Search This Blog

11.2.14

வீசுவது மோடி அலையா?

நரபலி நாயகர் மோடி அவர்கள் நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி அலைகிறார்; காலையில் இம்பால், பகலில் கவுகாத்தி - மாலையில் சென்னை (வண்டலூர்) - அடுத்தது கேரளா (கொச்சி) என்று அலையோ என்று அலைகிறார்! 

இதனைத்தான் பதவிப் பசி காரணமாக முன்பு பல வித்தைகளில் ஈடுபட்டு, பரிதாபத்திற்குரிய சிலர் மோடி அலை வீசுகிறது என்றும், மோடியின் பேச்சைப் பற்றி மோடியின் கட்சிக்காரர்களுக்கே தெரியாத உரை நயங்கள், பாஷ்யங் களை தங்கள் கட்சியின் சார்பில் வெளியிட்டு, இரண்டொரு சீட்டுப் பேரத்தை  கூடுதலாக முடிக்க கருப்புச் சால்வையை இழுத்து விட்டுக் கொண்டு ஆலாபரணகளைச் செய்கின்றனர்!

மோடி வித்தை என்பது இடத்திற்கு இடம், மாநிலத்திற்கு மாநிலம் மாறி விடுகிறது! என்னா விநோதம் பாரு!

குஜராத்தில் பட்டேல்மீது திடீர் பக்தி; நேருவுக்குப் பதில் வல்லபாய் பட்டேல் அல்லவா பிரதமராகி இருக்க வேண்டும் என்கிறார்! (அந்தக் கால கட்டத்தில் அவர் ஒன்று கருவில் இருந்திருப்பார் அல்லது மழலையாக தவழ்ந்திருப்பார்) மேற்கு வங்கம் செல்கிறார்; அங்கே மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக பிரணாப் முகர்ஜி  அல்லவா பிரதமராகியிருக்க வேண்டும் என்று வித்தை காட்டுவார்!!
தமிழ்நாட்டுக்கு வருகிறார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழுக்கு அமு தென்று பேர் என்று எழுதிச் சொல்லிக் கொடுத்ததை நன்கு கூறி தமிழ்க் காதல் கொட்டுகிறார்!

கேரளாவுக்குப் போகிறார். அங்கே தாழ்த்தப்பட்ட சமூக மக்களை, பிற்படுத் தப்பட்ட மக்களை ஈர்க்க புது வித்தையை - சமூக நீதிக் குல்லாய் போட்டு சங்கநாதம் செய்கிறார்!

இனிவரும் 10 ஆண்டுகளுக்கு தலித் துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும் தான் என்று கூறுகிறார் - ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு அழகாக இயக்குகிறது -  இந்த மோடி வித்தைக்காரரைப் பார்த்தீர்களா?

திருச்சியில் இரண்டு மாதங்களக்கு முன் வந்து முழங்கிய மோடி அப்போது கூறியது அதற்குள் நம் மக்களுக்கு மறந்து விட்டதா?

மொழி வழி மாநிலம் அப்படியெல் லாம் பிரித்து நாட்டை நாசமாக்கி விட் டார்கள்; தேசத்தைத் துண்டாடி விட்டனர் என்றார்!

தேவை தகுதி, திறமை தான் என்று கூறி இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பகிரங்க மாகவே பேசினார்.

ஆனால் கேரளத்திலோ ராகம் - வித்தை மாறிவிட்டது!

சமூகநீதிமீது திடீர்ப் பாச மழை பொழிந்து தள்ளியுள்ளார். அது சரி சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் மண்டல் குழு அறிக்கை பரிந்துரையின் ஒரு பகுதியான வேலை வாய்ப்பை அமுல்படுத்திய தற்காக மந்திரை (இராமன் கோயிலைக் காட்டி) 10 மாதங்கள்கூட நிறையாத வி.பி.சிங் ஆட்சியை ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் வடிவமான - மோடியின் கட்சியான - பா.ஜ.க. கவிழ்த்ததே - அதுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பொற் காலத்தை - 10 ஆண்டை ஒதுக்கி நடத்து வதற்கு முன்னோடித் திட்டமா?

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்ச வரம்பு எட்டு நாள்தானே!

மீடியாக்களை விலைக்கு வாங்கி - இணைய தளத்தை ஏவுகணையாக்கி, பிரச்சாரப் பெரு மழை யினால் வெற்றி பெற்று விடத் துடிக்கும் மோடி வித்தைகள் தேர்தலில் எடுபடுமா? எடுபடாது!

மதவாதத்தின் கோரப்பற்களில் சிக்கி பலியான வர்கள் நினைவும், குஜராத்தில் சிறுபான்மையினரால் சிந்தப்பட்ட பச்சை ரத்தமும் இன்னமும் காய்ந்து விட வில்லையே!

கசாப்புக் கடைக்காரர் ஒருவர் சொன் னார் ஆட்டை வெட்டியது கத்திதானே தவிர, நானல்ல என்று.  அதுபோல காந்தி கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். கூறித் தப்பிக்கப் பார்க்கிறது உஷார்! மோடி அலை அல்ல - வலை - வலை வீசுகிறார்!

----------------------- ஊசி மிளகாய்--- ”விடுதலை” 10-02-2014 இல் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/e-paper/75040.html#ixzz2sy8AEQfb

30 comments:

தமிழ் ஓவியா said...


மணமகனுக்குத் தாலிஇன்றைய நாளேடு களில் ஒரு செய்தி பர பரப்பாக வெளியிடப் பட்டுள்ளது. நீடாமங் கலம் காட்டு நாயக்கன் தெருவைச் சேர்ந்த சோமு. கல்யாணி இணையரின் மகள் கல்யாணி; சிறீரங் கம் பழனி நாயக்கன் - திலகவதி ஆகியோரின் மகன் சதீஷ் ஆகியோரின் திருமணம் நீடாமங்கலத் தில் நடைபெற்றுள்ளது.

வழக்கம்போல மாலை அணிவிக்கப்பட்டது. மணமகன் மணமகளுக் குத் தாலி கட்டினார்; இது வரை ஒன்றும் இல்லை - எங்கும் நடக்கக் கூடியது தான்; மணமகள் மணமக னுக்கும் தாலி கட்டினாரே பார்க்கலாம்; ஒரே பரப்பு சலசலப்பு! கிசு கிசு!

ஆணும், பெண்ணும் சமம் என்பதற்கு அடை யாளமே இது என்று பெற்றோர் அறிவித்தனர்.

இது வரவேற்கத்தக்க ஒன்றே! திராவிடர் கழகத் தைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதுமையல்ல; ஏற் கெனவே நடைபெற்றது தான். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மகள் சரஸ்வதி - புலவர் கண்ணப்பர் திருமணம் நடந்தது. மஞ்சுளா பாய் அம்மையார்தான் முன் னின்று ஏற்பாடு செய்தார்.

மணமகளிடம் மண மகன் கண்ணப்பனைப் பற்றி எடுத்துக் கூறினார். நல்ல பகுத்தறிவுவாதி - நம் கொள்கை வழிப்பட் டவர் என்று எல்லாம் எடுத்துக் கூறினார்.
தாலி உண்டா என்று புரட்சிக்கவிஞரின் மகள் கேட்டார். தாலி எல்லாம் உண்டு என்று மஞ்சுளா பாய் அம்மையார் கூறி னார். அப்படியென்றால் மணமகனுக்கு நானும் தாலி கட்டுவேன் - சம் மதமா என்று எதிர்க் கேள்வி போட்டார் மண மகள் சரஸ்வதி. (புரட்சிக் கவிஞர் மகள் அல்லவா!) அதன்பின் தாலியில்லா மல் அந்தத் திருமணமும் நடைபெற்றது. (23.1.1944).

கையொப்பமிட்டு அழைப்புக் கொடுத்தவர் கள் ஈ.வெ. ராமசாமி மஞ்சுமளாபாய்வைசு.

1964ஆம் ஆண்டில் மன்னார்குடி வட்டம் எடமேலையூர் பெரியார் பெருந்தொண்டர் சாம்பசிவம் அவர்களின் மகள் பானுமதி - சகோதரி யின் மகன் சவுந்தரராச னுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா தந்தை பெரியார் தலை மையில் நடைபெற்றது.

அந்த விழாவிலும் மணமகள் மணமகனுக் குத் தாலி கட்டினார். செய்யாறையடுத்த வாழ்குடை என்ற ஊரில், வி.எஸ். கிருஷ்ணசாமி என்பவருக்கு (கான்ஸ்ட புள்) திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. மணமகன் தாலியும் கட்டி விட்டார்; தாலி பெண் அடிமை என்பதற்கு அடையாளம் என்று தந்தை பெரியார் பேசினார்; தன் கழுத்தில் கட்டப்பட்ட தாலியை திடீரென்று மணமகள் கழற்றி மேசையின்மீது போட்டாரே பார்க்கலாம்.

உலகில் நடக்கும் எந்த கலாச்சாரப் புரட்சிக் கும் மேலானது - தந்தை பெரியார் தம் கருஞ் சட்டைக்காரர்களின் அன்றாடப் புரட்சிகள்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/75035.html#ixzz2sy9Sz0a2

தமிழ் ஓவியா said...


நாங்கள் இரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தியது உண்மைதான்!


ஒப்புக் கொண்டார் சிங்கள இராணுவ வீரர்!

கொழும்பு, பிப்.10- இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது ரசாயன ஆயுதங் களை பயன்படுத்தவில்லை என இலங்கை அரசு கூறி வரும் நிலையில், இலங்கை ராணு வத்தின் படைவீரரே தாங்கள் ரசாயன ஆயுதங் களை பயன் படுத்தியதாக ஒப்புக் கொண் டுள்ளார். கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி களில் லண்டனில் பிரித் தானியா தமிழர் பேரவை சார்பாக 'இலங்கையில் நடை பெறும் நில அபகரிப்பை பற்றிய சர்வதேச மாநாடு' நடைபெற்றது. இதில் மேதா பட்கர், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டெனிஸ் ஹலேடெய் உள்பட உல களவில் பல்வேறு தரப்பட் டவர்கள் கலந்து கொண் டனர். இம்மாநாட்டில், சமீ பத்தில் இலங்கை சென்று தமிழர் பகுதிகளுக்கு விஜ யம் செய்து, இலங்கைப் படையினரால் கைது செய் யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பத்திரிகையாளர் மகா. தமிழ்ப் பிரபாகரனும் கலந்து கொண்டு தனது ஆவணப் படத்தை வெளியிட்டார்.

பதற்றத்தில் இலங்கை

இந்த ஆவணப்படத் தில் இடம்பெற்றுள்ள விஷ யங்கள்தான் இப்பொழுது இலங்கைத் தரப்பை பதற் றத்துக்கு உள்ளாக்கி இருக் கிறது. 'இந்த நிலம் இராணு வத்துக்கு சொந்தமானது '(ஜிலீவீ லிணீஸீபீ ஙிமீறீஷீஸீரீ ஷீ லீமீ கிக்ஷீனீஹ்) என்ற பெயரில் ஆவணப் படத்தை வெளியிட் டுள்ளார் மகா தமிழ்ப் பிரபாகரன். இதில் வன்னிப் போரில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கண்மூடித்தனமான கொலைகள் மேலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி எண்ணில டங்கா அப்பாவி பொது மக்களை கண்மூடித்தன மாக இலங்கை இராணு வம் கொன்று குவித்ததை யும், இலங்கையின் உள் நாட்டு போர் சம்பந்தமாக வெளி யான பல்வேறு மனித உரிமை அறிக்கைகளும் ஆதாரங் களையும்,போர் முடிந்து இன்றும் இலங் கையின் வட கிழக்கு பிரதே சம் இராணுவ மயமாக்கப் பட்ட பகுதி களாக உள்ளன என்பதையும் இந்த ஆவணப் படம் எடுத்துக் காட்டியுள்ளது.

குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை

அவரின் இந்த நில அபகரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளையும், போரில் பயன்படுத்தப் பட்ட இரசாயன ஆயுதங்கள் குறித்த குற்றசாட்டையும் இலங்கை பாதுகாப்பு அமைச் சகம் மறுக்கிறது. ஆனால்,ரசாயன ஆயு தங்கள் விசயத்தை பற்றியும் ஒரு கிலோ மீட்டர் சுற்ற ளவை அழிக்கும் ரசாயன தாக்குதல் பற்றியும் போரில் பங்கேற்ற இலங்கை இரா ணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் தான் இப் படத்தில் வெளியாகியுள்ள பிரத்தி யேக பேட்டியில் குறிப்பிட் டுள்ளார். தவறுகள் உள்ள இடத் தில்தான் தடைகளும் கட் டுப்பாடுகளும் பயமும் அதிகமாக இருக்கும். அந்த தடைகளுக்கு பின்னால் உள்ள காட்சிகளையும், இன் றைய வடகிழக்கு நிலத் தின் எதார்த்தத்தையும், போரின் போது இசைப் பிரியாவை போன்று இன்னும் பிற தமிழ் பெண்கள் நிர்வாணப்படுத் தப்பட்டு படுகொலை செய் யப்பட்ட காட்சிகளையும் 'இந்த நிலம் இராணுவத் துக்கு சொந்தமானது' என்ற ஆவணப்படத்தின் மூலம் மனிதத்தையும், மனிதர் களையும் நேசிக்கும் மக்கள் முன்வைத்துள்ளார் தமிழ் பிரபாகரன். ஏற்கெனவே 'புலித் தடம் தேடி- இரத்த ஈழத் தில் 25 நாள்கள்' என்ற தொடரை எழுதி அதை அண்மையில் புத்தகமாகவும் வெளியிட் டுள்ளார் என்பது நினை விருக்கலாம்.

Read more: http://viduthalai.in/e-paper/75037.html#ixzz2sy9uU49c

தமிழ் ஓவியா said...


சிக்கன எளிய திருமணம் - கலைஞர் மன நிறைவு -சென்னை, பிப்.10- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் இல்லத்தில் எளிமையான முறையில் கலைஞர் தொலைக்காட்சி ஊழியர் தம்பிதுரை இல்லத் திருமண விழா நடைபெற்றது. கலைஞர் நடத்தி வைத்தார். சுயமரியாதை முறையி லான எளிய திருமண நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்துவதைத் தவிர்த்து நம்முடைய வீட்டிலேயே நடத்திக் கொள்கிற இந்தச் சிக்கனம் போற் றத்தக்கது - பாராட்டத்தக்கது. தந்தை பெரியார் பலமுறை இந்த முறையைப் பாராட்டியிருக்கிறார் - நானும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் கலைஞர் (9.2.2014).

Read more: http://viduthalai.in/e-paper/75038.html#ixzz2syACdAj1

தமிழ் ஓவியா said...


விபீஷணத்தனத்துக்குப் பாடம் கற்பிப்போம்!சென்னையில் பிப்ரவரி 15,16 ஆகிய நாட்களில் அகில இந்திய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) என்னும் தேசிய மாணவர் அமைப்பின் இரண்டு நாள் மாநாடு நடை பெறுகிறதாம்.

மாநாடு நடைபெறும் இடம், சென்னை - கொரட்டூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகம்; விவேகானந்தர் பெயரிலும், ஜெயகோபால் கரோடியா என்னும் பெயர்களிலும் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் எல்லாம் (இதில் தேசிய என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்) இந்த சங்பரிவார்களுக்கான கேந்திரமான இடங்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற கல்விக் கூடங்களில் காவி சமாச்சாரங்கள் தான் முக்கியமாக திணிக்கப்படும் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

நடக்கவிருக்கும் மாநாட்டில் யார் யார் எல்லாம் கலந்து கொள்கிறார்களாம்?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார். காந்தீய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் அமைப்பின் மாணவர் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனராம்.

இதன் மூலம், இவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் காண வேண்டும் என்பதுதான் நமது அன்பான வேண்டுகோள்.

கடந்த ஒரு நூற்றாண்டாக, தமிழ் மண்ணிலே பகுத்தறிவு, சுயமரியாதை, மனித சமத்துவம், சமூகநீதிக்காக ஒரு மாபெரும் தலைவர் தந்தை பெரியார் சிந்தனைகளை விதைத்து, ஓய்வறியாப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, களங்கள் பல கண்டு, தியாக நெருப்பில் குளித்தெழுந்து மிகப் பெரிய எழுச்சி, மாற்றம் தமிழ் மண்ணில் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் காரணமாக, ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களிடையே தன்மான உணர்வு - விழிப்புணர்வு ஏற்பட்டது. கல்வி வாய்ப்புக் கதவுகள் திறந்து விடப்பட்டன; வேலை வாய்ப்புக்குப் பாட்டைகள் கிடைத்தன.

தூர போ - கிட்டே வராதே என்ற உயர் ஜாதி ஆதிக்கக் குரல்களின் குரல் வளைகள் நெரிக்கப்பட்டன. பொதுச் சாலைகளும், வீதிகளும், குளங்களும் எல்லோருக்கும் பொதுவானவை; அனைவரும் புழங்கிட உரிமை உண்டு என்ற உத்தரவாதம் உண்டாக்கப்பட்டது. பேருந்துகளின் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதியில்லையென்றால், பேருந்துகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்; பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இடம் இல்லையென்றால் உதவித் தொகை நிறுத்தப்படும் என்று - இந்தியத் துணைக் கண்டத்தில் யாரும் கனவு காணாத கால கட்டத்தில் தமிழ்நாட்டில் இதற்கான மாற்றங்களுக்கான விதைகள் ஊன்றப்பட்டு, மாச்சரியங்கள் மருண்டோடச் செய்யப்பட்டு மனிதம் இங்கு தழைத்தோங்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களால் 1925இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட அதே காலத்தில்தான், இந்து மகா சபையும் இங்கு உண்டாக்கப்பட்டது. ஆனால் பெரியார் பிறந்த மண்ணில் அந்த நச்சுச் செடியால் முளைவிட முடியவில்லை.

இன்றைக்கும்கூட இந்தியாவின் வேறு சில பகுதியில் இந்தக் காவிக் கூட்டம் கால் பதித்திருந்தாலும், தமிழ் மண் ணில் எவர்கைகளாவது கிடைக்காதா? யார் கால்களாவது தட்டுப்படாதா என்று பரிதவிக்கும் பரிதாப நிலைதான்.

நமக்குள்ள வேதனையெல்லாம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்கள்கூட, இன்றைக்குப் பணம் தங்கள் கையில் சிக்கி இருக்கிறது என்பதற்காக ஏதோ ஒரு கணக்குப் போட்டு, நமது நீண்ட கால அடிமைத்தனத்துக் குக் காரணமாக இருந்த சக்திகளுக்கு நடைபாவாடை விரிக்கத் துடிக்கிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை என்னவென்று சொல்ல!

காந்தியின் பெயரால் கட்சி வைத்துக் கொண்டு இருக்கிற - அறிவு ஜீவி என்று தனக்குத்தானே முதுகைத் தட்டிக் கொள்கின்றவர்கள் எல்லாம் வருண வெறி- மதவெறிப் பிடித்த பாசிசக் கும்பலுக்குக் கைலாகு கொடுக்கிறார்கள்; காந்தியைக் கொன்ற கும்பலுக்குப் பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கிறார்கள். என்றால் - எத்தகைய கேவலம், அவமானம்!

எனக்குள்ள கவலையெல்லாம் தமிழர்களுள் விபீஷணர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே என்று சொன்னாரே தந்தை பெரியார் - அது தான் நினைவிற்கு வருகிறது. தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்கை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். நடக்க இருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் காவிக் கூட்டத்தை மண்மூடிப் போகச் செய்வதோடு - அந்தக் கூட்டத்துக்குத் தமிழ் மண்ணில் நடை பாவாடை விரிக்கும் வீடணர்களுக்கும் சரியான பாடத்தையும் கற்பிக்க வேண்டும்; தந்தை பெரியார் அவர்களால் பயன் பெற்ற - பக்குவம் பெற்ற நம் தமிழ்நாட்டு மக்கள் அதனைச் செம்மையாக செய்வார்கள் என்பதில் அய்யமில்லை வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/75024.html#ixzz2syARcQyn

தமிழ் ஓவியா said...


திருக்குறள்


நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும். - (விடுதலை,3.10.1958)

Read more: http://viduthalai.in/page-2/75021.html#ixzz2syAr7S9z

தமிழ் ஓவியா said...

கிராம அதிகாரப் பகிர்வு நடைமுறையில் யாருக்குப் பயன்படுகிறது?


ஜனவரி 30, 2014 அன்று காந்தியாரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் நாட்டின் அர சியல் அதிகாரத்தில் இருப் போரின் நடவடிக்கைகள் நாட்டின் தந்தை மகாத்மா காந்தி என்பதை மறந்து வருகின்ற நிலைமைகளை தெரிவிப்பதாக அமைந்து விட்டன. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆளுநர் கலந்துகொண்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் அந்த மாநில அரசின் ஒரு அமைச்சர் கூட கலந்து கொள்ளவில்லை. மும்பாய் மாநகர மேயர் சுனில் பிரபு தேசத் தந்தையின் நினைவுநாள் நிகழ்ச்சியி னையே மறந்துவிட்டார். தமக்கு நினைவூட்டவில்லை என அதிகாரிகள் மீது பழி போட்டுவிட்டார். இந்த நிலை வியப்பினை அளிக்கத் தக்கதாக இல்லை என்பதை அண்மையில் ஒரு செய்தி ஊடகம் பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்புப் பணியின் முடிவுகள் முன் னமே தெரிவித்துவிட்டன. நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர் கள் சோனியா காந்தியை மகாத்மா காந்தியின் உறவி னர் எனக் கருதுவதாக அந்த ஆய்வின் முடிவு கூறுகிறது.

காந்தியாரின் போதனை கள் பலரை ஊக்குவிப்ப தாகத் தோன்றுகிறது! ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் காந்தி குல்லாவை அணிவதன் மூலம் காந்தியாரின் தத்து வத்திற்கு தம்மை சொந்த மானவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். அதிகாரப் பங்கீட்டை வலியுறுத்துவ தன் மூலம் காந்தியாரின் கிராம சுயராஜ்யத்தை நிறை வேற்ற முயல்வதாகக் கூறு கின்றனர்.

ஆனால் அவர்கள் காந்தி யாரின் நிழல் ஆதிக்கத்தில் வாழ்ந்த மற்றொரு பேரு ருவாகத் திகந்த தலைவர், காந்தியாரின் தத்துவப் போதாமையை தம் மறை விற்கு பின்னர் வெளிப்படுத் திக் காட்டிய வலிமையினை அக்கட்சியினர் கருத்தில் கொள்ள வேண்டும். ஆம் தலித் மக்களின் தலைவராகக் கருதப்பட்ட டாக்டர் பீம ராவ் அம்பேத்கர் ஆவார் அவர்.

காந்தியாரின் கொள்கை

கிராம நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் காந்தி யாரின் கொள்கைகளும், அம் பேத்கரின் கொள்கைகளும் எதிரானவை. மய்ய அரசு தம்மிடம் குறைந்த அதிகா ரத்தை வைத்துக் கொண்டு, பெரும்பான்மை அதிகாரங் களை கிராம சபையிடம் அளித்துவிட வேண்டும்; கிராமத் தலைவர் ஆட்சி செலுத்தும் பழைமைவாத அடிப்படை நிலவிட வேண் டும் என்று காந்தியார் விரும் பினார். ஆனால் அம்பேத் கரோ கிராமங்கள் மற்றும் அதன் நிர்வாகத் தலைமை யினர், கொடுங்கோன்மை, ஜாதி பாகுபாடு, வகுப்பு பேதம் ஆகியவற்றின் ஊற் றுக் கண்ணாய் திகழ்ந்து வரு கிறார்கள் எனக் கருதினார். மனித நேயத்திற்குப் புறம் பாக நடந்து கொள்ளும் ஆதிக்க மனப்பான்மையி னரிடம், மனித உரிமைகள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் எனக் கேள்வி கேட் டார். ஒரு முறை பம்பாய் மாநில சட்ட மேலவையில், கிராமத் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளித்திட வல்ல. மசோதா விவாதத் திற்கு வந்த பொழுது அம் பேத்கார் கூறியது நினைவூட் டத்தக்கது:

ஜாதியக் கட்டுப்பாட் டுக்குள் உள்ள மக்கள் பகுதி யினர் - பழைமைவாத ஆதிக்க மனப்பான்மை கொண்ட மக்கட் பிரிவு - சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரான ஒரு பிரிவினர் - சமூக தளத்தில் பிறப்பின் அடிப்படையி லான வேறுபாட்டை வலி யுறுத்தும் வகையினர் - மக்களில் ஒரு பகுதியினர் உயர்ந்தவர்கள், பிறர் தாழ்ந் தவர்கள் எனும் கருத்தைக் கடைப்பிடிப்போர் - இவர் களிடம் நியாயமான வகை யில் நீதியை எதிர்பார்க்க இயலுமா? கிராமத் தலை மைக்கு ஆட்சி அதிகாரப் பகிர்வை நான் வன்மையா கக் கண்டிருக்கிறேன். அப் படிப்பட்டவர்களிடம் எமது வாழ்வு, விடுதலை, எங்கள் உடமைகளை அடகு வைத் திட நாங்கள் தயாராக இல்லை.

தமிழ் ஓவியா said...

டாக்டர் அம்பேத்கரின் ஆய்ந்த முடிவுகள் 80 ஆண்டு களைக் கடந்த வேளையில் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அரசமைப்புச் சட்ட அரவ ணைப்புப் பிரிவுகள், இதர சட்டப் பிரிவுகள், அரசியல் பிரகடனங்கள் உள்ள நடப்பு வேளையிலும் பலமாகவே ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கிராமத்தை நோக்கிய அதிகா ரப் பகிர்வு, சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவதாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் - முசாபர் நகரில் கொத்தாக முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட நிலைமை நிகழ்ந்துள்ளது. ஒரு முஸ்லிம் ஆண், ஒரு இந்துப் பெண்ணை விரும்பிய நிகழ்வு, வெறுப் பினை ஊட்டும் ஜாட் மகா சபைப் பேச்சால் கொலை நடைபெறும் அளவிற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.

பஞ்சாப் மற்றும் ஹரி யானா மாநிலத்தில் உள்ள கப் பஞ்சாயத்து (ரிலீணீஜீ ஜீணீஸீநீலீணீஹ்ணீ) நில உடைமை, கால்நடை உடமை பற்றிய விசாரணை, மணமுடித்தல் முதல் மனிதக் கொலை உள்ளடக்கிய விசா ரணை செய்து, தீர்ப்பு அளிக் கின்ற நீதிமன்றங்கள் போல செயல்பட்டு வருகின்றன. மனித உரிமை பற்றிய ஒவ் வொரு சட்ட விதியையும் அவை உடைத்தெறிந்து வரு கின்றன. பெண்கள் நாகரிக மாக உடையணிவதைக் கூட தடுக்கவல்ல தீர்ப்பினை வழங்குகின்றன. செல்பேசி பயன்பாட்டைத் தடுப்பது. குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பது, இளம் தம்பதி யரை, மரியாதைக் கொலை என்பதன் பேரால் முடிவு கட்டுவது என மனித உரிமை மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இப்படிப்பட்ட கொலைகள் மணம் புரிந்த ஆணும் பெண்ணும் வெவ் வேறு ஜாதியினைச் சார்ந்த வர்களாக இருக்கும் பொழுது நடைபெறுகின்றன. மேலும் மணம் புரிந்த இணையர் ஒரே கோத்திரத்தைச் சார்ந்த வர்களாக இருந்தாலும் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்திலும்...

இப்படிப்பட்ட அவல, காட்டுமிராண்டித்தனமான நிகழ்வுகள் நாட்டின் வடக் குப் பகுதியில் மட்டும் நிக ழுவதாக கருதிவிடமுடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தின் 20 வயதுப் பெண்ணை, 13 ஆண்கள், சேர்ந்து பாலியல் வன்முறை செய்திட கிராம சபையினர் தண்டனை விதித் தனர். அந்தப் பெண் செய்த தவறு (?), வேறு ஜாதியைச் சார்ந்த ஆணை விரும்பியதே!

அரியானா மாநிலத்தை விட முற்போக்கு மாநிலமா கக் கருதப்படும் தமிழ்நாட்டி லும் தவறு நடக்காமல் இல்லை. ஒரு தலித் ஆண், வன்னியர் சமுதாயப் பெண் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்ட தால் 268 தலித் குடும்பத்தினர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட் டன. வன்னியர் சமுதாய, டாக்டர் ராமதாஸ் காதல் திருமணத்தை கடுமையாகத் தாக்கி, தலித் ஆண்கள், வன் னியர் சமுதாயப் பெண்களை மயக்கிக் காதல் வயப்படுத்தி, பின்னர் அவர்களை கைவிட்டு விடுவதாகக் கூறுகிறார். தமிழ் மக்களுக்கு எதிராக ஜாதி இந்துக்களின் கூட்டணி யினை அவர் கோருகிறார். ஜாதி மறுப்புத் திருமணத்தை தடை செய்திடவும், தலித் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்களையும் வேண்டு கிறார்.

இத்தகைய நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெற்ற தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல. தலித் மக்களுக்காக ஒதுக்கப் பட்ட சில ஊராட்சி மன்றங் களில் தலைவருக்கான தேர்த லில் வேட்பு மனு தாக்கல் செய்திட ஒரு தலித் கூட முன் வரவில்லை. காரணம் ஆதிக்க ஜாதியினரின் அச்சுறுத்தலால் தலித் யாரும் முன்வரவில்லை.

உலக வங்கி மேற்கொண்ட ஒரு ஆய்வின், முடிவு - உல கில் அனைத்து நாடுகளிலும், கிராமங்களை விட அதிகாரம் கொண்ட மய்ய அரசுகள், முற்போக்கு மதசார்பின்மை கொண்டவைகளாக உள் ளன. அம்பேத்கர் குறிப்பிட்ட கட்டுப் பெட்டியான கிராமம் இன்னும் உலக உண்மையா கவே உள்ளது.

இப்படிப்பட்ட சூழலி லும், பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரம் வழங்கிட வும், நீதிக் கொள்கை வகுத் திடவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட போக்குகள் கிராம அளவில் மக்களைப் பாகுபடுத்திப் பார்க்கும் போக்கினைப் பேணுவதாகவே அமையும். கிராமப் பஞ்சாயத்துகளில் ஒரு சிலவற்றை மட்டும் தலித் மக்களுக்காக, பெண் களுக்காக ஒதுக்கிவிடுதால் மட்டும் நியாயமான பலன், நீதி கிடைத்து விடுவதில்லை.

அறிவார்ந்த பார்ப்பனர் கள், கிராம பஞ்சாயத்துகளில் நிலவி வரும் மக்களைப் பாகுபடுத்திப் பார்க்கும் நிலைமையினை நீக்கி விடுவார்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் நினைக்கின்றனர். இது நகைப்பிற்கு இடமானது. காந்திக் குல்லாயை அவர்கள் போட்டுக் கொள்ளட்டும்; அருள் கூர்ந்து அம்பேத்கரை யும் அவர்கள் செவி மடுத்திட வேண்டும்.

ஆதாரம்: சுவாமினோமிக்ஸ்
தி டைம்ஸ் ஆப் இந்தியா - 9.2.2014

மொழியாக்கம்: வீ.குமரேசன்

Read more: http://viduthalai.in/page-4/75001.html#ixzz2syBhXQLp

தமிழ் ஓவியா said...


ஆந்திரா - போரவரிப்பாலம் கிராமத்தில் தமிழர் தலைவர்: செய்தியாளர்கள் சந்திப்பு


ரேபல்லியில் பாராட்டு விழா நிகழ்ச்சியில் பங் கேற்ற பின்னர், சமூக நீதி மன் றத்தின் மதிப்புறு தலைவர் கேச சங்கர்ராவ் அவர்கள் தமது கிராமமான போர வரிப்பாலத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவரை அழைத்துச் சென்றார். ஒடுக்கப்பட்ட வகுப்பினரான, மரத்திலி ருந்து கள் இறக்கும் மக்கள், பெரும்பான்மையினராக வாழும் சிற்றூர் அது.

அங்கு தமிழர் தலைவ ரின் செய்தியாளர்கள் சந்திப் புக்கு ஏற்பாடு செய்திருந் தனர். செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் தெரி வித்தவைகளின் சுருக்கம்:

நீதித் துறையின் உயர் மட்ட நீதிபதிகள் நியமனத் தில் நியாயமான, சமூக நீதி யினை நிலைநாட்டும் வகை யில் தெரிவுகள் நடைபெற வேண்டும். நாடு விடுதலை பெற்று 66 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் தற்சமயம் உச்சநீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகளில் தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் கூட இல்லை என்பது சமூகநீதிக்கு ஏற் பட்ட அவல நிலையாகும். 66 ஆண்டுகள் கழித்துத்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சார்ந்தவர் இந்தியா வின் தலைமை நீதிபதியாக வர முடிந்துள்ளது. உயர்நீதி மன்ற, உச்சநீதிமன்ற நீதிபதி கள் நியமனத்தில் பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற் றும் பழங்குடி வகுப்பின ருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. பெண் கள் நீதிபதிகளாக நியமனம் பெறுவதிலும், உயர்ஜாதி மகளிருக்கே அத்தகைய பதவிகள் அளிக்கப்படுகின் றன.

சமூகநீதி என்பது கொடை அல்ல; ஒடுக்கப் பட்ட மக்களின் அடிப்படை உரிமையாகும். உச்சநீதிமன் றம் மற்றும் உயர் நீதிமன்றங் களில் நீதிபதி பதவிகள் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு உரிய அளவில் இடம் கிடைத் திடும் வகையில் வலிமை யான சமூகநீதி இயக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்து கட்சிகளி லும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் ஒருங் கிணைந்து போராட முன் வரவேண்டும்.

அண்மையில் காங் கிரசு இயக்கத்தின் தலைவர் சோனியா காந்தி அவர்கள் இடஒதுக்கீட்டு நடை முறைக்கு பொருளாதார அளவுகோல் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது; ஜாதி அடிப்படையில் வழங் கப்படும் தற்போதைய நிலை மையே நீடிக்கும் என உறுதி செய்துள்ளதை வரவேற்கி றோம். காரணம், இந்நாட்டில் இன்னமும் ஜாதி அமைப்பு முறை நீங்கியபாடில்லை என்பதே அது. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங் களில் மட்டுமே நடை முறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீடு, தனியார் துறையி லும் கடைப்பிடிக்கப்பட போராட வேண்டும், தனியார் மயமாக்கப்படும் சூழலில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க் கப்படுகின்றன. எடுத்துக்காட் டாக, அரசு வசம் இருக்கும் விமான நிலைய மேலாண் மைப் பொறுப்பு தனியாருக் குச் சென்றிடும் நிலை உரு வாகி உள்ளது.

வரி விதிப்பில் புதி தாக உணவு தானிய விற்ப னையில் அரிசிக்கு சேவை வரி விதிப்பிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரிசி உணவு உட்கொள்ளும், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடகா, மாநில மக்களைப் பெரிதும் பாதிக் கும் வரி விதிப்பாகும் இது. உணவு பழக்கவழக்கப் பண் பாட்டில், ஒரு சாராரை மட் டும் (அரிசி உணவு உண்பவர் கள்) பாகுபடுத்தி அவர்க ளுக்கு வரிப்பளுவைக் கூட் டிட வல்ல மய்ய அரசின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

- மேற்கண்டவாறு தமிழர் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-4/74999.html#ixzz2syBsPPjf

தமிழ் ஓவியா said...


ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிக்குப் பாராட்டு விழா!


இட ஒதுக்கீட்டின் முழுமையான நடைமுறைக்கு, ஒடுக்கப்பட்ட மக்களிடம் சமூகநீதி - விழிப்புணர்வு நிலவிட வேண்டும்!

ஆந்திரா - சமூகநீதி மன்றம் நடத்திய விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்றுப் பேருரை!

தமிழர் தலைவர் கி.வீரமணி நீதியரசர் ஆசபு ராமலிங் கேஸ்வர ராவ் அவர்களுக்கு பெரியாரின் சிந்தனை கள் நூலினை வழங்குகிறார் (ரேபல்லி - 8.2.2014)

ஆந்திரா, பிப். 10- ஆந்திர மாநிலம் - குண்டூர் மாவட் டம் பேரபல்லியில், 8.2.2014 அன்று சமூகநீதி மன்றத்தின் சார்பாக ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி நீதியர சர் ஆசபு ராமலிங்கேஸ்வர ராவ் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமனம் பெற்றதற்கு வாழ்த் தும் நிகழ்வாக நடைபெற்ற பாராட்டு விழாவில் திராவி டர் கழகத் தலைவர் மற்றும் அனைத்திந்திய சமூகநீதிக் கான வழக்கறிஞர் மன்றத் தின் தலைவருமான தமிழர் தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

ஆந்திர சமூகநீதிமன்றத்தினர்,நீதியரசர் ஆசபு ராமலிங்கேஸ்வர ராவ் அவர்களுக்கு நடத்திய பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார். மேடையில் நீதியரசர் இணையர், சமூகநீதிமன்ற மதிப்புறு தலைவர் கேசன சங்கர்ராவ், உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் அன்னம் சுப்பாராவ், ஜி.எஸ்.மணி, முதுநிலை வழக்குரைஞர் கேசன ராமசாமி, லக்னோ - ஆராயுதலா சத்யநாராயண ராஜூ யாதவ், வழக்குரைஞர் ராம கோட்டீஸ்வர ராவ் மற்றும் பலர் உள்ளனர்.

தமிழர் தலைவருடன் திராவிடர் கழக வழக்கறிஞர் அணித் தலைவர் த.வீரசேக ரன், பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன், தோழர்கள் சிவக்குமார் மற்றும் வெற்றி ஆகியோர் சென்றிருந்தனர்.

ரேபல்லியில் உள்ள லட் சுமி நிகழ்வரங்கத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய பாராட்டு விழாவிற்கு சமூக நீதி மன்றத்தின் மதிப்புறு தலைவர் கேசன சங்கர ராவ் தலைமை வகித்தார்.


தமிழ் ஓவியா said...

அன்னம் சுப்பாராவ் (உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் செயலா ளர் சமூகநீதிக்கான வழக்கறி ஞர் மன்றம்), ஜி.எஸ்.மணி (உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் தலைவர், அனைத் திந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின இளைஞர் வழக்க றிஞர் சங்கம்), ஆராயுதியுலா சத்தியநாராயண ராஜூ யாதவ் (தேசிய பொதுச்செயலாளர் மற்றும் அனைத்திந்திய சோச லிஸ்டுகள் கூட்டமைப்பு, லக்னோ), கேசன ராமசாமி (முதுநிலை வழக்கறிஞர்) ஆகியோர் பாராட்டு விழா வில் பங்கேற்று நீதியரசரை வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கி ணைத்து, ராம கோட்டீஸ்வர ராவ் (ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற் றும் தலைவர், சமூகநீதி மன் றம்) சிறப்பாக பாராட்டு விழாவினை நடத்தினார்.

தமிழர் தலைவருக்கு வரவேற்பு

பாராட்டு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலை வரை, விழா அரங்கத்திற்கு சற்று தூரத்திற்கு முன்பா கவே, சமூகநீதி மன்ற மதிப் புறு தலைவர் கேசன சங்கர் ராவ் வரவேற்றார். மேள தாளத்துடன் அவ்வூர் வழக் கப்படி மலர் தூவி தமிழர் தலைவரை அரங்கத்திற்கு அழைத்துச் சென்றனர். அரங் கத்திற்குள் நுழைந்ததும் அரங் கத்தில் அமர்ந்திருந்தோர் அனைவரும் எழுந்துநின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சி யினை, மரியாதையினையும் வெளிப்படுத்தினர்.

உயர்நீதிமன்ற நீதியரசருக்குப் பாராட்டு

ஆந்திர பிரதேச உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக நீண்ட காலமாக சட்டத் தொழில் புரிந்து அண்மை யில் அந்த உயர்நீதிமன்றத் தின் கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்ற நீதியரசர் ஆசபு ராமலிங்கேஸ்வர ராவ் அவர் களுக்கு சமூகநீதிமன்றத்தின் சார்பாக வாழ்த்து, பாராட்டு அளிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் , தமிழர் தலைவர் கி.வீரமணி மன்றத்தின் சார் பாக மாலை அணிவித்து பாராட்டுப் பத்திரத்தினை நீதியரசர் இணையருக்கு வழங் கினார். சமூகநீதி மன்றத்தின் பொறுப்பாளர்கள், ஆர்வலர் கள், வழக்குரைஞர்கள் பலரும் நீதியரசருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

தமிழர் தலைவர் பாராட்டி வாழ்த்துரை

நீதியரசரைப் பாராட்டி தமதுரையில் தமிழர் தலை வர் கி.வீரமணி குறிப்பிட்ட தாவது:

பல்வேறு தடைகளை - ரயில் வண்டி வருகையில் தாமதம், வரும் வழியில் பொதுப் பிரச்சினைக்காக பயணச் சாலை மறியல், பயணச்சாலை பழுதுபட்ட நிலையில் மாற்றுப் பாதை யில் பயணம் - ஆகியவற் றைத் தாண்டி இந்தப் பாராட்டு விழாவிற்கு வந்திட மிகவும் காலதாமதம் ஆகி விட்டது. அனைவரும் பொறுத் தருள வேண்டுகிறோம்.

நீதியரசரைப் பாராட்டி நடைபெறும் விழாவில் பங் கேற்றிடவே பல்வேறு தடை களைத் தாண்டி வரநேர்ந்தது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்த வழக்கறிஞர் இன்று உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்ந்திட எத்தனை தடை களைத் தாண்டி வந்திருக்க வேண்டும்? சமூகநீதித் தளத் தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெ டுக்க, இந்திய அரசமைப்புச் சட்டம் சில வழிமுறைகளை வழங்கியுள்ளது.

வழங்கப் பட்ட விதிமுறைகள் உரிய முறையில். உரிய அளவில் நடைமுறைப்படுத்தப்படு கின்றனவா என்பதை விழிப் புடன் இருந்து கவனிக்க வேண்டியுள்ளது (Eternal vigilance is essential to safeguard, effective dispensation of Social Justice). சமூகநீதித் தளத்தில் அரச மைப்புச் சட்ட விதிமுறை யில் வழங்கப்பட்ட வழி முறைகள் நடைமுறை வடி வம் பெறாத நிலைமையே உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியம னத்தில் நிலவுகிறது.

அடக் கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து சட்டக் கல்வி பெற்று தகுதி வாய்ந்த வழக்குரைஞர் உள்ள நிலை யிலும் உயர்மட்ட நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு என்பது இது நாள் வரையில் இல்லை. நீதிபதிகளைத் தெரிவு செய்யும் அவை (collegium), உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி களாகப் பதவி பெறுவதற்கு பரிந்துரை செய்கிறது.

ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஆசபு ராமலிங்கேஸ்வர ராவ் ஏற்புரை ஆற்றுகிறார் (ரேபல்லி - 8.2.2014)

இந்த முறையினால் ஒடுக்கப்ட்ட சமுதாயத்தினைச் சார்ந்தவர் களுக்கு உரிய அளவு பதவி அளிக்கப்படுவதில்லை. மொத்த மக்கள் தொகையில் 22 விழுக்காடு உள்ள தாழ்த் தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பின சமுதாயத்திலி ருந்து ஒருவர் கூட இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பதவியில் இல்லை என்பது, இந்தியநாடு அரசியல் விடு தலை பெற்று 66 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் நீடிக்கிறது. 66 ஆண்டுகால விடுதலை பெற்ற நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தினரைச் சார்ந்தவர் இப் பொழுதுதான் உச்சநீதிமன் றத்தின் தலைமை நீதிபதியாக வரமுடிந்துள்ளது.

பாராட்டு விழாவில் பங்கேற்ற மக்கள் திரள் (ரேபல்லி - 8.2.2014)

தமிழ் ஓவியா said...

சமூகநீதித் தத்துவப் பயணம், நீதித்துறையில் எவ்வளவு பின் தங்கி உள்ளது என்பது கண்கூடு. இந்நிலை யில் உயர்மட்ட நீதிபதிகளின் நியமனத்திலும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங் குடி வகுப்பின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கடைப் பிடிக்கப்பட வேண்டும் . நீதிபதிகள் நியமன அவை (collegium) என்பதை நீக்கி நீதிபதிகள் தேர்வாணையம் (Judicial Appointment Commission) அமைக்கப்பட வேண்டும்.

இத்தகைய வேண்டு கோளை சமூகநீதி இயக்கங் களின் சார்பாக பல ஆண்டு களாக வலியுறுத்தி வருகி றோம். இன்னும் முழுமை யான வெற்றி கிட்டவில்லை. அண்மையில் சென்னை உயர்நீதிமன்றதிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிந்துரைப் பட்டியலில், சமூகநீதித் தத்துவம் கருத்தில் கொள்ளப்படவில்லை எனும் வழக்குரைஞர்கள் போராட் டத்திற்கு உரிய கவனம் செலுத்தப்படும் என உறுதி யளிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விழிப்புணர்வால் வெளிப் பட்டவையே இத்தகைய போராட்டங்கள் ஆகும்.

1980 களில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு மய்ய அரசு மற்றும் நிறுவனங் களில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை நடை முறைக்கு கொண்டு வந்தார், அன்றைய பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங். இதனால் அரசு அதிகார மட்டத்தின் உயர்நிலைப் பதவிகளுக் கான அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் தேர்வுகளில் பிற்படுத்தப் பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டு வழியில் நுழைய முடிந்தது.

அரசு அதிகாரத்தில் உயர் நிலைப் பதவிகளுக்கு பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் வர முடிந்தது. ஜனநாயகம் என்பது வெறும் அதிகார மாற்றம் மட்டுமல்ல, அதி காரப்படுத்தலை, சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பரவலாக்குவதும் தான் (Democracy is our mere transfer of power but is transformation of power) இட ஒதுக்கீட்டு வழி முறைகள் முழுமையாக்கப் படுவதில் தமிழ்நாடு குறிப் பிடத்தக்க விழிப்புணர்வுடன் உள்ளது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் நாட்டி லேயே கூடுதலான அளவாக (ஒடுக்கப்பட்ட மக்கள் தொகையினை ஒப்பிடுகை யில் குறைந்த அளவே) 69 விழுக்காடு உள்ளது.

தமிழ் ஓவியா said...

இட ஒதுக்கீட்டின் நடைமுறை யானது அரசு ஆணைகளின் மூலம் உள்ள நிலையில், இட ஒதுக்கீட்டிற்காக - 69 விழுக் காடு அளவு இட ஒதுக்கீட் டிற்காக முதன் முதலாக தனிச்சட்டம் உருவாக்கப்பட் டது தமிழ்நாட்டில் மட்டுமே!

அரசமைப்புச் சட்ட விதி களுக்கு புறம்பாக இடஒதுக் கீட்டில் பொருளாதார அளவு கோலை அன்றைய எம்.ஜி. ஆர் ஆட்சி கொண்டு வந்த நிலையில், மக்கள் மன்றத் தில் அதன் பாதகங்களை விளக்கியதால் தோல்வியைக் காணாத எம்.ஜி.ஆர் அவர்கள் அப்பொழுது நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழ் நாட்டுத் தொகுதிகளான 39-ல் 37 தொகுதிகளில் தோல்வி அடைந்த நிலை உருவானது. தோல்வி கண்டபின் இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை வலியுறுத் தும் மாநில அரசின் ஆணை யினை எம்.ஜி.ஆர் திரும்பப் பெற உத்தரவிட்டர்.

தொடர்ந்து விழிப்புணர் வுடன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையினை நடை முறைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அண்மையில் தமிழக அரசு பல்நோக்கு மருத்துவ மனைக்கான மருத்துவர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு கிடையாது எனும் விளம்பர அறிவிப்பை வெளியிட்டது.

உடனே பெரியார் இயக்கத் தின் மய்ய அமைப்பான திராவிடர் கழகம் அதனைக் கண்டித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைக் கூட்டி, அனைத்துக் கட்சி மாநாட் டினை நடத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது அதன் விளைவாக இன்று ஒடுக் கப்பட்ட வகுப்பினரும் தெரிவுசெய்யப்பட்ட மருத்து வர்களில் இடம் பிடித்த நிலைமைகள் உருவாகின. ஆசிரியர் தேர்விலும், ஒடுக் கப்பட்ட மக்களுக்கு மறுக் கப்பட்ட தகுதி மதிப்பெண் சலுகையும் வழங்கப்பட் டது.

இதனால் ஒடுக்கப்பட்ட மக்களில் பலர் பணி பெறும் நிலை உருவாகி உள்ளது. சமூகநீதித் தளத்தில் விழிப் புணர்வுடன் இருந்ததால் கிடைத்த வெற்றி விளைச் சல்கள் இவை. அனைத்து மாநிலங்களிலும், மய்ய அரசினரிடமும் இத்தகைய விழிப்புணர்வுக் கண்காணிப் பினை இட ஒதுக்கீட்டு நடைமுறையில் கடைப் பிடித்திடல் வேண்டும்.

தமிழ் ஓவியா said...

ஆந்திர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவர்கள் தொடங்கி வைத்த சமூகநீதி இயக்கங் கள், அண்மையில் மறைந்த நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி அவர்களின் சமூகநீதிக்கான தொண்டு ஆகியவற்றின் காரணமாக வழக்கறிஞர் மத்தியில் சமூக நீதி உணர் வுகள் உறுதிப்பட்டுள்ளன. அதன் விளைவே இன்று பாராட்டப்படும் நீதியரசர் ஆசபு ராமலிங்ககேஸ்வர ராவ் அவர்கள் ஆந்திர பிர தேச உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நிதிபதியாக பதவி ஏற்றுள்ள நிலை.

இட ஒதுக் கீட்டிற்கு இந்திய அரசமைப் புச் சட்டம் வழங்கியுள்ள விதிமுறைகள் சரியான முறை யில், அளவில் நடைமுறைப் படுத்தப்படுவதில் நீதியர சரைப் போன்றவர்கள் தங் கள் கடமையினை ஆற்றிட வேண்டும். உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி நீதியரசர் சின்னப்ப ரெட்டி அவர்கள் வழங்கிய ஏகலைவர், துரோணாச்சாரி யர் காலம் முடிந்துவிட்டது (The days of Ekalaiva & Duronacharya are over) எனும் பதிவுகள் பலப்படுத்தப் படல் வேண்டும். சமூக நீதிக் கொள்கைகளில் தெளிவு, விழிப்புணர்வை பெருக்கிட வேண்டும்.

இன்று பாராட்டப்படும் நீதியரசர் மேலும் பல உயர் நிலைகளுக்கு சென்றடைய வேண்டும்; சமூக நீதி உணர்வுகள் பேணிப் பாது காக்கப்படவேண்டும் என வாழ்த்தி, இந்த கொள்கை உணர்வுடன் கூடிய பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்த சமூகநீதி மன்றத்தினர்க்கு வாழ்த்துகளையும் நன்றியி னையும் தெரிவித்துக் கொள் கிறேன்.

- இவ்வாறு தமிழர் தலை வர் தமது உரையில் குறிப் பிட்டார்.

தமிழர் தலைவரின் ஆங்கில மொழி உரையினை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அன்னம் சுப்பாராவ், தெலுங் கில் மொழி மாற்றம் செய்து கூறினார்.

நீதியரசர் ஏற்புரை

சமூகநீதி மன்றம் நடத்திய பாராட்டுவிழாவின் நாயகர் ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஆசபு ராமலிங்கேஸ் வர ராவ் தமது ஏற்புரையில் குறிப்பிட்டதாவது:-

நான் கடந்த இருபது ஆண்டுகளாக பெரியார் இயக் கத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களின் சமூக நீதி பற்றிய விளக்கங்களை நேரடியாகக் கேட்டு வழக்கறிஞர் பணி ஆற்றி வந்துள்ளேன்.

காலம் சென்ற நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி அவர்கள் ஏற்பாடு செய்த பல கூட்டங்களில் தலைவர் கி.வீரமணி அவர் களின் அறிவார்ந்த, சட்ட விளக்கம் நிறைந்த உரை யினை செவிமடுத்தவர் பல ருள் நானும் ஒருவன். சமூக நீதி உணர்வுகள் தழைத்ததால் நான் இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளேன். அத்தகைய சூழலை உருவாக்கிய சமூக நீதி முன்னோடிகளை நன்றி யுடன் நினைத்துப் பார்க் கிறேன்.

இந்தப் பாராட்டு நிகழ் வினை எனது வாழ்வின் அரு மையான, பெருமையான நிகழ்வாகக் கருதுகிறேன். சமூக நீதித் தலைவர் கி.வீர மணி அவர்களின் பாராட்டு, ஆசி என்பது எனது வாழ்வில் பெருமைக்கு உரிய நிகழ் வாகும். தலைவர் கி.வீரமணி போன்ற முன்னோடி சமூக நீதித் தலைவர்கள் உருவாக் கிக் கொடுத்த உணர்வுகளு டன் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துவனவற்றை எனது கடமையாக செய்து முடிப்பேன். இந்த பாராட்டு நிகழ்வினை ஏற்பாடு செய் திட்ட அனைத்துத் தரப்பு பெருமக்களும் எனது நன்றி யினைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

(பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் மற்றும் நீதியரசர் ஆற்றிய உரைகள் பின்னர் முழுமையாக வெளி வரும்).

Read more: http://viduthalai.in/page-8/75042.html#ixzz2syCjpW5d

தமிழ் ஓவியா said...


நோய்களை தகர்க்கும் முருங்கை

இன்றைய சூழ்நிலையில் நோய் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்கிற நிலை உள்ளது. உணவு, தண்ணீர், காற்று போன்றவைகளால் ஏராளமான நோய்கள் உருவாகி மக்களை தாக்குகின்றன. பாதுகாப்பற்ற தண்ணீர், மாசு படிந்த காற்று ஆகியவற்றாலும் நோய் வேகமாக பரவுகிறது. இவற்றை தடுக்க மனிதர்கள் அனைவரும் முயன்றால் மட்டுமே முடியும்.

இது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. என்றாலும் நோயின் தாக்கத்தை தாங்கிக் கொள்ளும் வகையில் கீரை, பழங்கள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை ஆகும். அந்த வகையில் முருங்கை கீரையை சாப்பிடலாம். இது ரசாயன உரம் இன்றி வீடுகளில் கூட தண்ணீர் இருந்தால் மிக வேகமாக வளர்ந்து நமக்கு பயன் தரக்கூடியதாகும். இதன் பயன்கள் அளவிட முடியாத வகையில் உள்ளது.

முருங்கை கீரை, காய், பூ என அனைத்தும் பெரும் பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடியவை. அதிக சத்து நிறைந்தவை. திருமண விருந்தை மணமாக்க கூடியவை முருங்கைக்காய். முருங்கை கீரை, பூ, காய், விதை, வேர், பட்டை என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை ஆகும். இவற்றில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைய உள்ளன. இருமல், தொண்டைக் கம்மல் ஏற்பட்டால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இவற்றை போக்க முருங்கை இலையை சாறு பிழிந்து எடுத்து அதில் சிறிது சுண்ணாம்பு, தேன் ஆகியவற்றை நன்றாக குழைத்து தொண்டைக் குழியின் மேல் தடவினால் இருமல், தொண்டைக்கம்மல் நீங்கும்.

கெட்டநீர் வெளியேற முருங்கை இலையின் காம்புகளை எடுத்து அதனை நன்றாக இடித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த கஷாயத்தை காலை மாலை என 2 வேளையும் 3 அவுன்ஸ் குடித்து வந்தால் உடலில் சேர்ந்துள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் நலமாகும்.

உடம்பில் வாயுத்தொல்லை அதிகமாகிவிட்டால் தொந்தரவுகள் உண்டாகும். முருங்கை பிஞ்சை கறியாக சமைத்து உட்கொண்டால் வாயு தொல்லை அகலும். வாயுவினால் பிடிப்பு ஏற்பட்டிருந்தாலும் அகன்று விடும். மனிதர்களுக்கு மிக எளிதாகும் நோய்களில் தலைவலி முதலிடத்தில் உள்ளது.

இந்த தலைவலி தீர, முருங்கைப் பட்டையை இடித்து சாறு எடுத்து சாறின் அளவுக்கு பசும்பால் சேர்த்து நெற்றியில் பற்று போட வேண்டும். இவ்வாறு செய்தால் தலை வலி விரைவில் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/75020.html#ixzz2syDK5TJu

தமிழ் ஓவியா said...


எடையை குறைக்கும் பேரிக்காய்


ஆசியா மற்றும் அய்ரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். ரோசாசியே தாவர குடும் பத்தை சேர்ந்த பேரிக்காயின் அறிவியல் பெயர் பைரஸ் கமியூனிஸ். பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங் களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் பேரிக்காய்கள் விளை கின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

உடலிற்கு வலிமையளிக்கக் கூடிய நார்சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ப் பொருட்கள் காணப்படுகின்றன.

பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்று நோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றன. இதில் காணப்படும் எளிதில் கரையாத பாலிசாக்ரைடு மூலக்கூறுகள் குடலில் சேரும் புற்று நோய் நச்சுகளை அகற்றவல்லது.

குறைந்த ஆற்றல் அளிக்கக் கூடியவை பேரிக்காய்கள். 100 கிராம் பழத்துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

அதிக அளவிலான வைட்டமின் சி சத்துப்பொருட்கள் பேரிக்காயில் நிறைந்து உள்ளன. புதிதாக பறித்த 100 கிராம் பழத்தில் 7 சதவீதத்திற்கு வைட்டமின் சி காணப்படுகிறது.

பேரிக்காயில் பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸிசான்தின் போன்ற சத்துப் பொருட்களும் காணப்படு கின்றன. இவை உடலுக்கு வலிமை அளிப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகின்றன.

தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகள் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படு கின்றன.

பேரிக்காய் பழங்கள் உடலுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற உபாதைகளை ஏற்படுத்துவதில்லை.

பேரிக்காய்களை தொடர்ந்து உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தியும், உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. இந்த மருத்துவ குணம் படைத்த பேரிக்காய்களை நாள்தோறும் உண்போம்.

Read more: http://viduthalai.in/page-7/75022.html#ixzz2syDWiHY1

தமிழ் ஓவியா said...


ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

கிராமங்களில் எப்போதுமே கருப்பட்டி காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மை யின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்து கின்றனர்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டி யானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

ஓமத்தை கருப் பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.

சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது.

இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். கருப்பட்டியை நாள்தோறும் சர்க்கரைக்கு பதிலாக அனைவரும் பயன்படுத்தினால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

Read more: http://viduthalai.in/page-7/75023.html#ixzz2syDf4K8z

தமிழ் ஓவியா said...


ஆரியப் பண்டிகைகள்


ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள்.

- (விடுதலை,18.1.1951)

Read more: http://viduthalai.in/page-2/75086.html#ixzz2t3wigu8T

தமிழ் ஓவியா said...


மூன்றாவது அணிபற்றி நரேந்திர மோடி


பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர மோடிக்கு இப்பொழுது மேலும் சில சிக்கல்கள் சிரங்காக உருவெடுத்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சி ஒருபுறம்; டில்லி தேர்தல் முடிவுகள் மோடியையும் அவரது பரிவாரங்களையும் பாடாகப்படுத்தியுள்ளன. அந்த ஆத்திரம் அவர்களின் அலுவலகத் தைத் தாக்குவது வரை கொண்டு வந்து விட்டுள்ளது.

கடுமையான வார்த்தைகளால் அர்ச்சிக்கவும் ஆரம்பித்து விட்டனர்; இன்னொரு புறம் - மூன்றாவது அணி, அது குறித்தும் திருவாளர் மோடி மூன்றாந்தர அணி என்று மூர்க்கமாகத் தாக்க ஆரம்பித்து விட்டார்.

தொடக்க முதலே அய்க்கிய ஜனதாதளம் - அதன் தலைவர்களும், குறிப்பாக பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் பி.ஜே.பி.மீது கடுமையான விமர்சனத்தை வைத்து வருகின்றார். பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துக் கொண்டி ருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்துக்கு பீகாருக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி வந்துவிடக் கூடாது என்பதிலே தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். கூட்டணியிலிருந்து பிஜேபி விலகியது குறித்து சிறிதும் அவர் அலட்டிக் கொள்ளவும் இல்லை. பிஜேபி என்பது மதவாதக் கோட்பாடுள்ள ஒரு நோய் என்கிற அளவுக்கு படம் பிடித்தும் காட்டி விட்டார்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கும் பி.ஜே.பி.யின் முகத்திரையைக் கிழிக்க ஆரம்பித்துள்ளார். ராமன் கோவில் பிரச்சினையைத் தேர்தல் ஆதாயத்துக்காக பிஜேபி பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்துகிறார்.

இடதுசாரிகள் எப்பொழுதுமே பிஜேபியை விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தான்.

இந்த மூன்றாவது அணியின் முக்கிய பங்குதாரர் யார் என்றால் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. அதன் பொதுச் செயலாளர், செல்வி ஜெயலலிதா தான்; மூன்றாவது அணி வெற்றி பெற்றால், தான்தான் பிரதமர் என்ற கனவில் மிதக்கக் கூடியவர்; தேவேகவுடாவுக்கு அடித்ததுபோல லாட்டரி அடிக்காதா என்று கருதிக் கொண்டிருக்கக் கூடியவர்.

நியாயமாக பிஜேபியையும், அதன் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியையும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தானே கடுமையாகச் சாட வேண்டும்! தோலுரித்துக்காட்டிட வேண்டும். அதுவும் மூன்றாவது அணி என்பது மூன்றாந்தர அணி என்று மோடி விமர்சித்த நிலையில், கடுமையாகச் சாடிய நிலையில், ஜெயலலிதா தரப்பிலிருந்து உக்கிரமான பதிலடிச் சம்மட்டி ஏன் புறப்படவில்லை?

தன்மீது ஒரு துரும்பு அளவு மற்றவர்கள் கிள்ளிப் போட்டால்கூட விட்டேனா பார்! என்று விடுபட்ட அம்புபோல அக்னி அம்புகளால் சரம் தொடுக்கும் பாணியைக் கொண்ட செல்வி ஜெயலலிதா மவுன சாமியாராக இருப்பது - ஏன்?

ஜெயலலிதா பதவியேற்றால் தனி விமானத்தில் மோடி சென்னைக்கு வருவார்; மோடி பதவியேற்றால் தனி விமானத்தில் அகமதாபாத் போய் சேர்வார் ஜெயலலிதா. சென்னைக்கு வந்தால் நாற்பது வகை சிறப்பு விருந்து வைத்து, உபசரித்து திக்கு முக்காடச் செய்யக் கூடியவர்.

ஆனாலும் தனக்குப் போட்டி என்று வந்த நிலையில் நரேந்திர மோடி, ஜெயலலிதாவையும் சேர்த்துத்தான் மூன்றாவது அணியின் மீது மோதிடத் தயாராகி விட்டார்; மோசமான வார்த்தைக் கற்களால் கவண் வீசுகிறார். என்றாலும் தமிழ்நாடு முதல் அமைச்சர் 16ஆவது மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று டில்லிக் கோட்டையில் அமரத் துடிதுடித்துக் கொண்டு இருப்பவர், மோடிக்குப் பதிலடி கொடுக்க மறுப்பது ஏன்?

திருவாளர் சோ ராமசாமியின் அறிவுரையா - வழிகாட்டுதலா? மோடியைத் தாக்க ஆரம்பித்தால் ஊடகங்கள் திசை மாறிப் போய் விடும் என்ற அச்சமா?

தேர்தலுக்குப் பிறகு உருவாகும் - அரசியல் சூழல் (கற்பனையாகத்தான்) கெட்டுப் போய் விடக் கூடாது என்ற கெட்டிக்காரத்தனமான தொலை நோக்கா?

மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் பரிதாப நிலையை எண்ணிப் பரிதாபப்படத் தான் வேண்டியுள்ளது. ஆனாலும், தேர்தலுக்கான நாள்கள் நெருங்க நெருங்க மூன்றாவது அணி - தேசிய ஜனநாயகக் கூட்டணி (மோடி)களுக்கிடையே கத்திகளை இறக்கை களில் கட்டிக் கொண்டு ஆவேசமாக போரிடும் சேவல் சண்டைகளை நாடு காணத்தான் போகிறது.

Read more: http://viduthalai.in/page-2/75087.html#ixzz2t3xA9i5e

தமிழ் ஓவியா said...


மோடி அலை என்பதாக ஒன்றுமில்லை; ஊடகங்களின் உருவாக்கமே அது! அஜித்சிங் படப்பிடிப்பு


புதுடில்லி, பிப்.11- ராஷ்ட்ரிய லோக்தள கட்சி யின் தலைவரான அஜித்சிங், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டு சேருவதற்கு வாய்ப்பே இல்லை; வர இருக்கின்ற மக்களைத் தேர்தலுக்கு முன்பும், பின்பும் காங்கிரசுக் கட்சியுடன் கூட்டாக இருந் திடவே விருப்பம் எனத் தெரிவித்தார். அண்மையில் ராஷ்ட்ரிய லோக்தள கட்சி யின் தலைவர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அவைகளில் ஒரு சில:

கேள்வி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பா ளர் நரேந்திர மோடி செல் லுமிடங்கலெல்லாம் மக்கள் கூட்டம் திரளாக வருகிறதே. மோடி அலை என்பதாக அதனைப் பார்க்கின்றீர்களா?

பதில்: அலை என்ப தாக ஒன்றுமில்லை; ஊட கங்களின் அலங்காரச் சொல் லாக இடக்கர் அடக்கல் (Euphemism) மொழியாகச் சொல்லப்படுகிறது. உண் மையில் பிரச்சினை வேறு விதமானது. தொலைத் தொடர்புத் துறையில் நிகழ்ந்த முன்னேற்றங்கள் காரணமாக வாக்களிக்கும் மக்களின் ஆவல்கள் (குறிப் பாக உத்திரபிரதேசத்தில்) அதிகரித்துள்ளன. ஆனால் அவைகளை நடைமுறைப் படுத்தும் வாய்ப்புகளோ குறைந்து வருகின்றன. இந்த நிலையினால் மக்களிடம் ஒரு வித மனமுடக்கம் ஏற் பட்டுள்ளது. ஆட்சியில் உள் ளோரிடம் கோபமாக அவை வெளிக்கிளம்புகின்றன.

மக்களிடம் நிலவும் இந்த மன முடக்கம் மற்றும் வெறுப்பினை, கொம்பு சீவிவிடும் செயலில் நரேந் திரமோடி இறங்கியுள்ளார். ஒன்றை மோடி புரிந்து கொள்ள வேண்டும். கூடு கின்ற மக்கள் கூட்டமெல் லாம் தேர்தல் போட்டியின் ஒரு அங்கமே. தேர்தல் முடி வுகளை பிரதிபலிப்பவை அல்ல அவை. ஒவ்வொரு வரது கொள்கையும் கூட்ட ணியுமே வெற்றியினை நிர் ணயிக்கிறது.

கேள்வி: உங்களது நிலைப்பாடு மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மாறுமா?

பதில்: நிச்சயமாகக் கிடையாது. இந்தக் கருத்தில் மறு பரிசீலனைக்கு இடமே இல்லை. மேலும் தேசிய முன்னணி அதிகார மய்யத்திற்கு அருகில் வரும் வாய்பே இல்லை. கேரளா, தமிழ் நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், போன்ற மாநி லங்களில் - 200 மக்க ளவைத் தொகுதிகளை உள் ளடக்கிய அந்த மாநிலங்களில் பார திய ஜனதா கட்சியின் தடமே கிடையாது.

- (நன்றி: தி எக்னாமிக் டைம்ஸ் 10.2.2014)

Read more: http://viduthalai.in/e-paper/75074.html#ixzz2t3xNxPmx

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் >>>


சரியான நேரத்தில் சரியான அறிக்கை

நமது தலைவர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை, விடுதலை 5.2.2014 (புதன்) பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சட்டத்திற்கும், சமூகநீதிக்கும், எதிரானது! நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஜனார்த்தன திவேதி களை அடக்கி வைக்க வேண்டும் காங்கிரசு தலைமை; பொருளாதார அடிப்படையில் - இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளதை, தக்க தருணத்தில் கண்டித்திருப்பது மிகவும் உணர வேண்டிய அறிவுரையாகும்.

சமூக நீதிக்கு எதிரானவர்கள்; உயர் ஜாதியினர் பலர், இன்னமும் உள்ளனர் என்பது இவரது அபத்தமானதும், ஆபத் தானதும், அரசியல் சட்ட அடிப்படை உரிமைக்கும்கூட முற்றிலும் எதிரானதாகும் என்பது உண்மையே; காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி அவர்களும் ஜாதி அடிப் படையிலான இடஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும் என்றும் உறுதியளித்தும் இப்போது இடஒதுக்கீடு வழங்குவதில் தீவிரமாக காங் கிரசு செயல்படுகின்றது. திவேதியை காங் கிரசுத் தலைவர் சோனியா காந்தி கண்டித் துள்ளார் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புத் தெரி வித்து அமளிகளில் ஈடுபட்டனர். அவர் களை சமாதானப்படுத்திய மத்திய ராஜாங்க அமைச்சர் ராஜீவ் சுக்லா அவர்கள் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடரும் என்றும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் அறிவித் தார். இருப்பினும் அமளி தொடர்ந்ததால் சபை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.

- ஆ. இனியன் பத்மநாதன், ஈரோடு -11

Read more: http://viduthalai.in/page-2/75092.html#ixzz2t3yklHKH

தமிழ் ஓவியா said...


சபாஷ், உயர்நீதிமன்றம்! இடிக்கப்படுகிறது ஒரு கோவில்!

சென்னை,பிப்.12-உயர் நீதிமன்ற நுழைவாயிலில் எம்ஜிஆர் நினைவாக கட் டப்பட்ட அம்மன் கோயிலை இடித்துவிட்டு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் அதிகாரி களுக்கு உத்தரவிட்டனர்.

பொதுநல வழக்கு

சென்னையில் உள்ள சாலையோர கோயில்களை இடிக்கக் கோரியும், உயர் நீதிமன்ற நுழைவாயிலில் சாலையோரம் உள்ள எம்ஜிஆர் நினைவாக கட் டிய கோயிலை இடிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத் தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதி மன்றம் ஏற்கெனவே விசா ரித்து, சாலையோர கோயில் களை இடிக்க உத்தரவிட் டது. இதைத் தொடர்ந்து எம்ஜிஆர் நினைவாக கட் டிய கோயிலை இடிக்கும் படி அதன் அறங்காவலர் காந்தா சீனிவாசனுக்கு மாநக ராட்சி தாக்கீது அனுப்பியது. இதை ரத்து செய்யக்கோரி காந்தா சீனிவாசன் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், முன்னாள் முதல் வர் எம்ஜிஆர் வெளிநாட் டில் சிகிச்சை பெற்றபோது அவர் குணமடைய இந்த அம்மன் கோயில் கட்டப் பட்டது. அதன்பிறகு அவர் குணமடைந்து சென்னை திரும்பினார். அவர் நினை வாக அவர் பெயரில் இந்தக் கோயில் உள்ளது. இதை இடிக்கக் கூடாது. மாநக ராட்சி அனுப்பிய தாக்கீதை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கள் அக்னிகோத்ரே, சசித ரன் ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:

வழக்கு தள்ளுபடி

சாலையோரம் உள்ள அனைத்து கோயில்களை யும் இடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப் படையில்தான் மனுதார ருக்கு மாநகராட்சி தாக்கீது அனுப்பியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. எனவே மனுவைத் தள்ளு படி செய்கிறோம். இந்தக் கோயிலை மாநகராட்சி இடிக்கலாம். இந்தக் கோயில் அனுமதியில்லாமல் கட்டப் பட்டுள்ளது என்று தெளி வாக தெரிகிறது. உயர்நீதி மன்ற வளாகத்தின் சுற்றுச் சுவரையொட்டி கோயில் உள்ளது. கோயில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றை தனியார் இடத்தில் வைக்க உரிமையுள்ளது. பொதுமக் கள் பாதிக்கும் வகையில் வைக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு தீர்ப்புகளில் கூறி யுள்ளது. மத ரீதியான கட்டடங்களை பொது இடத் தில் கட்ட யாருக்கும் உரிமை யில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கி றோம். - இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இந்த உத்தரவை நடை முறைப்படுத்தாததால் மாநக ராட்சி அதிகாரிகள் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அதே நீதிபதிகள் நேற்று (11.2.2014) விசாரித்து, எம்ஜிஆர் நினைவு கோயிலை அதிகாரிகள் 12 ஆம் தேதிக்குள் இடித்து விட்டு அதன் அறிக்கையை தாக் கல் செய்யும்படி அதிகாரி களுக்கு உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/75128.html#ixzz2t9pNu8y4

தமிழ் ஓவியா said...


தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இலச்சினையில் கடவுளர் படமா?


பாங்க் ஆப் இந்தியா என்னும் தேசிய மயமாக் கப்பட்ட வங்கியின் இலச் சினை அடையாளத்தில் சிங்கம், சூலத்துடன் ஒரு பெண் உருவம் இருப்ப தான படத்துடன் இலச் சினை உள்ளது. நாடு விடுதலை அடை வதற்குமுன் 1906 இல் தொடங்கப்பட்ட வங்கி யில் இந்துமத கடவுள் படத்துடன் தனியாரால் மும்பையில் தொடங்கப் பட்டு, பின்னர் 1969 இல் தேசியமயமாக்கப்பட்டது. மதசார்பற்ற நாட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் இலச்சினையில் இதுபோன்ற ஒரு சார்புள்ள மத சின்னம் இடம் பெற லாமா? வாடிக்கையாளர்கள் ஒரு மதத்தை மட்டும் சார்ந் தவர்களாகவா உள்ளனர்? வங்கி நிர்வாகம், மத்திய அரசு சிந்திக்குமா?

அய்ந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களிலும் கூட இந்து மதக் கடவுள் களின் உருவங்கள் பொறிக் கப்பட்டுள்ளன. இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற அரசாம்!

Read more: http://viduthalai.in/e-paper/75127.html#ixzz2t9q9Iax3

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வும் தினமணியும்!

ஆசிரியர் தகுதித் தேர்வும், சலுகைகளும்! எனும் தலைப்பில் தினமணியில் சிறப்புக் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது (11.2.2014, பக்கம் 8).

தமிழக அரசியல்வாதிகள், ஆந்திராவில் உள்ளது போல ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக 5 சதவிகித மதிப்பெண் சலுகை வழங்கவேண்டும் என அறிக்கை வெளியிடுகின்றனர். ஜாதிகளைத் தாங்கிப் பிடிக்கும் அரசியல்வாதிகள், அதனால் தரமான, நிறை வான கல்வி குறைபட்டுப் போகுமென தெரிந்திருந்தும் வேண்டுமென்றே குரல் கொடுப்பது வேதனையளிப் பதாக உள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் 60 விழுக்காடு மதிப்பெண் வாங்குபவர் 59 விழுக்காடு மதிப்பெண் வாங்குபவரைவிட அறிவாளி, தகுதியானவர் என்று கூறுகிறார்களா?

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுதான் தகுதியின் அளவுகோலா? தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தங்கப்பதக்கம் பரிசு பெறுவோர்தான் நாட்டில் பிரகாசமாக சாதனைகளைப் பொறித்துக் கொண்டு திரிகிறார்களா?

மதிப்பெண் அடிப்படையில்தான் தகுதி -திறமை நிர்ணயிக்கப்படும் என்றால், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒரு அம்பேத்கர் நமக்குக் கிடைத் திருக்கமாட்டார் என்று உச்சநீதிமன்ற நீதிபதி இரவீந்திரன் கூறியதை மறுக்கமுடியுமா?

மதிப்பெண் போடுவது குறித்து இதே தினமணியில் (9.12.2013) ஒரு செய்தி வெளிவந்ததே!
பிளஸ்-2 மற்றும் 10 ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதில் கவனக்குறைவாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த 5600 மாணவர்களில் 4000 மாணவர்களின் மதிப்பெண் மாறியது என்று செய்தி வெளியிட்ட தினமணியில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்தான், தகுதி - திறமைக்கு அடை யாளம் என்று வாதிடப்படுகிறது.

இதில் இடைக்குத்து - ஜாதியைத் தாங்கிப் பிடிக்கும் அர சியல்வாதிகள் தகுதியைப்பற்றிக் கவலைப்படுவதில்லையாம். சமூகநீதி என்பது அவ்வளவு அலட்சியமாகப் போய்விட்டதா?
இப்படி எழுதுகிறவரோ, கட்டுரை வெளிவந்துள்ள தினமணியோ உண்மையிலேயே ஜாதி ஒழிப்பு வீரர்கள் தானா? ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்பதால் தான் ஜாதி காப்பாற்றப்படுகிறதா? ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் மறுநாள் காலையிலேயே ஜாதி ஒழிந்துவிடுமா?

தினமணி ஆசிரியரின் பூணூலைக் கழற்றச் செய்யட் டும் பார்க்கலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதி காப்பாற்றப்படுகிறதே - அதனை நீக்கவேண்டும் என்று தினமணியில் தலை யங்கம்கூட எழுதவேண்டாம் - ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் பிரச்சினையைத் திசை திருப்பி வேறு எங்கோ இழுத்துச் செல்லும் எத்து வேலையை தினமணியின் சிறப்புக் கட்டுரை செய்கிறது.

தாழ்த்தப்பட்டவருக்கும், பிற்படுத்தப்பட்டவருக்கும் தகுதி மதிப்பெண் 60 விழுக்காடு என்பதை மாற்றி 55 விழுக்காடு என்று தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவை யில் அறிவித்தார். அதனை நாம் வரவேற்றோம். அதே நேரத்தில், 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதித் தேர்வுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது என்ன நியாயம் - என்ன நேர்மை?

அதே ஆசிரியர் தகுதித் தேர்வுதானே - அதில் ஏன் பாரபட்சம்? இதனை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? அதைப்பற்றி தினமணியின் சிறப்புக் கட்டுரை மூச்சு விடாமல் வழவழா கொழ கொழா என்று முக்கால் பக்கம் கட்டுரை எழுதுவது ஏன்?

பிளஸ்-2 படித்து அதற்குமேல் ஆசிரியர் பயிற்சி இரண்டாண்டு படித்து பட்டயம் பெற்ற பிறகு, மறுபடியும் ஒரு தகுதித் தேர்வு என்பது போக்கிரித்தனம் அல்லவா!

ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றதற்கான பட்டயம் அளித்து - ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர் என்று சான்று வழங்கிய நிலையில், மறுபடியும் தேர்வு என்றால், அரசு, தான் நடத்திய தேர்வையே, தான் வழங்கிய சான்றிதழையே, தானே கொச்சைப்படுத்துவது ஆகாதா?

இந்தத் திசையில் தினமணிகள் ஏன் சிந்திப்பது இல்லை? கல்வி, வேலை வாய்ப்பு என்றால், அதில் எந்த வகையிலாவது சமூகநீதியை, இட ஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்துவது - குறுக்குச்சால் ஓட்டுவதுதான் பூணூல்களின் வேலை.

அதைத்தான் இப்பொழுதும் தினமணி செய்திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-2/75133.html#ixzz2t9qdT3o0

தமிழ் ஓவியா said...


உங்கள் பயணம் எங்கே செல்கிறது அத்வானிஜி!


- குடந்தையான்ஆர்.எஸ்.எஸ் எனது வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தந்தது; அதன் தொடர்ச் சியாக, 55 ஆண்டுகளாக அரசியல் பயணம் மேற்கொள்கிறேன். அந்த பயணம் இன்னும் முடிவு பெற வில்லை என பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி தனது பிளாக்கில் 9.2.2014 அன்று கருத்து தெரிவித்துள்ளார்.

அத்வானி அவர்களே! உங்கள் பயணத்தின் ஒன்றாக, நீங்கள் ரதயாத் திரை ஒன்றை துவங்கினீர்கள். எதற் காக அந்த பயணம்? யாருடைய நன் மைக்காக? யாரை எதிர்த்து? இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அரசி யல் சட்டம் 340 பிரிவின்படி அமைக் கப்பட்ட மண்டல் குழு பரிந்துரை யின் அடிப்படையில் வேலை வாய்ப் பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் ஆணையை அன்றைய பிரதமர் வி.பி.சிங் அறிவித்தவுடன், உங்களது ரத யாத்திரையை துவக்கி னீர்கள். அயோத்தியில் ராமனுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்பதற் காக அந்த யாத்திரை என்று சொன் னாலும், இட ஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என்பது உங்களது நோக் கம்; ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் நோக்கம். அந்த யாத்திரையின் முடி வில் 400 ஆண்டு கால பழைமைச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப் பட காரணமாக இருந்தீர்கள். நாடு முழுவதும் கலவரம் ஏற்பட்டு, பல்லா யிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். உங்கள் வாழ்வில் என்ன அர்த்தத்தை இந்த ர(த்)த யாத்திரை தந்தது?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீங்களும் குற்றம் சாட்டப்பட்டவ ராக சேர்க்கப்பட்டீர்கள். அதன் பின் மத்தியில் ஆட்சியில் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராக வும் இருந்தீர்கள். குற்றம் சாட்டப்பட் டவரே நாட்டின் உள் துறை அமைச் சராக இருக்கலாமா என உங்கள் மன சாட்சியை எப்போதேனும் கேட்டு, விடை கண்டதுண்டா? சட்டத்தின் ஓட்டையை வைத்து, அந்த வழக்கில் இருந்து எப்படியெல்லாம் தப்பிக்க லாம் என்று தான் கருதினீர்களே தவிர, தைரியமாக, நாங்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்மந்தப்பட்டிருக் கிறோம் என்று உண்மையை சொல் வதற்கு, உங்கள் ஆர்.எஸ்.எஸ். பள்ளி, கற்றுத் தரவில்லையே.

ஆனால் தமிழ் நாட்டிலே, 1957 இல் அரசியல் சட்ட எரிப்பு நடந்தது. ஜாதிப்பிரிவை காப்பாற்றும் அரசி யல் சட்ட பிரிவை எதிர்த்து, அந்த எரிப்பு நடந்தது. பெரியாரின் கட்ட ளையை ஏற்று, ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும், சிறுவர் களும் பங்கேற்று, மூன்றாண்டு வரை கடும் சிறை வாசத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றனர். கைதான ஒரு சிறுவனை எச்சரிக்கை செய்து விடுதலை செய்ய லாம் என நினைத்த நீதிபதி, அந்த சிறுவனிடம், நீ கொளுத்தியது காகி தம் தானே எனக் கேட்கிறார். ஆமாம் என்று சொன்னால், அவனை விடுவிக் கலாம் என்பது நீதிபதியின் எண்ணம். அந்த சிறுவன் என்ன சொன்னான் தெரியுமா அத்வானி அவர்களே! நான் கொளுத்தியது, அரசியல் சட்டத்தில் ஜாதியை காப்பாற்றும் பிரிவுதான் என்று சொன்னான்.

அந்த சிறுவனுக்கு இருந்த தெளி வும், உணர்வும், துணிவும், அறிவு நாணயமும் உங்களிடத்தில் இல்லையே. காரணம், சிறுவன் படித்தது பெரியார் பள்ளியில். நீங்கள் படித்தது ஆர்.எஸ்.எஸ். பள்ளியில்.

உங்களது வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது ஆர்.எஸ்.எஸ். தான் என்று சொல்கிறீர்களே. 2005 இல் பாகிஸ் தான் சென்ற போது, ஜின்னா சிறந்த மதச்சார்பின்மை கொள்கை கொண்ட வர் என்று சொன்னதற்காக, ஆர்.எஸ்.எஸ். உங்களை கடுமையாக சாடி, நீங்கள் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினீர்களே.

2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசும்போது, ஆர்.எஸ்.எஸின் அனுமதி இல்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளப்பட முடியாது என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி உறுதிப் படுத்திவிட்டது என்றும், நாம் கொண் டிருக்கும் இந்தக் கண்ணோட்டத்தி னால், பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது என்றும் சொன்னீர்களே; இதுவும் ஆர்.எஸ்.எஸ்சால் உங்கள் வாழ்க்கையில் கிடைத்த பயன் என எடுத்துக் கொள்ளலாமா?

பின்னர் மே 2009 இல் ஆர்.எஸ்.எஸின் கட்டளையால், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்து, அக்டோபர் 2011-லேயே, நீங்கள் பிரதமர் வேட்பாளாராக பாஜக சார்பில் போட்டியிட முடியாது என ஆர்.எஸ்.எஸ். கட்டளையிட்டு, இறுதில் ஜூன் 2013 இல் கட்சியில் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிவிக்கும் அளவுக்கு, ஆர்.எஸ்.எஸ் உங்களை தள்ளிவிட்டுள்ளதே; இந்தப் பயணம் இன்னும் முடியவில்லை என நீங்கள் கூறுவதைப் பார்த்தால், இந்த பயணத்தில் தாங்கள் எங்கே செல்வீர்கள் என்று தெரிய வில்லை.

ஒரு வேளை, பாஜகவிலிருந்து நீங்கள் விலகுவதற்கும், ஆர்.எஸ்.எஸ். உங்களுக்கு வழிகாட்டும் என நினைத் தால் தவறில்லையே, அத்வானிஜி.

Read more: http://viduthalai.in/page-2/75138.html#ixzz2t9qnAod1

தமிழ் ஓவியா said...


கல் முதலாளி!


திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் கடந்த திங்கள்கிழமை மட்டும் உண் டியல் வசூல் ரூ.2.45 கோடி யாம். மக்களுக்குப் பகுத் தறிவு தேவை என்பதற்கு இது அடையாளம்; பக்தி பெருகிவிட்டது என்று மகிழ்ச்சி அடைவது, மருத் துவமனைகள் (நோய்கள் பெருகியதால்) அதிகரித்து விட்டது என்று மகிழ்ச்சி அடைவது போன்றதாகும்.

எல்லாம் வல்ல கடவுள் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு நிதி கொடுப்பது - கடவுளைக் கேலி செய்வது ஆகாதா? இந்தப் பணத்தால் ஒரு சல்லிக் காசு ஏழுமலை யான் என்ற பொம்மைக்குப் பலன் உண்டா? அது உயிர் உள்ள ஒன்றா? ஆறுகால் கன்றுக்குடி என்று சொல்லி வித்தை காட்டிப் பணம் பறிப்பவனுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?
தினமலர் பக்தி மலரின் கருத்து:

கோவில்களில் கூட்டம் அதிகரித்துவிட்டது; கோவி லில் முக்கிய நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடக் கின்றன... மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது பக்தி நெறி செழித்திருப்பதுபோல தெரிகிறது. இது பொய்த் தோற்றம். இந்நாளில் இருக் கும் பக்தி, வழுக்கல் நிலத் தில் வடித்த மாளிகை என்று கூறியிருப்பதை நினைவூட் டுகிறோம். நாட்டில் உள்ள 10 கோடி ஏழைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3200/- வங்கி மூலம் அளிக்கும் திட்டத்தை - இந்தக் கோவில் நிதிகளிலி ருந்து எடுத்துக் கொடுக்க லாமே! நாட்டில் இருவகை முதலாளிகள் - ஒன்று, தொழில் முதலாளிகள்; இன் னொன்று ஏழுமலையான் போன்ற கல் முதலாளிகள்.

(இன்னொரு கூடுதல் தகவல்: ஏழுமலையான் தன் கலயாணத்துக்காக குபேரனி டம் கடன் வாங்கினானாம் - அதனை அடைக்கத்தான் இந்த உண்டியல் வசூலாம்! கடவுளே கடன்காரனா? பேஷ், பேஷ் நன்னாயிருக்குப் போங்கோ!).

Read more: http://viduthalai.in/e-paper/75215.html#ixzz2tFWVzoOX

தமிழ் ஓவியா said...


தெரிந்து கொள்க!


பல துறைகளில் வசதிகள் இருக்கத்தான் செய் கின்றன. அந்த வசதிகள் இருப்பது எத்தனைப் பேர் களுக்குத் தெரியும்?

“May I Help You” என்று எழுதப்பட்டு இருக்கும்; அங்குள்ளவரிடம் சென்று உதவி கேட்பதற்கு நம் மக்களுக்கோ ஒரு வகை தயக்கம். இந்தச் சபைக் கோழைத்தனத்தைத் தூக்கி எறிய வேண்டும்.

ரயிலில் பயணம் செய்வோர்களுக்குச் சில தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்! குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களோடு தொடர்பு கொள்ளலாம். 044-25353999 மற்றும் 9003161710 இந்த உதவி (Help Line) 24 மணி நேரத்திற்கும் கிடைக்கும் - முதலில் பெண்கள் கைப்பேசியில் இவற்றைப் பதிவு செய்து கொள்ளட்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/75208.html#ixzz2tFWdpSMA

தமிழ் ஓவியா said...


இப்பொழுதே மிரட்டலா?மோடி மற்றும் பிஜேபியின் மதவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்தை பதிவு செய்பவர்கள்மீது சிறிதும் சகிப்புத்தன்மை இல்லாமல் மிரட்டுபவர்கள் உள்ளனர். இவர்கள் சமூக தளங்களான டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் கருத்திடுபவர்களில் குறிப்பிட் டவர்களை மய்யப்படுத்தி தொடர் தாக்குதலும் நடத்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள்மீது சைபர் குற்றச் சட்டப்படி (அய்.டி.) நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும், அண்மையில் மூத்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் எழுதியதற்காக அச் சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். அதேபோல், காங்கிரசு பிரச்சார ஊழியரான அசீபா ஆமின் என்பவர்மீது சமூக ஊடகங்கள்மூலம் ஆபாசமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பாகவே மிரட்டுகிறார்கள். இவர்களை அடையாளம் காணவேண்டும் என்கிறார் காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான்.

Read more: http://viduthalai.in/e-paper/75214.html#ixzz2tFWsPA1s

தமிழ் ஓவியா said...


அய்.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்


இங்கிலாந்து உறுதி

லண்டன், பிப். 13- இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக்கணக் கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித் தது. இந்த போர்க் குற்றம் குறித்து உலக நாடுகளும், அய்.நா.வும் கடும் கண் டனம் தெரிவித்தன.

அதை தொடர்ந்து அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெ ரிக்கா ஏற்கனவே இரண்டு தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட் டன. இந்த நிலையில் அடுத்த (மார்ச்) மாதம் ஜெனீவாவில் அய்.நா.மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடக் கிறது. அதில், அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதி ராக மூன்றாவது தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

அதில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகைகள் மற்றும் ஊட கங்களுக்கு சுதந்திரம் வழங் குவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட் டுள்ளது.

இலங்கைக்கு எதிராக அய்.நா.வில் கொண்டு வரப் படும் இந்த தீர்மானம் நிச் சயமாக நிறைவேற்றப் படும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.

போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த விதமான முன்னேற்ற நடவ டிக்கையும் மேற்கொள்ள வில்லை. எனவே, இங்கி லாந்து அரசு உலக நாடுகளு டன் இணைந்து சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள் ளது. இந்தத் தகவலை தமி ழர்களுக்கான அனைத்துக் கட்சி குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/75211.html#ixzz2tFX1olwB

தமிழ் ஓவியா said...


மனிதன்


மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும். - (விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/75216.html#ixzz2tFXPgHbN