Search This Blog

14.12.14

கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது

கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது

தோழர்களே! இன்று பொதுவாகவே மனித சமூகத்துக்கு உள்ள கஷ்டங்களையும், குறை பாடுகளையும் பற்றி உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை.

குறிப்பாக நமது நாட்டு மக்களிடையே உள்ள குறைபாடுகள் மற்ற நாட்டு மக்கள் குறைபாடுகளைவிட அதிகமாகவே இருந்து வருகின்றன. நமது குறைகளுக்கு நிவாரணம் அரசியல் மாறுதலால்தான் முடியும் என்பது சிலருடைய அபிப்பிராயம். ஆனால் சுய மரியாதை இயக்கம் இதை ஒப்புக் கொள்ளு வதில்லை. அரசியலானது சமுதாயக் கொள் கையையும், மதக் கட்டளைகளையும் ஆதார மாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று நாம் கனவுகூடக் காண முடியாது.

அரசியல் கொள்கைகளை, சமூகம் தான் நிர்ணயிக்க வேண்டும். சமூகத்துக்கு ஆதாரம் முன் குறிப்பிட்ட சமுதாய பழக்க வழக்கங் களும், ஜாதி மதக் கட்டளைகளுமே ஆகும்.

எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் சமுதாய, ஜாதி, மத பழக்க வழக்கங் களின் மீதே இருந்து வருகின்றன. ஏதோ இரண்டொரு அற்ப விஷயங்களே இதிலி ருந்து விலக்கு பெற்றதாக இருக்கலாம்.

நம் நாட்டு அரசியல் சீர்திருத்தம் என்பதில், அரசாங்கத்தாராவது, சமூக மக்களாவது ஜாதி மதப் பழக்க வழக்கங்களில் மாறுதல் செய்யச் சிறிதும் சம்மதிப்பதில்லை.

நமது இன்றைய அரசாங்கமோ, இந்நாட்டு மக்களிடம் ஜாதி மத பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்துவிட்டு ஆட்சி புரிகின்றது என்பது நாம் அறியாததா?  இன்றைய நமது அரசியல் கிளர்ச்சியும், சுயராஜ்ஜிய முயற்சியும்கூட ஜாதி மத பழக்க வழக்கங்களுக்கு உத்திரவாதம் கொடுத்துவிட்டே (கிளர்ச்சியும், முயற்சியும்) நடை பெறுகின்றது.

இன்றைய தினம் தோழர் ராஜகோபலாச் சாரியாரால் எடுத்துக் காட்டப்படும் கராச்சித் திட்டத்தில் இந்த ஜவாப்புதாரித்தனமான உத்திரவாதம் கல்லுப்போல் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.


காங்கிரசு முயற்சி செய்யும் சுயராஜ்ஜியத்தில்

1)    The article in the constitution relating to fundamental rights, shall include a guarantee to the communities concerned of protection of their culture, language, scripts, education, profession, practice religion and religious endowments.

2)    Personal Laws shall be protected by specific provision to be embodied in the constitution.

1)    சுயராஜ்ஜிய அரசாங்கத்தில் ஒவ் வொரு வகுப்பாருடையவும் அவர்களது கலைகள், நாகரிகங்கள், பாஷை, கல்வி, தொழில், பழக்க வழக்கம், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் முதலியவை களைக் காப்பாற்றுதலாகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி, உத்திர வாதமளிக்கப்படும்.

2)    ஒவ்வொரு சமூக தனிப்பட்ட உரிமைகளையும் பற்றிய சட்டங்களும் காப் பாற்றப்படும் படியான திட்டத்தையும் சேர்க் கப்படும் - என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதுதான் கராச்சித் திட்டம் என்பது.
அந்நிய அரசராகிய பிரிட்டிஷ் ஆட்சியின் வாக்குறுதிகளின் பயனாகவே சமூக வாழ்வில் ஜாதிமதக் கொடுமையில் ஒரு கடுகளவு மாறுதல்கூட செய்வது கஷ்டமாய் இருந்து வருகிறது.

சாரதா சட்டம்கூட அதனாலேயே சுய மரியாதையற்று பிணமாகக் கிடக்கிறது. இப்படியிருக்கும் போது இனி வரப்போகும் சுயராஜ்ஜியத்திலும் சமூகப் பழக்க வழக்கம், ஜாதி ஆகியவைகளுக்கு ஜவாப்புதாரித்தன மும், உத்தரவாதமும், வாக்குறுதியும் கொடுக் கப்பட்டிருக்கும் போது அவைகளில் ஒரு சிறு மாறுதலாவது செய்யப்படக்கூடும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?
ஆகவே இன்று இந்நாட்டு மக்களுக்கு உள்ள குறைபாடுகள் நீக்கப்படுவதற்கு, இன் றைய அரசியல் மாறுபட்டு விடுவதாலேயே ஏதாவது பலன் ஏற்பட்டுவிடும் என்பது வெறும் கனவாகத்தான் முடியும்.

இன்றுள்ள குறைபாடுகள் எல்லாம் இந்தியாவில் சுயராஜ்ஜியம் இருந்த காலத் திலும் இருந்து வந்தது தானே ஒழிய முகமதியர் ஆட்சியிலோ, பிரிட்டிஷார் ஆட்சியிலோ ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிவிட முடியாது.

மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் குணமும், மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியை பட்டினி போட்டு கொடுமைப் படுத்திய குணமும், ராமராஜ் ஜியம் முதல் தர்ம தேவதை ராஜ்ஜியம் இடையாக, பிரிட்டிஷ் ராஜ்ஜியம் வரை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது.

உண்மையை யோக்கியமாய் வீரமாய்ப் பேச வேண்டுமானால், முகமதிய ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஓரளவு பழைய கொடுமைகளும், இழிவுகளும், குறைவுகளும் குறைந்திருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் காட்டலாம்.

இந்த நாட்டில் ஜாதியால் இழிவுபடுத் தப்பட்ட மக்கள் 100-க்கு 97 பேர்களாகும்.
ஜாதியால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 25 பேர்களாகும். மதத்தால் இழிவு படுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 100 பேர் என்று கூட சொல்லலாம். 

ஒவ்வொரு மதக்காரனும் மற்ற மதக்காரனை இழிவாய்த்தான் கருது கின்றான். ஒவ்வொரு ஜாதியானும் மற்ற ஜாதியானை இழிவாய்த்தான் கருதுகிறான். பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் கீழ்ஜாதி என்பது இந்து மத சம்பிரதாயம். இப்படிப்பட்ட இந்த இழிவான நிலைமை மாற வேண்டு மானால் இன்றைய பிரிட்டிஷ் அரசியல் மாறுவதால் முடியுமா?

பெரும்பான்மையான மக்களின் பொரு ளாதாரக் கொடுமைக்கும், அவர்களது வாழ்க்கை நிலை இழிவுக்கும், ஜாதியும் மதமும் காரணமாய் இருக்கின்றதை யாராவது மறுக்க முடியுமா? எங்காவது பார்ப்பனன் பட்டினி கிடக்கின்றானா? எங்காவது பார்ப்பான் சரீரப் பாடுபடுகின்றானா? கூலிக்கு மூட்டை தூக்கு கின்றானா? நடவு நட்டுத் தண்ணீர் கட்டுகின் றானா?அது போலவே பறையர் பள்ளர் போன்ற கூட்டத்தினர் வாழ்க்கை எங்கும் எப்படி இருக்கிறது பாருங்கள். பாடுபட்டும் இக் கூட்டத்தாரின் நிலைமை எவ்வளவு பரிதாப கரமானதாய் இருக்கின்றது. இதற்கு ஜாதிமதம் அல்லாமல் வேறு காரணம் என்ன? ஆகவே, ஜாதி மதத்தின் காரணமாய் சிலருக்கு மாத்திரம் உயர்வும், செல்வமும் அநேகர்களுக்கு இழிவும், தரித்திரமும் மக்களிடம் நிலவுகின்றதே தவிர பாடுபடாததாலும், பாடுபடுவதாலும் அந்நிய அரசாலும், சுயராஜ்ஜியத்தாலுமா நிலவுகின் றது என்பதைத் தயவுசெய்து யோக்கியமாய் நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.


கராச்சித் தீர்மானப்படி ஆட்சிப் புரியப் போகும் சுயராஜ்ஜியம் நமக்குக் கிடைத்தால், இந்தியா இந்த விஷயங்களில் இன்றுள்ள நிலையைவிட, கேடான நிலையையே அடையும் என்பதை உறுதியாய்க் கூறுவேன். மனிதனுடைய அவமானத்தையும், இழிவை யும் போக்குவதற்கு ஒப்புக் கொள்ளாத சுய ராஜ்ஜியம் பித்தலாட்டச் சூழ்ச்சி ராஜ்ஜிய மாகுமே ஒழிய, யோக்கியமான ராஜ்ஜியம் ஆகாது.


கேவலம் ஒரு தீண்டாமை விலக்கு என் கின்ற சாதனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது வரை காங்கிரசால் இந்தக் காரியத்துக்கு என்ன  பயன் ஏற்பட்டது? இந்தக் காரியத்தின் பேரால் காங்கிரஸ் பண வசூல் செய்து அத னால் ஓட்டுப் பெற்றது. மற்றப்படி தீண்டாமை விலக்குக்கு என்ன திட்டம் காங்கிரசினிடம் இருக்கிறது?

தீண்டாமை விலக்குக்குப் பாடுபடாமல் உயிர் வாழ முடியாது என்று சொல்லி பட்டினி கிடந்து ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்த காந்தியார் என்ன சாதித்தார்?

இந்தியச் சட்டசபைக்கு காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாக வந்து விட்டார்கள் என் பதைக் கேட்டவுடன், காந்தியார், சட்டசபைக்கு சமுதாய சம்பந்தமான தீர்மானங்களைக் கொண்டு போகாதீர்கள் என்று உத்திரவு போட்டுவிடவில்லையா? காங்கிரஸ் தீண் டாமை விலக்கு விஷயத்தில் நடந்து கொள் ளும் நாணயத்துக்கும் இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

ஆகவே, இந்த சட்டசபையில் காங்கிரஸ் காரர்கள் இருந்தா லென்ன? சர்க்கார் நியமனக் காரர்களே இருந்தால் என்ன? என்று யோசித்துப் பாருங்கள். கராச்சி காங்கிரஸ் தீர்மானப்படி நடக்கும் சந்தர்ப்பம் கிடைத்த காங்கிரஸ்காரர்கள் தீண்டாமை விஷயத்தில் தான் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால், பொருளாதார விஷயத்தில் எவ்வளவு யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள்.

மாதம் 1-க்கு 500 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதில்லை என்ற காங்கிரஸ்காரர்கள், ஒரு ஒற்றை ஆளுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூ. வீதம் சர்க்காரிடமிருந்து படி வாங்கினார்கள். இதில் ஒரு அளவு காங்கிரஸ் பண்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் உத்திரவு போட்டார். யார் இதற்கு கட்டுப்பட்டு நடந்தார்கள்?

தோழர் சத்தியமூர்த்தி அய்யர், தென் னாட்டு காங்கிரஸ் ஸ்தாபனத்தின் தலைவர் என்கின்ற ஹோதாவில் அதை மறுத்து ஒரு தம்பிடி கூட கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். தனது (ஒண்டி ஆள்) செலவுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூபாயே போதாது என்று சொல்லி ஒரு காசு கூட குறைத்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். இந்த யோக்கியர்கள் நாளை சுயராஜ்ஜியம் பெற்ற பிறகு மாத்திரம் பொருளாதாரத்தில் எப்படி யோக்கியமாய் நடந்து கொள்ள முடியும்?

ஒரு காசு கூட சர்க்காருக்கு இன்கம்டாக்ஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லாத தோழர் சத்தியமூர்த்திக்கு தன் சாப்பாட்டுச் செலவுக்கு மாத்திரம் தினம் ஒன்றுக்கு ரூ.20 போத வில்லை என்றால் மற்றபடி மற்றவர்களுக்கு எவ்வளவு அதாவது செல்வத்தில் பிறந்து செல் வத்தில் வளர்ந்து வந்த கோடீஸ்வரர்களுக்கு, தினமும் எவ்வளவு ரூபாய் வேண்டியிருக்கும் என்பதைப் பார்த்தால் தோழர் சத்தியமூர்த் திக்கோ மற்ற காங்கிரஸ்காரர்களுக்கோ இன் றைய சம்பளம் அதிகம் என்றும், ஜனங்களால் தாங்க முடியாதது என்றும் சொல்லுவதற்கு யோக்கியதை உண்டா என்பதோடு, இவர்கள் ஆதிக்கத்துக்கு வந்தால் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுவார்களா என்றும் கேட்கின்றோம்.


நிற்க, ஜாதி, மதம், பழக்க வழக்கம் ஆகிய வைகளில் மாற்றம் செய்ய காங்கிரஸ்காரர்கள் சம்மதிக்கவில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடு தலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? பிராமணன், சூத்திரன், பறையன், சண்டாளன் என்கின்ற பெயர்களும் பிரிவுகளும் ஜாதி காரணம் மாத்திரமல்லாமல் மதங்காரணமாகவும் இருந்து வருகின்றன.

மதம் காரண மாத்திரமல்லாமல், தெய்வம் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதிக்கு இந்து மதமும், மனு தர்ம சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும் அதற்கும் மேல்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது.

கடவுளுடைய முகம், தோள், தொடை, கால் ஆகியவைகளில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திரமல்லாமல், இந்து ஆஸ்திகர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும்.
பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார் என்பவர்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும், இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர், முகமதியர், பௌத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து யாரால் பிறப்பு விக்கப்பட்டார்கள் என்பதும் கேள்விக்கு இடமான காரியமாய் இருந்தாலும் நான்கு வருணத்தையும் மறுக்க எந்த ஒரு இந்துவும் துணிவதில்லை. ஏதோ சில பேர்கள் சூத்திரர்கள் என்கின்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் இருப்பதால் நான்கு வருணத்தை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று ஒரு புறம் சொன்னாலும், மற்றொரு புறம் அக் கொள்கைக்கு அடிமையாகியே தீருகிறார்கள்.

எப்படி எனில் ராமாயணக் கதைக்கு வேறு வியாக்கியானம் செய்கின்றவர்களும், பாரதக் கதையை நம்பாதவர்களும், அக்கதைகளில் வரும் பாத்திரங்களான ராமனையும், கிருஷ் ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. அது மாத்திரமல்லாமல் பாரதக் கதையில் ஒரு சிறு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் கிருஷ்ணன், அர்ச்சுனன் சம்பாஷணை என்னும் கீதையைப் பிரமாதமாக மதிக்கிறார்கள்.

கீதையை மறுக்க இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குத் தைரியம் வருமா என்பது சந்தேகம். அப்படிப்பட்ட கீதையில் கிருஷ்ணன் நான்கு வருணங்களை நான் தான் சிருஷ்டி செய்தேன் என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது.

ஆகவே, கீதையை தங்களுடைய மதத் துக்கு ஒரு ஆதாரமாகவும் கிருஷ்ணனை ஒரு கடவுளாகவும் கொண்டிருக்கிற ஒருவன், சூத்திரன் என்கின்ற பட்டம் ஒழிய வேண்டும் என்றோ, ஜாதிப் பிரிவுகள் ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும்.

ஜாதிப் பிரிவுக்குப் பார்ப்பனன் தான் காரணம் என்று சொல்லுவது இனி பயனற்ற காரியம் என்பதே எனது அபிப்பிராயம்.

ஜாதிப் பிரிவுக்கும் அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்திரத்துக்கும், ஒற்றுமை இன்மைக்கும் இந்து மதம், மனுதர்ம சாஸ்திரம், பாரத ராமாயண புராண, இதிகாசம் என்பவைகளோடு மாத்திரமல்லாமல் ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களும் கார ணங்கள் ஆகும் என்பதை எந்த மனிதன் உண ருகிறானோ, அவன்தான் வருண பேதத்தை ஜாதி பேதத்தை ஒழிக்க நினைக்கவாவது யோக்கியமுடையவனாவான்.

காங்கிரசுக்காரர்கள் 100க்கு 99பேர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள். கீதையை நெருப்பிலிடவோ, கிருஷ்ண பகவானை மறுக்கவோ ஒப்புக் கொள்ளாதவர்கள்.

காங்கிரசுக்காரர்கள் மாத்திரம் அல்லாமல் நான்கு வருணம் கூடாது என்கின்ற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும், கிருஷ்ண னையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள். ஒரு அளவுக்கு மனுதர்ம சாஸ்திரத்தின் மீது பார்ப்பனர்கள் உள்பட பலருக்கு வெறுப்பும், அலட்சியமும் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், கீதையின் மீதும், கிருஷ்ணன் மீதும் வெறுப்பும், அலட்சியமும், அவ நம்பிக்கையும், மக்களிடையிருக்கும் அந் நம்பிக்கையை ஒழிக்கும் தைரியமும் ஏற்படுவது என்பது சுலபத்தில் எதிர்பார்க்க முடியாத காரியம். இந்தக் காரணங் களாலேயே இந்த நாட்டில் பல ஆயிர வருஷங்களாக இந்த இழிவும், முட்டாள்தனமும் அயோக் கியத்தனமும் நிலவி வந்திருக்கின்றன.
திருவள்ளுவர் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருது கிறார்கள். அதோடு அதற்கு நேர் விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.

இந்த முட்டாள்தனமான காரியம் பார்ப் பனர்களிடம் மாத்திரம் இருப்பதாக மாத்திரம் நான் சொல்ல வரவில்லை. சைவன்கள், வைணவன்கள் கீதையை, கிருஷ்ணனை, பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள். அவ நம்பிக்கைப்படவும் மாட்டார்கள்.

ஆனால், தங்களுக்குள் ஜாதி பேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள், ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப் படுவதில்லை. இந்த நிலையில் எப்படி ஜாதி ஒழியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஜாதியை உற்பத்தி செய்தவர்களை நாம் கேவலமாய் நினைத்து, அவர்கள் மீது மாத்திரம் ஆத்திரப்படுவதின் மூலமே நமது முயற்சிகள் இதுவரை நாசமாகிக் கொண்டே வந்துவிட்டது.

பார்ப்பனர்கள் ஜாதி விஷயத்தில் எவ்வளவுதான் நமக்கு விட்டுக் கொடுத்தாலும் கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். இது தெரிந்துதான் ராஜகோ பாலாச்சாரியார் உள்பட பக்கா பார்ப்பனர்கள் ஜாதி போக வேண்டும்; ஜாதி போக வேண்டு மென்று நம்முடன் சேர்ந்து கொண்டு கோவிந்தா போடுகிறார்கள். நம் வீட்டிலும், பறையன் என்கின்றவன் வீட்டிலும் சாப்பிடு கிறார்கள். ஆனால் கீதையை வெகு பத்திர மாகக் காப்பாற்றுகிறார்கள். கிருஷ்ணனுக்குப் பதினாயிரக்கணக்கான கோவில்கள் கட்டி கோடிக் கணக்கான மக்களைக் கும்பிடும்படி செய்து மூடர்களாகவும், அடிமைகளாகவும் ஆக்கி வருகிறார்கள்.

இதனால் அவர்களுக்கு நம் வீட்டில் சாப்பிடுவதின் மூலம் ஆகாரச் செலவு மீதி ஆவதுடன், அவர்களிடம் மக்களுக்குத் துவேஷம் இல்லாமல் போகவும் இடம் ஏற்பட்டு விடுகின்றதே தவிர, மற்றபடி ஜாதி பிரிவுக்குச் சிறிதுகூட ஆட்டம் ஏற்பட்டு விடுவதில்லை.

நமக்கு இன்று வேண்டிய சுய ஆட்சி என்பதனாது ஜாதிக் கொடுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும், ஜாதிச் சலுகைகளையும் அழிக்கும்படியாகவும், ஒழிக்கும்படியாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால், நமக்கு அதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனபதோடு மனப்பூர்வமாய் வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.

கோவில் நுழைவு என்பதைப் பற்றிக் கராச்சி காங்கிரஸ் திட்டத்தில் ஒரு வார்த்தை கூட இல்லை. அதற்கு மாறாக பழக்கவழக்கங் களைக் காப்பாற்றுவதாகவே வாக்குறுதியும், உத்திரவாதமும் இருக்கிறது.
சமீபத்தில் சத்தியமூர்த்தி தலைவர், கோவில் நுழைவைப் பற்றி, தான் ஒப்ப முடியாது என்று சொல்லிவிட்டார். ரோடு, குளம், பள்ளிக்கூடம் இவைகளுக்கு மாத்திரம் அனுமதி கொடுப்பதாய் கருணை வைத்து அருள் புரிந்து இருக்கிறார். இதையே கராச்சிக் காங்கிரஸ் கூறுகிறது. இதற்கு சத்தியமூர்த்தியு டையவும், கராச்சி காங்கிரசினுடையவும், காந்தியாரினுடையவும் தயவு எதற்கு என்பது நமக்கு விளங்கவில்லை. ரோடும், பள்ளிக் கூடமும், குளமும் சர்க்கார் பாதுகாப்பில் இருப்பவை.  அவை தினமும் சர்க்கார் உதவி யால் நடந்து வருபவை. ஆதலால் அதை ரயில், தந்தி, தபால் போல் எல்லா மக்களுக்கும் கிறிஸ்துவர்,  முகமதியர் உட்பட சம சுதந்திர மாய் அனுபவிக்க கட்டுப்பட வேண்டியவர் களாகிறார்கள்.

கோவில் மதத்தைச் சேர்ந்ததானதினாலும், மதத்துக்கு மத ஜனங்களே பிரதிநிதி களானதி னாலும், ஜனங்களுக்குக் காந்தியாரும், சத்திய மூர்த்தியாரும் பிரதிநிதிகளாக ஆகிவிட்ட தாலும் கோவில் பிரவேசம் என்பது களப் பிரதிநிதிகளையும், ஜனப் பிரதிநிதி சபையான காங்கிரசையும் சேர்ந்தது என்று சொல்ல வேண்டி இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் காந்தியாருக்கும் இஷ்டமில்லையானால், சத்தியமூர்த்தியாருக் கும் இஷ்டமில்லையானால், காங்கிரசுக்கும் இஷ்டமில்லையானால், பிறகு இந்த அரசியல் பிரிட்டிஷ் அரசாங்கம் மாறி காங்கிரஸ் ஆட்சியோ, காந்தி ஆட்சியோ, சத்தியமூர்த்தி ஆட்சியோ ஆகிவிடுவதால் என்ன லாபம் என்று கேட்கின்றேன்.

நிறபேதம் மாறுவதால் அதாவது வெள்ளை நிறக்காரர் ஆட்சி மாறி பழுப்பு நிறக்காரர் ஆட்சி வந்தவுடன் ஜனங்களுக்கு இன்றுள்ள இழிவு மாறிவிடும் என்று கருதுவது போன்ற முட்டாள்தனம் வேறொன்றுமில்லை.
கொள்கைகள் மாற்றமடைய வேண்டும். அதை மாற்றுவதற்கு ஒப்புகிறவர்கள் கைக்கு ஆட்சி வர வேண்டும். அது வர முடியவில்லை யானால் பொது மக்களிடம் இன்னும் 10 வருஷத்துக்கோ, 100 வருஷத்துக்கோ பிரச் சாரம் செய்ய வேண்டும்.

அதில்லாமல் ஜஸ்டிஸ் மந்திரிகள் உள்ள ஸ்தானத்தில், சத்தியமூர்த்தி, பிரகாசம் மற்றும் இவர்கள் அடிமைகள் போய் உட்கார்ந்தால் ஒரு மாறுதலையும் கண்டுவிட முடியாது. ஆகவே, வீண் சூழ்ச்சிப் பிரச்சாரங்களையும், துவேஷப் பிரச்சாரங்களையும், சுயநலப் பிரச்சாரங்களையும் கண்டு மக்கள் யாவரும் ஏமாந்துவிடாதீர்கள்.
------------------------------அருப்புக்கோட்டை, திண்டிவனம், சேலம், விழுப்புரம், நாகப்பட்டினம் முதலிய இடங்களில்  நடைபெற்ற பொதுக் கூட்டங் களில்தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவுகளின் சாரம்--- குடிஅரசு - சொற்பொழிவு - 02.06.1935

67 comments:

தமிழ் ஓவியா said...

ஆன்மீகவாதிகளே அறிவியலைப் பாரீர்!


இங்கிலாந்தில் உள்ள நாட் டிங்காம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும வானியல் துறையின் பணி ஓய்வு பெற்ற பேராசிரியர் ரோஜர் பவ்லே தம்முடைய தலைக்கு (திஷீக்ஷீமீலீமீணீபீ-நெற்றிப் பொட்டுக்கு) அருகில் ஒரு சாவியைக் கொண்டு செல்கிறார். அவர் மூளை இடும் கட்டளையை அச்சாவிமூலமாக காரில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி யுடன் தொடர்புகொண்டு அந்தக் காரைத் திறக்கச் செய் கிறது. சாவியை மார்புப்பகுதி வரையிலும் கொண்டு சென்றாலும் மூளையின் கட்டளையை ஏற்று செயல்படுகிறது.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் பணி ஓய்வு பெற்ற இயற்பியலாளர் ரோஜர் பவ்லே இத்தொழில்நுட் பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

ஏற்கெனவே ரிமோட் கன்ட்ரோல் சிஸ்டம் முறையில் தனியே சாவிக் கொத்துடன் உள்ள கருவியைக் கொண்டு வாகனங்களின் கதவில் பொருத்தப்பட்டுள்ள பூட்டைத் திறக்கவும், மூடவும், அந்நியர் எவரும் வாகனங்களை நெருங்கி அசைத்தால் ஒலி எழுப்பவும், விளக்குகளை இயக் கவும் மற்றும் காரை இயங்க (ஸ்டார்ட்) செய்யவும் என பல்வேறு செயல்களை குறிப்பிட்ட தொலைவிலிருக்கும் போதே செயல்படுத்தும் வாய்ப்பு உள்ளது. தற்போது அதன் வளர்ச்சியாக மூளையின் கட்டளையை மின்காந்த அலைகளாக காருக்குள் பொருத்தப்பட் டிருக்கும் கருவிக்கு செலுத்தி அதன் மூலம் மூளையின் கட்டளைக்கிணங்க செயல்பாடுகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே உள்ள வாய்ப்புகளைவிட பல்வேறு தொலைவுகளில் இச்செயல் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

மூளையின் திறனைக்கொண்டு ரேடியோ டிரான்ஸ்மிட்டராக செயல் பட்டு தொலைவிலிருந்தே இயக்கு வதற்கு மின்காந்தஅலைகள்மூலமாக சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு காரில் உள்ள கருவிமூலம் கட்டளையைப் பெறுகிறது. அதன்மூலம் பூட்டப்பட்ட கார் திறக்கப்படுகிறது. இந்த ஆய்வை பேராசிரியர் ரோஜர் பவ்லே இணையத்தில் யூ-டியூப்பில் வீடியோ காட்சியாகப் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் ரோஜர் பவ்லே கூறும் போது, காரைவிட்டு விலகி நீண்ட தொலைவுக்கு செல்லும்போது படிப் படியாக சமிக்ஞை பலவீனமடைகிறது என்கிறார்.

தண்ணீர் மின்காந்த அலையை அதிக தூரத்துக்கு எடுத்தும் செல்லும் ஆற்றல் உள்ளது. மூளையும் முழு மையாக நீர்மத்தைக்கொண்டுள்ளது.

மின்காந்த அலைகள் நீரின்மூலம் செல்லும்போது நேர் மின்சாரமாக ஹைட்ரஜன் அயனிகள்மூலம் மாற்றப் படுகிறது. ஆக்சிஜன்அயனிகள்மூலம் எதிர் மின்சாரமாகவும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசைகளில் மேலும், கீழும் தள்ளப்படுவதுமாக இருக்கிறது என்று பாவ்லே கூறுகிறார்.

சாவி மின்காந்த அலைகளை காருக்கு அனுப்புகிறது. அதாவது, மூளையும், சாவியும் ரேடியோ டிரான் மிட்டர்கள்போல் செயல்படுகின்றன. மின்காந்த அலைகளை மேலும், கீழுமாக தொடர்ந்து அனுப்புவதன்மூலம் ஆற் றலை மிகைப்படுத்தியவண்ணம் உள்ளது.

தலையில் உள்ள நீர்மங்கள் மின் காந்த அலைகளைக் கொண்டு செல் கின்றன. அவை ஒரே அலைவரிசையில் நீண்ட தொலைவுக்குக் கொண்டு செல் கின்றன. அதன்படியே காரில் உள்ள சாவிவரையிலும் மின்காந்த அலைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

மின்காந்த அலைகளை ஒரு குவ ளையில் உள்ள தண்ணீர் தொலை வினை அதிகப்படுத்துகிறது.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் துறையில் தம்முடைய ஆய்வை பவ்லே விளக்கிக் கூறும்போது, இணையத்தில் தம்முடைய யூ-டியூப் வீடியோ பதிவின்மூலமாக தம்முடைய கார் இருக்கும் பகுதியில் தொலைவில் சாலையிலிருந்து காருக்கு கட்டளைப்பிறப்பித்து அதன் செயல்பாட்டை நிரூபித்து விளக்கினார்.

இத்தொழில் நுட்பத்தை பயன்படுத் தும் ஒருவர் கூறும்போது, நான் முதலில் நம்பவே இல்லை. நான் என்னு டைய காருக்குத் தொலைவில் இருந்த போது காரின் பூட்டைத் திறக்க வேண் டியிருந்தது. அப்போது என் நண்பர் ஒருவர் டிரான்ஸ்மிட்டர் ஒன்றை தலைக்கு அருகில் கொண்டு செல்லு மாறு கூறினார். அதன்படி நான் செய்த போது அதன் வேலையை செய்தது.

காருக்கு தொலைவில் இருந்தபோது சாவியை என் தலைக்கு அருகில் கொண்டு சென்றபோது வேலை செய்தது. மார்பருகே கொண்டு சென்ற போதும் சாவி வேலை செய்தது. கால்பகுதிக்கு கொண்டுசென்றபோது சாவி வேலை செய்யவில்லை. ஆகவே, உயரத்தின் அடிப்படையிலேயே செயல்படுவதாக முதலில் நினைத்தேன். ஆனால் சாவி இயங்குவதற்கு உயரம் ஒரு பொருட்டாக இல்லை. என்னுடைய உடல் ஒட்டுமொத்தமாகவே ஆன்ட னாவாக செயல்படும்போது நான் சாவியை எங்கு வைத்திருப்பது? கை களில் வைத்திருப்பதைவிட தலைக்கு அருகில் வைத்துக்கொண்டால்தான் என்ன? என்று எண்ணுகிறேன் என்று கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page8/92785.html#ixzz3Ls1rEouY

தமிழ் ஓவியா said...

இந்தியாவின் பூர்வீகக் குடிகள் யார்?

- மா.அழகிரிசாமி,
மாநில துணைத்தலைவர்,
பகுத்தறிவாளர் கழகம்

இந்தியாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்களே என அமெரிக்காவின் புகழ் பெற்ற மரபியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் மரபணு மாதிரிகளை இதற்காகச் சேகரித்து ஆய்வுகள் நடத்தி, உலகம் முழுவதும் இந்த ஆய்வுக்காகச் சென்று , பல நாடுகளில் ஆய்வு மய்யங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக மரபணு மாதிரிகள் சேகரித்து அந்த ஆய்வின் முடிவாக இந்தியாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்களே; ஆரியர்கள் பின்னர் தான் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்று அறிவித்துள்ளார். இதற்கு மரபியல் ரீதியான தெளிவான ஆதா ரங்கள் உள்ளன என்றும் எடுத்துக் காட்டி உள்ளார். இந்தியாவின் பூர்வீக குடிகள் திராவிடர்களே என்பதற்கு தெளிவான தொல்லியல் சான்றுகள் சிந்துவெளியில் கிடைத்த போதிலும் அதனை ஏற்க மறுக்கும் பார்ப்பனர்கள் ,இப்போது அறிவிக்கப்பட்ட மரபியல் சான்றுகளை மறுக்க இயலாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

1,50,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது .இன்று உலகில் காணப்படும் அனைத்து மக்களும் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மக்களின் வழித் தோன்றல்களே என ஸ்பென்சர் வெல்ஸ் கண்டறிந்துள்ளார். உலகின் பல நாடுகளுக்கும் மனித இனம் எவ் வாறு சென்றது என்பதை கண்டறிந்து விளக்கி உள்ளார்.

உலகம் முழுவதும் ஸ்பென்சர் வெல்ஸ் ஏற்படுத்திய ஆய்வு மய்யங் களில் ஒன்று மதுரையில் அமைந்த தாகும். உலகம் முழுவதும் அமைந்த மய்யங்களுக்குத் தலை சிறந்த அறிவியல் அறிஞர்களை முதன்மை ஆய்வாளர் களாக ஸ்பென்சர் வெல்ஸ் நியமித்தார் .இந்திய மையத்திற்கு முதன்மை ஆய்வாளராக மதுரை காமராசர் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் அறிவியல் அறிஞர் ராமசாமி பிச்சப்பன் இருந்தார். தனது ஆய்வின் காரணமாக ஸ்பென்சர் வெல்ஸ் புது டெல்லி, மதுரை, மும்பை வந்துள்ளார். செய்தியா ளர்களை அவர் சந்தித்த போது, இந்தி யாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்கள் தான் என்றும், ஆரியர்கள் பின்னர் வந்தவர்கள் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டார் .

இதனை ஸ்பென்சர் வெல்ஸ் தான் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் விரிவாக விளக்கி உள்ளார் .இதே தலைப்பில் நேஷனல் ஜியோ கிராஃபிக் தொலைக் காட்சி பட மாகவும் எடுத்துள்ளது யூ-_டியூப் (youtube) காணொலிப் பதிவிலும் இதே தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவசியம் காண வேண்டிய ஒன்று .

இப்படத்தில் இவரே தோன்றி உலகின் நிறைய இடங்களுக்குச் சென்று விளக் குவதை காண முடிகிறது. இது குறுந் தகடாகவும் வெளியிடப் பட்டுள்ளது. ஸ்பென்சர் வெல்ஸ் “Deep Ancestry Inside The Genographic Projectஎன்ற இன்னொரு புத்தகத்தையும் இது தொடர்பாக எழுதி உள்ளார் .

அவர் செய்தியாளர்களிடம் பேசிய தன் சுருக்கத் தொகுப்பு :

கேள்வி: மனிதனின் பயணம் எப்படி இருந்தது?

பதில் : இந்த ஆய்வு படமாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் 10 ஆண்டு களுக்கு முன்னரே இருந்தது .உலகின் எல்லாச் சூழ்நிலைகளிலும் இருந்து, பழகிக் கொள்ள வேண்டி இருந்தது மய்ய ஆசியா ,ஆஸ்திரேலியா அலாஸ்கா போன்ற இடங்களில் பயணிக்க வேண்டும்.நாம்(மனிதர்கள்) எங்கே தோன்றினோம்? உலகின் ஒவ்வொரு மூலைக்கும் எப்படி வந் தோம்? இதுவே முக்கியக் கேள்விகளாக எழுந்தன. எனது முக்கிய கண்டு பிடிப்புகளில் ஓன்று கஜகஸ்தானில் கண்டறியப்பட்டது .இங்கே வாழும் நியாசோவ் என்பவர். மய்ய ஆசியா மனிதரின் வழித்தோன்றல் ஆவார். இந்த மய்ய ஆசியா மனிதர்தாம் அய்ரோப்பாவுக்கும், இந்தியாவிற்கும், அமெரிக்காவுக்கும் சென்று பரவி யிருக்கின்றார்கள்.
இவர்களின் வழி தோன்றல்கள் இந்தோ யூரோப்பிய மொழிகளைப் பேசினார்கள் .

கேள்வி : மனிதப் பயணம் என்ற கண்டுபிடிப்பினால் பழைய பரிணாம கொள்கையில் ஏதேனும் தவறு காணப்பட்டதா ?

பதில் : ஆம். பல இட மனிதத் தோற்றம் என்ற கொள்கை (multi region origin theory) உலகின் பல இடங்களிலும் மனிதன் தோன்றியிருக்க கூடும் என்ற கொள்கை தவறு என உறுதியாகிவிட்டது. மனித இனம் ஒரே பகுதியில்தான் தோன்றியது (single origin theory)
என்ற கொள்கை உண்மை என நிறுவப்பட்டுள்ளது .

கேள்வி : உங்களது ஆய்வில் 60,000 ஆண்டுகளில் மனிதனின் அறிவார்ந்த கூறுகளிலும், உடற்கூறுகளிலும் என்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என தெரிகிறது?

பதில் : மிகவும் வேகமான மாற்றம் நடந்துள்ளது. விலங்காண்டிகளாக வேட்டையாடி உணவு சேகரித்த, வேட்டைச் சமுதாயம் ஓவியம் வரையும் திறனையும், இசையில் திறனையும் பெற் றது. பின்னர் மொழிகள் தோன்றின.

தமிழ் ஓவியா said...

கேள்வி : சிலர் ஆரியர்கள்தாம் இந்தியாவின் முதல் முதலானவர்கள் என்று சொல்கிறார்களே ,இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்தியாவிற்கு ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள். அதற்கு மரபியல் சான்றுகள் உள்ளன கேள்வி: ஆனால் சிலர் ஆரியர்கள் தான் இந்தியாவின் முதல் குடிகள் என்று கோருகிறார்களே ? நீங்கள் இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆரியர்கள் பிறகுதான் வந்தார்கள் .

கேள்வி: எத்தனை பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது?

பதில்: உலகம் முழுவதும் உள்ள 50 வேறுபட்ட மக்கள் இனக் கூட்டங் களில் different populations ஏறத்தாழ 20,000மக்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது.

கேள்வி: மக்களில் பல இனங்கள் (races) உள்ளனவா? அதுபற்றி?

பதில் : இல்லை நாம் அனைவரும் நெருங்கிய உறவு உடையவர்கள்.இனப் பாகுபாடு (Racism) என்பது சமுதா யத்தை பிளவுபடுத்துவது. அறிவியல் படி தவறானது. நாம் அனைவரும் ஆப் பிரிக்காவில் வாழ்ந்த முன்னோர்களின் வழித்தோன்றல்கள்தான்.

இவ்வாறு தனது நூலில் ஆதாரத் துடன் விவரமாக எழுதி உள்ளார் .

நமது மூதாதையர் ஆப்பிரிக்காவி லிருந்து தான் வந்தார்கள்.இவ்வுண்மை மனிதனிடம் காணப்படும் Y குரோமோ சோம் மரபணுக்கள் மூலம் ஸ்பென்சர் வெல்ஸ் அவர்களின் ஆய்வினால் கண் டறியப் பட்டுள்ளது. ஆண்களிடம் மட் டுமே Y குரோமோசோம் காணப்படும். தந்தையின் Y குரோமோசோம் மகனுக்கு மட்டும் செல்லும். இதே போல் அடுத்த தலைமுறை ஆண்களுக்கு மட்டும் பெரும்பாலும் மாற்றமின்றியே செல்லும். மிகவும் அரிதாக இந்த மரபணுவில் மாற்றங்கள் நடக்கும். இந்த Y குரோ மோசோம்களில் ஏற்படும் மரபணு மாற்றத்தை மரபு காட்டி (genetic marker) என்கிறார்கள். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நடைபெறுகிறது. இந்த மரபு காட்டிகளை (genetic markers) ஆய்வு செய்து அடையாளம் காண்பதன் மூலம் இம்மனிதர் கடந்து வந்த பாதையினை நாம் அடையாளம் காணலாம்.

ஆரியர்களின் தோற்றம்:

5000 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மற்றும் தெற்கு ரசியாவில் தோன்றிய மரபு காட்டி எம்_17 (genetic marker M 17) கூர்கன் மக்கள் (Kurgan people) மூலம் யுரேசியா, ஸ்டெப்பி பகுதியில் முழுதும் பரவியது .தற்போது மிக அதிக அளவில் 40 விழுக்காட்டுக்கு மேலும் செக் குடியரசு முதல் சைபீரியாவில் உள்ள அட்லாய் மலைப்பகுதி வரை மற்றும் தெற்கு மய்ய ஆசியா முழுவதும் காணப் படுகிறது. இந்த மூதாதையர் வழிR1A1 (HAP LOGROUP R1A1) வழித் தோன் றல்கள் இந்தோ - யூரோப்பிய மொழி களைப் பேசியவர்கள். இந்த ஸ்டெப்பி பகுதியில் தான் குதிரைகள் பழக்கப்படுத் தப்பட்டன (domesticated).

ரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுப் போருக்குக் குதிரைப்படைகளும் ரதங் களில் போர் புரியும் ஆற்றலும் தோன் றின. இம்மக்கள் இந்தோ-யூரோப்பிய மொழிகளுக்கு (Indo europian) உரியவர்கள். (The Journey of Man : A Genetic Odessey - - நூல். பக்கம் 167).

ஆரிய பார்ப்பனர்களிடம் காணப் படும் மூதாதையர் வழி (HAPLOGROUP) R1A1
மரபுகாட்டி M17 (GENETIC MARKER M 17) ஆகும். இந்த ஸ்டெப்பி பகுதியில் இருந்து இப்பிரிவினர் மய்ய ஆசியாவை அடைந்தார்கள் மய்ய ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர் அய்ரோப்பாவை அடைந்தார்கள். இன்னொரு பிரிவினர் இந்தோ ஈரானிய கிளையாகி, கி.மு. 1800 ஆண்டுகளில் ஈரானுக்குள் சென்றனர். ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியே கி.மு. 1500 ஆண்டுகள் அளவில் இந்தியாவிற்குள் வந்தனர்.

ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த வுடன் அவர்கள் கண்ட காட்சி என்ன தெரியுமா?

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் நுழைந்தவுடன் ஆரி யர்கள் சிந்துவெளிப் பகுதியில் திராவி டர்கள் தங்களைவிட நாகரிகத்திலும், அறிவிலும், சிறப்புற்று விளங்கி அமைதியுடன் வாழ்வதைக் கண்டனர். உள்நாட்டு வாணிபத்திலும், கடல் வாணிபத்திலும், வானவியல், கணிதவியல் ஆகியவற்றில் மேம்பட்டவர்களாக இருப்பதை அறிந்தனர். ஆயுர்வேத மருத்துவம், யோகா அறிந்த நாகரிகம் தமிழர் நாகரிகம்தான். வேளாண்மை யில் விற்பன்னர்களாக தமிழர்கள் இருப்பதை கண்டனர். மொகஞ்ச தாரோவில் இரண்டு, மூன்று அடுக்கு மாடி வீடுகளுடன், கோட் டைகளுடன் காணப் பட்ட நாகரிகம் இது ஒன்று தான். நீண்ட தெருக்கள், வரிசை யில் அமைந்த வீடுகள். வீடுகளில் நான்கு அல்லது அய்ந்து அறைகள். அங்கு காணப்பட்ட மாட்டு வண்டி களிமண் பொம்மைகள் அதே வடி வில் இன்றும் மாட்டு வண்டிகள் அப்பகுதியில் மக் களிடம் புழக்கத்தில் இருப்பது நம்மை வியக்க வைக்கிறது. இம்மக்கள் குஜராத் லோதல் துறைமுகம் முதல் தற்போதைய ஆப்கானிஸ்தான் பிரகூய் என்ற திராவிட மொழி பேசும் பகுதி வரையிலும் மற்றும் மேகர்கார் பகுதி வரை காணப்பட்டனர். பாகிஸ் தானிலும் பிரகூய் என்ற திராவிட மொழி தற்போதும் பேசப்படுகிறது. சிந்துவெளி தமிழர் நாகரிகம் கி மு 3300 என இதுவரை கருதப்பட்டு வந்தது. மெகர்கார் பகுதியில் அண்மையில் நடந்த அகழாய்வு மூலம் தற்போது சிந்துவெளி நாகரிகம் 7000 ஆண்டு களுக்கு முற்பட்டது எனத் தெரியவந் துள்ளது. இதனை இஸ்லாமாபாத் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் மற்றும் தொல்லியல் துறை அறிஞரு மான அகமது அசன் தனி என்பார் தெரிவித்துள்ளார். சிந்துவெளியில் தமிழர் நாகரிகம் இருந்த அதே காலத் தில் தமிழகத்திலும் அந்த நாகரிகம் சிறப்பாகவே இருந்தது.

சிந்துவெளி எழுத்துக்கள் தமிழகத் தின் பல இடங்களிலும், இலங்கையிலும் கிடைத்துள்ளது .

சிந்துவெளி மக்கள் தமிழ் எழுத்துக் களையும், முத்திரைகளையும் கையாண் டனர். இக்காலத்தில் இந்தியா முழுவதும் தமிழ் மொழி பேசப்பட்டது. றி.ஸி. சர்க்கார் என்ற ஆய்வாளரும், ஆரியர்கள் மய்ய ஆசியாவிலிருந்து ஈரான் வழியே இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று உறுதிபட தெரிவிக்கிறார் .

தமிழ் ஓவியா said...

ஆரியர்கள் செய்தது என்ன?

திராவிடர்கள், ஆரியர்களாகிய தங்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை; யாகங்களை ஏற்க வில்லை; மொழியினை ஏற்கவில்லை; கடவுள்களை ஏற்கவில்லை; தங்களின் ஆதிக்கத்தை ஏற்கவில்லை என்றவுடன் தமிழர்கள் மேல் வெறுப்புற்று அவர் களை தாசர்கள் என்றும், தஸ்யூக்கள் என்றும், கருப்பு நிறத்தை உடையவர்கள் என்றும் இழிவாக உரைத்தார்கள். திராவிடர்கள் தந்திரங்கள் தெரிந்த வர்கள் என்றார்கள். திராவிடர்களின் அறிவாற்றலை தந்திரங்கள் என்று உரைத்தார்கள்.

உட்டோ பல்கலை கழக ஆய்வு

உட்டோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மைக்கேல் பாம்செட் என்ற அறிஞர் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து கிடைத்த முடிவுகளும் ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள்தான் என்பதை நிறுவு கின்றன .

அனலாபா பாசு மற்றும் 11 அறி ஞர்கள் கொண்ட குழு (Ethnic India : A Genomic View ,with special reference to peopling and structure - research report) ஆய்வு அறிக்கையின்படி ஆரியர் கள் இந்தியாவிற்கு வருமுன் திராவிட பழங்குடி மக்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த கருத்தைத்தான் இந்திய வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் என்பாரும் தெரிவிக்கின்றார். இந்தியா வின் சிந்துவெளிப் பகுதிக்கு வந்த ஆரி யர்கள் கங்கைவெளி பகுதியில் பரவ ஆரம்பித்தனர். அவர்களின் ஆதிக் கத்தை தவிர்க்க திராவிடர்கள் தென் இந்தியா நோக்கி நகர்ந்தனர்.

திராவிடர்களின் தொன்மை, தமிழின் தொன்மை

திராவிடர்களின் மூதாதையர் வழி L (HAPLOGROUP –L) மரபுக் காட்டி M 20 (Genetic Marker M20) ஆகும். திராவிடர்கள் 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள் ளார்கள். மூதாதையர் வழி L (HAPLOGROUP- L) என்பது இந்திய வழி (INDIAN CLAN) என்று அழைக் கப்படுகிறது. திராவிடர்களின் மரபு காட்டி M 20 இன்றைய தென்னிந்தி யாவில் 50 விழுக்காட்டுக்கும் அதிக மாகவே காணப்படுவதாக டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் குறிப்பிடுகிறார்.

(ஸ்பென்சர் வெல்சின் புத்தகம் “Deep Ancestry Inside The Genographic Project”பக்கம் 217)

தமிழ் ஓவியா said...

தமிழ் சமஸ்கிருதத்தைவிட தொன் மையானது. தென் இந்திய மொழியான தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். தமிழ் 6000 ஆண்டுகள் தொன்மையானது. இதனை அமெரிக்க அறிஞர் ரோர் ஜோன்ஸ் என்பார் தெரிவித்துள்ளார். தொன் மையான தமிழின் வடிவமாக தற்போது பிரகூய் மொழி பாகிஸ்தானின் பலு சிஸ்தான் பகுதியிலும், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஈரான், ஈராக், கத்தார் பகுதியில் 2.2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் முடிவுக்குவந்த பின்னரும், ஆரியர்கள் சிந்துவெளியில் வந்த பின்னரும், சிந்துவெளியில் இருந்த திராவிட மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பலுசிஸ்தான் நோக்கிச் சென்றனர். இந்த வட திராவிட மொழி யாகிய பிரகூய் மொழி, சிந்து வெளியில் திராவிட மொழிகள் இருந்ததற்கான ஆதாரமாக விளங்குகிறது.

Read more: http://viduthalai.in/page6/92423.html#ixzz3Ls2A3Iog

தமிழ் ஓவியா said...

ஒரு வித்தியாசமான தலைவர் - எப்படி?

2013 தஞ்சையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா. வழக்கமாகப் பிறந்த நாள் என்றால் எவ்வித ஆர்ப்பாட் டங்கள், ஆடம்பரத்திற்கும் இடம் கொடாத தமிழர் தலைவர் இரண்டு முறை அன்புக் கட்டளைகளுக்குப் பணிந்து அன்பு விலங்கில் சிக்கிக் கொண் டது உண்டு. அதில் ஒன்று தமிழர் தலைவரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள். சிக்க வைத்தவர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர். வள்ளுவர் கோட்டத்தில் வாடிக்கையில்லாத பெருவிழா. ஆசிரியர் வீரமணியின் 75-ஆம் ஆண்டுப் பிறந்த நாள். அது மட்டுமல்ல. ஆசிரியரை மட்டும் சிறப் பிக்கவில்லை. முத்தமிழ் அறிஞர், ஆசிரியரைப்போலவே தன்னைச் சற்றும் எந்த விழாவிலும் முன்னிறுத்திக் கொள்ளாத மோகனா வீரமணி அம்மையாரையும் கலைஞர் அழைத்து மேடையில் வைத்துச் சிறப்பித்தது பசுமையாக இருக்கிறது.

அடுத்து 2013ல் தமிழர் தலைவரின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச்சிலையை பெரியார் உலகத் திற்கு நிதியளிப்பு விழா திராவிடர் கழகக்கூட்டம் அன்று காலையில் தஞ்சை பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகத்தில் சிறப்பான கூட்டம். அதுவும் நிதியளிப்புக் கூட்டம் தான். ஆசிரியர்கள், மாணவர்கள், கழகத்தவர் என்று வரிசை வரிசையாக நிதியளிக்கக் கூடிச் சென்று விழா முடியவே மதியம் 2 மணி ஆகிவிட்டது.

அதன்வின் தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்ட பிறந்த நாள் பெருமங்கலம். அதிலும் ஒரு சிறப்புக் கூறு அந்த விழாவில் திராவிட முன் னேற்றக்கழகப் பொருளாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று வாழ்த்த வருகைப் புரிந்தார். அத்தோடு விடுதலைச் சிறுத்தைகளின் வீரம் மிகு தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இவர்கள் வாழ்த்த வந்ததைக்காண விண்ணிலிருந்து மழைத்துளி துளிதுளியாக விழுந்தது கொட்டும் மழையாய்க் கொட்டிய போதும் கூட்டம் கலைந்து விடவேண்டுமே. கலைந்து நகர வேண்டுமே அதுதான் இல்லை. நின்ற இடத்திலேயே உட்கார இருந்த நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு மழையிலிருந்து தலைமைய மட்டுமே காத்து நின்ற காட்சி மறக்கமுடியாத காட்சி. இப்படிக் கொட்டும் மழையில் கூடியது 1949-இல் ஜூலை 18 இல் திமுக தொடக்க விழாக் கூட்டம் இராபின்சன் பூங்காவில் கூடியபோது இருக்கலாம்.

இந்த நேரத்தில் கொட்டும் மழையில் நன்றியுணர்வு மிக்கத் தமிழர் கூட்டம் கூடியது தஞ்சையில். ஆனால் தமிழர் தலைவர் வாழ்க்கையில் அவராலேயே மறக்கமுடியாத மழை நாள் கூட்டம் ஒன்று இந்தத் தமிழ் மண்ணில் அல்ல - ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்களுக்கு அப்பால் பீகார் மண்ணில் கூடியதை இந்த பிறந்த நாள் சிந்தனையாக நினைத்துப் பார்ப்பதோடு பதிவு செய்திட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

பீகாரில் கர்ப்பூரி தாகூர் - முடி வெட்டும் மருத்துவர் குலத்தில் பிறந் தவர். மக்கள் தொண்டினால் அந்த மண்ணின் முதல்வராக உயர்ந்தவர். அவர் முதலமைச்சர், அவருடைய தந்தை, மகன் முதலமைச்சர் என்பதற் காகத் தாம் செய்து வந்த முடிதிருத்தும் தொழிலை சாகும் வரை விடாமல் செய்து வந்தவர். மகன் தாகூரின் முதலமைச்சர் கார் அந்தப் பக்கம் செல்லும். தந்தை அப்போதும் தன் தொழிலை விடாமல் செய்து வந்தார்.

அப்பேர்ப்பட்ட கர்ப்பூரி தாகூர் தம் மாநிலத்தில் தமிழர் தலைவரை அழைத்துப் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் என்றால் அந்த மண்ணில் அவ்வளவு கூட்டம் கூடியது ஜே.பி. பேசும் போது மட்டும் கூடியது என்பர்.

அவ்வளவு சிறப்பு மிக்க மரியா தையைத் தமிழர் தலைவருக்குக் கொடுத் துக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். பலரும் பேசுவதாக ஏற்பாடு கூட்டம் தொடங்கியது. வரவேற்றுப் பேசிய கர்ப்பூர் தாகூர் மற்றவர்கள் எல்லாம் பேசவேண்டாம் - வீரமணிஜி மட்டும் பேசி னால் போதும் என்று கூறிவிட்டார்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தவுடன் இவருடைய சொற்பொழிவு மழை தொடங்கியதும் மழையும் போட்டிப் போட்டுக் கொண்டு கொட்டத் தொடங்கியது. கூட்டம் அப்படி இப்படி நகர வேண்டுமே. நகரவேயில்லை. ஆசிரியருக்குக் குடை பிடிக்க ஏற்பாடு செய்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் நனையும்போது எனக்கு மட்டும் குடை வேண்டாம் என்று மழையில் நனைந்தவாறே ஒன்றரை மணிநேரம் சொல்மாரி பொழிய மக்கள் கூட்டம் கலையாது கேட்ட அற்புதம் அயல் மண்ணில் நிகழ்த்தியிருக்கிறார், பேசி முடிக்கவில்லை. பேசிக்கொண்டேயி ருக்கிறார். துண்டுச் சீட்டு ஒன்று வருகிறது. விமானத்திற்கு தாமதமா கிறது என்று தகவல் இருந்தது துண்டுச் சீட்டில். ஆசிரியர் பேச்சை முடித்து ஈர ஆடையைக் களைந்து ஆடையை மாற்றி விமானத்தில் வர நேரம் சரியாக இருந்திருக்கிறது. விமானத்தில் ஏறி விட்டார் கதவுகள் சாத்தப்பட்டு விட்டன.

மறுபடியும் விமானம் புறப்படுவதற்கு முன் விமானக் கதவுகள் திறக்கின்றன. விமானத்தில் ஏறும் ஏணி இறக்கப் படுகிறது. கர்ப்பூரிதாகூர்தான் நனைந்த ஆடையுடன் வருகிறார். கட்டித்தழுவி வீரமணிஜி இதற்கு முன் அந்த மைதானத்தில் லோக்நாயக் ஜே.பி.ஜி. பேசும்போதுதான் மக்கள் அப்படி அசையாமல் இருந்திருக் கிறார்கள். இப்போது அப்படி எங்கள் ஊர் மக்களை ஒன்றரை மணி நேரம் மழையிலும் கட்டிப்போட்டுவிட்டீர்கள் என்று உணர்ச்சி பொங்க கூறியி ருக்கிறார்.

ஆசிரியர் அவரிடம் இந்தப் பாராட்டை என் பேச்சை மொழி பெயர்ப்புச் செய்தாரே அவருக்குத் தெரிவியுங்கள் என்று அடக்கமாகக் கூறி விட்டு விமானம் ஏறி வந்து சேர்ந்தார்.

இதுபோல் தமிழர் தலைவரைப் பாராட்டிய வடநாட்டுத் தலைவர் களில் ஒருவர் ஒரிசாவின் முதலமைச்சர் பிஜூபட்நாயக். இப்போதைய பட்நாயக்கின் தந்தை. ஒரிசாவில் அவர் ஒரு பார்ப்பன எதிரி. அவர் வீட்டினுள் பார்ப்பனரை நுழைய விடமாட்டாராம். வீட்டில் வாசலில் கோலமா போடுவது, மாடு குளிப்பாட்டுவது என்று வேலை களுக்கு அவர்களை வைத்திருப்பவர். அவர்களை வீட்டிற்குள் விடமாட் டாராம். அவருடைய இந்தப் பாப் பனரல்லாதார் பற்றுதான், எம்.ஜி.ஆர். திட்டமிட்டுத் திமுகழகத்தைப் பிளந்தபோது, திராவிட இயக்கம் பிளவு படக்கூடாது என்று சமரசம் செய்ய முன் வந்தது. அத்தகைய முதல்வரின் பாராட்டும் பெற்றவர் தான் தமிழர் தலைவர்.

இப்போது மூன்றாம் முறையாகப் பிறந்த நாள் விழாவில் மக்கள் அன்புக் கட்டளைக்குப் பணிந்து அதற்குச் சம்மதித்திருக்கிறார். அதுவும் கூட அவருடைய கனவுத் திட்டமான 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச்சிலை - பெரியார் உலகம் உருவாக்கும் திட்டத்தின் பொருட்டுத் தான் சம்மதித்திருக்கிறார். உண்மை யாகவே ஆசிரியர் ஒரு வித்தியாசமான தலைவரே!

Read more: http://viduthalai.in/page5/92780.html#ixzz3Ls2SiW23

தமிழ் ஓவியா said...

மண்டும் அறியாமை மாய்த்த மனிதவீறு வாழ்கவே!


மேடையில் ஏறிய சிறுவர் எவரும்
உயர்பெரும் தலைவரான தில்லை
கோடை இடியாய் கொட்டிடும் அருவியாய்
முழக்கியோர் கொள்கையாள ரில்லை
இயக்கம் நடத்துவோ ரெல்லாம் எப்போதும்
இயங்கிக் கொண் டிருப்ப தில்லை
இயற்கை யோடு இயைந்து இயல்பாய்
இயங்குபவர் நம்தமிழர் தலைவர்!
நல்ல எழுத்தாள ரெல்லாம் பேச்சா
ளாராய் இருப்ப தில்லை
நல்ல பேச்சாள ரெல்லாம் எழுத்தா
ளாராய் சுடர்விட்ட தில்லை
எழுத்துப் பேச்சு இரண்டிலும் வல்லவர்
மிகச்சிலர் அரிதினும் அரிதாய்
நழுவல் வழுவல் தழுவலின்றி நானிலம்
போற்றிடும் நம்தமிழர் தலைவர்!
அய்யாவைப் போல் அரசியல் பக்கம்
சார்ந்தோடா அருந்திறல் ஆற்றலாளர்
மய்ய மாநில அரசுகளை மக்கள்
சார்ந்து செயல்பட வைத்தார்
மண்டல் குழுவின் அறிக்கையை நடுவண்
அரசில் ஏற்றிடச் செய்தார்
மண்டலுக் கெதிரான மதவெறிக் கூட்டத்தை
மண்ணைக் கவ்வச் செய்தார்!
தமிழ்தமிழர் தமிழ்நாடே மூச்சுக் காற்றாய்
சுவாசித்து இலக்குடன் போராடி
தமிழர் வாழிட மெல்லாம் வலம்
வந்து தடம்பதிக்கும் தகையாளர்
அல்லும் பகலும் அயராது உழைத்து
பெரியாரை உலகமய மாக்கினார்
ஒல்லும் வகையால் ஒப்பாரும் மிக்காரும்
இல்லாச் சீர்கெழு தலைவரேறு!
வாழ்வியல் சிந்தனையால் வழிகாட்டும் நெறி
முறையால் வாழ்வாங்கு வாழ்பவர்
வாழ்நாள் குறிக்கோளாய் சிறுகனூரில் பெரியார்
உலகம் அமைக்கும் சீராளர்
தொண்டறச் செம்மல் நாளும் பொழுதும்
தூய்மையான பொதுவாழ்வு ஆற்றி
மண்டும் அறியாமை மாய்த்த மனிதவீறு
மனிதநேயர் வாழ்க வாழ்கவே!

Read more: http://viduthalai.in/page5/92781.html#ixzz3Ls39xi8M

தமிழ் ஓவியா said...

தெளிவு பெறட்டும் தி இந்து (தமிழ்) கட்டுரையாளர்

- மு.வி.சோமசுந்தரம்

சென்னை, 25.10.2014 அன்று விடுதலை இதழின் ஞாயிறு மலர் இதழில் மின்சாரம் அவர்களின் கட்டுரையாக ஒரு விளக்கக் கட்டுரையாக மட்டுமல்லாது, பளீர், பளீர் என்ற சொல் சாட்டையடியாக விழுந்ததைப் பார்க்க முடிந்தது. கே.ஜி. (ரிநி) வகுப்பில் சேரும் வயது வராத குழந்தை இதழுக்கு இது தேவைதானா? இளம்கன்று பயமறியாது என்பார்கள். அந்த கதை தான் இது. குன்றின் மேல் மோதிய குருவியாகிவிட்டதே, தி இந்து (தமிழ்) இதழுக்கு விளக்க சாட்டையடி வடு ஏற்பட்டதோ இல்லையோ, பெரியார் தொண்டர்களுக்கு வேகம் வரத்தானே செய்யும். பெரியார் திடலுக்கு தொலை பேசி வேண்டுகோள் வந்தது வியப் பானதாகாது.

சோ போன்றவர்கள் சூடுபட்ட பூனையாகியுள்ளனர். பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி என்ற வலுவான நூல் வரக்காரணமாக இருந்த இந்த கூட்டத்துக்கு நன்றிதான் கூற வேண்டும் மேலும் ஒரு நூல் வெளிவர அடி எடுத்து கொடுக்கும் நோக்கமோ?

என்ன பொருத்தமோ?

பிடித்தாலும் புளியம் கொம்பாய் பிடித்தாய் என்பார்கள். அதுபோல பெயர் வர விளம்பரம் தேட பெரி யாரைத் தேட வேண்டியுள்ளது. இதைத் தான் மின்சாரம், திராவிட இயக்கத்தின் மூலவேரான பெரியாரை நோக்கியே அதை ஆரம்பிக்கலாம். அடி வேரையே அசைத்து விட்டால் மற்றவை ஆட்டம் காணச் செய்யலாம் என்ற தீய நோக்கம் இருக்கக்கூடும் என்று கட்டுரையின் நோக்கத்தை சுட்டிக் காட்டுகிறார்.

தி இந்து (தமிழ்) வில் வந்த முழுக் கட்டுரையையும் படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை எனினும் கட்டுரைத் தலைப்பைக் கொண்டும், மின்சாரம் அவர்கள் கொடுத்துள்ள கட்டுரைக் குறிப்புகளை கொண்டும் பார்க்கையில், ஏதோ அவசரப்போக்கில் அலங் கோலமாக இன்றைய நிலைமைக்கு (ஷிமீணீஷீஸீணீறீ ஜிஷீஜீவீநீ) ஏற்ற சூடான பண்டமாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது.

தமிழ் ஓவியா said...

பொருத்தமில்லாத ஒன்றை செய்வதை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவது என்பார்கள். செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை, ஞாலம் ஏத்தும் சமூக விஞ்ஞானியான தந்தை பெரியாருடன் தொடர்புபடுத்தி எழுதுவது அஞ்ஞான மல்லவா? மலையின் முகட்டில் ஒளிரும் அறிவுச்சுடர் எங்கே? மாயத்தோற்றம் கொண்ட மருட்சி மடு எங்கே? வாரிசு என்ற சட்ட நுணுக்கமும், சந்ததி உற வையும் சுட்டும் சொல்லை மிக எளிய வகையில் (சிணீணீறீ) பயன்படுத்தலாமா?

சமயத்தையும் கடவுளையும், சமயத் தொல்வழக்கங்களையும் எவனொருவன் வெறுத்தானோ, எவனொருத்தன் மக்களிடையே இருந்து இம்மூட நம்பிக்கைகளையெல்லாம் மாற்ற வேண்டுமென்று நினைத்தானோ அவனாலேதான் நாட்டுக்கு நன்மை விளைகிறது என்று கூறும் பெரியார் வழியில் அம்மையார் அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த காலத்தில் செயல் திட்டங்களை ஊக்குவித்தார் என்று கூற முடியுமா-?

சர்வாதிகாரி செல்வி ஜெயலலிதா

தந்தை பெரியாரை ஒரு சர்வாதி காரியாக தண்ணீரில் சித்திரம் தீட்டும் குழந்தைத் தனத்தின் மூலம் செல்வி ஜெயலலிதா அவர்களை ஒரு சர்வாதி காரி என்று உலகுக்கு ஒப்பிட்டுக் காட்ட முன் வந்துள்ளார். சர்வாதி காரம் என்ற சொல்லின் உட்பொருள் என்ன என்பதை அறியாதவர் என்பது தெளிவாகிறது. எல்லையில்லா அதி காரத்தையும், வன்முறை மூலம் பெற்றி ருக்கும் அதிகாரத்தையும் அனுபவிப் பவரே சர்வாதிகாரி. இந்த விளக்கப்படி ஜெயலலிதா அவர்களை அறிமுகப் படுத்த விரும்பினால் வரலாற்றில் கறைபடிந்த சர்வாதிகாரர்களின் பெயர்ப் பட்டியலுண்டு. எந்த பேதை மையில் பெரியாரை கண்டெடுத்தாரோ.

பெரியார் வழிபட அல்ல, வழிகாட்ட!

அடுத்து, தனி நபர் வழிபாட்டின் ஆரம்பப் புள்ளியே பெரியார் தான் என்ற பொம்மை வெடிகுண்டைப் போட்டுள்ளார் கட்டுரையாளர். பெரியார் வழிபாட்டின் ஆரம்பப் புள்ளியல்ல, அவர் மனிதன், சுயமரி யாதையுடனும், மானத்துடனும், அறி வுடனும் வாழ வழிகாட்டும் கலங்கரை விளக்கம். கட்டுரையாளருக்கும் நல்வழி காட்டும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து, நீதிமன்றத்தில் பதிவு செய்ததைப் படித்து தெளிவு பெறட்டும்.

பெரியாரும் காந்தியும்

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைப் பிரிவு நீதிமன்றத்தில் வந்த வழக்கில் தீர்ப்பை வழங்க வேண்டிய வேளையில், நீதியரசர் நாகமுத்து அவர்கள், பாசத்துடன் தந்தை பெரியார் என்று அழைக்கபடும் ஈ.வெ.ராமசாமி புரட்சிகரமான வாழ்க்கை வாழ்ந்தவர், சமூக நீதிக்காக போரா டியவர். சாதி வேறுபாடு இல்லா சமூகம் அமைத்தல் , பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருதல் போன்ற குறிக்கோள்களைக் கொண்டவர். தமிழ் நாட்டின் உயர்ந்த பெருந்தலைவர். தமிழ்நாட்டின் காந்தி என்று மதிக்கத் தக்கவர் என்று குறிப்பிட்டுள்ளார். (தி இந்து 17.9.2014) அய்.நா.சபையில் யுனெஸ்கோ, பெரியார் தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் என்றும், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்றும் அடையாளம் காட்டியுள்ளது. அரசியல் ஆசையே இல்லாத அதன் பக்கம் தலைவைத்து படுக்காத பெரியாரை, அரசியல் கட்சித் தலைவராகவும் அரசியலே மூச்சாகவும் உள்ள அம்மை யாருடன் இணைத்து கட்டுரை தீட்ட முன்வந்தது பெரியார் பெயரைக் காட்டி விளம்பரம் தேடிடும் பிழைபட்ட யுக்தியே என்று கருதத் தோன்றுகிறது.

Read more: http://viduthalai.in/page4/92778.html#ixzz3Ls3Xq7SI

தமிழ் ஓவியா said...

பத்திரிகையை நம்பி புண்ணியம் இல்லை - சிவாஜி கணேசன்

தினமணியில் பணியாற்றியபோது சிவாஜி கணேசன் அவர்களைப் பேட்டி காண சென்றிருந்தேன். தினமணி பிராமணப் பத்திரிகையாச்சே... என்னை எல்லாம் பேட்டி காண மாட்டாங்களே என்றார். அப்போது இராம். திரு.சம்பந்தம் ஆசிரியராக இருந்தார். எங்கள் ஆசிரி யரைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர் பெரியாரிஸ்ட் என்றேன். அப்படியானால் இனி பத்திரிகையை நம்பி புண்ணியம் இல்லை என்று முடிவு பண்ணிட்டாங்க போல என்றார்.

- முக நூலில் இருந்து நன்றி: தமிழ் மகன்

Read more: http://viduthalai.in/page4/92779.html#ixzz3Ls3nl3rN

தமிழ் ஓவியா said...

மதம் சாராத நாத்திகர் என அறிவித்துள்ள கருநாடக அமைச்சர்


ஒருவர் எந்த மதத்தில் இருப்பது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையில் எவரும் தலையிட முடியாது என்று கூறியுள்ள கருநாடக மாநில சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்ச னேயா, 80 ஆண்டுகளுக்குப் பின் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பில் மக்கள் எந்தவித அச்சமும் சார்புநிலைகளும் இல்லாமல் பங்கெடுக்க வேண்டு மென்று கூறியுள்ளார். இந்தக் கணக் கெடுப்பால் உண்மையான இடஒதுக்கீட்டுப் பலனுக்கு உரியோர் யாவர் என்பது உறுதியாவதுடன் அரசு வழங்கும் நலத் திட்டங்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடையும் வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சாதியின் அடிப்படையில் மட்டுமே சலுகைகள் வழங்கப்படும் என்ப தாலும் மதம் அதற்குக் குறுக்கே நிற்காது என்பதாலும் இந்தக் கணக் கெடுப்பை, பாரதீய ஜனதா எதிர்க் கின்றது. இந்தக் கணக்கெடுப்பு தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மதம் மாறுவதற்கு வழி வகுக்கும் என்னும் பி.ஜே.பி.யின் கருத்து உடை படும். என்று அமைச்சர் கூறினார்.

தான் இன்று எந்த மதத்தையும் சாராதவனாகவும் நாத்திகனாகவும் இருந்தாலும் எதிர்காலத்தில் தான் விரும்பினால் எந்த மதத்தையும் தழுவிடும் உரிமை தனக்குண்டு; அதில் எவரும் தலையிட முடியாது என்றும் கூறிய அமைச்சர், நமது நாட்டில் நாய், நரிகளுக்குக் கூட உரிய மதிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், மனிதர்கள் தீண்டாமையைக் காரணம் காட்டி விலங்குகளைவிடக் கீழ்த்தர மாக நடத்தப்படுகின்றனர். பெங் களூரு போன்ற மாநகரங்களிலும் கூட, மாதிகா, தண்டோரா போன்ற வர்கள் கீழ்ழ்ச்சாதியினர் என்று காரணம் காட்டி வீடு கொடுக்கத் தயங்கும் நிலை உள்ளது. இதனால் மன வெறுப்படையும் மக்கள் தங்கள் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள் வதற்காக, கிறித்துவம் உட்பட வேறு மதங்களுக்கு மாறிவிடுகிறார்கள். அதில் என்ன தவறுள்ளது? என்று கேட்டுள்ளார்.

அண்மையில், சாதிவாரிக் கணக் கெடுப்புப் படிவத்தில் கிறித்துவர் களும் கொள்ளா, குருபா, கவுடா. கிறித்துவர்கள் என்று குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கணக்கெடுப்பை எதிர்ப்பதாக பி.ஜே.பி. அறிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

நன்றி: தினகரன் 5.12.2014 பெங்களூரு பதிப்பு; 05.12.2014 கருநாடகத்தில் நடைபெறவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது நாத்திகர்கள் தங்களை நாத்திகர்கள் என்றும் மதம் சாராதவர்கள் என்றும் பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page4/92777.html#ixzz3Ls403gTN

தமிழ் ஓவியா said...

ஒழுக்க உபதேசம் மற்றவர்களுக்குத்தானா?

- இசையின்பன்

7.12.2014 அன்று வெளியான தினமலர் பத்திரிகையோடு இணைப்பாக வந்த வார மலரில் அந்துமணி என்ற முகம் தெரியாத அல்லது முகத்தைக் காட்ட துணிவு இல்லாத நபரால் வாராவாரம் தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்வதற்காக எழுதும் பா.கே.ப. என்ற பகுதி கீழே தரப்பட் டுள்ளது. முதலில் அதனை தெளிவாகப் படித்து விடுங்கள்.

மதுரையில் நண்பர் ஒருவரின் மகன் திருமணம். 'கண்டிப்பாக வர வேண்டும்' என, தம் சகதர்மினியுடன் சென்னை வந்து என்னையும், லென்ஸ் மாமாவை யும் அழைத்துச் சென்றார். ரயில் கிளம்ப அரை மணிக்கு முன்பாகவே, எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந் தோம். எங்களுக்கு, 'சீட்' ஒதுக்கப்பட்ட பெட்டியின் அருகே, பிளாட்பாரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, மாமாவின் கண்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்திற்குப் பின், ஒரே இடத்தில் நிலைக் குத்தி நின்றது.

அங்கே சுரிதார் அணிந்த மூன்று இளம் பெண்களும், சேலையில் ஒரு பெண்ணும், தம்மை மறந்து பேசிக் கொண்டிருந்தனர். லென்ஸ் மாமாவை இழுத்துக் கொண்டு பெட்டிக்குள் ஏறி அமர்ந்தேன். ரயில் கிளம்பியது. எங்களது, 'கேபினில்' நடுத்தர வயதை கடந்த ஒரு பெண்மணி அமர்ந்து இருந் ததால், லென்ஸ் மாமா, வெண்குழல் வத்தி பற்ற வைக்க முடியாமல் தவித்து, அவ்வப்போது வெளியே சென்று புகைத்துவிட்டு வந்து கொண்டிருந்தார். தாய்க்குலத்திற்கு மதிப்பு அளிக்கும் செயலாம்!

தமிழ் ஓவியா said...

ரயில், செங்கல்பட்டை தாண்டியது; 'கேபினில்' தாய்க்குலம் இருப்பதால், அங்கே உற்சாக பானம் சாப்பிட முடியாமல் சங்கடத்தில் நெளிந்தார் லென்ஸ் மாமா. பெட்டியின் கண்டக் டர், மாமாவிற்கு நன்கு பழக்கப்பட் டவர். அவரிடம், 'பாய்... உங்க சீட்டு காலியாத்தானே இருக்குது... அங்கே வந்து கச்சேரியை ஆரம்பிக்கட்டுமா?' என்று கேட்டார்.

கண்டக்டர்களின் சீட்டு, பெட்டியின் நடுவே, நடைபாதையில், கழிப்பறையை ஒட்டி அமைந்திருக்கும்; இரண்டடிக்கு இரண்டடி தான் இருக்கும்.

'அங்க, ரயில்வே விஜிலன்ஸ் ஆபீசர் உட்கார்ந்து இருக்கான்... நீங்க பெட் டியிலே ஏறினதுமே, அந்த சீட்டை உங்களுக்காக ஒதுக்கி வைக்கணும்ன்னு முயற்சித்தேன்; முடியல. நீங்க, இந்த பக்கமா (ரயில் பெட்டியின் இன்னொரு கோடி) உட்காருங்க... என் டிரங்க் பெட்டியை இங்கே கொண்டாந்து போடுறேன்...' என்றார்.

பின்னர் என்ன தோன்றியதோ, அந்த ரயில்வே விஜிலன்ஸ் ஆபீசரிடம் பேசிவிட்டு வந்த கண்டக்டர், 'வாங்க சார்... அங்கேயே உட்கார்ந்து சாப்பிடலாம்...' என, லென்ஸ் மாமாவின் காதைக் கடித்தார்.

வி.ஆபீசரும், மாமாவும் ஒரே சீட்டில், 'அட்ஜஸ்ட்' செய்து அமர, ரயில் பெட் டியின் கதவைத் திறந்து, வாசல் ஓரம் காற்று வாங்கியபடியே கண்டக்டர் உட்கார, நான் நின்றபடி இருந்தேன்.

உ.பா., சுறுசுறுவென்று மாமாவின் முகுளத்தை தாக்கத் துவங்கியது, அவரது பேச்சில் தெரிய ஆரம்பித்தது. விஜிலன்ஸ் ஆபீசரிடம், ரயில்வேயின் ஊழல்கள் பற்றி திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் போதே, வி.ஆ., 'சார், நான் ரிட்டையர் ஆகிட்டேன்...' என்றார்.

மாமாவுக்கு இதைவிட என்ன காரணம் வேண்டும்... முழு சீட்டையும் பிடித்துக் கொள்ள!

'சார்... ஒரே சீட்டில ரெண்டு பேரும் இடஞ்சலா உட்கார்ந்து இருக்கி றோமே... நீங்க அப்படி, வசதியா கதவுப் பக்கம் தரையில உட்காரலாமே...' என, வி.ஆ.,வை கிளப்பி விட்டார்.

மாமாவும், விஜிலன்ஸ் ஆபீசரும், ரயில்வே துவங்கி, அமெரிக்க அரசியல் வரை பேசினர்.

பேச்சின் நடுவே, நெற்றி அடி போல விஜிலன்ஸ் ஆபீசர் கூறிய ஒரு, 'பாயின்ட்' இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

'பொது வாழ்வுக்கு வந்துவிட்ட அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கம் வேணும் சார்... எனக் காட்டமாக, கூறினார்.

இது சீரியசாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய சமாச்சாரம்...... படித்து விட்டீர்களா? இப்பொழுது நமக்கு தோன்றுவதை பகிர்ந்து கொள்ள லாம். இதனை படித்தவுடன் முதலில் நமக்கு ஒரு கிராமியப் பழமொழி ஒன்று நினை வுக்கு வருகிறது. யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து வீட்டுக்குள்ளவை. இதனை படிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.

எந்த இடத்திலாவது தனி மனித ஒழுக்கமானது இவர்களிடமிருக்கிறதா என்று பாருங்கள்! ரயில்வே சட்ட விதிகள் எப்படி சின்னா பின்னமாக்கியிருக் கிறார்கள் என்று பாருங்கள்!

தமிழ் ஓவியா said...

பெண்களைப் பார்த்ததும் கண்கள் நிலை குத்தி நின்றதாம். நடுத்தர வயதுக் கடந்த பெண்மணியிருந்ததால் ஓடிக் கொண்டிருக்கின்ற ரெயிலில் சிகரெட் குடிக்க முடியவில்லையாம். கேபினில் பெண்கள் இருந்ததால் தண்ணியடிக்க முடியவில்லையாம். உடனே தனக்கு எப்பொழுதும் இரயிலில் இடம் தண்ணியடிப்பதற்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பு வாய்ந்த டிடி.ஆர். இரயில்வே ஊழல் களையெல்லாம் கண்டுபிடிக்கும் விஜி லென்ஸ் ஆபிஸரை தண்ணியடிக்க சீட் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்வாராம். தனது முந்தைய கால பொறுப்புகளை யெல்லாம் மறந்து கேவலம் ஒரு கிளாஸ் பிராந்திக் காகவோ, விஸ்கிக்காகவோ தான் உட் கார்ந்த சீட்டை விட்டு கொடுத்து விஜிலென்ஸ் அதிகாரி தரையில் அமர்ந்து கொள்வாராம். இரயில் பெட்டி கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தண்ணியடித்த படியே பொது மக்கள் பயணம் செய்யும் இரயில் பெட்டியை டி.டி.ஆர். பொறுப் போடு பாதுகாத்துக் கொண்டே வருவாராம்.


பிராந்தி உள்ளே போன பிறகு உலக நடப்புகளை இவர்கள் பீஸ் பீஸாக பிரித்து மேய்வார்களாம். இரயில்வே ஊழல்கள் பற்றி உளறுவார்களாம். அமெரிக்க அரசியலை அலசி காயப் போடுவார்களாம்.

பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட அரசியல்வாதிகள் ஒழுக்கம்பற்றி வாயில் எச்சில் ஒழுக ஏசுவார்களாம். அதிலிருந்து நம்ம முகமூடி அத்துமணிக்கு பொறி கிளம்பி சிந்திக்கத் தொடங்கி படிப்பவர் களையும் சீரியஸாக சிந்திக்க சொல்வாராம்.

இப்படி நாமும் சிந்திக்கத் தொடங்கி யதால் அவர் எழுதியதில் கேள்விகள் பல தோன்றி நம்மை பாடாய் படுத்துகின்றன.

தினமலர் பத்திரிகையாளர்கள் பெண் களை எந்த நினைப்போடு பார்க்கிறார்கள்?

வயதான பெண்மணி இல்லையென் றால் அங்கேயே மற்றவர்களைபற்றி கவலைப்படாமல் வெண் குழல்வத்தி (சிகரெட்) பற்ற வைத்து ஊதியிருப்பாரா?

தாய்க் குலங்கள் இல்லையென்றால் மற்றவர்கள் மத்தியிலேயே சரக்கடிக்க தொடங்கியிருப்பார்களா? இரயில் பெட்டிகளில் சிகரெட் குடிப் பதற்கும், மது அருந்துவதற்கும் சட்டப்படி தடை செய்யப்பட்டிருப்பது இந்த சிண்டு களுக்கு தெரியாதா? இதைப்பற்றி புகார் தெரிவிக்க இவர்கள் பத்திரிகையிலேயே தொலைபேசி எண்கள் எல்லாம் போட்டி ருக்கிறார்களே! இந்த புத்திசாலிகளே இப்படி தண்ணியடித்துக் கொண்டு போனதுபற்றி விலாவாரியாக போட்டிருக் கிறார்களே மக்கள் தங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் கொஞ்சம் கூட உதிக்கவில்லையா? இவர்கள் கெட்டது போதாது என்று ரயில் வண்டியை பாதுகாக்க வேண்டியவர்களையும் கெடுத்திருக்கிறார்களே, இந்த ஒழுக்க சீலர்களை என்ன செய்யலாம்? இப்படிப் பட்ட தப்புகளையும், தவறுகளையும் சுட்டிக்காட்டி, தட்டிக் கேட்க வேண்டிய ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகையைச் சேர்ந்தவர்களே இப்படி யெல்லாம் நடந்து கொண்டு அரசியல் வாதிகளின் குறைகளை சுட்டிக் காட்டுவது எந்த வகையான யோக்கியத் தன்மை? இதனைப் படிப்பவர்களுக்கு தோன்றலாம். அந்துமணியை எப்படி இதில் குற்றம் சொல்ல முடியுமென்று?

இந்த தப்புகளையெல்லாம் கூடவேயி ருந்தும் கண்டு கொள்ளாமல் ரசித்துக் கொண்டு இருந்திருக்கிறாரே! ஒரு பத்திரி கையாளன் கடமை என்பது இதில் எங்கே போயிற்று?

இதுபோன்று பலமுறை ரூம் போட்டு தண்ணியடிப்பது, கடற்கரையில் உட்கார்ந்து கொண்டும், அவர்களுடைய சொகுசான கார்களில் பிரயாணம் செய்தபடியே பிராந்தி வாசனையோடு ஊர் நியாயங் களை அண்டா அண்டாவாக அலசுவது என்பது அந்துமணியின் எழுத்துகளில் வந்து கொண்டேயிருக்கும். அதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட விவகாரமாகப் பார்க்கலாம். ஆனால் ரயில்வே என்கிற பொதுமக்களின் பயன்பாடு வண்டிகளில் இது போன்று சுய கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் கும்மாளமடிப்பது தான் பத்திரிகை தருமமா? சட்ட விதிகளுக்கு விளக்காய் இருக்க வேண்டியவர்கள் விலக்காய் இருக்கலாம் என்பது எந்த வகையான பத்திரிகை இலட்சணம்?

இப்படி உள்ளவர்களும் இன்றைய பத்திரிகை உலகில் இருக்கிறார்களே என்ற உண்மைகளை படிப்பவர்கள் புரிந்து கொண்டு இதுபோன்ற பத்திரிகைகளை படிக்காமல் தவிர்த்து விடுவதே சரியானது என்று அந்துமணி சொல்வதுபோல் நாம் சிந்தித்தபோது எடுக்கும் முடிவாக மாறியிருந்தது

Read more: http://viduthalai.in/page3/92775.html#ixzz3Ls4KKYec

தமிழ் ஓவியா said...

இறந்த பிறகு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய வேண்டாம்?

மூடநம்பிக்கை வேண்டாம்
மூலகாரணமானவர்கள் வேண்டாம்
தப்பு அடிக்க வேண்டாம்
தறிகெட்டுப் போக வேண்டாம்
வண்ணான் வேண்டாம்
வாய்க்கரிசி வேண்டாம்
பரியாரி வேண்டாம்
பாடை கட்ட வேண்டாம்
கோடி வேண்டாம்
வெடி வேண்டாம்
குளிப்பாட்ட வேண்டாம்
கொள்ளிச் சட்டி வேண்டாம்
பால் தெளிக்க வேண்டாம்
படத் திறப்பு விழா வேண்டாம்
கண்தானம் வேண்டும்
குளிர் பெட்டியில் வைக்க வேண்டும்
ஊர்வலம் ஊர்தியில் போக வேண்டும்
தீ குச்சியால் தீ மூட்ட வேண்டும்
நினைவு நாள் வேண்டும்
பெரியார் கொள்கை பரவிட வேண்டும்
- கோபால கிருஷ்ணன் (கோகி)
திராவிடர்கழகம், மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page3/92776.html#ixzz3Ls4Zk5d1

தமிழ் ஓவியா said...

இதுதான் மனுதர்மம்


அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைக ளினின்றுமுண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம் மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைச் தனித் தனியாகப் பகுத்தார். -
_ அத்தியாயம் 1, சுலோகம் 87

பிராமணனுக்கு ஓதுவித்தல், ஓதல், எக்கியஞ்செய்தல், எக்கியஞ் செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்குதல் ஆகிய இவ்வாறு தொழிலையும் ஏற்படுத்தினார்.
-_ அத்தியாயம் 1, சுலோகம் 88

சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார். இதனால் அவனுக்குத் தான் முதலியவையுமுண்டென்று தோன்றுகிறது.
அத்தியாயம் 1, சுலோகம் 91

பிராமணன் முதல் வருணத்தானான தாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்தவிடத்தில் பிறந்ததினாலும் இந்தவுலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தாமன் வாங்க அவனே பிரபுவாகிறான்.
அத்தியாயம் 1, சுலோகம் 100

பிராமணன் சம்பளங் கொடுத் தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத் தில் வேலை வாங்கலாம். ஏனெனில், அவன் பிராமணன் வேலைக்காகவே பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டிருக் கிறானல்லவா?
-அத்தியாயம் 8, சுலோகம் 413

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் எழு வகைப்படுவர்.
அத்தியாயம் 8, சுலோகம் 415

பிராமணன் சந்தேகமின்றி மேற் சொன்ன ஏழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்கப் பொருளையுடைய அந்தச் சூத்திரர் தான் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரல்ல.
அத்தியாயம் 8, சுலோகம் 417

பிராமணன் தொழிலைச் செய்தா லும் சூத்திரன் பிராமண சாதியாகமாட் டான். ஏனென்றால்அவனுக்கு பிரா மண சாதித் தொழிலில் அதிகாரமில் லையல்லவா? சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால், அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா? இப் படியே இந்த விஷயங்களைப் பிரம் மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார்.
அத்தியாயம் 10, சுலோகம் 73

ஏர் பிடிக்கக் கூடாது!
பிராமணனும் சத்திரியனும் வைசி யன் தொழிலினால் ஜீவித்தபோதிலும் அதிக இம்சையுள்ளதாயும் பாரதீநமாயு மிருக்கிற பயிரிடுதலை அவசியம் நீக்க வேண்டியது.
அத்தியாயம் 10, சுலோகம் 83

சிலர் பயிரிடுதலை நல்ல தொழி லென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில், இரும்பை முகத்தி லேயுடைய கலப்பையும், மண்வெட்டி யும் பூமியையும், பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிற தல்லவா?
அத்தியாயம் 10, சுலோகம் 84

பெண்களும் மனுதர்மமும்
மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களைப் புணருகிறாள்.
அத்தியாயம் 2, சுலோகம் 14

மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையாமனமும், நட்பு இன்மையும் இயற்கையாகவுடையவராதலால், கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.

அத்தியாயம் 9, சுலோகம் 15

தமிழ் ஓவியா said...


மாதர்களுக்கு இந்தச் சுபாவம் பிரம்மன் சிருட்டித்தபோதே உண் டானதென்று அறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்ய வேண்டியது.
அத்தியாயம் , சுலோகம் 16

படுக்கை,ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
அத்தியாயம் 9, சுலோகம் 17

மாதர்களின் சுபாவமே மனிதர் களுக்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். ஆதலால், தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அஜாக்கிரதையாயிரார்கள்.

அத்தியாயம் 2, சுலோகம் 213

ஜிதேந்திரியனாயிருந்தாலும், மூடனாயிருந்தாலும் அவனை மாதர்கள் தன் சம்பத்தினால் காமக் குரோதத்துக்கு உட்பட்டவனாகச் செய்கிறார்கள்.
அத்தியாயம் 2, சுலோகம் 214

தாய், தங்கை, பெண் இவர்களுடனும் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது. இந்திரியங்களின் கூட்டமானது மிகவும் பலமுள்ளது. அது தெரிந்தவனையும் மயக்கி விடும்.
அத்தியாயம் 2, சுலோகம் 215

தானியம், லோகம், பசு, இவைகளைத் திருடுதல், குடிக்கிற மனையாளைப் புணர்தல், ஸ்திரி, சூத்திரன், வைசியன், சத்திரியன் இவர்களைக் கொல்லுதல் இவையெல்லாம் தனித்தனியே உபபாத கமென்றறிக. (சிறிய குற்றம்)
அத்தியாயம் 11, சுலோகம் 66

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்கலாகாது. மனுதர்மம் என்பதுதான் இந்துலா என்ற இந்துச் சட்டத்திற்கு முக்கிய அடிப்படையாகும்.

இந்துலா என்ற இந்துச் சட்டத்தை, இந்திய அரசியல் சட்டத்தின் 372ஆவது விதி ஏற்று அமுல்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவே, இந்த நாட்டின் பெரும் பான்மை மக்கள் சாஸ்திரப்படி, சட்டப்படி (இந்து லாபடி) சூத்திரர்கள் அதாவது பார்ப்பனரின் தேவடியாள் மக்கள்
சுலோகம் 415படி

இம்மனுநீதி மனித தர்ம நீதிக்கு முற்றிலும் முரணானதால்

எரிப்ம்! எரிப்போம்!! எரிப்போம்!!!

Read more: http://viduthalai.in/page2/92771.html#ixzz3Ls4mxi5i

தமிழ் ஓவியா said...

வெங்காயம்


* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

* வெங்காயத்தை வதக்கி சாப்பிட் டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

* வெங்காய சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்த நாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

Read more: http://viduthalai.in/page2/92772.html#ixzz3Ls5LrQ00

தமிழ் ஓவியா said...

ஒரு சுயமரியாதை வீரரின் கடைசி விருப்பம்! ஆணை!


உயிர் பறந்து உடல் சரிந்தால் உதிர்ந்த சருகு!
எனது இறந்த உடலுக்கு எந்த விதச் சடங்கும் வேண்டாம்.
முதலில் அரசு பொதுமருத்துவமனைக்குத் தகவல் தந்து
உடல் உறுப்புகள் தேவைப்படுவன எடுத்துக் கொள்ளுமாறு
கூறி, அதற்காவன செய்ய வேண்டும்.
நீராட்டு! பூ மாலை, புத்தாடை எதுவும் வேண்டாம்.
சங்கு ஊதிச் சத்தமிடும் மணியோசை, எதற்கு?
போகும் வழி எங்கும் பூப்போட்டுப் புதுக்குப்பை சேர்க்காதீர்!
எளியமுறையில் எடுத்துச் சென்று எரியூட்டல் வேண்டும்.
தொலைவில் உள்ளோர்க்குத் தெரிவித்துக் காத்திருக்க
வேண்டாம். பின்னர் அறிவிக்கலாம்!
அண்டையில் இருப்போர்க்கு மட்டும் அறிவித்தால் போதும்.
யாருக்கும் இடர் இன்றி, உடனே எரித்துவிட வேண்டும்.
மரணச் சடங்கு, மற்றவர் செலவு, சுற்றச் சடங்கு
எதுவும் வேண்டாம். காரியம் சம்பந்திகள் தலைக்கட்டு
மரியாதையும் வேண்டாம்.
நீத்தார் நினைவு நாள் நடத்தலாம்; ஆனாலும்
படையலிடும் பழக்கம் தேவையில்லை.
மரணம் உறுதி என்பதால் துயரமும் தேவையில்லை.
என் மனைவிக்கு எந்தக் குறைவும் ஏற்படுத்தக் கூடாது;
இப்போது இருப்பதுபோல் எப்போதும் இருக்க வேண்டும்.

வெள்ளையாம்பட்டு சுந்தரம்
சென்னை- 78

Read more: http://viduthalai.in/page2/92773.html#ixzz3Ls5TDABD

தமிழ் ஓவியா said...

பரப்புகளும் - அளவுகளும்


1 கிரவுண்ட் 2400 சதுர அடி
1 ஏக்கர் 4840 சதுர யார்டு
1 ஏக்கர் 43,560 சதுர அடி
1 சதுர மைல் 640 ஏக்கர்
1 ஹெக்டேர் 2.47 ஏக்கர்
1 சதுர மீட்டர் 10.76 சதுர அடி
1 சதுர மீட்டர் 1.2 சதுர யார்டு
1 ஏக்கர் 0.0015 சதுர மைல் 1 சதுர அடி 0.093 சதுர மீட்டர்
கன அளவு - அளவுகள்
1 லிட்டர் 0.035 கன அடி
1 கன மீட்டர் 35.3 கன அடி
1 கன அடி 28.57 லிட்டர்
1 கன அடி 0.0283 கன மீட்டர்
எடை - அளவுகள்
1 மெட்ரிக் டன் 1000 கிலோ
1 கிலோ கிராம் 2.2 எல்பிஎஸ்
1 கிலோ கிராம் 32.3 அவுன்ஸ்
1 அவுன்ஸ் 0.0283 கிலோ கிராம்

Read more: http://viduthalai.in/page2/92774.html#ixzz3Ls5cnbRm

தமிழ் ஓவியா said...

காவடியாடும் காவல்துறை!


கன்னியாகுமரி, டிச.14- கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் இருந்து குமார கோவில் வேனிமலை முருகன் கோவிலுக்கு நேற்றுமுன்தினம் (12.12.2014) பொதுப் பணித் துறை, காவல்துறையினர் சார்பில் காவடி ஊர்வலம் தொடங்கியதாம். பத்மனாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் அருண்சத்யா இவ்வூர்வலத்தைத் தொடங்கி வைத்தாராம்.

காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் விக்ராந்த் பாட்டில் மற்றும் பொதுப்பணித் துறை சார்ந்த உயரதிகாரிகள் பலரும் இவ்வூர்வலத்தில் கலந்துகொண்டனராம். இதில் பல அரசு அதிகாரிகள் காவடி எடுத்து ஆடினார்களாம். பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி என்று பல காவடிகள் இதில் அடக்கமாம். மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், திருடர்களிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்றவும் காவடி எடுத்ததாக பொதுப் பணித்துறை - காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியா மதச் சார்பற்ற நாடு. இந்நிலையில், முருகன் கோவிலுக்கு இந்தக் காவடி திருவிழாவை காவல்துறை - பொதுப் பணித் துறையினரே அதற்கான முழுச் செலவையும் ஏற்று, பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டிப் பணம் வசூலித்து இதை நடத்தியுள்ளனர். இதுதான் அரசு அதிகாரிகளின் கடமையா? இதுதான் அவர்கள் மதச்சார்பின்மையை பின்பற்றும் லட்சணமா? அரசு அதிகாரிகள், பல வேலைகளை கிடப்பில் போட்டுவிட்டு, இந்த மத விழாவில் பங்கேற்கலாமா?

பக்தகோடி ஒருவர் கீழே விழுந்து படுகாயம்

இவ்வூர்வலத்தில் பறக்கும் காவடியில் தொங்கியபடி வந்த குமாரபுரத்தைச் சார்ந்த அசோக்குமார் என்ற பக்தருக்கு, அவருடைய முதுகில் மாட்டியிருந்த கொக்கி கழன்று விழுந்ததால், கீழே விழுந்தார்.

அவரை தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பக்தியின் பெயரால் பறக்கும் காவடியில் தொங்கிய பக்தரின் உயிர் இப்போது ஊசலாடுகிறது.

Read more: http://viduthalai.in/page-8/92857.html#ixzz3Ls6FcIhX

தமிழ் ஓவியா said...

ரஜினி ரசிகர் மன்றத்தின் மோசடி


காலமெல்லாம் கடவுளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துத் தமிழ் மக்களின் சமூக விடுதலைக்காகப் போராடியவர் தந்தை பெரியார். ஆனால், இந்தக் கொள்கைகளுக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஓர் ஆன்மீக ஆசாமி.

இருந்தாலும், மதுரை திருப்பரங் குன்றத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஆன்மீகப் பெரியாரே! என்று தலைப்பிட்டு, கைத்தடியுடன் அமர்ந்திருக்கும் பெரியாரின் முகத்துக்குப் பதில், ரஜினி முகத்தை ஒட்டி சுவரொட்டி அடித்துள்ளனர்.

இது கண்டிக்கத்தக்கது - மோசடியானது - அப்புறப்படுத்தவில்லையானால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் பெரியார் ஒரே ஒருவர்தான் - அவர் பகுத்தறிவுத் தந்தை பெரியார் மட்டும்தான்!

Read more: http://viduthalai.in/page-8/92845.html#ixzz3Ls6QOxWG

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முரண்பாடே உன் பெயர்தான் ஜோதிடமா?

செய்தி: துலாம் ராசியில் பிறந்தவர். ஜென்ம சனி விலகி, பாதச் சனி துவங் குகிறது. ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் சஞ் சரிக்கும், இக்கால கட்டத்தில் புதிய கட்சியை உரு வாக்குவார்.

தினமலரில் வெளிவந்த சனி பெயர்ச்சி பலனில் ஜி.கே.வாசனுக்கு ஜோதிடர் பரணிதரன் கணிப்பு

சிந்தனை: கடந்த நவம்பர் 28 ஆம் தேதியே ஜி.கே. வாசன் திருச்சியில் புதிய கட்சியைத் தொடங்கி விட்டார். ஆனால், இப்பொ ழுதுதான் அவர் புதிய கட்சியை உருவாக்குவார் என்று சனி பெயர்ச்சி கணிப்பில் பரணிதரன் என்ற ஜோதிடர் கண்டு பிடித்திருக்கிறார்; முரண் பாடே, உன் பெயர்தான் ஜோதிடமா?

Read more: http://viduthalai.in/page1/92832.html#ixzz3Ls6wviBf

தமிழ் ஓவியா said...

நோய் நொடி நீங்குமாமே!

இன்றைய ஆன்மிகம்?

நோய் நொடி நீங்குமாமே!

சுவாமி பிரசாதம் எதுவாக இருந்தாலும் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். அபி ஷேகப் பொருள்களைத் தலையில் வைத்துக் கொண்டால் அதன் சக்தி உடல் முழுவதும் பரவி நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுள் உண்டா குமாம்!

ஓ, புதிய கண்டு பிடிப்போ! தலையில் வைத்தால் உடல் முழு வதும் எப்படி பரவும்! அது என்ன அப்படிப்பட்ட சக்தி? நோய் நொடி நீங்கு மாமே - அப்படியானால் ஆஸ்பத்திரி எதற்கு? சங்கரராச்சாரியாரே இந்து மிஷன் ஆஸ்பத்திரி நடத் துகிறாரே!

Read more: http://viduthalai.in/page1/92833.html#ixzz3Ls77V8Pf

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளுவதா? உச்சநீதிமன்றத்தின் தடை பாராட்டத்தக்கது

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளுவதா?

உச்சநீதிமன்றத்தின் தடை பாராட்டத்தக்கது

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


கருநாடகாவில் ஒரு கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளும் மூடநம் பிக்கையை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது இதனை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கர்நாடகத்தில் சில கோயில்களில் நடைபெறும் அருவருக்கத்தக்க திருவிழா ஒன்றைத் தடை செய்து உச்சநீதிமன்றத்தின் மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டீஸ் திரு. மதன்லோக்கூர், ஜஸ்டீஸ் பானுமதி ஆகியோர் தந்துள்ள தீர்ப்புதான் உண்மையில் அரசியல் சட்ட கடமைகளில் ஒன்றான அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் மூடநம்பிக்கை ஒழிப்பு, சீர்திருத்தம், மனிதநேயம், வளர்ப்பு இவைகளை நடைமுறைப்படுத்தும் நல்லதோர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பு ஆகும்!

பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளில் உருளும் கேவலம்!

பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை வரிசையாக போட்டு அதன்மீது பக்தர்கள் உருண்டு புரண்டு செல்லும் அநாகரிக காட்டுமிராண்டித்தனம், பக்திப் போர்வையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்தது!

மூடத்தனத்தின் முடைநாற்றம் அல்லவா இது?

கடந்த 500 ஆண்டுகளாக உருளுசேவா என்ற பெயரில், தட்சண கர்நாடகா மாவட்டத்தின் சுல்லியா தாலுக்காவில் உள்ள குக்கு சுப்ரமணியசுவாமி கோயிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகள்மீது மற்றவர்கள் உருண்டு புரண்டு வரும் நிகழ்ச்சி என்பது பொது ஒழுக்கம் அமைதி, சுகாதாரம் இவற்றிற்கு எதிரானது அருவருப்பானது என்பதால் இதனை கர்நாடக அரசு தடை செய்தது.
வியாதிகள் நீங்குமாம்!

தங்களுக்குள்ள வியாதிகள் எல்லாம் இந்த எச்சில் இலைகள்மீது புரண்டால் தானே குணமாகி விடும் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாக இப்படிச் செய்து வரும் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜாத்ரா (விழா)வாக அக்கோயில் கொண்டாடும் வழக்கம்.
இதனை கர்நாடக நீதிமன்றம் நெடுங்கால பழக்க வழக்கம் என்ற பெயரால் நீடித்து வந்த நெடுங்கால விழாவிற்கு அரசின் தடையை ரத்து செய்தது.

அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு - அப்பீல் செய்தது அதன்மீது தான் உச்சநீதிமன்றம் கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை வழங்கியது. இது மாதிரி கர்நாட கத்தில் மூன்று கோயில்களில் எச்சில் இலைமீது உருளும் திருவிழா நடைபெறுகிறது; இது 500ஆண்டு கால பழைய பழக்க வழக்கம். எனவே இதனை நிறுத்தக் கூடாது என்று இக் கோயில்கள் சார்பாக வழக்குரை ஞர்கள் வாதித்தனர்.

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி

அதற்கு உச்சநீதிமன்றம் நன்றாக ஒரு கேள்வியைக் கேட்டது. தீண் டாமைக் கொடுமைகூட பல நூறு ஆண்டுகளாக உள்ளது என்பதற்காக அதைத் தடை செய்யாமல் இருக்க முடியுமா? டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

இது மிகவும் பாராட்டத்தகுந்த முற்போக்குக் கருத்துள்ள, மனிதநேயத் தீர்ப்பாகும். நீதிபதிகளை மனதாரப் பாராட்டுகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14-12-2014

Read more: http://viduthalai.in/page1/92831.html#ixzz3Ls7HrzHg

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சியை விலை போட்டு வாங்கவா முடியும்?

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

மகிழ்ச்சியை விலை போட்டு வாங்கவா முடியும்?

மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்பதும் நிரந்தரமல்ல; துயரம், துன்பம் என்பதும் நிரந்தர மல்ல. நிரந்தரமாக அவை இருந்திடின், இரண்டின் தனித் தன்மை நமக்குத் தரும் அனுபவங்கள் காணாமற் போய்விடும்.

மகிழ்ச்சியின்மை - ஒவ்வொரு வரது வாழ்விலும் ஏற்படுவது இயற் கையே - தவிர்க்க முடியாததும்கூட.
சில நேரங்களில் மகிழ்ச்சிக்கு விலை கிடைக்காமலே அது நமக்குக் கிடைக்கிறது.

பல நேரங்களில் அதிக விலை கொடுத்துத்தான் அதைப் பெற்றாக வேண்டும்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மேல் முறையீட்டு வழக்கில் அவர்கள் விடுதலை என்று ஒரு தீர்ப்பு வந்து அவர்களது சிறைக் கதவுகள் திறக்கும்போதும், 10 மாதம் சுமந்து பெற்று, தனக்காக இல்லா விடினும் தனது கருவினுள் உள்ள குழந்தைகளுக்காக எல்லாவித பத் தியங்களையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, பிரசவ வேதனை - அறுவை சிகிச்சை வரை சென்றும், குழந்தையின் நலன் காக்கும் தியாகம் - துன்பத்தைத் துடைத் தெறிந்து, மகிழ்ச்சியை, பிறந்த குழந்தையின் உச்சி மோந்து முத்தம் தருகின்ற போது, விலை கொடுத் தாலும் நல்லதைப் பெற்றோம் என்ற தாயின் மகிழ்ச்சியையும் அளவிட அளவுகோல்தான் உண்டா?

மகிழ்ச்சி ஏற்பட்டாலும், துன்பம் துயரம் நம்மைத் தாக்கினாலும்கூட, அதை நம்மில் சிலர் மறைத்து வைத்துக் கொள்ள முயலுகிறார்கள்; அது தேவையற்ற ஒரு தவறான அணுகு முறையாகும். எதையும் வெளிப்படையாக்கிக் கொண்டால் தான் கனத்த இதயம் லேசாகி நமக்கு நிம் மதியைத் தரும்! விரைந்து அது அகல வாய்ப்பு ஏற்படும்.

மகிழ்ச்சியைக் கண்டபோது சிலர் அளவு கடந்த துள்ளல், ஆட்டம், பாட்டம் போட்டு ஊரையே துவம்சம் செய்து விடுவார்கள். அதுபோலவே ஒரு சிறு அளவுக்குத் துன்பமோ, துயரமோ வந்தால் அதைத் தாங்கும் மன வலிமை இல்லாது மனந்தளர்ந்து, மூலையில் ஒடுங்கிக் கிடப்பர்.

இரண்டு எல்லை தாண்டிய நிலைப் பாடும் மகிழ்ச்சியான சராசரி பக்குவம் கொண்ட மனிதருக்குத் தேவையில்லை.
மகிழ்ச்சியை, எப்படிப் பெறுவது என்று ஏராளமான ஹிதோபதேசங்களும் - அறிவுரைகளும் - ஒலி நாடாக்களும், புத்தகங்களும் வியாபாரப் பொருள்களாகி சந்தையில் மலிந்து கிடக்கின்றன.

விற்றவருக்கு மகிழ்ச்சி - அது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு. மகிழ்ச்சி என்பது கடையில் விற்கும் சரக்கல்ல. நம் மனதில் நமக்குள்ள பக்குவத்தின் முதிர்ச்சி, முனைப்பு. அவ்வளவுதான்.

மகிழ்ச்சி என்பது தொட்டனைத் தூறும் மணற்கேணி போன்றதாக அமைய வேண்டும். அதை நாமே நமது ஏகபோகச் சொத்தாக்கி மகிழ்வதில் உண்மை இன்பம் இல்லை. மகிழ்ச்சியை நாம் மற்றவர் களுக்கு - அது தேவைப்படும் நிலையில் நமது உற்றார், நண்பர்களுக்கு வாரி வாரி வழங்கும்போதுதான் நமக்கு அது ஊற்றாக சுரக்கிறது! வற்றாத ஜீவ நதியாக என்றும் ஓடிக் கொண்டே இருக்கிறது.

அடுத்தவருக்குப் பயன்படாது அணை கட்டிக் கொண்டு இயற்கையைப் பங்கு போடும் ஈன புத்தியாளர்களைப் போல, பலர் மகிழ்ச்சியைக்கூட அணை கட்டித் தேக்கினால், அது அதன் இயல்பை இழந்து விடுவது உறுதி. மகிழ்ச்சிக்கும் நம் உடல் நலத்திற்கும் மிகவும் நெருங்கிய உறவு உண்டு. மறந்து விடாதீர்!

எதற்காகவும் கவலைப்படாமல், ஏற்பட்ட பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணுவது என்பதை, விருப்பு, வெறுப்பற்ற முழுப் பகுத்தறிவுக் கண் கொண்டு ஆராயும்போது விடையும் கிடைக் கும், தடையும் நீங்கும். தீர்வு காண முடியாத பிரச்சினைகளே இல்லை. அறிவால், அனுபவத்தால் - பிறரின் உதவியால் தீர்க்கப்படலாம். துணி வுடன் அணுகுங்கள் - மீறி தோல்வி ஏற்பட்டாலும் அதையும் ஏற்று சுவைத்து அனுப விக்கப் பழகுங்கள் - பரங்கிக் காய் இனிப்புடன் உள்ள கறி ; எனவே இனிக்கிறது.

பாகற்காய் கசப்புடன் உள்ளது. பலருக்கு உட்கொள்ளவே தயக்கம் - ஆனால் அது தரும் சுக கசப்பு போல் பரங்கியின் இனிப்பு தருவ தில்லையே!

இனிப்பின் பெருமை - அருமை கூட கசப்பு என்று ஒன்று ஒன்பான் சுவையில் ஒன்றாக இருப்பதால் தானே! எண்ணுவீர்!

எனவே மகிழ்ச்சியை நாமே உருவாக்கிக் கொள்ளலாம் - நமது மூச்சை நாமே (சுவாசித்து) உள்ளே இழுத்து வெளியே தள்ளுகிறோமே அதுபோல; மகிழ்ச்சியை உள்ளே இழுத்து, துன்பத்தை வெளியே தள்ளுங்கள். இரண்டும் வாழ்வின் இரு இன்றியமையாக் கூறுகள் - தேவைகள் - மறவாதீர்!

Read more: http://viduthalai.in/page1/92676.html#ixzz3Ls7yaDgW

தமிழ் ஓவியா said...

புறக்குப்பையும் - அகக்குப்பையும்


- முத்துசெல்வன் பெங்களூரு

குப்பை மனம் கொண்ட நாடாளு மன்ற உறுப்பினரும் மோடி அரசின் அமைச்சருமாகிய நிரஞ்சன் ஜோதியின் கூற்றின்படி, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. உள்ளிட்ட சங் பரிவாரத்தினர் இரா மனைப் பின்பற்றுபவர்கள்; ஏனையோர் அனைவரும் முறை தவறிப் பிறந்த வர்கள்.

இத்தகைய இழிதகு கருத்தை வெளி யிட்ட அமைச்சரின் கருத்துக்குத் தலைமை அமைச்சரோ, பி.ஜே.பி. கட்சித் தலைவரோ, ஆர்.எஸ்.எஸ்.தலைரோ எந்தவிதக் கண்டனத்தையும் தெரிவிக்க வில்லை. அவரை அமைச்சரவையிலி ருந்து நீக்க வேண்டும் என்று குரல் எழுந்தபோது, அமைச்சர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதே போதும்; அவர் பதவி விலக வேண்டியுதில்லை என்று பி.ஜே.பி.யினர் ஆதரவுக் கை நீட்டி வருகின்றனர். கடைசியில் மோடி, அமைச்சரின் கூற்று தவறுதான் என்று ஒப்பியுள்ளார். இதில் வேடிக்கை என்ன வென்றால், இந்த அம்மையார் சங் பரி வாரங்கள் போற்றிப் புகழும் வேதங் களின்படி, பார்ப்பனரின் தாசி புத்ரியான சூத்திரச்சி ஆவார். டில்லி சட்டப் பேர வைக்க்கான தேர்தலில் வாக்குச் சேர்க் கும் கூட்டத்தில் இவ்வாறு பேசியுள்ளார். "ராமரை பின்பற்றுபவர்களின் ஆட்சி வேண்டுமா அல்லது முறைதவறிப் பிறந்த வர்களின் ஆட்சி வேண்டுமா என்று டெல்லி மக்கள் முடிவு செய்யவேண்டும்" என்று கூறியுள்ளார். அதன்படி, பார்த்தால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்தல்களிலும் பி.ஜே.பி.க்கு வாக் களிக்காதவர்கள் முறைதவறிப் பிறந்த வர்கள் ஆகின்றனர்.

இனி .. வால்மீகி இராமாயணத்துக்கு வருவோம்..

தயரத மன்னனுக்கு 353 மனைவியர். (அயோ.கா.39) அவர்களுள் மூவர் சத்திரியக் குலத்தவர். எஞ்சியோர் வைசிய, சூத்திரக் குலத்தவர். ஆயின் ஒருவருக்கும் குழந்தைப் பேறு இல்லை. அகவை முதிர்ந்த மன்னனுக்கு தான் வாரிசு இல்லாமலே இறந்து விடுவோமோ என்னும் அச்சம். அவையில் இருந்த துறவியர் கருத்துரையின்படி, அசுவமேத யாகம் நிகழ்த்துவித்தான்.

மகப்பேறுக்காக நடத்தப்பட்ட வேள்வியின் தலையாய பகுதிகள் வருமாறு: (உள்ளது உள்ளபடி நம்முடைய கருத்துகள் சேர்க்காமல் கொடுக்கப்பட் டுள்ளன) பால காண்டம் சருக்கம் 14

33.kausalyaa tam hayam tatra paricarya sama.ntataH |
kR^ipaaNaiH vishashaasaH enam tribhiH paramayaa mudaa || 1-14-33

33. With great delight coming on her Queen Kausalya reverently made circumambulations to the horse, and symbolically killed the horse with three knives. [1-14-33]

34. patatriNaa tadaa saardham susthitena ca cetasaa |
avasat rajaniim ekaam kausalyaa dharma kaamyayaa || 1-14-34

34. Queen Kausalya desiring the results of ritual disconcertedly resided one night with that horse that flew away like a bird. [1-14-34]

35. hotaa adhvaryuH tatha udgaataa hastena samayojayan |
mahiSyaa parivR^ittyaa atha vaavaataam aparaam tathaa || 1-14-35

35. Thus, the officiating priests of the ritual, namely hota, adhwaryu and udgaata have received in their hand the Crowned Queen, the neglected wife, and a concubine of the king, next as a symbolic donation in the ritual by the performer, the king. [1-14-35] http://valmikiramayan.net/

மேற்கண்ட வரிகள் குறித்து. The Ramayana: A New Point of View என்னும் நூலில் பி.எச்.குப்தா கூறுவதாவது: In conducting aswamedha sacrifice ‘The Hotas and Adhwaryus and the udgatas joined the king’s Vavatha (Vaisya wife) along with his Mahishi (Kshatriya wife) and Parivriti (Sudra wife) என்று குறிப்பிடுகிறார்.

தமிழ் ஓவியா said...

இனி, இராமாயண ஆராய்ச்சி நூலில் பண்டித இ.மு. சுப்பிரமணிய பிள்ளை (சந்திரசேகரப் பாவலர்) (பெரியார் சுயமரி யாதைப் பிரசார நிறுவன வெளியீடு, 6ஆம் பதிப்பு, 2003)) பக்கம் 9-10 கூறு வதைக் காண்போம்:
வால்மீகி இராமாயணம் பால காண்டம் 14 ஆவது சருக்கத்தில் கணப்படும் யாக விவரம் குறித்து மொழிபெயர்ப்பாளர்கள் கூறுவது:

பண்டித அனந்தாச்சாரியார் : கவு சல்யை அக்குதிரையை மூன்று கத்தி களால் கொன்றாள். கவுசல்யை ஓர் இரவு முழுவதும் அக்குதிரையோடு கூடியி ருந்தாள். இருத்துவிக்குகள் ராஜ ஸ்த்ரி களை மன்னவர் தட்சணையாகக் கொடுத்ததனால் கைப்பற்றினர்.

பண்டித நடேச சாஸ்திரியார்: கவுசல்யை அக்குதிரையை வாளால் சில துண்டுகளாக வெட்டி வீழ்த்தினாள். அன்றியும் ஸ்திர சித்தத்துடன் அவள் புத்திரபாக்கியம் அடையும் விருப்பத்தால், சாஸ்திர விதிப்படி அன்றிரவு முழுதும் அவ்வசுவத்தின் அருகிலே இருந்தாள். ஹோதா, அத்வர்யு, உத்காதா முதலிய யாக கர்த்தாக்கள் உரிய தட்சணைகளைப் பெற்ற ராஜ பாரியைகளுடன் இருந்து சடங்கு நடத்தினார்கள்.

Pundit Manmathanatha Dutta:: Kausaya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas, Adhwaryas and the Udgatas joined the king’s wives.

Lord Wilson: in his Vedic Hinduism: Kausalyaa is directed to be all night in closest contact with the dead horse. In the morning when the queen is relieved from this disgusting and in fact, impossible contiguity a dialogue, as given in Yajush and in the Ashvamedha section of the Sathapatha Brahmana and as explained in the Sutras as taking place between the queen and the females accompanying or attending upon her and the principal priests which in brief is in the highest degree both silly and obscene.”

தெலுங்கில் வால்மீகி இராமாய ணத்தை மொழி பெயர்த்துள்ள பண்டித லட்சுமணாச்சார்லு தமது மொழி பெயர்ப் பில், பக்கம்181 இல் யாகம் முடிந்தவுடன், நடத்துபவன், தன் மனைவியரைக் குருக் களிடம் தட்சணையாக ஒப்புவிக்க வேண் டுமென்பதும், பின் பணம் பெற்றுக் கொண்டு அப்பெண்களைச் சொந்தக்கார னிடம் ஒப்புவிக்க வேண்டுமென்பதும் சாஸ்திர விதி என்றெழுதுகிறார்.

(விடுதலையில் தொடர் கட்டுரையாக வந்து கொண்டிருக்கிறது)

இராமாயணம் காட்டும் நெறிகளை அறிவோம்.

அடுத்து இன்னொரு சங் பரிவார அறிவாளி!!??

திரைப்படங்களில் குத்துப் பாடல் காட்சிகளுக்கு ஆபாசமாக உடை அணிந்து நடனமாடும் கவர்ச்சி நடிகை களை பாலியல் தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில இந்து மகா சபாவின் பொதுச் செயலாளர் நவீன் தியாகி என்பார் கருத்தறிவித்துள்ளார்.. மேலும், பள்ளி மாணவிகள் குட்டைப் பாவடை, ஜீன்ஸ் போன்ற உடைகளை அணியக் கூடாது என்றும், பள்ளிச் சிறுமிகள் செல்போன்கள் உபயோகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "திரைப்படங்களில் குத்துப் பாடல்களில் கவர்ச்சி நடிகைகள் ஆபாசமாக நடனமாடுகின்றனர். அவர்கள் தங்களது ஆடைகளை தங்களது தொழி லுக்காக குறைக்கின்றனர். பாலியல் தொழிலாளர்கள் தங்களது செயல் களுக்காக ஊதியம் பெறுகின்றனர். அதுபோல அந்தக் கவர்ச்சி நடிகைகளும் தங்களது ஆபாச நடனத்துக்காக ஊதியம் பெறுகின்றனர். ஆகவே இவர்களையும் பாலியல் தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கருத்துக்கு பி.ஜே.பி.யைச் சேர்ந்தவரும். தேசிய மகளிர் ஆணையத் தலைவரருமான லலிதா குமாரமங்கலம், "தியாகி அவரது பிற்போக்குத்தன மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளார். ஆபாசமாக நடனமாடும் பெண்கள் குறித்துக் கருத்து தெரிவிப்பவர்களிடம் திருப்பி ஆயிரம் கேள்விகளை எழுப்ப லாம். ஆபாசமாக நடனமாடும் பெண் களை கண்டு ரசிக்கும் ஆண்களை எந்தப் பெயரில் அழைப்பது என்பதை யாராவது விளக்க வேண்டும். இந்த விவகாரத்தை அவர் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து சென் றால், அவர்களை அங்கு எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் எனக் கும் நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற பொருத்தமற்ற கருத்துக்களை உச்ச நீதிமன்றம் நசுக்கி தூக்கி எறிந்து விடும்" என்று கூறி, . தியாகியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நவீன் தியாகியின் கருத்து முற்றிலும் தவறானது என்று இந்து மகாசபையின் தேசிய செயலாளர் சுவாமி சக்கரபாணி தெரி வித்துள்ளார். கண்ணுக்குத் தெரியும் புறக்குப்பைகளை அகற்ற துடைப்பத்தை ஏந்தி தலைமை அமைச்சரின் பின்னால் அணிவகுத்து ஊடகங்களில் இடம் பிடித்து விளம்பரம் பெற நினைப்ப வர்களே! இத்தகையவர்களின் மனக் குப்பையை அகற்றுவதற்கு என்ன செய்ய போகிறீர்கள்?

Read more: http://viduthalai.in/page1/92677.html#ixzz3Ls897P4r

தமிழ் ஓவியா said...

பெரியார் உலகத்திற்கு 1,25,000 ரூபாய் நன்கொடை கொள்கை வீரர் வேல்நம்பியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய துணைவியார், (மரு)மகன்


சேலத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் புலவர் வேல்நம்பி தலைமை ஆசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்ற கொள்கை வீரர் ஆவார். அண்மையில், உடல்நலக் குறைவால் மறைந்த புலவர் வேல்நம்பி இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று, அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவரது இல்லத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், நுழைவு வாயிலில் தந்தை பெரியாரின் பொன்மொழியையும், அறிஞர் அண்ணாவின் பொன்மொழியையும் கல்வெட்டாகப் பதிய வைத்திருந்ததைப் பார்த்து, மறைந்த புலவரின் கொள்கை உறுதியை வெகுவாகப் பாராட்டினார். மறைந்த புலவர் வேல்நம்பி பெரியார் உலகத்திற்கு ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும் என்று பணத்தை எடுத்து வைத்து, சேலத்தில் நடைபெறக்கூடிய பொதுக்குழுவில் அதனை வழங்கவேண்டும் என்று நினைத்திருந்தாராம்.

அந்தத் தகவலை அறிந்த அவரது மருமகன் தொழிலதிபர் இரா.சுந்தரம் அவர்கள் உடனடியாக தனது குடும்பத்தின் சார்பிலும் ரூபாய் ஒரு லட்சத்தினை வழங்குகிறேன் எனக் கூறியதும், புலவர் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, தனது குடும்பத்தினர் தொடர்ந்து இந்த இயக்கத்திற்கும், கொள்கைக்கும் அளவு கடந்த ஆதரவு தர முன்வந்ததை பெருமையுடன் தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டாராம்.

தனது குடும்பத்தினரை கழகக் கொள்கை உணர்வோடும், என்றைக்கும் பெரியார் கொள்கைதான் நமக்கு தேவை என்றும் வலியுறுத்தி வந்ததற்கேற்ப, குடும்பத்தினர் செயல்பட்டதைக் கண்டு மகிழ்ந்தார். ஆனால், அவர் உடல்நலக் குறைவால் திடீரென்று இறந்துவிட்டார்.தான் இறந்த பிறகு, எந்தவித சடங்குகளும் செய்யக்கூடாது; என்னுடைய ஆசையை நிறைவேற்றவேண்டும் எனக் கூறியிருந்தார். அவருடைய ஆசைப்படி அவரது குடும்பத்தினர் நடந்துகொண்டனர்.

இந்தத் தகவலை அறிந்த தமிழர் தலைவர், புலவரின் கொள்கை உணர்வை வெகுவாகப் பாராட்டினார். இந்தத் தகவலை அவரது துணைவியார் சரோஜா அம்மையார் மற்றும் குடும்பத்தினர் தமிழர் தலைவரிடம் தெரிவித்தனர். அவரது இறுதி விருப்பப்படி, அவரது துணைவியார் ரூ.25 ஆயிரத்தையும், அவருடைய மருமகன் தொழிலதிபர் இரா.சுந்தரம் - அன்பரசி இணையர் ரூ.ஒரு லட்சத்தையும் சேர்த்து ரூ.1,25,000-த்தை தமிழர் தலைவரிடம் மிகுந்த அன்புடன் கடமை தவறாது வழங்கினர்.

இந்நிகழ்வில், வழக்குரைஞர் அருள்மொழி, திண்டுக்கல் கிருஷ்ணமூர்த்தி, கடவுள் இல்லை சிவக்குமார், அ.கண்ணன், வே.அதியமான், ஆர்.கண்ணன், கிரிஜா கதிரவன், வசந்தா, தமிழரசி, ஜெயக்குமார் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

மறைந்த புலவர் வேல்நம்பி அவர்கள், மறைந்த சேலம் புலவர் அண்ணாமலை அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்து, இருவரும் இணைந்து சேலம் தமிழ்ச்சங்கத்திலும், கழக நிகழ்ச்சிகளிலும், பள்ளி மாணவர்களின் மத்தியிலும் பெரியார் கொள்கை பரவிட தொண்டு புரிந்தவர்களாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page1/92705.html#ixzz3Ls9W0S6Z

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

புனிதமாம்

அய்யப்பன் கோயில் பம்பை நதியில் குளித் தால் எல்லாப் பாவங் களும் நீங்குமாம். உண்மை நிலை என்ன? இந்தியா டுடே ஏடு (19.12.2007) அளிக்கும் விவரம் இதோ:

பம்பை நதியில் 100 மி.லி தண்ணீரில் 3 லட்சம் எம்.பி.என். கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள், 1995-1996இல் 9500 என்பதாக இருந்தது. இந்தப் பாக்டீரி யாக்கள் 500அய்த் தாண் டினாலே ஆபத்து என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இந்த லட்ச ணத்தில் பம்பை நதி புனிதமாம்.

Read more: http://viduthalai.in/page1/92758.html#ixzz3Ls9iQBXd

தமிழ் ஓவியா said...

தேசிய நூலாக இருக்கத் தகுந்தது கீதையல்ல, இந்திய அரசமைப்பு சட்டமே! இந்து தலையங்கம்

மதத்தைப் பற்றிய கருத்து வேறு பாடுகளை உருவாக்கிப் பரப்புவதை மத்திய அமைச்சர்களும், மூத்த பா.ஜ.க. தலைவர்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விரும்பி செய்து மகிழ்வதாகவே தோன்றுகிறது. பகவத் கீதையை ஒரு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அயல்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்மொழிந்தபோது, இந்தியாவின் தேசிய நூலாக எது இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு விவாதத்தை அவர் தொடங்கி வைக்கவில்லை.

அதற்கு மாறாக, ஒரு இந்து மத நூலின் மீதான அரசியல் விவாதத்தின் மூலம், மத உணர்வின் அடிப்படையில் பிளவு படுத்துவதற்கான ஒரு களத்தையே அவர் உருவாக்கி விட்டார். எந்த ஒரு மதத்தினராலும் போற்றி வணங்கப்படும் ஒரு நூலை மதச் சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவினால் தேசிய நூலாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவின் அயல்துறை அமைச்சராகத் தானாற்றும் பணியில் தனக்கு விடப்பட்ட சவால் களைக் கையாள்வதற்கு தனக்கு பகவத் கீதை உதவியது என்று அவர் கூறுவதை எவரும் மறுக்கவில்லை.

இப்போது விவாதத்திற்கு உள்ளாகியிருப்பது பகவத் கீதையில் என்ன இருக்கிறது என்பது பற்றியோ, அதன் ஸ்லோகங்களின் புனிதத் தன்மை பற்றியோ அல்லது அதன் கோட்பாடுகள் எவ்வளவு பொருத் தமானவை என்பது பற்றியோ அல்ல.

சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்குரியதாக ஆக்கியிருப்பது இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையைத்தான். பல மாறு பட்ட மத நம்பிக்கை கொண்ட இந்தியர் களின் தேசிய நூலாக ஒரு மதத்தின் புனித நூல் திணிக்கப்பட இயலுமா என்பதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைப் பற்றிதான் சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

கீதை ஒரு மத நூலல்ல; ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே உரியது என்று பா.ஜ. கட்சியின் துணைத் தலைவர் தினேஷ் சர்மாவைப் போல வாதிடுவது நியாய மானதோ, நேர்மையானதாகவோ இருக்க முடியாது. மதத்தைக் கடந்து அனைத்து மதங்களுக்கும் பொருந்துவது போல தோன்றினாலும், மகாபாரத இதிகாசத்தின் ஒரு பகுதியான கீதை கடவுள் கிருஷ்ண னுடன் தொடர்பு கொண்ட ஒரு மத நூல் என்பதால், ஒரு தேசிய நூலாக வைக்கப் பட தகுதி பெற்றதல்ல அது.

கடவுளர்கள் மற்றும் கடவுளச்சிகள் பெயரால் தேசிய மக்கட் பண்பின் மாண்பைப் பற்றி பேசப்படக்கூடாது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட நிலையிலேயே தெளி வாக்கப் பட்ட ஒன்றாகும். அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையின் தொடக்கத்தில் கடவுளின் பெயரால் என்ற சொற்றொடர் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆலோசனை கூறப்பட்டபோது, தங் களைக் கடவுள் நம்பிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் பலர் உள்ளிட்ட அரசமைப்பு சட்ட மன்றத்தின் பல உறுப்பினர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இவ்வாறு கடவுளின் பெயரால் என்று சேர்ப்பது, சிந்தனை, கருத்து வெளிப்பாடு, நம்பிக்கை, மதம், வழிபாடு ஆகியவற்றில் ஒவ்வொரு வருக்கும் சுதந்திரம் அளிப்பதை வலி யுறுத்தும் முன்னுரைக்கு தொடர்பற்ற தாகவும், முரண்பட்டதாகவும் இருக்கும் என்று அக் கருத்தை எதிர்த்த ஓர் உறுப் பினர் கூறினார். அரசமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள, நன்மை தீமையை பகுத்தறியும் நேர்மை உணர்வு என்னும் மனச்சான்று சுதந்திரத்தில், எந்த ஒரு மதத்தை வேண்டுமானாலும் பின் பற்றவும், எந்த மதத்தையுமே சாராமல் இருக்கவுமான சுதந்திரமும் உள்ளடங்கிய தாகும். எனவே, ஒரு மதத்தின் புனித நூலை இந்தியாவின் தேசிய நூலாக உயர்த்துவது என்பது அரசமைபப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மையையே குலைப்ப தாகும். வளர்ச்சியை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றுவேன் என்று நரேந்திரமோடி அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதைக் கேட்பதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்றாலும், மக்களிடையே பிரிவினை உணர்வை உருவாக்கும் பழைய விஷயங்களில் ஈடுபடுவதிலேயே அரசின் ஆற்றல்களில் பெரும் பகுதி விரயமாகிறது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை. புதியதாகப் பொறுப்பேற்றிருக்கும் இளைய அமைச் சர்கள் மட்டுமன்றி, ஒரு மூத்த தலைவரும் அமைச்சருமாக இருப்பவர் கூட மக் களிடையே மத உணர்வு ரீதியாக பிரி வினையை ஏற்படுத்தும் ஒரு வழியில் ஆலோசனை கூறுவது மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது. தேசிய நூலாக ஏதேனும் ஒரு நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் ஆகவேண்டும் என்றால், அது நாட் டின் அரசமைப்பு சட்டமாகத்தான் இருக்க வேண்டுமே அன்றி, வேறு எந்த ஒரு நூலாகவும் இருக்கக் கூடாது.

நன்றி: தி ஹிந்து 10-12-2014 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page1/92748.html#ixzz3Ls9zMKRQ

தமிழ் ஓவியா said...

தேசிய நூலாக இருக்கத் தகுந்தது கீதையல்ல, இந்திய அரசமைப்பு சட்டமே! இந்து தலையங்கம்

மதத்தைப் பற்றிய கருத்து வேறு பாடுகளை உருவாக்கிப் பரப்புவதை மத்திய அமைச்சர்களும், மூத்த பா.ஜ.க. தலைவர்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விரும்பி செய்து மகிழ்வதாகவே தோன்றுகிறது. பகவத் கீதையை ஒரு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அயல்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்மொழிந்தபோது, இந்தியாவின் தேசிய நூலாக எது இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு விவாதத்தை அவர் தொடங்கி வைக்கவில்லை.

அதற்கு மாறாக, ஒரு இந்து மத நூலின் மீதான அரசியல் விவாதத்தின் மூலம், மத உணர்வின் அடிப்படையில் பிளவு படுத்துவதற்கான ஒரு களத்தையே அவர் உருவாக்கி விட்டார். எந்த ஒரு மதத்தினராலும் போற்றி வணங்கப்படும் ஒரு நூலை மதச் சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவினால் தேசிய நூலாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவின் அயல்துறை அமைச்சராகத் தானாற்றும் பணியில் தனக்கு விடப்பட்ட சவால் களைக் கையாள்வதற்கு தனக்கு பகவத் கீதை உதவியது என்று அவர் கூறுவதை எவரும் மறுக்கவில்லை.

இப்போது விவாதத்திற்கு உள்ளாகியிருப்பது பகவத் கீதையில் என்ன இருக்கிறது என்பது பற்றியோ, அதன் ஸ்லோகங்களின் புனிதத் தன்மை பற்றியோ அல்லது அதன் கோட்பாடுகள் எவ்வளவு பொருத் தமானவை என்பது பற்றியோ அல்ல.

சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்குரியதாக ஆக்கியிருப்பது இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையைத்தான். பல மாறு பட்ட மத நம்பிக்கை கொண்ட இந்தியர் களின் தேசிய நூலாக ஒரு மதத்தின் புனித நூல் திணிக்கப்பட இயலுமா என்பதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைப் பற்றிதான் சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

கீதை ஒரு மத நூலல்ல; ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே உரியது என்று பா.ஜ. கட்சியின் துணைத் தலைவர் தினேஷ் சர்மாவைப் போல வாதிடுவது நியாய மானதோ, நேர்மையானதாகவோ இருக்க முடியாது. மதத்தைக் கடந்து அனைத்து மதங்களுக்கும் பொருந்துவது போல தோன்றினாலும், மகாபாரத இதிகாசத்தின் ஒரு பகுதியான கீதை கடவுள் கிருஷ்ண னுடன் தொடர்பு கொண்ட ஒரு மத நூல் என்பதால், ஒரு தேசிய நூலாக வைக்கப் பட தகுதி பெற்றதல்ல அது.

கடவுளர்கள் மற்றும் கடவுளச்சிகள் பெயரால் தேசிய மக்கட் பண்பின் மாண்பைப் பற்றி பேசப்படக்கூடாது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட நிலையிலேயே தெளி வாக்கப் பட்ட ஒன்றாகும். அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையின் தொடக்கத்தில் கடவுளின் பெயரால் என்ற சொற்றொடர் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆலோசனை கூறப்பட்டபோது, தங் களைக் கடவுள் நம்பிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் பலர் உள்ளிட்ட அரசமைப்பு சட்ட மன்றத்தின் பல உறுப்பினர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இவ்வாறு கடவுளின் பெயரால் என்று சேர்ப்பது, சிந்தனை, கருத்து வெளிப்பாடு, நம்பிக்கை, மதம், வழிபாடு ஆகியவற்றில் ஒவ்வொரு வருக்கும் சுதந்திரம் அளிப்பதை வலி யுறுத்தும் முன்னுரைக்கு தொடர்பற்ற தாகவும், முரண்பட்டதாகவும் இருக்கும் என்று அக் கருத்தை எதிர்த்த ஓர் உறுப் பினர் கூறினார். அரசமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள, நன்மை தீமையை பகுத்தறியும் நேர்மை உணர்வு என்னும் மனச்சான்று சுதந்திரத்தில், எந்த ஒரு மதத்தை வேண்டுமானாலும் பின் பற்றவும், எந்த மதத்தையுமே சாராமல் இருக்கவுமான சுதந்திரமும் உள்ளடங்கிய தாகும். எனவே, ஒரு மதத்தின் புனித நூலை இந்தியாவின் தேசிய நூலாக உயர்த்துவது என்பது அரசமைபப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மையையே குலைப்ப தாகும். வளர்ச்சியை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றுவேன் என்று நரேந்திரமோடி அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதைக் கேட்பதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்றாலும், மக்களிடையே பிரிவினை உணர்வை உருவாக்கும் பழைய விஷயங்களில் ஈடுபடுவதிலேயே அரசின் ஆற்றல்களில் பெரும் பகுதி விரயமாகிறது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை. புதியதாகப் பொறுப்பேற்றிருக்கும் இளைய அமைச் சர்கள் மட்டுமன்றி, ஒரு மூத்த தலைவரும் அமைச்சருமாக இருப்பவர் கூட மக் களிடையே மத உணர்வு ரீதியாக பிரி வினையை ஏற்படுத்தும் ஒரு வழியில் ஆலோசனை கூறுவது மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது. தேசிய நூலாக ஏதேனும் ஒரு நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் ஆகவேண்டும் என்றால், அது நாட் டின் அரசமைப்பு சட்டமாகத்தான் இருக்க வேண்டுமே அன்றி, வேறு எந்த ஒரு நூலாகவும் இருக்கக் கூடாது.

நன்றி: தி ஹிந்து 10-12-2014 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page1/92748.html#ixzz3Ls9zMKRQ

தமிழ் ஓவியா said...

வேண்டும்

பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page1/92746.html#ixzz3LsADLGLy

தமிழ் ஓவியா said...

தமிழும், தமிழர்களும் படும்பாடு

தமிழ்நாட்டில் தமிழும் இல்லை; தமிழர்களும் இல்லையா? என்ற கேள்வியைக்கூட சில நேரங்களில் கேட்கத் தோன்றுகிறது.

தமிழர்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பான செம்மொழி தகுதி - முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்டது. அப்பொழுதுகூட இந்த அரும்பெரும் உரிமை பெற்றுத் தந்ததற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் மனம் திறந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டே தமிழால் பிழைத்துக் கொண்டே, வயிறு வளர்த்துக் கொண்டே வரும் ஒரு கூட்டம் தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா என்று கேட்டது; ஆம் ஒரு பார்ப்பன நாளேடுதான் அவ்வாறு கேட்டது. அதற்காக அந்த ஏட்டின்மீது தமிழர்களின் கண்களில் சீற்றத்தைக் காண முடியவில்லை.

பெரியார், அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு, திராவிட முத்திரையையும் கட்சியில் வைத்துக் கொண்டி ருக்கும் அண்ணா திமுக என்ற கட்சி ஒரு மரபுக்காக வாவது, நாகரிகத்துக்காகவாவது தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டதற்கு வாய் திறக்கவில்லை. மாறாக என்ன செய்தது? செம்மொழி என்ற பெயரே இருக்கக் கூடாது என்று அந்தப் பெயர் சூட்டப்பட்ட பூங்காவையே எதிரியாகக் கருதியது - சிதைத்தது.

தமிழ் ஓவியா said...

கோவையில் திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உலக செம்மொழி மாநாட்டையொட்டி உருவாக்கப்பட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரால் உருவாக்கப்பட்ட நூலகம் கோட்டையிலிருந்து வெளியே வீசியெறியப்பட்டது. பழம் பெரும் ஆவணங்கள்எல்லாம், சுவடிகள்; நூல்கள் எல்லாம் மந்தி கையில் சிக்கிய மாலையாக்கப்பட்டது.

செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்துக்குத் தலைவர் மாநில முதல் அமைச்சர்தான்; அப்படி ஒரு பொறுப்பு தனக்கு இருக்கிறது என்ற அ.இ.அ.தி.மு.க. முதல்வர் தப்பித் தவறிக்கூடக் காட்டிக் கொண்டது கிடையாது.

அந்த நிறுவனத்துக்குத் துணைத் தலைவராக தமிழ்ப் புலமைக் குடும்ப வழி வந்த அவ்வை நடராசன் நியமிக்கப்பட்டார். தமிழர்கள் மகிழ்ந்தனர்.

எந்தவித காரணத்தையும் தெரிவிக்காமல் ஒரு செய்தி வெளி வருகிறது - அந்தப் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார் என்பதுதான் அந்தச் செய்தி. முதல் கண்டனம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களிட மிருந்துதான் வந்தது. எந்தவிதக் காரணமும் சொல்லப் படாமல் திடீரென்று ஒரு தமிழ் அறிஞரை நீக்கிய செயலுக்கு உயர்நீதிமனறம் தடையை விதித்தது.

இதுபற்றி ஜூனியர் விகடன் இதழுக்குத் தந்த பேட்டி ஒன்றில் அவ்வை நடராசன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்கள் கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கவை.

மாநிலத்தில் முதல்வர்தான் இந்த நிறுவனத்தின் தலைவர்; துணைத் தலைவரை நியமிப்பது மைய அரசு. இப்போதைய முதல்வர் (ஜெயலலிதா) எந்த ஒரு நிகழ் வுக்கும் வருவதில்லை. ந;ங்கள் எழுதும் கடிதங்களுக்கு பதில் சொல்வது இல்லை. கூட்டங்களுக்குத் தலைமை தாங்கு வதுதான் துணைத் தலைவரின் பணி; எதிலும் முடிவு எடுக்க முடியாது. நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு செம்மொழி அமைப்பு, செம்மொழி பூங்கா, செம் மொழி திட்டம் என்று சொல்வது பிடித்தமான ஒன்றாக தெரியவில்லை என்று தன் மனப்புண்ணை வெளியிட் டுள்ளார்.

இதுதான் தமிழ் நாட்டு ஆட்சியாரின் மனப்போக்கு. கலைஞர் 5 ஆவது முறையாக முதலமைச்சராக வந்தபோது - தமிழ் அறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கை யான தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை நிறைவேற்றிக் கொடுத்தார்!

செல்வி ஜெயலலிதா அம்மையார் முதல்வராக வந்ததும் அதன் கழுத்தில் தான் முதல் கத்தியை வைத்தார். தமிழ்நாடே பொங்கு மாங்கடலாகப் பொங்கி எழுந்திருக்க வேணடாமா? ஆட்சி அதிகார வாளுக்குப் பயந்து தமிழ்ப் புலவர் பெரு மக்களும் ஒடுங்கிப் போனார்கள். ஊடகங்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். கூலிக்கு மாரடிக்கும் குறுகிய புத்தியோடு பிழைப்பை நடத்திக் கொண்டு இருக்கின்றன.

அவ்வை நடராசன் அவர்களிடம் பேட்டி கண்டு வெளியிட்ட ஜூனியர் விகடன் வார இதழ் ஒரு பீடிகையோடு தான் அதனைத் தொடங்கியது.

இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; சமஸ்கிருதத்தைப் பள்ளிகளில் கொண்டு வர வேண்டும் என தமிழுக்கும், தமிழர்களுக்கும் பல்வேறு அதிர்ச்சிகளை அளித்து வந்த நடுவண் அரசு, திடீரென எந்த ஒரு காரணமும் இன்றி செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து மூத்த தமிழறிஞரான அவ்வை நடராசனை நீக்கியுள்ளது. தமிழை நசுக்கப்பார்க்கும் அவர்களின் செயல்களில் ஒன்று என தமிழ் ஆர்வலர்கள் கொதித்துப் போயுள்ளனர். இந்த நிலையில் அவ்வை நடராசனை அவரது இல்லத்தில் சந்தித்தோம். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. காலங் காலமாக இருந்துவந்த திட்டக் குழுவையே அவர்கள் தீர்த்து விட்டார்கள். என்னை இவ்வளவு காலம். எப்படி விட்டு வைத்திருந்தார்கள் என்று தான் எண்ணி இருந்தேன் என்று சொல்லி நம் கேள்விகளுக்குத் தயாரானார் என்ற பீடிகையிலேயே குறிப்பிட்டுள்ளது அவ்வார ஏடு.

இதுதான் இன்றைய நிலவரம்! இந்தி, சமஸ்கிருதம், கீதை என்று ஒன்றன்பின் ஒன்றாகப் படை எடுப்பு; இது சாதாரண படையெடுப்பல்ல; பண்பாட்டுப் படையெடுப்பு - அதுவும் ஆரியப் பண்பாடுப் படையெடுப்பு! இவற்றைத் தமிழ்நாடு எதிர்கொள்ளாவிட்டால், தடுத்து நிறுத்தா விட்டால், மீண்டும் ஆரிய ஆட்சி, மனுதர்ம ஆட்சி, சமஸ்கிருதக் கலாச்சாரம் காலூன்றி தந்தை பெரியாருக்கு முன் என்கிற கால கட்டத்தை விரட்டி பிடிக்கும் என்பதில் அய்யமில்லை.

மத்தியில் உள்ள பிஜேபி என்பது ஓர் அரசியல் கட்சியல்ல; பார்ப்பனப் பண்பாட்டு உணர்வை உள் வாங்கிக் கொண்டு, வேறு முகமூடி அணிந்து கொண்டுள்ள கபடக் கட்சி - ஆர்.எஸ்.எஸின் மாற்றுப் பெயர் என்பதை முதலில் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதற்குமேல் முறையான தேவையான அவசியமான சிந்தனைகள் நம்மிடம் முளைக்க முடியும். கரணம் தப்பினால் மரணம் எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page1/92747.html#ixzz3LsAMX6Hc

தமிழ் ஓவியா said...

மானமிகு கி. வீரமணி அவர்களின் 82ஆம் பிறந்த நாள் மலர்பற்றி

ஆசிரியருக்குக் கடிதம் >>>

மானமிகு கி. வீரமணி அவர்களின் 82ஆம் பிறந்த நாள் மலர்பற்றி

வெளியூர் 2..12.2014-ல் வெளிவந்த மானமிகு அய்யா தோழர் வீரமணி அவர்களின் விடுதலை மலர் படித்தேன். அது அறிவியல் பெட்டகமாக அமைந்து விட்டது.

ஒரு பெரிய லட்சியத்தில் வாழ்ந்த பெரியார் அவர்களின் தத்து பிள்ளையாக, தேர்தலையும் வாக்குச் சாவடிகளையும் சந்திக்காமல் லட்சியத்தை மனதில் நிறுத்தி செயல்படுகின்ற செயல்பாடு என்னையே பிரமிக்க வைத்தது.

நான் பொதுவுடைமை தத்துவத்தில் வளர்ந்தவன், திராவிடர் கழக கொள்கை, செயல்பாட்டால் வீரமணி அவர்களால் ஈர்க்கப்பட்டேன். எத்தனை தத்துவத்தைப் பேசினாலும் சூழ்நிலையை ஒத்து நடைமுறைப்படுத்தினால்தான் வெற்றி பெறும். அதைத்தான் லெனின் கூறுகிறார்.

அதில் திராவிடர் கழக இயக்கம், செயல்பாடு, நடைமுறைகள் விடுதலை பத்திரிகை வாயிலாக அன்றாடம் வாசிப்பவன். தோழமை என்பது தங்கள் இயக்கத்தை தவிர வேறொரு இயக்கத்தில் இல்லை என்பதை நடைமுறை வாயிலாக கண்டு கொண்டவன்.

விடுதலையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் மலரில் பார்ப்பனியத்தைப்பற்றி 1978-ல் நெல்லையில் பேசிய செய்தியை படித்தவுடன் எவ்வளவு தீர்க்கமாக பேசி உள்ளார் என்று அறிந்தேன்.

விடுதலை பத்திரிகையில் வரும் செய்திகளை பார்த்தவுடன் எதிர் காலத்தில் ஒரு மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. அரிய முத்துக்களாக 82 வாக்கியங்கள் மனதை ஈர்த்து விட்டன.

வைகோ அவர்களை பாரதிய ஜனதா தலைவர் ராஜா பேசிய பேச்சிற்கு துணிந்து பதில் சொன்ன ஒர் ஒப்பற்ற தோழர் எந்த நேரத்தில் எதைக் கூற வேண்டும் என்பதை எதிர்கால சிந்தனையுடன் கூறிய வாசகம் சிறப்பு. இயக்கத்திற்கு அப்படியொரு தலைவர் தேவை. பெரியாரின் லட்சியத்தை அடி பிறழாது. இளமைத் துடிப்போடு செயல்படுத்துவதைப் பார்த்து, நானும் அதை விட ஒரு படி தாண்டி செயல்படுவேன்.

நினது சாயல் யாவர்க்கும் வேண்டும் என்ற கட்டுரை தோழர் திருநாவுக்கரசு சிறந்த கண்ணோட்டதோடு எழுதியுள் ளார்கள். பெரியாருக்கு பிறகு திராவிடர் கழகம் என்ற தலைப்பில் ஜே.வி. கண்ணன் கட்டுரை ஓர் ஆய்வுரையாக செய்துள் ளார்கள்.

தோழர் அறிவுக்கரசு கவிதை ரொம்ப சிறப்பு. இறுதி மூச்சுவரை இந்தப் பணியை விட்டால் எனக்கு வேறு பணி ஏது? என்ற தலைப்பை படித்தவுடன் எனக்கே ஓர் உத்வேகம் பிறந்து விட்டது.

ஒவ்வொரு தோழரும் எழுதிய கட் டுரைகள் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய பெட்டகம். சிவப்பாக இருந்த வனை கருப்பாக மாற்றிய பெருமை தலைவர் வீரமணிக்கு உண்டு. இறுதி வரை பெரியாரை நேசிப்பேன். மானமிகு தலைவரை நேசிப்பதோடு மறக்கவும் முடியாது.

தோழன் இரா. சண்முகவேல்,

ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல் - 627860

Read more: http://viduthalai.in/page1/92752.html#ixzz3LsAW9DD8

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்..


மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்..

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக் கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியா விலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடைய வனாயிருக்கிறான்.
- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/92728.html#ixzz3LsBpBgoM

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங் களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோத மானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.
- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்

Read more: http://viduthalai.in/page1/92728.html#ixzz3LsBxniKy

தமிழ் ஓவியா said...

உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை

உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை


கிரேக்கப் புராணத்தின்படி குரோணோஸ் என்ற ஆகாய தேவனுக்கும் கே என்ற பூமி தேவிக்கும் இடையே நடை பெற்ற உடலுறவின் காரணமாகத் தான் உயிரினங்கள் உருவாயின. குரோ ணோசின் மகனான ஸ்யூஸ், தந்தை யின் பிறப்புறுப்பை வெட்டித்தான் இரண்டையும் பிரித்தான்.

ரிக்வேதம் இதை மற்றொரு வடிவில் கூறுகின்றது:

வருணன் ஆகாயத்தை மேலே உயர்த்தினான். சூரியன் ஆகாயத்தில் ஒளி வீசுவது வருணனின் பெருமையினால் தான். சமுத்திரம் கரை கவிழாமல் இருப்பதும் அதனால்தான்.

பைபிளிலுள்ள ஆதியாகமும் இதையே கூறுகின்றது:

பின்பு தேவன்: நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்று நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாய விரிவுக்குக் கீழே இருக்கிற நீருக்கும் மேலே இருக்கிற நீருக்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் எனப் பெயரிட்டார்.

குர்ஆன் அதையே மீண்டும் கூறு வதைப் பாருங்கள்:

ஆகாயமும் பூமியை (அவற்றைப் படைத்த ஆதிநாளில்) ஒன்றுக் கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பிறகு நாம் அவற்றை ஒன்றுக்கொன்று பிரித்து வைக் கவும் எல்லாப் பொருள்களையும் தண்ணீ ரிலிருந்து படைக்கவும் செய்தோம்
பண்டைய பாபிலோனியாவின் நம்பிக்கையின் படி உலகம் மர்துக் தேவனின் கட்டளைப்படி தண்ணீரிலிருந்து தோன்றியது. அமைப்பு வழிபட்ட மதங்கள் உருவாவதற்கும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்த நம்பிக்கைகளே இந்தக் குறிப்புகளில் அலையடிக்கின்றன. அவற்றை அமைப்பு வழிப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தன.

இன்று செயற்கை உயிரையே அறிவியல் கண்டுபிடித்து விட்டதே!

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsC6B23o

தமிழ் ஓவியா said...

ஆன்மா பற்றி மொக்கலவாத கருத்து

கடவுளை உண்டு பண்ணினவனை விட ஆன் மாவை உண்டு பண்ணினவனே அயோக்கியன் என தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பவுத்தத்தைச் சார்ந்த மொக் கல வாதக் கருத்தும் (நை ராத்ம வாதம் அல்லது ஆன்மா இல்லை என்கின்ற வாதம்) அமைந்திருப்பதை நீலகேசி என்னும் நூலில் மொக்கல வாதசருக்கத்தில் காணலாம்.
ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங் களும், (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரியங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தானாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என்பீரேல்; சரீர பிரமாணத் ததா? அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ? ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ இரு வகைத்தும் குற்றமே என்றறிக! (நீலகேசி மொக்கலவாதச்சருக்கம், பக்கம்-3)
இதிலிருந்து ஆன்மா என்பதே ஒரு பொய்க் கற்பனை என்பதும், உடலுக்குள் புகுவதும், பிறகு உடல் செயலற்றுப் பிணம் என்றாகி விட்டால் அந்த உடலை விட்டு வெளியேறிவிடுகிறதென்பதும், மீண்டும் வேறு உடலை ஏற்றுக் கொள்கிறதென்பதும் சுத்தப் புரட்டு என்பதைப் புரிந்து கொள்ளலாம். - சேலம் ர.ஒந்தாட்சி

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsCE28Ci

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா?
அன்னை தெரசா

பல துயரங்களை மறைக்கும் பெரிய திரையாக என்னுடைய புன்னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என்னுடை மத நம்பிக்கை, என்னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையை அறியார். கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.
தி இண்டு, 30.11.2002

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsCKTZ9G

தமிழ் ஓவியா said...

பெரியார் பேசுகிறார்

உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) - வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார் - கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும், முதன்மையாகவும் இருப்பதால் அது பணக்காரன் - ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது.

தந்தை பெரியார், 4.10.1931 பொது உடைமை வேறு; பொது உரிமை வேறு. பொது உடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொது உரிமை என்பது சம அநுபவம் என்பதாகும். தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமானால், தனி உடைமையை மாற்ற அதிகப் பாடுபடாமலே இந்த நாட்டில் பொது உடைமை ஏற்பட வசதி உண்டாகும். பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை, மறுபடியும், அதிக உரிமை இருக்கிறவனிடந்தான் போய் சேர்ந்துக்கொண்டே இருக்கும் என்பது பொதுவுடமைத் தத்துவத்திற்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும். - தந்தை பெரியார், 25.3.1944Read more: http://viduthalai.in/page1/92730.html#ixzz3LsCRqEtQ

தமிழ் ஓவியா said...

அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்டவிரோதம்

அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்டவிரோதம் என்று ஜப்பான் நாட்டில் நீதி மன்றம் தீர்ப்பு அளித் திருக்கிறது. ஜப்பான் மதச்சார்பு இல்லாத நாடு என்று அதன் அரசியல் சட்டம் கூறுகிறது. அதன் படி, அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது. இந்தத் தீர்ப்புப்படி ஜப்பான் மன்னரும் கோவிலுக்குப் போக முடியாது. இந்த சட்டம் இந்தியாவிற்கு?
(ராணி, 3.1.1991)

Read more: http://viduthalai.in/page1/92730.html#ixzz3LsCbd8dV

தமிழ் ஓவியா said...

மோடி ஆட்சித் துறையில் சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயம்?


புரிந்து கொள்ளுங்கள்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு கூறுகிறது!

மோடி ஆட்சித் துறையில் சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயம்?

தேசிய ஆராய்ச்சிக்கான பேராசிரியர் ஆய்வுத் துறையில் முன்பு சர் சி.வி. இராமன், எஸ்.என். போஸ், மகாஸ்வேத தேவி, பிஸ்மில்லாகான், ஆந்திரி பெட்டில், கோவர்தன் மேத்தா போன்றவர்கள் இருந்த ஆய்வுத்துறையில், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர், அனுதாபிகளான எஸ்.எஸ். பைரப்பா, அசோக் கஜனன் மோடக் மற்றும் சூரியகாந்த் பாலி ஆகியோரை நியமிக்க மனிதவள மேம்பாட்டுத்துறை ஆயத்தமாகி விட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட, மிகப் பெரிய அளவில் மிகச் சிறப்பான ஆய்வுகளைத் தந்த மிகத் திறமை வாய்ந்த ஆராய்ச்சிக்கானவர்களையே நியமனம் செய்யும் வழக்கம் இதற்கு முன்பு இருந்தது - இப்போது அதற்கு விடை கொடுத்தனுப்பப்படுகிறது.

மேற்கூறிய மூன்று பெயர்களும் வெளியிலிருந்து வந்தன. (அது எது என்று குறிப்பிடப்படவில்லை) பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் சொன்னார்; இம்மூன்று பெயர்களும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களால் அளிக்கப்பட்டவை. இம்மூன்று பெயர்களில் ஒருவரான பைரப்பா எழுதிய நூலை ஆர்.எஸ்.எஸ். தலைவர் அண்மையில் வெளியிட்டார். மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மேடையில் அமர்ந்து முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத் தக்கது!

இம்மூவரில் ஒருவரான சூரியகாந்தபாலி என்பவர் குறிப்பிடும் போது திறமை என்பது அவ்வப்போது மாறிடும் ஒன்றுதான், எனவே இதைப்பற்றி யாரும் எதுவும் கூற முடியாது. அவரவர் கண்ணோட்டத்தில் அது அடிக்கடி மாறத்தான் செய்யும் என்கிறார்! இதில் இருவர் தேர்தல் நேரத்தில் மோடிக்காக பகிரங்கமாக வேலை செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page1/92787.html#ixzz3LsDIMZy3

தமிழ் ஓவியா said...

இந்தியாவுக்கே வழிகாட்டிய பெரியார் திடல் சிறப்புக் கூட்டம்மத்தியில் அமைந்துள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த இந்த ஏழு மாதங்களில் மக்களுக்கான எந்த வளர்ச்சிப் பணியிலும் ஈடுபடவில்லை; குறிப்பிட்டுச் சொல்லும்படியான பொருளாதார வளர்ச்சியும் இல்லை.

வளர்ச்சியைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்கள், இப்பொழுது தங்களுக்குரிய இந்துத்துவாவை முன்னிலைப் படுத்துவதிலேயே முண்டா தட்டிக் கிளம்பி விட்டனர்.

மத்திய அரசுத் துறைகளில் இந்திக்கே முன்னுரிமை என்றனர் - இணையதளங்களில் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்றனர்.

அடுத்து கேந்திரவித்யாலயாக்களில் மூன்றாவது மொழியாக இதுவரை கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் என்றனர். சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு மொழியைப் படிக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி, சமஸ்கிருதம் தான் மூன்றாவது மொழி என்று அடம் பிடித்தனர்.

சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்றனர். ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றிக் கொண்டாடச் சொன்னார்கள்.

வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் இந்தியா சார்பில் அந்நாட்டுப் பிரதமர்களுக்கும், அதிபர்களுக்கும் கீதையை நினைவுப் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தார்.

அடுத்த கட்டமாக இந்தியத் தேசியப் புனித நூலாக கீதையைக் கொண்டு வருவோம் என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகவிருக்கும் சுஷ்மா சுவராஜ் பொது நிகழ்ச்சியில் அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்றைக்குக் கீதையைக் கொடுத்தாரோ, அப்பொழுதே கீதை இந்தியாவின் புனித நூலாகி விட்டது; இனி அதிகாரப் பூர்வமாக அறிவிப்பதுதான் பாக்கி என்கிற அளவுக்கு அவர் போய் விட்டார்.

இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்ப்புப் புயல் வெடிப்பதற்குக் காரணமாகி விட்டது. இந்துத்துவாவாதிகள் தங்கள் ஆட்சிக் காலத்தில் தங்களுடைய இந்துத்துவ - மனுதர்ம நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் பெரும் அளவுக்குத் துடிப்பாக உள்ளனர். மறுபடியும் பார்ப்பனிய ஆதிக்கச் சமூகச் சூழலை எடுத்துக்கட்டும் ஏற்பாடாகத் தான் இதனைக் கருத வேண்டும்.

இந்த நிலையில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதல் முதலாக மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையை எடுத்துச் செ()ல்லும் முதல் பொதுக் கூட்டத்தை சென்னையில் (பெரியார் திடலில்) திராவிடர் கழகம் அரங்கேற்றியது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில் தலைப்பு - இந்தியத் தேசிய புனித நூலாக கீதையை அறிவிப்பதா? - கண்டன பொதுக் கூட்டம் என்று விளம்பரம் செய்யப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வெகு சிறப்பாக எடுத்து வைத்தனர்.

தமிழ் ஓவியா said...


பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி களில் ஒன்றாக இது என்றென்றும் பேசப்படும் அளவுக்கு மக்கள் திரள் புதுப்புது முகங்கள் - இளைஞர்கள் - பல்துறைப் பெரு மக்களின் சங்கமமாக அமைந்து விட்டது.

கூட்டத்தில் பேசப்பட்ட பொருளின் சாரம் என்று கீழ்க்கண்டவற்றைக் கூறலாம்.

1) இந்தியா மதச் சார்பற்ற நாடு அப்படி இருக்கும் பொழுது கீதை என்ற இந்து மத நூலை தேசியப் புனித நூலாக அறிவிப்பது சட்ட ரீதியான குற்றச் செயலாகும். (சட்டத்திற்கு மாறாகச் செயல்பட்ட வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றுகூட பேராசிரியர் அருணன் பேசியது குறிப்பிடத்தக்கதாகும்).
2) இரண்டாவதாக கீதை ஒரு தேசிய நூலாக அறி விக்கப்பட்ட வேண்டிய அளவுக்குத் தகுதியானதுதானா என்ற கேள்வியாகும்.

மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பேதம் வளர்க்கும் பிரிக்கும் ஒரு நூல் எப்படி ஒரு நாட்டின் தேசிய நூலாக இருக்க முடியும்?

3) மக்களுக்குள் பிளவை ஏற்படுத்துவதோடு கீதை ஒரு கொலை நூல் - கொலையைத் தூண்டும் நூல்.

குருச்சேத்திரப் போரில் தம் சுற்றத்தாரைக் கொல்லத் தயங்கிய நேரத்தில் - அப்படிக் கொன்றால் குலதர்மம் அழிந்து போகுமே என்று அர்ச்சுனன் கலங்கிய நேரத்தில், நீ சத்திரியன் - யுத்தம்தான் உன் வருண தருமம் என்று சொன்னதோடு நீ உன் சுற்றத்தாரின் உடலைத்தான் அழிக் கிறாயே தவிர, ஆத்மாவையல்ல! என்று புது விளக்கம் சொன்னவன் பகவான் கிருஷ்ணன் என்பதன் மூலம் கொலை செய்வதை ஒரு தர்மமாக்கும் அபாயகரமான நூல். எந்த வகையில் பார்த்தாலும் கீதைஒரு ஒழுக்கமான நூலோ, வழிகாட்டி நூலோ கிடையாது; இந்த நூலை திருக்குறளோடு ஒப்பிடுவதைக்கூட அனுமதிக்கக் கூடாது என்றெல்லலாம் சிறப்பான கருத்துக்களை எடுத்து வைத்தார்கள்.

இத்தகு கருத்துக்களை சொல்லக் கூடியவர்கள் நாடாளுமன்றத்தின் வெளியேதான் இருக்கிறார்கள். இதில் இனியும் நாம் கால தாமதம் செய்தால் அது நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தி விடும். இதில் ஒன்று சேர வேண்டியவர்கள் ஒன்று சேர வேண்டும் என்ற பொதுக் கருத்து முன் வைக்கப்பட்டது. இந்தக் கருத்துக்களுக்குப் பெரும் அளவில் வரவேற்பு இருந்ததை பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களின் எதிரொலிமூலம் நன்கு அறிய முடிந்தது.

கீதையை முன்னெடுத்துள்ளவர்கள் ஆண்டாண்டுக் காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த கூட்டத்தினர் என்பதும் அடையாளம் காட்டப்பட்டது. கீதை இந்துக் களின் நூல் என்பதும் உண்மைக்கு மாறானது. பெரும் பான்மையான இந்து மக்களை கீழ் ஜாதி என்றும் சூத்திரர் என்றும் கூறக் கூடிய ஒரு நூல் அந்தப் பெரும்பான்மையான மக்களால் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட முடியும்?

இந்தியாவில் உள்ள சிறுபான்மை மதத்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பார்ப்பனர் அல்லாதார்தான் பெரும்பான்மையான மக்கள்; இந்த மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத நூல் மட்டுமல்ல. இந்த மக்களால் எதிர்த்து ஒழிக்கப்பட வேண்டிய நூல்தான் கீதை என்ற உணர்வினை ஊட்டிய எழுச்சிமிகு கூட்டமாக பெரியார் திடல் சிறப்புக் கூட்டம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இது எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லப்படும் என்பது நற்செய்தியாகும்.

Read more: http://viduthalai.in/page1/92789.html#ixzz3LsDUQLyE

தமிழ் ஓவியா said...

அம்பலமாகும் இந்திய தேசியமும், இந்து புனிதமும்


- குடந்தை கருணா

நாட்டின் வெளிவிவகாரங்களை சமன் செய்யும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள் விவகாரத்தை கிளப்புகிறார். டில்லி யில் சாமியார்கள் நடத்திய கூட்டத்தில் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி என்கிறார். மதச்சார்பற்ற நாடு என அரசமைப்புச் சட்டம் சட்டத்தில் பிரகடனப்படுத்திய ஒரு நாட்டில் ஒரு மதத்துக்கான நூலை, எல்லா மக்களுக்குமான நூலாக அறிவிக்க முடியுமா? என்ற கேள்வியோடு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் பணியை முடித்துக் கொண்டன. அதனைக் கடந்து, பகவத் கீதை ஒரு புனித நூலா? என்ற கேள்வியை எழுப்புகிற துணிச்சல் தமிழ் நாட்டில் பெரியார் பிறந்த மண்ணில் மட்டும் தான் எழுந்துள்ளது.

சென்னை பெரியார் திடலில் நேற்று (12.12.2014) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் தேசியத்தை யும், புனிதத்தையும் அறுவை சிகிச்சை செய்து காட்டினர்.

பகவத் கீதை, நால்வகை வர்ணத்தை நிலை நாட்டும் ஒரு பிற்போக்கான வன்முறையைத் தூண்டும் நூல் என்பதுதான் சாராம்சம். ஆனால், அதன் உள்ளே சென்று ஆராய்ந்தால், இந்த நூல், பார்ப்பன மேலாண்மையை நிறுவுவதற் கான அத்தனையும் சொல்லப்படும் நூல் என்பது விளங்கும்.

கடமையைச் செய்; பலனை எதிர் பாராதே என்ற வாசகத்தை, கீதை சொல்கிறது என இன்றும் பலராலும் சொல்லப்படும் நிலையில், நால்வகை வர்ணத்தில் கடைநிலையில் இருக்கும் சூத்திரர்கள், பார்ப்பனர்களுக்கு ஏவல் செய்வதை தங்கள் கடமையாக செய்ய வேண்டும்; அதற்கு எந்தப் பலனையும் அவர்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியும், உரிமையும் இல்லை என்பதுதான் பொருள் என்பது இன்று எத்தனைப் பேருக்கு தெரியும்?

நாட்டின் பெரும்பான்மை மக்களான சூத்திர மக்களை மீண்டும் பார்ப்பனர் களுக்கு ஏவல் செய்வதை கடமையாக்க வேண்டும் என்ற சூழ்ச்சியோடு அரங்கே றும் இந்த பகவத் கீதை நாடகம், அதை தேசிய நூலாக ஆக்கிடத் துடிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தேசியம் என்பதே, பார்ப்பன தேசியம் தான். அவர்களுக்கான அமைப்புகளை கட்ட மைப்பதுதான். அதற்கு பகவத் கீதை வழி செய்கிறது. ஆகவே, அது தேசிய நூல்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களுக்கு பாதுகாப்பான அத்தனையும் புனிதம் நிறைந்தது. மாட் டில் பசு மாடு புனித மாடு, உலகிலேயே அதிக மாசு கொண்டுள்ள கங்கை, புனித கங்கை. அதை சுத்தப்படுத்துவதற்கு மோடி அரசு ஆயிரக்கணக்கான கோடி செலவிடுவதாகச் சொன்னாலும், அப் போதும் அந்த மாசு படிந்த ஆறு, புனித ஆறு. அது போலத்தான் பகவத் கீதை புனித நூல்!

அரசமைப்புச் சட்டத்தில் 22 மொழிகள் தேசிய மொழிகள் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதில் சமஸ்கிருதம் தவிர, மீதம் உள்ள அனைத்து மொழி களும், ஏதேனும் ஒரு மா நிலத்தில் அந்தப் பகுதி மக்களால், பேசப்படுகிறது. ஆனால், எந்த மாநிலத்திலும், எந்த மக்களாலும், பேசப்படாத மொழியான சமஸ்கிருதம் எப்படி தேசிய மொழி யாகும்? சமஸ்கிருதம் பார்ப்பனர்களின் மொழி. ஆகவே அது தேசிய மொழி, அது தேவ பாஷை, அப்படித்தானே?

இந்த பார்ப்பன மேலாதிக்கத்தை தோலுரித்தவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தான். ஆனால், அம்பேத்கரின் சிந்தனையை கொண்டு செல்ல ஓர் இயக்கம் இல்லாத நிலையில், பெரியாரின் இயக்கம் அந்த பணியை கூடுதலாகச் செய்ய வேண்டிய தேவை இன்று அதிகம் ஆகியிருக்கிறது.

பார்ப்பனர்களுக்கே உரிய கிரிமினல் புத்தி எப்படிப்பட்டது என்றால், ஒரு விஷயத்தை இங்கே செய்து கொண்டே, இன்னொரு பக்கம் வேறொரு விஷ யத்தை சன்னமாகச் செய்வதுதான். அதைத் தான் இப்போது செய்து கொண்டிருக் கிறார்கள். ஒருபக்கம், சமஸ்கிருதம் கட்டாயம், பகவத் கீதை தேசிய நூல், காந்தியைவிட கோட்சே ஒரு தேசபக்தன், ராமனுக்கு கோவில் கட்டவேண்டும் என கோரிக்கை என நம்மை திசை திருப்பி விட்டு, இன்னொரு பக்கத்திலே, சத்த மில்லாமல், பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயமாக்கும் பணியையும், தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தில் அவர்களுக்கு விரோதமான, பனியா கும்பலுக்கு சாதகமான பல அம்சங்களை (ஷரத்து)களை சேர்க்கும் பணியையும் துவக்கி உள்ளார்கள். பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள இடஒதுக்கீட்டை ஓசையின்றி ஒழித்துக் கட்ட, வளர்ச்சி, தூய்மை என மயக்க பிஸ்கெட்டு கொடுத்து, தனியார் மயமாக் கும் போக்கை இந்த மோடி அரசு செய்து வருகிறது.

இந்த பார்ப்பன பனியா கதியைத் தான், தன் ஆயுள் முழுவதும் தந்தை பெரியார் எதிர்த்து வந்தார். பார்ப்பனர் களை இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் எதிர்ப்பது, தங்கள் வீட்டு அத்தனை சடங்குகளையும் அவர்களைக் கொண்டு நடத்துவது, சரிப்பட்டு வராது. பார்ப்பனர் களை நம்முடைய அத்தனை நிகழ்வு களிலும், பிறப்பு முதல் இறப்பு வரை, அவர்களின் மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடினார்.

அதனால்தான், இன்று பகவத் கீதை ஒரு புனிதமும் இல்லை; தேசியமும் இல்லை என்று துணிந்து தமிழ் நாட்டில் சொல்ல முடிகிறது கட்சிகளுக்கு அப்பாற் பட்டு அந்த சிந்தனையை ஒன்றுபடுத்த முடிகிறது.

இந்தப் பணியை பெரியார் இயக்கத்தைத் தவிர வேறு யாரும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. முனைப்புடன் செயல்பட்ட ஆசிரியர் வீரமணி அவர்களைப் பாராட்ட வேண் டும் ஒவ்வொரு பார்ப்பனர் அல்லா தாரும். ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்து, சர்வாதிகாரமாக ஆட்சி செய்வது ஹிட்லர் பாணி; அதைத்தான் இன்றைய மோடி அரசு செய்து கொண்டு வருகிறது. ஆபத்தை புரிந்தவர்கள், புரியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சொல்வ தற்கு, நேற்றைய கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பல விஷயங்களை தெளிவு படுத்தி உள்ளனர், பயன்படுத்திக் கொள்வோம். பார்ப்பன பனியா சதிகளை அம்பலப்படுத்துவோம்.

Read more: http://viduthalai.in/page1/92799.html#ixzz3LsDg44r7

தமிழ் ஓவியா said...

சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.
_ (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page1/92788.html#ixzz3LsDpHqs2

தமிழ் ஓவியா said...

12,04,00,000 ஆண்டுகளுக்கு முன்பே...!

பகவத் கீதையில் மனித குலத்துக்கு ஏற்ற கருத்துகள் உள்ளதாம். அது மனிதனுக்காக சொல்லப்பட்டதாம். அது மனிதனுக்காகத்தான் சொல்லப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதாவது, உயர்ஜாதி மனிதன் கீழ்ஜாதி மனிதனை ஒடுக்க, ''இது கடவுளாலேயே உண்டாக்கப்பட்டது.அதனால் நீ(கீழ் ஜாதிக்காரன். இதற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும்'' என்ற காரணத்திற்காக சொல்லப்பட்டது.

அதெல்லாம் இருக்கட்டும், ''யாருமே இல்லாத கடையில யாருக்காக டீ ஆத்துறே?'' என்பது போல மனித குலமே தோன்றாத காலத்தில் மனிதனுக்காக சொல்லப்பட்டது என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?

கீதையை அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னான் என்பதைக்கூட நம்பித் தொலைத்து விடுகிறோம். ஆனால்.......

... மனுவின் தோற்றத்துக்கு முன்னால், பகவானால், அவரது சீடனான சூரிய தேவன் விவஸ்வானுக்கு கீதை உபதேசிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளும் நிலையில், கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன், உபதேசிக்கப்பட்டதாக உத்தேசமாகக் கணக்கிடலாம். மனித சமுதாயத்திலோ, இது இருபது லட்சம் ஆண்டுகளுக்கு மேல் வழக்கில் இருந்து வந்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன் இது மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்-பட்டது..........

இந்த செய்தி, பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த பகவத் கீதை உண்மையுருவில் என்ற நூலில் அத்.4 பக்கம் 231 ல் உள்ளது.

சத்ய யுகம் 172800ஆண்டுகள், திரேதாயுகம் 1296000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், கலியுகம் 432000ஆண்டுகள், மொத்தம் 4320000 (நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம்) ஆண்டுகள்தான்.

இதில், கலியுகம், பிறந்து 5000 ஆண்டுகள்தான் ஆகிறது,எனும்போது, கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனுக்காக உபதேசிக்கப்பட்டதாக சொன்னால், கடவுள் நம்பிக்கையுள்ள மூடனும் நம்ப மாட்டானே!

- க.அருள்மொழி

தமிழ் ஓவியா said...

ஏறி வரும் ஏணி!


திராவிட இயக்கச் சித்தாந்தம் காலாவதியாகி விட்டது என்று சொல்லியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ்.

மேலே ஏறிவந்து விட்டோம் என்பதற்காக ஏணியை எட்டி உதைக்காதீர்கள் அன்புமணி.

ஏணிக்கு ஆதரவாகச் சொல்லவில்லை. அந்த ஏணியின் உதவியுடன் மேலும் பலர் மேலே ஏறி வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா. அவர்களுக்காகச் சொல்கிறேன்!

- எழுத்தாளர் இரா.முத்துக்குமார், 11 டிசம்பர் 2014, அதிகாலை 2:19 மணி (முகநூலில்)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசேன், நஜ்மா ஹெப்துல்லா எப்பொழுது மதமாற்றம்?


சங்பரிவாரின் உதிரிகள் மறு மதமாற்றம் செய்வதாகக் கூறி பிரச்சினை செய்வதை பிஜேபியின் தலைமை விரும்புவதாக இருந்தால், முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசேன், நஜ்மா ஹெப்துல்லா போன்ற முஸ்லிம்களையும், கட்சியின் சிறுபான்மை அமைப்பி லிருக்கும் சில கிறிஸ்துவர்களையும், சீக்கியர்களையும் முதலில் மறு மதமாற்றம் செய்யலாமே! அவர்களும் மகிழ்ச்சியாக மீடியாவுக்கு போஸ் கொடுப்பார்கள். மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சரவை பொதுத் துறை நிறுவனத் தலைவர் பதவிகளைக் காட்டி இப்படி ஒரு முடிவை நோக்கி அவர்களை கவர்ந்திழுக்கலாமே!

- (முக நூலில் இருந்து: - விஜய் குரோவர்)

Read more: http://viduthalai.in/e-paper/92910.html#ixzz3LxpYaMl0

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செவ்வாய் கிரகம்

நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு, ஒன்றான வழிபடும் முறை களை பரத்வாஜ் முனிவர் சொல்லிக் கொடுத்தார். அதன்படி செவ்வாய், விநாயகரை நோக்கி கடும் தவம் இருந்தார். பக்திக்கு மகிழ்ந்த விநாயகர் அவர் முன்தோன்றி, செவ்வாய் நவக்கிரகங்களில் ஒன் றாக விளங்கும் வரம் கொடுத்தார். இந்த விரதம் செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தி திதியில் நடந்த தால் செவ்வாய்க்கிழமை யும், சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் நாளில் இவரை பூஜித்து விரதம் இருப்பவருக்கு கேட்கும் வரங்களை செவ்வாய் கொடுப்பதாக கூறப்படு கிறது. இதனால் சதுர்த்தி திதியும், செவ்வாய்க்கிழ மையும் சேர்ந்து வரும் நாளை சங்கடஹர சதுர்த்தி என்று மக்கள் வழிபட வேண்டுமாம்.

செவ்வாய்க் கிரகம் பூமிக்கு வந்து விநாயகரை நோக்கித் தவமிருந்ததா? 890 மில்லியன் மைல் தூரத்தில் உள்ள ஒரு கோள் விநாயகரை நோக்கித் தவமிருந்ததாம். செவ்வாய்க்கோள் என்ன இந்துக்களின் அஞ்சறைப் பெட்டிக்குள் அடக்கமோ!

Read more: http://viduthalai.in/e-paper/92911.html#ixzz3Lxpiyzyz

தமிழ் ஓவியா said...

குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சரமாரி கேள்விகள்

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான், தனது திருமண செலவுக்காக குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார்? என சிலர் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டி அய்) மூலம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதில் கூற முடியா மல் திருப்பதி தேவஸ்தான அதி காரிகள் திக்குமுக் காடி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலை யான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள், இதிகாசங்கள் தெரிவிக் கின்றன. இதனால் பக் தர்கள் உண்டியல் மூலம் செலுத்தும் காணிக்கை களை குபேரனுக்கு வட்டி யாக செலுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நம்பிக்கை யில்தான் ஏழுமலையானுக்கு பக்தர்கள் கோடிக் கணக் கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். நடப்பு வருவாய் ஆண்டில் உண்டியல் காணிக்கை ரூ. 1,000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படு கிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் சிலர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத் துக்கு மனு அனுப்பி வரு கின்றனர். ஏழுமலையான் தனது திருமண செலவுக் காக குபேரனிடம் எவ் வளவு கடன் வாங்கினார்? இந்தக் கடனில் பக்தர்கள் காணிக்கையாக செலுத் திய தொகையில் அவர் எவ்வளவு வட்டி செலுத்தி உள்ளார்? மீதம் உள்ள அசல், வட்டி தொகை எவ்வளவு? தேவஸ்தான நிர்வாகத் தினர் கடனை எவ்வாறு செலுத்தி வருகின்றனர்? இதுவரை பக்தர்கள் காணிக்கை செலுத்திய தொகை எவ்வளவு? என சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர். பதில் கிடைக்காவிட்டால் நீதி மன்றத்தை அணுகப் போவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த டி. நரசிம்ம மூர்த்தி என்பவர் இதே கேள்விகளை கேட்டு தேவஸ்தானத்துக்கு சமீபத் தில் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து தேவஸ் தான அதிகாரிகள் கூறும் போது, புராண, இதிகாசங் களில் ஏழுமலையான் குபேரனிடம் கடன் வாங்கியதாக கூறப்பட் டுள்ளது. ஆனால் சிலர் இதற்கு சாட்சியங்கள் தேவை என்றும், இது வரை தேவஸ்தானம் சார்பில் குபேரனுக்கு கட்டிய வட்டி குறித்து கணக்கு காட்ட வேண் டும் என்றும் ஆர்டிஅய் சட்டத்தின் கீழ் கோரி உள்ளனர். சுய விளம் பரத்துக்காக கேட்கப்படும் இதுபோன்ற கேள்வி களுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/92913.html#ixzz3LxpskF86

தமிழ் ஓவியா said...

மெய்ப்பிக்க முடியும்!


புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப்பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய் யப்பட்ட கதைகளேயாகும். இவைகளை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும்.
(விடுதலை, 17.3.1961)

Read more: http://viduthalai.in/page-2/92919.html#ixzz3Lxq7QGOT

தமிழ் ஓவியா said...

ஜாதி முள்காட்டில் பூத்த குறிஞ்சி மலர்!


விடுதலையில் வெளிவரும் வாழ் வியல் சிந்தனைகளையும் மற்ற ஏனைய புதுமைக் கருத்துக்களையும் - அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும் - இடையறாது படித்து, மனதில் அசை போட்டுப் பாராட்டி மகிழும் ஒரு புதுமையான வாசகர் அம்மையாரை, எனது நெருங்கிய குடும்ப நண்பரும், இந்தியாவின் தலைசிறந்த சிறுநீரக வியல் துறை மருத்துவருமான டாக்டர் ஏ. இராஜசேகரன் அவர்கள் எனக்கு 12.12.2014 அன்று பெரியார் திடலுக்கே அழைத்துவந்து நேரில் அறிமுகம் செய்து வைத்தார்.

நாங்கள் சந்தித்ததோடு, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாடி மகிழ்ந்தோம். கண்ணுக்குத் தெரியாத நண்பர்கள் இப்படி உலகமெங்கும் பலரை பெரியாரியல் - அதன் முற் போக்குச் சிந்தனைகள் ஈர்த்துள்ளன.

இவரது சொந்த ஊர் விழுப்புரம் அருகில் உள்ள கண்டமானடி என்ற சிறு கிராமம். அங்கே வறுமை மிகுந்த சூழ்நிலையிலும் படித்து உயர்ந்தார் - பழைய மாதக் காலண்டர்களைச் சேகரித்து அதனை நோட்புக்காக இணைத்து, அதனையே பாடங்கள் எழுதப் பயன்படுத்தி ஆடிட்டராக - பட்டய கணக்கராக உயர்ந்தார் எப்படியோ பல ஆண்டுகளுக்குமுன் இவர் வெறும் 17 டாலர்களை வைத்துக் கொண்டு அமெரிக்காவிற்குச் சென்று அங்கு தொழில் நடத்தி கடும் உழை ப்பினாலும், அறிவு ஆற்றலாலும் உயர்ந்த நிலையில் உள்ளார்.

இவரது துணிவு மிக்கச் சிந்தனை, இவரை அமெரிக்க அரசின் வரு வாயில் தவறான ஒட்டைகள்பற்றிய ஆய்வு மூலம் பல கோடி வருவாய் - அரசுக்கு மிச்சமாகும் என்பதைக் கண்டறிந்து கூறியதைக் கேட்டு அமெ ரிக்க அரசு இவரைப் பாராட்டி விருதும் பரிசும்கூட அளித்திருப்பது பெருமை அல்லவா!

தமிழ்நாட்டுப் பெண் ஒருவருக்கு உலகின் முன்னேறிய வளர்ந்த நாடு என்கிற வரிசையில் உள்ள அமெரிக்க நாட்டின் அரசு இப்படிப் பெருமை செய்தது எவ்வளவு சிறப்பானது!

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்களுக்கு இதைவிட நல்ல பாடம் வேறு உண்டா? - இவரது வாழ்க்கையே சிறப்பு அல்லவா?

இதைப்பற்றி நாங்கள்அன்று நேரில் பாராட்டியபோது, மிகுந்த தன்னடக்கமும், எளிமையும் தனது இனிய பண்புகளாகக் கொண்ட அந்த அம்மையார் திருமதி ஜானகி இராமதாஸ் அவர்கள் சொன்னார்:

இதற்கு ஒரு முக்கிய காரணம் - துணிவுக்கு நான் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? புத்தகம் படித்தேன்.

பள்ளிப் பருவத்தில் நான் சிறுமியாக - மாணவியாக இருந்தபோதே, அப் பகுதிக்கு வந்து பேசும் பெரியார் பேச்சைக் கேட்பேன்; அது வீட்டாருக் கும், தெருவாருக்கும் தெரியாமல் சென்று, நீ அங்கேயா போய் விட்டு வருகிறாய் என்று அதிசயத்துடனும், சற்று எரிச்சலு மாய் என்னுடன் இருக்கும் பெண்களே கூட கேட்பர். அதனால் என்ன? பலரது கருத்துக்களைக் கேட்பதும், சிந்திப்பதும் எப்படி தவறு என்று அவர்களுக்குக் கூறுவேன்.

நீங்கள் (ஆசிரியர்) எழுதும் பல வற்றை நான் தவறாமல் இணையதளத்தில் படித்து மகிழ்வேன் என்று கூறி, சரசர வென்று பல வாழ்வியல் மற்றும் கட்டு ரைகளைப் பற்றி அப்படியே ஒப்புவிப்பது போலக் கூறி எங்களை அசத்தி விட்டார்!

அவரது வாழ்விணையர் திரு. இராமதாஸ் அவர்களும் இவருக்கு நல்ல ஊக்கந் தரும் இணையராக உள்ளார்; இவரது இரண்டு பிள்ளை களும் நல்ல கல்வி பெற்று, பெரு நிலையில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

நேரில் பார்க்க வாய்ப்பில்லாத அவர், என்னைச் சந்திக்க இம்முறை இங்கே வந்ததையொட்டி, ஏற்கெ னவே அறிமுகமான குடும்ப நண்பர் டாக்டர் இராஜசேகரனிடம் விருப் பத்தைத் தெரிவித்தார். அவர் அழைத்து வந்தார்.

அவரது நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது. வாழ்வியல் சிந்தனை மற்றும் பெரியார் நூல்களைப் பெற்றுக் கொண்ட அவர் டெக்சாஸ் மாநிலத்தில், தான் வாழும் தமது வீட்டிற்கு அமெரிக்கா வரும் போது கட்டாயம் வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதில் மேலும் ஒரு தனிச் சிறப்பு - இவரைப் பற்றியது என்னவென்றால், ஜாதி வர்ணம் என்ற கள்ளி, முள் காட்டில், உயர்ஜாதி என்று அழைக் கப்படும் பிறப்பால் பிறந்த அக்கிர காரத்து அதிசய மனுஷி இவர்!

பெரியார் அனைவருக்கும் உரியார்; அவர்தம் சுயமரியாதை ஒளி பலரையும் துணிச்சல் உள்ளவர் களாக்கி, ஆமைகளாய், ஊமைகளாய் இருந்த பெண்ணினத்தை - ஜாதி வேறுபாடு இன்றி உயர்த்தியுள்ளது. மனித நேயத்தின் மலர்ச்சியாக அது பூத்து, காய்த்து, கனிந்துள்ளது என்ப தற்கு இதைவிட சிறந்த வாழ்வியல் எடுத்துக்காட்டு வேறு என்ன வேண் டும்?

இவர் ஒரு ஜாதி முள்காட்டில் பூத்த அதிசய குறிஞ்சிமலர் அல்லவா!

இதுபோலவே உதகையில் பூத்த இன்னொரு குறிஞ்சி மலர் உண்டு. அது பற்றி நாளை எழுதுகிறேன்.

Read more: http://viduthalai.in/page-2/92921.html#ixzz3LxqJVfaC

தமிழ் ஓவியா said...

சிக்கலே மோடி அரசின் சாதனை!

- மு.வி.சோமசுந்தரம்

எரிமலை என்றவுடன், தீக்குழம்பும், அழிவும், அழுகுரலும் நம் சிந்தனைக்கு வரும். எரிமலைகளிலும் தரம் பிரித்துக் கூறப்படும் செயலற்றுப்போன எரிமலை (DEFUNCT) தூங்கும் எரிமலை (DORMANT) வெடிக்கும் தன்மைக் கொண்ட எரிமலை (ACTIVE) என்பவை அவை.

செழுமையையும், ஒற்றுமையையும், அமைதியையும், சீர்குலைக்கும் வகை யில் வெறுப்பு, வன்மை, மடமை என்ற தீக்குழம்பைத் தன் வயிற்றில் தக்க வைத்துக்கொண்டு தூங்கும் எரிமலை யாக இருக்கும் ஒரு அமைப்பைக் கண்டு அஞ்சவேண்டிய நிலையில் மனித நேய பற்றாளர்கள் உள்ளனர்.

குமுறும் தீக்குழம்பாக நாம் பார்க்க இருப்பது கள்ளிச்செடி என்ற ஆர். எஸ்.எஸ். என்ற அமைப்பின் ஒரு முள்ளாக உள்ள விசுவஇந்து பரிட்சத்தின் முதன்மைத் தலைவரான அசோக் ஷிங்காலின் உள்ளக்கிடக்கையும் நச்சு நினைப்பும்.

இந்திய துணைக்கண்டத்தின் இன் றைய பிரதமர் நநேரந்திர மோடி அவர்கள். அவர் இந்த பதவிக்கு வர வேண்டும் என்று ஏங்கிய தவமிருந்த நிலையை விளக்கும் வகையில் அசோக் ஷிங்கேல், அவுட்லுக் (Out Look)
9.9.2013 இதழில் அவர் அளித்த பேட்டியில் கூறி யுள்ள செய்தியாவது (தூங்கும் எரி மலையான மனநிலை)

அசோக் ஷிங்காலின் ஆசையும் ஆசியும்

இன்றைய நிலையில் எங்கள் மதக் குருக்களுக்கு, கோயில்களுக்கு, பசுக் களுக்கு, கங்கை நதிக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு சங்கராச்சாரியார் மேல் கொலை குற்றம் உள்ளது. வேறு ஒருவர் மேல் பாலியல் குற்றம் உள்ளது. இவையெல்லாம் இந்துமதத்தைப் புரிந்து கொள்ளாத, மதிக்காத, நாத்திக, மதச் சார்பின்மைப் பற்றி பேசுகிற ஒரு கூட்டத் தினரால் ஏற்படும் பிரச்சனைகள். சோனியா காந்தி போன்ற வெளிநாட் டவர்கள் கூட இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுகிறார்கள். 1990க்குப் பிறகு இந்து மதத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தை எதிர்ப்பவர்கள் அழிக்கப்படு வார்கள். எங்கள் மதகுருக்களையும், மதத் தையும் கொச்சைப்படுத்தும் அசம்கான் போன்றவர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புக வேண்டியவர்கள்.

ராமர் கோயில் கட்டுவதை ஆதரிப்ப வர்கள் புகழடைவார்கள். எதிர்ப்பவர்கள் இழிவுபடுத்தப்படுவார்கள். எங்களுக்கு அரசியல் கட்சிகளால் பயன் ஏதும் இல்லை. உண்மையில் அரசியல் கட்சிகள்தான் எங்களால் பயன் பெறுவர்.

மோடி நாட்டை வழிநடத்த வேண்டும் என்று கடவுளே விரும்புகிறார். கேதார் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குபோல 2002, கோத்ரா நிகழ்வு குஜராத்தில் ஏற்பட்ட பிறகு, இந்துக் களிடையே ஒரு வீரியம் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் இந்துத்துவா வின் எழுச்சியைக் காணமுடியும். அதன் விளைவாக அரசியல் கட்சிகள், ராமர் கோயில் கட்ட தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு வரவேண்டி யிருக்கும் (பி.ஜே.பி. அதன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அதன்படி அது செயல்பட 2019 வரை கால அவ காசம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆர். எஸ்.எஸ். தலைவர் கூறுகிறார். ஏன் தமிழ்நாட்டில் அஇஅதிமுக கூட அதன் தேர்தல் அறிக்கையில் சேதுசமுத்திரத் திட்டம் தேவை பற்றி கூறியிருக்கிறது).

ஏற்பட்டிருக்கும் இந்துத்துவா அவை அரசியல் காரணத்துக்காகவோ, தேர் தலை கவனத்தில் கொண்டோ ஏற்பட வில்லை. இந்த முறை, இந்த நாட்டின் வெளிப்பாட்டை, ராமபக்தர்கள் தான் தீர்மானிக்க உள்ளார்கள். ராமர் கோயில் கட்டுவதில் ஈடுபாடு காட்டாதவர்களுக்கு பாதிப்புதான் வந்து சேரும். அத்த கையோர் ஆட்சி அதிகாரத்தின் வாசலைக்கூட மிதிக்க முடியாது. தேர்தல் முடிவு பலரை வியப்பிலாழ்த்தும் என்பது உறுதி.

அசோக் ஷிங்காலின் ஆசை, எதிர் பார்ப்பு கை கூடிவிட்டது. அவர் விருப்பப் படியும் கடவுள் விருப்பப்படியும் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகி விட்டார். பிறகு என்ன? பலா பலன் என்ன? பலப்பல கூறலாம். எனினும் தற்போதைய நிலை யில், இந்தியாடுடே (டிசம்பர் 3, 2014) இதழில் வந்துள்ள கணிப்பை (பக்கம் 10) பார்ப்போம்.

ஆக மோடியின் எழுச்சி புத்தாயிர மாண்டில் பின்னோக்கி பாய்ச்சலை மேற்கொண்டு கடந்த காலத்துடன் தொடர்பு கொள்வதற்கான முதல் வாய்ப் பாகும். அல்லது இன்னும் கடுமையாக சொல்வதானால் கடிகாரத்தையும் நாட் காட்டியையும் பின்னோக்கி திருப்புவ தாகும். முற்போக்கை பாராம்பரியத்துடன், ஆர்வத்தை புராணங்களுடன் குழப்பிக் கொள்ளும் மனநிலை. இது மிகவும் சிக்கலாகிறது.

இது கடவுள் கொடுத்த மோடியின் ஆட்சி, அனுபவி ராஜா அனுபவி! அடுத்து வரும் அதிர்ச்சி ஆபத்து மோடி அரசு அறிவிப்புக்கு காத்திருப்போம்.

Read more: http://viduthalai.in/page-2/92922.html#ixzz3LxqfQoVY

தமிழ் ஓவியா said...

ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச.15: ஓய்வூதியம் விதிகளின் அடிப்படையில் 1 ஆண் டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21இல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 1988 ஜூன் 13ம் தேதி சந்திரசேகர் மரண மடைந்தார். இதையடுத்து, தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக்கோரி சந்திரசேகரின் மனைவி ராதாபாய் சிட்டி சிவில் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் சுகாதாரத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணியாற்றியவரின் வாரி சுக்கு குடும்ப ஓய்வூதியம் தர முடியாது என்று கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம் ராதாபாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுகாதாரத்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை கணக்காளர் தாக்கல் செய்த மனுவில், ஓய்வூதிய விதி 49 (2)ல் அரசு ஊழியர் இறந்தால் அவர் ஒரு ஆண் டுக்கு குறைவாக பணியாற்றியிருந்தா லும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: அரசு ஊழியர் ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணி செய்த நிலையில் மரணமடைந்தால் அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க விதிகளில் இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு 4 வாரங் களுக்குள் ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முதன்மை கணக்கா ளருக்கு சுகாதாரத்துறை அனுப்ப வேண்டும். ஓய்வூதியம் தருவது குறித்து முதன்மை கணக்காளர் முடிவு அறிவித் தவுடன் காலதாமதம் செய்யாமல் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த ஓய்வூதியம் 1989 முதல் கணக்கிடப்பட்டு 10 சதவீத வட்டியுடன் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-2/92923.html#ixzz3Lxr2nNrB

தமிழ் ஓவியா said...

வயிற்றை சீரமைக்கும் சீரகம்


சமையலில் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருள் சீரகம். சீரகம் ஒரு சிறுதானியப் பயிர். மருத்துவ குணமுள்ள மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத் தன்மைக்காக உணவுப்பொருள்களில் சேர்க்கப்படுகிறது.

மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழ சாற்றுடன் சீரக குடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மசிய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாக வாய்ப்புள்ளது. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித்துத் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி + சிறிது இஞ்சி இவைகளை லேசாக வறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம். வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாள்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். திராட்சை ஜூஸ் உடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். இதுபோன்ற எண்ணற்ற நன்மைகள் சீரகத்தில் உள்ளன.

Read more: http://viduthalai.in/page-7/92880.html#ixzz3LxsJfwCh

தமிழ் ஓவியா said...

எளிய உணவு பொருள்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)

மிக எளிய உணவு பொருள்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன.

23. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் ஒரு மேசைக் கரண்டி தேனைக் கலந்து குடித்தால் 15 நிமிடங்களில் வலி பறந்துவிடும்.

24. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

25. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

26. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் ஒரு சிட்டிகை கலந்து இரண்டு வேளை சாப்பிட குணமாகும்.

27. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைத்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

28. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

29.. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

30. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.

31. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து நான்கு சிட்டிகை எடுத்து இஞ்சி சாற்றுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

31. உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

32. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

33. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

34. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

35. புதினா விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

36. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை உணவை சாப்பிடக் கொடுக்கக்கூடாது.

37. கேரட் சாறும், சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

38. எலுமிச்சை பழச்சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உடல்சூடு குறையும்.

39. நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

40. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

41. கொழு கொழுவென குண்டாக இருப்பவருக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு கொடுக்கவேண்டும்.

42. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைத்துக் காணப்படுபவர்கள், உடல் நலம் தேறி எடை அதிகரிக்கும்.

43. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

44. தினமும் குடிநீரைக் காய்ச்சும்போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், செரிமானத்திற்கு உதவும், வாயுவை அகற்றும், மலச் சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

45. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

46. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

47. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

48. வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு, தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

49. வால்மிளகின் தூளை பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட கபம் நீங்கும்.

Read more: http://viduthalai.in/page-7/92881.html#ixzz3LxseHQJm

தமிழ் ஓவியா said...

இருதய நோய்க்கு ஒலி அலை அதிர்வு சிகிச்சை

இருதய நோயினால் பாதிக்கப்பட்டு, உடல் தகுதி யின்மை மற்றும் வேறு காரணங்களால் சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு புதிய அதிநவீன ஒலி அலை அதிர்வு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நெஞ்சுவலி, மாரடைப்பு, இருதய செயலிழப்பு, ரத்தநாள அமைப்பு பிரச்சினைகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் மற்றும் இஇசிபி சிகிச்சை முறைகள் நடை முறையில் உள்ளது. இத்தகைய சிகிச்சையினால் இருதய ரத்தகுழாய் அடைப்புகள் சரி செய்யப்பட்டு இருதய ரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது.

ஆனால், உடல் தகுதியின்மை, சிறுநீரக கோளாறு, இருதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு மேற்கூறிய சிகிச்சை முறைகள் செய்ய முடிவதில்லை. மேற்கூறிய பிரச்சினை உள்ளவர்கள், பைபாஸ், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து மீண்டும் நெஞ்சுவலி, மூச்சு திணறல் உள்ளவர்கள் நவீன ஒலி அலை அதிர்வு சிகிச்சை செய்யலாம்.

இச்சிகிச்சையானது பாதிக்கப்பட்ட இருதய தசைகளின் மீது கட்டுப்படுத்தப்பட்ட ஒலி அலை அதிர்வுகளை செலுத்துவதன்மூலம் புதிய நுண்ணிய ரத்த நாளங்களை உருவாக்கி தடைபட்ட ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.

இந்த சிகிச்சை முறையில் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. மயக்க மருந்து கிடையாது, வலி இல்லை, உடலினுள் எந்தவிதமான மருந்துகளோ, ஊசியோ செலுத்துவது இல்லை. இந்த சிகிச்சை முறையில் இருதயத்தில் எந்த பகுதிக்கு சிகிச்சை அளிக்கவேண்டுமோ அந்த இடத்தை கணினி மற்றும் இருதய ஸ்கேன்மூலம் பதிவு செய்து அந்த இடத்தில் ஒலி அலை அதிர்வு சிகிச்சை கருவியை உடலின் மேல் மார்பு பகுதியில் பொருத்தி ஒலி அலை அதிர்வுகள் செலுத்தப்படுகிறது.

ஒலி அலை சிகிச்சையின்மூலம் பலன் பெறும் இருதய நோயாளிகள் முன்பு போல் அதிக மருந்துகள் சாப்பிட வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட இருதய தசைகள் புத்துயிர் பெறுகிறது. இதனால், நோயாளிகள் மூச்சு திணறல், நெஞ்சுவலி குறைகிறது மற்றும் நடக்கும் திறன் அதிகரிக்கிறது.

இந்த சிகிச்சையை தொடர்வதற்கு முன்பு நோயாளிகள் இருதய மற்றும் ஒலி அலை அதிர்வு சிகிச்சை நிபுணரை சந்தித்து அவரது ஆலோசனைப்படி இருதய ரத்த நாளங்கள், தசைகள் மற்றும் செயல்திறனை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தபடுகிறார்கள்.

அதன்பின்னர் நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள் மருத்துவரால் ஆய்வு செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படவேண்டிய இருதய தசை பகுதிகள் கண்ட றியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நோயாளிகளின் தன்மைக்கேற்ப இச்சிகிச்சை அளவு முடிவு செய்யப்படுகிறது என்கின்றனர் இருதய சிகிச்சை நிபுணர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/92882.html#ixzz3LxsoQpvq

தமிழ் ஓவியா said...

திராவிடக் கட்சிகளின் தலைமைகளுக்கு....!

- திராவிடன்

ஆறு மாதங்களுக்குமுன் (பொதுத் தேர்தலின் போது) தமிழ்நாட்டில் மோடி ஓடி ஓடி பலரை வலியச் சென்று கைலாகு கொடுத்துக் கூட்டி வந்து, தனது பா.ஜ.க. கூட்டணியை உருவாக்கினார்!

ஆனால், அந்தக் கூட்டணி பெரிதாக ஒன்றும் அவர்களின் ஆர்.எஸ்.எஸ். கூட்டுக் கம்பெனிக்குக் கை கொடுக்கவில்லை. 39 இடங்களில் ஒரே ஒரு இடம் - அதுவும் காங்கிரஸ் - தி.மு.க. வாக்கு பிளவுகள் காரணமாக கிடைத்தது - கன்னியாகுமரியில்!

கூட்டணி அமைத்தேகூட இதன் வாக்கு வங்கி வெறும் 4 சதவீதம்தான்!

இப்போது...?

6 மாதங்களிலேயே மோடி வித்தை புரிந்து விட்டது. சகலகலா வல்லவராக இவரை சித்தரித்துப் பிரச்சாரம் செய்த அதன் கூட்டணியினராகிய கட்சிகளான

ம.தி.மு.க. - வைகோ
பா.ம.க. - டாக்டர் இராமதாஸ்
தே.மு.தி.க. - விஜயகாந்த்

கட்சிகளுக்கு இவரது ஆட்சியைவிட தமிழ் நாட்டின் பிரச்சினைகளிலும் சரி, அகில இந்திய வளர்ச்சி மாற்றத்திலும் சரி முந்தைய காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்குத் தான் உள்ளது; விளம்பரம் அதிகம். ஆனால், விளைச்சல் குறைவு என்கிற நிலையே கண்கூடு!

1. பண வீக்கம் விலைவாசி. குறைந்ததுகூட மோடி அரசின் பொருளாதார சாதனை அல்ல. சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் ஏற்பட்ட ஒன்று என்பது உலகறிந்த உண்மை!

2. இந்தித் திணிப்பு, குரு உத்சவ் - சமஸ்கிருத திணிப்பு - சிறுபான்மையினரான இஸ்லாமியர் கிறித்துவர்களை வீண் வம்புக்கு இழுப்பது போல பணம் கொடுத்து கட்டாய மத மாற்றம், அதுவும் அவர்களது கிறிஸ்துமஸ் போன்ற நாள்களில் விடுமுறை மறுப்பு, ஏழை - எளிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்ட நாள் குறைப்பு மூலம் ரத்துக்கு அச்சாரம்! வரலாற்றை, கல்வியை ஆர்.எஸ்.எஸ். திட்டப்படி ஹிந்துத்வா பாடமாக - புராணத்தை அறிவியலாக மாற்றி திரிபுவாதம் செய்தல் - தாஜ்மஹாலைக்கூட குறி வைப்பது போன்ற அன்றாட காவிமய ஆட்சிக் கொள்கைகள்.

3. இதனால் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 6 மாத கூட்டணி (குறைப் பிரசவமாக) 10 மாதம்கூட நீடிக்காமல் - முடிந்து விட்டது. வைகோ வெளியேறி தமது மானங் காத்துக் கொண்டார்!

டாக்டர் இராமதாஸ், விமர்சனம் செய்வது உரிமை என்று கூறியதோடு, தனது கட்சி தலைமையை பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஏற்றால் மட்டுமே கூட்டணி தொடரும்; இன்றேல் தனிதான்! என்று அறிவித்து விட்டார்!

விஜயகாந்த கட்சியோ, அவரது தலைமையை பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஒப்புக் கொண்டு, அவரை முதல்வராக்க சம்மதித்தால் மட்டுமே தொடரு வோம் என்று கூற, தீர்மானம் போட ஆயத்தமாகி விட்டது.

3. பா.ஜ.க.வுக்கு சூப்பர் ஸ்டார் வருகையோ வருவார் - ஆனா வர மாட்டார் என்ற வடிவேலு பாணி காமெடி.
ஆனால், அமித்ஷா 20ஆம் தேதி வருகிறார்! தமிழ் நாட்டைக் குறி வைத்துள்ளார்கள்!
இதற்கு இன்று ஓர் ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தி.

1. ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகளே ஓடி வாருங்கள் - அரியானா Formula அடுத்த சட்டமன்றத் தேர்தலில் (2016ல்) நீங்கள் வேட்பாளர்கள் ஆவீர்கள் என்ற நாக்கில் தேன் தடவிடும் வேடிக்கைகள்!

2. ஒரு Missed Call கொடுங்க; உங்க வீட்டுக்கு ஓடோடி வருகிறோம் - உறுப்பினர் ஆக்க! - விளம்பரம் - விண்ணப்ப வியாபாரம்!

3. எல்லா மெடிக்கல், என்ஜினியரிங் கல்லூரி களில் RSS மாணவர் அமைப்பை (ABVP) அனுப்பி ஆள் பிடிக்கிறோம்.

4. எல்லா மீனவர் குப்பத்திற்கும் சென்று ஆள் தேடும் படலத்தினையும் ஆசை காட்டும் வித்தையிலும் ஈடுபட்டுள்ளோம்.

5. எல்லா தாழ்த்தப்பட்டோர் காலனிகளில் சென்று விலைக்குக் கிடைப்பார்களா என்று தேடிடும் முயற்சிகளின் முனைப்புடன்

6. இணையதளம் - அய்.டி. கம்பெனி முதலா ளிகள் மூலமும் - அப்பாவி இளைஞர்களுக்கு மோடி டிரஸ், ஸ்டைல், மோகம் (இது 6 மாதங்களில் வெகுவாகக் குறைந்து வீழ்ச்சி நோக்கிய விரைவுப் பயணத்தில்).

7. பணத் தட்டுப்பாடு இல்லவே இல்லை கார்ப்பரேட் முதலாளிகளின் கடாட்சம் வெள்ளமெனப் பாய்கிறது!
இவைகளால் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளை வீழ்த்தத் திட்டமாம்!

பலே, பலே! பலே! திராவிட கட்சிகளே, அதன் தலைவர்களே, பதவியாசையால் பலியாகலாமா?

6 மாதங்களுக்கு முன் ஏமாந்து கொள்ளிக் கட்டை யால் தலையைச் சொறிந்து கொண்ட வாக்காளர்களே,

உங்கள் திட்டமென்ன - பதில் என்ன?

ஒருவருக்கொருவர் இன்னமும்

சண்டையிட்டு ஏமாறுவதுதானா?

Read more: http://viduthalai.in/e-paper/92940.html#ixzz3M4KzxZOU

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

திருநீறு

நீறில்லா நெற்றி பாழ் என்பது திருநீற்றின் மகி மையைக் குறிக்கிறதாம். திருநீறு இல்லா நெற் றியைச் சுடு என்கிறார்கள் - அப்படியானால் கிறித் தவர், முஸ்லிம், நாத்திகர் களைச் சுட்டு விடு வார்களோ!

Read more: http://viduthalai.in/e-paper/92939.html#ixzz3M4LVD5U7

தமிழ் ஓவியா said...

கல்யாணம்


மனிதன் மிருகப் பிராயத்தி லிருந்தபோது காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் மனிதன் தன் மூர்க்கத்தனத்தைக் காட்டப் பெண்ணை அடக்கியாள பெண்ணைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தக் கல்யாணம். - (விடுதலை, 10.8.1968)

Read more: http://viduthalai.in/page-2/92932.html#ixzz3M4Lhr9pD