Search This Blog

3.12.14

தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பன்முக ஆற்றல்

நமது ஆசிரியர்க்கு டிச. 2 ஆம் தேதி (2014) 82-ஆவது பிறந்த நாள். அவர் 72 ஆண்டு பொது வாழ்க் கைக்குச் சொந்தக்காரர். தமிழ் நிலத்தை வலம் வந்து கொண்டே இருப் பவர். தமிழ்நாட் டிற்கு அப்பாலும் கொள்கைப் பரப் புரையை செய்து வருபவர். வாய் மொழி நடை மலர்ந்த நம்பி அவர் - கொள்கைகளை விளக் குவதில்! அவருக்கு வயது 82 ஆகிவிட்டது. அவர் எழு தியவை, பேசியவை, செயலாற் றியவை எல்லாம் பதிவாகி இருக்கின்றன.

இப்பணிகளுக் கிடையே அகப்புற எதிரிகளிட மும் போராடி அவர் வெற்றி பெற்று இருக்கிறார். ஆசிரியர் திராவிடர் கழகத்தின் தலைவர். திராவிடர் கழகம் அரசியல் கட்சியல்ல. ஆனால் அரசியலை நெறிப்படுத்தும்கட்சி, திரா விடர் இயக்கச் சட்டத்திற்குள் அரசி யலில் வகைப்படுத்தும் இயக்கம். திராவிடர் இயக்கக் கொள்கை களை நினைவு கூரும் அமைப்பு.
இயக்க கொள்கை வழியை நிலை நாட்டுவதில் ஆசிரியருக்கு ஈடு ஆசிரியர்தான்! இதற்காகப் பழைய நிகழ்வுகளை நாம் தேடிப் போக வேண்டிய தில்லை. அண்மையில் நடை பெற்ற சில நிகழ்ச்சிகளையே எடுத்துக்காட்டாகக் கொள்ள லாம்.

கடந்த செப்டம்பர் மாதம் 23 முதல் 26 வரை தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ அளித்த விருதைப்பற்றி பெரியார் திடலில் ஆசிரியர் உரையாற் றினார். கட்டணம் நான்கு நாள்களுக்கு ரூ. 100/- வசூலிக் கப்பட்டது. இவ்வுரையைக் கேட்கத் தோழர்கள் திரளாக வந்து இருந்தார்கள். அமைதி யாக செவிமடுத்துக் கேட் டார்கள். வீடு திரும்ப வேண் டுமே என்கிற கவலையில்லாமல் அக்கருத்துகளை மனத்தில் பதிந்து கொண்டார்கள்.

நான்கு நாள் உரை

பெரியார் அவர்களுக்கு அய்க்கிய நாட்டுச் சபையில் ஒரு பிரிவான கல்வி, அறிவியல்,  பண்பாட்டு அமைப்பின் சார்பாக (ஹிஸீவீமீபீ  ழிணீவீஷீஸீ ணிபீநீணீவீஷீஸீ ஷிநீவீமீஸீநீமீ ணீஸீபீ  சிறீக்ஷீணீறீ ளிக்ஷீரீணீஸீவீணீவீஷீஸீ ஒரு விருது 1970 ஆம் ஆண்டு வழங்கப் பட்டது. இந்நிகழ்வுக்கு மத்திய அமைச்சர் திரிகுண சென் தலைமை தாங்கினார்.
முதல்வராக இருந்த கலைஞர் அவ்விருதினை வழங் கினார். அவ்விருதில் ஓர் அருமையான கருத்தாக்கம் இடம் பெற்று இருந்தது. பெரியார் புது உலகின் தொலை நோக்காளர். தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்த்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று அந்த விருதில் குறிப் பிடப்பட்டு இருந்தது.


இவ்விருதின் உள்ளடக்கத் தினைத் தான் மேலே நாம் குறிப்பிட்ட நான்கு நூல்கள் விரித்துரையாற்றினார் ஆசிரியர். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத் திற்கு அதிகமாக அவர் பேசினார். கருத்துகள் புது வெள்ளமாய் பாய்ந்து பெருக் கெடுத்து ஓடின. பெரியாரை வாசித்து பழக்கப்பட்டவர் களான நாம் அன்று சுவா சித்தோம் எனவும், வயதை மறந்து ஆசிரியர் விரிவுரை யில் தம்மை யும் மறந்து உரையாற் றினார்.


பெரி யாரை மக்களிடம் எடுத்துச் சொல்லச் சொல்ல ஆசிரி யரின் தெளிவு நம்மைப் போன்ற வர்களும் பெற வேண்டும் என்கிற உந்துதலால் இச்சொற் பொழிவுகள் உண்டாக்கின.


அவர் வெளியிடும் அறிக்கைகள்

ஆசிரியர் அவர்களிடத்திலே உலகளாவிய பார்வை உண்டு. எந்த ஒரு நிகழ்வையும் உன்னிப் பாகவும் கவனமாகவும் பார்க்கக் கூடியவர். பாராட்டுத் தெரிவிக்க வேண்டுமென்றாலும் சரி, கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றாலும் சரி, அவரது அறிக்கை ஊடகங்களில் முதலில் இடம் பெறும். தனிப்பட்ட பாராட்டுகளையும் தெரிவிப் பதில் தயக்கம் காட்டமாட்டார். கூட்டம் நடத்தி பாராட்டுத் தெரிவிக்க விரும்பினால் கூட் டத்தில் வழியும் பாராட்டு களைத் தெரிவித்து இருக்கிறார். அண்மையில் ஒரு நிகழ்ச்சி நடந் தது. வேலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் வேதாசலம் ஓர் அரிய செயலினைச் செய்து இருந்தார்.


அறிஞர் அண்ணா எழுதிய ஹோம்லாண்ட் ஆங் கில மடல்களைப் புத்தகமாக அவர் தொகுத்து இருந்தார். அப்புத்தகம் முதல் பாகம்தான். அத்தொகுப்பிற்கு டான் என்று தலைப்பிட்டு இருந்தார். இதன் விமர்சனம் தினத்தந்தியில் வெளி யிடப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த நாம் நண்பர் அ.நா. பாலகிருஷ்ணனிடம் சொல்லி இரண்டு புத்தகங்களைத் தருவித் தோம். ஒரு புத்தகத்தை ஆசிரி யரிடம் கொடுத்து இருக்கிறார் அ.நா.பா. உடனே வழக்குரைஞர் வேதாசலத்தைத் தொடர்பு கொண்டு ஒரு பாராட்டுக் கூட்டத்திற்கு ஆசிரியர் ஏற்பாடு செய்துவிட்டார்.


கடந்த நவம்பர் 13 ஆம் தேதி டான் புத்தகத்திற்குப் பாராட் டுக் கூட்டம் நடத்தி ஆசிரியர் மிக அருமையாக அந்தக கூட்டத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலுமாகக் கருத்துகளை எடுத்து வைத்தார். அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமையை விளக்கிப் பேசினார்.


ஆங்கிலத்தின் அவசியத்தையும், ஆங்கில மேடைப்பேச்சுப் பயிற்சியினையும் இனி நாம் தொடங்க வேண்டும் என்றும் ஆசிரியர் அன்று பேசினார். வழக்கறிஞர் வேதாசலம் குடும்பத்தோடு வேலூரிலிருந்து வந்து கலந்து கொண்டார். அவர் பெருத்த மன நிறைவோடு விடைபெற்றுச் சென்றார்.


ஆர்.எஸ்.எஸைத் தொடர்ந்து அம்பலப்படுத்துபவர்

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளையும் அதன் ஆர்எஸ்எஸ் பின்னணியையும் ஆசிரியர் தொடர்ந்து அம்பலப் படுத்தி வருகிறார். அதில் முன் வரிசையில் முதலில் அவர் இருக் கிறார். அதன் ஆபத்துகளை அவர் தோலுரித்துக் காட்டு வதில் தயக்கம் காட்டுவதில்லை. இந்தியாவை சமஸ் கிருத மயமாக்க நீண்ட காலமாகக் கனவு கண்டு கொண்டு வரு கிறது. மத்திய அரசு. பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ் வொரு அமைச்சரும் அறிவிப்புகளை வெளி யிட்ட வண்ணம் இருக் கிறார்கள்.


தமிழ் நாட்டில் அதற்குப் பலத்த எதிர்ப்புகளும் கண்டனங்களும் தோன்றியவுடன் மத்திய அரசு தலையை உள்ளே இழுத்துக் கொள்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. சமஸ் கிருத வாரம் கொண் டாடப்பட வேண்டும் என்கிற அறிவிப் பிலிருந்து கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் மூன்றாவது மொழித் தகுதி சமஸ்கிருதத் திற்கு மட் டுமே என்பது வரை  ஆசிரியரின் அறிக்கை, போராட் டம் எல்லாம் எவ்வளவு வேக மாக நடைபெற்றன என்பதை எண் ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.


இக்கட்டுரை எழுதப்படு கின்ற இன்று (26.11.2014) கட்டாய சமஸ்கிருதம் சம்பந்த மாகக் கலைஞர் நீண்ட விளக்கம் அளித்து முரசொலியில் வினா விடையாக எழுதி இருக்கிறார். இதற்குப் பல்லவியை அமைத் தவர் ஆசிரியர். அதே போல அகில இந்திய வானொலி யில் 8 மணி நேர இந்தித் திணிப்புக்கு பாஜக அரசினர் வழி ஏற்படுத்த முயன்றனர். கடும் போராட் டத்தை சந்திக்க நேரிடும் என்று நீண்ட அறிக்கையை ஆசிரியர் வெளியிட்டார்.


ஆசிரியரின் அறிக்கையும் கலைஞரின் சமஸ் கிருதம் பற்றிய கருத்துகளையும் படித்த அமைச்சர் ஸ்மிருதி இராணி சமஸ்கிருதத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக அறிக்கை வெளியிட்டார். சமஸ்கிருதம் இந்தித் திணிப்பு விஷயத்தில் மத்திய அரசு இடைக்கால அரசு அமைந்த காலத்திலிருந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது. இப் படிப்பட்ட எந்த ஆட்டத் தையும் எதிர்கொள்ள ஆசிரியர் எப்போதும் களத்தில் முன்ன ணியில் இருக்கிறார். பட்டாள உடுப்பை எப்போதும் அணிந் துள்ள இராணுவத் தளபதியைப் போல செயல்படுபவர் ஆசிரியர்.

ஆண்டு தோறும் நீதிக்கட்சி விழா

கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நீதிக்கட்சியின் 98-ஆவது ஆண்டு விழாவினை திராவிடர் இயக்க வரலாற்று ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்து இருந்தது. நமது இயக்கத்தின் பீடும் பெருமையும் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தான்! அவற்றின் கூட்டு வடிவமே திராவிடர் கழகம். ஆகவே அதன் ஆண்டு விழாவை ஆசிரியர் ஆண்டு தோறும் கொண்டாடத் தவறுவதில்லை. இந்த ஆண்டு சிறப்பு விருந்தின ராக நீதிபதி கோகுலகிருஷ்ணன் வந்து உரையாற் றினார்.


ஆசிரியர் ஆர்எஸ்எஸ், பாஜக காரர்கள் வரலாற்றைத் திரிக்க தொடங்கிய போது நாம் வரலாற்று ஆய்வு மய்யத்தைத் தொடங்கி அவர்களுக்குப் பதிலடி கொடுத்து வந்ததை எடுத்துரைத்தார். ஆனால் அவர்கள் இன்றைய தினம் ஹிந்து எகனாமிக் ஃபோரம் பிவீஸீபீ ணிநீஷீஸீஷீனீவீநீ திஷீக்ஷீனீ என்று ஒன்றை உருவாக்கி இருக்கி றார்கள். நாம் திராவிடன் எகனாமிக் ஃபோரம் என்று ஒன்றை உருவாக்குவோம் என்று பேசியபோது அவையினரிடையே வரவேற்பு இருந்தது.


திராவிட நாகரிகத்தைப் பற்றிய இன்றைய ஆய்வையும் சிந்து சமவெளி ஆய்வை அய்ராவதம் மகாதேவன் வெளி யிட்டு இருப்பதையும் எடுத்துக் கூறினார் ஆசிரியர். இதுவன்றி பொதுவாக ஆசிரியர் ஆர்எஸ்எஸ்; பாஜகவினர் போக்கை நம்மவர்க்கு எடுத் துரைப்பதில் மிகத்தெளிவும் திட்பமும் நிறைந்தவராகக் காணப்படுகிறார்.


கூர்ந்து நோக்குகிறார்!
 • நடிகர் ரஜினிக்கு வலை விரித்து விருது வழங்கி அரசி யலுக்கு இழுக்கப் பார்ப்பது
 • இராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கத் துடிப்பது
 • சமஸ்கிருத, இந்தித் திணிப்பு அறிவிப்புகள் செய்வது - நடைமுறைப்படுத்த முயல் வது.
 • தமிழ் மொழி, திருவள்ளுவர் பற்றி வடஇந்தியாவில் பரப்ப ஆர்வம் காட்டுவது போல் பம்மாத்து செய்வது
 • தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு நடத்தியது ஷீ பாஜக 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு எதை வேண்டு மானாலும் செய்து முன் னேறுவது.
ஆகிய இப்பிரச்சினைகளை யெல்லாம் ஆசிரியர் கூர்ந்து பார்த்து கருத்துச் சொல்வதும், எழுதுவதும், பேசுவதும் தமிழ் மக்களை எச்சரிக்கை செய்வது மாய் பணியாற்றி வருகிறார். அவர் அதிகாரத்திற்கு வரப் போகிறவர் இல்லை. ஆனால் அதிகாரம் யாரிடத்தில் இருந் தால் நல்லது என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லும் ஆசிரியர் அவர்! தமிழ்மக்களை மட்டுமல்ல அவர் எச்சரிக்கை செய்வது - தமிழக அரசியல் கட்சிகளையும் அவர் எச்சரிக்கை செய்து நெறிப்படுத்துகிறார். அய்யா பெரியாரின் சூத்திரத்தை அப்பழுக்கில்லாமல் ஆசிரியர் கடைப்பிடித்து நடைமுறைப் படுத்துகிறார்.
மத்திய செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவ ராக நியமிக்கப்பட்ட அவ்வை நடராசன் திடீரென்று அப்பொறுப்பி லிருந்து நீக்கப்பட்டார். முதல் கண்டனம் ஆசிரியரிடமிருந்து தான் வந்தது. சமூக அக்கறை, மொழி, இனப்பற்று, சிக்கல்களை ஆராயும் திண்மை, அவற்றை எடுத்துரைக்கும் வன்மை ஆகியவற்றை ஒருங்கே பெற்று இருப்பவர் நமது ஆசிரியர்! அவர் நூற் றாண்டு காலம் இனிதாக வாழ வாழ்த் துகின்றோம்.
நமது சுயநலம் கருதித்தான் அவரை வாழ்த்துகின்றோம். அவர் பணியின் வீச்சு நமது தமிழ்ச்சமுதாயத்திற்கு தேவை யாக இருக்கிறது. அது எப்படி யெல்லாம் பரிணமிக்கிறது பாருங்கள்.
 • பல்துறைகளிலும் கவனம்
 • தேவை கருதி அறிக்கை எழுதி வெளியிடுவது
 • அன்றாடம் ஏடுகளைப் படிப்பது; சிந்தையில் இருத்துவது
 • அரிய நூல்கள் எழுதுவது; நூல் களை விமர்சிப்பது; முன்னுரை எழுதுவது
 • அகன்றாழ்ந்து அறிவொட்பம் மிளிர, கற்றுணர்ந்து வாழ்வியலை, பெரியார் இயலோடு புகட்டுவது
 • பொருளையொட்டிப் பேசுவது
 • ஆங்கிலத்திலும், தமிழிலும் மேடை யில் ஆற்றொழுக்காய் உரையாற்றுவது
 • கொள்கை விளக்கம் தருவது
 • இயக்கம் மற்றும் நிறுவனங்களை நிர்வாகம் செய்வது
 • கலந்துரையாடுவது
 • பாசறையைக் கூட்டிக் கொள்கைப் பயிற்சி அளிப்பது
 • போராடுவது - சிறை செல்வது.
 • தலைமைப் பண்பை நிலைநாட்டுவது
இவையெல்லாம் ஆசிரியரின் பன்முக ஆற்றல்கள், அவரின் ஆற்றல் உழைப் பெல்லாம் திராவிட இயக்கத்திற்கு முக்கால் நூற்றாண்டாய் பயன்பட்டு இருக்கிறது, பயன்பட்டு வருகிறது. அதுவும் முழுமையாய் பயன்பட்டு வருகிறது. நாம் மேலே மிகச்சுருக்கமாக இரண்டொரு நிகழ்ச்சிகளை மாதிரிக் காக எடுத்துக் காட்டினோம்.


அவரு டைய ஒவ்வொரு இயக்க நிகழ்வையும் விளக்கமாக எடுத்துரைத்தால் அவை பல தொகுதிகளாக விரியும். அவர் பணியின் பரப்பு அது! இதற்கு அவர் செலுத்திய உழைப்பு எவ்வளவு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆசிரியர் போல பணியாற்றுகின்ற பக்குவத்தை இளைஞர்கள் பெறத் தொடங்க வேண்டும். அதற்கான பயிற்சிகளை தானாக முன்வந்து பயில வேண்டும். அவரது பிறந்த நாளில் நினது சாயல் யாவர்க்கும் வேண்டும் என ஆசிரியரைக் கேட்பது போல் இக் கட்டுரைக்குத் தலைப்பிட்டு இருக் கிறோம். ஆசிரியர் தருவது அல்ல இது! அவரை முன் மாதிரியாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.


கடின உழைப்பு

ஆசிரியர் போல் பன்முக ஆற்றல் பெறுவதற்கு கடுமையான உழைப்பு என்கிற மூலதனம் வேண்டும். அப் போதுதான் அவர் சாயல் அனைவருக் கும் கிடைக்கும். திராவிடர் இயக்கம் மேலும் சிறப்படைய இதைப்போன்ற உழைப்பு தேவை. அதனை நாம் ஆசிரி யரின் பிறந்த நாளில் அடைவதற்குரிய உறுதியை மேற்கொள்வது நமது இயக் கத்தை முன்னேற்றுவது மட்டும் அன்று ஆசிரியரை முன்னிலைப்படுத்துவதும் ஆகும்.

                            ----------------------------------------"விடுதலை” 1-12-2014

30 comments:

தமிழ் ஓவியா said...

அறவழியில், அறிவு வழியில் போராடும் திட்டங்கள் காத்திருக்கின்றன - வாரீர் தோழர்களே!


சேலத்தில் வரும் 7ஆம் தேதி திராவிடர் கழகப் பொதுக் குழு!

அறவழியில், அறிவு வழியில் போராடும்

திட்டங்கள் காத்திருக்கின்றன - வாரீர் தோழர்களே! கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் அழைக்கிறார்வரும் 7ஆம் தேதி சேலத்தில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்தின் சிறப்பும் - அவசியமும் குறித்து திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சேலம் நமது இயக்க வரலாற்றில் தனி இடம் பெற்ற நகரமாகும்.

சேலத்தைத் தமது தாய் வீடு என்று பெருமைப்படக் கூறுவார்! நம் அறிவு ஆசான் தந்தை பெரியார்!

சேலம் ஏராளமான சுயமரியாதைச் சுடரொளிகளால் இன்றும் ஒளியூட்டப்படும் கழக ஒளி வீச்சு நகரம்!

மக்களின் பேராதரவு - என்றும் திராவிடர் கழகத்திற்கு - பெரியார் இயக்கத்திற்கு உண்டு என்ற பெருமை இன்றும் நிலைத்திருக்கிறது!

பொது மக்கள் தரும் ஆதரவு!

இளைஞர்கள், பொது மக்களிடம் பொதுக் குழு, பொதுக் கூட்டம் என்ற தகவல்களைக் கொண்டு சேர்த்தபோது அதற்காக வசூலில் ஈடுபடும் பொழுது, அனைவரும் தந்த வரவேற்பும், கொடுத்த ஊக்கமும் இயக்க இன்றைய தலைமுறைக்கு தனித்ததோர் டானிக் ஆக அமைந்தது!

மூத்தவர்கள், இளையவர்கள், முன்பு பல காலம் இருந்தவர்கள் - நேற்று புதிய வரவுகளான இளைஞர், மாணவர், மகளிர் என்ற பேதம் - தலைமுறை இடைவெளி சிறிதுமின்றி, வரும் 7ஆம் தேதி நிகழ்வுகளை - ஒரு மாநாடுபோல் நடத்திட, கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் கடுமையாக உழைக்கிறார்கள் என்ற செய்தி நமது காதுகளில் இசையாய் நுழைந்து, இன்பத்தைப் பெருக்குகின்றது!

சேலம் செயலாற்றும் காலம்

1944-ல் சேலம் செயலாற்றும் காலம் என்று அறிஞர் அண்ணா தனது திராவிட நாடு வார ஏட்டில் எழுதினார்.

அய்யாவின் குடிஅரசு வார ஏடோ, திருப்பம் ஏற்படப் போகும் சேலம் நமது பாசறை வீரர்களின் பாடிவீடாக மாறி, இயக்கத்தின் பாய்ச்சலில் புதுவேகம் காணவிருக்கிறோம் என்று அன்று எழுதியது.

1944 சேலம் மாநாட்டின் காட்சிகள் இன்னமும் நம் கண்ணில் தெரியும் மாட்சிகள், என் வாழ்வில் அது ஓர் திருநாள் - பெருநாள்!

1971இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு

அதுபோலவே 1971இல் இந்தியாவையே அதிர வைத்த அய்யா நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு - இராமனைச் செருப்பாலடித்தவர்களுக்கா ஒட்டு? என்று அந்தத் தேர்தலைத் திசை திருப்பிய ராஜாஜி அணிக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் - இனஉணர்வு பொங்கு மாங்கடலாப் பொங்கி எழுந்து திமுகவுக்கு 184 இடங்களில் வெற்றி வாகை சூடிட வைத்த வரலாறு படைத்த நகரம் அல்லவா! சேலம்!!

அங்கேதான் இப்பொழுது நாம் கூடி, முக்கிய முடிவுகள் எடுக்கவிருக்கிறோம்!

களம் காண துடித்த கழகக் காளையர்களே! உங்களுக்கு வேலை காத்திருக்கிறது!

அறைகூவல்களைச் சந்திப்போம் வாரீர்!

கருஞ்சட்டை இராணுவத்தின் கட்டுப்பாடு மிக்க இருபால் தோழர்களே இன்று புதிதாய் முளைத்துள்ள ஆரிய ஆக்டோபஸ் (எட்டுக் கால் பிராணி) நம் இனத்தின்மீது திட்டமிட்டு நடத்திடும் அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க,

ஜாதி தீண்டாமையை அழிக்க,

பெண்ணடிமையை ஒழிக்க,

சுயமரியாதை உணர்வு செழித்தோங்க, அறை கூவல்களை ஏற்கும் செயல் திட்டங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.

பெரியார் உலகம் பூத்துக் குலுங்க, நிதி சேகரிப்பு என்ற ஆயுதத்துடன் ஆயத்தக் களமாக இப்பொதுக் குழு அமையும்.
அறவழியில், அறிவு வழியில் போராடும் அடுக்கடுக்கான திட்டங்களை ஏற்க வாரீர்! வாரீர்!!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
4-12-2014

Read more: http://viduthalai.in/e-paper/92309.html#ixzz3KwmxLkox

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா மு.க.ஸ்டாலின், வைகோ, ஆ.இராசா வாழ்த்து


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா
மு.க.ஸ்டாலின், வைகோ, ஆ.இராசா வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தொலைபேசிமூலம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செய லாளர் வைகோ, மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா ஆகியோர் தங்களின் வாழ்த் துக்களையும், மகிழ்வினை யும் தெரிவித்துக் கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி ஸ்டாலின், திமுக தலைவர் கலைஞரின் உதவியாளர் சண்முக நாதன், இனமுரசு சத்தியராஜ், பெரியார் ஆப்பி ரிக்கன் பவுண்டேசன் சாலை மாணிக்கம், கானா நாட்டிலிருந்து எழிலரசன், மும்பையி லிருந்து சு. குமணராசன், இரவிச்சந்திரன், சென்னை மண்டலத் தலைவர் தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி, மூத்த வழக்குரைஞர் தியாகராசன், திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், வழக்குரைஞர் நாகநாதன், துபாய் மூர்த்தி ஆகியோர் தொலைப்பேசி வாயிலாக தமிழர் தலைவர் தம் பிறந்தநாள் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர்.

ஜெர்மனியிலிருந்து...

பெரியார் பன்னாட்டமைப்பு ஜெர்மனி ஸ்வென், கிளாடியா, ஜெர்மனி பேராசிரியை உர்லிக் நிக்கலஸ், குவைத் செல்லப் பெருமாள், லியாகத் அலிகான், பொறியாளர் சுந்தரராஜூலு குடும் பத்தினர் ஆகியோரும் தங்களின் வாழ்த்துகளையும், மகிழ்வினையும் தெரிவித்துக் கொண்டனர்.

காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் கே.வி. தங்கபாலு, ராஜா சிறீதரன் (SRMU), துரை. காசி ராஜன், மணப்பாறை, எழுத்தாளர் வி.சி. வில்வம், ப.சேரலாதன், லால்குடி அன்புராசா, திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை பொருளாளர் திருப்பத்தூர் அகிலா, திருப்பத்தூர் நகர மகளிரணி கவிதா, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலிருந்து துணைவேந்தர் நல்.இராமச்சந் திரன், நூலகர் நர்மதா, பதிவாளர் அசோக்குமார், பெங்களூருவிலிருந்து ஜே.கே., திண்டுக்கல் சுரேஷ், துபாய் அமுதரசன், திருச்சியிலிருந்து பன்னீர், வடலூர் இரமாபிரபா, யாழ்.திலீபன் ஆகியோர் தமிழர் தலைவர் அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வை குறுஞ்செய்தி மூலம் தெரி வித்துக் கொண்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/92306.html#ixzz3KwnoPqBM

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சனி பகவான்

சனிபகவான் சன்னதி யில் தீபம் ஏற்றி வழிபட் டால் சகல தோஷங் களும் நீங்கி சகல யோகமும் கிடைக்குமாம். குறிப்பாக தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயில், திருமங்கலக் குடி மங்களேஸ்வரர் கோயில்கள் சிறந்தவை. யாம் நமக்கு ஒரு சந் தேகம்! இந்த ஊர்களி லேயே குடியிருக்கிறார் களே அவர்களுக்கு எந்த அளவு தோஷங்கள் நீங் கின? யோகங்கள் சிக்கின? புள்ளி விவரம் உண்டா?

Read more: http://viduthalai.in/e-paper/92313.html#ixzz3KwnyPWOJ

தமிழ் ஓவியா said...

காரணமல்ல...


மறைமுகமாகச் செய்துவிட்டுத் தப் பிக்கப் பார்ப்பவர், இராமனைப்போல் பேடியும், அயோக்கியனுமே ஆவார் கள். குற்றம் செய்தவர்கள் தப்பித்துக் கொள்ள வசதி அளித்திருப்பதாலும், நல் வாழ்வும், சுயநலமும் பெற வசதி இருப் பதாலும் குற்றங்களும், குற்றவாளிகளும் அதிகமாகிறார்களே ஒழிய, மனிதச் சுபாவமே காரணமல்ல.
(விடுதலை, 30.12.1965)

Read more: http://viduthalai.in/page-2/92314.html#ixzz3KwoBvkWC

தமிழ் ஓவியா said...

தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் முதல் இடம் பார்ப்பனருக்கே!


சுதந்திரம் அடைந்த இந்தியாவில் தீண்டாமையின் நிலைபற்றி அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக் கழகத்தின் சமூக பொருளாதார மய்யம், இந்திய மனிதவள மேம்பாட்டு மய்யத்துடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. சமூக தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வது, கணிப்பது இதன் விழுமிய நோக்கமாகும்.

அப்படி எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவு என்ன கூறுகிறது என்பது மிகவும் முக்கியமானது.

தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் பார்ப்பனர் கள்தான் முதலிடத்தில் இருக்கின்றனர் பார்ப்பனர்களில் 54 விழுக்காட்டினர். தீண்டாமையை அனுசரிப்பதில் உறுதியாகவே உள்ளனர். தீண்டாமையை அனுசரிப்ப தில்லை என்று கூறும் பார்ப்பனர்கள் கூட, பொது இடங்களில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், வீட்டில் ஆச்சாரம் கடைப்பிடிக்கப்படும் என்று கூறியதையும் கவனிக்க வேண்டும்.

மதவாரியாக எடுத்துக் கொண்டாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் தீண்டாமையை அதிகம் கடைப்பிடிக்கின்றனர். (35%) என்றும் ஆய்வு கூறுகிறது.

பார்ப்பனர்களால் பிரச்சினை ஏதும் இல்லை - பார்ப்பனர் அல்லாதார்தான் தாழ்த்தப்பட்டவர்களை அவமதிக்கின்றனர் என்று மேதா விலாசமாகப் பேசுகிறவர்களின் கண்கள் இனிமேலாவது திறக்க வேண்டும்.

அடிப்படையில் இந்து மதத்தின் ஆரிய வேராக இருக்கக் கூடியவர்கள் பார்ப்பனர்கள்தாம். மேம் போக்கில் அவர்கள் திருந்தி விட்டதாகக் வேடம் கட்டிக் கொள்கிறார்களே தவிர, உள்ளப் பாங்கில் அவர்கள் அடிப்படைவாதிகளே!

தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொல்லுகிற சங்கராச்சாரியார் தானே அவர்களின் ஜெகத்குரு? தீண்டாமைபற்றி காந்தியார், காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டும்கூட சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

சாஸ்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள் அவர்கள் மனம் நோகும்படி தன்னால் நடந்து கொள்ள முடியாது என்று தானே காந்தியாரிடமே கூறினார்.

சாஸ்திர நம்பிக்கையாளர்கள் மனம் நோகக் கூடாது என்பதில்தான் ஜெகத் குருக்களின் எண்ணம் தோய்ந்து கிடக்கிறதே தவிர - தீண்டாமை என்னும் கொடுமையால் இழிவுபடுத்தப்படுகிற, உரிமைகள் மறுக்கப்படுகிற கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின், மனம் படும் துயரம்பற்றி ஜெகத் குருக்களுக்குக் கவலையில்லை எனபதையும் கவனிக்க வேண்டும். இன்னும் ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே, அதன் பொருள் என்ன? தாங்கள் துவி ஜாதியினர் - இரு பிறவியாளர்கள் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் - பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்று சொல்லாமல் சொல்லுவதாகத்தானே பொருள்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில்களில் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்று தந்தை பெரியார் தெரிவித்த கருத்தும், திராவிடர் கழகத்தின் முயற்சியும் - தி.மு.க. அரசின் சட்ட ரீதியான செயல் பாடுகளும் முடக்கப்பட்டு இருப்பது ஏன்?

உச்சநீதிமன்றம் சென்று அதனை முடக்கியவர்கள் யார்? பச்சைப் பார்ப்பனர்கள்தானே? சங்கராச்சாரியார் சிபாரிசும், மறைந்த ராஜாஜி அவர்களும் தானே ? இல்லை என்று மறுக்க முடியுமா?

பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் கோயிலின் அர்ச்சகராக ஆனால் சாமி சிலை தீட்டுப்பட்டு விடும் என்று வைகனாச ஆகமத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்காட்டியவர்கள் பார்ப்பனர்கள் தானே!

சங்கர மடங்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் சங்கராச்சாரியாகும் பொழுதுதான் உண்மையான சுதந்திரம், தீண்டாமை ஒழிப்பு நிலவுவதாகப் பொருள் என்று பார்ப்பனரான காகா கலேல்கர் கூறவில்லையா!

தாழ்த்தப்பட்டவர்கள் சங்கராச்சாரியாராக ஆவது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்தபட்சம் சங்கரமடத்தில் ஒரு பணியாளராக தாழ்த்தப்பட்ட ஒருவர் நியமிக்கப் படுவாரா என்பதை சவால் விட்டே கேட்கிறோம்.

சிறீரங்கம் கோயில் கோபுரம் கட்டப்படுவதற்கு பெரும் அளவு நன்கொடை அளித்த இசைஞானி இளையராஜாவுக்கு குட முழுக்கு விழாவில் குறைந்த பட்சம் ஒரு ஆடை போர்த்திக் கவுரவிக்கத் தவறியது ஏன்?

தமிழ் ஓவியா said...


காஞ்சி சங்கர மடத்தில் சரிக்குச் சமமாக நாற்காலி போட்டு சுப்பிரமணிய சாமிகள் உட்காருவதும், மாண்புமிகு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தரையில் உட்கார வைக்கப்படுவதும் ஏன்?

சங்கரமடத்தின் பார்வையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல; பார்ப்பனர் அல்லாதவர்கள் அத்தனைப் பேரும் தீண்டத்தகாதவர்கள் தான் என்பது இதன் மூலம் தெற்றென விளங்கவில்லையா?

ஒரு பல்கலைக் கழகமே ஆய்வு செய்து வெளிப்படுத்திய தற்குப் பிறகும்கூட, பார்ப்பனர்கள் நல்லவர்கள், அவர்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரச்சினை இல்லை என்று பம்மாத்துப் பேசுவதைப் பார்ப்பனர் அல்லாதார் கைவிட வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

பார்ப்பனர் அல்லாதார் தீண்டாமையைக் கடைப் பிடித்தால் கண்டிப்பாக சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் திராவிடர் கழகத்துக்கு மாற்றுக் கருத்தும் கிடையவே கிடையாது.

Read more: http://viduthalai.in/page-2/92317.html#ixzz3KwoNcWeG

தமிழ் ஓவியா said...

மாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்

மாடுகள் வேண்டாம். பண்ணைகள் வேண்டாம். செயற்கையாகப் பால் தயாரிக்க முடியும் என்று அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச் சியை மேற்கொண்ட பெருமாள் காந்தி, ரையான் பாண்டியா, இஷா தத்தார் ஆகிய மூவர் அணியினர் செய்ற்கைப் பால் தயாரிப்புக்காக மூபிரீ என்ற பெயரில் ஒரு கம்பெனியைத் தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் தங்களது பால் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஈஸ்ட் போதும். அதை அடிப்படையாக வைத்து பயோ-எஞ்சினீரிங் முறையில் செயற்கைப் பால் தயாரிக்கப் போகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அடிப்படையில் பால் என்பது என்ன? ஆறு வகைப் புரதங்கள். எட்டு வகையான கொழுப்புப் பொருட்கள், அவ்வளவுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

செயற்கைப் பால் தயாரிப்பு முறையில் சிறிது மாற்றங்களைச் செய்வதன் மூலம் பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என பலவகை யான பால்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. செயற்கைப் பால் பார்வைக்கு அசல் பாலைப் போலவே இருக்கும். அத்துடன் அசல் பாலைப் போலவே அடர்த்தி கொண்ட தாக, ருசி கொண்டதாக சத்து கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைப் பாலில் சில சாதகங்களும் உள்ளன. அசல் பாலில் லாக்டோஸ் இருக்கும். இது பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. செயற்கைப் பாலில் லாக்டோஸ் இராது. அத்துடன் கெட்ட கொலஸ்ட்ராலும் இராது. செயற்கைப் பால் கெட்டுப் போகாது. பல நாட்கள் கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அசல் பால் மூலம் தயாரிப்பது போலவே செயற்கைப் பாலிலிருந்தும் பால் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

Read more: http://www.viduthalai.in/page-7/92345.html#ixzz3KwqNrld4

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அருகம்புல்

சிவாலயத்திற்குச் சென்று அருகம்புல் மாலை கட்டி ஆனை முகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள் - எதிர்பார்ப்புகள் நிறை வேறுமாம்.

சரி. அருகம்புல்லை மேயும் ஆட்டுக்கும் மாட் டுக்கும் மனிதர்களைவிட அதிக பலன் கிட்டுமோ!

Read more: http://viduthalai.in/page1/92200.html#ixzz3KwqxXxcE

தமிழ் ஓவியா said...

ஆலயத்தை மூடுங்கள் உயர்நீதிமன்றம்


சென்னை, நவ.2_ கோவில் என்பது மக்கள் அமைதியாக வழிபாடு நடத்துவதற்காகத்தான். ஆலயத்தில் மக்கள் அமை தியாக வழிபட முடிய வில்லையெனில், அதை இழுத்து மூடுவதில் தவ றில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரி வித்துள்ளது. கோவில் திருவிழாக்களில் யாருக்கு முதல்மரியாதை கொடுப் பது என்பது தொடங்கி, தேர் இழுப்பது வரை சிக் கல்தான். இரு குழுக்களாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்வது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது.

இதேபோல ஒரு பிரச்சினை காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோயிலைப் பூட்டி, வரு வாய்த் துறை அதிகாரிகள் "சீல்' வைத்து விட்டனர். எனவே இந்த கிரா மத்தைச் சேர்ந்த இ.சமன் என்பவர் உயர் நீதிமன்றத் தில் இது தொடர்பாக பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எங்களது கிரா மத்தில் இரண்டு கங்கை யம்மன் கோயில்கள் உள்ளன. ஊரில் இரண்டு குழுக்களுக்குள் பிரச் சினை ஏற்பட்டதால், கோயிலைப் பூட்டி, வரு வாய்த் துறை அதிகாரிகள் "சீல்' வைத்து விட்டனர். அதனால், வழிபட முடி யாமல் மக்கள் சிரமப்படு கின்றனர். கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற் றக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் இல்லை. எனவே, கங்கையம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட ஆட் சியர், வருவாய்த் துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராய ணன் ஆகியோர் அடங் கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் தங்களின் உத்தரவில், கோயில்களில் வழிபடுவதில் சண்டை யிட்டுக் கொள்ளும் அள வுக்கு இந்த சமுதாயத்தில் பிரிவினை உள்ளது. இது வருத்தமளிப்பதாக உள் ளது. கோயிலைப் பூட்டி, வழிபாட்டு உரிமையில் குறுக்கிட்டனர் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்களால் அமைதியாக வழிபட முடியவில்லையெ னில், கோயிலை இழுத்து மூடலாம். கோயிலை மூடி, அதிகாரிகள் சீல் வைத்தது சரியான முடிவுதான் என்று கூறினார். மேலும், இந்த மனுவை பொது நல வழக்காகக் கருத்தில் கொள்ள முடியாது. என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் ஆசிரியர் அகர வாழ்த்து!

- புலவர் குறளன்பன், கோவை

அறிவுப் பெரியார் உலகம் அமைக்கும் அறிவினாய் வாழி!
ஆரியப் பார்ப்பு அலறப் பணிபுரி ஆர்வினாய் வாழி!
இனநலப் போரில் இடையறா தியங்கும் இன்பினாய் வாழி!
ஈ.வெ.ரா. கொள்கை ஏந்தி நிலனாள் ஏறினாய் வாழி!
உண்மை உலகில் ஓங்க ஒலிக்கும் உரையினாய் வாழி!
ஊரும் உலகும் விருதினால் ஊக்கும் உழைப்பினாய் வாழி!
எழுகதிர் போல் எழும் எழுச்சிப் பெரியார் இயல்பினாய் வாழி!
ஏய்க்கும் மூட இயக்க மடமை எதிர்ப்பினாய் வாழி!
ஐயம் நீக்கி அறிவறம் கூறும் அழகினாய் வாழி!
ஒழுக்கம் எவர்க்கும் உயிரெனும் கொள்கை உணர்வினாய் வாழி!
ஓதிய வாறே ஒழுகும் வாழ்க்கை ஒளியினாய் வாழி!
ஓளவியம் அறியா அழகிய மனநல அன்பினாய் வாழி!
அஃகா வீரமணி அருங்குணம் பாடி ஆடுவோம் வாழி!

Read more: http://viduthalai.in/page1/92213.html#ixzz3Kwsf2ZiD

தமிழ் ஓவியா said...

ஆர்க்கும் போர் முரசு

நாவை ஆசிரியர் அசைக்கும்போது
நடப்பது எப்படி என்று நதிகள் குறிப்பெடுத்துக் கொள்ளும்
நட்சத்திரங்களுக்கு
வகுப்பு திறக்கும்
அவருடைய
ஒவ்வொரு எழுத்திலும்
ஈரோட்டு வெளிச்சம்
இல்லாமல் இருக்காது!
சூரிய முகவரியில்
தமிழனை நிறுத்திச் சென்ற
அய்யா கொள்கையை
ஆர்க்கும் போர்முரசு
ஆசிரியர் வீரமணி

- கவிஞர் ஈரோடு தமிழன்பன்

Read more: http://viduthalai.in/page1/92211.html#ixzz3Kwso08Jw

தமிழ் ஓவியா said...

கடலூர் முதல் கருப்பூர் வரை...


கண் உறங்கா கடலலையாய்!

காலமெல்லாம் உழைக்கின்றார்!

புண் படுத்தும் சாதி மத புரட்டுகளை.

புறம் தள்ளி எதிர்க்கின்றார்! மண் மணக்க மனிதத்தை ,

மாண்புடனே உரைக்கின்றார்! பெண் இனத்தின் விடுதலைக்கு,

பெரியார் ஒருவரே வழி என்றார்! வன்கொடுமை சட்டத்துக்கே,

வரிந்து குரல் கொடுக்கின்றார்! கண் விழியை இமை மூடி காப்பது போல்,

கருத்துடன் நம்மை காக்கின்றார்! வெண்முத்து நிகர்த்த பொன் சிரிப்பால்,

வித்தகர் நம்மிடை விதைக்கின்றார் பண்பாட்டுப் படையெடுப்பின் பாதகங்கள்,

பக்குவமாய் எடுத்து உரைக்கின்றார்!

பொன் நிகர்த்த தாய் மடியில் பிறந்திட்ட கடலூர்!

புரட்சி மிக்க நடை போட்டு, சேர்ந்திட்ட கருப்பூர்! எண்திசையும் பெரியாரின் புகழ் பரப்பும் ஏற்றமிகு பணியினை

செய்கின்றார்! விண்முட்டும் பாசம் மிக்க எங்கள் அய்யா,

வீரமணி ஒருவர் தானே நம் தலைவர்! தண்கடல் அழியினும், அழியா தந்தை கொள்கை,

தன் மூச்சாய் கொண்ட தமிழர் தலைவர்,

வாழ்க! வாழ்கவே!!


- தகடூர் தமிழ்ச்செல்வி

Read more: http://www.viduthalai.in/page1/92223.html#ixzz3KwtCrjCf

தமிழ் ஓவியா said...

மத்திய ஆட்சியைப் புரிந்துகொள்ளுங்கள்!

- ஊசிமிளகாய்

டில்லியில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் -இரு அவைகளிலும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அங்கே மாநிலங்களவையில் பேசிய இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்ட ஒரு முக்கிய கருத்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அவைக்குக் கொண்டு வாருங்கள் என்று கூறியதேயாகும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள், யார் யாரையோ அழைத்து வருகிறார்கள் நம் நாட்டுக்கு, தயவு செய்து நாடாளுமன்றத்திற்கு நமது பிரதமர் மோடி அவர்களை அழைத்து வாருங்கள்; அதற்கான ஏற்பாட்டினைச் செய்யுங்கள் என்று சிரிப்பொலிக்கிடையே கூறினார்.

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., திரு.டெரெக் ஓ பிரியென் அவர்கள் பேசுகையில், நமது பிரதமர் மோடி அவர்கள் உலக நாடுகளுக்குச் சென்று தொழில் தொடங்க முதலாளிகளையெல்லாம் நம் நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறார்; விசாவை தங்கு தடையின்றி வழங்குவோம் என்றெல்லாம் கூறியுள்ளார்.

தயவு செய்து அவைக்கு வருவதற்கு தலைவர் அவர்களே அவருக்கு விசா வழங்கி உள்ளே இந்த அவையில் அமர வைத்து எங்களது கேள்விகளுக்கு பதில் கூறிட வாய்ப்பளித்தீர்களேயானால், நாங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறுவோம் என்று பேசி, அங்கே பதிவாகி இருக்கிறது!

உலகில் எந்த நாட்டு நாடாளுமன்றத்திலாவது இப்படித் தங்கள் பிரதமர்கள்பற்றிப் பேசியுள்ளனரா என்று அரசியல் நோக்கர்கள் ஆய்ந்து கொண்டுள்ளார்கள்!

பொதுவாக பிரதமர் நாடாளுமன்றம் நடைபெறுவதற்கு முதல் முன்னுரிமை தருவதுதான் சரியான நடைமுறையாக இருக்கவேண்டும் - பார்லிமெண்டரி ஜனநாயகத்தில்.

சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ நடைபெறுகையில், முக்கிய அரசு அறிவிப்புகளைக்கூட முதலில் அங்கேதான் அறிவிக்கவேண்டுமே தவிர, வெளியிலோ, வேறு பொதுக்கூட்ட விழாக்களிலோ அறிவிக்கக்கூடாது; பிரதமர் மோடி அதையும்கூட லட்சியம் செய்யாது அறிவிப்புகளை வெளியிடுவதாக முன்னாள் அமைச்சர் புதுவை நாராயணசாமி அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்வது தவறல்ல. ஆனால், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதுபோல அடிக்கடி அவை கூடிடும்போது செல்வது விரும்பத்தக்கதா? மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதில் அளிக்கவேண்டாமா?

#######

அண்மையில், ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி புதிதாகக் கூடுதலாக மோடி அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட, இந்துத்துவா கதாகாலட்சேப பெண் அமைச்சர் ஒருவர் டில்லி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு, மிகவும் தரக்குறைவானதும், மதக் கலவரங்களைத் தூண்டும் வகையிலும் அமைந்தது குறித்து நாடாளுமன்ற அவைகளில் அத்துணை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து, அவைகளை நடக்கவிடாமல் ஒத்தி வைக்கும் சூழ்நிலை உருவாகியது.

இப்படி ஒரு மத்திய அமைச்சர், அதுவும் ஒரு பெண் அமைச்சர் பேசலாமா?

மத்திய பெண் அமைச்சரின் செங்காங்கடைப் பேச்சு

டில்லியில் பா.ஜ.க.வுக்கு வாக்கு அளித்தால் அவர்கள் இராமனுக்குப் பிள்ளைகள்; இன்றேல் அவர்கள் தவறான வழியில் பிறந்த பிள்ளைகள் என்று பேசியுள்ளார்.

கையால் எழுதவே கூசுகிறதே! எவ்வளவு மோசமான, மற்றவர்களை அசிங்கப்படுத்தும் - மற்றவர்களின் தன்மானத்திற்கு சவால்விடும் கேவலமான சவடால் பேச்சு இது!

மோடியை எதிர்க்கிறவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவர் என்று உளறிக்கொட்டிய திமிர்ப் பேச்சுப் பேசிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.காரர் பாட்னாவைச் சார்ந்த பிகார்காரர் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார் - பரிசு கொடுப்பதுபோல!

இதுவும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் சாதனைதான்!

பஞ்ச பாண்டவர், குந்தியின் பிள்ளைகள் என்ற மகாபா(தக)ரதக் கதையில்,

அய்வரும் ஒரே தகப்பனாருக்கு முறைப்படி திருமணம் செய்த பிறகுதான் பிறந்தவர்களா?

இந்த அமைச்சரான கதாகாலட்சேப ஆர்.எஸ்.எஸ். சேவகி அம்மாள்தான் பதில் கூறவேண்டும்!

மகாபாரதக் கதையில், விபச்சாரத்தால் பிறந்த பிள்ளைகளைப் பட்டியலிட்டால், இவர்கள் முகத்தைத் தொங்க விட்டுக் கொள்ளமாட்டார்களா?

இராமர் பிள்ளைகள் - லவ; குசா கதைப்படி - எங்கே பிறந்தனர்? காட்டில். ஏன் காட்டுக்கு சீதை அனுப்பப்பட்டாள்?

இராமனின் சந்தேகம்தானே காரணம்!

அட வெட்கங்கெட்ட மூளிகளே, இப்படி ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக்கொள்வது ஏன்?

மோடியின் அமைச்சராக இப்படிப்பட்டவர் இருந்தால், அதைவிட பிரதமர் மோடிக்குக் கேவலம் உண்டா?

நாட்டுக்கு அவலம், அசிங்கம் வேறு உண்டா?

சிந்தியுங்கள்!

தெருக் குப்பையை அள்ளிக் கொட்டுமுன், இந்த அமைச்சரவைக் குப்பைகளை அள்ளி வெளியே கொட்டுங்கள் மோடிஜி!

டில்லி வாக்காளர்கள் இதற்கு தக்க பதிலடி தரவேண்டும் - தேர்தலில்!

Read more: http://viduthalai.in/page1/92268.html#ixzz3KwuPQrWE

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் நான்கில் ஒருவன் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான்: ஆய்வு முடிவு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவில் நான்கில் ஒருவன் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான்:

முதலிடம் பார்ப்பனர்களுக்கே!

அமெரிக்காவின் மேரிலேண்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவு


புதுடில்லி, டிச.3_ தீண் டாமையைக் கடைப் பிடிப்பதில் பார்ப்பனர்கள் தான் முதலிடத்தில் உள் ளனர். இந்தியா சுதந்திர மடைந்து 64 ஆண்டுகள் ஆனபிறகு தீண்டாமை குறித்த ஒரு கணக்கெ டுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் சமூகப்பொருளாதார ஆய்வு மய்யம் இந்திய மனிதவளமேம்பாட்டு மய்யத்துடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் பல்வேறு இன மொழி மத மக்கள் வாழும் நாடான இந்தி யாவில் கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகியும் இன் றும் தீண்டாமைக் கொடுமை நாடெங்கிலும் தலைவிரித்தாடுகிறது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒரு பாவச்செயல், என்று குறிப்பிட்டு இருப்பினும் அந்தப்பாவச்செயலை நான்கில் ஓர் இந்தியன் செய்துகொண்டு தான் இருக்கிறான்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல் வேறு குழுக்களாகப் பிரிந்து இந்த ஆய்வை நடத்தினர். இந்த ஆய் வின் முடிவில் தீண்டா மையை அதிகம் இன்றள வும் கடைப்பிடிப்பதில் முதலிடம் வகிப்பவர்கள் பார்ப்பனர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தீண் டாமை இதர மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கிய மதங்களைவிட இந்துமதத்தில்தான் அதிகம் இருக்கிறது, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் தனது மதத்தைச் சார்ந்தவர்களையே தாழ்த் தப்பட்டவர்கள் என்று கூறி ஒதுக்கிவைத்துள்ள னர். முக்கியமாக பார்ப்ப னர்களிடம் இந்த தீண் டாமைத் தொடர்பான கண்ணோட்டம் மிகவும் அதிகமாக உள்ளது.

ஆய்வின்போது கேட் கப்பட்ட நீங்களும், உங் கள் குடும்பத்தினரும் தீண் டாமையைக் கடைப்பிடிக் கின்றீர்களா? என்ற கேள்விக்கு பார்ப்பனர்களில் 54 விழுக்காட்டினர் ஆம் என்றே கூறியுள்ளனர்.

இல்லை என்று கூறிய பார்ப்பனர்களில் பொது இடங்களில் தீண்டாமை யைக் கடைப்பிடிப்ப தில்லை என்றாலும் எனது வீட்டில் ஆச்சாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதர சாதியினரை எங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று பதிலளித்துள்ளனர். இந்து மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் தாழ்த்தப்பட்டவனாக இருப்பின் நாங்கள் முற்றி லும் அனுமதிக்கவே மாட் டோம் என்று கூறியுள்ள னர். இதே வேளையில் மற்ற மதத்தவர்களிடம் தீண்டாமையைக் கடைப் பிடிக்கின்றீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜெயின் சமூகத்தினர் தீண்டாமையை அதிகம் கடைப்பிடிப்பதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஆய்வுக் குழு உறுப்பினர்களில் ஒரு வரான அமித் தோராட் என்பவர் கூறும்போது ஜெயின் சமூகத்தினர் மிகவும் குறைந்த அள விலேயே உள்ளனர். ஆனால் அவர்களில் முக் கால் பங்கினர், நாங்கள் தீண்டாமையைக் கடை பிடிப்பவர்கள் என்று கூறியுள்ளனர்.

தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களில் கிறிஸ்தவர்களும், முஸ்லீம் களும் கூட அடங்குவர். இந்தியாவில் மட்டுமே இந்த மதத்தவர்களிடம் தீண்டாமை நிலவி வரு கிறது. இவர்கள் இந்து மதத்தில் இருந்து பிரிந்து சென்ற காரணத்தால் இப் பழக்கம் இவர்களிடையே தென்படுகிறது. பார்ப்பனர் வீட்டில் பிறக்கும் ஒருவனுக்கு அவனை வளர்க்கும் முறை யிலேயே தீண்டாமை மனதளவில் உடன் பிறந்த ஒன்றாகிவிடுகிறது, இக் காரணத்தால் அவன் பொதுவிலும் தீண்டா மையைக் கடைப்பிடிக்கத் தயங்குவதில்லை. தென் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் உயர்சாதி யினருக்கென தனி வழி பாட்டு இடங்களும் அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என தனி வழிபாட்டு இடங்களும் உள்ளன.

இந்துமக்களிடையே தீண்டாமை வடமாநிலங் களில் அதிகம் காணப்படு கிறது. இதில் அதிகம் மத்தியப்பிரதேசத்தில் உள்ளது. இங்கு 57 விழுக் காட்டு மக்கள் தீண்டா மையைக் கடைப்பிடிக்கின் றனர். அதாவது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து உயர்சாதியி னருமே தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் வருந்தவில்லை. மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்து இமாச்சலப்பிரதேசம் 50 விழுக்காடு, சத்தீஷ்கர் 48, ராஜஸ்தான் பிகார் 47, உத்தரப்பிரதேசம் 43, உத் தரகண்ட் 40 குஜராத் 39, தமிழகத்தில் 27 விழுக் காட்டினர் தீண்டாமை யைக் கடைப்பிடிப்பதாகக் கூறியுள்ளனர்.

மேற்குவங்கத்தில் ஒரு விழுக்காட்டினரும், கேர ளாவில் இரண்டு விழுக் காட்டினரும், மகாராஷ் டிராவில் 4 விழுக்காட்டி னரும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாகக் கூறி யுள்ளனர்.பார்ப்பனர்களில் அதிகம்பேர் தீண்டாமை யைக் கடைப்பிடிப்பதை தவறாகக் கருதவில்லை அது எங்களது உரிமை எங் களது சொந்த விருப்பம் என்று பதிலளித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page1/92265.html#ixzz3Kwuff6EL

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவருக்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் வாழ்த்துஅன்புள்ள நண்பருக்கு..

வணக்கம். நலம். நலமே நாடுகிறேன். 82ஆம் ஆண்டில் தாங்கள் அடியெடுத்து வைத்துள்ளதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். பெரியார் அவர்களின் பெருந்தொண்டினைத் தொடர்ந்து செய்து வரும் தங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு கூறி வாழ்த்துகிறேன்.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு

அய்ந்துசால்பு ஊன்றிய தூண்

அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் அய்ந்து பண்புகளும் நிறைந்துள்ள தாங்கள் வள்ளுவர் கூறியதுபோல சால்பு என்பதை தாங்கி நிற்கும் தூணாக திகழ்கிறீர்கள். மீண்டும் தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more: http://viduthalai.in/e-paper/92399.html#ixzz3L20ZDjnU

தமிழ் ஓவியா said...

மனுதர்ம நூலை அம்பேத்கர் எரிக்கச் சொல்கிறார்


சிலவற்றைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே மனுஸ்மிருதி.

அநீதிகளைச் செய்தாவது சிலவற்றை அழிக்கா விட்டால் பார்ப்பன இனம் அழிந்து போகும் என்றெண்ணி, அதற்காகச் சிதறி - ஒற்றுமையின்றிக் கிடந்த பார்ப்பனர்களை ஒன்று திரட்டி, சதி வேலைகளை நரித் தந்திரத்தின் மூலம் செய்து முடிப்பதற்காக விடப்பட்ட அறைகூவல் தான் மனுஸ்மிருதி.

சிதைந்த ஒற்றுமையை மீட்க அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுவது வரலாற்று உண்மை. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற பழமொழிக்கேற்ப, மிக மிக முயன்று, புதிய கொடுமையான பார்ப்பன (அ)நீதியை உருவாக்கியவன் மனு.

இந்த மனுஸ்மிருதி, நீதியும் நேர்மை மிக்க தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அப்படிப்பட்ட நீதி நூலை உருவாக்குமளவுக்கு அவன் (மனு) ஒரு சமூகவியல் அறிஞனும் அல்ல. அவன் ஒரு அயோக்கியன்.

ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கும் இந்த மனுஸ்மிருதி தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டும். மீளமுடியாக் கொடுமைச் சேற்றில் எங்களை புதைக்க எண்ணிய மனுஸ்மிருதியை, உயிரைப் பணயம் வைத்தாவது ஒழித்துக் கட்டியே தீர வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்தது இதனால் தான்.

அம்பேத்கர் சிந்தனைகள் என்ற நூலிலிருந்து

Read more: http://viduthalai.in/page-7/92383.html#ixzz3L23Fk42A

தமிழ் ஓவியா said...

கோயிலில் தமிழில்லை! புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற் கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.

பெரியார்:

சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்

தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்

பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?

தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!

பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?

பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?

தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!

பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?

தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.

தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!

பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!

குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)

Read more: http://viduthalai.in/page-7/92385.html#ixzz3L23VYbuN

தமிழ் ஓவியா said...

சாமி ரெண்டு! ஆ-சாமி ரெண்டு!!

இன்னிசை இளவல் இளையராஜா, கவிஞர். கங்கை அமரன் அண்ணன் பாவலர் வரதராசன் மேடை இசைக் கலையில் வல்லவர். அவர் நடத்தும் இசைக்கலை நிகழ்ச்சிகள் உரையும், பாட்டுமாகத் தொடர்ந்து வரும்.

பகுத்தறிவு மணங்கமழ பல குட்டிக் கதைகளும் சொல்வார். சிந்தனையைக் கிளறும் கீழ்க்காணும் கதை அவற்றுள் ஒன்று.

திருப்பனந்தாள் சிவபெருமான், சீரங்கநாதன், மதுரைக் கள்ளழகன், காஞ்சி காமாட்சி, மாங்காடு மாரியம்மன், அன்னை அபிராமி... சாமிகள் பணக்கார சாமிகள்? ஆறுகாலப் பூஜை... புனஸ்காரம்.. ஆரத்தி.. தேரோட்டம்... திருவிழா... பொண்டாட்டி, புள்ளைக்குட்டி, வைப்பாட்டி, கள்ளப்புருஷன் இவைகளுக்குண்டு.

காடன், மாடன், மதுரைவீரன், பேச்சி, சடைச்சி, பத்ரகாளி சேரிச்சாமிகள்... ஊரின் ஒதுக்குப் புறத்திலே... சுடுகாட்டுக்குப் பக்கத்திலே குடியிருக்கும் இந்த ஏழைச்சாமிகளுக்கு நாள்தோறும் நாய் அபிஷேகம் நடத்தும். காக்கை எச்சமிட்டு நைவேத்தியம் செய்யும். ஆக, சாமிகளும் ரெண்டு! ஆ-சாமிகளும் ரெண்டு!!

தகவல்: சங்கை வேலவன்

Read more: http://viduthalai.in/page-7/92385.html#ixzz3L24ghVlZ

தமிழ் ஓவியா said...

கலைகள் - ஓவியங்கள்


சிலர் சீர்திருத்தம் செய்வதன் மூலம், பழைய சின்னங்களையும் - ஓவியங்களையும் - கலை களையும் அழித்து விடாதீர்கள் என்கிறார்கள். இந்தக் கூட்டத்தார் எந்தப் பழைய சின்னம், ஓவியம், கலை முதலியவைகளை மனதில் நினைத்துக் கொண்டு சொல்கின்றார்கள் என்று நான் கண்ணியமாய் நினைக் கின்றேனோ அந்தச் சின்னமும்,

ஓவியமும், கலை களுமேதான், நம்மையும், நம் மக்க ளையும் நமது நாட்டையும் பாழாக்கியதுடன் ஒவ்வொரு அறிவாளி மனதிலும் சமுதாய சீர்திருத்தம் செய்து தீர வேண்டும். இல்லையேல் வேறு எந்த விதத் திலும் நமக்கு கதிமோட்சமில்லை என்று நினைக்கும் படியான நிலைக்குக் கொண்டு வந்து விட்டன.

- தந்தை பெரியார், விடுதலை 30.1.1974

Read more: http://viduthalai.in/page-7/92388.html#ixzz3L24o14Xi

தமிழ் ஓவியா said...

ஜஸ்டீஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவு கழகத் தலைவர் இரங்கல்


கடந்த 20 நாள்களுக்கு முன் 100 வயது நிறைவடைந்த புகழ் வாய்ந்த நீதிபதியான ஜஸ்டீஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் நேற்று (4.12.2014) கேரளாவில் காலமானார் என்பது மிகவும் துயரம் தரும் செய்தியாகும்.

சிறந்த நீதிபதியாக அவர் கேரள உயர் நீதிமன்றத்திலும், பிறகு உச்சநீதி மன்றத்திலும் அவர் தந்த தீர்ப்புகள் வரலாற்றுப் புகழ் வாய்ந்தவை. சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அவர் அளித்த முதல் தீர்ப்பு - 50 விழுக்காட்டிற்கு மேலும் இட ஒதுக்கீடு இருக்கலாம்; அரசியல் சட்டத்தில் உச்சவரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்ற முக்கியத் தீர்ப்பாகும்.

அதுபோலவே, நெருக்கடி காலத்தில் அவர் துணிச்சலுடன் தந்தை பெரியார் எழுதிய உண்மை இராமாயணம் - சச்சி இராமாயண் என்ற வால்மீகி இராமாயணம்பற்றி இந்தி மொழி பெயர்ப்பு நூலுக்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்ததை எதிர்த்து, வெளியீட்டாளர் தொடர்ந்த வழக்கில் (1976 இல்) அத்தடை செல்லாது என்றும், இராமாயணங்கள் பல உள்ள நிலையில், தந்தை பெரியார் அவர்களுடைய மாறுபட்ட சிந்தனை - ஆய்வு தவறு அல்ல; ஆயிரம் எண்ணங்கள் மலரட்டும் என்று ஒரு தீர்ப்பு வழங்கினார் (அதை மற்ற சட்ட ஊடகங்கள் - Law Reports
இல் பதிவு செய்யாது இருட்டடித்தனர்).

சுதந்திரம் நள்ளிரவில் - ஆகஸ்டு 15 அன்று நடுநிசியில் பதவியேற்றது ஜோதிடர் குறித்தது என்று கூறி, மூட நம்பிக்கையோடு இந்த நாட்டின் சுதந்திரம் பிறந்தது; இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை எதிர்த்து திராவிடர் கழகம் போன்ற சமூக அமைப்புகள் தொடர் பிரச்சாரம் செய்வது பாராட்டத்தகுந்தது என்று சில கட்டுரைகளில் எழுதி, அது மதச்சார்பின்மை தலைப்பில் வெளிவந்துள்ளது.

அத்தகைய சமூகநீதிப் பார்வையுள்ள முற்போக்குச் சிந்தனையாளர் மறைவு சட்ட உலகத்திற்கு மட்டுமல்ல, சமூகநீதிக்காகப் போராடும் உலகினருக்கும் மிகப்பெரும் இழப்பாகும்.

அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.5.12.2014

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-8/92396.html#ixzz3L25C8BrX

தமிழ் ஓவியா said...

அறிவுச்செல்வி.... அன்புச்செல்வன்...


அண்மையில் சென்னையில் நடைபெற்ற தலையங்க விமர்சனம் நூறாவது வார அமர்வு நிகழ்ச்சியில் பங்குபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தோழர் வேல்சாமி-ரேகா ஆகியோர் தன் இரட்டைக் குழந்தைகளுக்குப் பெயரிடச் சொல்லி வேண்ட, தலைவரும் பெண் குழந்தைக்கு அறிவுச்செல்வி என்றும், ஆண் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்றும் பெயரிட்டு மகிழ்ந்தார். உடனே அங்கு அமர்ந்திருந்த கருஞ்சட்டைத் தோழர்களிட-மிருந்து பலத்த கரவொலி எழுந்தது. அருகில் அமர்ந்திருந்த தோழர் ஒருவர் இந்த மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பிற்குக் காரணம் என்ன என்று வினவினார்.

அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்றும், அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் என்றும், ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே என்றும் ஏதோ பெண் என்பவள் அறிவு என்பதற்குச் சற்றும் தொடர்பில்லாதவள் போன்றும், அன்பினைத் தருவது மட்டும்தான் அவள் கடமை என்பது போன்றும், ஆண் என்றால் அறிவினைத் தருபவர் என்றும், அன்பு செலுத்துவது என்பது அவனுக்குத் தொடர்-பில்லாத துறை என்பது போன்றுமே சொல்லப்பட்டு வந்த, இன்றும் பெரும்பகுதி மக்களால் எண்ணப்படுதல் காணலாம். பெண்குழந்தைக்கு அறிவுச்செல்வி என்றும், ஆண் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்றும் பெயர் சூட்டலின் மூலம் மாற்றியமை பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார் அவர்களின் அடியொற்றி, அவர் சிந்தனைகளி-லிருந்து சிறிதும் பிறழாத திராவிடர் கழகத் தலைவரின் சிந்தனையினைத் தெள்ளத்-தெளிவாகக் காட்டியது.

மேலும், அங்கு நிகழ்ந்த சமூக மாற்றமும், ஊடகங்களும் என்ற கருத்தரங்கத்தில் பல்வேறு ஊடகங்களிலும் பணிபுரியும் வாய்ப்பு பெற்ற நம் இளைஞர்கள் கலந்துகொண்டு திராவிட இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கநிலை, செயல்கள், ஊடகங்களின் புறக்கணிப்பு போன்றவை குறித்து கவலை தெரிவித்து பேசியவற்றிற்குப் பதில் அளிக்கும்விதமாக அவர் உரையில் திராவிடர் கழகம் ஊடகங்களை நம்பி இல்லை. எந்தவொரு ஊடகமும் ஆதரவு தராதபோதும் தனியாக நின்று சமுதாயப் பணிகளை எந்தத் தொய்வும் இல்லாமல் செய்து முடிக்கும் என்று முழங்கியபோது எதிர்ப்பைத் தாண்டி, புறக்கணிப்புகளை மீறி, ஊடக மறைப்புகளைக் கடந்து வளர்ந்த இயக்கம் இது; எல்லாவற்றையும் கடந்து மக்களிடம் நேரடியாகத் தொடர்புள்ள இயக்கம் இது. அதைத் தொடர்ந்து செய்வோம் என்று சொன்ன துணிச்சல், தந்தை பெரியாரை நம் கண்முன்னே நிறுத்துவதாக இருந்தது.

- இறைவி

தமிழ் ஓவியா said...

ஆறறிவுப் போர்வாள்!


மாணவர்களை உருவாக்குபவர் ஆசிரியர்!
நீங்களோ பேராசிரியர்களை
உருவாக்கும் ஆசிரியர்!

தன் முதுகெலும்பை
பெரியாரின்
கைத்தடியாய்க் கொண்டவர்!

உடலுக்குள் இருக்கும் உயிர்போல
திடலுக்குள் இருக்கும்
அய்யாவின் கொள்கைக்காகக்
கொடி பிடிப்பவர்!

வெய்யிலிலும், மழையிலும்
தமிழர்களைக் காக்க
பெரியாரின்
கருப்புச் சட்டையில்
குடை பிடிப்பவர்!

சூத்திரனுக்குச் சூரியனாய்
பஞ்சமனுக்குப் பகலவனாய் இருந்து அவன் வீட்டுக்கு
வெளிச்சம் கொடுப்பவர்!

இனத் தொழிலை எதிர்க்கும் இளம் பெரியார்!
அவாளுக்குச் சவால் விடும்
ஆறறிவுப் போர்வாள்!
ஆத்திக நெறிகளை
விரட்டிட வந்த
பகுத்தறிவுப் பறை இசை!
கர்ம வினைகளுக்கு
எதிரான உயர்திணை!
காவித் துணியைப்
போகிக்குக் கொளுத்திய
கருப்பு நெருப்பு!
அம்பேத்கர் ஈன்ற
இடஒதுக்கீட்டுக் குழந்தையை
ஓர் தாயாய் இருந்து
தாலாட்டுபவர்!
எல்லோரும் தாயின்
தொப்புள் கொடியில்தான்
பிறந்தவர்கள்!
நீங்களோ தந்தையின்
தொப்புள் கொடியில்
பிறந்தவர்!
கருவை, காதலை கலைக்கும் மருத்துவர்களிடையே
ஜாதி வெறி எதிர்த்து
நீதி நெறி காக்கும்
உண்மையான மருத்துவர்!
நீங்கள் தான்
சமூகநீதி மருத்துவர்!
வாழ்க பல்லாண்டு!

- வன்னிஅரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்ற +2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னர், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது வழமை. அதை மாற்றி சி.பி.எஸ்.இ முடிவுகளைத் தள்ளிவைத்து, தமிழக மாணவர்களின் மதிப்பெண்ணை விடக் கூடுதலாக மதிப்பெண் வழங்கி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் இடங்களைப் பறிக்க முனைந்த சதிச் செயலைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் போராடி சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிய உண்மையை வெளிக்கொணர்ந்து அந்தச் சதியை உடனடியாக முறியடித்தவர் தமிழர் தலைவர் கி.வீரமணி என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

உலகம் இருளில் மூழ்குமா?

- சரவணா ராஜேந்திரன்

அமெரிக்க வானியல் ஆய்வுத்துறையான நாசா கூறியதாக அவ்வப்போது கட்டுக்கதைகளை உலகெங்கிலும் உள்ள சில மதவாதிகள் பரப்பிவிடுவதுண்டு. அதுவும் நாசாவின் இணையதளத்தில் இருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உலகை நம்ப வைப்பது தற்போது ஓர் ஏமாற்றுக் கலையாகப் போய்விட்டது.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதோ ராமர் பாலம் நாசாவே உறுதிசெய்த படம் என்று கூறி இந்து மத அமைப்புகள் பரபரப்பை உண்டாக்கின. இதற்கு நாசாவே மறுப்புத் தெரிவித்தும் இன்றும் ஒரு கூட்டம் இதை நம்புகிறது. சிதம்பரம் கோவிலுக்கு நேர் எதிரே வானவெளியில் இருந்து படம் எடுத்தால் அது வெண்மையாகத் தெரியும் என்பதும் நாசா பெயரில் வந்த கட்டுக்கதை. திருநள்ளாறுக்கு நேர் எதிராக வான்வெளியில் கடக்கும் எல்லா செயற்கைக் கோள்களும் சில வினாடிகள் செயலிழந்துவிடுமாம். இவை போன்ற மூடநம்பிக்கைகள் நாசாவின் பெயரால் பரப்பப்படுவதால் நாசா அவ்வப்போது மறுப்பு வெளியிட்டு வந்துள்ளது. இப்போது மேலும் ஒரு புரளி
"2014 டிசம்பர் மாதம் உலகம் இருளில் மூழ்கப் போகிறதாம்?

கிறித்தவ மதத்தின் சில பிரிவினர் இதோ தேவ மைந்தனின் இரண்டாம் வருகை என்று அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தற்போது தங்களின் வியாபாரத்திற்கு நாசாவையும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். 'உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும். அப்போது இறைவனுக்கு எதிரானவர்கள் அழிக்கப்-படுவார்கள்' என்பது கிறித்தவ மதத்தில் ஒரு பிரிவினரது நம்பிக்கை ஆகும். அவர்கள் தற்போது புதிய கட்டுக்கதையை விட்டு மக்களைக் குழப்பி இருக்கிறார்கள்.

அதற்கேற்ப, வரும் டிசம்பர் 2014 இல் உலகம் ஆறு நாட்கள் இருளில் மூழ்க இருப்பதாகவும், சூரியனில் ஏற்படும் காந்தப்புயலே இதற்குக் காரணம் என நாசா கூறிவிட்டது என்ற அறிவியல் கதையை விட்டுக் குழப்பியுள்ளார்கள்.

எப்போதும் போல் இது போன்ற மடமைத்தனமான செய்திகள் மேலும் பரவிவிடாமல் இருக்க நாசா முன்-னெச்சரிக்கை-யாக மறுப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் மாதம் 6 நாள்கள் உலகம் இருளில் மூழ்கி இருக்கும் என்ற கட்டுக்-கதைகள் நாசாவின் பெயரால் பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மையல்ல. அறிவுள்ள அனைவருக்கும் தெரியும், உலகம் பாதி நாள் இருளிலும் பாதி. நாள் பகலிலும் உள்ளது.

இருளை மனித இனம் விளக்குகளின் வெளிச்சத்தில் வென்றுவிட்டது. தற்போது சிலரால் பரப்பப்படும் கட்டுக்கதைகளின்படி மின்சாரம் தடைபட்டால்தான் இருளில் மூழ்க வாய்ப்புள்ளது. சூரியப்புயல் மட்டு-மல்ல, எந்த ஒரு இயற்கைக் காரணத்தாலும் மனிதனால் செயற்கையாகத் தயாரிக்கப்படும் மின்சாரத்தைத் தடைசெய்ய முடியாது. பருவநிலை மாற்றங்களான மழை, வெள்ளம், புயல் போன்ற நேரங்களில் மின்சாரம் தடைப்படுவது அந்த அந்தப்பகுதியில் மாத்திரமே நிகழும். அதுவும் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். ஆகவே உலகம் இனி வரும் காலத்தில் மேலும் அதீத அறிவியல் வளர்ச்சி பெற்று முன்னேறுமே தவிர இப்படி பொய்யான கதைகள் போன்று இருளில் மூழ்காது. மேலும், அந்தப் பொய்யான இணைய-தளத்தில் சிலர் தொலைக்காட்சியில் உரையாடுவது போன்ற நிகழ்ச்சி, அதன் பின்புலத்தில் நாசாவின் அடையாளம் எல்லாம் பொய்யாகத் தயாரிக்கப்பட்டவை.

சூரியப்புயல் என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புவியின் மேற்பரப்புவரை வந்து செல்கிறது. இதை, புவியின் மேலடுக்கில் உள்ள வளிமண்டலம் தடுத்து மீண்டும் வானவெளிக்கே அனுப்பிவிடும். இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நாசா வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மூடநம்பிக்கையைப் பரப்ப நினைக்கும் மதவாதிகளும், இதைக் கடவுள் வந்து சொன்னார் என்று சொல்வதில்லை. உலகம் இருளில் மூழ்கும் என்று கடவுள் சொன்னதாகச் செய்தி பரப்பினால், கக்கத்தில் கைவைத்து கேலிச் சிரிப்பே பரிசாகக் கிடைக்குமென்பதால் அறிவியல் மய்யமான நாசாவைப் பயன்படுத்துகிறார்கள் நாசக்கார மதவாதிகள். ஆனால் பொய்கள் பரவும் வேகத்தில் நாசாவின் உண்மை பரவுவ-தில்லை. ஊடகங்களும் பொய்க்குத் தரும் முக்கியத்துவத்தை உண்மைக்குத் தருவதில்லை.

தமிழ் ஓவியா said...

கருஞ்சட்டை தபால்காரர்


பகுத்தறிவு பரப்பும்
தொடர் ஓட்டத்தில்...
அய்யாவும் அம்மாவும்
ஏந்திய சுடர்
இப்போது ஆசிரியர் கையில்! இச் சுடரோடு
வெகுகாலம் தொடர்கிறது
இவரின்
ஓய்வற்ற பயணம்! ஆரிய நரிகளின்
ஆதிக்க ஊளைகளுக்கு...
அவ்வப்போது இருக்கும்
இவரின் பதிலடி!
அவையத்தனையும் தடாலடி! ** **
வயது ஏற ஏற
இவரின் சுறுசுறுப்பு
ஏறிக் கொண்டேயிருக்கிறது
உடலியல் இயல்பின் விதிவிலக்காய்! புத்தக வாசிப்பும்
மானுட நேசிப்பும்
வைத்திருக்கிறது இவரை
இன்னும் இளமையாய்! ** **
இன்று தஞ்சை
நாளை மராட்டியம்
நாளை மறுநாள் மலேசியா
ஒளியின் வேகத்தை விஞ்சும்
இவரின் தொடர் பயணங்கள்! ** **
மேடையிலே
இவர் முழங்குகையில்
நாகரிகம் தங்கியிருக்கும்
ஆதாரம் பொங்கியிருக்கும்! ** **
அய்யாவின் சிந்தனைகளை
அகிலம் எங்கும்
கொண்டு சேர்க்கும்
கருஞ்சட்டை தபால்காரர் சொந்தபுத்தி தேவையில்லை
அய்யா தந்தபுத்தி போதுமென
சுய அடையாளம் தேடாத
கடலூர் கருப்பு மெழுகுவர்த்தி சரி, யாரை ஏற்பது
பெரியாருக்குப் பின் என
வாடிக் கிடந்தவர்க்கு - காலம்
தேடித் தந்தது சரியாரை!

பெரியாரைக் கண்டிராத
என் வயதொத்தோர்
காண்கிறோம் இவர் உருவில்
தாடி- தடியற்ற பெரியாரை!

- பாசு ஓவியச்செல்வன்

தமிழ் ஓவியா said...

கருத்து


பாதிக்கப்பட்டவர்கள் அய்.நா.விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளிப்பதை இலங்கை அரசு தடுக்கிறது. விசாரணையைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் எதற்காக விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டும்.

- சையத் அல் ஹுசைன், தலைவர், அய்.நா.மனித உரிமைகள் கவுன்சில்

உயர் வகுப்பினர் எல்லோருமே அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள். அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். நம்மிடையே உள்ள பழங்குடியினர் மற்றும் தலித்களும்-தான் மண்ணின் மைந்தர்கள். அவர்களாகவே கல்வி, அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். அவர்கள் பிகாரில் அரசுகளை அமைப்பதற்கு முக்கியப் பங்காற்றுவார்கள்.

- ஜிதன்ராம் மாஞ்சி, முதல் அமைச்சர், பிகார்

குரல் ஓட்டு மூலம் நம்பிக்கை ஓட்டில் பா.ஜ. வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்-பட்டுள்ளதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை பா.ஜ. அரசு நசுக்கியுள்ளது. சட்ட-விதிகளின்படியும் ஜனநாயகத்தின் அடிப்படையிலும் ஓட்டெடுப்பு நடக்கவில்லை.

- ஏக்நாத் ஷிண்டே, எதிர்கட்சித் தலைவர், சிவசேனா

ஒருவர் மற்றொருவரின் உயிரைப் பறிக்கும் விதமாக அவரைக் கொலை செய்கிறார். அதற்கு ஈடாக அரசு அவரை மரண தண்டனை என்ற பெயரில் கொலை செய்வது ஆபத்தானது மட்டுமல்ல; அது எந்த வகையிலும் அறிவுப்பூர்வமானது அல்ல. மரண தண்டனை என்பது அடிப்படையிலேயே தவறான கருத்தியலாகும்.

- அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்

தமிழ் ஓவியா said...டிச.2 : தமிழர் தலைவர் பிறந்த நாள் சிந்தனை :

“பெரியார் உலகம்” படைக்கும் பகுத்தறிவுச் சிற்பியே!

அய்யாவின் கொள்கைகளை
அடுத்த தலைமுறைக்கும்
அப்படியே கொண்டுசெல்லும்
அய்யாவின் தத்துப் பிள்ளை அல்ல;
அவரது தத்துவப் பிள்ளை நீ!

உன் கையளவு இதயத்தில்
உலகளவு விரியும்;
வழியும் சிந்தனையால்
விழிமூட மறக்கின்றோம்!
தத்துவம் முகிழ்க்கும்
புத்தாக்கப் புதுஉலகில்...

அறிவியல் கண்காட்சி
ஆய்வரங்கம்
கோளரங்கம்
மெழுகுச் சிலையரங்கம்
மாநாட்டு மண்டபம்
மழலையர் பூங்கா

மண்ணில் மனிதம் தழைக்க
தன்னையழித்துக் கொண்ட
தலைவனின் இணையில்லாப் புகழை
இளைய தலைமுறையும்
இன்புற்றுக் காணவேண்டி
உலகமகா புருஷரின்
உன்னத வாழ்க்கையை
ஒலி-ஒளி காட்சியாய்
அகலத்திரையில் விரியும் மாட்சி!

சிந்துச் சமவெளியின்
சிம்மாசனமாயிருந்த
திராவிடத் தமிழினத்தை
பெரியாருக்கு முன் -
பெரியாருக்குப் பின் என
வகைப்படுத்தும்
வண்ணமிகு
எண்ணக் குவியல்கள்!

வேடந்தாங்கல் பறவையாய்
வந்து குவியும்
வெளிநாட்டுப் பயணியரின்
சிந்தையைக் குளிர்விக்கும்
சங்கதிகள் நிறைந்திருக்கும்!
நிறைகுடமாய் உந்தனுழைப்பும்
உறைந்திருக்கும்; கலந்திருக்கும்!

விழிமலரின் பாவைகளை
விரியவைக்கும் பிரமிப்பு!
குருதியின் உயிரணுக்களை
உசுப்பிவிடும் பரவசம்!
இப்படியொரு அதிசயமா?
இதுவும் சாத்தியமா!
எப்படி முடியும் - இது
யாரால் நடக்கும்!

வெண்மேகங்கள் விளையாடும்
வானத்தைத் தொட்டுவிடும்
பிரமாண்டத்தின் எல்லையாய்
புத்தருக்கும், ஏசுவுக்கும்
பேருருவச் சிலைகளைப் படைத்து
புகழேணியின் உச்சியில்
அரச குடும்பத்தினரும்; ஆட்சியாளர்களும்
அயல்நாட்டில்!

மரபுவழி ஆட்சிகளே - இந்த
மண்ணை ஆண்டுவந்தும் - தமிழ்
மண்ணை மணந்த
மணாளரின் மாப்புகழை
விண்ணும் மண்ணுமாய்
நீடித்து நிலைத்திருக்க;
நிலையான நினைவுபோற்ற
மனமில்லையோ மார்க்கம் தேட!

சாமானியன் உன் கரம்பட்டே
சாசுவதமாகப் போவுது
பெரியார் புது உலகம்
உருபெற்று; மாசுமருவற்று!
சாதனைச் சரிதம் காணும்
வரலாறாய் மாறினாய்!
மாரிக்காலத்து
மழைமேகமாய் நீ ஆனாய்!

அய்யாவின் மண்டைச் சுரப்பை
அகிலம் தொழச் செய்யும்
உந்தன் மண்டைச் சுரப்பால்
உலகத் தமிழரெல்லாம்
உன்னிடம் புகலிடம்!

எண்ணியதை எண்ணியாங்கு
திண்ணியமாய் செய்துமுடிக்கும்
தேனீயொத்த தொண்டர்களைத்
தன்னகத்தே கொண்டவரே!
செவ்வாயில் கால்பதித்தாலும்
அய்யாவைப் பரப்பத்தான்
செல்வாய் நீ!

நாளைய உலகின்
வரலாறு சொல்லும்
பொன்னேட்டில்
உன் பெயரும்
வைரமாய் மின்னும்!
இப்புவியில் பெரியார் புகழ்
இருக்கும் மட்டும்
இணைந்து நீயும்
இறவாமல் இருந்திடுவாய்!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

ராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குச் சூட்டப்பட்ட புகழ்மாலைகளில் சில...
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குச் சூட்டப்பட்ட புகழ்மாலைகளில் சில...


1. 1944 - திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என அண்ணாவின் பாராட்டு.

2. 1950 - இளம் பேச்சாளி பொதுமக்கள் பாராட்டு.

3. 1969 - குருவுக்கேற்ற சீடர்தான் வீரமணி என்ற தந்தை பெரியார் பாராட்டு.

4. 1993 - நாகையில் திராவிடர் பெண்கள் மாநாட்டில் இனமானப் போராளி பட்டம் அளிக்கப்பட்டது.

5. 1996 - தந்தை பெரியார் சமூக நீதி விருது தமிழக அரசு (ஜெ.ஜெயலலிதா) வழங்கியது.

6. 2000 - புதுதில்லி குளோபல் பொருளாதார கவுன்சில் பாரத் ஜோதி விருது வழங்கியது.

7. 2003 - மியான்மரில் பேரளிவாளர் விருது வழங்கியது.

8. 2003 - ஆக்சுபோர்டு தமிழ்ச் சங்கம், ஆக்சுபோர்டு தமிழ் விருது வழங்கி பாராட்டியது.

9. 2010 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் பெரியார் ஒளி விருது.

10. 2010 - கோவை கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது அளிக்கப்பட்டது.

11. 2011 - ஆந்திர மாநிலத்தில் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது வழங்கப்பட்டது.

12. சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு மய்யம் சமூகத் துறையில் தொண்டாற்றியமைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

13. 2003 - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

14. மலேசிய திராவிடர் கழகம் கருத்துக்கனல் என்ற பட்டத்தை வழங்கியது.

15. 2009 - சென்னையில் முரசொலி அறக்கட்டளை 2008ஆம் ஆண்டுக்கான கலைஞர் விருதினை வழங்கியது.

16. 2009 - காஞ்சியில் தி.மு.க. சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

புராணங்களில் அறிவியலைத் தேடலாமா?
வீரமணி

தற்போதுள்ள பா.ஜ.க. ஆட்சியை முழுமையாக வழிநடத்தும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்ற ஆரியக் கலாச்சாரப் போர்வையில் அரசியல் நடத்தும் ஏற்பாட்டாளர்கள் ஆவார்கள்.

அவர்களது கொள்கையைத் திணித்து, மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம் என்ற தத்துவங்களை கரையான்கள் எப்படிப் புகுந்து அமைதியாகவே புத்தகங்களை அரித்துத் தின்று விடுகின்றவோ அதேபோல், பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

புல்லட் ரயில் வேகத்தில் செய்துவிட ஆங்காங்கே முக்கியப் பதவிகளில் எல்லாம் அமைச்சரவை தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். மயமாகி அதன்மூலம் பச்சையாக ஹிந்துத்துவாவை ஆட்சிப் பீடமேற்றிட ஆலாய்ப் பறக்கின்றனர்!

ஹிந்துத்வா என்பதை உருவாக்கிய வி.டி.சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் முக்கியமான கோல்வால்கர் போன்றவர்களின் தத்துவங்களை ஆட்சியின்மூலம் அமலாக்கிட அதிவேக அவசரம் காட்டுகின்றனர்.

அதற்கான முன்னேற்பாடாக, முக்கிய அறிவியல், வரலாறு, கல்வி போன்ற அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கொணர்ந்து அமர்த்தி, அதை நிறைவேற்றிட துடியாய்த் துடிக்கின்றனர்.

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் என்ற அமைப்பிற்கு வி.சுதர்சனராவ் என்ற ஒரு பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரரை நியமனம் செய்து அவர் புராணங்கள், இதிகாசங்கள் இவைகளை, வரலாறுகளாக மாற்றிடத் திட்டமிட்டு, பிரச்சார திட்டத்தைச் செயல்படுத்துகிறார்.

வரலாற்றுப் பாடப் புத்தகங்களையே புரட்டிப் போட்டு ஹிந்துத்வாவின் கையேடுகளாக்கிட முனைப்புடன் செயலாற்றி முனைந்து நிற்கின்றனர்.

நாட்டின் பிரபல வரலாற்றுப் பேராசிரியர்களான ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் போன்றவர்களுக்கு மார்க்சிய இடதுசாரி முத்திரை குத்திவிட்டு, தமது கருத்துகளை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சியில் கூச்சநாச்சமின்றி ஈடுபட்டுள்ளனர்!

ஹிந்துத்துவா கருத்தியலையும் சொல்லையும் உருவாக்கிய வி.டி.சாவர்க்கர் அவரது நூலில் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார்.

‘Hinduise Military
Militarise Hindus’

இராணுவத்தை ஹிந்து மயமாக்கு
ஹிந்துக்களை இராணுவமாக்கு
என்பதே அவ்விரு கட்டளைகள். அதுபோலத்தான் இப்போது,
வரலாற்றைக் காவிமயமாக்கு

காவி(இந்து)_புராண இதிகாசங்களை வரலாறாக்கு என்ற முயற்சியோடு முன்பு வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் முயன்றதைத் தொடருகிறார்கள்.

அதிகப் பெரும்பான்மை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதற்குமேல் ஒருபடி சென்று, இப்போது, ஹிந்துத்துவ புராண, இதிகாச கற்பனைப் புரட்டுகளை அறிவியலுக்கு முன்னோடி என்ற ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுதர்சன ராவ் போன்றவர்களும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள்வரை கட்டவிழ்த்துவிட்டு நடத்தி வருகின்றனர்.
இராமாயணம் நடந்த கதை என்கிறார்கள்.

மரபணு ஆராய்ச்சி மஹாபாரதத்திலேயே உள்ளது.

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோடி - (Transplantation) உறுப்பை வெட்டி இணைத்தல் வினாயகர் கதை மூலம் நமது பரமசிவனே செய்துள்ளார்.

ராக்கெட்டுகளுக்கு முன்பே புஷ்பக விமானம் _ இராமாயணத்திலேயே உள்ளது என்று கூறி கொயபெல்ஸின் குருநாதர்களாக ஆகியுள்ளன!.

இதை எதிர்த்து கரன் தாப்பர் போன்ற விமர்சகர்கள் கேள்வி கேட்கத் துவங்கியுள்ளனர்.

ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் இதனை மறுத்துக் கூறுகின்றனர்.

இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றாளர்களுக்கே அதிக அறிமுகமில்லாத ஆர்.எஸ்.எஸ். நபரான ஆந்திரத்து சுதர்சனராவ் என்பவர் பொறுப்பேற்றதிலிருந்து, தாப்பர் போன்றோர்மீது மார்க்சிஸ்டுகள் என்று சாயம் பூசுவதோடு, வெள்ளைக்காரர்கள் புராணங்களை கட்டுக் கதைகள் என்று கூறிவிட்டனர். இதனை மாற்றி 'விணீளீமீ வீஸீ மிஸீபீவீணீ' இந்தியாவின் வரலாறு இதிகாச புராணங்களிலிருந்து உருவாக வேண்டும் என்று மனம் போனபடி பேசியுள்ளார். எப்படி இனி செய்யப் போகிறார்கள் என்பதற்கான மணியோசை இது. இதனை அத்தனை முற்போக்கு சக்திகளும் ஒன்று திரண்டு எதிர்த்தாக வேண்டும். இந்த பத்தாம் பசலித்தன புதுப்பித்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஆங்காங்கு கருத்தரங்கங்களை நடத்திட முன்வர வேண்டும்.

இந்நாட்டு அறிவியலாளர்கள் (Scientists) ஏன் மறுத்து அறிக்கைகள் விடவில்லை என்றுகூட கரன் தாப்பர் போன்றவர்கள் கேட்கின்றனர்.

அதற்கு விடை வெளிப்படையானது. பெரும்பாலான விஞ்ஞானிகள் மத்திய அரசு ஊழியர்கள். பிரதமரும் உள்துறை அமைச்சரும் இப்படி அபத்தமான கருத்துகளைக் கூறும்போது அவர்களால் மறுத்துப் பேச முடியாதே; தனியார் துறை விஞ்ஞானிகளும்கூட, பல முதலாளிகளின் அமைப்புகளில் அல்லவா பணிபுரிகிறார்கள்? இவர்கள் அதனால் வாய்மூடி மவுனத்தில் புழுங்கிக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளார்கள் என்பதே யதார்த்த நிலையாகும்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சியும் துயரமும்
மகிழ்ச்சியும் துயரமும்

Print
Email

வீரமணி

கேள்வி : தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியில் திளைத்த தருணம் எது? துயரத்தில் துவண்டுபோன தருணம் எது? - - நா.இராமண்ணா, சென்னை

பதில்: மகிழ்ச்சியில் திளைத்த நேரம். அறக்கட்டளை என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை, வருமான வரித்துறை டிரிபியூனல் அறிவித்து, 80 லட்ச ரூபாய் அறியா வரியைத் தள்ளுபடி செய்து அறிவித்ததைக் கேட்ட-போது.

துன்பம், நம் அய்யா - அம்மா மறைவின்போது.