Search This Blog

18.10.10

கல்யாணமந்திரமும் - கருமாதி மந்திரமும்


மந்திரம்

தமிழர்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் தமிழில் நடப்பதில்லை; தமிழன் வீட்டு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் தகுதி தமிழனுக்கு அளிக்கப்படுவதில்லை.

சமஸ்கிருத மொழிதான் இடம் பெறும் - ஆரியப் பார்ப்பனர்கள்தான் தமிழன் வீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

தந்தை பெரியார் அவர்களால் தன்மான இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் மானம், இனமானம், தன்மானம் புயலாக எழுப்பப்பட்டு புதிய அத்தியாயம் அரும்பிடத் தொடங் கியது.

தமிழன் வீட்டுப் பிள்ளைகளின் பெயர்கள் கூட தமிழில் இருக்காது; எல்லாம் சமஸ் கிருதம்தான். கேசவன் என்றும், ஆதிகேசவன் என்றும் வைத்துக் கொள்வார்கள் - பொருள் புரியாமல். கேசவன் என்றால் மயிரான்; ஆதிகேசவன் என்றால் பழைய மயிரான் என்று பொருள். பொருள் புரிந்து இப்படி வைத்துக் கொள்வார்களா?

தன்மான இயக்கம் பல வகையிலும் ஊட்டிய புத் துணர்ச்சி புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்தது, மறுமலர்ச்சிப் பூக்காடு மணம் கமழ ஆரம்பித்தது; எதிலும் மாற்றம், தலைகீழ் மாற்றம் என்ற புரட்சிப் பூபாளங்கள் கேட்க ஆரம்பித்தன.

புரோகித மறுப்புத் திருமணம் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். அந்த முறையில் புரோகிதனுக்கு இடம் இல்லை. சமஸ்கிருதத்திற்கு கல்தா கொடுக்கப்பட்டது. அக்னிக் குண்டம் இல்லை; அம்மியில்லை; - அருந்ததியைப் பகலில் பார்க்கக் கூறும் பொய்க்கு இடம் இல்லை; சட்டிப்பானைகள் அறவேயில்லை.

மணவிழாத் தலைவர் ஒருவர், ஓரிருவர் சொற்பொழிவாளர்கள். ஏன் இந்தத் திருமணமுறை என்பதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பார்ப்பனர் பண்பாட்டுப் படை யெடுப்பு தமிழர்களை எந்தெந்த வகைகளில் எல்லாம் தலை குப்புற வீழச் செய்திருக்கிறது. இழிவு நோயைப் பீடிக்கச் செய்திருக்கிறது. கல்யாண வீட்டில் புரோகிதர் சொல்லும் மந்திரம் எடுத்துக் கூறப்பட்டு, அதற்கு விளக்கங்களும் கூறப்பட்டன.

மணப்பெண்ணைப் பார்த்து புரோகிதன் சொல்லுவான்; முதலில் சோமன் உனக்குக் கணவன், கந்தர்வன் இரண்டாவது கணவன், மூன்றாவது அக்னி, நான்காவது தான் மனித ஜாதியில் பிறந்த இந்தக் கணவனாகிய மணமகன் என்று கூறும் சோமப்பிரதமோ விவித உத்ரே என்று தொடங்கும் மணமகளை இழிவுபடுத்தும் கல்யாண மந்திரத்தையெல்லாம் சுயமரியாதைத் திருமண நிகழ்ச் சியில் எடுத்து விளக்குவார்கள்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் பன்மொழி புலவர்; தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் கரை கண்டவர். நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தார். ஒரு புரோகிதப் பார்ப்பான் சமஸ்கிருதத்தில் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். நாவலர் பாரதியாருக்குச் சமஸ்கிருதம் தெரியும் ஆதலால், அந்தப் புரோகிதப் பார்ப்பான் கூறும் தவறான மந்திரங்களைக் கேட்டு ஆத்திரப்பட்டு, ஓங்கி ஒரு அறைவிட்டார். கல்யாணத் திற்கு வந்திருந்தவர்கள் திடுக்கிட்டனர். அப்பொழுது நாவலர் பாரதியார் சொன்னார் - இந்தப் பார்ப்பான் கருமாதி மந்திரத்தை திருமணத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்றாரே பார்க்கலாம். அனை வரும் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார்கள்.

சிரிக்கலாம் - சிந்திக்கலாம் எனும் நூலை உ.நீலன் அவர்கள் எழுதியுள்ளார். இது போன்ற சுவையான தகவல்கள் இதில் நிரம்பி வழிகின்றன. நீலன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களிடமிருந்து பொதுவாழ்வைத் தொடங்கிய இன்றைய காங்கிரஸ் பிரமுகர் ஆவார். நூலின் விலை ரூ. 80; கிடைக்கும் இடம்: அருள் பதிப் பகம், 6, விநாயகம் பேட்டைத் தெரு, சென்னை - 600 015.

----------------- மயிலாடன் அவர்கள் 18-10-2010 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

2 comments:

Natrayan.M said...

Muslim and Christians are also conducting marriages in front of their religious leaders with some MANDRAMS in their holly books. We should abolish the caste system in India. We are in the habit of inducing the caste system in India. Why nobody attack the PMK leader for his communal speech?

நம்பி said...

//Natrayan.M said...

Muslim and Christians are also conducting marriages in front of their religious leaders with some MANDRAMS in their holly books. We should abolish the caste system in India. We are in the habit of inducing the caste system in India. Why nobody attack the PMK leader for his communal speech?
October 24, 2010 8:57 PM //

"முஸ்லீம்கள், கிறித்துவர்கள் எல்லாம் மதகுருமார்கள் முன்னாடி மந்திரங்கள் சொல்லி நடத்துகிறார்கள்"

திராவிடனுக்கு எதுக்கு பார்ப்பனன் மந்திரம் சொல்லணும்...எங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்.

எதுக்கு மந்திரம் என்ற பெயரில் கல்யாண பன்றவன் பொண்டாட்டியை தன் பொண்டாட்டியா ஆக்கி கொண்டு, அதன் பிறகு தான் கல்யாண பன்றவனுக்கு பெண்ணை கொடுக்கற கேவலத்தை பன்றதுக்கு தானே...


இந்த பேமானித்தனத்தை இன்று வரை கமுக்கமா எந்த மதத்தில உள்ள மதகுருமார்களும் செய்வதில்லை அதாவது தெரியுமா? தெரியாதா?

"தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடேன்...தாய் மொழியைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்" என்று வெறும் ஏட்டளவில் எழுதி வாசித்துக்கொண்டு திருமணத்தை பார்ப்பனனை வைத்து நடத்தி தான் மணக்கப்போகும் பெண்ணையே பார்ப்பனன் கண்முன்னேயே கேவலப்படுத்துவதை பார்த்துகொண்டே ஹி ஹி இன்று புளகாங்கிதம் அடைந்து தாலி கட்டுகிறானே....திராவிடன்.

பிறப்பைக் கொடுத்த தாய்க்குலத்தையே இன்னொருவன் கேவலப்படுத்துவதை பார்த்துக் கொண்டிருக்கிறானே திராவிடன்.

இந்த கேவலங்கள் எந்த மதத்திலும் நடைபெறுவதில்லை. எந்த மனிதநேயமிக்கவரும் இந்த கேவலத்தை செய்ய துணிய மாட்டார்கள் இதை வெகு காலமாக செய்து கொண்டு வருபவன் சோம்பேறி ஊத்தவாய் பார்ப்பனன் மட்டுமே.


அவனிடம் மயங்கி கொண்டிருப்பவர்கள் இந்த சொரணையற்ற திராவிடர்கள்.