்திலும் இருக்க வாய்ப்புள்ளது ! முதலில் பூச்சி என்றால் என்ன ?

6 கால்களும் 3 உடல் பாகங்களும் உடையதுதான் பூச்சி என்றழைக்கப்படுகிறது ! சரி, அந்த மிகக் கொடிய விஷமுள்ள பூச்சி எது தெரியுமா ? எறும்பு ?!

ஆம் எறும்பேதானாம் ! ஆனால் நாம் சாதாரனமாக பார்க்கும் இந்த எறும்பு இல்லை. அதன் பெயர் ஹார்வஸ்ட் ஆண்ட் என்றழைக்கப்படும் அறுவடை எறும்பு ஆகும்.

உருவத்தோடு சதவீத அடிப்படையில் ஒப்பிடுகையில் ஒரு தேனீக்கு இருக்கும் விஷத்தை விட இவ்வகை எறும்புகளுக்கு அதிக விஷம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

எறும்புகள் கடிப்பதும்,கொட்டுவதும் இரு வெவ்வேறு நடவடிக்கைகளாக இருப்பது கவனிக்கத்தக்கது. சில எறும்புகள் கடிக்கும் ஆனால் கொட்டுவதில்லை; சில எறும்புகள் கடித்து விட்டு கடித்த இடத்தில் விஷத்தை பீய்ச்சியடிக்கின்றன.

சில எறும்பு வகைகள் கொடுக்கு களால் கவ்விப்பிடித்துக்கொண்டு கடித்த பாகத்தில் தொடர்ச்சி யாக விஷத்தை செலுத்தும் பழக்கம் கொண்டவையாக இருக்கின்றன.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்: சுமார் இரண்டு கிலோ எடையுள்ள ஒரு எலியை இவ்வகை எறும்புகள் பன்னிரண்டு முறை கொட்டினால் இறந்து விடுமாம்.

Read more: http://viduthalai.in/page1/75628.html#ixzz2u0oEnYAL

தமிழ் ஓவியா said...


விண்வெளிக்கு எளிய வழி! ஏழு மணி நேரத்தில் செல்லலாம்


சற்று தொலை தூர ஊர் என்றால் பேருந்து, ரயில் பயணத்திலேயே 7,8 மணி நேரம் ஆகும்.

ஆனால் சமீபத்தில் பூமியில் இருந்து விண்வெளியில் வீரர்கள் வெறும் 6 மணி நேரப் பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து சாதனை படைத்து இருக்கிறார்கள். இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள், ஓர் அமெரிக்க விண்வெளி வீரர்தான் அந்தச் சாதனை யாளர்கள்.

கஸகிஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இவர்களின் சோயூஸ் காப்சூல்ஸ்' விண்வெளிச் சுற்றுப்பாதை அவுட் போஸ்ட்டான சர்வதேச விண்வெளி நிலையத்தை 6 மணி நேரத்துக்குள்ளாக அடைந்து விட்டது. வழக்கமான இந்த விண்வெளிப் பயணத்துக்கு ஆகக்கூடியது 51 மணி நேரம்.ஆனால் ஒரு குறுக்கு வழி'யில் சென்றதன் மூலம் 45 மணி நேரத்துக்குள் முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தை வீரர்கள் அடைந்துவிட்டனர்.

எக்ஸ்பிரஸ் ரூட் என்ற புதிய வழியின் மூலம்,அமெரிக்க விண்வெளி வீரர் கிரிஸ் காஸ்டி,ரஸ்ய விண்வெளி வீரர்கள் பாவல் வினோகி ரடோவ்,அலெக்ஸ்சாண்டர்,மிருஸ்கின் குழுவின் சோயூஸ்கேப்சூல்ஸ்,வெறும் 5 மணி நேரம் 45 நிமிடங்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தைத் தொட்டது. அங்குள்ள பாய்ஸ் மாட் ஊளில் பார்க்' ஆனது. அய்ந்தரை மாத விண்வெளி ஆய்வு பயணமாக இக்குழு சென்றுள்ளது.

இதற்கு முந்தைய விண்வெளிப் பயணக் கலங்கள் அனைத்துமே -தோது நாசாவின் ஓய்வு பெற்ற' ஸ்பேஸ் சட்டல்களாக இருக்கட்டும்-சர்வேதேச நிலையத்தை எட்ட குறைந்த பட்சம் இரண்டு நாள்கள் எடுத்துக் கொண்டி ருக்கின்றன.

இப்படி விரைவாக சர்வதேச விண்வெளி நிலையத்தை எட்டியதால்,நெருக்கடியான விண்கலத்தில் இரண்டு நாள்களுக்கு அடைபட்டுக் கிடக்கும் சிரமத்தில் இருந்து விடுதலை என்று நிம்மதி பெருமூச்சு விடு கிறார்கள், இந்த விண்வெளி வீரர்கள்!

Read more: http://viduthalai.in/page1/75627.html#ixzz2u0oPfxww

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக இ-மெயில் செய்ய வசதி

புதுடில்லி, பிப்.20- பாலி யல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்கள் இனி உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக இ-மெயில் அல் லது கடிதம் மூலமாக தங் களது புகார்களை பதிவு செய்யலாம்.

நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வரும் பெண் களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் இது தொடர்பான புகார்களை பெற உச்சநீதிமன்ற பெண் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 6 பெண் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை சாராத 2 வெளி நபர்கள் கொண்ட குறை தீர்ப்பு குழு ஒன்றை சமீ பத்தில் ஏற்படுத்தினார்.

பணியிடங்களில் பெண் களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடர்பாக விஷாக்கா வழக்கில் உச்சநீதி மன்றம் வழிகாட்டி நெறி முறைகளின்படி இந்த குழு செயல்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த குழு வுக்கான உறுப்பினர்கள் அனைவரும் நியமிக்கப்பட் டுள்ள நிலையில் இந்த குறை தீர்ப்பு மய்யம் முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள் ளது.

தங்களுக்கு நேர்ந்த பாலி யல் வன்கொடுமை பற்றி புகார் தெரிவிக்க விரும்பும் பெண்கள், இனி நேரடியாக இந்தக் குழுவுக்கு இ-மெயில், பதிவு தபால், விரைவு தபால் (ஸ்பீட் போஸ்ட்) அல்லது கொரியர் மூலமாக புகார் தெரிவிக்கலாம். நேரில் சென்று புகார் அளிக்க விரும் புபவர்கள் உச்சநீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் குழுவின் அலுவல கத்தைத் தொடர்பு கொள்ள லாம்.

இ-மெயில்

பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக ரகசியாக மாகவும், நியாயமான முறை யிலும் உரிய விசாரணை நடத்தப்படும். புகார் அளிப் பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முக வரி: gupta.rachna@indian judiciary.gov.in

மேற்கண்ட இ-மெயில் முகவரியில் வன்கொடுமை யால் பாதிக்கப்படும் பெண் கள் தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம்.

Read more: http://viduthalai.in/page1/75613.html#ixzz2u0ogZRHZ

தமிழ் ஓவியா said...

அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்


இந்தியாவின் நிலைப்பாடு என்ன? மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி கேள்வி

புதுடில்லி, பிப்.20- அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப் பாடு என்ன என்று கவிஞர் கனிமொழி, மாநிலங்கள வையில் உரையாற்றுகை யில் கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி உரை யாற்றுகையில், தமிழக மீன வர்களை இலங்கைக் கடற் படையினர் நடுக்கடலில் இந்திய எல்லையில் தாக் கப்பட்டு வருவது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக இந்த அவையில் இந்தக் கூட்டத் தொடர் முழுவதுமே நாங் கள் பேசவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அனு மதி கேட்டு வருகிறோம்.

ஆனாலும், இது குறித்து பேச எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதம் அய்க்கிய நாட் டின் மனித உரிமை கவுன் சிலில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர் மானம் கொண்டு வரவிருக் கிறது. அதுகுறித்து இந்தியா வின் நிலைப்பாடு என்ன? என்பதைப்பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

இவ்வாறு குறிப்பிட்ட கவிஞர் கனிமொழி அவர் கள், மேலும் உரையாற்று கையில், தெரு வியாபாரி கள் மசோதா உள்ளிட்ட இரண்டு மசோதாக்களை தி.மு.க. ஆதரிக்கிறது என்றும், அதே நேரத்தில் மாற்றுத் திறனாளி கள் மசோதாவை எதிர்க்கி றோம் என்றும் அந்த மசோ தாவை நிலைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என் றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் கமல் நாத் இதற்கு பதிலளித்து உரையாற்றுகையில், உறுப்பினர் கவிஞர் கனி மொழி, பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப் பட்டு வருவதாக தெரிவித் தார். மேலும் அய்.நா. மன் றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசு தனது நிலையை தெரிவிக்கவேண்டும் என் றும் வலியுறுத்தினார்.

தமிழக மீனவர்கள் தாக் கப்படுவது குறித்து உறுப் பினர்களின் வேதனையை தாமும் பகிர்ந்து கொள்வ தாக நாடாளுமன்ற விவாக ரத்துறை அமைச்சர் கமல் நாத் கூறினார்.

மீனவர்கள் தாக்கப்படு வதை தடுக்கவும், சிறையி லிருந்து மீனவர்களை விடு விப்பதற்கும், இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் கமல்நாத் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/75613.html#ixzz2u0opAM6Y

தமிழ் ஓவியா said...


அழியும் மொழிகள்


1,000 வருடங்களாக மொழி அழிவதும், புது மொழி உண்டாவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில வருடங்கள் முன்பு அந்தமான் தீவில் வயதான பெண்மணி ஒருவர் இறந்துபோனார். அவர் பேசிய 'போ மொழியும் அவருடன் அழிந்துபோனது. அந்த மொழி தெரிந்த கடைசி ஆள் அவர். '65,000 வருடக் கலாசாரம் துண்டுபட்டது என்று பத்திரிகைகள் எழுதின.

100 வருடங்கள் முன்பு ஹீப்ரு மொழி, அழிவின் வாசலில் நின்றது. இன்று 9 மில்லியன் மக்கள் அந்த மொழியைப் பேசுகிறார்கள். அவர்களுக்கு 'இஸ்ரேல் என்ற ஒரு நாடு கிடைத்ததுதான் காரணம். 50 வருடங்கள் முன்பு, ஹவாய் மொழி அழிவு நிலையில் இருந்தது. இன்று அதை மீட்டெடுத்துவிட்டார்கள்.

நவீனத் துருக்கிய மொழியின் வயது 80. இந்த மொழியில்தான் ஓர்ஹான் பாமுக் நாவல் எழுதி நோபல் பரிசு பெற்றார். தமிழுக்கு அழிவு வெளியே இருந்து வரப்போவது இல்லை. தமிழர்களால்தான் வரும். போலந்தில் பிறந்த ஒருவர் போலந்து மொழியில் படிப்பார். ரஷ்யாவில் பிறந்த ஒரு ரஷ்ய மொழியில் படிப்பார். டென்மார்க்கில் பிறந்த ஒருவர் டேனிஷ் மொழியில் படிப்பார். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் தமிழ் படிக்காமலேயே மேல்படிப்பு படித்து வேலை தேடிக்கொள்ளலாம். இந்த நிலைமை தமிழ்நாட்டில் இருந்தாலும், புலம்பெயர் சூழல் ஆரோக்கிய மானதாக இருக்கிறது.

அறிவகம் என்ற அமைப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் பாடத்திட்டத்தின் கீழ் 3,000 புலம்பெயர் தமிழ்ச் சிறார்கள் ஆண்டுதோறும் தேர்வு எழுதுகிறார்கள். இதனால் ஒரு லாபமும் அவர்களுக்கு கிடையாது. ஆர்வம் தான் காரணம். வைதேகி ஹெர்பர்ட் எனும் அமெரிக்கப் பெண்மணி, 12 சங்க நூல்களை ஆங்கிலத்தில் எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார். 2,000 வருடங்களாக ஒருவரும் செய்திராத சாதனை இது. அமெரிக்கத் தமிழர் குமார் சிவலிங்கம், குழந்தைப் பாடல்களையும் குழந்தைக் கதைகளையும் அச்சு/ஒலி புத்தகங்களாக ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகான படங்களுடன் உலகத் தரத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழின் எதிர்காலம் ஒருபக்கம் பிரகாசமாகவும், இன்னொரு பக்கம் இருள் நிறைந்ததாகவும் உள்ளது. எந்தத் திசையைத் தமிழர்கள் தேர்வு செய் வார்கள் என்பது ஊகம்தான்!

- ஆனந்தவிகடன் - 5.2.2014, பக்கம் 30-31

Read more: http://viduthalai.in/page2/75785.html#ixzz2uC8IEnA1

தமிழ் ஓவியா said...


இப்படியும் ஒரு சிறுவன்!


மும்பையில் தான் விருப்பப்பட்டபடி சொன்ன நாளிலேயே உயிரை இழந்து தனது உடல் உறுப்புகளை கொடை செய்த 9 வயது சிறுவனின் பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது.

விக்கிரமசிங்கபுரத்தில் பொன்நகரை சேர்ந்த மதுரா கோட்ஸ் பணி நிறைவு அலுவலர் நல்லசிவன் - பிச்சம்மாள் மகன் ராமசுப்பிரமணியனுக்கும் - கும்பகோணம் ராஜகோபால் காந்தாமணி மகள் கோமதி ஈஸ்வரிக்கும் திருமண மானது. ராமசுப்பிரமணியன் மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது ஒரே மகன் நரேன் பிரகாஷ் (9). இவன் மும்பையில் தனியார் பள்ளியில் நன்றாக படித்துள்ளான்.

இந்த மாணவனின் பள்ளியில் கடந்த 3 வாரங்களுக்கு முன் குருதிக் கொடை முகாம் நடந்தது. அதில் பல்வேறு மாணவர்கள் பங்கேற்று குருதிக் கொடை செய்துள்ளனர். மாணவன் நரேன் பிரகாஷ் சிறுவன் என்பதால் அவன் குருதிக்கொடை வழங்கவில்லை. வீட்டில் தன் பெற்றோ ரிடம் வந்து அப்பா என்னை குருதிக் கொடை செய்யவிடமாட்டேன் என்று சொல்லி விட்டார்கள் எதற்காக என கேட்டுள்ளான்.

அப்போது ராமசுப்பிரமணியன் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் குருதிக் கொடை மற்றும் உடல் உறுப்பு கொடை யளிக்க செய்ய முடியும் என கூறியுள்ளார். இது குறித்து அதிக ஆர்வம் கொண்ட நரேன் பிரகாஷ் தனது வீட்டில் உள்ள இணைய தளத்திலும் உடல் உறுப்பு களின் தானம் குறித்து தானாகவே தெரிந்து கொண்டு அவன் அப்பாவிடம் குருதிக் கொடை தான் செய்ய முடியாது. அதற்கு வயது போதாது என்று கூறினீர்கள்.

ஆனால் உடல் உறுப்புகள் கொடையளிப்பதற்கு வயது கிடையாதாமே எனவே அப்பா, அம்மா, நாம் மூவரும் சென்று கண்டிப் பாக உடல் உறுப்புகளை கொடை யளிக்க வேண்டுமென தொடர்ந்து தன் தந்தையிடம் வலியுறுத்தியுள்ளான். அதற்கு அவனது தந்தை ராமசுப்பிர மணியன் வரும் சனிக்கிழமை அன்று தான் எனக்கு விடுமுறை அப்போது மூவரும் சென்று உடல் உறுப்புக்களை கொடை அளித்து படிவங்களை விண் ணப்பித்து விடுவோம் என கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த நரேன் பிரகாஷ் கீழே விழுந்ததில் கையை தரையில் ஊன்றியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள் ளான். கையில் பிளேட் வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் திடீரென உடல் நிலை மோசமானதால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவன் பரிதாப கமாக இறந்தான். மாணவன் விருப்பப்படி என்று அவன் உடல் உறுப்புகளை கொடையளிக்க எண்ணினானோ அன்று மூளைச்சாவு ஏற்பட்டவுடன் உடனடியாக அவரது கல்லீரல் ஒரு சிறுமிக்கு தானமாக கொடுக் கப்பட்டது. மேலும், மாணவனின் கண்கள், சிறு நீரகங்கள் கொடையளிப்பதற்காக பத்திர மாக வைக்கப்பட்டுள்ளது.

நரேன் பிரகாஷ் உடல் வி.கே.புரம் பொன்னநகருக்கு கொண்டு வரப்படு கிறது. கொடையளிக்க விருப்பப்பட்டு படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டிய நாளிலேயே தனது உயிரை இழந்து உடல் உறுப்புகளை கொடையளித்த சிறுவன் நரேஷ் பிரகாஷ் நிலையை உறுப்பினர்கள் எடுத்துக் கூறும்போது மிகவும் பரிதாபமாக இருந்தது. இருந்தாலும் சிறுவன் நரேன் பிரகாஷ் சிறுமி மூலமாக வாழ்கிறான் என்பதாலும், கண்கள் மற்றும் சிறுநீரகம் மூலம் மற் றொருவர் வாழ்வார்கள் என்பது அவர் களது குடும்பத்தினரை தலை நிமிர்ந்து வாழச் செய்கிறது.

Read more: http://viduthalai.in/page2/75787.html#ixzz2uC8W13uq

தமிழ் ஓவியா said...

பெரியார் ஒரு சகாப்தம்

கடந்த ஞாயிறு 26.1.2014 அன்று விஜய் டி.வி.யில் நீயா? நானா? நிகழ்ச்சியில் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப் பில் விரிவாகப் பேசப்பட்டது. திரும்பத் திரும்ப அனைவ ராலும் பாராட்டப்பட்ட தலைவர் பெரியார் மட்டும்தான்.

ஜாதி வெறி பிடித்த ராஜாஜி அல்லது மற்ற பார்ப்பனர் கள் பெயர் ஒரு தடவைகூட வரவில்லை. ஆனால் கிழக்குப் பதிப்பகத்தின் பார்ப்பான் மட்டும் மோடியின் எழுத்துக்களைப் படிப்பானாம். அந்த நிகழ்ச்சியின் மூலம் அன்றும், இன்றும், என்றும் நமது பெரியார் தான் சிறந்த தலைவராகப் போற்றப்படுவார்.
- வாசக நேயர் ஒருவர்

Read more: http://viduthalai.in/page4/75788.html#ixzz2uC9LvlhW

தமிழ் ஓவியா said...

அதிசய மனிதர்

போலியோ என்னும் நோயைக் கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க், தனது கண்டுபிடிப்பு உரிமைக்கான காப்புரிமையைக் கோரவில்லை - உண்மையிலேயே அதிசய மனிதர்தான்.

Read more: http://viduthalai.in/page4/75788.html#ixzz2uC9acEoU

தமிழ் ஓவியா said...


சிகாகோவில் சு.சாமிக்கும், ராம்தேவுக்கும் தடை


சிகாகோ பரஸ்பர நம்பிக்கைக்குழு சு.சாமி, யோகா குரு ராம்தேவ் இவர்களின் தலையீட்டைக் கண்டித்து பிரச்சினை எழுப்பியது. சிகாகோ பரஸ்பர நம்பிக்கைக் குழு வானது சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாள் விழாவை ஆதரிப்பதை ஏன் திரும்பப் பெற்றுக் கொண்டது என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

அமெரிக்க விஸ்வஹிந்து பரிஷத்தும் வெளிநாடு வாழ் பாரதிய ஜனதா கட்சியின் நண்பர்கள் என்ற அமைப்பும் ஆதர வளித்து விவேகானந்தரின் விழாவை நடத்துவதால் அந்த சிகாகோ அமைப்பு விவேகானந்தரின் விழாவுக்கு ஆதர வளிப்பதைத் திரும்பப்பெற்றுக் கொண் டதாக அறிவித்துள்ளது.

அப்படிச் செய்ததன் மூலம் உலக மதங்களின் பார்லிமெண்ட் குழு, இந்திய பாரதிய ஜனதா கட்சிக்கும் உலக பாரதிய ஜனதா கட்சியின் நண்பர்கள் என்ற அமைப் புக்கும் உள்ள தொடர்பை விளக்கமாகவும் துல்லியமாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதுவுமல்லாமல் இந்திய பாரதிய ஜனதா கட்சியானது அமெரிக்காவால் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை செய்யப்பட்ட நரேந்திரமோடியினால் தலைமையேற்று நடத்தப்படுவதாகவும் அது கூறியுள்ளது.

அமெரிக்க ஹிந்து நிறுவனம் என்னும் ஹிந்து ஆதரவு அமைப்பு விவேகானந் தரின் விழாவுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதற்குக் கண்டனம் தெரிவித் துள்ளது.

உலக மதங்களின் பார்லிமெண்ட் குழுவானது பி.ஜே.பி மற்றும் சிறுபான் மையினருக்கு எதிரான பேச்சாளர்கள் குறிப்பாக இரண்டு நபர்கள் சுப்பிரமணிய சாமியும், சுவாமி ராம்தேவும் அந்த விழா வில் கலந்து கொண்டு பேச இருப்பதை தடைக்கான காரணமாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

அதனால் தான் சி.றி.கீ.ஸி என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் மேரி நெல்சன் என்பவர் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான காரணத்தைக் குறிப்பிடும் போது முக்கியப் பேச்சாளரான டாக்டர் சு.சாமி, பி.ஜே.பி.யின் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சு.சாமியின் கவுரவ விரிவுரையாளர் பதவிக்கு வேட்டு

இந்திய முஸ்லிகள் இந்து மதத்தின் பழைமையை அங்கீகரிக்க மறுப்பதால் அவர்களின் ஓட்டுரிமையைப்பறிக்க வேண்டும் என்றும் மசூதிகளை இடிக்க வேண்டும் என்றும் பேசிய திமிர்ப் பேச் சினால் சு.சாமியின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் கவுரவ விரிவுரையாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அப்பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தினால் பெரும்பான் மையான வாக்குகள் வித்தியாசத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

உலக மதங்களின் பார்லிமெண்ட் குழுவின் துணைத் தலைவர் அட்டர்னி பிளிஸ் குயூரர் என்பவரும் மதக் கல்வியின் பேராசிரியர் ராபர்ட் செல்லர் என்பவரும் சுவாமி ராம்தேவ் என்பவர் மேற்கண்ட நிகழ்ச்சிக்குத் தலைமை விருந்தினர் என்பதோடு நரேந்திர மோடியின் ஆதர வாளர் என்றும் மோடியின் பிரச்சாரத்தில் இந்தியாவில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறி மேற்கண்ட விழாவிற்கு ஆதரவை வாபஸ் பெற்றதற்கான காரணத்தைக் கூறியுள் ளனர்.

உலக மதங்களின் பார்லிமெண்ட் குழு வானது அமெரிக்க விஸ்வஹிந்து பரிஷத் தன் வலைத்தளத்தில் சீக்கியர்களும் ஜைனர்களும், புத்தமதத்தினரும் இந்துக் களே என்று கூறியுள்ளதைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது.

மற்ற மதங்களுக்கு எதிரான நடவடிக் கைகளால் அமெரிக்க ராஜீயத்துறை 2001 ஆம் ஆண்டிலிருந்து விஸ்வஹிந்து பரி ஷத்தை ஒரு தீவிரவாதக்குழு என்று அறி வித்துள்ளது.

- (இந்து 3.10.2012 பக்கம் 10)

Read more: http://viduthalai.in/page4/75789.html#ixzz2uC9m0eM8

தமிழ் ஓவியா said...


அப்பனை! தூஷித்தவன் ராமன்


- பா.வே. மாணிக்கநாயக்கர் (B.E. M.O.I.M.I.E.)

வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் 53வது சர்க்கம் ஸ்லோகங்கள் கருத்து- வால்மீகி ராமன் மனக்காட்சியால் சொல்வது:- ஓ இலக்குமணா! இப்போது தசரத மகாராஜா மிகுந்த துயரத்துடன் படுத்துக் கொண்டிருக்கிறார்.

கைகேயியோவென்றாலங்கு தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டு மகிழ்வடைந்தவளாய் இருப்பதற்குரிய வள். அதாவது: அந்த தேவியாகிய கைகேயி அரசாட்சியடைய வேண்டியதன் பொருட்டு வந்த பரதனைப் பார்த்ததும் தசரத மகா ராஜா தன் உயிரை விடும்படி செய்ய மாட்டாளா என்ன?

உதவியற்றவனும், கிழவனும் (தலை மகனாகிய) என்னாலும் பிரிவுபட்டவனும் காமத்தில் அமிழ்ந்தோனும், கைகேயியின் கையிற் சிக்கியவனும் ஆகிய தசரதன் என்ன செய்யப் போகிறான்?

இந்தத் துயரத்தையும், அரசனுடைய (தசரதனுடைய) அறிவு கெட்ட மருட் சியையும் பார்க்கிறபோது, அறம் பொருள் இரண்டையும்விட இன்பமே (காமம்) பெரிதென்பது என்னுடைய கருத்து.

ஓ இலக்குமணா! படிப்பில்லாதவனுங் கூட மனுஷன் என்கிற ஒருவன் எவன்தான், பெண் பொருட்டாக, விருப்பத்தைப் பின்பற்றுகின்ற புதல்வனாகிய என்னை என் அப்பனைப் போல விட்டுவிடுவான்?

எவன் அறம், பொருளைக் கைவிட்டு, இன்பத்தைக் கடைப்பிடிக்கிறானோ அவன் தசரத அரசனைப் போல, விரைவில் இம்மாதிரி துயரத்தை அடைவான்.

(கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் பக்கம் 41-42-44).

Read more: http://viduthalai.in/page4/75790.html#ixzz2uCA0ZEem

தமிழ் ஓவியா said...


விஞ்ஞானமும் மூடநம்பிக்கைகளும்


இந்திய சமுதாயத்தில் ஆழ வேரூன்றி யிருக்கும் மூடநம்பிக் கைகளை ஒழித்து, அவர்களை பகுத்தறிவுச் சிந்தனைக்கு வழி திருப்பி விடும் பெரும் பொறுப்பு விஞ் ஞானிகளுக்கு இருக்கிறது. இந்த அடிப் படையில் ஒரு விஞ்ஞானி சித்து வேலை களை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. இந்த ஏமாற்றுகளும் விஞ்ஞானமும் இணைந்து போக முடியாது. சமுதாய சீர்திருத்தம், சுகா தாரம், குடும்பக் கட்டுப்பாடு ஆகிய வற்றை வலியுறுத்துவதுதான் மூடநம்பிக் கைகளை ஒழித்து விஞ்ஞான மனப்பான் மையை உருவாக்க ஒரே வழியாகும். இந்தியாவில் விஞ்ஞானம் என்பது ஏதோ ஓட்டளவிலும் தொழில் ரீதியாகவும் இருக் கிறதே தவிர, விஞ்ஞான மனப் பான்மை வாழ்வியலில் எதிரொலிக்கவில்லை. சோத னைச் சாலையில் விஞ்ஞானியாக இருக் கிறார்கள். வீட்டுக்கு வந்ததும் விஞ்ஞானத் திற்கு நேர் எதிரான பழக்க வழக்கங்கள், சிந்தனை களை கைக்கொள்கிறார்கள். இது முற்றிலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

(பெங்களூர் பல்கலைக் கழகத்தில் விஞ் ஞானமும், மூடநம்பிக்கைகளும் என்ற தலைப்பில் இந்திய அரசுத்துறை செயலாள ரும், விஞ்ஞான தொழில் வளர்ச்சிக் கழக இயக்குநருமான டாக்டர் நாயுடம்மா).

Read more: http://viduthalai.in/page4/75791.html#ixzz2uCABjG2C

தமிழ் ஓவியா said...


சோதிடத்தைப்பற்றி ஆச்சாரியார்!


அஜந்தாவுக்கும் எல்லோராவுக்கும் போகும் வழியில் கவர்னர் ஜெனரலுக்கு (ராஜாஜிக்கு) அவுரங்காபாத்தில் வரவேற்பொன்று அளித் தனர். வரவேற்புரையில் அவரை அளவுக்கு மீறி வரம்பின்றிப் புகழ்ந்து வைத்தனர். ராஜாஜியின் முழுப்பெயரில் உள்ள எழுத்துக்களைக்கூட்டி, அதை வைத்து நம்பர் ஜோசியம் கூறுவதாக - அவரை ஒரேயடியாகப் புகழ்ந்து நல்ல பலன் களாகவே கூறினர். இவைகளுக்கு ராஜாஜி பதிலளித்துப் பேசு கையில், உண்மையைக் கூற வேண்டுமானால், நான் ஜோசியத்தை நம்புவ தில்லை; எனக்கு அதில் நம்பிக்கை இல்லை; அதை நம்பக் கூடாது என்று உங்களையும் நான் எச்சரிக்கிறேன். ஜோசியத்தில் அப்படியே ஏதாவது இருந்தாலும் அதை நட்சத்திரங்களைக் கொண்டு எதிர்காலத்தை அறிவதாகக் கூறுவது சிறிதுகூட அறிவுடைமையாகாது. மாலையை அணிவித்து வரவேற்புரையும் கூறினீர்கள். இவற்றில் மாலையைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், அதை நான் என் கழுத்திலிருந்து எடுத்துவிட முடியும்; நீங்கள் கூறிய புகழுரைகள் என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன

(ராஜாஜி மேற்கு வங்கத்தின் முதல் கவர்னராக இருந்தபோது அவருடைய ராணுவச் செயலாளராக இருந்த டாக்டர் பீமனேஷ் சாட்டர்ஜி எழுதிய ராஜாஜி யுடன் ஆயிரம் நாட்கள் (ஜிலீஷீணீஸீபீ பீணீஹ் ஷ்வீலீ ஸிணீழீணீழீவீ) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது).

Read more: http://viduthalai.in/page5/75797.html#ixzz2uCATN8hW

தமிழ் ஓவியா said...


சோதிடத்தைப்பற்றி ஆச்சாரியார்!


அஜந்தாவுக்கும் எல்லோராவுக்கும் போகும் வழியில் கவர்னர் ஜெனரலுக்கு (ராஜாஜிக்கு) அவுரங்காபாத்தில் வரவேற்பொன்று அளித் தனர். வரவேற்புரையில் அவரை அளவுக்கு மீறி வரம்பின்றிப் புகழ்ந்து வைத்தனர். ராஜாஜியின் முழுப்பெயரில் உள்ள எழுத்துக்களைக்கூட்டி, அதை வைத்து நம்பர் ஜோசியம் கூறுவதாக - அவரை ஒரேயடியாகப் புகழ்ந்து நல்ல பலன் களாகவே கூறினர். இவைகளுக்கு ராஜாஜி பதிலளித்துப் பேசு கையில், உண்மையைக் கூற வேண்டுமானால், நான் ஜோசியத்தை நம்புவ தில்லை; எனக்கு அதில் நம்பிக்கை இல்லை; அதை நம்பக் கூடாது என்று உங்களையும் நான் எச்சரிக்கிறேன். ஜோசியத்தில் அப்படியே ஏதாவது இருந்தாலும் அதை நட்சத்திரங்களைக் கொண்டு எதிர்காலத்தை அறிவதாகக் கூறுவது சிறிதுகூட அறிவுடைமையாகாது. மாலையை அணிவித்து வரவேற்புரையும் கூறினீர்கள். இவற்றில் மாலையைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், அதை நான் என் கழுத்திலிருந்து எடுத்துவிட முடியும்; நீங்கள் கூறிய புகழுரைகள் என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன

(ராஜாஜி மேற்கு வங்கத்தின் முதல் கவர்னராக இருந்தபோது அவருடைய ராணுவச் செயலாளராக இருந்த டாக்டர் பீமனேஷ் சாட்டர்ஜி எழுதிய ராஜாஜி யுடன் ஆயிரம் நாட்கள் (ஜிலீஷீணீஸீபீ பீணீஹ் ஷ்வீலீ ஸிணீழீணீழீவீ) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது).

Read more: http://viduthalai.in/page5/75797.html#ixzz2uCATN8hW

தமிழ் ஓவியா said...


இனித்த கனி எது?


(சந்திரமோகன் நாடகத்தில்)

இடம்: காகப்பட்டர் ஆசிரமம்

இருப்போர்: காகப்பட்டர், ரங்கு

நிலைமை: (காகப்பட்டர் பழம் சாப்பிட்டுக் கொண்டே ஓலைச்சுவடி களைப் படித்து இரசித்துக் கொண் டிருக்கிறார்.

ரங்கு, குரு சாப்பிடும் பழத்தின் சுவையை எண்ணிய படி ஏக்கத்துடன் இருக்கின்றான். காகப்பட்டர், சுவடியிலே எதையோ படித்துப் பெரிதும் இரசித்தபடி)

காகப்பட்டர்: ரங்கு! எவ்வளவு அருமை, எவ்வளவு இனிமையாக இருக்கு தெரியுமோ!
(குரு பழத்தின் சுவையைத்தான் கூறுகிறார் என்று எண்ணிக் கொண்டு)

ரங்கு: எனக்கெப்படி ஸ்வாமி தெரியும். (பெரு மூச்செறிகிறான்)

(குரு, ரங்குவின் கண்கள் பழத்தின் மீது செல்வது கண்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு, புன்னகை புரிந்து)

காக: மண்டு!

என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே பேசு கிறாயே-

ரங்கு: பழத்தின் இனிமையைத் தான் சொல்கிறீர்; புரிகிறது நன்னா- ஆனா பழத்தை நீர் சாப்பிட்டா, இனிமை, எனக்கா தெரியும் - சுவாமி!

காக: பைத்தியக்காரா! பழத்தின் இனிமையை அல்லடா நான் சொல்வது, வேணுமானா, இரண்டு பழம் சாப்பிட்டுத் தொலையேன். வேண் டாம்னு சொல்வேனா?

சொன்னாத்தான் நீ கேட்கப் போறாயா? நான், பழத்தின் இனி மையைக் குறித்துச் சொல்லவில்லை.

இந்தப் பழைய சுவடி இருக்கே..
நம்ம குல ரட்சகர்,

சட்டதிட்ட கர்த்தா மனு,

அவர் வகுத்து வைத்திருக்கும் -

அற்புதமான ஏற்பாடுகளைப் படிக்கப்படிக்க, சிந்திக்கச் சிந்திக்க, அவைகளோட தத்துவங்களை அலசிப் பார்க்கப் பார்க்க, அடடா! எவ்வளவு இனி மையா இருக்கு தெரியுமோ...

ரங்: அதைச்சொல்றேளா?

காக: கேவலம், பழத்தோட இனி மையைப் பத்தி நான் பேசறதாக எண்ணிண்டிருக்கே...

ரங்: நான் என்ன கண்டேன் சுவாமி! பழம் சாப்டிண் டிருந்தீர்...

காக: அதிலே என்னடா மதுரம் இருக்கு...

மண்டு?

மனு செய்திருக்கிற ஏற்பாடு, நமது குலத்துக்கு என் றென்றும் மதுரமான வாழ்வளிக்கும் கற்பகவிருட்சம்?

- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி (மாமனிதர் அண்ணா நாளிதழ் - பேராசிரியர் க.அன்பழகன்)

Read more: http://viduthalai.in/page7/75801.html#ixzz2uCT8m2iu

தமிழ் ஓவியா said...


கடவுள் புத்திசாலியா? யோக்கியமானதா?


ஒரு தகப்பன் பல குழந்தைகளைப் பெற்று விட்டு அவனது வீட்டின் புறக்கடையில் ஒரு கிணற்றை வெட்டி அக்கிணற்றுக்குச் சுற்றுச்சுவர் கட்டாமல் விட்டு விட்டுக் குழந்தைகளைப் பார்த்துக் கிணற்றிற்குச் சுற்று (பாதுகாப்பு)ச் சுவர் கட்டவில்லை; நீங்கள் புத்தி இருந்தால் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வானேயானால் அத்தகப்பன் யோக்கியமான அறிவாளியான தகப்பன் ஆவானா?

அப்படித்தானே இன்று கடவுள் மக்களில் அயோக்கியர்களைப் படைத்துவிட்டுப் பாதுகாப்பில்லாமல் செய்து அவர்களிடம் மக்களைத் தொல்லைப்படச் செயகிறார்!

துஷ்ட மிருகங்களைப் படைத்து அவைகளிடம் சாது மிருகங்களைத் தொல்லை அனுபவிக்கும்படிச் செய்கிறார். கசாப்புக் கடைக்காரர்களைப் படைத்து அவர்களிடம் ஆடு மாடுகள் பலியாகும்படிச் செய்கிறார். மீன் பிடிக்கும் வலையர்களைப் படைத்து அவர்களிடம் தினமும் பலப் பல கோடி மீன்களைப் பலியாகும்படிச் செய்கிறார். பெண்களைப் படைத்து அவர்கள்மீது பலப்பல ஆண்களை ஆசைப்படும்படிச் செய்கிறார் - தந்தை பெரியார்.

ஆகவே, இவைகளிலிருந்து கடவுள் எவ்வளவு கருணாநிதி! எவ்வளவு புத்திசாலி! எவ்வளவு யோக்கியன்! கடவுளை நம்புகிற மக்களே, நீங்களே கூறுங்கள்.

Read more: http://viduthalai.in/page7/75800.html#ixzz2uCTIbv8J

தமிழ் ஓவியா said...


கடவுள் இல்லை


ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பிய துண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப் பதால் அவர் நமது வேண்டுகோளைக் கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன். நன்மையான தர்ம கைங் கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார் என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிர கஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதி கொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்து இப்பொழுது. அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல் போய் விட்டது. இந்த மாய வஞ்சகம் நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக் காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக்கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி. சத்தியவந்தர், சர்வ வல்லமை யுள்ளவர். எங்கும் பரம் பொருளாக நிறைந்திருப்பவர் என்பனவற்றை நான் எப்படி நம்பக் கூடும்? மகா தயாநிதி சத்தியமே ஒரு உருவான மெய்க் கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித் திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி நிறைந்தது. சமத்துவத்திற்குப் பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமை களுக்கும் உறைவிடம்; மிருகத்தனமானது.

வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான உலகத்தைச் சத்தியவந்தரான கடவுள் உண்டு பண்ணியிருக்க முடியுமா? பல ஆயிரக்கணக்கான கொடியர் இவ்வு லகில் ஜீவிக்கிறார்கள் இன்னும் பலர் முட்டாள்கள். அவர்களுக்கு மூளை என் பதே கிடையாது. அன்பு சத்தியம் நிறைந்த இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம் ஏழைகளை இம்சிக்கும் ராக்ஷதர் களும், சத்தியவந்தரைத் தொல்லைப் படுத்தி, அடக்கி, நசுக்கி, மண்ணுக்கு இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர் களும் இன்னும் பல ஆயிரம் கொள்ளை யடிக்கும். திருடர்கள் பலர் சுய நலமே உருக் கொண்ட தீயர்கள் எத்தனையோ லக்ஷம். இந்தச் சுயநலப் பேய்களே மகா சொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்துகிறார்கள். ஏழை களின் கதியோ அதோ கதி தான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகி, தரித்திரத்திற் குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றிப் பசியால் வாடி மடிகின் றனர். முடிவில் மண்ணோடு மண்ணாய்ப் போகிறார்கள். உலகில் இந்தக் கொடு மைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்தக் கொடிய உலகத்தை உண்டு பண்ணி யிருக்க முடியுமா?

வேதங்கள் பொய்: சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங் களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக்கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக் கண்டுபிடித்து விட்டதாகச் சிலர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாயையில் மூழ்கி அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மதவெறி கொண்டவர்களே உண்மையி ருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவானோ, கிறிஸ்துவோ, மகமது நபியோ உண்மையைக் கண்டுபிடித் திருக்கிறார்களா? அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்தச் சத்தியம் மறைந் துவிட்டதா? அல்லது அதைப் போதிக்கப் புறப்பட்டவர்கள் திரித்து, சத்தியத்தையே மறைத்துவிட்டார்களா? இவர்கள் மனி தர்களைப் பாகுபாடு படுத்திப் பிரித்து வைத்தது ஏன்? சத்தியமென்றால் ஒற்று மையின்றிப் பல பாகுபாடுகள் உண்டு பண்ணிச் சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?

லாலாஜி வாழ்க்கை: இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு வந்தேனெனக் கேட்கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்க வேண்டும். இது மனித சுபாவம்; ஒரு குணம் அது சதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

- லாலாலஜபதி

Read more: http://viduthalai.in/page8/75803.html#ixzz2uCTwqSO6

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சியா? மோடி புளுகு - 2


பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டவுடன், குஜராத் மாநிலம் ரேவாரி கிராமத்தில் 15.9.2013 அன்று பேசிய மோடி, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள கட்ச் பகுதிகளில் காவல் புரியும் நமது இராணுவ வீரர்களின் பயன் பாட்டிற்கு, நர்மதா ஆற்றிலிருந்து குடிநீர் வருவதற்கு தன்னுடைய முயற்சிதான் காரணம் என்றும், இராணுவ வீரர்கள் மீது அதிக அன்பும் மதிப்பும் இருக்கும் காரணத்தினால், 700 கிலோமீட்டர் தூரத்திற்கு, குழாய் அமைத்து, தண்ணீர் செல்ல, தான் ஏற்பாடு செய்த தாகவும் பேசினார், மோடி. இதில் உண்மை இருக்கிறதா? கட்ச் பகுதிக்கு, குழாய் மூலமாக குடி நீர் வழங்கும் மிகப் பெரிய திட்டம் 4700 கோடி ரூபாய் செலவில் சர்தார் சரோவர் அணை மற்றும் மாகி குழாய் திட் டத்தின் மூலாமக 1999-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

மாகி குழாய் திட்டத்தின் மூலமாக நர்மதா ஆற்று நீர், ஆறு மாவட்டங்களில், 29 நகரங்களுக்கும், 1467 கிராமங்களுக்கும், 880 கோடி ரூபாய் செலவில், குடிநீர் தரப்பட்டதை, 2001ஆம் ஆண்டு ஏப்ரலில் அப்போதைய குஜராத் முதல்வரான கேசுபாய் படேல் அறிவித்துள்ளார். ஏப்ரல் 2002-க்குள் கட்ச் பகுதிக்கும் இந்த திட்டம் சென்றடையும் என்றும் அறிவித்தார் கேசுபாய். 22.1.2001 அன்று, மாகி குழாய் திட்டம் கதாதா மாவட்டத்தில் துவக்கப்பட்டது. துவக்கியவர் கேசுபாய் படேல். ஆசிய வளர்ச்சி வங்கியின் 600 கோடி ரூபாய் கடனில், இத்திட்டம், கட்ச் பகுதிக்கும் சென்றடைந்தது 2002 ஆம் ஆண்டு. 7.10.2001 அன்றுதான், நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-இல் இத்திட்டம் கட்ச் பகுதிக்கும் ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் பாதையை கடந்து சென்றது, இறுதி யாக எல்லைப் பகுதிக்கு சுமார் நூறு கி.மீ. தூரம் உள்ள பாதையை 2004-ல் முடித்திருக்க வேண்டும். ஆனால், நிர்வாகத் திறமை மிக்க? மோடி ஆட்சியில், நூறு கி.மீ. கடக்க பத்து ஆண்டுகள் ஆகியது. இறுதி யாக ஆகஸ்டு 2013-இல் தான் இராணுவ வீரர்கள் இருக்கும் எல்லைப் பகுதிக்கு இக்குடிநீர்த் திட்டம் சென்றடைந்தது. கேசுபாய் படேல் முதல்வராக இருந்து 1999-இல் துவக்கப்பட்ட இந்த குடி நீர் திட்டத்தை, மொத்தம் உள்ள 600 கி.மீ. தூர குழாய் திட்டத்தில், 500 கி.மீ. வரை கேசுபாய் படேல் ஆட்சிக் காலத்திலேயே முடிக்கப் பட்ட ஒரு திட்டத்தை, அக்டோபர் 2001-இல் முதல்வ ரான மோடி, தானே துவக்கியதாக 2013இல் கூறுகிறார் என்றால், இதற்குப் பெயர் தான் மோடி புளுகு.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/75819.html#ixzz2uCUzolsl

தமிழ் ஓவியா said...


பெரியாரின் மண்ணில் ஒழிந்து போன தேவதாசி முறை கருநாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை!


கருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என்ற பெய ரில் படிப்பறிவில்லா மக் களை ஏமாற்றி இந்தக் கொடூரம் நடந்து வருகிறது. தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட் டியார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் போன்றோர் நடத்திய சமூகப்போரின் காரணமாக பெண்களுக்கு ஏற்பட்ட தேவதாசி அவலம் தமிழகத் தில் இருந்து வேரோடு அழிந்து போனது. இதற்காக இன்றும் பெண்கள் தந்தை பெரியாருக்கு நன்றி தெரி விக்கின்றனர்.

ஆனால் கடந்த ஆண்டு வாய்ப்பிழந்த பெண் நடிகை ஒருவர் தேவதாசி ஆவது அவர் அவர்களது விருப்பம் என்று ஒரு கல்வி நிலையத்தில் நடந்த கருத் தரங்கில் கூறி தேவதாசி முறை என்னவோ பெண் களுக்குப் புனிதமான ஒரு சடங்கு போலவும், ஆல யங்களில் நடக்கும் புனிதப் பணியை அறியாமை கார ணமாக சிலர் (பெரியார் பெயரைக்குறிப்பிடாமல்) எதிர்த்தனர். அவர்களுக்கு நமது கலாச்சாரத்தின் மீது பொறாமையும் மதத்தின் காழ்ப்புணர்வும் உண்டு என்று கூறியிருந்தார். இது அப்போதே மிகவும் சல சலப்பை ஏற்படுத்தியது.

அவரின் ஆபாசமான கூற்றை உச்சநீதிமன்றமே ஓங்கி அறைந்து தேவதாசி முறை இந்த நாட்டின் மிகப் பெரிய அவமானம் என்று கூறி இருக்கிறது. கருநாடக மாநிலம் ஹரப்பனல்லி வட்டத்தில் உத்தரங்கமல அடிவிமல நகரி என்ற பகுதியில் உள்ள துர்க்கை கோவிலில் இன் றும் தேவதாசி முறை நடந்து வருகிறது. இது குறித்து பல முறை அரசுக்குத் தெரியப் படுத்தியும் இது கலாச்சார பழக்கம்; இது திருவிழா அன்று மாத்திரம் நடக்கும் விழாவாகும் இதனால் யாரும் பாதிக்கபடவில்லை என கூறி நகர நிர்வாகமும் இந்தச் கோவில் தேவதாசி விழாவை சிறப்பாக நடத்தி வந்தது. போராடும் உளியம்மா

இந்தக் கோவிலின் முதிய தேவதாசியான உளி யம்மா என்பவர் நீண்ட காலமாக இந்தப் பழக்க வழக்கத்திற்கு எதிராக போராடி வந்தார். ஆனால் நகர நிர்வாகம் மற்றும் பிர பலங்களின் தலையீடு கார ணமாக அவரால் எதுவும் செய்யமுடியாமல் இருந்தது. இந்த நிலையில் சோசியல் லைஃப் என்ற பொது நல அமைப்பு உளியம்மா விற்கு உதவமுன்வந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எஸ் எல் பவுண்டே சன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய் தது அதில் உதரங்கமல துர்க்கையம்மன் கோவிலில் நடந்து வரும் பாரம்பரிய தேவதாசி முறையையும் சின்னாபின்னமாக்கப் படும் பெண்களின் வாழ்க் கைப் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் சாட்டை! சமூகத்தின் மிகவும் கொடிய பழக்கமாக இன் றும் தொடரும் இந்த அவ லத்தை அறிந்ததும், உச்சநீதி மன்றமே ஒருமுறை அதிர்ந்து போனது, தேவதாசியாக மாற்றப்படும் விழா (13.02.14) அன்று இரவு நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றம் நீதிபதி சதாசிவம் தலைமையில் இந்த மனுவை விசார னைக்கு எடுத்துக்கொண்டு இந்த மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட உத்தரவை வழங்கியுள்ளார்;

இந்த சம்பவம் குறித்து கருநாடக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவில் குறிப் பிடப்படுவதாவது : இந்த நூற்றாண்டிலும் தேவதாசி முறை தொடர்கிறது என் பது இந்திய நாட்டிற்கு ஒரு அவமானச் சின்னமாகும், இந்த சம்பவம் பற்றி உட னடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் நடைபெறுவ தைத் தடுத்து இதனால் பாதிக்கப்பட்ட பெண் களை மீட்க நடவடிக்கை எடுக்க கூறியும், இதற்கு முன்பான பதிவு செய்யப் பட்ட வழக்குகள் பற்றியும் விவரம் கேட்டுள்ளது. சமூக நீதிக்கான கி.வீர மணி விருதுவழங்கும் விழாவில் மராட்டிய மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன் புஜ்பால் கூறியதை இங்கு மீண்டும் நினைவு கூர்கி றோம். சமூகத்தில் பெண் கள் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் இன் றளவு குறைந்த பாடில்லை, இதனை களைய இன்றும் பெரியார் இந்தியா முழு வதும் தேவைப்படுகிறார் என்று கூறினார். இன்று உச்சநீதிமன்றத்தின் உத்தர வின் படி அவரின் வார்த்தை உண்மையானது.

இப்பொழுதுள்ள கரு நாடக முதல் அமைச்சர் சித்தாராமையா பகுத்தறிவு வாதி அவர் தலையிட்டு இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டுவார் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page1/75770.html#ixzz2uCWGPSKT

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்


பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மையினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

- (விடுதலை, 30.12.1972

Read more: http://viduthalai.in/page1/75759.html#ixzz2uCWffxES

தமிழ் ஓவியா said...


எனது பெற்றோர் விடுதலையை தடுக்காதீர்கள் ராகுல், பிரியங்காவுக்கு, நளினியின் மகள் வேண்டுகோள்


லண்டன், பிப்.22- எனது பெற் றோர் விடுதலையாவதை தடுக்காதீர்கள் என ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு நளினியின் மகள் ஹரித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தூக்குதண்டனை விதிக்கப் பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை கடந்த 18-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து இந்த 3 பேர் உள்பட, ராஜீவ் கொலை தொடர்பாக சிறையில் இருக்கும் 7 பேரும் விடுவிக் கப்படுவர் என தமிழக அரசு அறி வித்தது.
ஆனால் இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க இடைக் காலதடை விதித்தது.

இந்தநிலையில் முருகன்-நளினியின் மகளான ஹரித்ரா லண்டனில் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கடந்த 23 ஆண்டுகளாக எனது பெற் றோர் என்னுடன் இல்லாததால் நான் மிகப்பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் முடிவுகளால், எனது பெற்றோர் எனக்கு திரும்ப கிடைப் பார்கள் என மிகுந்த மகிழ்ச்சி அடைந் தேன். ஆனால் தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்ட செய்தி கேட்டு நான் மிகுந்த ஏமாற்றமும், குழப்பமும் அடைந்துள்ளேன்.

எனது பெற்றோர் எனக்கு திரும்ப கிடைப்பதற்கான ஒரு வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரை இழப்பதால் எவ்வளவு வேதனை ஏற்படும் என்பது, ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவுக்கு தெரியும். எனவே இந்த வாய்ப்பை அவர்கள் (ராகுல், பிரியங்கா) தடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

எனது பெற்றோர் விடுதலையா னால், அதுவே நீங்கள் எனக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். எனவே எனது பெற்றோர் விடுதலையை தயவு செய்து தடுக்காதீர்கள் என நான் உங்களை பணிந்து வேண்டுகிறேன். இவ்வாறு ஹரித்ரா கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/75766.html#ixzz2uCWwNJbj

தமிழ் ஓவியா said...


பல்லாவரத்துப் பண்டிதர்


திரு. வேதாசலம் அவர்கள் சென்னை குகானந்த சபையில் சமீபத்தில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் அவர் நண்பர்களையும் சுயமரியாதை இயக்கத்தையும் பற்றி மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினதாகவும் சுத்த சைவ ரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா என்பதாக சபையோர்களைக் கேட்டதாகவும் தமிழ்நாடு திராவிடன் பத்திரிகைகளில் காணப்படுகின்றது.

அதே கூட்டத்தில் திரு. வேதாசலத்தைத் திருவாளர்கள் தண்டபாணிப் பிள்ளை, ராமனாதன், கண்ணப்பர் முதலிய பலர் பல கேள்விகள் கேட்டதாகவும் பதில் சொல்ல இயலா மல் திக்குமுக்காடியதாகவும் கடைசியாக கண்ணீர் விட்டு அழுததாகவும் மற்றும் பல விதமாய் காணப்படுகின்றது.

அன்றியும், சிற்சில விஷயங்களில் திரு. வேதாசலம், நாயக்கரைத்தாக்க உண்மைக்கு மாறாக சில கற்பனைகள் செய்துகொண்டு போனதாகவும் அதை அக்கூட்டத் திலேயே வெளியாக்கி அவர் அவமானமடையச் செய்த தாகவும் திராவிடனில் காணப்படுகின்றது.

அவைகள் அடுத்த வாரத்திற்குள் திரு. வேதாசலம் அவர்களால் மறுக்கப்படாத வரை குடிஅரசில் அவைகளை எடுத்து எழுதி தக்க சமாதானங்கள் வெளியாக்கப்படும்.

- குடிஅரசு - தலையங்கம் - 29.07.1928

Read more: http://viduthalai.in/page1/75743.html#ixzz2uCXWUZxm

தமிழ் ஓவியா said...

பழியோரிடம் பாவமோரிடம்

காலஞ்சென்ற தமிழ் தேசிய கவி சி. சுப்பிரமணிய பாரதியவர்களின் தேசிய நூல்களின் முதலிரண்டு பாகங் களை சென்னை அரசாங்கத்தால் அராஜக நூல்களென்று பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்நூல்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியார் தான் என்று தமிழ்நாடு பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சியார் மீது வீண் பழி சுமத்துகிறது.

சென்னை அரசாங்கத்தார் மேற்படி நூல்களைப் பறிமுதல் செய்வதற்கு முன்னரே பர்மா அரசாங்கத்தார் பறிமுதல் செய்தனரே அதற்கு யார் காரணம் என்று தமிழ்நாடு கூறுமா? பர்மா அரசாங்கம் பறிமுதல் செய்த புத்தகத்தை சென்னை கவர்மெண்டாரும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற ஒரு அரசாங்க முறை இருந்து வருவதால் மேற்படி நூல்களை சென்னையில் பறிமுதல் செய்ததற்கு பர்மா கவர்மெண்டார் தான் காரணம் என்று சுதேசமித்திரன் பத்திரிகையும் கூட சொல்லியிருக்கிறது.

ஆகவே இந்த பறிமுதலுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் எந்த விதத்திலும் காரணமாயிருக்கவில்லை. பறிமுதல் செய்யப் பட்ட மேற்படி ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாரின் நூல்களில் ராஜீயத்தைவிட பார்ப்பனீயமே மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்ட தற்கு யார் காரணமாயிருந்திருக்கலாம் என்பதை அறிந்தும் அறியாததுபோல் ஜஸ்டிஸ் கட்சியாரை தமிழ்நாடு தாக்கு வதைப் பார்த்தால் அதைக் கோடாரிக்காம்பு என்று சொல்லு வதா அல்லது பழியோரிடம் இருக்க பாவத்தையோரிடம் சுமத்துகிற தென்பதா?

- குடிஅரசு - கட்டுரை - 30.09.1928

Read more: http://viduthalai.in/page1/75743.html#ixzz2uCXfuzlj

தமிழ் ஓவியா said...


விஸ்வ நேசன்

திருவாளர்கள் கா. சுப்பண்ண ஆச்சாரியார் அவர்களும், ந.நல்லய்ய ஆச்சாரியார் அவர்களும் ஈரோட்டிலிருந்து விஸ்வ நேசன் என்பதாக ஒரு புதிய வாராந்திர பத்திரிகை நடத்துவதாக ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகின்றது.

அது சீக்கிரத்தில் வெளியா கலாமென்றும் நினைக்கின்றோம். அப்பத்திரிகையானது ஏனைய சில சமூகப் பத்திரிகைகள் போலவும் அரசியல் புரட்டுப் பத்திரிகைகள் போலவும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைகள் போலவும் அரைத்த மாவை அரைத்துக் கொண்டே இருக்கின்றது என்பது போல் ஒவ்வொரு விஷயத்திலும் பார்ப்பனர் களையும் அவர்களது சமய பழக்க வழக்கங்களையும் பின்பற்றிக் கொண்டு கண்மூடித்தனமாய் நடப்பதாக இல்லாமல் சுதந்திரத்துடன் தனது சொந்த அறிவுக்கு மரியாதை கொடுத்து தற்காலம் நமது மக்களுக்கு வேண்டிய தான வழிகளில் செல்லும் என்பதாக உறுதிகொண்டு அதை வரவேற்கின்றோம்.

அன்றியும் அதன் அதன் பத்திராதி பராக இருக்கப் போகும் திரு. கா. சுப்பண்ண ஆச்சாரியார்வர்கள் ஒத்துழையாமை காலத்தில் ஈரோட்டில் சர்க்காரின் அக்கிரம உத்திரவை மீறி சிறை சென்றவர். இப்போதும் தொழிலாளர் விஷயமாகவும் ஈரோட்டில் சர்க்காரால் போடப்பட்ட அநியாய உத்தரவை மீறினதாக கைது செய்யப்பட்டு, திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலியவர்களுடன் விசாரணை யிலிருப்பவர்.

எனவே இப்பேர்ப்பட்ட அவரது ஆதிக்கத்தில் அப்பத்திரிகை நடைபெறும் வரையில் அது பெரிதும் சுய மரியாதைக் கொள்கைகளையே ஆதாரமாய்க் கொண்டு நடைபெறும் என்பதும் நமது உறுதி. ஆதலால் இத்தகைய பத்திரிகையைப் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02.09.1928

Read more: http://viduthalai.in/page1/75744.html#ixzz2uCXoISCK

தமிழ் ஓவியா said...

அந்தோ பரஞ்சோதி சுவாமிகள் பிரிந்தார்...

சிதம்பரம் பொன்னம்பல மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் சிலநாள் உடல் நலங்குன்றியிருந்து நிகழும் அக்டோபர் மாதம் 10ஆம் நாள் புதன் கிழமையன்று அந்தோ! இம் மண்ணுலகை விட்டுப் பிரிந்தார். சுவாமிகள் தென் மொழியிலும் வடமொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். தாம் மடாதிபதியானதும் காலநிலைமைக்குத் தக்கபடி மடத்து வேலைகளுடன் பொது நலத்திற்கான வேலைகளையும் கவனித்து உழைத்து வந்தார்.கதர், மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, முதலியவைகளை பல இன்னல்களுக்கிடையிலும் உபதேசித்து வந்தார். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சிதம்பரம் தச்சன் குளத்தையும் ஞானப்பிரகாசர் குளத்தையும் வெட்டியும், படிகட்டியும் சிதம்பர வாசிகளுக்கு உதவினவர்.

சிதம்பரம் நகர பரிபாலன சபையில் ஓர் ஆதி திராவிட சகோதரிக்கு ஸ்தானம் வாங்கிக் கொடுத்ததும் நம் சுவாமிகளே, ஆதலின் இத்தகைய பெரியாரின் பிரிவாற்றாது தவிக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் சிறப்பாக சிதம்பரவாசிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நமது ஆழ்ந்த அனு தாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 21.10.1928

Read more: http://viduthalai.in/page1/75744.html#ixzz2uCXvZrI1

தமிழ் ஓவியா said...


திரு.சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்


திரு செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர் (நகைப்பு) பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகிறது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும்.

(நகைப்பு) மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகு மென்று தைரியமாய்க் கூறினார்.

நம்நாட்டு மூட பழக்கவழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார் மகாநாட்டில் அவருக்கு வாணிபச் செட்டிமார்கள் வாசித்துக் கொடுத்த பத்திரத்திற்குப் பதிலளிக்கும்போது அவர் பிறர் தம்மைக் குறித்து என்ன சொல்லுவார்கள் என்பதைக் கவனியாது தைரியத்துடன் அவ் வகுப்பாரிடத்துள்ள குறைகளையும் மூடநம்பிக் கைகளையும் வெளியிட்டுத் திருத்த முயன்றது பாராட்டத் தக்கதேயாம்.

சமீபத்தில் திரு, செட்டியார் இந்தியா சட்ட சபையில் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட வேண்டுவதையும் மற்ற வித்தியாசங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தித் தீர்மானமொன்று கொண்டு வர உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அக் கமிட்டியில் திரு. செட்டியார் அவர்களும் ஒருவராயிருக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டபோது அவர் அதற்கு ஒப்புக் கொண்டு தம்மாலான வகையிலெல்லாம் அவ்வியக்கத்திற்கு உதவியளிப்பதாக வாக்களித்தார்.

திரு. செட்டியார் தம்மைக் குறித்து பிறர் என்ன சொல்லிக் கொள்ளுகின்றார்கள் என்பதைப் பொருட்படுத்தாது தம் மனசாட்சியின் படி நடப்பவர் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மாசற்ற மனத்துடன் அறிவாற்றலும் பொருந் தியவர்களுள் நம் நாட்டிலிருக்கும் பெரியார்களில் திரு. செட்டியார் முக்கியமானவர். நீங்கள் அவர் அந்நாட்டிலும் இந்நாட்டிலும் செய்துள்ள வேலைகளைப் புகழ்ந்து பாராட்டுவதைவிட அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து அதனைப் பின்பற்ற முயல்வதுதான் உசிதமாகும்.

இன்று திரு. செட்டியாரைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல இக்கூட்டத்தில் எனக்கு சந்தர்ப்பமளித்ததற்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தாருக்கு என் நன்றியறிதலையும் சந்தோஷத் தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 16.09.1928

Read more: http://viduthalai.in/page1/75746.html#ixzz2uCY2bWI6

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைப் பிரச்சாரங்கள்


சுயமரியாதைப் பிரசாரங்கள் சுயமரியாதைப் பிரச்சாரங்கள் பல இடங்களில் நடந்து வருவதாகச் செய்திகள் எட்டுகின்றன. அவற்றில் பேசுகிறவர்கள் பல மாதிரி பேசுவதாகவும் அதைக்கேட்கிறவர்கள் பல விதமாய் அர்த்தம் செய்து கொள்ளுவதாயும் சிற்சில சமயங்களில் விபரீத அர்த்தம் ஏற்பட்டு விடுவதாகவும் தெரிய வருகிறது.

அவ்விபரீதத்தை நிறுத்துவதற்காக குறைந்தது பதினைந்து நண்பர்களை தயார் செய்யும் பொருட்டு ஈரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கடுத்த திரு. வெங்கட்ட நாயக்கர் தோட்டத்திலுள்ள ஒரு கொட்டகையில் சுய மரியாதைப் பிரச்சார போதனைக் கூடம் என்பதாக ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கிறது.

அதில் ஒரு மாத காலத்திற்கு, தினமும் இரண்டு காலம் ஒவ்வொரு மணி நேரம் உபந்யாசங்களின் மூலமும், மற்றும் சம்பாஷணை, குடி அரசில் கண்ட வியாசங்கள் முதலியவை மூலமாகவும் கற்பித்துக் கொடுக்க முடிவு செய்திருக் கிறோம். காலாவதியொன்றுக்கு பதினைந்து பேர்களை சேர்த்துக் கொள்ளக்கூடும்.

அவர்களில் சௌகர்ய மில்லாதவர்களுக்கு இலவச சாப்பாடு போடப்படும். இஷ்டமுள்ளவர்கள் தெரிவித்துக் கொண்டால் ஏற்றுக் கொண்ட விஷயத்துக்கும் வர வேண் டிய விபரத்துக்கும் மற்ற நிபந்தனைகள் விபரத்துக்கும் தெரிவிக்கப்படும்.

- ஈ.வெ.ராமசாமி

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 22.07.1928

Read more: http://viduthalai.in/page1/75747.html#ixzz2uCYCOQRV

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

சமுதாயத் தொண்டில் முதலானதும் முக்கியமானது மான ஜாதியொழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் ஜாதியைக் காப்பாற்றப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்ததேயாம்.நம் நாட்டில் சமுதாயச் சீர்திருத்த வேலையோ, ஒழுக்கம் பற்றிய பிரச்சார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ ஓர் அளவுக்காவது நடக்க வேண்டுமானால் இராமாயணம் முதலில் ஒழிக்கப் படல் வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/75747.html#ixzz2uCYJgffW