அய்யப்பன்
அய்யப்பன் கோயிலுக்கு விரதம் இருந்து செல்லுகிறார்கள். விரதம் இருப்ப தன்மூலம் ஒழுக்கம் வளருகிறது. பயபக்தி - பத்தியம் என்பதன்மூலம் நல்ல பழக் கங்கள் வருகின்றன என்றெல்லாம் சொல்லுவதுண்டு.
விரதம் இருக்கும் நாள்களில் மட்டும் ஒழுக்கமாக இருந்தால் போதுமா? மற்ற காலங்களில் கேடுகெட்ட வகைகளில் நடக்கலாமா என்று பகுத்தறிவாளர்கள் எதிர்கேள்வி வைப்பதுண்டு. அதற்கெல்லாம் யாரும் பதில் சொன்னது கிடையாது.
சரி, அவர்கள் சொல்லுகிறபடி பார்த்தாலும்கூட, அதாவது உண்மையா என்ற கேள்விக்கு நடைமுறை பதில் வேறு விதமாகவே இருக்கின்றது.
கேரள இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஜி. சுதாகரன் சொன்ன தகவல் ஏடுகளில் எல்லாம் நிரம்பி வழிந்தது (24.4.2008).
சென்ற சீசனில் ரூபாய் நோட்டுகளை சபரிமலை கோயில் பக்தர்களே திருடிக் கொண்டு போன 67 சங்கதிகளைக் கண்டுபிடித்தோம்.
கோயிலுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்ட அரிசியை கடத்திக் கொண்டு போய் கள்ளச் சந்தையில் விற்கிறார்கள். காணிக்கையாக அளிக்கப்பட்ட தங்கம் காணாமல் போய்விடுகிறது. நிருவாகத்தில் லஞ்சம், ஊழல் பெருகி வருகிறது என்று சொன்னாரே அம்மாநில கோயில் மந்திரி - இதற்கென்ன பதிலாம்?
பார்ப்பன இதழான ஜூனியர் விகடனே (7.12.2005) ஒரு தகவலை வெளியிட்டதே!
சமீபத்தில் தண்டை யார்பேட்டையில் (சென்னை) அய்யப்பன் பூஜை ஒன்று நடந்தது. அதற்கு நானும் போயிருந்தேன். நிறைய கூட்டம், பாடலும், தாளமுமாக பஜனை முடிந்து தீபாரா தனையும் காட்டப்பட்டது. அடுத்து பிரசாதம் வழங்கப்பட வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக, வெளியேறிக் கொண்டிருந்தார் கள். அப்போது திடீர் பர பரப்பு, விசாரித்தபோது தான் தெரிந்தது அங்கு வைத்திருந்த பெரிய குத்து விளக்கை யாரோ திருடிக் கொண்டுபோய் விட்டார்கள் என்று. பக்தர்கள் மனம் நொந்தாலும் பரவாயில்லை என்று விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் மாலை போட் டிருந்த ஒரு சாமிதான் குத்துவிளக்கைத் திருடியி ருந்தது தெரிய வந்தது. வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்து அப்படியே மறைத்துவிட் டோம்.
இது ஒரு சம்பவம் என்றால், போன வருடம் சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு வந்தவர்கள் சிலரும், அடுத்தவர் பைகளில் பிக்பாக்கெட் அடித்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்கள் என்று கூறுகிறார் 20 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வரும் ராஜேந்திரன் -என்று சொல்லுவது விடுதலை அல்ல - ஜூனி யர் விகடன் (7.12.2005).
பக்தியால் ஒழுக்கம் வளருகிறதா - பம்மாத்து இல்லாமல் சொல்லுங்கள், பார்க்கலாம்.
---------------- மயிலாடன் அவர்கள் 29-10-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
5 comments:
பக்தியால் ஒழுக்கம் வளர்கிறதா.
நிச்சயம் வளராது. பக்தியால் மட்டுமல்ல, படிப்பால், பகுத்தறிவால் என்று எதனாலும் ஒழுக்கம் வளராது. காரணம், தேனை எடுத்தவன் நக்காம்ம இருப்பானா?
// பக்தியால் ஒழுக்கம் வளர்கிறதா.
நிச்சயம் வளராது. பக்தியால் மட்டுமல்ல, படிப்பால், பகுத்தறிவால் என்று எதனாலும் ஒழுக்கம் வளராது.//
--------------- ஓசை Said.
மிகச்சரியாக சொன்னீர்கள். ஒழுக்கம் வளர பக்தியோ இல்லை படிப்போ ஏன் பகுத்தறிவோ கூட தேவை இல்லை.
இவைகளால் ஒழுக்கத்தை வளர்க இயலாது.
ஒழுக்கமற்றவர்கள் எங்கும் வியாபித்துள்ளனர். ஆனால் அவர்கள் கொண்ட , இட்ட வேடம் தான் இடத்துக்கு இடம் மாறுபடும்.
எங்கள் ஊரிலெல்லாம் (யாழ்ப்பாணம்) ஐயப்பன் விரதம் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் ரவுடிகள். விரத காலத்தில் என்னென்ன செய்யக்கூடாதோ அதையெல்லாம் மற்ற நாட்களில் ஒழுங்காக செய்பவர்கள்! ஒருத்தன் ஐயப்பன் விரதம் இருக்கிறான் என்றாலே ஒரு மாதிரியாகப் பார்க்கிறோம் என்ன செய்வது!
எங்கள் ஊரிலெல்லாம் (யாழ்ப்பாணம்) ஐயப்பன் விரதம் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் ரவுடிகள். விரத காலத்தில் என்னென்ன செய்யக்கூடாதோ அதையெல்லாம் மற்ற நாட்களில் ஒழுங்காக செய்பவர்கள்! ஒருத்தன் ஐயப்பன் விரதம் இருக்கிறான் என்றாலே ஒரு மாதிரியாகப் பார்க்கிறோம் என்ன செய்வது!
//// பக்தியால் ஒழுக்கம் வளர்கிறதா.
நிச்சயம் வளராது. பக்தியால் மட்டுமல்ல, படிப்பால், பகுத்தறிவால் என்று எதனாலும் ஒழுக்கம் வளராது.//
--------------- ஓசை Said.
மிகச்சரியாக சொன்னீர்கள். ஒழுக்கம் வளர பக்தியோ இல்லை படிப்போ ஏன் பகுத்தறிவோ கூட தேவை இல்லை.
இவைகளால் ஒழுக்கத்தை வளர்க இயலாது.
ஒழுக்கமற்றவர்கள் எங்கும் வியாபித்துள்ளனர். ஆனால் அவர்கள் கொண்ட , இட்ட வேடம் தான் இடத்துக்கு இடம் மாறுபடும்.//
இப்படி ஒன்றையொன்று ஒப்பிட்டு ஆராய்வது தான் பகுத்தறிவு...
அதில் எது சிறந்ததோ, மனிதநேயமிக்கதோ அதை தேர்ந்தெடுப்பது பகுத்தறிவு...
பகுத்தறிவுனால் செய்துவிட்டு பகுத்தறிவு இல்லையென்றால் எப்படி...?
Post a Comment